வெள்ளி, 28 செப்டம்பர், 2018

தொழில்நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் தந்தையாக மாறுவதற்கான டிப்ஸ்...

இன்றைய கால கட்டத்தில் நகரத்தில் வாழும் தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளுடன் பிணைப்பை அதிகரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.
இணையதளத்தில் ஃபார்ம்வில்லே விளையாட்டை உங்கள் மகனுடன் போட்டி போட்டு கொண்டு விளையாடும் தந்தையா நீங்கள்? இரவு உண்ணும் போது சந்தையில் புதிதாக வந்துள்ள ஸ்மார்ட்ஃபோன் பற்றி பேசி கொண்டிருக்கும் தந்தையா நீங்கள்? அப்படியானால் நீங்கள் ஒரு நவீன தந்தை என்ற பட்டத்தை பெறுவீர்கள். இவ்வகை தந்தைகள் தங்கள் குழந்தைகளுடன் மிகவும் உற்சாகத்துடனும், பிணைப்புடனும் திகழ்வார்கள்.
* புதிய காட்ஜெட்ஸ் மற்றும் கிஸ்மொஸ் பற்றிய விவரங்களை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை இணையதளத்திற்கு சென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
* உங்களுக்கு ஏதாவது தொழில்நுட்ப வார்த்தை புரியவில்லை அல்லது அதில் சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் உங்கள் குழந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
* உங்கள் குழந்தை வீடியோ கேம்ஸ் அல்லது கைப்பேசி வாங்க கடைக்கு சென்றால் நீங்களும் அவர்களுடன் செல்லுங்கள்.
* உங்கள் குழந்தைகளுடன் உரையாட சமுதாய வலைதளங்களை பயன்படுத்துங்கள். இருப்பினும் உங்கள் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டில் நீங்கள் ஓரளவுக்கு மேல் தலையிடக் கூடாது.
*தங்கள் குழந்தைகளுடன் உரையாட, பத்தில் ஏழு பெற்றோர்கள் சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.
*இந்த எண்ணிக்கையை இந்தியாவில் எதிர்ப்பார்க்க முடியாவிட்டாலும் கூட, நம் நாட்டு நகரங்களிலும் பல பெற்றோர்கள் இன்று சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சொல்லப் போனால் இன்றைய டீனேஜ் குழந்தைகள் சமுதாய வலைதளங்களில் தங்களுடைய பெற்றோரையும் நண்பர்கள் பட்டியலில் சேர்கின்றனர்.
*இருப்பினும் தங்கள் குழந்தைகளுடன் சமுதாய வலைதளங்களில் உரையாடும் பெற்றோர்கள் அவர்களுக்கான வரைமுறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தைகளுடன் பிணைப்பை ஏற்படுத்துவது எப்படி?
*குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை விட்டு விலகி பள்ளிக்கு சென்று அது சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். இருப்பினும் பொது அறிவு மற்றும் விருப்புகள் ஒரு உறவை சிறப்பான முறையில் மேம்படும். அதனால் தொழில் நுட்பத்தை கொண்டு குழந்தைகளுடன் பிணைப்பை உண்டாக்க முற்படும் போது அது குழந்தைகளையும் ஊக்குவிக்கும்.
என்றும் அன்புடன் உடுமலை ஷியாம் சுதிர் சிவக்குமார் -9944066681......

புதன், 26 செப்டம்பர், 2018

கம்பள விருட்சம் அறக்கட்டளை -இரண்டாம் ஆண்டு ...பொதுகுழு அக்டோபர் 7..2018..

வளரும் விருச்சத்தின் விழுதுகள் ....1

திரு .பெ .செந்தில் ராமன் ...(இன்றைய அறிமுகம் உடுமலைப்பகுதியிலிருந்து )
அழைப்பு எண் :9789491415....

கோவை மாவட்டம் பத்திரிகை உலகில் செல்லமாக செந்தில் ராம் ... என்று அழைக்கப்படுபவர்.இவர் பிறந்தது உடுமலை அருகே உள்ள கம்பாளப்பட்டி கிராமம் . அப்பா பெயர் :திரு .பெரியசாமி ..தாயின் பெயர் .திருமதி .சரஸ்வதி அம்மாள்(late ) செந்தில் ராம் அவர்களுக்கு இரண்டு சகோதிரிகள் உள்ளனர் .அவரின் பெயர் .திருமதி .லீலாவதி ..ஆவின் செயலாளர் ..ஜெகதீஸ்வரி -lic ஏஜென்ட் ..சென்ட்ரல் வங்கியின் ரெப்ரெசென்டடிவ் வாக ..உடுமலை அருகே உள்ள ராஜாவூரில் வசித்து வருகிறார்கள் ...அப்பா .தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணியாளராக பணியாற்றி ஒய்வு பெற்று உள்ளார் .வேலை நிமித்தம் காரணமாக ,தன்குழந்தைகளுக்கு நல்ல கல்விக்கு ஆகவும் .அடிவள்ளி கிராமத்தில்..வசித்து வருகிறார்கள் .
செந்தில் ராம் .. படித்த பள்ளி கட்டுப்பாட்டிற்கு ,கல்விக்கும் பெயர் பெற்ற ஏ .நாகூர் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்புமுடிய படித்து ..தொழில் கல்வி கற்கவேண்டும் என எண்ணி ..இப்பொழுதும் உலக புகழ்பெற்ற பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்-இல் . டிப்ளமோ ஜவுளி தொழில்நுட்பம்(DTT )படித்து முடித்துள்ளார் ..அவர் இத்துறையை எடுக்க காரணம் ..உடுமலை பஞ்சாலைகளுக்கு உலகபுகழ்பெற்று விளங்கியது.வேலைவாய்ப்பு அதிகம் இருந்ததால் .படித்து பஞ்சாலையில் இரண்டாண்டு காலம் .மேற்பார்வையாளராக பணிபுரிந்துவந்தார்....இருந்தாலும் ஒரு கட்டத்தில் நம் சமுதாயத்திற்கும் ,பொதுமக்கள் பணி சார்ந்த சேவை செய்யவேண்டும் என்ற ஆசை சிறு வயதிலேயே துளிவிற்று இருந்தகாரணத்தால் ..அதற்கு பத்திரிகை துறைதான் சரியான தேர்வு என்று முடிவெடுத்து,அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 

journalism..படித்து ..அவர் தந்தையின் வழிகாட்டுதலின் படி பத்திரிகை துறையில் ..முதன் முதலாக உடுமலைப்பகுதிக்கு நிருபராக சேர்ந்தார் ..2006 வருடம் முதல் ..இந்நாள் முடிய 11 வருடம் வெற்றிகரமாக பணியாற்றி கொண்டுஉள்ளர் ..இவருக்கு ..தமிழ் இந்து ,தினகரன் ,இன்னும் புகழ்பெற்ற பத்திரிகை வாய்ப்பு வந்தும் ..உடுமலையின் மேல் பற்று காரணமாக மறுத்து ..தினமலர் பத்திரிகையில் பணியாற்றி கொண்டுஇருக்கிறார் .கோவை ,பொள்ளாச்சி ,உடுமலை பகுதிக்கு சுட ,சுட, செய்திகளை அளித்து பெயர் பெற்று  உள்ளார் ..அதுவும் உடுமலை உள்ளூர் செய்தியை மண் மனம் மாறாமல் செய்திகளை,நடு நிலையோடு அளித்துக்கொண்டுள்ளார் ....தனக்கென்று தனித்துவம் பெற்று திகழ்கிறார் ...இவர் நம் சுற்றி இருக்கும் கோவில்கள் ,பழமைவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ,கண்டியம்மன் ,சிஞ்சுவாடி ,வல்லகொண்டம்மன் ,மலைக்கோவில் ,திருமூர்த்தி மலை ,மையவாடி மாரியம்மன் கோவில் ,உடுமலை மாரியம்மன் கோவில் ,அழகாகாக அதன் வரலாறுகளை எழுதி...நம் சமுதாயத்திற்கு பணியாற்றி உள்ளார் ...அதைவிட விடுதலைப்போருக்கு வித்திட்ட மாவீரர் தளி எதுலப்ப மன்னரின் சிலைகளை மற்றும் ஜல்லிபட்டி தெற்கு பகுதியின் மலைமேல் உள்ள போடி தாத்தா புலிக்கல் வீரர்களின் சிலைகளை கண்டுபிடித்து செய்தியாக வெளியிட்டு ,தொல்லியல் துறை கவனத்திற்கு கொண்டுசென்று சிலைகளை பாதுகாப்பாகவும் ,நம் சமுதாய மக்கள் வழிபடுவதற்கு வழிசெய்துள்ளார்..கம்பள சமுதாயத்திற்கு தான் பணிபுரியும் துறையை பயன்படுத்தி எல்லா மக்களுக்கும் அறியும்வகையில் பணிசெய்துகொண்டுள்ளார் .மக்கள் பணியில் நம் சமுதாயப்பணியையும் வெற்றிகரமாக செய்துள்ளார் ..பணிகள் இன்னும் தொடரும் ..

செந்தில் ராம் அவர்களுக்கு ...காயத்திரி என்ற மனைவியும் இரண்டு பெண் செல்வங்கள் கீர்த்தனா ,மதுமிதா உள்ளார்கள் 

காயத்திரி அவர்களை பற்றி சிறு தகவல் ..ராஜாவூர் என்ற ஊரில் பெரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்..அவரது கல்வி ..Msc ,B E d படித்து ,தன் குழந்தைச்செல்வங்களையும் ,பணியிலிருந்து ஒய்வு பெற்ற தன் மாமனாரையும்  பொக்கிஷமாக பாதுகாத்து கொண்டுள்ளார் ..

காயத்திரி அவர்கள் Msc ,B E d படித்துவிட்டு ..புகுந்த வீட்டின் விவசாய நிலத்தில் தென்னைகளை நற்று முழுநேர விவசாயத்தியும் செய்துவருகிறார் ..இன்றைய பெண்கள் படித்துவிட்டு ,விவசாயத்தை மறந்து ,அலுவுலகம் தான் செல்வேன் என்று அடம்பி டிக்கும் இக் காலகட்டத்தில் விவசாயத்தை வெற்றிகரமாக செய்துவருவதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..மனமார்ந்த வாழ்த்துக்களும் கூட ...,,பத்திரிகை துறை என்பது 24 மணிநேரமாக கண்ணும் கருத்துமாக ,விழுப்புடன் இருக்கவேண்டிய பணி..செந்தில் ராம் அவர்களுக்கு பணியில் முழுசுதந்திரம் கொடுத்து (இப்ப எங்க இருக்கீங்க ,எப்ப வருவீங்க ,அங்க போகணும்,இங்கேபோகணும் என்று ஒரு தொந்தரவும் இல்லாமல் )இந்த சுதந்திரம் இருந்ததினால் தான் ஒரு வெற்றிகரமான பத்திரிகை உலகில் பெயர்பெற்று உள்ளார் ..அதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...இவர் எனக்கு அறிமுகமானதே முகநூலில் தான் ..நம் சொந்தம் என்று தெரியாது ..எனக்கு ஒரு நண்பராகவும் ,மாப்பிளையை என்று செல்லமாக அழைப்பது எனக்கும் பெருமையும்  கூட

மாப்பிளை அழகான ..அறிவான ..துடிப்பு மிக்க 5 இளைய சொந்தங்களை நான் பணிபுரியும்  நிறுவனத்திற்கு அளித்தது பெரும் மகிழ்ச்சி ..பொள்ளச்சி ,கோவையில் பேர் சொல்லும் பிள்ளைகளாக வளர்ந்து வருவது கூடுதல் சிறப்பு ..செந்தில் ராமன் ..கம்பள விருட்சத்தின் செயல்குழு உறுப்பினர் ..வளரும் இளைய சொந்தங்களுக்கு வழிகாட்டி ...

நன்றியுடன் ...

சிவக்குமார் ..9944066681

கம்பள விருட்சம் அறக்கட்டளை 

உடுமலைப்பேட்டை ...

திங்கள், 24 செப்டம்பர், 2018

உடுமலை நாராயண கவி
-முனைவர் க இந்திரசித்து
உடுமலை நாராயணகவி !
நீ
பேருக்கு வாழந்தவன் அல்லன் :
ஊருக்குப் பேர்தந்தவன்
உலகத்தின் உச்சியில்
உடுமலையின் பெயரை
உச்சரிக்க வைத்தவன்
இமயத்தின் உயரத்தில்
உடுமலையின் இதயத்தை
உயர்த்தி வைத்தவன்
நாத்திக மருந்து ஏந்திவந்த
மருத்துவன் நீ !
ஆனால் அந்த ஆத்திக
நஞ்சு அருந்தி வந்த
அயலவர்கள் உன்னை
அவமதித்தார்கள் .
பகுத்தறிவுச் சோலையில்
பாட்டியசைத்து
அறிவியல் கடலில் துடிப்பசைத்து
திரை வானத்தில்
தீந்தமிழால் நீந்தி வந்தவன் நீ !
காசிக்கும் ஊசிக்கும்
இணைப்பு ஏற்படுத்திய
இலக்கிய நயம்
இன்னும் கூட இதயத்தில்
சிலிர்ப்பேறபடுத்துகிறது.
குரங்கிலிருந்து பிறந்த குரங்கை
மறுபடியும் மனிதனாக்கிய
உன்
பாட்டுப்பாடி மலர்ச்சிக கொள்கையை
பாராட்டி மகிழ்கின்றேன்
****************
நாளை...
பகுத்தறிவுப் பாவலர்...
உடுமலை நாராயணகவி
120 ஆம் பிறந்த நாள் விழா..
25.09.2018 செவ்வாய் 
உடுமலை நாராயணகவி நினைவு மணிமண்டகம்,
உடுமலைப்பேட்டை.....

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

இன்றைய  ஞாயிறு கம்பளவிருட்சம் அறக்கட்டளை கூட்டம் ....லிங்கம்மவூர்

கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் மாதாந்திர செயற்குழு கூட்டம் ஊரைச்சுற்றி தென்னை மரங்களும் ,அழகிய துள்ளித்திரியும் நமது குலதெய்வ கால்நடைகளும் ,கோழிகொஞ்சுகளும் ,,காற்றாலைகள் தவழும் லிங்கம்மவூர் ஊரில் பசுமை மாற ஊடுபயிர்களும் ,நம் ஊரைச்சுற்றி இருக்கும் கால்நடைகளை காக்கும் நம் முன்னோர்வாழந்த  வழிபட்ட தாத்தையன் தெய்வங்கள் அமைந்திருப்பது அருமை ...லிங்கம்மவூர் இருக்கும் மாப்பிள்ளை திரு .பாப்புசாமி (கோவை -LMW )அவர்கள் ..இந்த ஊரின் நமது சொந்தங்களுக்கு சரியான கல்வி ,வேலைவாய்ப்புகளில் இருபது வருடங்களுக்கு முன்னேற வழிகாட்டியாக இருந்துள்ளது இந்த ஊரின் சிறப்பு ..தற்பொழுது நமது தலைமுறைகள் திறமை வாய்ந்த பணிகளில் ,கல்விகற்று  வளரும் இளம் சொந்தங்களுக்கு வழிகாட்டிக்கொண்டுள்ளார்கள் நம் மாப்பிளை .கேப்டன் நித்தியானந்தம் ..தனியார் நிறுவனத்தில் பணிசெய்துகொண்டும் ,பணிநேரம் போக விவசாய தொழில் பெற்றோருக்குஉதவியாக உள்ளது பெரும் மகிழ்ச்சி ..விவசாயத்தை மறக்கும் காலத்தில் இருப்பதால் இதை சொல்கிறேன் வாழ்த்துக்கள் மாப்பிள ..இன்று சந்திக்க முடியாத புகைப்பட கலைஞர் திரு .கிருஷ்ணன் அவர்கள்  வசிக்கும் ஊர் .இந்த மாப்பிள ..தினத்தந்தி விநியோகதஸ்தர் ,செய்தி நிருபராகவும் தன்னால் முடிந்த அளவு நம் சமுதாய சொந்தங்களுக்கு உதவி செய்வது மிக்க மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள் மாப்பிள ..அருமை மாப்பிள ..திரு .ஜெகதீஷ் அவர்கள் ,நெடுஞ்சாலை துறையில் பணிசெய்துகொண்டுவருகிறார் ..மாப்பிள சமுதாய சொந்தத்தில் பொது தளத்தில் -அரசு தொழில் அமைப்பில் பொருளாளராக வீறுகொண்டு பணியாற்றி கொண்டிருப்பது மகிழ்ச்சி ..எந்த ஒரு சூழ்நிலையிலும் கோபப்படாமல் ..பெருந்தன்மையுடன் சமுதாய நிகழ்வுகள் ஆனாலும் ,அவர் சார்ந்த அமைப்பானாலும் அழகா அடுத்த கட்டத்திற்கு  எடுத்து செல்பவர் வாழ்த்துக்கள் மாப்பிள ..இன்று செயற்குழு கூட்டத்திற்கு பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு .அசோகன் அவர்கள் ..நன்றிகள் ..செயல்குழு கூட்டத்தில் நடந்த விவாதங்களை கேட்டறிந்தார் ..பொதுக்குழுவிற்கு சில ஆலோசனைகளை தந்து உதவினார் ..நாங்கள் கேக்காமலேயே வருட சந்தாவையும் ,பொதுக்குழுவிற்கு செலவு குண்டான பொறுப்பை ஏற்றுக்கொண்டது அவரின் பெருந்தன்மையை காட்டி எங்களுக்கு வழிகாட்டியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள் சார் ..இன்று வந்திருந்த திரு .தினேஷ் மாப்பிள்ளை (ஒளி ,ஓலி அமைப்பாளர் )கரப்பாடியில் இருந்து தம்பிக்கும் ,பொன்னேரியில் இருந்து வந்திருந்த மாப்பிள்ளைக்கும் ,நன்றி ...வரும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொதுக்குழுவிற்கு 07.10.2018...இடம் ..தளி யில் நடைபெறும்  நிகழ்ச்சிகள் குறித்து பேசி முடிவெடுத்தது இன்றய செயல்குழு கூட்டம் நமது அன்பு மாப்பிள்ளையின் விருந்தோம்பலால் கொஞ்சம் திக்குமுக்காடி போனோம் ..செயற்குழு அருமையாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி ..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..






சனி, 22 செப்டம்பர், 2018

இன்று அருமையான ஆன்மீக புரட்டாசிமலை  பயணம் ....தளிஜல்லிபட்டி கரட்டுபெருமாள் கோவில் -உடுமலை )

இன்று காலை முதல் சனிக்கிழமை ..சின்ன கரட்டு பெருமாள் கோவில் ..தளி எத்தலப்பா நாயக்கர் வணங்கிய பெருமாள் கோவில் ..உடுமலையில் இருந்து 13 கிலோமீட்டரில் உள்ளது ..தளி பாளையக்காரர் வணங்கிய பெருமாள் கோவில் உள்ளது ..வருட வருடம் புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது ..முதலில் சிறுகுன்று மலையில் சிறிய கோவிலாக இருந்தது ..ஜல்லிபட்டியில் இருக்கும் நமது சொந்தங்கள் அதை விரிவுபடுத்தி எனக்கு தெரிந்து 30 வருடங்களுக்கு முன் கழுதையில் பொதி சுமந்து மணல் ,செங்கல் எடுத்த சென்ற நினைவுகள் இப்பொழுதும் மலரும் நினைவுகளாக உள்ளது ..நம் புலவர் பழனிசாமி மாமா(மறைவு ) அவர்கள் ,அம்போதி(மறைவு ) ,கண்ணையன் (பொம்மயன்கோவில் பூஜாரி )பொன்னுசாமி ,மலையாண்டி சாமி (மறைவு ),வணிகவரித்துறை பரம சிவம் (மறைவு ),தர்மலிங்கம் ..இவர்கள் எல்லாம் 30 வருடங்களுக்கு முன்னாலே கோவிலை பராமரிப்பு செய்து செய்தும் வழிபட்டு வந்துள்ளார்கள் ..கோவில் முன் தற்பொழுது உள்ள கல்வெட்டில் இன்னும் வாழந்து கொண்டுள்ளார்கள் ..தற்பொழுது திருப்பூர் தொழிலதிபர் ராமகிருஷ்ணன் அண்ணன் அவரால் கோவில் முன்புறத்தில் அழகான அமரும் இடமாக அமைத்து கொடுத்து உள்ளார்கள் ..இன்று மதியம் அமர்ந்த இருந்து பொழுது மேல்புறத்தில் .நன்றகா வர்ணம் பூசியிருந்தார்கள் ...யார் என்று கேட்டேன் ..உடுமலையில்  ஜெய்வந்த  எரிவாயு விநியோகிஸ்தர் (JAYVANTH GAS AGENCIES )...இவர் வணிகவரித்துறை பரமசிவம் அவர்களின் புதல்வர் ஆவார் ,அவரின் தந்தை செய்த கோவில் நற்பணிகளை அவருடைய மகனார் செய்வது சிறப்புக்குரியது வாழ்த்துக்கள் ..இன்று புலவர் பழனிசாமி மாமா அவர்களின் நினைவாக கோவில் அறங்காவலர் புதல்வர் .திரு .ஆனந்த் அவர்களுக்கு ..நமது தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் நூலை பரிசளித்துவிட்டு ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக பெருமாளுக்கு அர்ச்சனை செய்துவிட்டு திரும்பியது மிக்க மகிழ்ச்சி ..இனி புரட்டாசி சனிக்கிழமை தோறும் ..நமது பாளையங்களை ஆண்ட நமது முன்னோர்களை வழிபட்டு .நமது இளைய தலைமுறைக்கு நமது வரலாறுகளை பகிர வேண்டியது எனது தலையாய கடமை ....என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...







திங்கள், 17 செப்டம்பர், 2018

ஷ்யாமின்  முகம் மலர்ந்த   சத்தம்..,!!! ....19.09.2008..(உடுமலைப்பேட்டை )
இன்றைய நாள் ..எனக்கு தூங்கா மலரும்  இரவு.,
ஆம்., என் ஷ்யாமின் .,
முகம் மலர்ந்த   சத்தம்..,!!! 
ஷ்யாமின் பிறந்த தினம் முதலே உற்சாகம் தொற்றி கொண்டது ...பிறந்த உடன் பிஞ்சு கரங்களை பிடித்து பார்க்கும் பொழுது பட்டாம்பூச்சியின் மெல்லிய இதழ்கள் போன்று மிருதுவாக இருக்கும் ..இரண்டு கைகளில் மெல்லிய வெல்வெட்டு துண்டுடன் மார்போடு அனைத்துக்கொண்டு ஒரு கையினால் ஷ்யாமின் தலையை கீழே சாயாமல் சிமிட்டும் கண்கோளடு பார்ப்பது ஒருமுறை தான் ..வாழக்கையில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்துவிடும் ..
குழந்தைகளிடம் அளவுக்கதிகமான அன்புகொண்ட தகப்பனின் சற்று நீண்ட வெளியூர் பணிசெய்வது  மிகவும் கொடுமையானதே.....அன்பு மகனின் பாசம் மனதில் நினைத்துக்கொண்டு சிறுவயது விளையாட்டுகளை நினைக்கும்போது கண்கள்  குளமாக்கி கொண்டே இருக்கும்  ...
நான் வீட்டில் இருந்தால் நான் தான் அவன் உலகம் ...மாலைநேரம் வந்தால் எப்படியும் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டுருப்பான் ..இரண்டு சக்கர வாகனத்தில் கொஞ்ச தூரம் பட்டாம்பூச்சி சிறகுகள் விரித்து பயணம் செய்துவருவோம் ..வடவள்ளி ..சுற்றி இருக்கும் பைமெட்டல் பேரிங் வழியாக வடவள்ளி பேரூந்துநிலையம் வழியாக கஸ்தூரிநாயக்கன் பாளையம் சென்று வான ப்ரஸதா மற்றும் தியான ப்ரஸதா  வழியாக இயற்கை கொஞ்சும் மரங்கள் ..அதை ஒட்டிய விவசாய தோட்டங்கள் வழியாக வீடுவந்து சேர்வோம் ..அப்பொழுதும் வீட்டிற்க்குள் போக மனம் வராது..உன்னுரு ரௌண்ட பா ..ப்ளீஸ் ..ப்ளீஸ் கொஞ்சும் கெஞ்சல்கள் நினைவுகள் மலருந்துகொண்டே இருக்கும் .. 
காலையில் அப்பா ஆய் வருதுப்பாவில் ஆரம்பித்து இரவு சிறு சிறு கதைகள் பேசி  தூங்கவைப்பது வரை  அவனுக்கு எல்லாமே நான் தான்.....அதுவும் தொட்டில் குழந்தையாக இருக்கும்பொழுது இரண்டு மணிநேரம் ..மூன்று மணிநேரம் தொட்டில் ஆட்டிவிட்டு கைவலிக்கிறது என்று மெதுவாக தூக்கிட்டானா என்று பார்த்தால் கொட்ட கொட்ட முழித்து பொக்கைவாயால் சிரித்துக்கொண்டிருப்பான்...அதைப்பார்த்தவுடன் கைவலிக்க தொட்டிலாட்டியது எல்லாம் வலியும் மறந்துவிடும் ..
மொபைலில் டாக்கிகங் டாம் பொம்மையை காணும் பொழுதெல்லாம் மகனின் நினைவுகள் வந்து செல்லும் எனக்கு இப்படியிருக்க..எனது கணிணியில் விவரம் தெரியும் பொழுது அவனுக்கு பிடித்த கதை பாடல்கள் ..அதிகம் குழந்தை பாடல்கள் மலையாள மொழியில் அதிகம் இருந்தது ...சிரித்துக்கொண்டு இருப்பான் ..என்னுடைய இரவு நேர அலுவுலக பணியை கொஞ்சம் காலம் ஆக்கிரமித்துக்கொண்டான் ..
பணியின் காரணமாக மகனை பிரிந்திருக்கும் நாட்கள் மகனின் நினைவுகள் வரும்  எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது...ஆனால் மகனுக்கு என் நினைவுகள் வரும் பொழுதெல்லாம் அவனுக்கு கஸ்டமாய் இருந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்.....
ஷ்யாமுக்கு  நான் தான் அகிலமும் என்னை பிரிந்திருக்கும் காலங்கள் அது இன்னும் பெரும் துயரத்தை தந்திருக்கும்......
ஒரு தந்தையைப் பொருத்த வரை மகனின் இளவயது குறும்புகள் பேச்சுக்கள் என்பது நினைத்து நினைத்து குதூகலப்படும் விஷயம். எங்கேனும் அவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனே பெற்ற மகனும் அவனது குறும்புகளும் மனதில் தோன்றி ஒரு புன்சிரிப்பை தற்செயலாக  செயலாய் வரவழைக்கும்.
எப்பொழுது சனி ..ஞாயிறு தினங்கள் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்போம் நானும் ,ஷ்யாமும் ..கோவையின் சனிக்கிழமை காலை துவங்கும் நேரு மைதானம் ..வ .உ .சி ,மைதானம் ..GE DE நாயுடு அருங்காட்சியகம் ,GE DE Car அருங்காட்சியகம் ..மதியம் கீதா கபே ..மதிய உணவு ..சிறுது நேரம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகள் படிக்கும் புத்தக அலமாரி ..மாலை நேரம் வா .உ சி சிறுவர்பூங்காவில் சுற்றி குதிரை சவாரி ...சிறுவர் பூங்காவில் சென்று ..தூரி விளையாட்டு ,சறுக்கு விளையாட்டு ..வீடு வந்து சேர்வதற்கு உற்சாகம் மிகுதியாக இருக்கும் ..ஆனால் ஷியாம் ..இன்னும் கொஞ்சம் விளையாடி விட்டு செல்லலாம் என்று அடம் ..பின் சமாதான படுத்தி அழைத்துவருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ..இப்பொழுது வளர்ந்துவிட்டான்..நண்பர்கள் வட்டம் சேர்கிறது ..வாழ்க்கை சூழல் ..பிறந்தது முதல் ..10 வயது வரைதான் அப்பாவின் தேவை ...நாமும் அதற்கு தகுந்த முறையில் தூரத்தில் இருந்து நம் கண் அசைவில் மட்டும் பார்த்துக்கொள்ளவேண்டும் ..வளர்கிறான் என்று மனதை நாம் தான் கொஞ்சம் திடப்படுத்திக்கொள்ளவேண்டும் .. 

என்னதான் இருந்தாலும் அந்த சிறுவயது நினைவுகள் மலர்ந்துகொண்டே இருக்கும் ..உள்ளே பொங்கி வரும் அன்பு பாசம் காதல் எல்லாவற்றையும் பெரும் போராட்டத்தோடு அடக்கிக் கொண்டு வெளியில் கடுமையும் கண்டிப்புமாக மகனை பெரிய ஆளாக்கத் துடிக்கும் ஒவ்வொரு தந்தையின் கஷ்டமும் அரை பிரசவத்திற்கு சமம்....தற்காலங்களில் நம்மை சுற்றி நடக்கும் சூழ்நிலைகள் ..பாசம் நேசம் ..சொந்தங்களின் உறவுமுறை ,நண்பர்கள் வட்டம் ..கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறதா ..இல்லை இன்னும் பாசப்பிணைப்புகள் கூடுமா ...வாழக்கை பயணம் நகர்கிறது ..ஷியாம் பிறந்தது முதல் சுற்றுப்பயணங்கள் கோவை ..பெங்களுரு ..திருவனந்தபுரம் ..உடுமலை ..கார் பயணங்கள் .அதிகம் ஷியாம் மன தையரியத்துடன் வளர்வதற்கு மிக பயனுள்ளதாக இருந்தது .. குழந்தை வளர்ப்பு சில வார்த்தைகள்..! குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம்.தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்! மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதனங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்! இன்றோடு 10 வயது முடிந்து 11 வயதை தொடும் ஷ்யாமுக்கு என் அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..


ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

உடுமலையில் ..மேற்குத்தொடர்ச்சி மலை ...

இன்று ஞாயிறு மாலைநேரம் ..அழகான பாராட்டு விழா ...
16.09.2018 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு ஜாமிஆ பள்ளிவாசல் கூட்ட அரங்கில்
உடுமலை நாராயணகவி மணிமண்டபத்திற்கு எதிரில் 
இயக்குநர் லெனின்பாரதி,  நடிகர் அரண்மனை சுப்பு அவர்களுக்கு அருமையான உடுமலை மக்களின் பாராட்டு அருமையான மேற்குத்தொடர்ச்சி மழையின் சாரல் போன்று .
முனைவர் ம.மதியழகன் தலைமையிலும்.முனைவர் மஞ்சுளா வரவேற்புரையுடன் தொடங்கியது ..மறைந்த முனைவர் இந்திரஜித அவர்களின் நினைவுகளுடன் நடந்தது மிக்க மகிழ்ச்சி ..ஓளிப்படக்கலைஞர்களின் சங்கத்தின் 
தலைவர் திரு. மஜீத் அவர்கள் ஒளிப்பதிவு பற்றி பேசியது மிக அருமை .
நிகழ்வில் கருத்துரையாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் தோழர் எஸ்.ஆர்.மதுசூதனன் அவர்கள் பேசும்போது நமது மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் வனங்களை தங்களின் உயிரைவிட   நேசித்து பாதுகாத்து வருவதையம் ,அவர்கள்மேற்குத்தொடர்ச்சி மலை  எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அழகா எடுத்துரைத்தார் ..திருப்பூர் குறும்பட இயக்குநர் திரு. பாரதிவாசன் அவர்கள்,திரு. பாரதிவாசன், கூத்துப்பட்டறை ஆசிரியர் சுரே!ஸ்வரன் அவர்கள் ,கவிஞர் இளையபாரதிஅவர்கள் ,உடுமலை நாராயணகவி புத்தகத்தை .திரு .ஜவஹர் அவர்கள் இயக்குனர் லெனின் பாரதி ,நடிகர் அரண்மனை சுப்பு அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் ..,உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் மதிப்பியல் தலைவர் ..சுபாஷ் கிருஷ்ணசாமி அவர்கள் ,தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் .நூலை சேனாபதி பத்திரிகை நிறுவனர் கணியூர் ப்ரூக் அவர்களும் ,ஊடகவியலாளர் ரகுமான் அவர்களும் இயக்குனர் லெனின் பாரதி அவர்களுக்கு வழங்கி உடுமலை மண்ணுக்கு புகழ் சேர்த்தனர் ..நன்றியுரை பேராசிரியர் கண்டிமுத்து அவர்களுடன் பாராட்டு விழா நடைபெற்றது இன்றைய ஞாயிறு அருமையாக அமைந்தது .
நீண்ட இடைவெளிக்குப்பிறகு திரைத்துறையைச்சார்ந்த நிகழ்வு உடுமலை மண்ணில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது உடுமலை மக்களின் கல்வியாளர்கள் ,சமூகவியாளர்கள்,பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியாளர்கள் ,விவசாய மக்கள் கலந்துகொண்டு பாராட்டும் விழாவாக நடைபெற்றது .
ஏத்துனையோ பணிச்சுமைகள், எவ்வளவோ
மன அழுத்தங்கள் அத்தனைக்கும் ஒரு இரண்டு மணி நேர நிகழ்வு மனதிற்கு உற்சாகமா இருந்தது ..
விழாவை அருமையாக நடத்திய
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் மற்றும்
உடுமலைப்பேட்டை ஒளிப்படக்கலைஞர்கள் சங்கத்தினர் அனைவர்க்கும் நன்றிகள் ..





இறுதியாக இயக்குநர் லெனின்பாரதி. ஓளிப்படக்கலைஞர் தேனி ஈஸ்வர், நடிகர் அரண்மனை சுப்பு ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

வியாழன், 13 செப்டம்பர், 2018

அருமையான பதிவு ..உங்களின் ஆதங்கம் ..சமுதாய அக்கறை ..எனக்கு புரிகிறது ...ஒரு சில இளைஞர்கள் என்று சொல்லலாம் ...தற்பொழுது நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையில் ...86 உறுப்பினர்கள் உள்ளனர் ..16 பேர் மற்றும் அன்றாடம் தோட்டவேலைக்கு..வாகன ஓட்டுநர்களாக  சென்று வருபவர்கள் (படிக்காத மேதைகள் )இன்றும் நல்ல தகவல்கள் ,அறக்கட்டளைக்கு அளப்பரிய பணியை செய்துகொண்டுள்ளார்கள் ...மற்ற உறுப்பினர்கள் அனைவரும் படித்த நல்ல தனியார் நிறுவனம் ,அரசு வேலையில் ,வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் ,மற்றும் பெண் குழந்தைகளும் சளைத்தவர்கள் இல்லை ..நமது அறக்கட்டளையில் பொறுப்பான பதவியில் இருக்கிறார்கள்..விளம்பரம் இல்லாமல் அமைதியாக பணியாற்றி கொண்டுள்ளார்கள் ..அதிகம் வெளியில் தெரிவது ...அந்த நாலு பேருதான் அறக்கட்டளையில் செயல்பாடுகள் போன்று தெரிகிறது ..நமது கோவை -திருப்பூர் கம்பள சொந்தங்கள் ..கல்வி ,வேலைவாய்ப்பு ..ஆகியவற்றில் யாரும் வழிநடத்த வேண்டிய அளவில் இல்லை ..ஏன் என்றால் பலதரப்பட்ட வளர்ந்த சமுதாயத்தினருடன் பங்கெடுத்து அவர்களின் வளர்ச்சியை பார்த்து நாமும் வளர்ந்து கொண்டுதான் உள்ளோம் ..வரும் அக்டோபர் மாதம் 7 ம் தேதி ..திருமூர்த்தி மலையில் நடைபெறும் பொதுக்குழுவிற்கு வாருங்கள் ...நம் சொந்தங்களின் சந்திப்பை பார்க்கலாம் ... நமது பொதுக்குழுவிற்கு ..அரசு துறையில் பணியாற்றி கொண்டிருக்கும் இரண்டு சொந்தங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வருபவர்கள் ..நமது வரலாற்று சிறப்புமிக்க கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் ...வரலாற்று நூலை வெளியிடும் விழாவாகவும் இருக்கும் ...நன்றி ...

புதன், 12 செப்டம்பர், 2018


தமிழக வரலாற்றில் நீங்காத  இடம் பெற்ற விஜயநகர் பேரரசுவின் வெற்றிக்கு முதல் காரணமே இந்த காலாட்படை வீரர்கள் தான் என்பதை உணர்த்தவும்  பட்டை தீட்டும் வாள் போன்ற 3,5;9,வாருடங்களுக்கு ஒரு முறை தங்களை தாங்களே  தமது பலத்தை பரிசோதித்து கொள்ளவும் ஏற்படுத்திய எம் பாரம்பரியம் பண்பாடுகள் அனைத்தும் வரலாற்றில் உள்ள எம் வாழ்க்கையே பெரும் வரலாறு மாற்று மன்னர்களை வென்று நாடு பிடித்து பழகிய வழக்கத்தில் இருந்து தற்போது ஒரு எழுமிச்சை கனிக்கு இந்த வீரவிளையாட்டை விளையாடுகிறோம்  என்றால் பரிசு பொருள் இல்லாமால் இல்லை அனைத்து விதமான பரிசுகளையும் வென்று வீரத்தை நிலைநாட்டிய பின்பு அமைதி என்னும் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ளோம் மறுபடியும் நாங்கள் சோதித்துகொள்ளும் மாலைதான்டுவிழாவை மறுபடியும் போர்களத்திற்க்கு அழைக்காதீர்கள்  இன்னும் எங்களுக்குள் உள்ள காட்டுமிரண்டி தனங்களை சற்று அடக்கி வாழ்கிறோம்  அனைவரையும் ஆதரித்து அனுசரனையுடன் வாழ நினைக்கும் ஆண்டபரம்பரைகள்.

சங்கே ....முழங்கு ....

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

இல்லற வாழ்க்கை இனித்திட  சென்னை குடும்ப நல சட்டம் கோர்ட்டின் 10 அறிவுரைகள்
குடும்ப நல சட்டம்  சென்னை குடும்ப நல கோர்ட்டின் 10 அறிவுரைகள்
விவாகரத்துகள் பெருகி வரும் இக்காலகட்டத்தில் விவாகரத்து கோரி தம்பதிகள் நாடி வரும் சென்னை குடும்ப நலகோர்ட்டில், இனிமையான இல்லறத்திற்கு என்று தலைப்பில் 10 அறிவுரகளை பெரிய போர்டில் எழுதி வைத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

சென்னை குடும்ப நல கோர்ட்டின் முதன்மை குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது அதில் இடம் பெற்றுள்ள அறிவுரைகள்

1. ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்

2. வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!

3. விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.

4. கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.

5. உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

6. விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.

7. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

8. செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.

9. இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள்.

– சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்- அனுசரித்துப் போகுதல்- மற்றவர்களை மதித்து நடத்தல்.

மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ள

10வது அறிவுரை.


விவாகரத்து கோரி வரும் தம்பதிகள் இந்த பத்து அறிவுரைகளையும் ஒரு பத்து நிமிடம் ஆற அமர நின்று ஒன்றுக்கு இரண்டு முறை படித்தாலே போதும், ‘டைவர்ஸ்’ கேட்டு வரும் ஜோடிகள் ‘டைவர்ட்’ ஆகிச் செல்லும் வாய்ப்பு உருவாகும்

வியாழன், 6 செப்டம்பர், 2018

ஆசிரியர் தினம் ...செப்டம்பர் 5..(கேரளா வர்மன் -தளி எத்தலப்ப மன்னர் )

நேற்று ஆசிரியர் தினம்  கல்லூரியில் தமிழ் துறை சார்பாக கொண்டப்பட்டது ..கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் ..கொடுவாயூர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தனராக விக்டோரியா கல்லூரியின் முன்னாள் முதல்வர் |Dr .முரளிதர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் ..மற்றும் கொடுவாயூர் கல்லூரி முதல்வர் கீதா அவர்கள் தலைமை தாங்கினார் ..உளவியல் பேராசிரியர் திருமதி பத்மஜா அவர்கள் கல்லூரிமாணவச்செல்வங்களுக்கு இன்று எதிர்கொள்ளும் உளவியல் காரணங்களை பட்டியலிட்டு பேசியது மிக அருமை ..விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு விழாவின் முடிவில் நன்றி தெரிவித்த தமிழ் பேராசிரியர் கணியூர் கண்டிமுத்து அவர்கள் ,தளி எத்தலப்ப மன்னரின் ..உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் வெளியிட்ட ..தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் .நூலை பரிசாக வழங்கப்பட்டது ..கொடுவாயூர் கல்லூரியின் நூலகத்துக்கு ஒரு நூலும் பரிசாக வழங்கப்பட்டு ..ஆசிரியர் தினத்தை வெகு சிறப்பாக வரலாற்று நூலுடன்  கொண்டாடியது மிக்க மகிழ்ச்சி ..

விருப்பாச்சி கோபால் நாயக்கர் வீரவணக்க நாள் நிழ்ச்சிக்கு சிறப்பு செய்ய விழாவுக்கு வந்திருந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை..விருப்பாச்சி கோபால்நாயக்கர் சேவா சங்க தலைவர் திரு .செந்தில்குமார் அவர்கள் வரவேற்று பொன்னாடை போர்த்தியபொழுது ...கோபால் நாயக்கர் மணிமண்டபம் கட்டுவதற்கு ...திமுக தலைவர்கள் ..சக்கரபாணி ,பெரியசாமி அவர்களை 

புதன், 5 செப்டம்பர், 2018

அன்பு🌷🌷🌷🌸🌸🌸shyam..sept.19.2008

திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது , Pregnancy Confirmed ( உங்கள் மனைவியின் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது ) - என நான் சொல்லும் அந்த தருணம் பெண் சந்தோஷப்படுகிறாள் , ஆண் பெருமைப்படுகிறான் . பெண் மனதில் 9 மாதகாலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என சிந்தீப்பாள் , ஆனால் ஆண் மனைவி, குழந்தை இரண்டு பேரையும் எப்படி பாதுகாப்பது என சிந்தித்து கொண்டு இருப்பான், பெண் மனதில் 10% அன்பு இருந்தால் , அதை 100 % வெளிப்படுத்துவாள் . ஆனால் ஆண் மனதில் 100% அன்பு இருக்கும் ஆனால் 10% அன்பைக்கூட வெளிப்படுத்த தெரியாது . ஆண்களுக்கு கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவிற்க்கு அவர்கள் மனதில் இருக்கும் அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தால் பெண்களை விட ஆண்களே அன்புக்குரியவர்கள் என்ற உண்மை இந்த உலகத்திற்க்கு தெரிந்து இருக்கும் .
அறிவு தளத்தில் வேண்டுமானல் சில நேரங்களில் பெண்கள் ஆண்களைவிட உயர்வாக தெரியலாம் . ஆனால் அன்பு தளத்தில் எப்பொழுதும் பெண்களை விட ஆண்களே உயர்ந்துள்ளனர் என்பதை என்னால் உறுதி பட சொல்ல முடியும் ......

அனுபவம் பேசுகிறது 🌷🌷🌷🌷

செவ்வாய், 4 செப்டம்பர், 2018





செப்டம்பர் மாதம் என்றாலே ...மனதில் உற்சாகம் கொள்ளும் மாதம் ..என்னை வாழ்வில் உயர செதுக்கிய ஆசிரியர்கள்  ..எனக்கு அப்பா என்ற பதவி உயர்வு கொடுத்த மாதம் என் செல்ல ஷியாம் ....முதலில் வழிகாட்டிய அப்பாவும் ஒரு ஆசிரியர்தான் (படிக்காத மேதை )கல்வியாளர்களுடன் இருந்ததால் தான் ...வாழ்வில் முன்னேற முடிந்தது ...

எனது பார்வையில் ஆசிரியர் தினம்
"ஆசிரியர் பணி அறப்பணி
அதற்கே உன்னை அர்ப்பணி".
என்பதை நாம் அறிவோம்!
அதற்கு விளக்கம் அளிக்க அவசியம் இல்லை. மனிதனை மனிதனாக மாற்றுவதும் மனிதன் வளர உரமாக செயல்படுவதும் ஆசிரியர்கள் என்று சொன்னால் அது மிகையாகது.
"எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன் மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் .

"குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரிஇல்லாத கடிதத்திற்குச் சமமானது".என்பார்கள் இதே போலத்தான் மாணவர்கள் சமுதாயத்தை ஒரு இலட்சயப் பாதைக்கு அழைத்து செல்பவர்கள் ஆசிரியர்கள். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதை கூறக் கேட்டிருக்கிறோம் அந்த வகையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணிகள் பாராட்டக்குரியது என்பதை யாரும் மறுக்க முடியாது.தற்பொழுது உள்ள பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் வீட்டு வேலைகளைச் செய்ய சிரமமாக இருக்கிறது என்று கருதி பள்ளிக்கு அனுப்பும் அவல நிலைதான் உள்ளது. மேலும் சொல்லப்போனால் குழந்தைகள் பெரியவர்கள் ஆகி கை நிறைய ஊதியம் பெறும் வரை பெற்றோர்களுக்கு பிள்ளைகள் பாரம்தான்.

ஓரிரு குழந்தைகளையே பராமரிக்க  முடியவில்லை பெற்றோர்களுக்கு.பல குழந்நைகளுக்கு தாயாகவும்,தந்தையாகவும்,குருவாகவும் திகழ்பவர்கள் ஆசிரியர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.ஒரு நாட்டின் வளர்ச்சி மாணவர் கையில் உள்ளது.அந்த மாணவர்கள் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் தான் அடித்தளம்.
அத்தகைய மதிப்பு மிக்க நமது ஆசிரியருக்கு ஒரு சல்யூட்(salute).

எல்லா விதமான விஷேசங்களுக்கும் ஒரு தினம் உண்டு. அதுபோல செப்டம்பர் 5ம் தேதி  ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகறது.உலகில் மற்ற நாடுகளில் பல்வேறு மாதங்களிலும் பல்வேறு தேதிகளிலும் ஆசிரியர்கள் தினத்தை கொண்டாடுகிறார்கள்..நமது நாட்டில் ஏன் செப்டம்பர் 5 ஐ ஆசிரியர்கள் தினமாக கொண்டாடுகிறார்கள் என்று சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
சற்று தெரிந்து கொள்ளலாமே.!

நமது தாய்நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் என்பது நமக்கு தெரியும்..இவர் திருத்தணியில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். தம் 20 தாம் அகவையிலேயே முதுகலைப் பட்டத்தில் ஆய்வு கட்டுரைகள் எழுதி தனது ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றார். இவர் ஒரு தத்துவ மேதை,சிறந்த கல்வியாளர். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும், UNESCO வில் இந்திய பிரிதிநிதியாக  பங்கு கொள்ளவும்,ரஷ்யாவின் இந்திய தூதராகவும் பணியாற்றினார்.

ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர்  அவரது பிறந்த நாளை கொண்டாட அனுமதி கேட்ட போது அவர் கூறினார்."எனது பிறந்த நாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதை விட அதையே ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடினால் நான் பெருமையாக உணர்வேன் என்றார். அவரது வேண்டுகோளுக்கினங்க 1962 ஆம்  ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம்  கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இவர் 42 டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதா, பிதா, குரு என்றுதான் சொல்வார்கள் .மாதா, பிதா, டாக்டர் அல்லது எஞ்சினியர் என்று சொல்வதில்லை..அத்தகைய நமது குருக்களை வணங்குவது கடவுளுக்கு நிகரானது என்று எனது ஆசிரியர்களை நினைத்து நான் எழுதி முடிக்கிறேன்..

கற்றல்- கற்ப்பித்தலில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்  .
.. .என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681
குரூப்-04: ஆன்-லைன் சான்றிதழ் சரி பார்ப்பு சந்தேகங்களுக்கான பதில்கள்.:
---------------------------------------------------------------------------------

VERY VERY IMPORTANT: PLEASE READ CAREFULLY TO
-------------------------------------------------------------------------------------
END:
--------

1. பிறந்த தேதிக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை உபயோகப் படுத்தலாம். தனியாக, பிறப்புச் சான்றிதழ் தேவையில்லை.

2. தற்சமயம் பட்ட படிப்பிற்கு என கண்டிப்பாக CONVOCATION OR PROVISIONAL CERTIFICATE ல் ஏதேனும் ஒன்றைக் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரச பணியாளர் தேர்வாணையம் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தில் அறிவுறுத்தி உள்ளது.

நீங்கள் விண்ணப்பத்தில் CONSOLIDATED MARK SHEET விபரத்தினைக் கொடுத்து இருப்பின் , கவலை இல்லை. பட்டப் படிப்பிற்கு CONVOCATION CERTIFICATE OR PROVISIONAL CERTIFICATE இரண்டில் எது உங்களிடம் இருக்கிறதோ அதனைக் கொடுக்கலாம்.

PROVISIONAL ஐ விட CONVOCATION பதிவேற்றம் செய்வது மிக நன்று.

அதே சமயம், நீங்கள் விண்ணப்பத்தில் கொடுத்து இருந்த CONSOLIDATED MARK SHEET சான்றிதழை "Others" என்று ஒரு FOLDER இருக்கும். அதில் கூடுதலாக பதிவேற்றம் செய்யலாம்.

இந்த CONSOLIDATED MARK SHEET சான்றிதழுக்கும், CONVOCATION OR PROVISIONAL சான்றிதழுக்கும் தேதி மற்றும் சான்றிதழ் எண் வேறு பட்டு இருந்தாலும் பரவாக இல்லை. கவலை வேண்டாம்.

ஆனால், "நான் விண்ணப்பத்தில் CONSOLIDATED MARK SHEET விபரத்தினைப் பகிர்ந்து உள்ளேன், தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவுரையின்படி CONVOCATION OR PROVISIONAL சான்றிதழை பதிவேற்றம் செய்து உள்ளேன் என்று கடிதம் எழுதி அதனையும் பதிவேற்றம் செய்வது நல்லது.

3. உங்களது தற்போதைய சாதி சான்றிதழில் ஏதேனும் தவறுகள் இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்த பழைய சாதி சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம்.

ஆனால், தற்பொழுதே புதிய சாதி சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்து வாங்கி வைத்துக் கொள்ளவும். அதனை பதிவேற்றம் செய்ய தேவையில்லை.

TNPSC-யில் இருந்து நீங்கள் பதிவேற்றம் செய்த சாதி சான்றிதழில் தவறு உள்ளது என்று கூறினால் மட்டுமே புதிய சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது.

அப்படி கேட்கவில்லை எனில் புதிய சாதி சான்றிதழை அடுத்த தேர்விற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. PSTM பதிவேற்றம் செய்யும் பொழுது, படத்தில் உள்ளவாறு திரு/திருமதி/செல்வி போன்ற விபரங்கள் சரியாக டிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

அந்த சான்றிதழ் எந்த நிறத்தில் எழுதப்பட்டு உள்ளதோ அந்த நிறத்தில் டிக் செய்ய வேண்டும். பச்சை என்றால் பச்சை, ஊதா என்றால் ஊதா, கருப்பு என்றால் கருப்பு.

"has/has not obtained any scholarship" எது இருந்தாலும் அதனால் பின்னடைவு இல்லை. கவலை வேண்டாம். பெரும்பாலானோருக்கு ஸ்காலர்ஷிப் இருப்பது இல்லை. உங்களதுக்கு இருக்கிறதா? இல்லையா? என்று மாற்றுச் சான்றிதழில் (TC) குறிப்பிட்டு இருப்பார்கள். அதனைப் பார்த்து தெரிந்து கொள்ளவும். டிக் எதுவுமில்லாமல் பதிவேற்றம் செய்ய வேண்டாம்.

தமிழ் வழிக்கு என மாற்றுச் சான்றிதழை (TC) விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்தால் அதில் "Medium of Instruction: Tamil" என்று ஒரு வரி இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், இப்பொழுது TNPSC புதிதாக கொடுத்துள்ள படிவத்தில் PSTM சான்றிதழ் வாங்கி பதிவேற்றம் செய்யலாம். ஆனால், ஆனால், இதற்க்கு கடிதம் எழுதி அதனையும் பதிவேற்றம் செய்வது சிறப்பு..

5. தட்டச்சு இளநிலை முடிக்காமல், நேரடியாக முதுநிலை மட்டும் முடித்து இருந்தால் SENIOR GRADE சான்றிதழ்கள் மட்டும் பதிவேற்றம் செய்தால் போதுமானது.

தட்டச்சர் பதவிக்கு, இளநிலை முடித்து விட்டுத்தான், முது நிலை முடிக்க வேண்டும் என்ற விதி இல்லை. அவர்களுக்குத் தேவை முதுநிலை சான்றிதழ்கள் மட்டுமே.

உங்களிடம், இளநிலை மற்றும் முது நிலை இரண்டிற்கும் சான்றிதழ்கள் இருந்தால் இரண்டையும் பதிவேற்றம் செய்யவும்.

6. மாற்றுத் திறனாளிகள் கண்டிப்பாக அதற்க்கு உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உரிய மருத்துவக் குழுவிடமிருந்து (மூன்று உறுப்பினர் அடங்கிய மருத்துவக்குழுமத்தில் பெறப்பட்ட சான்றிதழ் மட்டும் பதிவேற்றம் செய்தால் போதுமானது. அதில் உடல் ஊனத்தின் தன்மை, சரியான விழுக்காடு (with percentage of disability) மற்றும் அவரது உடல் ஊனம் அவருடைய பணிகளைத் திறம்பட செய்வதில் அவருக்குத் தடையாக இருக்காது என்று கருதுவதாகவும் மருத்துவ குழுமத்தால் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.)

இந்த சான்றிதழ் தேவைப்படுவோர் இதற்க்கு என்று தனியாக உள்ள எனது பதிவினைப் பார்த்து மாற்றுத் திறனாளிக்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

7. ஆதரவற்ற விதவை என்பதற்கான சான்று (Destitute Widow), (விளக்கம்: “ஆதரவற்ற விதவை” என்பது அனைத்து வழியிலிருந்தும் கிடைக்கப் பெறும் மொத்த மாத வருமானமாக ரூ.4000/-ஐ (ரூபாய் நான்காயிரம் மட்டும்) மிகாத தொகை பெறுகின்ற ஒரு விதவையைக் குறிப்பதாகும்.

இவ்வருமானம் குடும்ப ஓய்வூதியம் (அ) மற்ற வருமானங்கள் (தொழிற்கல்வி பெற்றவர்களின் சுயதொழில் மூலம் ஈட்டும் வருமானம் உட்பட) எவையேனுமிருப்பின் அவற்றையும் உள்ளடக்கியதாகும்). இத்தகைய விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் / உதவி ஆட்சியர் / சார் ஆட்சியரிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் சான்றிதழைப் பெற வேண்டும். விவாகரத்து பெற்றவர் ஆதரவற்ற விதவையாகக் கருதப்படமாட்டார்.

8. விண்ணப்பத்தாரர் முன்னாள் இராணுவத்தினர் எனில் அன்னாரின் PPO மற்றும் Bonafide சான்றிதழ்கள் மட்டும் பதிவேற்றம் செய்தால் போதுமானது. (முன்னாள் இராணுவத்தினரின் மனைவி/மகன்/மகள் – முன்னாள் இராணுவத்தினராக கருதப்பட மாட்டார்.)

9. மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், மற்றும் ஆதரவற்ற விதவைகள் சலுகைகளை பெற விழைவோர் கண்டிப்பாக அதற்குரிய சான்றிதழை உரிய அறிவுரைப்படி பதிவேற்றம் செய்யவேண்டும்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யவில்லை எனில், விண்ணப்பத்தில் நீங்கள் மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் அல்லது ஆதரவற்ற விதவை என்று குறிப்பிட்டு இருந்தாலும் உங்கள் சலுகையை இழக்க நேரிடும்.

10. விண்ணப்பத்தாரர் திருநங்கையெனில் திருநங்கைக்கான ID Card மற்றும் அரசாணைகள் 1) G.O.(MS) No.28, BC, MBC, and Minorities Welfare (BCC) Department Dated: 06.04.2015, 2) G.O.(MS) No.90, Social Welfare and Nutritious Meal Programme (SW8(2)) Department Dated:22.12.2017 - படி சாதி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனுடன் திருநங்கை விண்ணப்பத்தாரரை ஆண் இனத்தவராக கருத வேண்டுமா அல்லது பெண் இனத்தவராக கருத வேண்டுமா என்பதற்கான விருப்ப கடித நகல் ஒன்றினையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

11. இந்த தேர்விற்கான அறிவிக்கை தேதிக்குப்பிறகு அரசுப்பணியில் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் அவர்களது பணி விவரங்கள் (பணியில் சேர்ந்த நாள், பணிபுரியும் துறை/ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா/NOC வழங்கப்பட்டுள்ளதா) எழுத்துப்பூர்வமாக தெரிவித்து அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதாவது தடையின்மைச் சான்றிதழை தற்போது பதிவேற்றம் செய்யத் தேவை இல்லை, ஆனால், நீங்கள் அரசுப் பணியில் உள்ளீர்கள் என்ற விவரத்தினை கடிதம் மூலம் தயார் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

12. தடையின்மைச் சான்றிதழ் (NOC) மற்றும் “அ” மற்றும் “ஆ” நிலை (Group ‘A’ or ‘B’) அரசு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ் ஆகியவை அன்னார் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுமாயின் அச்சமயத்தில் அளித்தால் போதுமானது. தற்சமயம் பதிவேற்றம் செய்ய தேவையில்லை.

13. எனக்குத் தெரிந்த வரை, தட்டச்சர், இளநிலை உதவியாளர் இரண்டிற்கும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என்று அழைக்கப்பட்டவர்கள் ஒரு முறை சான்றிதழை பதிவேற்றம் செய்தால் போதுமானது. கண்டிப்பாக இதுகுறித்த அறிவுரை ஊழியர்களுக்கு பகிரப்பட்டு இருக்கும். அவர்களிடம் கேட்டு உறுதி செய்து கொண்டு பதிவேற்றம் செய்யவும்.

14. என்னிடம் உள்ள மாற்றுச் சான்றிதழில் எனது நன்னடத்தைச் சான்றிதழ் உள்ளது, நான் தனியாக இறுதியாக படித்த நிறுவனத்தில் வாங்க வேண்டுமா என்று கேட்பவர்களுக்கு, அதனை, கலோரிக்கு அல்லது பள்ளிக்குச் சென்று வாங்குவதை விட உங்களுக்கு வேறு என்ன முக்கியமான வேலை என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் படித்த நிறுவனம் தொலைவில் இருந்தாலும், அங்கும் ஒரு சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த சான்றிதழ் ஒரு முறை வாங்கினால் போதும், இறுதி வரை அனைத்து தேர்வுகளுக்கு பயன்படுத்தலாம்.

15. VERY IMPORTANT:
விண்ணப்பத்தில் கோரியுள்ள விவரங்ளுக்கு விண்ணப்பதாரரிடம் ஏதேனும் சான்றிதழ் இல்லாவிட்டாலோ அல்லது தாங்கள் விண்ணப்பத்தில் தவறான தகவல் தந்து அதற்குறிய சான்றிதழ் இல்லையென்றாலோ அதற்கான கடிதம் ஒன்றை எழுதி அதனை scan செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். .

தேர்வில் வெற்றி பெற ..கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் -உடுமலைப்பேட்டை -சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது ..

திங்கள், 3 செப்டம்பர், 2018

அட ...வீட்டு கடன்ல  இத்தனை வரிசலுகைகளா இருக்காங்க .....
வட்டி.. கட்டாமலே வரிச்சலுகை பெற, வருமான வரிச்சட்டத்தில் உள்ள‍ சில நிபந்தனைகள்!
வீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெற வருமான வரிச் சட்டத்தில் உள்ள‍ சில நிபந்தனைகள்!
வீடு வாங்க/கட்ட/புதுப்பிக் க, வீட்டுக்கடன் வாங்கும் போது அதற்கான வட்டி யை ஆண்டு வருமானத்தி லிருந்து கழித்துக் கொள் ளலாம். இப்படி ஒரு சலு கை இருப்பதினாலேயே பலரும் சொந்த வீடு என்கிற கனவை நிறை வேற்றிக் கொள்ள முடிகிறது. இதுமாதிரி தரப்படும் வரிச் சலுகைக் கு சில நிபந்தனைகளை
வருமான வரிச் சட்டம் விதிக்கிறது. வீட்டுக் கடன் வாங்கி, அதற்கா ன சலுகைகளைப் பெற நினைப்பவர் கள் இந்த நிபந்தனைகளைத் தெரி ந்து கொள்வது அவசியம். என்னெ ன் ன நிபந்தனைகள்?
1. வட்டித் தொகையை வருடத்துக் கு ஒருமுறை, அதாவது, நீங்கள் கடனுக்கான வட்டியைக் கட்டவில் லை என்றாலும் கழித்துக் கொள்ளலாம். இதைக் கொஞ்சம் விரி வாக எடுத்துச் சொன்னால், தெளிவாகப் புரியும்.
ஒருவர் 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார். அந்த வருடம் வீட்டுக் கடனுக்கான வட்டி 1 லட்ச ம் ரூபாய் (10% வட்டி), அந்த வட்டியை அவ ர் கட்டினாலும் வரிச் சலுகை கிடைக்கும். கட்ட வில்லை என்றாலும் வட்டிக்கு வரிச் சலுகை கிடைக்கும். இந்த வட்டியை இவர் 2 வருடம் கழித்துக்கூட கட்டிக்கொள்ளலா ம். ஆ னால், சட்டப்படி கட்டாத வட்டிக்கும் முன்கூட்டியே வரிச் சலுகை பெற முடியும்.
2. வீட்டுக் கடன் வட்டிக்கு வரிச் சலுகை பெறுவதற்கு, சொத்துப் பத்திரம் பத்திரப்பதிவு அலுவலக த்தில் வங்கியின் பெயரில் அடமா ன ம் (Deposit of Title Deeds) வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. வீடு கட்ட, உறவினர்கள் அல்லது நண் பர்களிடம் வாங்கும் கடனுக்கா ன வட்டிக்கும் வரிச் சலுகை பெற முடியும். (ஆனால், வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் அல்லா தவர்களி டம் வாங்கும் கடனுக்குத் திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச் சலுகை கிடையாது.)
3.டெல்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில், கட்டாத வட்டிக்கு விதிக்கப் படும் வட்டிக்கு (இன்ட்ரஸ்ட் ஆன் இன் ட்ரஸ்ட்) கழிப்புக் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளது.
4. வீட்டுக் கடன் பெறுவதற்காகக் கொ டுக்கப்படும் கமிஷன் அல்லது புரோக் கர் கமிஷன் எதையும் வரிச் சலுகைக்காகக் கழித்துக்கொள்ள முடி யாது.
5. முன்பு வாங்கிய வீட்டுக் கட னை அடைப்பதற்கு, ஒரு புதுக் கடன் வாங்கி இருந்தால், அத ற்குண்டான (புதுக்கடன்) வட் டியைக் கழித்துக்கொள்ள அனுமதி உண்டு. இது தனிநபர் கடனாக (பெர்சனல் லோன்) இருந் தாலும் வட்டியைக் கழித்துக்கொள்ளலாம். ஆனால், புதுக் கடன், தனிநபர் கடனாக இருந்தால் அச லுக்கு வரிச்சலுகை கிடைக்காது.
6. கடன் வாங்கிய நபர்களுக்கு (ஒரிஜினல் ஓனர்கள்) மட்டுமே வட்டியைக் கழித்துக்கொள்வதற் கு உரிமை உண்டு. அவருக்குப் பின்னால் வருகிற (வாங்குகிறவ ருக்கோ அல்லது சொத்தை அடை ந்தவருக்கோ) அந்த உரிமை கிடையாது. ஒருவர் வீட்டுக் கடன் வா ங்கியிருந்தால் ஒவ்வொரு வருட மும் ரூ.2 லட்சம் வரை திரும்பக் கட்டும் வட்டிக்கு வரிக் கழிவு கிடைக்கும். அதற்கு கீழ்க்கண்ட சட்ட திட்டங்களைக் கடைப்பிடிக் க வேண்டும்.
* வீட்டுக் கடன் ஏப்ரல் 1, 1999க் குப் பின்பு வாங்கி இருக்க வேண் டும். அதற்கு முன்பு வாங்கியிருந் தால், ஆண்டுக்கு ரூ.30,000 மட்டு மே கழித்துக்கொள்ள முடியும்.
* கடன் வாங்கிய வருடத்திலிருந்து மூன்று வருடத்துக்குள் வீட்டை வாங்குவதோ, கட்டுவதோ முடிவ டைய வேண்டும். அப்போதுதான் வட்டியில் ரூ.2 லட்சம் வரிச் சலு கை பெற முடியும்.
* வீடு கட்ட கடனை சில தவணை களாக வங்கி கடன் கொடுத்தால், கடைசித் தவணைக் கொடுக்கப் பட்ட தேதியிலிருந்து மூன்று ஆ ண்டுக்குள் வீட்டை கட்டி முடித்தால்தான் வட்டிக்கான வரிச் சலு கை ரூ.2 லட்சம் கிடைக்கும். இல்லை எனில், ரூ.30,000தான் கழி த்துக் கொள்ள முடியும்.
*கடன் கொடுத்தவர்/வங்கி/வீட்டு வசதி நிறுவனத்திடமிருந்து, மொத்த வட்டி இவ்வளவு கட்டியிருக்கிறார் என்று சர்ட்டிஃபிகேட் மூலமாகத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் வட்டி வரிச் சலுகைக்கான தொகையை சம்பளத்தி லிருந்து- வருமானத்திலிரு ந்து கழித்துக்கொள்ள முடியும்.
* வீட்டை ரிப்பேர் செய்ய அல்லது புதுப் பிக்கக் கடன் பெற்றால் வட்டியில் ரூ.30,000 மட்டுமே கழிக்க முடியும் . ரூ.2 லட்சம் கழிக்க முடியாது.
* வீடு கட்டிக் கொண்டிருக்கும்போது வீட்டுக் கடனுக்கான வட்டி யை மட்டும் கட்டி வருவோம். இதனை ப்ரீ இஎம்ஐ என்பார்கள். இந்த வட்டிக்கான வரிச் சலுகையை, வீடு கட்டி முடிந் து தவணை (இஎம்ஐ) கட்ட ஆரம்பித்த ஆண்டு முதல் 5 ஆண்டுக்கு ள் பெற முடியும். இந்த வட்டியை ஐந்து சம தவணைகளாக பிரித்து ஐந்து ஆ ண்டுகளில் வரிச்சலுகை பெறமுடியு ம்.
உதாரணத்துக்கு, 2012 ஏப்ரலில் ஒரு வர் 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்குகிறார் என்று வைத்துக் கொள் வோம். அவர் வீடு கட்டி முடிவதற்குள் வட்டியை மட்டும் கட்டி வருகிறார். ஆண்டுக்கு 1 லட்சம் வீதம், இரண்டு ஆண்டுகளில் 2 லட்சம் ரூபாய் வட்டி கட்டினார். இரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன் தவணை கட்ட ஆரம்பிக்கிறார். இவர் கட்டிய 2 லட்சம் ரூபாய் வட்டியை 5 சம தவணையாக ஐந்து ஆண்டுகளி ல் ஆண்டுக்கு தலா ரூ.40,000 வீதம் கழித்துக்கொள்லாம். 2014-15ம் ஆண்டில் இவருக்கான வட்டி 1 லட்சம் மற்றும் ரூ.40,000-ஆக மொத்தம் ரூ.1,40,000 கழித்துக் கொள்ளலாம்.
கடன் தொகை ரூ.20 லட்சமாக, இருந் தால், வட்டி மட்டுமே 2014-15-ல் ரூ.2 லட்சமாக இருக்கும். அப்போது, ப்ரீ இ எம்ஐ வட்டி 80,000 ரூபாயாக இருக்கு ம். அப்போது அதிகபட்சம் 2 லட்சம் ரூ பாய்க்கு மட்டுமே வரிச்சலுகை கிடைக் கும்.
இதுவே வீட்டை வா டகைக்குவிட்டிருந்தால், முழு வட்டிக்கும் வரிச் சலுகை கிடைக்கும். அதேநேரத்தில், வாடகை யை வருமானமாக காட்டியிருக்க வேண்டும்.
வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இந்த விஷயங்க ளையெல்லாம் கவனித்து செயல்பட்டால், வரிச் சலுகையை முழுவதுமாக பயன்படுத்திக் கொ ள்ள முடியும் !

இன்னும் தகவல் வேணுங்களா நான் சொல்லறேங்க .....
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com
அட ...வீட்டு கடன்ல  இத்தனை வரிசலுகைகளா இருக்காங்க .....
வட்டி.. கட்டாமலே வரிச்சலுகை பெற, வருமான வரிச்சட்டத்தில் உள்ள‍ சில நிபந்தனைகள்!
வீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெற வருமான வரிச் சட்டத்தில் உள்ள‍ சில நிபந்தனைகள்!
வீடு வாங்க/கட்ட/புதுப்பிக் க, வீட்டுக்கடன் வாங்கும் போது அதற்கான வட்டி யை ஆண்டு வருமானத்தி லிருந்து கழித்துக் கொள் ளலாம். இப்படி ஒரு சலு கை இருப்பதினாலேயே பலரும் சொந்த வீடு என்கிற கனவை நிறை வேற்றிக் கொள்ள முடிகிறது. இதுமாதிரி தரப்படும் வரிச் சலுகைக் கு சில நிபந்தனைகளை
வருமான வரிச் சட்டம் விதிக்கிறது. வீட்டுக் கடன் வாங்கி, அதற்கா ன சலுகைகளைப் பெற நினைப்பவர் கள் இந்த நிபந்தனைகளைத் தெரி ந்து கொள்வது அவசியம். என்னெ ன் ன நிபந்தனைகள்?
1. வட்டித் தொகையை வருடத்துக் கு ஒருமுறை, அதாவது, நீங்கள் கடனுக்கான வட்டியைக் கட்டவில் லை என்றாலும் கழித்துக் கொள்ளலாம். இதைக் கொஞ்சம் விரி வாக எடுத்துச் சொன்னால், தெளிவாகப் புரியும்.
ஒருவர் 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார். அந்த வருடம் வீட்டுக் கடனுக்கான வட்டி 1 லட்ச ம் ரூபாய் (10% வட்டி), அந்த வட்டியை அவ ர் கட்டினாலும் வரிச் சலுகை கிடைக்கும். கட்ட வில்லை என்றாலும் வட்டிக்கு வரிச் சலுகை கிடைக்கும். இந்த வட்டியை இவர் 2 வருடம் கழித்துக்கூட கட்டிக்கொள்ளலா ம். ஆ னால், சட்டப்படி கட்டாத வட்டிக்கும் முன்கூட்டியே வரிச் சலுகை பெற முடியும்.
2. வீட்டுக் கடன் வட்டிக்கு வரிச் சலுகை பெறுவதற்கு, சொத்துப் பத்திரம் பத்திரப்பதிவு அலுவலக த்தில் வங்கியின் பெயரில் அடமா ன ம் (Deposit of Title Deeds) வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. வீடு கட்ட, உறவினர்கள் அல்லது நண் பர்களிடம் வாங்கும் கடனுக்கா ன வட்டிக்கும் வரிச் சலுகை பெற முடியும். (ஆனால், வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் அல்லா தவர்களி டம் வாங்கும் கடனுக்குத் திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச் சலுகை கிடையாது.)
3.டெல்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில், கட்டாத வட்டிக்கு விதிக்கப் படும் வட்டிக்கு (இன்ட்ரஸ்ட் ஆன் இன் ட்ரஸ்ட்) கழிப்புக் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளது.
4. வீட்டுக் கடன் பெறுவதற்காகக் கொ டுக்கப்படும் கமிஷன் அல்லது புரோக் கர் கமிஷன் எதையும் வரிச் சலுகைக்காகக் கழித்துக்கொள்ள முடி யாது.
5. முன்பு வாங்கிய வீட்டுக் கட னை அடைப்பதற்கு, ஒரு புதுக் கடன் வாங்கி இருந்தால், அத ற்குண்டான (புதுக்கடன்) வட் டியைக் கழித்துக்கொள்ள அனுமதி உண்டு. இது தனிநபர் கடனாக (பெர்சனல் லோன்) இருந் தாலும் வட்டியைக் கழித்துக்கொள்ளலாம். ஆனால், புதுக் கடன், தனிநபர் கடனாக இருந்தால் அச லுக்கு வரிச்சலுகை கிடைக்காது.
6. கடன் வாங்கிய நபர்களுக்கு (ஒரிஜினல் ஓனர்கள்) மட்டுமே வட்டியைக் கழித்துக்கொள்வதற் கு உரிமை உண்டு. அவருக்குப் பின்னால் வருகிற (வாங்குகிறவ ருக்கோ அல்லது சொத்தை அடை ந்தவருக்கோ) அந்த உரிமை கிடையாது. ஒருவர் வீட்டுக் கடன் வா ங்கியிருந்தால் ஒவ்வொரு வருட மும் ரூ.2 லட்சம் வரை திரும்பக் கட்டும் வட்டிக்கு வரிக் கழிவு கிடைக்கும். அதற்கு கீழ்க்கண்ட சட்ட திட்டங்களைக் கடைப்பிடிக் க வேண்டும்.
* வீட்டுக் கடன் ஏப்ரல் 1, 1999க் குப் பின்பு வாங்கி இருக்க வேண் டும். அதற்கு முன்பு வாங்கியிருந் தால், ஆண்டுக்கு ரூ.30,000 மட்டு மே கழித்துக்கொள்ள முடியும்.
* கடன் வாங்கிய வருடத்திலிருந்து மூன்று வருடத்துக்குள் வீட்டை வாங்குவதோ, கட்டுவதோ முடிவ டைய வேண்டும். அப்போதுதான் வட்டியில் ரூ.2 லட்சம் வரிச் சலு கை பெற முடியும்.
* வீடு கட்ட கடனை சில தவணை களாக வங்கி கடன் கொடுத்தால், கடைசித் தவணைக் கொடுக்கப் பட்ட தேதியிலிருந்து மூன்று ஆ ண்டுக்குள் வீட்டை கட்டி முடித்தால்தான் வட்டிக்கான வரிச் சலு கை ரூ.2 லட்சம் கிடைக்கும். இல்லை எனில், ரூ.30,000தான் கழி த்துக் கொள்ள முடியும்.
*கடன் கொடுத்தவர்/வங்கி/வீட்டு வசதி நிறுவனத்திடமிருந்து, மொத்த வட்டி இவ்வளவு கட்டியிருக்கிறார் என்று சர்ட்டிஃபிகேட் மூலமாகத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் வட்டி வரிச் சலுகைக்கான தொகையை சம்பளத்தி லிருந்து- வருமானத்திலிரு ந்து கழித்துக்கொள்ள முடியும்.
* வீட்டை ரிப்பேர் செய்ய அல்லது புதுப் பிக்கக் கடன் பெற்றால் வட்டியில் ரூ.30,000 மட்டுமே கழிக்க முடியும் . ரூ.2 லட்சம் கழிக்க முடியாது.
* வீடு கட்டிக் கொண்டிருக்கும்போது வீட்டுக் கடனுக்கான வட்டி யை மட்டும் கட்டி வருவோம். இதனை ப்ரீ இஎம்ஐ என்பார்கள். இந்த வட்டிக்கான வரிச் சலுகையை, வீடு கட்டி முடிந் து தவணை (இஎம்ஐ) கட்ட ஆரம்பித்த ஆண்டு முதல் 5 ஆண்டுக்கு ள் பெற முடியும். இந்த வட்டியை ஐந்து சம தவணைகளாக பிரித்து ஐந்து ஆ ண்டுகளில் வரிச்சலுகை பெறமுடியு ம்.
உதாரணத்துக்கு, 2012 ஏப்ரலில் ஒரு வர் 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்குகிறார் என்று வைத்துக் கொள் வோம். அவர் வீடு கட்டி முடிவதற்குள் வட்டியை மட்டும் கட்டி வருகிறார். ஆண்டுக்கு 1 லட்சம் வீதம், இரண்டு ஆண்டுகளில் 2 லட்சம் ரூபாய் வட்டி கட்டினார். இரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன் தவணை கட்ட ஆரம்பிக்கிறார். இவர் கட்டிய 2 லட்சம் ரூபாய் வட்டியை 5 சம தவணையாக ஐந்து ஆண்டுகளி ல் ஆண்டுக்கு தலா ரூ.40,000 வீதம் கழித்துக்கொள்லாம். 2014-15ம் ஆண்டில் இவருக்கான வட்டி 1 லட்சம் மற்றும் ரூ.40,000-ஆக மொத்தம் ரூ.1,40,000 கழித்துக் கொள்ளலாம்.
கடன் தொகை ரூ.20 லட்சமாக, இருந் தால், வட்டி மட்டுமே 2014-15-ல் ரூ.2 லட்சமாக இருக்கும். அப்போது, ப்ரீ இ எம்ஐ வட்டி 80,000 ரூபாயாக இருக்கு ம். அப்போது அதிகபட்சம் 2 லட்சம் ரூ பாய்க்கு மட்டுமே வரிச்சலுகை கிடைக் கும்.
இதுவே வீட்டை வா டகைக்குவிட்டிருந்தால், முழு வட்டிக்கும் வரிச் சலுகை கிடைக்கும். அதேநேரத்தில், வாடகை யை வருமானமாக காட்டியிருக்க வேண்டும்.
வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இந்த விஷயங்க ளையெல்லாம் கவனித்து செயல்பட்டால், வரிச் சலுகையை முழுவதுமாக பயன்படுத்திக் கொ ள்ள முடியும் !

இன்னும் தகவல் வேணுங்களா நான் சொல்லறேங்க ......


ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

இன்றய ஞாயிறு ...ஈரோடு வனிதா அத்தை ...குழந்தைகளுடன் கதை சொல்லி...மரம் வளர்ப்பும் ...(கிளை நூலகம் -தளி ஜல்லிபட்டி )

அருமையான காலை நேரம் குழந்தைகளுடன் கதை சொல்லி நிகழ்ச்சி என்றவுடன் மனதிற்கு மகிழ்ச்சி ...இப்போது இருக்கும் அதிவேக தொழில்நுட்பம் வளர்ச்சியின் அசுர வளர்ச்சி தாக்கம் ...குழந்தைகளிடம் இயற்கை மற்றும் கதை சொல்லலின் மறந்த காலமாக உள்ள நிலையில் ..மறுபடியும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நூலகர் லக்ஷமணசாமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ..தளி ஜல்லிபட்டி குழந்தைகள் கடிதம் எழுதி செல்லமாக அழைக்கும் கதை சொல்லி வனிதா அத்தைக்கு என்று அழைத்து கதையும் கேட்டது அருமை ...பள்ளிக்கு வெளியே உள்ள கருத்தாளுமைகளின் அறிவாற்றலை எவ்வாறு நாம் குழந்தைகளுக்கு பயன்படுத்துவது?
குழந்தைகளை கதை மூலம் தொடர்பு கொண்டு கற்றலின் தேடல் சுவாரசியத்தோடு வைத்திருத்தல் எவ்வாறு?
கதையும் விளையாட்டுமாய் உங்கள் வகுப்பறையை வசப்படுத்துவது எவ்வாறு?
வாழ்வின் மீதான நம்பிக்கையையும் மனிதத்தின் பண்பினையும் குழந்தைகளோடு பகிர்வது எப்படி? குழந்தைகளிடம் கதையின் மூலம் அழகாக மரம் வளர்ப்பு பற்றியும் கூறி அருமையான நிகழ்வாக அமைந்தது ...மரங்களின் பயன்களையும் குழந்தைகள் பதில் சொல்லி மரங்களை எப்படி பாதுகாக்கவேண்டும் உணர்த்தியது அருமை ..கதை சொல்லி முடிந்தவுடன் ..குழந்தைகளுடன் ஜல்லிபட்டி ஊரின் முடிவில் இருக்கும் நல்ல தண்ணீர் ஊற்று கிணறுக்கு சென்று ஆரம்பிக்கும் சாலைகளின் ஓரத்தில் ..மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்துவரும் ஆற்று படுகை ஓரத்தில் மரங்களை குழந்தைகளோடு பறவைகளுக்கும் மக்களுக்கு பயன் தரும் நாவில் பலமரங்களை நற்று பயனுள்ள நிகழ்வாக கொண்டாடியது மகிழ்ச்சி .. இன்றய ஞாயிறு குழந்தைகளுடன் பயனுள்ள நிகழ்வாக அமைந்ததில் மகிழ்ச்சி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..





ஈரோடு பட்டாம்பூச்சி  வனிதா மணி