புதன், 19 பிப்ரவரி, 2020

உடுமலைப்பேட்டை ...கல்லாபுரம் பகுதியில் ..நெற்பயிர்கள் ..

நெல் சாகுபடி தொடங்கப்பட்ட வரலாறு !!!
உலகில் முதன் முதலாக ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இருவகை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன.
ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் Oryza rufipogan ஆகும். ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியப்பகுதியில் Oryza sativa var. indica வும், சீனப்பகுதியில் Oryza sativa var. japonica வும் தோன்றின.
இந்தியாவில் அவ்வையார் மற்றும் பல பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன. நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையொட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. நெல் பற்றிய சில சமஸ்கிருத குறிப்புகளும் உள்ளன. சீனாவில் , விவசாயம், நெல் ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல் ஒன்றே (XXX) ஆகும்.
ஆப்பிரிக்காவில் நெல் சுமார் கி.மு 1500 முதல் பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு 1500 - 800 ஆம் ஆண்டுகளில், நைகர் நதித்துவாரத்தில் பயிரிடப்பட்டு, பின் செனெகல் நாடு வரை பரவியது. எனினும், இதன் சாகுபடி மேற்கொண்டு பரவவில்லை. அரேபியர்களால் கி.பி 7 - 11 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய நெல் இனங்கள் பயிரிடப்பட்டன.
ஜப்பானில் நெற்பயிர் சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால், ஜப்பானியர்கள் முன்னாளில் நீளமான தண்டுடைய, நீரில் வளரும் நெற்பயிர்களை படகில் சென்று அறுவடை செய்ததாக சில குறிப்புகளும் உள்ளன. உலர்நில (மானாவாரி) நெல் சாகுபடி கி.மு 1000 ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில், கி.மு 300 இல் தற்கால நீர்நில சாகுபடி முறை யாயோய் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது .
ஆசிய நெல் இனம் மத்திய கிழக்கு நாடுகளிலும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் சுமார் கி.மு 800 இல் பயிரிடத் துவங்கப்பட்டது. மவுரியர்கள் நெற்பயிரை ஸ்பெயின் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர். 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல் இத்தாலி பிரான்ஸ் நாடுகளுக்கும் பின்னர் எல்லா கண்டங்களுக்கும் பரவியது.
1694இல் அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், மடகாஸ்கரிலிருந்து நெல் அறிமுகமானது. புயலால் பாதிப்படைந்து 'சார்ல்ஸ்டன்' என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலின் தலைவர் ஒரு நெல் மூட்டையை அங்குள்ள விவசாயிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அவர்கள் அதனை பயிரிடத் தொடங்கினர். தென் அமெரிக்காவில் நெல் 18ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
முந்தைய அமெரிக்காவின் தென் கரோலினா, ஜார்ஜியா மாகாணங்கள்,மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகள் மூலம் நெல் பயிர் செய்து மிக அதிக இலாபம் ஈட்டினர். இவ்வடிமைகளுக்கு முன்னமே நெல் பயிர் பற்றிய அறிவு இருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர். நில முதலாளிகள் அடிமைகளிடமிருந்து பாத்தி கட்டுதல், நீர் தேக்குதல் போன்ற உத்திகளை தெரிந்து கொண்டனர்.
முதலில் அமெரிக்காவில், நெல் கையால் (மர உலக்கை கொண்டு) குத்தப்பட்டு, பின் கூடைகளில் புடைக்கப்பட்டு அரிசி பிரித்தெடுக்கப்பட்டது. இவ்வுத்திகளும் ஆப்பிரிக்க அடிமைகளே அறிமுகப்படுத்தினர். பின்னர் 1787 இல், நீரால் இயங்கும் அரிசி அரவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு நெல் சாகுபடி நல்ல இலாபம் ஈட்டியது. 20ஆம் நூற்றாண்டில், அமெரிக்க உள்னாட்டு போருக்குப் பின் அடிமைகள் இல்லாமையால் நெல் சாகுபடி குறைந்து விட்டது.
அன்பான பெற்றோர்களே

வாழ்த்துக்கள்!

உங்கள் குழந்தை அவரது/அவள் அரசின் பொதுத் தேர்வுக்குச் செல்லப் போகின்றார்.

9வது / 10வது / 12வது வரை உங்கள் குழந்தை தனது / அவள் பயணத்தில் அழகாகச் சிறந்து விளங்குவார் என்பது ஒரு பெருமையான தருணம்.

ஆனால் அன்புள்ள பெற்றோர்களே, இப்போது தான் அவர்கள் தங்கள் தேர்வுகளைத் தொடங்க ஆயத்தப் பணியில் ஈடுபடப் போகின்றார்கள். அடுத்த 20 நாட்கள் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

மனநிலை மாற்றங்கள், சோகம், உற்சாகம், நிதானமான நடத்தை, முரட்டுத்தனம் போன்றவற்றைக் குழந்தைகளிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

தேர்வுகளுக்கு வரும்போது, ​​தேவையற்ற மன அழுத்தங்கள் நமது கல்வி முறையால் கட்டமைக்கப்பட்டிருப்பதால் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.




நாம் நம் குழந்தைகளுக்கு ஆதரவளிப்போம். ..
நீங்கள் அதை எப்படிச் செய்ய முடியும்?

உங்கள் பிள்ளை மன அழுத்தத்தைச் சமாளிக்க உதவும் சில எளிய உதவிக்குறிப்புகள் உங்கள் முடிவிலிருந்து செயல்படுத்தப்படலாம்.

1 .. தயவுசெய்து ஒரு குழந்தை தனது பெற்றோரிடமிருந்து எதிர்பார்க்கும் ஒரு நேர்மறையான ஒரு தொடுதல் / கட்டிப்பிடிப்பால் காலையில் அவர்களை எழுப்புங்கள்.

2 .. உங்கள் குழந்தையின் நாளை ஒரு நேர்மறையான அறிக்கையுடன் தொடங்குங்கள் - நான் உன்னை நேசிக்கிறேன், வாருங்கள் இந்த அழகான நாளை ஒன்றாக ஆரம்பிக்கலாம்.

3 .அவர்கள் தங்களது தேர்வுகளுக்குப் புறப்படுவதற்கு முன்பு, உங்கள் குழந்தையுடன் நீங்கள் வைத்திருக்கும் தொடர்பு குறித்து கவனமாக இருங்கள். நீங்கள் சிறந்து விளங்குவீர்கள் என்று நான் நம்புகிறேன், உன்னுடைய சிறந்த உழைப்புக்கு உனக்கு எல்லா அதிர்ஷ்டத்தையும் தருமென்று நான் நம்புகிறேன், நான் காத்திருப்பேன் ....

4 .. உங்கள் கவலைகளை உங்கள் பிள்ளைக்கு அனுப்ப வேண்டாம். நிலைமை என்னவாக இருந்தாலும், கடைசி நேரத்தில் உங்கள் முடிவிலிருந்து நேர்மறையான ஆதரவு உங்கள் குழந்தையின் நம்பிக்கையை அதிகரிக்கும்

5 .. குழந்தை திரும்பி வரும்போது, ​​தயவுசெய்து பரீட்சை எப்படி இருந்தது என்று மட்டும் கேட்பதைத் தவிர்க்கவும், அதற்குப் பதிலாகக் கேளுங்கள் ....

அனுபவம் எப்படி இருந்தது ..

நாள் முழுவதும் பிரிப்போம், சிறிது நேரம் வெளியே செல்வோம் / ஒன்றாக ஒரு கப் காபி சாப்பிடுவோம்

எழுதிய தேர்வுகள் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கவும்.

போய்விட்டது ... உங்களால் அதை மாற்ற முடியாது,

6 .. தயவுசெய்து குழந்தையின் பரீட்சைகளின் போது வீட்டிலுள்ள குழந்தைக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான சூழல் வழங்கப்படுவதை உறுதிசெய்க.

குடும்பத்திற்குள் தேவையற்ற வாதங்களைத் தவிர்க்கவும், வேறுபாடுகள் பின்னர் தீர்க்கப்படலாம்;

மறந்துவிடாதீர்கள்- அது உங்கள் குழந்தையைப் பாதிக்கும், அது அவருடைய மன அழுத்தத்தை அதிகரிக்கும்

7 .. குழந்தை தனது காலை உணவைச் சாப்பிடும்போது அல்லது உங்களுடன் ஓய்வெடுக்கும்போது மென்மையான வாத்திய இசையை ஒலிக்கவிடுங்கள்.

8 .. குழந்தைக்கு மதிப்பெண்களைக் கொடுப்பதைத் தவிர்க்கவும்.அவரது இலக்குகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர் விவேகமானவர் என்பதனை நீங்கள் முதலில் நம்புங்கள்.

9 .. வீட்டில் புதிய பூக்களை வைத்துக் கொள்ளுங்கள், அது வீட்டில் நிறைய நேர்மறைகளைக் கொண்டுவரும்.

10..எந்தக் காரணங்களுக்காகவும் குழந்தைகளைத் தொடர்ந்து தொந்தரவு செய்வதைத் தவிர்க்கவும்

11..ஒரு நேர்மறையான எண்ணத்துடன் உங்கள் குழந்தையைத் தூங்கச் செய்யுங்கள்.. உங்களின் அன்பான ஒத்துழைப்பு அவருக்கு சில மணிநேரங்களுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கும், இது குழந்தைகளுக்கு அன்றாட அழுத்தங்களை அது சார்ந்த சூழலை எதிர்த்துப் போராட உதவும்

12 ...தொடர்ந்து ஆலோசனை கொடுப்பதை ஐ தவிர்க்கவும், குழந்தைக்கு அவரது இடத்தை கொடுங்கள் அவருக்கான இடத்தை அவர் அடைந்தே தீருவார் என்று நம்பிக்கை வைக்கவும்.

13..உங்கள் அல்லது அவரது எதிர்பார்ப்புகளின்படி பரீட்சை போகாவிட்டாலும், வெல்ல முடியாமல் போனாலும் அவர்கள் உங்கள் குழந்தைகள் என்பதனை கவனத்தில் வைத்திருக்கவும். .

14.. மிக முக்கியமானது:

இன்று முதல், குழந்தை உறவினர்களையோ நண்பர்களையோ சந்திக்க விடாதீர்கள், கடைசி நேரத்தில் எதிர்மறை அறிக்கைகள் அல்லது எதிர்பார்ப்புகள் குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும்.

உங்கள் பிள்ளைக்கு நிறையத் தேவை அன்பு மற்றும் பொறுமை

ஆம் - நீங்கள் தயவுசெய்து அமைதியாக இருங்கள், பொறுமையாக இருங்கள், உங்களுக்கும் எல்லா அதிர்ஷ்டங்களும் உங்கள் குழந்தைகள் மூலம் வரும்..

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

உடுமலை பகுதியில் ஆடு வளர்ப்பு ...
இந்த கிழ்கண்ட இனங்களே நமது தமிழக கால/பருவ சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த இனங்கள் மேய்ச்சல் மற்றும் கொட்டில் முறை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது. நமது பகுதிக்கு தகுந்த கிழ்கண்ட இனங்களையே வளர்த்து பயன் அடைவோம்.
மோளை ஆடு அல்லது மேகரை ஆடு:
மிகக்கடுமையான பஞ்சம் தாங்கும் ரகம்
இது தமிழகத்தின் மேற்குப்ப்பகுதிகளான ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி, கரூர், திண்டுக்கல்,நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது. ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம்,பவானி,அந்தியூர் பகுதியில இந்த வகை ஆடுகள் அதிகளவு காணப்படுகிறது .
மிகக்கடுமையான பஞ்சம் தாங்கும் ரகம். நோய் எதிர்ப்பு சக்தியில் முதல்தரம். கிடாய்க்கு மட்டும் கொம்புகள் இருக்கும்.நடுத்தர உயரத்துல, நல்ல சதைப் பிடிப்போட, சுத்தமான வெள்ளை நிறத்துல இந்த ஆடுகள் இருக்கும்.உடலின் நிறம் கடும் வெப்பத்தையும் தாங்கும். இறப்பு விகிதம் மிக மிக குறைவு.
வளர்ப்புக்கு மிகவும் எற்ற ஆடுகள்.
கறிக்கு மிகவும் ஏற்ற ரகம். இறைச்சி மிகுந்த சுவை உடையது. இதன் தோளுக்கு நல்ல கிராக்கி உள்ளது.
கன்னி ஆடு:
சிப்பாய் நடை போடும் கன்னி!
கன்னி ரக ஆடு… கரிசல் மண், குன்றுகள் அதிகமா இருக்கற பகுதிகள்ல இருக்கும். நல்லா உயரமா இருக்கும். கிடா ஆடு 50 கிலோவும், பெட்டை ஆடு 30 கிலோவும் எடை இருக்கும். ரெண்டுக்குமே கொம்பு இருக்கும். உடம்பு கருப்பு நிறத்துலயும், தலையில முன்பக்கமா ரெண்டு வெள்ளைக் கோடுகளும் இருக்கும். காதுகள்லயும் ரெண்டு வெள்ளைக் கோடுகள் நல்லா தெரியும். வயித்தோட அடிப்பகுதி, கால் குளம்பின் மேல்பகுதி வெள்ளையா இருக்கும். இந்த இன ஆடுகள் மந்தையா நடந்து போறப்ப, கால் அசைவுகளைப் பாத்தா… பட்டாளத்து சிப்பாய்ங்க வரிசையா போற மாதிரி இருக்கும். இந்த இனத்தை ‘பால் கன்னி’னு சொல்வாங்க. வெள்ளை நிறத்துக்குப் பதிலா… செந்நிறம் அதிகமா இருந்தா ‘செங்கன்னி’னு சொல்லுவாங்க. கன்னி ஆடுகள் ஒரு ஈத்துல ரெண்டு குட்டியிலிருந்து நாலு குட்டிகள் வரை ஈனும்.
காணப்படும் இடங்கள்:
விருதுநகர் (சாத்தூர், வெம்பக் கோட்டை, ராஜ பாளையம்), தூத்துக்குடி (புதூர், கயத்தார், கோவில்பட்டி), திருநெல்வேலி (குருவிகுளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர்) முதலிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது.
கன்னி ஆட்டின் சிறப்பியல்புகள்:
இவை கருமை நிறத்துடனும் முகத்திலும் காதுகளிலும் வெள்ளை அல்லது பழுப்புநிற கோடுகளுடனும், மேலும் அதன் அடிவயிறு, தொடைப்பகுதி, வால்பகுதி மற்றும் கால்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறமுடன் காணப்படும். கருப்பு நிறத்தில் வெள்ளைநிற கோடுகள் காணப்பட்டால் அவை “பால்கன்னி’ என்றும் பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால் “செங்கன்னி’ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவற்றின் காது மற்றும் நெற்றியில் கோடுகள் காணப்படுவதால் இதனை வரி ஆடுகள் என்று அழைக்கிறார்கள்.
குட்டிகளை நன்றாக பேணி பாதுகாக்கும் பண்புடையவை. உயரமாகவும், திடகாத்திரமாகவும், ஒரே நிறமுடன் இருப்பதும் கூட்டமாக நடக்கும்பொழுது ஒரு “ராணுவ அணிவகுப்பு’ போல கண்ணை கவரும் இந்த கன்னி ஆடுகள். இது இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு ஆகும். கிடா மற்றும் பெட்டை ஆடுகளுக்கு கொம்புகள் உண்டு.

பிறந்த கிடா குட்டிகள் 2.1 கிலோவும், பெட்டை குட்டிகள் 2.05 கிலோ உடல் எடையுடன் இருக்கும். ஒரு வருட வயதில் கிடாக்கள் 21.70 கிலோவும், பெட்டை ஆடுகள் 20.90 கிலோ எடையுடன் இருக்கும். மேலும் ஒரு வருட வயதில் கிடாக்கள் 76 செ.மீ. உயரமும், பெட்டை ஆடுகள் 72 செ.மீ. உயரத்துடனும் காணப்படும்.
கொடி ஆடுகள்:
கடலோரத்துக்கு ஏத்த கொடி!
இதை ‘போரை ஆடு’னும் சொல்வாங்க. இந்த வகை போரை ஆடுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன.மற்றபடி, தாஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஓர் சில இடங்களில் இவை காணப்படுகின்றன. கடலோர மாவட்டங்களுக்கு ஏத்த இனம்!
நல்ல உயரம், நீண்ட கழுத்து, உயரமான கால், ஒல்லியான உடம்பு இதுதான் கொடி ஆட்டோட அடையாளம். கொடி ஆட்டுக்குக் காலும், கொம்பும் நல்ல நீளமா இருக்கும். 15 மாச வயசுல மூணடி உயரத்துக்கு வளர்ந்து, பார்க்கவே கம்பீரமா இருக்கும்.
இந்த ஆடுகள் ரெண்டு நிறத்துல இருக்கும். வெள்ளை நிறத்துல கருப்பு மையை அள்ளி தெளிச்சது போல இருக்குற ஆடுகளை, ‘கரும்போரை’ அல்லது ‘புல்லைபோரை’னும்… வெள்ளை நிறத்துல செந்நிறம் கலந்து இருந்தா ‘செம்போரை’னும் சொல்வாங்க. 100 செ.மீ உயரம் வரை இருக்கும். எடையைப் பொறுத்தவரைக்கும் கொடி ஆட்டுல ஏழு மாசத்துலயே ஒரு பெட்டை ஆடு பதினஞ்சு கிலோ எடை வரைக்கும் வந்துடும். கிடா, இருபது கிலோ எடைக்கு வந்துடும். கிடா 47 கிலோவிலிருந்து 70 கிலோ வரையும் இருக்கும். பெட்டை 32 கிலோ வரை இருக்கும்.

பிறந்த கிடா குட்டிகள் : 1.5-2.1 கிலோ எடை,பெட்டை குட்டிகள் : 1.5-2.05 கிலோ எடை
சேலம் கருப்பு அல்லது கீகரை ஆடு அல்லது கருப்பாடு:
இது காவெரிக்குக் கீழ்ப்பாகுதிகளான சேலம், ஓமலூர், மேச்சேரி,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தொட்டியம் பகுதிகளில் காணப்படுகிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.
பஞ்சம் தாங்குதல் மற்றும் நொய் எதிர்ப்பில் முதல் தரம். பலிபூசைகளுக்கு விரும்பி வாங்கப்படும் இனம்.அட்டப்பாடி பகுதியில் குறும்பர், இருளர் வளர்க்கும் ஆடுகள் இவ்வினத்தோடு தொடர்புடையவை.
நல்ல குட்டிகள் ஈனும் திறன் உடையவை.
பள்ளை ஆடு!
இந்த ஆடுகள், குட்டையா இருக்கும். ‘குள்ள ஆடு’, ‘சீனி ஆடு’னும் சொல்வாங்க. சின்னக்கொம்பும், மூழிக்காதும் இதோட அடையாளம். குட்டிகள் பிறக்கும்போது கால் குட்டையாவும் உடம்பு அகலமாவும் இருக்கும். இந்த இனம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பரவலா இருக்கு. இந்த ஆடுகளும் ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து, நாலு குட்டி வரை போடும். இவை பலவகையான நிறத்துடன் காண்டுல இருக்கும்....

உடுமலையில் ஒரு பழம் பெரும்  நாடகக் கலைஞர் ...

நலிந்து வரும் கலைகளைக்காப்பாற்றி வரும் நாடகக்கலைஞர், எழுத்தாளர், கருத்தாளர், படைப்பாளர் எனப் பன்முகத்தன்மையோடு உடுமலை காந்தி சவுக் பகுதியில்  வசித்து வருகிறார் நாடக இயக்குநர், நடிகர் எம்.கே.முத்து.இவருக்கு வயது 83 சுமார் 20 க்கும் மேற்பட்ட சமூக நாடகங்களை இவரே எழுதியுள்ளார். 

இவரது எழுத்தில் வீரப்பெண், நண்பனைப்பார், தீக்கண்ணன், பூதம் காத்த புதையல், நீயின்றி நானேது, அன்பே அமுதா, அமர ஓவியம், ஆசையும் அழிவும், போன்ற நாடகங்களும் 1969 ல்  அமைச்சர் சாதிக்பாட்சாவின் எதிர்பாராத முடிவு எனும் நாடகத்திற்கு அணிந்துரையும் வழங்கியுள்ளார்.


1970 ல் அரங்கேற்றப்பட்ட தங்கதுரை எனும் நாடகத்திற்கு தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அணிந்துரை வழங்கியுள்ளார். உடுமலையில் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி நாடகக் கலாமன்றத்தில்  நூற்றுக்கணக்கான நாடகங்கள் நடந்துள்ளது.  1949 முதல் 1953 வரை கிருஷ்ணா டாக்கீஸில் ஜோதி நாடக சபா முகாமிட்டது.  


நாடகக் கலைஞர்களுக்கு ஒப்பனை செய்ய வந்தவர்தான் இந்த எம்.கே. முத்து. அப்பொழுது ஒப்பனை செய்தால்  உடனே காசு தரமாட்டார்கள். அந்தக்காட்சியில் நடித்து வரும் காசிலேயே இவருக்கு ஊதியம் தருவார்கள். அவ்வாறு ஊதியம் வாங்குவதற்காக  காத்துக்கொண்டிருக்கும் போது நாடகத்தைப் பார்க்க ஆரம்பித்தவர். பிற்பாடு இந்த நாடகக் கலை ஏற்படுத்திய தாக்கம் அவரை நாடகக்கலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இன்றளவும் நாடகத்துறையில் தீராத ஈடுபாடு கொண்டு  இயங்கிவருகிறார். 


இவரது முதல் நாடகம் நண்பனைப்பார் ப்ரோவோ திரையரங்கில்  அரங்கேற்றம் செய்துள்ளார்.
இவரது தொலைபேசி எண் : 9976054967

திங்கள், 17 பிப்ரவரி, 2020

கோவை மலரும் நினைவுகள் ...


வாழ்க்கையில் உட்படுத்திக்கொள்ளாத ஒரு விசயம் ‘வாக்கிங்’...
ஆனால் தினமும் ஒரு மகா கலைஞனோடு நடந்தால்.... இயக்குநர் ராம் பானியில் சொன்னால் அவன் பாக்கியசாலி....அந்த பாக்கியசாலி நான் தான்.... அந்த மபெரும் கலைஞன் இயக்குநர் பாலுமகேந்திரா... ஒரு மாதகாலம்.. சட்டக்கல்லூரி பயிலும் போது அவருடன் வாழும் வாய்ப்பை பெற்றேன்... அவரை ஹேண்டில் வித் கேர் என ஸ்டிக்கர் ஒட்டாத குறையாக கோவைக்கு அனுப்பி வைத்தார் இயக்குநர் பாலா... எங்கள் நண்பர்களிடையேயே அவர் வந்தது ரகசியம் காக்கப்பட .... எங்கள் கேப்டன் பாமரனுக்கும் அவசர வெளியூர் வேலை வர... அவரும் பத்திரமா பாத்துக்கங்க பாலுமகேந்திராவை என சொல்லிச் செல்ல.... அந்த ஆனந்த உச்சத்தில் ஒரு மாதம் வாழ்ந்தேன்.... வாழ்க்கை... இளமை... தனிமை...காதல்... சினிமா... முதுமை... என தினசரி அவரளித்த பாடம் வாழ்வில் என்றென்றும் பயணமிக்கும்...சக தோழனாக பேசாத விசயமில்லை.... மாலையில் செல்போன் ஒலிக்கும்... எடுத்தால்... சிவா... வந்துட்டு இருக்கீங்களா.. சார் 5நிமிடம்.... போனில் அவரின் அந்த குரல் கம்பீரமாக இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது... கோவை இராமநாதபுரத்தில் தொடங்கி அரசு மருத்துவமணை வரை.... அந்த மாலை பொழுதுகளை மறக்க முடியுமா... சார தொப்பிய கலட்டி பார்திருக்கியா... இது தான் இண்டஸ்ட்ரி டாக் காக இருக்கும்... நாங்க.. ஒரு மாதம் அப்படித்தான் வாழ்ந்தோம் என்ற கர்வத்துடன் வாழ்ந்து வருகிறோம்.... எல்லா நாளும் அவரை நினக்கும் நாளே….

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020






இலந்தை முள் கோட்டை ... 

சுமார் 100 அடி சுற்றளவு 25 அடி உயரம், 10 அடி அகலம் வட்ட வடிவமான கோயிலில் இலந்தை முள் கொண்டு கோட்டை

ஆதியில் ஜெகன் மாதா ஜெயதுர்கா என்றழைக்கப்பட்ட அன்னையின் அம்சமாக கருதப்டும் ஆதிசக்க தேவியின் திருக்கோவில் அமைந்த இடங்களில் அந்நியர் நடமாட்டங்களை குறைக்கவும் சில நேரங்களில் மனித நடமாட்டமே இல்லாமல் அவ்விடங்களின் புனிதங்கள் களங்கப்படமால் இவ்வித இலந்தை முள் கூடாரங்கள் அமைக்கப்படுகிறது ... 

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற இடங்களில் வாழும் கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் தங்களின் ஆதிகுலதெய்வமாக வழிபடும் சக்கதேவியின்  ஆலயங்களை சுற்றி இவ்வகையிலான முள்கோட்டைகளை அமைத்து வழிபடுகின்றனர் 

குறிப்பிட்ட நாள் இடை வெளியில் மீண்டும் புணரமைக்கப்படும் இத்தகைய முள்கோட்டைகளில் தவறாது வீட்டிற்கு ஓர் ஆண்மகன் கலந்துகொள்ளவேண்டும் என்ற சட்டதிட்டங்களையும் சில சம்பிரதாய நடைமுறைகளையும் பின்பற்றுகின்றனர் 

ஜக்கதேவியின் அவதாரமான வீரசின்னம்மாள் அம்மனுக்கு உருவ வழிபாடு கிடையாது. கோயிலின் மத்தியில் மண்பானையில் நிறைகுடம் தண்ணீர் வைத்து சித்தாடை கட்டி, காதோலை கறுகுமணி பாசி அணிவித்து அம்மனாக அலங்கரித்து தீபம் ஏற்றி பூஜைகள் நடக்கும். பூசாரி பிச்சைவேல் பூஜைகளை நடத்துவார்.

முதலில் ஊர் பொதுப்பொங்கல் வைக்கப்படும். அதையடுத்து வீடுதோறும் ஒரு பொங்கல் வீதம் வைத்து வழிபடுவார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் குழந்தை வரம் நேர்த்திகை கடனாக கரும்பு தொட்டில் கட்டி அம்மனுக்கு நேர்ச்சை செலுத்தி வழிபடுவார்கள்.

 தேவதந்துமி ஆகிய மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தெய்வீக கலையான தேவராட்டம் ஆடிக்கொண்டே ஊர் மந்தையிலிருந்து புறப்பட்டு திருவீதி உலா வந்து கோயிலை வந்தடைவர்.

கம்பளவிருட்சம் அறக்கட்டளை 
வரலாற்று தகவல் பிரிவு 
உடுமலைப்பேட்டை ...

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

எங்கேயோ பார்த்த மயக்கம்.. கேட்கக் கேட்க சலிக்காத ஒரு பாட்டு. யுவன் இசையமைத்ததில் ஆகச்சிறந்த பத்து பாடல்களில் அதிலும் டாப் 3ல் இதுதான் முதன்மையாக வரும்.
யுவன், நா முத்துக்குமார், உதித் நாராயண் ஆகிய மூன்று முரட்டு ஆண்களால் உருவாக்கப்பட்ட சாகாவரம் பெற்ற காலத்திற்கும் நிற்கக்கூடிய காதல் படைப்பு இது. யுவன் சோறு போட, முத்துக்குமார் குழம்பூற்ற உதித் நெய் கலந்து நமக்குக் கொடுத்த பம்பாட் சாப்பாடு. தட்டு வைத்த செல்வராகவனையும் மறக்கமாட்டேன் கவலைவேண்டாம்.
இசையமைத்தது மட்டுமல்ல, யுவன் இதை உதித் நாராயணைக் கூப்பிட்டு பாடவைத்ததுதான் இதன் சிறப்பம்சம். அவரது குரல் இதே வேறு தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது.
இதைக் கேட்கும்போதெல்லாம் தமிழ் சரியாக அறியாத ஒரு சௌகார்பேட்டை சேட்டு ஒரு தமிழ்ப்பெண்ணிடம் காதல் வயப்பட்டு இன்னஸண்டாக கன்னாபின்னாவென்று பாடுவதாகத் தோன்றும். இதுவே இந்தப்பாடலின் முதன்மையான அழகியல்
மழையடித்து ஓய்ந்த ஒரு மாலைநேரத்தில் தனது காதலி சல்வார்கமீஸில் ஒரு தேர்போல தார்ச்சாலையில் இறங்கி நடக்கிறாள். காதலன் பார்த்த மறுகணம் நெஞ்சைப்பிடித்துச் சாய்கிறான். இடி விழுந்த வீட்டில் அவள் பூச்செடியாய் பூக்க ஆரம்பிக்கிறாள். இதற்குமேல் போனால் நான் உளற ஆரம்பித்துவிடுவேன்.
https://youtu.be/m55z41QWyyY
கடந்த ஒருவாரமாக  அருமையான சொந்தங்கள்  தொலைபேசியில்  அழைத்து ..பேசிக்கொண்டு இருக்கிறார்கள்  மிக்க மகிழ்ச்சி ..அதில் அதிகம் ஏன் யாரையாவது புதிய இளைய சொந்தங்களை அறிமுக படுத்தி கொண்டே இருப்பீர்கள் ..கடந்த 6 மாதமாக .இது நின்றுவிட்டதே ..யாரையும் பார்க்கவில்லையா என்று கேட்கிறார்கள் ...உங்களின் பதிவுகளில் கம்பள சமுதாய நிகழ்வுகள் குறைந்து கொண்டே வருகிறது ஏன் என்று கேட்கிறார்கள் ..முதல்மாதிரி ..நீங்கள் அறிமுக படுத்துங்கள் ..தெரிந்து கொள்கிறோம் என்கிறார்கள் ..உங்களின் பொது தளத்தில் அதிகம் கலந்து கொள்கிறீர்கள் பதிவுகள் அதிகம் வருகிறது ..ஏன் ..என்கிறார்கள் ...

எப்படி பதில் அளிப்பது என்று .எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது ..மறுபடியும் முயற்சிக்கிறேன் என்று பதில் அளித்து இருக்கிறேன் ..மீண்டும் சமுதாய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு முயற்சிக்கிறேன் என்று சொந்தங்களுக்கு பதில் அளித்து இருக்கிறேன் ..பார்ப்போம் ...
நன்றி என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

மிக அதிகமான வயது வித்தியாசம் உள்ள காதல், கணவன்- மனைவி உறவுகளில் புரிதல் மிக அதிகம் உண்டா? ஏன்? (உதாரணம் முப்பதுகளில் பெண் என்றால் 40-50 களில் ஆண்..)?

நான் பொதுவாக என்னைப் பற்றியோ, என்னைச் சுற்றி நடந்த சம்பவங்களைப் பற்றியோ எழுதுவது தான் வழக்கம்.

நான் கோவையில் வசித்த பொழுது நடந்த நிகழ்வு . இந்தக் கேள்விக்குப் பொருத்தமாக ஒரு சம்பவம் என் பக்கத்து வீட்டில்  நடந்தது…

அவர் ஒரு PhD ஹோல்டர். தவிர ஒரு ஸ்கூல் நடத்துகிறார். விவாகரத்தானவர். ஒரு முப்பத்தைந்துக்கு மேல் வயதிருக்கும். முதலிரண்டு வருடங்கள் தனியாக வசித்திருந்தார். யாரிடமும் பேச மாட்டார். ஃபிட்னஸ் ஃப்ரீக்.

அவரிடம் மாணவியாக ஒரு பெண் வந்தாள். நல்ல அழகி. ஒரு இருபத்திரண்டு/மூன்று வயதிருக்கும். முதல் வருடம் மாணவியாக மட்டும் இருந்தாள். ஓரிரு மணி நேரம் மட்டும் வருவாள் . புத்தகங்களுடன் போய்விடுவாள். இரண்டாம் வருடம் காதலியாக ஆனாள். நான்காம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். கிட்டத்தட்ட 10/12 வருட வயது விததியாசம். ஆனால் அவ்வளவு அன்யோன்யமாக இருப்பார்கள்.

எங்கள் கிச்சன் பக்கம் அவர்களின் வாசல். காலையும் மாலையும் தவிர்க்க முடியாமல் அங்கேதான் இருக்க வேண்டும் நாங்கள். பேசிச் சிரிப்பதும், அவரை வழியனுப்புவதும், சிணுங்குவதும் ஒரே ரொமான்ஸ் தான். சில சமயம் லிப்ட் வரையும் நடக்கும். (என் மனைவி தலையில் அடித்துக் கொள்வார் , உள்ளேயே கொஞ்சிட்டு வரப்படாதோ என) எனக்குச் சிரிப்பாக வரும்.

அவருடைய முகத்தில் அவ்வளவு சந்தோஷம் , பெருமிதம் தெரியும். நாங்கள் உள்ளே இருப்பது தெரிந்தால் இன்னும் சத்தமாகப் பேசிச் சிரிப்பார்கள். பார்க்க எனக்கு மனநிறைவாக இருக்கும்.

மனம் ஒத்துப் போய்விட்டால் வயது ஒரு கணக்கேயில்லை. சரியான துணை அமைந்து விட்டால் எல்லா வயதிலும் வாழ்க்கை சந்தோஷமாகவே அமையும்.

புதன், 5 பிப்ரவரி, 2020

கடவுள் உங்களுக்கு கொடுத்த வரமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

Sivakumar Kumar........

ஒன்றிரண்டல்ல… நிறையவே கொடுத்திருக்கிறார்…

ஊனமற்ற உடல்

குறைவற்ற கல்வி

மனம் புத்தி இரண்டிற்குமான சமநிலையை பேணும் திறன்

பல சமூகத்தவரோடு பல அலுவலக பணிகாரணமாக வாழ்ந்த/வாழும் சந்தர்ப்பங்கள்

எந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும் யாரோ ஒருவர் மூலமாகவேனும் கிடைக்கும் உதவி

எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்

ஞாபக மறதி (எதையும் மனதில் மறைக்கத் தேவையில்லை என்பதால்)

கண்ணை மூடி சில நிமிடங்களிலேயே வரும் தூக்கம்

நகைச்சுவை உணர்வு (ஒரு மணிநேரத்தில் குறைந்தது ஒரு காமெடி காட்சியாவது நினைவுக்கு வரும்)

கணணியைத் தவிர வேறெந்த விடயத்திற்கும் அடிமைப்படாத நிலை

சொல்லிக்கொண்டே போகலாம்…
இன்று ஒரு மாப்பிள்ளையிடம் ஒரு கேள்வி கேட்டேன் ..அளித்த பதில் ..

யாரும் செய்ய முன்வராத அதே நேரத்தில் சிறந்த சிறுதொழில்கள் எவை? அதற்கு முதலீடு எவ்வளவு?

பெட்டிக்கடை

உடனே பீடி,சிகரெட் தானா விப்பாங்க…அதுல என்ன லாபம் வரும் ன்னு நினைக்க வேண்டாம்…

2 லட்சம் முதலீடு,

4 பெட்டிக்கடை 4 முக்கியமான இடங்களில் வைக்க வேண்டும்

4 கடையும் பாக்க ஆள் வேண்டுமே…அதுக்கு தான் எப்படியும் உங்களுக்கு தெரிஞ்ச வயசான ஆளுங்க, சும்மா இருக்குற பெண்கள் அவங்களுக்கு அந்த கடைய பாத்துகிற பொறுப்பை கொடுங்க செய்வாங்க

Next புதுசா ஏதாவது பண்ணினாதான் ஜனங்க கடைய எட்டி பாப்பாங்க…so

மக்கள் மறந்து போன பலகாரங்களை உங்க கடைக்கு கொண்டு வாங்க…

உதாரணமாக

சுசியம்

குழா புட்டு

ராகி கேசரி

உங்களுக்கு தெரிஞ்ச இயற்கை உணவுகள்.

Ok இத செய்ய எனக்கு தெரியாதே…னு நினைக்கிறீங்க

No problem அதுக்கும் உங்க area ல இருக்குற பெண்களுக்கு இது செய்ய தெரியும் so அவங்க கிட்ட போய் எனக்கு 100 வடை சுட்டு தாங்க. .ஒரு சம்பளம் வாங்கிகொங்கன்னு சொல்றிங்க..

இப்படி புதுசா கொண்டு வாங்க…எனக்கு 4 கடை வச்சி மேய்க்க முடியாது ன்னு நினைச்சா

No problem

ஒரு கடைய open பண்ணி நீங்க உக்காந்து xerox, lamination, online service பண்ணி கொடுங்க ..


கண்டிப்பா pickup ஆகும்…இது முழுக்க முழுக்க எனது கருத்து இதை try பண்ணி பாக்கலாம் ன்னு ஒரு ஐடியா

திங்கள், 3 பிப்ரவரி, 2020

வங்கி,தனியார்வங்கி  பணிகளில் சந்திக்க கூடிய சவால்கள் என்னென்ன?

முதலில் இந்த வேலை கிடைப்பதே மிகப்பெரிய சவால். மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது இந்த பணிக்கு.


சரி வேலை கிடைத்த பிறகு இந்தப் பணியில் என்னென்ன சவால்கள் உள்ளது என்று வங்கிக் கிளைகளில் அடிக்கடி நடக்கும் சந்திப்பு (meeting) போல மிகச்சுருக்கமாக சொல்கிறேன். வங்கிப் பணியாளர்கள் போல பொறுமை இருப்பவர்கள் மட்டும் படிக்கவும்.


முதல் சவால்- புவியியல் என்றால் கிலோ என்ன விலை என்றும் மனிதவள மேலாண்மை எனக்கு ரெண்டு தட்டு(பிளேட்) கிடைக்குமா என்றும் கேட்பவர்கள் நமக்கு என்ன கிளை என்ற கடிதத்தை வழங்குவார்கள். அது நிச்சயமாக சென்னைக்கு மிக அருகில் கன்னியாகுமரியில் நிலம் என்று சொல்லப்படும் விளம்பரங்கள் போல இருக்கும். அதிலும் அதிகாரி நிலையில் சேரும் பெரும்பாலானோர் மொழி புரியாத மாநிலத்தில் சுகமான பணி செய்யும் வாய்ப்பினை பெறலாம்.


அடுத்த சவாலானது கிளைக்குள் நடக்கும் அரசியலை சமாளிப்பது. ஆளுக்கு ஒரு சங்கத்தில் உறுப்பினராக இருப்பார்கள் நம் கீழுள்ள குமாஸ்தாக்கள். நம் மேலாளர் நம்மை மிகச்சுலபமாக மானங்கெட திட்டிவிடுவார். நாமோ மேலாளரிடமும் திட்டு வாங்கி நம் கீழுள்ள குமாஸ்தாக்களின் இடியையும் தாங்கி மத்தளமாய் மேளம் இசைக்க வேண்டி வரும். நாக்கை அடக்கி மேலாளர் மனம் குளிர குமாஸ்தாக்கள் இருக்கை குளிர நாதஸ்வரம் அல்ல பீப்பீ வாசிக்க தெரிந்தால் சற்று பிழைக்கலாம்.


அடுத்த சவால் நம் நிறுவனத்தின் மூலாதாரமான வாடிக்கையாளர்கள். மகாத்மா காந்தி சொல்லியுள்ளது போல, வாடிக்கையாளர்கள் நம்மை நம்பி அல்ல நாம் தான் அவர்களை அண்டிப் பிழைக்க வேண்டும். இன்முகத்துடன் வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்தத் தெரிந்தால் இந்த சவாலை மிக எளிதாக கடந்து விடலாம்.


அடுத்த சவால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர இலக்கை அடைதல். நல்லவேளை நம் முன்னோர்கள் காலத்தை கம்மியாக பிரித்து வைத்துள்ளார்கள். இல்லையென்றால் இலக்கு இலக்கு என்று சொல்லி நம்மைப் பிரியோ பிரி என்று பிரித்து இருப்பார்கள் தலைமை அலுவலகத்துக்காரர்கள். இந்த சவாலை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள ஏதுமில்லை. எப்படியும் அடையமுடியாத இலக்காகத்தான் கொடுக்கப்பட்டிருக்கும்.


அடுத்த சவால் விடுமுறை தினத்தில் விடுமுறையில் இருப்பது. இது என்னடா புதுசா இருக்கு வேலை நாளில் விடுமுறை எடுப்பது தானே கஷ்டம் விடுமுறை தினத்தில் விடுமுறை தானே நமக்கு என்று நினைத்தால் உங்கள் கனவில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மண் ஒரு லோடு அள்ளிப் போட்டுக் கொள்ளவும். அது எப்படி இப்படி சொல்லலாம் இந்த வேலை எவ்வளவு உயர்வானது விலைமதிப்பில்லாதது தெரியுமா என்று என்னை கேட்க நினைப்பவர்கள் கோலார் தங்க வயலில் மண்ணை அள்ளி தலையில் போட்டுக் கொள்ளவும்.


இந்த பணியில் சேர்வதற்கு முன்பு வரை நானும் சாதாரண மக்களைப் போல நினைத்துக் கொண்டிருந்தேன் சாயங்காலம் 3.30 மணி ஆகிவிட்டால் கதவினை இழுத்துப் பூட்டி விடுவார்கள் நாமும் வீட்டிற்கு சென்று விடலாம் என்று. பணியில் சேர்ந்த பிறகு தான் தெரிந்தது. ஷட்டரை பூட்டி விடுவார்கள் ஆனால் பூட்டிய ஷட்டருக்குள் அமர்ந்து நம் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்க வேண்டும். அதிர்ஷ்டம் இருப்பின் நீங்கள் 8.30 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு சென்று விடலாம்.


இதுபோக திருமணமாகாதவராக இருப்பின் அடிக்கடி நடக்கும் இடம் மாறுதல், திருமணமானவராக இருப்பின் துரத்தி அடிக்கும் இடமாறுதல் என்று வாழ்க்கையின் தத்துவமான மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உண்மையை புரியவைக்க ஒரு சவால்.


அடுத்த சவால் வாராக்கடன்.. இல்லை இல்லை வரவே வராத கடன்.. கொடுத்தது யார் என்று தெரியாது.. அவர் இடமாறுதலாகிச் சென்றிருப்பார்.. வாங்கியவரும் யார் என்று தெரியாது. அவர் இடத்தையே மாற்றிச் சென்றிருப்பார். இவர்கள் இருவருக்கும் இடையில் இப்பொழுது நம் விழிபிதுங்கும். ஆயினும் ஆடை கசங்காத ஒயிட் காலர் ஜாப் என்று பெருமை பீற்றிக் கொள்ளத் தெரிய வேண்டும்.


சரி நான் பெருமை பீற்றிக் கொண்டது போதும் என்று நினைக்கிறேன். பாவம் கேள்வி கேட்டவர் என்ன நினைத்து கேட்டாரோ தெரியவில்லை. ஆனால் நான் எழுதிய பதிலை படித்தபின் அவர் தலைதெறிக்க தூத்துக்குடி சுரேஷ் அகாடமியை விட்டோ அல்லது ரேஸ் போன்ற பயிற்சி மையங்களை விட்டோ இந்நேரம் ஓட்டம் எடுத்திருப்பார்.


சரி நகைச்சுவை போதும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வேலை இல்லா திண்டாட்டமிக்க நம் நாட்டில் வங்கிப் பணியில் சேர்தல் என்பது ஒரு குடும்பத்தையே நிர்வகிக்க போதுமான அளவு ஊதியம் அளிக்கும் மற்றும் சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்து அளிக்கும் பணியாகும். இன்றைய சூழ்நிலையில் எந்தப் பணியில் இருப்பவரை கேட்டாலும் அந்தப் பணியின் நிறைகளை விட குறைகளேயே அதிகம் சொல்வர். ஆகையால் எந்த வேலையும் கடினமானது அல்ல. எல்லா வேலைகளிலும் ஒரு நிறை இருந்தால் ஒரு குறை இருக்கும். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா பிடிக்கலையா, தற்போதைய உங்களின் குடும்ப சூழ்நிலை என்ன என்பதை மட்டுமே பாருங்கள். அதன் பிறகு தானாகவே அந்த வேலை பிடித்துவிடும்.

பொறுமையாக படித்தமைக்கு நன்றி..

சனி, 1 பிப்ரவரி, 2020

காணாமல் போன சக்கரகிரி தாலுகா

 Added : பிப் 18, 2017 


'சக்கரகிரி தாலுகா' இந்த பெயர் உடுமலை பகுதியை சேர்ந்த பலருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை; ஆனால், முந்தைய ஆவணங்களில், நமது பகுதி, இப்பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. தாலுகா பெயர் மாற்றம் எவ்வாறு வந்தது; எப்போது வந்தது என்பது குறித்த வரலாற்றை தேடிய ஆய்வு தீவிரமடைந்துள்ளது.உடுமலை என்ற பெயருக்கு, பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன; உடும்புகள் நிறைந்த பகுதி, இரு மலைகளுக்கு ஊடே இருந்த பகுதி என பெயருக்கு விளக்கங்கள் வரிசை கட்டுகின்றன.தாலுகாவாக இருந்து, வருவாய் கோட்டமாக தரம் உயர்ந்துள்ள உடுமலை முன்பு சக்கரகிரி தாலுகா எனவே ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.கொங்கு மண்டலத்தில், நல்லுாருக்கா நாடு, சக்கரகிரி தாலுகா என உடுமலை பகுதி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. தளி, மைவாடி உட்பட பாளையங்களின் ஆய்வில், இந்த தாலுகா பெயர் தெரிய வந்தது.இந்த ஆட்சியாளர்கள், பல்வேறு கோவில்களுக்கு அளித்த தானத்தில், சக்கரகிரி எனவே, இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றில் இடம் பெற்ற பெயர்கள், காலப்போக்கில் மறைவது வழக்கம்.ஆனால், பெயரே காணாமல் போன விந்தை உடுமலைக்கு ஏற்பட்டது ஏன் என்பதற்கான தேடல் நீண்ட இடைவெளிக்கு பிறகு துவங்கியுள்ளது.உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், உடுமலை பகுதி வரலாற்றை கண்டறிந்து, தொகுத்து வெளியிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட, தளி பாளையக்காரர் எத்தலப்பன், வரலாறு குறித்த ஆய்வுகளில், பல்வேறு தகவல்கள், கண்டறியப்பட்டுள்ளன.துாது வந்த ஆங்கிலேயே வீரனை எத்தலப்பர் துாக்கிலிட்ட இடமும், அங்குள்ள கல்லறை கல்வெட்டுமே வரலாற்றின் துவக்கமாக அமைந்துள்ளது.மேலும், திருமூர்த்தி அணை கட்டப்படும் முன், தளி பாளையக்காரர்கள் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து வெளியேறும் தண்ணீரை தடுத்து, விவசாயத்துக்கு பயன்படுத்த தடுப்பணைகள் கட்டியுள்ளனர். இதற்கான பாறை கல்வெட்டும் கண்டறியப்பட்டுள்ளது.முதன்முதலாக, இப்பகுதியில், முதல் நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை தளியிலேயே துவக்கப்பட்டுள்ளன.கோவிலுக்கு தானம் அளிக்கப்பட்ட ஆவணங்களில், சக்கரகிரி தாலுகா என தெரிவிக்கப்பட்டுள்ளதே, இந்த வரலாற்று தேடலுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ள, வரலாற்று ஆய்வு நடுவத்தினர். இப்பகுதியின் முழு வரலாற்றையும் வெளிக்கொணர்வார்கள் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -நமது நிருபர்-தினமலர்