ஞாயிறு, 18 மார்ச், 2018

இள ...ஞாயிறு   அருமையான சந்திப்பு ...

இன்று காலையில்  இருந்தே கொஞ்சம் உற்சாகம் தொற்றி கொண்டது ...ஒரு முக்கிய தலைவரை சந்திக்க போகிறோம் ..என்று மகிழ்ச்சி ..நானும் உடுமலை வரலாற்று நடுவம் ஆய்வாளர்கள் திரு .அருட்செல்வம் ..தமிழ் பேராசிரியர்கண்டிமுத்து (கேரளா -கொடுவாயூர் ) இவரை பொது தள நிகழ்ச்சிககளில் ...மற்றும் புத்தக கண்காட்சிகளில் இவரிடம் சில மணிநேரங்கள் கலந்துரையாடுவது உண்டு ..இன்று சந்தித்தது ..நம் கம்பள சமுதாய நிகழ்வுக்குக்காக மற்றும் நம் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தளி எதுலப்பர் மன்னரின் ..அறிமுக வரலாற்று நூலை அவரிடம் தந்துவிட்டு படித்து அணிந்துரை ..அதைப்பற்றி வரும்போது அவரிடம் நமது பாளையக்காரர்களின் ஆட்சி முறை வரலாறுகளை விவாதம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பதுக்கு சந்தித்து உரையாடியது இன்று அருமையான ஞாயிறாக  அமைந்தது மிக்க மகிழ்ச்சி..


நாளை மதிப்பீட்டு நடுவர் அவர்களின் சந்திப்பு பற்றி பதிவிடுகிறேன்


சனி, 17 மார்ச், 2018

சுந்தர தெலுங்கு உகாதி வாழ்த்துக்கள் ...

உகாதி அல்லது யுகாதி (தெலுங்கு: ఉగాది, கன்னடம்: ಯುಗಾದಿ) தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா(गुढीपाडवा) எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். இவ்வருடம் யுகாதி திருநாள் நாளை மார்ச் 23 ம் தேதி வருகிறது.
உகாதி கொண்டாட்டம்:
சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.
உகாதி பச்சடி:
உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இது புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லா (ಬೇವು-ಬೆಲ್ಲ) என அழைப்பர்.
தமிழ் நாட்டில் உகாதி:
தமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்யாது போயினும், இனிப்பு வகைகள் முதலியவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர்.
அனைவருக்கும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக சுந்தர தெலுங்கு யுகாதி பண்டிகை வாழ்த்துக்கள். 
சந்திப்பு .....உடுமலையின் மண்ணின் மைந்தர்

இந்த வாரம் அருமையான சந்திப்பு ...மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு .கோவிந்தராஜன் அவர்கள் (உடுமலை டு அகமதாபாத் )..செவ்வந்தி பூ கொடிநிழலில் அருமையான சந்திப்பு .உலக புகழ் பெற்ற வில்மர் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு முதன்மை அதிகாரி .கல்வி :நான்கு முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் வழக்கறிஞர் ..எளிமையான மனிதர் ...பேசும் வார்த்தைகள் கொங்கு கலந்த தமிழ் பேச்சு ...அருமை வேலை வாய்ப்பு ..இன்றய பொருளாதார சூழல் ..வியாபார முறை தொழில் நுணுக்கங்கள் ..இன்றைய வளரும் தலைமுறை கல்வி ,தொழில் முனைவோர் எப்படி சிந்திக்கிறார்கள் பற்றி இரண்டு முறை சந்திப்புகள் ..அவருக்கு விடாமல் வரும் நிறுவன  தொலைபேசி அழைப்புகள் ...அதற்கிடையில்  சில மனநேரங்களில் என்னிடம் பகிர்ந்தகொண்ட பணி சம்பந்தமாக ..எதிர்காலத்தில் தொழில் மாற்றங்கள் ,அதைக்கொள்ளும் எதிர்கொள்ளும் சவால்கள் அழகாக நிகழகால் எடுத்துக்காட்டுகளுடன் பேசியது மிக்க மகிழ்ச்சி ..அய்யா அவர்கள் பல வெளிநாடுகள்,வெளி மாநிலங்கள் , பணி நிமிர்த்தமாக சுற்று பயணம் சென்றது..வாழ்க்கை முறை ..கற்ற தொழில் நுணுக்கங்கள் ..சகா பணியாளர்களுக்கும் ,தன் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு சரியான வழிகாட்டல்கள்..ஆகியவை பிரமிக்கவைக்கும் செயல் திட்டங்கள் இன்று நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை தன திறமையின் மூலம் நெறிப்படுத்தியது ..ஆகியவையை நினைவுகளை பகிர்ந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி ..எனக்கு இவரின் வழிகாட்டல்கள் ,வாழக்கையில் மேலும் வளர ..இவரை போன்ற நண்பர்களை பெற்றது மகிழ்ச்சி ..நம் நாட்டை பொறுத்தவைரை ..வளரும் தலைமுறை மாற்றங்கள் அழகாக எடுத்துரைத்தார் ...வடஇந்திய மக்கள் இப்பொழுது எல்லாம் உயர் கல்விக்கு மாறிக்கொண்டு இருகிறார்கள் ...தென் இந்திய மக்கள் புதிய தொழிமுனைவோராக மாறிக்கொண்டு வருவது நல்ல மாற்றம் என்று கூறியது மிக்க மகிழ்ச்சி ..நானும் கடந்த 15 வருடங்களாக கண்கூட பார்த்துவருகிறேன் அவர் கூறிய மாற்றம் நடந்துகொண்டு உள்ளது..ஏட்டு கல்வி பயின்று ..வெறும் ஒரு சுற்று வட்டரத்துக்குள் முடங்காமல் ..இன்று உலகம் முழுக்க நம் வளரும் இளையஞர்கள் தொழில் முறை குறிக்கோளுடன்  சுற்று வரும்  நிகழ்வுகளை பார்க்கம்பொழுது பாரதியார் கண்ட கனவு நிறைவது மிக்க மகிழ்ச்சி ..இந்த வார சந்திப்பு மனதுக்கு மிக்க மகிழ்ச்சி...சந்திப்புகள் தொடரும் ..  அன்புடன் சிவக்குமார் ...9944066681...வாட்ஸாப்ப் ..

வியாழன், 15 மார்ச், 2018

கம்பள சமுதாயத்தில் வளரும் கலைஞர் திரு .பிரதீப் ராம் அப்பணாசாமி  ...(ஜமீன் கோடாங்கிப்பட்டி .நாகலாபுரம் )விருதுகள்

AATO felicitated at Tamil Nadu Tourism Awards- 2018

Great...Congrats...Bro...Mr.Pradeep Ram...

Tamilnadu tourism award 2018. Name: prathipram, native: Jamin Kodangipatti...Historical Legends....

 Andaman Travel Agents Association “AATO “ has been awarded as Best Association for working With Tamil Nadu Tourism for Promoting Destination ANDAMAN in the southern region at the Tamil Nadu Tourism Awards- 2018.In a function held at Kamaraj Arangam,Teynampet,Chennai on 14th March ,2018.
The Award was presented by Noted Playback singer Smt P. Susheela and the function is supported by Incredible India, Ministry of Tourism and powered by Madura Travel Service Pvt Ltd.
On Behalf of AATO the award was received by Mr. M.Vinod, President along with K.Hamza, Gen Secretary, Mr. Vivek Singh, Treasurer and Mr. Selvaraj, Executive Member of AATO.

Mr.Pradeep Ram Appansamy.
Intro
Studied at Govt. college of fine arts,kumbakonam
Went to san hr sec school, Nagalapuram
Lives in Kumbakonam
Joined June 2013

Regards..
Kambala Virtcham Trust...

பிரதீப் ராம் அப்பணசாமி ..மாப்பிள்ளைக்கு ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது ..

செவ்வாய், 13 மார்ச், 2018

இசைஞானி பாடல்கள் ...என்னை இப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது 

நேற்று முன் மதியம் வீட்டுக்குச் சாப்பிட வந்த போது அம்மா ..அப்பா  பழைய பாடல்களின் தொகுப்பை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள் . நான் உள்ளே நுழைந்ததைப் பார்த்த போது செய்திக்கு மாற்றட்டுமா? என்று கேட்டார். வேண்டாம் என்று சொல்லிவிட்டுஅவர் பார்த்துக் கொண்டிருந்த பாடலை நானும் சிறிது நேரம் பார்த்தேன். 

எம்.ஜி.ஆர். சிவாஜி தத்துவபாடல்கள். வார்த்தைகள் பசுமரத்தாணி போல உள்ளே பாய்ந்தது. ஆனால் என்னால் தொடர்ந்து கேட்க முடியவில்லை. சிறிது நேரம் ஓய்வு எடுக்கப் படுக்கையில் சாய்ந்த போது கூடத் தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல்வரிகள் காதுகளை வந்தடைந்து கொண்டேயிருந்தது. 

அப்போது அந்தப் பாடல்களை  கேட்ட காலங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து போனது. 

இதே போலப் பள்ளிப்பருவம் முதல் கல்லூரிப் பருவம் வரைக்கும் என் காதுகளில் ஒலித்த இசைஞானியின் பாடல்களை ஒவ்வொருமுறையும் கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அதைக் காதில் வாங்காமல் கடந்து சென்று விடுவதுண்டு. காரணம் ஒரு பாடல் ஒலிக்கும் போது எனக்குக் கூடவே அப்போதைய நினைவுகள், நல்லது, கெட்டது, சோகம், பிரச்சனைகள் எல்லாமே நினைவுக்கு வந்து நிலைகுலைய வைத்துவிடும். 

தளி ஜல்லிபட்டியில் என் பெரியப்பா மகன் ...தம்பானுடன் நால்ரோட்டில் டூரிங் டாக்ஸியில் தொடக்கத்தில் எந்தப் பாடலை ஒலிக்கவிடுவார்கள். டிக்கெட் கொடுக்கும் போது எந்தப் பாடல் ஒலிக்கும், டிக்கெட் கொடுத்து முடித்தாகிவிட்டது. படம் போட போகின்றோம் என்பதனை அறிவிக்கும் பொருட்டு ஒரு பாடலைப் போடுவார்கள். 

பக்கத்து வீட்டுக்கு அக்காவிடம் ட்டியூன் படிக்க வந்த பெண் மீதி கொண்ட காதல் சமயத்தில் விரும்பிய பாடல்கள், கல்லூரி முடித்து முதல் ஆறு மாதங்கள் ஊரில் சுற்றிக் கொண்டிருந்த போது அப்பாவின் கண்களில் படாமல் சுவர் ஏறி குதித்துப் பின்பக்கமாக உள்ளே நுழையும் போது பக்கத்து டீக்கடையில் ஒலித்த பாடல் என்று ஒவ்வொன்றும் இப்போது கேட்கும் பாடலை நினைவு படுத்திக் கொண்டேயிருக்கும். 

நினைவுகள் சுகமானவை. ஒருவருக்கு நினைவு தான் முழுமையான சொத்து. ஆனால் அளவு கடந்து இருக்கும் போது, அது நிரம்பி வழிந்து பாத்திரத்தில் நிற்காத அளவுக்கு அனுபவங்கள் இருக்கும் போது அது சுமையாகத்தான் இருக்கும். இதன் காரணமாக மறதி வரமாக எனக்குத் தெரிகின்றது. 
இன்று காலையில் இந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்த போது இளையராஜா குறித்துப் பல எண்ணங்கள் வந்து போனது. 

https://www.youtube.com/watch?v=AcBXoszHdNk....Siru Ponmani Song Bharathiraja Ilaiyaraaja, Malaysia Vasudevan, S Janaki Kallukkul Eeram


எனக்கு இசையறிவு கிடையாது. ஆனால் அதனை உள்வாங்கத் தெரியும். இசைக்கோர்வைகளின் சூட்சமம் தெரியாது. ஆனால் அது எங்கே தொடங்கி எங்கே தொடர்ந்து எங்கே முடிகின்றது? முடியும் போது எந்த இசைக்கருவி மீண்டும் தொடங்க வைக்கின்றது என்பதனை அனுமானிக்கத் தெரியும். பாடல் வரிகளுக்கு இடையே சின்னச் சின்ன வாத்தியக்கருவிகள் செய்யும் மாய ஜால வித்தைகளை உணரத் தெரியும். இதை அனைத்தையும் இசைஞானியிடம் தான் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன். 

பலமுறை பிஜிஎம் என்ற கோர்வைகளைத் தனியாக எடுத்துக் கேட்பதுண்டு. நிச்சயம் கோடியில் ஒருவருக்குத் தான் இந்தத் திறமை வாய்க்கும். இளையராஜா தமிழகத்தில் பிறந்தது நமக்கான பெருமை. 

இளையராஜா குறித்துச் சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய தகவலைக்கூடப் பகிர்ந்திருந்தேன். அது முழுமையான உண்மை தான். கற்பனை உலகத்தில் உலாவுபவர்கள் நிஜவாழ்க்கையில் நிஜமனிதர்களைக் கையாளமுடியாமல் போய்விடுகின்றது. அதற்கு முழு உதாரணமாக இளையராஜாவை எடுத்துக் கொள்ள முடியும் என்று எழுதத் தான் எனக்கும் ஆசை. ஆனால் எதார்த்தம் அதுவல்ல.

என் காதுக்கு வந்த சில தகவல்கள். 

எச். ராஜா மூலம் விஜய் ன் படமான மெர்சல் படம் குறித்து அதன் வெற்றி தோல்வி குறித்து, அதன் தாக்கம் குறித்து இணையதளங்கள், இந்து மதத்தை மட்டும் விமர்சித்து விட்டு மற்ற மதங்களை விமர்சிக்கத் தயங்கும் போராளிக்கூட்டங்களைக் கவனித்துக் கொண்டிருந்த நான் மற்றொரு விசயத்தைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். 

இராம நாராயணன் மகன் யார் யாரிடம் இந்தப் படத்திற்கு நிதி பெற்றுள்ளார்? எப்படி ஹைப் உருவாக்குகின்றார்கள்? யார் பின்புலத்தில் இருக்கின்றார்கள்? யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்? என்பதனை கவனித்த போது இரண்டு பேர்கள் அதிகப் பதட்டத்தில் இருந்தார்கள். ஒருவர் உதயநிதி ஸ்டாலின். அவர் அடிப்படையில் வியாபாரி. அவர் மேல் எந்தத் தவறும் இல்லை. நிதி உதவி செய்து உள்ளார். நம்ப முடியாத மீட்டர் வட்டி. அதற்கான பலனைப் பெற்றார். இரண்டாவது நபர் இசைஞானி. அவரும் இந்தப் படத்திற்கு நிதி உதவி செய்துள்ளார். அவருக்குண்டான பலனும் கிடைத்து விட்டது. 

மற்றொரு தகவல். 

இளையராஜாவுக்கு விருது கிடைத்தபிறகு தகுதியானவருக்குக் கிடைத்த மரியாதை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அவர் தகுதியின் மீது எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது என்றே நினைக்கின்றேன். ஆனால் அதற்காகவும் அவர் உழைத்துள்ளார். அவருக்குக் கிடைக்க வேண்டிய உண்மையான மரியாதைக்குக்கூட லாபி வட்டத்திற்குள் நுழைந்து அதற்கான விலையைக் கொடுத்து தான் பெற்றுள்ளார். 

இது சார்ந்த ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. 

எப்போதும் இசைஞானிக்கும் பத்திரிக்கையாளர்களும் ஏழாம் பொருத்தம். அவர்கள் குண்டக்க மண்டக்கக் கேள்வி கேட்பார்கள். இவரோ தத்துவ ஞானத்தைப் பாடமாகப் புகட்டுவார். அவர்கள் டர் ஆகி வேறு பாதையில் வண்டியைத் திருப்புவார்கள். இது எப்போதும் நான் பார்த்துக் கொண்டிருப்பது தான். நான் கூடப் பத்திரிக்கையாளர் மேல் தான் தவறு தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 

விருது கிடைப்பதற்கு முன் சில மாதங்களுக்கு முன் தேசிய தொலைக்காட்சி (தனியார்) சேனல் நிர்வாகம் இளையராஜாவைத் தொடர்பு கொண்டு பேட்டி எடுக்க ஒப்புதல் பெற்றது. அந்தப் பேட்டி பல பிரபலங்களை எல்லாத் துறைகளில் இருந்து தேர்ந்தெடுத்துத் தோட்டத்தில் அல்லது வெளியிடங்களில் நடந்து கொண்டே இயல்பாக உரையாடிக் கொண்டே செல்வது என்கிற ரீதியில் இருக்கும். இது தொடர்ந்து நடந்து வருகின்றது. 
ஒப்புதல் பெற்ற தினத்தில் பேட்டி எடுக்கும் குழுவினர் வந்த பிறகு முக்கியமான நபர் இருவரையும் விருந்தளித்து அவர்களிடம் இந்தப் பேட்டி வேண்டாம் என்று ஞானி காரணக் காரியங்களை விளக்கி உள்ளார். 

காரணம் அவர்கள் எப்படிக் கேள்வி கேட்பார்கள்? என்று இவர் நன்றாகவே உணர்ந்தவர். தப்பிக்க முடியாது. அவர்கள் மத்திய அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள். மிரட்ட முடியாது. அடிபணிந்து தான் போக முடியும். அன்பாகவே பேசி வழியனுப்பி வைத்து விட்டார். யாரை மிரட்ட முடியும் என்பதனையும் யாரிடம் அடிபணிந்து போக வேண்டும் என்ற கலையையும் இசைஞானி தெளிவாகவே கற்று வைத்துள்ளார். 

அவரின் வாழ்நிலை, சூழ்நிலையில் வைத்துப் பார்த்தால் இது எனக்குச் சரியாகவே படுகின்றது? 

அப்புறம் ஏன் ஈரவெங்காயம் தத்துவ விசாரம்? 

இரட்டை வாழ்க்கை வாழ்வது எளிதல்ல. அதுவும் ஆன்மீகம் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு ஜல்லியடிப்பது எல்லாம் தற்போது காலத்தில் நடைமுறைக்கு ஒவ்வொது. எப்படியும் பல்லிளிக்க வைத்து விடும். இயல்பாக வாழ முடியாதவர்கள் மட்டும் தான் அந்தப் போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு வாழ முடியும். 

காரணம் இசைஞானி என்ற பட்டம் கலைஞர் காரைக்குடியில் வைத்துதான் கொடுத்தார். நிகழ்ச்சி நடப்பதற்கு முன் மதியம் முதல் அந்தப் பெரிய செட்டியார் வீட்டில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியப் பிரபல்யங்கள் அனைவரும் கூடியிருந்தனர். அந்தக்கூட்டத்தில் ஒரு பல்கலைகழகத் துணைவேந்தரும் இருந்தார். ஜமாபந்தி ஒன்று கூடும் போது ஆர்வக்கோளாரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுவது இயல்பு தான். 

அன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரியாத்தனமாக இசைஞானியிடம் பழைய பாடல் வரிகளைச் சுட்டிக் காட்டி வேறு சில தகவல்களைச் சொல்லி (அவர் தமிழ் ஆர்வலர்) பேச இசைஞானி அவரைப் பிலுபிலு வென்று பிடித்து உலுக்கி விட்டார். 

நடிகர் சிவகுமார், வைகோ, முரசொலிமாறன் தொடங்கி அத்தனை பேர்களுக்கும் தர்மசங்கடமாகிவிட்டது. தயவு தாட்சண்யம் இல்லாமல், கொஞ்சம் கூட யோசிக்காமல் துணைவேந்தரை இசைஞானி துவைத்து எடுத்து விட்டார். அவர் முகம் வாடிவிட்டது. அப்புறம் துணைவேந்தரை சமாதானப்படுத்தி வேறு பக்கம் நகர்த்தி விட்டனர். 

அந்தக் கூட்டத்தில் அவர்களுடன் இருந்த நண்பர் சில மாதங்களுக்கு இளையராஜாவுக்கு விருது கிடைத்த போது இந்தத் தகவலையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

ஆழ்ந்த திறமையும், புலமையும் கொண்டவர்களின் மனம் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது என்பது எந்த அளவுக்கு உண்மையோ? அந்த மனதிற்குள் இருக்கும் அடிப்படை வக்கிரம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு சிறிதளவாவது கிடைத்த அனுபவங்கள் வாயிலாக மாறும் என்பதே சமூக விதி சொல்லும் பாடம். 

என் வாழக்கை கஷ்டகாலங்களில் என் ஷ்யாமின் புகைப்படங்களும் ...இசைஞானி பாடல்கள் ...என்னை இப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது ...

திங்கள், 12 மார்ச், 2018

இன்று ...ஒரு அருமையான சந்திப்பு ..பாஞ்சை முழக்கம் ..திரு .செந்தில்குமார் அவர்களை சந்தித்தது மகிழ்ச்சி ..இவர் சென்னை கப்பல் போக்குவரத்த துறைமுக பணியில் முகமை சார்ந்த துறையில் பணிசெய்துகொண்டு ...நம் கம்பள இனப்பற்றுடன் நம் சமுதாய வேலைகளை முழு அர்ப்பணிப்புடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டு உள்ளார் ..இன்று அவரை சந்தித்து ,உரையாடியது மிக்க மகிழ்ச்சி இதை ஒருங்கிணைத்த இனப்பற்றாளர் தாததா  நாயக்கர் செல்வம் அவர்களின் பங்கு மிக முக்கியமானது ..அவரை கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் கோவில் ,நடுகல் ஆகியவற்றை பார்வையிட்டு அழைத்து சென்றது மிக்க மகிழ்ச்சி ... ...

பாளையக்காரர் தளி எதுலப்பர் நூல் வெளியிட்டு விழா தொடர்பாக உடுமலை வரலாற்று நடுவம் திரு அருட்செல்வம் ,பேராசிரியர் கண்டிமுத்து அவர்களுடன் ..திருப்பூரில் இருக்கும் அண்ணன் ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்துவிட்டு ...தளி எதுலப்பர் மன்னரின் நூலுக்கு அணிந்துரை அளித்த  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் .திரு .பழனிசாமி அவர்களை  சந்தித்து விட்டு ..வந்தது மிக்க மகிழ்ச்சி ...இன்னும் விழாவிற்கு ஒரு மாதம் 7 நாட்கள் உள்ளது ...வேகம் இன்னும் கூடிக்கொண்டு போகிறது ...எடுத்த காரியம் கைகூடுவதற்கு சிவனை நினைத்தால் கைகூடும் என்கிறார்கள் பாப்போம் ..அதுவும் நம் சமுதாயத்தை  நினைத்தால் கொஞ்சம் இனம் புரியாத பயம் தொற்றிக்கொள்கிறது ...ஏன் என்று இன்னமும் புலப்படவில்லை  ....அன்புடன் சிவக்குமார் ...9944066681...வாட்ஸாப்ப் எண்

ஞாயிறு, 11 மார்ச், 2018

உடுமலை வரலாறு added 6 new photos — with Raja Elango and
சொல்லாமல் சொல்லும் செய்திகள்
பழசு பிடிக்காது, பழைமை பிடிக்கும்
பழசிற்கும் பழைமைக்கும் வேறுபாடு உண்டு.
நண்பர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தோம். அதில் கண்ட காட்சிகளையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நம் மக்கள், நம் மூதாதையர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ண நேரிடும்போது நம் பழைமைகளை நம் எண்ணங்களால் அசைபோட நேரிடுகிறது. அவ்வாறு அசைபோடும் போது இப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள் நம் மூதாதையர்களின் அருமை பெருமைகளை நம் மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் சொல்லிச் செல்வது ஒரு வகை பதிவாகும்.
குறிப்பிட்ட நிலத்தின் தலைவன், தலைவி இருவரும் மனமொன்றி தன் வாழ்க்கைத் துணையை தாமே தேடிக்கொண்டு தம் வாழ்நாள் முழுமைக்கும் தலைவனோடு இயைந்து, பகிர்ந்து, முகிழ்ந்து இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையை நாம் கண்ணுற்றால் எப்படி இருக்கும்.
திருமணத்தின் தலைவன், தலைவி இருவரும் தம் இயல்பான நிலை சாதாரணமாக ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் எப்படி இருப்பார்களோ அந்த உடையில் இல்லாமல் தம் சுற்றத்தினருடனும் நண்பர்களுடனும் இருந்தால் எப்படி இருப்பார்களோ அந்த அளவில் அலங்கார உடைகள் இல்லாமல் அத்தியாவசிய உடையில் இருந்தனர். பார்த்தால் தெரியக்கூடிய அளவில் அலங்காரத்துடன் இருந்தனர். தலைவன் எனும் மணமகன் தலையில் ஒரு கீரிடமும் மணமகள் தலையில் அதே போல் நெத்திச்சுட்டி என்று அழைக்கக்கூடிய ஒரு அணிகலன் மட்டுமே இருந்தது. மணமகனின் மஞ்சள் வேட்டியுடனும், மணமகள் மஞ்சள் சேலை மேலாடையுடனும் இருந்தனர். மணமகன் மேற்சட்டை அணியாமல் மஞ்சள் நிறத்தில் துண்டும், அதையே கழுத்தில் மாட்டி பின்புறத்தில் முடிச்சிட்டு முன்புறம் மடித்துத் தொங்கவிட்டு ஒரு பொதியை அல்லது ஏதேனும் சுமையை சுமந்து செல்லக்கூடிய சென்றால் எப்படி நமக்கு சுமையில்லாமலும், அதை நெடுந்தூரம் சுமந்து செல்லக்கூடிய நிலையில் அந்த துணியை மடித்து பின்முதுகில் முடிச்சிட்டு அதையே முன்புறம் ஆடம்பர உடையாக போட்டிருந்தார்.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அனைவரும் வந்து செல்லக்கூடிய வந்து பார்க்கக்கூடிய ஒரு இரண்டு அல்லது மூன்றடி உயரத்தில் ஒரு மேடை அமைத்து அந்த மேடையில் அந்த மணமகனும் மணமகளும் நின்று கொள்ள திருமணத்திற்கு வந்திருந்த அனைத்து நண்பர்களும் உறவினர்களும் அங்கு சென்று வழக்கமான நிலையில் ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். ஆனால் அந்த அமைவிடம், அந்த மணமகன் , மணமகள் உடையில் இருக்கும் ஒரு பாரம்பரியம் ஏதோ ஒன்றை நினைவுபடுத்துவதாகவே உள்ளது. அவர்களின் உடையில் இருக்கும் ஆடம்பரம் இல்லாத அலங்காரமும் ஏதோ ஒன்றைச் சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
இதையும் அடுத்து மணமேடைக்கு முன்புறம் மேற்குப்புறம் ஒரு பாலைக்குச்சி மற்றும் புங்க இலைகள் சுற்றப்பட்ட ஒரு சிறிய குடில் தோகை போட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடை மணமகன் வீடு என்றும் இது மணமகனுக்காக உருவாக்கப்பட்ட வீடு இந்த வீட்டில் தான் மணமகன் தங்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
இது போலவே, மணமகளுக்கென்று ஒரு பெரிய அளவில் புங்க இலைகள் போர்த்தப்பட்டு சுமார் 5 அடி நீளமு5 அடி அகலமும் கொண்ட ஒரு குடில் போடப்பட்டிருந்தது. இது மணமகள் வீடு என்றும் மணமகள் திருமணத்திற்கு இங்குதான்வந்து தங்கவேண்டும் என்று கூறினார்கள்.
இந்த இரண்டு குடில்களையும் சற்றே பின்னோக்கிப்பார்த்தால் சங்க இலக்கியத்திலும் தமிழ்ச் சமூகத்திலும் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்திருந்தார்கள் என்பதையே இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த இரண்டு குடில்களும் தற்போதைய பெரும்பான்மையான திருமண முறைகளில் இல்லை. ஆனால் ஒரு பழங்குடியினர் , தாழ்த்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட திருமண முறைகளில் அதுவும் கிராமமப் பகுதிகளில் நடைபெறும் திருமண முறைகளில் மிகவும் அரிதாகக் காண முடிகிறதே தவிர முற்படுத்தப்பட்ட நகரத்தில் திருமண மண்டபங்களில் பெருந்தெய்வ கோவில் வழிபாட்டுத் தலங்களில் நடக்கும் திருமணங்கள் அனைத்தும் , பார்ப்பனர்கள் வைத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதி உணவுக்குப் பயன்படும் பொருள்களை யாகம் என்ற பெயரில் தீயில் போட்டு யாகம் வளர்க்கும் திருமண முறைகளையே நாம் பார்க்க முடிகிறது. உணவுக்குப் பயன்படும் நெல்லையும், அரிசி போன்ற மிகச் சாதாரணமான பொருட்களையே குடிலில் பயன்படுத்துவதும், நாம் இன்றைய திருமண முறையில் இல்லாத சடங்குகளாகும். அதுவும் பெண் குடிலில் மூன்று முக்காலிகளும், மூன்று செம்புப் பாத்திரங்களும், செம்புத் தட்டுகளும், மூன்று மண் சட்டிகளும் அந்த மூன்று மண் சட்டிகளிலும் உணவுக்குப் பயன்படுத்தும் நெல்மணிகளும், பதப்படுத்தப்படாத அரிசியுமே வைக்கப்பட்டிருந்தது. இது எதற்கு என்று கேட்ட பொழுதுதான் நமது மக்கள் திருமணம் முடிந்ததும் மணமக்கள் உணவுக்காக மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். உழைப்பில் இருக்கும் உழைப்பாளி மக்கள் தன் உணவுக்காக கூட தனியாக இருப்பு என்று எதுவும் இல்லாமல் நாடோடிக் கூட்டங்களாக இருந்த நிலையில் ஒரு தலைவனுக்கும் ஒரு தலைவிக்கும் திருமணம் நடத்தி வைத்தால் அவர்களின் உணவுத் தேவையை அறிந்து அவர்களுக்காக ஒரு சிறு வீடு இருக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக இந்த கண்ணால் தெரியக்ககூடிய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
இப்பொழுதிருக்கும் கால ஓட்டத்தில் இவையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. என்றாலும் என்றாவது ஒருநாள் நமக்கான வாழ்வை நமது முன்னோர்களின் வாழ்க்கை நிலையை , நமது வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்து அசை போட வேண்டிய நிலை ஏற்பட்டால் இவையெல்லாம் நமக்குக் கிடைக்காமல் போகலாம்.
லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விடலாம், அதற்குத் தகுந்தாற் போல் தங்களது வாழ்க்கைச் சூழலை மாற்றிக்கொள்ளலாம். அதற்குத் தகுந்தாற் போல் மனித உடல்களைப் பற்றிக்கொள்ளலாம். எத்தனை உடைகளை மாற்றிக்கொண்டாலும் தமக்கான இயைந்த பண்பாடு இயற்கையோடு இயைந்த பண்பாட்டை நாம் தொடர்ந்து செல்லா விட்டாலும் நாம் பின்பற்றாவிட்டாலும் தெரிந்து கொள்வதில் தவறில்லையே ?
இப்பொழுதிருக்கும் காலச் சூழலில் அனைத்து நிகழ்வுகளுக்கும் பார்ப்பனர்களையே வைத்து நாம் செய்யும் சடங்குகள் என்ற பெயரில் உணவுப்பொருள்களையும் விலை மதிப்பு மிக்க பொருள்களைத் தீயில் போடுவதையும், மக்கள் நன்றாக வாழ வேண்டும், நல்ல சமூகம் மலர வேண்டும் என்பதற்காக யாகம் வளர்ப்பது என்பது நமது முன்னோர்கள் நமது மூதாதையர்கள் யாருமே செய்யாத செயல் அது இப்போது பார்ப்பணர்களை வைத்து தேவையில்லாத பொருட்செலவையும் மன உளைச்சலையும் செய்வது எப்படி சரியாக வரும்?
மேற்காண் திருமணத்தில் திருமணத்திற்கு வந்த நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது கூட நமது பழைய பதப்படுத்தப்படாத அரிசியே கொடுத்தனர் என்பதும் நாம் சொல்லப்பட வேண்டிய செய்தியாகும்.
சுமார் இருபத்து ஐந்து முப்பது ஆண்டுகளுக்கும் முன்பு வானொலியில் கேட்ட நினைவு வேண்டாம் இது தீட்டிய அரிசி, வேண்டும் அது தீட்டப்படாத அரிசி, ஆமாம் அரிசியில் கூட தீட்டும் வந்துவிட்டது. அது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய அரிசி என்பதால் நமது முன்னோர்கள் பதப்படுத்தப்படாத அரிசியைப் பயன்படுத்தி உள்ளனர். அவர்கள் சுமார் 80 முதல் 100 வயது வரை நோயில்லாமல் உடலுழைப்பில் மூலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வந்தனர். இப்போது பதப்படுத்தப்பட்ட அரிசியால் தான் பல்வேறு நோய்கள் வருவதற்குக் காரணமாக இருக்கலாம். நமது முன்னோர்கள் கண்ணாடி அணியாமல், காலனி அணியாமல் நல்ல உடல் நலத்தோடு மிகச்சாதாரணமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்பொழுதெல்லாம் இவ்வாறான நிகழ்வுகள் காண்பது மிகவும் அரிதாக இருப்பதால் இந்தத் திருமண முறையை உடுமலை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் போலத் தோன்றுகிறது.

புங்கமுத்தூர் ...துர்க்கையம்மன் துணையுடன் வரலாற்று தேடல் ...பாளையக்காரர் -புங்கமுத்தூர்

இன்று அருமையான வரலாற்று பயணம் ...உடுமலையில் காலை ஆரம்பித்த பயணம் ...பொன்னலம்மன் சோலை வழியாக சென்றபொழுது ...நாங்கள் கண்ட தேடலில் ..பாளையக்காரர்கள் யானை கட்டி போராடிய பாறைகள் கண்டது மிகவும் வியப்புக்குரியது ...ஆனால் நம் சமுதாய மக்களின் விழிப்புணர்வு இல்லாததால் ...அந்த தகவல்களை அறியாமல் இருக்கிறார்கள் ...பொன்னலம்மன் சோலை யிலிருந்து -J N பாளையம் வழியாக வரும்பொழுது  கடந்த மூன்று மாதங்களாக சென்று வருகிறோம் ...சில இடங்கள் பல மாறுதலுக்கு உட்பட்ட இடங்களாக உள்ளது ..வரும் வழியில் காட்டு பெருமாள் கோவில் கண்டோம் ...பல கோவிலுக்கு உரிய நிலங்களாக உள்ளது ...அதை மற்ற சமுதாய மக்களே சொல்கிறார்கள்..எரிசனம்பட்டி யில் ..நம் சொந்தங்களின் நிகழ்வை பார்த்துவிட்டு ...அங்கு நம் மாப்பிள்ளை பாளையக்காரர் ..மல்லிகை மல்லசீலன் அவர்களிடம் உரையாடி கொண்டுருந்தோம் ...பேச்சு வாக்கில் நமது உடுமலை வரலாற்று நடுவம்  ஆய்வாளர்  அருட்செல்வம் அவர்களை அறிமுக படித்திவைத்தேன் ..தளி எதுலப்பர் தகவல் எதாவது தெரியுமா என்று கேட்டார் ...கொஞ்சம் தெரியும் ...புங்கமுத்தூர் தோட்டம் அருகே கூட எங்கள் வம்ச வழியினர் நல்லமுத்து நாயக்கர் சமாதி கூட எங்கள் தோட்டம் அருகே உள்ளது  என்றார் ..தோட்டம் வைத்திருப்பவர் கூட என்னிடம் சொல்லி இருக்கிறார் ..என்றார் ..அங்கே போய்ப்பார்த்தால் நடுகளுடன் இருந்தது ...நல்லமுத்து நாயக்கர் தொண்டாமுத்தூர் அருகே ஆங்கிலேயரால் ..மாட்டு வண்டியில் தூக்கிலிடப்பட்டவர் ...ஆனால் எங்கு புதைத்தார்கள் என்று தெரியாமல் இருந்தது ..இன்று பார்வை யிட்ட இடம் ...நல்லமுத்து நாயக்கர் சமாதி என்று தெரிந்தது ..இது ஆவண காப்பகத்தில் எடுக்கப்பட்ட தகவலுடன் ஒப்பிடும் போது உண்ணமையென்று புலனாகிறது ..தேடலுடன் அப்படியே நம் சொந்தங்கள் வாழும் புங்கமுத்தூர் வந்து நம்ம மாப்பிளை மல்லிகை மல்லசீலன் அவர்கள் வீட்டில் தேனீர் அருந்திவிட்டு ..துர்க்கையம்மனை வழிபட்டுவிட்டு ...போனவாரம் விழா கொண்டியபோது ...எருமை ,ஆடு ,வெட்டி அம்மனுக்கு படையிலுடுவது மரபு ...பாளையக்காரர்களால் ...பிரிட்டிஷ் எதிராக போராடும் போது மாமிச உணவு வழங்கவது வாடிக்கை...போர் கருவிகளை பயன்படுத்துவதற்கு உடல் வலிமை வேண்டும் அதற்காக ...மாமிச உணவு படை வீரர்களுக்கு வழங்கவது வாடிக்கை ...தற்காலத்தில் மக்களுக்கு அம்மன் நேன்பு என்று கொண்டாடடுவது வழக்கமாகவிட்டது ...கோவிலின் பின்புறம் அமைந்துள்ள சமாதிகளை பற்றி கேட்ட பொழுது ..செல்லாண்டி நாயக்கரின் சமாதி என்றும் அதை ஒட்டிய பகுதியில் அவர்களின் மனைவிமார்கள்  சமாதியும் ஒட்டிய இருக்கிறது ..இதுவும் ஆவண காப்பகத்தில் எடுக்கப்பட்ட தகவலுடன் சரியாக வருகிறது ..புங்கமுத்தூர் ..சின்னபொம்மன் சாலை ...கம்பளப்பட்டி ,மஞ்ச நாயக்கனூர் ...உப்பிலியனூர் ...மரச்சநாயக்கன் பாளையம் ..வழியாக கேரள முடிய எதுலப்ப மன்னன் எல்லை விரிவடைகிறது ...புங்கமுத்தூர் தேடலை முடித்துக்கொண்டு ...நமது சொந்தம் மதிப்புக்குரிய பெரியவர் .உடுக்கம்பாளையம் ரங்கசாமி நாயக்கரை சந்தித்தோம் ..அவர் கூறிய தகவல் ..திருமூர்த்தி மலை கருட கம்பம் ...கார்த்திகை திருவிழா அன்று உடுக்கம்பாளையத்தில் இருந்து விளக்குக்கு எண்ணெய் எடுத்து கொண்டு ஊர் நாயக்கர் முறைப்படி விளக்கு ஏற்றுவது மரபு ...இதுவும் நம் வரலாற்று தேடலில் களப்பணியில் கடந்த மூன்று வருடங்களாக கூறிய தகவல் சரியாக வருகிறது ...இன்று வரலாற்று தேடலில் இன்னும் தகவல் கிடைத்துக்கொண்டே உள்ளது ...இன்னும்எதுலப்ப மன்னரின் புத்தக விழா மற்றும் தேவராட்ட விழாவிற்கு ஒரு மாதம்  இருக்கும் நிலையில் வேகம் கூடியுள்ளது ...இது எல்லாம் தனிப்பட்ட தேடல் அல்ல நமது சமுதாய சொந்தங்களின் முழு ஓத்துழைப்பு இல்லாமல் நடைபெறாது ..நம் வழிகாட்டிய யாக உள்ள நம் சமுதாய தலைவர்கள் .இளைய சொந்தங்களின் ஆர்வம் ,நம் சமுதாயம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நல்ல மனம் படைத்தவர்கள் ..எதிர்கால நம் தலைமுறை நன்றாக இருக்கவேண்டும் வேண்டும் முழு மனதுடன் ,ஒத்துழைப்புடன் பணியாற்றி ...தகவல்களை திரட்டி கொடுத்து கொண்டுருக்கும் நம் சமுதாய சொந்தங்களுக்கும் ...வாழ்த்துக்களை தெரிவித்து  கொள்கிறேன் ...அன்புடன் ..சிவக்குமார் ...9944066681...வாட்ஸாப்ப் எண் ...







சனி, 10 மார்ச், 2018


என் அன்புக்கினிய குழந்தைகளின் சிறுவர் கதைகள் எழுதும் சென்னை நண்பர் - விழியன் Umanath Selvan...அவர்களின் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது ..ஷ்யாமின் மழலைப்பள்ளியில் பயிலும்போது ஆண்டுவிழா பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன் அதை மலரும்மலரும் நினைவுகளாகவே பதிந்துவிட்டார் ..மழலையர் கதைகளில் அழகாக புத்தக வடிவில் கொண்டுவந்துவிட்டார் ...நன்றி ... 

மழலைப்பள்ளி ஆண்டுவிழா கொண்டாட்டம் என்பது...
திரை விலகியதும் ப்பே என்று மழலையின் கதறல்.. மேடையின் கீழிருந்து ஆசிரியர் அழாதே அழாதே என்று சமாதானம் செய்தும் வேலைக்கு ஆகவில்லை. இசை ஒலித்ததும் இடுப்பில் கைவைத்து நடமானத்துவங்கிவிட்டான் .
கைத்தட்டிக்கொண்டே தன்னத்தானே சுற்றிக்கொள்ள வேண்டும். சுற்றியவன் தன் பின்னால் இருந்த ஆண்டுவிழா பேனரைப் பார்த்து அப்படியே நின்றுவிடுகின்றான். இசை ஒலித்தபடியே இருக்கு அவன் பேனரில் தனக்கு தெரிந்த எழுத்துக்களை படித்துக்கொண்டே இருக்கின்றான்.
அரைவட்டத்தில் இருக்கும் குழந்தைகள் ஒவ்வொருவராக முன்னே வந்து தங்கள் நிறைத்தை காட்ட வேண்டும் வானவில் பாட்டிற்கு. ஒரு குழந்தை வெளியே வந்து வட்டத்தில் நிற்கவில்லை. இன்னொருந்தி வந்து போ போ லைனில் நில்லு என தள்ளி விடுகின்றான் ..
ஒரே ஒரு குழந்தை மேடையில் அழத்துவங்கியதும் தானும் அழவேண்டுமோ என்று மற்ற குழந்தைகளும் கண்ணில் நீர் கொண்டுவர முயற்சி செய்கின்றனர்.
திரைவிலகியதும் தன் பெற்றோர் எங்கே என தேடியது குழந்தை. கண்டுபிடித்து கை காட்டியபடியே நின்றது குழந்தை. ஆனந்த நீர்மல்க அமர்ந்திருந்தார் அம்மா .
பாடல் ஒலிக்க ஆரம்பித்ததில் இருந்து உடல் அசையவே இல்லை. முடியும் தருவாயில் ‘jump' என்ற வார்த்தை கேட்டதில் இருந்து குதிக்க ஆரம்பித்தவன் பாடல் நின்றும் jumpக்கிட்டே இருந்தான்...
மழலைகளின் உற்சாகம் எளிதில் பற்றிக்கொள்ளும்.. பற்றிக்கொள்ளச்சொல்லும்...
திரும்ப திரும்ப.. திரும்ப திரும்ப... சொல்லிக்கொண்டே இருக்கலாம்..
மழலையில் தப்புகளில் இருக்கு அழகியலோ அழகியல்.



வெள்ளி, 9 மார்ச், 2018


கம்பளத்தார் பற்றி எழுதுன வரலாற பூரா படிச்சாச்சு.
சுமார் 8 வருடம் மேல் கடும் உழைப்பு இந்த சமூகத்தை பற்றிய தேடல் எனக்கு இருந்தது.
இந்த சமூகத்தின் பிளஸ், மைனஸ். இவர்களை பற்றிய நல்ல வரலாறு, நல்ல விமர்சனம். கெட்ட வரலாறு கெட்ட விமர்சனம் அனைத்தையும் படித்து இருக்கேன்.
ஜீபி கணக்கில் பல நூல்கள் எனது கம்யூட்டர் ல இருக்கு. யார் கேட்டாலும் தர தயார்.
மதுரை, விஜயநகர என பல அரசுகள் கம்பளத்தார் மரபினருடையது என்பதை தமிழக கம்பளத்தார்கள் அறிய காரணங்களில் ஒருவன்.
நாயக்கர் என்ற பட்டம் கொண்டவர்களில் ஆதிக்க பிரிவினர் கம்மவார்கள். அதே பட்டம் கொண்டவர்களில் சற்று எளக்காரமாக பிற சமூகத்தால் ஏழைகளாக பார்க்க படுபவர்கள் கம்பளத்தார்கள். இந்த சமூகத்தை ஆதிக்கத்துக்கு எதிராக பேச வைத்து தற்போது ஆதிக்க உணர்வு கொண்டவர்களே முற்காலத்தில் இருந்ததை போல அல்லாமல் தற்போது அனைத்து விசயத்திலும் கம்பளத்தார் இல்லாது செய்வது இல்லை என்ற நிலையை உருவாக்குவதில் தற்போது இணையதள இளைஞர்கள் என்றால் மிகையல்ல.
முதல் மோதல். இளம் வயது விதவைகள் மறுமணத்தை பற்றியதை தொடங்கி. இந்த சமூகத்தில் இதுவரை உள்ளுக்குள்ளேயே பேசி அடங்கிய கருத்தை பொது கருத்தாக மாற்றி விவாதம் செய்து பல பல இளைஞர்கள் இதெல்லாம் தவறு, நாம் பெண்களுக்கு எதிராக மட்டுமே செய்கிறோம் என்பதை புரிய தொடங்கி உள்ளனர்.
அதே போல மேலாடை அணியாமல் இருப்பது, பழைய பழக்கம் என்று சொல்லி மூட பழக்கங்களாக இருப்பது போன்ற பல கருத்துகளை விவாதம் செய்து வந்துள்ளேன்.
ஒரு காலத்தில் சாதி வெறி இருந்தது (சண்டைகள் இணையத்தில் நாரும்), பிறகு சாதியை விழிப்புணர்வு செய்ய நேரடியாக பேச தொடங்கினோம்.
தற்போது பல ஆயிரம் இளைஞர்கள் வந்து விட்டார்கள் அவர்கள் வரலாறு, விழிப்புணர்வு செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தற்போது சாதி வெறியை நீக்கி சமூக பற்றாக மாறியுள்ளேன்.
எல்லாம் புத்தகங்கள் செய்த தாக்கம் அதனால் வந்த மாற்றம்.
இதில் தவறு என்று ஏளனம் செய்பவர்கள் செய்யலாம் ஆனால் முன் இருந்ததை விட ஒடுக்கப்பட்ட கம்பளத்தார் மக்களை போன்ற சமூகத்துக்கு உதவி செய்யவே மனம் ஓடுகிறது.
புத்தகங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எனது வாழ்நாளில் நான் அனுபவித்து விட்டேன்.
பெண் ஏன் அடிமையானாள்
எங்கே போகிறது இந்து மதம்
பெரியாரிய சிந்தனை, பெரியார் எழுதிய குடியரசு நூல்
லிங்காயத்து சமூகமும், பசவண்ணரும்
கள்ளர் களின் வாழ்வியல் நெறிகள்
காவல் கோட்டம்
மனுதர்மம்
களப்பிரர் காலம்
ராணி மங்கம்மா என்ற புரட்சி பெண்
அம்பேத்கர் எழுதிய இந்துவாக சாக மாட்டேன்
குரான் முழுவதும் படித்து விட்டேன்
தற்போது அய்யா வைகுண்டரின் சாதி மறுப்பு நெறி யை படித்து கொண்டு வருகிறேன்.
புத்தகமே நண்பனாக உள்ளது.
ஆர்வம் ...இனப்பற்று ...பிரதிபலன் பாராத உழைப்பு ...களப்பணியில் ஈடுபடும் உற்சாகம் ...இவை எல்லாம் வேண்டும் ...

நமது அறக்கட்டளை குழு ..மாதாந்திர கூட்டம் தவறாமல் நடக்கிறது ...அறக்கட்டளைக்கு வருமானம் சீட்டு தொகை மூலம் வருகிறது ...தற்பொழுது நம் சொந்தங்களின் திருமண நிகழ்வுகளில் கலந்துகொண்டு..புதிய உறுப்பினர்கள் ,சேர்ந்து கொண்டு உள்ளார்கள் ..அதுவும் ..கார்த்தி SR ..திருப்பதி தேவராஜன் ,தமிழ் ...கார்த்தி திருப்பூர் ...ஆனந்த கொடுங்கியம் ..செந்தில் கொடுங்கியம் ...செந்தில் தினமலர் மாப்பிள ...வழக்கறிஞர் சிவரஞ்சனி ஆகியோர் தவறாமல் கலந்து கொள்கின்றனர்  அறக்கட்டளையை பெயரை கம்பள விழுதுகள் ,கிளைகள் ..பரப்பி கொண்டுதான் உள்ளனர் ...தொய்வு எங்கே ...

கவலை பட வேண்டியது இல்லை ...அவரு இருக்கிறது ...மும்பை பக்கம் ...அவரால் வீட்டுக்கு வருவதே ...3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை வரலாம் ...அவரை சிரம படத்தவேண்டாம் ..செய்த பணிகள் ,அவரிடம் தெரிய படுத்தினால் போதும் ...பக்கத்தில் இருக்கிற ஊரில் இருந்து வந்து ...நம் அறக்கட்டளை பணியை செவ்வனே செய்தால் இன்னும் வளர முடியும் ..அறக்கட்டளை பணி என்பது சமுதாய சேவை ..இதில் பொது நலன் கருதி ..மற்றவர்களுக்கு உதவ முடியும் ..திட்டங்கள் ஏட்டு அளவில் உள்ளது ..முதலில் அவர்களின் ஜீவாதாரண பணிக்கு அப்பாற்பட்டு வேலையை செய்யவேண்டும் ...நான் நன்றாக இருந்தால் தான் ...அறக்கட்டளைக்கு ஆத்ம,மனதளவில் பணியாற்ற முடியும் ...
ஜஸ்ட் ரிலாக்ஸ் பிளீஸ்: 2 விதமான மக்கள்.!
1. வாழ்க்கையில ரொம்ப நல்ல நிலை வர்ற வரைக்கும், ஆடம்பரம் என்பது தேவையில்லாத ஒண்ணுதான். ஆனா, அதுக்காக ரொம்ப அல்பத்தனமாகவும் போக கூடாது.! கடன் வாங்கி, லோன் வாங்கி கார் வாங்க வேண்டியதில்லை தான்.! அது நமக்கு அவசியமில்லாமல், பகட்டுக்காக இருக்கும் பட்சத்திலும், நமது ப்ரொபஷனல் இமேஜ் ( ப்ரேக் ஈவன் எல்லாம் தாண்டிய பிறகு), மற்றும் பணி & வியாபாரத்துக்கு அது முக்கியம் எனில்,தவறு இல்லை என்பது விஷயம் தெரிந்தவர்களின் கருத்து.!
2. சில விஷயங்களும் & நேரங்களும் மிக தரமானதை நமக்கு, சொந்தமாக்கும் போது மனது அதீத உற்சாகம் அடைகிறது.!2000 ரூபாய்க்கி ஷர்ட் வாங்கி போடுறது, திடீர்னு எப்போவாவது பர்ஸ்ட் கிளாஸ் ஏ.சி.ல ட்ராவல் பண்றது (அதுக்கு ப்ளேன்லயே பயணம் செய்யலாம்.!). வருஷத்துக்கு ஒரு தடவை நல்ல 5 ஸ்டார் ஹோட்டல்ல, ரெண்டு நாள் தங்கிட்டு வர்றது , இந்த மாதிரி விஷயங்கள்...யோசிச்சுப் பார்த்தா..."அட்டர் பணம் வேஸ்ட்" என்று தான் தோன்றும். ஆனால், மனதளவில் ரொம்ப புத்துணர்ச்சியாக உணர முடியும்.! காரணம்...அருமை நண்பர் ஒருவர், பணியின் காரணமாக இவை இலவசமாக கிடைத்த போதும், சொந்தமா காசை செலவு பண்ணியும், இதே மாதிரி செய்யக் கூடியவர். என்ன காரணம் என்று கேட்டேன். "மாமூ , உலகத்துல "தி பெஸ்ட்" என்று சொல்லப்படும், நல்ல விஷயங்களை நம மட்டும் அனுபவிச்சா போதுமா.? குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் செலவிடவேண்டும்.! நாம இப்போ இருக்கிற நிலைமைக்கு, நமக்கு 60 வயசுக்கு மேல‌ தான் ஓய்வுவும், மனசும் வரும்.! ஆனா, அனுபவிக்க தெம்பு கிடைக்காது.. சம்பாதிக்கிறதுல,ஒரு பகுதிய நமக்கும், குடும்பத்துக்கும் மட்டுமே செலவழிக்கிறேன்...என்றார். யோசிச்சு பார்த்தா சரித்தான்.!
3. இன்னொருத்தர், 100 ரூபாய் பீரை...1800 ரூபாய் கொடுத்து,அங்கே போய் குடிக்கிறேயேடா....இது கொஞ்சம் ஓவர் இல்லையா.!
கஜல் பாட்டு கச்சேரி கேட்டுக்கிட்டு அங்கே வர்ற ஆளுங்களை பாத்துக்கிட்டு குடிக்கிறது ஒரு தனி சுகம். காலைல பப்பேட் பிரேக் பாஸ்ட்,உலகத்துலேயே பெஸ்ட் சாப்பாடு எல்லாம் கிடைக்கும். இப்படி வருஷத்துல ஒரு தடவை, தனியா போய் வருகிறார்.! என்னப்பா, நீயா இப்படி..! "நாளைக்கு நாம பெரிய ஆளு ஆயிட்டா, நமக்கு வர்ற கெஸ்ட்டுக்கு இந்த மாதிரி செலவழிக்கும்போது மலைப்பா இருக்காது பாரு" ங்கிறார். இதுவும் சரித்தான்.!
4. மேல சொன்ன லிஸ்ட் மாதிரி ஆளுங்க எல்லாம் நல்லாத் தான் இருக்கிறாங்க. படிப்பு, வேலை, சம்பளம் ( வருமானம்)...இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்.!நம்ம கோவை அவினாசி ரோட்டிலோ,அழகான வடவள்ளி ,தொண்டாமுத்தூரோலோ ...இல்லனா பசுமை மாற பொள்ளாச்சி ..அதுவும் இல்லனா ..நம்ம உடுமலைப்பேட்டையிலோ  நிலம் வாங்கி வீடு கட்டி இருக்காங்க.!. நமக்கு.! ஹௌசிங் லோன் அப்ரூவ் பண்ணவே, நூறு தரம் பேங்க் யோசிக்குது.! கேட்டால், வேணாம்.!
நம்பிக்கை இருந்தால்,நாமளும் இந்த மாதிரி முன்னேறி அனுபவிக்கலாம் என்று வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒருத்தர் சொல்றாரு.! பார்க்கலாம்.ம்ம்ம்.
5. இன்று பேஸ்புக் கர்டெய்ன் ரெய்சர் கிடையாது.! ஒரே ஒரு சங்கதி மட்டும். ப்ரெண்ட்ஷிப் ரிக்வெஸ்ட் வரும்போது, ம்யூச்சுவல் பெரெண்ட் லிஸ்ட்டில், நம்ம பேரு முத 10 ஆளுக்குள்ள இருந்தா, கன்பர்ம் பண்ணுவதற்கு முன் ஒரு முறை, மெசேஜ் அனுப்பியோ அல்லது போன் செய்தோ கேட்டுக் கொள்ளுங்கள். குறிப்பாக மகளிர். நிறைய போலி அய்.டி. மற்றும் இம்சை அரசர்கள், நம்மளையே வெறுப்பு ஏத்துறாய்ங்க. அப்புறம் உங்க இஷ்ட்டம். அடுத்த வெள்ளிக்கிழைமை இதே மாதிரி வேற ஒரு புலம்பலில் சந்திப்போம்.

அன்புடன் சிவகுமார் ...அழகான கனவு இல்லத்துக்கு   9944066681....