ஞாயிறு, 8 டிசம்பர், 2019

உங்கள் அன்னையிடம் உங்களுக்குப் பிடித்த குணம் என்ன?

நானும் என் அம்மாவும்☝️☝️….

என் அன்னையிடம் எனக்கு மிகவும் பிடித்தது,

1.கடன் இல்லா வாழ்க்கை:என் அம்மாவிற்கு யாரிடமும் கடன் வாங்குவது சுத்தமாக பிடிக்காது, வேறு வழியின்றி வாங்கி இருந்தால் அதனை திருப்பி கொடுக்கும் வரை அவர்கள் மனம் அமைதி பெறாது.


அவர்களின் எல்லையற்ற அன்பு: நான் கொஞ்சம் சுயநலம் பிடித்தவன்(தற்பொழுது பொதுநலம் மட்டுமே ), குழம்பு பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் வைத்து விடுவேன், இட்லி,தோசையை கண்டால் கோபம் வந்து தொட மாட்டேன், டேய் ஒரு நாள் பொறுத்துகொடா என்பார்கள், நானோ முடியவே முடியாது என்பேன், கல் நெஞ்சகாரன் இறங்கிவரானானு பாரு என்று சொல்லிக்கொண்டு பெற்ற மகன் சாப்பிடாமல் படுத்தால் அவர்கள் சும்மா விடுவார்களா, எனக்குன்னு பிடித்ததை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்.

 அவர்கள் வளர்ப்பினில் நான் இது வரையிலும் அவர்களை போல நானும் மூன்று வருடங்கள் கடன் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என் மேல் நம்பிக்கை அதிகம் வைத்ததால் என்னவோ தெரியவில்லை எனக்கு புகை பிடிக்கும் பழக்கம்,பாக்கு போன்றவற்றை பழகாமல் இருந்து விட்டேன் அதற்கு காரணம் நான் இல்லை என் அம்மா இப்போது வரை என் மேல் வைத்த நம்பிக்கை மட்டுமே. எனக்கு அதனை உட்கொள்ளும் வாய்ப்பு நிறைய கிடைத்து இருந்தாலும் நான் அதில் சிக்கவில்லை.

என் அம்மா கொஞ்சம் இல்லை ரொம்ப சென்சிட்டிவ் டைப்…சின்ன விஷயத்துக்கு கூட  உள்ளுக்குள் புலம்பி கொண்டும் இருப்பார்கள், இப்போது நான் என் அம்மாவை விட்டு தனியாக கோவையில்,சென்னையில் இருந்தபொழுது . என்னை கேட்க ஆளு இல்லை,என்னை கண்காணிக்கவும் ஆளு இல்லை ,தீய பழக்கம், தீய வழியில் செல்லும் வாய்ப்பு நிறைய உண்டு எனக்கு ஆனாலும் அவ்வாறு எண்ணம் வரும் போது எல்லாம் ஏன் அம்மாவின் முகம் வந்து போகும்.அவ்ளோதான் அப்படியே அந்த காரியத்தை நினைக்கும் எண்ணம் கூட வராத அளவுக்கு அவர்கள் நம்பிக்கை மற்றும் பாசம் என்னை கட்டி போட்டு காத்து கொண்டு இருக்கிறது. அவர்களை கஷ்டபட வைக்க கூடாது என்பதற்காக நானும் விட்டுக்கொடுத்து விடுவேன்.

சுயநலமிக்க இந்த உலகில், சுயநலம் பார்க்காமல் ,தனக்கென்று எதுவும் செய்து கொள்ளாமல் தன் பிள்ளை,கணவன் என்று பிறருக்காக வாழும் தெய்வம் #அம்மா# மட்டுமே♥️♥️♥️.


என் பதில் வாசிக்கையில் என்னை பற்றி தற்பெருமை கூறுவது போல் இருக்கும், ஆனால் உண்மையில் நான் இப்படி இருக்க காரணம் என் அம்மா என் மீது வைத்த நம்பிக்கை என்று சொல்ல தான்.
 உடுமலைப்பேட்டை -கணியூர்  K .P .செந்தில்குமார் -K ஜெயந்தி  அவர்களின்
குடும்பவிழா ...08-12-2019...ஞாயிறு ....


இன்று நடைபெற்ற உடுமலைப்பேட்டை -கணியூர்  K .P .செந்தில்குமார் -K ஜெயந்தி  அவர்களின் குழந்தைச்செல்வம் S .J .சஞ்சிதா -பூப்புநன்னீராட்டு விழா -பாலப்பம்பட்டி செல்வ விக்னேஷ் திருமணமண்டபத்தில் நடை பெற்றது ..நீண்ட நாட்கள் சந்திக்க வேண்டிய போடி ..சொந்தம் கல்யாணசுந்தரம் அவர்களை சந்தித்தது, அதுவும் கரப்பாடி சொந்தங்களுடன் கார்த்திகேயன் மாப்பிள்ளையுடன் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..வாட்ஸ்ஆப் செய்திகள் அருமையாகவும் இருப்பதாக கல்யாணசுந்தரம் அவர்களுடன் மகிழ்ச்சியை என்னிடம் பரிமாறிக்கொண்டார் ..இவரின் அப்பா ..தாத்தா அவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள் என்று கூறியது மிக்க மகிழ்ச்சி .ஆச்சிரியம் கலந்த செய்திகள் பரிமாறிக்கொண்டோம் ..நன்றி ..My   Relative  வாட்ஸாப்ப் குழுவில் இருக்கும் நம் சொந்தம் மதுரை ராதாகிருஷ்ணன் தம்பியை சந்தித்து அருமையான நிகழ்வு..இன்றைய நிகழ்வில் புது சொந்தங்களை  பார்த்து அறிமுக படித்துக்கொண்டதும் செய்திகளை பரிமாறிக்கொண்டது மிக்க மகிழ்ச்சி ..தொடரும் புது சொந்தங்கள் நட்புகள் ..நன்றி

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681 

சனி, 7 டிசம்பர், 2019

🌷உடுமலைப்பேட்டை  திருமண வரவேற்பு விழா 🌷

......07-12-2019 -சனிக்கிழமை


இன்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு விழா அருமை தம்பி.🌱பொறியாளர் 🌳.   R .முரளிதரன் -BE -பொறியாளர்  T .உமாதேவி -B .Tech .,🌱🌳அருணா கல்யாணமண்டபம் -உடுமலைப்பேட்டை

 சொந்தங்கள் ,நண்பர்கள் வட்டம் கலந்துகொண்டு மகிழ்ச்சியை பரிமாறக்கொண்டதும் ,அருமையான விருதோம்பல் ..தம்பி டிஜிட்டல் ராஜேந்திரன் புகைப்படக்கலைஞரின் கைவண்ணத்தில் மூன்று மணிநேரம் போனது தெரியவில்லை ..வந்திருந்த புது நண்பர்கள் வட்டம் அருமையான தகவல் பரிமாற்றங்கள் அருமை ...மிக்க மகிழ்ச்சி ..


கம்பளவிருட்சம் அறக்கட்டளை  சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

❤📚✒என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681✒📚🌱
உடுமலைப்பேட்டை கம்பள பொறியாளர்களின் திருமண வரவேற்பு விழா
......07-12-2019 -சனிக்கிழமை


இன்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு விழா அருமை தம்பி.🌱பொறியாளர் 🌳.குஜ்ஜபொம்முகுலச்செல்வன்    R .முரளிதரன் -BE -பொறியாளர் மங்கராஜ் குலச்செல்வி  T .உமாதேவி -B .Tech .,🌱🌳அருணா கல்யாணமண்டபம் -உடுமலைப்பேட்டை
கம்பள சொந்தங்கள் ,நண்பர்கள் வட்டம் கலந்துகொண்டு மகிழ்ச்சியை பரிமாறக்கொண்டதும் ,அருமையான விருதோம்பல் ..தம்பி டிஜிட்டல் ராஜேந்திரன் புகைப்படக்கலைஞரின் கைவண்ணத்தில் மூன்று மணிநேரம் போனது தெரியவில்லை ..வந்திருந்த புது நண்பர்கள் வட்டம் அருமையான தகவல் பரிமாற்றங்கள் அருமை ...மிக்க மகிழ்ச்சி ..



கம்பளவிருட்சம் அறக்கட்டளை  சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

வெள்ளி, 6 டிசம்பர், 2019

முழு நேர வேலை செய்து கொண்டு போட்டி தேர்வுக்கு படிப்பது எவ்வாறு?

முழு நேர வேலை செய்து கொண்டு படிப்பது…இந்த கேள்வியை போட்டி தேர்வுக்கு தயாராகும் ஒருவர் (யாரு கேட்ப ..நம்ம மாப்பிள தான் இந்த மாதிரி கேள்வி கேட்பாரு    )என்னிடம் கேட்டதே.

இதற்கு முன் இந்திய விமான படை பற்றி ஒரு சில வரிகளை சமர்ப்பிக்கிறேன்.

விமான படையில் fighter squadron ல் பணி தொடங்கும் நேரம் காலை நான்கு மணி இது மதியம் 1மணி வரை தொடரும். பின் மாலையில் night flying 6.30 க்கு தொடங்கி இரவு 1மணி வரை தொடரும்.

அடுத்த நாள் மதியம் 1மணிக்கு திரும்பவும் பணி.இடைப்பட்ட நேரத்தில் படித்து ICWA,AIME,BANK PO,CIVIL SERVICE போன்ற கடினமான படிப்பு மற்றும் தேர்வு எழுதி தேர்வான நண்பர்கள் பலர் உள்ளனர். அதேபோல் வருவாய் துறையில் இருந்து கொண்டே I.A.S தேர்வானவர்களும் உண்டு.இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்

When going gets tough ,the tough gets going என்பார்கள்.

இவர்களிடம் கண்ட சில விடயங்களை கீழே தொகுத்து கூறுகிறேன்.

முதலில் நாம் எழுதப்போகும் தேர்வு பற்றி முழு விபரம், அதற்கு தேவையான சரியான புத்தகங்கள் மற்றும் நோட்ஸ் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ளுதல்.

இரண்டாவது ஒவ்வொருவருக்கும் சில நிறைகளும்,குறைகளும் உண்டு. நம்மிடமுள்ள குறையை குறைக்க என்ன வழி என யோசித்தல்.

எந்தனை மணி நேரம் படிக்கிறோம் என்பதைவிட படிக்கும் நேரத்தில் ஊன்றி படித்தல்.Smart study என கூறுவார்கள். இது நபருக்கு நபர் வேறுபடும்.நமக்கு நாமே ஒரு செயல் திட்டம் வைத்துக்கொள்ளுதல்.

தற்போது செய்யும் வேலை 8 மணி நேரம் என்றால் இதில் காலையில் 5 முதல் 8 வரை பின் பயணம் செய்யும் போது செய்தித்தாள் கட்டிங் போன்ற வற்றை படிக்கலாம்.மதிய வேலையில் ஒரு மணிநேரம், பின் இரவில் 2 மணி நேரம் என வேலை நாட்களில் படிக்கலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் என ஒரு வாரத்தில் 40 மணி நேரம் வரை படிக்க இயலும்.

வருவாய் துறையில் VAO போன்ற பணியில் உங்களுக்கு தனி அலுவலம் இருக்கும் எனவே வாரத்தில் 7 நாட்களும் படிக்கலாம். எனவே அரசுத்துறையில் வேலை அதிகம் இல்லாத பணி இடங்களில் கேட்டு செல்லுதல்.

உங்கள் குடும்பத்தில் பணப்பிரச்சனை அதிகம் இல்லையெனில் விடுப்பு எடுத்து படிப்பது.

எனக்கு தெரிந்த இரண்டு நண்பர்கள் தங்களின் Bank PO வேலையை விட்டு விட்டு (Resigned) படித்து ஐ.ஏ.எஸ் ஆனார்கள்.

கடைசியாக கூறுவது கிடைக்கும் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட்டு,focus உடன் |"அடைந்தால் மாகாதேவி இல்லையேல் மரணதேவி "என இருந்தால் வெற்றி நிச்சயம்.


வாழ்த்துக்களுடன் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
திருமண வரவேற்பு ......07-12-2019 -சனிக்கிழமை

அருமை தம்பி..குஜ்ஜபொம்முகுலச்செல்வன்    R .முரளிதரன் -BE -மங்கராஜ் குலச்செல்வி  T .உமாதேவி -B .Tech .,திருமண வாழ்த்துக்கள்

இடம் :அருணா கல்யாணமண்டபம் -தளிரோடு -உடுமலைப்பேட்டை
நேரம் : மாலை  6.00 மணிமுதல் 9.00 மணிவரை ...

கம்பளவிருட்சம் அறக்கட்டளை  சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

வியாழன், 5 டிசம்பர், 2019

திருமதி .மலையம்மாள் கந்தசாமி ....


இன்று காலையில் எரிசினம்பட்டி  ..திருமதி .மலையம்மாள் அவர்களின் இறப்பு நிகழ்வுக்கு சென்றிந்தபொழுது ...எனது மனதில் நிழலாடிய நினைவுகள் (30 வருடங்கள் முன்)  ..என் சிறு வயதில் பள்ளி தேர்வு முடிந்து ..மே மாத விடுமுறையில் என் அப்பாவுடன் .தம்பியுடன் இரண்டு நாள் இவர்கள் வீட்டில் தங்கி ..கந்தசாமி அண்ணாவுடன் ..தம்பிகள் செந்தில் ,சிவா .இவர்களுடன் விடிய விடிய ..பள்ளி கதைகள் பேசி ..காலையில் எதிரில் இருக்கும்  அரசு மருத்துவ மனையில் உலாவந்து ,மலையம்மா அக்கா அளிக்கும் விருந்தோம்பல் இன்றும்  என் மனதில் நிழலாடுகிறது ..கடைசியாக அக்கா அவர்களை பார்த்தது மூன்று  வருடங்களுக்கு முன்  ..என் ஷ்யாமுடன் சென்று பேசிவிட்டு வந்தோம் ..சிறு வயதில் அவர்கள் வீட்டில் விளையாடியது இன்னும் மனதில் பசுமை நினைவுகளாக மனதில் நிழலாடுகிறது ..

செவ்வாய், 3 டிசம்பர், 2019

இளம் பெண்களின் பார்வை ஏன் காந்தத்தை போல ஈர்ப்பு சக்தியால் எல்லோரையும் மயக்குகின்றன?

என்ன பாத்து எப்டிண்னே இந்த கேள்விய கேட்டிங்க.. என்று கேட்க தோன்றினாலும்..

கேட்டமைக்கு மிக்க நன்றி பெண்ணின் பார்வை மட்டுமா.. ஒரு பெண்ணே, ஆணின் மொத்த ஈர்ப்பு விசை தானே.. மனித இனம் தழைத்திருக்க இந்த விசையே ஒரே காரணம்.. ஆகையால்..

ஈர்ப்பின் உளவியல் பற்றிய கவர்ச்சிகரமான உண்மைகளை இங்கு கூற விழைகிறேன்..

ஆண்கள், பெண்கள் பால் ஈர்க்கப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.. அது நம் பரிணாம வளர்ச்சியின் மிக முக்கியமான காரணிகளிலும் ஒன்று.. அவை.. முடி, முடியின் நிறம், கண் கண்ணின் நிறம், உயரம், வாசனை… ஆம் வாசனை கூட

இப்போது ஈர்ப்பில் சில வியக்கத்தக்க விடயங்களை இங்கு காண்போம்..

வயதான தந்தையர் கொண்ட பெண்கள் பெரும்பாலும் வயதான ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள்

பெரும்பான்மையான பெண்கள் வயதான ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது ஒரு பொதுவான ஸ்டீரியோடைப் கருத்து, ஏனெனில் அவர்கள் என்றுமே “அப்பாக்களின் இளவரசிகள்” . இதில் புதிய விடயம் என்னவென்றால்.. வயதான தந்தையருக்குப் பிறந்த பெண்கள் வயதான ஆண்களை கவர்ச்சியாகக் காண அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. குறிப்பாக, அவர்கள் அதிக முக மடிப்பு மற்றும் குறைவான முடி கொண்ட ஆண்களை கவர்ச்சிகரமானவர்களாகக் கருதுவார்கள். அப்போது 90ஸ் குழந்தைகளுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.. ஹ்ம்ம் பாப்போம்.. இதன் அடிப்படையிலேயே, இளைய தந்தையருக்குப் பிறந்த பெண்கள் இளைய ஆண்களிடம் அதிகம் ஈர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.

வெவ்வேறு நறுமணங்கள் வெவ்வேறு அளவிலான ஈர்ப்பைத் தூண்டும்

ஈர்ப்பின் உளவியலில் வாசனை ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது என்பதை நாம் அறிவோம், ஆனால் எந்த வாசனை அதிக ஈர்ப்பாக கருதப்படுகிறது, எது இல்லை என்பதை காண்போம்.. ஒரு சமீப கால ஆய்வில், புதிய அறிமுகமில்லாத ஆண்களின் (காதலன், கணவன் ) வியர்வையில் காணப்படும் இயற்கையான ரசாயனமான ஆண்ட்ரோஸ்டெனோலில் பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ​​அதிக வியர்வை இருக்கும்போது உற்பத்தி செய்யப்படும் ஆண்ட்ரோஸ்டெனோனின் வாசனை இயற்கையான இனச்சேர்க்கைக்கான ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. இனி சென்ட் அடிப்பீங்க..

ஆண்கள், மறுபுறம், பெண்களின் ஒட்டுமொத்த வாசனைகளினால் ஈர்க்கப்படலாம்.. அதாவது.. வியர்வை, வாசனை திரவியம், பவுடர் ,சோப் மற்றும் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மனம் உள்ளதாகவே கண்டறியப்பட்டுள்ளது.. ச்சா.. அவசரப்பட்டு நம்ம நக்கீரரை சிவபெருமான் எரித்திரிக்க தேவையில்லை.. ஆனால் கண்ணீரின் வாசனையால் ஆண்களின் இனச்சேர்க்கை உணர்வு பெருமளவு குறைக்கப்பட்டு , இல்லாமலே போய் விடுவதாக கூறப்படுகிறது. தயவு செய்து அழாதீர்கள் பெண்களே..

எதிர் துருவ ஈர்ப்பு

எதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது ஒரு இயற்பியலின் இயல்பான தத்துவமே.. அதுவே உளவியலுக்கு வந்தால் இது தான் நிலைமை.. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்களும் பெண்களும் இயற்கையாகவே வேறுபட்ட மனித லுகோசைட் ஆன்டிஜென் (HLA complex) கொண்டவர்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, அடிப்படையில் தன் மரபணு வரைபடத்தை விட , வேறு மரபணு வரைபடம் கொண்ட ஒரு நபரை.. புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால்.. தங்கள் சொந்தத்தை விட, வேறு நபரை.. வேறு மதம், இனம், மொழி இப்படி.. ஒரு நபரின் எச்.எல்.ஏ வளாகம்(HLA complex) நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு முக்கியமானது என்பதால், இந்த இயல்பே நாம் ஆரோக்கியமான மரபணு விதைகளை உலகம் முழுவதும் விதைக்க வைத்த ஒரு அரும்பெரும் செயல்.. இன்றும் விலங்குகளிடம் இது காணப்படுகிறது.. சொந்ததுல கல்யாணம் பண்ணாதிங்கன்னா எவன் கேக்குரான்.. சரிப்பா.. இன்று நாம் மொழி இனம் மதம் என்று பிரிந்து அல்லது பிரித்து வாழ்கிறோம், முந்தைய காலத்தில் வாழ்ந்த கற்கால மக்கள் தம்முடைய தோழர்களை விட வேறுபட்ட மரபணு தோழர்கள் மரபணு வரைபடங்களைக் கொண்டுள்ளனர் என்பதை எவ்வாறு அறிந்தனர் என்று கேட்டால்.. ஆய்வின் படி, நம் உடம்பின் நறுமணத்தின் அடிப்படையில் மட்டுமே நம் மூளை செயல்பட்டது என்று சொல்லப்படுகிறது.

ஒரு பெண்ணின் ஈர்க்கும் குரல்

சமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு பெண்ணின் குரல் , அவள் இணையுடன் இருக்கும்போது இயல்பாகவே வசீகரிக்கும் தன்மை பெறுகிறது என்று கூறப்படுகிறது.. ஒரு பெண்ணின் குரல் வெவ்வேறு நேரங்களில் மாறுபடும் என்பதும் இணையை கண்டு பேசும்போது இன்னும் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, ஆய்வில் ஆண்கள் இந்த உயர்ந்த குரல்களை விரும்புவதோடு மட்டுமல்லாமல், மிக உயர்ந்த சுருதியை உடைய பெண்ணையே மிகவும் கவர்ச்சிகரமான பெண்ணாக மதிப்பிட்டனர். ( ஆண்ட்ரியா போன்ற bass குரல் பெண்களுக்கு சமர்ப்பணம்)

“நான் உன்னை காதலிக்கிறேன்” என்பது இடது காதில் கிசுகிசுக்கும்போது மூளைக்கு அதிக உணர்ச்சி விளைவிக்கும்

உங்களின் காதலை சொல்லி ஒரு நபரை நீங்கள் ஈர்க்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அவரது இடது காதில் பேச மறக்காதீர்கள். ஒரு ஆய்வில், உணர்ச்சி தூண்டுதல்கள் இடது காதில் நுழைந்தபோது, ​​நினைவுகூருவதற்கான துல்லியம் அதே தூண்டுதல்கள் வலது காதில் நுழைந்ததை விட 6% அதிகமாகும் என்று கண்டறியப்பட்டது. நல்லா கேட்டுக்கங்க .. இடது காது..

சிவப்பு மிகவும் கவர்ச்சிகரமான நிறம்

சிவப்பு நிறத்தைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சிவப்பு நிற உடை அணியும்போது மிகவும் கவர்ச்சிகரமாகவும், மேலும் பாலியல் ரீதியாகவும் உணரப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.. முதல் date க்கு சிவப்பு நிற உடை.. ஓகே..

ஒரு நபரின் இதயத்திற்கு விரைவான வழி அவர்களின்… கண்கள் வழியாகும்

ஒரு ஆய்வில், நீண்டகால கண் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்ளும் நபர்கள், பாரம்பரியமான கைகுலுக்கலுடன் அறிமுகப்படுத்தப்படுபவர்களுக்கு மாறாக, அவர்களின் இணைக்கு உறுதியான வலுவான இணைப்புகளை உருவாக்குகிறார்கள், மேலும் பாசத்தை அதிகரிக்கிறார்கள்.. கண்ண மட்டும் தான் பாக்கணும்..

தாடி கவர்ச்சிகரமானவை, ஆனால் எல்லா தாடிகளும் இல்லை

பரிணாம உயிரியலின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பெண்கள் இயற்கையாகவே தாடி கொண்ட ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை குறிப்பிடுகிறது. ஆனால் எல்லா வகை தாடியும் அல்ல. பெண்கள் நெருக்கமான, அல்லது சிறிய அளவிலான தாடியை கொண்ட ஆண்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாகக் கருதுகிறார்கள் என்று ஆய்வு முடிவு செய்தது. பெண்கள் , இப்படிப்பட்ட ஆண்களை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல பெற்றோராக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதுகின்றனர். குறைந்த கவர்ச்சியாகக் கருதப்படும் ஆண்கள் சுத்தமான வழிக்கப்பட்ட மற்றும் பெரிய, புதர் தாடியுடன் இருந்தவர்களே. புரியுதா.. வாரம் ஒரு வாட்டி ட்ரிம் பண்ணா போதும்..

போதுமா.. புது மாப்பிள ..இப்போ ...த்ருப்தியா..என்ஜாய் ...வாழ்த்துக்கள் ..

தாய்மாமன் மகளை திருமணம் செய்யலாமா?

அத்தை மகள்(ன்),மாமன் மகள்(ன்) திருமணம் தென்னிந்தியாவில் இன்றும் நடைமுறையில் உள்ளது.வட இந்தியர்களும்,மேலை நாட்டினரும் இதைத் தவறாக எண்ணுகிறார்கள்.தந்தையுடன் பிறந்த ஆணின் பிள்ளைகளை சகோதர,சகோதரிகளாகவும், தந்தையுடன் பிறந்த பெண்ணின் பிள்ளைகளை முறைப்பையன்(பெண்) ஆகவும் நாம் நினைப்பது அவற்களுக்கு தவறாகத் தெரிகிறது.(தாய் மாமன் பிள்ளைகள் விசயத்திலும் அப்படித்தான்). இவ்வாறு நடக்கும் திருமணங்களை incest திருமணங்கள் என அழைக்கிறார்கள்.


அறிவியல் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.அறிவியல்படி இத்தகைய திருமணங்கள் consanguineous marriages என அழைக்கப்படுகின்றன. இத்தகைய திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளில் சில birth defect களுடன் (உடல் உறுப்புகளிலோ, இதயத்திலோ குறைபாடுகளுடன்) பிறக்கின்றன.சில குழந்தைகள் stillbirth ஆக இறந்தே பிறக்கின்றன.தாங்கள் உண்மையில் விரும்பி திருமணம் செய்ய எண்ணும் படசத்தில் செய்து கொள்ளுங்கள்.

தற்போது scan வசதிகள் முன்னேறி விட்டன.ஏதாவது குறை இருந்தால் கர்ப்பப்பையில் இருக்கும்போதே கண்டுபிடித்து அதற்கான மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளலாம்.வாழ்த்துக்கள்!

திங்கள், 2 டிசம்பர், 2019

ஒரு பெற்றோராக எமது திடீர் உயிரிழப்புகளுக்குப் பின் குழந்தைகளின் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வழிமுறைகள் என்ன?

சேமியுங்கள்; சேமியுங்கள். கையில் பணம்/ சம்பளம் வந்ததும் உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.

உங்கள் எல்லா வங்கிக் கணக்குகள், வைப்பு நிதிகள், கம்பெனி டெபாசிட்டுகள், ஆயுள் காப்பீட்டு கணக்குகள் போன்ற எல்லா சேமிப்புக் கணக்குகளிலும், லாக்கர் கணக்கிலும் உங்கள் வாரிசு யார் என்பதை எழுதிக் கொடுத்து விடுங்கள்.

ஆயுள் காப்பீடு செய்து ஒழுங்காகப் பிரீமியம் கட்டுங்கள்.

சொத்து பத்து உள்ளவராய் இருந்தால் ஒரு உயில் எழுதி, கவரில் போட்டு ஒட்டி, உங்கள் மக்கள் உங்கள் காலத்துக்குப் பிறகு வந்து எடுக்கக் கூடிய உங்கள் உடமைகளோடு கண்ணில் படும்படி வையுங்கள்.


முடிந்தவரை கடன் கிடன் வாங்காமல் காலத்தை ஓட்டுங்கள். பிள்ளைகளுக்கு வைக்க சொத்து இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கடனை வைத்துவிட்டுப் போகவேண்டாம்.
பெண் சுதந்திரம் பற்றி தங்௧ௗ் கருத்து என்ன?


விவரிப்பதற்கு முன் சுதந்திரம் என்றால் என்ன என்பதை பதிவிட விரும்புகிறேன்.

Independent ஆக வாழ்வது என்பது உண்மையில் முதிர்ச்சி இல்லை. நிறைய பெண்கள் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் ரொம்ப independent ஆன பொண்ணு, எனக்கு பிடித்ததை செய்வேன். எங்க வேணா போவேன். யாருக்கும் அடங்க மாட்டேன்.

யார் சொல்லியும் நான் கேட்க வேண்டியது இல்லை. நான் என் இஷ்டத்துக்கு தான் இருப்பேன் நீங்க யாரு என்னை கேட்பதற்கு?

போயேன் பெருசு, என்று மரியாதை குறைச்சலாக அவர்களின் வயதிற்கு கூட மரியாதை செலுத்தாமல் பேசுவது, இது தான் independent life என்று தவறான எண்ணம் இன்று அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Interdependent என்பது தான் உண்மையில் முதிர்ச்சி என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த உலகத்தில் ஒருவரையொருவர் சார்ந்து தான் வாழ்கிறோம். ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணின் அன்பையும், அவளின் அரவணைப்பையும் சார்ந்து வாழ்கிறானோ அதே போன்று ஒரு பெண்ணும் ஒரு ஆணின் வலிமையையும், அவனிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பையும் சார்ந்து தான் வாழ முடியும்.

இல்லை ஆண்கள் தேவை இல்லை என்று பெண்களோ, பெண்கள் தேவை இல்லை என்று ஆண்களோ கூற முடியாது.

பெண் சுதந்திரம் பெண் சுதந்திரம் என்று பேசி பெண்களின் அடாவடித்தனம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறதோ என்று நினைக்கிறேன்.

என் நண்பன் ஒருவனை ஒரு பெண் காதலித்தாள். அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியதை மறைத்துவிட்டாள், அது அவனுக்கு தெரிய வந்ததும் அவன் விலக ஆரம்பித்தான். ஒரு நாள் உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்லி வரவைத்து அவன் மீது acid ஊற்றி விட்டாள்.

இவன் புகார் செய்தால் என்ன நடக்கும்? என் ரூம்க்கு வந்தான், ரேப் பண்ண பார்த்தான் நான் என் தற்காப்பிற்காக ஊற்றிவிட்டேன் என்பாள்.

இதுவே ஒரு பெண்ணிற்கு நடந்திருக்க வேண்டும். ஒட்டு மொத்த மீடியாவும் அந்த பையன் குடும்பத்தை உண்டு இல்லை என்று செய்திருப்பார்கள்.


பெண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை ஆண்களுக்கு எதிராக பயன்படுத்துவது உண்மையில் பெண் சுதந்திரம் இல்லை.

ஒரு ஆண் செய்யும் அத்தனையையும் என்னால் செய்து காட்ட முடியும் என்று போட்டி போடுவது இல்லை பெண் சுதந்திரம். உங்கள் தனித்துவத்தை உணர்வதே பெண்ணியம்.

ஒரு குடும்பத்தை போஷிப்பதும், குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் ஒரு ஆணின் கடமை என்றால், குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தெடுப்பதும் அவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பதும் கணவனுக்கு சரியான ஆலோசனையை வழங்குவதும் பெண்ணின் கடமை.

நம்ம என்ன தெரியுமா நினைச்சிட்டோம். நான் மட்டும் அடிப்படியில் வேலை செய்ய வேண்டும் அவன் மட்டும் வெளியே சுற்றலாமா என்று நினைத்து விட்டோம்.

உண்மையில் சமுதாயத்தை நல்ல முறையில் கட்டமைக்கும் பெரிய பொறுப்பு பெண்களின் கையில் குடும்பத்தை பேணுதல் என்னும் பெயரில் கொடுக்கப்பட்டிருந்தது. நாம் அது எனக்கு வேண்டாம் என்று நினைத்ததன் விளைவே இன்றைய பெருவாரியான பிரச்சனைகளுக்குக் காரணம் என்பேன்.

அப்படியானால் பெண்கள் வேலைக்கு செல்வது தவறு, மீண்டும் அடுப்படிக்கு செல்லுங்கள் என்று கூற வருகிறீர்களா என்று கேட்காதீர்கள்.

கண்டிப்பா இல்லை. நாம் நம்முடைய ஸ்தானத்தில் நிற்க வேண்டும் என்பேன். இன்றைக்கு இப்படி பெண்கள் கொதித்தெழுந்ததற்கு காரணமே ஆண்கள் தான் என்பேன்.

நீங்க எங்க தெரியுமா தப்பு பண்ணுனீங்க?

ஆதி காலத்தில் ஆண் வெளியே சென்று வேலை செய்து குடும்பத்தினரின் தேவைகளை சந்திப்பான். பெண்களும் குழந்தைகளை கவனிப்பார்கள். வீட்டை நிர்வகிப்பார்கள். ஆண் பெண் பேதமின்றி வாழ்க்கை அழகாக சென்றது.

அடுத்து வந்த தலைமுறை என்ன பண்ணிட்டாங்க, ஆண்கள் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அங்க தான் ப்ராப்ளம் ஆரம்பித்தது. அலுவலகத்தில் சக ஆண்கள் முன்னிலையில் தன் ஆண்மையை நிரூபிக்கின்றேன் என்ற பெயரில், என் பொண்டாட்டியை எல்லாம் என் கைக்குள்ள வச்சிருக்கேன் என்ற ஒரு தவறான வழிமுறையை கையில் எடுத்து, பெண்களை கட்டுப்படுத்த ஆரம்பித்தார்கள்.

இதை அனுபவித்த பெண்கள், தங்களை அடக்குவதை பொறுக்கக் கூடாமல் படிக்க ஆரம்பித்தார்கள் வெளி உலகிற்கு வந்தார்கள். இன்னைக்கு அடிச்சி தூக்கி peak-ல போய் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களே!

நாம் உயரத்திற்கு வந்து விட்டோம் என்பதால், ஆண்களை குறைவாக மதிப்பீடு செயவதோ, அல்லது அவர்களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செய்யாமல் விடுவதோ, அவர்களுக்கு தேவைப்படும் அன்பு மற்றும் அரவணைப்பை கொடுக்க மறுப்பதோ உண்மையில் பெண்ணியம் இல்லை.

இன்னைக்கு இது தான் நடந்து கொண்டிருக்கிறது.

ஆண்கள் ஒரு காலத்தில் நம்மை குறைத்து மதிப்பீடு செய்தார்கள் என்பதற்காக நாம் ஆயுதத்தை கையில் எடுக்கக் கூடாது. அதே தவறை நாம் செய்யவே கூடாது.

நிறைய படித்து விட்டோம், பட்டங்கள் வாங்கி விட்டோம் இனி நீ யாரு? நான் ஏன் உனக்கு கீழ்படிய வேண்டும்? உன்னைவிட அதிகமாக சம்பாதிக்கிறேன் என்று பேசுவது பெண்ணியமே இல்லை.

20 வயசுல இருந்து குடும்பத்துக்காக ஓட ஆரம்பிச்ச அவனை உட்கார வைத்து எவ்வளவு நாள் இப்படி ஓடிகிட்டே இருப்ப?. ஒரு 6 மாதம் ரெஸ்ட் எடு, உன்னை ரிலாக்ஸ் பண்ணிக்க அப்புறம் வேலைக்கு போ என்று சொன்னால் அதை இன்றைய நிலையில் சரியான பெண்ணியன் என்பேன்.

நமக்கு மகப்பேறு விடுமுறையாவது கிடைக்கிறது. ஆண்கள் 20ல் ஆரம்பிக்கும் ஓட்டம் 80 வரையில் ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். இடையில் யாரும் ஒரு 6 மாதம் உட்கார வச்சி சோறு போட மாட்டாங்க. ஒரு மனைவியாக நீங்கள் அதை செய்தால் அது சரியான பெண்ணியம் தான்.

அந்த ஒரு பிரேக் அவனுக்கு தேவை என்பதை அறிந்து ஒரு ஆணின் தேவையை சந்திப்பதில் உடன் நின்று பங்களிப்பது பெண்ணியம்.

நான் சம்பாதிக்கிறேன் உன்கிட்ட ஏன் சொல்லனும்? என் இஷ்டத்துக்கு செலவு செய்வேன் என்பது பெண்ணியம் இல்லை.

மாறாக, ஒரு காஃபி போட்டு கொடுத்து இரண்டு பேரும் உட்கார்ந்து வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு? மிச்சம் எவ்வளவு இருக்கு? சரி அப்ப இதில் முதலீடு செய்யலாம் என்று ஆலோசனை வழங்குவது பெண்ணியம்.

உரிமைகள் இருக்கிறது என்பதற்காக உடல் உறுப்புகளை காண்பிப்பது இல்லை பெண்ணியம், நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் தான் சரியான பெண்ணியம்.

பெண்ணியம். ஆயிரம் வலிகளை சுமந்தாலும், முகத்தில் புன்னகையை வைத்திருப்பது பெண்ணியம்.

சட்டம் தனக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக ஆண்கள் acid ஊற்றுவதோ, அபாண்டமான குற்ற சாட்டுகளை சுமத்துவதோ இல்லை பெண்ணியம். தன் மகனை சான்றோனாக வளர்ப்பது பெண்ணியம்.

நான் குழந்தை குட்டிகளை பெற்று வளர்த்து, இவர்களுக்கு சோறாக்கி போடுவதற்காகவா படைக்கப்பட்டிருக்கிறேன் என்று தவறாக நினைத்து நாம் நம் ஸ்தானத்தை, குடும்பத்தை நிர்வாகி என்ற பெரிய ஒரு ஸ்தானத்தை ஒரு அழகான அந்தஸ்தை டியூசன் எடுப்பவர்களுக்கும், மருத்துவர்களுக்கும், வீட்டில் வேலை செய்பவர்களுக்கும், இஸ்திரி செய்யும் அண்ணாகிற்கும், அதில் அதிக பங்கை டெலிவரி பாய்ஸ்க்கும் அட அது தாங்க நம்ம ஸ்விகி அண்ணாங்களுக்கும் பங்கு வைத்து பிரித்து கொடுத்துவிட்டோம். குடும்பமும் பிரிந்து விட்டது.

அம்மாவுக்கு மார்னிங் ஷிப்ட், அப்பாவிற்கு நைட் ஷிப்ட், ஒரே ஒரு குழந்தை, அந்த குழந்தைக்கும் உடன் பிறப்பாக ஒரு மொபைல் போனையும் கொடுத்துவிட்டு, எதையோ நோக்கி ஒடுகிறோம்.

ஓடிக் கொண்டே இருக்கிறோம்.....

இனியும் ஓடுவோம்.

சமுதாயத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் பெருகிக் கொண்டே செல்லும்....

வீட்டை நிர்வாகிக்கும் பொறுப்பை அடமானம் வைத்து விட்டு, மாதர் சங்கம் அமைத்து தெருவில் போராடும் நேரத்தில் நம் வீட்டில் குழந்தை வீடியோவில் பார்க்க கூடாத ஒன்றை பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு அரக்கனை வளர விட்டுக் கொண்டிருக்கிறோம்.

மறுபடியும் சமூகம் ஒரு சீரான நிலைக்கு வர வேண்டும் என்றால், இருபாலரும் ஒருவரையொருவர் மதித்து, ஒருவரையொருவர் கண்ணியத்துடன் நடத்தி, ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளை செய்து, ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி, ஒருவரையொருவர் மகிழ்வித்து, ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டுமே தவிர, தனித்து நின்று எங்களுக்கு எங்களை பார்த்துக் கொள்ள தெரியும் நீ உன் வேலையை பாரு என்று வீண் வம்புக்கும் வீராப்புக்கும் தீனி போடும் வகையில் எதிரணியில் நின்று செயல்படுவது பெண்ணியமும் இல்லை அது சரியான முதிர்ச்சியும் இல்லை.

