ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

உடுமலையில் ..மேற்குத்தொடர்ச்சி மலை ...

இன்று ஞாயிறு மாலைநேரம் ..அழகான பாராட்டு விழா ...
16.09.2018 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு ஜாமிஆ பள்ளிவாசல் கூட்ட அரங்கில்
உடுமலை நாராயணகவி மணிமண்டபத்திற்கு எதிரில் 
இயக்குநர் லெனின்பாரதி,  நடிகர் அரண்மனை சுப்பு அவர்களுக்கு அருமையான உடுமலை மக்களின் பாராட்டு அருமையான மேற்குத்தொடர்ச்சி மழையின் சாரல் போன்று .
முனைவர் ம.மதியழகன் தலைமையிலும்.முனைவர் மஞ்சுளா வரவேற்புரையுடன் தொடங்கியது ..மறைந்த முனைவர் இந்திரஜித அவர்களின் நினைவுகளுடன் நடந்தது மிக்க மகிழ்ச்சி ..ஓளிப்படக்கலைஞர்களின் சங்கத்தின் 
தலைவர் திரு. மஜீத் அவர்கள் ஒளிப்பதிவு பற்றி பேசியது மிக அருமை .
நிகழ்வில் கருத்துரையாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் தோழர் எஸ்.ஆர்.மதுசூதனன் அவர்கள் பேசும்போது நமது மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் வனங்களை தங்களின் உயிரைவிட   நேசித்து பாதுகாத்து வருவதையம் ,அவர்கள்மேற்குத்தொடர்ச்சி மலை  எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அழகா எடுத்துரைத்தார் ..திருப்பூர் குறும்பட இயக்குநர் திரு. பாரதிவாசன் அவர்கள்,திரு. பாரதிவாசன், கூத்துப்பட்டறை ஆசிரியர் சுரே!ஸ்வரன் அவர்கள் ,கவிஞர் இளையபாரதிஅவர்கள் ,உடுமலை நாராயணகவி புத்தகத்தை .திரு .ஜவஹர் அவர்கள் இயக்குனர் லெனின் பாரதி ,நடிகர் அரண்மனை சுப்பு அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் ..,உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் மதிப்பியல் தலைவர் ..சுபாஷ் கிருஷ்ணசாமி அவர்கள் ,தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் .நூலை சேனாபதி பத்திரிகை நிறுவனர் கணியூர் ப்ரூக் அவர்களும் ,ஊடகவியலாளர் ரகுமான் அவர்களும் இயக்குனர் லெனின் பாரதி அவர்களுக்கு வழங்கி உடுமலை மண்ணுக்கு புகழ் சேர்த்தனர் ..நன்றியுரை பேராசிரியர் கண்டிமுத்து அவர்களுடன் பாராட்டு விழா நடைபெற்றது இன்றைய ஞாயிறு அருமையாக அமைந்தது .
நீண்ட இடைவெளிக்குப்பிறகு திரைத்துறையைச்சார்ந்த நிகழ்வு உடுமலை மண்ணில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது உடுமலை மக்களின் கல்வியாளர்கள் ,சமூகவியாளர்கள்,பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியாளர்கள் ,விவசாய மக்கள் கலந்துகொண்டு பாராட்டும் விழாவாக நடைபெற்றது .
ஏத்துனையோ பணிச்சுமைகள், எவ்வளவோ
மன அழுத்தங்கள் அத்தனைக்கும் ஒரு இரண்டு மணி நேர நிகழ்வு மனதிற்கு உற்சாகமா இருந்தது ..
விழாவை அருமையாக நடத்திய
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் மற்றும்
உடுமலைப்பேட்டை ஒளிப்படக்கலைஞர்கள் சங்கத்தினர் அனைவர்க்கும் நன்றிகள் ..





இறுதியாக இயக்குநர் லெனின்பாரதி. ஓளிப்படக்கலைஞர் தேனி ஈஸ்வர், நடிகர் அரண்மனை சுப்பு ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக