பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல் வெளியீட்டு விழா என்பது வழக்கமான புத்தக வெளியீடூ விழா அல்ல, நவீன வரலாற்று பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நன்நாள்.
இந்திய முதல் சுதந்திர போர் சிப்பாய்கலகம் அல்ல. பாஞ்சாலங்குறிச்சி போர்கள் தான் என்பதை ஆவணப்படுத்திய விழா. வரலாற்றில் இடம்பெறுவதும், வரலாற்றை மாற்றுவதும் அவ்வளவு எளிதல்ல. அத்தகைய நிகழ்வை, தன் வாழ்வில் கொண்ட கொள்ளைகளில் ஒன்றாக கடைசி வரை நின்று வென்று, இந்திய வரலாறுக்கும், வீரபாண்டிய கட்டபொம்மன் புகழுக்கும், சந்ததியினருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல் வெளியீட்டு விழா மூலம் நடத்தி காட்டியிருக்கும் அண்ணன் திரு.பெ.செந்தில்குமார் அவர்கள், சரித்திரத்தின் பக்கங்களில் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமானவர்.
தமிழக ஆளுநர் மாளிகையில், மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களது பொற்கரங்களால் பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூலை வெளியிட்டது முதல் அந்த புத்தகத்தை எழுதி தொகுத்தது வரை அண்ணன் திரு.பெ.செந்தில்குமார் அவர்கள் பணியை பாராட்ட தமிழ் அகராதியில் வார்த்தைகள் பிறக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வரலாற்றில், பாஞ்சாலங்குறிச்சியும், வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரும் உச்சரிப்பும் இன்றி எப்படி இந்தியாவின் வீரத்தையும், விடுதலை போராட்டத்தையும் பேச முடியாதோ, அது போல, பாஞ்சாலங்குறிச்சிக்கும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் புகழ் சேர்கின்ற "பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" நூல் வெளியீட்டு பணியை செய்து முடித்த அண்ணன் திரு.பெ.செந்தில்குமார் அவர்கள் இன்றியும் இனி நவீன வரலாற்று பக்கம் நகலாது.
வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ்! பரவட்டும் பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல்! பேசட்டும் பெ.செந்தில்குமார் எழுத்துக்கள்!
வாழ்த்துக்களுடன்...
அன்புத்தம்பி : ஆ.வள்ளிராஜ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக