திங்கள், 13 ஆகஸ்ட், 2018

கம்பள விருட்சம் அறக்கட்டளை -பொதுக்குழு கூட்டம்

கம்பள விருட்சம் அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம் வரும் 19-08-2018  ம் தேதி ஞாயிறு நடைபெற இருந்தது ...வரலாற்று சிறப்புமிக்க தலைவர் கலைஞர் மு .கருணாநிதி அவர்கள்  மறைந்ததால் ..கூட்டம் தேதி பின்னர் அறிவிக்க படும் ...அவரின் மறைவிற்கு வரும் மாதாந்திர செயல்குழு கூட்டத்தில் அஞ்சலி செலுத்துவதற்கும் ..நமது செயல் திட்டங்களை பற்றி கலந்துரையாடலாம்.கேரளா வெள்ளம் ..கேரளா மக்களுக்கு உதவும் வகையில் நம்மால் முடிந்த சிறு உதவிகளை செய்து கொடுக்கலாம் ..ஏன் என்றால் நமது இந்திய விடுதலைக்கு போரிட்ட தளி எத்தலப்பர் மன்னர் ,கேரளா வர்மனுக்கு உதவியது போல் நம்மால் முடிந்த உதவிகளை செய்துகொடுக்கலாம் ..
நன்றி ..
சிவக்குமார்
தலைவர்
கம்பள விருட்சம் அறக்கட்டளை
உடுமலைப்பேட்டை 

சனி, 11 ஆகஸ்ட், 2018



World Elephant Day...Augest-12(உலக யானைகள் தினம் )

World Elephant Day...Augest-12
உலக பாரம்பரிய சின்னத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது நமது ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
958 சதுர கி.மீ பரப்பளவில் பல்வேறு வகையான விலங்குகளை பாதுகாத்து வருகிறது இந்த சரணாலயம். UNESCOவின் உலக பாரம்பரிய சின்னத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 340 முதல் 2513 மீ உயரத்தில் இருக்கிறது. (ரொம்ப குளிருது.) பன்னிரெண்டு முக்கியமான மலைகளும் இதில் அடக்கம்.
2000 வகையான மரங்களும் செடிகளும் இங்கு உள்ளன. இதில் 400க்கும் மேற்பட்டவை ம்ருத்துவ குணம் வாய்ந்தவை. இங்கு உள்ள கரிசன் சோழா என்னும் பகுதி மருத்துவ குணமுடைய செடிகளின் இருப்பிடமாக உள்ளது. ஒரு சின்ன மருத்துவமனையே இங்கு இருக்கிறது என்று கூட கூறலாம்
இந்த வனவிலங்கு சரணாயத்தில் யானைகள், மான்கள், நீலகிரி தார், நரி, புலி, பல வகையான அணில்கள், கரடிகள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நாம் இதுவரை பார்த்திறாத பல வகையான விலங்குகளும், பறவைகளும் இங்கு அணிவகுத்து நிற்கின்றன. இதுவரை 300க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இங்கு வந்து சென்றுள்ளன.
உங்களின் யானை சவாரி ஆசையை இங்கு நிறைவேற்றிகொள்ளலாம். யானை என்றாலே பயம் என்றால் உங்களுக்காக வேன்களும் உள்ளன.
இங்கு செல்ல நல்ல நேரம் திசம்பர் முதல் ஏப்ரல் வரை. மழை காலங்களில் செல்லாதீர்கள். குறிப்பு: விலங்குகளை துன்புறுத்தாதீர்கள்.
இங்கு தங்குவதற்கு குடில்களும் உள்ளன ஆனால் முன்பதிவு செய்யவேண்டும். பல வகையான குடில்கள் உங்கள் வசதிக்கேற்ப உள்ளன. சாப்பாடும் இங்கு தரப்படும், அதற்கும் முன்பதிவு செய்யவேண்டும்.
இங்கு எப்படி செல்வது?
1) பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து 35 கி.மீ பயணம் செய்தால் இங்கு வந்தடையலாம்.
2) அருகில் உள்ள ரயில் நிலையம் - கோவை ,87 கி.மீ தொலைவில்
3) அருகில் உள்ள விமான நிலையம் - கோவை, 87 கி.மீ தொலைவில்.
கோவை வழியாக செல்லும் ரயில்கள்:
1) Nilagiri exp - 2671
2) Cheran exp - 2673
3) Trivandrum exp - 6321
4) Kanyakumari exp - 6526
5) Kerala exp - 2626
6) Kanyakumari exp - 6381
கட்டணம்:
உள் நுழைய - ரூ.50
புகைபடக் கருவி - ரூ.25
நிழல்படக் கருவி - ரூ.50
கார் - ரூ.10
நேரம் - காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை.
உணவு மற்றும் குடில்களை முன்பதிவு செய்ய தொடர்புகொள்ளுங்கள்:
The Wildlife Warden,
Indira Gandhi Wildlife Sanctuary & National Park,
176, Meenkarai Road, Pollachi,
Coimbatore 642001,
Tamil Nadu.
Ph - 04259 225356
உங்கள் நேரத்தைக் கழிக்க நல்ல இடம். சென்று வாருங்களேன்.
நம்மளுக்கும் கொஞ்சம் யானை பலம் வேணும்...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681...
ஆகஸ்ட் 12- சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினம்...!
யானைகளை நாம் பாதுகாக்க வேண்டும்... ஏன்?
பார்ப்பதற்கு முரடு போல் இருந்தாலும், "மதம்' பிடிக்கும்
காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது.
சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. அதன் தோற்றம்,
குணாதிசயங்கள் சுவராஸ்யமானவை.
உலகில் மனிதனுக்கு அடுத்து உருவ பரிமாற்றம் அடைந்த
ஒரே விலங்கு இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தியா,
இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில்
50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உண்டு.
தென்மாநிலங்கள் மற்றும் இலங்கையில் காணப்படும்
யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள்,
சிவப்பான காது மடல்கள் இருக்கும். வடமாநிலங்கள்
மற்றும் மியான்மர் நாட்டில் காணப்படும் யானைகள்
கொஞ்சம் உயரம் குறைவானவை. இந்தோனிஷியா,
மலேசியாவில் காணப்படும் யானைகள் குள்ளமானவை.
கூட்டமாக வாழக்கூடியவை. ஆண் யானை பருவ வயதை (15)
அடைந்தவுடன், மற்ற யானைகளால் தனியே விரட்டிவிடப்படும்.
இப்படி விரட்டப்பட்ட "பேச்சிலர்கள்' தனிக்கூட்டமாக வாழும்.
வயதான பெண் யானைதான் மற்ற
யானைகளுக்கு வழிகாட்டி. குட்டிகளை கண்டிப்புடன்
வளர்க்கக்கூடியவை. அடுத்து "சீனியாரிட்டியான' யானை,
வயதான பெண் யானைக்கு பிறகு "பதவிக்கு" வரும்.
யானைகள் கண்ட கண்ட பாதைகளில் செல்லாது.
உணவு, தண்ணீர் உள்ள இடத்தில், என்றைக்காவது குடும்பம்
குடும்பமாக சந்தித்துக் கொண்டால்
ஒரே கும்மாளம்தான். பெரும்பாலும் ஆண்
யானைக்குதான் தந்தம் இருக்கும். வாயின்
வெட்டுப்பல்தான் தந்தம். இது இல்லாத
யானைகளை "மக்னா' என்கின்றனர். யானையின் வால்
அடிப்பகுதியில் மேடாக இருந்தால் அது ஆண்
யானையாகவும், "வி' வடிவில் இருந்தால் பெண்
யானையாகவும் எளிதில் அடையாளம்
கண்டுகொள்ள முடியும்.உணவு, தண்ணீர், நிழல்
போன்றவற்றை கணக்கிட்டு, சராசரியாக
ஆண்டுக்கு ஒரு யானை 750 சதுர கி.மீ., வரை காட்டை சுற்றி வரும்.
இயற்கையாகவே ஜீரண சக்தி குறைவு என்பதால்,
யானை ஒன்றுக்கு தினமும் 200-250 கிலோ புல் தேவை.
சராசரியாக யானையின் எடை 4000 கிலோ. தோலின் எடை மட்டும்
ஆயிரம் கிலோ. தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை.
பொதுவாக யானைகள் நின்றுக்கொண்டும்,
படுத்துக் கொண்டும் தூங்கும். நிழல்,
உணவு கிடைக்காதபட்சத்தில் "டென்ஷன்' ஆகும்.
மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில்
"எமோஷன் மையம்' ஒத்திருப்பதால், மனிதன்
போன்று புத்திசாலியான விலங்காக யானை கருதப்படுகிறது.
ஞாபகசக்தி அதிகம்.
மதம் பிடிப்பது ஏன்?
காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில்
மதநீர், ஆண் யானைக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழியும்.
இதைதான் மதம் என்கிறார்கள். இது மூன்று மாதங்கள்
வரை இருக்கும். அதிகபட்சம் 45 வயது வரை மதம் பிடிக்கும்.
அப்போது விதைப்பை 16 மடங்கு பெரியதாகும். மற்ற ஆண்
யானைகளை பிடிக்காது. பெண் யானையுடன் சேர துடிக்கும்.
யானைகள் சந்திக்கும் சவால்கள் :
பரவலான மலைப்பகுதிகள் இல்லாமல்
ஆங்காங்கே ஏற்பட்டுள்ள இடைவெளிகள், மனிதன்
ஏற்படுத்திய வளர்ச்சி, காட்டுத்தீ, கால்நடைகள், மரம்
சேகரிப்போரால் யானைகள் பல சவால்களை சந்திக்க
வேண்டியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி,
இந்தியாவில் அதிக யானைகள் (59 சதவீதம்) திருட்டுக்
கும்பலால்தான் வேட்டையாடப்பட்டுள்ளன. ரயிலில்
அடிபடுதல் 15 சதவீதம், விஷஉணவு 13, மின்சாரம்
பாய்ந்து 8 சதவீத யானைகள் பலியாகி இருக்கின்றன.
இதில் புதிதாக சேர்ந்திருப்பது மக்காத பிளாஸ்டிக்
பொருட்கள். காட்டுப்பகுதிக்கு வரும்
சுற்றுலா பயணிகள் சிலர், காலியான பாலிதீன் பைகள்,
பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கையோடு திரும்பிக்
கொண்டு செல்லாமல்,
அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். அதை உண்ணும்
யானை, ஜீரணம் ஆகாமல், வயிறு உப்பி இறப்பது இன்றும்
நடக்கிறது.
யானையை பாதுகாப்பது முக்கியம் :
யானைகள் நல்ல பழங்கள், மரங்களில் உள்ள
செடிகளை விரும்பி உண்ணும். அதிலிருந்து கீழே விழும் விதைகள்,
மக்கி செடிகளாக வளரும். அதை நம்பி காளான்
வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன.
காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற
விலங்குகள் எளிதாக செல்ல முடியும்.
யானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி,
கொடிகளை, பின்தொடர்ந்து வரும்
காட்டு எருது, மான்கள் போன்றவை உண்ணும்.
மரக்கிளைகளை உடைத்து செடிகளை யானை உண்பதால்,
வெயில்படாத இடங்களில்கூட சூரியக்கதிர்கள்
ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி முயல் போன்ற
சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.இப்படி பல உயிரினங்கள்
வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக
இருக்கும் யானைகளை பாதுகாப்பது நமது கடமை. அதேசமயம்
இயற்கை வனங்களை அழிக்காமல், ரசித்து,
அதோடு ஒன்றி வாழ்வது சுற்றுச்சூழலுக்கு செய்யும் நாம்
செய்யும் பேருதவி.
ஆதார உயிரினம் யானை (KEY STONE SPECIES)
யானையை வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர்கள் ஆதார
உயிரினம் என்று அழைக்கின்றனர். தான் வாழுகிற
இடத்தினை எந்த ஒரு விலங்கு மாற்றியமைக்கிறதோ
அதை அப்படி அழைப்பது வழக்கம்.
அதாவது அவை மரங்களை உடைத்துப்போட்டும்,
புதர்களை மிதித்து அழித்தும், பிடுங்கியும் குறிப்பிட்ட சில
வனப்பகுதிகளை புல்வெளிகளாக மாற்றுகின்றன.
இதனால், பல உயிரினங்களுக்கு உணவோடு வாழ ஏற்ற
இடம் உருவாகிறது. இறந்த யானையை அழிந்துவரும்
பறவையினமான பிணந்தின்னிக் கழுகுகள், நரி, கழுதைப்புலி,
செந்தாய், பூச்சிகள், நுண்ணியிரிகள் உண்கின்றன.
இது பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது. யானையின்
சாணத்தில் ஜீரணிக்கப்படாத உணவு துணுக்குள், விதைகள்
அணில், வௌவால், வண்டு, பூச்சிகள் என பல விலங்குகளுக்கும்
உணவாகிறது. வறட்சிகாலத்தில் யானைகள் நதிக்கரையோரம்
தோண்டுகிற ஊற்றுக்குழிகள் மற்ற விலங்குகளின்
தாகத்தை தணிக்கிறது.

நம்மளுக்கும் கொஞ்சம் யானை பலம் வேணும்...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681...


வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018



Sivakumar Kumar is celebrating a birthday with Lakshmana Samy R in Udumalaippettai.
Just now

சிறந்த வழிகாட்டி ..
சிறந்த செயல்பாட்டாளர் ..
சிறந்த இயற்கை ஆர்வலர் ..
சிறந்த ஆன்மீக பற்று கொண்டவர் ..
என் இனிய அருமை நண்பர் நூலகர் தளி ஜல்லிபட்டி திரு. இலட்சுமண சாமி.....அவர்களுக்கு
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
கலைஞர் .....
கலைஞர் என்று சொல்லும்போதே மனம்... இனி இப்பேர்பட்டமனிதரை இனி எப்போது காண்போம் ...

சட்டசபையில் முதன் முதலாக பேசும் நிகழ்வு நண்பர் மூலம் தெரிந்துகொண்டேன் ..உங்களிடம் பகிர்வதில் பெருமை அடைகிறேன் ..


அன்றுதான் கருணாநிதி முதன்முறையாகப் பேசப் போகிறார்.

``என்ன கலைஞரே! இன்று என்ன பேசப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார் நெடுஞ்செழியன். ‘`நங்கவரம் விவசாயிகள் பிரச்னை பற்றிப் பேசப் போகிறேன். ‘நாடு பாதி; நங்கவரம் பாதி’ என்று நிலம் வைத்துள்ளார் அந்த நிலச்சுவான்தார். உள்ளூர் மக்களுக்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும் என்று வெளியூர் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். அவர்களுக்கும் ஒழுங்கான கூலி இல்லை. இதை இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப் போகிறேன்” என்றார் கருணாநிதி. கையேர் வாரம், மாட்டேர் வாரம் என்ற கூலி முறை பற்றியும், இவர்களுக்காகப் போராடிய கவுண்டம்பட்டி முத்து என்ற விவசாயி பற்றியும் விலாவாரியாகச் சொன்னார்.

சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை போட்டுக் கொண்டே தன் அருகில் இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பியிடம் அண்ணா சொன்னார்: ‘`நாவலருக்குக் கருணாநிதி விளக்கம் அளித்தான் என்றா நினைக்கிறாய். கருணாநிதி இன்று சட்டசபையில் பேசப் போகிறான். அதற்காக ஒத்திகை பார்க்கிறான்” என்றார். மொத்தப் பேரும் சிரித்துவிட்டார்கள். ‘`இல்லைண்ணா’’ என்று நெளிந்தார் கருணாநிதி. வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடி, ‘`சட்டசபையில் பேச இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தயார் நிலையில் இருந்து பேசும் பேச்சே தரமான பேச்சாக இருக்க முடியும்” என்றார் அண்ணா. புறப்பட்டார் கருணாநிதி.

“கவர்னர் உரையை நான் போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என் கருத்துரையை ஆற்றவே வந்துள்ளேன்” என்று ஆரம்பித்து நங்கவரம் விவசாயிகள் பிரச்னைக்கு வந்து... தனது பேச்சை முடித்தார். முடித்ததும் தான் பேரவைத்தலைவர் கிருஷ்ணாராவ் அந்தத் துண்டுச் சீட்டை அனுப்பினார். அது காங்கிரஸ் ஆட்சிக் காலம். காமராஜர் முதலமைச்சர். ‘`நான் கருணாநிதி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று பார்த்து வியந்தேன்” என்று அன்றைய அமைச்சரும், பின்னர் முதலமைச்சராகவும் ஆன பக்தவத்சலம் சொன்னார். முதன்முறை பேசும் போது எப்படி ஒத்திகை பார்த்துப் போனாரோ, அப்படித்தான் ஒவ்வொரு நாளும் போனார்.

“சட்டசபைக்குப் போகும்போது கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியனாகவும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்” என்றார் கருணாநிதி. அப்படித்தான் இருந்தார் மாணவனாக, ஆசிரியனாக. கருணாநிதி ஒரு சுயம்பு. அதனால்தான் ஒரே நேரத்தில் இரண்டுமாக அவரால் இருக்க முடிந்தது.
மணிக்கணக்கில் பொதுக்கூட்ட மேடையில் பேசலாம். 

ஆனால், சட்டசபையில் வண்டி ஸ்டார்ட் ஆகாது. அது வேறு களம். இரண்டிலும் வென்றவர்கள் ஒரு சிலர்தான். அதில் ஒருவர் கருணாநிதி. கேள்வியை முடிக்கும் முன் பதில் சொல்வதும், பதில் சொன்னதும் எதிர்க் கேள்வி தொடுப்பதும் கருணாநிதி பாணி.

“வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், எங்களைப் பார்த்து ‘சிறப்பான ஆளுங்கட்சி’ என்று பெருமைப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்துக் கேவலமாக நினைக்கிறார்கள்” என்று முதலமைச்சர் பக்தவத்சலம் சொன்னதுமே, ‘`இவ்வளவு கேவலமானவர்களை வென்றது உங்களுக்குப் பெருமையா?” என்று திருப்பி அடித்தார் கருணாநிதி. “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்று துடுப்பைப் போட்டார் கருணாநிதி.

“அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே! இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ‘`இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!”

அன்றைய தினம் வெளியான இதழ் ஒன்றில் கருணாநிதியைக் கிண்டல் செய்து கவிதை ஒன்று வெளியானது.

“தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில்
இருந்தும் என்ன பயன்?
நீங்கள்தான் ஏற்கெனவே
தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” -

இந்தக் கவிதையை தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கருணாநிதி, ‘`தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்று ஐஸ் வைத்தார். பீட்டருக்கு நாக்கு எழுமா அதன் பிறகு? கேள்விக்கு உள்ளே இருந்தே பதிலைச் சொல்வதும், பதிலுக்குள் இருந்து அடுத்த கேள்வியைத் தோண்டுவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை.

அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை எழுத்துக்கு எழுத்து கவனிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர் அது. பக்தவத்சலம் முதலமைச்சர். இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப் போகிறது என்ற நிலைமை. கருணாநிதி பேசும்போது, ‘`ஆண்டவன் என்ற ஒருவன் இருந்து நான் அவனைச் சந்தித்தால் அவனைப் பார்த்து, ‘முதலமைச்சரைப் போன்று சுறுசுறுப்பைக் கொடு’ என்றுதான் வரம் கேட்பேன். அவர் முதலமைச்சராக இருந்து ஓர் ஆளுங்கட்சித் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு இதுவரை கற்றுக்கொடுத்தார்” என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களே மகிழ்ச்சி அடைந்தார்கள். 

கருணாநிதி ரிவர்ஸ் கியர் போட்டார். “அதுபோல் அடுத்த தடவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை அவர் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டும்” என்றார். தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் குதித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே கதை- வசனகர்த்தாவாக இருந்ததால், கருணாநிதிக்கு வாதம் - எதிர்வாதம் இரண்டும் கைவந்த கலையானது.

கருணாநிதியின் அரசியல் மிகக் கடுமையான விமர்சனத்துக்குரியது.அவரது பொதுவாழ்க்கையில் களங்கம் உண்டு. ஆனால் சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அனைவரும் படிக்க வேண்டிய பாடப் புத்தகமாக, 1997-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு அவர் அளித்த பதிலுரை இருந்தது. தனக்கு முன்னால் பேசிய 40 பேருக்கும் பதில் சொல்லி இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவர் அளித்த பதில் தான், சட்டமன்ற விவாதத்தை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், மதிப்பளிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்தது. அதேபோல், ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பேச வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி பேசிய பேச்சு உணர்த்தும். பூம்புகார் நிறுவனத்துக்காக பல்கேரியா பால்டிகா கப்பல் வாங்குவதில் என்னென்ன விதி மீறல் என்பதை 20-க்கும் மேற்பட்ட ஆதாரங்களுடன் ஒவ்வொன்றாக அடுக்குவார் கருணாநிதி. இந்தப் பேச்சுக்குப் பிறகுதான் கப்பல் வாங்குவதை நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.

1996-2001 அவரது முதலமைச்சர் காலமும், 1980-84 அவரது எதிர்க்கட்சித் தலைவர் காலமும் தி.மு.க-வினருக்கு மட்டுமல்ல; அரசியல் ஆர்வமுள்ள அனைவருக்குமான சட்டசபைப் பாடம். நேர்மறை, எதிர்மறை என எல்லா பாடங்களையும் நடத்திவிட்டு பழுத்த இலையாய்ப் படுத்திருக்கிறார் கலைஞர்.

-ப.திருமாவேலன்..

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக ..ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது ..

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் ..சார்பா ஒரு mesg ரெடிபண்ணி ஷேர் பண்ணலாம் மாப்பிள..

நம் கம்பள சமுதாயம் ..அவர் போராடி பெற்ற இட ஒதுகீடு மூலம் தான் கல்வியில் ,வேலைவாய்ப்பும் பெற்று முன்னேறி இருக்கிறோம் ..நன்றியூணர்வை மறக்க கூடாது ..

கல்லூரி யில் மொழிப்பாடம் ..தமிழ் வழியில் படித்தால்...வேலைவாய்ப்பில் முன்னேறி ..இன்று அரசுத்துறையில் நல்ல பொறுப்பில் உள்ளார் ..நம் கம்பள சமுதாயத்தில் ..ஆங்கில வழிக்கற்றல் மூலம் அல்ல ...

சார் ..இன்று உங்களின் புத்தகம் வாங்கியதில் எனக்கு பெருமை ..படித்து ..பகிர்கிறேன் ..நன்றி

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

ஆமாம் மாப்பிள ...
புது புத்தகத்தின் வாசனை ...
அதனுள் மயிலிறகு வைத்து ..
ஆர்வமாக படிக்கும் தருவாயில்
ஏதாவது இடைஞ்சல்கள் வந்தாலே
ஒரு சிறு கோபம் ..
படித்து முடித்த பின் ...
மனதிற்கு பிடித்த பின் ..
மறுபடியும் வாசிப்பு ..
புத்தகத்தின் வாசிப்பும் ..நேசிப்பும் ..அருமை மாப்பிள ..
கிண்டேல் ...வேர்ட்பிரஸ் ..ஆகியவற்றில் படித்தாலும் போர் அடித்துவிடுகிறது
எதிர்காலம் அப்படி நமக்கும் ,எதிர்கால குழந்தைச்செல்வங்களுக்கும் கிடைக்கப்போவதில்லை ....
 ..
ஆமாம் மாப்பிள ..சில சிறுகதை புத்தகங்களின் வாசித்தது நெஞ்சில் விட்டு அகலாது இருக்கும் மாப்பிள ..நான் 25 வருடங்களுக்கு முன் கோவை  RS புறத்தில்  பொது நூலகத்தில் படித்த தந்தையும் மகனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை வரலெட்டி ரங்கசாமி அவர்கள் எழுதிய நூலை மறக்கமுடியவில்லை ..மகனை  சிறுவயதில் தந்தையிடம் இருந்து பிரித்து சென்றுவிடுகிற மனைவி ..எப்படி குழந்தையாக இருந்தபொழுது அதே பாசம் மாறாமல் மகன் வளர்ந்து தந்தையிடம் வந்து சேர்கிறான் என்ற சிறுகதை புத்தக வாசிப்பு மனதை விட்டு அகல்விதில்லை ...

பெருமாள்சாமி சாமி ...சார் ..தகவல் ....தன்னம்பிகை ஆசிரியர் மற்றும் அதன் இதழ் என்னுடைய siva .com 24/7..என்னுடைய வாட்ஸஅப்ப் குழுவில் பகிரப்பட்டுக்கொண்டுஇருக்கிறது ..



ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

இன்றைய ஞாயிறு ...அருமையான வாசிப்பை நேசிப்போம்...நிகழ்வு

வளரும் எதிர்கால குழந்தைசெல்வங்களுடன்  ..இன்று
உடுமலை கிளை நூலகம் நூலகம் எண் இரண்டில் வழக்கறிஞர் அருள் மொழி அவர்கள் வாசிப்பைநேசிப்போம் என்ற தலைப்பில் 05.08.2018 ஞாயிறு மாலை 4 மணி அளவில் ...எதிர்கால குழந்தை செல்வங்களுடன் ..உடுமலையின் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினரராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார் ..நன்றி ..வழக்கறிஞர் பற்றி ஒரு சிறு குறிப்பு ..

நம்பிக்கை மனிதர்கள் .....அ. அருள்மொழி!!!
அ. அருள்மொழி  - A . Arulmozhi

சேலத்தில் பிறந்த இவர்  , திராவிட இயக்கத்தில் பற்று கொண்ட , தமிழ் புலவரான  தன் தந்தையால்  தமிழ்  பற்றுடன், திராவிடப்  பாரம்பரியத்தையும் கற்று  வளர்ந்தவர் . மிகச்சிறு வயதிலேயே மேடைகளில் பேச்சாளராக தொடங்கிய இவர்    பெண்கள் எனில் பக்தி , சினிமா , அழகு  என்று இருந்த  பிம்பத்தை உடைத்து   பகுத்தறிவு , நாத்திகம் ,  பெண்ணியம் , கடவுள் மறுப்பு , ஜாதி மறுப்பு  என்று  மாறுபட்ட தளங்களில்  தவிர்க்க முடியாத தாக்கத்தை  ஏற்படுத்திக்கொண்டிருப்பவர் .

தனது கல்லூரி  காலத்தில் இருந்து போராட்டக்களத்தில் இருக்கும் இவர் உயர் நீதிமன்ற  வழக்கறிஞர்  ,  திராவிடர் கழக பிரசாரச் செயலாளர் .  சமூக ஆர்வலர் , ஈழப்பிரச்சனை பற்றி  தொடர்ந்து  மேடைகளில் , பொதுக்கூட்டங்களில்  குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர்  . பெண்களின் உரிமைக்காகவும் , பெண்கள் மீதான அடக்குமுறைக்கும் தொடர்ந்து போராடும் சமூகப் போராளி .

சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு தயங்காமல் தன் கருத்துக்களை முன் வைப்பவர் , பெண்ணியம் சார்ந்த  பயிற்சிப் பட்டறைகளில் கருத்தாளராக தொடர்ந்து செயலாற்றும் இவர் , தொழில்  முறையாக சென்னை  உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக  கடந்த இருவத்தியெட்டு ஆண்டுகளாக அரசியில் அமைப்புச் சட்டம் , சிவில் வழக்குகள் , திருமண சார்ந்த வழக்குகள் போன்றவற்றில் வாதாடி வருபவர் .

 நினைவாற்றலுடன் சரளமாக அழகு தமிழில் பேசுவது , தீர்க்கமான வாதங்களை முன் வைக்கும் போதும் அதில் இழையோடும் நகைச்சுவை ,  ரசனை ,   அலங்காரப் பேச்சுகளாய் இல்லாமல்    முரண்பாடு இல்லாத, சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசம் இல்லாத   மக்களுக்கு புரியும் படி எளிமையான பாணியாக  இருப்பது  இவரது பேச்சுக்களின் சிறப்பம்சம் .

பள்ளி வயதில் இருந்தே பேச்சுப்போட்டிகளில் நூற்றுக்கணக்கான பரிசுகளை பெற்றவர் , தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்றவர் . பாரதிதாசனின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு  உள்ள இவர் இலக்கிய மேடைகளில் தவறாமல் இடம்பெறும் இலக்கிய ஆளுமை....

இன்றைய குழந்தைகளுடன் அவர்களுடன் உரையாடி கொண்டே நிகழ்ச்சியில் பேசியது அருமை ..குழந்தைகளிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டும் ,அவர்கள்
அழகாக பதில் அளித்து விழாவை வெகு சிறப்பாக செய்தது மிக்க மகிழ்ச்சி ..அவரின் சேலம் சிறுவயதில் பள்ளியில் நடந்த பேச்சு போட்டிக்கு தலைப்பை ஆசிரியர்கள் கொடுத்து ..அவர் முதல் முறையாக சேலத்தில் நூலகம் சென்று படித்து பள்ளியில் நடந்த பேச்சு போட்டியில் பரிசு பெற்றது அழகாக வாசிப்பை நேசிப்போம் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தது ..பேச்சு முடிந்தவுடன் ..உடுமலையின் முதல் இந்திய விடுதலைக்கு போரிட்ட தளி எத்தலப்ப மன்னரின் ..தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் என்ற நூலை பரிசாக வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தோம் ..இந்த விழாவை ஏற்பாடு செய்த அமராவதி இந்திய ராணுவ பயிற்சி பள்ளியின் ஆசிரியர் ..திரு இளமுருகு அவர்களுக்கும் ,உடுமலை கிளை நூலகம் 2-நூலகர் -திரு கணேசன் அவர்களுக்கும் ..மனமார்ந்த நன்றிகள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..








சனி, 4 ஆகஸ்ட், 2018

வழக்கறிஞர் .அ .அருள்மொழி ...

நம்பிக்கை மனிதர்கள் .....அ. அருள்மொழி!!!

அ. அருள்மொழி  - A . Arulmozhi 

சேலத்தில் பிறந்த இவர்  , திராவிட இயக்கத்தில் பற்று கொண்ட , தமிழ் புலவரான  தன் தந்தையால்  தமிழ்  பற்றுடன், திராவிடப்  பாரம்பரியத்தையும் கற்று  வளர்ந்தவர் . மிகச்சிறு வயதிலேயே மேடைகளில் பேச்சாளராக தொடங்கிய இவர்    பெண்கள் எனில் பக்தி , சினிமா , அழகு  என்று இருந்த  பிம்பத்தை உடைத்து   பகுத்தறிவு , நாத்திகம் ,  பெண்ணியம் , கடவுள் மறுப்பு , ஜாதி மறுப்பு  என்று  மாறுபட்ட தளங்களில்  தவிர்க்க முடியாத தாக்கத்தை  ஏற்படுத்திக்கொண்டிருப்பவர் .  

தனது கல்லூரி  காலத்தில் இருந்து போராட்டக்களத்தில் இருக்கும் இவர் உயர் நீதிமன்ற  வழக்கறிஞர்  ,  திராவிடர் கழக பிரசாரச் செயலாளர் .  சமூக ஆர்வலர் , ஈழப்பிரச்சனை பற்றி  தொடர்ந்து  மேடைகளில் , பொதுக்கூட்டங்களில்  குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர்  . பெண்களின் உரிமைக்காகவும் , பெண்கள் மீதான அடக்குமுறைக்கும் தொடர்ந்து போராடும் சமூகப் போராளி . 

சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு தயங்காமல் தன் கருத்துக்களை முன் வைப்பவர் , பெண்ணியம் சார்ந்த  பயிற்சிப் பட்டறைகளில் கருத்தாளராக தொடர்ந்து செயலாற்றும் இவர் , தொழில்  முறையாக சென்னை  உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக  கடந்த இருவத்தியெட்டு ஆண்டுகளாக அரசியில் அமைப்புச் சட்டம் , சிவில் வழக்குகள் , திருமண சார்ந்த வழக்குகள் போன்றவற்றில் வாதாடி வருபவர் .

 நினைவாற்றலுடன் சரளமாக அழகு தமிழில் பேசுவது , தீர்க்கமான வாதங்களை முன் வைக்கும் போதும் அதில் இழையோடும் நகைச்சுவை ,  ரசனை ,   அலங்காரப் பேச்சுகளாய் இல்லாமல்    முரண்பாடு இல்லாத, சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசம் இல்லாத   மக்களுக்கு புரியும் படி எளிமையான பாணியாக  இருப்பது  இவரது பேச்சுக்களின் சிறப்பம்சம் .

பள்ளி வயதில் இருந்தே பேச்சுப்போட்டிகளில் நூற்றுக்கணக்கான பரிசுகளை பெற்றவர் , தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்றவர் . பாரதிதாசனின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு  உள்ள இவர் இலக்கிய மேடைகளில் தவறாமல் இடம்பெறும் இலக்கிய ஆளுமை .


வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

லவ் U ....CD DAWN (2004-மாடல் )....பைக் ...
வழக்கமாக கச்சேரி வீதியில் இருக்கும் பாலாஜி காஃபி ஷாப்பிற்கு நேற்று பைக்கில் சென்று அந்த ஷாப் வாசல் அருகே அனாயசமாக பைக்கை ஸ்டான்ட் போட்டு நிறுத்தும் போதே, காபி ஸ்டாலில் இரண்டு மாஸ்டர்கள் (ஒருவர் டியூட்டி முடிந்து போகிறார், இன்னொருவர் டியூட்டிக்கு ரெடியாக நிற்கின்றார்) என்னைப்பார்த்து சிரித்தபடியே பேசிக்கொண்டிருந்ததை கவனித்துவிட்டேன்.
கேஷ்கவுன்ட்டரில் பணம் கொடுத்து காஃபிக்கான பில்லை வாங்கிக்கொண்டு அந்த கவுன்ட்டருக்கு சென்று, மாஸ்டர் நீங்க என்னை பார்த்து ஏதோ சொல்லி இரண்டு பேரும் சிரிச்சுகிட்டீங்களே என்னென்னு கேட்டேன். ஒண்ணுமில்லே சார், நிறைய பேர் கொஞ்சம் நடுத்தர வயசாயிட்டாலே கியர் இல்லாத வண்டிக்கு மாறி ஓட்ட ஆரம்பிக்கறாங்க. அப்படியும் இல்லேன்னா பைக்கை விரும்பறவங்க 100 சிசி பைக் வாங்கி ஓட்றாங்க.
நீங்க என்னடான்னா ஹைஸ்பீடு என்ஜின் லேட்டஸ்ட் மாடல்(2004-மாடல் ) CD DAWN  வாங்கி வச்சுகிட்டு, ஸ்பீடா வந்து கடைவாசல்ல அசால்ட்டா ஸ்டான்ட்போட்டு உள்ளே வர்றீங்க. அதைத்தான் சொல்லி பேசிகிட்டு இருந்தோம். இன்னைாரு மாஸ்டர் தொடர்ந்தார். பொதுவா இப்போ நிறைய பேரு 30 ஐ தாண்டிட்டாலே ப்ளெய்ன் ஷர்ட் போடறாங்க. நீங்க என்னடான்னா சின்ன வயசு பசங்களைப்போல ஸ்லிம்ஃபிட் பேன்ட்டும் ஸ்லிம் ஃபிட் கேஷ்வல் ஷர்ட்டும் போட்டுகிட்டு வரும்போதே ஸ்பீடா நடந்து வர்றீங்க, உங்க‍ளைப்பார்த்தா ரொம்ப ஆச்சர்யாமா இருக்கு சார் என்றார்.
இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு. வயசை நான் எப்பவும் எண்ணிக்கையாதான் வச்சுருக்கேன். அது வருஷா வருஷம் கூடிகிட்டேதான் போகும். ஆனா உள்ள இருக்கற மனசு இருக்கே. அதை நான் எப்பவும் இளமையாவே வச்சிருக்கேன். அதுக்கு நான் எப்பவும் எனக்கு வயசாயிடுச்சுன்னு நியாகப் படுத்தறது இல்லே. அதுவும் இந்த பைக் பிடித்ததற்கு காரணம் ...ஆசை ..ஆசையாக .என் திருமணம் முடிந்து அடுத்த நாள் வாங்கிய முதல் முத்தான சொத்து ...இந்த பைக் ...என் மனைவிக்கு பிடித்த பைக் ..எனக்கும் பிடித்த பைக் ..கோவையில் இதன் கால் சக்கரங்கள் படாத இடங்கள் இல்லை ..கோவை ..பொள்ளாச்சி ..உடுமலை சுற்றி இருக்கும் கிராமங்கள் ..திருமூர்த்தி மலை ..கோவில்கள் ..சேலம் ..நாமக்கல் ...மேச்சேரி ..ஓமலூர் ..என ....என் குடும்பத்தை வெயில் ..மலையென்றும் பாராமல் சுமந்த ஜீவன்  இந்த CD Dawn ....என் செல்ல ஷ்யாமுக்கும் இந்த பைக் மீது உயிர் ....40 ஐ தொட்டுட்டாலோ இல்லே பிள்ளைங்களுக்கு திருணம் செஞ்சுவச்சுட்டாலே, இனி என்ன இருக்கு நமக்கு வயசாயிடுச்சுன்னு, வயசுக்கேத்த மாதிரி நாம நம்மளை மாத்திக்கனும்கிற மைன்ட் செட்டுக்கு நிறைய பேரு வந்துடறதால, இயல்பாவே அவங்களோட உடலும் தளர்ந்துபோய் மனசும் வயாசாகிப்போச்சுங்கிறத அடிக்கடி சொல்ல ஆரம்பிச்சுடுது. நான் எப்பவும் இளமையாக இருக்க ஆசைப்படறேன்னு நமக்கு நாமே சொல்லிகிட்டு இருந்தா, இளமையானவர் களுக்கே உண்டான செயல்களை அன்றாடம் செஞ்சுகிட்டு இருந்தா உடம்பு தானாகவே சுறுசுறுப்பாயிடுது.
இது மட்டுமில்லே நடந்து போன விஷயங்களைப்பற்றியே எப்போதும் சிந்திசுகிட்டே இல்லாம வரப்போகும் பிரச்சனைகளைப்பற்றிய கவலையில் ஆழ்ந்துவிடாமல் எது நடந்தாலும் அதனை சமமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையைப் அடைந்துவிட்டால் என்றுமே நாம் மனதளவில் இளமையானவர் கள்தான். நீங்களும் முயற்சித்துப்பாருங்க மாஸ்டர் என்று சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டேன்.
மனதிற்கு என்றுமே வயதாவதில்லை...அதே போல் ..என் cd dawn பைக்குக்கும் வயதானதில்லை ..நிறம் மாறும் மனிதர்களுக்கு மத்தியில் ..இந்த இயந்திர ஜீவன் என்றும் விசுவாசகமாக வாழ்க்கையில் எத்தனை கஷ்டம் வந்தாலும் சுமந்து செல்லும் ஜீவன் ....லவ் யு dawn ....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

ஆடி-18...... (உடுமலை-ஜல்லிப்பட்டி- தளி )ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.....

ஊஞ்சல்........ குழந்தைகளின் குதூகலம்....... !!!!!!! (தளி ஜல்லிபட்டி )

என் சிறுவயதில் ஆடி 18 யை தூரி நோன்பு என்றுதான் அழைப்போம் ..ஒரு நாள் முன்பே ஜல்லிபட்டி கிராமத்திற்கு சென்றுவிடுவோம் .எப்பொழுத்தான் சீக்கிரம் விடியோமோ என்று எங்கள் பாட்டி வீட்டில் பெரிய நீளமான வீட்டின் முன்புறம் உள்ள குழந்தைச்செல்வங்களுடன் கதைகள் பேசி தூங்குவதற்கே இரண்டு மணி ஆகிவிடும் ...காலையில் பொம்மையன் கோவில் முன்பு ..பெரிய நடு மரங்கள் நட்டு ...பெரிய அகல மர பலகையிலான உட்காருவதற்கு வசதியாக அமைப்பார்கள் ...அதற்கு சந்தனம் குங்குமம் ,மாவில்லை கட்டி ,மஞ்சள் துணியில் நவதானயங்கள் உள்ளேவைத்து அந்த ஊஞ்சலுக்கு ..கோவிலில் பூஜை செய்து ...குழந்தைச்செல்வங்களுடன் முதன் முறையாக ஆடும்போது ... ரோல் கோஸ்டர் ,ஜயண்ட்வீல் எல்லாம் கொஞ்சம் தள்ளி நிற்கவேண்டும் ...கிராமத்து பெரியவர்கள் தோட்டத்து வேளைக்கு சென்று வந்த பின்னர் இரவில் ..ஊஞ்சல் ஆடி பாட்டு பாடி தங்களின் களைப்பை போக்கிக்கொள்வார்கள் .. ஊஞ்சல் அல்லது ஊசல் (swing) என்பது ஒரு உல்லாசப் பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இது சங்க காலம் தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. உடுமலை கிராம பகுதிகளில் இதனைத் தூலி என்றும் தூரி என்றும் வழங்குகின்றனர். சிறுவர்கள் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடுவர். மரக் கிளைகளில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து சிறுவரும் சிறுமியரும் ஊஞ்சலாடுவர். தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக்கொண்டும், பிறர் ஆட்டிவிட்டும் ஆடுவர்.குழந்தை ஊஞ்சலில் ஆடும்போது இன்பம் கண்டு தூங்குகிறது. பெரியவர்கள் தாமே ஊஞ்சலாடி மகிழ்கின்றனர்....

முப்பது வருடங்களுக்கு முன்பாகக் கூட ஆடி பதினெட்டு தினத்துக்காக மரத்தில் ஊஞ்சல் கட்டி தூரி ஆடியதுண்டு.

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆனந்தமாக ஆடினார்கள்.

பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.

இப்பொழுதும் பசுமையாக எண்ணங்களில் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்திகொண்டுஇருக்கிறோம் ...நம் தலைமுறை குழந்தைகளுக்கு இதை மறவாமல் கொண்டுபோகவேண்டியது நம் கடமை ..பண்பாடு ..கலாச்சாரம் இதில் தான் உள்ளது ...இதை நம் குழந்தைச்செல்வங்களுக்கு கற்றுக்கொடுப்போமா ...??????????


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681

புதன், 1 ஆகஸ்ட், 2018


பொறியாளர் ..திருப்பதி தேவராஜன் ....(கோவை )

Mr .என்ஜினீயர் என்று செல்லமாக அழைக்கப்படும் .கோவை திருப்பதி தேவராஜன் மாப்பிள்ளைக்கு ... என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...படித்தது இயந்திரவியல் ....பணிபுரிவது இயந்திரவியல் துறைசார்ந்த நிறுவனத்தில் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையின் ...செயல் குழு உறுப்பினர் ..நம் கம்பள சமுதாய சிந்தனைகள் அழகாக படம் பிடித்து ...தன் செயலின் மூலம் செயல்படுத்தி காட்டுவதில் சிறந்த களப்பணியாளர் ...இந்திய விடுதலைக்கு போராடிய பாளையக்காரர்களின் தேடி பிடித்து வரலாறுகளை நமக்கு எழுத்து வடிவத்தில் ..தருவதற்கு மகிழ்ச்சி ..இன்றய காலத்தில் சினிமா ,பொழுதுபோக்கிற்கு எத்தனயோ வழிகள் இருக்கும்போது இந்த சிறுவயதில் வரலாற்று வீரர்களின் தகவல்களை தேடி கண்டுபிடித்து பதிவுகளாக தருவதற்கு நன்றிகள் பல கோடி ...நமது உடுமலைபேட்டை ..கோட்டமங்கலம் வல்ல கொண்டம்மன் ..வரலாற்றை இந்த சிறு வயதில் வரலாற்று நூலக எழுதிக்கொண்டும் ..தற்பொழுது நூலக நமது கம்பள விருச்சத்தின் அறக்கட்டளை மூலம் வெளியிட தன்  பணிப்பளுவுக்குக்கிடையே இந்த பணியை செய்தது மிக்க மகிழ்ச்சி ..வாழ்க வளமுடன் ..

திருப்பதி தேவராஜன் மாப்பிள்ளைக்கு ... என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..
கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் 

செவ்வாய், 31 ஜூலை, 2018

என் அருமை விளாத்திகுளம்  ..ராஜ்குமார் அப்பணாசாமி  மாப்பிள்ளைக்கு ..என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...மாப்பிள்ளையின் அறிமுகத்தால் ..முகநூலிலும் ,வாட்ஸஅப்ப் குழுவிலும் ..எனக்கு அதிக சூரியன் உதிக்கும் கிழக்கு திசை சொந்தங்களை அறிமுக படுத்திவைத்த பெருமை ..என் ராஜ்குமார் மாப்பிள்ளையையே சாரும் ..என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் சார்பாகவும் ..பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
கலந்தாய்வு ...மாலைநேரம் ..
இன்று தங்களின்  பணிகளை முடித்துக்கொண்டு ..சிவக்குமார் -நிதித்துறை ,
மாரிமுத்து -கல்வித்துறை ,மனோகர் -தொழில்துறை ,செந்தில் -ஊடகத்துறை ,தமிழரசன் -மின்துறை ,கார்த்தி -விவசாயத்துறை ...அனைவரும் இன்று உடுமலை மாலை நேரம் ..வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் ..உடுமலையில் நடைபெற இருப்பதால் ..அதற்கான பணிகளை தொடங்கி செயல் திட்டங்கள் ,நடைமுறை படுத்தும் திட்டங்கள் ..பற்றி ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டோம் ...மகிழ்ச்சி ..

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் ..

நீங்க ...பத்தா வைச்ச ..பக்குனு பத்திற்கும் ...பஞ்சு துறை மாப்பிள ...