சனி, 2 நவம்பர், 2024

தீபாவளியும்...நானும்.....

 தீபாவளியும்...நானும்.....

சின்ன வயசுல அப்பா புதுவருட  காலண்டர் வாங்கின உடனே முதல பாக்குற முக்கியமான விஷயம் தீபாவளி எப்ப வருது?

எத்தினி நாள் லீவு வருதுனுதான்...??? 

அப்பிடி பாத்து பாத்து தீபாவளியை ரசிச்சி கொண்டாடின கடைசி தலைமுறை நாம தான்,,,,

தீபாவளிக்கி 45 நாள் முன்னாடியே ஸ்கூல்ல பசங்ககிட்ட என்னா டிரஸ் எடுக்கணும்,,என்னா வெடிவாங்கணும்னுதிட்டம் போட்ட காலம் எல்லாம் இப்ப நினைச்சாலும் மனசு 5,6 வயசு சின்ன புள்ளயா மாறிடும்,💞,,,,

அதுலையும் நாட்டு வெடி,வெங்காய வெடி,ராக்கெட் ,மாப்பிளை வெடி  & அணுகுண்டு வெடிக்கிறவனை எல்லாம் வாய பொளந்துகிட்டு  பாப்போம்😛..

வித விதமா துணி எடுக்கணும்னு பிளான் போட்டுட்டு கடைசிலா குடும்ப சூழ்நிலை  காரணமா ஏதாவது ஒரு டிரஸ் கிடைச்சா போதும்னு அழுத நாட்கள் எல்லாம் இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு...

என்னதான் இன்னிக்கி சொந்தமா சம்பாரிச்சி கோயமுத்தூர் புரூக் பீல்டு யும்  பன் மார்ட்லையும், உடுமலைப்பேட்டை,பிங்கி ,குறிஞ்சி , ரேமண்ட் ஷாப்புலையும் 3000ரூபாய்க்கி டிரஸ் எடுத்தாலும்,,,

அன்னிக்கி அப்பா தீபாவளிக்கி முதல் நாள் கிரி கிளாத் ஸ்டார் ,விஜயதீப் , போய் எடுத்து குடுத்த 50,100  ரூபாய் துணியெடுத்த  மதிப்பு எல்லாம் சொல்லவே முடியலே,,,,அதையும் வாங்கிக்கொண்டு வந்து தளி ரோட்டில இருக்கும் மாடர்ன் டைலர்ஸ் கடையில் கொடுத்துட்டு ..தீபாவளிக்கு நாலு நாள் முன்னாடி  பள்ளி செல்லும் போது ..அண்ணா எங்க டிரஸ் தைச்சுட்டீங்களா னு கேட்ட ஞாபகம் இன்னும் மனதில் ஓடுகிறது ...

அதே மாதிரி தீபாவளிக்கி ஒரு வாரம் முன்னாடி வீட்டுல முறுக்கு சுடுறப்ப அந்த திருவிழா கொண்டாட்டம் மனசுக்குள்ள வந்துரும்...

 வழியில பாக்குற தெரிஞ்ச பசங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு,,,

குட்டித் தூக்கம் போட்டுட்டு விடியற் காலையிலேயே எண்ணெய் தேய்ச்சி குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு...

நமக்கு கிடைத்த பங்கு பட்டாசை பத்திரமாக எடுத்து வந்து ஒவ்வான்றாக,பெரிய வீரனைப் போல் நீளமான ஊதுபத்தியால் பற்ற வைத்து வெடிக்கும் போது அப்பப்பா,,,

அப்படியே ..புது துணிய போட்டுட்டு ..சர்ச்சு பக்கத்துல இருக்கிற மாலையம்மன் கோவிலுக்கு போயி ..பிள்ளையாரையும் அரச மரத்தியும் சுற்றி  வணங்கி ..வீட்டுக்கு பசியோடு வந்து இட்லியும் ..தோசையும் .. காலையில சுடச் சுட,,சாப்பிட்ட சொந்தம் அப்பப்பா ..தற்காலத்துக்கு வருமா  அந்த மகிழ்ச்சி .

பட்டாசு களோபரம் முடிந்த பிறகு 8 மணிக்கு மதியம் சாப்பாடு...அம்மா,அப்பா கிட்டயும்  எல்லோரையும் அதட்டி உருட்ட.,,,

பிறகு உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு ஊர்வலம்.. புது சட்டையை காண்பிக்க, அப்படியே அவர்கள் வீட்டு தீபாவளி பலகாரங்களை  ருசி பார்க்க....

அதெல்லாம் உலக நாயகன் சொல்லுறபடி ஆராயக்கூடாது அனுபவிக்கணும்,,,

இன்னும் எழுத எழுத நிறைய தோணுது...

இப்பவும் தீபாவளி கொண்டாடுறாங்க... 

கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் (உடுமலை ),பொள்ளாச்சி மாரியம்மா ஸ்வீட்ஸ் ,உடுமலை ஏவிஎம் ஸ்வீட்ஸ்  அரைகிலோ  வாங்கிட்டு.. அமேசான்ல டிரஸ் எடுத்துட்டு,,, கடமைக்கு தீபாவளி கொண்டாடிகிட்டு,,,,

சிலர் தீபாவளி அன்னிக்கு வீட்டை பூட்டிக்கிட்டு வெளியூர் கிளம்பி ஊர் சுற்ற கிளம்பறாங்க ...

ஒண்ணு மட்டும் நிச்சயம்  பணம், சம்பாத்தியம் & கார்ப்ரேட் வாழ்க்கைனு, ஒரு மாயவலையை உருவாக்கிவாழ்க்கையோட சின்ன சின்ன சந்தோஷங்களை அதுல இழந்துகிட்டு வரோம்... 

எல்லாமே மெஷின் மாதிரி ஒரு இயந்திர வாழ்க்கை,,,🥰🙏📡🎙️

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக