மூங்கிலணை காமாட்சி அம்மன், தெய்வனாம்பதி,
புறநானூறு :
நேற்று உடுமலை தமிழ் பேராசிரியர் வீரையன் அவர்களை சந்தித்து நேர்காணல் செய்தபோது அவரது புதல்வர் ஆதவன் வீரையன் படிக்கும் ஆஸ்ட்ரோ நெட் பற்றி படிக்கும் ஆர்வம் உள்ளவர் என்றும் அவரின் கனவை நிறைவேற்ற இந்த பல்கலைக்ககத்தில் சேர்த்து உள்ளார் ..
The Indian Institute of Science Education and Research Thiruvananthapuram (IISER TVM) is an autonomous institution under the Ministry of Education, Government of India. It is dedicated to scientific research and science education of international standards.
பணி:
- இளங்கலை மட்டத்தில் ஆராய்ச்சியுடன் கற்பித்தலை ஒருங்கிணைத்தல்
- அனைத்து துறைகளிலும் விசாரிக்கும் உணர்வை வளர்ப்பது
நிகழ்ச்சிகள்:
- 5 ஆண்டு BS-MS திட்டம்
- ஒருங்கிணைந்த PhD (iPhD)
- PhD திட்டங்கள்:
- உயிரியல்
- வேதியியல்
- கணிதம்
- இயற்பியல்
- பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்
- தரவு அறிவியல்
- இடைநிலைப் பகுதிகள்
வளாகம்:
- திருவனந்தபுரம் நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள விதுராவில் அமைந்துள்ளது
- பசுமை மற்றும் மலை பின்னணியுடன் சுற்றுச்சூழல் நட்பு வளாகம்
- அனைத்து மாணவர்களுக்கும் விடுதி விடுதி
- மாணவர் குழுவின் மேற்பார்வையில் பல சமையல் குழப்பம்
ஆராய்ச்சி மற்றும் வசதிகள்:
- எல்லைப்புற ஆராய்ச்சி பகுதிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்
- மெய்நிகர் வகுப்பறைகள்
- புத்தகங்கள் மற்றும் மின் வளங்களின் விரிவான சேகரிப்பு கொண்ட நூலகம்
- நன்கு பொருத்தப்பட்ட ஆய்வகங்கள்
- லினக்ஸ் கிளஸ்டருடன் கூடிய கணினி மையம்
- 2 ஜிபிபிஎஸ் இணைய இணைப்பு
மாணவர் வாழ்க்கை:
- கலாச்சார விழா "இஷ்யா"
- மாணவர் நடத்தும் இதழ் "சோபானம்"
- கலாச்சார மற்றும் அறிவியல் கிளப்புகள்
- திரைப்பட காட்சிகள்
- விளையாட்டு மற்றும் வினாடி வினா போட்டிகள்
- அவுட்ரீச் திட்டங்கள்
இலக்குகள்:
- இளம் விஞ்ஞானிகளின் முழுமையான வளர்ச்சி
- அறிவியல் விசாரணை மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல்
IISER TVM கல்வி , ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் சாராத செயல்பாடுகள் ஆகியவற்றின் தனித்துவமான கலவையை வழங்குகிறது, இது அறிவியல் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த நிறுவனமாக அமைகிறது.📗✒️🎙️📡🤝🥰
தீபாவளியும்...நானும்.....
சின்ன வயசுல அப்பா புதுவருட காலண்டர் வாங்கின உடனே முதல பாக்குற முக்கியமான விஷயம் தீபாவளி எப்ப வருது?
எத்தினி நாள் லீவு வருதுனுதான்...???
அப்பிடி பாத்து பாத்து தீபாவளியை ரசிச்சி கொண்டாடின கடைசி தலைமுறை நாம தான்,,,,
தீபாவளிக்கி 45 நாள் முன்னாடியே ஸ்கூல்ல பசங்ககிட்ட என்னா டிரஸ் எடுக்கணும்,,என்னா வெடிவாங்கணும்னுதிட்டம் போட்ட காலம் எல்லாம் இப்ப நினைச்சாலும் மனசு 5,6 வயசு சின்ன புள்ளயா மாறிடும்,💞,,,,
அதுலையும் நாட்டு வெடி,வெங்காய வெடி,ராக்கெட் ,மாப்பிளை வெடி & அணுகுண்டு வெடிக்கிறவனை எல்லாம் வாய பொளந்துகிட்டு பாப்போம்😛..
வித விதமா துணி எடுக்கணும்னு பிளான் போட்டுட்டு கடைசிலா குடும்ப சூழ்நிலை காரணமா ஏதாவது ஒரு டிரஸ் கிடைச்சா போதும்னு அழுத நாட்கள் எல்லாம் இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு...
என்னதான் இன்னிக்கி சொந்தமா சம்பாரிச்சி கோயமுத்தூர் புரூக் பீல்டு யும் பன் மார்ட்லையும், உடுமலைப்பேட்டை,பிங்கி ,குறிஞ்சி , ரேமண்ட் ஷாப்புலையும் 3000ரூபாய்க்கி டிரஸ் எடுத்தாலும்,,,
அன்னிக்கி அப்பா தீபாவளிக்கி முதல் நாள் கிரி கிளாத் ஸ்டார் ,விஜயதீப் , போய் எடுத்து குடுத்த 50,100 ரூபாய் துணியெடுத்த மதிப்பு எல்லாம் சொல்லவே முடியலே,,,,அதையும் வாங்கிக்கொண்டு வந்து தளி ரோட்டில இருக்கும் மாடர்ன் டைலர்ஸ் கடையில் கொடுத்துட்டு ..தீபாவளிக்கு நாலு நாள் முன்னாடி பள்ளி செல்லும் போது ..அண்ணா எங்க டிரஸ் தைச்சுட்டீங்களா னு கேட்ட ஞாபகம் இன்னும் மனதில் ஓடுகிறது ...
அதே மாதிரி தீபாவளிக்கி ஒரு வாரம் முன்னாடி வீட்டுல முறுக்கு சுடுறப்ப அந்த திருவிழா கொண்டாட்டம் மனசுக்குள்ள வந்துரும்...
வழியில பாக்குற தெரிஞ்ச பசங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு,,,
குட்டித் தூக்கம் போட்டுட்டு விடியற் காலையிலேயே எண்ணெய் தேய்ச்சி குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு...
நமக்கு கிடைத்த பங்கு பட்டாசை பத்திரமாக எடுத்து வந்து ஒவ்வான்றாக,பெரிய வீரனைப் போல் நீளமான ஊதுபத்தியால் பற்ற வைத்து வெடிக்கும் போது அப்பப்பா,,,
அப்படியே ..புது துணிய போட்டுட்டு ..சர்ச்சு பக்கத்துல இருக்கிற மாலையம்மன் கோவிலுக்கு போயி ..பிள்ளையாரையும் அரச மரத்தியும் சுற்றி வணங்கி ..வீட்டுக்கு பசியோடு வந்து இட்லியும் ..தோசையும் .. காலையில சுடச் சுட,,சாப்பிட்ட சொந்தம் அப்பப்பா ..தற்காலத்துக்கு வருமா அந்த மகிழ்ச்சி .
பட்டாசு களோபரம் முடிந்த பிறகு 8 மணிக்கு மதியம் சாப்பாடு...அம்மா,அப்பா கிட்டயும் எல்லோரையும் அதட்டி உருட்ட.,,,
பிறகு உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு ஊர்வலம்.. புது சட்டையை காண்பிக்க, அப்படியே அவர்கள் வீட்டு தீபாவளி பலகாரங்களை ருசி பார்க்க....
அதெல்லாம் உலக நாயகன் சொல்லுறபடி ஆராயக்கூடாது அனுபவிக்கணும்,,,
இன்னும் எழுத எழுத நிறைய தோணுது...
இப்பவும் தீபாவளி கொண்டாடுறாங்க...
கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் (உடுமலை ),பொள்ளாச்சி மாரியம்மா ஸ்வீட்ஸ் ,உடுமலை ஏவிஎம் ஸ்வீட்ஸ் அரைகிலோ வாங்கிட்டு.. அமேசான்ல டிரஸ் எடுத்துட்டு,,, கடமைக்கு தீபாவளி கொண்டாடிகிட்டு,,,,
சிலர் தீபாவளி அன்னிக்கு வீட்டை பூட்டிக்கிட்டு வெளியூர் கிளம்பி ஊர் சுற்ற கிளம்பறாங்க ...
ஒண்ணு மட்டும் நிச்சயம் பணம், சம்பாத்தியம் & கார்ப்ரேட் வாழ்க்கைனு, ஒரு மாயவலையை உருவாக்கிவாழ்க்கையோட சின்ன சின்ன சந்தோஷங்களை அதுல இழந்துகிட்டு வரோம்...
எல்லாமே மெஷின் மாதிரி ஒரு இயந்திர வாழ்க்கை,,,🥰🙏📡🎙️
800 வருடங்கள் பழமையான மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி எனும் ஊரில் வனப்பகுதியில் அமைந்துள்ளது அருள் மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்.பெரியகுளம் மஞ்சள் ஆறும் ,,,
மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் காலத்தில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தேவதானப்பட்டி அந்தப் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த போது வங்கிசாபுரி எனும் பகுதியை ஒரு ஜமீன் ஆண்டுவந்தார். அவர் பெயர் பூசாரி நாயக்கர் . இந்த ஜமீனில் இருந்த மாடுகள் வனப்பகுதியில் உள்ள உணவுக்காக தினமும் அனுப்பி வைக்கப்படும் அப்படி தினமும் அனுப்பிவைக்கப்படும் மாடுகள் சென்று திரும்பும்போது ஒரு மாடு மட்டும் தனியாக வனப்பகுதிக்குள் செல்வதை தினந்தோறும் வாடிக்கையாக வைத்திருந்தது, இதனை பார்த்த மாடு மேய்ப்பவர் ஒருவர் ஒருநாள் அந்த மாடு பின்பு தொடர்ந்து சென்ற போது அந்த மாடு ஒரு புற்றுக்குள் பால் பீச்சிக்கொண்டிருப்பதை பார்த்து மேய்ப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவருக்கு கண் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது.
உடனே மாடு மேய்ப்பாளர் இந்த சம்பவம் குறித்து ஜமீன்தாரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. ஜமீந்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருந்த போது சம்பந்தப்பட்ட பகுதியில் ஜமீன்தார் சென்று பார்த்தபோது ஏதோ தெய்வ குற்றம் செய்ததாக அவருக்கு தோன்றியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்தில் ஒரு அசரீரியாக ஒரு பெண்ணின் குரல் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அசரீரியில் தான் இந்தப் பகுதியில் முன்பு ஆட்சி செய்ததாகவும் அரக்கனை வதம் செய்துவிட்டு அமைதியாக இருக்கும் இந்த வனப்பகுதியிலேயே தான் தங்கி விட்டதாகவும் பெண்ணின் அசரீரி குறள் கூறியதாக கூறப்படுகிறது. அசரீரியின் இந்தப் பகுதியில் உள்ள மஞ்சள் ஆற்றில் ஒரு பெட்டி வரும் எனவும் அந்த பெட்டியை மூங்கில்அணை கொண்டு தடுத்து நிறுத்தி இந்த ஆற்று அருகிலேயே பெட்டியை வைத்து பூஜை செய்து வழிபடுமாறு கூறியதாகவும் ,
அதனைத் தொடர்ந்து இந்த கோவில் உருவாக்கப்பட்டதாகும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த கோவில் அருகே குடியிருப்புகள் ஏதும் இருக்க கூடாது என கூறப்படுகிறது. இந்த கோவில் கருவறைக்குள் இது வரை யாரும் சென்றதில்லை எனவும் கருவறையில் வெளியே இருக்கும் கதவை காமாட்சி அம்மனாக தரிசித்து வருகின்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் தேங்காய் உடைக்கப்படும் வழக்கம் இல்லை எனவும் நெய் தீபம் மட்டுமே ஏற்றப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த கோவிலில் அருகே உள்ள ஒரு மண் குடுவையில் உள்ள நெய் இது வரையில் கெட்டுப்போகாதவாறு பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நெய்யில் எறும்பு, ஈ போன்ற எதுவும் அண்டாதது ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலின் கருவறை உள்ளே குடிசையாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு அதிசயங்கள் அடங்கிய இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்த ஆன்மிக ஸ்தலமாக இங்குள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பிரசிதிபெற்று விளங்குகிறது.
தீபாவளி நாளில் ஆன்மீக பயணமாக சென்று வந்தது சிறப்பு ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
உடுமலைப்பேட்டை உடுக்கம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், சாந்தாமணி தம்பதியின் மகன் சண்முகப்பிரபு. சமீபத்தில், கணினி அறிவியலில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றார் (BE CSE 🎓 ). இது தனிப்பட்ட மைல்கல் மட்டுமின்றி, மாப்பிள்ளையின் பொறியாளர் பட்டம் ஒட்டுமொத்த குடும்பத்தின் கனவும் நிறைவேறியது. சண்முகப்பிரபு மாப்பிளை கம்பள சமுதாயத்தில் அவரின் பரம்பரையில் முதல் பட்டதாரி 🎓நமது கம்பள சமுதாயத்தில் அதுவும் ஆண்கள் கல்வியில் பட்டம் பெறுவது ஒரு மைல் கல் ..ஏன் என்றால் கல்வியில் பெண்கள் தான் இளநிலை ,முது நிலை பட்டதாரிகள் அதிக அளவில் வளர்ச்சி பெற்று வருகிறார்கள் ..இன்று இந்த மாப்பிள்ளைகள் போன்று கல்வியிலும் .வேலைவாய்ப்பிலும் வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது .மாப்பிளையுடன் கலந்துரையாடியபோது மாப்பிள்ளையின் முக்கிய நோக்கம் நம் கம்பள சமுதாயத்தை அடுத்த முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வது என்று கூறியுள்ளார் .இது போன்று நமது சமுதாயத்தில் ஆண் குழந்தை செல்வங்கள் கல்வியிலும் ,வேலைவாய்ப்பிலும் அதிக அளவில் வரவேண்டும் என்னுடைய ஆசை ...
என் அன்பு வாழ்த்துக்களும் நன்றி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் .
உடுமலைப்பேட்டை
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் பெருமையுடன் வழங்கும்
தளி எத்தலப்ப மன்னர்
ஆவணப்படம்
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர்
தலைவர் திரு. தி.குமாரராஜா, துணைத்தலைவர் வி.கே.செல்வராஜ், சி.ராஜசுந்தரம்
செயலாளர் வி.கே.சிவகுமார், இணைச்செயலாளர் ராபின், அருள்கணேசன், மதிப்புறு தலைவர்கள்
முனைவர் கு.மூர்த்தீஸ்வரி, முனைவர் மா.மதியழகன், திருமதி.வை.விஜயலட்சுமி, முனைவர் ஹேனா ஷெர்லி,
எழுத்து, எண்ணம் மற்றும் கருத்துருவாக்கம் அருட்செல்வன்.
நன்றி .
பாவலர் பழனிசாமி, திருமலையம்மாள் ஜல்லிபட்டி
திரு.சுபாஸ் கிருஷ்ணசாமி, சித்திரச்சோலை, உரல்பட்டி.
கோவை சிவக்குமார் 🌈🥰🙏 அவர்களின் பதிவும் ..அவர்களை தொடர்ந்து .K N .நாகராஜ் கரூர் அவர்களின் பதிவும் ..அன்புத் தம்பி ராஜேஷ் கண்ணன் (வழக்கறிஞர்-நாமக்கல் ) அவர்களின் பதிவும் ...திருமண பதிவுகள் சிந்திக்க வேண்டிய நம் சமுதாய சொந்தங்கள் ....
அன்பார்ந்த நமது சொந்தங்களுக்கு வணக்கம் அனைத்து சொந்தங்களுக்கும் ஒரு வேண்டுகோள் நான் பார்த்த வகையில் எல்லா ஊர்களிலும் 25க்கு மேல் முப்பது வயதுக்கு மேல் மணப்பெண்கள் நிறைய உள்ளனர் இன்னும் திருமணம் ஆகாமல் காரணம் நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை எதார்த்தமான நிலையில் எல்லோரும் ஐடி பணியில் ஒரு லட்சம் ஒன்றரை சுமார் 70 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் இருந்தால் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றனர் அவர்கள் எதிர்பார்ப்பை நான் குறை சொல்லவில்லை ஐடி வேலையில் நமது மாணவர்களுக்கு தற்போது தான் படித்து வருகின்றனர் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஐடி பணியில் உள்ளனர் மற்ற இளைஞர்கள் எல்லாம் நல்ல வேலையில் மாற்றுப் பணிகள் உள்ளனர் அவர்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில்லை அதனால் நிறைய இளைஞர்கள் ஊருக்கு 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 30 வயது 35 வயது என்று நிறைய பேர் உள்ளனர் திருமணமாகாமல் இதே போல் 80களில் 90களில் நினைத்திருந்தால் ஒரு தலைமுறையை இருக்காது அதனால் மணப்பெண்களின் பெற்றோர்கள் நல்ல மாப்பிள்ளை நல்ல வேலை இருந்தால் அவர்களுக்கு நீங்கள் பெண் தர வேண்டும் மேலும் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகிறார்கள் சொந்த வீடு தோட்டம் என்று சில பேர் கூறுகிறார்கள் விவசாயம் செய்யும் மாப்பிள்ளைக்கு மணப்பெண்ணே கிடையாது என்கிறார்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் டிரைவர் என்று எல்லோரும் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் எங்கே போவது இப்படியே விட்டால் கண்டிப்பாக நிறைய பேர் திருமணம் ஆகாமல் பெண்களும் உள்ளனர் ஆண்களும் உள்ளனர் எதார்த்தமான நிலையை உணர்ந்து எல்லோரும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் யாரையும் குற்றம் சொல்லவில்லை இப்படியே போனால் நமது கம்பனத்தை இனமான இளைஞர்கள் நிறைய பேர் திருமணமாக முன் தன் வாழ்க்கை இழந்து விடுவார்கள் பெண்களும் நிறைய முதிர் கனிகளாக உள்ளனர் எதிர்பார்ப்புகளோடு திருமணமாகாமல் உள்ளார் அவர்களும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்📗✒️✒️🎙️📡📡கோவை சிவக்குமார் 🌈🥰🙏
K .N .நாகராஜ் கரூர் அவர்களின் பதிவு ....
ஜாதகத்தை தூக்கிக்கொண்டு திரியும்வரை இந்த மாதிரி பிரச்சனைகள் தலை விரித்தாடத்தான் செய்யும்...
எனக்கு கல்யாண பொருத்தம் பார்க்கலே.
2 பொம்பளபுள்ளே 1 பையன்னு ஜாம் ஜாம் னு வாழத்தான் செய்யறேன்...
பெரிய பொண்ணு B.sc Gold medal, MBA Anna University Top 50 Rank Holder...
Poly Technic முடிச்ச பையனுக்குதா கொடுத்தேன்
லட்டு மாதிரி 2 ஆம்பள பசங்க இப்போ...
S.R Fibers , S.R.smal scale industries nu தேங்காய் நார் மட்டை கம்பெனி, கயிறு திரிக்கிற மெஷின்கள் னு வாழ்க்கையை அழகழகா நடத்துறாங்க...
படிப்பென்னங்க படிப்பு...
Understanding தா முக்கியம்.
நாங்களும் சம்மந்தகாரங்களும் ஒன்னா உட்கார்ந்து ஜாதகம் பார்த்தது கிடையாது. இரண்டு சம்மந்திகளுக்கும் பிடிச்சிபோச்சு கல்யாணம் முடிச்சுட்டோம்...
மனங்கொண்டதே மாங்கல்யம்...
இரண்டாவது பொண்ணு B.E (ECE) first class 8.9 percentage
மாப்பிள்ளை வீட்டுக்காரர் திருப்திக்கு ஜாதகம் கேட்டாங்க னு 23 வயசுல குறிப்பை வெச்சு ஜாதகம் எழுதி வாங்கி தந்தேன் அவ்வளவுதான்
அவங்களும் சரின்னாங்க
17.09.23 ல கல்யாணம் ஜாம் ஜாம் னு முடிச்சு 28.09.24 மஹாலட்சுமியே பேத்தியா பொறந்திருக்கா
2வது மாப்ளே B.Sc (Jio fiber le Dindigul and Theni Districtக்கு fiber Engineering incharge MNC Co.)
நான் சொல்ல வர்றது என்னன்னா ஜாதகம் தேவையில்லை... சாதகமான முடிவுகளை எடுக்கற பெற்றோரா இருந்து பிள்ளைகளுக்கு காலாகாலத்துலே கல்யாணம் செஞ்சு வைங்க... இப்போ இருக்கிற கால கட்டத்துக்கு டெஸ்ட் டூப் பேபி னு கையை பிசைய வெச்சுடாதீங்க
அப்புறம் முதலுக்கே மோசமாகி அடுத்த ஜாதிலே ஓடிப்போயிடுச்சு னு நடைபிணமா வாழ்க்கையை வாழ வேண்டி இருக்கும்.
அப்புறம் நாமும் தலைநிமிர்ந்து நடக்க முடியாம, நம்ம பிள்ளைகளையும் அடுத்த ஜாதிலே போயிடுச்சே னு கௌரவத்தை வாரி கொடுத்திட்டு... அவங்களப்பார்த்தும் நாம சந்தோசப்பட முடியாம, வம்ச விருத்தி இல்லாம நாசமா போறதுக்கு பதிலா.... 10, 12வது பையன் படிச்சிருந்தா போதும்... நம்ம பிள்ளை அவ குடும்பத்தை வாழ வெச்சுடுவா னு நம்பிக்கைகளை அனைத்து பெற்றோரும் பெற்றிடுவதே ஆகச் சிறந்த தீர்வுகளாக இருக்குமென என்னளவுக்கு நம்புகிறேன்
இந்த 54 வயசுலயும் தட்டு தடுமாறி தமிழில் டைப் பன்றேன்னா எனது சமுதாயம் நான் பெற்ற நம்பிக்கைகளை அவர்களும் பெற்று தனது சந்ததியினருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க...
மேலும் மேலும் கால தாமதப்படுத்தாதீர்கள் என கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்
பொம்பள பிள்ளைகளை எவ்வளவு படிக்க வைக்க பிரயத்தனப்பட்டீர்களோ அதே அளவு கல்யாணம் செய்து கொடுப்பதில் மூன்று மடங்கு மும்முரம் காட்டுங்கள்...
யார் குடும்பத்தையோ தழைக்க செய்வதற்குதான் உங்களுக்கு கடவுள் பெண் பிள்ளைகளை பரிசளித்தார் என்பதை மனதில் நிறுத்தி...
எது எதுக்கு செல்லம் கொடுக்கனுமோ அது அதுக்கு கொடுங்கள்...
எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டீங்கனா நீங்களே அந்த பிள்ளையின் இளமை வாழ்க்கையை சீர் செய்ய தவறிவிட்டீர் என்பதை எதிர்காலம் உங்களுக்கு எடுத்துரைக்கும் என சங்கடத்தோடு பதிவை விதைக்கிறேன்...
முளைப்பதும் அழுகுவதும் அழுவதும் அவரவர் வினைப்பயனே...
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
" மனம் கொண்டதே மாங்கல்யம் "
நித்தியத்துவம் பெற்ற வார்த்தைகள் ..
தனக்கு நிகராக அல்லது தன்னை விட ஒருபடி மேலே வரன்களை எதிர்பார்க்கும் சூழலே இங்கு 30 வயதை கடந்தும் பலர் மணமாகமல் இருப்பதற்கு முதற் காரணம்
பாலின விகிதம் நேரேதிராக குறைந்து வரும் காலத்தில் இனி திருமணம் என்பதே பலரது வாழ்வில் எட்டாக்கனி என்பதுதான் எதார்த்தம்...
நம் சமுதாயதிற்கு ஜாதகம் தேவையில்லை ஏனெனில் நாம் செய்வது காந்தர்வ மனம், தாலி எடுத்து கொடுப்பது மட்டுமே பழங்கால வழக்கம், ஆகையால் சமுதாய பெண்கள் எப்படி விக்ரம் காலத்தில் வாழ்ந்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே காந்தர்வமனம் போல் நமது சமுதாய திருமணத்திற்கு எதுவும் அவசியம் இல்லை எக்காலத்திலும், ஆனால் ஜாதகமும் பொய்யல்ல ஜாதககாரர் சொல்லும் கணிப்பு பொய்யான இருக்கலாம் (90 நாள் ஜாதகம் கற்று நானும் ஜாதககாரர் என்றால் எப்படி விளங்கும்) ஜாதகம் முழுக்க முழுக்க அறிவியல் (கதிர் வீச்சு) (blackhole, waves, eclipse, luner eclipse etc...)என பல சம்பந்தப்பட்ட விசியம் , எனவே ஜாதகம் பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்தால் போதுமானது...
திண்டுக்கல் கரூர் திருச்சி மாவட்ட கம்பளத்தார்களிடையே பெரும்பாலும் ஜாதகம் இல்லாமலே அங்கங்கே சொந்தத்திலயே மணம் முடித்து கொள்கிறார்கள்...
5,6வருடங்களில் சிறு மாற்றம் நிகழ்ந்து வருகிறது...குறிப்பாக
பால்ய விவாகங்கள் குறைந்து விட்டன என்றே சொல்லலாம்
ஆக இத்தனை வருட கால திருமணங்கள் எதுவுமே ஜாதகத்தை பார்த்து நடைபெறவில்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்தானே...
அதனால்தான் ஜாதகத்தை காரணம்காட்டி திருமணங்களை தள்ளி வைக்காதீர்கள் என்பதை அனுபவ எதார்த்தங்களோடு உடன்படுகிறேன் ...
ராசி பொருத்தம் பார்க்கப்பட்டு செய்து கொண்ட திருமணங்கள் எத்தனையோ முன்னுக்குப்பின் முரணாக முட்டிக்கொண்டு முழிபிதுங்கி நிற்பதை கண்ணார பார்க்க முடிகிறதல்லவா
கணவன் மனைவி விசயங்களுக்குள் மூன்றாம் நபர் மூக்கை நுழைத்தாலே பிட்டுக்கொண்டு போய்விடுமென்பதுதான் உண்மையிலும் உண்மை...
பெற்றவர்களாயினும் இவர்களின் விசயங்களுக்குள் தலையிடக்கூடாது என்பதே என் நிலைப்பாடும்கூட...
இயற்கையின் நியதிப்படி அதிகப்படி ஒரு பத்து நாளில் சரியாகி விடும் அல்லது சரியாக்கி கொள்வார்கள்...
கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளுக்குள் பெற்றோர்களோ மற்றவர்களோ தலையிடும்பொழுது பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து வேதனைப்படுத்தி விடுகிறது
சில நேரங்களில் நியாயம் பேசியவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு கணவன் மனைவி ராசியாகிப் போய்விடுவார்கள்...
துரதிர்ஷ்டவசமாக வசமாக மற்றவர்களே இவர்களின் பிரிவுகளுக்கு காரணகர்த்தா ஆகிவிடுகிறார்கள்...
ஆக இவர்கள் தங்களை தாங்கலே நிரபராதி ஆக்கிக்கொள்வதற்காக ஜாதகத்தை கையிலெடுத்து சாதகமாக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு விருப்பமின்றி அதன்மேல் பழிபோட்டு விலகிக்கொள்ள விருப்பம் கொள்கிறார்கள்
ஜாதகம் பார்த்தோம் பையன் ராசி நேரம் சரியில்லை பிள்ளை பிறந்த நேரம் சரியில்லே னு வேக்கானம் பேசுறாங்க
நான் தெரியாமத்தேன் கேட்கிறேன்
மத்ததெல்லாம் முன்கூட்டியே சொல்லத் திறமை இருக்கிற
எந்த ஜாதகக்காரனாவது உங்க பிள்ளைக்கு இந்த புள்ளதான் பிறக்கும் இந்த நாளில்தா பிறக்கும் இந்த நட்சத்திரத்தில்தான் பிறக்கும் னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்
சொல்லிட்டார்னா அவரு ஜாதகக்காரரு
அந்த ஆளு பொழப்பே அல்லோலங்கடி போடுதாம்
ஜாதகக்காரன் சொன்னான் ஜோசியக்காரன் சொன்னானு பய பிள்ளைகளை பயமுறுத்தாதீங்க
அவங்கவங்க வசதி வாய்ப்புக்கு ஏற்றவாறு ரெண்டு குடும்பமும் ஒத்துப்போனா... பையனுக்கும் பொண்ணுக்கும் பிடிச்சுப்போனா காலா காலத்திலே கல்யாணத்தை பண்ணி வெச்சு பேரப் பிள்ளைகளை கொஞ்சறதுக்கு பாருங்க
நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா (இல்லை)
என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா...?
உண்மையான சத்தியவாக்கு எனில்
உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வும் கடவுள் கையில்தானே ... ஆம் நம்புங்கள் கடவுளை அல்லது பித்ருக்களை அல்லது குல தெய்வங்களை...
ஜாதகம் என்பது நமக்கு சாதகமா இருந்தாதான் ஜாதகம்... இல்லாட்டி பாதகம் நமக்குத்தா.... நம்ம பிள்ளைகளுக்குதான்...
🙏🏼🙏🏼🙏🏼
நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா (இல்லை)
என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா...?
உண்மையான சத்தியவாக்கு எனில்
உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வும் கடவுள் கையில்தானே ... ஆம் நம்புங்கள் கடவுளை அல்லது பித்ருக்களை அல்லது குல தெய்வங்களை...
ஜாதகம் என்பது நமக்கு சாதகமா இருந்தாதான் ஜாதகம்... இல்லாட்டி பாதகம் நமக்குத்தா.... நம்ம பிள்ளைகளுக்குதான்...
🙏🏼🙏🏼🙏🏼
அன்புத் தம்பி ராஜேஷ் கண்ணன் (வழக்கறிஞர் ) அவர்களின் கருத்துப்பதிவை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்...
நாம கோவில்லே போய் தாலி கட்டினாலே குத்தம் வாங்குறவங்க ...
அது எப்பேர்பட்ட கோவில் சாமியா இருந்தாலும் ...
இங்கென்னடான்னா
ஜாதகம் ஜாதகம் னு
சாக்குபோக்கு காமிச்சுகிட்டு அரை கிளவிக ஆகாம கல்யாணம் செஞ்சு தரமாட்டேன் னு போஸ்டர் போட்டுட்டு இருக்காங்க னு கவலைப்படறேன் தம்பி...
🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼
இதுலே மாப்பிள்ளை வீட்டு கூத்து அதுக்கு மேல...
பையன் படிச்சிருக்கானாம்
பைனான்ஸ் கம்பெனில வேலை பார்க்காராம்
பெங்களூர் ஆந்திர பம்பாய் னு லைன் போட்டிருக்கானாம்
I T field லே லட்சத்தில் சம்பளம் வாங்கறாராம்
படிச்ச பொண்ணா, கொஞ்சம் வசதியா, அண்ணன் தம்பி இருந்தா பரவால்லயாம், அக்கா தங்கச்சி இல்லாம இருக்கனுமாம் ஒத்த பொம்பள புள்ளையா வேணூமாம் வேணுமாம் னு தேடி தேடி பொண்ணு பார்க்க இவரு பார்த்த பொண்ணுக எல்லாம் கல்யாணமாகி ... புள்ள குட்டியோடு வர ...
(இவருக்கு எங்கெல்லாம் போய் பொண்ணு கேட்டாகளோ...அந்தந்த பொண்ணுகளுக்கு அடுத்தடுத்து கல்யாணம்)
இவருக்கு இன்னும் பொண்ணு தேடிட்டே இருக்காகளாம்பா
வருசம் ஏழாகுது
(திருநள்ளாறு திருமணஞ்சேரி, திரு நாகேஸ்வரம், கீழப் பெரும்பள்ளம் னு சுத்தி சுத்தி காலெல்லாம் வலிக்க)
இவக ஜாதகக்காரருக்கே இன்னும் என்னென்ன கோவிலிருக்கு னு இன் ஸ்டா வாட் சப்பு பேசு புக்கு னு பஞ்சாங்கத்தை தாண்டி தேடுறாராம்)
உருப்படியா தேடினபாட்டைக் காணோம்...
அடிக்கடி சேவ் பண்ண வேண்டி இருக்கு
வெள்ளை முடிக்கும்
கல்யாணத்துக்கும்.....
இந்த பாவ கணக்கு எங்கே தொடங்குச்சு தெரியுமா...? பொண்ணு வீட்டுக்காரன் பெருசா செய்ய மாட்டான், அவங்க நமக்கு ஈக்கிவளா இல்லே, நிறம் கம்மியா இருக்கு, அப்பன்காரன் ஆயிரத்தெட்டு ரூல்ஸ் பேசுறான், அம்மாக்காரிக்கு இஷ்டம் இல்லபோல தெரியுது னு நீங்களா கற்பனை பண்ணிட்டு வேண்டாம் பார்த்துக்கலாம் னு வந்தீங்கல்லே அங்கன தொடங்குச்சு...
கூட்டி கழிச்சு பாருங்க
கணக்கு சரியா வரும்
நல்ல பதிலை சொல்லி விடுறோம்னு வந்தீங்கல்லே
அதுதா தொரத்துது னு சொல்லத்தோனுது
உங்கிரகம் சரியில்லே இல்லே
உஞ்சாதகக்காரன் சரியில்லே தெரிஞ்சுக்கோ
உனக்கு சுய புத்தியில்லே
சொல்றவன் 2000 சொல்வான்
செலவழிச்சிட்டே இரு
கட்டம் சரியில்லே
விட்டம் சரியில்லேனுட்டு
😁😁😁
தாங்கள் கருத்து 100 % உண்மையே.....
காந்தவர்வ திருமணம் செய்தால் எவ்வளவு பெரிய தோஷமும் போகும்.....
மேலே உருமி முழங்க பச்சை பந்தலில் ஆண் தாலி எடுத்து கொடுத்து பெண்கள் மணமகளுக்கு தாலி கட்டினாலும் அந்த திருமணம் சிறப்பாக வாழும் என்பதே உண்மை.....
இதற்கு ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என்பதே உண்மை..
திருமண பதிவுகள் கலந்துரையாடல் அருமை ..வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன் ..நன்றிகள் ..
KVE வாட்சப் குழுவின் பயன்கள்...
முகமறியா எத்தனையோ சொந்தங்களோடு
எனை இணைத்து விட்டிருக்கிறது.
இதனுள் பயணிப்பவர்
அனைவரும் ரத்த உறவுகள்
அவர் என்னை அறியார்
நான் அவரை அறியேன்
ஆனாலும் அவருக்காக
நான் துடிக்கிறேன்
எனக்காக அவர் துடிக்கிறார்
எப்படி வந்தது இந்த
ரத்த சொந்தம்
எவர் சொல்லி தந்தது
இந்த உணர்வு பந்தம்
இவர்களோடு நானும்
கருத்து
போரிட்டிருக்கிறேன்
பூஜை அறைக்குள்
நுழைந்த குழந்தையை
செல்லமாய் தூக்கி
வெளியில் விடுகிற
பாவனையாய்
கடந்து செல்கிறார்களே
எப்படி
சொல்லித்தர
நேரமில்லாமல் இல்லை;
சொல்லி ஒன்னும்
ஆகப்போறதில்லை
என்கிற
அனுபவ காயங்கள் போலும்...!
பக்குவங்கள் என்பது
இதுவென காட்டி
அமைதி காக்கிறார்களே
எவ்விதம்...?
இந்த காதுலே வாங்கி
அந்த காதுலே விடாம
தனக்குரிய புரிதல்களை
மெனக்கெட்டு எழுதுகிறார்களே
எவ்வளவு பெரிய மனது
வேண்டும் அவர்களுக்கு...
மதித்தல் எவ்வளவு
மகத்துவம் வாய்ந்தது
இந்த குழுவிற்குள்
இழுத்து வரப்பட்டு
இணைக்கப்பட்ட
எண்ணற்ற கம்பளப் பற்றாளர்கள் அனைவருமே
முகநூல் பக்கங்களிலும்
வாட்சப் தளங்களிலும்
கம்பள சமுதாயத்தின்
வளர்ச்சியைப்பற்றிய
சிந்தனைகளை பகிர்ந்து கொண்டவர்கள் என்பதை
தெரிந்து கொள்ள முடிந்தது
இந்த குழுவில்
உள்ளவர்களில்
சென்னையில்
என்ன உதவி
வேண்டுமானாலும்
செய்வதற்கு சிலர்
காத்துக் கொண்டிருக்கிறார்கள்
தங்க வேல்களும்
செந்தில் வேல்களுமாக
சொந்தங்களே
கம்பளத்தானுக்கே உரிய
கர்ண கவசங்களோடு
உறவு வட்டம்
இதிலிருந்து ஒரு பங்கு
துவங்கப்பட்டதுதான்
எனில் மிகையாகாது
பெரியாரு bearerகளுக்கும்
War Roomகாரங்களுக்கும்
யாரும் பிரச்சினை
தீர்க்க முடியாத
குழுவும் இதுதா....
குழு வரைமுறையும்
அதே அதே அதே...
கம்பளத்து பெரியோர்கள்
அதாவது
அமைப்பு தலைவர்கள்
அனைத்து சங்கத்தினரும்
இணைந்திருப்பதும்
இங்கேதான்
இதுவும் மௌசுதான் போங்க
உடுமலையை
மையப்படுத்தியே
உடும்புபிடியா
இடுகிற பதிவுகள்
இங்கேதான்
அதிகம்
இந்த குழுவின் கேப்டன் சிவா பாவா
இரை தேடும்
பறவை போல
பல்வேறு வகையான விசயங்களின்
பதிவுகள்...
பசியுள்ள பறவைகள்
பகிர்ந்து கொள்ளலாம்
வகை வகையாக
வரலாற்று ஆய்வுகள்,தரவுகள், களப்பணிகள் , கம்பள வரலாற்று கல்வெட்டு சான்றுகள் னு சொல்லிக் கொண்டே போகலாம்
நூலக வட்ட பதிவுகள்
மறந்து போயின போலும்
திருமதி Airtel வரலட்சுமி அவர்களும் Entreprenuer பவித்ரா வேலுமணி அவர்களும் கம்பளத்து பெண்மணிகள் கண்மணிகள் என கலந்திருப்பதும் இந்த குழுதான்...
ஆகவே சொந்தங்களே
அரசியலுக்கு அப்பாற்பட்டு....
உறவுகளை மேம்படுத்தும் விதமான பதிவுகளை பதிந்து ஒற்றுமைக்கு வழிகாட்டியாக செயல்பட்டிட இக்குழுவை வேண்டிக் கொண்டு பாராட்டுதலை நிறைவு செய்கிறேன்.
🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼K N நாகராஜ் கரூர் 🤝🥰📡🎙️🤝🌈🍫💦
கார்த்தி SR என்று செல்லமாக அழைக்கும் கார்த்திக்குமார் .. (கார்த்தி SR - 9787923028)⛱👍..க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...(உடுமலைப்பேட்டை )
வரலாறு .தொழில் .அரசியல் ..கவிஞர் .பேச்சாளர் ...எந்த துறையாக இருந்தாலும் பன்முக தன்மை கொண்டவர் ..❤T .கார்த்திக்குமார் ...🌱🎂.பன்முகத்தன்மை (கார்த்தி SR - 9787923028)⛱👍
படித்தது மின்னணுவியல் ...SM HIGH TECH SOLUTION அவர் நடத்தும் மின்னணுவியல் தொழில் துறையில் கடுமையான உழைப்பாளி ...வருங்கால வளரும் பன்முக எழுத்தாளர் ,கவிதையாளன் ...தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கம்பள தொழில்முனைவோர்களை ஒன்றிணைத்து செயல்படுபவர் .
எந்த சூழ்நிலையிலும் விவசாயத்தை மறவாத மண்ணின் மைந்தன் ..
இந்த சிறு வயதில் வரலாற்று தகவல்களை தேடி ...தேடி ...படிக்கும் ஆர்வம்....
எந்த ஒரு சிறு செய்தியை சொன்னவுடன் ஆழந்த சிந்தனையுடன் அதை அப்படியே கண்முன்னே நிறுத்தும் திறமை ..
எந்த ஒரு பணியாக இருந்தாலும் வேகம் ..வேகம் ..கொஞ்சம் அதிகம் ...ஏன் என்றால் இப்போது இருக்கும் காலகட்டம் அப்படி ...இந்த வளர்ச்சி கூட வேகத்தால் வந்தததாக கூட இருக்கலாம் ...கம்பள சமுதாயம் என்பதால் ..பாளையக்காரர்கள் அரசாண்ட பூமி இது ...ஆட்சி முறை முறையும் கூட ..சமுதாய நலன் சாராமல் ...பொதுநலம் சார்ந்து பணிபுரிவதால் இந்த வேகம் வேண்டும் என்பது சரியான திசை என்று சொல்லுவேன் ...மாப்பிள்ளை ஒரு பணியை எடுத்தால் அதை திறம்பட நிறைவேற்றி கொண்டுவருவது மிக சிறப்பு .. சமுதாய பற்று அதிகம் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொறுப்புமிக்க ஒருங்கிணைப்பாளர் (விருட்சம் )..அறக்கட்டளைக்கு தேவையான அனைத்து ஆதாரத்தை பெருக்குவது எப்படி என்று மாப்பிள்ளையிடம் தெரிந்து கொண்டேன் ..மாப்பிளை இந்த பணி செவ்வனே நிதிப்பற்றாக்குறை காலத்தில் நிதி ஆதாரத்தை பெருக்கி ..மாத ,வருட சந்தாவை ,நிறைவேற்று கொண்டு வருவதற்கும் குழுவிற்கு தேவையான புதிய தொழில் முனைவோர் ,தற்பொழுது யார் யார் வியாபாரம் ,எந்ததெந்த துறையில் நம் பணியில் இருப்பவர்களை சொந்தங்களை கண்டறிந்து ஒருங்கிணைப்பு செய்து அறக்கட்டளையை நிர்வகிப்பவர்
கம்பளவிருட்சத்தின் அறக்கட்டளையின் களப்பணியாளனாக,ஒருங்கிணைப்பாளராக உடுமலைப்பேட்டை K .வல்லகொண்டாபுரம் தன் திறமைகளை எந்தஒரு செயலிலும் தனித்தன்மையுடன் வெளிகொண்டுவருபவர் ... பொதுத்தளத்தில் நல்ல சமூக சேவையாளனாக , தன் பெற்றோர்களின் செல்ல பிள்ளையாக .... கம்பளத்து சொந்தங்களின் "அன்பு" செல்லப்பிள்ளையாக நம் சமுதாயசொந்தங்களின் முகம் அறிந்த நண்பனாக இருப்பவர் ...நண்பர்களின் வட்டத்தில் எப்போதும் கலகலப்பாக சுற்றியிருக்கும் இடம் எல்லாம் புன்னகை சிதறும் முத்துக்களாக .. என் அருமை மாப்பிளைக்கு கம்பள விருட்சக் குழுமம் சார்பாக 🌷🌷🎂🎂என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🎂🌾🌾... என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681👍⛱⛱
கும்மல் நாயக்கர்......
கும்மல் நாயக்கர் என்பது அந்தக்காலத்தில் நமது சமுதாய மக்கள் தொட்டாவுலு,கும்ப்பலாவுலு என்று குறிப்பிடும் கூட்டமாக இருக்கும் நிலையினைத்தெரியப்படுத்தியிருக்கிறார்கள் என்று ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
கும்ப்பல் என்பதே காலப்போக்கில் மருவி கும்மல் என்று வழக்கமொழியாகிவிட்டது.
இனி இதன் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மார்கழி 15ம் ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் நமது சமுதாய பாரம்பரிய கலையான தேவராட்டம், மரித்தல் போன்ற சிறப்புமிகு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுள் ஆரம்பமாகும் காலம் இது.
இந்த தினத்தில் நமது மக்களால் பாரம்பரியமாக நிகழ்த்தப்படும் சலகெருது மரித்தலுக்காக அவரவர் ஊர்களில் வளர்க்கப்படும்/மலைகளில் வளர்க்கப்படும் கிருஷ்ணபரமாத்வுக்கு நேர்ந்துவிட்ட சலகெருது மாடுகளை மரித்தல் என்பது நமது சமுதாய மக்கள் முன்னிலையில் நமது சமுதாய மக்களால் பாரம்பரியமாக நிகழ்த்தப்படும் நிகழ்வு.
இது மார்கழி மாதம் 15ம்தேதிமுதல் ஆரம்பமாகும்.
சலகெருது மரித்தல் ஆரம்ப தினம் கும்மல்நாயக்கர்,பூசாரி நாயக்கர்,கம்பிளி நாயக்கர்,குங்க்கால் பெத்தா மற்றும் பல பட்டையக்காரர்களின் முன்னிலையில் சலகெருது மாடுகளை மன்னத்தில் நிறுத்தி சலகெருது மரிக்கும் தடிகள்,பூஜை பொருட்கள்,அண்டை,கருங்கம்பளி,சலங்கைகள் வைத்து தேவதுந்துமி வாத்திய இசையுடன் பூசாரி நாயக்கர் அவர்களால் பூஜைகள் செய்து விபூதியிட்டபின் ஆரம்பமாகிறதுசலகெருது மரித்தல்.
இது அடுத்து வரும் தைப்பொங்கல் அன்று வரை நிகழ்த்தப்படுகிறது.
காணும்பொங்கலன்று சலகெருதுமாடுகளைக்குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, அலங்காரம் செய்து விநாயகர் கோயில் அல்லது குலதெய்வகோயிலில் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது.பின்னர் கும்மல்நாயக்கர் அவர்கள் கருங்கம்பளிகொண்டுமுகத்தை மூடிக்கொண்டு,தடி ,அண்டையுடன் அவருக்கு கொடுத்த "மந்திரவாக்கு" ஓதப்பட்டு அண்டையில் நீருடன் ரகசிய மூலிகைகள் கலந்து மந்திரம் ஜெபித்து பூஜை செய்து கோயிலுக்கு தேவதுந்துமி வாத்தியங்களுடன் அழைத்துவந்து மூன்றுமுறை கோயிலை வலம்வந்து கோயிலில் பூஜைகள் செய்து (சலகெருது மாடுகளுக்கும் பொதுமக்களுக்கும் சேர்த்து) பின்னர் மந்திரிக்கப்பட்ட அண்டையுடன் (மூங்கில் குழாய்) வந்து ரகசிய மந்திரங்கள் ஓத (கட்டுமந்திரித்தல்) தடிகளை நேராக நிறுத்தி மக்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்தி தேவதுந்துமிவாத்திய இசையுடன் மந்திரிக்கப்பட்ட நீரினை சலகெருது மாடுகள் மற்றும் பொதுமக்களின்மீது தெளித்து பின்னர் சாமி கும்பிட்டபின்னர் சலகெருதுமாடுகள் ஆல்கொண்டமால் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் சலகெருது மாடுகளுக்கு பூஜைகள் செய்து தீர்த்தம்விட்டு விபூதியிடப்படுகிறது.
மீண்டும் ஊருக்குள் அழைத்து வந்து கட்டுமுறித்தல் நிகழ்த்தப்பட்டு பின் கும்மல்பொங்கல் எனும் பொதுப்பொங்கலிட்டு படையல் செய்து சலகெருது சாலிபாடல்கள்பாடி சலகெருது மாடுகள் பால் பழம் பொங்கல் எடுக்கும் நிகழ்வு நடைபெறும்.பின்னர் பூஜைகள் செய்து விபூதியிட்டபின் பொங்கல் வழங்கும் நிகழ்வு நடைபெறும்.
இதனுடன் நிகழ்வுகள் முற்றுப் பெறுகிறது.
இதுவே காலம்காலமாக ஆன்றோர்கள் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது.
இது எனது (தாத்தா,அப்பா, நான்) மூன்றாவது தலைமுறை தொடர்கிறது.
நன்றி வணக்கம்
ம.ப.ராஜேந்திரன்
கும்மல்நாயக்கர்
பொட்டையம்பாளையம்.
உடுமலை வட்டம்.🥰🥰📚📚✍️✍️✍️✍️
குறிப்பு : மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்ட பட்டையதாரர் கொண்டது.
மது அருந்துதல் கூடாது.பெண்கள் விசயத்தில் தேவையில்லாத செயல்கள் புரிதல்கூடாது.தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் உணவு, நீர் பருககூடாது.
அடுத்தவருக்கு தீங்குநினைத்தல்கூடாது.கும்மல்நாயக்கர் சலகெருது மாடுகளுக்கு கட்டு மந்திரிக்காமல் சலகெருது மாடு கோயிலுக்கு அழைத்துச் செல்லமாட்டார்கள்.