ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

இன்றய ஞாயிறு ...ஈரோடு வனிதா அத்தை ...குழந்தைகளுடன் கதை சொல்லி...மரம் வளர்ப்பும் ...(கிளை நூலகம் -தளி ஜல்லிபட்டி )

அருமையான காலை நேரம் குழந்தைகளுடன் கதை சொல்லி நிகழ்ச்சி என்றவுடன் மனதிற்கு மகிழ்ச்சி ...இப்போது இருக்கும் அதிவேக தொழில்நுட்பம் வளர்ச்சியின் அசுர வளர்ச்சி தாக்கம் ...குழந்தைகளிடம் இயற்கை மற்றும் கதை சொல்லலின் மறந்த காலமாக உள்ள நிலையில் ..மறுபடியும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நூலகர் லக்ஷமணசாமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ..தளி ஜல்லிபட்டி குழந்தைகள் கடிதம் எழுதி செல்லமாக அழைக்கும் கதை சொல்லி வனிதா அத்தைக்கு என்று அழைத்து கதையும் கேட்டது அருமை ...பள்ளிக்கு வெளியே உள்ள கருத்தாளுமைகளின் அறிவாற்றலை எவ்வாறு நாம் குழந்தைகளுக்கு பயன்படுத்துவது?
குழந்தைகளை கதை மூலம் தொடர்பு கொண்டு கற்றலின் தேடல் சுவாரசியத்தோடு வைத்திருத்தல் எவ்வாறு?
கதையும் விளையாட்டுமாய் உங்கள் வகுப்பறையை வசப்படுத்துவது எவ்வாறு?
வாழ்வின் மீதான நம்பிக்கையையும் மனிதத்தின் பண்பினையும் குழந்தைகளோடு பகிர்வது எப்படி? குழந்தைகளிடம் கதையின் மூலம் அழகாக மரம் வளர்ப்பு பற்றியும் கூறி அருமையான நிகழ்வாக அமைந்தது ...மரங்களின் பயன்களையும் குழந்தைகள் பதில் சொல்லி மரங்களை எப்படி பாதுகாக்கவேண்டும் உணர்த்தியது அருமை ..கதை சொல்லி முடிந்தவுடன் ..குழந்தைகளுடன் ஜல்லிபட்டி ஊரின் முடிவில் இருக்கும் நல்ல தண்ணீர் ஊற்று கிணறுக்கு சென்று ஆரம்பிக்கும் சாலைகளின் ஓரத்தில் ..மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்துவரும் ஆற்று படுகை ஓரத்தில் மரங்களை குழந்தைகளோடு பறவைகளுக்கும் மக்களுக்கு பயன் தரும் நாவில் பலமரங்களை நற்று பயனுள்ள நிகழ்வாக கொண்டாடியது மகிழ்ச்சி .. இன்றய ஞாயிறு குழந்தைகளுடன் பயனுள்ள நிகழ்வாக அமைந்ததில் மகிழ்ச்சி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..





ஈரோடு பட்டாம்பூச்சி  வனிதா மணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக