வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

சேல்ஸ் ஃபீல்டுல இருந்துகிட்டு
 இந்த மாதக்கடைசிய
கடக்க படும்பாடு இருக்கே....
ஸ்ஸ்ஸப்பாஆஆஆ....
#வேதனையான_சாதனை
சொந்த பந்தங்களை மறந்து,
வாழ்க்கையின் நோக்கங்களை மறந்து,
பசி மறந்து,தூக்கம் மறந்து,நல்லது கெட்டது எல்லாம் மறந்து,
கடமையை நோக்கி பயணிக்கும்
 நம் வாழ்வில்
என்றும் சோதனையான சாதனைகள் தான்😢

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

அருமையான தலைப்பு ....

...ஏட்டு கல்வியை விட அனுபவக்கல்வியே வாழ்க்கைக்கு சிறந்தது.புத்தகங்களில் வுள்ள எழுத்துக்களை வாழ்வில் பயன்படுத்துவது குறைவே.அதே சமயம் பெரியவர்கள் தன் வாழ்வில் பல சமயங்களில் நடந்த அனுபவ நிகழ்வை நம்மிடம் சொல்லியே நம்மக்கு அனுபவ அறிவை புகட்டுகிறார்கள்.ஏட்டு சுரைக்காய் கறிக்கு வுதவாது என்பதை நம் பெரியவர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். இன்று பல பள்ளிகளில் கூட புத்தகத்தை பின் பற்றுவதைவிட ப்ராக்டிகலாக பிள்ளைகளுக்கு புரியவைபதையே விரும்புகிறார்கள்.வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வும் நம்மக்கு ஒரு பாடமே. அதை நம் சந்ததிகளுக்கு புரிய வைப்பதே அனுபவமாகும்.இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு 3 வயதானதுமே நர்சரியில் சேர்த்துவிடுகின்றனர்.இப்பொழுதெல்லாம் இந்த நர்சரியிளெல்லாம் அனுபவ படிப்பையே அங்கும் சொல்லி கொடுக்கின்றனர்.அந்த குழந்தைகளை மார்க்கெட், ஆஸ்பிடல்,போன்ற இடங்களுக்கு கூட்டி சென்று அங்குள்ளவர்களை பற்றியும் காய்கறிகளை பற்றியும் அதன் நிறங்கள் பற்றியும் சொல்லிகொடுக்கின்ற்றனர்.இதனால் குழந்தைகளுக்கு பழம்,காய்கறிகள், அதன் நிறம் அனைத்தையும் எளிதாக புரிந்து கொள்கின்றனர்.புத்தகத்தை பார்த்து கற்று கொண்டால்கூட இந்த அளவுக்கு புரியவைக்க முடியாது.இது பல பிள்ளைகளிடம் நான் பார்த்த அனுபவ பாடமே.

வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் அனுபவமே நமக்கு துணை புரிகிறது.சமையலிலிருந்து,கம்ப்யூட்டர் வரை நாம் படிப்பதை விட அனுபவமாக கற்று கொள்வதே அடுத்தமுறை நாம் தவறு செய்யாமல் இருக்க வுதவுகிறது.

இன்று நம் குழந்தைகளின் கணித புத்தகத்தை பிரித்துப்பார்த்தால் நமக்கே தலை சுற்றுகிறது.a2 +b2 என்று படித்துகொண்டிருக்கிரார்கள் இதை நம் வாழ்வில் வுபயோகிக்க முடியுமா சொல்லுங்கள் .அதே பிரச்டிகாலாக சொல்லி கொடுக்கப்படும் கணிதம் தான் வாழ்வில் நம்மக்கு வுபயோகமாக இருக்கும்.ஆங்கிலம் பேச வேண்டுமென்றாலும் புத்தகத்தை படித்தால் படித்தால் வந்துவிடாது.யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் பேச பேச தான் வரும் என்று.ஒரு மாதத்தில் மொழி கற்று கொள்ளலாம் என பல புத்தகம் வந்தாலும் அதை பயன் படுத்தி யாரவது மொழி கற்று கொண்டார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். இது போல வாழ்வில் ஒவ்வொன்றும் அனுபவத்தின் மூலமாக கற்று கொள்வதே நம்மக்கு வாழ்வில் பல சமயங்களில் கை கொடுக்கும்....எனது செல்ல ஷ்யாமுக்கு ..பள்ளியில் படித்த பாடங்களை சிறுவயதில் வீட்டுக்கு வந்து  ..youtube -ல் பாடல்களுடன் கற்றுக்கொடுத்தேன் ...ஆர்வமாக பிடித்துக்கொண்டான் ...பள்ளியில் கேட்கும் பாடல்களை தங்கு தடையின்றி வகுப்பில் ஆசிரியரிடம் பயமின்றி பதில் அளித்து தன் அறிவான மாணவனாக திகழ்ந்தான் 

சமுதாயத்தில் இன்றைய திரைப்படங்களின் தாக்கம் ..

 விவாத தலைப்பை நூலகர் கணேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....எனது தந்தை என் சிறுவயதில் 32 வருடங்களுக்கு முன் நம் வீட்டு பக்கத்தில் இருக்கும் ப்ரோவ் தியேட்டர் ,கல்பனா தியேட்டரில் நடிகர்கள் எம் ஜி ஆர் ,சிவாஜி ,ஜெமினி ,நாகேஷ் நடித்த படங்களை கூட்டிக்கொண்டு போய் பார்த்த நினைவுகள் திரும்பி மலரும் நினைவுகளாக மலர்ந்திருக்கிறது ..என் தந்தை மறைந்து 3 மாதங்கள் ஆகின்றன ...இரண்டு தினங்களாக அவரின் ட்ரங்கு மரப்பெட்டியில் வைத்திருந்த ..பழைய சினிமா பாட்டுப்புத்தகங்கள் ,கதைவசன புத்தகங்கள் ,தளி ரோட்டில் நூலகம் எதிரில் இருந்த மசால் பொறிக்கடையில் வாங்கிய பாட்டு புத்தகங்கள் ,அப்பொழுதெல்லாம் திரைப்படங்கள் வரும் பாடல் புத்தகங்கள் விற்பனை செய்துள்ளார்கள் அப்பொழுது வாங்கிய பொக்கிஷமாக வைத்திருந்தார் ...நேற்று பார்த்தபொழுது என் தந்தை மறைந்தாலும் விவாத தலைப்பு என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டது ..எப்படி சினிமா புத்தகங்கள் வாங்கும் பழக்கம் வந்தது என்றால் ஒருமுறை தந்தையுடன் கேட்டுள்ளேன்...மறைந்த தலைமை ஆசிரியர் ..திரு ஜெகநாதன்  -(தமிழ் )..விளையாட்டு துறை ஆசிரியர் .திரு .கிருஷ்ணமூர்த்தி ..நண்பர்களாக இருந்தபொழுது .தியேட்டரில் படம் பார்க்க சென்றால் அப்படியே புத்தங்களை மறக்காமல் வாங்கி பத்திரப்படுத்த வைத்துள்ளார்கள் ..இன்று மேலே சொல்லும் யாவரும் இப்பொழுது இல்லை ..கடைசியாக கல்பனா தியேட்டரும் கடந்த மாதத்தில் தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது ...வித்யாசாகர் கல்லூரியில் படித்த முடித்தவுடன் ..ஒரு வருடம் வேலை தேடும் படலமாக சென்னையில் ..வடபழனி ..அசோக் நகர் ..பகுதியில் குடியிருந்தபோது ..நண்பர்களாக சினிமா டைரக்டர் ஆகும் கனவோடு ..நடிகராக கனவுகொண்டு நான்கு நண்பர்களுடன் இருந்தபொழுது ...ஸ்டுடீயோ களில் வலம்வந்த நினைவுகள் வந்துபோகிறது அதன் தாக்கம் ..சினிமாவை பற்றி தகவல்களை என்னால் தரமுடிகிறது ...

மக்களாட்சி தமிழ்ச் சமூகத்தின் போக்கினை மிகச் சுலபமாக இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். திரைப்படங்கள் உருவானதற்கு முன், திரைப்படங்கள் உருவானதற்குப் பின் என்று...
                தமிழகத்தின் அரசியல், தமிழர்களின் இயல்பு, உரையாடல் நடை, உடை, பாவனைகள் எல்லாவற்றையும் தமிழ்த் திரைப்படங்கள் தீர்மானித்தன. தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. வட இந்தியாவில் ஒரு அரசியல் தலைவருக்கு சாதாரணமான காய்ச்சல் என்றால் கூட கட்சி வேறுபாடுகள் களைந்து, அவர் நலம் பெற எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். நேரிடையாக சந்திக்கும் போது மனமாச்சர்யங்களைக் களைந்து, சகஜமாகப் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தனது வாரிசு எதிர்க்கட்சியிலுள்ள தலைவரின் வாரிசை காதலித்து மணம் புரிய நேரிட்டால், திருமணத்துக்கு சம்மதம் இருந்தாலும், தலைமை விரும்பவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாரிசுகளின் தந்தையே திருமணத்துக்குப் போகாமல் புறக்கணித்து விடுகிறார்கள்.
                எதிரியின் வீட்டில் கை நனைப்பதும், உறவு கொள்வதும் இல்லை என்கிற மனோநிலையோடு இயங்குவது நம் சினிமாவிலிருந்து நாம் பெற்றதன் விளைவு தான் நம் அரசியல் சூழல்.
                இந்தியாவிலுள்ள திரையரங்குகளில் 25 சதவீதம் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன என்கிறார் திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன். அந்த அளவுக்கு தமிழ்ச்சமூகம் திரைப்படங்களுக்கு இடம் கொடுத்துள்ளது.
                ஓ.எஸ். பன்னீர் செல்வத்தைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் தொடர்ச்சியாக 46 வருடங்கள் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களே தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில் இருந்து வந்திருக்கிறார்கள். எனவே திரைப்படங்கள் தீண்டத்தகாத பொருளாகக் கருதி விலக்கி வைத்துவிட்டு எளிதில் நகர்ந்து சென்று விட முடியாது.
                மெளனப் படம் ‘கீசக வதம்' (1916) மூலம் துவங்கிய தமிழ் சினிமா வரலாற்றில் சலனப்படங்களாக இருந்தவரை, அது ஒரு மாயாஜால வித்தையாகவே இருந்துள்ளது. பேசும் படங்கள் வர ஆரம்பித்த போது சமூகத்தோடும் சினிமாவிற்குமான பிணைப்பு பிரிக்க முடியாத பந்தமாகிவிட்டது.
                1931-ல் வெளிவந்த ‘காளிதாஸ்' தான் தமிழ்க்குரல் கேட்ட முதல் படம். ஆனால் முழுக்க முழுக்க தமிழ்ப்படமல்ல. கதாநாயகன் பி.ஜி.வெங்கட்ராமன் தெலுங்கில் பேச கதாநாயகி டி.பி. ராஜலட்சுமி தமிழில் பேச, அந்த திரைப்படத்தில் நடித்த சில துணைக் கதாபாத்திரங்கள் ஹிந்தியில் பேசினர்.
                ஹனுமப்ப முனியப்ப ரெட்டி என்னும் ஆந்திராவைச் சேர்ந்த HM ரெட்டி, இந்திய பேசும்படமான ‘ஆலம் ஆரா'வை இயக்கிய அர்தேஷ் இரானியிடம் பணிபுரிந்தவர்.
                முதன் முதலாக திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் இந்தியில் பேசுவதைக் கேட்டு, இந்த ஒலிப்பதிவுக் கருவிகள் மற்ற மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் சொற்களைப் பதிவு செய்யுமா என்ற சந்தேகம் ரெட்டிக்கு வந்தது. அதன் காரணமாக, தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, ‘காளிதாஸ்' படத்தை எடுத்தார். தெலுங்கில் வெளிவந்த முதல் பேசும் படமான ‘பக்தப் பிரகலாதா'வை இயக்கியதும் அவர்தான்.
                காளிதாஸ் படத்தின் படச்சுருள்கள் மும்பையின் ஸ்டுடியோக்களில் பிரதி எடுக்கப்பட்டு சென்னைக்கு இரயிலில் வந்த போது மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி தியேட்டர் வரை எடுத்து வரப்பட்டது. அன்று தொடங்கிய ஆராதனை இன்றுவரை நிற்கவேயில்லை.

                சென்னையில் ‘சினிமா சென்டிரல்' என்ற திரையரங்கில் படம் திரையிடப்பட்டபோது. பலத்த கைதட்டல்கள், விசில்கள் பறந்தன. ‘காளிதாஸ்' புராண காலத்துக் கதை என்றாலும் இந்திய விடுதலைப் போராட்ட உணர்வுகளோடு இரண்டு தேசபக்தி பாடல்களை இணைத்திருந்தனர். கதைக்கும் அந்தப் பாடல்களுக்கும் என்ன சம்பந்தம் என்று ரசிகர்கள் கேட்கவில்லை. (இப்பொழுதும் அப்படித்தானே)
                ஏனெனில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து குரல் கொடுக்க அன்றைய கலைஞர்கள் நாடகம் எனும் ஊடகத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தினர். தேசபக்திப் பாடல்கள் இடம்பெறாத நாடகங்கள் அன்றைய காலகட்டத்தில் மேடையேற்றப் படுவது அரிது. அது வள்ளித் திருமணமாக இருந்தாலும், பவளக் கொடியாக இருந்தாலும் கண்டிப்பாக தேச விடுதலைக்கான வேட்கையுடன் காட்சிகளையும், பாடல்களையும் சேர்த்து நாடகங்கள் அமைக்கப்பட்டன.  டி.கே.எஸ். சகோதரர்கள் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை தேசபக்திப் பிரச்சாரத்துக்காக உருவாக்கி நடித்தனர்.
                நாடகங்களின் நீட்சியாகத்தான் திரைப்படங்களை அன்றைக்குக் கையாண்டனர். சிவபெருமான் வேடமிட்டாலும், முருகன் வேடமிட்டாலும் காந்தியை வாழ்த்தியும், தேசபக்தியை மெச்சியும் பாடிவிட்டுச் செல்வது ஒரு முரணாகக் கருதப்படவில்லை.
                அந்த பாணியில் திரைப்படங்களிலும் அப்படியான பாடல்கள், காட்சிகள் தொடர்ந்தன. தமிழில் வெளியான முதல் பேசும் படமான ‘காளிதாஸ்' படத்தில் “இந்தியர் ஏனோ நமக்குள் வீண் சண்டை?” மற்றும், “ராட்டினமாம் காந்தி கை பாணமாம்” ஆகிய இரண்டு பாடல்களும் இடம்பெற்றன. மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி இசையமைத்த அந்தப் பாடல்களை டி.பி.ராஜலட்சுமி பாடினார்.
                பாஸ்கரதாஸ் தான் தமிழ்ச் சினிமாவின் முதல் பாடலாசிரியர், இசையமைப்பாளர். துவக்ககாலத்தில் பாடல் எழுத வந்தால் அதற்கு பாடலாசிரியர்தான் இசையமைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. பாஸ்கரதாஸ் நாடக உலகில் கொடிகட்டிப் பறந்தவர். நடிப்பு, இசை, பாடல் இயற்றுதல், நடிக்கவும் ஆடவும் கற்றுக் கொடுத்தல் என பல்கலை வித்தகராக இருந்தவர். சிறை தண்டனைக்கோ, அடக்குமுறைக்கோ அஞ்சாதவர். எழுதுகின்றவாறே தன் வாழ்க்கையையும் வாழ்ந்து காண்பித்தவர். காங்கிரஸ் இயக்கம் இவரை எல்லாம் கொண்டாடியிருக்க வேண்டும்.
                ஆனால், நாடகக் கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள் குறித்த உயர்வான அபிப்ராயம் பெரும்பாலான காங்கிரஸ்காரர்களுக்குக் கிடையாது.
                பணம் தந்தால் நடித்து விட்டுப் போவது போல் அரசியல் நிகழ்வுகளிலும் அவர்கள் இருக்க வேண்டுமென்று பெரும்பாலான காங்கிரஸ்காரர்கள் நினைத்தார்கள். சத்தியமூர்த்தி போன்ற ஒருசில தலைவர்கள் திரைக் கலைஞர்களை காங்கிரஸ் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினர் என்றாலும் காங்கிரஸின் தீண்டத்தகாதோர் பட்டியலில் திரைப்படங்களும் நாடகங்களும் இருந்தன.
                ஆனால், திராவிட இயக்கம் மிகச் சரியாக கலைஞர்களையும் திரைப்பட ஊடகங்களையும் பயன்படுத்தியது.
                காங்கிரஸ் இயக்கத்துக்கு தன்னிச்சையாகவே கலைஞர்கள் தங்கள் திரைப்படங்களுள் ஆதரவாக காட்சிகளை உருவாக்கினார்கள். கே.பி.சுந்தராம்பாளின் கணீர் குரலில் ஒலித்த தேசபக்திப் பாடல்கள் காங்கிரஸ் இயக்கத்தை வலுப்படுத்தியது. சத்தியமூர்த்தி தான் அதை உணர்ந்து காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்ட சமயங்களில் கே.பி.சுந்தராம்பாள் மற்றும் வி.நாகையா போன்ற கலைஞர்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினார். காங்கிரஸுக்கு ஆதரவாக நாடகங்கள் மற்றும் செய்தித் திரைப்படங்களும் சத்தியமூர்த்தியின் துணையோடு பிரச்சார நோக்கில் கொண்டு செல்லப்பட்டன. சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராக காலடி எடுத்து வைத்ததன் மூலம் கே.பி.எஸ். சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் பதவி பெறும் சூழலை உருவாக்கிய முதல் திரைத்தாரகை. அன்று துவங்கிய சினிமா நட்சத்திரங்களின் அரசியல் ஆதிக்கம் இன்று வரை இந்தியாவில் நீடிக்கிறது. குறிப்பாகத் தமிழகத்தில்...
                (தேசப்பற்று காரணமாக கே.பி.எஸ். இயல்பாக அரசியலில் நுழைந்தாரோ அதுவோலவே தமிழகத்தின் திராவிட இயக்கம் வலுப்பெற்ர போது, கே.ஆர்.ராமசாமி, எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கே., எஸ்.எஸ்.ஆர். ஆகியோர் இயல்பாக அந்தக் கொள்கைகளின் மீதான ஈர்ப்பால் அரசியலுக்குள் நுழைந்தனர்.)
                காளிதாஸுக்குப் பிறகு வெளிவந்த படங்களில் தேச முன்னேற்றம், தியாக பூமி, சேவாசதனம், மாத்ருபூமி, பக்த சேதா ஆகிய படங்கள் தேசபக்தியைத் தூண்டுவதாகவும், சமூகக் கொடுமைகளை வெளிச்சமிட்டும் காட்டிய முக்கியமான படங்கள்.
                மிக பிற்போக்குத்தனமான காலகட்டமாக இருந்த 1940-களில் சாதிக்கொடுமைகள், குடும்ப வன்முறைகள், மூடப்பழக்கவழக்கங்கள், ஆகியவற்றைச் சாடி மிகத் தைரியமாகப் படமெடுத்த இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்கள்.
                ‘சேவா சதனம்' எனும் படம் பிரபல இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த்-தின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. தந்தையின் வயதை ஒத்த முதியவர் நடேச ஐயரைவை மணக்க நேரிடும் இளம் பெண் எம்.எஸ். சுப்புலட்சுமியை, சந்தேகத்தின் பெயரால் சதா துன்புறுத்திக் கொண்டிருக்கிறார் கணவனின் சகோதரி குண்டம்மாள். அவரும், நடேசனும் சேர்ந்து சுப்புலட்சுமியைவீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள். தன் குரல் இனிமையால் புகழ் பெறும் சுப்புலட்சுமியை கணவன் இறுதியில் புரிந்து கொள்கிறான். கதை வழக்கமான ஒன்றுதான் என்றாலும் படத்தின் இறுதிக் காட்சியில் தனது பிற்போக்குத் தனமான குணத்துக்குக் காரணமாகக் கருதும் பூணூலைக் கழற்றி விடுகிறார் நடேச ஐயர். அன்றைய காலகட்டத்தில் பரபரப்பான காட்சியாக கருதப்பட்ட இப்படம், இதன் காரணமாகவே பலரது எதிர்ப்பை சம்பாதித்தது. ஒருபுறம் பலத்த வரவேற்பையும் பெற்றது. குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளைப் பிரதானமாகக் கொண்ட இந்தப் படத்தில் கூட ‘தேச சேவை செய்ய வாரீர்' என்ற பாடலை இடம்பெறச் செய்துள்ளார் இயக்குநர் கே.சுப்ரமணியம்.
                அன்று ஆனந்த விகடனில் தொடராக வெளியான, அதே சமயம் திரைப்படமாகவும் உருவாகி பெரும் எதிர்பார்ப்பையும், பல புதுமைகளையும் படைத்தது அமரர் கல்கியின் ‘தியாக பூமி'.
                தொடர்கதையாக வெளிவரும்போதே அதன் திரைப்படக் காட்சிகள் புகைப்படங்களாக பொருத்தமான இடங்களில் அச்சில் இணையாக இடம் பெற்றன.
                தேசப்பற்று இல்லாத கணவன் தேசத்துக்கு விரோதமான செயல்களைச் செய்ததால், அவனது மனைவியாக இருக்க விருப்பமின்றி தனது தாலியை கழற்றி தூக்கி எறிந்து விடுகிறாள் கதாநாயகி. இன்னொரு புரட்சிகரமான முடிவை தைரியமாக படத்தில் காட்சியாக்கினார் இயக்குநர் கே.சுப்ரமணியம்.
                படம் வெளியான சமயத்தில் நீதிக்கட்சி ஆதரவோடு இராஜாஜி சென்னை மாகாணப் பிரதமராக (அன்றைக்கு அதுதான் பெயர்) இருந்த காரணத்தினால், படம் தணிக்கையோ, தடையோ இன்றி வெளியானது. ஆனால், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு ஆதரவளிக்காமல், காங்கிரஸ் வெளியேறியதால், பிரிட்டிஷார் காங்கிரஸ் ஆதரவுப் படம் என்ற காரணத்தின் அடிப்படையில் ‘தியாக பூமி'யை தடை செய்ய முடிவெடுத்தனர்.
                படம் வெளியாகி 22 வாரங்கள் கடந்த நிலையிலும் சென்னை கெயிட்டி தியேட்டரில் படத்தைப் பார்க்க கூட்டம் அலைமோதியது.
                படத்தைத் தடைசெய்வதை எதிர்த்து ஆங்காங்கே மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். எழுத்து மூலமாக தடை உத்தரவு திரையரங்கு அதிபர் கையில் கிட்டும் வரை படத்தை இடைவெளியின்றி தொடர்ந்து ஓட்டினால் எல்லோரும் பார்க்க வசதியாக இருக்கும் எனக் கருதிய படத்தின் அதிபர் எஸ்.எஸ்.வாசனும், இயக்குநர் கே. சுப்ரமணியமும் ‘குறுகிய காலத்துக்குள் பணம் சம்பாதித்திட வேண்டும் என்கிற வணிக எண்ணமின்றி' இலவசமாகத் தொடர்ச்சியாக திரையிட்டனர்.
                தடையுத்தரவு திரையரங்கு அதிபரிடம் வரும் போதும் படம் ஓடிக்கொண்டிருந்தது. காவல்துறையினர் படத்தை உடனடியாக நிறுத்தும்படி நிர்பந்தித்தனர். ஆனால், படத்தை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அதற்கு எதிராகக் குரல் எழுப்பினர். முடிவில் திரையரங்குக்கு உள்ளேயே தடியடி நடத்தி அனைவரையும் வெளியேற்றி படத்தை நிறுத்தினர். திரையரங்குக்கு வெளியே கட்டுக்கடங்காத கூட்டத்தை கலைக்க பலமுறை தடியடி நடத்திய காட்சிகளை தமிழகம் கண்டிருக்கிறது. ஆனால், திரையரங்குக்கு உள்ளேயே தடியடிப் பிரயோகம் நடந்தது ‘தியாகபூமி' திரையிடலின் போதுதான். படத்தில் மகாத்மா காந்தி ராட்டினத்தில் நூல் நூற்கும் காட்சி ஒன்று துண்டுப் படமாக இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
                கே.சுப்ரமணியன் புரட்சிகரமான படங்களை இயக்கியது மட்டுமல்ல, திரைத் துறைக்கு அற்புதமான நடிகர்களையும் அறிமுகப்படுத்தியவர். எம்.கே. தியாகராஜ பாகவதர், எம்.எஸ். சுப்புலட்சுமி, பி.எஸ். சரோஜா, எஸ்.டி. சுப்புலட்சுமி (பின்னாளில் இவரையே சுப்ரமணியம் மணந்தார்),டி.ஆர். ராஜகுமாரி போன்ற பலரை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்குண்டு. ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை' தோன்றக் காரணமாக இருந்தவரும் இவர்தான்.
                கதையும், இயக்குநர்களும் கோலோச்சிய காலத்தில் புயலென நுழைந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். தனது வாழ்நாளில் மொத்தம் 14 படங்களே நடித்தாலும் தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் இவர்தான். இவர் நடித்த சிவகவி ஒருவருடம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. அந்தச் சாதனையை இவர் நடித்த ஹரிதாஸ் முறியடித்தது. மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடி இன்றளவும் தகர்க்க முடியாதபடி சாதனையை நிகழ்த்தியது.
                அவரது குரல் வளமும், நடை, உடை, பாவனைகளும் தமிழகத்தை ஒரு காய்ச்சல் போலப் பற்றிக் கொண்டது. பாகவதர் கிராப், பாகவதர் ஜிப்பா என்று தமிழகத்தில் உடைக்கலாச்சாரத்தையும், உருவ அமைப்பையும் மாற்றிய வலிமை தியாகராஜ பாகவதருக்கு இருந்தது.
                நாயகர்களைத் துதி பாடும் மனோபாவம் இவர் காலத்தில் துவங்கியதே. இவரைப் பற்றிப் பல்வேறு கதைகள் பரபரப்பாக உலவின.
                பத்து விரல்களிலும் பத்து மோதிரங்கள் மாட்டிக் கொண்டு, வெள்ளிச் சங்கிலி பூட்டிய தங்க ஊஞ்சலில் தான் அவர் சதா ஆடிக் கொண்டிருப்பார் என்று அண்ணாந்து பார்த்து ஆராதிக்கும் மோகம் இவரது காலத்தில்தான் தான் துவங்கியது. பின்னாளில் தகதகவென மின்னுவதற்கு எம்.ஜி.ஆர். தங்க பஸ்பம் சாப்பிட்டார் என்பது தொடர்ந்து இன்றளவும் நாயக மோகம் பரவித் திளைக்கிறது.
                நாடகங்களில் மிக அதிகமான பாடல்கள் இடம் பெற்றால்தான் அது நாடகத்துக்குப் பெருமை என்ற எண்ணம் எல்லா நாடகக் கலைஞர்களுக்கும் இருந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களையும் பார்த்ததினால், ஒவ்வொரு படத்துக்கும் அதிகமான பாடல்கள் இடம் பெறுவது வழக்கமானதாகி விட்டது. எல்லிஸ் ஆர். டங்கன்  போன்ற இயக்குனர்கள்  வந்த பிறகு பாடல்களை குறைக்கும் முயற்சி தொடங்கியது. கலை என்ற கண்ணோட்டத்தில் பார்த்ததில் நாடகத் தாக்கத்திலிருந்து  திரைப்படங்கள் வெளிவர பன்னெடுங்காலம் ஆகியது. பாரதிராஜா திரைத்துறைக்கு வரும் வரை அது தப்பிக்க முடியாத பழக்கமாகவே இருந்து வந்தது.
                ஆனால், பம்மல் சம்பந்த முதலியார்  நாடகத்தில் இடம் பெறுவது போல் திரைப்படத்தில் பாடல்கள் தேவையல்ல என்றும், படத்தின் நீளமும் நாடகத்தில் உள்ளது போல அதிகம் இருக்கத் தேவையில்லை என்றும் அன்றைக்கே குறிப்பிட்டு இருந்ததை அவரது தீர்க்கதரிசனமான கருத்தை எவரும் கவனிக்கவே இல்லை.
                வங்கத் திரைப்பட உலகம் சத்யஜித்ரே, ரித்விக் கத்தக் போன்ற உன்னதமான இயக்குநர்களின் அபாரமான படைப்பியக்கங்களால் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது, தமிழ்த் திரையுலகம் ஜனரஞ்சக பூச்சுக்களுடன் தன்னை அலங்கரித்துக் கொள்வதிலிருந்து விடுபடவில்லை. தமிழில் புரட்சிகரமான சிந்தனையினை இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கொண்டிருந்தாலும் அதனை கலை நேர்த்தியுடன் வெளிப்படுத்த அப்பொழுது இயலாமல் போயிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.
                எம்.கே. தியாகராஜ பாகவதர் லட்சுமிகாந்தன் வழக்கில் சிறை சென்ற போது நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி அந்த இடத்தைப் பிடித்தார். திராவிட இயக்கப் பற்றுக் கொண்ட அவர், அதே அளவு ஈடுபாடு கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் தங்களது திரைப்படங்கள் வாயிலாக திராவிட இயக்க, பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி வந்தனர்.
                சி.என். அண்ணாதுரை தமிழகமெங்கும் பரவலாக புகழ்பெற்ற சமயம் வேலைக்காரி, நல்ல தம்பி, ஓர் இரவு ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதியதன் மூலம், அந்தப் படங்கள் தமிழ்ச் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. திரையுலகையும், திரைக்கலைஞர்களையும் எப்படி அரசியலுக்குப் பயன்படுத்துவது என்பதில் வித்தகர் அண்ணா.
                எம்.ஆர்.இராதா என்கிற தன்னிகரற்ற கலைஞர், நாடகம், திரைப்படம் இரண்டிலும் சமரசமின்றி தனது பாணியில் இயங்கியவர். திரைப்படத் துறையில் தனது கருத்துக்களுக்கு முரணான எண்ணங்களுடன் இயக்குநர்கள், கதையையும் பாத்திரப்படைப்பையும் உருவாக்கியபோது, சினிமாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று திரும்பவும் நாடகத் துறைக்கே வந்து விட்டார். நடிப்பில் தனக்கென்று ஒரு பாணி, கருத்துக்களில்  அசைக்க முடியாத நம்பிக்கை, துணிச்சலான போக்கு இவற்றின் காரணமாக தனித்த ஆளுமையைப் பெற்றவர் எம்.ஆர்.ராதா. இன்றைக்கும் அவருக்கு இணையான நடிப்புத் திறனோ, கொள்கைப் பிடிப்போ, தைரியமான செயல்பாடுகளோ கொண்ட மற்றொரு கலைஞனை காண்பதரிது.
                அவரது இரத்தக்கண்ணீர் நாடகம் நாடெங்கும் தீயைப்போலப் பரவியபோது அதனை திரைப்படமாக்க பெருமாள் முதலியார் விரும்பினார். ஆனால், வில்லனைப் போல் சித்தரிக்கப்படும் கதாநாயகனாக நடிக்க பலருக்கும் தயக்கம். சினிமாவுக்கே வரமாட்டேனென நாடகத் துறைப் பக்கம் போன எம்.ஆர்.ராதாவை தேடிப் பிடித்து அழைத்து வந்து அவரையே நடிக்க வைத்தார் பெருமாள் முதலியார். திருவாரூர் தங்கராசு திரைக்கதை வசனத்தில்  எம்.ஆர்.ராதாவின் இணையற்ற உடல்மொழி, வசன உச்சரிப்பு, ஒப்பனை காரணமாக படம் திரையரங்குகளில் வசூலைக் குவித்தது. காலம் கடந்தால் பழமை புளிக்கும் என்பார்கள், ஆனால் இன்றைக்கும் திரையிட்டால் பார்க்க அலுக்காத சில திரைப்படங்களில் இரத்தக் கண்ணீரும் ஒன்று.
                இளங்கோவன், சி.என்.அண்ணாதுரை கோலோச்சிய வசனத் துறையில் மு.கருணாநிதியின் வருகை மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. வி.சி.கணேசன் என்கிற மகத்தான கலைஞனை அறிமுகப்படுத்திய பராசக்தி, மனோகரா, எம்.ஜி.ஆர். நடித்த மந்திரகுமாரி, திரும்பிப் பார் ஆகிய படங்கள் மூலம் திராவிட இயக்கக் கருத்துக்கள் திரைப்படங்கள் வழியே சென்றதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் அளவு வளர்ந்தது. ‘தணிக்கை என்ற ஒன்று இல்லாவிட்டால் திராவிட நாடு பிரகடனத்தை திரைப்படம் மூலம் சாத்தியமாக்கிட முடியும்' என்று அண்ணாதுரை உறுதியாக சொன்னதற்குக் காரணம், திராவிட இயக்கத்தினர் திரைப்படத் துறையை எப்படி மக்கள் பிரச்சார சாதனமாக மாற்ற முடியும் என்கிற கலையை  சுலபமாக இனம் கண்டதனால் தான்.      
mgr2.jpg                                              
                சிவாஜி கனேசன் அரசியல் கட்சியில் இருந்தாரே தவிர, ஒருபோதும் அவரால் அரசியல்வாதியாக இயங்க முடிந்ததில்லை. திரையுலக வாழ்வின் துவக்க காலத்தில் சிவாஜியும், திராவிட இயக்கத்தில் தான் இருந்தார். ஆனால் திராவிட இயக்க அரசியல் பாணி அவருக்கு ஒரு மூச்சுத் திணறல் போல் இருந்திருக்க வேண்டும்.
                எனவே அவர் நீண்ட காலம் அங்கிருக்காமல் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். அவர் சிறந்த நடிகர் என்கிற மக்கள் எழுப்பியிருந்த சிம்மாசனத்தில் இருந்து வெளிவர விரும்பவில்லை. அவரது கவனம் அவருக்கு அடுத்தடுத்து கிடைத்த சவாலான கதாபாத்திரங்கள் மீதே இருந்தது.
                ஆனால் எம்.ஜி.ஆர். என்கிற மனிதர் ஒரு மேதையைப் போல் திட்டமிட்டு தனது திரைப்படங்களையும், கதாபாத்திரங்களையும், காட்சிகளையும், பாடல்களையும் உருவாக்கிக் கொண்டதை அவ்வளவு சுலபத்தில் கடந்து சென்றுவிட முடியாது. எம்.ஜி.ஆரைப் போல் எல்லாவற்றிலும் ஆளுமை செலுத்த வேண்டும் என்று நினைக்கும் நடிகர்கள் ஏனோ அவரது திட்டமிட்ட நகர்தலையும், கலை நுட்பங்களை உள்வாங்கும் திறனையும், உழைப்பையும், ஒழுக்க சீலர், நல்லவர் என்கிற பிம்பத்தையும் ஏற்படுத்தினார் என்பதை மறந்து விட்டு, தங்களது பஞ்ச் டயலாக்கை, அதற்குக் கிடைக்கும் கைதட்டல் மீது கொண்ட அதீத நம்பிக்கைகள் காரணமாக வாக்குப் பெட்டிகளை நோக்கிப் பயணிக்கின்றனர்.
                இந்த இருதுருவங்களும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம். நடை, உடை, வசன உச்சரிப்பு ஆகியன இளைஞர்களிடையேயும், பெண்களிடையேயும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. சிவாஜியின் நடையை திரையில் பார்க்கிற சமயங்களில் எல்லாம் சிலிர்த்துப் போகிற சென்ற தலைமுறை ரசிகர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
                இருவரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி படம், திரைக்கதை அளவிலும் பாத்திரப் படைப்பிலும் நிறைவான படம் தான். நண்பனின் மனைவியை பெண்டாள நினைக்கும் ஒரு சாதாரண இளைஞனை பெரும்தன்மையோடு ஏற்றுக் கொள்கிற நண்பனின் கதை. உளவியல் ரீதியாக பார்த்தால், சந்தர்ப்பம் கிடைக்காத வரைதான் ஒருவன் யோக்கியன் என்பதை அடிநாதமாக கொண்ட படம். ஆனால், திரையரங்குகளில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே மோதல் உருவானதால் படம் வெற்றி பெறவில்லை. இந்த நிகழ்ச்சி தான் இருவரையும் அதன் பிறகு சேர்ந்து நடிக்க வேண்டாம் என்ற தீர்மானம் எடுக்க வைத்தது.
                பொதுவாக, இந்தியத் தன்மை ஒன்றுண்டு. புராண இதிகாசங்கள் வழியே வாழ்க்கையைத் தரிசிக்கும் இந்தியர்கள், உலகில் நடக்கும் அத்தனை தீமைகளையும் யாரோ ஒரு அவதாரப்புருஷன், இராஜ குமாரன், தெய்வப் பிறவி தோன்றி அழித்துவிட கண்டிப்பாக வருவார் என்கிற மனோபாவம் மிக்கவர்கள். புரட்சி என்பதோ, மாற்றம் என்பதோ எங்கிருந்தோ வந்து ஒரு மாயாஜாலம் போல் குதிக்க வேண்டும். சாத்தியமற்ற அத்தனையையும் சாதித்திட அந்த மாபெரும் சக்தியால் மட்டுமே முடியும் என்கிற மனப்பான்மை கொண்டவர்கள்.
                எம்.ஜி.ஆர். மக்கள் மனதில் ஓடும் இந்த சரடை மிகக் கவனமாகக் கண்டறிந்தவர் போல் தன்னைத் தானே செதுக்கியபடி சென்றார். ஒவ்வொரு விதையையும் நிதானமாக விதைத்தார். அறுவடை நாளுக்காக நிதானமாகக் காத்திருந்தார். காலம் அவரைக் கையில் ஏற்றிச் சென்று பத்திரமாக அவரது கைகளில் அறுவடையான விளைச்சலை பதமாகச் சேர்த்தது. அவருக்கே உரிய இயல்பான ஆளுமையும், ஈகைக் குணமும், அபரிமிதமான கரிஸ்மா பவரும் திரைப்படங்களை தனக்கான வழியில் வளைத்து செலுத்தும் திறனும் இன்னொரு நபரால் முடியுமா என்பது சந்தேகமே.
             
    எம்.ஜி.ஆர். குண்டடிபட்ட சமயத்தில் அவரது உருவங்கள் தாங்கிய போஸ்டர்கள் மற்ற அனைத்தையும் விட பலமான ஆயுதமாக இருந்தது. ஆயுதம் தன் பலம் எதுவென உணர்ந்த போது தமிழக அரசியலில் ஒரு மாபெரும் திருப்பம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆர். என்கிற பிம்பத்தின் பின் ஒரு ஒளி வட்டம் சூழ்ந்தது. எம்.ஜி.ஆரை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களை வில்லன்களாகப் பார்க்கும் மனோநிலைக்கு மக்கள் தயாராகி விட்டனர்.
                மூன்று நிகழ்வுகள் மூலம் தமிழ் மக்கள் சமூகத்தின் மனநிலை, செயல்பாடுகள் ஆகியவற்றுக்கும் தமிழ் சினிமாவுக்கும் இடையேயான தொடர்பை, தாக்கத்தை அவதானிக்க முடியும்.

1.
                திரைப்படச் சுருள் முதன்முதலாக மும்பையில் தயாராகி சென்னை வந்த போது, இரயில் நிலையத்துக்கே சென்று மேளதாளத்துடன் மலர் தூவி வரவேற்ற நிகழ்ச்சி. நாடகங்கள் பரவலாக நடத்தப்பட்ட காலங்களிலேயே நடிகர்கள், பாடகர்கள் மீது தமிழ் மக்களின் பிரமிப்பான கவர்ச்சி, அவர்கள் மீது இருந்தது. லட்சியத்துக்காக பாடுபட்டு தியாகம் செய்த நாட்டுப்பற்றாளர்கள், படை வீரர்கள், விளையாட்டுப் போட்டிகளில் களம்கண்டு வெற்றி கண்ட வீரர்கள், இலக்கியத்தில் உன்னதமான ஆக்கங்களைத் தந்த படைப்பாளிகள், விஞ்ஞானிகள் ஆகியோரை நெருங்கி, அவர்களை ஆராதிக்கும் மனோபாவத்தை விட நாடகங்களின் மீதான ஈர்ப்பு எல்லை கடந்து இருந்தது. மன்னராட்சி காலத்தில் மன்னர்கள், படை வீரர்கள், புலவர்கள் மீது இத்தகைய ஈர்ப்பு இருந்திருக்கிறது. ஆனால், காலப்போக்கில் நாடக நடிகர்கள் தங்கள் ஏற்று நடித்த பாத்திரங்கள் மூலம் பரவலாக புகழ்பெறத் துவங்கியபோது அவர்களையே முருகனாக, சிவனாக, கிருஷ்ணனாக, மன்னர்களாக, வீரர்களாக, தலைவர்களாக உருவகிக்கத் துவங்கியதன் தொடர்ச்சிதான் ‘காளிதாஸ்' படச்சுருளுக்குக் கிடைத்த கொண்டாட்டமான வரவேற்பு. ஒரு விமானமோ, கணினியோ, பெண்களை கடும் உழைப்புத் துயரங்களிலிருந்து விடுதலை செய்த கிரைண்டர், வாஷிங் மெஷின் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்ட போது இத்தனை வரவேற்பில்லை
                பிற்காலத்தில், ‘வெள்ளிக்கிழமை விரதம்' என்கிற தேவர் பிலிம்ஸ் தயாரித்த படம் வெற்றிகரமாக ஓடியபோது அதில் நடித்த ‘ராமு' என்கிற ஆட்டை, படத்தின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தும் பொருட்டு. தமிழகமெல்லாம் பவனி வரச் செய்தார்.  ஆடு சென்ற இடமெல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் ஆட்டைப் பார்க்கக் கூடியது.
                அந்த சமயத்தில் வாசித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.(கவிஞர் பெயர் நினைவில்லை... மன்னிக்க)
                “ஆடு என்னவோ
                கம்பீரமாகத் தான் இருந்தது
                மக்கள்தான்
                மந்தையாகினர்”
             
                திரைப்படத்தின் ஒரு ஃபிரேமில் ஒரு ஓரத்தில் வரும் மேஜை, நாற்காலி கூட ஆராதனைக்கு உரிய தகுதி பெற்றதாகி விட்டது. நடிகைகளின் பெயரில், திரைப்படங்களின் பெயரில் சேலைகள் உடைகள் வருவது ஒரு வியாபார யுக்தியாக கருதப்பட்டது.
                கே.சுப்ரமணியத்தின் இயக்கத்தில் வெளிவந்த ‘பாலயோகினி' திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் பேபி சரோஜா மிகப் புகழ் பெற்றதன் விளைவாக, அன்றைக்கு இருந்த சோப்புக் கம்பெனி ஒன்று தனது விளம்பரத்தில் பேபி சரோஜாவின் படத்தை வெளியிட்டு பிரபலப்படுத்தியது. தன் அனுமதியின்றி மகள் படத்தை வெளியிட்ட்டது தவறு என்று சரோஜாவின் தந்தை விஸ்வநாதன் நீதிமன்றம் வரை சென்று தடையுத்தரவு பெற்றார். (பாலயோகினி வெளிவந்த சமயத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு சரோஜா என்று பெயர் அதிகமாக சூட்டப்பட்டது)

2.
                தியாகபூமி படத்துக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது திரையுலகில் நடந்த போராட்டமும் தடியடிகளும்...
                22 வாரங்கள் தொடர்ந்து ஓடிய ஒரு திரைப்படம் நிச்சயம் சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, படம் வெளிவருவதற்கு முன் தடை என்றால் மக்களிடம் அந்தப் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்கிற ஆர்வமிகுதி இருக்கும். ஆனால், ஒரு படம் வெளிவந்தபிறகு  அதற்குத் தடை என்றால் அதற்கெதிரான போராட்டங்கள் என்பது வெறும் சினிமா ஆசை மட்டும் என்று கருதிவிட முடியாது. அன்றைக்கு பரவலாக இருந்த தேசபக்தி உணர்வு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை ஆகியவையும் ஒரு காரணம். இப்படியான தன்னெழுச்சி போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவு மட்டுமே நீடிக்கும். காங்கிரஸ் இயக்கத்தினர் தான் மிகச் சரியான பாதையில் அந்த உணர்வை வழிநடத்திச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதை செய்யத் தவறி விட்டதற்கு காரணம் சினிமா மீது அவர்களுக்கு இருந்த அலட்சிய மனோபாவமே...

3.
                கூண்டுக்கிளி திரைப்படம் திரையிட்ட அரங்குகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், அதன் காரணமாக அவர்கள் இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்ததும் ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருத இடமிருக்கிறது.
                கூண்டுக்கிளி படத்தில் நடிக்க இருவரும் சம்மதித்த போதும் நடிக்கும் போதும் அவர்களுக்குள் ஏதும் ஈகோ பிரச்சனைகள் இருந்ததாக செய்திகள் இல்லை. அவர்கள் இருவரும் அந்தக் கதையின் மீதும், கதாபாத்திரத்தின் மீதும் கொண்ட நம்பிக்கையில் இணைந்து நடித்தனர். ஆனால் ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அவர்களிருவரையும் ‘சேர்ந்து நடிப்பதில்லை' என்ற முடிவை நோக்கித் தள்ளியதில் இரண்டு முக்கிய விளைவுகள் ஏற்பட்டுவிட்டன.
                ஒன்று, காலந்தோறும் திரைப்படங்களில் இரண்டு துருவங்கள் இருந்தே ஆக வேண்டும்(ரஜினி-கமல், விஜய்-அஜித், சிம்பு-தனுஷ்) என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. இதன்மூலம் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கலாம் என்ற ஆர்வத்தையும் கதைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நோக்கத்தையும் ஒரு நடிகனிடமிருந்து பிடுங்கப்படுகிறது.
                இரண்டாவது, அரசியலில் ஈடுபடும் நடிகர்கள் தேவையோ இல்லையோ ஒரு எதிரியைத் தீர்மானித்து அந்த எதிரிக்கு எதிராக தனது நடவடிக்கைகளை தீர்மானிப்பது. முதல் விளைவு கலையின் நோக்கத்தை சிதறடித்தது. நடிகர்கள் தங்களுக்கென்று தோற்றுவிக்கப்பட்ட ஒரு போலியான பிம்பத்தை கட்டிக்காக்க வேண்டிய சூழலை உருவாக்கியது. இரண்டாவது விளைவு, அரசியலில் நல்ல நோக்கத்துடன் ஒரு இலட்சியத்தை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமையை ஏற்படுத்தியது.
                எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தான் தங்கள் ரசிகர்களை சமாதானப்படுத்தி இருக்க வேண்டும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. எந்த ஒரு பிரச்சினையின்  தீர்வையும் தேவதூதர்கள் போல் வருபவர்களே தீர்மானிக்க வேண்டும் என்கிற மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கருத்தாக்கம் தோன்றுவதற்குக் காரணம். மக்களாகிய நாம்தான் எந்த தீர்மானத்தையும் உறுதியாக எடுக்க வேண்டும். மேலும் வணிக ரீதியாக இயங்குபவர்கள், மக்களின் பிரிந்துபட்டு கிடக்கும் இயல்பைத்தான் விரும்புவார்கள்.
                எம்.ஜி.ஆர். அரசியல் களத்தில் வென்றது போல் என்.டி.ஆர். ஆந்திரப் பிரதேசத்தில் வெற்றி பெற்றதும் திரையுலகக் கலைஞர்களுக்கு அதிகாரத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. தனிக்கட்சி துவங்கிய எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி, டி.ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், கார்த்திக், சீமான் போன்றோர் எம்.ஜி.ஆர். போன்ற ஒரு நிலையை எட்ட முடியாததற்குக் காரணம், சரித்திரம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான அணுகுமுறையை ஏற்காது. எம்.ஜி.ஆர். மற்றும் என்.டி.ஆர். மீதிருந்த பிம்பம், ‘ஒரு அவதார புருஷன்' என்கிற மாதிரியான உச்சபட்ச தோற்றம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு கிடைத்த வெற்றிடத்தை ஜெயலலிதா நிரப்பினார். கருணாநிதி மீதான எதிப்பு அரசியலை எம்.ஜி. ஆருக்குப்பின் ஜெயலலிதா தொடர்ந்தார்.  ஜெயலலிதா ஒரு பெண்ணாக அதுவும் நடிகையாக இருந்தவர். இதன் காரணமாக அவர்மீதான ஏளனப்பார்வை, விமர்சனங்கள் இவை எல்லாவற்றையும் தாண்டி இன்று முதல்வர் என்கிற நிலையை எட்டியதற்கு அவர் தனது ஆளுமையால் எழுப்பியிருந்த இரும்பு கோட்டை போன்ற ஒற்றை மைய அதிகாரத் தன்மையே காரணம். அவரளவில் அப்படியொரு மையத்தை ஏற்படுத்தாவிடில் அவர் இத்தனை காலம் அரசியலில் நீடித்திருக்க முடியாது.
                எப்படியிருந்தாலும், தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்கிற நிலையை உருவாகி விட்டது. இந்த சூழலில் திரைப்படத்துறை சார்ந்தவர்கள் அரசியலில் இறங்கக் கூடாது அப்படி இறங்கத் தகுதியில்லை என்று ஒரு சாரரும், அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று ஒரு சாரரும் தங்கள் கருத்துக்களை விதைத்து வருகிறார்கள்.
                வாக்களிக்கத் தகுதி பெற்ற அனைவரும் அரசியலில் இறங்கலாம்.அது ஒவ்வொருவரின் பிறப்புரிமை. அதை யாரும் தடுத்துவிட முடியாது.
                ஆனால், அரசியலில் மாற்றம் என்பது, சித்தாந்த ரீதியாக இருக்க வேண்டுமே தவிர தனி நபர் கவர்ச்சியினால் இருக்கக் கூடாது. அரசியலுக்கு வர நினைக்கின்ற எவரும் நடப்பு அரசியலில் இருந்து ஒரு மாற்று அரசியலை முன் வைக்க வேண்டும்.
                காந்தியக் கொள்கைகள் இருந்த காலத்திலேயே சுபாஷ் சந்திரபோஸ், திலகர் போன்றோர்  முன்வைத்த வேறுபட்ட கொள்கைகள் அணுகுமுறைகள், அவர்களுக்கு இணையான காலத்தில் தோன்றி வளர்ந்த பொதுவுடமை கொள்கைகள் எப்படி இருந்தனவோ...  அதற்குப் பிறகு, திராவிட இயக்கக் கொள்கைகள், அகண்ட பாரதத்தை முன் வைத்த ஜனசங் இயக்கத்தினர், நக்சல்பாரிகள் என்று வெவ்வேறு தளத்தில் இயங்கியதால், ஒரு தத்துவார்த்தமான விவாதம் நிகழ வாய்ப்பு இருந்தது. ஆனால், தனிநபர் அரசியல் என்பது நோக்கமோ, வரைபடங்களோ, உபகரணங்களோ இன்றிப் பயணிக்கும் ஒரு நிராயுதபாணியின் பயணம் போலத்தான் இருக்கும்.
                திரைத்துறையினருக்கு இருக்கின்ற மிகப்பெரிய அனுகூலம், அவ்ர்களுக்குக் கிடைக்கும் பரந்துபட்ட அறிமுகம். ஒரு சாதாரண மனிதன் தனது  உருவத்தைப் பதிய வைக்க பல வருடங்களையும், இரவு பகல் பாராத உழைப்பையும் தரவேண்டும். அப்படியும் கூட அதற்கான சாத்தியம் 100க்கு 10 சதவீதம்தான். எனவே, திரைத்துறையினர் தங்களுக்குக் கிடைத்த இந்த மகத்தான வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கான கொள்கைகளை நேர்மையான முறையில் உருவாக்க வேண்டும். அரசியல் சிந்தனையும், அறமும் கொண்ட அறிவார்ந்த திறமைசாலிகளை உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
                இந்த சூழலில் இன்னொரு செயல்பாட்டையும் நாம் கவனமாக ஆராய வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் ஆங்காங்கே தோன்றும் ரசிகர் மன்றங்கள். ஒரு படத்தில் அரிதாரம் பூசியவர் தோன்றி விட்டாலே அவருக்கு மதுரையில் ஒரு ரசிகர் மன்றமும் கூடவே தோன்றிவிடும் என்பார்கள். இவர்கள் எல்லாம் அறியாமையாலும், சினிமா கவர்ச்சியாலும் இப்படி ஆகிவிட்டதாக ஒருசிலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் சிந்திக்கத் தெரியாத அப்பாவிகள் அல்ல.
                இன்றைய கால கட்டத்தில் ஒரு சாதாரண அரசியல் இயக்கத்தில் ஒரு நகர செயலாளராகவோ, மாவட்ட செயலாளராகவோ, தேர்தலில்  போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளராகவோ வருவதற்கு பல லட்சங்களையும் கடுமையான பின்புலம், தந்திரங்கள் என சகல விதங்களிலும் உழைக்க வேண்டும். ஆனால் ஒரு திரைப்பட நடிகர் அரசியலில் இறங்கினால், ரசிகர் மன்றப் பொறுப்பில் இருந்து கொண்டு பேனர், தோரணம், பாலாபிஷேகம் ஆகியவற்றை மட்டும் செய்தால் போதும் மிக எளிதாக அந்த உயரத்தை எட்டி விடலாம். காலப்போக்கில், ஏதோ ஒரு பெயரில் அரசியல் கட்சி, பின் சந்தர்ப்பமும் சூழலும் சரியாக அமைந்து விட்டால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைத்துவிடும் என்கிற தொலைநோக்கு திட்டத்தோடு தான் ரசிகர்கள் என்ற போர்வையில் இயங்குகிறார்கள்.
                ரஜினிகாந்த் இதையெல்லாம் புரிந்து கொண்டிருப்பதால் அவர் தயங்குகிறார்.  ரஜினிகாந்தை இழுக்கப் பிரயத்தனப் படுபவர்கள் ஆட்சி அவர் பெயரிலும் அவரை இயக்குகிற சூத்திரக் கயிறை தன்வசம் வைத்துக் கொள்ளலாம் என்ற சூழ்ச்சி இருப்பதையும் ரஜினிகாந்த் புரிந்து கொண்டார். நடிகர்களைப் பொறுத்தவரை அவர்களது முகம் மட்டும் போதும் அதிகாரத்தைக் கைப்பற்ற... அவர்களது மூளை தேவையில்லை அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது சில நுண்ணிய அரசியல்வாதிகளின் திட்டம்.
                தமிழ்ச் சினிமா,  சமூகத்திலிருந்து எதை அதிகம் பெற்றுக் கொண்டது என்று நோக்கினால், பரபரப்பான செய்திகளின் மையங்களைப் பற்றித்தான் அவை அதிகம் பிரதிபலித்தன. மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி துவங்கி, ஆட்டோ சங்கர், நித்தியானந்தா, சில்க் ஸ்மிதா வரை மக்களிடையே எதிர்மறைப் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை மீது ஈடுபாடு காட்டின. சென்னையில் நடந்த இதய தான அறுவைசிகிச்சை பற்றி மலையாளத்தில் எடுக்கப்பட்டு அதன் மறு உருவாக்கமாக தமிழில் வந்தது. ஆக நல்ல விஷயங்களை திரையுலகம் அதிகம் பொருட்படுத்துவதில்லை. அதனை கலையாக்குவதற்கும் முயற்சிப்பதில்லை.
                இந்தி எதிர்ப்புப் போராட்டம், பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம், ஈழப் பிரச்சினை, மீனவர்களின் வாழ்வியல் பிரச்சினை, தாமிரபரணி ஆற்றுச் சம்பவங்கள், போன்ற சமகால சம்பவங்கள் பற்றிய முழுமையான படங்கள் இல்லை.
                அதைப்போல் மகத்தான மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக ஆய்வு செய்து பதிவு செய்ய வேண்டும் என்கிற முனைப்பும் குறைவுதான்.
                வீரபாண்டிக் கட்டபொம்மன், ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் ஆகிய படங்களில் கதையமைப்பு மற்றும் காட்சிகள் சிவாஜியை முன்னிட்டே அமைக்கப் பட்டிருந்தன. ஆனாலும், அந்த சரித்திர புருஷர்களை மக்கள் மனதில் அழிக்க முடியாத அளவு பதிய திரைப்படம் ஒரு காரணமாக அமைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பாரதி, காமராஜ், பெரியார், இரணியன் படங்கள் நல்ல முயற்சிதான் என்றாலும் அவை பரவலாக கொண்டு செல்லப்படவில்லை. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பரபரப்பற்ற கதையோட்டம் இல்லாதது காரணமாக இருக்கலாம். உண்மையான வரலாற்றை மிகைப்படுத்தாமல் படமாக்கியதால்  பெரும் வெற்றியைப் பெறாமல் போயிருக்கலாம்.
                பேசும்படங்கள் துவங்கிய காலத்திலிருந்து 1977 வரை வெளியான பெரும்பாலான படங்களில் நாடகங்களின் தாக்கமே அதிகம் இருந்தது. இடையில் முயற்சிக்கப்பட்ட அந்தநாள், உன்னைப் போல் ஒருவன் (ஜெயகாந்தன்), யாருக்காக அழுதான் போன்ற சில படங்கள் தவிர யதார்த்தப் படங்களின் முயற்சி மிகக் குறைவே.
                பாரதிராஜாவின் 16 வயதினிலே வந்த பிறகு திரையுலகம் பெரும் மாற்றத்தை சந்தித்தது. அதுவரை ஸ்டூடியோ அரங்குகளை மட்டும் சுற்றிவந்த கேமரா, மெல்ல வயல்வெளி, சலசலக்கும் ஆறு, குப்பங்களின் குப்பைக்கூளங்கள், சாக்கடைகளிலும் நுழைந்து பயணித்தது. அத்துடன் பாரதிராஜா இன்னொரு மகத்தான மாற்றத்திற்கு காரணமாக இருந்தார். நடிகர், நடிகைகள் என்றால் சிவந்த மேனியும், வடிவான முக அழகும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்கிற Myth-ஐ உடைத்தார். எளிமையான கிராமத்து முகங்கள் அத்தனை கவர்ச்சியற்ற கதாநாயகிகள், கொடூரமான முகம், விகாரமான சிரிப்பு இருந்தால்தான் வில்லன் என்பதையும் மாற்றி பூனை போன்று இருப்பவர்களுக்குள்ளும் வில்லன்கள் இருக்கிறார்கள் என்பதையும், பாரதிராஜா தனது திரைப்படங்கள் வழியே உருவாக்கினார். மற்றொன்று வட்டார வழக்கு சொல்லாடல், இயல்பான கிராமத்து உரையாடல்கள் ஆகியவற்றையும் அவரது படங்களின் வாயிலாக பரவலாகப் பயன்படுத்தினார்.
                70-களில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் திரைத்துறையில் புகுந்தாலும், பெரிதான மாற்றங்கள் எதையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை. காட்சிகளின் பிரம்மாண்டம் ஒளிப்பதிவில் நேர்த்தி மட்டுமே அவர்களின் பங்களிப்பாக இருந்தது.
                சமீபகாலமாக குறும்பட இயக்குநர்கள் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைத்த பிறகு, இன்னமும் எளிமையாகிறது சினிமா. ஒருபக்கம் கோடிக்கணக்கில் இறைத்து ரசிகர்களை சதா பிரம்மிப்பில் மிதக்க வைக்கும் முயற்சி. மறுபக்கம் சிறு சிறு மின்னல்கள் போல் காட்சியமைப்பு, எளிய உள்ளடக்கம், யதார்த்தமான மனிதர்கள் என்று குறும்பட இயக்குநர்கள் வேறொரு தளத்துக்கு திரைத்துறையை இட்டுச் செல்கின்றனர்.
                இவையெல்லாம் திரைத்துறைக்கு போதுமா என்றால்... போதாதுதான். இலக்கியங்களை, சமகால எழுத்தாளர்களின் படைப்புக்களை, திரைமொழியில் கொண்டுவரும் முயற்சி அதிகரிக்க வேண்டும். உலகத்தின் மிகச் சிறந்த படங்களில் 70 சதவீதம் நாவல்களின் திரைவடிவமே.
                இந்தியாவின் சிறந்த படங்கள் குறிப்பாக, வங்க மொழியில், மலையாளத்தில் ஏன்... தமிழில் கூட சிறந்த படங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டால், சிறுகதை, நாவல்களை எடுத்துக் கொண்டு திரைப்படங்களானவைதான்... இந்த முயற்சி தொடரும்போது இந்திய சினிமா உலகத் தரத்தை எட்டிப் பிடிக்கும்.
                தமிழில் கதாநாயகர்களுக்குப்பிறகு பொதுவான பார்வையாளர்களை அதிகம் பாதித்தவர்கள் நகைச்சுவை நடிகர்களே. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர். இராமச்சந்திரன், தங்கவேலு, பாலையா, நாகேஷ், சந்திரபாபு, சுருளிராஜன், விவேக், வடிவேலு என்று தொடர்ச்சியான நகைச்சுவை மரபு தமிழகத்தின் திரையுலகில் மகத்தான நடிப்பாற்றலையும், கருத்தாக்கங்களையும் உருவாக்கியோர். கதாநாயகர்கள் பிரச்சார பாணியில் உரக்கக் கத்தி ஓங்க வைத்திட நினைத்த நீதி, நியாயங்களை, அவர்களையும் தாண்டி நகைச்சுவை நடிகர்கள் பரவலான பாமர மக்களை இலகுவாகச் சென்றடைந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் காலத்தில் முழுப்படத்தை எடுத்து முடித்துவிட்டு, தனியே நகைச்சுவை ட்ராக்குக்காக வருவது தொடங்கிற்று. என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் டி.ஏ.மதுரம் இணைந்து நடித்த காட்சிகள் அத்தனையையும் தரமான நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு.
                என்.எஸ்.கிருஷ்ணன் மட்டும் ஒரு சார்லி சாப்ளின் போல் தனக்கென்று முழுபடமும் வருமளவு பாத்திரங்களை உருவாக்கி திரைப்படங்களை தயாரித்து இருந்தால் சாப்ளினுக்கு நிகராகப் பேசப்பட்டிருப்பார்.
                தங்கவேலு, இ.வி.சரோஜா ஜோடி நாகேஷ் மனோரமா ஜோடிகள் தமிழகத்தின் சிரிப்பு நிமிடங்களுக்குக் காரணகர்த்தாக்கள்.
                சந்திரபாபு, சுருளிராஜன் இருவரின் உடல்மொழி, அங்க சேஷ்டைகள் தனித்துவமானது. வடிவேலு திரைக்கு வந்த பிறகு தமிழர்களின் உரையாடலை தீர்மானிப்பவராக இருந்தார்... இருக்கிறார். உடல் மொழியும், உச்சரிப்பும், கதாபாத்திரத் தேர்வும் அவரை உச்சிக்குக் கொண்டு சேர்த்தன.
                விவேக் பலகுரல் பேசும் கலைஞர் என்பதால் எவரையும் இமிடேட் செய்து நடிக்க அவரால் முடிந்தது. பிரச்சார நெடி அடித்தாலும், தைரியமாக தமிழகத்தில் பிற்போக்கான பழக்க வழக்கங்களை நகைச்சுவையாக விமர்சித்து வருகிறார்.
                நடிகர்களை அடுத்து இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் தமிழ்ச் சமூகத்தை வெகுவாக பாதித்திருக்கின்றார்கள்.
                 எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், வி.குமார்,ஏ.எம். ராஜா, விஸ்வநாதன் இராமமூர்த்தி, இளையராஜா, டி.ராஜேந்தர், ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ்,என்று மிகத் தொடர்ச்சியான இசைமரபு இருக்கிறது.
                ஆரம்ப காலங்களில் கர்நாடக இசை ஆக்கிரமித்திருந்த நிலை மாறி திரை இசை அல்லது மெல்லிசை என்றொரு பாணியை கே.வி மகாதேவனும், எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தியும் ஏற்படுத்தியதன் மூலம், கண்ணுக்குத் தெரியாமல் கட்டப்பட்டிருந்த இசையின் கயிறுகள் அறுக்கப்பட்டன. பிறப்பிலிருந்து இறப்பு வரை பாடல்களே நமது இயல்பான வெளிப்பாடு. உதாரணம் நாட்டுப்புறப் பாடல்கள். இதனை மிகச் சிறப்பாக உணர்ந்து இயற்றியவர்கள் எளிய மக்களே.
                சினிமாவில் கர்நாடக இசை ரசிக்கப்பட்டதே தவிர பரவலாக உள்வாங்கப் படவேயில்லை. அதற்கு காரணம் கர்நாடக இசை சமுதாயத்தில் மேம்பட்ட மக்கள் இசையாக இருந்தது.
                அடித்தள மக்களின் இசை வேட்கைக்கு மெல்லிசை வடிவம் இயல்பாக பொருந்துகிறது.இந்திப்படப் பாடல்கள் மீது தமிழ் மக்கள் ஈர்ப்பு இருந்த காலத்தில்  திரையுலகில் நுழைந்து அவர்களால் தமிழ்ப் பாடல்களை முணுமுணுக்கவும், தலையாட்டவும் செய்தவர் இளையராஜா. அவரது இசையின் தாக்கம் இல்லாமல் ஒரு தினம் கூடக் கழிந்ததில்லை. பிறமொழிப் பாடல்களை பிரதியெடுத்து தமிழ் திரைபடப் பாடல்கள் உருவான காலம் போய், தமிழ்த் திரைப் பாடல்களை அப்பட்டமாகப் பிரதி எடுத்து பிற மொழியில் பாடல்கள் உருவாயின. திரையுலகம் தாண்டி அவர் சிம்பொனி, How to name it? Nothing but Wind, திருவாசகம் ஆகியன திரைகடல் தாண்டி பேசவைத்தது.
                ஏ.ஆர்.ரஹ்மானின் வருகை, தமிழ்த் திரைக்கு ஒரு மேற்கத்திய தோற்றத்தை தந்தது. அவரது துள்ளலான இசைபாணி தமிழர்களின் கொண்டாட்ட கால ஆர்ப்பரிப்பு போல கட்டற்றுப் பாய்ந்தது. தமிழ்த் திரையிசைக்கு சர்வதேச கவனத்தைப் பெற்றுத் தந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இளையராஜா தன்னை நாடிவந்தவர் எவராயினும் மறுக்காமல் தனது இசைக்கொடையை தந்தபடி இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் 15 நாட்களுக்கு ஒரு திரைப்படம் வீதம் இசையமைத்து தந்து கொண்டிருந்தார்.
                ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் அப்படியில்லாமல் திட்டமிட்டு தனது நகர்தலையும், இலக்கையும், களத்தையும் நிர்ணயித்துக் கொண்டார். எனவே, அவர் எந்த உயரத்தை அடைய வேண்டும் என்று நினைத்தாரோ அதையெல்லாம் இயல்பாக விரைவாக அடைந்தார். அவர் பெற்ற இரண்டு ஆஸ்கர் விருதுகளும் தமிழர்களை தலை நிமிரச் செய்திருக்கின்றன. ரஹ்மானின் மற்றொரு சாதனை புதிய புதிய குரல்களை, நவீனமான ஒலிகளை திரைப்படம் தோறும் அறிமுகப்படுத்திக் கொண்டே செல்வது. இந்தப் போக்குதான் தொலைக்காட்சி நிறுவனங்கள் புதிய குரல்களைத் தேட வைத்தது. திறமையானவர்கள் தங்களது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி அதன்மூலம் திரைவாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்றால், ஏ.ஆர்.ரஹ்மான் அவரைப் பின்பற்றி, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், இமான் எனப் பலரும் இப்பொழுது புதுக்குரல்களைப் பதியவைத்து பிரபலப்படுத்தியது தான் காரணம். இன்றைய சமுதாயம் உத்வேகத்துடன் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள இவர்களது பங்களிப்புகள் முக்கியமானவை.
                ஆனால், இன்றைய இசையமைப்பாளர்கள் எல்லோருமே மெட்டுக்களைத் தேர்வு செய்து விட்டு, அதற்கு ஏற்றாற்போல் பாடல்கள் எழுதும்படி பாடலாசிரியர்களை நிர்பந்திப்பதால் நல்ல வரிகள் கொண்ட பாடல்கள் வருவது வருவது அருகிவிட்டது. கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி. ஆகியோருடன் இணைந்து கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி ஆகியோர் இயற்றிய பாடல்களில் பெரும்பான்மையானவை பாடல்களுக்காக இசையமைக்கப்பட்ட்வைதான். படத்தின் கதையும், பாடல்களுக்கான சூழலும் அன்றைக்கு போலில்லை என்று சொன்னாலும், பாடலாசிரியர்களுக்கு தன்னிச்சையான சுதந்திரத்தை இன்றைய இசை தரவில்லை. இசையும், கவிதையும் இணைந்து பயனளிக்கும் போதுதான் ஒரு மகத்தான பாடல் கிடைக்கும். தமிழர்களின் வாழ்வில் பல மாற்றங்களை மறைமுகமாகத் தந்த பாடல்கள் எல்லாம் அப்படி உருவானவைதான். ஆனால், இன்றைய இசை ஒரு கேளிக்கை என்ற அளவிலேயே இருப்பது இசை அமைப்பாளருக்கு கூட நல்லதில்லை.
                திரைப்படங்கள் தமிழர்களின் ஒவ்வொரு கணத்தின் போதும் பொருத்திப் பார்த்து நெகிழும்படியும், மகிழும்படியும் செய்ததில் கண்ணதாசனுக்கும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும், வாலிக்கும் பெரும்பங்கு உண்டு. தத்துவார்த்தமான கண்ணதாசனின் பாடல்கள் ஒரு சராசரித் தமிழனின் வாழ்வில் எந்த சூழ்நிலைக்கும் பொருந்தக் கூடிய தகவமைப்புடன் அளவின்றி பொக்கிஷம் போல் கொட்டித் தீர்த்தவை. அவரது வரிகள் உழலாத மனமே இல்லை என்கிற அளவுக்கு அவரது திரைப்படப் பாடல்களின் தாக்கம் அவரது காலத்தில் இருந்தன. கண்ணதாசனைப் பிரதி எடுப்பது போல் இருந்தாலும் வாலியின் வரிகள் கவித்துவமான சொல்லாடல் கொண்டவை. அலுக்காத அந்த பாணியில் இருவரது கவித்திறனால் அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல் பாடல்கள் பொங்கிப் பிரவாகம்  எடுத்தன. எனவேதான் எவருக்கும் அஞ்சாத வித்யாகர்வத்துடன் கவிஞர்களுக்கே உரிய கம்பீரத்துடன் பாடலாசிரியர்கள் உலவ முடிந்தது.
                பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் உழைக்கும் மக்களின் உள்ளபடியான உணர்வை பதிவு செய்தவை. எளிய  மக்களின் உதடுகளிலும் தங்கி இதயங்களையும் நிறைத்தவை அவரது பாடல்கள். பட்டுக்கோட்டையின் பாடல்களை இன்றும் எவராலும் பிரதியெடுக்க முடியாதபடி அவரது பாணி ஒரு தெருப்பாடகனின் கட்டற்ற இசையறிவைப் போல் தனித்துவமானது.
                இசைக்கருவிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே எழுத வந்த வைரமுத்துவின் காலம் மிக மிக நெருக்கடியானது. இசையை மீறி தன்னையும், கவிதையையும் நிறுத்திக் கொள்ள மிகப் பெரிய போராட்டத்தை அவர் நடத்த வேண்டியிருந்தது. அதில் அவர் மகத்தான வெற்றியும் பெற்றார். கண்ணதாசன், பட்டுக்கோட்டை ஆகியோரின் பாணியிலிருந்து விலகி தனக்கென்று ஒரு பாட்டையை வகுக்கவும் அவர் தவறவில்லை. இலக்கியவாதிகளுக்குள் மட்டுமே உலவி வந்த வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களை தமிழர்கள் மத்தியில் பரவலாக்கியவர்கள் வைரமுத்துவும் அவரைத் தொடர்ந்து தாமரையும் ஆவர்.
                சமகால அரசியல் சூழல் மீதும், நிகழ்வுகள் மீதும் எதிர்வினை நிகழ்த்துகிற துணிச்சல் பாடலாசிரியர்களுக்கு இருந்து வந்தது குறிப்பிடத் தக்கது. கண்ணதாசன் தொடங்கி, அறிவுமதி,தாமரை வரை தங்கள் கருத்துக்களை மிகத் துணிச்சசலுடன் பதிவு செய்திருக்கிறார்கள்.
                திரையுலகம் சமகால நிகழ்வுகளோடு திரைப்படங்களில் அதிகம் கதைக்கவில்லை என்றாலும் சமூகப் பொறுப்புடன் ஒரு சிலரேனும் எடுக்கின்ற முயற்சிகளுக்கு துணை நின்றது. குறிப்பாக, இந்தியா யுத்த காலங்களில் பெரும் நிதிச் சுமையுடன் இருந்த போதும், பூகம்பம், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டித் தந்திருக்கிறார்கள் அத்துடன் தங்களது பங்களிப்பையும் தந்திருக்கிறார்கள்.
                காவிரிப் பிரச்சினை, ஈழப் பிரச்சினையின் போது தெருவிலிறங்கி தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம், பல்வேறு விமர்சனங்களையும் தாங்கியிருக்கிறார்கள். அவர்களது போராட்டம் ஒரு விளம்பரப் படம் போல. நட்சத்திரக் கண்காட்சி போல இருந்தனவே தவிர, உள்ளார்ந்து இல்லை என்று விமர்சிக்கப் பட்டார்கள். இப்படி விமர்சித்தவர்கள் யாரும் தெருவில் இறங்கிப் போராடியவர்கள் இல்லை. நான்கு சுவர்களுக்கு உள்ளே அமர்ந்தபடி பிரச்சினைகளின் தீவிர தளத்தில் பெருச்சாளிகள் போல் பதுங்கி இருந்துவிட்டு, யாராவது போராடிக்கொண்டிருந்தால் தங்கள் திருவாய் மலர்ந்து அருள்வாக்கு மட்டும் சொல்பவர்கள்.
                இந்தக் கட்டுரை தமிழர் வாழ்வு நிலையோடு திரைப்படங்களின், கலைஞர்களின் தாக்கம் பற்றிய ஒரு மீள்பார்வையே தவிர மிகச் சிறந்த திரைப்படங்கள் எவை? அவை உலகத் தரமானவையா என்ற கேள்விகளுக்குப் போகவில்லை.
                விமர்சன நோக்கில் எழுதுபவர்கள் எல்லாம் வங்கத் திரைப்படங்கள் போல், மலையாளத்திரைப்படங்கள், மராத்தி,  கன்னட திரைப்படங்கள் போல் ஏன் தமிழில் வரவில்லை என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். இந்த கேள்வியை எல்லா தரப்புக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
                வங்கத்திலுள்ளதைப் போல் சித்தாந்த ரீதியான வேறுபட்ட இயக்கங்கள் ஏன் தோன்றவில்லை? வங்க, மலையாள, கன்னட, மராத்தி இலக்கியங்கள் அளவுக்கு ஏன் இங்கு படைக்கப்படவில்லை? கேரளத்தில், கர்நாடகத்தில் உள்ளது போல் இலக்கியவாதிகளை மதிக்கும் போக்கு ஏன் தமிழகத்தில் இல்லை? இன்றைக்கும் ஒரு முதல்வர் கேரளத்திலோ கர்நாடகத்திலோ பதவி ஏற்றால் இலக்கியவாதிகளைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெறுகிறார்கள்(அதன்படி நடக்கிறார்களா என்பது வேறு விஷயம்) எனவே நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் இருக்கும் நமது திரைப்படங்களும்...
                திரைப்படங்களால் சமூகமும், சமூகத்தால் திரைப்படங்களும் செம்மையடைய என்ன வழி என்பதற்கு விரிவான விவாதம் தேவை. அதற்கு கல்விச்சாலைகள்தான் மிகச் சரியான இடமாக இருக்கும். திரைப்படங்கள் குறித்த பாடதிட்டங்கள் பல்கலைக்கழகங்களில் வகுக்கப்பட வேண்டும். திரைப்படங்களின் தொழில்நுட்பப் பயிற்சிகள் குறித்த புரிதல்கள் வரும் சூழலை உருவாக்க வேண்டும்.
                எல்லாவற்றுக்கும் மேலாக, திரைப்படங்களை கண்டிப்பாக ஆவணப்படுத்த வேண்டும். மெளனப் படங்கள் வந்த காலத்தில் கிட்டதட்ட 120 படங்கள் தமிழகத்தில் தயாரானதாகச் சொல்கிறார்கள். அதில் நாகர்கோயிலில் எடுக்கப் பட்ட மார்த்தாண்டவர்மா தவிர வேறு எந்தப் படத்தின் பிரதியும் இப்பொழுது நம்மிடம் இல்லை. தமிழின் பேசும் படங்கள் வந்த துவக்க காலத்தில் வெளிவந்த படங்களின் பிரதிகள் எதுவுமே நம்மிடம் இல்லை. இயக்குநர் பாலுமகேந்திரா தன்னுடைய ஆகச் சிறந்த படங்களான மறுபடியும், வீடு, சந்தியாராகம் போன்றவற்றின் நெகட்டிவ் பிரதிகளை எடுத்துப் பார்த்தபோது அவை முற்றிலும் சிதைந்து போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், தமது பிற படங்களான மூன்றாம் பிறை, அழியாத கோலங்கள் போன்றவற்றின் பிரதிகளை பார்க்கும் துணிச்சல் இல்லை என்றும் வேதனையோடு குறிப்பிட்டிருந்தார். டிஜிட்டல் யுகம் வந்ததால்  அவரது படங்களை நாம் பார்த்துவிட முடிகிறது.
                படச்சுருள்களில் மட்டுமே பதிவான பல்லாயிரக்கணக்கான படங்களில் பிரதிகளும் இல்லை என்பது நமக்கு வரலாற்று நோக்கு இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது. திரைத் துறை சார்ந்தவர்கள் அரசியல் அதிகாரத்தில் கோலோச்சுகிற தமிழகத்தில் ஆவணப்படுத்த ஒரு காப்பகம் இல்லை என்பது வேதனைக்கு உரியது. எனவே தணிக்கைக்கு வரும்போது எல்லா திரைப்படங்களையும் ஒரு பிரதியைப் பெற்று ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். பல்கலைக் கழகங்களை இந்த பணியில் அரசு ஈடுபடுத்த வேண்டும்.. திரைப்படங்களுக்கே இந்த கதியென்றால் ஆவணப்படங்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை யூகிக்கவே முடியவில்லை. இந்தியாவின் முதல் முழு நீள ஆவணப்படம் என்றால் அது ஏ.கே.செட்டியாரின் ‘காந்தி' படம் தான். கிட்டதட்ட ஒரு லட்சம் மைல்கள் பயணித்து பல தேசங்கள் அலைந்து, பல லட்ச ரூபாய் செலவு செய்து எடுத்த அந்தப் படம் மூன்று (தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்) மொழிகளில் உருவானது. அதன் ஒருபிரதி கூட நம்மிடம் இல்லை. அமெரிக்காவின் பல்கலைக் கழகம் ஒன்றில் ஒரு பிரதி இருப்பதாக சொல்கிறார்கள். ஆவணப்படங்களும் குறும்படங்களும் கூட பத்திரமாகப் பாதுகாக்கப் பட வேண்டும். தமிழ்த் திரையுலகம் குறித்து ஒரு விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றால் நம்மிடையே அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றால் வரலாறு நம்மை ஏளனப்படுத்தும்.
                தமிழ்த் திரைப்படம், குறும்படம் குறித்து விமர்சன நோக்கில், வரலாற்று நோக்கில் நூல்கள், கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருப்பது ஆறுதலை அளிக்கிறது. தியோடர் பாஸ்கரன், அசோக மித்திரன்,அம்ஷன் குமார், வெங்கட் சாமிநாதன், அறந்தை நாராயணன்,மதன், எஸ்.ராமக்ருஷ்ணன், அஜயன் பாலா, பி.ஆர்.மகாதேவன், நிழல் திருநாவுக்கரசு, திருநின்றவூர் சந்தானக்கிருஷ்ணன், செந்தூரம் ஜெகதீஷ், சாருநிவேதிதா உட்பட பலரும் எழுதி வருகிறார்கள். சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி? என்ற நூல் முற்றிலும் புதிய முயற்சி. ஆனால் சிட் ஃபீல்ட்-இன் திரைக்கதை பற்றிய நூல் போன்றதோர் முயற்சி இனிமேல்தான் தமிழில் நிகழவேண்டும்
                தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார் எழுதிய ‘அசையும் படம்' என்கிற ஒளிப்பதிவு குறித்த நுட்பமான, தெளிவான, எளிய மனிதர்களும் புரிந்து கொள்ளும் நடையில் உருவான ஒரு புத்தகம் மட்டும் காணக் கிடைக்கிறது. நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்ட அந்த புத்தகம் ஒளிப்பதிவு துறையில் நுழைய முயல்பவர்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டி.
 
மற்ற தொழில்நுட்பங்களான படத்தொகுப்பு, ஒலிப்பதிவு போன்றவை பற்றியும் நூல்களை அந்தந்த துறை சார்ந்தவர்கள் எழுத வேண்டும்.
               

திரைப்படங்களை ஒதுக்கி வைத்தோ, புறக்கணித்தோ தமிழ்ச்சமூகம் இருக்க முடியாது. அது, அன்றாட நமது உயிர் வாழ்வதற்கான கடமைகளான உண்ணுதல், உறங்குதல் போலாகிவிட்டது. எனவே அதுபற்றி பொத்தாம்பொதுவாக குறை கூறுவதை விடுத்து ஆக்கப் பூர்வமாக அதனோடு பயணிப்பது சமூகத்துக்கும் நல்லது; தமிழ்த் திரையுலகுக்கும் நல்லது.

சமுதாயத்தில் இன்றைய திரைப்படங்களின் தாக்கம் ..குறித்து ..தோழர்கள் லால்,கொழுமம் ஆதி  .தமிழ்மகன் ஜாபர் (குறும்படங்கள் அருமை ).திலகவதி,முகமது அலி ,உடுமலை தண்டபாணி ,அருமையான தன் கருத்துக்களையும் எழுத்துக்களால் ,வாய்ஸ்  பதிவு மூலமும் கருத்துக்களை பகிரந்தைமைக்கு ... நன்றி..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்  ...9944066681...

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018


மச்சு வீடோ குச்சு வீடோ
சொந்த வீடு கட்டிக் குடியேறும் நபர்களுக்குச் சமூகத்தில் ஒரு மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது. அதனால் தான் விவசாயக் கூலிகள் முதல் வேலை பார்ப்பவர்கள் வரை வீட்டுக்கடனைப் பெற வங்கிகளை எதிர்பார்க்கிறார்கள். சிலநேரங்களில் வீட்டுக் கடன்கள் அவர்களைக் கனவிலும் கூடத் தொல்லை செய்கிறது. ஆகையால் நீண்ட கால வீட்டுக் கடன்களைப் பெறும்போது, தவணை முறைகளையும் கவனமாகத் திட்டமிட்டு கையாள வேண்டும்
ஆகப் பெரும்பாலானோர் ஒரு கனவு வீட்டைக் கட்டி முடக்கவோ, வாங்கிப் போடுவதற்காகவோ வங்கிக் கடன்களை வாங்குகிறார்கள். இன்னொரு சாஸ்வதமான அசையாச் சொத்துக்களால் வருமான வரிச்சட்டம் 80 மற்றும் 24 ஆம் பிரிவுகளின் கீழ் வட்டி செலுத்துவதில் இருந்து இன்னபிற சலுகைகளைப் பெறலாம் என்ற எண்ணமும் வீட்டுக் கடன்களை வாங்கத் தூண்டுகிறது. அதேநேரம் இதில் சங்கடங்கள் இருப்பதையும் கவனிக்க வேண்டும். 30 ஆண்டுகள் வரை நீடிக்கும் ஒரு நீண்டகாலக் கடன்கள் உங்கள் நிம்மதிக்கு வேட்டு வைப்பதாக அமையும். இதனைக் கடந்து செல்ல உங்கள் தவணைகளைச் சரியாக நிர்வகி க தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் எங்களால் ஆன சில குறிப்புகளை உங்களுக்குத் தருகிறோம்.
தவணை காலம் தேர்வு
கடனுக்கான தவணைத் தொகை கையைக் கடிக்காமல் இருப்பதற்காக நீண்டகாலக் கடன்களைத் தேர்வு செய்கிறோம். குறைந்த தொகையைத் தவணை தவறாமல் எளிதாகச் செலுத்திவிட முடிகிறது.எனினும் நீண்ட காலத்துக்கு வட்டி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால் கடன்தொகை அதிகரிக்கிறது. இதனால் கடனாளிக்கு கூடுதல் சுமைதான். ஆகையால் வீட்டுக்கடன்களைத் தேர்வு செய்யும்போது, உங்கள் வயது, வருமானம் மற்றும் கடனை அடைக்கும் திறனை மனதில் இருத்த வேண்டும். வீட்டுக் கடன்கள் அதிகக் கடன்தொகையைக் கொண்டிருப்பதால் கடனாளிகள் குறுகிய காலக் கடனுதவியைக கண்டறிதல அவசியம், இது மற்றவர்களின் வாழ்முறை ம்ற்றும் வட்சியங்களில் சமரசம் செய்யாமல் இருக்க வேண்டும். இதர தவணைக்காலங்கள் குறித்து ஆன்லைன் கால்குலேட்டரை பயன்படுத்தலாம். கடன் தொகை. வட்டி, தவணைக் காலம் குறித்துத் தெளிவு பெறலாம்.
தவணைத்தொகையை உயர்த்தல்
ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு பெறும்போது, திரப்பிச் செலுத்தப்படும் கடனுக்கான தவணைத் தொகையை அதிகரிக்க வேண்டும். ஈ.எம்.ஐ தொகையை உயர்த்திச் செலுத்தும்போது தவணைக்காலம் தானாகவே குறைகிறது. மேலும் நிலுவையில் உள்ள கடன் தொகையும் கணிசமாகக் குறையும்.மீண்டும் தவைணத்தொகையைக் குறைவாகச் செலுத்தினால் கடன்தொகை கழியாது. சுமைதான் அதிகரிக்கும். உதாரணத்துக்கு, 50 லட்கம் ரூபாய் வீட்டுக்கடன் பெற்ற ஒருவர் 8.5 சதவீத வட்டியுடன் 20 ஆண்டுகளுக்குத் தவணைக்காலத்தை முடிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தவணைதொகைபில் 10 விமுக்காடு அதிகரித்துச் செலுத்தும்போது தவணைக்காலம் 10 வருடமாகக் குறையும்.
கடன்தொகையை முன்கூட்டி செலுத்தல்
தவணை காலம்வரை காத்திருக்காமல் கடனை முன்கூட்டியே செலுத்துவதால், நிலுவையில் கடனையும், தவணைக் காலத்தையும் ஒரு சேர் குறைக்கலாம். இதற்கு வங்கிகள் தண்டம் விதிக்க முடியாது. பிரதான கடன்தொகையை நேரடியாகக் குறைக்க உதவுவதோடு வட்டிச் செலவினங்களையும் குறைக்க இது உதவுகிறது. எடுத்துக்காட்டாக அடுத்த ஒரு ஆண்டுக்குள் 1,20,000 ருபாய் முன்கூட்டியே செலுத்தினால் மாதம் 10,000 ரூபாய் சேமிக்க முடியம். தவணைக் காலத்துக்கு முன்னரே கடன் தொகை முடிவடையும்.
கடன் சமநிலைப் பரிமாற்ற தேர்வு
வீட்டுக்கடன் பெறுபவர்கள் சாதகமான கடன்சமநிலைப் பரிமாற்றத்தை தேர்வு செய்ய வேண்டும். தற்போது உங்களுக்குக் கடன் அளிக்க இருப்பவர், போட்டியாளர்களைக் காட்டிலும் குறைவான வட்டி விகிதம், இதர சேவைகளைத் தர மறுக்கலாம். இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் கடன் வாங்கியவர்கள் பொதுவாகத் தங்கள் வட்டிக்கு ஒரு முக்கியப் பகுதியைச் செலுத்தி இருப்பார்கள் என்பதால், வீட்டுக் கடன் சமநிலை பரிமாற்றமானது மீண்டும் ஒரு நீண்ட காலக் கடன் சேமிப்புக்கு உதவாது. உங்கள் தற்போதைய வீட்டு கடன் கவணைக் காலத்தைப் போலப் புதிய கடன் கவணைக் காலக் கடனை பெறும்போது கூடுதல் வட்டி சுமையைக் குறைக்கும். கூடுதலாக, புதிய கடனுக்கான நீண்ட தவணைக் காலத்தைத் தேர்வு செய்வது, EMI சுமையை எளிமையாக்கும் ஒரு நல்ல கடன்சமநிவைப் பரிமாற்றத்தேர்வு செயலாக்கக் கட்டணம் இன்ன பிற செலவுகளில் இருந்து காப்பாற்றும்.......என்னங்க யோசனை பண்ணிட்டே இருக்கிறீங்க ..ஆடி போயி ..ஆவணியே ..வந்துருச்சு ...இனி வர மாசம் எல்லாம் ..சொத்துகள் வாங்கும் மாதம் தான் ...தவணையை ஸ்மார்ட்டாகச் செலுத்துவது எப்படி?..என்னைய மறக்காம கூப்பிடுங்க ...நான் சொல்லித்தரங்க ....
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

கணவருக்கு தெரியாமல் இந்த பெண் ரகசியமாக செய்த காரியத்தால்தான் நாம் எல்லாம் இன்று கார் ஓட்டுகிறோம்..

உலகின் முதல் காரை முதல் முறையாக ஓட்டியது ஒரு பெண் என்பது ஆச்சரியம் அளிக்கும் செய்திதான். அந்த காரை தனது கணவருக்கு தெரியாமல் 106 கிலோ மீட்டர்கள் அவர் வெற்றிகரமாக ஓட்டியதன் விளைவாகதான் பென்ஸ் நிறுவனம் பிறந்தது. இதுகுறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். மிக அதிக அளவில் உருவாக்கப்பட்ட மற்றும் மலிவான விலை கொண்ட உலகின் முதல் கார் எது? இந்த கேள்விக்கு பலரின் பதில் நிச்சயமாக, ஃபோர்டு மாடல் டி (Ford Model T) என்பதாகதான் இருக்கும். நம்மில் பெரும்பாலானோர் அப்படிதான் நம்பி கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. கார்ல் பென்ஸ் என்பவர்தான், நன்கு இயங்க கூடிய வகையிலான உலகின் முதல் காரை உருவாக்கியவர். அந்த கார்ல் பென்ஸ் வேறு யாருமல்ல. லக்ஸரி வாகன உலகில் இன்று கோலோச்சி கொண்டிருக்கும் மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர்தான் கார்ல் பென்ஸ். கார்ல் பென்ஸ் கண்டுபிடித்த கார், நான்கு சக்கரங்களை கொண்டது கிடையாது. அது ஒரு 3 வீலர். மோட்டார்வேகன் மாடல் III என்ற பெயரில், அந்த காருக்கு காப்புரிமை வாங்கினார் கார்ல் பென்ஸ். இந்த உண்மை கதையில் இருந்து ஆச்சரியம் அளிக்கும் ஓர் விஷயத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. உலகின் முதல் கார் டிரைவர் ஒரு பெண் என்பதுதான் அந்த ஆச்சரியம் அளிக்கும் செய்தி. இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த பெண் பெர்த்தா பென்ஸ். கார்ல் பென்ஸின் மனைவிதான் அவர். தனது கணவர் கண்டுபிடித்த காரை, அவரது அனுமதி இல்லாமலேயே 106 கிலோ மீட்டர்கள் ஓட்டினார் பெர்த்தா பென்ஸ். இந்த சம்பவம் நடைபெற்றது 1888ம் ஆண்டில். தனது கணவர் கண்டுபிடித்த மோட்டார்வேகன் மாடல் III காரை, அவரிடம் சொல்லாமலேயே சாலைக்கு எடுத்து வந்து விட்டார் பெர்த்தா பென்ஸ். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கூட அவர் முறைப்படி அனுமதி பெறவில்லை. ஜெர்மனி நாட்டின் மான்கெய்ம் என்ற பகுதியில் இருந்து 106 கிலோ மீட்டர்கள் (66 மைல்கள்) தொலைவில் உள்ள பிபோர்ஸ்கெய்ம் என்ற பகுதி வரையிலான ஓர் சவால் நிறைந்த பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார் பெர்த்தா பென்ஸ். ஆனால் அந்த கால கட்டத்தில் அது சட்ட விரோதமான விஷயமாக கருதப்பட்டது. எனினும் குறிப்பிடத்தகுந்த தொலைவிற்கு, ஆட்டோமொபைல் ஒன்றை ஓட்டி சென்ற முதல் நபர் என்ற வரலாற்றை இதன் மூலமாக படைத்து விட்டார் பெர்த்தா பென்ஸ். பெர்த்தா பென்ஸ் இதை ஏன் செய்தார்? என்பதிலும் கூட ஓர் சுவாரசியமான உண்மை அடங்கியிருக்கிறது. முதலில் தனது கண்டுபிடிப்பு இன்னும் சாலையில் பயணிக்கும் அளவுக்கு முழுமையாக தயாராகவில்லை என்றுதான் கார்ல் பென்ஸ் நினைத்தார். ஆனால் பெர்த்தா பென்ஸ் வேறு விதமாக யோசித்தார். தனது கணவரின் கண்டுபிடிப்பு மிகச்சிறப்பானது என பெர்த்தா பென்ஸ் கருதினார். அதனை மார்க்கெட்டிங் செய்தால், பொருளாதார ரீதியில் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் அவர் நினைத்தார். எனினும் அதனை தனது கணவருக்கு நிரூபித்து காட்ட வேண்டுமல்லவா? எனவேதான் கணவரிடம் அனுமதி கூட பெறாமல், காரை எடுத்து கொண்டு கிளம்பி விட்டார் பெர்த்தா பென்ஸ். எனினும் இடையில் ஒரு சில முறை, மெக்கானிக்கலாக சில பிரச்னைகள் ஏற்படவே செய்தது. அதனை சமாளித்துதான் பெர்த்தா பென்ஸ் பயணித்தார். விஸ்லோக் என்ற இடத்தில், உள்ளூரை சேர்ந்த வேதியியலாளர் ஒருவரிடம் கூடுதல் எரிபொருட்களையும், பெர்த்தா பென்ஸ் வாங்கி கொண்டார். இந்த காரை உருவாக்கும் திட்டத்திற்காக கார்ல் பென்ஸ், பெர்த்தா பென்ஸ் இருவரும் மிகப்பெரிய அளவிலான பணத்தை முதலீடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்த்தா பென்ஸின் இந்த பயணத்திற்கு, அவரது மகன்கள் ரிச்சர்ட் மற்றும் எயூகன் ஆகியோரும் உதவி செய்திருந்தனர். 1888ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவங்களை நினைவு கூறும் வகையிலான வீடியோ ஒன்றை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆட்டோமொபைல் ஒன்றின் முதல் டிரைவர் ஒரு பெண் என்பதை அந்த வீடியோ கூறுகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். இறுதியில் பெர்த்தா பென்ஸ் தனது இலக்கை வெற்றிகரமாக அடைந்ததும், அது குறித்த தகவல்களை, டெலிகிராம் மூலமாக, தனது கணவர் கார்ல் பென்சுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதன்பின்தான், கார்ல் பென்சும், காட்லீப் டெய்ம்லர் என்பவரும் இணைந்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை தொடங்கினர்.

பேராசிரியர் திரு .லெனின் பாரதி -ரம்யா ...அவர்களுக்கு .திருமணவாழ்த்துகள் ...

என் அருமை நண்பர் .உடுமலை என்றாலே ..அதுவும் நூலகம் ..வாசகர் வட்டம்  என்று சொன்னாலே ...நண்பரின் நினைவு தான் எல்லோருக்கும் வரும் ...உடுமலை முதல் நூலக கிளையில் ..வாசகர் வட்டம் சார்பில் அனைத்து நிகழ்வுகளுவும் ..வாசிப்பை நேசிக்கும் ..புத்தகத்தோடு ஒன்றிணைத்துவிடுவார் ...பள்ளி குழந்தை செல்வங்களுக்கு நூலக விழிப்புணர்வை முழுமூச்சாக வாசகர் வட்டத்தை உருவாக்கியவர் ..இவரின் பன்முக தன்மைகொண்ட சிறந்த கல்வியாளர் ..நண்பர் லெனின் பாரதியின் ஏழ்மையில் இருக்கும் பள்ளி மாணவ செல்வங்களை தேடிப்பிடித்து ..அவர்களை அரசு பணிக்கு தயார்செய்து ..பணியில் அமர்வதற்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார் ...பன்முக தன்மை கொண்ட களங்களில் பணியாற்றி அவரின் தனித்தன்மை குழு ஒருங்கிணைப்போடு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் ..பல தளங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த நல்ல நண்பர்களை எனக்கு அறிமுக படுத்தியவர் ...மிக்க மகிழ்ச்சி நண்பராக பெற்றமைக்கு.. .திருமண .வாழ்த்துக்கள்.... என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...


வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

என் அருமை நண்பர் அரண்மனை சுப்பு (தேனீ )......வாழ்த்துக்கள்

அரண்மனை சுப்பு ...மேற்கு தொடர்ச்சி மலை (உடுமலை தாஜ் திரையரங்கம் )..திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் அருமை ...முதல் படமா ..இல்லை ..ஐன்பது ,அறுபது படங்களுக்கு மேல் நடித்திருப்பாரா என்று தெரியவில்லை ..அருமையான லோகு என்ற கதாபாத்திரத்தில் நடிப்பு திறன் நல்ல மெருகேற்றம் ... வளரும் நடிகர் ..முதலில் காய்கறி வியாபாரியாக தொடங்கி ..லேண்ட் ப்ரொமோட்டர், .நிதி மேலாளராக ,விவசாய விதைகள் மருந்து உரக்கடை வியாபாரியாக நடித்துஇருப்பது அருமை .. வளரும் நடிகர் ...என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் அரண்மனை சுப்பு நண்பருக்கு ..

"ஏந்தம்பி, எப்பிடி இந்த மலைல தினமும் ஏறி எறங்குறீங்க?"

"என்னணே பண்றது எங்க பொழப்பு அப்பிடி!" இந்த வசனமும், படத்தின் முக்கியமான இடத்தில் வரும் அந்தரத்தில் தொங்குதம்மா பாடலும் போதும் படம் எதை சொல்ல வருகிறது எனப் புரிந்துகொள்ள. படத்தின் இறுதியில் உலகமெங்கும் குறுக்கும் நெடுக்குமாக விரவிக்கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது படம். ஆரம்பத்திலிருந்து அது காட்ட நினைப்பதும், சொல்லப் பதைபதைப்பதும் அதைத்தான். முதலில் நன்றி சொல்ல வேண்டியது, இப்படத்தை தயாரிக்க மனமுவந்து வந்த விஜய் சேதுபதிக்குதான். தமிழில் மிக முக்கியமான சினிமாவைத் தயாரித்ததற்கு, வாழ்த்துகளும் அன்பும்.

ரங்கு, வனகாளி, சாக்கோ, பொன்னம்மா, கங்காணி, கிறுக்குக் கிழவி, கேத்ரா, ஈஸ்வரி, ரவி, ஊத்து ராசா, அடிவாரம் பாக்கியம், சுருளி என படம் முழுக்க எத்தனை எத்தனை முகங்கள், அவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் கதைகள் எல்லாமும் நம்மையும் கைபிடித்து மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சிக்கும், அடிவாரத்திற்குமாய் பயணிக்கச் செய்கிறது. வழக்கமான படமாக இருந்தால் இன்னது கதை, இன்னது திரைக்கதை, இன்னது வேலைக்காகவில்லை என எதையாவது சொல்ல வேண்டியிருக்கும். இது அப்படியல்ல என்பது மிகப் பெரிய இளைப்பாறலாக இருக்கிறது. அப்படியான படம் ஒன்றை பார்ப்பது, பார்ப்பது மட்டுமல்ல நல்ல சினிமாவுடனான சந்திப்பு என்றுதான் சொல்வேன். ரங்கசாமிக்கு (ஆண்டனி) தான் வசிக்கும் ஊரில் தனக்கு என சொந்தமாக இடம்வேண்டும் என்பதற்காக உழைக்கிறான், எங்ககாலத்துல இந்நேரத்துக்கு நாலு நட போயிட்டு வந்திருப்போம்டா என சுமை தூக்கிச் செல்லும் வனகாளி (பாண்டி) கதாபாத்திரம் அத்தனை சுவாரஸ்யமான ஒன்று. அவர் சொல்லும் ஒரு கதையில் இருக்கும் பெருமிதம், பின்பு ஓரிடத்தில் "எல்லாப்பயலும் மல மாதிரி நம்புனேன், மல மாதிரி நம்புனேன்னு சொல்லுவாய்ங்க, நான் இந்த மலயதான நம்புனேன். என்னையவே ஏச்சுப்புட்டீள்ல" எனக் கலங்குவதுமாக மனதில் நின்றுவிடுகிறார். சகாவு சாக்கோ (அபு வளயாங்குலம்) பேசும் உரிமைகள், அதைத் தட்டிப் பறிக்க நினைக்கும் ரவியின் (ஆறுபாலா) அதிகாரம், நன்றியாய் இருப்பது மாதிரியே மக்களை சுரண்டும் லோகு, அப்பனுக்கு பட்ட கடனை மகனிடமாவது அளித்து நன்றிகாட்ட நினைக்கும் மீரான் என எத்தனை வித மனிதர்கள்.

ரங்கு என்கிற ரங்கசாமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்துப் பார்த்தால் ஒரு கதை பிடிபட வாய்ப்பு உண்டு. ஆனால், படம் சொல்ல நினைப்பது எந்த கதையையும் அல்ல. ஏற்ற, இறக்கத்தில் தோளிலும், சமவெளியில் தலையிலும் காலம் முழுக்க வாழ்க்கையிலும் அவர்கள் தூக்கி சுமந்தே ஆகவேண்டிய சுமைகள் பற்றியும், அவர்களின் அறியாமை, சுற்றி நடக்கும் வியாபாரம், அரசியல் பேச நினைக்கிறது படம்.  நாங்க எல்லாம் எவ்வளவு பாவம் தெரியுமா என்பதாக இல்லாமல், விளிம்பு நிலை மனிதர்கள், கடைநிலை தொழிலாளி என தடிமனான வார்த்தை ஏதும் இல்லாமலே அவற்றைப் புரிய வைப்பது சவாலானது. அவர்களின் இயல்புக்கு நுழைய முற்பட்டதும், சந்தோஷம், சேட்டைகள், எல்லாவற்றையும் கலந்தே சொன்னதும் படத்தின் வலிமை. எளிமையான வசனங்கள் மூலம் அந்த வழக்கு சொற்களையும் அனுமதித்தது யாரின் ஏற்பாடு எனத் தெரியவில்லை. ஊருக்கு ஒருஎட்டு போய் வந்தது போல உணர்வைத் தருகிறது அவர்களின் உரையாடல். வசனகர்த்தா ராசி தங்கதுரைக்கு வாழ்த்துகள்.

படத்தின் நிறைய கதாபாத்திரங்கள் அந்த மண்ணுக்குறியவர்களே என்பதின் அழுத்தம் கதைக்குப் பெரும் வலிமை. எல்லா கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள். எப்போதும் மென்சோகம் படிந்த முகத்துடன் வந்து, "அந்தா தெரியிது பார் அதான்டா நம்ம நிலம்" என சொல்லும் போது ரங்குவாக நடித்திருக்கும் ஆண்டனியின் முகத்தில் காணும் ஒளியை நல்ல நடிப்பு என்று மட்டும் சொல்லி குறுக்கிவிட முடியாது. அது போலவேதான் ஆறுபாலாவோ, காயத்ரி கிருஷ்ணனோ, வனகாளியாக வந்து மிரட்டும் பாண்டியோ, இப்போ என்னை கிண்டல் பண்ணுங்கடா என்று கெஞ்சும் கங்காணியோ எல்லோரின் நடிப்பும்.

மலையின் எழுச்சியோ, மழையின் வீழ்ச்சியோ, அந்த மனிதர்களின் வாழ்வியலும் அதோடு சார்ந்ததாகத்தான் இருந்தது. அது போலவே தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு உள்ளுக்குள் கலந்திருந்ததை உணர முடிந்தது. அவர்களின் குதூகலமும், வாழ்க்கை பிரட்டும் துன்பமும், நம்பிக்கையும் இசையாக வெளிப்பட்டதில், பல இடங்களில் மௌனத்தை ஒலிக்கவிட்டதில் என கதையுடன் ஒன்றியிருக்கிறது இளையராஜாவின் இசை. குறிப்பாய் அந்தரத்தில் தொங்குதம்மா பாடல் ஒலிக்கும் இடம் வேறுவகை உணர்வு. தேங்கல் ஏதும் இல்லாமல் காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பும், படத்தின் உள்ளே எந்த துருத்தலும் இல்லாத ஜெயசந்திரனின் கலை இயக்கமும் வியப்புதான்.

எந்த விதத்திலும் வணிக காரணிகளை உள்ளே சேர்க்காமல், எடுத்துக் கொண்டதை மட்டுமே சொல்லத் துணிந்த இயக்குநர் லெனின் பாரதிக்கு பெரிய நன்றிகளும், வாழ்த்துகளும். பார்த்துக் கொண்டிருப்பதை உணர வைப்பது எல்லோருக்கும் கை கூடிவிடாது. இதில் அது நிகழ்கிறது. நிலத்துக்காக போராடும் ரங்கு முடிவில் சென்று சேரும் இடம், மலையே வாழ்க்கை என வாழும் வனகாளியின் முடிவும் மனதுக்குள் கனம் சேர்க்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சங்கிலித் தொடர் போன்ற பகுதிகள் எல்லாவற்றுக்குமான பிணைப்பு மனிதர்கள். மேம்போக்கான பார்வையில் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் படம் எங்கோ தொடங்கி விலகுவதாக தோன்றலாம், அந்த வாழ்வியல் அந்நியமாகக் கூட படலாம்.

ஆனால், அவர்களின் உலகை, அவர்களின் பாதிப்புகளை, வாழ்வது உச்சியே என்றாலும் கால் நழுவும் பள்ளத்திற்கு அருகான ஜீவிதம்தான் அவர்களது எனக் காட்டுவதே படம். யாருடைய வாழ்வு என்ன ஆகிறது என எதையும் கணக்கில் கொள்ளாத முரட்டுத்தனமான திட்டங்கள் எதற்கு?, மக்களின் வாழ்வாதாரத்தையே பறிப்பது எப்படி மேம்பாடாகும்? எனவும் கேள்வியை முன் வைக்கிறது படம். சுருக்கமாக சொல்வதென்றால் தவிர்க்கக் கூடாத தமிழ் சினிமா இது. ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

புரியாத நட்புக்கு
அருகில் இருந்தாலும்
பயனில்லை.!
புரிந்த நட்புக்கு
பிரிவு ஒரு தூரமில்லை.!
நம் வெற்றியின் போது
கை தட்டும்
பல விரல்களை விட
தோல்வியின் போது
கை கொடுக்கும்
நண்பனின்
ஒரு விரலே சிறந்தது..
திரு .த .செல்வராஜ் ...என் அருமை மாப்பிள்ளைக்கு திருமண வாழ்த்துக்கள் ..வெண்பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் இயற்கை விவசாயி... அழகா ...அற்புதமாக தெளிவான திட்டமிடல் ..நல்ல முறையில் வெண்பட்டுப்புழு வளர்த்து ...விவசாயம் சம்பந்தமான எந்த நிகழ்வு என்றாலும் ..இந்த மாப்பிளையை காணலாம் ...விவசாயம் சம்பந்தப்பட்டு புது புது நடைமுறை சிக்கல்களை தெரிந்து ..வெண்பட்டுப்புழு வளர்ப்பில் தன் விடா முயற்சியில் குறிக்கோளோடு வளரும் கம்பளத்து இளைஞர் ....திருமண வாழ்க்கையின் முதல் படி எடுத்துவைக்கும் மாப்பிள்ளைக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக வாழ்த்துக்கள் ..
என் அருமை மாப்பிள்ளை கம்பள விருட்சம் அறக்கட்டளையின் தங்கமான விவசாய உறுப்பினர்...

மணமகன் :-
செல்வராஜ்
த/பெ: தங்கவேல்
தா/பெ: காந்தாமணி
பொன்னாலம்மன் சோலை
எரமாசிபொம்மு குலச்செல்வன்

மணமகள் :-
கிருஷ்ணவேணி
த/பெ:- சுப்ரமணியம்
தா/பெ:- செல்வி
ஜிலோப்பநாயக்கன் பாளையம்
குஜ்ஜபொம்மு குலச்செல்வி
தேதி :23/08/2018...நாள் :வியாழக்கிழமை ...
திருமண நிகழ்விடம் :அருள்மிகு உச்சிமாகாளியம்மன் திருக்கோவில் மண்டபம் ...கே .வல்லகொண்டபுரம் ...உடுமலைப்பேட்டை

கம்பள விருட்சம் குழுமம் ...
உடுமலைப்பேட்டை ...





சங்கம் வளர்த்தவர்கள் பதிவு-1

கோவை மாவட்டம் ..உடுமலை தாலுகா ...வருடம் 1993 பெதப்பம்பட்டி அரசு மேனிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 445/500 பெற்று முதலிடம் பெறுகிறான் ஒரு மாணவன். கேள்விப்பட்டு மாவட்டத்தலைவர் அடுத்த நாள் மாணவன் இல்லம் வந்து வாழ்த்துகிறார். மாணவன் பாலிடெக்னில் படிக்க விருப்பம் தெரிவிக்கிறான். Community certificate பிரச்சினை இருந்த நிலையில் அதற்கான விண்ணப்பம் உரிய ஆவணங்கள் இல்லை என வட்டாட்சியரால் நிராகரிக்க படுகிறது. தகவலறிந்து தலைவர் வழக்கறிஞர் ஒருவருடன் மாணவனையும் அழைத்துச் சென்று வட்டாட்சியர் அவர்களிடம் சொல்கிறார் விளிம்பு நிலைக்கு வந்த நம் சமுதாயம் பற்றி. உடனடியாக சப் கலக்டர் அலுவலகம் விண்ணப்பம் அனுப்பப்படுகிறது. அங்கும் விசாரணையில் பங்கேற்றார் தனது சகாக்களுடன் வெற்றியும் பெற்றார். மாணவனுக்கு குறித்த நேரத்தில் 15 நாட்களில் ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தந்தார். அதனுடன் கொல்லாவார் மாணவர்கள் மூவருக்கும் பெற்றுத்தருகிறார். அந்த ஒரு சான்றிதழை மட்டும் வைத்து பலருக்கு கிடைத்தது. அந்த மாணவன் வளர்ச்சியை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். அந்த மாணவன் இன்று அரசுத் துறையில்  உயர்ந்த இடத்தில் உள்ளான். அந்த தலைவர் யாருமல்ல-தலைவர் என்றழைக்கப்பட்ட கொண்டேகவுண்டன்பாளையம் திருமலைசாமி அவர்கள்
மாணவன்-உங்கள் யூகத்திற்கே.....
 இன்றைய வளரும்  ராஜகம்பள சமுதாய இளைஞர்களுக்கு....இத்தகவலை பகிர்வதற்கு பெருமைகொள்கிறேன் ....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..

அவர் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு,செயல்திட்டங்களுக்கு அவரின் பங்களிப்பு பெரும் பலம் ... ..மதிப்புக்கூட்டு தலைவரும் கூட ..

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

இன்றைய ஞாயிறு .....பொள்ளாச்சி ..

இன்று 19.08.2018 பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பில் 64 ஆவது இலக்கிய சந்திப்பு நடைபெற்றது.
இதில் நூறாண்டு கடந்த ஹைக்கூ என்று தலைப்பில் கவிஞர் மு.முருகேசன் (தி.இந்து பத்திரிகையின் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்)
பொள்ளாச்சி அம்சப்பிரியாவின் வழிப்போக்கன் சொல்லாத குறிப்புகள் கவிதைத் தொகுப்பு அறிமுகம் செய்து வெளியீடு நிகழ்வு நடைபெற்றது.
இதில் உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர்

என்னும் நூலை ஆசிரியர் மா.மதியழகன் மற்றும் ஆய்வு நடுவத்தைச் சார்ந்த உடுமலை சிவக்குமார் , பேராசிரியர் கண்டிமுத்து, மற்றும் பதிப்பாசிரியர் அருட்செல்வன் ஆகியோர் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திற்கு நூலைப் பரிசாக அளித்துத் திறனாய்வுக்குக் கருத்துரைத்தனர்.
முனைவர் மதியழகன் பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்தும் அதன் தேவையும் குறித்தும் பேசினார்...

சனி, 18 ஆகஸ்ட், 2018

பாவலர் பழனிச்சாமி ....(முதலாமாண்டு அஞ்சலி )

நேற்று பாவலர் பழனிச்சாமி அவர்களின் முதலாமாண்டு அஞ்சலி ...

என் சிறுவயதில் இருந்தே என் மீது தனிப்பாசம் கொண்டிருந்தவர் ,தளி ஜல்லிபட்டி என் பாட்டியின் ஊருக்கு(கம்பளாப்பட்டி கண்ணளம்மாள் ) செல்லும்பொழுதெல்லாம் ..பாசமாக என்னை எப்பொழுதும் காந்தி என்றே என்னை அழைப்பார்..படிப்பு பிறகு வேலைவாய்ப்பு காரணமாக கோவை சென்று விட்டதால் அவரின் பாச நட்பு  சிறிதுகாலம் சந்திக்க முடியாமல் போய்விட்டது ..இவரின் நட்பு 2014 வருடம் முதல் 2017 முடிய பாச நட்பு எத்தலப்பரின் ஆசியுடன் அவரின் வரலாற்று பதிவுகளை தெரிந்துகொள்ள அருமையான வாய்ப்பு கிடைத்தது வரலாற்று பொக்கிஷம் ..மூன்று வருட நட்பு முப்பது வருடங்கள் பழகியது போல் இருந்தது ...ஆன்மிகம் ,வரலாற்று பதிவுகள் ,நாட்டுப்புற பாடல்கள் ,தளி எத்தலப்பரின் பாடல்கள் ,நமது முன்னோர்களின் வரலாறுகளை தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது என் வாழ்நாளில் வரலாற்று கல்வெட்டில் மறையாத பொக்கிஷமாக உள்ளது ..நேற்று அவரின் முதலாண்டு நினைவஞ்சலி ..அவரின் நினைவு நாளை நேற்று கோவையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் -(கோவை பதிப்பகம் )..அலுவுலக அதிகாரிகளுடன் மற்றும் கேரளா மக்களின் மழைவெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்கி ..நமது தளி எத்தலப்பர் ...தென் கொங்கு நாட்டின் விடுதலை போர் நூலை வழங்கி ..பாவலர் பழனிச்சாமி அவர்களின் ஆத்மாவிற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நேற்றைய நாள் அமைந்தது..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681 

திங்கள், 13 ஆகஸ்ட், 2018


அன்பர்களே!
கலைஞர் மறைந்த நாளன்றும் நல்லடக்கம் செய்யப்பட்ட மறுநாளன்றும் நேரலையில் நான் அமர நேரிட்டது! இயன்றவரை நன்றிக்கடன் தீர்ப்போமென்று வெறுங்கையுடன் அமர்ந்திருந்தேன்.
சொற்களைத் தவிர வேறொன்றுமில்லை என்னிடத்தில்! அம்மையாரோ கலைஞரோ தமிழகத்து ஆளுமைகள் விண்ணெட்டும்போது இப்படி விடைதருவதே தமிழ்மாநிலத்தின் மாண்பெனக் கொண்டேன்!
உரைநடையில் உச்சந்தொட்டவரிடம் இச்சையால் பிச்சைபெற்ற ஒருவனின் எளிய நன்றியறிதல்தாம் இவ்வரிகள்! இவற்றில் ஒரு பாதியே அன்றரற்றியது! மொத்தமுஞ் சேர்த்துப்பொதுவில் வைத்துவிட்டேன். பொதிந்த அன்பை மட்டுமே கொள்வீர்! பிழை பொறுத்தருள்வீர்!
தமிழாசிரியரான என் தந்தையார் எப்பொழுதும் மேடையில் பேசுமுன் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரையும் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதரையும் நினைத்துக்கொள்வார். நான் தந்தையோடு எப்போதும் கலைஞரை நெஞ்சிலேற்றித் தமிழூறிய பெரியப்பா வைகோ
அவர்களையும் எப்போதும் கலைஞரை நேர்மையாக எதிர்த்தே நிற்கும் தமிழ்க்கடல் பெரியப்பா நெல்லை கண்ணன் அவர்களையும் நினைத்துக்கொண்டேன்.
நன்றி - புதியதலைமுறைக்கு
ஆகஸ்ட் 7, 2018 மாலையில் கலைஞர் மறைந்தார் என்ற செய்திவந்தபோது…
எவரும் விரும்பாத, இதயத்தைக் கனக்க வைக்கும் அந்த
இரக்கமற்ற செய்தியைத்தான் நாம் இப்போது கேள்விப்படுகிறோம்.
கலைஞர் சற்றுமுன் 6.10 மணியளவில் காலமானாரென்று
காவேரி மருத்துவமனை அறிவித்துவிட்டது.
கோடானுகோடித் தொண்டர்களை அழவைத்துவிட்டு இப்படியெல்லாம் அஸ்தமிப்பது உதயசூரியனுக்கு அழகல்லவே!
அதிக அளவாக அரைநாள் மட்டுந்தானே அதற்கு அனுமதி! நிரந்தரமாய்க் கண்மூட சூரியப்பூவிற்கேது அனுமதி!? இருளின் கொடுமை சூரியனுக்கெப்படித் தெரியும்!?
கடந்த பத்துநாட்களுக்கும் மேலாகக் காவேரி மருத்துவமனையில் கடுமையாகப் போராடிவிட்டு இறுதியாகத் தன்னை வெல்லப் புன்னகையுடன் அனுமதித்திருக்கிறார் இயற்கையை!
ஏறத்தாழ ஒருநூற்றாண்டு காலம் தமிழ் உலகிற்குத் தொண்டாற்றியவர் தொண்டாற்றலைத் தொண்டர்களுக்குத் தோள்மாற்றித் தந்துவிட்டு விடைபெற்றிருக்கிறார்.
மக்களின் இழிவு நீங்க உழைத்த தலைவர் உறங்கச் செல்கிறார்.
இந்தியாவின் முதுபெருந்தலைவர்களுள் முத்தானவர் முதிர்ந்தபழமாய் உதிர்ந்துவிட்டார்.
தலைவா எழுந்து வா என்று முழங்கினர் தொண்டர்கள். உங்களில் ஒருவனாக இனிக் கலந்தெழுந்து வருவேன் என்று விடைபெற்றுவிட்டார்.
குழந்தைகளும் முதியவர்களும் அனைவருக்கும் சொத்தானவர்கள்.தமிழக்குடும்பத்தின் மூத்த முத்துச்சொத்து கரைந்துவிட்டது.
தொல்காப்பியப் பூங்காவில் தானுமோர் மலராக மலர்ந்துவிட்டார் மகத்தான கலைஞர்!
மையூறும் எழுதுகோலும் கண்ணூறும் நாங்களும் காத்திருந்தோம்!
வருவாய் வருவாய் என நாங்கள் நினைத்திருந்தோம் வந்தது வந்தாய் பேழையில் வந்தாயே எம் தலைவா!
எனத் தொண்டர்கள் கதறுகின்றனர்.
நன்னீர் பொங்கக் காவிரி கரைபுரண்டு காவிரி தீரத்துக் கலைமகன் உனைக்காண வந்திருக்குங் காலமதில், காவேரியிலிருந்து உப்புநீர்க் கடலோரம் உறங்கச் செல்கிறேன் என்கிறாயே !
அடுக்குமாவென அரற்றுகின்றனர் அன்பர்கள்!
மருத்துவமனை வாயிலில் மருகும் தொண்டர் கூட்டம்
பெருக்கும் முழக்கங்கள் விண்ணை உடைக்கின்றன
எதிரிகளையும் கண்ணீர்வடிக்கச் செய்யும் வல்லமைபெற்ற
இத்திருமகன் வாழ்ந்த வாழ்வுக்குக் கிடைத்த பொற்கிழிகள் இவை!
மழைவெள்ளம் எட்டிப்பார்த்ததுண்டு கோபாலபுரத்தில் அன்று!
கண்ணீர்வெள்ளம் எட்டக் கண்டோம் உன்புரத்தில் இன்று!
தமிழகத்தின் எத்தனையோ புரங்களைப் போல்
தானுமோர் புரமல்ல கோபாலபுரம்!
தமிழகத்தின் அகத்தை மாற்றிய புதுமைப்புரம் கோபாலபுரம்!
கோடானு கோடித் தொண்டர்களைப் பலபத்தாண்டுகளாகக்
கண்குளிரக் கண்டபுரம் கோபாலபுரம்!
தமிழகத்தின் பல பெருங்கோவில்கள் கண்ட பக்தர்களின் எண்ணிக்கையை விட இக்கோபாலபுரம் கண்ட பகுத்தறிவாளர்களின் எண்ணிக்கை அதிகம்!
என் கலைஞர் என்கிறார் உச்ச விண்மீன்!
எழுந்து வாங்கப்பா என்கிறார் உதடுதுடிக்கும் பெண்!
எத்தனையெத்தனைபேர் இப்படி எந்தையே என அழைக்கும் விந்தை செய்தாய்!
காற்சட்டைப் பருவந்தொட்டுக் காலமுடிவு வரை
கன்னிநிலத்திற்குத் தொண்டாற்றிய ஒரு பெருந்தலைவனை
மீண்டுவா மீண்டுவா என்று அழைத்தழைத்து நாத்தழுதழுத்துத்
தொண்டையெல்லாம் வற்றிக் கிடக்கிறது தொண்டர்களுக்கு!
உரம்பெற்ற உடன்பிறப்புகள் அழுவதற்கும் குரலின்றி
உடலங்களாய் மூச்சடங்கிப் பேச்சடங்கி நிற்கின்றனர்!
(தொலைபேசி இணைப்பில் வந்து இரங்கல்களைத் தெரிவித்த தலைவர்கள்:
பாரதிய ஜனதாவின் தமிழகத் தலைவர் திருமதி.தமிழிசை சவுந்திரராஜன்
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.திருநாவுக்கரசர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன்
அதிமுக செய்தித் தொடர்பாளர் திரு.வைகைச் செல்வன்
தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன்
திராவிடர்கழகத் தலைவர் திரு.கி.வீரமணி
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திரு.தொல்.திருமாவளவன்
அரங்கில் இரங்கல் அமர்வில் பங்கேற்றவர்கள்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக்குழு உறுப்பினர் திரு.சி.மகேந்திரன்
மூத்த இதழாளர் திரு.துக்ளக் ரமேஷ்
மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர் ஆகியோர்
சி.மகேந்திரன் அவர்கள் கலைஞரைத் தொட்டுத் தன் கல்லூரிக் கால நினைவுகளையும், அன்றைய சாணிப்பால் சவுக்கடிக் கொடூரங்களையும் விவரித்தார்.
துக்ளக் ரமேஷ் அவர்களிடம் ‘’காலமெலாம் நீங்களும் உங்கள் குருநாதரும் கலைஞரை விமர்சித்தே வந்தவர்கள்.அவரிடம் போற்றத்தகுந்தவற்றை நீங்கள் சொல்லக் காத்திருக்கிறேன் ‘’ என்றேன். கலைஞர் என்ற அரசியல்தலைவரைப் பற்றியும் இதழாசிரியரைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
அருணகிரிநாதரிடம் ‘’ கலைஞர் உங்களுக்கு அளிக்கும் மனமார்ந்த மதிப்பை நானும் அளிக்க விரும்புகிறேன் ’’ என்று சந்நிதானம் என்றே விளித்தேன்.
’’திருஞானசம்பந்தரால் புதுப்பிக்கப்பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ மடத்தின் ஆதீனகர்த்தர் நீங்கள். உங்களையும் உடன் வைத்திருப்பார். இன்னொருபுறம் வைணவர்கள் சூழவும் இருப்பார். ஒரு முறை திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் ஒருபுறம் திரு.திருச்சி கல்யாணராமன் – வைணவரான இவர் காஞ்சி சங்கரமடத்தின் ஆஸ்தானப் பொழிவாளரும்கூட- அவர்கள் மற்றொருபுறம் என வீற்றிருந்தனர். நடுநாயகமாய்க் கலைஞர் வீற்றிருந்தார்.அக்கூட்டத்தில் அவர்கள் பேச்சை இரசித்துக்கேட்டார் கலைஞர்.இத்தனை நாள் கேட்காமல் போனேனே என்று போற்றினார்.பேசிய அவர்களும் மகிழ்ந்தனர்.நாத்திகம் பேசியவர் இவ்வளவு நயம்படப் புகழ்ந்ததெல்லாம் எப்படிச் சாத்தியப்பட்டது?’’ என்று கேட்டேன்.
’ ஒன்றே குலம் ஒருவனே தேவன் ‘ என்று தொடங்கியதிலேயே பதிலைப் பொதிந்துவைத்துவிட்டார் ஆதீனகர்த்தர்.
துக்ளக் ரமேஷ் அவர்கள் இவர்களோடு மட்டுமல்லாமல் பிற மதத்தினரோடும் கலைஞர் அப்படியே உறவைப் பேணினார் என்றார்.
செய்தியாளர் வேதவள்ளியும் உடனமர்ந்து செய்திகளை வழங்கினார் )
ஆகஸ்ட் 8: கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நாளன்று நேரலை:
இராஜாஜி அரங்கில்:
முதுபெருந்தலைவர் முத்தமிழறிஞர் கண்ணாடிப்பேழைக்குள் கண்ணுறங்குகிறார்.
நேசித்தோர் நிறைவஞ்சலிக்காய்க் கலைஞர் வீற்றிருக்கிறார் இதோ இராஜாஜி அரங்கில்.
கண்ணுக்கெட்டும் தொலைவில் சிலையாய்ப் பெரியார்.
அடுத்து நிற்கிறார் அண்ணா.
சாலையாய்த் தொடர்கிறார் கர்மவீரர்.
இப்படி மனம் நிறைந்த தலைவர்களின் வழியில் மாகலைஞர் பயணிக்கவிருக்கிறார்.
தன் வாழ்வில் எப்போதும் எதிர்நீச்சலையே போட்டு வந்தவர் இதோ இப்போதும் மக்கள் வெள்ளத்தில் எதிர்நீச்சல்போட்டே முன்னேறுகிறார்.
அண்ணாவின் அடிநிழல் தேடிச் செல்கிறார்.
அழைக்கும் அண்ணாவா? தடுக்கும் தம்பிமார்களா? பார்த்துவிடலாமென்று மல்லுக்கு நிற்கின்றனர்!
தேசியக்கொடி போர்த்தப்பட்டு இராணுவ மரியாதையுடன் தன் இறுதிப்பயணத்தை மேற்கொள்ளும் இத்தலைவர், அடிமை இந்தியாவில் திருக்குவளை எனும் கண்விழிக்காததொரு குறுங்கிராமத்தில் கண்விழித்தவர் என்றால் எவர் நம்புவார்!
இராஜாஜி அரங்கிற்கும் மெரினா கடற்கரைக்கும் இன்று மட்டும் தொலைவு பல்லாயிரம் கல்லாகக் கனத்த மலைப்பாம்பாய் நீள்கிறது.
கண்ணாடிப்பெட்டியில் கம்பீரக்குரலோன் கண்ணுறங்குகிறார்.
கருப்புக் கண்ணாடியணிந்த நெருப்புக் குரலோன் நோக்குகிறார் கடற்கரையை.
காலப் பேழைக்குள் கருவானவராய்
வரலாற்றில் வீற்றிருக்க விரைகிறார்.
இதோ மேற்கிலும் கிழக்கிலுமென
இன்று மட்டும் இரு சூரியன்கள் சாய்ந்துவிட்டன!
இராஜாஜியிடம் விடைபெற்றார். பெரியாரிடம் விடைபெற்றார். இதோ சாலையாய் விரிந்து தம்பியைத் தழுவுகிறார் அண்ணா!
போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என மறித்துக் கைக்காட்டவென்று சிலம்பு சொல்லும் அதைப்போல
கருப்பு சிவப்பு வண்ணக் கொடிகள் அலைக்கழிந்து
திருக்கொண்ட தலைவா செல்லாதேயெனும் சேதி சொல்கின்றன
தொண்டர்தம் கண்ணுதிரங் கொட்டிக் கொட்டிக்
கொடியெங்கும் சிவப்பெனும் ஒருநிறந்தானென்று ஆகாதா!
கட்டுக்குள் அடங்காமல் விழிநீரோட, வெறிகொண்டு
கழகக்கொடிகளைக் காற்றில் ஏவும் தொண்டர்களைக் காணுங்கள்!
வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் கூட்டமல்ல
வான்புகழ் இதயதேவனை வீரவணக்கத்தோடனுப்பும் கூட்டமிது!
எத்திசை நோக்கினும் ஏக்கப் பெருங்குரல்!
ஏந்தலே எழுந்துவந்துவிடு எனும் கட்டளைக்குரல்!
’ஓய்வறியாது உழைத்தவன் இதோ இங்கே ஓய்வெடுக்கிறான்’
என்று ஏன் எழுதச் சொன்னீர்! எவரறிவித்தார் உமக்கு ஓய்வை!
அண்ணாவின் இதயக் கமலத்தை அவரிடத்தே சேர்ப்பிக்க
அவர்தம் வார்ப்படமே! அவர்தம் காலடி நோக்கிப் புறப்பட்டீரோ!
காடுவரை மட்டுமா எங்களுக்குக்
கடைசி வரையும் நீதானென்று இருந்தோமே!
இருந்தார்போன்று இல்லையென்று ஆனாயே!
இதயத்தளபதிகளின் கண்களையும் குளமாக்கினாயே!
ஏழுகோடிக் குடிகளின் ஏந்தலாய்
இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்தாய்!
வாழ்வாங்கு வாழுங்கோன் இவனென்று இனித்திருந்தாய்!
வாழ்வெஞ்சி இனியிருப்போர் தவிக்கவா நினைத்திருந்தாய்!
கோலோச்சியோர் கொலுவிருக்குமிடமாய்க் கடற்கரை ஆயிற்றே!
கண்ணயர்ந்தோரே! ஈழம் பார்க்காமல் ஈமம் பார்ப்பதென்றாயிற்றே!
கடற்கரைச்சாலையை காமராசர் சாலையென்று ஆக்கியவர் கலைஞர்.
காமராசரும் தம் கரங்களால் தழுவியனுப்புகிறார் கலைஞரை!
எந்தக் காமராசர் சாலையில் மந்திரிமார்கள் புடைசூழ நாளும் கோட்டைக்குச் சென்று வந்தாரோ
அதே சாலையில் இனித் திரும்பாவிடத்திற்குச் செல்லப் பிடிவாதங் காட்டுகிறார்!
காமராசருக்கு என்ன செய்தார் கலைஞர் என்று நேற்றுப்பெய்த மழையில் முளைத்த காளான்கள் பிதற்றுகின்றன.
கட்சி அலுவலகத்திலேயே காமராசருக்குக் கடமையாற்ற அவர்கள் நினைத்தபோது மறுத்து இராஜாஜி அரங்கில் மக்கள் பார்வைக்கு மாமனிதரை வைத்தார்.
அவர் வணங்கும் காந்தியின் இராட்டைச் சத்தத்தில் அவருறங்க அனைவர் சம்மதமும் பெற்றுத் தலையில் தலைப்பாகையோடுத் தானுமிறங்கி அவ்விடத்தைத் தகுதியாக்கிடக் களங்கண்டவர்.
வரலாற்றை வலைத்தளங்களின் சிற்றலைகளில் தேடாதீர்கள் இளைஞர்களே!
புத்தகப் பேரலைகளில் வாசித்தறியுங்கள் எம் அன்புச் செல்வங்களே!
மறைந்திருப்பது வாழ்நாளெலாம் பகுத்தறிவை உயர்த்திப்பிடித்த தலைவர்.
குறைந்திராத உழைப்பினால் காலமெலாம் கடமையாற்றிய தலைவர்!
மரணமென்ற ஒன்றையும் பாசமென்ற மற்றொன்றையும் ஒருசேர
மடையரன்றோ படைத்தார்! இயற்கையெனும் திருப்பெயரால்!
செல்வத்தலைவர் செல்லுமிந்நேரத்தில் சிதைந்த உள்ளங்கள்
சொல்வதொன்றே! சிதைக்குமியற்கையே! நீயாயினுமிரு நலமோடு!
கதறல் சத்தம் காதைப் பிளக்கிறது!
இராஜாஜி மறைந்தார்! பெரியார் ‘இராசகோவாலு போய்ட்டியா!’ என்று ஈமம் வரை சென்று கண்ணீர் உகுத்தார்.
அண்ணா மறைந்தபோதும் அவ்வாறே தம்பிமார் உகுத்தனர். கர்மவீரர் மறைந்தபோதும் அப்படித்தான் உருகியது கழகமே!
என்னதான் பகுத்தறிவில் புடம்போட்டாலும் பாசத்தில் கதறுதல் மனித இயல்பல்லவா!
துஞ்சியவர் உடலங் கண்டால் நேசித்தவர் நெஞ்சத்து அன்பெல்லாம் கண்கள்வழிக் கொட்டதா!
ஒரு மனிதர் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரது மறைவில்தான் தெரிந்துகொள்ளலாமென்றால்
இதோ காணுங்கள் எவ்வளவு புகழ்பெற்றவர் புகழுடலாய்ப் போகின்றாரென்று!
தேடிச்சோறுநிதந்தின்று - பல
சின்னஞ்சிறுகதைகள்பேசி - மனம்
வாடித்துன்பமிகஉழன்று - பிறர்
வாடப்பலசெயல்கள்செய்து - நரை
கூடிக்கிழப்பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையெனப்பின்மாயும் - பலவேடிக்கைமனிதரைப்போலே
வாழ்ந்தவரல்லர் கலைஞர்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்!
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறளாய்த் தோற்றங்கொண்டவர்
முந்தி வாழ்த்திய அத்தெய்வப் புலவருக்கு ஜல
சந்தியில் வானுயரச் சிலை சமைத்தவர்.
கோனாய்த் தானிருக்கையில்
கோட்டம் அமைத்தவர்!
நாமெலாம் நெஞ்சு நிமிர்த்தக் காரணமான பெருமக்கள் வரிசையில்
நங்கூரமாய்ச் செம்மாந்து நின்று நிலைபெற்றுவிட்டவர் போகிறார்!
எத்தகு இனப்பகையை எங்கிருந்து வந்தவர் ஊடறுத்து வென்றார்
என்ற வரலாற்றை இங்கிருக்கும் பிள்ளைகள் இனிப்பயில்வர்!
நகரமுடியாமல் நகர்கிறது நற்றமிழ்ப் புதல்வரின் நகர்வலம்!
நகரமுடிவிற்கல்ல! திருமுடி சூட்டப் புகுவதுபோல் போகிறது ஊர்வலம்!
வங்கக் கடலும் நாணி நிற்கும்படி
பக்கக் கடலாய் மனிதக் கூட்டம் அலையடிக்கிறது!
கழுகுப்பார்வையில் அதைக் காண்கையில்
தங்கத் தலைவருக்குப் பெருகும்படை விரிந்தே செல்கிறது!
(அரங்கில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன் அவர்களும் இராசி அழகப்பன் அவர்களும் தங்கள் இதய அஞ்சலிகளைச் செலுத்தினர். அழகப்பன் அவர்கள் கவியாய்ப் பொழிந்தார். முத்துராமன் அவர்கள் தம் தம்பி சுப.வீரபாண்டியனாருக்கும் தமக்கும் தம் தந்தைக்கும் கலைஞரோடு உள்ள நெருக்கத்தை உருக்கமாகப் பகிர்ந்தார். அவர் தந்தை உடல்நலம் குன்றியிருந்தவர்கூட கலைஞர் அரியணை ஏறியதில் நலம்பெற்றார் என்றார். அதனால்தான் அவர் டாக்டர் கலைஞரோ!? என்றேன். பின் தொடர்ந்தேன்…
கலைஞரும் இலக்கியமும் என்று நான் எழுதிவைத்திருந்த ஆக்கமொன்றை இடையிடையே எடுத்துவைத்தேன். பின்னிணைப்பாய் இங்கும் தந்திருக்கிறேன். )
காவேரி கைவிரிக்கக் கடுந்துயரில் மூழ்கடிக்கப்
போகாத இடந்தேடிப் பொன்னுடலாய்ப் புகுந்துவிட்டார்!
ஆயுளுக்கும் எவர்நா அண்ணா அண்ணா என்றுரைத்ததோ
அவர்காலடிக்கே நிழல்தேடித் தஞ்சமென்று ஏகுகிறார்!
பரிதவித்த மாந்தரை மீட்டபின்னே
பள்ளத்தில் இனி எவருமில்லையெனப்
பிள்ளைக்கும் சொல்லிவிட்டுப்
படுத்துறங்கச் சென்றுவிட்டார்!
இந்நேரமெல்லாம் கடற்கரை மணல் குளிர்மணலாய்த் தணிந்திருக்கும். இன்றோ சுடுமணலாய்த் தகித்திருக்கிறது!
சூரியனைப் புதைத்தால் சுடத்தானே செய்யும்!
உமக்குமோர்க் குடும்பமுண்டு என்றன்றோ நினைத்திருந்தோம்!
உம்மகவே உமக்குத் தொண்டரேயென்று இன்றன்றோ கண்டோம்!
ஆவியுகுத்தபின்தான் அவரே கோருகிறார் அப்பாவென்றழைக்க!
ஆதியும் நடுங்குதய்யா உன்னகத்தோர் கண்களில் நீர்பார்க்க!
நீர் பார்க்க இனியில்லை என்றானதும் எங்கண்ணில்
நீர் தடுக்க ஒருவரில்லை என்றானதே!
வாழ்நாளெலாம் வைரநெஞ்சினராய்த் தொண்டர்தம் தோள்தடவி உலவித் திரிந்த ஒருபெருந் தலைவர் ஊர்பார்க்கப் பயணிக்கிறார்!
ஈர நெஞ்சங்கொண்ட இயற்கை அன்னையும் தன் கண்ணீர்
சொரிய வேளைபார்த்து மேகக்கண்களை மூடியேவைத்திருக்கிறாள்
(நல்லடக்கம் முடிந்ததும் எவருக்கும் இடையூறின்றிக் கொட்டியது மழை!)
நாளைய தமிழகம் தலைவரின் கரங்களில் பத்திரப்படுமென
நம்பி ஏமாந்த மாந்தர்தம் தொண்டை வற்றிப் போயினரே!
உமக்கு எதிரிகள்தாம் அதிகமென்று நினைத்திருந்தோம்!
உம் எதிரிகளின் அகத்துள்ளும் நீரேயெனக் கண்டுகொண்டோம்!
சென்றுவாவென அவர்களும் துடைக்கின்றனர் கண்ணோரத்தை!
இன்றுதான் அவர்களே தடவுகின்றனர் இதயத்தை!
காற்று வாங்க இனிக் கடற்கரைக்கு வரும் கூட்டத்தைவிட
கலைஞர் நினைவை வாங்க வரும் கூட்டமே மிஞ்சும்!
கோபாலபுரம் போன்றே கடற்கரையும் இனி ஆகும்
கண்கொண்டு நினைத்த மாத்திரத்தில் உமைக் காணுமிடமென்று!
வெண்தாடித் தடியின் தொண்டரடிப்பொடி
புற்று முற்றுவைத்த பேரறிஞரின் பக்குவத்தம்பி
உடன்பிறப்புகளின் உள்ளத்தில் குடியேறிவிட்டார்!
முத்தமிழ் அறிஞருக்கு முப்படை அணிவகுப்போடு இறுதிமரியாதை!
நாடுபோற்றும் தலைவர்களும் கூடிநின்ற உறவுகளும் குவிந்துவிழுந்த தொண்டர்களும் கூப்பிய கரங்களோடு நிற்க
குண்டுகள் முழங்கக் காவலர் கண்களும் கலங்க
மண்ணதிர மனமதிரப் பெருமரமொன்று விதையென்றானதே!
இருக்கும் தலைவர்களையெல்லாம் எடுத்துக்கொடுத்துவிட்டால்
விடியுமா விடியாதாவென எவர் முகம்பார்ப்பது இனி!?
தன்னை வழியனுப்பும் பணியளித்துப் பிள்ளைச் செய்தியாளன்
எனைப் பணித்தமூத்த முத்தமிழ்ச் செய்தியாளருக்கு விடைதர விழிநீர்ப்பெருக்கத்தால் விம்மி வேண்டி
வள்ளல் பெருமானைத் துணைக்கழைத்து நிற்கிறேனே!
வான்கலந்த கலைஞரே! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்குதய்யா!
(ஒரு தலைவராக அவரை நினைத்தது வரை என் நா தழுதழுக்கவில்லை என் துறை மூத்தவர் என நொடிப்பொழுதில் நினைத்த மாத்திரத்தில் என்னுறுதி குலைந்தது!)
பெரியார் என்ன மறைந்தா விட்டார்?
ஓமந்தூரார் என்ன மறைந்தா விட்டார்?
கர்மவீரர் என்ன மறைந்தா விட்டார்?
அண்ணா என்ன மறைந்தா விட்டார்?
கலைஞரும் என்ன மறைந்தா விட்டார்?
எவரேனும் நம்பினால்தானே நீவிர் மறைந்தாகக் கணக்கு!
பிணக்குள்ளோரே நம்பவில்லையெனும்போது ஏது மறைவ!?
உறங்கட்டும் சற்றே அவர் உறங்கட்டும்
உடன்பிறப்புகளின் உள்ளங்களுக்குள்
உறங்கட்டும் அவர் சற்றே உறங்கட்டும்
எதற்கும் அவர் எழுதுகோலிடம் சொல்லிவையுங்கள்!
எழுத்துமை காயுமுன் வந்துவிடும் வல்லமையுண்டு அவர்க்கென்று!
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
வள்ளுவனைத் துணைக்கழைத்தாலன்றி நாம் அமைதி கொள்வது இயலாது.
இதே கடற்கரையில் நில்லுங்கள்
நாளைச் சூரியன் காலைச் சூரியனாய்
எழுகிறானென்றால் அவன் வழக்கச் சூரியனல்லன்
தமிழனை விழிக்கச் செய்த முழக்கச் சூரியன் என்று காண்க!
கலைஞரே கதிரவனாய்க் கிழக்குதித்தாரென்று கண்ணாரக் காண்க!
கலைஞருக்குப் புதியதலைமுறையின் இதய அஞ்சலிகள் என்றும் உரித்தாகட்டும்.
பிற்சேர்க்கை:
இலக்கியமும் கலைஞரும்
இலக்கியத்திற்கு வரையறை என்று பல ஆளுமைகள் பலவற்றை வரைந்திருக்கின்றனர். அவற்றில் விஞ்சி நிற்பது எளிய மக்களையும் எப்படைப்பு ஆட்கொண்டு அவர்களை மேம்படுத்துகிறதோ அதுவே இலக்கியம் என்பது. அவ்வகையில் முத்தமிழ் அறிஞர் என்பதும் கலைஞர் என்பதும் திமுக தலைவருக்குச் சாலப்பொருந்தும் பட்டங்கள்!
ஞானக்கூத்தன், வண்ணதாசன், கலாப்ரியா, வைரமுத்து, வாலி, அப்துல்ரஹ்மான் என்று அவரது இலக்கியப் பங்களிப்பைப் போற்றியவர்கள் ஏராளம். க.நா.சுவிலிருந்து இன்று வரை விமர்சித்தவர்களும் உண்டு என்றாலும் மிகை நாடி மிக்க கொளல் எனில் போற்றலே அதிகம்.
இலக்கியமென்றால் என்ன என்று தன்னளவிலேனும் ஓர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதே இலக்கியவாதியின் தன்மை என்றால் கலைஞருக்கும் அப்படியோர் நிலைப்பாடிருந்தது.
நவீன இலக்கியத்தைப்பொறுத்த மட்டிலும் கலைஞருக்கு அதன் மீது பெரிய மதிப்பில்லை என்றே சொல்லவேண்டும். பல ஆண்டுகளுக்குமுன் சுபமங்களா இதழுக்கு அவரளித்த நேர்காணலில் சொல்கிறார் ‘ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதப்படும் எழுத்துகளை நான் வரவேற்பவன் அல்லன். அதைத்தானே நவீன இலக்கியம் என்று சொல்கிறீர்கள்? அதன் மீது மதிப்பில்லை’ என்றார். எனில் அவரது பயணம் எப்படியிருந்தது? வாழ்நாளெல்லாம் எழுதுவதும் பேசுவதும் நற்றமிழில் அழகுததும்பும் சொற்கோவையோடுதான் என்ற நிலைப்பாட்டிலேயே இயங்கியவர் கலைஞர்.
இளம் பள்ளிப்பருவத்தில் எழுதிய எழுத்துகளாகட்டும் பின் இயக்க இதழ்களில் எழுதியதாகட்டும் நாடகங்களில் எழுதியதாகட்டும் திரைப்படங்களில் எழுதியதாகட்டும் தனித்த கடிதங்களில் எழுதியதாகட்டும் வாழ்வை வடித்து எழுதியதாகட்டும் உரையெழுதியதாகட்டும் மொழிபெயர்த்து எழுதியதாகட்டும் புதினங்கள் எழுதியதாகட்டும் கவிமேடைகளில் இயக்கமேடைகளில் ஆற்றிய உரைகளாகட்டும் அத்தனையும் தேன்சொட்டும் தீஞ்சுவைத் தமிழில் மக்கள் கொண்டாடிய இலக்கியங்கள்தாம். அவரது எழுதுகோல்வழிப் பிறந்த படைப்புகள் இலக்கிய வரிசையில் என்றும் தனித்து நிற்கும். கலைஞரின் எழுத்துகளிலிருந்து சொட்டிய மையே பலரது எழுதுகோல்களை நிரப்பின.
1956 இல் தமது 32 ஆம் வயதிலேயே குறளோவியம் படைத்தவர் கலைஞர். வேலூர் திராவிடன் பதிப்பகத்தின் வெளியீடாக முதலில் வந்தது. ‘ கலைஞர் கண்கொண்டு குறளைக் காண்பது தமிழைத் துய்ப்பார்க்கே இணையிலா இன்பமும் பெரும் பயனும் நல்கும்.’ என்பது திராவிடன் பதிப்பகத்தாரின் புகழ்மாலை. பின் முரசொலி, தினமணிக்கதிர், குங்குமம் போன்ற இதழ்களில் குறளோவியத்தைக் கதைகளாக, வாழ்க்கை நிகழ்வுகளாக, தமிழக வரலாற்றுப் பதிவுகளாக மிக எளிமையாகவும், அழகாகவும், ஆழமாகவும் வரைந்திருக்கிறார். அதன் கோப்பாக 300 குறளோவியங்கள் 1985 ஆம் ஆண்டில் மிகச்சிறந்த நூலாக வெளிவந்தது. அண்ணாமலைப் பலகலைக்கழகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பின் இந்தியிலும்கூட மொழிபெயர்க்கப்பட்டது.
1974 ஆம் ஆண்டில் கலைஞர் முதல்வராய் வீற்றிருந்தபோது வெளிவந்த புதினம் ரோமாபுரிப்பாண்டியன். ஆயிரம் அரசியல் அழுத்தங்களுக்கிடையில் இவரால் எப்படித்தான் எழுத முடிகிறதோ என்று அனைவரும் வியந்தனர். முதலில் முரசொலியிலும் பின்னர் குமுதம் இதழிலும் தொடராக வந்தது ரோமாபுரிப்பாண்டியன். தமிழக வரலாற்றை ரோம் நாட்டு அகஸ்டஸ் கால வரலாற்றோடு இணைக்கும் முயற்சியில் படைக்கப்பெற்றது இப்புதினம். வணிகத் தொடர்பால் இரு நாட்டின் உறவு பெருகியதைப் பல இலக்கியச் சான்றுகள் , தங்க நாணயங்கள், புதைபொருள் சான்றுகள் உறுதிசெய்யும் நிலையில் கிமு20 ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு பயணிக்கும் நாவல் இது. நாவலெங்கும் அக்கால நாகரிகம், ஆடை அணிகலன்கள், சமூகப் பொருளாதார நிலை என அனைத்தின் மூலமாக நாம் அக்காலத்தையே உணர்ந்துகொள்ளுமளவிற்குப் படைத்திருப்பார். மேலும் மதுரையும் அதன் துறைமுகமான கொற்கையும் விரிவாக விளக்கப்பட்டிருக்கும். கொற்கை முத்துக்களாலான அணிகலன்களாக முத்துக்கடுக்கண், முத்துக்கண்டி, முத்துச்சல்லி போன்றவற்றையும் முத்துக்களாலான மருந்துப்பொருட்களான முத்துக்கற்கம், முத்துச் சுண்ணம் போன்றவற்றையும் மணப்பந்தலில் தூவக்கூடியது முத்து மணலென்றும் நுணுக்கமாக விவரித்திருப்பார்.’’ நாங்கள் வாள் பிடித்துப் பழகியவர்களே தவிர தாள் பிடித்துப் பழகவில்லை’’ என்பது போன்ற வீரஞ்செறிந்த உரையாடற்காட்சிகளும் நிறைந்திருக்கின்றன. அவர் எடுத்துவைக்கும் ஒப்புவமைகள் வியந்து ரசிக்கவைப்பவை. பனம் பழம் போன்ற கறுத்த மேனி, குன்றுகள் போன்ற மதில்கள், அத்திக்காய் நிறம், நட்டுவாக்காலி மீசை, களிற்றின் வயிறு போல நிலைக்கதவுகள், கொன்றைக்காய் விரல்கள், வற்றிய பீர்க்கங்காய் போன்ற உடல் போன்றவை சில உதாரணங்கள்.
நூல் வெளியீட்டிற்குத் தலைமை தாங்கியவர் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர். வெளியிட்டவர் தலைமை நீதிபதி அனந்த நாராயணன். பெற்றுக்கொண்டது கவியரசர் கண்ணதாசன்.
2014 ஆம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சித் தொடராகவும் வெளியாயிற்று.
1970 களின் இறுதிப்பகுதியில் கலைஞரின் அரசியல் அல்லாத இலக்கிய மணம் மட்டுமே கமழும் உரைகள் தொகுக்கப்பட்டு மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தது.
அந்நூலில் 1969 இல் ஆற்றிய உரைகளிலிருந்து கம்பர்விழா உரை, கூழாங்கல்லை வைரமாக்குவோம், ஏழையின் சிரிப்பில் ஆகிய உரைகள்
1971 இல் மலர்க்காட்சி, இளங்கோவடிகள் எனும் தலைப்பில் இரு உரைகள், பத்திரிகைப் பெண்ணே ஆகிய உரைகள்
1972 இல் வசதியுள்ளோர் வழிவிடுக, கலைவாணர், நாடக தாசர், வள்ளலார் வழி எது?, இருமொழி போதும், தமிழிசை இயக்கம், இராசராசன் சிலை, கப்பலோட்டிய தமிழன், இதயங்கள் இயந்திரங்கள் ஆகவேண்டாம், புனித தோமையர், மனப்புரட்சி தேவை ஆகிய உரைகள்
1973 இல் அலகாபாத் மாநாடு, யாதும் ஊரே யாவரும் கேளிர், இளங்கோவடிகள் எனும் தலைப்பில் மேலும் இரு உரைகள், நிலாமுற்றம், வள்ளுவர்க்கோர் ஆலயம், உமாமகேஸ்வரனார், இலக்குவனார், பாரதி விழா, பயிற்றுமொழி ஆகிய உரைகளும்
1974 இல் கம்பர் விழா, கலை வளர்ப்போம், மொழிமானம் பெறுவோம், கருத்துச்சுதந்திரம் ஆகிய உரைகளும் தொகுக்கப்பட்டிருந்தன.
1987 இல் வெளிவந்தது சங்கத்தமிழ் எனும் நூல். இந்நூலில் சங்க இலக்கியத்தில் உள்ள பொருத்தமான 100 பாடல்களுக்கு விளக்கக் கவிதைகளைப் புதுக்கவிதைகளாகப் படைத்திருப்பார். இறுதியில் நின்ற 11 பாடல்களில் ஒருதலைக்காதல் எனும் பெயரில் கற்பனை கலந்த குறுங்காவியமாகப் பொருத்தமான சங்க இலக்கியப் பாடல்களுடன் எழுதியுள்ளார். இந்த விளக்கப் பாடல்கள் முதலில் குங்குமம் இதழில் வாரம் ஒரு பாடல் என வெளியாகி பின்னர் நூல் வடிவம்பெற்றுப் பலபதிப்புகளைக் கண்டுவருகிறது.
1991 ஆம் ஆண்டுவாக்கில் வெளிவந்தது பாயும் புலி பண்டாரக வன்னியன் எனும் கலைஞரின் எழுச்சி மிக்க வரலாற்றுப்புதினம். அதில் அவர் படைத்த பண்டாரக வன்னியனும் அவன் உள்ளங்கவர்க் காதலி குருவிச்சி நாச்சியாரும் அவன் அருமைத் தங்கையர் நல்ல நாச்சியும் ஊமைச்சி நாச்சியும் இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமை காக்கப் போராடியவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். அதன் இறுதியில் கலைஞர் குறிப்பிடுகிறார் ’காட்டுப் பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை! பண்டாரக வன்னியன் ஒருவனல்ல; அவனைப் போல பலர்; உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட - அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே அது வாழும் வரலாறு! என்று! நாம் கண்ணால் கண்ட ஈழத்து உணர்ச்சிக்குத் தன்னால் இயன்ற அளவு உரமாக இருந்தவர் கலைஞர்.
1985 காலகட்டத்தில் கொங்குவட்டாரத்தில் வழிவழியாகக் குலதெய்வமாக வழிபடப்பட்டுவந்த இருவர் பொன்னரும் சங்கரும். அவர்களைப் பற்றிய கதையே அண்ணன்மார் சாமி கதை என்றும் குன்றுடையான் கதை என்றும் வழங்கப்பட்டுவந்தது. அந்தக் கதையை கவிஞர் சக்திகனல் என்பாரின் நூல் மற்றும் அவரது தந்தை ஏட்டுப்பிரதியிலிருந்து எடுத்துவைத்த குறிப்புகள், பூளவாடி பொன்னுச்சாமி பாடிய உடுக்கையடிப் பாடல் என அனைத்தையும் உள்வாங்கி பொன்னர்-சங்கர் எனும் தலைப்பிலேயே தொடர்கதையாக எழுதினார். பின்னர் அது நூலாக 1985 காலகட்டத்தில் ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. பின் 2011 இல் கலைஞரின் கதை வசனத்தில் பொன்னர் சங்கர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
பிறந்தது முதல் மறைந்தது வரை ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகால வாழ்வு முழுவதிலும் நற்றமிழாலேயே நாடு சுற்றி வரலாறு படைத்த திறம்பெற்றவராய்த் திகழ்ந்த கலைஞர் தம் வாழ்வையும் ஆறு தொகுதிகளாக எழுதி வெளியிட்டிருக்கிறார். தம்முடைய அரசியல்வாழ்வு, பொதுவாழ்வு, சொந்த வாழ்வு என அனைத்தையும் நெஞ்சுக்கு நீதியாய்ப் படைத்திருக்கிறார்.
முதல் பகுதி தினமணிக்கதிர் இதழில் தொடராக வெளியானது. அதில் 1924 ஆம் ஆண்டு அவர் திருக்குவளையில் பிறந்ததிலிருந்து 1969 இல் அவர் தமிழகத்தின் முதல்வரானது வரையிலான நிகழ்வுகளைச் சுவைபடக் கூறியிருக்கிறார். 1975 இல் முதல் பகுதி நூலாக வெளிவந்தது.
இரண்டாவது பகுதி குங்குமம் இதழில் தொடராக வெளியாயிற்று. 1969 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டுவரையிலான நிகழ்வுகள் இதில் வருகின்றன. 1987 இல் இரண்டாம் பகுதி நூலாக வெளிவந்தது.
மூன்றாம் பகுதி 1976 ஆம் ஆண்டிலிருந்து 1988 ஆம் ஆண்டுவரையிலான நிகழ்வுகளைக் கொண்டதாக மலர்ந்தது. 1997 இல் வெளியானது இம்மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி 1989 முதல் 1996 வரையிலான நிகழ்வுகளை விவரித்தது. 2003 ஆம் ஆண்டு இந்த நான்காம் பகுதி வெளியாயிற்று.
ஐந்தாம் பகுதி 1996 முதல் 1999 வரையிலான காலகட்டத்தை விவரிக்கிறது. அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் 2013 ஜூன் 2 ஆம் நாள் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி. ச.மோகன் தலைமை தாங்க முதல் நூலைப் பேராசிரியர் மா.நன்னன் பெற்றுக்கொண்டார்.
ஆறாம் பகுதி 1999 முதல் 2006 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கிறது. 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் நாள் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி P.R.கோகுல கிருஷ்ணன் வெளியிட கவிஞர் வைரமுத்து முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.
கலைஞரின் மற்றுமொரு புகழ் வாய்ந்த படைப்பு தொல்காப்பியப் பூங்கா. தொல்காப்பியரால் இயற்றப்பட்ட இந்நூலுக்கு உரையெழுதிய பழைய உரையாசிரியர்கள் என அறுவரைச் சொல்வர். அதற்குப் பின்னும் பலர் எழுதியிருக்கின்றனர் என்றாலும் அவர்களுள் காலத்திற்கேற்ற புதுமைக் கருத்துகளைக் கையாண்டு, வரலாற்றுக்குறிப்புகளை ஆங்காங்கு தந்து விளக்கிய தனிச்சிறப்பு கலைஞரைச் சேரும். மனிதர்கள் உள் நுழைய முடியாத அடர்ந்த காடு என்றே மக்கள் தள்ளி நின்ற காலத்தில் அது காடன்று கவின் மலர்கள் மலர்ந்து மணங்கமழும் பூங்கா என்று நிறுவியர் கலைஞர். தொல்காப்பிய உரைகள், தொல்காப்பியம் குறித்து வெளிவந்திருந்த ஆய்வு நூல்கள் என்று அனைத்தையும் ஆழ்ந்து கருத்திற்கொண்டு, அகரமுதலிகள் போன்ற பிற ஆதாரங்களையும் கொண்டு இந்நூலை ஆக்கியிருக்கிறார் கலைஞர். பேராசிரியர் க.அன்பழகன் இந்நூலைப் பாராட்டுகையில் கடின ஆக்கங்கள் அனைத்தையும் உள்வாங்கி, மக்கள் படிக்க விரும்பும் எளிய நடையில், படிப்போர் ஆர்வத்தைத் தூண்டி, நினைவில் நிறுத்தத்தக்க வகையில் வரலாற்றுச் செய்திகளோடு இப்பூங்கா படைக்கப்பட்டிருக்கிறது என்றார். அது சற்றும் மிகையில்லை என்பதைப் படிப்போர் உணரலாம்.
திருக்குறளுக்கு தருமர், மணக்குடவர், தாமதத்தர், நச்சர், பருதி,பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய பதின்மர் பழைய உரையாசிரியர்கள். இவ்வரிசையில் திரு.வி.க., கா.சு.பிள்ளை, மு.வரதராஜன், வ.சுப.மாணிக்கம், கி.வா.ஜ., பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ஆகியோரிலிருந்து சுஜாதா வரை பலர் உரைகளை எழுதியுள்ளனர். சிற்றுரை, பேருரை, தெளிவரை, கருத்துரை, குறிப்புரை, ஆய்வுரை என்று 360க்கும் அதிகமான உரைகள் வெளிவந்துள்ளன. இத்தனை உரைகளுக்கும் மத்தியில் பகுத்தறிவுச் சிந்தனையுடன் கூடிய திருக்குறள் உரையாகக் கலைஞரின் உரை வெளிவந்து தனித்துவத்தோடு என்றும் நிலைத்திருக்கும் தன்மையோடு திகழ்கிறது. முரசொலியில் தொடர்ந்து எழுதப்பட்டுவந்த இந்த உரை 1996 இல் திருக்குறள்- கலைஞர் உரை என்ற பெயரில் நூலாயிற்று.
தென்பாண்டிச் சிங்கம். இது கலைஞர் எழுதிய மற்றுமோர் வரலாற்றுப் புதினம். இதன் முதற் பதிப்பு 1983 ஏப்ரலில் வெளியிடப்பட்டது. இதன் நாயகர் வாளுக்கு வேலி என்பார். 18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப்போரிட்டவர். மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய வாளுக்கு வேலியின் படைகள் மருதுபாண்டியர்களுக்குப் போரில் பெரிதும் உதவியதை வைத்து வடிக்கப்பட்ட புதினம் இது. இப்புதினம் தென்பாண்டிச் சிங்கம் என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராகவும் பொதிகைத் தொலைக்காட்சியில் வெளியானது.
சிலப்பதிகாரக் காட்சிகளையும் அகநானூற்றுக் காட்சிகளையும் புறநானூற்றுக் காட்சிகளையும் அவர் வடித்ததை இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம். ஒரு புறம் வரலாற்றுப்புதினங்கள் மறுபுறம் மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், தூக்குமேடை, காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன், நச்சுக்கோப்பை என்று சமூக நாடகங்களின் வரிசை
இன்னொருபுறம் தாய் காவியம் உட்பட விளக்கவுரைகளாய் அமைந்த படைப்புகள் என்று எப்புறமும் வார்ப்பித்த நூல்களனைத்தும் அவரது வளம்பெற்ற நடையால் புகழ்பெற்றன.
இராஜகுமாரியிலிருந்து பொன்னர் சங்கர் வரை பலப்பல திரைப்பட ஆக்கங்கள் அவற்றில் பல படங்களுக்கு அவரது எழுதிய பாடல்கள் என்று மக்களிடம் சென்று சேர்ந்துகொண்டிருந்தார். இத்தனைக்கும் மேலாக வயது முதிர்ந்த நிலையிலும்கூட தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களுக்கும் எழுதிவந்தார்.
குறிப்பாக இராமானுஜர் தொடரைச் சொல்லவேண்டும்.
பூமன்னு மாது பொருந்திய மார்பன்
புகழ்மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந்துய்ந்தவன்
பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமநுசன்
சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லுவோமவன் நாமங்களே
என்று வைணவர்கள் கொண்டாடும் சமயாச்சாரியார் இராமனுஜர். குருநாதராகத் திருக்கச்சி நம்பியைக் கொண்டது, திருவரங்கம் கோவிலுக்குள் துலுக்க நாச்சியாரை எழுந்தருளச் செய்வித்தது திருக்கோட்டியூரார் அருளிச்செய்து தான் அறிந்தவற்றை நரகமே கிடைப்பினும் பரவாயில்லை என்று அனைவர்க்கும் அறிவிக்கும் ஆசையோடு மதிலேறியதுவரை புரட்சி மலர்களால் பூசிக்கப்படவேண்டியவர் இராமானுஜர் என்று தன் கைவண்ணத்தில் காட்டினார். ஆத்திகரும் ஆரத்தழுவி நின்றனர் ஆதவனை!
இவ்வளவு எழுதிக்குவித்த கலைஞர் பேரறிஞரைப் போன்றோ நாவலரைப் போன்றோ பேராசிரியரைப் போன்றோ கல்லூரியில் சென்று பட்டம் பெற்றவரல்லர் பள்ளியோடு முடித்துக்கொண்டு பிறர்க்குப் பல்கலையாய் நின்ற பேருழைப்புக்குச் சொந்தக்காரர்
கடுமையான அரசியல் பணிகளுக்கு இடையே இளைப்பாறும் இடமாக எப்போதும் கலைஞர் கருதுவது இலக்கியத்தைத்தான். முதல்வராக இருந்த நேரங்களிலும் கூட கவியரங்கங்களுக்கெல்லாம் தலைமை தாங்கும் ஆர்வத்தையும் கொண்டிருந்தது அந்த இளைப்பாறுதலுக்காகத்தான்.
இன்றும் அந்த எழுதுகோல் கலைஞரின் கரம் சிந்தை கசிந்து தன்னை ஏந்திக்கொள்ளாதாவென ஏக்கங்கொண்டு மைசிந்தக் காத்திருக்கிறது.
எவரொருவரும் ஓய்வில்தான் எழுதிக்குவிப்பார்கள் அல்லது எழுத்தையே முழுநேர வாழ்வெனக் கொள்வார்கள். கலைஞரோ அரசியல் இலக்கியம் என இரண்டையுமே முழுநேரமெனக் கொண்டவர். இவர் வடித்த படைப்புகளை ஒரு சுவைஞர் முழுதும் உணர்ந்து சுவைக்கவே ஓர் ஆயுள் வேண்டும் என்றால் அவர் எத்தகு பயன்மிகு வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். காலத்தில் உறைந்துவிடும் தன்மை பெற்றதல்ல கலைஞரின் படைப்புகள். காலந்தோறும் கற்போர் மேல் அருவியெனப் பொழிந்து புத்துணர்வூட்டும் புனல். காவிரி தீரத்துக் கலைமகனைத் தமிழகம் தனதென்று கொண்டது வரலாறு வாரிக்கொடுத்த கொடை. இப்படியோர் கலைஞர் இனி எப்போது பிறப்பார்?
புதியதலைமுறைக்காக வேங்கடப்பிரகாஷ்
நன்றி - புதியதலைமுறைக்கு