திங்கள், 30 ஆகஸ்ட், 2021

 கேள்வி : தமிழ் கலாச்சாரத்திற்கும் நுகர்வு கலாச்சாரத்திற்கும் உள்ள வேறுபாடு உதாரணம் கொண்டு விளக்க முடியுமா சார் ?


என் பதில் :


தஞ்சாவூர் கோவில், பாரதியார் கவிதைகள், இளையராஜா இசை போன்ற நிலைப்புத்தன்மை தமிழ் கலாச்சாரம். நிறைய வருமானம் கொடுக்கும் நிலையாமை என்பது நுகர்வுக் கலாச்சாரம்.


நீங்கள் பயன்படுத்தும், விண்டோஸ் மற்றும் கம்ப்யூட்டர், இன்று பல மாற்றங்கள் பார்த்துவிட்டது. ஒவ்வொரு மாற்றத்தையும், Upgrade என்று நாமகரணம் சூட்டி, பல கோடி ரூபாய்களை பில்கேட்ஸ் அள்ளினார்.


அவ்வளவு பணம் சம்பாதித்த பில்கேட்ஸ், திருமணம் நிலைக்கவில்லை. இந்தியாவில், ஒரு கூலித் தொழிலாளி தன்னுடைய வருமானத்தை வைத்து, ஒரு குடும்பம் ஏற்படுத்துவான் . மனைவியும், கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்துவாள், என் கணவன் கூலிக்காரன், படிப்பு இல்லை வருமானம் இல்லை அவனுக்கு புரிதல் இல்லை என்று, குற்றப்பத்திரிக்கை படித்து, விவாகரத்து கேட்டு கோர்ட் படியேற மாட்டாள்!

காரணம், அவளுடைய படிப்பு கம்மி அல்ல. அவள் வாழ்க்கையை நன்கு படித்து உள்ளாள், கிடைக்கும் வருமானத்தில், சந்தோஷமாக வாழ்வது, சிறுகக் கட்டிப் பெருக வாழ் என்று அவ்வையார் சொன்னது, தமிழ் கலாச்சாரம்.

பல்லாயிரம் வருடம் ஆனாலும், தஞ்சாவூர் வீணை அதேதான். அன்று இருந்த தஞ்சாவூர் வீணை, இன்று இருக்கும் தஞ்சாவூர் வீணை ஒன்றாகவே இருக்கும்.

நான் உபயோகப்படுத்திய கம்ப்யூட்டர், 20 ஆண்டுகளில் முற்றிலும் மாறிவிட்டது. ஆனால் இந்த மாற்றத்திற்கு, இந்தியா பல கோடி ரூபாய் விலை கொடுத்து உள்ளது.

கம்ப்யூட்டர் ஃபோன் என்றெல்லாம் எலக்ட்ரானிக் சாதனங்கள், ஒரே நோக்கத்தில் செயல்படுகிறது. மனிதன் மனதிற்கு சந்தோஷம், கொடுப்பதுதான் அதன் இலக்கு. Dopomine என்ற ரசாயனம் நம் உடலில் சுரக்க, பல கோடி ரூபாய் செலவு செய்கிறோம். தமிழ் கலாச்சாரம், பத்து பைசா செலவில்லாமல், உடம்பில் Dopomine சுரக்கவைக்கும்.

கம்பனின் பாடல்களைக் கேட்டுப் பாருங்கள், பாரதியார் கவிதைகளை எழுதிப் பாருங்கள், இளையராஜா இசையை கேட்டு பாருங்கள், உங்கள் உடலில் டோப்போமின் மட்டுமல்ல, Endorphin, Seratonin, நிம்மதியான தூக்கம் கொடுக்கும் Melatonin போன்ற ஹார்மோன்கள் சுரக்கும்.

நுகர்வு கலாச்சாரம் கொண்டு நாம் வாங்கிய ஸ்மார்ட்போன், இரவு நேரத்தில் LED வெளிச்சத்தை நம்மீது காட்டுகிறது. அந்த வெளிச்சம் படும்வரை, Melotonin சுரக்காது. தூக்கம் வராது. Insomania என்று பெருமையாக கூறிக் கொள்ளும் கலாச்சாரம், நுகர்வு கலாச்சாரம்.

இளையராஜாவின் தாலாட்டு பாடல்கள், தமிழ் கலாச்சாரம். இந்திய திருமணங்கள் கூட, தமிழ் கலாச்சாரம். நிலையானது. தஞ்சாவூர் கோவில் போல் நிலையானது.

இளையராஜா ஒரு பாட்டில் சொல்லுவார், எங்க ஊரு காதல பத்தி நீ என்ன நினைக்கிற? ஆஷா போஸ்லே கேட்க, அது எங்க ஊரு காதல் போல ஆழம் இல்லயே!

திருமணம் செய்து கொள்வது, தமிழ்நாட்டில் அவ்வளவு லேசில் சாத்தியம் இல்லை. திருமணம் செய்து கொள்வது நுகர்வு கலாச்சாரத்தில் மிக எளிது. பெண்ணுடைய அப்பாவின் சம்மதம் வேண்டாம், Dating Site அல்லது Tinder போன்ற வலைதளம் போதும்.

ஆனால் பெற்றோர்கள், செய்து வைக்கும் திருமணம் கொஞ்சம் நிலைப்புத்தன்மை வாய்ந்தது. ஒரு பிரச்சினை என்றால் எல்லோரும் பதில் சொல்ல வேண்டும்.

நுகர்வுக் கலாச்சார திருமணம், அதாவது இன்றைய ரிஜிஸ்டர் ஆபீஸ் நடத்திவைக்கும் திருமணம் , அதே அரசாங்க கோர்ட் நீதிபதி முன்பு, வெற்றிகரமாக விவாகரத்து என்ற பெயரில் முடித்து வைக்கப்படும்.

மந்திரம் சொல்லி செய்யப்பட்ட திருமணம், எப்படி முடித்து வைக்க முடியும்?

அது முடியவே முடியாது. தஞ்சாவூர் கோவில் மாதிரி.

தமிழ் கலாச்சாரத்தில் ஒரு இட்லி செய்ய வேண்டும் என்றால், அரிசி உளுந்து வாங்கி, அதை அரைத்து, பக்குவமாக செய்ய, நேரம் உழைப்பு காலம் தேவை.

அதேபோல்தான் இந்திய திருமணம். இட்லி நிலைத்திருக்கும். நூடுல்ஸ், பாஸ்ட் புட் என்று சொல்லுவது தான் நுகர்வு கலாச்சாரம்.

தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிடுவது, தமிழ் கலாச்சாரம். நின்றுகொண்டே, நூடுல்ஸ் சாப்பிடுவது, நுகர்வு கலாச்சாரம். தமிழ் கலாச்சாரம் அம்மா உணவகம், விலை ஒரு ரூபாய்.

நுகர்வு கலாச்சாரம், ஒரு பாக்கெட் பாப்கார்ன் விலை 100 ரூபாய்.

இன்ஸ்டன்ட் சமையல் போல், இன்றைய இசையும், இன்ஸ்டன்ட் ஆகிவிட்டது.

ஒருவரை ஒருவர் பார்க்காமல், காதல் செய்கிறார்கள், அதுபோல் டைரக்டரும் இசையமைப்பாளரும் சந்திக்காமலே பாடல்கள் இசையமைக்கிறார்கள்.

உங்களிடம் 100 கம்ப்யூட்டர், வெளிநாட்டில் இருந்து வாங்கிய, Musical Library Notes இருந்தால், பத்து நிமிடத்தில் ஒரு பாடல் இசை அமைக்கலாம். ஆனால் இப்போதிருக்கும் இசையமைப்பாளர்கள், வெளிநாடு சென்று ஒரு மாதம் தங்கியிருந்து இசையமைக்கிறார்கள்.

எந்த வசதியும் இல்லாமல் இளையராஜா பத்து நிமிடத்தில் இசையமைத்தார். 10 ஆண்டுகாலம் மேலாக அந்த பாடல் நிலைத்து உள்ளது. இப்போது இருக்கும் இசை, பத்து நிமிடத்தில் விவாகரத்து கேட்கிறது நம் மனது இடம் இருந்தது!!!

இளையராஜா இசை தமிழ் கலாச்சாரம் தஞ்சாவூர் வீணை போல, இப்போதிருக்கும் திரையிசை, பில்கேட்ஸின் விண்டோஸ், நிறைய பணம் கொடுக்க வேண்டும், ஆனால் திருப்தி இருக்காது, மாற்றங்கள் மட்டும் இருக்கும்.

இளையராஜா இசை கேட்டால் நீங்கள் உங்கள் மனைவியை விவகாரத்து செய்ய மாட்டீர்கள். அது தமிழ் கலாச்சாரம்.

அவருக்குப் பின்னே வந்த இசையமைப்பாளர்கள், போட்ட இசையை கேட்டால், உடனடியாக எல்லா பெண்களையும் சந்தேகப்பட்டு, ஒன்று நீங்கள் விவாகரத்து செய்வீர்கள், அல்லது திருமணமே செய்து கொள்ளாமல், தனியாக உங்கள் ஸ்மார்ட் போனுடன் வாழ்க்கை நடத்துவீர்கள். இதுதான் நுகர்வுக் கலாச்சாரம்!

தமிழ் கலாச்சாரம் தஞ்சாவூர் கோவில் மாதிரி, நுழைவுக் கட்டணம் இல்லை. நுகர்வு கலாச்சாரம், Multiplex Mall போல் கட்டணம் செலுத்த வேண்டும்.

இலவசமாக நல்ல திரைப்படங்கள், நல்ல பாடல்கள், அம்மா உணவகம் என்பது தமிழ் கலாச்சாரம். சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம், தமிழ் கலாச்சாரம்.

காசு கொடுத்து மோசமான விஷயங்களை வாங்குவது நுகர்வு கலாச்சாரம். காசு கொடுத்து வாங்கிய பொருளால் உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொண்டு, அதை சரிப்படுத்த மீண்டும், காசு கொடுத்து ஆங்கில மருத்துவம் தேடுவது நுகர்வுக் கலாச்சாரம். நிலையான இன்பம் என்பது தமிழ் கலாச்சாரம். காசு கொடுத்து வாங்கும் துன்பம், நுகர்வு கலாச்சாரம்!

வாழ்க்கை பயணம் என்றும் சுகமான ,அன்பு ..சுமையானது .....


ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

 கேள்வி :குறைவான வட்டியில் வீட்டுக் கடன்,எங்கு குறைவான வட்டியில் ..என் கனவு இல்லம் நிறைவேற எனக்கு தகவல் கிடைக்குமா சார் ?


என்  பதில் :


உங்கள் கனவு இல்லம் நிறைவேற ,எல்லோருக்கும் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த ஆசையை நிறைவேற்ற பலருக்கும் உதவுவது வங்கிக் கடன்கள் தான். இதன் மூலம் தான் பலரின் வாழ் நாள் கனவும் நனவாகின்றது.   


 இன்று இருக்கும் காலக்கட்டத்தில் கிடைக்கும் சம்பளம் மூலமும், கையில் பணத்தினை வைத்துக் கொண்டு கட்டுவது என்பது இயலாத காரியம். எனினும் இன்று பலருக்கும் வீடுகட்ட உதவுவது வீட்டு கடன் தான். 


முந்தைய காலத்தில் நீங்கள் கட்டிய வீட்டிற்கு ஆன செலவில், இன்று ஒரு சென்ட் இடம் வாங்குவதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. 


அதிலும் கோவை ,சென்னை ,மதுரை ,திருச்சி , நகரங்களில் விலைவாசி கேட்கவே தேவையில்லை. கற்பனையில் நினைத்தும் கூட பார்க்க முடியாத அளவு விலை அதிகம். குறைவான வட்டி எனினும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் என பலவும் வீடு வாங்க, வீடு கட்ட, இடம் வாங்க என அனைத்துக்கும் கடன் கொடுக்கின்றன. அதிலும் இன்றைய காலகட்டத்தில் வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத சரிவில் காணப்படுகின்றது. ஆக இது வீடு கட்ட வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது. 


பல்வேறு சலுகைகள் கொரோனாவின் காரணமாக வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் விதமாக, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை சமீபத்திய மாதங்களாகவே தொடர்ந்து குறைவாகவே வைத்துள்ளது. 

அதிலும் வங்கிகள் பணப்புழக்கத்தினை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகின்றனர். அதிலும் பெண்களுக்கு கூடுதல் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.   பொதுத்துறை வங்கிகள் ,   தனியார் வங்கிகள் , பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் அதனை நாடலாம். அந்த வகையில் குறைவான வட்டியில் கடன் கொடுக்கும் சில வங்கிகளில் என்ன விகிதம் என்பதைத் உங்களுக்கு நேரம் இருக்கும்பொழுது அழையுங்கள் ...விவரங்களை தருகிறேன் ..உங்களின் எதிர்கால கனவு இல்லம் நனவாக ...


நன்றி ..

என்றும் அன்புடன் சிவக்குமார் -9944066681

வீட்டுக்கடன் ஆலோசகர் 

(இடம் வாங்க dtcp approved ,புதிதாக கட்டியவீடு ,புதியதாக வீடு கட்ட ,)

 Sivakumar.V.K

SivaShyam Associates

Home Loan Consultant🤝📚🏡

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com📚📚✍️👍🏡🏡

புதன், 25 ஆகஸ்ட், 2021

கேள்வி : புதியதாக வீடு ஒன்று கட்ட வேண்டும். அதற்குரிய அரசாங்க திட்டங்கள் என்னென்ன இருக்கின்றன? அதற்கு எப்படி பதிவு செய்து மானியம் பெறுவது?



என் பதில் : 


நாம் வாங்கியிருக்கும் வீட்டு மனை முழுவதும் வீடு கட்ட பொதுவாக அனுமதி கிடைப்பதில்லை. உதாரணமாக 1,200 சதுர அடி மனை வாங்கி இருந்தோம் என்றால், அதில் முழுவதுமாக வீடு கட்ட முடியாது. நிலத்தைச் சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நடுவில்தான் வீடு கட்ட வேண்டும். எவ்வளவு இடம் விட வேண்டும் என்பது நிலம் எந்த வரையறைக்கு உட்பட்டது என்பதைப் பொறுத்து மாறுபடும்.




அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒரு அளவு, நகராட்சிப் பகுதி என்றால் ஒரு அளவு எனத் தனித் தனி வரைமுறைகள் உள்ளன. மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அது மனையின் அளவைப் பொறுத்தது. உதாரணத்துக்கு மனையின் நீளம் 50 அடியோ அதற்கும் குறைவாகவோ இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும். 50 - 100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும்.




அதே போல வீட்டுக்கு இரு புறங்களிலும் 5 அடி விட வேண்டும். வாகனங்கள் நிறுத்தும் வசதிக்காகவும் காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம் செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த வரைமுறைகள். மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. (floor space index) என்று சொல்வார்கள்.




இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடம் கட்ட முடியும். வீடு கட்டும் அளவு முடிவான பிறகு வீட்டுக்கான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அந்த வீட்டுக் கட்டுமானத் திட்டத்துக்குச் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்பில் அனுமதி வாங்கும் முன்பு அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் அந்த பிளானில் கையெழுத்து வாங்க வேண்டும்.




அதாவது அந்த பிளானை அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர் அங்கீகரிக்க வேண்டும். பின்னர் அதை மூன்று நகல்கள் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து உள்ளாட்சி அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும். வீட்டில் மழை நீர் சேமிப்புக்கான வசதி பிளானில் இருக்க வேண்டும். அது அனுமதி வாங்கும்போது பரிசோதிக்கப்படும்.




இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அனுமதி வர ஒரு மாத காலம்வரை ஆகக்கூடும். வீட்டுக் கட்டுமானத் திட்டம் வரத் தாமதமாகிறது என நினைத்து அதற்கு முன்பே கட்டுமானப் பணிகளைத் தொடங்கக் கூடாது. பிளானில் காட்டியுள்ளபடி வீடு கட்டப்பட வேண்டும். இல்லையெனில் பின்னால் அதிகாரிகள் ஆய்வுசெய்யும்போது பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.




இவையெல்லாம் முடித்து பின் வங்கியில் தகுந்த ஆதாரங்களுடன் மானியம் பெறலாம்.


நன்றி ...உங்கள் கனவு இல்லம் நனவாக 

Sivakumar.V.K


Home Loan Consultant


(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 


Coimbatore,Pollachi, Udamalpet


Mobile --09944066681 Call or sms


siva19732001@gmail.com......🤝📚✍️👍🌈🏡🏡🏡

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

 இன்று அருமை பாலமன்னா மாப்பிள்ளை தேனீ கண்டமனூர் மனோஜ் 

அவர்களை முதன் முதலாக சந்தித்து மிக்க மகிழ்ச்சி 

படிப்பு-மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் MBA..

மனோஜ் ...கோவை வணிக விற்பனை வாகனப்பிரிவில்  HDFC Bank (கோவை ,பொள்ளாச்சி ,உடுமலை )இல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் ..திடீர் சந்திப்பு ...பணிநேரத்தில் வந்ததால் நேரமேலாண்மை கருதி இரத்தின சுருக்கமாக பேசினேன் .அவரின் அறிமுகம் கிடைத்தது .மன நிறைவு ..பந்தன் வங்கியில் அதிகாரியாக இருக்கும் ஜெய் மாப்பிள்ளை அறிமுகம் செய்துவைத்தார் ..நன்றி ..தொடரும் கண்டமனூரிலிருந்து தென்கொங்குநாட்டு மண்ணிற்கு கால்பதித்ததற்கு வாழ்த்துக்கள் ...


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -

 Sivakumar.V.K



Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

 கேள்வி : தன் பெண் பிள்ளை திருமணம் வேண்டாம் என்று கூறினால், அதை ஏன் பெற்றோர்கள் அவமானமாகக் கருதுகிறார்கள்?


பதில் :


எல்லாம் இந்த உதவாத சமுகத்திற்காக தான்.அவர் என்ன சொல்வார்,இவர் என்ன சொல்வார், சொந்த காரர் என்ன சொல்வார்கள் என்று புலம்பி தள்ளுகின்றனர்.


ஒரு பெண் திருமணம் வேண்டாம் என்றால் அதற்கான காரணம் என்ன?


உளவியல் ரீதியாக எப்படீ சரி செய்யலாம்.


எதற்காக பயப்படுகிறார்?


அவள் பார்வையில் திருமணம் என்றாலே என்ன இருக்கிறது?


மனதில் என்ன குழப்புகிறாள்?


பாலியல் தொல்லை அனுபவித்து இருப்பாளோ?


நம்மை விட்டு பிரிய மனமில்லயா? இல்லை சந்தித்த ஆண்கள் நம்பிக்கை உரியவர்களாக இல்லையா?


என் பலகோணத்தில் யோசிக்க வேண்டும்.


பெண்ணிடம் மனம் விட்டு பேச வேண்டும்.தேவைபட்டால் கவுன்சிலிங் அழைத்து செல்லலாம்.


வாழ்க்கையில் திருமணம் ஒரு பகுதி தான்.அதை தாண்டீ சாதிக்க நிறைய இருக்கிறது. சுய சம்பாத்தியம் செய்யும் திறமையை வளர்த்து விட வேண்டும்.பிரச்சினை என்றால் சமாளிக்க உன்னால் முடியும்.என மனரீதியாக தயார் செய்த பின்னர் திருமணத்திற்கு தயாராகலாம்.


ஊருக்காக அழுது , புலம்பி திருமணம் செய்து வைத்தால் மேலும் பெரிய பிரச்சினை தான்.


திருமணம் என்பது இருவர் சம்பந்தபட்டடது.ஒருவரை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து வைத்தால் மற்றொருவர் வாழ்க்கையும் கேள்வி குறி ஆகிவிடும்.


இது முற்றிலும் என் மனகருத்து.

புதன், 18 ஆகஸ்ட், 2021

 #புலவர்தளி ஜல்லிபட்டி பழனிச்சாமி அவர்களுக்கு ...

தேவராட்டம் (பாரம்பரிய கிராமிய கலைகள்)
தேவராட்ட கலைஞர் பழனிசாமி
மண்ணில் புதைந்த பல்வேறு வரலாறுகள், பேச்சளவில் மட்டுமாவது உயிரோடு இருக்க, கிராமப்புற பாடல்கள் முக்கிய பங்களிப்பு அளித்து வருகின்றன; அவ்வாறு, சுதந்திரத்துக்கு எதிராக போராடி, இறந்த பாளையக்காரர்களின் மறக்கப்பட்ட வரலாறுகளை தனது பாட்டுகளால், உயிர்ப்புடன் வைத்திருக்கிறார் ஜல்லிபட்டியை சேர்ந்த புலவர் பழனிச்சாமி. நாட்டின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த பல ஆட்சியாளர்களின் வரலாறு, இளைய தலைமுறைகளுக்கு தெரியாமல் மறைந்து வருகிறது. இத்தகைய போராட்டங்கள் குறித்த நாட்டுப்புற பாடல்கள், ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது, அந்தந்த பகுதியின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறப்பு பெற்றிருந்த கோவில்கள் மற்றும் மக்களின் பழக்கவழக்கங்களை வெளிப்படுத்துவதாக அமைகின்றன.
தங்கள் முன்னோர்கள் மற்றும் வழிகாட்டிகள் மூலம் இத்தகைய பாடல்களை மனப்பாடம் செய்து, கோவில் திருவிழாக்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளின் போது பாடுவது நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாகும். அவ்வாறு, உடுமலை அருகே, தளியை தலைமையிடமாகக்கொண்டு சுற்றுப்பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர் எத்தலப்பன், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டுள்ளார்; போர் குறித்து சமரசம் பேச வந்த ஆங்கிலேய வீரனை, துாக்கிலிட்டு, தனது எதிர்ப்பை பதிவு செய்து இந்த ஆட்சியாளரின் வரலாறு, மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டு வந்தது.
வரலாற்று ஆய்வாளர்களின் முயற்சியால், எத்தலப்பன் குறித்த, கல்வெட்டுகள், திருமூர்த்தி அணையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட, அவரது வம்சாவளியினர் சிலைகள் என படிப்படியாக பாளையக்காரர்கள் வரலாறு வெளிவரத்துவங்கியது.
இந்நிலையில், எத்தலப்பன் குறித்து, பல்வேறு நாட்டுப்புற பாடல்களை கேட்டுத்தெரிந்து கொண்டு, இன்றளவும், பாளையக்காரர்கள் வழிபட்ட, ஜல்லிபட்டி கரட்டுப்பெருமாள் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், தளி கோட்டை மாரியம்மன் கோவில், அப்பம்மா கோவில் உட்பட கோவில்களில், விசேஷ நாட்களில், பாடி வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார் ஜல்லிபட்டியை சேர்ந்த புலவர் பழனிச்சாமி.
மைவாடி ஜமீன் வகையறாவை சார்ந்த எங்கள் முன்னோர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக்கு பிறகு, பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அப்போது, தளி பாளையக்காரர் எத்தலப்பன் குறித்த பாடல்களை, எனது பாட்டி உட்பட பெரியவர்கள் எங்களுக்கு சொல்லித்தந்தனர்.
இன்று வரை அத்தகைய பாடல்களை மறக்காமல் பாடி வருகிறேன். இத்தகைய பாடல்கள் ஆவணப்படுத்தப்படாமல் இருப்பதால், பெரும்பாலான பாடல்கள் இளைய தலைமுறைக்கு தெரியாமல் அழிந்து விட்டன. செவிவழி கேட்ட பாடல்களை மட்டும் இன்றும் நினைவில் வைத்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.
இவரது பாடலில், பாளையக்காரர்கள் விவசாயத்தை பெருக்க ஏற்படுத்திய, ஏழு குள பாசன குளங்கள், பஞ்சலிங்கம் அருவி, திருமூர்த்திமலையின் சிறப்புகள், இப்பகுதியில் ஓடிய பாலாறு உட்பட 62 சிற்றாறுகள், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைவாழ் கிராம மக்களுடன் ஆட்சியாளர்கள் வைத்திருந்த நல்லுறவு என பல்வேறு தகவல்கள் பதிவாகியுள்ளன. இத்தகைய பாடல்களை ஆவணப்படுத்தி, இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்வதே நாட்டுப்புற பாடல் கலைஞர்களுக்கு நாம் செய்யும் நன்றியாக அமையும்.
ஆவணப்படுத்தினால் அழிவு இல்லை
நாட்டுப்புற பாடல் வரிகள்...
காடுகள் வெட்டியே... மேடு சமம் செய்து... காளை மாடு கட்டி உழவு செய்து... கம்பு.. சோளம்... தினை பயிர் செய்து பண்புடன் வாழ்ந்தவர் எத்தலப்பன் உச்சிமலை நல்ல குருமலையாம்...
அந்த குழிப்பட்டி... மாவடப்பு எல்லாம் மலை...ஏழு குளம் வெட்டி... நீர் நிரப்பி எத்தலப்பன் வாழ்ந்த நன்நாளில்... பூலோகமே மெச்சி... மேலோங்கிய திருமூர்த்திமலை 62 தீர்த்தங்கள் அங்கு; அன்புடன் வாழ்ந்தனராம் அந்நாளிலே...
எக்திக்கும் கொட்டட்டும் எத்திலப்பன் வெற்றிமுரசு என்று பாட்டெடுத்து கவிபாடி
எண்திசையும் புகழ்பரப்பி
வரலாற்றை எடுத்துரைத்து எத்திலப்ப மன்னரின் வரலாற்றூ ஆய்வுக்கு புத்துயிர்கொடுத்த
கம்பளத்து பண்பாட்டின்
நாட்டுப்புற இசைக்குயில்
இன்றுடன் இசைப்பதையும்
இறுதிமூச்சையும் நிறுத்திக்கொண்டது!

நன்றி : தினமலர் ...

 கேள்வி : 22 வயதான  ஒரு தம்பி தன்னுடைய நேரத்தை எதில் முதலீடு செய்தால் என் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  என்று கூற முடியுமா சார் ?


என் பதில் :


வாழ்க்கையின் வெற்றிக்கான சிறந்த ராஜதந்திரம் என்பது…உற்று நோக்கல். கூர்ந்து கவனித்தல். என்பதே ஆகும்.


சக மனிதர்களில்_ திறமையானவர்கள், உழைப்பவர்கள், அறிவாளிகள், முன்னேறிச் செல் பவர்கள், என்று ஒவ்வொருவரையும் பிரித்தெடுத்து…அவர்களின் கையாளும் முறைகள்; நேர்த்தி_என்பது போன்ற அவர்களின் மேனரிசம் போன்றவைகளை அப்படியே காப்பி அடித்தல். அல்லது இப்படி செய்வதை விட, அப்படி செய்யலாமே.. என்று சிந்தித்தல்.


சில நேரம் நமது சந்தேகத்திற்கான.. வினா எழுப்பி. விடைபெறுதல். இதனால் உங்களின் எண்ண ஓட்டமும், மனநிலையும், மேம்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உதாரணமாக..


காரில் பயணம் செய்கின்றபோது.. டிரைவர் வண்டியை இயக்கிக் கொண்டிருப்பதை கவனிப்பதால்.. அதனால்.. ஓட்டுனரின் திறமை. கவனம். அதில் அவரின் ஈடுபாடு. வண்டி இயங்கும் விதம். போன்றவைகள் மேக்ஸிமம் ஓரளவுக்கு நம்மால் ஊகிக்க முடிகிறது அல்லவா? அது எனக்கு சம்பந்தமில்லாத விஷயம்.அதை தெரிந்து எனக்கு என்ன பயன்? என்று இருக்கக்கூடாது.


ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கிறது. நல்ல விஷயம் இருக்கிறது. அவைகளை அறிந்து தெரிந்து, தெளிந்து கொள்வது_உங்கள் வயதிற்கு மிக நல்லது. அற்ப விஷயங்கள் என்று எதுவுமே இல்லை. ஒருவர் கையாளுகிற விதத்தில் அற்புதங்கள் இருக்கலாம். அதை உற்றுநோக்கல், கவனித்தல், தப்பே இல்லை!


நமது அறிவிற்கு தினம் தினம் நல்ல விஷயங்கள், கருத்துக்கள், (நல்லது, கெட்டது) அனைத்தும் பதிவாகிக் கொண்டு இருக்கிற போது_என்றாவது ஒரு நாளில் பட்ட அனுபவம் போல நமக்கு நல்ல பலனைத் தரும்!


எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. ஜெராக்ஸ் காப்பி எடுக்க சென்றால் . அந்த மிஷினின் பெயர் என்ன? எந்த கம்பெனி தயாரிப்பு? என்ன விலை? எப்போது வாங்கினீர்கள்? இதை எப்படி பழுது பார்க்கிறார்கள்? எப்படி இயங்குகிறது? இதன் பயன் என்ன? இதனால் லாபம் என்ன? இன்னும்.. ஏகப்பட்ட சந்தேக கேள்வி கேட்டு கடைக்காரரை தொனதொனப்பேன். பிறகு கோவிச்சுக்காதீங்க சார். சும்மா ஒருநாலேஜ்க்காகதான் என்பேன். இது போன்று நான் சென்று தினம் தோறும் பார்க்கும் செல்லும் வாடிக்கையாளர்களை அவர்களின் புதிய தொழில்கள் ,வேலைபார்க்கும் இடம் போன்று என் அறிவை வளர்த்துக்கொள்ள இது போன்று தகவல் சேகரித்து கொள்வேன் .


கட்டையில போற வயசுல இதை தெரிஞ்சு உனக்கு என்ன ஆகப்போகுது..? என்று ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். அதோடு விஷயத்தை விடுவனா? வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகளை அதுபற்றி கூகுளில் ரிசர்ச் பண்ண சொல்லி.. அதை வாங்கி படிப்பேன்! இதனால் எனக்கு என்ன பயன் வந்தது என்கிறீர்களா?


ஆமாம் பயன் வந்தது. எனது மகன்  இவருக்கு இருக்கின்ற இந்த ஆர்வம் நமக்கு இல்லையே என்று தன்னை திருத்திக் கொள்கிறார்கள். இது போதாதா…?


உங்கள் நேரத்தை பயனுள்ளதாக்க.. நிறைய கற்றுக் கொள்ளுங்கள். நிறைய தெரிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து காரியமாற்றுங்கள். 

வாழ்க்கையில் முன்னேறுங்கள். வாழ்த்துக்கள். நன்றி.....






திருமண அழைப்பிதழ் .....


உடுமலைப்பேட்டை  பொட்டையம்பாளையம் 

செல்வா என்கிற காளிமுத்து மாப்பிள்ளையின்

"தங்கை கலைவாணி இல்ல திருமண அழைப்பிதழ் "

மற்றும் ஆவலப்பம்பட்டி கொண்டே கவுண்டன் பாளையம் அரண்மனையார் 

T .பிரவீன்குமார் இல்ல திருமண விழா ...


GK மஹால் ,சோமவாரப்பட்டி ,உடுமலைப்பேட்டை 

வரவேற்பு : மாலை  19 -ந்த தேதி ..

திருமணம் : காலை 20-ந்த  தேதி ..

செல்வா கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர்,தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுபவர்  நமது சொந்தங்களுக்கு தன்னாலான கல்வி ,வேலைவாய்ப்பு .பற்றி தகவல் அளித்து நம் இளைய சொந்தங்களை அழைத்துச்செல்பவர் ..

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் சார்பாக திருமண அழைப்பு மற்றும் வாழ்த்துக்கள் 

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

உடுமலைப்பேட்டை 


செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

 கேள்வி : எப்படிப்பட்ட மணமகன் அமைந்தால் ஒரு பெண் மிகக் கொடுத்து வைத்தவள் ?


என் பதில் : 


1.கெட்ட பழக்கம்(சிகரெட்,மது, மாது)இருக்க கூடாது.


2. மனைவி மனதை புரிந்து கொள்ளுபவனாக இருக்க வேண்டும்


3. இரு வீட்டார் குடும்பத்தையும் ஒரே குடும்பமாக கருதுபவராக இருக்க வேண்டும்


4. கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழகூடாது.


5.மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை எவ்வளவு செலவு இருந்தாலும் சேமிக்கும் பழக்கம் உடையவராக இருத்தல் வேண்டும்.


6. பொறுப்புள்ள மனிதனாக இருக்க வேண்டும்.


7. குடீசையாயினும் சொந்த வீடாக இருக்க வேண்டும்.( ஏனென்றால் வாடகை வீட்டில் இருக்கும் அவஸ்தை பிறந்த வீட்டீலே அனுபவித்தாச்சு).


8. அரசு வேலை ,அதிக சம்பளம் எதிர்பார்ப்பு இல்லை.அதற்காக விற்கும் விலைவாசிக்கு ஒரு குடும்பம் நடத்த தேவையான அளவுக்கு வருமானம் இருக்க வேண்டும்.


9.எதையும் மனைவியுடன் கலந்து முடீவெடுக்க வேண்டும்.


10. சந்தேகம் புத்தி ஆகவே ஆகாது.


11. கோபத்தில் அடீத்தல்,உதைத்தல் இருக்க கூடாது.


12. மனைவியின் திறமைகளை ஊக்குவிக்கும் மனிதனாக இருக்க வேண்டும்.


13. தன்னை நம்பி வந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சினை பகிருவதில் நல்ல நண்பனாக, பாசத்தில் தந்தையாக, ஊக்குவிப்பதில் ஆசிரியராக,அக்கறைகாட்டுவதில் தாயாக, பிரச்சினை தீர்ப்பதில் உடன்பிறப்பாக , இந்த அத்தனை உறவுகளையும் உள்ளடக்கிய கணவனாக இருக்க வேண்டும்.


14.குணம் உள்ள நல்ல பையனாக இருக்க வேண்டும்.


இது முற்றிலும் என் மன கருத்து.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

கேள்வி :  சம்பளம் மட்டும்தான் உங்க நிதிப்பிரச்னைக்கு காரணம்னு நினைக்குறீங்களா  சார் ? எப்படி கையாள்வீர்கள் 


என் பதில் :


சிலருக்கு மாதக் கடைசியில் பணம் மீதி இருக்கும்; நமக்கோ சில நாள்களுக்குள்ளேயே பணம் அத்தனையும் தீர்ந்துவிட, மாதத்தின் நிறைய நாள்கள் மீதி இருக்கும். உடனே நமக்குத் தோன்றுவதென்ன? `சே! நல்ல சம்பளம் வர்ற வேலையா தேடணும்' அல்லது `இன்னும் சில பகுதி நேர வேலைகள் செய்து வருமானத்தை அதிகரிக்கணும்' என்பதே.

இப்படி வரவு பற்றியே யோசிப்பதால் அறை நடுவே ஸ்டூல் போட்டு அமர்ந்திருக்கும் யானையை நாம் பார்க்கத் தவறிவிடுகிறோம். அந்த யானைதான் நம் வருமானத்தை விழுங்கும் அநாவசியச் செலவுகள். அந்தச் செலவுகளைக் குறைக்க முடிந்தாலே பணம் மீதமாகும்.

இதைப் படித்ததும் சிலருடைய முதல் ரியாக் ஷன் `அநாவசியச் செலவா? அவசியச் செலவுக்கே இங்கு பணத்தைக் காணோம். நான் எங்கிருந்து அநாவசியச் செலவுகள் செய்வது?' என்பதாக இருக்கலாம். ஆனால், செலவுகள் என்பது இரண்டு வயதுக் குழந்தைகள் போல - அவற்றின் மீது ஒரு கண் இருந்துகொண்டே இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும். வாருங்கள்; எங்கெங்கு அநாவசியச் செலவுகள் ஏற்படுகின்றன; அவற்றை எப்படித் தவிர்ப்பது என்று பார்க்கலாம்.

இம்பல்ஸ் பர்சேஸ்

பார்த்தவுடன் யோசிக்காமல் வாங்கிவிடுதல். இதற்குப் பல உளவியல் காரணங்கள் இருந்தாலும், நம் பர்ஸின் நலத்துக்கு இது நல்லதல்ல என்பதால், இதைத் தவிர்ப்பது நல்லது. தேவையான பொருள்களுக்கு லிஸ்ட் போட்டு வாங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இம்பல்ஸ் பர்சேஸ் குறைவு. லிஸ்ட்டில் இல்லாத பொருள் மீது ஆசை வந்தால், அதை வாங்குவதை அடுத்த மாத லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். நடுவிலிருக்கும் ஒரு மாத இடைவெளியில் நாம் வாங்க விரும்பிய பொருள் ஆசையா, தேவையா என்பது தெளிவாகப் புரிந்துவிடும்.

2. அதீத வாடகை

வீட்டு வாடகை, தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான செலவு. ஒரு வீட்டுக்குக் குடிபோனபின் அதன் வாடகை பற்றிய பரிசீலனை நின்றுவிடுகிறது. அடுத்த வீட்டுக்கு மாறும்போது அநேகமாக இன்னும் அதிக வாடகை உள்ள வீட்டையே தேர்வு செய்கிறோம். இதற்கு பர்சனல் ஃபைனான்ஸ் சொல்லும் தீர்வு என்னவென்றால், உங்கள் வாடகை எப்போதும் உங்கள் வருமானத்தில் 30 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும் என்பதே. இதை வெற்றிகரமாக நிறைவேற்றுங்கள்; கணிசமான தொகை கையில் நிற்கும்.

3. ஆட்டோமேடட் பேமென்ட்ஸ்

பில்களை ஞாபகம் வைத்துக் கட்டும் தொல்லையில் இருந்து தப்பிக்க போன் பில், கரன்ட் பில், ஜிம் சந்தா, வைஃபை மற்றும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஓ.டி.டி பிளாட்ஃபார்ம்களுக்கான சந்தா போன்றவற்றை ஆட்டோமேடிக்காக மாதந்தோறும் நம் பேங்க் அக்கவுன்டிலிருந்து செல்லும்படி செய்திருப்போம்; தவறில்லை. ஆனால், இந்தக் கொரோனா காலத்தில் எத்தனை முறை ஜிம் சென்றோம் என்று கணக்கு பார்த்தால், எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் சில நூறு ரூபாய்கள் தொலைவதைக் கவனிக்க முடியும்.

உபயோகிக்காத இதுபோன்ற சந்தாக்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இன்னும் சில ஆன்லைன் பிளாட்ஃபார்ம்கள் முதல் ஆறு மாதத்துக்கு ஃப்ரீ என்று சொன்னதால் லாகின் செய்து சம்மதம் தந்திருப்போம். ஆறு மாத காலம் முடிந்தபின் ஆட்டோமேட்டிக்காக நம் அக்கவுன்டில் இருந்து சந்தா போக ஆரம்பித்திருக்கும். அதைக் கவனிக்கத் தவறியிருப்போம். குறைந்தபட்சம் ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது நம் ஆட்டோமேட்டட் பேமென்டுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

4. மின்சாரம், டிவி மற்றும் போன்

இவை மூன்றுமே இன்றைய வாழ்வில் இன்றியமையாதவை. ஆனால், அவற்றை அளவாகப் பயன்படுத்துகிறோமா? மின்சாரத்தைப் பொறுத்தவரை, கசிவு எங்காவது இருக்கிறதா என்று அடிக்கடி செக் செய்வதும், எல்.இ.டி பல்புகளுக்கு மாறுவதும் நல்லது. ஏ.சி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றில் பழுது இருந்தால் அதிக மின்சாரம் வேஸ்ட் ஆகும். டிவியையும் போனையும் பொறுத்தவரை நமக்குத் தேவையான சேனல்களை / பிளான்களைப் பொறுக்கி எடுக்கும் வசதிகளை உபயோகித்து செலவைக் குறைக்கலாம். போனைப் பொறுத்தவரை போஸ்ட் பெய்டைவிட ப்ரீ பெய்ட் செலவு குறைவு.

5. ஹோட்டல் உணவு

கொரோனாவுக்குமுன் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருந்த இந்த மோகம் இப்போது ஸ்விகி, ஸொமேட்டோ என்று மாறியுள்ளது. எப்போதும் வீட்டு உணவுகளையே சாப்பிட்டால் போரடிக்கும்தான். வீட்டில் செய்த சப்பாத்திக்கு ஹோட்டல் குருமா சேர்த்தால் செலவு பாதியாகக் குறையும். இப்படியான மிக்ஸ் அண்ட் மேட்ச்சுகள் சுவைக்குக் சுவை; சிக்கனத்துக்கு சிக்கனம். அடுத்த வாரத்துக்கான உணவுப் பிளானை முன்கூட்டியே போட்டு வைத்தால் அவசரத்துக்காக ஹோட்டல் உணவை நாடுவதைத் தவிர்க்கலாம்.

மேலே இருப்பது ஒரு முழுமையான லிஸ்ட் அல்ல. நம் குடும்பத்தில் ஏற்படும் வழக்கமான செலவுகள் அனைத்தையும் அவ்வப்போது பரிசீலிக்கும் வழக்கத்தை மேற்கொண்டால் செலவு குறையும்; சேமிக்கப் பணம் இருக்கும்.

அமைதியான அமராவதி ஆற்றங்கரையில் ..பொன்னிகாட்டுத்துறை தடுப்பணை யில் அமைதியான நீரோடை ...சிந்தித்தது 

நன்றி ...

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

என் அன்பும் மதிப்பும் மிக்க தங்கவேல்சாமி பெருமாள் மாமா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (09-08-2021)

என் அன்பும் மதிப்பும்  மிக்க தங்கவேல்சாமி பெருமாள்  மாமா அவர்களுக்கு  என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (09-08-2021)

மாமாவின் பதிவுகள் ..அவரின் நம் சமுதாயத்தின் மேல் அக்கரை ...வளர்ச்சிக்கு சத்தம் இல்லாமல்.செய்து வருகிறார் கடந்த 7 வருடங்களுக்கு மேல் மாமா அவர்களின் நட்பு வட்டத்தில் இருக்கிறேன் ..இன்னும் நேரிடையாக சந்திக்க இயலவில்லை ..நேரம் எனக்கு அமையவில்லையா என்று தெரியவில்லை ...அலுவலகம் தொடர்பாக சென்னை செல்லும்பொழுது எப்படியாவது பார்த்துவிட்டு பேசிவிட்டு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு ...அவரின்பதிவுகள் என்னை செம்மையை படுத்தியுள்ளது ...மாமா அவர்களின் தெற்கில் கடைக்கோடியில் இருந்து சென்னை தலைநகருக்கு வந்து வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து ..நம் சமுதாய மக்களுக்கு இயன்ற அளவு உதவிகள் செய்துள்ளார் .விளாத்திகுளம் மாப்பிள ராஜ்குமார் மாப்பிள்ளையின் திருமணத்தின் போது சந்திக்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன் ...சென்னையில் இருந்ததால் மாமா அவர்களை பார்க்க இயலவில்லை ...நானும் கூறி கொண்டு இருக்கிறேன் .உடுமலைப்பேட்டை நம் வரலாற்று சின்னங்கள் ...கோவில்கள் ...பார்க்க வரும்பொழுது ..கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறி இருக்கிறேன் ...அதற்குள் தற்பொழுது சூழ்நிலை இயலவில்லை ..மாமா அவர்களின் மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார் ..அலுவுலக வேலை காரணமாக செல்ல இயலவில்லை ..அந்த மனக்குறையும் எனக்கு உள்ளது .மாமாவை முக்கியனமான என் வாட்ஸாப்ப் குழுவில் இணைத்து உள்ளேன் ..நேரில் பார்க்கவில்லையென்றாலும் ..அவரின் ஆசி என்றும் உண்டு ...

விரைவில் சந்திப்போம் ..என் அன்புக்குரிய மாமா தங்கவேல்சாமி பெருமாள் அவர்களை .. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681




சனி, 7 ஆகஸ்ட், 2021

கேள்வி :  எப்பொழுதும் படித்து கொண்டிப்பவரை பார்த்து உங்களுக்கு எப்போதாவது நம்மால் இப்படி படிக்க முடியவில்லையே என்று தோன்றியிருக்கிறதா சார் ?

என் பதில் : 

நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கியமில்லை, நாம் சாப்பிட்ட உணவு, எவ்வளவு நம்ம உடலில் சேருகிறது என்பது தான் முக்கியம்.


நாம் எவ்வளவு படிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை, படித்தது எவ்வளவு வாழ்க்கையில் எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்!


ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து விட்டு, அந்தப் புத்தகத்தைப் படித்து, அதைப்பற்றி நீ உனது வார்த்தைகளால் எழுது என்று அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அந்தப் புத்தகத்தில் உள்ளதை அப்படியே, திரும்பச் சொல்லக்கூடாது, என்று கண்டிஷன் போட வேண்டும். அது ஒழுங்கான கல்வி!


ஆனால் இப்போது இருக்கும் கல்வித் திட்டம், புத்தகத்தில் படித்தது அப்படியே வார்த்தை மாறாமல் திரும்ப சொல்ல வேண்டும், எழுத வேண்டும் ஒரு வட்ட தாண்டி வெளியே சிந்திக்க கூடாது என்றல்லவா கற்றுக் கொடுக்கிறது?


அடுத்தவனை பார்த்து காப்பி அடி, என்று நம் கல்வித் திட்டம் மறைமுகமாக சொல்லிக் கொடுக்கிறது.


விளைவு, படித்த கலெக்டர் மருத்துவர் தொடங்கி, படிக்காத சினிமா டைரக்டர் வரை எல்லோரும் காப்பி அடிக்கிறார்கள்!


இந்தியானா ஜோனஸ், Indiana jones, Lost Crusade என்ற திரைப்படத்தில், ஒரு காட்சியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹீரோ லைப்ரரிக்குள், நுழைந்து விடுவார்.


படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவன் கேட்பான், " ஐயா நான் உங்களை போல் ஒரு புகழ்பெற்ற, ஆராய்ச்சியாளராக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? "


முதலில் லைப்ரரி விட்டு வெளியே வா! இந்த உலகமே ஒரு மிகப்பெரிய லைப்ரரி. வெளியே படிப்பதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. இயற்கையை படி, மனிதர்கள் படி, நூல்களை விட்டு வெளியே வா!", என்று சொல்லுவார்!


நான் புத்தகத்தை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. படித்தவுடன் கிழித்து விடவேண்டாம். பத்திரமாக எடுத்து வையுங்கள். நீங்கள் படித்ததை முதலில் பொருத்திப் பாருங்கள்.


நம்மூரில் படிப்பவர்கள் யாரும், படித்தது எதையுமே வாழ்க்கையில் செய்வதில்லை. நியூட்டனின் விதியை படித்துவிட்டு, பேங்கில் குமாஸ்தா வேலை செய்கிறார்கள்.


இன்ஜினியரிங் புத்தகங்களைப் படித்துவிட்டு, கால் சென்டர், Swiggy Zomato என்று சாப்பாடு எடுத்துக்கொண்டு போதும் வேலை செய்கிறார்கள்.


தோசை கடை வைத்தவர், பெருமையாக சொல்லுகிறார், நான் BE படித்த பொறியாளர் என்று! நீ வாழ்க்கையில் தோசை கடை தான் வைக்க வேண்டும் என்றால், நீ அது சம்பந்தமாக, catering படி!


ஆனால் கேட்டரிங், நர்சிங் போன்ற படிப்புகளைப் படிக்க மாட்டார்கள். டாக்டர் இன்ஜினியர் படித்துவிட்டு சமையல் வேலை பார்த்தாலும் நம் ஆட்களுக்கு கௌரவம்!


டாக்டர் இன்ஜினியர் படித்தவர்களுக்கு தான் பெண் கொடுப்பார்கள். அதுதான் காரணம்.


மாப்பிள்ளை BE படிச்சிட்டு, பிச்சை எடுக்கறதுக்கு ஒரு APP டெவலப் செஞ்சிருக்காரு! Online பிச்சை எடுப்பது, போடுவது என்று இன்று உலகம் முழுக்க பிச்சை எடுக்க AI என்னும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறார். சுந்தர் பிச்சை போல ஆக போகிறார்! என்று சொல்லி, அமெரிக்காவிற்கு பெண்ணை கல்யாணம் செய்துகொடுத்து, பெருமைப்படும் அப்பாக்கள் உண்டு!


நீங்கள் படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை என்றால், அந்தப் படிப்பைப் படித்து என்ன பயன்?


சதாசர்வகாலமும் படிப்பது முக்கியமில்லை. வாழ்க்கையில் எப்படி அதை உபயோகப் படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம். பெரும்பாலும், நல்ல மார்க் வாங்கி, நல்ல வேலை வாங்குவதற்கு மட்டும் தான் படிப்பை பயன்படுத்துகிறார்கள். பணத்துக்காக படிப்பு என்று ஆனபின்பு, நீங்கள் எவ்வளவு படித்தாலும் அந்த படிப்பு வீணே!


அதுபோல் விழுந்து விழுந்து படிக்கும் பெண்களை பார்த்தால், பரிதாபமாக இருக்கும். இதுபோன்ற படிப்பாளிகளால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை!


, நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதலில் நம் நாட்டுக்கு தங்கம் வென்றுள்ளார்  நாட்டுக்கு எப்படி பெருமை தேடித் தந்துள்ளார் பாருங்கள்! அவரைப்போல் விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெற்றோர்கள், படி படி என்று பிள்ளைகளை நச்சரித்து, இன்று பாலத்துக்கு அடியில் படுத்து கிடப்பவர்கள் எல்லாம் இன்ஜினியர்கள்!

தமிழ்நாட்டில் யார் மேலாவது தடுக்கி விழுந்தால், ஒரு இன்ஜினியர் மேல் தான் விழ வேண்டும். நம் நாட்டில் படித்தவர்கள் எல்லோரும், " படித்தவுடன் கிழித்து விடவும்" என்று ரீதியில் படிக்கிறார்கள்! இதில் எனக்கு உடன்பாடு இல்லை!


வாழ்த்துக்கள்  தங்கமான தங்கம் நீரஜ் சோப்ரா. ...


வியாழன், 5 ஆகஸ்ட், 2021

 கேள்வி : ஒரு வழக்கறிஞரை திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூறமுடியுமா சார் ...?



என் பதில் : 



அருமையான கேள்விங்க ....வாழ்க்கை ரொம்ப கொண்டாட்டமா இருக்கும்ஙக..


ஆமா.உண்மையா தான் சொல்றேன் ..


ஏங்க.டெய்லி கோர்ட்டுக்கு போயி வாதாடி, வாதாடி. வீட்டுக்கு வந்து பேசுறதுக்கு கூட சத்து இல்லாமல் டயர்டா போயிடுவாங்க ..அப்புறம் எங்கே..😀


இன்னொன்னு இந்த வாக்குவாதங்கள் அப்படிங்கிறது குடும்பத்திற்கு, குடும்ப உறவுகளுக்கு ஒத்துவராத ஒன்றுன்னு நல்லா தெரிஞ்சவங்க…நாம வக்கீலாக தான் கோர்ட்டில் போயி நிற்கணும்.. கட்சிக்காரனா, கேஸ் போட்டவரா அல்லது எதிர்தரப்பா நிற்க கூடாதுன்னு தெளிவா தெரிஞ்சுகிட்டவங்க!


விதிவிலக்கு இருக்கலாம்!


இந்த வாக்குவாதம் என்றவுடன், ஐயா சுகிசிவம் அவர்கள் பேச்சில நான் கேட்ட ஒரு சம்பவத்தை சொல்கிறேன் .


ஒரு மீனவன் மீன்பிடிக்க போனபோது அங்கு ஒரு பணக்காரர் தண்ணிக்குள்ள விழுந்து இறந்து இருப்பதை பார்த்து, அவருடைய உடலை வெளியில எடுத்துட்டு வர்றாங்க .அப்போ அந்த பணக்காரர் தரப்பு சொந்தக்காரர்களுக்கு தகவல் சொல்றாங்க அவங்களும் வந்து இந்த உடலை எடுக்க போனபோது, நான் இவ்ளோ கஷ்டப்பட்டு உடலை தூக்கிட்டு வந்து இருக்கேன். ஏதாவது பணம் கொடுங்க அப்படின்னு கேட்கிறார் மீனவர். ஆனா அவங்களுக்கு எதுவும் கொடுக்க விருப்பமில்லை. .போயிடுறாங்க


அப்போ என்ன பண்றதுன்னு தெரியாம, அந்த உடலை வச்சிருக்கணுமா, என்ன செய்யறதுன்னு மீனவருக்கு தெரியலை. எதுவும் பிரச்சினை வந்துருமோன்னு ஒரு வக்கீலை போய் பார்க்க போறார்


பீஸ் வாங்கிக்கிட்டு, அந்த வக்கீல் சொல்றாரு.." எந்த காரணத்தை கொண்டும் நீ அந்த உடலை கொடுக்காதே..அவங்க உடலை டிஸ்போஸ் பண்ணிடாத அவங்க எப்படியும் நீ என்ன பணம் கேட்கிறாயோ, அதை உன் கிட்ட கொண்டு வந்து கொடுத்து தான், அந்த உடலை மீட்டு எடுக்க முடியும்ம்.அவங்க அதுக்கான ஈமக்கிரியைகள் செய்தாதான் அந்த சொத்துகளின் உரிமை அவங்களுக்கு கிடைக்கும். அதனால நீ எத்தனை நாள் ஆனாலும் அதை சரியாக பராமரித்து வா"ன்கிறார் .


பணக்காரர் சொந்தக்காரங்க 2,3 நாளில் மீனவன் உடலை வச்சிருக்க முடியாம தூக்கி போட்டுருவான்னு பார்த்தா, அவன் அதை நல்லா பராமரித்து வர்றான் இப்ப என்ன பண்றதுன்னு தெரியல. எப்படி அவன் கிட்ட இருந்து அந்த உடலை வாங்குவது எப்படி என்று தெரியலனு ஒரு வக்கீலிடம் எதுக்கும் கேட்டு கேட்போம் , அவரது உடலை இல்லாமலே அந்த சொத்துக்களை அடைய முடியுமா அப்படினு ஒரு வக்கீலை பார்த்து கேட்கலாம்னு வராங்க யாரு கிட்டே?


அதே வக்கீல் கிட்டே..!


ஊரிலே வேற வக்கீலா இல்லே?!☺️ 

அவரும் அவங்க சொல்றதை கேட்டுட்டு முதலே பீஸ் எடுத்து வைங்கன்னு வாங்கிக்கிட்டு சொல்றாரு


" நீங்க பணமே கொடுக்காதீங்க இன்னைக்கு இல்லனாலும் ரெண்டு நாள் கழிச்சு அது அந்த உடலை அவனால ரொம்ப நாள் எல்லாம் பராமரிக்க முடியாது. எடுத்து வெளியில் தான் வைக்கணும் .அப்ப நீங்க போய் எடுத்துக்கலாம்" என்று அட்வைஸ் பண்ராறு.


இந்த பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு உண்டா? ☺️


கிடையவே கிடையாது !


அது மாதிரி சில விஷயங்கள்ல வாக்குவாதம் நடந்தால், அதற்கு முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போகும்.


குடும்ப உறவுகளில், வாக்குவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டியது.அதுவும் கோர்ட்ல எத்தனையோ கேஸ்களில், குடும்ப உறவுகளில் ஏற்படும் உரசல்கள் பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்ட வக்கீல்கள் யாருமே, அதை வீட்ல எதிரொலிக்க விரும்ப மாட்டாங்க !!


அன்பை எதிர் தரப்பில் அதிகப்படுத்தி அவள்/அவருடைய கையை இறுகப் பற்றிக் கொண்டால், அங்கே வாக்குவாதங்களை தோன்றாது என்பதை தெளிவாக உணர்ந்தவங்க !!


வெளியிலே சிங்கம் போல இருப்பாங்க!


வீட்டுக்கு போனா தான் தெரியும்…


அந்த சிங்கத்தின் மீது உட்கார்ந்திருப்பது.


துர்க்கைன்னு!


அந்த துர்க்கையும் வக்கீல் என்றால்….😀


நன்றி ...வணக்கம் ..நமஸ்காரம் ......

புதன், 4 ஆகஸ்ட், 2021

கேள்வி : புத்தகம் வாசித்தல் மூளையில் எதுபோன்ற மாற்றங்களைக் கொண்டுவரும்?

கேள்வி : புத்தகம் வாசித்தல் மூளையில் எதுபோன்ற மாற்றங்களைக் கொண்டுவரும்?


என் பதில் : 


வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களை எளிதாக கடக்க, புதிய விஷயங்களை அறிந்து கொள்ள, நம்மை மேம்படுத்தி கொள்ள என புத்தகங்கள் நம் வாழ்கையில் இன்றியமையாத ஒன்று.

ஒருவரின் பேசும், பழகும் திறனை பெரும் அளவில் புத்தகங்கள் நிர்ணயம் செய்கின்றன.

நம் கற்பனா சக்தி அதிகரிக்கும் - புத்தகத்தில் உள்ள இடம், பொருள், மனிதர்களுடன் நாம் ஐக்கியமாகிவிட்டால், நாமும் ஒரு கதாபாத்திரமாக மாறி அவர்களுடன் பயணம் செய்யும் ஒரு ஃபீல். நம்மை வேறு உலகுக்கு அழைத்து செல்லும் ஆற்றல் விஷுவல் மீடியாவை விட புத்தகங்களுக்கு அதிகம்.


கூனர்ந்து கவனிக்கும் திறன் - கவன சிதறல்கள் குறைந்து எந்த ஒரு விஷயத்தையும் நம்மை அறியாமல் கூர்ந்து கவனிக்க தொடங்குவோம்.
எழுத்தாற்றல் மேம்படும் - எது போன்ற வார்த்தைகளை எங்கே பயன்படுத்த வேண்டும், வாக்கியங்களை எப்படி உருவாக்க வேண்டும், பல புதிய சொற்கள், எழுத்து பிழையை சரி செய்தல், புது விதமான எழுத்து திறமையை வளர்த்து கொள்ளுதல் என்று அடுக்கி கொண்டே போகலாம்.

தனிமை உணர்வு மற்றும் மனசோர்வு - புத்தகங்கள் மனிதனின் best தோழன் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. மனம் வாடும் நேரம், ஒரு light hearted புத்தகம் வாசி ப்பது, ஒரு தோழன்/தோழியிடம் மனம் விட்டு பேசுவது போன்றது. நிறைய மனம் விட்டு அழவேண்டும் என்றால், அழுகாச்சி நூல்கள்! (இது எனக்கும் பயன் பட்டிருக்கிறது பல முறை) 😄


Critical and cognitive thinking (விமர்சன சிந்தனை மற்றும் அறிவாற்றல்) - பிறர் சொல்வதையே பின்பற்றி கொண்டு இராமல், நாம் சுயமாக பல கோணத்தில் ஒரு விஷயத்தை ஆராய முற்படுவோம். சுய சிந்தனைகள் நம்மை அடையாளப்படுத்த பெரும் உதவி புரிபவை.

தன்னலம் தாண்டி யோசித்தல் - நிஜ வாழ்கை வரலாறுகள், துயரங்கள், சுயசரிதைகள் பிறரின் பிரச்சினைகளை நம் கண் முன்னே நிறுத்தி -- " உன் துயரம் போலவே அல்லது அதையும் தாண்டி பிறருக்கும் துயரங்கள் உள்ளது" என எடுத்து கூறி நம் உள்ளே மனித நேயம், பச்சாதாபம் போன்ற உணர்வுகளை விதைக்க உதவுகிறது.

பன்னாட்டு கருத்தரங்கங்கள் ,விழாக்களில் ,பேச மிகவும் உதவி புரிகிறது ..

தன்னம்பிக்கை அதிகரித்தல் - நிரம்ப படித்து பலதை கற்பது சுய மதிப்பீட்டை அதிகரித்து, பல படித்த அறிவாளிகளுடன் கலந்துரையாடல், நட்பு பாராட்டல், என்று நம் சமூக வட்டத்தை அறிவு வட்டமாக உருமாற்றலாம்.


நித்திரையை தூண்டும் - உறங்க செல்வதற்கு முன் ஓரிரண்டு பக்கங்களை படித்து விட்டு படுத்தால், நிம்மதியான தூக்கம் உறுதி (என் அளவில்).


அதற்காக கொலை, கொள்ளை, அமானுஷ்யம், இரத்த காட்டேரி, பேய், பிசாசு, Annabelle, conjuring போன்றவற்றை படித்து விட்டு உறங்க சென்றால், தூக்கம் இல்லை, கெட்ட கனவுகள் தான் வரும் 😂

நன்றி ..வாசிப்பை ..நேசிப்போம் ...

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

ஆடி-18......

 ஆடி-18......

🌱🌱🌱 (உடுமலை-ஜல்லிப்பட்டி- தளி )ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.....
ஊஞ்சல்......😍😍😍.. குழந்தைகளின் குதூகலம்.😍😍...... !!!!!!! (தளி ஜல்லிபட்டி )
என் சிறுவயதில் ஆடி 18 யை தூரி நோன்பு என்றுதான் அழைப்போம் ..ஒரு நாள் முன்பே ஜல்லிபட்டி கிராமத்திற்கு சென்றுவிடுவோம் .எப்பொழுத்தான் சீக்கிரம் விடியோமோ என்று எங்கள் பாட்டி வீட்டில் பெரிய நீளமான வீட்டின் முன்புறம் உள்ள குழந்தைச்செல்வங்களுடன் கதைகள் பேசி தூங்குவதற்கே இரண்டு மணி ஆகிவிடும் ...காலையில் பொம்மையன் கோவில் முன்பு ..பெரிய நடு மரங்கள் நட்டு ...பெரிய அகல மர பலகையிலான உட்காருவதற்கு வசதியாக அமைப்பார்கள் ...அதற்கு சந்தனம் குங்குமம் ,மாவில்லை கட்டி ,மஞ்சள் துணியில் நவதானயங்கள் உள்ளேவைத்து அந்த ஊஞ்சலுக்கு ..கோவிலில் பூஜை செய்து ...குழந்தைச்செல்வங்களுடன் முதன் முறையாக ஆடும்போது ... ரோல் கோஸ்டர் ,ஜயண்ட்வீல் எல்லாம் கொஞ்சம் தள்ளி நிற்கவேண்டும் ...கிராமத்து பெரியவர்கள் தோட்டத்து வேளைக்கு சென்று வந்த பின்னர் இரவில் ..ஊஞ்சல் ஆடி பாட்டு பாடி தங்களின் களைப்பை போக்கிக்கொள்வார்கள் .. ஊஞ்சல் அல்லது ஊசல் (swing) என்பது ஒரு உல்லாசப் பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இது சங்க காலம் தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. உடுமலை கிராம பகுதிகளில் இதனைத் தூலி என்றும் தூரி என்றும் வழங்குகின்றனர். சிறுவர்கள் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடுவர். மரக் கிளைகளில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து சிறுவரும் சிறுமியரும் ஊஞ்சலாடுவர். தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக்கொண்டும், பிறர் ஆட்டிவிட்டும் ஆடுவர்.குழந்தை ஊஞ்சலில் ஆடும்போது இன்பம் கண்டு தூங்குகிறது. பெரியவர்கள் தாமே ஊஞ்சலாடி மகிழ்கின்றனர்....
முப்பது வருடங்களுக்கு முன்பாகக் கூட ஆடி பதினெட்டு தினத்துக்காக மரத்தில் ஊஞ்சல் கட்டி தூரி ஆடியதுண்டு.
ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆனந்தமாக ஆடினார்கள்.
பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.
இப்பொழுதும் பசுமையாக எண்ணங்களில் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்திகொண்டுஇருக்கிறோம் ...நம் தலைமுறை குழந்தைகளுக்கு இதை மறவாமல் கொண்டுபோகவேண்டியது நம் கடமை ..பண்பாடு ..கலாச்சாரம் இதில் தான் உள்ளது ...இதை நம் குழந்தைச்செல்வங்களுக்கு கற்றுக்கொடுப்போமா ...??????????
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..👍🌷🌷🌷🌱🌱🌱

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

 கிராமத்து திண்ணை பேச்சு .......(Old Facebook) தளி ஜல்லிபட்டி ..உடுமலைப்பேட்டை

இப்போது நமது கிராமத்து உறவுகளெல்லாம் ஃபேஸ்புக் வாயிலாக; திண்ணைப் பேச்சின் புதிய வடிவம். ஆனால், இது ஒரு போதை தரும் திண்ணை. அதன் வலையில் விழுந்தவர்களுக்கு அதன் முகத்தில் விழித்தால்தான் அன்றைய தினம் நகரும். அது ஒரு இலவச சாளரம்.........
முன்பு வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள் இழுத்து வைத்துப் பேச. அவர்களும் காணாமல் போனார்கள். அவர்கள் இல்லாமல் போனதில் கதைசொல்ல இப்போது எவருமில்லை......இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் பேச்சுக்காக ஏங்கப்போகிறோம் நாம்.