சனி, 14 ஜூலை, 2018

குடும்ப வாழ்க்கை ... ....
மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த கணவன்மார்களும், எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களும் இந்த பதிவு சமர்ப்பணம்.
================================
பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியை பார்த்து கேட்டார்.
"உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?"
அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை. அவர் சந்தோஷமாகவே இருந்தார்.
ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார். கணவர் அதிர்ந்தார். ஆனால், மனைவி தொடர்ந்தார்.
"என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை. என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை. ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை. என்னையே சார்ந்தது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம்."
"வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேனென்றால், நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்."
"நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே. இது ஒரு நீண்ட பட்டியல்."
"என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு. நிறைய இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை. வெளியே சென்றாலோ, வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ, பணக்காரியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை."
"திருமணத்துக்கு முன்னும் சந்தோஷமாகத்தான் இருந்தேன், பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன். என்னை பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்."
"என் வாழ்க்கையை நான் விரும்ப காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமானதாக இருப்பதால் அல்ல. நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால். நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு."
"இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன். இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. அதனால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது" என்றார்.
கைதட்டல் ஓயவே இல்லை.
உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். வெயிலோ, மழையோ, உடல் சரியில்லையா, பணமில்லையோ, காயப்பட்டிருந்தாலோ, விரும்பப்படவில்லையோ உங்கள் மனதில் உள்ள சந்தோஷத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். உங்களை நீங்கள் மனதார மதிக்கும்வரை உங்களுக்குள் நீங்களே சந்தோஷப்பட்டுக்கொள்ளுவீர்கள். சந்தோஷம் உள்ளே உள்ளது. வெளியில் இல்லவே இல்லை....

வெள்ளி, 13 ஜூலை, 2018


என் நண்பர்கள் வட்டம்...

என் நண்பர்கள் வட்டம் சிறியது  ...அவ்வப்பொழுது மனதிற்கு பிடித்த பணியையும் தாண்டி நண்பர்களுடன் பேசுவது மிகச்சொற்பம்..ஈரோட்டில் முகநூலில் கிடைத்த நண்பர் பொக்கிஷம்..மணிகண்டன் .7 வருட நட்பு ...கணிப்பொறியாளர் -பெங்களூர் .சமூக செயல்பாட்டாளர் ....அடிக்கடி ஷ்யாமின் நலனை அதிகம் விசாரிப்பார் ... மாதம் ஒருமுறை  தொலைபேசியில் பேசிக்கொள்வோம் ..வருடம் தவறாமல் .புத்தக கண்காட்சியில்.குழந்தைகளுக்கான நிகழ்வில் சந்தித்து கொள்வோம் ...பேசும்பொழுது கேட்கும் தகவல்களை ..கட்டுரை வடிவில் கொண்டு வந்துவிடுவார் ...எதிர்கால தொழிநுட்பங்கள் ,எதிர்கால பணிகள் எப்படி இருக்கப்போகிறது ...நம்மை எப்படி மாற்றி கொள்ளவேண்டும் ..வாழ்க்கைமுறையை ,எதிர்காலத்தில் எப்படி எதிர்கொள்ளவேண்டும் பேசி தெரிந்துகொள்வோம் ...இனிவரும் நாட்களில் உங்களுடன் அதை பகிர்ந்துகொள்வதை பெருமைகொள்கிறேன் ...

புதிய நுட்பங்கள் குறித்து நிறையப் பேர் பேசினார்கள். இது குறித்தான விரிவான உரையாடலுக்கு நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. படிக்கும் போதும், வேலை தேடும் போதும் நாம் நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்போம். அந்தந்த காலகட்டத்திற்கான புதிய நுட்பங்கள் பற்றி நமக்கு ஓரளவுக்காவது தெரியும். வேலை கிடைத்தவுடன் நம்முடைய தேடல் வெகுவாக குறைந்துவிடுகிறது அல்லது கவனம் சிதறுகிறது. கற்றல் சம்மந்தமாக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்? 

நேரம் இல்லை என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள இயலாத காரணங்கள். ஒரு நாளைக்கு ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் இருக்கிறோம்? யூட்யூப்? டிவிட்டர்? வாட்ஸாப்? அதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது? மேற்சொன்ன எதுவுமே தவறில்லை. எந்நேரமும் படிப்பும் வேலையாகவே சுற்ற முடியுமா? ஆனால் இந்த உலகம் நம்மிடம் புதிது புதிதாக எதையாவது எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கிறது. வருடம் இருபது லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து பதினைந்து வருட அனுபவமுள்ள ஆள் செய்யக் கூடிய வேலையை வெறும் ஐந்து வருட அனுபவம் கொண்ட ஒருவருக்கு வருடம் எட்டு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து முடித்து விட முடியும். பத்து வருடம் கூடுதல் அனுபவம் இருக்கிறது என்பதற்காக மட்டுமே நம்மை எதற்கு அவர்கள் வேலையில் வைத்திருக்க வேண்டும்? நம்முடைய பங்களிப்பு என்னவாக இருக்கிறது என்பது முக்கியம். செலவுக் குறைப்பு என்று வந்தால் ஏழு கழுதை வயதானவர்களைத்தான் முதலில் வெட்டுவார்கள். 

நவீன யுகத்தில் அனுபவத்தை விடவும் அறிவுதான் நம்மைப் பற்றி அடுத்தவர்களிடம் பேசும். அதை கூர் தீட்டிக் கொண்டேயிருக்க வேண்டியது அவசியமாகியிருக்கிறது. அதிகமில்லை- அடுத்த ஆறு மாதங்களுக்கு தினசரி வெறும் அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும். புதிய ஒன்றைக் கற்றுவிட முடியும். அதைத்தான் நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.  

முப்பது 'ஹாட் நுட்பங்கள்' என்று குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பட்டியலை தர முடியுமா? என்று கேட்டிருந்தார்கள். வாழைப்பழத்தை உரிக்க சிரமப்படுகிறார்கள். உண்மையில் ஒன்றைத் தேடும் போது குதிரைக்கு கடிவாளமிட்ட மாதிரி அதை மட்டுமே நோக்கி ஓட வேண்டியதில்லை. உதாரணமாக இரண்டாம் உலகப் போர் குறித்தான ஒரு படத்தை பார்க்கிறோம் என்றால், படத்தில் இடம் பெறும் வரலாற்றுச் சம்பவங்கள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள படம் குறித்து மேலும் தேடுகிறோம். வெறுமனே அந்தப் படம் குறித்து மட்டும் தேடினால் என்ன சுவாரசியம் இருக்கிறது. வால் பிடித்த மாதிரி ஒவ்வொன்றாக பிடித்து போய் ஒரு வரலாற்றுச் சித்திரத்தை மனதுக்குள் உருவாக்கிக் கொள்ளும் போதுதான் நம்முடைய தேடல் முடிவடையும். இந்த வால் பிடித்தல் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும். உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் செல்லும் க்ரோஷியா உலக வரைபடத்தில் எங்கே இருக்கிறது எனத் துழாவி அதன் அழகான அதிபர் தொடங்கி அவரது கணவர் பொறியியல் படிப்பை முடித்தவர் என்பது வரைக்கும் தேடுவதில்தான் நம்முடைய தேடலுக்கான சுவாரஸ்யமே இருக்கிறது. 

படிப்பிலும் கூட அதுதான் நம்மை மேலும் மேலும் தேட வைக்கும். ஒன்றுமில்லை- தினசரி நாம் பயன்படுத்துகிற விஷயங்களையே எடுத்துக் கொள்வோம். ஜி.பி.எஸ் எப்படிச் செயல்படுகிறது? அவற்றுக்கான நுட்பம் என்ன? இப்படியே போனால் Geo - Spatial நுட்பம் பற்றி ஓரளவுக்குத் தெரிந்து கொள்வோம். அதில்தான் ஜி.ஐ.எஸ் வருகிறது. செயற்கைக் கோள் வருகிறது. அதெல்லாம் எனக்கு என்ன சம்பந்தம் என்றெல்லாம் எதையும் கேட்க வேண்டியதில்லை. ஷங்கர் படத்தில் செந்தில் சொல்வது போல இன்பர்மேஷன் இஸ் வெல்த்'. நமக்கு அவசியமே இல்லையென்றாலும் நம் பிள்ளைகளுக்கு சொல்லித்தரவாவது உதவும்.

'இந்த கார் இவ்ளோ பெருசு..ஆனா எடை ரொம்ப குறைவு' என்று சாதாரணமாக பேசுவார்கள். ஆனால் அட்வான்ஸ்ட் மெடீரியல் துறை எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பது பற்றி நமக்கு பெரிய அளவுக்குத் தெரியாது. காம்போசிட், நேனோ, பாலிமர், அல்லாய்ஸ் என்று அது கன வேகத்தில் பயணிக்கிறது. எந்திரவியல் சார்ந்து இருப்பவர்கள் இத்தகைய துறைகளைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசி வைத்திருந்தால் எப்படியும் அத்தகைய ஆட்களுக்கான தேவை இருக்கும். 

மருத்துவம் சார்ந்த நுட்பங்களில் இருப்பவர்களுக்கு ஜெனோமிக்ஸ், பயோனிக்ஸ் என்றெல்லாம் இருக்கிறது. வரிசையாக அடுக்கலாம். 3 - டி பிரிண்டிங், ஆற்றல் (எனர்ஜி) துறையில் வந்திருக்கும் நவீன விஷயங்கள் என்று ஒவ்வொரு துறையும் அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. 

'நீ இதெல்லாம் படிச்சு வெச்சு இருக்கியா?' என்று கேட்டால் எல்லாவற்றையும் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் என்ன புதிய அம்சங்கள் வந்திருக்கின்றன என்று ஓரளவுக்கு கவனித்து வைத்திருக்கிறேன். எலெக்ட்ரானிக்ஸ் ஃபார் யூ மாதிரியான தளங்களை மாதம் இரண்டு முறையாவது மேய்ந்துவிடுவேன். இதே மென்பொருள் துறையில் நான் இருக்கப் போவதில்லை. ஆனால் நான்கு பேரிடம் பேசும் போது மேல்மட்ட அளவிலாவது எனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்ளவாவது தெரிந்து கொள்கிறேன். 

கார்பொரேட் நிறுவங்களின் பணியில் இருப்பவர்கள் தம்மை கூர் தீட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். கார்பொரேட் யுகத்தில் இருப்பவர்கள் மட்டுமில்லை- பேராசிரியர்கள், ஆசிரியர்களும் இதைப்பற்றியெல்லாம் புரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு வருடம் இடைவெளி விட்டாலும் இந்த உலகம் பத்து வருடத்துக்கான வளர்ச்சியுடன் முன்னேறி போய்விடும். ஏற்கனவே சொன்னது போல் நம்முடைய அறிவு மட்டுமே நமக்காக அடுத்தவர்களிடம் பேசும். அதை ஆயுதமாக பயன்படுத்தும் வரைக்கும்தான் இந்த நவீன யுகத்தில் நம்மால் ஓட முடியும் இல்லையென்றால் உலகம் அதன் போக்கில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும். நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. 

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..

வியாழன், 12 ஜூலை, 2018



மழை ...
கொஞ்சம் நிம்மதி ......
ஆனி மாதம் மழை பெய்திருக்கிறது.
மூன்று  உழவு மழை இருக்கும். எட்டு மாதங்களாக மழையே இல்லை. அணைகள் நிரம்பி இருக்கிறது ..குளங்கள் ஓரளவு நிரம்ப தொடங்கியிருக்கிறது ..இந்த மழையும் இல்லாமல் போயிருந்தால் குடிக்கக் கூட தண்ணீரில்லாமல் தவித்து இருக்க வேண்டும். ஊர் தப்பித்துவிட்டது. காரைக் குட்டை பாதி நிரம்பியிருக்கிறது...

புதன், 11 ஜூலை, 2018

அன்பு நண்பர்  மணிகண்டனின் பதிவு ......

எங்கள் அலுவலகத்தில் கடந்த வருடம் ஒருவரை மேலாளர் ஆக்கினார்கள். மேலிடத்தில் நல்ல செல்வாக்கு அவருக்கு. எப்படியும் பல வருடங்கள் இருப்பார் என்று அவரைப் பார்த்தாலே பம்முகிறவர்கள் அதிகம். கடந்த வாரம் எல்லோரையும் அழைத்து ராஜினாமா செய்துவிட்டதாகச் சொன்னார். பலருக்கும் அதிர்ச்சி. 'உன்னை இங்க நல்லாத்தானய்யா வெச்சு இருந்தாங்க' என்பதுதான் பலருக்குள்ளும் ஓடுகிற கேள்வியாக இருந்தது. 'எனக்கு இங்க எந்தக் குறையுமில்லை' என்று சொல்லிவிட்டு கடந்த சில வருடங்களாக 'டேட்டா அனலிடிக்ஸ், பிக் டேட்டா' ஆகியவற்றை படித்துக் கொண்டிருந்தாராம். புதிய நிறுவனமொன்றில் வாய்ப்பு வந்திருக்கிறது. எட்டிக் குதித்துவிட்டார். 'இப்போ நல்லா இருக்கிறேன் என்பதைவிடவும் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறேன்' என்று கணக்குப் போட்டிருக்கிறார் மனுஷன். இனி பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு இந்த புதிய நுட்பத்தில் குப்பை கொட்டிவிடுவார். 

மென்பொருள் துறை என்றில்லை பொதுவாகவே இன்றைக்கு பணியில் இருப்பவர்கள் பலருக்கும் 'அடுத்தது என்ன?' என்றோ அல்லது 'எதில் அப்டேட் செய்து கொள்வது' என்றோ குழப்பம் இருக்கும். நேற்று ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. மேற்சொன்ன விஷயம்தான் ஒரு அமர்வில் விவாதப் பொருள்.  படித்துவிட்டு உடனடியாக வேலை மாறுகிறேன் என்றெல்லாம் மண்டை காய வேண்டியதில்லை. அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் கவனிக்கப்படும் தொழில் நுட்பம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை குறித்தான ஆராய்ச்சியைத் தொடங்கி அதில் கற்றுக் கொள்ளத் தொடங்குங்கள் என்று பேசினார்கள். புதிய நுட்பத்தைக் கற்றுக் கொள்ளும் கால கட்டத்தில் தினசரி அரை மணி நேரம் ஒதுக்கி வார இறுதிகளில் சற்று அதிகப்படியான நேரத்தை ஒதுக்கினால் ஆறு மாதம் முதல் ஓராண்டு காலத்தில் தெளிவாகப் படித்துவிட முடியும். அதன் பிறகான ஓராண்டு காலம் நாம் கற்றுக் கொண்டவற்றில் நிபுணர் ஆவதற்கான வேலைகளைச் செய்யலாம். பிறகு அந்த நுட்பம் கோலோச்சும் காலம் வரைக்கும் நமக்கான தேவை இருந்து கொண்டேயிருக்கும். அதிகபட்சம் முப்பதாண்டுகள் இந்தத் துறையில் இருப்போமா? இப்படி இரண்டு அல்லது மூன்று முறை பாம்பு சட்டையை உரிப்பது போல உரிக்க வேண்டியிருக்கும். 

துறை மாற வேண்டும் என்று கூட அவசியமில்லை. குறைந்தபட்சம் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவாவது இந்த சட்டையுரித்தால் மிக அவசியம்.

படிப்பது சரி; எதைப் படிப்பது என்பதுதானே குழப்பமாக இருக்கிறது என்று கேட்கிறவர்களுக்கு சொல்ல ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. கூகிளே கண்கண்ட தெய்வம்.

கிட்டத்தட்ட முப்பது துறைகள் செம ஹாட் அல்லது என் துக்கினியூண்டு மூளைக்கு அவைதான் தெரிகின்றன. துறைகள் என்றால் முதல் வரிசையில் இருப்பவை- ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ், க்ளவுட் மாதிரியான பெருமொத்தமானவை. இப்படி வேறு என்ன துறைகள் இருக்கின்றன என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவே ஒன்றிரண்டு மாதங்கள் பிடிக்கும். தெரிந்து கொள்வது என்றால் ஒவ்வொன்றைப் பற்றியும் ஐந்து நிமிடங்கள் பேசுகிற அளவுக்காவது நமக்கு தெரிய வேண்டும். அந்தப் புரிதல் உருவாகிவிட்டால் இவற்றில் நமக்கு எது பொருத்தமானது என்ற முடிவுக்கு வந்துவிடலாம். 

வெறும் துறை சார்ந்த அறிவு மட்டும் போதாது. உதாரணமாக வாய்ஸ் அசிஸ்டெண்ட்ஸ் என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய இடத்தை பிடிக்கப் போகின்றன. கூகிள் அசிஸ்டென்ட் மாதிரி. இனி வரும் காலத்தில் பெரும்பாலான நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவையை அவைதான் பார்த்துக் கொள்ளும். நாம் ஏர்டெல்லுக்கோ அல்லது வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கோ அழைத்து கேள்வி கேட்டால் அவைதான் பதில் சொல்லும். மேம்போக்காக பார்த்தால் எளிமையாகத் தெரியும். இதில் எவ்வளவு நுட்பங்கள் இருக்கின்றன? ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு ஒரு குரல் இருக்கும். அதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் ஒரே கேள்வியை வெவ்வேறு விதமாகக் கேட்கக் கூடும். இதை உள்வாங்கி, வகைப்படுத்தி, பதில் தேடி எடுத்து, அவர்களுக்கு பதில் கொடுக்க- Interfaces  chat bots, Natural Language Processing இப்படி நிறைய இருக்கின்றன. இதில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக வல்லுநர் ஆக முடியும். அவற்றுக்கான டூல்கள் இருக்கின்றன. 

இப்படித்தான் கிணறு தோண்ட வேண்டும். இதே போல இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், மொபைல் நுட்பங்கள், சைபர் பாதுகாப்பு என்று ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. சி, சி++ மட்டும்தான் மென்பொருள் என்று நினைக்கிறவர்கள்தான் 'இனி ஐ.டி அவ்வளவுதான்' என்று நம்புகிறார்கள். உண்மையில் இனிமேல்தான் ஐ.டியின் அசுரத்தனமான வளர்ச்சி இருக்கப் போகிறது. 

எனக்குத் தெரிந்த ஒரு வங்கி மேலாளருக்கு ஐ.டி ஆட்கள் மீது என்ன வெறுப்போ தெரியாது- எப்பொழுது பேசினாலும் 'இன்னொரு பத்து வருஷம்..ஐ.டி அவ்வளவுதான் இல்லையா' என்பார். இத்தகைய அரைவேக்காட்டு ஆட்களைப் பார்த்தால் செம எரிச்சலாக இருக்கும். இப்படி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். வங்கியில் தொடங்கி பள்ளிக்கூடம் வரைக்கும் பணியாளர்களே தேவையில்லாமல் அனைத்துமே தானியங்கி(ஆட்டோமேஷன்) ஆகும் காலம் வரலாம். ஆனால் இவற்றையெல்லாம் வடிவமைக்க, நிரல் எழுத என மென்பொருள் துறையில் ஆட்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். எழுதி வைத்துக் கொள்ளலாம்- மென்பொருள் துறை எந்தக் காலத்திலும் அழியாது. அது தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டேயிருக்கும். இதில் வேலை வாங்க வேண்டுமென்றால், தொடர வேண்டுமென்றால் நாம் நம்மை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வளவுதான். 

செவ்வாய், 10 ஜூலை, 2018

என் அருமை தம்பி ...செந்தில் அப்பையன் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...இவரின் கடின உழைப்பை பாராட்டிக்கிறேன் ...இவரை பற்றி எழுதுவதற்கு நேரம் இல்லாததால் ...ஒருசில வார்த்தைகளுடன் பிறந்த நாள் வாழ்த்துக்களை கம்பள விருட்சம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் ...
அருமையான வெளுத்து வாங்கிய மழையில் திருமண வாழ்த்துச்செய்தி ...

இன்று மாலையில் உடுமலையிலிருந்து கொடுங்கியம் ஸ்ரீ திருவேங்கடபெருமாள் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்வுக்கு செல்லும்பொழுதே மழை வெளுத்து வாங்க தொடங்கவிட்டது ..பாதுகாப்பான மழை கோட்டுடன் ,பாதுகாப்பான தலைக்கவசம் அணிந்து மெதுவாக இரண்டு சக்கரவாகனத்தில் வெளுத்து வாங்கும் மழையில் ,நனைந்துவாறு ரசித்து மெதுவாக திருமண மண்டபத்திற்கு சென்றது அருமையான பயணம் ...நம்ம தம்பி டிஜிட்டல் ராஜேந்திரன் புகைப்படக்கலைஞர் தன் கேமராவின் கண்களில் வரவேற்றது மிக்க மகிழ்ச்சி ..நம்ம செந்தில்ராம் மாப்பிள்ளையும் ,ஆசிரியர் மாரிமுத்து மாப்பிள்ளையும் ,அவர்களுடன் நலம் விசாரித்துவிட்டு ..திருமண மாப்பிளை விக்னேஷ் தேடிக்கொண்டு இருந்தேன் ..முதலில் கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் வாழ்த்து செய்தி சொல்லிவிடலாம் என்று பார்த்தால் காலில் ஸ்கேட்டிங் சக்கரம் கட்டிக்கொண்டு வந்த சொந்தங்களை வரவேற்று கொண்டு இருந்ததை பார்த்து வியப்பு ...அமைதியாக புது கோட்டு சூட்டு கசங்காமல் நின்றுகொண்டுருப்பார் என்று பார்த்தால் ...புன்னகை மாறாமல் நண்பர்கள் ,சொந்தங்களுடன் பேசிமகிழந்தது அருமை ..தன்னுடன் பணிபுரியும் பொள்ளாச்சி ABT மாருதி நிறுவன அலுவுலக நண்பர்களுடன் பேசி எனக்கும் அறிமுகப்படுத்திவைத்தார் ..எனக்கு அவர்களை பரிச்சியம் இல்லை ..என்னை முகநூலில் ,வாட்ஸாப்ப் அறிமுகம் ஆகி என்னை தெரிந்து வைத்துஇருக்கிறார்கள் மிகவும் மகிழ்ச்சி ...மணமகளின் அண்ணன் பொறியாளர் ஜெகதீஷ்குமாரை சந்தித்து மகிழ்ச்சி ..இவருக்கு நண்பர்கள் வட்டம் பெரியது ..வந்திருந்த நண்பர்கள் ...மெட்ரோ சிட்டி மும்பை ,டெல்லி பகுதியில் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பதை அறிந்து அவர்களுடன் கலந்துரையாட நல்ல வாய்ப்பு அமைந்தது ..நம்ம மாப்பிள்ளைகள் ,தம்பிகளுடன் மணமக்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு நம்ம மாப்பிளையை விக்னேஷ் கண்டுபிடித்து திருமண மேடைக்கு வரவழைத்து ..தம்பி டிஜிட்டல் ராஜேந்திரன் (ராஜேந்திர ஸ்டூடியோ ) தன் புகைப்பட கண்களில் சிமிட்டிவிட்டு ..திருமண வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு வெளுத்து வாங்கிய மழையில் நனைந்துவாறு வீடு திரும்பியது மகிழ்ச்சி ..

மணமக்கள் ...
விக்னேஷ்வரன் M .Com .CA -கோகிலா B .Sc., Bed .,
கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் சார்பாக திருமணவாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...

ஞாயிறு, 8 ஜூலை, 2018


எதிர்காலம் ...அருமையான தலைப்பை கம்பள விருட்சம் கார்த்தி மாப்பிளை கொடுத்தது மிக்க மகிழ்ச்சி ....

எதிர்கால கம்பள விருட்சம் சமுதாயமாக .....  2027
‘இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற நிலைமை மாறி – நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி, உடைய நல்ல இளைஞர்கள் நம் கம்பள சமுதாயத்திற்கு  தேவை. இதற்குச் சந்தர்ப்பங்கள் இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்றன.

இளைய சமுதாயம், எழுச்சி மிக்க எண்ணங்கள் கொண்ட இளைய சமுதாயம் – நம் கம்பள சமுதாயத்திற்கு  ஓர் அரும் பெரும் செல்வமாகும்.

எழ்ச்சி மிக்க எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள் இன்றியமையாத தேவை. அப்படிப்பட்ட இளைஞர்களை உருவாக்குவதுதான் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பணியாக இருக்கும் 

1 . கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் இருக்கும்,சமூக – பொருளாதார இடைவெளி குறைந்த கம்பள விருட்சம் சமுதாயமாக  மாற்ற வேண்டும்.

2 . சுத்தமான தண்ணீரும், அனைவருக்கும் தேவையான எரிசக்தியும் – எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும்  கம்பள விருட்சம்  சமுதாயமாக மாற்ற வேண்டும்.

3. விவசாயம், தொழில்கள், சேவைத்துறைகள் ஆகியவை ஒருங்கிணைந்து, மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் கம்பள விருட்சம் சமுதாயமாக மாற்ற வேண்டும்.

4. சமூக பொருளாதார வேறுபாடுகளை மீறி – பண்பாடு நிறைந்த ஒரு தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கும் கம்பள விருட்சம் சமுதாயமாக    மாற்ற வேண்டும்.

5. வேறுபாடு இல்லாமல், தரமான மருத்துவ வசதி அனைவருக்கும் கிடைக்கக் கூடிய கம்பள விருட்சம் சமுதாயமாக   மாற்ற வேண்டும்.

6. வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு,கல்லாமை களையப்பட்டு, பெண்களுக்கும் குழைந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதயத்தில் இருக்கும் யாரும், ‘நாம் தனிமைப்படுத்தப் பட்டுவிட்டோம்’ என்ற எண்ணம் இல்லாதகம்பள விருட்சம் சமுதாயமாக   மாற்ற வேண்டும்.

7. ஓர் இனிமையான வளமான பாதுகாப்பு மிகுந்த அமைதியான சுகாதாரமான வளமிக்க வளர்ச்சி பாதையை நோக்கிப் பீடு நடை போடக் கூடிய கம்பள விருட்சம் சமுதாயமாக    மாற்ற வேண்டும்.

கம்பள விருட்சம் குழுமம் ....
என்றும் அன்புடன் உடுமலை சிவகுமார் ...9944066681...

தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் -கேரளா

கடந்த வெள்ளியன்று ...கோழிக்கோடு (calicut ) பல்கலைக்கழகம் கல்வியில் துறையின் தலைவர் பேராசிரியர் முனைவர் .திரு .கெழு அவர்களுக்கு தனது பல்கலைக்கழக பணியின் நிறைவு  நாளின் போது நமது மாவீரர் தளி எத்தலப்ப மன்னரின் வரலாற்று நூலை ..நமது தமிழ் பேராசிரியர் திரு .கண்டிமுத்து அவர்கள் கொடுவாயூர் கல்லூரியின் சார்பாக வழங்கி பணிநிறைவு நாளை மகிழ்ச்சிடன் வழியனுப்பினர் ...நூலை பற்றி அப்போதே தளி எத்தலப்பருக்கும் கேரளவர்மனுக்கும் தகவல் தொடர்பு இருந்ததை தெரிவித்தார் என்பது நமக்கு கூடுதல் செய்தி ....கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக எத்தலப்பர் -கேரளவர்மன் பற்றி செய்திகளை அறிய களப்பணி கேரளாவை நோக்கி பயணம் ..


என்றும் அன்புடன் சிவக்குமார் ...9944066681...

சனி, 7 ஜூலை, 2018

என் அன்பு மாப்பிள ரெமோ சிவா மாவத்தூரில் உயிர்மூச்சாக விவசாயத்தையும் ...திருப்பூரில் தொழிலை கற்க ..புது தொழில் முனைவோரக வருவதற்கு தன் உடலை வருத்தி ..வாழக்கையில் வளரவேண்டும் என்று  பணிபுரிந்துகொண்டிருக்கும் ..மாப்பிள ரெமோ சிவா ..  அவர்களுக்கு ...நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர் ...அறக்கட்டளையில் உயர்நத நிலைக்கு வரவேண்டும் .நமது சமுதாய பணியை திறம்பட தீயாக சமுதாய வளர்ச்சிக்கு பணி செய்யவேண்டும் என்ற சிறுவயதில் உற்சாகத்துடன் வளர்ந்து கொண்டிருக்கும் மாப்பிளைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....
இன்று அலுவலக பணியை முடித்து வீடு வந்தவுடன் ...எங்கள் வீட்டில் குடியிருக்கும் செல்ல குழந்தைகள் ...மாமா நாளைக்கு எங்கள் வகுப்பில் சுற்றுப்புறசூழல் வகுப்பிற்கு ..அழகாக செய்து ...மாமா எப்படி இருக்குங்க நீங்கள் சொல்லுங்கள் வேற எதாவது மாற்றம் செய்யவேண்டுமா ...என்று கேள்வி கேட்டனர் ...அவர்களுக்கு சிறு டிப்ஸ் ...அன்பு பரிசாக இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தியது அப்படியொரு சந்தோசம் ....குழந்தைகளை உற்சாகப்படுத்துவது அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் ...
வளரும் இத்தலைமுறை குழந்தைகளை ...அறிவு சார்ந்தவர்கள் ...நாளை அவர்களின் விருப்பமான துறையை தெரிந்துதெடுக்க வாய்ப்புகள் ,கூர்நோக்கு சிந்தனை வளரும் ...அதற்கு உறுதுணையாக நாம் இருப்போமே 💐💐💐💐🤙

பிறந்த நாள் விழா .....குழந்தைச்செல்வங்களுடன்

பிறந்தநாள் விழா எல்லோரும் பெரியவர் முதல் சிறியவர் வரை கொண்டாடுவோம் ..சில  பிறந்த நாள் விழாக்கள் தனித்தன்மை பெறுகிறது ..இன்று அருமை நண்பர் திரு .கண்ணபிரான் -ஆசிரியர் இராகல்பாவி ...கலிலீயோ அறிவியல் இயக்கம் தலைவர் ..அவரின் செல்ல குழந்தை ..பவன்யா பிறந்த நாள் விழா ..காலையில் உடுமலைப்பேட்டை நேரு வீதியில் உள்ள மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் மலை அரசர்களின்  தளஞ்சி ,கோடந்தூர் பகுதியில் இருந்து தங்கி படித்து கொண்டிருக்கும் குழந்தை செல்வங்களுடன் இனிப்புகள் வழங்கி அவர்களுடன் பிறந்த கொண்டாடியது மிக்க மகிழ்ச்சி ...உடுமலை நேரு வீதியில் கடந்த 22 வருடங்கள் இப்பள்ளி இயங்கி கொண்டிருக்கிறது ...ஆசிரியர் புருசோத்தமன் அவர்களுடன் கலந்துரையாடியபொழுது ..இப்பள்ளியில் பயன்றவர்கள் நல்ல வேலைவாய்ப்பில் பணி புரிந்துகொண்டுள்ளார்கள் /வருடம் தவறாமல் இப்பள்ளிக்கு மறவாமல் படித்துகொண்டுருக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் அளித்து செல்கின்றனர் என்று கூறியது மிக்க மகிழ்ச்சி ..மாலையில் ஆசிரியர் திரு .கண்ணன்பிரான் அவர்கள் வீட்டில் நடைபெற்ற தன் வீட்டு மகாலக்ஷ்மி செல்வி ..பவன்யா பிறந்த நாள் விழாவிற்கு சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு ..தளி எத்தலப்பர் மன்னரின் வரலாற்று நூல் " தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் " நூலை வரலாற்று ஆயவாளர் அருட்செல்வம் ,தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து ,தழல் ரமேஷ் ,சத்தியம் கோச்சிங் சென்டர் திரு சகதிவேல் அவர்களுடன் சேர்ந்து வரலாற்று நூலை பரிசளித்தது மிக்க மகிழ்ச்சியை அளித்தது ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681,,,

செவ்வாய், 3 ஜூலை, 2018

எனக்கு நாம் ஒரு சின்ன முகநூல் வருடம் ..(2008)..மற்றும் வாட்சப் (2015)வட்டத்தில் இருப்பது போல அடிக்கடி தோன்றும்.. இதில் உள்ள அனுபவங்கள்..
இந்த வட்டத்தில், முதன் முதலில் ஆந்தை ரிபோர்ட்டர் Aanthai Kumar ..என் குரு நாதர் .ஷாஜி என்று அழைக்கும் ஷாஜஹான் சார் ..புதியவன் பக்கம்  எழுத்துக்களை எடுத்து 
இணைய தளத்தில் வெளியிட்டார்கள் 
பிறகு இன் அண்ட் அவுட் என்ற ஏரியா பத்திரிக்கை வாங்கி பிரசுரித்தது..
பேஸ்புக் பரண் பதிவுகள் நல்ல பதிவுகள் என்றும் பரண் ஒரு ட்ரெண்ட் செட்டர் ஆகவும் மாறியது.
பல பக்கங்கள் ஆரம்பித்த வேகத்தில் முடங்கியது போல இல்லாமல் பெரு வளர்ச்சி அடைந்தது ரிலாக்ஸ் ப்ளீஸ் பக்கம். நல்ல பதிவுகளையும், விஷயமுள்ள எழுத்துக்களையும் எடுத்து பகிர்ந்து கொள்வார்.
குங்குமம் வலைப்பேச்சு..அப்ப ரொம்ப பேசப்பட்டது.. அதில் வரணும் என்றே பலர் சிறு பதிவுகள் போட ஆரம்பித்தனர்..
அப்படியே இப்ப வளர்ந்து பதிவாளர்கள் எல்லா பத்திரிக்கைகளிலும் வர ஆரம்பித்து விட்டனர்.
நல்ல திறமையாளர்கள் இந்த தளத்தில் உள்ள வாய்ப்பை உபயோகித்தால் தொடர் கூட பத்திரிக்கைகளில் எழுத முடிகிறது.. சிலர் எழுத்தாளர்களாக மாறினார்கள்.
ஆனால் முகநூல் எழுத்துக்கள் என்று இல்லாமல்..ஒவ்வொருவரும் ஒரு வித்தியாசம் காட்ட வேண்டும்..பல விதங்களில் வெளிப்பட வேண்டும்..
கொஞ்ச நாளில் சரக்கு காலி என்று அவர்கள் இடம் பெயராமல் இருக்க..இன்னும் புது, புது முயற்சிகளில் அழகாக வெளிப்படுவது நம் கையில் இருக்கு..
உழைத்து, யோசித்து நல்ல பதிவுகள் போடுபவர்களை அதிக நாள் மறைத்து வைக்க முடியாது. ஒரு நாள் கண்டுக்கொள்ளப்படுவார்கள்..
விஷயம் இல்லாமல் தொடர்ந்து இங்கு ஜல்லி அடிக்க முடியாது என்பதையும் சொல்கிறேன் (இது லைக் விஷயங்களில் பொறுமுவர்களுக்கு)
லைக் மட்டும் தேவை என்றால் போட்டோ, வணக்க பதிவுகள் போதும்..
கற்றுக்கொள்ள, எழுத்தை வாசிக்க கொஞ்சம் ஜாலியாகவும் மொக்கை போட சிறந்த தளம்.
நம்மை உயர்த்திக்கொள்ள நல்ல வாய்ப்பு.
இப்படித்தான் நான் இந்த தளத்தை பார்க்கிறேன். மாற்று கருத்துக்கள் இருக்கலாம்..
விவாதங்கள் மூலமும் நிறைய கற்றுக்கொள்கிறேன்.
கற்றுக்கொள்வோம் அழகாக, இனிமையாக, அன்பாக.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681,,

திங்கள், 2 ஜூலை, 2018

சினிமா ....டிக் டிக் டிக் ..

எப்பொழுதும் அதிகம் ஆர்வம் கொண்டதில்லை ...திருமண வாழ்க்கைக்கு முன் ..எனது கோவை நண்பர்களுடன் அதிக நாள் ஓடிய ஹிந்தி ,ஆங்கில படம் ,கே .ஜி ..தியேட்டர் ,கங்கா யமுனா காவேரி ,சென்ட்ரல் தியேட்டரில்  (ஆங்கில படங்கள் )பார்த்த காலங்கள் கனாக்காலங்கள் திரும்ப கிடைக்காது ...எனது திருமணம் ஆனபொழுது பார்த்த முதல் மற்றும் கடைசி படமும் S .J சூர்யா நடித்த ,இயக்கிய படம் நியூ (ஜூலை 2004)...உடுமலை லதாங்கி தியேட்டரில் பார்த்த நினைவு ...அதன் பின் கோவையில் என் செல்ல ஷியாமுடன் பார்த்த ..துப்பாக்கி (விஜய் )கமல் நடித்த விஸ்வரூபம் ..படமும் ...காக்க முட்டை படமும் தான் ..தற்பொழுது வெளிவந்த படம் டிக் டிக் டிக் ..ஒரு எதிர்பார்ப்புடன் பார்த்த படம் கூட ..பாடல்கள் இரண்டு பிடித்தது ஷ்யாமுக்கும் இந்த பாடல் பிடித்தது ..கடந்த சனியன்று பார்த்த அப்படத்தை பற்றி எனக்கு தெரிந்த ,பார்த்ததை உங்களுடம் பகிர்கிறேன். ...

இயற்கையும் அறிவியலும் எப்போதுமே எனக்குப் பிடித்தவை என்பதால், அறிவியல் புனைகதை மற்றும் பேன்டஸி படங்களை காண்பதில் ஒரு அலாதி ப்ரியம் எப்போதுமே உண்டு. மார்ஷியன், இன்டர்ஸ்டெல்லர், அரைவல் இன்னும் சில படங்கள் இந்தப் பட்டியலில் உண்டு. இன்டர்ஸ்டெல்லர் பார்த்தபின்பு தான் கிராவிட்டி பார்த்தேன் என்பதால் கிராவிட்டி எனக்கு ஒப்பீட்டளவில் இன்டர்ஸ்டெல்லரை விட பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் வரிசைப்படி கிராவிட்டியை முதலில் பார்த்திருந்தால் இன்னும் ஈர்த்திருக்க வாய்ப்புண்டு.

இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படம்… என உப தலைப்போடு விளம்பரம் செய்யப்பட்ட டிக் டிக் டிக் படத்தை பார்க்க பேராவலுடன் தான் நானும் இருந்தேன். படத்தில் வரவேற்கவேண்டிய மற்றும் உற்சாகப்படுத்த வேண்டிய விசயங்கள் இருந்தாலும் படம் பெரிதாக என்னை ஈர்க்கவில்லை.

டெக்னிக்கலாக, க்ரீன் மேட், புளு மேட்… இப்படி கிராபிக்ஸ் விசயங்களைத்தாண்டி கதை சொல்லல், கதைக்குள் விவரங்கள் சொல்லுதல் என்ற வகையில் பெருத்த ஏமாற்றம். முதலில் கல் விழுந்த குழியைப் பார்க்கும்போதே… இயக்குநர் மற்றும் ஆர்ட் டைரக்டரின் சின்சியாரிட்டி மீது கேள்வி எழ ஆரம்பித்துவிடுகிறது. அதாவது எவ்வளவோ தொலைவில் இருந்து வந்து விண்கல் விழுந்து ஏற்பட்ட குழிக்கும்… தோண்டி வைத்த குழிக்கும் வித்தியாசம் தெரிய வேண்டாமா… அந்த பள்ளத்தை சுற்றிலும் தோண்டி மண் வெளியே இழுத்த சுவடுகள் அப்பட்டமாக தெரிகிறது… அதோடு கல் உருண்டையாக இருக்கிறது… சின்னதாக இருக்கிறது… கல்லைவிட குழி பெரியதாக இருக்கிறது… சரி எரிகல் எரிந்து விட்டது என்றாலும்… நீங்கள் அந்தக்காட்சியை பாருங்கள். கல் நேராக மேல் இருந்து கீழ் வரவில்லை. ஒரு அபார்ட்மெண்டுக்குள் புகுந்து சரிவாக கிடைமட்டமாகவே வருகிறது… ஆனால் தோண்டி வைக்கப்பட்டிருக்கும் குழி… நேராக செங்குத்தாக விழுந்ததுபோல தோண்டி வைக்கப்பட்டுள்ளது. என்னடா குழி பற்றி இவ்வளவு பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள். இயக்குநர் மற்றும் அவரது குழுவினரும் ஆர்ட் டைரக்சன் குழுவினரும் இதற்கு விளக்கம் சொன்னால் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

ஒரு அறிவியல் கதையில், கதையோடு சம்பந்தப்பட்ட நிறைய அறிவியல் தகவல்களை தரவேண்டும். இந்தப்படம் அப்படி எந்த அறிவியல் தகவலையும் தந்தது போல தெரியவில்லை. அதிலும் ஜெயம் ரவி, விண்வெளியில் இருந்தபடியே இஷ்டத்துக்கு ஏதேதோ கதவு திறந்து எங்கெங்கோ விண்வெளிக்கப்பல்களுக்குள் ரொம்ப சாதாரணமாக போகிறார். வருகிறார். பூமியில் போலிஸ் ஸ்டெசன் டெக்னிக்கையே விண்வெளியிலும் பயன்படுத்தி அவ்ளோ ஹைடெக் விண்வெளிக்கப்பலில் இருக்கும் ஏவுகணையை மறைக்கிறார். ப்ப்ப்பா ஆஆஆ.

வேறெவரிடமும் இல்லாத அபூர்வமான 200 டன் ஏவுகணையை உலக நாடுகள் யாருக்கும் தெரியாமல் விண்வெளியில் மறைத்துவைக்கும் தொழில்நுட்ப வல்லமை பொருந்திய அந்த நாடு…. வெறுமனே வாய்ப்பேச்சு பேசி… ராமராஜன் காலத்து ஃபைட் பண்றவங்களையா பாதுகாப்புக்கு வைக்கும்… ஆங்கிலமே தெரியாத ஜெயம் ரவி…. அசால்ட்டாக வால்ட்டுகளை திறப்பதெல்லாம் ஸ்ஸ்ஸ்ஸப்பா கேட்டகிரி தான். அதோட இந்த ரிச்சி ஸ்ட்ரீட் ஹேக்கர்ஸை இதோட நிப்பாட்டிக்குங்கப்பா… இதுக்கு மேல அவங்க அறிவாளிகள்னு காட்ட… இந்த டிக் டிக் டிக் படத்தைத் தவிர வேற எந்த சாட்சியும் தேவை இல்ல. அதுவும் அம்மாம் பெரிய இஸ்ரோ சயிண்டிஸ்டுகளுக்கெல்லாம் தெரியாத வித்தை… ரவிக்கும் ரமேசுக்கும் அர்சுனுக்கும் தெரியும்னு காட்டுறதெல்லாம் இந்தியாவுக்கு எவ்ளோ பெரிய அவமானம் தெரியுமா? கேட்டா இது தேசப்பற்று படம்னு வேற கொடி பிடிப்பீங்க? நல்லா பிடிங்க.. பிடிங்க…

கடைசியில் விண்வெளிக்கப்பல் வெடித்துச்சிதறும்போது தப்பிக்கும் இவர்கள் விழும் இடத்திற்கு அட்வான்சாகவே ஆபிசர் உள்பட பெரும்படை வந்து வரிசை கலையாமல் கொட்டும் மழையில் காத்திருப்பததெல்லாம் சினிமா சினிமா சினிம்ம்ம்மா. மூணாரில் இருக்கும் ஒரே ஒரு விஞ்ஞானி குழுவினரே அனைத்தையும் கையாள்வதும் நம்பத்தகுந்ததாக இல்லை.

இன்னும் நெறைய இருக்கு… இந்த மாதிரி பட்டியல் போட…. வேண்டாம்.

புதுமையான படங்களை நிச்சயமாக வரவேற்க வேண்டும். ஆனால்அறிவியல் கதைக்கான எந்த கனமும் கனமான திரைக்கதையும் விவரங்களும் இல்லாத ஒரு படத்தை முழுமையாக கொண்டாட முடியாது. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கும் கிண்டி மேம்பாலத்துக்கும் போயிட்டு வர மாதிரி துருவா 1க்கு துருவா 2 பெட்ரோல் கொண்டு போறதெல்லாம்…. ஙே…… ஏன்னா பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரம் (3,84,400 km) 3 இலட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர்.  அதாவது மங்கள்யான் போற வேகத்துல (செகண்டுக்கு 16 கிலோமீட்டர்) போனா கூட பூமியில் இருந்து நிலாவுக்கு எவ்ளோ நேரத்துல போய் சேரலாம்னு கணக்கு போடுறதுக்கே எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியல. இதே மாதிரி ஒரு அறிவியல் படம் எத்தனையோ உண்மைக்கு நிகரான விசயங்களை படம் பார்க்கும் ரசிகனுக்கு சொல்ல முடியும். ஆனால் இது எதையுமே பற்றி இயக்குநர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

முன்னரே சொன்னது போல இந்த படத்தில் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை கொஞ்சம் பயன்படுத்தி இருக்கிறார்கள் அதற்காக நிச்சயமாக பாராட்டுவோம். அந்த தொழில்நுட்பத்தை இன்னும் சிறப்பாக மற்றவர்கள் பயன்படுத்த அந்த நிறுவனமும் இந்த படத்தின் கிராபிக்ஸ் நுட்பத்தை கையாண்டவர்களும் உதவி செய்யலாம்.  ஆனால் அதற்காக மட்டுமே இந்தப்படத்தை கொண்டாட முடியாது. அப்படிப்பார்த்தால் மாற்றான் படத்தை விட இது பெரிதாக எனக்குத் தெரியவில்லை. கிராபிக்ஸ் என்ற வகையில் பாகுபலியுடன் இந்த படத்தை ஒப்பிடவே முடியாது. அது பலமடங்கு பெரிய கிராபிக்ஸ் வேலை நிறைந்த படம். பேராண்மை படத்தின் கதையும் திரைக்கதையும் இறுதி நேர பரபரப்பும் டிக் டிக் டிக் படத்தை விட பலமடங்கு பரபரப்பாக இருந்தது.

எனவே டிக் டிக் டிக் எதிர்பார்க்க வைத்த படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எதிர்பார்ப்பை பாதியில் பாதி கூட நிறைவேற்றவில்லை என்பதே என் அளவில் உண்மை. படத்தை அநேகம் பேர் கொண்டாடும்போது மாற்றுக்கருத்துகளை தவிர்க்கலாம் தான். ஆனால், அப்படி மாற்றுக்கருத்துகள் சொல்லாமல் போனால்… டிக் டிக் டிக்… தமிழ் சினிமாவின் அதி அற்புதமான விண்வெளித்திரைப்படம் என்பது போல ஒரு மாயை உருவாக்கப்பட்டுவிடும். அது தமிழ் சினிமாவிற்கும் தமிழ் சினிமாவில் அடுத்ததாக இதுபோன்ற படங்களை உருவாக்க நினைப்பவர்களுக்கும் நல்லதல்ல என்பதற்காகவே இப்படி எழுத வேண்டியதாயிற்று.

படத்தின் பின்னணி இசை, கதைநாயகனும் கதைநாயகனும் கடைசி வரை காதலிக்கவில்லை… என்பது போன்ற படத்தில் இருக்கும் சில நல்ல விசயங்களை எல்லா விமர்சனங்களிலும் நீங்கள் பார்க்க கேட்க வாய்ப்பிருக்கிறது என்பதால் அது பற்றி நீளமாக சிலாகிக்கவில்லை. ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜே.பி. போன்ற நடிகர்கள் எல்லாம் இன்னும் சிறப்பாக தங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்த கதையிலோ திரைக்கதையிலோ இடமில்லை என்பதால் அவர்களுக்கு கொடுத்த வேலையை அவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தில் என்னை ரொம்ப சிரிக்க வைத்தது சகோதரன் கார்க்கியின் பாடல் வரிகள் சில. டிக் டிக் டிக் டைட்டில் டிராக் பாடலின் இடையில் வருகிறது அந்த வரிகள். மனிதர்களாகிய நம்மை தாறுமாறாக கலாய்க்கிறது அந்த வரிகள்.


நமக்கென

பல போர்கள் இருக்கையில்

வெளியிருந்தொரு

விண்கல் வருவதா?

அதை உடைத்திடு

கதவடைத்திடு

பின் நாம் போரிடுவோம்.

மொழி மத இன

பேதம் இருக்கையில்

நமை அழித்திட

வானம் விழுவதா?

அதை தடுத்திடு

கதை முடித்திடு

பின்னே நாம் அழிவோம்…

ஆஹா… ஹா ஹா….

ஒரு கலைஞன் சமூகத்தின் அவலங்களை பிற்போக்குத்தனங்களை கிண்டல் செய்வதில் சளைக்காதவனாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்தப்பாடலில் சளைக்காமல் மிக சிறப்பாக மனித இனத்தை பகடி செய்துள்ளார் சகோதரன் கார்க்கி. வாழ்த்துகள் சகோ. மொழி, மத, இன பேதம் இருக்கையில்… என்ற வரியில் சாதியையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் அவ்வளவு தான். சமீபத்தில் திரைப்பாடலில் நான் ரசித்த ஆகச்சிறந்த பகடிகளில் இதுவும் ஒன்று.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681...