செவ்வாய், 4 செப்டம்பர், 2018





செப்டம்பர் மாதம் என்றாலே ...மனதில் உற்சாகம் கொள்ளும் மாதம் ..என்னை வாழ்வில் உயர செதுக்கிய ஆசிரியர்கள்  ..எனக்கு அப்பா என்ற பதவி உயர்வு கொடுத்த மாதம் என் செல்ல ஷியாம் ....முதலில் வழிகாட்டிய அப்பாவும் ஒரு ஆசிரியர்தான் (படிக்காத மேதை )கல்வியாளர்களுடன் இருந்ததால் தான் ...வாழ்வில் முன்னேற முடிந்தது ...

எனது பார்வையில் ஆசிரியர் தினம்
"ஆசிரியர் பணி அறப்பணி
அதற்கே உன்னை அர்ப்பணி".
என்பதை நாம் அறிவோம்!
அதற்கு விளக்கம் அளிக்க அவசியம் இல்லை. மனிதனை மனிதனாக மாற்றுவதும் மனிதன் வளர உரமாக செயல்படுவதும் ஆசிரியர்கள் என்று சொன்னால் அது மிகையாகது.
"எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன் மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் .

"குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரிஇல்லாத கடிதத்திற்குச் சமமானது".என்பார்கள் இதே போலத்தான் மாணவர்கள் சமுதாயத்தை ஒரு இலட்சயப் பாதைக்கு அழைத்து செல்பவர்கள் ஆசிரியர்கள். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதை கூறக் கேட்டிருக்கிறோம் அந்த வகையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணிகள் பாராட்டக்குரியது என்பதை யாரும் மறுக்க முடியாது.தற்பொழுது உள்ள பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் வீட்டு வேலைகளைச் செய்ய சிரமமாக இருக்கிறது என்று கருதி பள்ளிக்கு அனுப்பும் அவல நிலைதான் உள்ளது. மேலும் சொல்லப்போனால் குழந்தைகள் பெரியவர்கள் ஆகி கை நிறைய ஊதியம் பெறும் வரை பெற்றோர்களுக்கு பிள்ளைகள் பாரம்தான்.

ஓரிரு குழந்தைகளையே பராமரிக்க  முடியவில்லை பெற்றோர்களுக்கு.பல குழந்நைகளுக்கு தாயாகவும்,தந்தையாகவும்,குருவாகவும் திகழ்பவர்கள் ஆசிரியர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.ஒரு நாட்டின் வளர்ச்சி மாணவர் கையில் உள்ளது.அந்த மாணவர்கள் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் தான் அடித்தளம்.
அத்தகைய மதிப்பு மிக்க நமது ஆசிரியருக்கு ஒரு சல்யூட்(salute).

எல்லா விதமான விஷேசங்களுக்கும் ஒரு தினம் உண்டு. அதுபோல செப்டம்பர் 5ம் தேதி  ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகறது.உலகில் மற்ற நாடுகளில் பல்வேறு மாதங்களிலும் பல்வேறு தேதிகளிலும் ஆசிரியர்கள் தினத்தை கொண்டாடுகிறார்கள்..நமது நாட்டில் ஏன் செப்டம்பர் 5 ஐ ஆசிரியர்கள் தினமாக கொண்டாடுகிறார்கள் என்று சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
சற்று தெரிந்து கொள்ளலாமே.!

நமது தாய்நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் என்பது நமக்கு தெரியும்..இவர் திருத்தணியில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். தம் 20 தாம் அகவையிலேயே முதுகலைப் பட்டத்தில் ஆய்வு கட்டுரைகள் எழுதி தனது ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றார். இவர் ஒரு தத்துவ மேதை,சிறந்த கல்வியாளர். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும், UNESCO வில் இந்திய பிரிதிநிதியாக  பங்கு கொள்ளவும்,ரஷ்யாவின் இந்திய தூதராகவும் பணியாற்றினார்.

ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர்  அவரது பிறந்த நாளை கொண்டாட அனுமதி கேட்ட போது அவர் கூறினார்."எனது பிறந்த நாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதை விட அதையே ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடினால் நான் பெருமையாக உணர்வேன் என்றார். அவரது வேண்டுகோளுக்கினங்க 1962 ஆம்  ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம்  கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இவர் 42 டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதா, பிதா, குரு என்றுதான் சொல்வார்கள் .மாதா, பிதா, டாக்டர் அல்லது எஞ்சினியர் என்று சொல்வதில்லை..அத்தகைய நமது குருக்களை வணங்குவது கடவுளுக்கு நிகரானது என்று எனது ஆசிரியர்களை நினைத்து நான் எழுதி முடிக்கிறேன்..

கற்றல்- கற்ப்பித்தலில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்  .
.. .என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக