கேள்வி : நிதி சார்ந்து நீங்கள் எடுத்த எந்த முடிவு, உங்கள் வாழ்க்கையையே மாற்றியது?
என் பதில் :
மகிழூந்து(car) வாங்க வேண்டும் என்று நான் எடுத்த முடிவு, எனது வாழ்க்கையை ஒரு வழி செய்துவிட்டது. அதற்காக நான் வாங்கிய கடன், என்னை ஒரு சில நிதி நிலைப்பாடுகளை எடுக்கச் செய்தது. விவரங்களுக்குள் செல்ல விரும்பவில்லை, எனவே இரத்தினச்சுருக்கமாக முடிக்கிறேன்.
கடன் ஏதும் இல்லாமல் நிம்மதியாக இருந்த காலம் அது. அப்போது என் குடும்பத்திற்க்கு ஏற்றபடி ஒரு சிறு மகிழூந்து வைத்திருந்தேன். அதில் சில தீவிர பிரச்சனைகள் தோன்றவே, புது வாகனம் வாங்க முடிவு செய்தேன். அந்த முடிவில் எந்த சிக்கலும் இல்லை. சிக்கல் எந்த வாகனம் வாங்கினேன் என்பதில் தான்.
நான் தேர்ந்தெடுத்த வாகனம், எதிர்பார்த்ததை விட விலை அதிகமாக இருக்கவே, எனது துணைவி முடிவை கைவிடுமாறு சொன்னார். நாம் கேட்போமா? எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது, நான் இதைத்தான் வாங்குவேன் என்று வசனம் பேசிவிட்டு வாங்கினேன். நிதிப் பளு அதிகரிக்கவே, அதன் தொடர்ச்சியாக பல பிரச்சனைகளை சந்திக்கும்படி ஆகிவிட்டது.
இவளவு பிரச்சனையிலும் ஒரு நல்லது என்னவென்றால், நிதி மேலாண்மையை அனுபவத்தின் வாயிலாக கற்றுக்கொண்டேன். அந்த ஒரு முடிவு சொல்லிக்கொடுத்த விலைமதிக்க முடியாத பாடத்தை, என்னால் முடிந்த அளவுக்கு என் உற்றாருக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறேன்.
சேர்ப்பு: சிலர், நான் என்ன கற்றுக்கொண்டேன் என ஆர்வத்துடன் கேட்டதால் இதனைச் சேர்க்கிறேன்.
உங்களுக்கு Benz வாங்குர அளவுக்கு கடன் தகுதி (eligibility) இருக்கலாம். ஆனால் அந்த முடிவ பாத்து எடுங்க. உங்க முழு கடன் வரையறையப் பயன்படுத்தி மகிழூந்து வாங்கிட்டா, மத்த செலவுகள் பண்ண சிரமப்படும் சூழல் ஏற்படலாம்.
வாகனக் காப்பீடு ஒரு வருடாந்திர செலவு. நீங்க எவ்வளவு பெரிய வாகனம் வாங்கியிருக்கீங்கலோ, அவ்வளவு அதிகம் கட்டவேண்டியது இருக்கும்.
இதே போல தான் வாகன பராமரிப்பும். சில சமையம் எதிர்பாராத பராமரிப்பும் தேவைப்படும். என் வாகனத்தோட எரிபொருள் குழாய ஒரு எலி சேதப்படுத்திருச்சு. அந்த 8 அங்குல குழாய மாத்த 8300 ருவா செலவு. இதல்லாம் உயர்ரக வாகனங்களுக்கு இன்னும் அதிகமாகும்.
வாகனக்கடனின் வட்டி விகிதம் அதிகம். 5 லட்சம் கடன 7 வருசம் கட்டி முடிக்கும் போது, 6.75 லட்சமா கட்டுவீங்க. ஆனா வாகனமோ மதிப்பிழக்கும் பொருள். முடிந்த அலவு கடன் இல்லாம வாங்கப் பாருங்க. இல்ல அதிக முன்பணம் கட்டி குறைந்த கடன் வாங்குங்க. அதுவும் முடியலையா? வாங்குன கடன 18 மாசத்துக்குள்ள திரும்ப செலுத்த முயர்ச்சி செய்யுங்க. அதுக்கேத்த மாதிரி திட்டமிடுதல், உங்க பணத்த கணிசமா மிச்சப்படுத்தும்.
எரிபொருள் விலை இனி குறையப் போரதில்ல. அதனால அதிக மைலேஐ் குடுக்குர வண்டிய தேர்ந்தெடுப்பது கொஞ்சம் உங்க நிதிப் பழுவைக் குறைக்கும்.
இது எதையும் பின்பற்றாம, சொகுசு வாகனம் தான் வேணும்னு நினச்சீங்கனா, அதுக்கும் வழி இருக்கு. பயன்படுத்தப்பட்ட வாகனம். கொஞ்சம் கவனமா பாத்து, நல்லா பேரம் பேசி வாங்குனா, நல்ல லாவகமா அமையும்.
இது பயன்படும்னு நம்புகிறேன். 🙏 பயணங்கள் என்றும் இனிமையானவை ....
நன்றி ...
சிவக்குமார் .V.K
Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com📚📚✍️✍️✍️🌈🌈🏘️🏡🏡🏡🏠🏠🏚️🏚️

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக