திங்கள், 17 டிசம்பர், 2018
தந்தையின் பாசம் ..
பத்து மாதம் கருவைச் சுமந்து ஈன்றெடுப்பதால் பெண்ணொருத்தி தாய் என்ற பதவியை அடைகிறாள், அந்தத் தாயையும் சுமக்கும் தந்தையின் கண்ணீரை யாரேனும் கண்டீரோ!
அன்று கருவுற்ற நாளில் பிள்ளையிடம் தொடங்கும் அவளன்பு தான் கண்மூடும் நாள் வரை மாறாது. என் சிறு வயதில் பலரும் என்னிடம் அதிகம் கேட்ட கேள்வி – நீ அம்மா செல்லமா? அப்பா செல்லமா? இக்கேள்விக்கு நான் சொன்ன/சொல்லும் ஒரே பதில் `அம்மா செல்லம்` என்பது தான். பல காலம் நிலைக்கவில்லை அப்பதிலும், அப்பா என்ற தியாகியை நான் உணரும்வரை!
என்னைக் கேட்டால் அம்மாவின் பாசத்திற்கும் அப்பாவின் பாசத்திற்கும் ஆயிரக்கணக்கான வித்தியாசங்கள் உண்டு என்பேன். அம்மாவின் அன்பு எதையும் எதிர்பார்க்காது. பிள்ளையின் பிறப்பிலிருந்து அவர்கள் வளரும்வரை முப்பொழுதும் அம்மாக்கள் உடனிருப்பதால் அம்மாவே உலகம் என்ற நிலைப்பாடு இருக்கும், அதுவே நியதி, அதுவே உண்மை.
அப்பாக்களின் அன்பும் பாசமும் பிள்ளை வளரும் போது தேய்பிறை போல் மறைவதாகத் தோன்றும். அதுவே நியதி, ஆனால் அந்நியதி உண்மையல்ல என்பது பின்னொரு நாளில் அப்பிள்ளை தன் மகனை வளர்க்கும்போது தான் புரியும்!
அப்பா என்றாலே திட்டுவதற்கும் அடிப்பதற்கும்தான் என்று பிள்ளைகள் எண்ணுவதுண்டு. அப்பிள்ளைகள் தவறே செய்தாலும் கட்டியணைப்பது தாயுள்ளம், தவறைச் சுட்டிக்காட்டி அன்பையும் கண்டிப்பாய் காட்டுவது தந்தையுள்ளம்.
ஒரு தாயின் அன்பு, பிள்ளை பிறந்த நாளில் எப்படி இருந்ததோ அதே நிலைதான் அவன் வளர்ந்து, பெரியவனாகி அவனுக்குத் திருமணமான பின்பும் மாறாது. அவனுக்கென்று பெண்ணொருந்தி வந்த பின்பும் அவள் கண்களுக்கு அவன் சிறுபிள்ளையாகவே காட்சி தருவான். எனவே அம்மாவின் அன்பிலும் பாசத்திலும் வேறுபாடு காண்பதறிது, அவ்வன்பு ஈடு இணையற்றது.
இத்தகு அன்னையரின் அன்பையும் பாசத்தையும் பற்றி பல்வேறான கவிதைகளும் கதைகளும் இங்குள்ளன. என்ன காரணத்தாலோ இவற்றிற்கெல்லாம் பின்புலமாக விளங்கும் நம் தந்தையரைப் பற்றிய பாடல்களும் கவிதைகளும் மிகக்குறைவே! அப்பாக்களின் அன்பும் பாசமும் காலச் சுழற்சியில் மறைந்துவிடுகின்றன.
பிறந்த குழந்தை தன் அம்மாவின் பாலை ருசிக்கும் போது அவள் முழுமையடைவதாகச் சொல்கிறது இவ்வுலகம். என்ன காரணத்தினாலோ அவ்விறைவன் தந்தையருக்கு கருவறையையும் பால் சுரக்கும் பேறையும் அளிக்காமல் தானும் ஒரு ஆணாதிக்கவாதியாக நிற்கிறான். இதுவும் ஆண்களுக்கெதிரான இறைவனின் ஓரவஞ்சனை அல்லவா?
குழந்தை தவழத் தொடங்கும் பொழுது தரையில் விழும் நொடியில் தாங்கிக் கொள்ள முனைபவள் அம்மா. அய்யோ என் செல்லத்திற்கு எங்காவது அடி பட்டுவிட்டதா என்று தேடி அழுவாள். ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் உடனே அப்பா சொல்வார் - `அவனைத் தூக்காதே, இரண்டு மூணுதடவ விழுந்தாதான் தவழ்ந்து பழகுவான்` என்று. அம்மா நினைப்பாள் `என்ன மனுஷன் இவர், புள்ள கீழ விழுந்திருச்சு கொஞ்சம் கூட பாசமே இல்லாம பேசராரு, நீ அம்மாகிட்ட வாடா செல்லம்` என்றழைத்துக் கட்டியணைத்துக் கொஞ்சுவது அம்மாக்களின் இயல்பு.
இதுபோன்ற அப்பாக்களின் செயல்களுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கும். வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் துன்பங்களும் இடர்களும் மாறி மாறி வரும், எனவே இதுபோன்ற நிலைகளில் மனதை தளரவிடாமல் வலிகளைத் தாங்கித் திரும்பத் திரும்ப முயற்சி செய்தால் மட்டுமே நம் இலக்கை அடைய முடியும் என்பதை உணர்த்துவதற்காக செய்யும் செயலாக இருக்கும். அனைவரும் உறங்கிய பிறகு யாருக்கும் தெரியாமல் பிள்ளை விழுந்த இடத்தில் தடவிப்பார்த்துவிட்டு வருத்தப்படும் அவன் தான் நம் அப்பா!
இதே நிலைதான் பின் மிதிவண்டி பயிலும் நாட்களில் கீழே விழுந்து கிடக்கும் பிள்ளையை பார்க்கும் அம்மா, அப்பாக்களின் செயல். அம்மாவின் அன்பு இது சரியா? தவறா? என்பதையெல்லாம் யோசிப்பதில்லை. பிள்ளைக்கு வலிக்குமே என்ற ஏக்கம் தான் இருக்கும். இப்படி ஒவ்வொரு நிலையிலும் அம்மாக்களுக்குத் தங்கள் பிள்ளையின் மேலிருக்கும் அன்பு மாறவே மாறாது. கீழே விழுந்தா பரவாயில்லை, இன்னும் கொஞ்சம் முயற்சி செய், நிச்சயம் வெற்றி பெறுவாய் என்பது தந்தையின் பாசம்.
அம்மாவிற்கு பிள்ளையிடம் ஒரே ஒரு முகம் மட்டுமே இருக்கும், ஆனால் அப்பாவிற்கு பல முகங்கள் இருக்கும். உள்ளேயிருக்கும் அன்பை வெளிக்காட்டாமல் துக்கப்படும் அப்பாக்களின் தியாகமே அப்பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் துணையாய் நிற்கும். நம் அப்பாக்கள் பலரும் உணர்ச்சியை அடக்கி அவற்றின் கலவையாய் இருப்பர் (Emotional mixture & non-expresssive).
இங்குள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் அவர்களின் அப்பாதான் கதாநாயகன். அவரிடமிருந்தே பலவற்றையும் கற்கத் தொடங்குகிறோம். அப்பாவின் முதல் எழுத்தை நம் பெயருடன் இணைத்தெழுதும் நாமனைவரும் பாக்கியசாலிகள். பிள்ளைகளின் வளர்ச்சியில் ஆனந்தமடையும் முதல் ஜீவனும் அவரே. ஒவ்வொரு அப்பாக்களின் உழைப்பும் அவர்களின் பொருளாதாரமும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை நன்கு அமைப்பதிலேயே இருக்கும்.
பிள்ளைகள் வாழ்வில் பயணிக்கும்போது அவர்களின் வழி நெடுக வரும் கற்களையும் முட்களையும் அகற்றுவதில் தான் அவர்களின் வாழ்க்கையையே செலவழிக்கிறார்கள். தனக்கென்று அவர்கள் எதுவும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை, பிள்ளைகளின் படிப்பு, வளர்ச்சி என்று அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய நோக்கிலே தங்கள் இளமையையும், இன்பத்தையும் விட்டுக் கொடுக்கின்றனர்.
பிள்ளைகளின் சுதந்திரத்திற்காகவும், அவர்களின் சுகத்திற்காகவும், கல்விக்காகவும் தன் நிம்மதியைத் தொலைத்து, அவமானங்களை ஏற்று உடல், மனச்சோர்வடையும் அப்பாக்கள் போற்றப் படவேண்டியவர்கள். அம்மாவின் அன்பை அவள் முத்தத்திலும், கண்ணீரும் காணலாம், ஆனால் அப்பாவின் அன்பை அவரின் கண்களிலும், அவரின் கை நம் தோல்மீது வைத்து அழுத்தும்போதும் உணரலாம்.
அணைத்துத் தூங்க வைப்பவள் அம்மா; தூங்கிய பிள்ளைக்குத் தெரியாமல் பிள்ளையின் பாதத்தில் முத்தமிட்டு தன் கண்ணீரை மனதில் சிந்துபவன் அப்பா! உள்ளத்து உணர்வுகளை மறைத்து அவற்றை வெளிக்காட்டாமல் நம்முன் கண்டிப்பாய் நடக்கும் ஒரு ஜீவன்தான் நம் அப்பா!
பிள்ளையின் ஆனந்தத்தில் தன் தூக்கத்தையும், வலிகளையும் தொலைத்து, காலைப் பேருந்தில் நிற்க இடமில்லாமல், நெடுதூரம் பயணித்து வேலை செய்துவிட்டு, பிள்ளை உறங்கும் நேரத்தில் சத்தமில்லாமல் வீட்டிற்கு வந்து, தூங்கும் மகனின் தலைமுடியை வருடும் தியாகிதான் நம் அப்பா!
அந்தப் பிள்ளைகள் வேலைக்குச் சேர்ந்து, நண்பர்களுடன் சந்தோசமாக சினிமாக்களிலும் பொழுதுபோக்குகளிலும் உறைந்து, பெற்றோரை மறந்திருக்கும் தருணங்களில்- `பாவம் ரொம்ப வேலை போலிருக்கு அதனாலதான் ஃபோன் பண்ணமுடியலைன்னு உங்கிட்ட சொல்லச் சொன்னான்` என்று மனைவியிடம் பொய்யுரைப்பவனே நம் அப்பா!
வலிகளையும், வேதனைகளையும் செய்வதறியாது கண்ணீராகக் கொட்டுபவள் அம்மா; அவ்வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு வயோதிகத்தில் அமைதியாய் பிள்ளைகள் முன் எதுவும் சொல்லாமல் பாசத்திற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கி நிற்கும் ஒரு குழந்தைபோல நிற்பவர்தான் நம் அப்பா!
இப்படி பிள்ளைகளின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து, ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வாரத்திற்கு ஒரு முறையாவது ஃபோன் பண்ணிப் பேசுவான் என்று வலிகளைத் தாங்கி விழி பார்த்து நிற்பவன் தான் நம் அப்பா!
வாழ்வின் பல நிலைகளில் அப்பாக்கள் தான் பிள்ளைகளுக்கு ஆசானாக இருக்கிறார்கள். பிள்ளைகளின் கற்றல் என்பது அவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே நம் வீட்டினுள்ளேயே ஆரம்பமாகிறது.
பிள்ளைகள் அப்பாக்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்களில் சில:
-
நேர்மை
அமைதி
நியாகக் கோபம்
விடா முயற்சி
நேரம் தவறாமை
பிறரை துன்புறுத்தாதே
பயப்படாமல் தைரியமாக இருப்பது
பணத்திற்காக எதுவும் செய்யக்கூடாது
பணியை நிறைவுடன் செய்வது
சோர்வடையாமல் தன்னம்பிக்கையோடு இருப்பது
வலிகளைத் தாங்குவது
தோல்வியைக் கண்டு கலங்காமலிருப்பது
சகிப்புத்தன்மை
பழி பாவங்கள் செய்யக் கூடாது
தவறைத் தட்டிக் கேட்கவேண்டும்
இதனால் தான் நம் அப்பாக்கள் நமக்கு முதல் ஆசானாக இருக்கிறார்கள்.
அப்பாக்களின் மன அறையிலிருக்கும் பூட்டு என்றும் திறப்பதேயில்லை. அதனை திறந்து பார்ப்பதும் அவசியமற்றது – அவ்வறையினுள் இருப்பது கண்ணீரும் வலிகளுமே! அப்பாவின் அன்பும் தாயின் கருவறையைப் போன்றது தான்; ஆனால் ஒரே ஒரு வித்தியாசம், அக்கருவறையிலிருக்கும் அன்பு, பாசம் என்ற குழந்தை பிரசவிப்பதே இல்லை. அது தன் பிள்ளைகளின் ஆனந்தத்தைப் பார்த்துப் பார்த்து கருவறையினுள்ளே அழிந்துபோகும்.
இப்படி அப்பாவின் நிழலில் வளரும் பிள்ளைகள், பின்னாளில் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்பது எவ்வளவு கொடுமையானது! கல்வியையும், நற்பண்புகளையும் கற்றுக் கொடுத்து, நாமே கதி என்றிருந்தவர்களுக்கு இதுதான் நாம் செய்யும் கடமையா? என்னவொருக் கோழைத்தனம், இது மனிதத் தன்மையற்ற செயல். இக்காரியத்தைச் செய்யும் எவரும் வெட்கித்தலை குனியவேண்டும். அவர்களுக்கு இப்பிறவியில் மட்டுமல்ல எப்பிறவியிலும் நிம்மதி வராது.
அம்மாவின் கண்ணீரையும், தந்தையின் தியாகத்தையும் இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு பிள்ளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
சில நேரங்களில் என் மனைவி சொல்வது – நான் செய்யும் ஒவ்வொரு செயலும் என் அப்பாவை பிரதிபலிப்பதாகத் தோன்றுவதாகக் கூறுவார். என் பிள்ளையிடம் கண்டிப்பைக் காட்டும் பொழுதும், என்னுடைய நடை, பேச்சு என்று சொல்லும்போது ஆனந்தமாக இருக்கும். அவராக நான் மாறும் தருணங்கள் தரும் நிம்மதியும் சந்தோஷமும் எண்ணிலடங்கா! அதை என்னென்று சொல்வது!
என் அப்பா எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கவில்லை, மாறாக அப்படியே வாழ்ந்து காட்டினார். அவரது அலுவலக நண்பர்கள் பலரும் சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு - `என்னய்யா இப்படி அரசு வேலையிலிருந்துவிட்டு பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கிறே`. அதற்கு அப்பா சொல்லும் ஒரே பதில் `பிள்ளைகளுக்காகப் பெரிய சொத்துச் சேர்த்து வைக்காவிடிலும் பழி பாவங்களைச் சேர்த்து வைக்க மனமில்லை` என்பதுதான். இன்றும் அவரது வெள்ளைச் சட்டையில் பாக்கெட் வைத்துக் கொள்ளாமல், நேர்மையாக இருக்கிறார். அவருக்கு மகனாகப் பிறந்ததே நான் செய்த பாக்கியமாகக் கருதுகிறேன்.
அவரிடமிருந்த அனைத்தையும் எனக்காகக் கொடுத்துள்ளார்; பெரிதாக ஆசையொன்றுமில்லை, என் அப்பாவிடம் கேட்கும் வரம் இதுவே - இப்பிறவியைப் போல் எப்பிறவியிலும் என் பெற்றோருக்கே நான் பிள்ளையாகப் பிறக்க வேண்டுமென்பதே!
என்னிடம் அவர் அடிக்கடிக் கூறும் வார்த்தைகள்;
எல்லாம் சரியாப் போகும்
நான் இருக்கேன்
நல்லதே நடக்கும்
உடம்பைப் பார்த்துக்கொள்
உன் மேலே நம்பிக்கை இருக்கு, நீ நல்லா வருவே
பிள்ளையையும் மனைவியையும் நல்லா பார்த்துக்கொள்
என் தந்தையைப் பற்றி எழுத எவ்வளவோ உள்ளது, பின்னொரு பதிவில் அவற்றை எழுத முனைகிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் அம்மாவின் பாசமும், அப்பாவின் தியாகமும் போற்றப்பட வேண்டியவை. அவர்களின் கண்ணீரும் தியாகமும் தான் நம்மை நன்னிலையில் வாழ உதவும். நம்மை வாழ்வின் ஒவ்வொரு சோகத்திலுமிருந்தும் காப்பது நம் பெற்றோர்கள் செய்த புண்ணியமும், நற்பலனுமேயாகும்.
இதுபோன்ற அப்பாக்களின் தியாகங்களுக்கு எனது வணக்கத்தைச் சமர்பிக்கிறேன்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018
உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்படைப்பாளுமை கருத்தரங்கம் நடந்தது.
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் படைப்பாளுமை க கருத்தரங்கம் கிளை நூலகம் எண் இரண்டில் நடந்தது. நூலக வாசகர் வட்டம் உடுமலை தமிழர் கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய கருத்தரங்கிங்கில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் பொருப்பாளர் அருட்செல்வன் வரவேற்றார்.
நூலக வாசகர் வட்ட தலைவர் இ.இளமுருகு தலைமை வகித்தார்.
வாசகர் வட்ட ஆலோசகர் எம்பி அய்யப்பன்
துணைத்தலைவர் வி.கே சிவக்குமார்
பொருளாளர் சிவக்குமார்
ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
முனைவர் மஞ்சுளாதேவி சஞ்சாரம் நூல் குறித்து மதிப்புரை வழங்கினார்.
எஸ் இராம கிருஷ்ணன் நாவல்கள்பற்றி கணியூர்பருக்
.
இராமகிருஷ்ணன் எழுத்துஎன்ற தலைப்பில்அரசு கலைக்கல்லூரி வரலாற்றுதுறை உதவி பேராசிரியர்.முனைவர் மதியழகன்.
இராம கிருஷ்ணன் பேச்சு என்ற தலைப்பில்ஊட்டி அரசு கலைக்கல்லூரிதமிழ்த்துறை உதவிபேராசிரியமுனைவர் ஜெயசிங்
இராமகிருஷ்ணணன் இலக்கியம் என்ற தலைப்பில் அப்துல் சமது
ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங்கம் நடத்தினர்.
எழுத்தாளர் சீனிமோகன் பேராசிரியர் கண்டிமுத்துஉட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக நூலகர் கணேசன் நன்றி கூறினார்.
கருத்தரங்க ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன்செல்வராணி
அருள்மொழிமற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள்தமிழர் கலை இலக்கியப் பேரவையினர்செய்திருந்தனர்.

சனி, 15 டிசம்பர், 2018
உடுமலை வரலாறு is with கார்த்திக் நாயக்கர் in Udumalaippettai.
வரலாற்றுக்கு ஒரு வரலாற்றுப்பரிசு..
உடுமலையின் கல்வியாளர், கல்வி வள்ளல், தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களை உருவாக்கி கல்விக் கண் திறந்திட்ட காமராசரின் மருவுருவாய் வாழ்ந்திட்ட வள்ளல் கெங்குசாமி நாயுடுவை வாழும்போதிருந்தே ஆவணப்படுத்திட்ட எழுத்தாளர்,
தளிபாளையப்பட்டு ராஜ்யத்தின் குமாரர் மண்ணின் மைந்தர் ஜிலேபநாயக்கன்பாளையம் அய்யா குமாரராசாவிற்கு
இன்று உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தால் வெளியிடப்பட்ட தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் எனும் நூலை இன்று பரிசளிக்கப்பட்டது.
இத்துடன் அய்யா அவர்கள் விரும்பிக்கேட்ட ஆய்வு நடுவத்தால் வெளியிடப்பட்ட தளி எத்தலப்பரின் திருமூர்த்தி மலை மண்ணு பாடலின் குறுந்தகடையும் விரும்பிப் பெற்றுக் கொண்டார்.
உடுமலைப்பேட்டை வரலாற்றின் தேவையையும் திருமூர்த்தி மலை மண்ணின் மகத்துவத்தையும், கடந்த காலங்களில் உடுமலையைச் சுற்றி நடந்த சம்பவங்களையும் மிகவும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தலைமைச் செயலகத்தில் பத்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தையும், தி.மு.க தலைவர் கலைஞருடான தம் அனுபவத்தையும்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தலைமை அலுவலகத்தில் பணியாற்றியபோது திரு.ஆற்காடு வீராசாமியுடன் பணியாற்றிய அனுபவத்தையும்,
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் அலுவலகத்தில் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களையும் தம்முடன் பகிர்ந்து கொண்டார்.
செவ்வாய், 11 டிசம்பர், 2018
உடுமலை வரலாறு is with Udumalai App
எதிர்வரும் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை
உடுமலை உழவர் சந்தை எதிர் அருகில் உள்ள
கிளை எண் 2 நூலகத்தில்
சாகித்ய அகாடமி விருது பெற்ற
‘சாதனை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்பாளுமை”
எனும் தலைப்பில் கருத்தரங்கம் பிற்பகல் 4. -6 மணி வரை நடைபெற உள்ளது.
இதற்கு நூலக வாசகர் வட்டத்தின்
தலைவர் து.இளமுருகு தலைமை வகிக்கிறார்.
நூலக வாசகர் வட்டத்தின் ஆலோசகர் திரு.எம்.பி.அய்யப்பன்,
திரு.வி.கே.சிவகுமார்,
திரு.ராமதாஸ்,
திரு.சிவகுமார் மற்றும்
நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
‘சாகித்ய அகாடமி விருது பெற்ற சஞ்சாரம்” நூல் குறித்து முனைவர் ஜெ.மஞ்சுளாதேவி அவர்களும்,
‘எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்கள்” எனும் தலைப்பில் பத்திரிகையாளர் கணியூர் பருக் அவர்களும்
‘எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து” எனும் தலைப்பில் முனைவர் மதியழகன் அவர்களும்,
‘எஸ்.ராமகிருஷ்ணனின் பேச்சு”எனும் தலைப்பில் முனைவர் ஜெயசிங் அவர்களும்,
‘எஸ்.ராமகிருஷ்ணனின் கவிதை”எனும் தலைப்பில் கவிஞர் அப்துல் சமது அவர்களும்,
கருத்துரை வழங்க உள்ளனர்.
கருத்துரை வழங்க உள்ளனர்.
இந்த நிகழ்வின் இறுதியாக நூலகர் திரு.வீ.கணேசன் அவர்கள் நன்றி உரை கூறுகிறார்.
இந்த நிகழ்வை நூலக வாசகர் வட்டத்தோடு தமிழர் கலை இலக்கியப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
உடுமலையின் இலக்கிய ஆர்வலர்கள் , வாசிப்பை நேசிக்கும் அன்புள்ளங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
திங்கள், 10 டிசம்பர், 2018
Sivakumar Kumar is
celebrating a birthday with Srinivasan Asokan in South Korea.
ஸ்ரீனிவாசன் அசோகன் ...அண்ணனுக்கு என் இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்
கம்பளசமுதாய வளரும் சொந்தங்களின் வளர்ச்சியில் அதிகம் அக்கறைகொண்டு ..தன்னால் இயன்ற அளவு ...கல்வி ..வேலைவாய்ப்பு நேரம் ..காலம் சமுதாயப்பணியாற்றி வருவது மகிழ்ச்சி ..கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் வழிகாட்டி ...மிக சிறந்த ஆலோசகர் ...வளரும் தலைமுறை கம்பள சொந்தங்களின் மீது மிகவும் அக்கறை கொண்டவர் ..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681.
Sivakumar Kumar is in Ettaiyapuram.
December 10
எட்டயபுரத்து கவிராஜன் முண்டாசு கவி பாரதி பிறந்தநாள்
சிறுவயதிலேயே தாய்நாட்டின் விடுதலைக்காக தன் கவிதை முழக்கத்தால் முழங்கிய வீரக் கவிஞன் நம் பாரதியார். அப்படிப்பட்ட கவிஞனின் பிறந்தநாளை தமிழர்கள் கொண்டாட வேண்டாமா?
நம் தமிழ் நாட்டில் இப்பொழுது சினிமா நடிகர்களின் பிறந்த நாளும், அரசியல்வாதிகளின் பிறந்தநாள்களும் தான் கொண்டாடப் படுகிறது. எந்த தியோட்டர்களில் யார் படம் ஓடுகிறதோ அந்த நடிகர்களின் கட் அவுட்களும் பேனர்களும் தான் காண முடிகிறது. அதுமட்டுமல்லாமல் பால் அபிஷேகம் வேற. வீட்டில் தன் குழந்தைக்கு பால் வாங்க பணம் தரவில்லை என்றாலும் தனக்கு பிடித்த நடிகர்களின் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்ய வில்லை என்றால் தூக்கம் வராது போல. ஒரு தலைவருக்குகோ, ஒரு நடிகருக்கோ ரசிகனாக இருப்பதில் தவறில்லை அடிமையாக மாறிவிடக் கூடாது. ஆனால் இன்று அப்படித்தான் நடக்கிறது நம் தமிழ் நாட்டில். இந்த நிலை எப்போது மாறுகிறதோ அப்போது தமிழ் நாடும் தமிழ் மக்களும் முன்னேறுவார்கள்.
கவிதை எழுதுபவன் கவியன்று கவிதையே வாழ்க்கையாக உடையவன,;
வாழ்க்கையே கவிதையாக செய்தோன் அவனே கவி….
அவர்தான் சுப்பிரமணிய பாரதி….
1882 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் திகதி இந்தியாவின் எட்டயபுரத்தில் சின்ன சுவாமி ஐயருக்கும் லக்ஸ்மி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் சுப்பையா என அழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி சுப்பையா தனது 11ம் வயதில் பள்ளியில் படித்துவரும் போது கவிப்புயம் ஆற்றலை வெளிப்படுத்தினார். பிற்காலத்தில் ஒரு கவிஞராக எழுத்தாளராக பத்திரிகை ஆசிரியராக விடுதலை வீரராக சமூக சீர்திருத்தவாதியாக தனது பரிமாணங்களை வகுத்துகொண்டவர் சுப்பிரமணிய பாரதி. தமிழில் கவிதை மற்றும் உரைநடையில் தன்நிகரற்ற பேரறிவாளர் தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். அவர் மகாத்மா காந்தி பாலகங்காதர திலக உ.வே.சு ஐயர் சிதம்பரபிள்ளை மற்றும் மகான் அறவிந்தர் ஆகியோர் வாழ்ந்த இந்திய வரலாற்றில் திருப்பு முனையான காலப்பகுதியில் வாழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதி தமிழர் நலன் இந்திய விடுதலை பெண் விடுதலை சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து அவர் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் எனினும் அவரின் கவித்திறனை பாராட்டி எட்டயபுர அரச சபையால் அவருக்கு பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. சுப்பிரமணிய பாரதி சுப்பையா, பாரதியார், சக்திதாசன், மகாகவி, புதுக்கவிதை புலவன், கவிஞாயிறு என பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். பாரதி தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம், வங்காளம், ஹிந்தி, பிரன்ச் போன்ற மொழிகளில் தனிப்புலமை பெற்றவர் அம்மொழிகளில் தனிச்சிறப்பு மிக்க படைப்புக்களை தமிழ் மொழியாக்கம் செய்தவர் சுப்பிரமணியம் பாரதி. பலமொழிகளில் தனிபுலமை பெற்றிருந்தாலும் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என கவி புனைந்தார் கவி ஞாயிறு பாரதி. பழந்தமிழ் காவியங்களின் மீது தனிஈடுபாடு கொண்ட பாரதி அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் கொண்ட மாமேதையாவார். தேசிய கவி என்ற முறையிலும் உலகம் தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவித்திறனாலும் அவர் உலகில் தலை சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழ் தன்னிகரற்ற கவியேறு பாரதி, குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், போன்ற படைப்புக்கள் பாரதியின் தன்னிகரற்ற படைப்புக்களாகும். கவிஞராகயிருந்த பாரதி 1904 ம் ஆண்டு முதல் 1906 ம் ஆண்டு வரை பத்திரிகை ஆசிரியராக செயற்பட்டுள்ளார். பாரதி தாசனை முதன்மையாக கொண்டு கவி புனைந்த பாரதி பாடல்களின் இலக்கண கட்டுக்களை தகர்த்தெறிந்தார். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல் பொருள்கொள் யாப்பு, அணி, என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதையே புனைந்தனர். இலக்கண சட்டங்களை தகர்த்தெறிந்த பாரதி புதுக்கவிதையென புகழப்படும் பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையையும் தமிழுக்கு தந்தவர் சுப்பிரமணியம் பாரதி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என பெண்கள் உரிமை தொடர்பிவ் குரல் கொடுத்த முதல் பெண் சுப்பிரமணிய பாரதியார்…. இந்திய நாட்டின் விடுதலைக்கென மக்களை தெளிவு படுத்தும் பல கவிதைகளை புனைந்துள்ள சுப்பிரமணிய பாரதி தேசிய கவியாக போற்றப்பட்டார். 1897 ம் ஆண்டு செல்லம்மா என்பவரை மணந்த சுப்பிரமணிய பாரதி 1898 ம் ஆண்டு தொழில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையை அடைந்தார். அதனைத் தொடர்ந்து எட்டயபுரம் அரண்மனையில் பணிபுரிந்த அவர் சில காலங்களில் எட்டயபுரத்தை விட்டு காசிக்கு சென்றார். பின்னர்; மீண்டும் எட்டயபுரத்து மன்னனால் பாரதி அழைக்கப்பட்டு 1898 ம் ஆண்டு முதல் 1902 ம் ஆண்டு வரை பாரதி அரண்மனையில் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளராக பணிபுரிந்த சுப்பிரமணிய பாரதி இந்தியாவில் ஆலயமொன்றிற்கு வழிபாட்டிற்காக சென்ற அவர் யானை தாக்கியதால் சுகயீனத்துக்குள்ளாகிய நிலையில் கடந்த 1921 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதி தனது 39 ம் வயதில் இறையடிசேர்ந்தார். பாரதியின்; புதுமையை சொல்லும் வகையில் எடுக்கப்பட்டு கடந்த 2000 ம் ஆண்டு வெளிவந்த பாரதி திரைப்படம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினையும் பெற்றது. மேலும் இன்றும் சிறுவர் முதல் பெரியோர் வரை பாரதியின் கவிதைகளையும் பாடல்களையும் படித்து ரசிக்காதவர்கள் சிந்தையைத் தூண்டாதவர்கள் இருக்க முடியாதென்பது மகா கவி பாரதியின் பெருமையை எடுத்தியம்புகிறது, தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் புதுமைகள் பலசெய்து பாமர மக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் தமது படைப்புக்களை வெளிக்கொணர்ந்து மக்கள் மனதில் சிந்தனை எண்ணத்தை தூற்றிவிட்;ட மகாகவி சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழியில் என்றும் அணையா விளக்கு…
"தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அளித்திடுவோம்" என்று பாடிய பாரதியார் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம். பாரதியார் போன்ற தேசத்திற்குகாகப் பாடுபட்ட தலைவர்களைப் பற்றி நமது தலைமுறைக்கு சொல்லி கொடுப்போம் . போற்றி வணங்குவோம்.
வாசகர் வட்டம் ..கிளை நூலகம் -2
உழவர் சந்தை எதிரில்
உடுமலைப்பேட்டை ..

ஞாயிறு, 9 டிசம்பர், 2018
MCC ...Blood Donors ..🌱🌱.மானுப்பட்டி ..👍👍👍🌷🌷🌷
தம்பி போட்டோ ராஜேந்திரன் 👏👏🤝🤝நேற்றுலிருந்தே ..என்னை நாளை மதியம் ஒரு கலந்தாய்வு கூட்டத்திற்கு செல்ல வேண்டும் .அண்ணா ....வாருங்கள் ..என்று சொல்லிக்கொண்டே இருந்தார் ..தம்பி தேவை இல்லாமல் யாரையும் தம்பி அழைக்கமாட்டார் ...ஏன் என்றால் ..அவர்களின் பணிக்கு தொந்தரவு தரக்கூடாது என்று விரும்புபவர் ..நேரத்தையும் ..காலத்தையும் வீணாக்க விரும்புவதில்லை ..தம்பி அழைத்தவுடன் ..இன்று நான் கலந்துகொள்ளும் குடும்ப நிகழ்ச்சிகள் ..நேர்காணல்கள் ..நான் சந்திக்கவேண்டிய நண்பர்களை ..இந்த கலந்தாய்வு கூட்டம் ரத்த தானம் ..MCC ...Blood Donors ...மானுப்பட்டி ..என்று இன்று மதியம் தான் சொன்னார்..இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு என்னுடைய நேரத்தை செலவழிப்பதில் தவறில்லை ..என்று இந்த கூட்டத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சி ...இதற்கு முன்னர் ..இந்த ரத்த தான நண்பர்களை பற்றி அதிகம் முகநூலில் அறிந்து உள்ளேன் ..இன்று இந்த கலந்தாய்வு கூட்டம் எனக்கு தேவையான கூட்டம் ...இந்த ரத்த கொடையாளர்கள் ..என்னிடம் கேட்டவர்களுக்கு இந்த குரூப்பில் உள்ள நண்பர்கள் மூலம் பயனடைந்து உள்ளனர் ..எத்தனையோ பணிகளுக்கிடையே ..மகத்தான பணிகளை செய்வது ..அதுவும் ..வளரும் இளைய சொந்தங்கள் இந்த சேவையை செய்வது கேட்டு ..பார்த்து மகிழ்ச்சிக்கே அளவே இல்லை ..அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .. இந்த குழுவில் என்னையும் சேர்த்துக்கு மிக்க நன்றி ..வரும் நிகழ்வுகள் ..ரத்த தானம் கேட்க்கும் பயனர்களுக்கு மிக உதவியாக உள்ளோம் ...எனக்கு தெரிந்த ரத்த தானம் பற்றி சிறு தொகுப்பு தருகிறேன் ..
"ஆயுளைக்கூட்டும் இரத்ததானம் "
நாம் கொடுக்கும் ரத்த தானத்தால் பிறரது உயிர் காக்கப்படுவது மட்டுமல்லாமல் நமது உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது. ரத்த தானம் கொடுப்பதால் உடல் புத்துணர்ச்சியாகிறது. உடல் மட்டுமல்லாது ரத்த சிவப்பணுக்களும் புத்துணர்ச்சியடைகிறது. ரத்த தானம் கொடுப்பதால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கலாம் என்று ஆய்வில் உறுதியாக கூறப்படுகிறது.
மிகவும் எளிதில் கிடைக்கூடிய, அனைவராலும் கொடுக்ககூடிய ஒன்று "ரத்த தானம்". ஒருவர் ரத்த தானம் செய்தால் மீண்டும் புதிதாக ரத்த அணுக்கள் உடலில் உற்பத்தியாகும். ரத்த தானம் செய்தால் ஆயுள் கூடும் என்று ஆய்வில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மறுசுழர்ச்சி செய்யப்படுகிறது, இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும். ரத்த தானம் செய்வதால் கார்பன் டை ஆக்ஸைடு நீங்கவும் உதவுகிறது. ஒருமுறை ரத்த தானம் செய்தால் 650 கலோரி செலவாகும். அதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.
யாரெல்லாம் இரத்ததானம் செய்யலாம்?:
18 முதல் 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் இரத்ததானம் செய்யலாம்.நம் ஒவ்வொருவருடையை உடலிலும் சுமார் 5 லிட்டர் இரத்தம் உள்ளது.
இதில் இரத்த தானத்தின்போது எடுக்கப்படும் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் மட்டுமே.
நாம் தானம் செய்யும் இரத்தம் 350 மில்லி லிட்டர் இரத்தம் 24 மணி நேரத்திற்குள்ளாக நமது உடலில் மீண்டும் உற்பத்தியாகி விடும்.
இரத்ததானம் செய்பவரின் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு மேல் இருக்க வேண்டும்.
இரத்ததானம் செய்பவரின் எடை 45 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும்.
இரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம்.இரத்ததானம் செய்ய இருபது நிமிடங்களே ஆகும்.
இரத்ததானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681.
உடுமலைப்பேட்டை 👍👍👍🌷🌷🤝🤝
சனி, 8 டிசம்பர், 2018
Sivakumar Kumar is celebrating a birthday with கார்த்திக் நாயக்கர் in Udumalaippettai.
December 9,
உடுமலைப்பேட்டை நமது மாப்பிள்ளை ..C .மனோகருக்கு அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..மாப்பிள்ளை மனோகர் ..படித்தது உடுமலைப்பேட்டை ருத்திர வேணி பாலிடெக்னிக்கில் இயந்திரவியல் படித்து ..தன் சுயசார்புடன் தற்பொழுது
CM Engine service.... என்ற நிறுவனத்தை தொடங்கி ...நல்லமுறையில் தமிழ்நாடு ,கேரள ,கர்நாடக ஆகியபகுதிகளில் சென்று நல்லமுறையில் பணிசெய்து கொண்டுள்ளார் ...நம் கம்பள சமுதாயத்தில் தொழில்முனைவோரக இருப்பது நமக்கு பெருமையும் கூட ...நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையில் உறுப்பினர் ...நம் இளைய சொந்தங்களுக்கு தொழில் தொடங்கவோருக்கு ஒரு முன்னோடியாக வழிகாட்டுவார் ....
15 kva to 750 kva kirloskar engine top overhauling.
Full overhauling.complaint .break down .oilservice.+alternator .electrical work. +jcb engine service only .
Service Engineer...Mr.Manoharan
Contact Number-9865024743 ...என் இனிய மனோகர் மாப்பிள்ளைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
kambalavirucham.in,
manamangalyam.in,
https://sivashyamsassociates.com
வெள்ளி, 7 டிசம்பர், 2018
உடுமலைப்பேட்டை ...நகரம் ..உடுமலை சுற்றி 57 கிராமங்களில் கம்பள சொந்தங்கள்
என் அருமை தம்பி...சேலம் பாறைப்பட்டி ..சக்திவேல் தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
தம்பியை முதன் முதலில் சேலத்தில் பணிபுரிந்த பொழுது ...மேச்சேரி மாப்பிளை விஜய்யை சந்தித்துவிட்டு ...சக்தி தம்பியை அறிமுகம் செய்துவைத்தார் ..சேலத்தில் இருந்து பாறைப்பட்டி செல்லும் பொழுது ..வழிகேட்டு பாறைப்பட்டி சேர்ந்தவுடன் தம்பியின் உபசரிப்பு பிரமாதம் ...என்ன தம்பியின் தாத்தா தான் என்னை எந்த ஊர் ..என்ன குலம் ...உங்க ஊரின் மந்தை பற்றி கேட்டார் ..எனக்கு தெரிந்தது எல்லாம் ..தளி ஜல்லிபட்டி மந்தை தான் தெரியும் (புரியும் என்று நினைக்கிறன் )மந்தை என்ற வார்தை அப்பொழுது தான் நான் அறிகிறேன் ..எப்படியோ ..போட்டோ ராஜேந்திரன் தம்பி ..நம்ம ஊரு மந்தை தொப்பை நாயகன் மந்தை என்று சொன்னது நினைவுக்கு வந்தது ..நேனு .தொப்பை நாயக்கன் என்று சரியாக சொல்லி தப்பித்தேன் ..இல்லை என்றால் குடிக்க தண்ணீர் கிடைத்து இருக்காது ..குலமும் ..நான் குஜ்ஜ பொம்மு என்று தையறியமாக சொல்லி தப்பித்தேன் ..சகதிவேல் தம்பியின் தாத்தா அவர்கள் நம் உடுமலை சொந்தங்களை கேட்டு தெரிந்துகொண்டார் ..தம்பியும் இன்னும் பல சொந்தங்களை அறிமுகம் செய்து வைத்தார் ..அப்படியான சேர்த்த சொந்தங்கள் அதிகரித்துக்கொண்டே உள்ளது ..உடுமலை டு பாறைப்பட்டி சொந்தங்களின் இணைப்பு ...பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி சகதிவேல் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681,,
குறிப்பு :.எப்பவும் ..நம்ம பாலமன்னா மாப்பிள்ளைகள் தான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருப்பார்கள் ..எப்படி ..குஜ்ஜ பொம்மு தம்பி மட்டும் விதிவிலக்கா இருக்கிறாரே ..
செவ்வாய், 4 டிசம்பர், 2018
இன்று நான் சந்தித்த தம்பி .....சக்தி பாலாஜி
தம்பி பெயர் சக்தி பாலாஜி ...பெயர் க்கு ஏற்றார் போல் உடலுக்கு தேவையான ஊட்டசக்தி ...பால் வியாபாரத்தில் உடுமலையில் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் ...தம்பியின் சொந்த ஊர் தேனீ ..மரிக்குண்டு..தாய்தந்தையர் பிறந்த ஊர் ..கடந்த 20 வருடங்களுக்கு முன் உடுமலை போடிபட்டியில் வசித்து வந்தனர் ..அங்கிருந்து பெரியகோட்டை பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேல் ..RVS பால்பண்ணை .தன தந்தையின் உழைப்பால் தொழிலை கற்றுக்கொண்டு இன்று ஒரு சிறிய பால்பண்ணை நிறுவனமாக மாற்றி ..அழகாக தொழில் வரி .வருமானவரி ..தாக்கல் செய்து ..தனது வியாபாரத்தை அடுத்தகட்ட அழகா எடுத்துச்செல்கிறார் ..அதிகாலை 3 மணியளவில் தொடங்கி இவரது காலையில் 10 மணி வரையில் ..மாலை 4 மணிமுதல் இரவு 7மணிவரை காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு இந்த வியாபாரத்தின் அடிசுவடியை கற்றுக்கொண்டு வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி ..இன்று தம்பியை சந்தித்து பேசியது மகிழ்ச்சி .அடுத்தகட்ட வியபார திட்டங்களையும் ..அடுத்த கட்டத்திற்கு விரிவாக்கம் செய்வது குறித்து பேசியதும் ..அருமை ..தம்பியின் வியாபாரம் ..இல்லங்களில் நடைபெறும் விசேஷ நிகழ்வுகளுக்கும் ..கடைகள் ..உணவகங்கள் ..ஆர்டரின் பேரில் சரியான நேரத்திற்கும் விநியோகம் செய்து வாடிக்கையாளர்கள் தேவையை நிறைவேற்றுவது அருமை ..தம்பி..கொடையணி பொம்மு ...இன்று படித்து அரசு வேலைக்குத்தான் செல்வேன் ..தனியார் கம்பனிக்கு தான் செல்வேன் என்று முயலும் காலத்தில் ..தான் ஒரு தொழில்முனைவோராக ஆர்வத்துடன் ..புது புது திட்டங்களுடன் செயல்படுத்தி முன்னேறிவருவது ..நம் கம்பள சொந்தங்களுக்கு ஒரு முன்னூதாரணமாகவும் ..வழிகாட்டியாகவும் திகழ்வது நமக்கு பெருமையும் கூட ..வாழ்த்துக்கள் தம்பி சக்தி பாலாஜி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
www.sivashyamsassociate.com,
திங்கள், 3 டிசம்பர், 2018
கிறிஸ்துமஸ் டிசம்பர் மாதத்தின் சிறப்பு ...
டிசம்பர் மாதத்திற்கு இருக்கும் இந்த சிறப்புகள் வேறு எந்த மாதத்திற்கும் கிடையாது தெரியுமா?
ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் இருக்கிறோம். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிற்கே டிசம்பர் என்பது ராசியில்லாத மாதமாகும். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் இயற்கை சீற்றங்களாலும், பல அசம்பாவிதங்களாலும் டிசம்பர் மாதம் என்றாலே நமக்குள் ஒரு அச்சம் பிறக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக சுனாமி, வெள்ளம், அதேசமயம் உலகம் முழுவதும் இது விழாவிற்கான காலமாக கருதப்படுகிறது.
ஏனெனில் இந்த மாதத்தில்தான் புனித இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி டிசம்பர் மாதத்தை சிறப்பானதாக காட்ட பல விஷயங்கள் உள்ளது. மற்ற மாதங்களுக்கு இல்லாத பல தனிச்சிறப்புகள் டிசம்பர் மாதத்திற்கு உள்ளது. அந்த சிறப்புகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
டிசம்பர் மாத்தின் அற்புதமான சிறப்பு என்னவென்றால் இந்த வார்த்தை தோன்றிய விதம்தான். டிசம்பர் என்னும் வார்த்தை இலத்தீன் வார்த்தையான டிசம் என்பதில் இருந்து தோன்றியது. அதன் அர்த்தம் என்னவெனில் 10 ஆகும். பண்டைய ரோமானிய நாட்காட்டியில் 10வது மாதம் டிசம் என குறிப்பிடப்பட்டது.
ஆஸ்கார் விருது
வருடம்தோறும் பல படங்கள் ஆஸ்கார் விருதை பெறுகிறது. ஆனால் ஒட்டுமொத்த சினிமா வரலாற்றிலும் மாதங்களின் பெயரை கொண்ட படங்களில் ஆஸ்கார் விருது வாங்கிய ஒரே மாதம் டிசம்பர் மட்டும்தான். அந்தத் படத்தின் பெயர் டிசம்பர் 7. இது ஜான் போர்டு என்பவரால் 1943ஆம் ஆண்டு பேர்ல் ஹார்பர் பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படமாகும்.
பணம் புரளும் மாதம்
ஆய்வுகளின் படி ஆண்டிலேயே டிசம்பர் மாதத்தில்தான் ஏடிஎம்-களில் இருந்து அதிகமாக பணம் எடுக்கப்படுகிறது. மற்ற மாதங்களில் எடுக்கப்படும் பணத்தை காட்டிலும் டிசம்பர் மாதத்தில் 3 மடங்கு அதிக பணம் எடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு பிரிட்டனில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 11 பில்லியன் பணம் எடுக்கப்படுகிறது. இதன்மூலம் டிசம்பர் மாதம் வியாபாரங்கள் அதிகம் நடக்கிறது என்பது தெளிவாகிறது. பிரிட்டனில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதே நிலைதான்.
ஆப்பிள் கடிகாரம்
ஆப்பிள் நிறுவனத்தின் கடிகாரம் என்பது உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஒன்று. அந்நிறுவனத்தின் அறிக்கையின்படி வருடம்தோறும் டிசம்பர் மாதத்தில் அவர்களின் கடிகாரங்களின் விற்பனை இருமடங்கு அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி மற்ற நிறுவனங்களும் டிசம்பர் மாதத்தில் தங்களின் விற்பனை அதிகரிப்பதாக கூறியுள்ளனர். மற்ற மாதங்களை காட்டிலும் டிசம்பர் மாதத்தில் மக்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும், புதிய பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மனித உரிமைகள் நாள் உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் மக்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் மனித உரிமைகள் தினம். 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகளை பாதுகாக்கும் நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் உலகின் பல மூலைகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் காப்பாற்றப்பட்டனர்.
காதலுக்கு ஏற்ற மாதம்
இது உங்களுக்கு அதிர்ச்சியானதாக இருக்கலாம் ஆனால் புள்ளி விவரங்களின் படி உலகம் முழுவதும் டிசம்பர் மாதத்தில் காதலை சொன்னவர்களுக்கு அதில் வெற்றிதான் கிடைத்துள்ளது. உங்களுக்கு திருமணம் செய்யவோ அல்லது உங்கள் காதலன்/காதலியிடம் காதலை சொல்லவோ விரும்பினால் அதற்கு மிகச்சிறந்த மாதம் டிசம்பர்தான். இந்த மாதத்தில் காதலை கூறும்போது " YES" சொல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. பெரும்பாலான காதல் முன்மொழிதல்கள் கிறிஸ்துமஸ் வாரத்தில்தான் நடக்கிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)