திங்கள், 29 நவம்பர், 2021

 கேள்வி :  நிதி சார்ந்து நீங்கள் எடுத்த எந்த முடிவு, உங்கள் வாழ்க்கையையே மாற்றியது?



என் பதில் :



மகிழூந்து(car) வாங்க வேண்டும் என்று நான் எடுத்த முடிவு, எனது வாழ்க்கையை ஒரு வழி செய்துவிட்டது. அதற்காக நான் வாங்கிய கடன், என்னை ஒரு சில நிதி நிலைப்பாடுகளை எடுக்கச் செய்தது. விவரங்களுக்குள் செல்ல விரும்பவில்லை, எனவே இரத்தினச்சுருக்கமாக முடிக்கிறேன்.


கடன் ஏதும் இல்லாமல் நிம்மதியாக இருந்த காலம் அது. அப்போது என் குடும்பத்திற்க்கு ஏற்றபடி ஒரு சிறு மகிழூந்து வைத்திருந்தேன். அதில் சில தீவிர பிரச்சனைகள் தோன்றவே, புது வாகனம் வாங்க முடிவு செய்தேன். அந்த முடிவில் எந்த சிக்கலும் இல்லை. சிக்கல் எந்த வாகனம் வாங்கினேன் என்பதில் தான். 


நான் தேர்ந்தெடுத்த வாகனம், எதிர்பார்த்ததை விட விலை அதிகமாக இருக்கவே, எனது துணைவி முடிவை கைவிடுமாறு சொன்னார். நாம் கேட்போமா? எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது, நான் இதைத்தான் வாங்குவேன் என்று வசனம் பேசிவிட்டு வாங்கினேன். நிதிப் பளு அதிகரிக்கவே, அதன் தொடர்ச்சியாக பல பிரச்சனைகளை சந்திக்கும்படி ஆகிவிட்டது.


இவளவு பிரச்சனையிலும் ஒரு நல்லது என்னவென்றால், நிதி மேலாண்மையை அனுபவத்தின் வாயிலாக கற்றுக்கொண்டேன். அந்த ஒரு முடிவு சொல்லிக்கொடுத்த விலைமதிக்க முடியாத பாடத்தை, என்னால் முடிந்த அளவுக்கு என் உற்றாருக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறேன்.


சேர்ப்பு: சிலர், நான் என்ன கற்றுக்கொண்டேன் என ஆர்வத்துடன் கேட்டதால் இதனைச் சேர்க்கிறேன்.


உங்களுக்கு Benz வாங்குர அளவுக்கு கடன் தகுதி (eligibility) இருக்கலாம். ஆனால் அந்த முடிவ பாத்து எடுங்க. உங்க முழு கடன் வரையறையப் பயன்படுத்தி மகிழூந்து வாங்கிட்டா, மத்த செலவுகள் பண்ண சிரமப்படும் சூழல் ஏற்படலாம்.


வாகனக் காப்பீடு ஒரு வருடாந்திர செலவு. நீங்க எவ்வளவு பெரிய வாகனம் வாங்கியிருக்கீங்கலோ, அவ்வளவு அதிகம் கட்டவேண்டியது இருக்கும்.


இதே போல தான் வாகன பராமரிப்பும். சில சமையம் எதிர்பாராத பராமரிப்பும் தேவைப்படும். என் வாகனத்தோட எரிபொருள் குழாய ஒரு எலி சேதப்படுத்திருச்சு. அந்த 8 அங்குல குழாய மாத்த 8300 ருவா செலவு. இதல்லாம் உயர்ரக வாகனங்களுக்கு இன்னும் அதிகமாகும்.


வாகனக்கடனின் வட்டி விகிதம் அதிகம். 5 லட்சம் கடன 7 வருசம் கட்டி முடிக்கும் போது, 6.75 லட்சமா கட்டுவீங்க. ஆனா வாகனமோ மதிப்பிழக்கும் பொருள். முடிந்த அலவு கடன் இல்லாம வாங்கப் பாருங்க. இல்ல அதிக முன்பணம் கட்டி குறைந்த கடன் வாங்குங்க. அதுவும் முடியலையா? வாங்குன கடன 18 மாசத்துக்குள்ள திரும்ப செலுத்த முயர்ச்சி செய்யுங்க. அதுக்கேத்த மாதிரி திட்டமிடுதல், உங்க பணத்த கணிசமா மிச்சப்படுத்தும்.



எரிபொருள் விலை இனி குறையப் போரதில்ல. அதனால அதிக மைலேஐ் குடுக்குர வண்டிய தேர்ந்தெடுப்பது கொஞ்சம் உங்க நிதிப் பழுவைக் குறைக்கும்.


இது எதையும் பின்பற்றாம, சொகுசு வாகனம் தான் வேணும்னு நினச்சீங்கனா, அதுக்கும் வழி இருக்கு. பயன்படுத்தப்பட்ட வாகனம். கொஞ்சம் கவனமா பாத்து, நல்லா பேரம் பேசி வாங்குனா, நல்ல லாவகமா அமையும்.


இது பயன்படும்னு நம்புகிறேன். 🙏 பயணங்கள் என்றும் இனிமையானவை ....



நன்றி ...


சிவக்குமார் .V.K 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com📚📚✍️✍️✍️🌈🌈🏘️🏡🏡🏡🏠🏠🏚️🏚️

 கேள்வி :  1 லட்சம் என்னிடம் உள்ளது? அதை எந்த வகையில் வங்கியில் முதலீடு செய்தால் பாதுகாப்பான வருமானம் வரும்?


 என் பதில் : 



வங்கியில் வைப்பு நிதியில் முதலீடு செய்தால், வைப்பு நிதிக்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டிற்கோ அல்லது மாதா மாதமோ வட்டி மூலம் வருமானம் பெற முடியும்.


எல்லா வங்கிகளும் பாதுகாப்பானவை என்று சொல்ல முடியாது. வருடா வருடம், பாரத ரிஸர்வ் வங்கி, உள்நாட்டின் மிக முக்கிய வங்கிகள் பட்டியலை வெளியிடுகிறது. இவற்றிற்கு Domestically Systemically Important Banks என்று பெயர். 


இந்தப் பட்டியலில் தற்போது பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிகள் உள்ளன. இவை இந்தியாவின் பொருளாதாரத்துடன் முக்கிய தொடர்பு உடையவை. இவை திவாலாகும் வாய்ப்பு குறைவு. ஒருவேளை அவ்வாறு திவாலாகும் நிலை ஏற்பட்டால், அரசு உதவுவதற்கு வாய்ப்பு அதிகம். 


மற்ற வங்கிகள் இந்தப் பட்டியலில் வராத படியால், அவை, மேலே குறிப்பிட்ட மூன்று வங்கிகளை விட, பாதுகாப்பு குறைவானவை. எனவே, பாதுகாப்பாக முதலீடு செய்வதென்றால், மேலே குறிப்பிட்ட மூன்று வங்கிகள் ஓரளவிற்கு பாதுகாப்பானவை.



இதனைப் போலவே, அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில், மாதாந்திர வருமானத் திட்டம்(Monthly Income Scheme) உள்ளது. இவற்றின் மூலம், மாதா மாதம் வருமானம் பெறமுடியும். மேலும், அஞ்சலக வைப்பு நிதிகளில் முதலீடு செய்து, வருமானம் பெற முடியும். அஞ்சலக சேமிப்புகளுக்கு அரசாங்கத்தின் உத்திரவாதம் உள்ளதால், அவை பாதுகாப்பனவை.


என்னைப் பொருத்தவரை, குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஆனால், நீண்ட காலக் குறிக்கோள்களுக்கு பணத்தை பணவீக்கத்தினை தாண்டி வளர விட வேண்டும். 


இத்தகைய வருமானம் தரும் திட்டங்களில் பணமானது வளர்வதில்லை. அப்படியே உள்ளது. வரும் வட்டிக்கும் வரி போக, கையில் உள்ளப் பணம் செலவாகிவிடும். எனவே, இத்தகைய வருமானம் சார்ந்த திட்டங்களை இளைஞர்கள் தவிர்த்து விட்டு, பங்கு சந்தை குறியீடு சார்ந்த, அரசாங்க கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகளில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால், பணத்தை பெருக்க முடியும்.


நன்றி ...


சிவக்குமார் .V.K 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com


வெள்ளி, 26 நவம்பர், 2021

 வாகனம் பழகு பெண்ணே...!


“அப்பா, ஸ்கூலுக்கு லேட்டாயிருச்சு, என்னைக் கொண்டு போய்விடறீங்களா? ”


“இன்னைக்குச் சீக்கிரமா ஆபீஸ் போகணும், நீ காலேஜ் போகும் போது என்னை ட்ராப் பண்ணிட்டுப் போறியாடா தம்பி?”

 

“ஏங்க மழை வருது. ரொம்ப நேரமா பஸ் வரலை. வந்து என்னை பிக்கப் பண்ணிட்டு போறீங்களா?”


பள்ளி மாணவி தொடங்கி நடுத்தர வயதைக் கடந்த பெண் வரையில் பெரும்பாலான பெண்கள் இது போன்ற வேண்டுகோள்களை விடுப்பதைக் கேட்டிருப்போம். இயல்பாகக் கடந்திருப்போம். எல்லா வயதிலும், அதிக அளவிலான பெண்கள் தனது இயக்கத்திற்காக (mobility), வீட்டிலுள்ள ஆண்களின் வாகனங்களையோ, பொது போக்குவரத்தையோதான் சார்ந்திருக்கிறார்கள். தனக்கென்று வாகனம் வைத்துக்கொள்வதில் பெண்ணுக்கு என்ன தயக்கம்? ஒருவேளை வீட்டில் இருந்தாலும், ஓட்டுவதில் என்ன பிரச்னை?


நிறைய பெண்கள் சைக்கிள் ஓட்டுகிறார்கள்; டூவீலரில் பறக்கிறார்கள்; கார் ஓட்டிப் போகிறார்கள், அப்புறம் என்ன என்று கேட்பவர்களுக்காக இந்தப் புள்ளிவிவரம் – இந்தியாவில் சைக்கிள் ஓட்டுபவர்களில் சுமார் 25% மட்டுமே பெண்கள், டூவீலர் (மோட்டார் சைக்கிள்) ஓட்டுபவர்களில் 25% மட்டுமே பெண்கள், கார் ஓட்டுபவர்களில் கிட்டத்தட்ட 15% மட்டுமே பெண்கள். மீதி இருப்பவர்கள் மினிபஸ், பேருந்து, ஷேர் ஆட்டோ, ஆட்டோ, லோக்கல் ட்ரெயினில் பயணிக்கிறார்கள். இல்லாவிட்டால், வீட்டில் உள்ள ஆண்களின் வாகனங்களில், அவர்களை ஓட்டச் சொல்லி உட்கார்ந்து போகிறார்கள்.


சிறு வயதில் சைக்கிள் ஓட்டுவதிலிருந்து ஆரம்பிப்போம். ஏழெட்டு வயதில் சிறுவர், சிறுமியருக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வது பெரிய சாகசம். வசதி இருக்கும் பெற்றோர் சொந்தமாக வாங்கிக் கொடுப்பார்கள். வசதி இல்லாத வீட்டுக் குழந்தைகள் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டப் பழகுவார்கள். ஆண் குழந்தைக்கு இணையாகப் பெண் குழந்தையும் ஓட்டிப் பழகும், நன்றாகவே சைக்கிள் ஓட்டும். ஆனாலும், “பாத்து ஓட்டுடி, பொம்பளப் புள்ள கீழ விழுந்து கையைக் காலை ஒடச்சிக்கிட்டா, நாளைக்கு எவன் கட்டுவான்?” என்ற ஏச்சுகளோடு, வீட்டில் அடக்கியே வைப்பார்கள். 


சைக்கிள் ஓட்டுவதில் இருக்கும் கொஞ்ச சுதந்திரமும் வயதுக்கு வந்தவுடன், முற்றிலும் ஏறக்கட்டப்படும். அதுவரை சைக்கிளில் பள்ளிக்கூடத்திற்குப் போய்வந்து கொண்டிருக்கும் சிறுமிக்கு, அதற்குப் பிறகு தடைவிதிக்கப்படும். வீட்டு ஆண்கள் கொண்டு போய்விடுவார்கள். இல்லாவிட்டால், நடந்தோ பஸ்ஸிலோ போக வேண்டும்.


சைக்கிள் என்பது பெண்ணின் இயக்கத்திற்குப் பேருதவியாக இருக்கும் எளிய வாகனம். வயதுக்கு வந்த பெண்ணிடம் சைக்கிளைத் தந்தால் அவள் பள்ளிக்கு மட்டுமல்ல, விருப்பம் போல எங்கே வேண்டுமானாலும் சுற்றுவாள், அவளைக் கண்காணித்துக் கொண்டே இருக்க முடியாது என்று இந்த ஆணாதிக்கப் பொதுபுத்தி, “வயசுப்புள்ள எங்கயாவது விழுந்து வச்சா என்ன செய்யுறது? ” என்று அவள் ’பாதுகாப்பை’க் காரணம் காட்டி தடை போடும்.


’பெண்ணின் பாதுகாப்பு’ என்ற சப்பைக்கட்டு கட்டித்தான் பெரும்பாலான வீடுகளில் டூவீலருக்கும் தடைபோடுகிறார்கள். இளைஞர்கள் கல்லூரியில் படிக்கும் போதே பைக் ஓட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், வசதியான வீட்டுப் பெண்களுக்குக்கூட டூவீலர் வாங்கிக் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால், வேலைக்குப் போகும் பெண் தனது சம்பாத்தியத்தில் வண்டி வாங்க நிறைய வீட்டில் அனுமதி இல்லை. 


லோன் போட்டு கணவனுக்கு வாங்கிக் கொடுக்கும் பெண்ணுக்கு வண்டி இருக்காது. “பெண்ணுக்குச் சரியாக வண்டி ஓட்டத் தெரியாது”, “எங்கேயாவது கொண்டு போய் மோதிவிடுவார்கள்”, “அவர்களுக்குத் தொழில்நுட்ப அறிவு குறைவு, எதாவது பிரச்னை வந்து வண்டி நின்றுவிட்டால் சமாளிக்கத் தெரியாது” போன்ற பல காரணங்களைச் சொல்கிறது ஆணாதிக்கச் சமூகம். ஆனால், இவை அனைத்தும் கற்பிதங்களே.

 

இன்னும் சொல்லப்போனால், இது தான் உருவாக்கிய கற்பிதங்கள் என்று ஆணாதிக்கச் சமூகத்துக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், இவை திரும்பத்திரும்ப சொல்லப்பட்டு வருவதற்கான உண்மையான காரணம், பெண்ணின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான். அவளைக் கூடுமானவரை வீடு என்ற தளத்திற்குள் அடைப்பதுதான் நோக்கம். 


தன் கட்டுப்பாட்டை மீறி அவள் சுதந்திரமாக இயங்கத் தொடங்கிவிட்டால் அவளது so called ’கற்பை’ எப்படிக் கண்காணிப்பது, cபெண்ணை அடக்கி வைக்க முடியாவிட்டால், அவள் தன் துணையைத் தானே தேர்ந்தெடுத்து, தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டால்… ஜாதியக் கட்டமைப்பைக் காப்பாற்ற முடியாதே, மதங்களைக் கட்டிக் காக்க இயலாதே என்று அஞ்சுகிறது. அதற்காக, “நீ மென்மையானவள், வாகனங்களும் சாலைகளும் கடினமானவை, உன்னால் முடியாது” என்றெல்லாம் சொல்லி, பெண்ணை மூளைச்சலவை செய்கிறது.


பல பெண்கள் இதை நம்புவதுதான் சோகம். பெண்கள், லாரி, பேருந்து, ட்ராக்டர் ஓட்டுகிறார்கள், ரயிலை இயக்குகிறார்கள், போர்விமானத்தில் பறக்கிறார்கள், கப்பல் ஓட்டுகிறார்கள், விண்வெளிக்கு பயணிக்கிறார்கள், இன்னும் என்ன தயக்கம் தோழிகளே? முறையாகப் பயிற்சி பெற்றால் சைக்கிளோ டூவீலரோ காரோ உங்களுக்கு எதை ஓட்ட வாய்ப்பிருக்கிறதோ அதைத் தாராளமாக ஓட்டலாம். அதற்கேற்றவாறு உடை உடுத்திக் கொண்டால் இன்னும் வசதியாக இருக்கும். 


ஒரு வாகனத்தை ஓட்டுவதற்கு முன்பு, அதைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வது அவசியம். வழியில் நின்றுவிட்டால், என்ன செய்வது, உதவிக்கு எந்த எண்ணை அழைக்க வேண்டும் போன்ற விவரங்களைக் கைவசம் வைத்திருங்கள். தொடர்ச்சியாக ஓட்ட, ஓட்ட சாலை பயம் போய்விடும். இன்னோர் உண்மை என்ன தெரியுமா, ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்கள் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. பெண்களிடம் இயல்பாகவே உள்ள ஜாக்கிரதை உணர்வும் இதற்கு ஒரு காரணம்.


வண்டி ஓட்டும் பெண்களுக்குச் சாலையில் சவாலாக இருப்பவர்கள், ஆதிக்க மனநிலை கொண்ட சக ஆண் ஓட்டுனர்கள்தாம். “இவங்கெல்லாம் வண்டி ஓட்ட வந்துட்டாங்க” என்ற இளக்காரப் பார்வையும், திடீரென அருகில் வந்து ஹாரன் அடிப்பதும், ஓவர்டேக் செய்வதுமாகத் தொந்தரவு செய்வார்கள். எந்த நிலையிலும் நிதானம் இழக்காமல் இருப்பது என்ற உறுதியுடன் வண்டி ஓட்டுவதில் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்தினால், இவர்களைச் சமாளித்துவிடலாம்.


’Pedaling to Freedom’ என்ற ஆவணப்படத்தை 13 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். 90களின் துவக்கத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவொளி இயக்கத்தின் ஒரு பகுதியாக, பெண்களுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுத்தருவதற்கு ஏற்பாடு செய்தார், அந்த மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலா ராணி சுங்கத். இதனால் சுமார் ஒரு லட்சம் பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார்கள். 


பெண்களின் சைக்கிள் ஓட்டும் அனுபவத்தையும், அவர்கள் வாழ்வில் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் படம் பேசுகிறது. படத்தில், கிராமத்துப் பெண்கள் தாம் சைக்கிள் கற்றுக்கொண்டதையும், ஓட்டுவதையும், பல இடங்களுக்குச் செல்வதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டது நெகிழ வைத்தது. இந்தப் படத்தை, கூடு பெண்கள் வாசிப்பரங்கத்தின் சார்ப்பில் மதுரையில் நடத்திய ’பெண் திரை’ என்ற பெண் இயக்குநர்களின் திரைப்பட விழாவில் திரையிட்டோம். படத்தைப் பார்த்த 65 வயது தோழி குமுதா, அடுத்த நாளே கார் ஓட்டிக்கொண்டு வந்தார். ஆச்சரியமாகப் பார்க்க, “கார் ஓட்டக் கத்துக்கிட்டு வருசக் கணக்காச்சுப்பா. ஆனாலும், அடிக்கடி ஓட்ட தயக்கமா இருந்துச்சு. நேத்து பார்த்த படத்தில் சைக்கிள் ஓட்டிய தோழிகள் பெரிய நம்பிக்கையைத் தந்தாங்க. கார் எடுத்துட்டு வந்துட்டேன்” என்றார். அவரைப் பார்த்து எங்களுக்கும் கார் ஓட்டும் ஆசை வந்தது.


 

அன்புத் தோழிகளே, வாகனம் ஓட்டும்போது கிடைக்கும் தன்னம்பிக்கையும் சுதந்திர உணர்வும் அற்புதமானது. சுயமரியாதையும் சுயசார்பும் சேர்ந்த கலவை அது. விரும்பும் இடத்திற்குச் செல்லலாம். விரும்பியதைச் செய்யலாம். வாழ்வில் புதிய சாளரங்களைத் திறந்துவிடும். 


உலகையே வலம் வரும் ஆசையைத் தூண்டிவிடும். உங்கள் வாய்ப்பு வசதிக்கேற்ப ஏதாவது ஒரு வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்ளுங்கள், தொடர்ந்து ஓட்டுங்கள். அன்புத் தோழர்களே, உங்களைச் சுற்றியிருக்கும் பெண்களை வாகனம் ஓட்டுமாறு ஊக்கப்படுத்துங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். சமத்துவத்திற்கான பாதை அது.


படைப்பாளர்: கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.

வியாழன், 18 நவம்பர், 2021

மகிழ்ச்சி ...

இன்று உடுமலை GVG மகளீர் கல்லூரியில் வரலாறு .தொல்லியில் ..தமிழ் ..கோவில்  வரலாறுகளை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்வதற்கு 
உடுமலை வரலாறு - GVG மகளீர் கல்லூரி..புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு கலந்துரையாடல் நடைபெற்றது ...கல்லூரி முதல்வர் .வரலாற்று துறை பேராசிரியர்களுடன் சந்தித்து பேசியது மிக்க மகிழ்ச்சி ..

திங்கள், 15 நவம்பர், 2021

கம்பளத்தார் வாழ்வியல் ...


காலங்கள் மாறினாலும் புதுமைகள் பல புகுந்தாலும் 

பழமையும் பாரம்பரியமும் மாறவில்லை.....


இன்று காலை 9-10.30 முகூர்த்த நேரத்தில் தேனியிலேயே அதி நவீன வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய திருமண மண்டபத்தில் நடந்த கம்பள சமுதாய ஜமீன்தார் வீட்டு திருமணம். போடி ஜமீன் தேவாரம் ஜமீன் சாப்டூர் ஜமீன் இனைந்து நடத்திய திருமணம். 


பல்வேறு புதுமைகள் புதுப்புது வசதிகள். நாகரீக வளர்ச்சி. பலதரப்பட்ட மக்கள் பல்வேறு வி.ஐ.பிகள் வருகை. ஆனாலும் பலருக்கும் ஆச்சரியம். மண்டபத்தின் விஸ்தாரமான மேடையில் கம்பள மணப்பெண் அமர்வதற்கு 12 கம்பங்களுடன் கூடிய பச்சைப்பந்தல். பாலமர கிளைகளும் சிகரமானு கிளைகளும் நிரவப்பட்ட பந்தல். 


மணமகன் அமர்வதற்கும் பாரம்பரிய பச்சைக்குடில். இரு குடிசைளுக்கு முன்பும் தோரண கம்பங்கள். ஐந்து உருமிகள் (தேவதுந்துமி) தவிர வேறு எந்த வாத்தியமும்  கிடையாது. முதலில் மணமகன் வருகை. தலையில் உருமால் மார்பில் மஞ்சள் துணி கவசம். வலது தோளில் சக்க பந்த. இடுப்பில் வேஷ்டி. கையில் மூங்கில் கம்பு, போர்வாள். இதுவே மணமகனின் தோற்றம். அடுத்து மணமகள் வருகை. புத்தம்புதிய வெண்ணசீர முழு உருவத்தையும் நிறைத்து விட்டதால் வேறு எதையும் பார்க்க தேவையில்லாமல் போனது. திருமண சடங்குகள் அனைத்தையும் செய்தவர் சாலிபெத்த எனும் கம்பள பெரியவர்தானே தவிர பிராமண புரோகிதருக்கு அங்கு இடமில்லை. 


திருமண சாலிகள் தொடங்கியது முதல் நிறைவுவரையிலும் கம்பளத்தாரின் பாரம்பரிய தேவராட்டம். தேவராட்டம் ஆடிய இளைஞர்கள் எல்லோருக்குமே தலையில் உருமால் இடுப்பில் வெள்ளை வேஷ்டி மட்டும். யாருமே சட்டை அணியவில்லை. ஆக கம்பள சமுதாய திருமணங்களைப் பொறுத்தவரை சாமானியர் ஆனாலும் ஜமீன்தார்கள் ஆனாலும் காலங்கள் மாறினாலும் புதுமைகள் பல புகுந்தாலும் பழமையும் பாரம்பரியமும் மாறவில்லை. அவர்களின் பண்பாடும் கலாச்சாரமும் அசையவே இல்லை.


ஞாயிறு, 14 நவம்பர், 2021


புது மணமக்கள் ஆதீஸ்வரன் -சௌந்தர்யா  திருமண வரவேற்பு நிகழ்வு ..14-11-2021.


 இன்று உடுமலைப்பேட்டை கொடுங்கியம்  ஸ்ரீ திருவேங்கடப்பெருமாள் திருமண மண்டபத்தில்  புது மணமக்கள் ஆதீஸ்வரன் -சௌந்தர்யா  திருமண வரவேற்பு நிகழ்வு ..


இன்று அருமையான நிகழ்வு மூன்று இரண்டு மணிநேரம் நம் சொந்தங்கள் ,,மாப்பிள்ளைகள் .தம்பிகள் ..அண்ணன் ,மாமன்மார்களையையும்  சந்தித்து கலந்துரையாடியது மகிழ்ச்சி ..


பழைய காளாஞ்சிபட்டி  சொந்தங்கள் மாப்பிளை விஜய் ,தம்பி பாலா ..புதுக்களாஞ்சிபட்டி சிவகாமி மற்றும் ஒட்டன்சத்திரம் சொந்தங்களை சந்தித்து பேசியது மற்றட்டசந்தோசம் .மாப்பிளை விஜய்யுடன் விருப்பாட்சி கோபால்நாயக்கர் பற்றி சில வரலாற்று தகவல்களை பரிமாறிக்கொண்டோம் .

அருமை மாப்பிள உடுக்கம்பாளையம் கணினி பொறியாளர் YOUTUBE chennal  சண்முகபிரபுவுடன் புது தொழில்நுட்பம் குறித்து கலந்துரையாடல் அருமை .

அருமை மாப்பிள்ளை சில்லென்ற சில்லவார்  PC செல்வா மாப்பிளையுடன் இன்றைய விளையாட்டு துறைபற்றி  சில தகவல்களை பரிமாறிக்கொண்டோம் .

அருமை மாமா தளி காந்தி அவர்களுடன் ,தம்பி மாசித்துரையுடன் .சந்தித்து பேசியது .


அருமை மாப்பிள்ளைகளுடன் என்றும் போல் வங்கி துறை சார்ந்து நேரில் சந்தித்து பேசியதும் .JN பாளையம் பஞ்சாயத்து துணைத்தலைவர் (பிஜேபி )ரங்கசாமி  அவர்களுடன் இன்றைய அரசியல் மூலமாக நம் சமுதாய மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருவது பற்றி தெரிந்துகொண்டேன் .தளி எத்தலப்பர் குறித்தும் எனது சிறு ஆலோசனை அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன் .

இன்று என்னுடன் வந்த உடுமலைப்பேட்டை ஜெய்வந்த் காஸ் உரிமையாளர் விஜயக்குமார் மூலமாக நமது சொந்தங்களுக்கு தற்பொழுது வழங்கி வரும் புது காஸ் இணைப்பு பற்றி என்னனா புது திட்டங்கள் வந்துள்ளது பற்றி நம் சொந்தங்களுக்கு விரிவாக எடுத்துரைத்தது மிக்க மகிழ்ச்சி .

பாப்பனூத்து மாப்பிளை அமுதன் ,என் அருமை கபிலன் ராமசாமி தம்பியும் சந்தித்து பேசியதும் .தம்பி புது சைக்கிளில் உள்ள புதிய தொழிநுட்பம் எப்படி செயல்படுகிறது பற்றியும் கேட்டு அறிந்துகொண்டேன் ..


இன்றைய திருமண வரவேற்பு நிகழ்வு பல துறைகள் சார்ந்த தகவல்களை கேட்டும் எனது தகவல்களையும் பரிமாறிக்கொண்டேன் ..மிக்க மகிழ்ச்சி 

என் அருமை தம்பி டிஜிட்டல் ராஜேந்திரன் புது தொழில் நுட்பத்துடன் புகைப்பட கலைஞர் உடன் மறவாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டது கூடுதல் சிறப்பு .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681 



 

வெள்ளி, 5 நவம்பர், 2021

 மூங்கிலணை காமாட்சி அம்மன், தெய்வனாம்பதி, 

தேவதானப்பட்டி,  மஞ்சள் ஆறு ..பயணம் .....


மூங்கில் பெட்டியில் மஞ்சளாற்றில் மிதந்து வந்து மூங்கில் புதர்களில் அணைத்து நின்றதால் மூங்கிலணை காமாட்சி அம்மன் என வழங்கலாயிற்று.பகைவர்கள் வெல்லும் சக்தியை இத்தலத்து அம்பாள் தருகிறாள்.தவிர திருமண வரம், குழந்தை வரம், தொழில் மற்றும் மன அமைதி ஆகியவை கிடைக்கப் பெறலாம்.புதிய காரியங்களை தொடங்க அனுமதி பெற கௌலி குறி கேட்டலும் இங்கு உண்டு.


காஞ்சி காமாட்சி அம்மனுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்று விளங்குவது தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன். காஞ்சி காமாட்சியே மூங்கிலணை காமாட்சி அம்மனாக இருந்து வருவதே இதற்கு காரணம். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனை குலதெய்வமாக வழிபடலாம்.


இங்குள்ள அம்மனுக்கு சிலையோ விக்ரகமோ இல்லை. கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள அடைக்கப்பட்ட கதவிற்கு தான் பூஜை நடைபெறுகிறது, என்றாலும் கதவுக்கு உள்ளே 16 கால் மண்டபமும் அதன் முன் கர்ப்பகிரகமும் உள்ளது. 


அங்கு அம்மன் பெட்டிக்குள் இருப்பதாக வருடம் ஒருமுறை கற்பகிரக கூரை மேயும் ராஜகம்பளத்தார் கூறுகின்றனர்.உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும்தான் படைக்கப்படுகிறது.துள்ளு மாவுதான் சிறப்பான நைவேத்தியம்.நெய் வாங்கி ஊற்றுவது நேர்த்திக்கடனாக உள்ளது. 


திருவிழா காலத்தில் சேரும் இந்த 50 பானை நெய் வருடம் முழுவதும் தீபத்திற்கு உபயோகிப்பர். இந்த நெய்பானைகளில் ஈயோ எறும்போ மொய்ப்பதில்லை.


தல விருட்சம் : மூங்கில் மரம்


தீர்த்தம் : மஞ்சள் ஆறு


Location: தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கும் வத்தலக்குண்டுக்கும் நடுவே உள்ளது.


மஞ்சளாறு அல்லது வத்தலகுண்டு ஆறு என்பது தமிழ்நாட்டின், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓடும் வைகையின் ஒரு துணையாறு ஆகும். பழனி மலைகளில் உருவாகி கிழக்கு நோக்கிப் பாய்ந்து குன்னுவாரன்கோட்டை அருகே வைகையில் கலக்கிறது. 


மொத்தம் 470 ச. கி.இந்த அணை பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. மஞ்சளாறு என்பது திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓடி வைகை ஆற்றில் கலக்கும் ஒரு துணையாறாகும். இந்த ஆறு மொத்தம் 470 சதுர கிலோ மீட்டர் ஆற்றுப்படுகையும் 21 சதுர கிலோமீட்டர் நீர்த்தேக்கப் பகுதியையும்  கொண்டுள்ளது .


மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 57 அடியாகும். மூலாறு, வறட்டாரு, தலையாறு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் மஞ்சளாறு அணைக்கு வந்து சேர்கிறது. அணையில் தேங்கும் நீர் மூலம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 10-க்கு மேலுள்ள கண்மாய்களில் நீர் தேக்கப்பட்டு 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.


தேவதானப்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, தும்மலப்பட்டி, கணவாய்ப்பட்டி, வத்தலக் குண்டு, கட்டக்காமன்பட்டி, கரட்டுப்பட்டி, குன்னுவாரன் கோட்டை ஆகிய பல பகுதிகள் இந்த அணையால் பாசன வசதி பெறுகின்றன.


அணையில் தண்ணீர் திறந்துவிடும் காட்சியும் மடைகளில் நுரைபொங்க நீர் வெளியேறும் பாய்வதும் கண்கொள்ளாக் காட்சிகள்.


மஞ்சளாறு அணை தேவதானப்பட்டி அருகே இருந்தும் ஊருக்கு உள்ளே பாய்வதில்லை. அருகிலுள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலை ஒட்டிப் பாய்ந்து அப்படியே ஒதுக்குப்புறமாகவே சென்று வத்தலக்குண்டு வழியாக ஓடிப் பின்னர் வைகையில் கலக்கிறது.


ஆனால் மஞ்சளாறு அணையிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் வழியே நீர் திறந்து விடும்போது, தேவதானப்பட்டி பெரிய பாலம் வழியே கடந்து, சந்தைப்பேட்டையைச் சுற்றிக் கொண்டு எங்கள் உயிர்நிலைப் பள்ளியைச் சுற்றி அகழிபோல் கடந்து அப்படியே வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய ஊர்களுக்குச் செல்லும்.


அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடும்போது ஊர் மேலும் செழிப்பாக இருக்கும். வாய்க்காலின் அருகே உள்ள குளங்கள், கண்மாய்கள் பெருகிவிடும். அது மட்டுமல்ல போகுமிடங்களிலுள்ள கிணறுகள் கையால் எட்டித் தொட்டுவிடுமளவிற்கு நிரம்பி விடும்.


வாய்க்காலில் குதிப்பது, குளிப்பது போன்ற பல சாகச நிகழ்சசிகள் நடைபெறும்.


வெள்ளை அதிகாரிகள் மலையிலிருந்து கீழிறங்கும்போது அதனை முன்கூட்டி அறிவிக்கும் வண்ணம் அங்கு ஒரு பெரிய முரசைக் கொட்டுவார்களாம். அந்த முரசுக்குத்தான் வெள்ளைக்காரர் வைத்த பெயர் டாம் டாம் (TomTom). அந்தப் பெரிய முரசு அந்த இடத்தில் இருந்த பாறையின் மேல் நிறுவப்பட்டதால் அங்கே இருந்த பாறைக்குப் பெயர் டம்டம் பாறை என்றாயிற்று. நம் மக்கள் அதனை “தம்பட்டாம் பாறை” என்றே அழைக்கிறார்கள்.


அங்கேயிருந்து புறப்படும் காட்டாறு , தலையாறு என்றழைக்கப்பட்டு, நீர்வீழ்ச்சியாக கீழிறங்கி வரும் ஆறே மஞ்சளாறு என்பது.


கொடைக்கானல் மலையில் ஏறும் இடத்தில் காட்ரோடு தாண்டிப் போகும்போது கீழே பார்த்தால் மஞ்சளாறு ஓடுவது தெரியும். அதோடு அதனை தடுத்து நிறுத்தியுள்ள அணையும் நன்கு தெரியும். 


இதுவரை இந்த அழகான காட்சியான அணையைப் பார்க்காதவர்கள் அடுத்த முறை கொடைக்கானல் மலையில் ஏறும்போது உங்களின் இடதுபுறம் தெரியும் காட்சியினை காணத்தவறாதீர்கள். 


முடிந்தால் பஸ்ஸில் போனால் இடதுபுறத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். காரில்போனால் அந்த இடத்தில் நிறுத்தி அங்கிருந்து கீழே பார்க்கலாம். அதே மாதிரி டம்டம் பாறையினருகில் நின்று தலையாற்றுக் காட்சிகளைப் பார்த்துச் செல்லலாம்.


இனிமையான பயணம் ..நன்றி 


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681


வியாழன், 4 நவம்பர், 2021

 விஜயநகர பேரரசு காலத்தில் ..தீபாவளி கொண்டாடப்பட்டது ...அதுக்கு தான் வேஷ்டி சட்டையில் ...மஞ்சள் ஆற்றின் கரையில் ...சிறிய புகைப்படம் ..

 குச்சனூர் சனீஸ்வரன் கோவில் பயணம் ...


வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.


தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது. 


சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும். மேலும் தாங்கள் தொடங்கும் புதிய தொழில் வளர்ச்சி அடையவும், வணிகம் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர். 


தற்போது இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இந்து சமய நம்பிக்கையுடையவர்கள் இந்த சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் சென்று கொண்டிருக்கின்றனர்.


சனீஸ்வர பகவான் 


இந்த குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் "ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 


இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் "சனிப்பெயர்ச்சித் திருவிழா" சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.


சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் "விடத்தை மரம்" தல மரமாகவும், "கருங்குவளை மலர்" தல மலராகவும், "வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு "காகம்" வாகனமாகவும், "எள்" தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.


அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த தலம் சனிஸ்வர பகவானுக்கு பிரம்மகத்தி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் என்றும் கூறப்படுகிறது.


இக்கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்.

ஆடித்திருவிழா..


குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சனிக்கிழமைகளில் விழா நடக்கும். சிறப்புப் பூஜை, திருக்கல்யாணம், மூன்றாவது சனி வாரம் ஆடி பெருத்திருவிழா கொண்டாடப்படும். சிறப்பு பூஜை, சுவாமி புறப்பாடு, லாட சித்தர் பீடத்தில் பூஜை, முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டம், சோனைக் கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்தல், கொடியிறக்கி பகவானுக்கு சிறப்புப் பூசை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கும்.


வழிபாடுகளும் சிறப்புகளும்..

இந்த குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் "ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 


இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் "சனிப்பெயர்ச்சித் திருவிழா" சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.


சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் "விடத்தை மரம்" தல மரமாகவும், "கருங்குவளை மலர்" தல மலராகவும், "வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு "காகம்" வாகனமாகவும், "எள்" தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.


அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த தலம் சனிஸ்வர பகவானுக்கு பிரம்மகத்தி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் என்றும் கூறப்படுகிறது.


இக்கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்


பயண வசதி

தேனி அல்லது சின்னமனூர் நகருக்குச் செல்ல வேண்டும். குச்சனூருக்கு தேனி மற்றும் சின்னமனூர் ஆகிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் நகரப் பேருந்து வசதி இருக்கிறது. திருவிழாக்களின் போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.


ஆன்மீக பயணங்கள் மனதிற்கு இனிமையானவை ...


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681


 வீட்டுக் கடன் தெரியும்.. அது என்ன நிலக்கடன்....(DTCP-approved site மட்டும்) ..?


நம்ம கோயம்புத்தூரைச் சேர்ந்த இண்டஸ்ட்ரியல் வேஸ்ட் வியாபாரம் செய்யும் நம்ம சிவா ..., தன் வடவள்ளியிலிருந்து வீட்டிலிருந்து அலுவலகத்திற்குச் செல்ல தினமும் 18 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். 


இப்படி அன்றாடம் பயணிப்பதால், பெரிய செலவுகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, வேலையில் மந்தமாகவும் வினைத்திறனற்றவராகவும் செயல்படுகிறார். ஏன் அலுவலகத்தின் அருகிலேயே நான் சிறிய இடம் ஒன்றை வாங்கி அங்கே இரண்டாவது வீட்டை கட்டிக் கொள்ளக் கூடாது என நம்ம சிவா ... யோசித்தார். 


தன் அலுவலகம் அருகிலேயே ஒரு இடத்தை வாங்க நிலக்கடனை பெற ஒரு வங்கியை அணுகினார் அவர். ஆனால் அந்த நிலம் தொழில்துறை பகுதியில், நகராட்சி எல்லைக்கு வெளியே உள்ளதென்ற காரணத்தைக் காட்டி, நம்ம சிவா ...விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

ஆயிரம் கேள்விகள்:

தன் விண்ணப்பம் வங்கியால் நிராகரிக்கப்பட்ட பிறகு, நம்ம சிவா ...க்குப் பதில்களை விடக் கேள்விகள் தான் அதிகமாகத் தோன்றின. நம்ம சிவா ...போல் நிலக்கடன் வாங்குவதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பாக நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய கேள்விகள் ஐந்து உள்ளது.

யார் நிலக்கடனை (DTCP-approved site மட்டும்) பெற முடியும்? 21 வயதைக் கடந்த அனைத்து இந்திய குடிமகன்களுக்கும் வங்கிகளும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும் நிலக்கடன்களை அளிக்கிறது. 


வீடு கட்ட நிலம் வாங்கப்பட்டிருந்தால், சில வங்கிகள் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் கூட நிலக்கடனை வழங்குகிறது. இந்தியாவில் வசிப்பவர்கள் என்றால், கடனை நல்லபடியாகச் செலுத்தியுள்ள சம்பளம் வாங்கும் தனி நபர்கள் மற்றும் சுய தொழில் ஈடுபட்டுள்ள தனி நபர்களுக்கு நிலக்கடன் வழங்கப்படும்.

கட்டுப்பாடுகள் நிலக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால், நீங்கள் வாங்கும் இடம் குடியிருப்பு இடமாக இருக்க வேண்டுமே தவிர விவசாய இடமாகவோ அல்லது வணிக ரீதியான நிலமாகவோ இருக்கக்கூடாது. அதே போல் அந்த நிலம் மாநகராட்சி / நகராட்சி எல்லைக்குள் இருந்தாக வேண்டும்.


 இந்தியாவில் வசிப்பவர்கள் என்றால், ஒரு இடத்தை வீடு கட்டும் எண்ணத்தில் வாங்கினாலும் சரி, அல்லது வருங்கால முதலீட்டு எண்ணத்தில் வாங்கினாலும் சரி, அவர்களுக்கு நிலக்கடன் அளிக்கப்படும்.

நிலம் வாங்க அதிகப்படியான கடன் எவ்வளவு? கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது முழுவதுமாகக் கட்டப்பட்டிருக்கும் வீட்டிற்கு அளிக்கப்படும் மரபு ரீதியான வீட்டுக்கடன்களைப் போல் அல்லாமல், நிலக்கடனுக்கு அதிகப்படியாக நகர்ப்புறத்தில் உள்ள நிலத்தின் மதிப்பின் மீது 70% வரை கடன அளிக்கப்படும். 


சிறிய நகரங்கள் என்றால், நிலக்கடனுக்கான அதிகப்படியான எல்.டி.வி. வீதம், நிலத்தின் மொத்த மதிப்பில் 50%-60% எனப் பொதுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பணம் நீங்கள் நிலக்கடன் மூலமாக ஒரு நிலத்தை வாங்க முடிவெடுத்தால், உங்கள் கையில் இருந்து நிலத்தில் மதிப்பில் இருந்து 30%-50% வரை கட்டியாக வேண்டும்.

நிலக்கடன் மூலமாக நான் வரிவிலக்கு நிலக்கடன் என்பது வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடனில் ஒரு அங்கமாக இருந்தாலும் கூட, நிலம் வாங்குவதற்காக வாங்கப்பட்டுள்ள வீட்டுக்கடனை அடைக்கும் தொகையின் மீது வரி விலக்கு அளிக்கப்பட மாட்டாது. 


இருப்பினும், நீங்கள் வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் பணியை நீங்கள் தொடங்கி விட்டால், அந்தக் கடனின் ஒரு பகுதிக்கு நீங்கள் வரி விலக்குகளைப் பெறுவீர்கள். இருப்பினும், கட்டுமான பணிகள் முடிவடைந்த வருடத்தில் தான் இந்த விலக்கு பொருந்தும்.


பிற ஆவணங்கள் மேலும் இடத்தை விற்பவரின் பெயரில் உள்ள நில உரிமை ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது வங்கியல்லாத நிதி நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். வில்லங்கம் இல்லையென்ற சான்றிதழ்,உடைமை சான்றிதழ், இடம் சான்றிதழ் மற்றும் கடந்த 15 வருடங்களுக்கான ஆவணங்கள் போன்றவை இதில் அடக்கம்.


சிவக்குமார்....நிலகடன்கள்(DTCP-approved site மட்டும் )

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs)

Coimbatore,Pollachi, Udamalpet

கைபேசி : 9944066681 whatsapp:...9944066681.....(கோயம்புத்தூர்,பொள்ளாச்சி ,உடுமலைபேட்டை ) 

புதன், 3 நவம்பர், 2021

 கேள்வி : வாழ்க்கையில் மக்கள் அடிக்கடி மிகவும் தாமதமாகக் கற்றுக் கொள்ளும் பாடங்கள் யாவை?


என் பதில் : 


முடி திருத்தம் செய்பவர் எப்போதுமே நமக்கு ஏத்த மாதிரி அமைய மாட்டார். அவங்க எப்படி வெட்டி விடுறாங்களோ அதை தான் நாம ஏத்துக்கணும். அந்த மனப்பக்குவம் வாழ்க்கையில லேட்டா தான் வரும்.


என்ன தான் புல்லட்டே வெச்சியிருந்தாலும் ஸ்கூட்டி பெப்பை ஓவர் டேக் பண்ண முடியாது.


மொட்டையே அடிச்சிட்டு வந்தாலும் அம்மா இன்னும் முடிய சின்னதா வெட்டிருக்கலாம்டான்னு தான் சொல்லுவாங்க.


ஆபிஸ்ல லீவு கேட்க்கும் போது தான் தெரியும் நீங்க இல்லாமல் ஆபீஸே ஸ்தம்பிச்சி போயிடும்னு.


எப்பவுமே உங்க லல்வரை அழகாயிருக்குற பிரண்ட்கிட்ட இன்ட்ரோ குடுக்க கூடாது.


பணத்தை செலவழிப்பது ஈஸி சம்பாதிப்பது கஷ்டம்.


பணத்தை தண்ணி மாதிரி செலவு பண்ணுறவங்க அதை சம்பாதிரிச்சிக்க மாட்டாங்க. சம்பாதிக்கும் போதே அதன் மதிப்பு புரியும்.


நம்மளுடைய பலவீனம் என்னன்னு யாருக்கும் தெரியாத வரைக்கும் தான் நாம பலசாலியாக இருக்க முடியும்.


பிடித்தவர்களுக்கு நேரம் ஒதுக்குவதை விட நம்மை பிடிக்கலைன்னு சொன்னவர்களை கவனிப்பதிலேயே அதிக நேரம் செலவழிப்போம்.


அழகாய் இருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சு வெற்றி பெற்றாலும் நீ அழகாயிருக்க அதான் உனக்கு எல்லாம் ஈஸியா கிடைச்சிட்டுன்னு சொல்லுவாங்க. பணக்காரர்களுக்கும் இது பொருந்தும்.


புக்குல படிச்சி தெரிஞ்சிக்கிட்ட அறிவை விட வாழ்க்கை சொல்லி தரும் பாடத்திற்கு மதிப்பு அதிகம்.


தனியா வருவோம் தனியாவே போவோம்.


முடிந்த பிறகு வருத்தப்பட்டு பிரயோஜனம் கிடையாது.


தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களும் சாதாரண நாள் மாதிரி கடந்து போகும். அது பெரிய விஷயமாக வயசான பிறகு தோணாது.


வீட்டுல திட்டும் போது உம்முன்னும், யாராவது உனக்கென்னடான்னு வெருப்பேத்தும் போது கம்முன்னும் இருந்தால் போதும் வாழ்க்கை சும்மா ஜம்முன்னு போகும்.


நன்றி ......


திங்கள், 1 நவம்பர், 2021

 பெயர் என்பது, வெறும் ஒரு சொல் அல்ல; அது ஒரு பெரிய பண்பாட்டின் அடையாளம்; ......

ஒரு பெரிய #வரலாற்றைத் தாங்கி நிற்கப்போகும் சொல். ....

`#தேவராட்டம்' என்பது, ஆண்கள் தங்கள் கையில் ஒரு துணியை வைத்துக்கொண்டு, காலில் சலங்கையும் இடுப்பில் வேட்டியும் அணிந்துகொண்டு ஆடும் ஆட்டம். தேவர்கள் ஆடிய ஆட்டம் என்பதால், `#தேவராட்டம்' எனப் பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள். இதை, #கம்பளத்துநாயக்கர் இனத்தைச் சார்ந்த ஆண்கள் ஆடுவார்கள்.

கலைக்கோட்டு மாமுனிவரின் மகள், ஆண் உறவின்றி புத்திரப்பேறு வேண்டும் எனத் தந்தையிடம் வரம் கேட்டாள். அவர், அவருக்கு எலுமிச்சைப்பழம் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் பழத்தின் மூலம் ஒரு குழந்தை பிறந்தது. அவர்கள் எலுமிச்சைப்பழத்தை `கண் பழம்' என்றும் அழைப்பர். தேவரிஷியின் வம்சத்தில் பிறந்த அந்தக் குழந்தையின் மரபினர் கண்பழத்தார் - #கம்பழத்தார் எனப் பெற்றனர். இவர்கள் தேவரின் ஆட்டத்தை அறிந்து ஆடினர். இவர்கள் ஆடிய ஆட்டம் தேவராட்டம் ஆனது என்று ஒரு கதையும்...

ஏழு உலகங்களையும் படைத்த பிறகு சிவபெருமானும் பார்வதியும் தேவர் உலகில் வீற்றிருந்தார்கள். அப்போது தேவர் உலகை உருவாக்கிய சிற்பி விஸ்வகர்மா புதிய இசைக்கருவி ஒன்றைப் படைத்தார். அது உடுக்கையைப் போன்று இருந்தது. ஆனால், உடுக்கையைவிட உருவத்தில் பெரிதாக இருந்த அந்த இசைக்கருவியைத் தேவர்களிடம் கொடுத்து இசைக்கும்படி சொன்னார். தேவர்கள் அந்தக் கருவியை `தேவதுந்துபி' என்று அழைத்தனர். தேவர்கள் அந்த இசைக் கருவியை இயக்க முயன்றனர், முடியவில்லை. அதை இயக்க யாருமே முன்வராத நிலையில், சிவனுக்கு மாலை கட்டுபவர் வந்தார். அவர் சிவனின் கால்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு தேவதுந்துபியை இயக்கினார். அந்தக் கருவியின் தாளத்துக்கேற்ப தேவர்களும் ஆடத் தொடங்கினர். அந்த ஆட்டம் `#தேவராட்டம்' எனப் பெயர்பெற்றது என்று ஒரு கதையும் என... #தேவராட்டம் தொடர்பாக இரண்டு நாட்டார் கதைகள் உள்ளன.

தமிழகத்தில் கோயமுத்தூர் ,திருப்பூர் ,உடுமலைப்பேட்டை யை சுற்றி இருக்கும் 64 கிராமங்களில் ,திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் முதலான #கம்பளத்துநாயக்கர்கள் வாழும் பகுதிகளில் இந்த நிகழ்த்துக்கலை அதிகமாகக் காணப்படுகிறது.

#தேவராட்டத்தில் 8 முதல் 13 பேர் ஆட வேண்டும் என்பது பொதுமரபாக இருந்தாலும், ஆடுவோர் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை. 100 பேர்கூட ஒரே சமயத்தில் ஆடலாம். இந்த ஆட்டத்தின்போது ஆண்கள் ஒப்பனை செய்துகொள்வதில்லை. அண்மைக்காலமாக இந்தக் கலை மேடையில் நிகழ்த்தப்படுகிறது. அந்தச் சமயத்தில் ஆடுபவர்கள் ஒரே வண்ணத்தில் ஆடை அணியும் போக்கு காணப்படுகிறது.

இந்த ஆட்டத்தில் பாடல்கள் எதுவும் பாடப்படுவதில்லை. உறுமி என்னும் இசைக்கருவி இந்த ஆட்டத்தின்போது இசைக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போலவே ஆடுகின்றனர். இதைத் `தேவதுந்துபி' என்றும் அழைக்கின்றனர். `மாலா' என்னும் பிரிவினர் இந்தக் கருவியை இசைக்கின்றனர்.

இந்த ஆட்டத்தின் ஆடுகளம் சூழலுக்கேற்ப அமைகிறது. #தேவராட்டத்தில் பயிற்சிபெற்ற ஒருவர், தலைமை ஏற்று ஆடுவார். மற்றவர்கள் அவர் உடல் அசைவுகளைக் கவனித்து அவரைப் பின்பற்றி ஆடுவார்கள். நிலுடிஜம்பம், சிக்குஜம்பம் போன்ற பெயர்களில் 23 ஆட்டங்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். ஒவ்வொரு வகையான ஆட்டத்துக்கும் உறுமி மேளத்தில் இசைக்கப்படும் தாளக்கட்டுகள் மாற்றமடைகின்றன. ஆரம்பத்தில் பெண்கள், பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர். தற்போது சில ஊர்களில் பெண்களும் #தேவராட்டம் ஆடுகின்றனர்.

#தேவராட்டத்தில் 18 அடவுகள் உள்ளன. இவற்றை அடிப்படை அடவுகள் எனக் கூறலாம். அடிப்படை அடவுகளை நான்கு நிலைகளில் வேறுபடுத்துவதன்மூலம் 72 அடவுகளை உருவாக்க இயலும். இந்த 72 அடவுகளும் விதவிதமான இசையை உடையவை. ஒவ்வோர் அடவும் தனித்தனியே ஆடப்படும்போது இந்த ஆறு இசை மட்டுமே மறுபடியும் மறுபடியும் இசைக்கப்படுகின்றன. இவ்வாறு ஆடப்படும் அடவுகள் இணைந்தே தேவராட்டமாக உருப்பெறுகிறது. இந்தக் கலையின் அடிப்படை அடவுகள் பதினெட்டும் கட்டாயமாக ஆடப் பட வேண்டும் என்ற நியதியும் உள்ளது.

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு இடம்பெயர்ந்து வந்த #கம்பளத்துநாயக்கர்களின் இனக்குழு ஆட்டமாகத் #தேவராட்டம் கருதப்படுவதால்,

இந்தக் கலை ஆந்திராலிருந்து தமிழகத்துக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆட்டத்தை, பிற சாதியைச் சார்ந்தவர்கள் பெரும்பாலும் ஆடுவதில்லை. கர்நாடகத்திலிருந்து தமிழகத்தில் குடியேறிய ஒக்கலிகள், குறும்பைக் கவுண்டர் ஆகிய சமூகத்தினரும் இந்தக் கலையை நிகழ்த்துகின்றனர்.

ஆந்திராவில் இதை `தேவுடு ஆட்டம்' என்கிறார்கள். #கம்பளத்து_நாயக்கர்களின் வாழ்வியல் சடங்குகளிலும் வழிபாட்டுச் சடங்குகளிலும் தேவராட்டம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பூப்புச் சடங்கில் 16-ம் நாள் பெண்ணை மந்தைக்கு அழைத்துச் சென்று சடங்குகளைச் செய்துவிட்டு வீட்டுக்கு வரும்போதும், திருமணம், கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளின்போதும் தேவராட்டம் ஆடப்படுகிறது. பிறப்பு, இறப்பு என எல்லா சடங்கிலும் தேவதுந்துபி இசைக்கப்படுகிறது.

ஆடி மற்றும் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் #சக்கம்மா வழிபாட்டின்போது தேவராட்டம் நிகழ்த்தப்படுகிறது. வீரபாண்டியில் உள்ள கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழாவில் ஐந்தாம் நாளன்று இரவில் பல ஊர்களைச் சேர்ந்த #கம்பளத்து_நாயக்கர்களும் வந்து தேவராட்டம் ஆடுவர்.

இப்படி `#தேவராட்டம்' என்ற சொல் வெறும் ஒரு நிகழ்த்துக் கலை சார்ந்த பெயர் மட்டுமல்ல; அது ஒரு பெரிய பண்பாட்டின் அடையாளம். எல்லா பெயர்களுக்குப் பின்னாலும் இப்படியான ஒரு பண்பாட்டுக்கூறு இருக்கிறது..........

இந்தக் கட்டுரை, அ.கா.பெருமாளின் `தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலை' என்ற நூலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.


நன்றி ....விகடன் .காம் 

 ஏன்? எதற்கு? 

தொழில்/ வியாபாரம்/ பணம்/ சம்பாதித்தல். 

கல்வி மிக அவசியம். அதை விட பொருளாதார முன்னேற்றம் மட்டுமே பல விஷயங்களை நமக்கு தரும்.

ஒரு பெண் பொருளாதார தன்னிறைவு அடையாமல் பெண் முன்னேற்றம் பேச முடியாது.

ஒரு வீடும், சமூகம் ஏன் நாடும் பொருளாதார முன்னேற்றத்தில் மேல் வருவது மிக மிக அவசியம்.

அதும் கோவிட்டுக்கு பிறகான இந்திய பொருளாதாரம் அத்தனை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

இதற்கு ஷேர் மார்க்கெட் மட்டும் அளவுக்கோல் இல்லை.

ஒட்டு மொத்த சமூகமும் மேல் வர வேண்டும்.

அதற்கு கூடி உழைப்பது அவசியம்.

இணையத்தில் வியாபாரம் செய்வது தவறா? அதை நக்கல்  செய்கிறார்கள் என.   .

மார்க்கே வியாபார நோக்கத்தில்தான் ஃபேஸ்புக் ஆரம்பித்துள்ளார். இங்கு எதுவும் இலவசமில்லை..எல்லாவற்றுக்கும் விலை உண்டு. அதனால் நமக்கு தெரிந்த அளவில் நம் ப்ராடக்ட்ஸ் பத்தி பேச வேண்டும். நாமே நம் சர்வீஸ்/ ப்ராடக்டுக்கு மதிப்பு தந்து இடம் தராவிடில் யார் தருவார்?

இக்காலத்தில் செல்ஃ பிராண்டிங், இமெஜ் பில்டிங் எல்லாம் அளவோடு அவசியம். அது நம் வியாபரத்துக்கு என்றுமே உதவும். இல்லாவிடில் தனி மனிதராய் சமூகத்திற்கும் உதவும். 

நல்லது செய்தாலும் அதை இங்கே எழுதி விளம்பரப்படுத்தினால் மட்டுமே தொடர்ந்து நெட்வொர்க்கிங் மூலம் நல்லதுகளை தொடர முடியும்.

அதே சமயம் உங்கள் பொது பக்கத்தை வெறும் வியாபாரம் மட்டும் செய்ய பயன்படுத்தினால் யாரும் படிக்க மாட்டார்கள்.

நம் பக்கம்  எல்லாருக்குமானதாக  இருக்கும் பொழுது நம் செய்திகளும் எழுதும் பொழுதுதான் அதற்கு வீயூஸ் இருக்கும்.

அதிகமாய் பகிர வேண்டுமெனில் முழு வியாபார பக்கங்கள் தொடங்கி  அதை அவ்வப்பொழுது பகிரலாம்.

நாம் வியாபாரப்படுத்தும் ஒரு விஷயம்  சமூகத்தை மாற்றக்கூடும் எனில் அதிகம் பகிரலாம்.

பணம் சம்பாதிப்பது தவறு, பணக்காரனாக ஆசைப்படுவது பேராசை, வியாபாரம் ,விளம்பரம் சரியில்லை என யாராவது சொன்னால் ..

கபாலி வசனம்தான்.. அதும் கால் மேல் கால் போட்டு..

சொல்லனும் .

" நான் அப்படிதாண்டா சம்பாதிப்பேன்"

ஏன் எனில் டேக்ஸ் கட்டுவதுதான் மிகப்பெரும் தேச சேவை.

அதை துணிவாக செய்வோம்.

நாமே சம்பாதித்து.

#ஏன்_எதற்கு......


நன்றி ...

பவித்ரா வேலுமணி ...

Bavithra Velumani 

E-Commerce Buisness Entrepreneur 

Karapadi, Pollachi

 95002 69348.....


 இன்று கோவையில் வீடு கட்டுவதற்கு இடம் விலை எப்படி உள்ளது ? ..

நிலம் வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன ?


என் பதில் : 


முதலில் வாங்கும் நிலம் பட்டாவா அல்லது புறம்போக்கா என தெளிவாக தெரிந்து கொள்ளவும்.


தற்போது அனைத்து பட்டா நிலங்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.எனவே நீங்களே கணினி மூலம் சரிபார்த்து கொள்ளவும்.


நிலம் எந்த வகைப்பாட்டில் உள்ளது என்பதை பட்டாவில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது நன்செய்,புன்செய் அல்லது மானாவாரி என சுருக்கமாக குறிப்பிடபட்டிருக்கும்.


அதன்பின் அளவீடுகள் சரியாக உள்ளதா என புல வறைபடத்துடன் சரி பார்க்கவும்.


மேற்படி நிலம் நீர்பிடிப்பு பகுதியாக இருக்கக்கூடாது.


நில உச்ச வரம்பில் கவரப்பட்டு இருக்க கூடாது.


நில எடுப்பு நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா.


அதன்பின் விற்பவருக்கு உரிமை உள்ளதா,சிக்கல் ஏதும் உள்ளதா என ஒரு வக்கீலிடம் கேட்டு தெளிவு பெறலாம்.


தாய் பத்திரத்தில் இருந்து தொடர்பு உள்ளதா என பார்க்க வேண்டும்.


மனை வாங்கும் போது அது உரிய அங்கிகாரம் பெறப்பட்டுள்ளதா என பார்க்கவும்.


நிலம் வாங்கும் முன் நன்கு விசாரித்து வாங்கவும்.


நன்றி ...

சிவக்குமார்  V .K 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com


 கேள்வி : பேங்க் சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் எத்தனை பணத்திற்கு மேல் இருந்தால் வரி கட்ட வேண்டும்?


என் பதில் :


வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு அதிகபட்ச எல்லை என ஒன்று கிடையாது.


ஆனால் அதில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தொகைகளை கணக்கில் போட்டால் அதற்கு தக்க விளக்கம் கோர வருமான வரித்துறை கேள்வி கேட்க முடியும்.

மற்றப்படி, சேமிப்பு கணக்குகள் மூலமாக வரும் வட்டிப் பணத்திற்கு பத்தாயிரம் வரை விலக்கு இருந்தது. ஆனால் இப்போது எவரெல்லாம் வைப்புக் கணக்குகள் வட்டிக்கு ஆண்டிற்கு ஐம்பதாயிரம் வரை வரிச் சலுகை கேட்பார்களோ அவர்கள் சேமிப்பு வங்கி வட்டிக்கு வரி உண்டு. இரண்டு இடங்களில் சலுகை கோர முடியாது.


நன்றி ...

சிவக்குமார்  VK 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com🥰📚📚✍️✍️🌈🌈🏡🏡🏡