சனி, 9 மே, 2020

கேள்வி :..ஆண் பெண் நட்பு ஆரோக்கியமானதா? அல்லது ஆபத்தானதா?


என் பதில் :..நான் சொல்வதை விட ..என் பெண்தோழியிடம் கேட்டு பதில் அளித்தால் ..நன்றாக இருக்கும் ..என் மனதில் பட்டது ..திருமதி நித்யா ராமன் (நியூயார்க் ) அவரிடம் பேசியபோது ..கிடைத்த பதில் ..


நல்ல கேள்வி அழகான கேள்வி அற்புதமான கேள்வி என் வாழ்க்கையில் சில விஷயங்களை

அற்புதமான விஷயங்கள் சொல்லணும் என்று நினைத்தால் அதற்கான பொன்னான கேள்வி

எஸ்!! நானும் ஆண் பெண் வித்தியாசம் பார்த்து பழக மாட்டேன்.

நட்பு என்று வந்தால் இரண்டு பாலிலும் அருமையான நண்பர்கள் நண்பிகள் உள்ளார்கள்

ஆண் தோழர்களால் வாழ்க்கை பல நேரங்களில் பளிச்சென்றே மின்னியது...

காதல் வேணா அப்படி இப்படி வலிக்கும் நட்பு அதெல்லாம் இல்லை...

எவ்வளவு அருமையான நண்பர்கள் இருந்திருக்கின்றனர்..ஒரு கிளான்ஸ் யோசிச்சேன்...

"ஸ்ரீ" எப்படி இருக்க என்று அதட்டலா உள்ளே வந்து ஒரு 5 நிமிஷமாவது பேசி சென்ற ஹரி (நேவியில் கேப்டன்) இவனுடன் நட்பு எங்கள் 9-10 வகுப்பிலிருந்து....பல வருடங்கள்.

சில நாள் அக்காக்கள் confuse ஆயுடுவாங்க அவன் உன்ன லவ் பன்றானா ? அப்படி கேட்டதுண்டு.... அவங்க அண்ணா இல்லை friends கூட confuse ஆயிருக்கலாம் ..ஒரு நேவி கூட்டத்தில் சில நட்பு கூட அப்டி இப்டி லவ் ஆ? என்ற கேள்வி...எப்போதும் மிக தெளிவா நாங்க சொன்னது....இல்லை நட்பு!! நட்பு நட்பு மட்டுமே...அவ்ளோ free relationship ல கூட சிலது பேச முடியாது..என் அக்காக்கள் பல நாள் கேர்ள்ஸ் பள்ளி அல்லது அவர்கள் காலம் வேற....புரியாது...ஆனால் என்னை மிக நன்றாக தெரிந்த என் மாமா, என் அப்பா (ஒரு ஆணுக்கு கண்டிப்பா நம்முடன் பழகும் இன்னோர் ஆண் எப்படி பார்க்கிறான் என்று தெரியும் ) இருவருக்கும் நட்பு மட்டுமே என்று தெரியும் அதே தான் அவங்க அம்மாவுக்கும் ....நட்பில் பாசம் ஜாஸ்தி.

பெஸ்ட் பை(Best buy) கடையில் புது மடிக்கணனி வந்திருக்கும் நான் போய் வாங்கி வருகிறேன் அமெரிக்காவில் - பக்கத்து வீட்டில் ஸ்ரீவத்சன்...."எங்கே தனியா போறீங்க நான் வரேன்"...என்று வருவதும் இல்லாமல்

அதை தானே எடுத்து கொண்டு வந்து, வீட்டில் கொடுத்து விட்டு எவ்வளவோ நாள் எனக்கும் தோழி நந்தினிக்கு முகம் வாடி இருந்தால் வேலை பளு இருந்தால் கேட்காமலேயே ஸ்ரீவத்சன் மற்றும் அவனுடைய ரூம் mate எங்களுக்கும் சேர்ந்து சமைத்து இங்கே சாப்பிடுங்க என்று சொல்வார்கள்

அமெரிக்காவில் ஊரு திரும்பி வரணும் என்று சொன்னவுடன்...அந்த வாரம் தன் வேலைகளை மாற்றி என்னுடன் ஓர் ஓர் கடைக்கும் வந்து ஷாப்பிங் செய்து உதவிய அருண் யுவராஜா

கென்டகி(Kentucky) சுற்றி பார்க்க கூட்டி சென்று அமெரிக்கன் குடும்பங்களுடன் தங்கி பழகி புது அனுபவம் தந்த விஜய் (சிங்களர் ) நல்ல நண்பர்...குடும்ப நட்பு

புளோரிடா மாகாணம் முழுக்க சுற்றி காண்பித்த அரவிந்த், பிரேம், வெங்கட்..போன்ற சிறந்த நண்பர்கள்

கல்லூரி கால நண்பர் ராமகிருஷ்ண பிளோரிடாவில் அம்மா அக்கா வீட்டுக்கு கூட்டி சென்றார்.

அதாவது எங்க ஊருக்கு வந்துட்ட ஹோட்டல் லையா? தங்குவே?

எனக்கு நட்பில் வயது வரம்பு என்பதும் கிடையாது - டீனேஜ் முதல் ஸ்டோன் ஏஜ் வரை என்று சொல்வேன்..

பல நேரம் உதவிய டான் அஸ்கியூ(Don Askew) அவர்கள்....இவர்களும் சொல்லவே வேண்டாம் தலை வலி அல்லது முகம் கொஞ்சம் வாடி இருந்தால்...என் ப்ரோக்ராம் பாயில்(files) அவரே முடித்து அதனை சரி பார்த்து அனுப்பிடுவாங்க..வீட்டில் கொண்டு விடுவது, காண்டாக்ட் லென்ஸ் கடைக்கு போவது, இப்படி எல்லாத்துக்கும் உதவுவார்

சியாட்டில் வேலை முடிந்ததும், சில நாட்கள் ஊர் சுற்றி காண்பித்து அழகான க்ரூஸ் போட்டிங் எல்லாம் அழைத்து செல்லும் டெரிக் பொல்லார்ட் (Derek Pollard). ஆட்டோ இன்சூரன்ஸ் பற்றி மூணு மணி நேரம் presentation கொடுத்தேன் அவ்வளவு கற்று கொடுத்தவர் டெரிக்

அம்பத்தூர் ராத்திரியில் வேலையே முடித்து பேருந்துக்கு வரணும் என்றால், அவன் வேலையும் எனக்காக மாற்றி அதே நேரத்தில் நடந்து கொண்டு விட்டுவிடுவான் - சரவணன்

கல்லூரி கால நண்பர் சங்கர் பல முறை சிகாகோ வில் உதவி செய்வார்,

நட்பு காதல் - உறவு(relationship) அப்படி மாறுமா?அதற்கு விடை மாறும்...

மேலே சொன்னவர்கள் நட்போடு மட்டும் பழகி உள்ளேன்.

முதலிலிருந்தே காதல் போன்றும் இருக்கும், அது ஒரு விதம், நட்பும் மாறும் காதலாக இது கண்டிப்பா உண்டு ...

அது காதல் என்று வந்தாலே போஸ்சஸிவ், கண்டிஷன் இதெல்லம் கூடவே வரும்... :) ...ஆகையால் நட்பு காதலாக வாய்ப்பு போன்ற கேள்விகளில் ஆமாம் என்பேன் .....அந்த விஷயங்கள் வேற. நட்பு காதலாக மாறும் போதும் செம்ம fun தான் ...ஏனனில் முதலில் அப்படி எல்லாம் தோன்றாது காதல் என்று புரிந்ததும் வேற மாதிரி அழகான feel வரும்...

மிகவும் ஆசீர்வதிக்க பட்டவள் நான்...மறுபடியும் சொல்கிறேன், என் வாழ்வில் மிக அற்புதமான எதிர்பாலின மக்களை சந்தித்து உள்ளேன்...அவர்கள் கிண்டலிலிருந்து தாய்மையான அன்பு வரை எல்லாம் தெரியும் புரியும்

ஒவ்வோர் ஆணிலும் பெண் தன்மை உண்டு ஒவ்வோர் பெண்ணிலும் ஆண் தன்மை உண்டு...

இதுவும் உளவியல் உண்மை.

மேலே சொல்வது என்ன என்றால் ஒவ்வோர் பெண்ணுக்கும் மிகவும் அற்புதமான ஆண் நட்பு வேண்டும் அவளை உற்சாகப்படுத்த அவளை சந்தோஷப்படுத்த...அவளை புன்னகைக்க செய்ய...ஏனனில் உலகம் கொடிது பல நேரம் அதில் தேவ தூதர்கள் போன்றவர்கள் ஆண் நண்பர்கள்

கேளிவியின் அடுத்த பகுதிக்கு வருவோம்...ஆண் பெண் நட்பு ? கண்டிப்பா ஆரோக்கியமானது..

மனதுக்கு இதம் உற்சாகம் தருவது...நம் பல பல பிரச்னையில் இது மாதிரி நட்பு மருந்து...

நிறைய பேருக்கு உதவி செஞ்சுட்டே இருக்கணும் எப்போதும் பெரிய பெரிய பொறுப்பை சுமந்துட்டே இருக்கணும் இப்படி எல்லாம் சூழ்நிலையில் நட்பு, ஏன் காதலும் தான் எவ்வளவு உதவி என்று சொல்ல வார்த்தைகளே இல்லை....இதெல்லாம் இல்லை என்றால் யோசிக்க கூட ...முடியல!!

நன்றி ...நண்பர்கள் வட்டம் பெரியது ...மதிப்பு மிக்கது ...
கேள்வி :..ஷிவ் நாடார் எதற்காக தமிழ்நாட்டில் வித்யஞான் போன்ற பள்ளியை ஆரம்பிக்கவில்லை?

என் பதில் :..

பயந்திருப்பாரோ? தூத்துக்குடி பக்கம் கேட்டால் சரியாக பதில் சொல்லுவார்கள். ஏம்லே, மக்கா?


இந்தியாவின் முதன்மை பத்து நிறுவனங்களில் ஒன்று ஹெசில் (HCL). போர்ப்ஸ் கம்பெனி பட்டியலில் இடம் பெற்ற இந்திய நிறுவனம்.

ஹெசில் குழுமத்தின் அதிபர் திரு.சிவநாடார்.


சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே மூலைப்பொழி கிராமம். தந்தை பெயர் சிவசுப்பிரமணிய நாடார்.


இவரது தாய் மாமன் தினத்தந்தி பத்திரிகை நிறுவனர் திரு.சி.பா ஆதித்தனார். திரு.சிவந்தி ஆதித்தன், எழுத்தாளர் ரமணி சந்திரன், திரு சிவநாடார் இவர்கள் எல்லாம் நெருங்கிய உறவினர்கள்.


தனது தொடக்க கல்வியை கும்பகோணம் நகரிலும், கல்லூரி படிப்பை 'தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட்' மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், தனது பொறியியல் படிப்பை கோவை பி.எஸ்.ஜி கல்லூரியிலும் முடித்தார்.


பள்ளியிலேயே இந்தி பயின்றார். அதன் பலனை பல பேட்டிகளில், பலமுறை சொல்லியிருக்கிறார்.


பின்னர் வட நாடு சென்றார். தொழில் தொடங்கினார். வெற்றி பெற்றார்.

சிவ நாடார், சிவ் நாடார் ஆனார்.

இன்று உலகின் 66வது பெரும் பணக்காரர், இந்தியாவில் நாலாவது.
நாட்டின் உயரிய பத்மபூஷன் விருது பெற்றவர்.

இவர் வளர்ச்சியின் அடித்தளம்: 1. கற்ற கல்வி, 2. வடநாட்டில் தொழில் முனைந்தது், 3. ஜார்ஜ் பெர்னாண்டஸ்!

1976ஆம் ஆண்டு தனது நண்பர்களோடு இணைந்து மைக்ரோகம்ப் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

1977ஆம் ஆண்டு பதவியேற்ற ஜனதா கட்சி அரசு இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று சட்டமியற்றியது. தொழித்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்!

இது சரிப்பட்டு வராது என்று கோகோ கோலா, ஐ.பி.எம் போன்ற நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி விட முடிவு செய்தன.

நாமெல்லாம் கோலாவிற்கு பதில் அறிமுகமான 'டபுள் செவென்' குளிர்பானம் குடித்து கொண்டாடிய போது, சிவநாடார் மட்டும் நாட்டை விட்டு வெளியேறும் ஐ.பி.எம் கணனிக்கு சரியான பதில் தன்னிடத்தில் இருக்கிறதென்று நம்பினார்.


உலகின் எதிர்காலம் கணினித்துறையில்தான் உள்ளது என்பதை மிகச் சரியாக கணித்த சிவநாடார் கணினி தயாரிப்பில் இறங்க முடிவு செய்தார் -இது 1977 ல்!

ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) நிறுவனம் அப்படித்தான் சுமார் இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் 500 கணனிகள் இந்திய சந்தைக்கு வருவதற்கு முன்னாலேயே ஹெசிஎல் கணினி வந்துவிட்டது.

எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனையான கணினிகளில் பெரும்பகுதி ஹெசிஎல் நிறுவனத்தின் தயாரிப்புகளே.

1985–1990 ல் எங்கள் வங்கியில் HCL கம்ப்யூட்டர்களில் சும்மா பட்டையை உரித்திருக்கிறோம். 286 DX2 ! முழு மெக்கானிக்கல் கீபோர்டு. விரலோடு பேசும்.


மென்பொருள்துறை, கணினி துறையில் பெரும் வேலை வாய்ப்பு இருக்கும் என்பதை கணித்து, அதற்கான பணியாட்களை உருவாக்க சிவநாடார் தன் நண்பர்களோடு இணைத்து NIIT என்ற பயிற்சி நிறுவனத்தையும் உருவாக்கினார்.


சிவ நாடார் உயர் கல்வியின் உன்னத தயாரிப்பு.

அவர் உணர்ச்சிவசமான, அமைதி விரும்பாத ஒரு தொழில் முனைவாளர். சொந்த மாவட்டம் தூத்துக்குடியின் விறுவிறு இரத்தம் பாயும் துடிப்பாளர்.


மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமுதாயம் கல்வியால் ஐம்பதே வருடங்களில் தன்னை முழுவதுமாக மறு கட்டமைத்த வரலாறில் இவரது அத்தியாயம் பிரமிக்க வைக்கும் ஒன்று.


வாழ்வின் உன்னதத்தை அடைந்த போது நின்று யோசித்தார். தன்னை உயர்த்திய கல்விக்கு சிறப்பு செய்ய தீர்மானித்தார். தனது சொத்தில் பெரும்பகுதியை கல்விக்கு கொடையளித்து வருகிறார்.


அவரது ஆதர்ஷ கல்வி நிறுவனம் சென்னையில் உள்ள எஸ். எஸ்.என் பொறியியல் கல்லூரி. நாட்டின் தரமான கல்லூரிகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளது.


அவரது மகள் ரோஷ்னி, எச்.சி.எல் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியாக வருவதற்கு முன்பு, ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியி்ன் அறக்கட்டளை அமைப்பான சிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராக சென்னையில் பணியாற்றி வந்தார்.


சில வருடங்களுக்கு முன்னால் இந்த கல்லூரியின் வங்கி கணக்கு சம்பந்தமாக ஒரு சந்தேகம் தீர்த்து வைக்க சென்னை அலுவலகம் போயிருந்தோம்.


ஒரு மாநில அமைச்சர் சேர்க்கைக்கு அனுப்பிய பரிந்துரை, நிமிடத்தில் சீராய்வு செய்யப்பட்டு, வினாடிகளில் நாட் செலெக்ட் கோப்புக்கு போனது!


அண்ணா பல்கலைக்கு கொடுத்த சீட்கள் போக, கல்லூரியின் அனைத்து படிப்புகளிலும் சேர்க்கை தகுதி அடிப்படையில் செய்யப்படுகிறது.


ஒரு வருடத்தின் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரி சேர்க்கையின் ட்ரெண்ட், இந்த எஸ்எஸ்என் கல்லூரியில் நிர்ணயிக்கப்படுகிறது.


தொட முடியாத தூரம் போய்விட்டார் சிவநாடார். தொட்டால் 'பொட்டியை ராவி' விடுவார்கள்.


பெரும் தொழிலதிபர்கள் நெளிவு சுழிவோடுதான் இருப்பார்கள். ஆனால் அவர்களது வேர்கள் மாநிலங்களையும், நாடுகளையும், ஏன் கண்டங்களையும் தாண்டியது.


அரசியல்வாதிகளுக்கு பல தொழில்கள் தெரியும்.


தொழிலதிபர்களுக்கு பல அரசியல் வழிகள் தெரியும்.


ஒரு உதாரணம். அவரது முகவரி உத்திரபிரதேசம் நொய்டாவில். அவரது SSN இணைய தளத்தின் முதல்வரி இன்றைக்கும் ஜவஹர்லால் நேருவை புகழ்கிறது!


தான் நிறுவிய சிவநாடார் அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கான இரண்டு வித்யஞான் இலவசப் பள்ளிகள், அறக்கட்டளை மானியத்தில் இயங்கும் மூன்று பள்ளிகள், ஒரு பல்கலைக்கழகம் ஆகியவற்றை உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடத்தி வருகிறார்.


ஏன் உத்திரபிரதேசம் என்றால் நாற்பதாண்டுகளாக அவர் தனது பெரும்பாலான தொழிற்ச்சாலைகளை நடத்தி வருவது உத்திரபிரதேசம் நொய்டாவில். அவர் நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் குடும்பங்கள் அங்கே இருக்கின்றன.


தமிழக அரசு தற்போது சென்னையில் ஒரு தனியார் பல்கலைக் கழகத்தைத் தொடங்க சிவநாடாருக்கு அழைப்பு விடுத்துள்ளது.


'கட்டணம்' எதுவும் கிடையாது என்று சொல்லுகிறார்கள். (கல்லூரியில் ஐயன்மீர்)


சிவநாடாரின் குழுமம் பங்கெடுத்துள்ள தொழில்களின், சந்தைகளின் பட்டியல் டாடா குழுமத்திற்கு நிகரானது.


விண்வெளி, பாதுகாப்பு, வாகன, வங்கி, மூலதன சந்தைகள், ரசாயன மற்றும் செயல்முறை தொழில்கள், எரிசக்தி, சுகாதாரம், தொழில்துறை உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள், காப்பீடு, உற்பத்தி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, சுரங்கம், இயற்கை வளங்கள், எண்ணெய், எரிவாயு, சில்லறை விற்பனை, தொலைத் தொடர்பு, விருந்தோம்பல் மற்றும் பயணம், போக்குவரத்து - பெரிய பட்டியல்.


அவர் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். ஃபோர்ப்ஸ் கோடீஸ்வரர். நிகர மதிப்பு ரூ. 1,11,000 கோடி.


ஒருவேளை இதைக்கூட நீங்களும் நானும் சம்பாதிக்க முடியும்.


ஆனால் சிவநாடார் ஒரு பரோபகாரி (philantherpist).


தனது செல்வத்தில் 10 சதவீதம் தனது மனிதநேய முயற்சிகளுக்காக ஒதுக்கி செலவழிக்கிறார்.


ஐந்தாண்டுகளுக்கான அவரது பட்ஜெட் ரூ. 4,000 கோடி. அதற்காக டாஸ்மாக் கிரிமினல் திட்டங்களை வகுக்காமல், சமீபத்தில் அவர் எச்.சி.எல்-யில் தனது 2.5 சதவீத பங்குகளை விற்று ரூ. 585 கோடி ரூபாய் தனது பரோபகார திட்டங்களுக்கு செலவழித்தார்.


விப்ரோ பிரேம்ஜி, சிவ நாடார், ரத்தன் டாடா இவர்களெல்லாம் தொழிலில் மட்டுமல்ல, பரோபகாரத்திலும் போட்டி போடுகிறார்கள்.


வசதியான குடும்பத்தில் பிறந்தவரானாலும் இத்தனையையும் வடிவமைத்தது சிவநாடார் தனது சொந்த முயற்சியில்.


அவரது 75 வயது உடம்பில் சொந்த ஊரின் இரத்தம் இன்னும் விறுவிறு வேகத்துடன் ஓடி கொண்டுதான் இருக்கும்.


திருச்செந்தூர் தேரி காட்டின் மணல் போல அதன் வண்ணம் தனியொரு சிவப்பு.


தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற குறளை புரிந்த ஞான சிறப்பு.

நன்றி ...

கேள்வி : பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன், புத்தகம் படித்துவிட்டீர்களா? இந்தப் புத்தகத்திலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன?

என் பதில் :..இந்த விடுமுறை நாட்கள் (Work From Home)

இந்த புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது ...படித்து பகிர்வதில்

எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சி ...

 தோல்விகள் தந்த ஒரு வரம் - வாசிப்பு

பொருளாதார சுதந்திரத்தின் பைபிள் என்றழைக்கப்படும் இப்புத்தகம் உண்மையிலேயே பணக்காரனாக சில நல்ல யுக்திகளை நமக்கு கற்று தரும். பெரும்பாலானோர்களுக்கு இந்த புத்தகம் புதியதாக எதுவும் சொல்லாதது போல் தோன்றினாலும் பணத்தை பற்றிய நாம் மறந்து போன சில அடிப்படை விதிகளை நினைவூட்டும் விதத்தில் அமையும்.

அர்கட் எனும் பணக்காரன் ராஜாவின் வேண்டுகோளுக்கிணங்கி தனது பணம் பண்ணும் ஏழு விதிகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக எழுதியிருப்பார் ஜார்ஜ்.

உங்களது பணப்பையை கணமாக்குங்கள்

நீங்கள் சம்பாதிப்பதில் 10-ல் ஒரு பகுதியை சேமித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் பணப்பையில் போடும் ஒவ்வொரு பத்து நாணயத்திலும் ஒன்பது நாணயத்தை மட்டும் செலவு செய்யவும்.

இந்த பத்தில் ஒரு பகுதியை சேமிப்பதை எதற்காவும் நிறுத்தக்கூடாது.
செலவுகளை கட்டுப்படுத்துதல்

தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளுங்கள்.
தேவைக்கு மட்டும் செலவு செய்யுங்கள். ஆசைகளை ஒதுக்கி விடுங்கள். ஆசைகளை நிறைவேற்ற ஏற்ற புது புது ஆசைகள் முளைத்துக்கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு பைசா செலவழிப்பதற்கும் அதற்கேற்ற நூறு மடங்கு பலன் இருக்க வேண்டும்.
உங்களுடைய செலவுகளுக்கு பட்ஜெட் போட வேண்டும். இது தேவை மற்றும் ஆசையை பிரித்துக்காட்ட உதவும்.

தங்கத்தை பல மடங்கு ஆக்குதல்

நாம் சேமித்து வைத்த பணத்தை அப்படியே தூங்க விட கூடாது. அதை வேலை செய்ய விட வேண்டும்.

நம்முடைய ஒவ்வொரு நாணயத்தையும் வேலை செய்ய விட வேண்டும். அது தன்னை போன்று மற்றொரு நாணயத்தை உருவாக்கும்.

அதாவது நாம் சேமித்த பணத்தை நல்ல முதலீடுகளில் இட்டு அதை வேலை செய்ய விட வேண்டும்.

செல்வத்தை நஷ்டமடையாமல் பாதுகாக்க வேண்டும்

முதலீடு செய்வதில் மிக முக்கியமான விதி - மூலதனத்திற்கு பாதுகாப்பு.
எங்கு மூலதனம் பாதுகாப்பாக திரும்பி வருமோ அதில் மட்டும் முதலீடு செய்ய வேண்டும்.

இதைப்பற்றி முதலீட்டை பாதுகாப்பாக கையாள்பவர்களின் ஆலோசனையை பெறலாம். அவர்களுடைய அறிவுரை பாதுகாப்பற்ற முதலீடுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
லாபகரமாக முதலீடு செய்தல்

ஒவ்வொரு மனிதனும் தனக்காக சொந்தமான வீடு வைத்திருக்க வேண்டும். வாடகைக்கு கொடுக்கும் பணத்தை வட்டி கட்ட பயன்படுத்தலாம்.

இதன் மூலம் சில நாட்களில் மொத்த கடனையும் அடைத்து விடலாம்.
அதுபோக வீடும் உங்களுக்கு சொந்தமாகி விடும்.
எதிர்கால வருமானத்திற்காக காப்பீடு செய்தல்

செல்வத்தின் விதிகளை அறிந்தவன், தன் எதிர்காலத்தை பற்றியும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
பல வருடங்கள் பாதுகாப்புடன் இருக்கும் பல முதலீடுகளை அவன் செய்து வைத்திருக்க வேண்டும்.

ஒருவனது தொழில் எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், அவன் தன் முதுமையின் பாதுகாப்பிற்கும், தன் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கும் கண்டிப்பாக தனியாக முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும்.

சம்பாதிக்கும் திறனை அதிகரித்தல்

அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென்ற வலுவான விருப்பம் இருக்க வேண்டும்.
நாம் எவ்வளவு அறிவை வளர்த்துக்கொள்கிறோமோ அவ்வளவு நிறைய தங்கத்தை சம்பாதிப்போம்.

பணத்தின் விதியை உணர்ந்தவனுக்கு தெரியும் பணம் என்பது ஒரு வற்றாத அமுத சுரபி என்று.


கூலி வேலை செய்பவரிடம்  பணம் முதலீடு செய்வதை பற்றி அறிவுரை கேட்க கூடாது. அதைப்பற்றி தெரிந்த வல்லுனரிடம் தான் கேட்க வேண்டும்.

நன்றி ...நேரம் கிடைக்கும் பொழுது இந்த புத்தகத்தை நீங்களும் வாசியுங்கள்

RBI Bonds:

RBI Bonds:

 Interest :

The Bonds will be issued in ‘Cumulative’ or ‘Non-cumulative’ form, at the option of investor and will bear interest at the rate of 7.75% per annum.

Interest on non-cumulative Bonds will be payable at half-yearly intervals from the date of issue in terms of paragraph 7 above and interest on cumulative Bonds will be compounded with half-yearly rests and will be payable on maturity along with the principal.

In the latter case, the maturity value of the Bonds shall be ₹ 1,703.00 (being principal and interest) for every ₹ 1,000/-(Nominal).

Interest to the holders opting for non-cumulative Bonds will be paid from date of issue up to 31st July / 31st January as the case may be, and thereafter half-yearly for period ending 31st July and 31st January on 1st August and 1st February.

Interest on Bonds held to the credit of Bonds Ledger Account of an investor will be paid, electronically by credit to bank account of the holder as per the option exercised by the investor/ holder.

 Tax Deduction at Source

Tax will be deducted at source while making payment of interest on the Non-Cumulative Bonds from time to time and credited to Government Account.

Tax on the interest portion of the maturity value will be deducted at source at the time of payment of the maturity proceeds on the Cumulative Bonds and credited to Government Account.

Provided that tax will not be deducted while making payment of interest/ maturity proceeds, as the case may be, to individual/s who have made a declaration in the application form that they have obtained exemption from tax under the relevant provisions of the Income Tax Act, 1961 and have submitted a true copy of the certificate obtained from Income Tax Authorities.

 Advances/ Tradability against Bonds

The Bonds shall not be tradable in the secondary market and shall not be eligible as collateral for availing loans from banks, financial Institutions and Non-Banking Financial Companies.

Repayment

(i) The Bonds shall be repayable on the expiration of 7 years from the date of issue.

(ii) Premature encashment in respect of the Bonds shall be allowed for individual investors in the age group of 60 years and above, subject to submission of document relating to date of birth of the investor in support of age to the satisfaction of the issuing bank, after minimum lock in period from the date of issue as indicated below:

Lock in period for investors in the age bracket of 60 to 70 years shall be 6 years from the date of issue.

Lock in period for investors in the age bracket of 70 to 80 years shall be 5 years from the date of issue.

Lock in period for investors in the age of 80 years and above shall be 4 years from the date of issue.

(iii) In case of joint holders or more than two holders of the Bond, the above lock in period will be applicable even if any one of the holders fulfills the above conditions of eligibility.

(iv) After aforesaid minimum lock in period from the date of issue an eligible investor can surrender the bonds at any time after the 12th, 10th and 8th half year corresponding to the respective lock in period but redemption payment will be made on the following interest payment due date. Thus, the effective date of premature encashment for eligible investors will be 1st August and 1st February every year.

 However, 50% of interest due and payable for the last six months of the holding period will be recovered in such cases, both in respect of Cumulative and Non-cumulative bonds.



 Interest :

The Bonds will be issued in ‘Cumulative’ or ‘Non-cumulative’ form, at the option of investor and will bear interest at the rate of 7.75% per annum.

Interest on non-cumulative Bonds will be payable at half-yearly intervals from the date of issue in terms of paragraph 7 above and interest on cumulative Bonds will be compounded with half-yearly rests and will be payable on maturity along with the principal.

In the latter case, the maturity value of the Bonds shall be ₹ 1,703.00 (being principal and interest) for every ₹ 1,000/-(Nominal).

Interest to the holders opting for non-cumulative Bonds will be paid from date of issue up to 31st July / 31st January as the case may be, and thereafter half-yearly for period ending 31st July and 31st January on 1st August and 1st February.

Interest on Bonds held to the credit of Bonds Ledger Account of an investor will be paid, electronically by credit to bank account of the holder as per the option exercised by the investor/ holder.

 Tax Deduction at Source

Tax will be deducted at source while making payment of interest on the Non-Cumulative Bonds from time to time and credited to Government Account.

Tax on the interest portion of the maturity value will be deducted at source at the time of payment of the maturity proceeds on the Cumulative Bonds and credited to Government Account.

Provided that tax will not be deducted while making payment of interest/ maturity proceeds, as the case may be, to individual/s who have made a declaration in the application form that they have obtained exemption from tax under the relevant provisions of the Income Tax Act, 1961 and have submitted a true copy of the certificate obtained from Income Tax Authorities.

 Advances/ Tradability against Bonds

The Bonds shall not be tradable in the secondary market and shall not be eligible as collateral for availing loans from banks, financial Institutions and Non-Banking Financial Companies.

Repayment

(i) The Bonds shall be repayable on the expiration of 7 years from the date of issue.

(ii) Premature encashment in respect of the Bonds shall be allowed for individual investors in the age group of 60 years and above, subject to submission of document relating to date of birth of the investor in support of age to the satisfaction of the issuing bank, after minimum lock in period from the date of issue as indicated below:

Lock in period for investors in the age bracket of 60 to 70 years shall be 6 years from the date of issue.
Lock in period for investors in the age bracket of 70 to 80 years shall be 5 years from the date of issue.

Lock in period for investors in the age of 80 years and above shall be 4 years from the date of issue.

(iii) In case of joint holders or more than two holders of the Bond, the above lock in period will be applicable even if any one of the holders fulfills the above conditions of eligibility.

(iv) After aforesaid minimum lock in period from the date of issue an eligible investor can surrender the bonds at any time after the 12th, 10th and 8th half year corresponding to the respective lock in period but redemption payment will be made on the following interest payment due date. Thus, the effective date of premature encashment for eligible investors will be 1st August and 1st February every year.

 However, 50% of interest due and payable for the last six months of the holding period will be recovered in such cases, both in respect of Cumulative and Non-cumulative bonds.


--
Sivakumar.V.K
Sundaram Finance Ltd.,
(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE
Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.

வெள்ளி, 8 மே, 2020

இன்றைய நமது ஃபேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில் கொங்குநாடு அதிலும் குறிப்பாக உடுமலைப்பேட்டை பகுதியிலிருந்து வழக்கறிஞர் திருமதி சத்தியவாணி பாலாஜி யின் உரை இடம்பெற்றது.

இப்பகுதியில் இருக்கும் ஏராளமான வரலாற்றுச் சின்னங்களைப் பற்றி பெருவாரியாக அதிகம் பேசப்படாத சூழல் இருக்கின்றது. வரலாற்று சிறப்புகளை அதிகம் பேசுவோர் மதுரை திருநெல்வேலி யோடு நிறுத்திக்கொள்வது பொதுவான ஒரு விஷயமாக நான் காண்கிறேன்.

 கொங்குநாட்டு பகுதி கடலூர் சென்னை செஞ்சி விழுப்புரம் சோழமண்டலக் கடற்கரை பகுதிகள் என்பன போன்ற பகுதிகள் எல்லாம் ஆய்வாளர்கள் கவனத்தை பெற வேண்டும் அதற்கு இது தகுந்த கால கட்டம்.

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு மையம் தொடர்ச்சியாக உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல வரலாற்று சின்னங்களை அடையாளப்படுத்தி ஆவணப்படுத்தி அதனை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் குழுவினரை பிரதிநிதித்து இன்றைய உரையை வழங்கிய திருமதி சத்தியவாணி பாலாஜி அவர்கள் ஏராளமான வரலாற்று சின்னங்கள் பற்றிய தகவல்களை இன்று வழங்கினார். கொங்குநாட்டு ஆய்வில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இப்பகுதியில் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய வரலாற்று சின்னங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

இன்றைய உரையை வழங்கிய திருமதி சத்தியவாணி பாலாஜி அவர்களுக்கும் உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு மையத்தின் உறுப்பினர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.💐☀️🌼

Dr .சுபாஷினி ...
கேள்வி :.இந்தியாவின் சென்னையில் உள்ள சோஹோ (zoho) கார்ப்பரேஷன் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?


என் பதில் :

என் நண்பரின் மகன் இங்கு தான் பணிபுரிந்துகொண்டுஇருக்கிறார்


ஸோஹோ எனும் சொர்க்கம்.

மிகவும் கடினமான தேர்வு சுற்றுகள். 2000 பேருக்கு ஒருத்தரை தான் எடுப்பாங்களாம்!

தேர்வாகிவிட்டால் வாழ்க்கை செட்டில்டு பா.

வீடு வேறு மாவட்டமாக இருந்தால் என்ன வேறு மாநிலமாக இருந்தால் என்ன உள்ளேயே தங்கி கொள்ளலாமாம் பா.

அரியர் லாம் ஒரு மேட்டரே இல்ல. ஏன் டிகிரி கூட தேவையே இல்லயாமே!

செம சோறு. வகை வகையான சோறு :D

ட்டான்னு மணி அடிச்சா ஸ்னாக்ஸ். வாரம் ஒரு முறை பிரியாணி :P

எடுத்த ஒடனே 40 ஆயிரம் சம்பளம். ஒரு சில வருடங்களில் 60 ஆயிரம். இதுக்கு மேல என்னடா வேணும். மரியாதையா உள்ள போய்டு எப்படியாச்சு (எல்லா அம்மாக்களின் எண்ணம்)

சோறு முதல் காபி வரை. போக்குவரத்து முதல் ஐபோன் வரை. எல்லாமே ஃப்ரீ ஃப்ரீ.

டிரஸ் கோட் ஆவது புண்ணாக்காவது XD

வேற எதாவது விட்டுட்டனா?

படித்தமைக்கு நன்றி !!
கேள்வி : வாழ்க்கையின் சில அருவருப்பான உண்மைகள் யாவை?


என் பதில் :..

பணம் > குணம்.
அழகு > குணம்.
பணம் + குணம் = அழகு+ குணம்.
பணம் =அழகு.

ஸோ அக்கார்டிங் டூ த லா, இந்த உலகம் முதலில் உங்ககிட்ட எவ்வளவு பைசா இருக்குன்னு பார்க்கும். அப்பறம் நீங்க எப்படி இருக்கீங்கன்னு பார்க்கும். மத்த எதுவும் தேவையில்லை.

உங்க முதுகுல குத்துறவங்க எப்பவுமே நீங்க ரொம்ப நம்பிக்கை வைச்சவங்களா தான் இருக்கும். அதனால தான் அதன் வலி ரொம்ப அதிகமா இருக்கும்.

இன்னைக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்றவங்க தான். நாளைக்கு நீங்க யாருனே தெரியாத மாதிரி போவாங்க.

வாழ்க்கையில நமக்கு எல்லாமே கிடைச்சிட்டா ரொம்ப போர் அடிச்சிடும். நல்ல வேலை, வீடு, மனைவி, குழந்தை, பணம், நிம்மதி. ஏதோ ஒன்னு குறையிற மாதிரி இருக்குல. பிரச்சனைகள் இல்லைன்னா வாழ்க்கையில சுவாரசியமே இல்லாம போய்டும்.

நாம எப்பவும் கைக்கு கிடைக்காத பொருள் மேல தான் ரொம்ப ஆசை படுவோம். நம்ப கையில வைரமே இருந்தாலும் அதை கண்டுக்க மாட்டோம் ஈஸியா கிடைச்சிட்டா.

நாம வாழ எப்பவுமே ஒரு காரணம் தேடிக்கிட்டே இருக்கோம். நான் என் கணவனுக்காகஅல்லது மனைவிக்காக , குழந்தைகளுக்காக வாழறேன், நான் பணம் சம்பாதிக்க வாழறேன். காரணம் இல்லன்னா வாழ்க்கை வெருமையாயிடுது. யாரும் தனக்காக வாழறதா சொல்றதே இல்லை.

மத்தவங்க தப்பை சுட்டிக்காட்டும் போது அதை அவங்க புரிஞ்சிக்கணும். நம்மோட தப்பை யாராவது சுட்டிக்காட்டிட்டா நமக்கு கோவம் வந்துடும்.

நம்ப அருமை புரிஞ்சி நம்ம தான் வேணும்னு சொல்றவங்களை மதிக்க மாட்டோம். நம்பளை மதிக்காம போறவங்ககிட்ட தான் நம்ம யாருன்னு புரிய வைக்க முயற்சி பண்ணுவோம்.

உங்களை பத்தி எதுவுமே தெரியாத வரைக்கும் தான் மத்தவங்களுக்கு உங்கள் மேல ஆர்வம் இருக்கும்.

வாழ்க்கையில எல்லாமே லேட்டா தான் புரியும். அதுக்குள்ள எல்லாம் கைமீறி போய்டும்.

நன்றி ..வாழ்க்கையை  புரிஞ்சுவங்களுக்கு ..

வியாழன், 7 மே, 2020

கேள்வி :...ஏன் முதலாளி மற்றும் தொழிலாளி தொடர்பு எப்போதும் குழப்பத்திலேயே உள்ளது?


 என் பதில்:...


1990-களில் தட்டுவோர் மற்றும் கேட்பவர் எனும் ஒரு சோதனையை எலிசபெத் நடத்தினர்.


இது மிகவும் எளிய சோதனை தான். அதாவது தட்டுபவர்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு 25 பாட்டுகளை கொடுத்து அதில் ஒன்றை தேர்ந்தேடுத்து அந்த மெட்டுக்கு ஏற்றார் போல் ஒரு மேசையில் தட்ட வைத்து அதை கேட்பவர்களை கண்டுபிடிக்கும் படி பணித்தார்.


இந்த சோதனையில் மொத்தம் 120 பாட்டுகளின் மெட்டுக்களை தட்ட வைத்தனர். அதில் வெறும் 3-க்கு மட்டுமே கேட்பவர்கள் சரியான பாடலை கண்டுபிடிக்க முடிந்தது. கேட்போர் பாடலின் பெயரை யூகிக்குமுன், கேட்போர் சரியாக யூகிக்கும் முரண்பாடுகளை கணிக்க எலிசபெத் தட்டியவர்களிடம் கேட்டார். அதற்கு தட்டுபவர்கள், 50 சதவீதம் சரியாக யூகித்து விடுவார்கள் என்று பதில் தந்தனர். ஆனால் கேட்பவர்களோ 2.5 சதவீதம் தான் கணிக்க முடிந்தது. ஏன் இப்படி?


தட்டுவோர் தட்டும் பொழுது, அந்த மெட்டுக்கள் அவர்கள் மனதில் உள்ளது. அதாவது ஒரு பாட்டின் பெயரை கேட்டவுடன் அந்த மெட்டுக்கள் அவர்களின் மனதில் ஓட ஆரம்பித்து விடுகிறது. அவர்களும் அதற்கு ஏற்றார் போல் தட்டுவதாகவே எண்ணினார்கள். ஆனால் கேட்பவர்கள் கேட்கக்கூடியதெல்லாம் மிகவும் வினோதமான மற்றும் சீரில்லாத வெறும் சத்தங்கள் தான்.


கேட்பவர்கள் அந்த மெட்டுக்களை கண்டுபிடிக்க மெனக்கெடுவதை பார்த்து தட்டுபவர்கள் மிகவும் கோபமுற்றனர். ஏனென்றால் தட்டுபவர்கள் தங்களை ஒரு இளையராஜாவாகவே பாவித்து தட்டுகிறார்கள் ஆனால் கேட்பவர்கள் அதை கண்டுபிடிக்க திணறுகிறார்கள்.


தட்டுபவர்களுக்கு மெட்டுக்கள் (அறிவு) வழங்கப்பட்டுள்ளது. அவர்களால் கேட்பவர்கள்(குறிப்பிட்ட அறிவில்லாதவர்கள்) மனநிலையை புரிந்துகொள்ள முடியாது. இது தான் அறிவின் சாபம்(Curse of Knowledge). ஒரு விடயத்தை பற்றி அறிந்தவுடன், அந்த ஞானம் இல்லாமல் இருப்பது பற்றி ஒருவரால் யோசிக்க முடியாது.


இப்படி தான் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் தொடர்பு ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறார்கள். ஒரு முதலாளிக்கு தனது தொழிலின் அனைத்து நுணுக்கங்களும் அத்துப்படியாக இருக்கும். ஆனால் ஒரு புதிய தொழிலாளி ஒரு சிறு தவறு செய்யும் பொழுது அந்த முதலாளி கோபம் கொள்கிறார். ஏனென்றால் அவர் அந்த தொழிலாளியின் இடத்திலிருந்து யோசிக்காமல் தன் அறிவு தந்த சாபத்தினால் யோசிக்கிறார்.


இது தான் ஒரு முதலாளி தொழிலாளி ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. இந்த தொடர்பு ஏற்றத்தாழ்வு முதலாளி, தொழிலாளி உறவில் மட்டும் இல்லை. ஆசிரியர்கள்-மாணவர்கள், அரசியல்வாதி-மக்கள், சந்தைப்படுத்துபவர்கள்-வாடிக்கையாளர்கள், எழுத்தாளர்கள்-வாசகர்கள், ஆண்-பெண் ஆகிய பல இடங்களில் இந்த தொடர்பு ஏற்றத்தாழ்வு உள்ளது.


இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய இரண்டு வழிமுறைகள் உள்ளன


1....புதிதாக எதையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது.

2....அடுத்தவர் மன நிலையிலிருந்து யோசிப்பது.

நன்றி ...
உடுமலை கிளை நூலகம் 2..-நல் நூலகர் கணேசன் ..( 94888 79843)

நூலக அய்யா அவர்களுக்கு
..
எண்ணற்ற மாணவர்களின் கலைத்திறனையும்.. பல்வேறு திறமைகளையும் வெளிக்கொண்டு வர வாய்ப்புகளை ஏற்படுத்திதரும் நூலக செம்மலே..!

நூலக வாசகர்களின் நீங்காத இதயமே...!

டெங்குவை விரட்ட டென்ட்டு போட்டு நிலவேம்பு கசாயக் குடிநீர் கொடுத்து விரட்டிய நூலக வீரனே...!

உலகையே அச்சுறுத்தும் உயிர்கொல்லி கொரோனாவை கண்டு சிறிதும் அச்சம் கொள்ளாமல் கபசுர குடிநீர் கொடுத்து கொண்டு அயராது உழைத்துக் கொண்டிருக்கும் கருணை உள்ளமே..!
கனேசனே..

மக்கள் நலனே தன்நலன் என்று கருதும் தன்னலமற்ற  நூலக சிந்தனை சிங்கமே...!

உங்கள் சேவை மேலும் உடுமலைக்கு தேவை என்று எண்ணியோ.... உங்கள் நூலக பணியை அரசே நீட்டித்துள்ளதோ...!

மென்மேலும் உங்கள் உன்னதப் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

இப்படிக்கு,
என்றும் அன்புடன்,
பிரியா ராஜா
நூலக வாசகர் .
கல்லூரி மாணவி ..
வாசிப்பை ..நேசிப்போம் ..


கேள்வி :  உங்களைப் பற்றி ஒரே வரியில் சொல்லுங்கள் என்றால் என்ன சொல்வீர்கள்?

என் பதில் :...

கொடுத்து பழகிவிட்டேன். வாங்கி பழகவில்லை.
(அன்பு, பாசம், கருணை, நேசம், காதல்.)

வாங்கி பழகிவிட்டேன். கொடுத்து பழகவில்லை.
(துரோகம், ஏமாற்றம், அவமானம், வலி.)


எனினும், புன்னகைக்க மறந்ததில்லை......
கேள்வி :வாழ்க்கையில் இனியும் எந்த ஊக்குவிப்பும் இல்லை என உணரும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்?

என் பதில் :...

வின்னர் படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகன் கைப்பிள்ளையிடம் கேட்ப்பார்.

உனக்கு எவ்வளவு அடி வாங்குனாளும் வலிக்கலயா ?

அதற்க்கு கைப்பிள்ளை சொல்லுவார் : நாங்களாம் அடி வாங்காத ஏரியாவே இல்லை என்று.


நம்மளும் அப்படி தான் வாழ்க்கை லெப்ட் அன்டு ரைட் நல்லா அடி குடுத்தாளும் தட்டிவிட்டுட்டு போய்க்கிட்டே இருக்கனும்.


கன்னத்தில் கை வைக்கவே கூடாது.


இந்த ஊக்குவிப்பு எல்லாம் முதல் தடவை அடி வாங்குறவங்களுக்கு தான். நம்பள தான்அடி பின்னிடுச்சே!


என்ன! போக போக அதுவே பழகிடும்.


இந்த ஊக்குவிப்பு முதல் தடவை அடி வாங்கி சோர்ந்து போனவங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா :


வாழ்க்கையில் சில பல அடி விழம். அதுக்காக முயற்சி செய்யறத விட்டுட்டா. எங்க விட்டோமோ அங்கயே நிக்க வேண்டியது தான்.

நன்றி ....

கேள்வி : ஒருவர் என்னை ஏற்று கொள்ளாத போது அதை சகஜமாக கடந்து செல்வது எப்படி?

என் பதில் ...


மேலாண்மை  படிச்சவங்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். வேலை தேடி அலைந்த அனுபவம். அவங்களாம் நிறைய முறை இந்த ரிஜக்டட்ங்குற வார்த்தையை கேட்டுருப்பாங்க.


ஒருத்தன் பத்து கம்பெனி ஏறி இறங்கியிருப்பான். பத்து கம்பெனியிலயும் ரிஜக்ட் ஆகியிருப்பான். இருந்தாலும் பதினொராவது கம்பெனிக்கு அப்ளை பண்ணுவான். அவனை ஒரு கம்பெனில ரிஜெக்ட் பண்ணுனதால அவன் தன்னுடைய நம்பிக்கை, விடாமுயற்சி பண்ணுறத விட்டுடமாட்டான்.



அவன் தினமும் தன்னை ரிஜக்ட் பண்ணுன கம்பெனி வாசலில் போய் நின்னுக்கிட்டு, என்னை ஏன் ரிஜக்ட் பண்ணுனீங்க. நான் நல்லா வேலை செய்வேன் என்னை ஏத்துக்கோங்கன்னு கேட்க மாட்டான். ஒன்னு இல்லைன்னா இன்னொன்றுன்னு கடந்து வந்துடுவான்.


இப்படி சுலபமா முடிவெடுக்க தெரியறவங்களுக்கு காதல்லையோ/ வாழ்க்கையிலயோ யாராவது வேண்டாம்னு சொல்லிட்டா அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவங்ககிட்ட போய் ஏத்துக்க சொல்லி கெஞ்சறோம்.


ஏப்படி ஒரு கம்பெனில ரிஜக்ட் ஆனா அதை மறந்துட்டு அடுத்த கம்பெனிக்கு போறோமோ அதே மாதிரி தான் ஒருத்தவங்க நம்மளை ஏத்துக்கவில்லைன்னா அதை கடந்து வந்துடணும். நின்ன இடத்துலயே நின்னா வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்குபோகவே முடியாது.

நன்றி ,,,,,,

கேள்வி : எளிதாக தோன்றும் ஆனால் உண்மையில் கடினமானது எது? கடினமாகத் தோன்றும் ஆனால் உண்மையில் மிகவும் எளிதானது எது?


என் பதில் :.


ஆண்பிள்ளைக்கு திருமணமென்றால்..பெரிதாக செலவிருக்காது தாலி சேலை பந்தி அவ்வளவுதான் என எளிதாக நினைத்தாலும்

திருமணத்துக்குப்பின் தன்னுடைய மனைவியை பராமரிக்கும் பாதுகாக்கும் பொறுப்புக்களை முழுமையாக ஏற்கிறான்..

வீட்டுக்கு வேண்டியவற்றை வாங்கிவருவது வேலை செய்யுமிடங்களில் உள்ள பணிச்சுமை இடையே ஓய்வெடுக்கமுடியாதநிலை மனைவியின் குழந்தைகளின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வது என ஆண் சுமக்கும் கடக்கும் விசயங்கள் சொல்லில் அடங்காது ரொம்ப கஷ்டம்

பெண்திருமணம் என்பது சீர் வரதட்சணை செய்முறைகள் என பெண்ணை பெற்றவர்களின் உயிரை வாங்கினாலும்..குறுகிய காலத்திலேயே செலவுகள் எல்லாம் முடிவுக்கு வந்து பெண்ணை பெற்றவர்களை நிம்மதி பெருமூச்சு விடவைக்கும்

எனவே ஆணின் திருமணம் சுலபமாக தெரிந்தாலும் திருமணம் என்பது பலத்தை பரிசோதிக்கும் நிகழ்வாகி கடினமாகிறது

பெண்ணின் திருமணம் பொருளாதார சிரமத்தை தரும் கஷ்டமாக இருந்தாலும் பின்னாளில் பொறுப்பு குறைந்து பெற்றவர்களின் அந்த பெண்ணின் வாழ்க்கையை சுலபமாக்கும்

நன்றி :..வரப்போகும் புது தம்பதிகளுக்கு ..இந்த செய்தி ..