திங்கள், 13 ஏப்ரல், 2020

அனைவருக்கும்
தமிழ் புத்தாண்டுநல்வாழ்த்துகள் !!
🌱🌱🌱🌱🌱🌳🌳🙏🙏🌱🌱🌳🌳🌳
உழைத்தவன் அறிவான்!
உழைப்பின் அருமை.
அது தான் அவன்
உயர்வுக்குபெருமை !!
நல்லதை நினைப்போம் !!
உதவிகள் செய்வோம் !!
மானுடம் வாழ
மனித நேயம் காப்போம் !!
பொல்லா காலம்
போனதென்றே நினைத்து
நல்ல காலம்
பிறந்ததேன்றே வாழுவோம் !!
முயற்சி விதைகளை தூவி
நம்பிக்கை பயிர்களை
முளைக்க செய்வோம் !!
நம்பிக்கை வைக்கும்
நண்பர்களுக்கு
நட்பே துணை !!
அன்பே கடவுள் !!
புதிதாய் பிறக்கவிருக்கும்
புத்தாண்டு குழந்தையை
அன்பாய் வளர்த்து
அர்த்தமுள்ளதாக்குவோம் !!
வாழ்க வளமுடன்.....!!✍️📚📚📚🥰🥰🙏

ஹெல்த் இன்சூரன்ஸ் ( health insurance company) கம்பெனியில் பணம் போடுவது  நல்லதா?

தற்போதைய காலகட்டத்தில் மருத்துவ செலவு என்பது ஒரு சராசரி நடுத்தர குடும்பத்துக்கு மிகப்பெரிய பழுவாக உள்ளது.

ஒரு மாதத்தின் மொத்த செலவில்  கனிசமான தொகையை மாத்திரை மருந்துகளுக்கு செலவு செய்தால் குடும்ப வருமானத்தை எதிர்காலத்துக்கு எவ்வாறு சேமித்து வைப்பது.

அவ்வாறான காலகட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்துகொள்ள நம்மில் அனைவருக்கும் மனம் வருவதில்லை.

தனியார் மருத்துவனைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒரு சராசரி நபருக்கு இயல்பாக ஏற்படும் சிந்தனை.

உயிருக்கு ஆபத்தான விபத்து மற்றும் நோய்வாய்ப்பட்ட சமயங்களில்  மல்டி ஸ்பெஷாலிட்டி( multi speciality)  ஆஸ்பத்திரியில் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது அனைவருடைய இயற்கையான எண்ணம்.

 குறைந்தபட்ச மருத்துவ செலவினங்கள் -

1.சாதாரண நெஞ்சு வலி - அதன் அனைத்து test மற்றும் ஆரம்ப சிகிச்சை  -30000/-

2.நெஞ்சடைப்பு மற்றும் stent பொருத்துதல் -2 லட்சம்

3.Heart attack மற்றும் bypass அறுவை சிகிச்சை -3 லட்சம்

II.Accidents / விபத்து

1. Fracture மற்றும் அறுவை சிகிச்சை  - 1- 3 லட்சம்

2. தலை பாக விபத்து - அறுவை சிகிச்சை - icu  -2-5 லட்சம்

3. தலை பாக விபத்து - அறுவை சிகிச்சை - icu - ventilator  -5 - 10 லட்சம்

III. சாதாரண மற்ற நோய்கள் ( குழந்தைகளுக்கான குறைந்தபட்ச செலவு)

1. டைபாய்டு -20000/

2. டெங்கு  -30000/-

3.நிமோனியா  -25000/-

4. வாந்தி பேதி  -15000/-

5.மூளைக்காய்ச்சல்  -30000/-

மேலே நாம் கூறியது அனைத்தும் குறைந்தபட்ச தோராய செலவுகளே.

இதை பார்க்கும் போது, அனைவருக்கும் ஏற்படும் முதல் எண்ணம் என்ன?
“இந்த advice அனைத்தும் மற்றவர்களுக்கு தான்.

ஆனால் தனக்கு ஒன்றும் நடக்காது. கடவுள் எனக்கு இந்த நிலையை தரமாட்டார்.
இவ்வாறான எண்ணம் சரியானதா. 

நடைமுறை சாத்தியத்தை  பேசுவோம் நண்பரே.

பொருளாதார ரீதியில் ஒரு மனிதனுக்கு வருங்கால எதிர்கால திட்டத்தை அழிப்பதில் நோய் செலவினம் மிகப்பெறிய பங்கு வகிக்கிறது. இதை எவ்வாறு சமாளிப்பது.

கையில் உள்ள பணத்தை செலவு செய்யலாம்.

தற்காலிகமாக கடன் வாங்கலாம். 

நகையை அடகு வைக்கலாம்.

எந்தவகையாக இருந்தாலும்  சரி, குடும்ப வருங்காலத்திற்காக சேமித்து வைத்த அல்லது சேமிக்க நினைத்த எண்ணம் நிறைவேறாமல் போகலாம்.

நாம் நாளொன்றுக்கு காபி டீக்காக குடும்ப செலவு 50 ரூபாய் ( வருடத்திற்கு- 18000/- )
நாளொன்றுக்கு  நாம்  டீவி , அலங்காரம் , மற்றும் பொழுதுபோக்குக்காக செலவு 100 ரூபாய் . ( வருடம் 36500/-)

நம் குடும்ப செலவில்  நாள் ஒன்றுக்கு  நாம்  30 ரூபாய் ஒதுக்கி வைத்தாலே போதும் (வருடத்திற்கு 12000/-) , நாம் ஒரு செல்வந்தருக்கு இனையான அல்லது ஒரு மெத்த படித்த மேதைக்கு கிடைக்கும் அனைத்து வகையான மருத்துவ சிகிச்சையும் நமக்கும் கிடைக்கும்.

ஒரு வருடத்திற்கு நாம் எடுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி பொதுவாக 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 7500 ரூபாய் முதல் 13000 வரை ( gst உட்பட) ஆகிறது.
அது ஒவ்வொரு companyக்கும் மாறுபடும் . அவ்வாறான கட்டணம் செலுத்தி  சேர்ந்துவிட்டால் , அந்த ஒரு வருடம் நம் நோய் சுமை குறையும் . 

கொடுத்த பணம் திரும்பக்கிடைக்காதாம்பா! , நம்ம குடும்பத்துக்கு ஒன்றும் ஆகாதுப்பா! , இது போல  20 வருடமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கும் காரணம்,  இன்றைய கால கட்டத்தில் ஏற்புடையதல்ல.  நீங்களே சிந்தியுங்கள் .

சேவைக்கு அழையுங்கள்:

சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட்\

.🙏🙏✍️📚V.K.Sivakumar🌱🌳

தொடர்பு எண் :9944066681
ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் ..

சனி, 11 ஏப்ரல், 2020

கேள்வி :..தமிழர்கள் அக்காவின் மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். இந்த பழக்கத்தின் தோற்றம் என்ன? இது சரியா?

பதில் :..

குருதி உறவு, இரத்த சம்பந்தம், இரத்த பாத்தியம், உறவின் முறை, உதிரக் கலப்பு - Consanguinity : இன்றைய விவரம் தெரிந்த நகர்ப்புறத்து இளைய தலைமுறை பிள்ளைகள் அக்கா, அத்தை, மாமன் வழி திருமணங்களை தவிர்க்கின்றனர், எதிர்க்கின்றனர். ஆனால் சிற்றூர்களிலும், கிராமங்களிலும் இன்னும் வழக்கில் உள்ளது.

பழக்கத்தின் தோற்றம்: 1)சொத்து குடும்ப வட்டத்திற்குள் இருத்தி வைத்தல், 2)நெருங்கிய உறவாயிருப்பதால் குடும்பப் பின்னணி, பிள்ளைகளின் குணநலன்கள் பற்றிய புலனாய்வு தேவையில்லை, 3) சண்டை, சச்சரவு என்றேதேனும் வந்தால் பெரியவர்கள் உரிமையோடு தலையிட்டு தீர்வு காண்பது எளிது.

உறவின் முறை / குருதி உறவு (First Cousins) திருமணங்களைப் பற்றி மரபணு(genetic) ஆராய்ச்சியாளர்களிடம் மாறுபட்ட விவாதங்கள் நடைபெற்ற போதிலும் மேலை நாடுகளில் இத்தகைய பிணப்பை கூடாபாலுறவு/முறை தகா உறவு(Incest) என்றும், அத்தகைய உறவில் பிறக்கும் குழந்தைகள் மரபணு நோய் (genetic disease), மரபணு சீர்குலைவு(genetic disorder) உள்ளாவார்கள் என்ற கருத்து நிலவுகிறது.

சங்க காலத் தமிழகத்தில் இத்தகைய திருமணங்கள் வழக்கத்தில் இருந்ததற்கான சான்றுகள் என் கண்களில் தென்படவில்லை.
மாதவி ! 
இந்த குவாரண்டைனில் சில சினிமாக்களை பார்த்திருந்தாலும் சலங்கை ஒலியை தூசுதட்டி பார்ப்பதற்கு ஒரே காரணமே இருந்தது. அந்த காரணம் தமிழ் இந்துவில் எஸ்.ராவின் சலங்கை ஒலியை பற்றிய திரைபார்வையை கடந்த மாதத்தில் படித்தது. ஒரு கைதேர்ந்த சமையல்காரன் சமைக்கும்போது வரும் வாசனை எப்படி பசியே இல்லாதவனுக்கு கூட சாப்பிட தூண்டுமே... அதை போல் எழுதியிருந்தார் இப்படத்தை பற்றியும்.
எஸ்.ரா இப்படத்தை எழுதாத முன்பும் சலங்கை ஒலியை பார்த்திருக்கிறேன் அதெல்லாம் சினிமா பற்றிய புரிதல் இல்லாத காலம். 'வந்தாய் கோபாலனே' பாட்டில் தலைசிறந்த நடனகலைஞனை டப்பாங்குத்து ஆடி வசூல்ரீதியாக ரசிப்பார்களே.. அந்த டப்பாங்குத்து ரசிகனின் பார்வையில் தான் நானும் பார்த்திருக்கிறேன். ஒரு முதிர்ந்த மனநிலையில் ஒரு சினிமாவோ புத்தகமோ நம்முடைய பார்வையில் நுழையும்போது தான் அதன் முழு பரிணாமமும் புலப்பட ஆரம்பிக்கிறது. சலங்கை ஒலியை பொறுத்தவரையில் கமலை பற்றி அனேகம்பேர் அலை அலையாய் பேசி ஓய்ந்திருப்பார்கள். அவரை பற்றி ஏதோ ஒன்றை சொல்ல ஆரம்பித்தால் அது லட்சம்பேர் கூடி பேசிய ஒன்றாகதான் இருக்கும். அந்த பட்டியலில் நானும் ஒருவனாகி போவதில் விருப்பமில்லை. ஆனால், கமலுக்கு நிகராக படத்தில் யாருமில்லை என்று சொல்லிவிடாதபடி கடைசி காட்சி வரையில் சவால் கொடுத்தது மாதவி என்கிற ஜெயப்ரதா!
மாதவி என்கிற கேரக்டரை ஒரு ஆணின் எந்த வயது காலகட்டத்தில் நினைத்து பார்த்தாலும் உள்ளுக்குள் காதல் பூக்கும். அந்த கேரக்டரை வடிவமைத்து வைத்திருந்த தோற்றம் அப்படி. எப்போது தலை நிறைய மல்லிகைப்பூக்களுடனும் நெற்றில் ஒரு முழுநிலவின் தோற்றத்தில் ஸ்டிக்கர் பொட்டும், நேர்த்தியாக கட்டப்பட்ட ஜோர்டன் புடவையோடு கையில் ஒரு கேமராவுடன் திரியும் பெண்ணின் மீது எந்த ஆண் வாசனை கொள்ளாமல் இருக்க முடியும்?
இப்படம் வெளிவந்த எண்பதுகளின் காலகட்டத்தில் ஒரு திருமண பந்தம் முறிந்த ஒருத்தி கேமரா, நடனம், இசை, புத்தகம், கட்டுரையாளர் என்றெல்லாம் பொழுதுபோக்கிற்கு சுதந்திரமாக சுற்றியிருக்க முடியுமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் சொந்த வாழ்வில் தோல்வியுற்ற ஒரு பெண் அவ்வளவு சுதந்திரமாக நடமாடினாள் என்று காட்டினாலும் கொஞ்சம் மாதவி கேரக்டரை ஆராய்ந்தால் அவளின் உணர்வுகள் எங்கேயும் மதிக்கப்பட்டதாக உணர முடியாது.
தன் அப்பாவின் மூலம் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை ஏற்றிருப்பாள். சொத்துக்களுக்காக தன்னை கைவிட்ட தன் கணவன் மூலமாக ஒரு ஏமாற்றத்தை சந்தித்திருப்பாள். ஒரு கட்டத்தில் பாலுவை நேசிக்க தொடங்கும் போது அவளின் விருப்பமோ சம்மதமோ எதையும் கோராமல் பாலுவே தன்னிச்சையாக ஒரு முடிவு எடுத்து மாதவியை பழைய திருமண உறவில் சேர்த்து அவன் மூலம் ஒரு நிராகரிப்பை பெறுவாள். இறுதியாக பாலுவின் மீதிருக்கும் நேசத்தை சரிவர புரிந்துகொள்ளாத மகளின் மூலமாக ஒரு அவமானத்தையும் பெறுவாள். இப்படியாக ஒரு வசீகரமான மாதவி கடைசிவரையில் எவ்வித மகிழ்ச்சியையும் பெற்றிடாதவளாகவே வாழ்வில் தனியே நிற்பாள். எத்தனை வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தாலும் விரும்பிய வாழ்வு கிடைக்காமல் போவது ஒரு சாபமில்லையா!
மாதவி என்கிற பெயரே தியாகத்திற்கு உதாரணமானது. அதை சிலப்பதிகாரத்தில் ஒரு சாரர் கண்ணகியின் மீதான அதீத பக்தியில் மறுத்தார்கள். அதைபோல் சலங்கை ஒலியில் பாலுவின் துயரத்தில் மாதவியின் தியாகத்தை மறந்துவிட கூடாதல்லவா! என்பதே என்னை இவ்வளவு எழுத வைத்தது.
https://youtu.be/w9o0fA8LAdE

கேள்வி :..சீனா நாடு தற்போது இந்த வைரஸ் நோயில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்புவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :....

சீன நாடு இயல்பு நிலைக்கு திரும்பியது என்று ஊடகங்களும், சீன அரசும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் உலக பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பாதது வரைக்கும் சீனாவும் கொரோனா பதிப்புகளில் தான் இருக்கும்.

எனது நண்பர் சிங்கப்பூரில் இருந்து செயல்படும் ஒரு மின்னணு உபகரணங்கள் விற்பனை செய்யும் சீன நிறுவனத்தில் வர்த்தக பிரிவில் இருக்கின்றார். சாதாரணமாக அவரின் ஒரு வாடிக்கையாளர் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 15 லட்சம் அமெரிக்க டாலர் அளவிற்கு இறக்குமதி செய்யும். கொரோனா பாதிப்பு சீனாவில் தீவிரமாக இருக்கும் பொழுது அவரால் வடிக்கையாளர்க்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அளவு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் தான்.

இப்பொழுது அவரின் வாடிக்கையாளர் இருக்கும் நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டு உற்பத்தி முடங்கியதால் வாடிக்கையாளர் இறக்குமதியை நிறுத்திவைத்துவிட்டார். இப்பொழுது எனது நண்பரின் இந்த மாத விற்பனை எதுவும் இல்லை. அடுத்தமாதம் அந்த வாடிக்கையாளர் திரும்பவும் வாங்கிவிடுவார் என்ற நம்பிக்கை கொரோனாவின் ஊரடங்கு உத்தரவை பொறுத்தே அமையும்.

போன மாதமே என் நண்பரின் அலுவலகத்தில் மாதத்திற்கு நான்கு நாட்கள் சம்பளம் இல்லாத விடுப்பு எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் (இதே போன்று பெங்களூரில் வேலை பார்க்கும் எனது தோழிக்கு 3மூன்று மதம் 50% தான் சம்பளம் என்று சொல்லி வீட்டில் இருந்து வேலைபார்க்க சொல்லிருக்கிறார்கள் )

இப்பொழுது நீங்களே முடிவு செய்யுங்கள், சீனாவில் இயல்பு நிலை திரும்பியதா இல்லையா என்று. உலக பொருளாதாரம் முடங்கியது சீனாவிற்கு சுற்றுலா பயணிகள் வரவில்லை, அவர்களின் இறக்குமதியாளர்களின் நாடுகள் எல்லாம் முடங்கிக்கிடக்கிறது, அப்படி இருக்கும்பொழுது எப்படி உற்பத்தியை தொடங்க முடியும். உற்பத்தி இல்லாமல் சீனாவில் எப்படி இயல்புநிலை திரும்பும்?


கொரோனாவின் தொற்று தாக்குதலில் இருந்து கொஞ்சம் மீண்டிருப்பார்கள் அவ்வளவே, இயல்பு நிலை திரும்பிருக்கிறது என்று சொன்னால் நீங்கள் யாரு என்ன சொன்னாலும் நம்புகிற அளவு அப்பாவியா இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..





வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கேள்வி :....வேறென்ன வேண்டும் நீ போதுமே …என்று உங்கள் துணையை பார்த்து மனம் நெகிழ்ந்த தருணம் உண்டா ?


பதில் :...என் வெளிநாட்டு நண்பர்  சங்கர் ஆறுமுகம் அவர்களின் அருமையனா பதில்

திருமணத்திறகு முன்பே நான் வெளிநாட்டில் இருந்த படியால் ,திருமணத்துக்காக 45 நாள் விடுமுறை தான் கிடைத்தது , திருமண ஏற்பாடு எல்லாம் எங்க அக்காவும் மாமாவும் கவனிச்சிக்கிட்டாங்க , என்ன என்கிட்டே ஒரே ஒரு வீடு தான் இருந்தது (அதுவும் லோன் இல் ) அதை காட்டி தான் பெண் வீட்டார்களை சம்மதிக்க வைத்தோம் ,

பேங்க் லோன் 15 லக்ஷம், மாத மாதம் வட்டி கிட்ட தட்ட 20,000 ரூபாய் கட்டி ஆக வேண்டும் ,கல்யாண செலவில் பற்றாக்குறை வர ஒரு 3 லக்ஷம் வெளியே கடன் வேற வாங்கி விட்டேன் (வட்டிக்கு) ,இது எதுமே பெண் வீட்டாருக்கு தெரியாது, எனக்கு தாய் தந்தை இல்லாத காரணத்தால் முதலில் யோசித்தார்கள் ,பிறகு அனைவரும் நல்ல பையன் என்று certificate தர ஒத்துக்கிட்டார்கள் .

ஜனவரி 18 2013 திருமணம் நடந்தது , சந்தோசமா வாழ்க்கையை தொடங்கினோம் எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது ,தேன் நிலவு , சினிமா , ஹோட்டலில் சாப்பிடவது என்று 1 மாதம் ஓடி விட்டது ,எனக்கு லீவு முடியே 3 நாள் இருக்கும் நிலையில் என் மனைவிக்கு கடுமையான அம்மை நோய் பார்த்தது ,இந்த மாதிரி நேரத்தில் மனைவியை விட்டு செல்வது நல்லது இல்லை என்று என்னி company யில் பேசி leave extension வாங்கி விட்டேன் ,15 நாள் என் மனைவி கூட இருந்து நல்ல படி கவனித்து கொண்டேன் , அவளுக்கு குணம் ஆக ,எனக்கு தொற்றிகொண்டது அம்மை அதுவும் இன்னும் கடுமையான அம்மை , கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு மேல் அவதி பட்டேன் அப்போ என் மனைவி என்னை பார்த்துகொண்டாள் ,மறுபடியும் கம்பெனி யில் பேசி மறு முறையும் leave extend பண்ண company HR க்கு மெயில் அனுப்பினேன் , அம்மை நோய் என்றதும் இப்போதைக்கு வர வேண்டாம் நல்ல குணம் ஆனா பிறகு மெடிக்கல் certificate அனுப்புங்க அதை நாங்கள் பார்த்த பிறகு சொல்லுறோம் அப்போ வந்த போதும் என்ற மறு பதில் வந்தது , அப்படி இப்படினு அதில் 2 மாதம் ஓடி விட்டது கையில் இருந்த காசு எல்லாம் கரைந்து விட்டது , செலவை சமாளிக்க முடியாமல் மறுபடியும் கடன் வாங்கினேன், என்னோட பொருளாதார நிலைமை அப்போ தான் என் மனைவி தெரிஞ்சுக்கிட்டா , முன்ன வாங்கிய கடனுக்கு வட்டி அடைக்க மறுபடியும் கடன் வாங்கினேன்.

காசு நெருக்கடி அதிகரிக்க நிலைமையை சமாளிக்க முடியாமல் மறுபடியும் HR க்கு மெயில் போட்டேன் , 15 நாள் பிறகு வந்து சேரவும் என்று பதில் வந்தது , அப்பாடா 4 மாசமா பட்ட கஷ்டத்துக்கு ஒரு முடிவு வந்திருச்சுனு இருக்கையில் , என் மனைவிக்கு மறு படியும உடம்புக்கு முடியாம hospitalக்கு செல்ல ,அங்கே அவளை பரிசோதித்த டொக்டர் "நீ கர்பமா இருக்க மா ' என்று சொன்னவுடன் சந்தோசத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன்,

வீட்டுக்கு வந்து இதை பத்தி பேசுனோம் ,நா மறுபடியும் லீவு நீடிக்கின்றேன் என்று சொன்ன பொது வேண்டாம் என்று மறுத்து விட்டா என் மனைவி , "ஏங்க இங்கே இருந்து என்ன பண்ண போறீங்க ,கடன் வாங்கி தான் செலவு செய்து கொண்டு இருக்கிறோம் இன்னும் இங்கேயே இருந்துட்டா குடும்பத்தை எப்படி ஓட்றது , நீங்க போங்க நா எங்க அம்மா வீட்டில் இருக்கிறேன், போய் மொதல்ல கடனை அடைங்க , பிரசவ நேரத்தில் வந்தா போதும் " னு சொல்ல ஒருவனுக்கு தாய் தந்தை இல்லைனா எவளோ பெரிய சாப்ம என்ற உண்மையை அப்போ தான் தெரிஞ்சிகிட்டேன்

மனைவி சொன்னதை போல் அவளை என் மாமியார் வீட்டில் விட்டுட்டு வெள்ளிநாட்கு கிளம்பி விட்டேன் , வாங்கின கடன் அடைக்க கிட்ட தட்ட 6 மாதங்கள் ஆயிருச்சு , இந்த 6 மாசத்தில் ஒரு நையா பைசா கூட வீட்டுக்கு அனுப்பு முடிய வில்லை , இருந்தாலும் என் மாமியாரும், மாமனாரும் மனைவியை நல்ல முறையில் பார்த்து கொண்டார்கள் , எனக்கு தாய் தந்தை இல்லாத குறையை அவர்கள் தான் பூர்த்தி செய்தார்கள் , நான் என் மாமியாரை அக்கா என்று அழைப்பேன் ,

ஒரு நாள் போனில் பேசி கொண்டு இருக்கையில் , என் மாமியார் நான் பணம் அனுப்பாததை ,மற்றும் கடன் இருக்கிறதை பத்தி கொஞ்சம் சங்கட பட்டு "அதான் தம்பி தாய் தந்தை இல்லாத உங்களுக்கு பெண் குடுக்க யோசித்தோம் , இந்நேரம் அவர்கள் இருந்தாங்கன்னா இப்படி என் மக கஷ்ட படு இருப்பாளா " ன்னு சொல்ல என் மனைவிக்கு வந்துச்சு பாருங்க கோவம் , அவ அம்மாவோட சண்டை போடா ஆரம்பிச்சிட்டா " இந்த பாரு நா இருக்கிறது கஷ்டமா இருக்குன்னா சொல்லு என் வீட்டுக்கே போகிறேன் ,ஆனா என் புருஷன் பத்தி பேசுறது மட்டும் வச்சுகிறாதே ,அவர் கஷ்டம் உன்னக்கு தெரியுமா " இதே எல்லாம் போனில் கேட்டுகிட்டே இருந்த என்னக்கு கண்ணில் தாரை தாராய் கண்ணீர்

எப்படி சார் கல்யாணம் ஆயி வெறும் 5 மாசத்தில், புருஷனுக்காக பெத்த தாயுடன் சண்டை போட இந்த பெண்களால் முடிகிறது.

" வேறென்ன வேண்டும் நீ மட்டும் போதும் "என்று என் மனைவி பத்தி நினைச்ச முதல் தருணம் , இதை போல் பல சம்பவம் உண்டு வேற ஒரு பதிலில் எழுதுகிறேன்.நண்பரே ..

https://youtu.be/azA9XXgMvcU
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

கேள்வி :...வாழ்க்கையில் உண்மையில் பணம் தேவைப்படும்போது ஒரு சிலர் தேவையில்லை என்று ஏன் சொல்கிறார்கள்?


பதில் :...

நான் ஒரு முதியவரிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று? அன்பானவர்களுடன் நாம் செலவழித்த அழகான தருணங்கள் எல்லாமே என அவர் கூறினார்.

தன் குழந்தையை ஒரு விபத்தில் இழந்த ஒரு பெண்ணிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று? அவள், முடித்தால் என் மகனை திருப்பி கொடுத்து விட்டு, என்னிடமிருக்கும் அணைத்து பணத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

நான் ஒரு உண்மையாக காதலிக்கும் ஒரு பக்க காதலரிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று? எந்தவொரு பணத்தையும் விட நான் விருப்பிய பெண் மீது கொண்டுஉள்ள என் அன்பு தான் முக்கியமானது என்று அவர் கூறினார்.

நான் ஒரு புனிதரிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று?அவர் தரையில் இருந்து சிறிது மணலைத் தூக்கி, உள்ளங்கையை மூடினார், விரைவில் மணல் விலகிச் சென்று, அவர் சிரித்தார்.

ஒரு ஆர்வமுள்ள ஒரு தொழிலதிபர்ரீடம், அவர் ஒரு செல்வத்திற்காக தனது வாழ்க்கையை விட்டு விலகுவாரா என்று கேட்டேன், அவர் கூறினார், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் தனது தொழிலில் பணியாற்றுவதில் தான் அவரது மகிழ்ச்சியும் திருப்தியும் உள்ளது, மேலும் எந்த அளவு பணமும் அதை வாங்க முடியாது.

நான் ஒரு நேர்மையான நபரிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று? அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், என் ஒழுக்கம் தான் பணத்தை விட மேலானது என.


பணம் வாழ்க்கையில் தேவையான ஒன்று, ஆனால் பணம் தான் வாழ்க்கையில் எல்லாமே இல்லை.



சுயநலம் இல்லாத ஜீவன் ....
பெத்தவங்கள ஏன் ...............
"அம்மா"
"அப்பா" ன்னு கூப்பிட்றோம்..!!
எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?
அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?
அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?
அ – உயிரெழுத்து.
ம் – மெய்யெழுத்து .
மா – உயிர் மெய்யெழுத்து.
அ – உயிரெழுத்து.
ப் – மெய்யெழுத்து .
பா – உயிர் மெய்யெழுத்து.
தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.
தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .
இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.
நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!
சுயநலம் இல்லாத ஜீவன் ....சிறு வயதில் தாயையும் ,தந்தையையும் இழந்த எனது தந்தையின் இறுதி மூச்சுவரை தன் கண் இமையை காத்து சுயநலம் இல்லாத பணிவிடை செய்தது தாய்மை ....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..வாட்ஸாப்ப் எண் 994466681....

வியாழன், 9 ஏப்ரல், 2020

கேள்வி :...ஒரு பெண் உங்களிடம் "நீங்கள் ௭தற்௧ா௧ தி௫மணம் செய்து கொள்கிறீர்கள்" ௭ன்று ௧ேட்டால் ௭ன்ன பதில் அளிக்கலாம்?

என் பதில் :

என்னை கட்டாயப்படுத்தினார்கள் அதனால் திருமணம் செய்து கொண்டேன், பெண் அழகாக இருந்தாள் அதனால் திருமணத்திற்கு சரி என்று தலையாட்டி விட்டேன் என்று எல்லாம் உவமைபடுத்தி எழுதவும் தோணவில்லை, உருவகப்படுத்தி எழுதவும் தோணவில்லை…

என் உள்ளத்தில் உள்ள உண்மையை எழுதுகிறேன்…படிக்க உங்களிடம் சிறிது நேரம் இருந்தால் படியுங்கள்.



"எனக்கு 70 உனக்கு 67 வயதாகி இருக்கும், எனக்கு முடி கொட்டி வலுக்கை விழுந்திருக்கும், உனக்கு முகத்தில் தோல் எல்லாம் சுருங்கி இருக்கும் நீ உன்னுடைய அழகை இழந்திருப்பாய், நான் உன்னை விளையாட்டாக ஏமாற்ற வைத்திருந்த அறிவை எல்லாம் இழந்திருப்பேன்.

நமது, பெற்றோர்கள் ஒரு நாள் வயதாகி கடவுளை அடைந்திருப்பர்கள். நாமும் அதை நோக்கியே நாட்களை கடந்து கொண்டிருப்போம். நமது குழந்தைகள் எல்லாம் திருமணம் ஆகி, பொண்டாட்டி பிள்ளைகளோடு சந்தோசமா இருப்பாங்க.

நாம் தாத்தா, பாட்டி என்று கூறிய காலம் போக, நம்மை தாத்தா பாட்டி என்று கூற பேரன் பேத்திகள் பிறந்திருப்பார்கள்.

உன்னை கிழவி என்பார்கள் என்னை கிழவன் என்பார்கள், நரைமுடி கூடி விட்டது அல்லவா…அப்படித்தான் அழைப்பார்கள். 😅

27 வயதில் நன் உன்னை காதலித்து திருமணம் செய்திருப்பேன் 💝.

அப்பொழுது நான் திருமணம் செய்து 43 வருடங்கள் ஆகியிருக்கும், சுக துக்கங்களை அனைத்தையும் இந்த கடினமான வாழ்க்கையில் ஒன்றாகவே கடந்திருப்போம். எனக்கு துணையாக நீயும் உனக்கு துணையாக நானும் ஒருவரை ஒருவர் விலகி விடாது ஒன்றாகவே பயணித்திருப்போம்.

அந்த மூப்பு எய்த காலத்தில், தனியாளாக நான் மட்டும் இருந்தால் , நான் அனுபவித்த அத்தனை இன்ப துன்பங்களையும், நாம் ஒன்றாக சிரித்து மகிழ்ந்த அந்த அருமையான காதல் நாட்களையும், யாரிடம் சொல்லி மகிழ்வேன் என் காதலி உனைவிடுத்து?

நாம் அனுபவித்த நினைவுகளை ஒன்றாக மீண்டும் ஒரு முறை அசை போட, என் வாழ்வின் துணையான நீ என்னுடன் வேண்டும் அல்லவா…அதற்காக தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லியிருப்பேன்..அப்பெண்ணிடம்…💝
கேள்வி :..எப்படிப்பட்ட எண்ணங்கள் நம் வாழ்க்கையையே தொலைத்துவிடும்?

என் பதில் :...

*நல்ல வாழ்கை துணை (மனைவி அல்லது கணவன்)அமையாத போது திருந்தி விடுவார்கள் திருந்தி விடுவார்கள் என்று காலத்தை கடத்தும் எண்ணங்கள் நம் வாழ்கையை மட்டுமின்றி குடும்பத்திலுள்ளவர்களின் வாழ்க்கையையும் தொலைத்துவிடும்.உதாரணமாக விவசாயிகளுக்கு மழையில்லையேல் அவ்வருடங்கள் மட்டுமே இழப்பு.ஆனால் நல்ல வாழ்கை துணை அமையவில்லையென்றால் வாழ்நாள் முழுவதுமே இழப்பு.அதனால் நல்ல வாழ்கை துணை அமையவில்லையென்றாலும் அந்த அமைந்த வாழ்கை துணையை சரி செய்து நல் வாழ்கை வாழ்வது நம் கையில் உள்ளது என நான் நினைக்கின்றேன்.

*தற்பெருமை மற்றும் தான் என்ற கர்வம் கொண்ட எண்ணங்களால் வாழ்கையை தொலைத்து விட நேரிடும்.


*பிறரை அழிக்க நினைக்கும் எண்ணங்கள் தன்னுடைய வாழ்கையை மட்டுமல்ல தன் வம்சங்களின் வாழ்கையையும் தொலைத்துவிட நேரிடும்.
கேள்வி :....லாக் டவுனின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை என்ன?

பதில் :....

மாதம் 10ஆயிரம் இருந்தால் குடும்பம் நடத்தலாம் என தெரிந்து விட்டது. அனாவசிய செலவுகள் இல்லாமல்.

வாரம் ஓருமுறை பீச்,தியேட்டர், ஹோட்டல் போகாமலும் மனைவி மற்றும் குழந்தைகளால் இருக்க முடியும்.

பிஸ்சா பர்கர், kfc, Mcடி இல்லாமலும் இருக்க முடியும்.

உணவு வீணாகாமல் பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாட முடியும்.

செலவில்லாமல் கல்யாணம் நடத்த முடியும்.

ஸ்விக்கி, ஜோமாட்டோ, இல்லாமலும் நம்மால் இருக்க முடியும்.



ஆன்லைன் வகுப்பிலும் நாம் கற்றுக்கொள்ளலாம்.

புத்தகம் நல்ல நண்பன்.

எல்லாரையும் விட மருத்துவர்கள், செவிலியர்கள் மகத்தானவர்கள்.

துப்புறவு தொழிலாளர்கள், பால் கொண்டு வருபவர்கள் மதிப்பானவர்கள்.

காவல்துறை உங்கள் நண்பன் இப்போதான் புரியுது.

ஊருக்கே விடுமுறை கிடைத்தாலும் நம்ம அம்மாக்களுக்கு விடுமுறை இல்லை.

சோறு, கரண்டு, இன்டர்நெட், இது மூணும் இல்லனா மனுசங்க உயிர் வாழ முடியாது.

இதெல்லாம் கற்றுக்கொண்டது.

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

Haram
Malayalam

படம் எடுக்க முக்கிய காரணம் நம்ம ஹீரோ ஃப்கத் ஃபாசில் மட்டுமில்லை ..ஹீரோயின் ராதிகா ஆப்தே.
நவீன இளைஞர்களின் காதலும், கல்யாணமும் , டைவர்ஸ் ம் கதை.
விவாகரத்து என்பது எத்தனை எளிதாய், கடினமான ஒன்றாய் இருக்கு.
Inconvincable differences இதான் ரீசன்.
கல்யாணத்திற்கு முன் அழகாக இருக்கும் அனைத்தும் அத்தனை சிக்கலாகி போகிறது பலரது வாழ்வில்..
முன்பெல்லாம் ஆண்தான் விட்டுட்டு போவான் .இப்போல்லாம் அதில் பெண்களும்..
இந்தியாவை பொறுத்த வரை ஆயிரத்தில் ஐந்து கூட டைவர்ஸ் ஆவதில்லை..இன்னும் 99% திருமணம் டைவர்ஸ் ஆவதில்லை..ஆனால் எனக்கு தெரிந்து இதில் சட்டப்படி இல்லாமல் பிரிந்து வாழும் எண்ணிக்கை மட்டும் 10% இருக்கலாம். 20% பிரிந்து வாழும் தகுதி உடையவர்கள்.குடும்பம் .பேமிலி என்று சேர்ந்து வசிக்கலாம். ஒரு இருவது பர்சண்ட் மனமொத்த தம்பதிகள் வேண்டுமானால் பார்க்கலாம். முக்காவாசி பேர் ஒரு நிர்ப்பந்ததில்தான். அதான் பலருக்கு இந்தளவுக்கு மூச்சு முட்டுகிறது.
காதல் தோல்வியில் தற்கொலை எண்ணம் வருகிறது..அதை ஹீரோ சரி செய்கிறான். இங்குதான் தவறு..தன்னை காப்பாற்றும் ஹீரோ என்று அவளுக்கு பிடித்து விடுகிறது. நிஜமாக பிடித்து இருப்பது அவன் கவுன்சலிங்தான் .அவனில்லை..
பலருக்கும் இந்த பிரச்சனை உள்ளது..உதவியின் பேரில் ஏற்படும் ஈர்ப்பை காதல் என்று கற்பிதம் செய்து ..தாங்கள் மெச்சுருட்டியானவர்கள் என்று கருதி திருமணம் வரை செல்வது..பின் உணர்வது.
அவனுக்கு கொஞ்சமே கொஞ்சம்தான் பொசசிவ் உணர்வு வந்தது..நாளானால் இது சரியாகும் உணர்வுதான்..அவளுக்கு தொடர்ந்து நடப்பது போல தோன்ற சண்டை வர..கிளம்பிவிட்டாள்..
இது போன்ற பிரச்சனையில்லா திருமண விவாகரத்து இந்தியாவில் அதிகம் ஆவது உண்மைதான்.
பல காட்சிகள் அழகு..ஒரு பெண் கொலை செய்யப்படும் காட்சி, அதற்கு போராடும் விமன் ரைட்ஸ் அதே சமயம் ஜஸ்ட் விருப்பமின்மையால் கணவரை பிரிதல் எல்லாம் சுழல்கிறது
மகிழ்வு தருகிற எதுவும் வலியும் தருகிறது..இது மட்டுமே நிஜம்.
"You can hate me, you can't hate love " என்கிறான். மனிதன் இல்லாத வாழ்வுண்டு..அன்பின்றி உண்டா? அன்பு என்பது இயற்கை பேராற்றல். அழியாது.
இப்படி..அடிப்படையில் நாயகன் கம்ப்யூனிஸ்ட்..இதெல்லாம் ஏதும் அறியா ஆழமற்ற புரிதல்களின் நாயகிதான் இவள்.
ஆண் தன் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் கடந்து பெண் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் காலம் வந்துவிட்டது.
இந்த சமயத்தில்தான் மிகுந்த விழிப்புணர்வுடன் நம் உணர்வுகளை கவனிக்க வேண்டும். சுதந்திரம் மிக அவசியம். அதற்கு முன் பெண் என்பதின் பொறுப்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது
Haram என்பது பல அர்த்தங்கள் இருப்பினும் முக்கியமாய் தடுக்கப்பட்டது..அல்லது நல்லது அல்லாதவை..முக்கியமாய் தன்னை பாதிக்கும் வலி உருவாக்குவது.
ஹலால் என்றால் வலியின்றி வெட்டுவது..ஹாரம் என்றால் துன்புறுத்தல்..
இருவரும் ஒருவர் ஆவதுதானே காதல். அதில் ஏன் இத்தனை ஹாரம். ஹலால் போல ஒரே வெட்டில் எந்த பிரிவும் நடப்பதில்லை. வலிக்க வலிக்க துடிக்க துடிக்கதான் பிரிவுகள். அதில் கண்ணீர் துன்பம் எல்லாம் உண்டு.
சக மனிதனை நேசிப்பேன் என்ற ஹீரோக்கும் கூட ஹாராம் தான் நடக்கிறது. தன்னுடைய வலியை பழிவாங்கலாய் மாற்ற முடியுமா என்று யோசிக்கிறான். படம் பார்க்கும் நம்மையும்..என்னடா திருமணம் என்பது இவ்ளோதானா? இவ்ளோ எளிதா எல்லாம் என்று நகர்த்தி செல்வது அழகு.
ஆண் பெண் உறவில் இதான் சரி, இப்படி இருந்தால் அன்பு, சண்டையே வராது , ஆதர்சம் எதுவுமில்லை...எது நடந்தாலும் விட்டுக்கொடுக்காத உறவுகளே நிலைக்கும்..மிச்சம் ஹாராம் தான்.
என்னவாய் இருந்தால் என்ன உறவோ, பிரிவோ வலிவோ மகிழ்வோ..சிங்கிளோ, தம்பதியோ ..அன்போ, பகையோ..அந்த பட ஹீரோ சொன்னதுப்போல
Life should go on, must Go on..
அழகிய வாழ்வென்பது வலியிலும் ..வலியை தாண்டியும்
https://youtu.be/1byJZtuaxCg

விவரங்களுக்கு கற்றல் பாதை 21


1. புதிய வாடிக்கையாளரைப் பெறுதல்
2. சந்தை ஏற்ற இறக்கத்தை நிர்வகித்தல்
3. பங்கு முதலீட்டின் அம்சங்கள்
4. பங்கு நிதிகளைத் தேர்ந்தெடுப்பது
5. சி.எஃப்.ஏ மேக்ரோ பொருளாதாரம்
6. முதலீட்டின் கணிதம்
7. CFA இடர் மேலாண்மை
8 மகசூல் வளைவு பகுப்பாய்வு
9. ஹெட்ஜ் உத்திகள்
10. பரஸ்பர நிதிகள் அறிமுகம்
11. நிஸ்ம் மதிப்பீடு
12. வருமானத்தை ஈட்டும் உத்திகள்
13. சமூக ஆர்வலரான ஆலோசகர்
14. CFA முதலீட்டு மேலாண்மை.
15. நிதிக் கொள்கை
16. மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் கூறுகள்
17. பத்திரங்களின் அறிமுகம்
18. சி.எஃப்.ஏ அளவு கருத்துக்கள்
19. CFA மாற்று முதலீடு
20. செயலில் / செயலற்ற முதலீடு
21. முதலீடு செய்யும் உளவியல்.