உங்களுக்கு கிடைத்திருக்கும் கல்வியை கொண்டு அறியாமை இருளில் இருப்பவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவதும், பணியில் கிடைத்த அதிகாரத்தை அறவழியில் பயன்படுத்துவதும், உங்கள் பணத்தை உங்கள் பெற்றோர் அல்லது துணையுடன் இணைந்து சரியான ஒன்றில் முதலீடு செய்வதும், உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை உங்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் செலவழிப்பதும், சமுகத்தில் அனைவரிடமும் முக்கியமாக ஆண்களிடம் அன்பும் மரியாதையும் காட்டுவதும், கடமைகளை சரிவர செய்து உங்கள் ஸ்தானத்தில் நிமிர்ந்து நிற்பதுமே பெண்ணியம் என்பேன்.
வாழ்க்கையில் முக்கியமானது என்ன?

1.நாம் நல்லா இருக்கோமா என்று முகம் பார்த்து கண்டுபிடிக்க ஒர் நபர்

2.தட்டில் வைக்கப்டும் சாப்பாடு

3.அப்பாவின் செல்ல அதட்டல் அல்லது பெருமையாக பார்க்கும் ஒரு பார்வை

4.அம்மாவின் வெகுளி மனம் மற்றும் எல்லாவற்றையும் யோசித்து செய்யும் அழகு.

5.என்ன பிரச்சினை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌என்றாலும் குரல் கேட்டதும் ‌‌‌‌‌‌‌‌‌புரிந்துக் கொள்ளும்‌ ஒரு நட்பு.

6.ஐந்து வயத்திற்கும் கீழ் ஓர் நட்பு மற்றும் அறுபது வயது தாட்டியும் உள்ள ஓர் நட்பு

7.படுத்ததும் வரும் உறக்கம்

8.திருவிழா அல்லது பண்டிகையில் கூடுகின்றன சொந்தங்கள்.

9.பயணம் தனிமையிலும், நண்பகளின் பட்டாளம் உடனும்.

10.எல்லா சூழ்நிலைகளிலும் நிழல் போல் தொடர மனம் முழுதும் நம்பிக்கை.

வாழ்க்கையில் முக்கியம் இப்படி மேலும் பல. முக்கியமாக வாழ்தல் தான் வாழ்க்கை..
திருமண செலவை பெண்ணின் பெற்றோரும் மகனின் பெற்றோரும் சமமாக செய்ய வேண்டும் என்பதை பற்றி தங்கள் கருத்து என்ன?


எனது நண்பர்  (சுப்பிரமணி ) "நார்த்தன் அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் என்ற ஊரில் குடி பெயர்ந்து உள்ளார்.

அவர் ஒருமுறை அவர் நண்பர் திருமணத்திற்கு சென்று இருந்தார் அப்போது வெள்ளைக்கார மானிடன் ஒருவர் அவரிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்.

டாஸ் ப்பூஸ்னு இங்கிலீஷ் பா அது . தீப்பா சொல்றது கஷ்டம்.

வெகுநேரமாக இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

எனது நண்பர்  அந்த இங்கிலீஷ் மானிடம் இடம் கூட்டம் ரொம்ப கம்மியா இருக்கே என்று கேட்டுள்ளார

(அங்கு மொத்த எண்ணிக்கை 30 பேர்)

அதற்கு அந்த வெள்ளை மானிடன் "this is very huge crowd" என்று கூறியுள்ளார். எனது நண்பர்  நிர்கோ அது புதுவித அனுபவம் அவர் சொன்னதை கேட்டு  மறுபேச்சுப் பேசவில்லை..

சிறிது நேரம் கழித்து அந்த இங்கிலீஷ் மானிடன் எனது மச்சானிடம் உங்கள் திருமணத்திற்கு எத்தனை பேர் வந்தார்கள் என்று வினாவினான்.

அதற்கு எனது மச்சான் ஒரு 1300 வந்திருப்பார்கள் என்று கூறினார் அதற்கு அந்த வெள்ளைக்காரன் எனது நண்பரை  வியப்பாக பார்த்தான்.

மேலும் "நீங்கள் மன்னர் பரம்பரையை சார்ந்தவர்களை"? என்று கேட்டுள்ளார்..

எனது நண்பர்  ஆம் என்று கூறி காலரை உயர்த்தி உள்ளார்.

எந்த ஊர்லயும், மத்த எந்த வளர்ந்த நாடுகள் எதுலயும் காணாத ஒரு காலக்கொடுமை , அது எங்க ஊர்ல நடக்கிற அந்த ஒரு நாள் கூத்துக்கு செலவு பண்ற அந்த கல்யாணம் தான்.

எதுக்கு அவ்வளவு செலவு பண்ணிட்டு வாழ்நாள் புல்லா கஷ்டப்படணும்.

கம்மிங் டு த பாயிண்ட்.

மிகுந்த வரவேற்கத்தக்கது அதை விட சிறப்பானது கோவில் அல்லது ஒரு சமூக நலக்கூடத்தில் எளிதாக ஒரு சமோசா, ஒரு டீ அல்லது ஒரு மசால் வடை (பெருசுகள்க்க்கு மெதுவடை) வைத்து எளிமையாக திருமணம் செய்வது மிகவும் மிகவும் மிகவும் நாட்டிற்கும், வீட்டிற்கும் வாழப்போகும் தம்பதியருக்கும் வரவேற்கத்தக்கது மற்றும் நல்லது.

பேசுபவர்கள் இரண்டு நாளுக்கு பேசுவாங்க, அதுக்கப்புறம் அவங்க வேலைய பார்ப்பாங்க,

ஆனால் கல்யாணத்துக்காக லோன் வாங்கி அதை கட்டுவதற்கு நம்ம வருஷக்கணக்கா அல்லோல படனும்.

பெண் வீட்டாரிடம் நகைகள் கம்மியா கேளுங்க அது இன்னமும் வாழ்விற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நாட்டிற்கும் சேர்த்து.

குறிப்பு: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, பிகாஸ் ஐ அம் 90' ஸ் கிட்..,