புதன், 30 ஜனவரி, 2019

சமுதாய வளர்ச்சிக்கு ..கலாச்சாரம்

திரு P .தனசேகர் 🌷🌷.கனகவேணி .🌱🌱..ஓசூர் ....🌱🌱.(சேகர் பொம்மய்யா )
என் அருமை தம்பி 👍👍அறிமுகம் ஆனது 6 வருடங்களுக்கு முன்னர் முகநூலில் ..இவரின் நம் கம்பள சமுதாய வரலாறுகளை முகநூலில் பகிரும்பொழுதான் இவரின் நட்பு வட்டம் எனக்கு கிடைத்தது ..வாரம் ..வாரம் இவர் எழுதும் பதிவுகள் ..கம்பளத்தார் சொந்தங்களை ஒன்றிணைக்க ஒரு அழகான சொந்தம் கிடைத்தது மகிழ்ச்சி ...விருதுநகர் ..தூத்துக்குடி ..சென்னை ...சேலம் ..என்று நம் சொந்தங்கள் எங்கு எல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பணியில் கிடைக்கும் விடுமுறை நாளை நம் சமுதாய முன்னேற்றத்திற்கு ..வளர்ச்சிக்கு தன்னால் ஆனா விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்து ..வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளார் ...தம்பியின் திருமணத்திற்கு கூட நம் மாப்பிள்ளைகள ..தம்பிகளுடன் சேர்ந்து கலந்துகொண்டு வாழ்த்திவிட்டு வந்தோம் ..உடுமலையில் எந்த ஒரு கம்பளத்தார் விழா என்றாலும் ..இனி தம்பியின் பங்கேற்பு இருக்கும் ..உடுமலையில் சுற்றி இருக்கும் மனதில் சூது ..வாது தெரியாத ...வெள்ளந்தியான மனம் கொண்ட நம் சொந்தங்கள் ..கல்வி ..வேலைவாய்ப்பு எல்லாத்துறைகளும் இருப்பதால் தம்பியுடன் நட்பு வட்டம் அதிகரித்துக்கொண்டே உள்ளது ..தம்பி தற்பொழுது சொந்தமாக பேக்கரி தொழில் வளரும் தொழிலதிபர் தற்பொழுது வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி..தம்பி படித்தது பொறியியல் துறை ...படிப்பு என்பது வெறும் கல்வி மட்டும் தான் முன்னேறுவதற்கு தன்னம்பிக்கையுடன் சாப்ட்வேர் பணி ...இன்ஜினியரிங் துறை என்று தடம் பதிக்காமல் ..வியாபாரத்தில் நம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று ..பேக்கரி தொழில் இறங்கி பட்டையை கிளப்பிகொண்டுஇருக்கிறார் ...இதற்கு என் அன்பு தங்கையும் அதற்கு பக்கபலமாக இருப்பது தன்னம்பிகையின் சாட்சி ..இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவரின் நண்பர்கள் ..சாப்ட்வேர் .வெளிநாடு என்று பணியில் இருந்து ..கார் ..பங்களா என்று ..மாட மாளிகைளோடு இருப்பார்கள் ..வங்கி கொடுக்கும் கடன் தொகையில் ..தவணை கட்டிக்கொண்டு இருப்பார்கள் ..தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வேலை எப்பொழுது மெயில் வரும் என்று கவலை இல்லாமல்...எந்த சூழ்நிலையிலும் ..தொழில்கைவசம் உள்ளது ..எதுக்கும் கவலை படவேண்டியது இல்லை என்று தன்னம்பிக்கையுடன் வாழக்கையை அழகாக எடுத்து செல்லலாம் ..நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளையும் தம்பிக்கு தொழில் சார்பாக பக்கபலமாக இருக்கும் ..தம்பி நம் கம்பளவிருச்சம் அறக்கட்டளை முதலாண்டு ஆண்டு கலந்துகொண்டு ..இரண்டாம் ஆண்டு குடும்பத்துடன் கலந்துகொண்டது மற்றட்ட மகிழ்ச்சி ..தம்பியும் நம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு தகந்த ஆலோசானைகள் வழங்கி இரண்டு வருடங்களாக சொந்தங்களுக்கு தூரம் என்றும் தடையாக இல்லை என்று தனது பங்களிப்பை அளிப்பது அவரின் சமுதாய அக்கறையையும் நம் எதிர்கால குழந்தைச்செல்வங்களுக்கு விருச்சத்தின் விதைகளை தூவி வளர்ந்து அதன் கனிகளை தருவதற்கு பங்களிப்பு என்றும் வரலாற்றில் செதுக்கி வைக்கும் என்பது ஐயமில்லை ...தம்பியின் பேச்சுக்கள் ..இணைய தளத்தில் நேரம் இருக்கும் பொழுது கேட்டு பாருங்கள் ...தன்னம்பிக்கையினை நமக்கு தருவார் ..நமது கம்பள விருச்சத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஏன் அழைத்தேன் என்று உங்களுக்கு இப்பொழுது தெரியும் .இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ..தம்பியிடம் அனல் தெறிக்கும் வளர்ச்சிக்கான சமுதாய கருத்துக்களை எதிர்பார்த்தேன் ..தம்பி என்னை போன்று மகிழ்ச்சியான சொந்தங்களை பார்த்தவுடன் ..திருமூர்த்தி மலையின் காற்று .இதமான சூழ்நிலையில் குறைவாக பேசி .மற்ற சொந்தங்களுக்கு நேரத்தை அளித்துவிட்டார் ...சேகர் பொம்மய்யா தம்பி போன்றவர்களால்தான் ..நம் வளரும் குழந்தைச்செல்வங்களுக்கு சமுதாயம் ..கல்வி ,பண்பாடு ..கலாச்சாரம் என்று சரியானா திசையை நோக்கி கொண்டுசெல்ல முடியும் என்பது என் நம்பிக்கை ...விருச்சத்தின் விதைகளாக வளர்வோம் ..நன்றி 🌿🌿🌱🌱🌱
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..
9944066681....
கம்பள விருட்சம் அறக்கட்டளை
உடுமலைப்பேட்டை ..

திங்கள், 28 ஜனவரி, 2019


கம்பள சொந்தங்களே கரம் கோர்ப்போம்!!! அறம் செய்ய!!!
🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
உடுமலைப்பேட்டை தளி எத்தலப்ப நாயக்கர் ...ஆசியுடன்  #கம்பளவிருட்சம் அறக்கட்டளை
எங்களுடன் இணைந்து ...
#கரம் கொடுங்கள் கம்பள முன்னேற்றத்திற்கு #உரம்இடுங்கள்.
பல்வேறு இடர்பாடுகளலும் கம்பள  சமுதாய முன்னேற்றம் ஒருபோதும் தளராமல் இருக்க உங்களின் ஆசியும், ஆதரவும் தேவை.
#எங்களின் அடுத்தகட்ட முயற்சியாக கம்பள சமுதாயதிற்கு ஆம்புலன்ஸ் வாகன திட்டம் தேவை .
#கம்பள சமுதாய  முயற்சிக்கு உரம் இடுங்கள்.
#சமுதாயத்தை உயர்த #கரம் கொடுங்கள்.
#சமுதாயத்தால் காயம் பட்ட இனத்திற்கு மருந்திடுவது எப்போது?
#விழித்துக்கொள்ளுங்கள் கம்பள சமுதாயத்திற்கு
அரசியலில் சன்மானத்திற்கான
தன்மானத்தை இழக்காதீர்கள். அதை அடகு வைத்து கேடாய் விளங்காதீர்கள்
ஆழ்ந்து சிந்திப்போம்
ஓர் இனத்தின் பொருளாதார மாற்றமே அந்த இனத்தின் வளர்ச்சியாகும்.
இந்த ஆண்டில்  2019ல் கம்பள சமுதாய  முன்னேற்றத்தை மனதில் கொண்டு செயல்படுவோம், வெற்றி பெறுவோம்

தளி எத்தலப்ப நாயக்கர் ...ஆசியுடன்  #கம்பளவிருட்சம் அறக்கட்டளை
முகவரி :

15-சி ,பஷீர் அஹமது லேஅவுட் ,உடுமலைப்பேட்டை ,திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு.
அறக்கட்டளை பதிவு எண்-23/2017
நிதியுதவி அளிக்கவிருப்பம் உள்ளவர்கள் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் வரவு வைக்கலாம்
கரூர் வைஸ்யா பேங்க் 
வங்கி எண் : 1203155000210442
பெயர்          : கம்பள விருட்சம்      அறக்கட்டளை 
கிளை          : உடுமலைப்பேட்டை 
IFSC.             : KVBL0001203

வாழ்த்துக்கள்...
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸாப்ப் குழு
கம்பள விருட்சம் அறக்கட்டளை
கீர்த்திவீரர் எத்தலப்பர்  கல்விக்குழு 
கீர்த்திவீரர் எத்தலப்பர் விவசாய குழு
கீர்த்திவீரர் எத்தலப்பர் வியாபார குழு 
மணமாங்கல்யம் ....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681


பிரிந்து கிடக்கும் கம்பள சொந்தங்களே ...
சமுதாய முன்னேற்றம் கான கல்வி ,பொருளாதாரம் ,வேலைவாய்ப்பு ,
#தன் இன #முன்னேற்றம் அவசியம்.
.
70 வருட இட ஒதுக்கீட்டில் முன்னேறிய, மெத்த படித்த, பணிகளில் உள்ள,, பதவி ஒய்வு பெற்ற மற்றும் அரசியல் அதிகாரம் படைத்த
சமுதாய முன்னேற்ற அறிவில்லாத அறிவிலிகள்
சற்று சித்தியுங்கள்.
எல்லாம் இருக்கின்றீரா?
உணர்வுகளை புதைத்து வைக்காதீர்கள் அது #சவப்பெட்டிபினத்திற்கான சிந்தனைகள்...
கல்வி, பொருளாதாரம் வேலைவாய்ப்பு, சுய தொழில்களில் முன்னேற்றமாய் திகழ
கம்பள சொந்தங்களே  ஒன்றுபடுவோம்
ஒற்றுமையுடம்.
 கம்பள சொந்தங்களே பொருளாதார வலிமையை பெருக்குவோம், கம்பள சொந்தங்களுக்கான அதிகாரம் படைப்போம்.
நமது கம்பளவிருட்சம்  அறக்கடளையின் செயல்பாடுகளை மற்ற மற்ற உறவுகளுக்கு மற்றும் குரூப் கு share செய்து அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு உதவுங்கள் அது நம் நம் கம்பள  சமுதாயத்தின் வளர்ச்சிக்கும்
முன்னேற்றத்திற்கும் வித்தாக அமையும்.
இதை ஷேர் செய்யாமல் இருப்பதே நீங்கள் கம்பள  இனத்திற்கு செய்யும் துரோகமே!
உங்களின் ஆதரவு களுடன் விருட்சமாய் விளங்கட்டும்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..
ஒரு இனத்தின் முன்னேற்றத்திற்கு தேவை ..கலாச்சாரம் மற்றும் அரசியல் எழுச்சியா ?

கம்பள சமுதாய சொந்தங்கள் .. அனைவருக்கும்
பெரும் தலைவர்கள்  தளி எத்தலப்ப நாயக்கர் ..வீரபாண்டிய கட்டபொம்மன் ,விருப்பாச்சி கோபால் நாயக்கர் , பிறந்த சமுதாயத்தின் தற்போதைய நிலை
மெத்தப் படித்த மேதாவிகளும், மேல்நாடு சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்ற அறிஞர்களும், மேல் சாதியினரும், மிட்டா மிராசுகளும், ஜமீன்தார்களும், ஆலை அதிபர்களும், அவர்தன் வாரிசுகளும் தான் அரசியலில் ஈடுபட முடியும். தலைவர்களாக முடியும் என்ற நிலை 20-ம்; நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தது. அப்போது ஏழையிலும் பரம ஏழை, சமூக அந்தஸ்தோ, சாதிப் பெருமையோ சற்றும் இல்லாத சாமானியரிலும் பரம சாமான்யர், ஆறாம் வகுப்பைக் கூடத் தாண்டாமல் படிப்பை பாதியில் கைவிட்டவர், அரசியலில் ஈடுபட முடியும். தலைவராகவும் முடியும். மெத்த படித்த மேதாவிகளையும், மேல்சாதி பெருமையையும் மேலிடத்து செல்வாக்கும் கொண்ட அரசியல் சாணக்கியர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு பெரும் பதவிகளுக்கு வர முடியும், உலகப் புகழ் பெற முடியும் என்பதை நிரூபித்தவர் நம் இனத்தில் பிறந்த பெரும் தலைவர்கள்  தளி எத்தலப்ப நாயக்கர் ..வீரபாண்டிய கட்டபொம்மன் ,விருப்பாச்சி கோபால் நாயக்கர் ,
ஆனால் நம் இனத்தின் தற்போதைய நிலை என்ன? சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 0. இந்;திய ஆட்சி பணியில் இன்று நம் சமுதாயத்தினர் யாரும் இல்லை. துணை கலெக்டர், டி.எஸ்.பி-யில் யாரும் இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகளில் யாரும் இல்லை.  சொல்லை நாடாள்பவர்களும் கேட்பதில்லை. அதிகாரிகளும் கேட்பதில்லை.
இதற்கு காரணம் என்ன? அவர்களிடம் உள்ள ஒற்றுமை. அவர்கள் ஒன்றாக முடிவு எடுத்தால் ஒன்றாக ஒற்றுமையாக வாக்குகளை பதிவு செய்து விடுவார்கள் என்பது தான் இதற்கு காரணம்.
ஆனால் மிகப் பெரிய இனமான நம் இனத்தில் உள்ள ஒற்றுமை குறைவு நம் இனத்தின் முன்னேற்றத்திற்கு தடைகல்லாக உள்ளது. பெரும் வணிகத்தில் ஈடுபட்ட நம் முன்னோர்கள் வணிகத்தில் ஈட்டிய ஒரு பகுதியை கல்விக்கு செலவிட்டு சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை காட்டினார்கள். தற்போது அதில் தொய்வு ஏற்படுகிறது. எனவே நம் சமுதாயத்தில் உள்ள சமுதாய பற்று உள்ள இளைஞர்களும் பெரியவர்களும் தொழில் அதிபர்களும் சமுதாயத்தை ஒற்றுமை படுத்த இப்போதே முயல வேண்டும்.
தொழில் அதிபர்கள் நேரடியாக சமுதாய பணிகளில் இறங்கும் போது அவர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு வரலாம். எனவே இதனை தவிர்க்க தொழில் அதிபர்களை நேரடியாக சமுதாய பணியில் ஈடுபடுத்துவதற்கு பதிலாக அவர்களது ஆலோசனை, பொருளாதார உதவி ஆகியவற்றை மட்டும் பெற்றுக் கொண்டு சமுதாயத்தில் உள்ள இளைஞர்களும் பெரியவர்களும் சமுதாயத்தை ஒழுங்கு படுத்தி ஒற்றுமையாக்கி வழி நடத்த வேண்டும்.
தற்போது முகநூலில் ஏராளமான நம் சமுதாய நண்பர்கள் பல்வேறு அமைப்புகளை பல்வேறு இடங்களில் வைத்து செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களது வேகமும், விவேகமும் ஒன்றினைந்து ஒருங்கே செயல்பட்டால் நம் சமுதாயத்திற்கு அது மிகப் பெரிய முன்னேற்றமாக இருக்கும்.
எனவே நம் சமுதாயத்தை சேர்ந்த சமுதாய பொறுப்புள்ள இளைஞர்கள், பெரியவர்கள் முன்னின்று நம் சமுதாயத்தினர் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். எனவே அதற்கு தயாராக இருக்கும் இளைஞர்கள், பெரியவர்கள், அமைப்புகளில் பதவி வகிப்பவர்கள், அமைப்புகளின் பெயர், விலாசம், பதவி, தொலைபேசி எண் முதலியவற்றை தயவு செய்து தெரிய படுத்துங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் நான்கு இடங்களில் நாம் ஒரு கூட்டம் நடத்துவோம். நீங்கள் உங்கள் தொலைபேசி எண் பெயர், வசிப்பிடத்தை தெரியப்படுத்தினால் மட்டுமே இதனை நாம் செயல்படுத்த முடியும். முகநூலில் தெரிவிக்க விருப்பம் இல்லாதவர்கள் 9944066681-ல் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் அனுப்புங்கள். மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.
நண்பர்களே!! இதற்கு யாரும் எதுவும் செலவு செய்ய வேண்டாம். ஒரு மாவட்டத்தில் 4 இடங்களில் கூட்டம் போட்டால் நம் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள,; பெரியவர்கள் 30 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ய வேண்டிய நிலையே வராது. எனவே நாம் செலவிடுவது எல்லாம் நமது நேரத்தை மட்டுமே. தொழில் செய்யும் அல்லது பணியாற்றும் நம் சமுதாயத்தை சேர்ந்த யாரும் அந்த பணிக்கு இடையூறு இல்லாமல் சமதாயத்திற்கு பணியாற்றுங்கள் அல்லது பணியாற்றும் சமுதாய நண்பர்களுக்கு உதவுங்கள். இதுவே தற்போதைய நமது தேவை. சுமார் நான்கு கூட்டங்களில் நம் சமுதாயத்தினிரிடம் உள்ள கருத்து வேறுபாடுகள் மறையும். கருத்து வேறுபாடு மறைந்து நமக்குள் ஒற்றுமை ஏற்பட்டால் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் நம் சமுதாயத்தை மதிக்கும். சமுதாயத்திற்கு பாதிப்பு இல்லாத நிலை ஏற்படும். சமுதாய பற்று உள்ள உங்களை போன்ற ஏராளமான இளைஞர்கள் இதில் ஈடுபட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். நமக்குள் ஈகோ வேண்டாம். மேற்கண்ட விபரங்கள் கிடைத்தால் உங்களிடம் நானே தொடர்பு கொண்டு ஏற்கனவே சமுதாய ஈடுபாட்டோடு இருக்கும் உங்களது ஆலோசனையை பெற்று அருகிலேயே ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வோம். அதனை நீங்களே உடன் இருந்து ஒருங்கிணைத்து இந்த சமுதாய பணி ஆற்றுங்கள்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...



சனி, 26 ஜனவரி, 2019

.உடுமலையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி


இன்று 26-1-2019 ...குடியரசு தினம் ...அவரவர் பள்ளிகளில் கொடி ஏற்றி வைத்துவிட்டு ..காலையில் 10 மணி அளவில் ..பள்ளிக்குழந்தைகள் ...உடுமலையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி குதூகலத்துடன் கலந்துகொண்டு இந்தியாவின் வருங்கால கனவை நிறைவேற்ற கனவுகண்டு ..அதை பள்ளிக்குழந்தைகளை உற்சாகப்படுத்திய மறைந்த முன்னாள் ஜனாதிபதி விஞ்ஞானி அப்துல் கலாம் அய்யா வின் கனவுகளை நிறைவேற்றி கொண்டிருக்கும் இளம் விஞ்ஞானிகள் உருவாகி கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சி ....... பழனி ஸ்ரீ சுப்ரமண்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகளின் செயல்விளக்க கண்காட்சி ராமய்யர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இஸ்ரோ பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி நெல்லை.சு.முத்து அவர்கள் துவக்கி வைத்தார். ஸ்ரீ சுப்ரமண்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி செயலர் வி.பி.சரவணன் மற்றும் முதல்வர் நந்தகுமார் முன்னிலை வகித்தனர்.

அறிவியல் கண்காட்சியில் மக்கும் பொருட்களில் இருந்து எரி வாயு தயாரித்தல், கடல்  அலைகளில் இருந்து மின்சாரம் தயாரித்தல்., சுற்றுச்சூழலை பாதுகாக்க கையாளபட வேண்டிய தொழில்நுட்பங்கள்,கார்பன் டை ஆக்சைடு வாயுவில் இருந்து இங்க் தயாரித்தல், விவசாயத்தில் தண்ணீரை சேமித்தல், வனவிலங்குகளை பாதுகாத்தல்,மலைப்பகுதிகளில் கொண்டை ஊசி வளைவுகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுத்தல், வெள்ளம் வரும் போது அதை எவ்வாறு எதிர்கொள்வது அந்த தண்ணீரை எவ்வாறு சேமிப்பது என்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் 120 க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது.
கல்லூரி முதல்வர் நந்தகுமார் வரவேற்றுப்பேசினார்.  உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் ஜோதி ராமலிங்கம், உடுமலை சுற்றுச்சூழல் சங்க நிர்வாகி சசிக்குமார் ,சக்திவேல் ,உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சிவக்குமார், கண்டிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த அறிவியல் கண்காட்சியில் குழந்தைகளின் அறிவியல் அறிவை கண்டு ..அவர்களை உற்சாகப்படுத்தும் பணியை ..உடுமலையின் மண்ணின் மைந்தர் ..வெளிநாட்டுவாழ் இந்தியர் திரு .அசோகன் அவர்கள் ..கலந்துகொண்ட குழந்தைகளுக்கு அன்பு பரிசாக ..மனோரமா இயர் புத்தகம் ..பள்ளி குழந்தைகளுக்கு அளித்தது பெரும் மகிழ்ச்சி ..இன்று இந்த கண்காட்சியில் ..கலந்து கொண்ட அமராவதி இராணுவப்பள்ளி ஆசிரியர் திரு .இளமுருகு அவர்கள் ,கிளை நூலகம் -2 அய்யா .கணேசன் அவர்கள் ,மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் .பரணி அவர்கள் ,.மகாதேவன் அவர்கள் ,செல்வராஜ் அவர்கள் ,செந்தில்ராம் அவர்கள் ,முனிசாமி அவர்கள் ,ஸ்டீபன் அவர்கள் , குழந்தைகளின் அறிவியல் கண்காட்சியை அழகாக படம் பிடித்துச்சென்றார்கள் ...குழந்தைகளுக்கு மிக உற்சாகமாக அமைந்தது ..
இன்று புதிய நண்பர்களை அதிகம் சந்தித்த நாளாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி ..

ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து அவர்கள், மாணாக்கர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்க்கும் விதமாக அப்துல்கலாமின் சிந்தனைகள் என்ற தலைப்பில் மாணாக்கர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் நிகழ்வை ஒருங்கிணைத்தார்...

இன்று உடுமலையின் அன்பு பரிசாக ...உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் வெளியிட்ட உடுமலையின் வளர்ச்சிக்கு பாடுபட்ட நல் உள்ளங்களின் பெரியவர்களின் வரலாறுகளை தொகுப்பு நூலை ..அறிவியல் விஞ்ஞானி திரு .நெல்லை முத்து அவர்களுக்கு வழங்கியது மிக்க மகிழ்ச்சி ...

இன்றைய குடியரசு தினம் அருமையான நாளாக அமைந்தது ...வாழ்த்துக்கள் 

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..


சனி, 19 ஜனவரி, 2019

இனிமையான பொங்கல் ....2019..

தைமாதம் முதல் நாள் என்றாலே விவசாயம் என்ற ஒரு மந்திரச்சொல் எல்லோர் மனதில் ஓடும் ...தைமகளை வரவேற்கும் நாளாக அமைவது இயல்பு ..வரும் காலங்களில் விவசாயம் சார்ந்த தொழிலை முன்னெடுதி யே எந்த ஒரு தொழிலும் சார்ந்த தாக வருங்காலத்தில் அமையப்போவது உறுதி ..நம் தலைமுறை விவசாய தொழில்களை மறந்துவரும் சூழலில் ..நம் குழந்தைகள் தற்பொழுது இருக்கும் நிலங்களில் ..தங்களின் பெற்றோர்களுடன் பள்ளி ,கல்லூரிகளில் படிக்கும்  ,வேளைக்கு போகும் இளைய தலைமுறையினர் விடுமுறை நாட்கள் ,பொங்கல் பண்டிகை காலங்களில் தானாக முன்வந்து விவசாய நிலங்களில் கால் பதித்து ..பயிர்களுக்கு நீர் இறைத்து ...தலையெடுத்தும் ,கால்நடைகளை எப்படி பராமரிப்பது .என்று களப்பணி செய்தும் ..இந்த பொங்கலை கொண்டாடியது பார்க்கும்பொழுது மனதில் இனம் புரியாது மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது .. ...தங்களால் இயன்ற அளவு விவசாயப்பணிகளை மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது ..என்னதான் நகரத்து வாழ்க்கை வாழந்தாலும் ...எப்பொழுது விடுமுறை விடுவார்கள் என்று இளைய தலைமுறையினர்க்கு விழிப்புணர்வு வந்துள்ளதை அறியும்பொழுது ...மறுபடியும் விவசாய பணிகள் இருக்கும் நடைமுறை சிக்கல்களை களைந்து ..புதிய விவசாய நடைமுறைகளை கண்டறிந்து வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிகிறது ..நம் நாட்டுக்கு விவசாயதில் வளரும் தலைமுறையினர் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது ...ஷ்யாமுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ..படித்திவிட்டு பிடித்த துறையில் பட்டம் வாங்கிவிட்டு ..பிடித்த வேளைக்கு சென்றாலும் ..இந்த விவசாய பணி எனக்கு பிடித்து இருக்கிறது என்று சொல்லும்பொழுது எதிர்கால வாழ்க்கைக்கிற்கு நம்பிக்கை பிறக்கிறது ...பெரியோர்கள் சும்மா வா சொன்னார்கள் ..தை பிறந்தால் வழிபிறக்கும் என்று .....அதுவும் இந்த பாடலுடன் கேட்கும்பொழுது வாழக்கை இனிமையாகிறது ..நீங்களும் கேட்டு பாருங்களேன் ...
என்றும் அன்புடன் ஷியாம் சுதிருடன் ...உடுமலை சிவக்குமார்
9944066681..

வெள்ளி, 18 ஜனவரி, 2019

வரலாற்று பயணம் ...புங்கமுத்தூர் ...

இன்று அருமையான வரலாற்று பயணம் ...புங்கமுத்தூர் துர்க்கையம்மனை வழிபாடு செய்து விட்டு ...திரும்பியகையில் ..நம் சொந்தம் ஒருவரிடம் எதேச்சையாக சந்திக்க முடிந்தது ...நம் முன்னோர் மருத்துவ வசதி இல்லாத காலங்களில் ..எதிர்பாராமல் வரும் நோய்களுக்கு ...ஓலை சுவடிகளை பயன்படுத்தி மருத்துவ குறிப்புகளை எழுதி வைத்துள்ளதை அறியும் பொழுது வியப்பாக உள்ளது ..நம் முன்னோர்கள் அருமையாக எழுதி வைத்துள்ளனர் ..அதை படிக்க படிக்க...வரலாற்றை தேடும் ஆவல் இன்னும் கூடி கொண்டே போகிறது ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681

வியாழன், 17 ஜனவரி, 2019

ஆல் கொண்டம்மன் கோவில்-உடுமலைப்பேட்டை (மாலகோவில் )
ஜனவரி ..17...2019...
கம்பளத்தார் ...ஆட்டம் ...பாட்டம் ...கொண்டாட்டம் ..தேவராட்டம் ....
இன்று காலையே ஒரு உற்சாகம் மனதில் தொற்றிக்கொண்டது மண் மனம் மாறாத ..கொத்துமல்லி செடிகளின் வாசம் ...கொண்டக்கடலை செடிகளின் பசுமையும் ...கண்னுக்கு குளிர்ச்சியான பச்சை தென்னை மரங்களின் சூழந்த ..25 கிராமங்களில் இருந்து வந்திருந்த சொந்தங்களை ஒரே கோவிலில் பார்த்தும் ,பேசியும் ..கம்பளதார்களின் தேவராட்டத்தை ...தளி எத்தலப்பர் ...போற்றி வணங்கும் குலதெய்வங்களாக போற்றி பாதுகாக்கும் கால்நடை செல்வங்களை போற்றி வணங்கியது மிக்க மகிழ்ச்சி ..இன்று அருமையான சலங்கை மாடுகளின் ஒலி சத்தம்...தேவராட்டம் ,தமிழர்களின் வீர விளையாட்டு ,பாரம்பரிய மிக்க பழமை விளையாட்டுகள் இன்றைய சூழலில் இந்த பொங்கல் பண்டிகையில் திரும்ப பார்த்ததில் சந்தோசம் .......உலக சூழலில் மாறிக்கொண்டிருக்கும் பண்பாடு ,கலாச்சாரம் ,மறுபடியும் நம் கண்முன்னே கொண்டு வந்திருந்தது வேறு யாரும் இல்லை ..வளரும் இளைஞர்கள் ..எதிர்காலத்தில் மிகவும் பாதுகாப்பாக கொண்டுசெல்வார்கள் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்படுத்தியுள்ளனர் ..மால கோவிலுக்கு வந்திருந்த அனைத்து சொந்தங்களின் மனதில் புது சொந்தங்களையும் ,விட்டுப்போன சொந்தங்களையும் பார்த்தும் ,பேசியும் பார்த்தது மகிழ்ச்சியாக அமைந்தது இந்த கோவில் திருவிழா ....சீரும் காளையுடன் ..அடிவள்ளி ஜக்கம்மாள் கோவிலில் இருந்து ...எங்க வீட்டு மகாலட்சுமிகளுடன் தொடங்கி வைத்த தேவராட்டதுடன் ...ஆட்டம் ...பாட்டம் ...கொண்டாட்டம் ..நம்ம மாப்பிள்ளைகள் ..தம்பிகளுடன் ...மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த திருவிழா ...ஆல்கொண்டம்மன் மக்கள் வெள்ளத்தில் நீந்தி ..அடிமேல் அடிவைத்து ..தேவராட்டம் ...சலிகெருது ..சீரும் காளையுடன் .நம் சொந்தங்களுடன் ..கலந்துகொண்டு வந்தது மகிழ்ச்சி .நேரம் சென்றது கூட தெரியவில்லை ...அந்தளவுக்கு ..பக்தி பரவசத்துடன் ..வணங்கி வந்தது மனதுக்கு மகிழ்ச்சி ...இந்தஆண்டு இயற்கை சோதிக்காமல் ..விவசாயம் செழிக்க ...கால்நடைகள் அபிவிருத்தி பன்மடங்கு பெருகி செல்வம் செழிக்க ஆல்கொண்டம்மன் ..அனைவர்க்கும் அருள்புரிவாராக .... பொங்கல் விழா 2019..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
9944066681..

புதன், 16 ஜனவரி, 2019

மாட்டுப்பொங்கல் ...2019
தளி ஜல்லிபட்டி -உடுமலைப்பேட்டை

இன்று மாட்டு பொங்கல் ...உழவுக்கு  ஆணிவேராக இருக்கும் குலதெய்வங்களுக்கு ...பாரம்பரியமிக்க திருநாள் ..25 வருடங்களுக்கு முன் சிறு வயதில் சொந்தங்களுடன் சென்று ஆடு ,மாடு ,கண்ணுகுட்டிகளுடன்  சென்று திருமூர்த்தி அணையில் குளிப்பாட்டி ,அவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து விளையாடியது நினைவில் வந்த மனதுடன் உற்சாகத்தோடு... இன்று மாலை மதிமயங்கும் நேரம் தளிஜல்லிபட்டி கிராமம் மேற்குத்தொடர்ச்சி மலை சாரலில் அமைந்திருக்கும் ..அண்ணனின் ஆட்டு பட்டிக்கு சென்று குழந்தை செல்வங்களுடன் மாட்டுப்பொங்கல் அமைதியான சூழலில் ஆட்டுக்குட்டிகளும் ...பசுமாடுகளுடன் ..தோழனாக இருக்கும் நாய்குட்டிகளுடன் ..சொந்த பந்தங்களுடன் கொண்டாடியது மகிழ்ச்சி ..இன்று தெய்வ வழிபாடு வழிபடுவதற்கு முன் ..புதியவராவாக தாய் ஆடு தன் குட்டி குழந்தைச்செல்வத்தை ஈன்றது அழகான காட்சியாக எல்லோருக்கும் மகிழ்ச்சியாக அமைந்த்து ....வழிபடுவது ஆரம்பிக்கும் முன்னரே குளிர் பனி பல் சில்லிடும் அளவிற்கு குளிர் ஆரம்பத்துவிட்டது ..ஆட்டுப்பண்ணை பட்டியில் இருந்ததால் வெப்ப சீதோஷண நிலவியது...ஆடு ,மாடு கொம்புகளுக்கு வண்ணம் பூசியும்,குங்குமப் பொட்டிட்டு குழந்தைச்செல்வங்களுடன் இன்றைய நாள் அருமையானது .வழிபாடு தொடங்கவதற்கு முன் இருந்து ..இரண்டு குச்சிகள் எடுத்துக்கொண்டு தகர டப்பா  ஒன்று எடுத்து கொண்டு .மேளமாக .இசைக்கருவியாக பயன்படுத்திக்கொண்டு ...   மாட்டுத் தொழுவத்துடன் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் சுத்தம் செய்து அலங்கரித்த விவசாயிகள் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் படைத்து மாட்டுத் தொழுவத்தில் பொங்கலிட்டும் . பசு, காளை,  ஆடுகள் என அனைத்து கால்நடைகளுக்கும் தீபாராதனை காட்டி பொங்கல், பழம் கொடுத்து பூஜைகளை நிறைவு செய்து மகிழ்ச்சி ..புறப்படும் பொழுது தோட்டங்களினோடு பயணத்தில் சில்லிடும் குளிர் ...உடுமலைநகரத்தை தொடும் வரை ...குளிர் முகத்தில் பன்னீர்த்துளிகளாக சில்லிட்டது ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681..



ஞாயிறு, 13 ஜனவரி, 2019

அனைவருக்கும் தெரிந்த இப்படிக்கு நான்..!
..
பெயர் : முகநூலில் sivakumar kumar ,
பால்ய நண்பர்களிடத்தில் சிவா .., 
சான்றிதழ்களில் V.K.Sivakumar..
பிறந்தது -தமிழ்நாட்டில்
தாய்மொழி -தமிழ் , 
பேசும் மொழிகள் -தமிழ் .ஆங்கிலம் ,தெலுங்கு ,மலையாளம் .
வளர்ந்தது தமிழ்நாட்டில்.
இடையில் கோவை ,சேலம்  இணைந்திருந்தது..
வயது : ஒவ்வொரு வருடமும் அழையா விருந்தாளியாக வந்து போவதால் கண்டுக்கொள்வதில்லை அல்லது
நினைவில் வைத்துக்கொள்வதில்லை..என்றும் 16..
கல்வி : BBM 
தொழில் : நாட்டின் முதல் குடிமகன் முதல் கடைமகன்கள் வரை கவனிக்க வைக்கும் -விற்பனை துறை.
குடும்பம் : ஒன்று 
குடும்பத்தில் ஒரே ஒரு மகன் , 
 குடும்பத்தில் உங்களோடு
சேர்த்து இன்று வரை -8,504 பேர் ..
ஆர்வம் : வாசிப்பதில், நேசிப்பதில், யோசிப்பதில், எழுதுவதில், பகிர்வதில்..
ஆச்சர்யம் : என்னுடன் பயணித்த, பயணிக்கும் மொழிகள்..
பிடித்தது : கிடைக்கும் நேரத்தில் எல்லாம் படித்துக் கொண்டிருப்பது.
பிடிக்காதது : சமீப காலங்களில் என்னிடம் உருவான மாற்றங்கள்..
ஏங்குவது : நீண்ட (நேர) தூக்கத்திற்கு..
தாங்குவது : எப்போதும் துரோகங்களை..
கடைபிடிப்பது : எனக்கு பிடிக்காத நிலைப்பாடுகளில் அமைதியாக விலகி இருப்பது..
நினைத்தது : எழுத்துகளை ரசிக்க வைக்க வேண்டும்.
நிகழ்ந்தது : எழுத்துகளை நேசிக்க வைத்தது.
விரும்பியது : அறிவியல் துறையில் பணிபுரிவதில்.
ஆனால் சூழல் அனுமதிக்கவில்லை..
விரும்பாதது : காதல்துறையில் நிலைக்கொள்வதில்.
ஆனால் சூழல் அனுமதிக்கவில்லை..
விரும்புவது : என்னிடம் நடிப்பவர்களை..
ரசிப்பது : எதிலும் சீரியஸாக இல்லாமல் இருப்பது..
மதிப்பது : பெண்களையும், பெண்களை மதிக்கும் ஆண்களையும்..
நிலைப்பாடு: கடல் போலவும், கடலலைகள் போலவும் இருப்பது.
சாதிக்க நினைப்பது : எங்கும் எதிலும் எப்போதும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்,
வாழ்க்கையிலும், மரணத்திலும்...!
நீண்டகால ஆசை -கம்பள சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் இருக்கும் சொந்தங்களை கல்வி ..வேலைவாய்ப்பில் ..அரசியலில் கொண்டுவருவது ..
பிடித்தது பணி -சமுதாய சேவையில் (என் வேலைநேரம் போக ).

என்றும் அன்புடன் .உடுமலை சிவக்குமார் 
9944066681....

செவ்வாய், 8 ஜனவரி, 2019

கம்பளத்தார் தளம் ...விடுதலை களம் .அரசியல் மாநாடு -ஜனவரி 6-2019....அரசியல் பழகு ...கம்பளத்தார் விழுப்புணர்வு மாநாடு ..

எனக்கு தெரிந்து கடந்த 10 ஆண்டுகளாக விடுதலை களம் ..கம்பளதார்களின் உரிமைக்கான குரலாக தமிழகம் எங்கும் ஓலித்து கொண்டு உள்ளது ...மதிப்புக்குரிய கொ .நாகராஜன் அவர்களின் எங்காவது கம்பளத்தர்களின் சிறு பிரச்னை என்றாலும் ...அடுத்த நாள் களம் இறங்கவிடுவார் ...அவர் இறங்குவதற்கு முன் அரசு துறைகள் அதற்கான தீர்வு வழிமுறைகளை தேடி அதற்குண்டான முடிவுகளை  கம்பளதார்களுக்கு தந்துவிடும் அளவிற்கு அவரின் செயல்பாடுகள் இருக்கும் ..பத்திரிகை  செய்திகளை நாமக்கல் ..சேலம் ,ஈரோடு பகுதிகளில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து படித்து தெரிந்துகொண்டேன் ...ஆறு வருடங்களுக்கு முன் அண்ணரை முதன் முதலில் பார்த்தது வத்தலகுண்டு சென்றாயப்பெருமாள் சன்னதியில் பார்த்து பரஸ்பரம் செய்திகளை பகிர்ந்துகொண்டோம் ..அதன் நட்பு நடக்கும் நிகழ்வுகள் தொலைபேசியில் பேசி கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம் ..நம் கம்பளத்தர்களின் குரலாக இன்று தமிழக பட்டி தொட்டியெல்லாம் இவரின் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துள்ளன ..கடந்த மூன்று வருடங்களுக்கு முன் பாஞ்சாலைக்குறிச்சியில் கோவில் விழாவில் சிறு பிரச்சனையில் கம்பளத்தர்களை வெளுத்து வாங்கியதை கேள்விப்பட்டு களத்தில் இறங்கி போராடியதை கம்பளத்தார் மறக்கமாட்டார்கள் ..பலமுறை போராட்டக்களங்களில் போராடி கம்பளத்தர்களின் குரலாக சிறை சென்று உள்ளார் ..இதனால் இன்றும் குடும்ப வாழக்கையை மறந்து கம்பளத்தர்களின் குரலாக தமிழகம் முழுவதும்  சுற்று பயணம் செய்துவருகிறார் ..அண்ணாருக்கு அனைத்து கட்சி தலைவர்களுடன் நல்ல நட்பு பாராட்டி .நல்ல இணக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் ..கம்பளத்தர்களின் உரிமைகளுக்காக
கல்வி ,வேலை வாய்ப்பு ,என்று பல தளங்களில் நமது கம்பள மக்களுக்கு சேவை செய்துவருவது மிக்க மகிழ்ச்சி ..இன்று சட்ட சபையில் ,பாராளமன்றத்திலும் நமது கம்பளகுரலுக்கு ஒலிக்க செய்வதற்காக எளிமையாக அரசியல் பயணமாக களத்தில் இறங்கி இருப்பது வரவேற்க வேண்டிய ..அவசியமான ஒன்று ..தற்காலத்தில் அரசியல் இல்லாமல் கம்பள மக்களின் வளர்ச்சி இல்லை என்பதை அறிந்து விடுதலை களம் அமைப்பை அழகாக ..கட்சியாக அரசியல் பயணத்தை அதுவும் எளிமைக்கு பெயர் பெற்ற முதல்வராக இருந்த காமராஜர் பிறந்த ஊரில் பயணத்தை ஆரம்பித்தது ..நல்ல தளமாக ..விடுதலை களமாக ..கம்பளதார்களின் குரலாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சி ...கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இருந்து விருதை மாநாட்டு பணிகளை தனி மனிதனாக ..அமைப்பு பொறுப்பாளர்களின் உதவியோடு ஒரு அமைப்பின் களப்பணியாளனாக இறங்கி வேலைசெய்து மாநாட்டின் வெற்றியை பதிவு செய்துள்ளார் ..விருதை கம்பளத்து மக்களின் அயராது ஒத்துழைப்புடன் இந்த அரசியல் எழுச்சி மாநாட்டை நடத்திக்காட்டி தமிழக அரசியலின் ஒரு கம்பளத்தர்களின் விடிவெள்ளியாக பிரகாசமான சூரியக்கதிர்கள் பட்டு ..முளைக்கும் செடியாக வளர்ந்து வெளிவர ஆரம்பித்துள்ளது ..நம் கம்பள சமுதாய மக்களின் குரலாக ஒலிக்க தொடங்கியுள்ளது ..அரசியல் மாநாட்டில் பேசிய தலைவர்கள் அவரின் எளிமை ,உழைப்பு ,தன் மக்களுக்கு உரிமை குரலாக வெகுவாக பாராட்டி பேசியது அருமை ..மாநாட்டில் வந்துருந்த அனைத்து கம்பள மக்களும் நீண்ட நேரம் உன்னிப்பாக தலைவர்களின் பேச்சை கேட்டும் ..அதற்கு பதில் அளித்து கொண்டும் ஒரு நேர்காணல் மாதிரி மாநாடு நடைபெற்றது புதுமையாக இருந்தது ...இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்ததில் நமது கம்பளத்தர்களின் பாளையக்காரர்கள் ,நம்முடன் வாழ்ந்த கம்பளத்தர்களின் அரசியல் தலைவர்கள் ,பெரியவர்களின் திருஉருவ படங்களை மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களை கொண்டு திறந்து வைத்து பெருமை சேர்த்தது  மாநாட்டின் ஒரு பொன் நாள் ..இதைவிட மாநாட்டின் பாதுகாப்பு அருமை ..மருத்துவ வேன் ,தீயணைப்பு வாகனம் ..முன்னேற்பாடுகளை செய்து காவல்துறைக்கும் எந்த ஒரு சிறு சங்கடம் வராமல் பார்த்து விழாவை வெற்றியுடன் நடத்தியது அருமை ..மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் ஆதங்கம் சென்னையில் வியாபாரம் நடத்தும் சொந்தங்கள் கூடையில் நம் குரல் ஒலிக்காதா ...டெல்லில் இருந்துவந்த சொந்தம் என் ஹோட்டலுக்கு வரும் பாராளமன்ற உறுப்பினர் நம் கம்பளத்தாராக இருக்க கூடாதா என்ற ஆதங்கம் வந்துருந்த சொந்தங்களிடம் பேசிக்கொண்டு இருந்ததை என் செவி வழி(லி )யில் கொஞ்சம் மனதில் பாரமாகத்தான் இருந்தது ...இந்த மாநாடு நடைபெறுவதற்கு மற்ற சமுதாய அமைப்புகள் ..நண்பர்கள் ..தலைவர்கள் .என்று பலபேர் உதவியது மகிழ்ச்சியாகவும் இருந்தது ...ஆனால் இந்த மாநாடு நடைபெறாமல் இருப்பதற்கும் ,தடுப்பதற்கும்  தடங்கலாக இருந்தது ......அதற்கான சூழ்நிலை வரும்போது உங்களிடம் பகிர்கிறேன் ...

என்றும் சமுதாய உணர்வுடன்
உடுமலை சிவக்குமார் ...






















திங்கள், 7 ஜனவரி, 2019

நன்றி : அன்பு தம்பி ..கோ .நாகராஜன் அவர்களுக்கு நன்றிகள் -விடுதலைக்களம் மாநாடு ..தாக்கம் ..கம்பளத்தார் உணர்வுகள் வெளிவர தொடங்கிவிட்டன ..முதல் அரசியல் களம் ...கம்பளத்தார் களம் ...நேற்றைய நிகழ்வுகளின் தாக்கம் ..
ஆயிரம் முடி வேந்தர் -
பதினாயிரமாயிரங் குறுநிலத்தார்
மாயிருந் திறை கொணர்ந்தே - அங்கு
வைத்ததொர் வரிசையை மறந்திடவோ?
தூயிழை யாடைகளும் - மணித்
தொடையலும் பொன்னுமொர் தொகைப்படுமோ?
சேயிழை மடவாரும் - பரித்
தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ?
- பாரதி
(பாஞ்சாலி சபதம்)
மாயிரும் - மிகப் பெரிய அளவு
திறை - கப்பம்
தொடையல் - மாலை
சேயிழை மடவார் - ஆபரணங்கள் பூண்ட பெண்கள்.
இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு எட்டையபுர அரண்மனை சென்றபோது
இந்த வரிகள் நினைவுக்கு வந்தது.
(படம் -தமிழ் அறிஞர்களை,இசை கலைஞர்களை போற்றிய எட்டையபுர
அரண்மனை)
#KSRadhakrishnanpostings
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
07/01/2018

செவ்வாய், 1 ஜனவரி, 2019

இந்த bloger ,வாட்ஸாப்ப் ,முகநூல் பக்கம்

மார்கழி ...என்று தலைப்பை வைத்துவிட்டு ..அதை விட்டுவிட்டு பதிவு போடாமல் ...தூங்குவதற்கு சென்றால் தெய்வகுத்தம் ஆயிடும் ..ஆதலால் ..இந்த மார்கழி பதிவு ...

*மார்கழி மாதம் ஓசோன் ரகசியம் ....*
மார்கழி வந்துவிட்டது. உடலை நடுங்கவைக்கும் குளிருக்கு அஞ்சி உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக்கொண்டு விடிந்த பின்னரும் தூங்குவோர் நிறைய பேர். ஆனால், பெரும்பாலான பெண்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு, கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துக்கின்றனர். அப்படி *மார்கழி மாதத்தில் என்னதான் விசேஷம்?*
''ஆடியில் அம்மனும், புரட்டாசியில் பெருமாளும், மார்கழியில் அனைத்து தெய்வங்களும் என, மாதத்துக்கு ஒரு தெய்வம் என வழிபட வகுத்துள்ளார்கள் நம் முன்னோர். ஏனெனில், ஆடியில் பலமுள்ள காற்று வீசும். அப்படி வீசும் காற்று விஷக்காற்று என்பதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அம்மன் கோயில்களில் உள்ள கிருமிநாசினியான வேப்பிலையின் மணத்தை சுவாசிக்கும் போது, விஷக்காற்று முறியடிக்கப்படுவதுடன், இயற்கையான ஆக்சிஜனும் கிடைக்கிறது.
இதே போல் மார்கழி மாதத்தின் அதிகாலையில், ஓஸோன் படலம் வழி, ஆரோக்கியமான, உடல் நலனைத் தரும் காற்று அதிகம் பூமியில் இறங்கும். இது நம் வியாதிகளைக் கட்டுப்படுத்தும் என்பதால்தான் மார்கழி அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோலமிட வேண்டும் என முன்னோர்கள் கூறினர்.
நம் உடலில் 80% ஆக்சிஜனும் 20% கரியமில வாயுவும் இருக்க வேண்டும். தவறான பழக்க வழக்கங்களால் கூடுதலாகிவிட்ட விஷவாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை விரட்டி ஆக்சிஜனை நம் உடல் பெறுவதால் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. இந்த நல்ல வாயுவை சுவாசிக்கும் பொருட்டே அதிகாலை மார்கழியில் எழுவது என்பதை தெய்வத்தின் பெயரால் கட்டாயப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்."
*"ஏன் எல்லா விரதங்களிலும் பெண்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்?"*
"பெண்ணை எதற்கும் ஒப்பிட முடியாத ஓர் உயரிய இடத்தில் வைத்துள்ளது நம் சாஸ்திரங்களும் வேதங்களும். ஒரு பெண் 6 விதமான தன்மைகளைக் கொண்டவள். அவளே தெய்வமாகவும், மனைவியாகவும், குருவாகவும், நண்பனாகவும், ஆசானாகவும், போதகனாகவும் (செயல்திறன்) ஒரு ஆணுக்கு அமைகின்றாள். அந்தப் பெண்ணின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவேதான் பெரும்பாலான விரதங்களில் பெண்களின் பங்கு அதிகம் உள்ளது.''
*"பெண்கள் அதிகாலையில் கோலமிடுவதன் தத்துவம் என்ன?"*
"எந்த மனிதரும் தவறுகள் செய்யாமலில்லை. அறிந்து செய்யும் தவறுகள் ஒரு பக்கம், அறியாமல் செய்யும் தவறுகள் மறுபக்கம். நடக்கும் போது நம் காலடிபட்டு எறும்பு, பூச்சி போன்ற எத்தனை உயிர்கள் சாகின்றன? இதுவும் ஒருவகை பாவம்தானே? இதனால் எழும் தோஷத்தினால் கன்னிப் பெண்களுக்கு திருமணத்தில் தடை வரும். இதைத் தவிர்க்கவே பெண்கள் வாசலில் அரிசி மாவினால் கோலம் போடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது.
மழையினால் உணவுக்கு வழியின்றி இரவு முழுவதும் அடைந்து கிடக்கும் சிறு உயிரினங்கள் அதிகாலையில் வெளிவந்து தமக்குத் தேவையான உணவாக அரிசி மாவைத் தேடி வந்து உண்ணும். அந்த உணவினை சிறு உயிரினங்களுக்கு அளித்த பெண்களுக்கு, தோஷங்கள் அகலும்.''
*''மார்கழிக் கோலத்தில் சாணம் வைப்பது ஏன்?"*
''பசு மாட்டின் சாணம் அற்புத பலன்களைத் தரும் ஒப்பற்ற கிருமிநாசினி என்பது உலகளவில் பல அறிவியல் வல்லுநர்களும் ஒப்புக்கொண்ட உண்மை. நம் வீட்டைச் சுற்றிப் பரவியிருக்கும் பாக்டீரியாவை அழிக்கும் சக்தி கொண்டது சாணம். கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களினால் நோய்த் தொற்றுகள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே சாணத்தில் மகாலட்சுமி உறைவதாகவும், சாணப் பிள்ளையார் பிடித்து வைத்தால் நல்லது என்றும் கூறி வாசலில் சாணத்தைக் கரைத்துத் தெளிப்பதை பழக்கமாக்கினர் நம் முன்னோர்கள்.''
*''சாணத்தின் மேல் பூ வைப்பது எதற்காக?"*
''சாணத்தின் மீது வைக்கும் பூக்களின் தேனை உறிஞ்சுவதற்காக வரும் தேனீக்களுக்கு உணவு கிடைப்பது மட்டுமின்றி, சாணத்தின் பயனால் அந்தத் தேனீயின் விஷமும் எடுக்கப்படுகிறது.
இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய நல்ல விஷயங்களை அடக்கிய மார்கழி மாதக் கோலங்களால் பெண்களின் கற்பனைத் திறன் வளர்வதுடன் காசு தராமலேயே யோகாவை செய்த பலனும் கிட்டும். ஒருமுக சிந்தனை ஏற்பட்டு அறிவும் கூர்மையாகும்.''
*"பாவை நோன்பு இருந்தால் திருமணம் கைகூடும் என்று சொல்வது ஏன்?"*
அறிவியல் சார் பதில்:
அதிகாலை எழுந்து ஒரு மனதுடன் தனக்குச் சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்ற ஆழ் மனது நம்பிக்கையுடன், பரிசுத்தமான காற்றை சுவாசித்து விரதம் மேற்கொள்ளும் போது அப்பெண்ணிடமிருந்த எதிர்மறை எண்ணங்கள் விலகி, மன ஆரோக்கியம் மேம்பட்டு அவள் நினைத்த காரியம் கைகூடும். அதாவது நல்ல கணவனை அடையும் வழி கிடைக்கும்."
சரி இப்போ ஒட்டி வச்சு இருக்க ரெடிமேட் பிளாஸ்டிக் கோலத்தைப் பிய்த்து எடுத்துவிட்டு, அரிசி மாவுக் கோலத்தைப் போடத் துவங்குங்கள்..
2019....வருட முதல் நாள் ...எனது நண்பரின் அருமையான புது வியாபார பதிவு வாடிக்கையாளர் ...நிறுவனம் ..பணியாளர்கள் தொடர்பு பற்றியது ..

Kirthika Tharan.....அவர்களின் பதிவு ..
இன்னிக்கு போன் செய்த பலரின் கேள்வி...எதோ ஸ்டார்ட் அப் என்று சொன்னாய் இல்லையா? என்ன செய்யற! என்று..
Hepta senz..அர்த்தம் ஏழாம் அறிவு..
ஏழு ப்ராடக்ட்ஸ் என்றேன்.
என்ன தொழிற்சாலையா?
இல்லை சர்வீஸ் ப்ராடக்ட்ஸ்.
அப்படின்னா? அடுத்த கேள்வி செல்போன் மணி போல் விழுந்தது.
சரி பொறுமையா சொல்றேன்னு சொல்லிட்டேன்..பின்புதான் தோணிச்சு..ஏன் இதைப்பற்றி நாம எழுதவே இல்லை என்று. இன்று "HeptA Sanz organizational study" பற்றி..
ஆர்கனைசேஷன் ஸ்டடியா? அது எதுக்கு? யாருக்கு?
எல்லா நிறுவனங்களுக்கும். ஒரு டயட் எடுக்க கூட மனிதருக்கு எல்லா டெஸ்ட்ம் எடுக்கிறோம் .ஆனால் கோடி கோடியா கொட்டி உயிரை விட்டு உழைத்த நிறுவனத்துக்கு அப்படி ஏதாவது டயக்னோசிஸ் செய்கிறோமா?
இல்லை..ஏன் செய்ய வேண்டும்?
டெஸ்ட் செய்தாதான் நமக்கு என்ன பிரச்சனைன்னு முன் கூட்டியே தெரிஞ்சு டாக்டரை பார்த்து சரி செய்வோம்..அதுப்போலதான் .
பிரச்சனையே இல்லை..எங்க கம்பெனி செம்மன்னு எவ்ளோ கஸ்டமர் feedback பாருங்க?
ஆமா..எல்லா இடத்திலும் ஐந்து நட்சத்திரம் ரிவிவ் வாங்கிய நிறுவனம்..ஆனால் ஆடிக்கொண்டு இருக்கிறது..பல மில்லியன் டாலர்கள் மதிப்பு..அவர்கள் பார்ட்னர்களையும், அவர்களுடன் இணைந்த வியாபாரிகளையும், வேலை செய்பவர்களையும் சரியாக நடத்தாதால் போட்டி கம்பெனி வியாபாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு உள்ளே வர இடமளித்துவிட்டனர்.
360° organizational study செய்து இருந்தால் வியாபாரிகளை அழைத்து பேசி சரி செய்து இருக்கலாம்.
திருப்தி இல்லாத எம்ப்ளாயிஸுக்கு டிரைனிங் அளித்து சரி செய்து இருக்கலாம். அல்லது இன்செண்டிவ் கொஞ்சம் கொடுத்தோ, மரியாதை அளித்தோ மகிழ்ச்சி அடைய வைத்திருக்கலாம்.
திருப்தி இல்லாத கஸ்டமர்களை விட திருப்தி இல்லா வியாபாரிகள் 50 மடங்கு ஆபத்தானவர்கள்..வேலை செய்பவர்கள் 100 பங்கு ஆபத்தானவர்கள்.அப்போ அப்போ அங்க அங்க சரி செய்யனும் .
எல்லாரும் மகிழ்வா இருக்காங்க எங்க நிறுவனத்தில்..
அப்போ இது உங்களுக்கு தேவை இல்லை. இருப்பினும் சிறப்பா இருக்கா? இன்னும் மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? எந்த துறை மிக சிறப்பாக இருக்கு? எந்த துறைக்கு கவனம் கொடுக்க வேண்டும்..போன்றவற்றை கண்டறியலாம்.
நீங்க என்ன செய்வீங்க?
ஹெப்டா குழுவில் சிலர் பிசினஸில் மிக அனுபவமுள்ளவர்கள். படித்தவர்களும். சர்வே ஆரம்பக்கட்டம் ..அதும் every company is unique, every system is unique.. என்பதில் ஆழமாக நம்பிக்கை வைத்துள்ளவர்கள்..விவரங்கள் எடுத்து அதற்கு ஏற்றார் போல் தயார் ஆவது எளிதில்லை..
கடைசியில் சர்வே செய்ய எல்லாம் தயார் செய்து தனிப்பட்ட முறையில், ஆன்லைன் எல்லா இடங்களிலும் கேட்டு, தகவல் வாங்கி.
அதுதான் நாங்க செய்யறோமே,?
அப்புறம்?
அது மட்டும் தெரியாது..
ம்ம்க்கும்..சரி சொல்றேன்..data interpretation மிக முக்கியம். அதற்கு அனுபவமிக்க தகுதி தேவை. அதற்கான டீமில் சர்வேக்களை மொழி பெயர்த்து ரிசல்ட் தருவார்கள்.. ஒவ்வொரு விஷயத்தில் உள்ள அர்த்தங்கள் அவர்களுக்கு புரிபடும்.
அதை வைத்து எப்படி டீர்ட்மெண்ட் தருவது..
ஹாப்பாடா..டெஸ்ட் வேணும்னு ஒத்துக்கறிங்க இல்ல .அதுவே போதும். அடுத்தது சொல்றேன். முதல்ல Study செய்வோம்..
பெரு நிறுவனங்களுக்கும்தான். ஆனால் நாங்க பெரும்பாலும் நோக்குவது..மிட் செக்மண்ட் மற்றும் குறு நிறுவனங்கள்.அவர்களுக்கு மிக அதிக தேவை இருக்கு. இப்பொழுது சிலர் அணுகி உள்ளார்கள். சில முடியும் தருவாயில்..
முதல் மாதமே ஹெப்டா மேல் நம்பிக்கை வைத்து ஸ்டடி செய்ய வாய்ப்பு கொடுத்த நிறுவனங்களுக்கு கோடி நன்றிகள்.
ஆர்கனைஷேஷனல் ஸ்டடி என்பது...சிம்பிளா 360° நிறுவனத்தை ஆய்வு செய்யும் ஒரு விஷயம் .
Back end ல் பெண்ட் எடுக்கும் வேலைதான். ஆர்வம் இருக்கும் இடத்தில் அது வேலையாக கூட தோன்றுவதில்லை..
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2019..

புதிய ஆண்டு என்னும் புதிய சிந்தனையுடன் 
எல்லாம் புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு 
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் இனிய நாளாக அமையட்டும்.

என்றும் அன்புடன் சிவக்குமார் 


Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet


உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 

அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681