புதன், 13 டிசம்பர், 2017

எனக்கு விடை தெரியவில்லை மாப்பிள ...எப்படி மாப்பிள...நான் மருத்துவமனை போனது எப்படி தெரிந்தது உங்களுக்கு ...நார்மல் fever ..headach மாப்பிள ..மெடிசின் சாப்பிட்டுத்தான் mesg பண்ணறேன் ..அட நீங்க வேற மாப்பிள ...எனக்கு எப்படி வரும் ப்ரெஷர் ....என்னாலதான் ..zonal head ...gm ..headsales ..எல்லாத்துக்கும் ப்ரெஷர் வரும் ...என்கூட பேசனும் நாளே ப்ரெஷர் ...அவங்க கவுங்க டேப்லெட் எடுத்துட்டு ..head ஆபீஸ் ..ல...ரவுண்டு டேபிள் ல ..மாத்தி ...மாத்தி ..ரவுண்டு கட்டுவாங்க ...எல்லாத்தியும் சமாளிக்கினும் ...இங்க தான் நம் பாளையக்காரர்கள் திறனை காட்டி சமாளிச்சு ...பதில் சொல்லி வெளில வரணும் ...

செவ்வாய், 12 டிசம்பர், 2017


இன்று குழுவில் ...ராமராஜ் அண்ணன் அவர்கள் ...பிட்காயன் ...பற்றி தகவல் வேண்டும் என்று கேட்டு இருந்தார் ..இந்த தகவல் போதுமா...என்று தெரியவில்லை ..பகிர்கிறேன் ...

பிட்காயின் என்றால் என்ன?

எனும் கேள்வியை இப்போது பலரும் கேட்கத்துவங்கி இருக்கின்றனர். இந்த கேள்விக்கு பின்னே ஒரு ஆர்வம் இருக்கிறது. (அதிகப்படியான ஆர்வம் என்றும் சொல்லலாம். அதை பின்னர் பார்ப்போம்). இந்த ஆர்வம் தான் முக்கியம். ஏனெனில் இதற்கு முன்னர் கூட இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம், கேட்பவரிடம் பிட்காயின் பற்றிய அறியாமையே இருக்கும். பெரும்பாலானவர்கள் பிட்காயின் எனும் ஒரு வஸ்து இருப்பதையே அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே எங்காவது பிட்காயின் பற்றி கேள்விப்படும் போது, பிட்காயின் என்றால் என்ன? என்று ஒருவித அலட்சியத்துடம் அது பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல் கேட்கும் நிலை இருந்தது.

சுருக்கமாக சொன்னால், பிட்காயின் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை, அது பற்றி கவலைப்படவும் இல்லை. எதிர்கால நாணயம், மறை பணம், டிஜிட்டல் நாணயம் என்றெல்லாம் பலவிதமாக வர்ணிக்கப்பட்ட பிட்காயினின் அருமையையும், மகிமையும் உணர்ந்த தொழில்நுட்ப பித்தர்களும், நவீன அபிமானிகளும் இருந்தாலும் அவர்கள் தனித்தீவு போலவே இருந்தனர். பிட்காயின் தொடர்பான இணையதளங்களும், விவாத குழுக்களும் அநேகம் இருந்தாலும், அவற்றை தொழில்நுட்ப சமூகத்திற்கு வெளியே யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை.

ஆனால், இப்போது பிட்காயினுக்கு மவுஸ் அதிகரித்திருக்கிறது. அதன் விளைவு தான் பலரும் பிட்காயின் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இந்த ஆர்வத்திற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று பிட்காயின், இணைய மிரட்டலுக்கான பணமாக அறியப்படுவது. மற்றொன்று பிட்காயின் புதிய தங்கம் என சொல்லப்படுவது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய உலகை ரான்சம்வேர் வைரஸ் உலுக்கியது நினைவில் இருக்கிறதா? எங்கோ இருக்கும் ஹேக்கர்கள் பயனாளிகளின் கம்ப்யூட்டருக்கு டிஜிட்டல் பூட்டு போட்டு அதை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டியதால் மற்ற வைரஸ்களைவிட இந்த வைரஸ் நெட்டிசன்களையும், சிட்டிசன்களையும் கொஞ்சம் கூடுதலாகவே கவர்ந்தது. அது மட்டும் அல்ல, இந்த ஹேக்கர்கள் தாங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பினைத்தொகையை ரூபாயாகவோ, டாலாரகாவோ கேட்காமல் பிட்காயினாக கேட்டது நெட்டிசன்களை பிட்காயின் பற்றி யோசிக்க வைத்தது. ஹேக்கர்கள் ஏன் பிட்காயினை கேட்டனர் எனும் கேள்விக்கு இது புதுவகையான பணம், இதை எந்த மத்திய வங்கிகளும் வெளியிடுவதில்லை, இதன் பரிவர்த்தனை பிளாக்செயின் மூலம் நிகழ்கிறது என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம் என்றாலும் மக்கள் மத்தியில் பதிந்த விஷயம் பிட்காயின் அனாமதேய பணம் என்பதும், அதில் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்டால் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாது என்பது தான். எனவே டிஜிட்டல் நாணயமான பிட்காயினை இணைய நிழல் உலகிற்கான பணம் என எளிதாக புரிந்து கொண்டனர்.

அதே நேரத்தில், பிட்காயினின் மதிப்பு எங்கே போய்க்கொண்டிருப்பதும், ஒரு சில பிட்காயின்கள் வைத்திருந்தால் கூட இன்று அதன் மதிப்பு லட்சக்கணக்கில் என்று சொல்லப்படுவதும், பிட்காயின் மீது தனி ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. பிட்காயினை பரிவர்த்தனை செய்யலாம் என்கின்றனர். அதை டாலராகவோ வேறு நாணயமாகவோ மாற்றிக்கொள்ளலாம். இன்றைய தேதி கணக்குப்படி ஒரு பிட்காயினின் மதிப்பு இந்திய நாணயப்படி கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய். ஆக, சில ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் போல பிட்காயினை வாங்கிப்போட்டிருந்தால் (வாங்க முடியாது, இணையத்தில் கம்ப்யூட்டர் கொண்டு மைன் செய்ய வேண்டும் என்பது வேறு விஷயம்) இன்று லட்சாதிபதி என்று சொல்லப்படுவதில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தானே செய்கிறது.

பிட்காயின் தொடர்பான மற்ற விஷயங்களும், விளக்கங்களும் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அதை எப்படி பரிவர்த்தனை செய்வது, எப்படி பயன்படுத்துவது போன்றவை இன்னும் சிக்கலாக தோன்றினாலும், பிட்காயின் மதிப்பு ஏறிக்கொண்டிருக்கிறது (இறங்கவும் செய்கிறது) என்பது, பிட்காயின் மீது தனி ஈடுபாட்டை ஏற்படுத்தியிருகிறது. அதோடு தொழில்நுட்ப கில்லாடிகள் பலரும் பிட்காயினில் முதலீடு செய்து வருவதும் இதை மிகச்சிறந்த முதலீடு என பேச வைத்திருக்கிறது. எப்படி ஒரு காலத்தில் காலி மனைகள் வாங்கிப்போட்டால், எதிர்காலத்தில் அதை விற்று பணமாக்கலாம் என கருதப்பட்டதோ அதே போல, இப்போது பிட்காயின் ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. பத்திரிகை கட்டுரைகளும் பிட்காயினை புதிய தங்கம் என வர்ணிக்கும் போது கேட்கவா வேண்டும்!

பொதுமக்கள் மத்தியில் பிட்காயினை வாங்கும் பழக்கம் வந்துவிடவில்லை என்றாலும், இந்த புரியாத நாணயத்தில் பணத்தை போட்டால் அது பலன் தரும் முதலீடாக இருக்கும் எனும் எண்ணம் வலுப்பெறத்துவங்கியிருக்கிறது. பங்குச்சந்தை முதலீடு போல வருங்காலத்தில் பலரும் பிட்காயினில் முதலீட்டில் ஆர்வம் காட்டலாம். இப்போதே கூட, புத்திசாலிகள் சிலர் பிட்காயினை வாங்கிப்போடுவோம் என நினைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கலாம்.

எல்லாம் சரி, பிட்காயினில் முதலீடு செய்யலாமா? இந்த முதலீடு எதிர்பார்த்த பலன் தருமா? பிட்காயினை கண்டுகொள்ளாமல் இருப்பது அருமையான வாய்ப்பை தவறவிடுவதாகுமா?

இது போன்ற கேள்விகளுக்கு எளிய பதில்கள் இல்லை. எல்லா முதலீடுகள் போலவே பிட்காயின் முதலீடும் ரிஸ்கானவை, அவை அள்ளித்தரலாம். அல்லது மதிப்பு சரிந்து காலையும் வாரலாம். ஆனால் விஷயம் அதுவல்ல, பிட்காயினை முதலீடு நோக்கில் மட்டும் அணுகுவது சரியாக இருக்காது.

முதலில் பிட்காயினை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை பிட்காயினை வாலெட்டில் வைத்திருப்பவர்கள் (அதற்கென டிஜிட்டல் பர்ஸ் இருக்கிறது) அடிப்படையில் பிட்காயினின் மைய கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். அதன் பயனாக அவர்கள் பிட்காயினில் பரிவர்த்தனை செய்ய விரும்பினர். அது அவர்களுக்கு முதலீடாகவும் பலன் அளிக்கிறது. இதில் யூக பேரங்கள் நுழைந்துவிட்டன என்றாலும், பிட்காயினில் ஆர்வம் உள்ளவர்கள் முதலில் அதை முழுமையாக புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்.

பிட்காயினின் அடிப்படை கருத்தாக்கத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பிட்காயினை அதன் அபிமானிகள் விரும்புவதற்கான முக்கியக் காரணம், அது அனாமதேய பணமாக இருக்கிறது என்பது மட்டும் அல்ல, அது மையமாக கட்டுப்படுத்தப்படாத பணமாகவும் இருப்பதனால் தான். கோட்பாடு அளவில் பார்த்தால், பிட்காயின் எந்த ஒரு அரசாங்கம் அல்லது மத்திய வங்கியால் வெளியிடப்படாமல் அதன் பயனாளிகளால் நிர்வகிகப்படும் பணம். பிட்காயினை இஷ்டம் போல அச்சிட முடியாது என்பதும், நிர்ணயிக்கப்பட்ட அளவு நாணயங்கள் மட்டுமே மொத்தமாக உருவாக்கப்பட முடியும் என்பது போன்ற பல அமசங்கள் அதில் இருக்கின்றன. மேலும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும் கண்ணுக்குத்தெரியாத டிஜிட்டல் லெட்ஜரில் பதிவாகி வருகின்றன. பிளாக்செயின் என சொல்லப்படும் இந்த நுட்பத்தை தான் வங்கிகளும் நிதி உலகுமும் உன்னிபாக கவனித்து வருகின்றன.

ஆக, கொள்கை அளவிலும், தொழில்நுட்ப நோக்கிலும் அறிந்து கொள்ள பிட்காயினில் அநேக விஷயங்கள் இருக்கின்றன. அதன் பிறகே பிட்காயின் முதலீடு பற்றி யோசிக்க வேண்டும். அது மட்டும் அல்ல பிட்காயினின் சட்டப்பூர்வ அந்தஸ்தும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தியாவில் பிட்காயின் பயன்பாடு பற்றி ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்த நாணயத்தை முறைப்படுத்துவது பற்றியும் பேச்சு இருக்கிறது.

எனவே பிட்காயினை தொடர்ந்து கவனியுங்கள், அது நல்ல விஷயம்.

இந்த கதை எல்லாம் வேண்டாம், பிட்காயினில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என தொடர்ந்து பிடிவாதமாக கேட்டால், பொருளாதார பேராசிரியர் ராபர்ட் ஷில்லர் பிட்காயின் பற்றி அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறிய கருத்துக்களை தான் சுட்டிக்காட்ட வேண்டும். ஷில்லர் ஒன்றும் சாதாரண பேராசிரியர் அல்ல. மனிதர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். அதைவிட முக்கியமான விஷயம், 2008 ல் அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடியால் உலக அளவில் பெரும் தேக்க நிலை உண்டானது அல்லவா? அது பற்றி 2003-ம் ஆண்டே கணித்து எச்சரித்தவர் ஷில்லர்.

அமெரிக்காவில் வீடுகளின் விலை எக்கச்சக்கமாக உயர்வது கண்டு, இது செயற்கையானது, இந்த குமிழ் வெடிக்கும் என அவர் எச்சரித்தார். சில ஆண்டுகள் கழித்து சப் பிரைம் கிரைசிஸ் வடிவில் அந்த குழு வெடித்தது. இப்படி வரலாறுதோறும் ஏற்படும் குமிழ்கள் மற்றும் அவற்றிக்கு காரணமாக மிகை ஆர்வம் பற்றியும் ஷில்லர் விரிவாக ஆய்வு செய்து எழுதியும் பேசியும் வருகிறார்.

அப்படிப்பட்ட ஷில்லர் தான்,

தற்போதைய சூழலில் மிகை ஆர்வத்திற்கு அழகான உதாரணம் பிட்காயின் என கூறியிருக்கிறார். பிட்காயின் கதைக்கு உள்ள ஊக்கம் தரும் தன்மையும், அதன் பின்னே உள்ள மர்ம நிறுவனர் கதையும் சேர்த்து இதன் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது என்கிறார் ஷில்லர்.
பிட்காயினை என்னால் புரிந்து கொள்ள முடியும், அதில் யூகம் செய்து பணம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை பலருக்கு இருப்பதாகவும் ஷில்லர் கூறியிருக்கிறார்.


சமுதாய சேவை ...2015

Sivakumar Kumar
December 12, 2015 at 9:08pm ·

இன்று ஷ்யாமுடன் சென்னை மழையை பற்றி செய்தி தாள்களில் வந்த,புகைப்படங்கள் காட்டி பேசிக்கொண்டு இருந்தேன்...சென்னையல மழை பேஞ்ச அன்னிக்கி என்ன அப்பா செய்து கொண்டு இருந்தீர்கள் என்று கேட்டான் ...நானடா தம்பி facebook friends கூட mesg மற்றும் மொபைல் போன்- la லைன் கிடைக்கரவங்க கிட்ட நண்பர்கள்கிட்ட பாதுகாப்பான இடங்களை சொல்லிக்கொண்டு இருந்தேன் என்றேன்.. நீ என்னடா பண்ணிட்டு இருந்தே என்று கேட்டேன் ...நானா டிவி ல நியூஸ் பாத்துட்டு தான் இருந்தேன் .ரெண்டு மூணு கழித்து .நம்ம ஏரியா வில..சென்னையல மழை அவங்களுக்கு டிரஸ் collect பண்ணிட்டு வந்தாங்க என்னோட நாலு மூணு டிரஸ் கொடுத்தேன் என்றான் ....எப்படியோ பையனுக்கு இப்பவே சமுக ஆர்வம் வந்துருச்சு....

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

மாம்ஸ ..அருமையான புகைப்படம் ....மஞ்சள் துண்டுடன் ..விவசாய நிலத்தில் இருப்பது நம் சமுதாயத்தின் முனேற்றதற்கு நல்ல அறிகுறி ..அருமையான விவசாய களப்பணி ..வாழ்த்துக்கள் ...எங்க அக்காவை (குஜ்ஜ பொம்மு )கல்யாணம் பண்ணுனதால ..இந்த காணி நிலத்தை  காப்பாற்றியிருக்கிறார்கள் ..


அருமையான பதிவு ....இந்த கூட்டத்திற்கு என் வேலைப்பளு காரணமாக செல்ல இயலவில்லை ..இன்று திருப்பூரில் நடந்த நிகழ்வுகளை ...ஒரேதடவை ...ஒரு கட்டுரையோடு ..முக்கியத்தலைவர்கள் பேசியது ..கூட்டம் ..ஒரு செய்தி மாதிரி எல்லோரும் பார்த்து பயனடைவார்கள் ..வீடியோ பதிவும் ..நன்றக இருக்கும் ..என் தனிப்பட்ட கருத்து ...
திரு .ஷாஜஹான் ...உடுமலைமருமகன் ...மறைந்த சட்ட அமைச்சர் சாதிக் பாஷா ..அவர்களின் உறவினர் ..தற்பொழுது நியூடெல்லி..செய்தியாளர் ..transalater ...டெல்லி தமிழ்ச்சங்க பொருளாளர் ..யாராவது உதவி என்று கேட்டால் ஓடிஓடி வருபவர் ..சென்னை மழைவெள்ளம் 2015..இவரின் பணி மதிப்பில் அடங்காது ...பிரதமர் அலுவுலகம் தொடர்புகொண்டு ..சென்னை மழைவெள்ளம் அப்போது ..தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு எல்லா டோல் கேட்டிலும் கட்டணம் இல்லாமல் போகுவரத்துக்கு உதவியவர் ..
நான் ஷாஜி சார்...என்று இவரை அழைப்பேன் ..இவரின் மனைவியாரின் தந்தை என் வரலாற்று ஆசிரியர் திரு .முல்க் அவர்கள் (அரசு மேல்நிலைப்பள்ளி -உடுமலைப்பேட்டை )டெபாசிட் பற்றி ஒரு அருமையான பதிவு ...

சனி, 9 டிசம்பர், 2017

இன்றைய தேடல் எந்த ஊரு மாப்பிள .....மனோகர் மாப்பிள ...இந்த மலைக்கோவிலின் பின்பிறம் ...ஒரு குளம் இருக்குமே மாப்பிள ...அந்த குளத்தின் அருகே 200 ஆண்டு பழமைவாய்ந்த மதில் சுவர் இருக்குமே ...தளி எதுலப்பர் சிலை இருக்குமே மாப்பிள ...அருமையான கோவில் ..இந்த மலைக்கோவில் திரைப்படங்களில் கூட காட்சி படித்தியுள்ளார்கள் ...இந்தமலையின்மேல் இருந்து பாரத்தால் அற்புதமான தென்னை மரங்கள் பச்சை உடுத்தி போன்று இருக்கும் மாப்பிள ..அருமையான தரிசனமாக உங்களுக்கு இருந்துஇருக்கும் ...இன்றைய பிறந்த நாளில் ...வாழ்த்துக்கள்



வெள்ளி, 8 டிசம்பர், 2017


உடுமலைப்பேட்டை நமது மாப்பிள்ளை ..C .மனோகருக்கு அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..மாப்பிள்ளை மனோகர் ..படித்தது உடுமலைப்பேட்டை ருத்திர வேணி பாலிடெக்னிக்கில் இயந்திரவியல் படித்து ..தன் சுயசார்புடன் தற்பொழுது
CM Engine service.... என்ற நிறுவனத்தை தொடங்கி ...நல்லமுறையில் தமிழ்நாடு ,கேரள ,கர்நாடக ஆகியபகுதிகளில் சென்று நல்லமுறையில் பணிசெய்து கொண்டுள்ளார் ...நம் கம்பள சமுதாயத்தில் தொழில்முனைவோரக இருப்பது நமக்கு பெருமையும் கூட ...நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையில் உறுப்பினர் ...நம் இளைய சொந்தங்களுக்கு தொழில் தொடங்கவோருக்கு ஒரு முன்னோடியாக வழிகாட்டுவார் ....

15 kva to 750 kva kirloskar  engine top overhauling. 

Full overhauling.complaint .break down .oilservice.+alternator .electrical work. +jcb engine service only . 

Service Engineer...Mr.Manoharan

Contact Number-9865024743 ...என் இனிய மனோகர் மாப்பிள்ளைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

வியாழன், 7 டிசம்பர், 2017



திருமதி.ஜெகதீஸ்வரி ஜோதிமுத்து அவர்கள் கம்பளவிருட்சம் அறக்கட்டளை
Lic Agent &  Central Bank Villege Service Centre Incharge at மைவாடி(Myvaadi )
ராஜாவூர் -உடுமலைப்பேட்டை

நம் கம்பள சமுதாயத்தில் ஜெகதீஸ்வரி அவர்கள் 1993 ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 446/500 மதிப்பெண் பெற்ற மாணவி...  அதிகபட்சமானது அப்பொழுது.   இவர் கல்வியினால் இப்பொழுதும் ...தன் சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு பொதுநலப்பணிகளையும் ...நம் சொந்தங்களுக்கும் ...வழிகாட்டியாக உள்ளார் என்பது கூடுதல் செய்தி ...நமது அறக்கட்டளைக்கும் தன்னால் இயன்ற அளவு உறுப்பினர்களை சேர்த்தும் ..தன் சுற்றியுள்ள கிராமங்களில் பொது தளத்தில் பணிபுரிந்துகொண்டு சேவைமனப்பான்மையோடு நம் சொந்தங்களுக்கும்...அரசு சுயஉதவி குழுக்கள் மூலம் ,அரசு 100 நாள் திட்டத்தின் மூலமும் ..வங்கி சார்ந்த பணிகளை உற்சாகத்தோடும் பணியாற்றி கொண்டுள்ளார்.திருமதி ஜெகதீஸ்வரி  அவர்களுக்கு பக்கபலமாக கணவர் ஜோதிமுத்து அவர்கள் மளிகை கடையும் நடத்தி கொண்டு நம் சமுதாயத்தில் சிறு தொழில்முனைவோராக திகழ்வது மிக்க மகிழ்ச்சி கம்பள விருட்சம் தொழில்சார்பு குழுமத்தில் தக்க ஆலோசானைகள் வழங்கி நம் வளரும் இளைய சொந்தங்களுக்கு  சுயதொழில் மூலம் வழிகாட்டியாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது  ..வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பளவிருட்சம் தொழில்சார்பு குழுமம்
www.kambalavirucham.in 
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு (KVE )
உடுமலைப்பேட்டை

புதன், 6 டிசம்பர், 2017

அருமையான போஸ்டர் செல்வம் அண்ணா  ....திருப்பூர் மாநகரில் நம் கம்பள சமுதாயத்தின் வலிமையை காட்டுவோம் ...பிற மாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்து குடியிருக்கும் திருப்பூரில் மாநகரில் சொந்தங்களை ஒன்று திரட்டுவோம் ...

திருப்பூர் வாழ் நமது சமுதாய சொந்தங்கள்,பெரியோர்கள்,இளைஞர்கள்  அனைவருக்கும் வணக்கம்🙏🙏..
வருகின்ற 03/01/2018 புதன்கிழமை அன்று நமது தேசதலைவர் மாவீரர் வீரபண்டிய கட்டபொம்மு நாயக்கர் அவர்களின் 259 வது பிறந்தநாள் வர இருக்கின்றதால்...
அத்தினத்தில் அவரது வீரத்தையும் நமது சமுதாய ஒற்றுமையை பரைசாற்றும் வகையில் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் அமைந்துள்ள கட்டபொம்மு நாயக்கர் திடலில் அவரது பிறந்தநாளை நமது திருப்பூர் மக்கள் அனைவரையும் திரட்டி விழா எடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நமது தொட்டியமன்னரையில் அமைந்துள்ள பெருமாள் கோவில் மண்டபத்தில்வருகின்ற 10/12/2017 ஞாயிறு அன்று நடைபெற உள்ளதால் நமது பகுதிவாழ் சமுதாய சொந்தங்கள்,பெரியோர்கள்,இளைஞர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடத்துவதற்கு நல் ஆலோசனைகள் வழங்கிட வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்..🙏🙏🙏🙏


திங்கள், 4 டிசம்பர், 2017

செந்தில் சார் ...விவசாயிகளுக்கு நேரம் எங்கே உள்ளது ..என்று கேட்கறீர்கள் ...எனக்கு கோவை ,திருப்பூர் ஈரோடு ..கொங்கு பகுதியில் கவுண்டர் சமுதாயம் ..அதிகம் நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டு ...தங்களின் வேலையும் பார்த்துக்கொண்டு ..கிடைக்கும் சில மணி நேரங்களில் ..தோட்டத்தில் என்ன நடக்கிறது ..எத்தனை தேங்காய் விழந்தது ..என்று எண்ணிக்கொண்டுஇருப்பார்கள் .. என் NRI வாடிக்கையாளர் ..இப்போதும் நியூஜெர்ஸி லிரிந்து வீடியோ கான்பரென்ஸ் மூலம் தோட்டத்தில் விளையும் பயிர்களின் நிலையை அறிந்துகொண்டுள்ளார் ..எப்போது வேண்டும் என்றலும் தன் சொந்த நிலத்திற்கு வந்துவிடவேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்கள் ...நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமும் கூட

இன்னொரு வெளிநாட்டு வாடிக்கையாளர் ...தோட்டம் வாங்கவதற்காக தன் வெளிநாட்டுப்பணியில் இருந்து மாறுதல் வாங்கவந்து ...தான் வாங்கிய வீட்டை அடமானம் வைத்து ...40 லட்சம் வீட்டுக்கடன் வாங்கி அதில் தோட்டம் வாங்கி விட்டு இப்பொழுது வெளிநாட்டு பணிக்கு சென்றுவிட்டார் ..அடமான கடன் ..பர்சனல் லோன் வங்கியில் தரமாட்டார்கள் ..வாடிக்கையளரின் நோக்கம் ..preplanning ..எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் ...நான் அவர்களுக்கு உதவியது பெருமை கொள்கிறேன் ...

எந்த ஒரு செயலுக்கும் ..மூலதனம் தேவை ...தனிநபரால் இயலாது ..அதற்கு தான் நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளை மூலம் நிதி ஆதாரங்களை உருவாக்குவதற்கு நல்ல ஆலோசனைகளை அறக்கட்டளையின் கௌரவ தலைவர் வழக்கறிஞர் முருகராஜ் அவர்கள் வழங்கி வருகிறார்கள் ..இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறோம் ...



சனி, 2 டிசம்பர், 2017


Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:
திருகார்த்திகை தீப ஒளி திருநாளில் வரத்துடன் சேர்த்து வரலாற்றையும் வேண்டி ஓர் தேடல் எத்ததைய திட்டமிடலும் இன்றி எளிதாய் தொடங்கியது இன்றைய பயணம்
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் கரப்பாடி அமணலிங்கேஷ்வரர் ஆலயம் முதல் தரிசனமாக அமைந்தது
ஆற்றங்கரையோரமாக அமைந்த அமரர் வாழ்ந்த இடங்களில் அமையும் சிவாலயங்களே ஓர் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமையும்
அத்தகைய வகையில் கோவிலை ஒட்டிய தடுப்பனையும் அதை சார்ந்து ஓர் முன்னோரின் திருபூத உடல் புதைந்த இடமும் முன்பொருகாலத்தில் ஆறு வாழ்ந்தை தெளிவாக சுட்டிக்காட்டியது
ஓர் கோவில் கட்டப்படும் அமைப்பும் அது சார்ந்த கணக்குகளும் பிற குறியீடுகளும் அக்கோவில் எழுப்ப பயன்படுத்திய கற்களிலேயே அமைத்து முழுமையான வெளிப்புறம் முழுதும் வட்டெழுத்துக்கள் கொண்ட கல்வெட்டே பல நூறு ஆண்டுகள் பழமையானது ஆலயம் என்று விழிதிகைக்க வைக்கிறது
கோவில் அமைந்திருக்கும் இடமும் அங்கு நிலவிய நிசப்தமும் ஆத்மதிருப்தி நிறைந்ததாய் விளங்கியது
அடுத்ததாக நாம் கண்டது
மழைவேண்டி வழிபடும் வழிபடும் அண்ணப்பையன்சாமி கோவிலும் கல்திட்டையும்
சித்திரை மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுப் என்ற கூடுதல் தகவலுடன்
அடுத்ததாக சென்றது
தற்போது வரை ஆவலப்பட்டி ஜமீன் வம்சாவழிதார்களின்
நேரடி கட்டுப்பாட்டில் அமைந்த
கரப்பாடி காளியம்மன் கோவில்
உக்கிரமாய் அமைந்த சாக்த வாழிபாடு செய்யும் அம்மனாக காட்சியளிக்கும் காளியம்மனை மேற்புறமாக வைத்து சாந்த முகம் கொண்ட அம்மனாக புதிய வடிவம் கொடுத்து இன்றுவரை ஊர் கூடி வழிபட்டு தேரோடும் கோவிலாக காட்சியளிக்கிறது
இந்த ஆலயம்
இக்கோவிலில் இருந்து பார்த்தால் அமணலிங்கேஷ்வரர் ஆலயம் தென்படுவது மற்றும் ஓர் கூடுதல் சிறப்பாக அமைந்தது
வழிபாட்டுடன் சேர்த்து வரலாறும் வேண்டியதால் அடுத்ததாய் சென்றது
ஆவலப்பட்டியில் அமைந்த ஆவல்ஜோத்தமுத்தையன் திருக்கோவில்
குஜ்ஜபொம்மு குலத்தோரின் குலதெய்வமாய் அமைந்த மாலையும் அதன் அருகில் அமைந்த ஆவல் ஜோத்தமுத்தையன் சிலையும்
மெய்சிலிர்க்க வைத்ததாய் அமைந்தது
அக்கோவிலுக்கு மேற்புறம் மேலும் ஓர் ஆலயம் அமைந்திருப்பது அறிந்து அங்கும் சென்றோம்
வல்லக்கொண்டம்மன் நினைவாக முன்னோர்கள் வழிபட்ட இடமாய் அது அமைந்ததாக இருந்ததை தெரிந்து மேலும் ஓர் ஆச்சர்யமாகவே அமைந்தது
அனைத்து வழிபாடுகளும் முடிந்து பாசம்கொண்ட தங்கை நேசமாய் கலந்தளித்த தேநீர் புது உற்சாகத்தை ஊட்ட
அடுத்ததாய் பயணப்பட்டோம்
ஆதிகுலதெய்வமான ஹீ வல்லக்குண்ட நாத சுவாமி ஆலயம் நோக்கி
ஆயிரமாயிரமாய் பணம் செலவழித்தாலும் வாங்க முடியா ஆத்ம திருப்தி நிறைந்ததாய் அமைந்தது இன்றைய பயணம்
உடன் வந்த சொந்தங்களுக்கும்
உபசரித்த நெஞ்சங்களுக்கும்
கோடி நன்றிகள் சமர்ப்பிக்கிறேன் காணிக்கையாக!!!
இன்று அருமையான கார்த்திகை தீபத்திருநாள் பயணம் வெகு அருமை

மாப்பிள்ளைகள் ..கார்த்தி sr ,செந்தில்ராம் ..தம்பி பிரபாகரன் ,கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவில் தரிசித்துவிட்டு ,அண்ணப்பையன்சாமி கோவிலில் தரிசித்துவிட்டு , ஆவல்ம்பட்டி ஜமீன்..கரப்பாடி ஜமீன் ,கொண்டேகவுண்டம்பாளையம் ஜமீன் ,ஜோத்தம்பட்டி ஜமீன் அடிவள்ளி ஜமீன் ,ராஜாவூர் ஜமீன் (விவேக் ,பாலமுருகன் )..நம் ஜோத்தமுத்தையன் சாமி கோவில் ,கரப்பாடி காளியம்மன் கோவில் ,குலதெய்வம் கோவில்களின் தீபத்திருநாள் வழிபாடு அருமையான பயண திருக்கார்த்திகை வழிபாடு மிக்க மகிழ்ச்சி தந்தது .. ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பில் நமது வல்லகொண்டம்மன் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டது வெகுசிறப்பு..அடுத்தவருடம் இன்னும் அறக்கட்டளை டிரஸ்ட் சார்பாக வெகு சிறப்பாக கொண்டாடுவதற்கு இன்று முதல்படி எடுத்தவைக்கப்பட்டது ..

வெள்ளி, 1 டிசம்பர், 2017

தம்பி தமிழரசன் தம்பதிகளுக்கு ..திருமணநாள் வாழ்த்துக்கள்

தம்பி தமிழரசன் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு மீதி இருக்கும் நேரத்தில் ..வாழ்க்கைச்சக்கரத்தில் சுழலும் சக்கரத்தில் காற்றின் அளவு (மனைவி )சரியாக பார்த்துக்கொண்டால் தான் வாழ்க்கைச்சக்கரவண்டி மிதவேகத்துடன் செல்லும் ...சிறிய அளவில் ஹாலோ பிளாக் வியாபாரம் செய்து தற்பொழுது வருமானம் வராது என்றாலும் ..உற்பத்தி ,விற்பனை ஆலோசனைகள் வழங்கி தற்போது இருக்கும் வியாபார நிலவரம் கருத்தில் கொண்டு மெதுவாக அடியெடுத்து நகர்ந்து செல்வது .மற்றும் கம்பள அறக்கட்டளையின் பொருளாளர் பதவியும் நிர்வகித்துக்கொண்டு,தம்பி அறக்கட்டளை வங்கி கணக்கு எண் தொடங்கவதற்கு வரும்போது தன் செல்ல மகளுடன் தோளில் சுமந்து  வங்கிபணிக்கு முடியும் வரை பொறுமை காத்தது அவரின் பொருளாளர் பதவியின் மதிப்பை அதிகப்படுத்தியது வாழ்த்துக்கள்   ..அருமையான சொந்தங்களின் துணையோடு ..நண்பர்களோடு .குட்டி தேவதையின் பணிகளை  பொறுப்பாக பார்த்துக்கொண்டு ..இந்தகாலக்கட்டம் மிகவும் சிக்கலானது ..அதை அழகாகக தன் மனைவியின் ஒத்துழைப்போடு நகர்ந்து செல்லும் தம்பிக்கு என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ..