வியாழன், 13 செப்டம்பர், 2018

அருமையான பதிவு ..உங்களின் ஆதங்கம் ..சமுதாய அக்கறை ..எனக்கு புரிகிறது ...ஒரு சில இளைஞர்கள் என்று சொல்லலாம் ...தற்பொழுது நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையில் ...86 உறுப்பினர்கள் உள்ளனர் ..16 பேர் மற்றும் அன்றாடம் தோட்டவேலைக்கு..வாகன ஓட்டுநர்களாக  சென்று வருபவர்கள் (படிக்காத மேதைகள் )இன்றும் நல்ல தகவல்கள் ,அறக்கட்டளைக்கு அளப்பரிய பணியை செய்துகொண்டுள்ளார்கள் ...மற்ற உறுப்பினர்கள் அனைவரும் படித்த நல்ல தனியார் நிறுவனம் ,அரசு வேலையில் ,வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் ,மற்றும் பெண் குழந்தைகளும் சளைத்தவர்கள் இல்லை ..நமது அறக்கட்டளையில் பொறுப்பான பதவியில் இருக்கிறார்கள்..விளம்பரம் இல்லாமல் அமைதியாக பணியாற்றி கொண்டுள்ளார்கள் ..அதிகம் வெளியில் தெரிவது ...அந்த நாலு பேருதான் அறக்கட்டளையில் செயல்பாடுகள் போன்று தெரிகிறது ..நமது கோவை -திருப்பூர் கம்பள சொந்தங்கள் ..கல்வி ,வேலைவாய்ப்பு ..ஆகியவற்றில் யாரும் வழிநடத்த வேண்டிய அளவில் இல்லை ..ஏன் என்றால் பலதரப்பட்ட வளர்ந்த சமுதாயத்தினருடன் பங்கெடுத்து அவர்களின் வளர்ச்சியை பார்த்து நாமும் வளர்ந்து கொண்டுதான் உள்ளோம் ..வரும் அக்டோபர் மாதம் 7 ம் தேதி ..திருமூர்த்தி மலையில் நடைபெறும் பொதுக்குழுவிற்கு வாருங்கள் ...நம் சொந்தங்களின் சந்திப்பை பார்க்கலாம் ... நமது பொதுக்குழுவிற்கு ..அரசு துறையில் பணியாற்றி கொண்டிருக்கும் இரண்டு சொந்தங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வருபவர்கள் ..நமது வரலாற்று சிறப்புமிக்க கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் ...வரலாற்று நூலை வெளியிடும் விழாவாகவும் இருக்கும் ...நன்றி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக