செவ்வாய், 24 டிசம்பர், 2019

குழந்தைகள் அம்மா அப்பாவை அன்பினால் பெயர் சொல்லி அழைக்கலாமா?

என் அம்மாவை நான் ஒருபோதும் பெயர் சொல்லி அழைத்தது கிடையாது.

அம்மா என்று அழைப்பது பெரும்பாலும் இல்லை.

நானும் அவ்வாறு முயற்சித்து பார்த்துள்ளேன், என்னால் அப்படி அழைக்க இயலவில்லை.

அதை பார்த்து, என்னுடைய மகனும் என்னை பெயரிட்டு அழைக்க வேண்டும் என்று பெரிதும் ஆசை கொண்டேன். ஆனாலும் என்னை சிவா என்றே அழைப்பான் ..மாமனார் ,மாமியார், அப்படியெல்லாம் சொல்லி தராதே, பெரியவர்களை மரியாதையாய் தான் பேச வேண்டும் என்றார்கள். ஆனால்  என்னை சிவா என்று  என அழைப்பதைக் கேட்டு பெயர் சொல்லி கூப்பிட பழகி விட்டான். ஏன் என்றால்  என் மனைவி ,என்னை சிறு வயதில் இருந்தே சிவா என்று அழைத்து பழகியாதலால் ..



நான் ஷியாம்  செல்லம் என்றால், சிவா  செல்லம் என்று என்னை  கொஞ்சுவான்.

ஷியாம் ..என் மனைவியை  அம்மா, மம்மி, மம்மா(ஜெர்மன்),மாம் என்று அழைப்பான். அப்போதெல்லாம் விட பெயர் சொல்லி அழைக்கும் போது மழலை மொழியின் கொஞ்சல் சற்றும் அதிகமாக ரசிக்கும் படியாக இருக்கும்.

எனவே அம்மா, அப்பா, உறவுகளை பெயரிட்டு அழைக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அடுத்தவரை அப்படி அழைக்காமல் நாம் தான் பழக்க வேண்டும். ஒருவேளை வேற்றாருக்குபெயரிட்டு அழைப்பது அவருக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம்.

திங்கள், 23 டிசம்பர், 2019

மாற்றத்தை விரும்பும் கணக்கம்பாளையம் ஊராட்சி வாக்காளர்களே,
அன்பு வணக்கம்.
ஊராட்சி மன்றத்தலைலவர் தேர்தலில் போட்டியிடும் நீங்கள் எனக்கு வாக்களித்தால் என்னால் இதைச்செய்ய முடியும், அதைச்செய்ய முடியும் என்று விளம்பரமில்லாமல் ஊராட்சி சட்ட வரைமுறைக்குட்பட்டு கீழ்க்காணும் பணிகளை கண்டிப்பாகச் செய்து முடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
1. கணக்கம்பாளையம் ஊராட்சி இதுவரையில் காணாத ஒரு புதிய வெளிப்படையான ஊராட்சி நிர்வாக அணுகுமுறை, குப்பைகளில்லாத சுத்தமான ஊராட்சியாகக்கொண்டு வருவேன்.
2. ஊராட்சிக்கு வரக்கூடிய அரசு மானியங்களை வெளிப்படையாகத்தெரிவித்து இந்திந்த செலவினத்திற்குஇவ்வளவு என்று ஒவ்வொரு மாதமும் கணக்கு வரவு செலவுகள் தெரிவிக்கப்படும்.
3. கணக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள குளறுபடியான குடிநீர் இணைப்புகளை ஒழுங்குபடுத்தி உடனடியாக ஊராட்சி பொதுமக்கள் அலுவலர்கள் கொண்ட ஒரு விசாரணைக்குழு.
4. ஒவ்வொரு வார்டுக்கும் முறையான பராமரிப்பு வசதி. குடிதண்ணீர் இணைப்புக்கு பணம் கொடுத்து இணைப்பு பெறாத வீடுகளுக்கு உடனடியாகக் குடிநீர் வசதி
5. ஊராட்சி நிர்வாகத்திற்குத் தனியாக ஒரு வாட்சாப் குழு உருவாக்கப்பட்டு குறைகளை அதில் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், எடுக்காத அலுவலர் அதிகாரிகளை ஊராட்சி அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாகத் தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
6. ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் தார்சாலை, கான்கீரிட் சாலை என பழுதடைந்த பராமரிப்பில்லாத சாலைகள் உடனடியாக கவனிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
7. 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக ஒழுங்குபடுத்தி சீராக்குதல். ஏதிர்வரும் டிசம்பர் 30 ஆம்நாள் நடைபெறும் உள்ளாட்சி மன்றத்தேர்தலில் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பn.துரைசாமி ஆகிய எனக்கு ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் மக்கள் பணியாளன் உடுமலை துரைசாமி ...
Whatsapp எண் ..94876 60523...

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

அப்பாவின் மலரும் நினைவுகள் ...சினிமா பாட்டு புஸ்தகம் .......

சின்ன வயது ஞாபகங்கள் என்று சொல்லும் போது சினிமா பாட்டு புத்தகம் மறக்க முடியாதது ஆகும். அப்போது புத்தகம் என்று சொல்ல மாட்டார்கள். புஸ்தகம் அல்லது பொஸ்தகம் என்றுதான் சொல்வார்கள். சினிமா பாட்டு புஸ்தகம் என்பது பழைய செய்தித்தாள் போன்ற ஒரு தாளில் ( சாணித் தாள் என்றே சொல்வார்கள் ) சினிமா பாடல்களை அச்சடித்து ஒரு அணா அல்லது இரண்டு அணா என்று விற்பார்கள். ஒரு சினிமாப் படம் வந்ததும் பாட்டு புத்தகமும் விற்பனைக்கு வந்துவிடும். அந்த புத்தகத்தின் அட்டைப் படம் பெரும்பாலும் அந்த படத்தின் அன்றைய போஸ்டரின் கறுப்பு வெள்ளை போட்டோ நகலாகத்தான் இருக்கும். உள்ளே அந்த படத்தின் நடிகர்கள், நடிகைகள், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று எல்லா விவரங்களையும் தந்து இருப்பார்கள். புத்தகத்தில் பாடலின் வரிகளை இஷ்டத்திற்கு வடிவம் கொடுத்து இருப்பார்கள்.  முக்கியமான அம்சம் படத்தின் கதைச் சுருக்கம் தந்து, கதாநாயகி என்ன ஆனாள்? கதநாயகன் கொலைகாரனைக் கண்டு பிடித்தானா? வில்லன் முடிவு என்ன? என்ற கேள்விகள் கேட்டு கடைசி வரியாக “ விடையை வெள்ளித் திரையில் காண்க” என்று முடித்து இருப்பார்கள். இது  மறக்க முடியாத வாசகம்.

பெரும்பாலும் இந்த சினிமா பாட்டு புஸ்தகங்களை சினிமா தியேட்டருக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளிலும், பள்ளிகளுக்கு அருகில் உள்ள தரைக் கடைகளிலும் விற்பனை செய்வார்கள். அந்தகாலத்து பத்திரிக்கைகளில் வரும் தொடர்கதைகளை பைண்டிங் செய்வது போல, பாட்டு புத்தக பிரியர்களும் சினிமா பாட்டு புஸ்தகங்களையும் பைண்டிங் செய்து வைத்து இருப்பார்கள்.✍🏼🌹

வியாழன், 19 டிசம்பர், 2019

சந்தேகமில்லாமல் உண்மையில் ஒரு மகிழ்ச்சியான நபராக இருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையைப் பற்றி சொல்ல முடியுமா?

சந்தேகமில்லாமல் நிச்சயமாக நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் காரணங்கள் பல

நான் என்னுடைய வருமானத்தை மீறி செலவு செய்தது இல்லை

கலைஞர் அவர்கள் கூறியது போல் என்னுடைய உயரம் எனக்கு தெரியும்

நண்பர்கள் ஆகட்டும் உறவினர்கள் ஆகட்டும் ஒரு எல்லை தாண்டி யாருடனும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது இல்லை

நான் நானாகத்தான் இருக்கிறேன்

வருடத்திற்கு இரண்டு லிருந்து ஐந்து முறை நண்பர்களுடன்  பல்வேறு  நகரங்களுக்கு சென்று வருகிறேன்.

என்னுடைய வங்கி கணக்கில் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்ததில்லை.


நான் இதுவரை யாரையும் ஏமாற்றியதில்லை. பொய் கூறியதில்லை. பத்து வருடம் கழித்து நடக்கப்போகும் நிகழ்ச்சிக்காக இன்றே நான் தயாராக விரும்பவில்லை. இதன் பொருள் எதிர்காலத்திற்காக நான் நிகழ்காலத்தை இழக்க விரும்பவில்லை.

அதற்காக நான் சேமிக்கவில்லை என்று நினைக்க வேண்டாம். என்னுடைய வருமானத்தில் 10% சேமிப்பிற்காக சென்று கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி நான் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துக் கொண்டிருக்கிறது.

ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே,சொந்தங்களே . வாழ்க்கை மிகவும் சுலபம் எளிது. எனக்கு என்னவோ நாம்தான் அதனை கஷ்டப்படுத்தி கொள்கிறோமோ என்று தோன்றுகிறது

புதன், 18 டிசம்பர், 2019

கார்ப்பரேட் உலகத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்கள் எவை?

ஒரு மாறுதலுக்கு நல்ல விஷயங்களை சொல்கிறேன்.

(1) வேலை செய்யாமல் ஓப்பி அடிப்பவரை கண்டுகொள்ளாமல் நம் வேலையை நாம் சிறப்பாக செய்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்

(2) செய்த வேலையையே பல நாட்கள் செய்து கொண்டு இருக்காமல் புதிதாக கற்றுக்கொண்டால் பிரகாசமான எதிர் காலம் உண்டு

(3) உங்கள் அரிசியில் உங்கள் பெயர் உள்ளது என்பது போல உங்கள் ரேட்டிங்கில் உங்கள் பெயர் உள்ளது. அதை யாராலும் தடுக்க முடியாது

(4) நீங்கள் செய்யும் வேலையில் உங்கள் கஸ்டமர் எவ்வாறு பயன் அடைகிறார், இதை நம் வாழ்க்கைக்கு எவ்வாறு நாம் அப்ளை செய்து பார்க்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தால் 'வேற லெவலில்' இருக்கலாம்.

(5) ஆண் - பெண், முதியவர் - இளையவர், புதியவர் - பழையவர் என்ற பேதம் இல்லாமல் அனைவரையும் மரியாதையுடன் பெயர் சொல்லி அழைக்கலாம்.

(6) அருமையான வாடிக்கையாளர்களை சந்திக்க  நிறைய அதிர்ஷ்டமும் ஒரு அளவுக்கு பேசும் திறமையும் இருந்தால் போதும்.

(7) தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள செல்ஃப் எவலுவேஷன் என்ற அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. இதை வெறும் பேருக்கு செய்யாமல் சீரியஸ் ஆக செய்து பார்த்தல் நல்ல பலனைக் கொடுக்கும்

(8) எப்போதுமே ஒரு தாகத்தோடு எதையாவது படித்துக்கொண்டே இருக்க இந்த புதிய டெக்னாலஜி டிமாண்ட் உதவுகிறது. இல்லையேல் காலம் முழுக்க ஒரே மாதிரி வேலை செய்து அலுத்து விடும்.
திருமண வயதில் இருப்பவர்களுக்கு கூறும் மிக சிறந்த அறிவுரைகள் என்ன?

மூவெட்டில் மணம் காணத் தயாராவது நல்லது, என நாலெட்டில் திருமணமானவன் சொல்கிறேன்.

இருமனம் இணைய நிறைய விட்டு கொடுக்க வேண்டும் …

உனக்கு மட்டும் தான் நிறையத் தெரியுமென அகம்பவமாய் இருக்கக் கூடாது.

உன் பலமும் துணையின் பலவீனமும் சேர்ந்துதான் உங்கள் குடும்ப பலம். அதே போலத்தான் உன் பலவீனத்தை உன் துணையின் பலம் கொண்டு நிரப்ப முடியும் என ஆணித்தரமாய் நம்புக..

சண்டையிடத் தெரியுமுன் சமாதனமாய் போகப் பழக தெரியனும்…

மற்றவர் முன் துணையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது, கேலி செய்வது கூடாது…

அவரவர் பலத்தையும், பலவீனத்தையும் சுட்டிக் காட்டாமல், அப்பிடியே ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.

குறிப்பாக ego வை மியூட் பண்ண பழகுங்கள்; அதிலிருந்து சுத்தமா வெளியே வந்து பாருங்கள் வாழ்க்கை இனிமையாகும்.

அவரவர் space ஐ மதிக்க பழகுங்கள்; துணைவர்களின் உறவினர், நட்பு வட்டாரங்களில் இணைந்திருக்க. பழகுங்கள்.

துணைவர்களின் carrierல் முன்னேற்றம், இலட்சியங்களை அடைய ஊக்கப் படுத்த வேண்டும்; உறுதுணையாக இருக்க வேண்டும்.

தோல்விகளால் துவளாது இருக்க உடனிருந்து ஆறுதல் படுத்த வேண்டும்.

நிறைய செவி மடுக்க வேண்டும்.

நல்ல விஷயங்களைப் பாரட்டத் தெரிய வேண்டும்.

அடிக்கடி குடும்பத்துடன் கூடி மகிழ வேண்டும்…

இதெற்கெல்லாம் தயாராயிருந்தால் போதும்…வாழ்ந்து பாருங்கள்…வாழ்த்துக்கள் ..

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

பெயர் ..சிவக்குமார் -9944066681
பட்டய படிப்பு ...வியாபார மேலாண்மை (BBM )
வயது :46
குழந்தை :மகன் (ஒன்னு மட்டும் )
தொழில் : டிவிஎஸ் குழமத்தில் ..மேலாளர் (உடுமலை .பொள்ளாச்சி ..கோவை )
வசிப்பிடம் :உடுமலைப்பேட்டை
வகிக்கும் பொறுப்புகள் :கம்பள விருட்சம் அறக்கட்டளை -தலைவர் (மூன்று வருடங்கள் ),உடுமலை நூலக வாசகர்வட்ட துணை தலைவர் .
ஆர்வம் :பொது தளத்தில் சமூக செயல்பாடு ..கம்பள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ..

.படித்த சமுதாய தம்பிக்கும் ,மாப்பிளைகளுக்கும் ..நான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி பணி செய்து கொண்டு இருக்கிறார்கள் ..தொழில் தொடங்கவதற்கு பயனுள்ள வியாபார செய்திகளை கடந்து 10 வருடங்களாக பகிர்ந்து கொண்டு உள்ளேன்

ஐந்து வருடங்கள் களப்பணி செய்து ..தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..என்ற வரலாற்று நூலை ..தளி எத்தலப்பர் (தளி பாளையப்பட்டு நூலை வெளியிட்டு இருக்கிறோம் )


வியாழன், 12 டிசம்பர், 2019

2020இல் நீங்கள் ஏற்கவிருக்கும் தீர்மானங்கள் (Resolutions) என்னென்ன?

செய்யும் செயலை தொடர்ச்சியாக செய்வது. (consistency)

என் செயல் தொடர்பான பிறர் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைப்பது.


எனது அலுவுலக விற்பனை திறனை நிகழ்கால ..எதிர்கால ..திறன்களை மேம்படுத்துவது .. நிலைப்படுத்துவது.

சொந்தங்களுடன் பேச கூச்ச சுபாவத்தை குறைப்பது.

கம்பள விருட்சம் அறக்கட்டளையை  எதிர்கால சிறு ..சிறு திட்டங்கள்  கல்வி .பொருளாதார மூலம் மேம்படுத்துவது ..தனியார் துறை ,அரசு துறைகள் மூலம் நல திட்டங்கள் மூலம் நிறைவேற்றுவது .

ஆளுமை மிக்க நண்பர்கள் ,மூலமாக சொந்தங்களுடன் ..வருங்கால தலைமுறையினருக்கு பயனுள்ள செய்திகளை பகிர்வது ..

இவை அனைத்தும் எனக்குள் இருக்கும் தீர்மானங்கள் ....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681....

புதன், 11 டிசம்பர், 2019

கார்ப்பரேட் உலகத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்கள் எவை?

என் வாழ்க்கை அதிகமாக கார்ப்பரேட் உலகில் சஞ்சரித்து , பின்பு மறு வாழ்க்கையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நான் கற்ற பாடங்கள் பற்பல. இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து , சுயமாக சிந்தித்து , தங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும். இதை பள்ளிக்கூடத்தில் நீங்கள் படிக்க முடியாது.


நீங்கள் நன்றாக உழைத்தாலும், உயர்வு என்பது ஏணி மாதிரி. எற நினைப்பார்கள். பாதி தூரம் சென்றவுடன், கீழிருந்து யாராவது இழத்து விடுவார்கள்.இது தான் நண்டு வித்தை (Crab Technique). இதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்: நீங்கள் ஒரு பாத்திரத்தில் எத்தனை நண்டுகளை போட்டு, மூடாமல் தைரியமாக வைக்கலாம் . எந்த நண்டும் வெளியே போகாது. எந்த நண்டு மேலே ஏறினாலும், கீழே உள்ள நண்டு அதை பிடித்து இழுக்கும். இதை தான் நாம் கார்பரேட் உலகில் காண்பது.
நம் சுயமரியாதையை விற்று, மேலே உயரலாம். நீங்கள் சுயமரியாதை உள்ளவர்கள் என்றால் மிகவும் கடினம் தான்.

நேரம் காலம் பார்த்தால், நமக்கு, பாஸ் பார்வையில் கருணை கிடைக்காது. நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும்.

நிறைய காலங்கள் ஒரே கம்பெனியில் கழிக்கக் கூடாது. அப்படி உழைக்க , வேலை பார்க்க வேண்டும் என்றால் , மேலே சொன்ன பாய்ன்ட் எண் 2ஐ பார்க்கவும்.

நாம் நன்றாக உழைக்கும் போது, நிறைய சிங்கம், புலி, ஓநாய்களை சந்திக்க வேண்டும். இதில் மேலே சொன்ன பாய்ன்ட் எண் 1ஐ பார்க்கவும்.

நல்ல பாஸ் கிடைத்தால், நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நான் அப்படி ஒருவரை தேடிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் வேலைபார்க்கும் கம்பெனியில் நல்ல பாஸ் கிடைக்கா விட்டால், வேறொரு கம்பெனியை தேடுங்கள்.

உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இது தான் நீங்கள் முதலில் செய்ய வேண்டிய காரியம்.

உங்கள் திறன்களை நன்றாக வளர்த்து கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்வின் எல்லை வரை மிகவும் உதவும்.

அலுவலகத்தில் (gossip) என்கின்ற கிசுகிசுவை விட்டும் நீங்கள் விலகி இருங்கள். உங்களுடைய பாஸ் (boss) நிறைய ஒற்றர்களை நியமித்து இருப்பார். சில பேர் உங்களிடம் வந்து, பேச்சு கொடுத்து உங்களை உள் வாங்குவார். நீங்கள் யாரிடமும் உங்கள் சொந்த மற்றும் அலுவலக விஷயங்களில் நீங்கள் அனுபவிக்கின்ற எதிர்மறை (negative) மற்றும் பச்சாதாபங்களை என்றுமே பகிர்ந்து கொள்ளாதீர்கள். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று நமக்கு தெரியாது. கவனம் தேவை.



இது உங்களுக்கு நன்றாக உதவும் என்று நம்புகிறேன். 👍😍🌱✒📚📚📚

செவ்வாய், 10 டிசம்பர், 2019

எப்படி உங்கள் தொழில், குடும்பம் கடந்து இவ்வளவு எழுத முடிகின்றது?


வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒவ்வொரு ஆணுக்கும் தேவைப்படுகின்ற முக்கியமான விசயம் அளவுக்கு அதிகமான பொறுமை. நிதானம். சகிப்புத்தன்மை.  இது ஏன் பெண்களுக்குத் தேவையில்லையா? என்று கேட்கத் தோன்றும். உண்மை. அதில் சில சட்டச் சிக்கல் உள்ளது.

பெண்கள் என்பவர்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் என்று எந்தப் பாத்திரமாக உங்களுடன் இருந்தாலும், வாழ்ந்தாலும் அவர்களின் எண்ணங்கள், நோக்கங்கள் எதுவும் கடைசி வரைக்கும் உங்களுடன், உங்கள் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப் போய்விடும் என்று எண்ணம் இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.

திருமணம் ஆகும் வரையிலும் அவர்களின் எண்ணங்கள் வேறு. திருமணம் ஆனதும் அவர்கள் எண்ணங்கள் வேறு. குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் நோக்கம் மாறும். குழந்தைகள் வளரும் போது, வளர்ந்த பின்பு முற்றிலும் அவர்கள் வேறொரு ஜீவனாக மாறியிருப்பார்கள்.  உடல்வாகு முதல் உள்ள அமைப்பு வரைக்கும் எல்லாமே மாறி இருக்கும்.

நீங்கள் எத்தனை ஆராய்ச்சி செய்தாலும், எவ்வளவு நல்லவராக வாழ்ந்தாலும் அவர்கள் மாறவே மாட்டார்கள். அவர்கள் கடைசி வரைக்கும் அவர்களாகவே இருப்பார்கள்.  என் கணவன், என் குழந்தைகள் என்று அவர்கள் சொல்லலாம்.  ஆனால் அவர்களின் முழு உணர்வும் வெளியே வருவது அபூர்வம்.

மது, மாது இருந்தாலும் பரவாயில்லை. எனக்குத் தேவைப்பட்ட பணத்தை சம்பாரித்துக் கொண்டு வா? என் தேவைகளை நிறைவேற்று? என்று சொல்லும் காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கை வந்து நிற்கின்றது. தாய் என்ற வார்த்தைக்குள் இருந்த அனைத்தும் காலப் போக்கில் மாறிவிட்டது.

ஆனால்......

அளவான ஆசைகள், எதார்த்தம் புரிந்த மனைவி, இதயத் துடிப்பை எகிற வைக்காத ம மகன்  இருந்தால் உங்களின் தனிப்பட்ட திறமைகளுக்கு வாய்ப்பு உருவாகும்.

அப்படி எனக்கு இருப்பதால் எழுத முடிகின்றது.

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

வாழ்க்கையின் மிகச் சிறந்த அனுபவப் பாடமாக எதனைச் சொல்வீர்கள்?

வாழ்க்கையே ஒரு பாடம் தானேங்க .அதுலே படிக்க ஆயிரம் விஷயம் இருக்கு .நான் கற்று கொண்டவை ஏராளம் ,இன்னும் கற்றுகொண்டேயிருக்கிறேன் .ரெண்டு விஷயம் நான் முக்கியமா கற்று கொண்டவை .

மற்றவர் பற்றி அவரில்லாத நேரத்தில் தவறாகவோ ,ஏன் அவர் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை இன்னொருவரிடம் மறந்தேனும் பகிரக்கூடாது .நான் கொஞ்சம்உளறு வாயி .24 வருடங்களுக்கு முன் க ல்லூரியில்  படித்துக்கொண்டிருந்த போது விளையாட்டாக நண்பர்களிடம் எனக்கு மற்றொருவர் பற்றி கேள்விப்பட்ட விஷயங்களை பரிமாறிக்கொண்டேன் .ஆனால் அது கடைசியில் முழுப்பழியும் என்மேல் சாட்ட பட்டபோதே உணர்ந்தேன் ,வெளுப்பதெல்லாம் பாலல்ல என்று .அன்றிலிருந்து எனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களிடம் பரிமாறிக்கொள்வதை தவிர்த்தேன் .இன்னொருவர் பற்றி அவரிலில்லாத சமயத்தில் பேசுவது துரோகம் என்பதை கற்று கொண்டேன் .அதே நேரம் வேற யாரும் நம்ம பின்னாடி பேசுறாங்கன்னு தெரிஞ்சுச்சுனா ,நம்மள பத்தி பேசுறதால அவங்களுக்கு சந்தோசம் னா நமக்கு பெருமை தானேனு பல்ல காட்டிகிட்டே அந்த இடத்தை கடக்குறது தான் வாழ்க்கையின் அடிப்படை அனுபவம் .


எனக்கு எந்த ஒரு விஷயத்தையும் /நிகழ்வையும் எதிர்மறையாகவே எதிர்நோக்கும் கெட்ட பழக்கம் .எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்மறையாக சிந்திக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கே பாதிப்பு .சின்ன சின்ன விஷயங்களை நேர்மறையாக சிந்திக்க ஆரம்பித்து ,இப்பொழுது பெரிய விஷயங்களையும் நேர்மறையாக எதிர்நோக்கும் ஆற்றல் வந்துவிட்டது என்று நம்புகின்றேன் (இப்போ யாராவது கமெண்ட் பக்கத்திலே போய் செம்மையா கழுவி ஊத்துறப்பவும் அத சிரிச்சிட்டு அதுக்கும் ஒரு ஆதரவு வாக்கை அள்ளி போட்டுடீங்கனு வையுங்க அம்புட்டு தான் ,நீங்க ஒரு பெஸ்ட்  பெர்சன் னு மார்தட்டிக்கலாம் ).
கணவன் மனைவி பிரிவினைக்கு (எல்லா வயதிலும்) அடிப்படையில் எது காரணம்?

பல காரணங்கள். எதையுமே சகிக்க முடியாத நிலையில் பிரிவினை தான் வழி. கூடவே இருந்து தினமும் சண்டை போடுவதை விட, தனித்து இருத்தல் மேலானது. மன அமைதியை கொடுக்க கூடியது.

ஒரு விசயத்தில் கூட விட்டு கொடுக்காமல் இருப்பது. உ.ம். கணவரின்/மனைவியின் குடும்பம் பற்றிய கேவல சொற்தொடர்கள். இது வளர்ந்து, இரண்டு குடும்பங்கள் இடையில் பெரிய சண்டையில் முடிவது. இதில் ஒருவர் மிக பணம் வாய்ந்தவராக இருந்தால் உடனடி பிரிவினை தான்.

தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி மன அழுத்தம் ஏற்படுத்துவது. எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது. காட்டு கத்து கத்துவது. குடும்ப வன்முறை. அடிக்க ஆரம்பித்து விட்டால் அது நிற்காது. கண்டிப்பாக தொடரும்.

வேறு பெண்ணுடன்/ ஆணுடன் தொடர்பு. இது தான் மிக முக்கியமான காரணம். இது வெளியூர்களில்  நடந்தால் கொடுமையிலும் கொடுமை.

மிக கடுமையான குடிப்பழக்கம். சிலர் காலையிலேயே குடிக்கிறார்கள். இவர்களுடன் வாழ்க்கை எப்படி நடத்துவது? நாம் ஊறுகாய் ஆகிவிடுவோம்.

சைக்கோ போன்ற மனநிலை. ஆண்டி" இந்தியனாக இருப்பது. போலீஸ் வேலை செய்வது.

கடுமையான சந்தேக புத்தி. ஏற்கனவே இருந்த காதலை போஸ்ட் மர்டம் செய்வது.

இருவருக்கும் பொதுவான பொழுதுபோக்கு விருப்பம் ஒன்றில் கூட இல்லாதது. நேரத்தை சேர்ந்து செலவிட மறுப்பது. மரியாதை குறைவாக நடத்துவது.

குடும்பத்தில் இருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி வேறு ஒருவர் உள்ளே புகுவது.

எதிர்பார்த்த அளவிற்கு காதல் இல்லாதது. தாம்பத்திய வாழ்வில் ஒருவருக்கு மட்டும் விருப்பம் இல்லாதது. Physical need rejection by anyone.

இதை எல்லாம் மீறி, குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் சகித்து கொண்டு வாழும் ஆண்/பெண் இருவரையும் பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது. Marriage is not for all.....