ஷ்யாமின் முகம் மலர்ந்த சத்தம்..,!!! ....19.09.2008..(உடுமலைப்பேட்டை )
குழந்தைகளிடம் அளவுக்கதிகமான அன்புகொண்ட தகப்பனின் சற்று நீண்ட வெளியூர் பணிசெய்வது மிகவும் கொடுமையானதே.....அன்பு மகனின் பாசம் மனதில் நினைத்துக்கொண்டு சிறுவயது விளையாட்டுகளை நினைக்கும்போது கண்கள் குளமாக்கி கொண்டே இருக்கும் ...
இன்றைய நாள் ..எனக்கு தூங்கா மலரும் இரவு.,
ஆம்., என் ஷ்யாமின் .,
முகம் மலர்ந்த சத்தம்..,!!!
ஷ்யாமின் பிறந்த தினம் முதலே உற்சாகம் தொற்றி கொண்டது ...பிறந்த உடன் பிஞ்சு கரங்களை பிடித்து பார்க்கும் பொழுது பட்டாம்பூச்சியின் மெல்லிய இதழ்கள் போன்று மிருதுவாக இருக்கும் ..இரண்டு கைகளில் மெல்லிய வெல்வெட்டு துண்டுடன் மார்போடு அனைத்துக்கொண்டு ஒரு கையினால் ஷ்யாமின் தலையை கீழே சாயாமல் சிமிட்டும் கண்கோளடு பார்ப்பது ஒருமுறை தான் ..வாழக்கையில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்துவிடும் ..குழந்தைகளிடம் அளவுக்கதிகமான அன்புகொண்ட தகப்பனின் சற்று நீண்ட வெளியூர் பணிசெய்வது மிகவும் கொடுமையானதே.....அன்பு மகனின் பாசம் மனதில் நினைத்துக்கொண்டு சிறுவயது விளையாட்டுகளை நினைக்கும்போது கண்கள் குளமாக்கி கொண்டே இருக்கும் ...
நான் வீட்டில் இருந்தால் நான் தான் அவன் உலகம் ...மாலைநேரம் வந்தால் எப்படியும் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டுருப்பான் ..இரண்டு சக்கர வாகனத்தில் கொஞ்ச தூரம் பட்டாம்பூச்சி சிறகுகள் விரித்து பயணம் செய்துவருவோம் ..வடவள்ளி ..சுற்றி இருக்கும் பைமெட்டல் பேரிங் வழியாக வடவள்ளி பேரூந்துநிலையம் வழியாக கஸ்தூரிநாயக்கன் பாளையம் சென்று வான ப்ரஸதா மற்றும் தியான ப்ரஸதா வழியாக இயற்கை கொஞ்சும் மரங்கள் ..அதை ஒட்டிய விவசாய தோட்டங்கள் வழியாக வீடுவந்து சேர்வோம் ..அப்பொழுதும் வீட்டிற்க்குள் போக மனம் வராது..உன்னுரு ரௌண்ட பா ..ப்ளீஸ் ..ப்ளீஸ் கொஞ்சும் கெஞ்சல்கள் நினைவுகள் மலருந்துகொண்டே இருக்கும் ..
காலையில் அப்பா ஆய் வருதுப்பாவில் ஆரம்பித்து இரவு சிறு சிறு கதைகள் பேசி தூங்கவைப்பது வரை அவனுக்கு எல்லாமே நான் தான்.....அதுவும் தொட்டில் குழந்தையாக இருக்கும்பொழுது இரண்டு மணிநேரம் ..மூன்று மணிநேரம் தொட்டில் ஆட்டிவிட்டு கைவலிக்கிறது என்று மெதுவாக தூக்கிட்டானா என்று பார்த்தால் கொட்ட கொட்ட முழித்து பொக்கைவாயால் சிரித்துக்கொண்டிருப்பான்...அதைப்பார்த்தவுடன் கைவலிக்க தொட்டிலாட்டியது எல்லாம் வலியும் மறந்துவிடும் ..
மொபைலில் டாக்கிகங் டாம் பொம்மையை காணும் பொழுதெல்லாம் மகனின் நினைவுகள் வந்து செல்லும் எனக்கு இப்படியிருக்க..எனது கணிணியில் விவரம் தெரியும் பொழுது அவனுக்கு பிடித்த கதை பாடல்கள் ..அதிகம் குழந்தை பாடல்கள் மலையாள மொழியில் அதிகம் இருந்தது ...சிரித்துக்கொண்டு இருப்பான் ..என்னுடைய இரவு நேர அலுவுலக பணியை கொஞ்சம் காலம் ஆக்கிரமித்துக்கொண்டான் ..
பணியின் காரணமாக மகனை பிரிந்திருக்கும் நாட்கள் மகனின் நினைவுகள் வரும் எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது...ஆனால் மகனுக்கு என் நினைவுகள் வரும் பொழுதெல்லாம் அவனுக்கு கஸ்டமாய் இருந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்.....
ஷ்யாமுக்கு நான் தான் அகிலமும் என்னை பிரிந்திருக்கும் காலங்கள் அது இன்னும் பெரும் துயரத்தை தந்திருக்கும்......
ஒரு தந்தையைப் பொருத்த வரை மகனின் இளவயது குறும்புகள் பேச்சுக்கள் என்பது நினைத்து நினைத்து குதூகலப்படும் விஷயம். எங்கேனும் அவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனே பெற்ற மகனும் அவனது குறும்புகளும் மனதில் தோன்றி ஒரு புன்சிரிப்பை தற்செயலாக செயலாய் வரவழைக்கும்.
எப்பொழுது சனி ..ஞாயிறு தினங்கள் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்போம் நானும் ,ஷ்யாமும் ..கோவையின் சனிக்கிழமை காலை துவங்கும் நேரு மைதானம் ..வ .உ .சி ,மைதானம் ..GE DE நாயுடு அருங்காட்சியகம் ,GE DE Car அருங்காட்சியகம் ..மதியம் கீதா கபே ..மதிய உணவு ..சிறுது நேரம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகள் படிக்கும் புத்தக அலமாரி ..மாலை நேரம் வா .உ சி சிறுவர்பூங்காவில் சுற்றி குதிரை சவாரி ...சிறுவர் பூங்காவில் சென்று ..தூரி விளையாட்டு ,சறுக்கு விளையாட்டு ..வீடு வந்து சேர்வதற்கு உற்சாகம் மிகுதியாக இருக்கும் ..ஆனால் ஷியாம் ..இன்னும் கொஞ்சம் விளையாடி விட்டு செல்லலாம் என்று அடம் ..பின் சமாதான படுத்தி அழைத்துவருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ..இப்பொழுது வளர்ந்துவிட்டான்..நண்பர்கள் வட்டம் சேர்கிறது ..வாழ்க்கை சூழல் ..பிறந்தது முதல் ..10 வயது வரைதான் அப்பாவின் தேவை ...நாமும் அதற்கு தகுந்த முறையில் தூரத்தில் இருந்து நம் கண் அசைவில் மட்டும் பார்த்துக்கொள்ளவேண்டும் ..வளர்கிறான் என்று மனதை நாம் தான் கொஞ்சம் திடப்படுத்திக்கொள்ளவேண்டும் ..
என்னதான் இருந்தாலும் அந்த சிறுவயது நினைவுகள் மலர்ந்துகொண்டே இருக்கும் ..உள்ளே பொங்கி வரும் அன்பு பாசம் காதல் எல்லாவற்றையும் பெரும் போராட்டத்தோடு அடக்கிக் கொண்டு வெளியில் கடுமையும் கண்டிப்புமாக மகனை பெரிய ஆளாக்கத் துடிக்கும் ஒவ்வொரு தந்தையின் கஷ்டமும் அரை பிரசவத்திற்கு சமம்....தற்காலங்களில் நம்மை சுற்றி நடக்கும் சூழ்நிலைகள் ..பாசம் நேசம் ..சொந்தங்களின் உறவுமுறை ,நண்பர்கள் வட்டம் ..கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறதா ..இல்லை இன்னும் பாசப்பிணைப்புகள் கூடுமா ...வாழக்கை பயணம் நகர்கிறது ..ஷியாம் பிறந்தது முதல் சுற்றுப்பயணங்கள் கோவை ..பெங்களுரு ..திருவனந்தபுரம் ..உடுமலை ..கார் பயணங்கள் .அதிகம் ஷியாம் மன தையரியத்துடன் வளர்வதற்கு மிக பயனுள்ளதாக இருந்தது .. குழந்தை வளர்ப்பு சில வார்த்தைகள்..! குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம்.தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்! மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதனங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்! இன்றோடு 10 வயது முடிந்து 11 வயதை தொடும் ஷ்யாமுக்கு என் அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக