திங்கள், 29 நவம்பர், 2021

 கேள்வி :  1 லட்சம் என்னிடம் உள்ளது? அதை எந்த வகையில் வங்கியில் முதலீடு செய்தால் பாதுகாப்பான வருமானம் வரும்?


 என் பதில் : 



வங்கியில் வைப்பு நிதியில் முதலீடு செய்தால், வைப்பு நிதிக்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டிற்கோ அல்லது மாதா மாதமோ வட்டி மூலம் வருமானம் பெற முடியும்.


எல்லா வங்கிகளும் பாதுகாப்பானவை என்று சொல்ல முடியாது. வருடா வருடம், பாரத ரிஸர்வ் வங்கி, உள்நாட்டின் மிக முக்கிய வங்கிகள் பட்டியலை வெளியிடுகிறது. இவற்றிற்கு Domestically Systemically Important Banks என்று பெயர். 


இந்தப் பட்டியலில் தற்போது பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிகள் உள்ளன. இவை இந்தியாவின் பொருளாதாரத்துடன் முக்கிய தொடர்பு உடையவை. இவை திவாலாகும் வாய்ப்பு குறைவு. ஒருவேளை அவ்வாறு திவாலாகும் நிலை ஏற்பட்டால், அரசு உதவுவதற்கு வாய்ப்பு அதிகம். 


மற்ற வங்கிகள் இந்தப் பட்டியலில் வராத படியால், அவை, மேலே குறிப்பிட்ட மூன்று வங்கிகளை விட, பாதுகாப்பு குறைவானவை. எனவே, பாதுகாப்பாக முதலீடு செய்வதென்றால், மேலே குறிப்பிட்ட மூன்று வங்கிகள் ஓரளவிற்கு பாதுகாப்பானவை.



இதனைப் போலவே, அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில், மாதாந்திர வருமானத் திட்டம்(Monthly Income Scheme) உள்ளது. இவற்றின் மூலம், மாதா மாதம் வருமானம் பெறமுடியும். மேலும், அஞ்சலக வைப்பு நிதிகளில் முதலீடு செய்து, வருமானம் பெற முடியும். அஞ்சலக சேமிப்புகளுக்கு அரசாங்கத்தின் உத்திரவாதம் உள்ளதால், அவை பாதுகாப்பனவை.


என்னைப் பொருத்தவரை, குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஆனால், நீண்ட காலக் குறிக்கோள்களுக்கு பணத்தை பணவீக்கத்தினை தாண்டி வளர விட வேண்டும். 


இத்தகைய வருமானம் தரும் திட்டங்களில் பணமானது வளர்வதில்லை. அப்படியே உள்ளது. வரும் வட்டிக்கும் வரி போக, கையில் உள்ளப் பணம் செலவாகிவிடும். எனவே, இத்தகைய வருமானம் சார்ந்த திட்டங்களை இளைஞர்கள் தவிர்த்து விட்டு, பங்கு சந்தை குறியீடு சார்ந்த, அரசாங்க கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகளில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால், பணத்தை பெருக்க முடியும்.


நன்றி ...


சிவக்குமார் .V.K 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக