வெள்ளி, 31 ஜனவரி, 2020



தமிழக ஆடு இனங்கள்...
இந்த கிழ்கண்ட இனங்களே நமது தமிழக கால/பருவ சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த இனங்கள் மேய்ச்சல் மற்றும் கொட்டில் முறை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது. நமது பகுதிக்கு தகுந்த கிழ்கண்ட இனங்களையே வளர்த்து பயன் அடைவோம்.
மோளை ஆடு அல்லது மேகரை ஆடு:
மிகக்கடுமையான பஞ்சம் தாங்கும் ரகம்
இது தமிழகத்தின் மேற்குப்ப்பகுதிகளான ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி, கரூர், திண்டுக்கல்,நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது. ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம்,பவானி,அந்தியூர் பகுதியில இந்த வகை ஆடுகள் அதிகளவு காணப்படுகிறது .
மிகக்கடுமையான பஞ்சம் தாங்கும் ரகம். நோய் எதிர்ப்பு சக்தியில் முதல்தரம். கிடாய்க்கு மட்டும் கொம்புகள் இருக்கும்.நடுத்தர உயரத்துல, நல்ல சதைப் பிடிப்போட, சுத்தமான வெள்ளை நிறத்துல இந்த ஆடுகள் இருக்கும்.உடலின் நிறம் கடும் வெப்பத்தையும் தாங்கும். இறப்பு விகிதம் மிக மிக குறைவு.
பிறந்த குட்டிகளின் எடை சுமார் இரண்டு கிலோ வரை இருக்கும். இந்த ரக ஆடுகள் 8 முதல் 10 மாத வயதில் சினைக்கு வரும். வளர்ந்த ஆடுகள் சுமார் 7 முதல் 8 மாதத்திற்கு ஒருமுறை குட்டிகள் ஈனும். ஈத்துக்கு ரெண்டு முதல் நாலு குட்டிகள் வரை ஈனும். சராசரியா ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிங்க கிடைச்சுக்கிட்டே இருக்கும். குறைவான தீவனத்தில் மாதம் 2 முதல் 3 கிலோ வரை வளர்ச்சி அடையும் தன்மை கொண்டது. ஒரு வயதுள்ள பெண் ஆடுகள் 30 கிலோ முதல் 36 கிலோ வரை எடை இருக்கும். ஆண் ஆடுகள் 40 முதல் 50 கிலோ எடை வரை இருக்கும்.
வளர்ப்புக்கு மிகவும் எற்ற ஆடுகள்.
கறிக்கு மிகவும் ஏற்ற ரகம். இறைச்சி மிகுந்த சுவை உடையது. இதன் தோளுக்கு நல்ல கிராக்கி உள்ளது.
கன்னி ஆடு:
சிப்பாய் நடை போடும் கன்னி!
கன்னி ரக ஆடு… கரிசல் மண், குன்றுகள் அதிகமா இருக்கற பகுதிகள்ல இருக்கும். நல்லா உயரமா இருக்கும். கிடா ஆடு 50 கிலோவும், பெட்டை ஆடு 30 கிலோவும் எடை இருக்கும். ரெண்டுக்குமே கொம்பு இருக்கும். உடம்பு கருப்பு நிறத்துலயும், தலையில முன்பக்கமா ரெண்டு வெள்ளைக் கோடுகளும் இருக்கும். காதுகள்லயும் ரெண்டு வெள்ளைக் கோடுகள் நல்லா தெரியும். வயித்தோட அடிப்பகுதி, கால் குளம்பின் மேல்பகுதி வெள்ளையா இருக்கும். இந்த இன ஆடுகள் மந்தையா நடந்து போறப்ப, கால் அசைவுகளைப் பாத்தா… பட்டாளத்து சிப்பாய்ங்க வரிசையா போற மாதிரி இருக்கும். இந்த இனத்தை ‘பால் கன்னி’னு சொல்வாங்க. வெள்ளை நிறத்துக்குப் பதிலா… செந்நிறம் அதிகமா இருந்தா ‘செங்கன்னி’னு சொல்லுவாங்க. கன்னி ஆடுகள் ஒரு ஈத்துல ரெண்டு குட்டியிலிருந்து நாலு குட்டிகள் வரை ஈனும்.
காணப்படும் இடங்கள்:
விருதுநகர் (சாத்தூர், வெம்பக் கோட்டை, ராஜ பாளையம்), தூத்துக்குடி (புதூர், கயத்தார், கோவில்பட்டி), திருநெல்வேலி (குருவிகுளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர்) முதலிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது.
கன்னி ஆட்டின் சிறப்பியல்புகள்:
இவை கருமை நிறத்துடனும் முகத்திலும் காதுகளிலும் வெள்ளை அல்லது பழுப்புநிற கோடுகளுடனும், மேலும் அதன் அடிவயிறு, தொடைப்பகுதி, வால்பகுதி மற்றும் கால்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறமுடன் காணப்படும். கருப்பு நிறத்தில் வெள்ளைநிற கோடுகள் காணப்பட்டால் அவை “பால்கன்னி’ என்றும் பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால் “செங்கன்னி’ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவற்றின் காது மற்றும் நெற்றியில் கோடுகள் காணப்படுவதால் இதனை வரி ஆடுகள் என்று அழைக்கிறார்கள்.
குட்டிகளை நன்றாக பேணி பாதுகாக்கும் பண்புடையவை. உயரமாகவும், திடகாத்திரமாகவும், ஒரே நிறமுடன் இருப்பதும் கூட்டமாக நடக்கும்பொழுது ஒரு “ராணுவ அணிவகுப்பு’ போல கண்ணை கவரும் இந்த கன்னி ஆடுகள். இது இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு ஆகும். கிடா மற்றும் பெட்டை ஆடுகளுக்கு கொம்புகள் உண்டு.
கன்னி ஆடுகள் முதல் தடவை மட்டும் 8-10 மாச வயசுல சினை பிடிக்கும். அதுக்குப் பிறகு, ஏழு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி போடும். ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டி வரை போடும். இந்த இனத்துலயும் தாயே மூணு மாசம் வரைக்கும் பால் கொடுத்துப் பரமாரிச்சுடும். அதனால புட்டிப்பால் தேவையே இருக்காது.
பிறந்த கிடா குட்டிகள் 2.1 கிலோவும், பெட்டை குட்டிகள் 2.05 கிலோ உடல் எடையுடன் இருக்கும். ஒரு வருட வயதில் கிடாக்கள் 21.70 கிலோவும், பெட்டை ஆடுகள் 20.90 கிலோ எடையுடன் இருக்கும். மேலும் ஒரு வருட வயதில் கிடாக்கள் 76 செ.மீ. உயரமும், பெட்டை ஆடுகள் 72 செ.மீ. உயரத்துடனும் காணப்படும்.
கொடி ஆடுகள்:
கடலோரத்துக்கு ஏத்த கொடி!
இதை ‘போரை ஆடு’னும் சொல்வாங்க. இந்த வகை போரை ஆடுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன.மற்றபடி, தாஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஓர் சில இடங்களில் இவை காணப்படுகின்றன. கடலோர மாவட்டங்களுக்கு ஏத்த இனம்!
நல்ல உயரம், நீண்ட கழுத்து, உயரமான கால், ஒல்லியான உடம்பு இதுதான் கொடி ஆட்டோட அடையாளம். கொடி ஆட்டுக்குக் காலும், கொம்பும் நல்ல நீளமா இருக்கும். 15 மாச வயசுல மூணடி உயரத்துக்கு வளர்ந்து, பார்க்கவே கம்பீரமா இருக்கும்.
இந்த ஆடுகள் ரெண்டு நிறத்துல இருக்கும். வெள்ளை நிறத்துல கருப்பு மையை அள்ளி தெளிச்சது போல இருக்குற ஆடுகளை, ‘கரும்போரை’ அல்லது ‘புல்லைபோரை’னும்… வெள்ளை நிறத்துல செந்நிறம் கலந்து இருந்தா ‘செம்போரை’னும் சொல்வாங்க. 100 செ.மீ உயரம் வரை இருக்கும். எடையைப் பொறுத்தவரைக்கும் கொடி ஆட்டுல ஏழு மாசத்துலயே ஒரு பெட்டை ஆடு பதினஞ்சு கிலோ எடை வரைக்கும் வந்துடும். கிடா, இருபது கிலோ எடைக்கு வந்துடும். கிடா 47 கிலோவிலிருந்து 70 கிலோ வரையும் இருக்கும். பெட்டை 32 கிலோ வரை இருக்கும்.
கொடி ஆடுகள் முதல் தடவை சினை பிடிக்க 10-12 மாசம் ஆகும். அதுக்குப் பிறகு, ஏழு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி ஈனும். ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து, நாலு குட்டி வரை போடும். சராசரியா ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிங்க கிடைச்சுக்கிட்டே இருக்கும். மூணு மாசம் வரைக்கும் குட்டிகளுக்கு தாராளமா பால் கொடுத்து அதுவே பராமரிச்சுடும். போதுமான அளவுக்கு தாய்ப்பால் குடிக்குறதால குட்டிக நல்ல ஆரோக்கியத்தோட வளரும்.
பிறந்த கிடா குட்டிகள் : 1.5-2.1 கிலோ எடை,பெட்டை குட்டிகள் : 1.5-2.05 கிலோ எடை
சேலம் கருப்பு அல்லது கீகரை ஆடு அல்லது கருப்பாடு:
இது காவெரிக்குக் கீழ்ப்பாகுதிகளான சேலம், ஓமலூர், மேச்சேரி,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தொட்டியம் பகுதிகளில் காணப்படுகிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.
பஞ்சம் தாங்குதல் மற்றும் நொய் எதிர்ப்பில் முதல் தரம். பலிபூசைகளுக்கு விரும்பி வாங்கப்படும் இனம்.அட்டப்பாடி பகுதியில் குறும்பர், இருளர் வளர்க்கும் ஆடுகள் இவ்வினத்தோடு தொடர்புடையவை.
நல்ல குட்டிகள் ஈனும் திறன் உடையவை.
பள்ளை ஆடு!
இந்த ஆடுகள், குட்டையா இருக்கும். ‘குள்ள ஆடு’, ‘சீனி ஆடு’னும் சொல்வாங்க. சின்னக்கொம்பும், மூழிக்காதும் இதோட அடையாளம். குட்டிகள் பிறக்கும்போது கால் குட்டையாவும் உடம்பு அகலமாவும் இருக்கும். இந்த இனம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பரவலா இருக்கு. இந்த ஆடுகளும் ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து, நாலு குட்டி வரை போடும். இவை பலவகையான நிறத்துடன் காண்டுல இருக்கும்....
பெரும்பாலும் பயணக் கட்டுரைன்னு வந்தா நான் படிச்சிடுவேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் . அப்டியே வண்டிய எடுத்திட்டு வழியில பல ஊர்களின் பழக்க வழக்கம், டோல், தாபா, பெட்டிக்கடை ,டீக்கடை இயற்கைக் காட்சி, ஆறு, மலை , புதிய மனிதர்கள், பாடல் இதையெல்லாம் ரசிச்சிட்டே ஒரு முடிவில்லாத பயணம் போனா எப்படி இருக்கும் ? இப்பவும் ஒவ்வொரு பாடலை கேட்கும்போதும் எதோ ஒரு பயண நியாபகம் வந்து போகும் . அப்படி ஒரு படம் தான் highway , இந்த படத்தை எந்த அளவு ரசிச்சேன்னு சொல்லத் தெரியல திரும்ப ஒருக்கா படிங்க.....https://youtu.be/8HDTS80dlr4
ஒரு குழந்தை இதுவரைக் கூறிய மிகவும் அப்பாவியான விஷயம் என்ன?

என் மகனுக்கு மூன்று வயதில் இருந்தே செல்ல பிராணிகள் வளர்க்க வேண்டுமென்று ஆசை. எங்கள் வீட்டில் அதற்கு அனுமதி கிடையாது. எதை பார்த்தாலும் அதை வாங்கி கேட்டு கொண்டு இருந்தான்...

அம்மாவும் மகனும் அப்பாவியான உரையாடல் ...

சில நாட்கள் பூனை...

சில நாட்கள் நாய்…

சில நாட்கள் பறவைகள்…

இப்படியே நாட்கள் சென்றன… சில நாட்களுக்கு முன் (  நான்கு வயது ) ஜுராசிக் பார்க் முதல் பாகம் படம் பார்த்து கொண்டு இருந்தான்…

அன்று இரவு என்னிடம் வந்து ,அம்மா உன்கிட்ட ஒன்னு கேட்பேன், நோ சொல்ல கூடாது சரியா என்றான். சரி பயபுள்ள ஏதோ வில்லங்கமா கேக்க போகுதுனு ஒரு உள்ளுணர்வு… சொல்லுமா என்றேன்.pleaseமா எனக்கு ஒரே ஒரு டைனோசர் குட்டி வாங்கி தா மா ,பத்திரமா பார்த்துக்குவேன் என்றான் . அவனது அப்பாவித்தனமாக முகத்தை பார்த்து என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் நின்று…. பிறகு , அம்மா (அவனை அப்படித்தான் அழைப்பேன் ) அது நிறைய சானி போடுமே , அம்மா-க்கு சுத்தம் பண்ண முடியாதும்மா சொன்னேன் .


அதுக்கு வந்த பதில் , நம்ம சித்தப்பா வீட்ல ( ஆவாரம்பாளையம்  ) கட்டி போட்ருவோம் மா.. அப்போ அவங்களே சுத்தம் பண்ணிருவாங்க உனக்கு தொந்தரவு இருக்காது please வாங்கி தா மா…. (Mind voice எப்படி பேசினாலும் லாக் பன்றானே,) அப்பறம் நிறைய சமாளிச்சேன். ஆனாலும் இந்த topic ஒரு மாசம் நடந்தது . இதுதான் என் வாழ்வில் நடந்த கொஞ்சம் வில்லத்தனம் கலந்த அப்பாவித்தனமான விஷயம் ….

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

மிக சிக்கலான உறவாக நீங்கள் நினைப்பது எது?

நட்புக்கு மேல், காதலுக்கு கீழ்!

உறவுகளில் மிக சிக்கலான ஒன்று, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் அதிகமான நட்பு. அதிகமான நட்பு காதலாக மாறும் போது எந்த ஒரு பிரச்னையும் வராது. நட்பு அதிகமாகிக்கொண்டே போய்,

“நட்புக்கு மேல் காதலுக்கு கீழ்”

என்ற நிலைமைக்கும் வரும் போது தான் சிக்கல் தொடங்குகிறது.இது ஒரு வகையான Safe zone என்று கூட சொல்லலாம். முடிந்தால் காதலாக மாற்றிக்கொள்ளலாம், இல்லை என்றால் நண்பர்களாக தொண்டர்ந்து கொள்ளலாம் என்ற ஒரு நிலை தான் இது. நன்கு உற்று பார்த்தல் அப்படி ஒரு இடமே கிடையாது. தங்களை தாங்களே ஏமாற்றி கொண்டு பிறரையும் குழப்பிவிடுவது தான் இது.

இங்கு காதலித்து ஏமாந்தவர்களை விட, காதலிப்பதாக நினைத்து ஏமார்ந்தவர்களே அதிகம். இதற்கு முக்கிய காரணம், இந்த மய்யம் தான்.அரசியலில் மட்டுமல்ல, உறவுகளிலும் மய்யம் என்ற ஒன்று கிடையாது. ஒன்று இடது, இல்லை வடது தான்.

மய்யம் என்றுமே வில்லங்கம் தான். !!


குறிப்பு: ஆணும் பெண்ணும் நண்பர்களாக வாழ முடியாதா? என்ற பழைய கேள்வியை ஒரு சிலர் கேட்பார்கள். முடியும். கண்டிப்பாக நண்பர்களாக வாழ முடியும். இருவரின் குடும்ப வாழ்க்கை பாதிக்காத வரைக்கும்.
கொங்குக் கொற்றவன்...🥰✒📚📚

குடியரசு தின விழா சிறப்பு நிகழ்வாக-26.01.2020

சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

உடுமலை காந்தி உண்டு உறைவிடப் பள்ளியில்
நடைபெற்றது ...!

நிகழ்வை ஒருங்கினைத்த

கிளை எண்  நூலகம் 2 நூலகர் திரு. கனேசன் அவர்களுக்கும்

அருண்ஜோதி கிளினிக்ல் லேப் & எக்ஸ்ரேஸ் திரு. கலைச்செல்வன் மற்றும்

உறைவிடப்பள்ளி காப்பாளர் திரு. புருஷோத்தமன் அவர்களுக்கும்

கலந்துகொண்டு இயற்கை உணவு சார்ந்து உரையாற்றிய அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவர்
திரு. இராகவேந்திர சாமி அவர்களுக்கும் ..

மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும்

#கம்பளவிருட்சம்அறக்கட்டளைசார்பாக

நன்றிகளையும் வாழ்த்துகளையும் பரிமாரிக்கொள்கிறோம் .

வெள்ளி, 24 ஜனவரி, 2020

மனைவியை சந்தோஷமாக வாழவைக்க கணவனாக என்ன செய்ய வேண்டும்?


மிகவும் எளிது.அவர்களின்,நியாயமான விருப்பங்களை,நிறைவேற்றினாலே போதும்.

பணிக்குச்செல்பவரோ,தொழில் செய்பவரோ,அந்தநேரம் போக,மிகுதி நேரத்தை,மனைவியிடம் செலவிடுங்கள்.

உங்கள் பெற்றோர் உடன்பிறந்தாரோடு,கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்,குடும்பவிசயங்களில் அவரது கருத்துக்கும்,மதிப்பளியுங்கள்.

மனைவியைப் பாராட்டிப்பேசுங்கள்.மற்றவரிடத்து தூக்கிவைக்காவிட்டாலும்,குறைத்து பேசாதீர்கள்.

அவர்களிடத்து நிதிப்பொறுப்பை,கொடுத்துப்பாருங்கள்.பொழுதுபோக்குகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்.

அடுப்படி வேலைகளில்,சிறுசிறு ஒத்தாசையாயிருங்கள்.அப்புறம் பாருங்கள்.மனைவியின் சந்தோசத்திற்கு அளவேயிருக்காது.

நோட் :இதில் எதிர்மறையாக அமைந்தால் ..என்னிடம் பதில் கேக்கக்கூடாது

செவ்வாய், 21 ஜனவரி, 2020

வீட்டு கடன் பாக்கி தொகையினை மொத்தமாக ஒரே தவணையில் சுமார் 4 அல்லது 5 லட்சம் செலுத்தி கடனை அடைக்கலாமா. அச்சமயம் ஏதாவது concession in interest அல்லது தொகை குறைப்பு கிடைக்குமா?


இந்த கேள்விக்கான பதிலுக்கு செல்லுமுன், வீட்டுக்கடன் பற்றிய சில விஷயங்களை முதலில் தெரிந்து கொள்வோம்:


உங்கள் மாத வருமானத்துக்கேற்ற மாதிரி வீட்டுக்கடன் வாங்கவும். முடிந்த வரை வீட்டின் மதிப்பில் 30% வரை கையிருப்பிலிருந்து தேத்தி விடவும். சில தேசிய வங்கிகள் வீட்டின் மதிப்பில் 80% தான் கடனே வழங்கும்.


எல்லா வங்கிகளும், வீட்டுக் கடன் என்னவோ 20/30 வருடங்களுக்கு தருவார்கள். அதற்காக 20வது வருடம் தான் கட்டி முடிப்பேன் என்று சபதம் எடுக்காதீர்கள்.


எந்த வங்கியாக இருந்தாலும், நாம் கட்டும் மாதாமாதம் இ.எம்.ஐ(EMI) என்ற தொகையில் பெரும்பகுதியை, வாங்கிய கடனின் வட்டிக்குத் தான் பிடித்துக் கொள்வார்கள்.


எ.கா: EMI இருபதாயிரம் மாதம் கட்டுகிறீர்கள் என்றால் அதில் 80% அதாவது 16 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு போயிடும், மீதி 4 ஆயிரம் அசலுக்கு.


இது பெரிய தேவ ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கள் மாதாந்திர வீட்டுக்கடன் அறிக்கையில், வங்கிகள் தெளிவாக அனுப்புவார்கள்.


காரணம், நீங்கள் 20 வருடம் கட்டப் போகும் வட்டி தான், அந்த வங்கியின் வருமானம். எனவே வட்டியைத் தான் முதலில் வசூலிக்க நினைப்பார்கள். எனக்கு தெரிந்து, அரசு மற்றும் தனியார் வங்கிகள் Concession in Interest தருவதில்லை.


ஆகவே, உங்களுக்கு ஏதேனும் அலுவலக போனசோ அல்லது திடீரென்று பூர்வீக சொத்து விற்றதில் உங்கள் பங்காக, கணிசமான தொகை கையில் வந்தால், உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு, உங்கள் வீட்டுக் கடனில் அந்த பணத்தை, எந்த அபராதமுமின்றி சேர்ப்பிக்க முடியுமா? என்று முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.


அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில், அவர்கள் மனசு மாறுவதற்குள், அல்லது


"ஜி.ஆர்.டியில் வளையல் திருவிழா நடக்குது. ஆர் யூ ஓகே பேபி?" என்று நயன்தாரா கேட்பதை பார்த்து, நீங்கள் மனசு மாறுவதற்குள், உடனே சென்று கட்டி விடுங்கள்.


இதனால் உங்களுக்கு என்ன லாபம்?


நீங்கள் வாங்கிய வீட்டுக் கடன் 25 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது அதில் ஐந்து லட்சத்தை கட்டி விட்டால், உங்கள் மாதாந்திர இ.எம்.ஐ அப்படியே இருக்கும், ஆனால் வீட்டுக் கடனின் கால அளவு (மாதங்கள்) குறைந்து விடும்.


இப்படியே வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு முறை என கணிசமான தொகையை செலுத்தி வாருங்கள்.


கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், எட்டு வருடத்தில் அதிக வட்டி கட்டிக் கொண்டிருக்காமல், உங்கள் முழு வீட்டுக் கடனையும் அடைத்து விடலாம்.


இது எனது சொந்த அனுபவம். எட்டு வருடத்தில் வீட்டுக் கடன் அடைத்து, வங்கியிலிருந்து வீட்டு பத்திரத்தை வாங்கும் பொழுது கிடைக்கும் நிம்மதி இருக்கே! அதெல்லாம் அனுபவித்து தான் தெரிந்து கொள்ளணும்.


வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கலாம், கொஞ்சம் புத்திசாலித்தனமாக நமது நிதியை நிர்வகித்தால், எட்டு வருடத்தில் நீங்கள் ஹவுஸ் ஓனர்.


மொத்தமாக 35 லட்சம் அல்லது 40 லட்சம் சேர்த்து விட்டு தான் வீடு வாங்குவேன் என்று அடம் பிடித்தால், அடுத்த மூன்று வருடத்தில் வீட்டின் விலை மேலும் 10 லட்சம் உயர்ந்து விடும்.


வீட்டு கட்டுமான பொருட்களின் விலை, வேலையாட்கள் கூலி என எல்லாமே உயர்ந்து விடும்.


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்

வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
மண்ணும் பொன்னும் என்றும் லாபம்!

(வீ .மாதவன்  நாணயம் விகடன் டீம்-நன்றி )

‘காலணாவா இருந்தாலும் மண்ணுலயும் பொன்னுலயும் (தங்கம்) போடுற பணம் வீண்போகாது’ என்று நம் பெரியவர்கள் சொல்வதுண்டு. அந்தக் காலத்திலிருந்த சூழல், வாய்ப்புக்கேற்ப பெரியவர்கள் ‘டைவர்சிஃபிகேஷனை’ இப்படிச் சொல்லிவைத்தார்கள். ஆனால், இன்றைக்கு முதலீட்டு வாய்ப்புகள் மண்ணையும் தங்கத்தையும் மீறி ஃபிக்ஸட் டெபாசிட், பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் எனப் பலவாகப் பெருகிவிட்டன; நமக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் பல பலன்களையும் வழங்குகின்றன.


முதலீட்டில் இரு முக்கிய அம்சங்கள்!


முதலீட்டைப் பொறுத்தவரை, இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஒன்று, குறிப்பிட்ட காலஅவகாசத்தில் முதலீட்டுத் தொகை பணவீக்கத்தைவிட உயர்ந்திருக்க வேண்டும். மற்றொன்று, எளிதில் பணமாக்கிக் கொள்ளும்படி நம் முதலீடு இருக்க வேண்டும். நிலத்தில் செய்யும் முதலீடு ஓரளவுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருவதாக இருக்கிறது. ஆனாலும், நிலத்தை அவ்வளவு எளிதாகப் பணமாக்க முடிவதில்லை. மேலும், பட்டா, மனை அங்கீகாரம், பாதுகாத்தல் எனச் சில சிக்கல்கள் இருக்கின்றன.


மண்ணும் பொன்னும் என்றும் லாபம்!


தங்கத்தை எளிதில் பணமாக்க முடியும். ஆனால், அதன் முதலீட்டு வருமானம் சொற்பமாகவே இருந்துவந்திருக்கிறது. தவிர, தங்கத்தைப் பாதுகாப்பதும், அதன் தரத்தை ஆராய்ந்து வாங்குவதும் அதிலிருக்கும் பாதகமான அம்சங்கள்.


அதற்காக மண்ணிலும் பொன்னிலும் பணத்தை முதலீடு செய்யவே கூடாது என்று சொல்ல வரவில்லை. வழக்கம்போல் இல்லாமல் கொஞ்சம் மாற்றி யோசித்தால், இந்த இரண்டிலும் அருமையான வருமான வாய்ப்பு இருப்பதை நாம் அறிய முடியும்.


எப்போதும் முதலீட்டில் பணவீக்கத்தைவிட வருமானம் அதிகமாகக் கிடைக்க வேண்டும்!



ரெய்ட்ஸ் (REITS) - நவீன ரியல் எஸ்டேட் முதலீடு


ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் (Real Estate Investment Trust - REITS) என்பதன் சுருக்கம்தான் `ரெய்ட்ஸ்.’ இது ஒரு நவீன ரியல் எஸ்டேட் முதலீடு. இந்தத் முதலீட்டுத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.85,000 முதல் ரூ.1,00,000-க்குள் 200 சதுரடிக்கு முதலீடு செய்ய முடியும். இதில், குறைந்தபட்சமாக 200 சதுரடி வாங்க வேண்டும். வாங்கும் நிலத்தின் மதிப்பு உயரும்; ஆண்டுக்கு 5-7% வாடகையும் ஈட்டித் தரும்; அனைத்துக்கும் மேலாக நினைத்த நேரத்தில் விற்றுப் பணமாக்கிக் கொள்ளவும் முடியும்.


ரெய்ட்ஸ் எப்படிச் செயல்படுகிறது?


ரியல் எஸ்டேட்துறையில் பலவிதமான (வணிக வளாகங்கள், அலுவலக வளாகங்கள், குடோன்கள் போன்ற வருவாய் ஈட்டித்தரும்) சொத்துகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் இந்த வகைச் சொத்துகளை ஒரு டிரஸ்டாக அமைத்து, அதைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுகின்றன. இந்தச் சொத்துகளின் விலை மாறிக்கொண்டே இருக்கும். இவற்றிலிருந்து வரும் வாடகை வருமானத்தில் 90 சதவிகிதத்தை முதலீட்டாளர்களுக்குக் கட்டாயம் டிவிடெண்டாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பது செபியின் நிபந்தனை. தனிநபர்கள் குறைந்தபட்சமாக 200 பங்குகள் வாங்க வேண்டும் (ஒரு பங்கு என்பது ஒரு சதுரடி எனத் தோராயமாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்).


உதாரணமாக, எம்பஸி ரெய்ட்ஸ் (Embassy REITS) ரியல் எஸ்டேட் டிரஸ்ட் தன் பங்குகளை சென்ற ஆண்டு, மார்ச் மாதம் ஒரு பங்கின் விலை ரூ.300 என்ற அளவில் வெளியிட்டது. பட்டியலிடப்பட்டு சுமார் ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையில், தற்போது அந்தப் பங்கின் விலை ரூ.422 என்ற அளவில் வர்த்தகமாகிறது.


இது வெளியீட்டு விலையைவிட 40% அதிகம். மேலும், கடந்த ஆறு மாதங்களில் இதுவரை ரூ.11.40 டிவிடெண்ட் அறிவிக்கப் பட்டுள்ளது. எதிர்வரும் ஆறு மாதகால டிவிடெண்டைக் கணக்கில்கொண்டால் சுமார் 7.5-8% (11.4x2=22.8 - 100x22.8/300=7.6%) வரை டிவிடெண்டாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.


ஆனால், இந்தச் சொத்தைப் பங்குச் சந்தையில் வாங்கும்போது குறைந்தபட்சமாக 200 பங்குகள் வாங்க வேண்டும். அதேபோல 200 யூனிட்களாக விற்றுக்கொள்ளலாம். ரியல் எஸ்டேட் முதலீட்டில் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும்; அதோடு பங்குச் சந்தையின் வெளிப்படைத் தன்மையுடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் பகுதியாகக்கூட விற்றுப் பணமாக்கிக்கொள்ளலாம். பட்டா பற்றிய கவலை இல்லை; வாடகைக்கேற்ற இடமா, நிலம் ஆக்கிரமிக்கப்படுமோ என்ற பயம் தேவையில்லை.


தற்போது, இந்தியாவில் எம்பஸி ரியல் எஸ்டேட் டிரஸ்ட் மட்டுமே பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஆனாலும் கோத்ரெஜ், ரஹேஜா, டி.எல்.எஃப் போன்ற பெரிய குழுமங்களும் தங்கள் ரெய்ட்ஸ் திட்டங்களைப் பங்குச் சந்தையில் பட்டியலிட உத்தேசித்துள்ளன.


கோல்டு பாண்ட் ஃபண்ட் என்பது அரசாங்கமே பொறுப்பேற்று நடத்தும் திட்டம் என்பதால் நம்பகத்தன்மையும், தரமும், வட்டியும் நிச்சயம்!
ஜொலிக்கும் தங்கம்!


தங்க நகைகள் நமக்கு அழகு தரும். அவசரத்துக்கு அடகு வைத்து அல்லது விற்று நிலைமையைச் சமாளிக்கலாம். அதையும் தாண்டி அதிலிருந்து வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. ஆசைக்குக் கொஞ்சம் தங்க நகைகளை வாங்கி வைத்துக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால், கைக்குக் கிடைக்கும் பணத்தையெல்லாம் நகை வாங்கப் பயன்படுத்துவது தவறு.

gold

தங்க நகையாக வாங்காமல், சவரன் கோல்டு பாண்டு (Sovereign Gold Bonds) திட்டத்தில் தங்கத்தை பாண்டாக (டீமேட் கணக்கில் பங்குகள் இருப்பதுபோல) வாங்கி முதலீடாக வைத்துக்கொண்டால், பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.


இந்தத் திட்டத்தில் நாம் வாங்கும் தங்கத்துக்கு நமது அரசே 2.5% வட்டி அளிக்கிறது. எட்டு வருடங்கள் முதிர்வுகொண்ட இந்த பாண்டுகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகிவருகின்றன. எட்டு வருட முடிவில், அரசு அன்றைய தேதியின் தங்க விலையைக் கொடுத்து, உங்களிடமிருந்து பாண்டுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும். வட்டி வருமானத்தை வரிப் பிடித்தம் செய்யாமல் வழங்கும்.


நம்பகத் தன்மை, தரம், வட்டி!


அரசே பொறுப்பேற்று நடத்தும் திட்டம் இது என்பதால், நம்பகத்தன்மையும், தரமும், வட்டியும் நிச்சயம் உண்டு. மேலும், இந்த பாண்டுகள் 24 கேரட் தங்கத்தின் தரத்துக்கு ஒப்பானது. ஒரு யூனிட்கூட வாங்கலாம் (ஒரு யூனிட் என்பது சுமார் ஒரு கிராம்).


உதாரணமாக, செப்டம்பர் 2016 சீரிஸ் பாண்டை ஒருவர் ரூ.3,150 கொடுத்து வாங்கியிருந்தால், தற்போது அது ரூ.3,874-ஆக உயர்ந்திருக்கும். தவிர, 2.75% வட்டியும் கிடைக்கும். (இந்த வட்டி விகிதம் எதிர்காலத்தில் மாற வாய்ப்புண்டு.)


இது பங்குச் சந்தையில் வர்த்தகமாவதால், தங்கம் விலை குறையும்போதெல்லாம், வாங்கினால் இன்னும் அதிக லாபம் பார்க்கலாம். உதாரணமாக, ரூ.3,150 முகமதிப்பு கொண்ட பாண்டு சீரிஸ் ரூ.2,700 வரை கீழே சென்றது. இந்த இறக்கத்தைப் பயன்படுத்தி வாங்கியிருந்தால், ரூ.2,700 பாண்டுக்கும் ரூ.3,150 முகமதிப்பின் அடிப்படையிலேயே வட்டி கிடைக்கும். தவிர, செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை. திருடு போய்விடுமோ என்ற பயம் தேவையே இல்லை.


முதலீட்டு நோக்கில் மண்ணிலும் பொன்னிலும் பணத்தைப் போட நினைப்பவர்கள் இந்த இரு திட்டங்களை தாராளமாகப் பரிசீலிக்கலாம்!

திங்கள், 20 ஜனவரி, 2020

வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த மிகப்பெரிய கஷ்டம் என்றால் எதைச் சொல்வீர்கள்?

வாழ்க்கையில் கஷ்டமா இருந்த நேரம் என்று சொன்னால்,, நான் திருமணம் ஆகி வேலை வெட்டி இல்லாமல் இருந்தது,, கிட்டதட்ட 4 மாத காலம் அது.. நரக வேதனை…

வேலைக்கு போகும் போது இருந்த மரியாதை வேலை இல்லாத இரண்டு மூன்று நாட்களில் முற்றிலும் போய் விட்டது.. அப்போது என் மனைவி ஒரு நல்ல  கம்பெனியில் இருந்தார்.. ஆகையால் வாடகை, மளிகை மற்றும் வீட்டு செலவுக்கு பிரச்சனை இல்லை, எனக்கு அப்போது குழந்தை இல்லை என்பதால் கொஞ்சம் சமாளித்தோம். நாங்கள் தனி குடித்தனம்..எனது சம்பளத்தை எனக்கு என்று கொஞ்சம் வைத்து கொண்டு மீதி மனைவி இடம் கொடுத்து விடுவேன்… அப்பா அம்மா உடுமலையில்  இருந்தார்கள்.

சுருக்கமா சொல்ல போனால் ஒரு House Husband போல நான்கு மாதங்கள் நரக வேதனை,, பைக் petrol, நியூஸ் பேப்பர், browsing center, resume print, இவை எல்லாத்துக்கும் மனைவியை எதிர்பார்த்து கொண்டிருப்பேன். Resume printouts எடுத்தே பாதி காசு போய்டும்,, ஆகையால் சில சமயம் மனைவியிடம் office இருந்து பல்க்காக resume printouts எடுத்து வர சொல்வேன்…. வீட்டில் உள்ளவர்களை விட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தொல்லை தாங்க முடிய வில்லை,, வேலைக்கு போகலையா வேலைக்கு போகலையானு ஒரே தொந்தரவு… இதுக்காகவே என் மனைவியை ஆபீஸ் ட்ராப் செய்த பிறகு வீட்டுக்கு வந்து கதவை அடைத்து கொள்ளுவேன்.. 10 - 5 pm கதவை திறக்க மாட்டேன்… பிறகு டூட்டி முடிந்ததை போல மனைவியை ஆபீஸ் ல் pick up,, இப்படியே 4 மாதங்கள் நரக வேதனை,,,, என்னால் இங்கு விவரிக்க முடிய வில்லை… கோவிலுக்கு எப்போதாவது போகும் நான் தினமும் போக ஆரம்பித்தேன்,, தினமும் ராசி பலன் பார்க்க ஆரம்பித்தேன், ராகு காலம் யம கண்டம் எல்லாம் அத்துபடி…இப்படி நிறைய சொல்லலாம்…

வேலைக்கு போகும் போது மனைவி மற்றும் குடும்பத்தோட இருந்த பேச்சு தைரியம் வேலை இல்லாத போது முற்றிலும் கோழை ஆகி விட்டேன்,,, நிறைய பொய் பேச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள பட்டேன்.. யாரிடமாவது பேசினால் முதல் கேள்வி எங்க வேலை செயிரிங்க,,, இத கேட்டு கேட்டு என்னோட காதுல ரத்தம் தா வரல.. மாமியார் மாமனார் உடன் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வந்தேன்.. மொத்தத்தில் மற்றவர்கள் பார்வையில் ஒரு தீவிரவாதியாக இருந்தேன்..

நான்கு மாதங்கள் பிறகு எனக்கு ஜெயிலில் இருந்து விடுதலை கிடைத்தது,, ஒரு மிக பெரிய கம்பெனியில் சேல்ஸ்  மேனேஜர் வேலை கிடைத்தது.. 


ஆகையால் நண்பர்களே வேலை இல்லாமல் எப்போதும் இருந்து விடாதீர்கள்,, அதே போல சட்டென்று வேலைய விட்டு விடாதீங்க,, வேற வேலை சீக்கிரம் கிடைக்கும் என்ற நினைப்பு முற்றிலும் வேண்டாம்,, கிடைத்த பிறகு முடிவு செய்யுங்கள்.. இல்ல என்றால் ஒரு House Husband, தீவிரவாதி, தண்ட சோறு, இப்படி இருக்க தயார் ஆகுங்கள்…

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

இனிமையான பொங்கல் ....🥰🥰🥰🥰

தைமாதம் முதல் நாள் என்றாலே விவசாயம் என்ற ஒரு மந்திரச்சொல் எல்லோர் மனதில் ஓடும் ...தைமகளை வரவேற்கும் நாளாக அமைவது இயல்பு ..வரும் காலங்களில் விவசாயம் சார்ந்த தொழிலை முன்னெடுதி யே எந்த ஒரு தொழிலும் சார்ந்த தாக வருங்காலத்தில் அமையப்போவது உறுதி ..நம் தலைமுறை விவசாய தொழில்களை மறந்துவரும் சூழலில் ..நம் குழந்தைகள் தற்பொழுது இருக்கும் நிலங்களில் ..தங்களின் பெற்றோர்களுடன் பள்ளி ,கல்லூரிகளில் படிக்கும் ,வேளைக்கு போகும் இளைய தலைமுறையினர் விடுமுறை நாட்கள் ,பொங்கல் பண்டிகை காலங்களில் தானாக முன்வந்து விவசாய நிலங்களில் கால் பதித்து ..பயிர்களுக்கு நீர் இறைத்து ...தலையெடுத்தும் ,கால்நடைகளை எப்படி பராமரிப்பது .என்று களப்பணி செய்தும் ..இந்த பொங்கலை கொண்டாடியது பார்க்கும்பொழுது மனதில் இனம் புரியாது மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது .. ...தங்களால் இயன்ற அளவு விவசாயப்பணிகளை மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது ..என்னதான் நகரத்து வாழ்க்கை வாழந்தாலும் ...எப்பொழுது விடுமுறை விடுவார்கள் என்று இளைய தலைமுறையினர்க்கு விழிப்புணர்வு வந்துள்ளதை அறியும்பொழுது ...மறுபடியும் விவசாய பணிகள் இருக்கும் நடைமுறை சிக்கல்களை களைந்து ..புதிய விவசாய நடைமுறைகளை கண்டறிந்து வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிகிறது ..நம் நாட்டுக்கு விவசாயதில் வளரும் தலைமுறையினர் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது ...ஷ்யாமுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ..படித்திவிட்டு பிடித்த துறையில் பட்டம் வாங்கிவிட்டு ..பிடித்த வேளைக்கு சென்றாலும் ..இந்த விவசாய பணி எனக்கு பிடித்து இருக்கிறது என்று சொல்லும்பொழுது எதிர்கால வாழ்க்கைக்கிற்கு நம்பிக்கை பிறக்கிறது ...பெரியோர்கள் சும்மா வா சொன்னார்கள் ..தை பிறந்தால் வழிபிறக்கும் என்று .....அதுவும் இந்த பாடலுடன் கேட்கும்பொழுது வாழக்கை இனிமையாகிறது ..நீங்களும் கேட்டு பாருங்களேன் ...
என்றும் அன்புடன் ஷியாம் சுதிருடன் ...உடுமலை சிவக்குமார்
9944066681..😍😍😍🥰🥰🥰🥰

வியாழன், 16 ஜனவரி, 2020


ஆல் கொண்டம்மன் கோவில்-உடுமலைப்பேட்டை (மாலகோவில் )
ஜனவரி ..17...2020...
கம்பளத்தார் ...💓💓ஆட்டம் ..💓.பாட்டம் .💓.கொண்டாட்டம் .💓.தேவராட்டம் ....💓
இன்று காலையே ஒரு உற்சாகம் மனதில் தொற்றிக்கொண்டது மண் மனம் மாறாத ..கொத்துமல்லி செடிகளின் வாசம் ...கொண்டக்கடலை செடிகளின் பசுமையும் ...கண்னுக்கு குளிர்ச்சியான பச்சை தென்னை மரங்களின் சூழந்த ..25 கிராமங்களில் இருந்து வந்திருந்த சொந்தங்களை ஒரே கோவிலில் பார்த்தும் ,பேசியும் ..கம்பளதார்களின் தேவராட்டத்தை ...தளி எத்தலப்பர் ...போற்றி வணங்கும் குலதெய்வங்களாக போற்றி பாதுகாக்கும் கால்நடை செல்வங்களை போற்றி வணங்கியது மிக்க மகிழ்ச்சி ..இன்று அருமையான சலங்கை மாடுகளின் ஒலி சத்தம்...தேவராட்டம் ,தமிழர்களின் வீர விளையாட்டு ,பாரம்பரிய மிக்க பழமை விளையாட்டுகள் இன்றைய சூழலில் இந்த பொங்கல் பண்டிகையில் திரும்ப பார்த்ததில் சந்தோசம் .......உலக சூழலில் மாறிக்கொண்டிருக்கும் பண்பாடு ,கலாச்சாரம் ,மறுபடியும் நம் கண்முன்னே கொண்டு வந்திருந்தது வேறு யாரும் இல்லை ..வளரும் இளைஞர்கள் ..எதிர்காலத்தில் மிகவும் பாதுகாப்பாக கொண்டுசெல்வார்கள் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்படுத்தியுள்ளனர் ..மால கோவிலுக்கு வந்திருந்த அனைத்து சொந்தங்களின் மனதில் புது சொந்தங்களையும் ,விட்டுப்போன சொந்தங்களையும் பார்த்தும் ,பேசியும் பார்த்தது மகிழ்ச்சியாக அமைந்தது இந்த கோவில் திருவிழா ....சீரும் காளையுடன் ..அடிவள்ளி ஜக்கம்மாள் கோவிலில் இருந்து ...எங்க வீட்டு மகாலட்சுமிகளுடன் தொடங்கி வைத்த தேவராட்டதுடன் ...ஆட்டம் ...பாட்டம் ...கொண்டாட்டம் ..நம்ம மாப்பிள்ளைகள் ..தம்பிகளுடன் ...மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த திருவிழா ...ஆல்கொண்டம்மன் மக்கள் வெள்ளத்தில் நீந்தி ..அடிமேல் அடிவைத்து ..தேவராட்டம் ...சலிகெருது ..சீரும் காளையுடன் .நம் சொந்தங்களுடன் ..கலந்துகொண்டு வந்தது மகிழ்ச்சி .நேரம் சென்றது கூட தெரியவில்லை ...அந்தளவுக்கு ..பக்தி பரவசத்துடன் ..வணங்கி வந்தது மனதுக்கு மகிழ்ச்சி ...இந்தஆண்டு இயற்கை சோதிக்காமல் ..விவசாயம் செழிக்க ...🙏🙏கால்நடைகள் அபிவிருத்தி பன்மடங்கு பெருகி செல்வம் செழிக்க ஆல்கொண்டம்மன் ..அனைவர்க்கும் அருள்புரிவாராக ....🙏🙏🙏 பொங்கல் விழா 2020..🌷🌷🍊🍊
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்🌷🌷
9944066681..💓💓💓👍👍👍🥦🥦
இன்று மாட்டுப்பொங்கல் ...ஏராம் வயல் (பொன்னலம்மன் சோலை -வழி )

இன்று நானும் மதிப்புக்குரிய அய்யா குமார ராஜா அவர்களின் குடும்ப நண்பர் ஜெயக்குமார்  தோட்டம் சென்று வந்தேன் ..அருமையான பட்டி பொங்கல் ..வந்திருந்த நண்பர்களிடம் அரிய தகவல் கிடைத்தது மகிழ்ச்சி ..

புத்தம் புது அருமையான தோழர் எனக்கு கிடைத்தார் ...தோழர் .பெயர் ராஜேஷ் சொந்த ஊர் .JN பாளையம் .. என்றார் ..பள்ளி -காந்திகலா நிலையம் பள்ளியில் 7 -ம் வகுப்பு படித்திக்கொண்டிருக்கிறார் என்று அழகாக பதில் அளித்தார் ...பொங்கல் க்கு வேற சிறப்பு என்று கேள்வி கேட்டு வினவினேன் ..தோழர் எங்கள் ஊரில் சலிகெருது நான்கு இருப்பதாகவும் ..நாளை ஜல்லிவீரன் கோவிலுக்கு சலிகெருதுஉடன் செல்வதாகவும் கூறினார் ..நான் தோழரிடம் மாலகோவில் செல்ல மாட்டீர்களா என்று வினவினேன் ..அதற்கு அம்மாபட்டியில் ரங்கசாமி என்ற மாமா இருப்பதாகவும் ..அவருடன் சென்றால் அங்கு செல்வேன் என்று தோழர் கூறினார் ...நாளை மறு நாள் மாட்டுக்கு பால்போடும் நேன்பு  இருப்பதாகவும் ..அது முடிந்தவுடன் ..திருமூர்த்தி மலைக்கு மேலே மேய போய்விடும் என்றும் ..அடுத்த வருடம் தான் வரும் என்று கூறினார் தோழர் ராஜேஷ் ..தோழரிடம் உங்கள் தந்தை பெயரை கேட்டேன் திருமலைசாமி பங்காரு என்றார் ..இன்று மாட்டு பொங்கலுக்கு JN பாளையத்து ஒரு அருமையான தோழர் கிடைத்தது மகிழ்ச்சி ..தோழருக்கு சிறு வயது என்றாலும் அருமையான சலிகெருது தகவல் தெரிந்து வைத்திருப்பதற்கு மகிழ்ச்சி ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

புதன், 15 ஜனவரி, 2020

மாட்டுப்பொங்கல் ..🌱🌱🌷🌷🌷💓💓.2020
💓தளி ஜல்லிபட்டி -உடுமலைப்பேட்டை 💓
இன்று மாட்டு பொங்கல் ...உழவுக்கு ஆணிவேராக இருக்கும் குலதெய்வங்களுக்கு ...பாரம்பரியமிக்க திருநாள் ..25 வருடங்களுக்கு முன் சிறு வயதில் சொந்தங்களுடன் சென்று ஆடு ,மாடு ,கண்ணுகுட்டிகளுடன் சென்று திருமூர்த்தி அணையில் குளிப்பாட்டி ,அவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து விளையாடியது நினைவில் வந்த மனதுடன் உற்சாகத்தோடு... இன்று மாலை மதிமயங்கும் நேரம் தளிஜல்லிபட்டி கிராமம் மேற்குத்தொடர்ச்சி மலை சாரலில் அமைந்திருக்கும் ..அண்ணனின் ஆட்டு பட்டிக்கு சென்று குழந்தை செல்வங்களுடன் மாட்டுப்பொங்கல் அமைதியான சூழலில் ஆட்டுக்குட்டிகளும் ...பசுமாடுகளுடன் ..தோழனாக இருக்கும் நாய்குட்டிகளுடன் ..சொந்த பந்தங்களுடன் கொண்டாடியது மகிழ்ச்சி ..இன்று தெய்வ வழிபாடு வழிபடுவதற்கு முன் ..புதியவராவாக தாய் ஆடு தன் குட்டி குழந்தைச்செல்வத்தை ஈன்றது அழகான காட்சியாக எல்லோருக்கும் மகிழ்ச்சியாக அமைந்த்து ....வழிபடுவது ஆரம்பிக்கும் முன்னரே குளிர் பனி பல் சில்லிடும் அளவிற்கு குளிர் ஆரம்பத்துவிட்டது ..ஆட்டுப்பண்ணை பட்டியில் இருந்ததால் வெப்ப சீதோஷண நிலவியது...ஆடு ,மாடு கொம்புகளுக்கு வண்ணம் பூசியும்,குங்குமப் பொட்டிட்டு குழந்தைச்செல்வங்களுடன் இன்றைய நாள் அருமையானது .வழிபாடு தொடங்கவதற்கு முன் இருந்து ..இரண்டு குச்சிகள் எடுத்துக்கொண்டு தகர டப்பா ஒன்று எடுத்து கொண்டு .மேளமாக .இசைக்கருவியாக பயன்படுத்திக்கொண்டு ... மாட்டுத் தொழுவத்துடன் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் சுத்தம் செய்து அலங்கரித்த விவசாயிகள் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் படைத்து மாட்டுத் தொழுவத்தில் பொங்கலிட்டும் . பசு, காளை, ஆடுகள் என அனைத்து கால்நடைகளுக்கும் தீபாராதனை காட்டி பொங்கல், பழம் கொடுத்து பூஜைகளை நிறைவு செய்து மகிழ்ச்சி ..புறப்படும் பொழுது தோட்டங்களினோடு பயணத்தில் சில்லிடும் குளிர் ...உடுமலைநகரத்தை தொடும் வரை ...குளிர் முகத்தில் பன்னீர்த்துளிகளாக சில்லிட்டது .🌱🌱🌷🌷..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681..🌾🌾🌾🌱🌱