சனி, 22 செப்டம்பர், 2018

இன்று அருமையான ஆன்மீக புரட்டாசிமலை  பயணம் ....தளிஜல்லிபட்டி கரட்டுபெருமாள் கோவில் -உடுமலை )

இன்று காலை முதல் சனிக்கிழமை ..சின்ன கரட்டு பெருமாள் கோவில் ..தளி எத்தலப்பா நாயக்கர் வணங்கிய பெருமாள் கோவில் ..உடுமலையில் இருந்து 13 கிலோமீட்டரில் உள்ளது ..தளி பாளையக்காரர் வணங்கிய பெருமாள் கோவில் உள்ளது ..வருட வருடம் புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது ..முதலில் சிறுகுன்று மலையில் சிறிய கோவிலாக இருந்தது ..ஜல்லிபட்டியில் இருக்கும் நமது சொந்தங்கள் அதை விரிவுபடுத்தி எனக்கு தெரிந்து 30 வருடங்களுக்கு முன் கழுதையில் பொதி சுமந்து மணல் ,செங்கல் எடுத்த சென்ற நினைவுகள் இப்பொழுதும் மலரும் நினைவுகளாக உள்ளது ..நம் புலவர் பழனிசாமி மாமா(மறைவு ) அவர்கள் ,அம்போதி(மறைவு ) ,கண்ணையன் (பொம்மயன்கோவில் பூஜாரி )பொன்னுசாமி ,மலையாண்டி சாமி (மறைவு ),வணிகவரித்துறை பரம சிவம் (மறைவு ),தர்மலிங்கம் ..இவர்கள் எல்லாம் 30 வருடங்களுக்கு முன்னாலே கோவிலை பராமரிப்பு செய்து செய்தும் வழிபட்டு வந்துள்ளார்கள் ..கோவில் முன் தற்பொழுது உள்ள கல்வெட்டில் இன்னும் வாழந்து கொண்டுள்ளார்கள் ..தற்பொழுது திருப்பூர் தொழிலதிபர் ராமகிருஷ்ணன் அண்ணன் அவரால் கோவில் முன்புறத்தில் அழகான அமரும் இடமாக அமைத்து கொடுத்து உள்ளார்கள் ..இன்று மதியம் அமர்ந்த இருந்து பொழுது மேல்புறத்தில் .நன்றகா வர்ணம் பூசியிருந்தார்கள் ...யார் என்று கேட்டேன் ..உடுமலையில்  ஜெய்வந்த  எரிவாயு விநியோகிஸ்தர் (JAYVANTH GAS AGENCIES )...இவர் வணிகவரித்துறை பரமசிவம் அவர்களின் புதல்வர் ஆவார் ,அவரின் தந்தை செய்த கோவில் நற்பணிகளை அவருடைய மகனார் செய்வது சிறப்புக்குரியது வாழ்த்துக்கள் ..இன்று புலவர் பழனிசாமி மாமா அவர்களின் நினைவாக கோவில் அறங்காவலர் புதல்வர் .திரு .ஆனந்த் அவர்களுக்கு ..நமது தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் நூலை பரிசளித்துவிட்டு ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக பெருமாளுக்கு அர்ச்சனை செய்துவிட்டு திரும்பியது மிக்க மகிழ்ச்சி ..இனி புரட்டாசி சனிக்கிழமை தோறும் ..நமது பாளையங்களை ஆண்ட நமது முன்னோர்களை வழிபட்டு .நமது இளைய தலைமுறைக்கு நமது வரலாறுகளை பகிர வேண்டியது எனது தலையாய கடமை ....என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக