வல்லகொண்டம்மன் வரலாறு வழிபாடும் ..
பற்றியும் ,அவர்தம் வாழ்க்கை முறைகள் பற்றியும் ,அவர்கள் தம் கடைபிடித்த பண்பாடு ,பாரம்பரியம் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடிகளாக திகழ்கின்றன .
வல்லகொண்டம்மன் வரலாறு வழிபாடும் ..
"Salary Credited" எனும் மெசேஜ் கண்ணில் படும்போது வரும் ஆனந்தத்திற்கு ஈடுண்டா? ஆனால், இந்த Salary அல்லது சம்பளம் எனும் வார்த்தை நம் காதில் விழும்போது நாமெல்லாம் உப்பைத்தான் நினைவுகொள்ளவேண்டும். ஏன் தெரியுமா? இந்த இரண்டு வார்த்தைகளும் உப்பிலிருந்துதான் பிறந்துள்ளனவாம். பண்டையகாலத்தில் உப்பு மிகவும் அரிதானவோர் பொருளாக கருதப்பட்டதால் வெண் தங்கம் (White Gold) என்று அழைக்கப்பட்டது. பண்டைய ரோமர்கள் தமது படைவீரர்களுக்கு உப்பினையே கூலியாக வழங்கியுள்ளனர். அதனை “Salarium” எனும் லத்தீன் வார்த்தையால் குறிப்பிட்டுள்ளனர். Salarium எனும் லத்தீன் வார்த்தையே பின்னாளில் “Salary” என மாற்றமடைந்துள்ளது.
அதேபோன்றே உப்பு உற்பத்தித்தொழிலை அடிப்படையாக வைத்துதான் சம்பளம் எனும் சொல்லே உருவானதாகவும் சொல்லப்படுகின்றது . உப்பினை உற்பத்தி செய்யும் களத்திற்கு பெயர் “அளம்” . பண்டையகாலத்தில் இந்த அளத்தில் வேலை பார்ப்போருக்கு கூலியாக “சம்பா” அரிசியே கொடுக்கப்பட்டதால். அப்படி " அளத்தில் கிடைத்த சம்பா " சம்பா - அளம்” என்பது காலப்போக்கில் சம்பளம் என மருகியது எனக்கூறப்படுகின்றது .
இப்படிப்பட்ட உப்பின் வணிகத்திற்காக உலக நாடுகளுக்கிடையே ஏகப்பட்ட போர்கள் நடந்துள்ளன. உப்பின் மீது போடப்பட்ட வரிகளுக்காக எத்தனையோ போராட்டங்கள் புரட்சிகள் வெடித்துள்ளன. அதுமட்டுமா? இன்று உப்பின் வணிகம் காப்பிரேட் நிறுவனங்களின் கைகளுக்கு சென்றபின் அதில் ஏராளமான உணவரசியல்களும் நுழைந்துவிட்டன. அதில் ஒன்றுதான் அமெரிக்காவில் அயோடின் குறைபாடுடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக மக்களுடைய அன்றாட உணவில் எப்படியாவது அயோடினை சேர்த்தாகவேண்டும் என யோசித்த அமெரிக்க அரசு அதற்காக தேர்ந்தெடுத்த பொருள் "உப்பு" அப்போதுதான் உப்பில் “அயோடின் கலந்த உப்பு“ எனும் புதிய முறை உருவானது .
கடைசியில் அயோடின் கலந்த உப்புதான் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு தேவை என்பதுபோல் இந்த அயோடின் உப்பு வணிகம் பரப்பப்பட்டது. "உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா?" போன்ற விளம்பரங்களின் பின்னால் இருக்கும் வணிக நோக்கம் தெரியாமல் நாமும் அதை வாங்கி வயிற்றில் கொட்டிக்கொள்கின்றோம்.
மனிதன் வேட்டையாடி சமூகமாக இருந்தபோது அவனது உடல் இயக்கத்திற்கு தேவையான உப்பானது அவன் வேட்டையாடும் விலங்கின் இறைச்சியிலிருந்தே கிடைத்தது. ஆனால், அவன் விவசாயம் செய்ய ஆரம்பித்தபின் உப்பு என்பது தனியாக தேவைப்பட்டது. அப்போதுதான் அவன் உப்பை எப்படி கண்டுபிடிப்பது என யோசிக்கலானான். நெருப்பு, விவசாயம் என்பவற்றுக்கு அடுத்து மனிதனின் அடுத்தகட்ட பரிணாமம் உப்பைக் கண்டுபிடித்ததுதானாம் .
உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலகட்டத்தில் நம் வியர்வையினூடாக உப்பு வெளியேற்றப்பட்டமையினால் நமது உடல் இயக்கத்தின் சமச்சீருக்கு உப்பு என்பது அதிகமாக தேவைப்பட்டது. ஆனால் இன்றோ உடல் உழைப்பு என்பது மிகவும் குறைந்துபோனதால் உப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கின்றது.
Even as times change... the culture... and traditions... of the Kambala community remain unchanged. The Kambalapatti - Pollachi Kenderyiamman (Kendukattamman) Temple Festival is a testament to this. This three-day festival is a unique event that showcases the community's rich heritage and traditions.
காலங்கள் மாறினாலும் ...🥰
பண்பாடும் ...🥰
கலாச்சாரம் ..🥰
மாறாத கம்பள சமுதாய மக்கள் ....-🥰
பாரம்பரியம் பண்பாடு காக்கும்
கெண்டேரியம்மன் (கெண்டுகாட்டம்மா) திருவிழா :
ஓர் சமுதாய சூழலில் பாரம்பரியம் மங்கி வரும் இக்கால கட்டத்தில்
இன்றளவும் பழமை குன்றாமல் பெருவிழா பூண்டு பயபக்தியுடன் நடந்து கொண்டு வருகிறது இத்திருவிழா...
விழா சிறக்கும் இடமானது
ராஜ கம்பள மக்கள் வாழும் ஒன்பது குலத்தவர்களையும் தன்னுள்
அடக்கியாளும் ஊரான
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் ஜமீன்க்கு உட்பட்ட
ஊரான
கம்பாலப்பட்டி
இங்கு தான் இத்திருவிழா கோலாகாலாமாக கொண்டாட படுகிறது...
இந்த திருவிழாவானது மூன்று நாட்கள் நடை பெறுகிறது இங்கு கெண்டேரியம்மன் என்று அழைக்க கூடியா கெண்டுகாட்டம்மாள் தாயாரும்
மல்ல தாத்தையன் ஆகிய இரு தெய்வங்கள் ஆட்சி செய்கிறார்கள்
கெண்டேரியம்மன் கடவளானது... வேகிளிவாரில் ஒரு உட் பிரிவான இர்ரின்னா குலத்தவருக்கு ஆதி தல குல தெய்வமாக விளங்குகிறது...
இந்த மக்கள் ஆண்டு பல காலம் முன்னரே ஆந்திரா கர்நாடக மைய பகுதியான பல்லேரி , தேவகிரி பகுதிகளிலும் வாழ்ந்து வந்த மக்களாவர்கள் அங்கு முகலாய படை எடுப்பின் போது நகர்ந்த மக்கள் எப்படியான சோதனைகளை சந்தித்தினர் என்றும் அவர்களை எப்படி இக்கடவுள் கட்டி காத்து பாதை காட்டியாக செயல் பட்டு ஆற்றங்கரைகளை கடந்து வர உறுதுணையாக இருந்தன போன்ற அறிய வகை செய்திகளும் ஆச்சார்ய மூட்டுகிற வகையில் திருவிழாவும் கூடி ஒரு வித்தியாசமானதாக நடந்து கொண்டு உள்ளது எனில் பிரமிக்க வைக்கவே செய்கிறது நம்மை...
இக்குல மக்கள் வடக்கு பகுதிகளை விட்டு நகரும் போது அப்போதைய முகலாய படை (டெல்லி சுல்தான்கள்)அவர்கள் டெல்லியில் இருந்து தென் பகுதிகளில் படை எடுக்க முக்கிய காரணம் இங்கு விளைந்தும் சேர்த்தும் வைத்து இருந்த அரசர்களின் பொன், பொருள் , வைரம், வைடூரியம் , ஐம்பொன் சிலைகள் போன்றவைகளை முக்கிய இடம் பிடித்தன இவற்றை கொள்ளை அடிக்கவே தென் மார்க்கமாக படை எடுத்த வந்துள்ளார்கள் அப்பொழுது இம்மக்கள் அவர்களிடம் இருந்து தப்பித்து வர இககுல தெய்வங்கள் துணையாகவும் பக்க பலமகாவும் நின்று அவர்களிடம் இருந்து காத்து இவர்களின் வழிதுணையாகவும் ஆற்றங்கக்கரையை கடக்க புங்க மரங்களை ஆற்றின் மேல் சாய்த்து இவர்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது எனவும் இவர்கள் ஆற்றங்கரையை கடந்து வந்த பின் அம்மரங்கள் எழுந்து நின்று கொள்கின்றன போன்ற காட்சிகளை இந்த திருவிழாவுல் கண்கூடாக காண முடிகிறது...
அப்பொழுது இங்கு எந்த ஒரு சத்தமும் நிகழ்வது இல்லை உறுமி போன்ற எந்த ஒரு இசைகருவியும் இசைக்க படுவது இல்லை
இந்த கோவிலில் திருவிழா முறை படி சாட்ட படுகிறது
அப்பொழுது இருந்து இம்மக்கள் சுத்தமாக கடும் விரதத்துடன் உள்ளார்கள் யாருக்கும் தண்ணிர் கூட குடுப்பது இல்லை இவர்களும் வெளியில் தண்ணீரோ உணவு அருந்துவோ மாட்டோம் என்கிறார்கள்
திருவிழா நடத்த முறை படி அக்கோவிலின் முன் ஊர் மக்கள் அனைவரும் அமர்ந்து கொள்கிறார்கள் கம்பளி போர்வை போட படுகிறது முறை படி அனைவரும் சிறு குழந்தை முதல் பெரிய ஆடவர் வரை மேல் சட்டையை அகற்றியும் தலையில் மேல் துண்டை சுற்றி உருமாவாக உருவாக்கி கொள்கிறார்கள் பெண்களும் மேலாடை அணியாமல் கூடைகள் (தேவரு கெப்பலு) வைத்து வரிசையாக அமர்ந்து அக்கடவுளிடம் உத்தரவு கேட்கிறார்கள் அப்பொழுது கறுப்பு கம்பளி மீது அமர்ந்து புல்லாங்குழல் மூலம் கடவுளிடம் உத்தரவு கேட்கிறார்கள் அப்பொழுது உத்தரவு வாங்குவதற்க்குள் அவர்களை அழுகையில் நனைத்து விடுகிறது.. புல்லாங்குழல் ஊதும் போது கட்டிகொள்கிறது சத்தம் வராமல் அப்படியெனில் உத்திரவு பிறப்பிக்க பட்டதாக கருதுகின்றனர் ஊர் மக்கள்
உத்திரவு கொடுக்கும் வரை அவ்வளவு ஒரு அமைதி நிலவுகிறது ஊர் முழுக்க புல்லாங்குழல் சத்தம் மட்டுமே ஒளித்து மனதை மதி மயங்க வைக்கிறது...
உத்தரவு கிடைத்த பின் அமைதியாக கோவிலில் அலங்கரித்து வைத்துள்ள தெய்வங்களை எடுத்து கொண்டு நகர்கிறார்கள் அப்பொழுது முகலாய குதிரை படை போன்ற வேடமிட்டு ஊரை வளம் வருகிறார்கள் இத்தெய்வங்கள் முன்னே செல்ல பின்னே அவர்கள் வருகையும் ஊரை மிளிர வைக்கிறது...
பின்னர் இம்மக்கள் ஆற்றங்கரையை கடந்து தெற்கு திசை வந்து விட முகலாய படை வடக்கு திசை நோக்கியே சென்று விடுகிறார்கள்
தெற்கு திசை நோக்கி வந்து ஊர் மந்தையில் நீண்ட வரிசையில் ஒன்பது குலத்தவரும் பொங்கல் வைத்து கரும்பு பந்தல் இட்டு கொண்டு வந்த சாமியை அதனுள் வைக்கிறார்கள் பிறகு தான் (சக்தி கும்பம்) தீர்த்தம் எடுத்து உறுமி முழங்க அருளுடன் வருகிறார்கள் பிறகு திணை வகைகள் பூண்டு மாவு செய்து மாவிளக்கு எடுக்குறார்கள்
இறுதி நாளில் சாமியை கோவிலிற்கு எடுத்த செல்லவும் உத்தரவு கேட்கிறார்கள் அப்பொழுது வரம் வேண்டி ஊர் மக்கள் அக்கடவுளை மனமுருக வேண்டி வரம் கேக்கிறார்கள் புல்லாங்குழல் மூலம் உத்தரவு கிடைத்த பின்னர் அம்மக்கள் மகிழ்ச்சி பொங்க மனம் குளிர வேண்டி கொள்கிறார்கள் உத்திரவு கிடைக்க கால தாமதமானால் அழுது புலம்புகிறார்கள்
பார்க்கும் போதே உடல் அசைவுகள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைக்கிறது...
அந்த காலங்களில் அறிவியல் வளர்ச்சி பெறாத போது தாம்பால தட்டில் உலக்கையையோ அல்லது கடப்பாரையையோ நிற்க வைத்தால் எந்த பிடிப்பும் இல்லாமல் நின்றால் கிரகணம் தொடங்கிவிட்டதாகவும், கீழே சாய்ந்துவிட்டதால் கிரகணம் முடிந்து விட்டதாகவும் மக்கள் கணித்து வந்தனர்
பய பக்தியுடன் திருவிழா நடந்து முடிவு பெறுகிறது பாரம்பரியம் பண்பாடு மறையாமல் இன்றளவும் சீரும் சிறப்போடு வெகு விமர்சையாக இத்திருவிழாவை நடத்தி கொண்டு உள்ளார்கள் கம்பால பட்டி ஊர் மக்கள் ...
பகிர்வு :
வரலாற்று தகவல்கள் சேகரிப்பு பிரிவு
கம்பள விருட்சம் அறக்கட்டளை
(தொழில் சார் கல்வி மேம்பாட்டு குழுமம் )
நன்றிகள் ....பொறியாளர் கார்த்தி SR ..பொறியாளர் திருப்பதி தேவராஜன் ..ஊடகவியலாளர் செந்தில்ராம் .கணினித்துறை ஜனா ஹரிகரன் ,பிரபாகரன் .ஜிலேபிநாயகன்பாளையம் கோபாலகிருஷ்ணன் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681📗🖋️🥰🤝👍🙏🌴⚔️🏹🌾📡🎙️
2025 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் வங்கி மற்றும் நிதி தொடர்பான முக்கிய சிறப்பம்சங்கள் என் பார்வையில்
- *வரி நிவாரணம்*: ₹12 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை, மேலும் ஆண்டுக்கு ₹12 லட்சம் சம்பாதிக்கும் நபர்களுக்கு ₹80,000 ¹ வரிச் சலுகை கிடைக்கும்.
- *கடன் உத்தரவாதக் காப்பீடு*: நுண் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ₹10 கோடியாகவும், தொடக்க நிறுவனங்களுக்கு ₹20 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டது.
- *கடன் பெறுவதற்கான எளிதான அணுகல்*: MSME களுக்கு மலிவு விலையில் கடன்களை எளிதாக்குவதற்கு மேலும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும், அத்துடன் வட்டி விகிதங்களைக் குறைக்கப்படும்.
- *கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை*: MSME களுக்கு பிணையமில்லாத கடன்களை வழங்குவதற்காக நுண் மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையின் (CGTMSE) விரிவாக்கம் ².
- *தேசிய உள்கட்டமைப்பு குழாய்வழி*: நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் மின்சார இயக்கம் மற்றும் பசுமை ஆற்றல் போன்ற புதிய துறைகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது ¹.
- *டிஜிட்டல் பொருளாதாரம்*: செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகளில் தொடக்க நிறுவனங்கள் மற்றும் புதுமைகளுக்கான ஊக்கத்தொகைகள், அத்துடன் வலுப்படுத்தப்பட்ட சைபர் பாதுகாப்பு உள்கட்டமைப்பு ².
இந்த அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், வரிவிதிப்பு எளிமைப்படுத்துதல் மற்றும் MSME கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கான கடன் அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
சிவக்குமார் VK
நிதி ஆலோசகர்
உடுமலைப்பேட்டை
2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் என் பார்வையில் மதிப்பாய்வு
முக்கிய சிறப்பம்சங்கள்
வரி நிவாரணம்*: ₹12 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை, மேலும் ஆண்டுக்கு ₹12 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு ₹80,000 வரிச் சலுகை கிடைக்கும்.
புதிய வரி முறை*: 5% முதல் 30% வரை விகிதங்களுடன் திருத்தப்பட்ட வரி விகித அமைப்பு.
உள்கட்டமைப்பு மேம்பாடு*: சாலைகள், ரயில்வே மற்றும் நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ₹11,11,111 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- *வேலைவாய்ப்பு மற்றும் திறன்*: ஐந்து ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களை இலக்காகக் கொண்ட பிரதமரின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஐந்து திட்டங்களின் தொகுப்பு ¹.
- *உள்ளடக்கிய மனித வள மேம்பாடு மற்றும் சமூக நீதி*: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கும், பழங்குடி சமூகங்களுக்கான முயற்சிகளுக்கும் ₹3 லட்சம் கோடி ஒதுக்கீடு ¹.
துறை வாரியான ஒதுக்கீடு
விவசாயம்*: விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு ¹.
கல்வி*: கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 13% அதிகரித்துள்ளது ¹.
சுகாதாரம்*: சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ₹37,000 கோடி ஒதுக்கீடு ¹.
பாதுகாப்பு*: பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு 10% அதிகரித்துள்ளது ¹.
பிற முயற்சிகள்
- *நகர்ப்புற மேம்பாடு*: பெண்கள் வாங்கும் சொத்துக்களுக்கான முத்திரை வரி குறைப்பு, மற்றும் 100 வாராந்திர 'ஹாட்கள்' அல்லது தெரு உணவு மையங்களை உருவாக்குதல் ¹.
ஆற்றல் பாதுகாப்பு*: அணுசக்தி, பம்ப் செய்யப்பட்ட சேமிப்புக் கொள்கை மற்றும் எரிசக்தி தணிக்கைக்கான முயற்சிகள் .
சுற்றுலா*: ஒடிசாவில் சுற்றுலா வழித்தடங்களின் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு
சிவக்குமார் VK
நிதி ஆலோசகர்
உடுமலைப்பேட்டை
ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை
மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்ட்டர் Madras Regiment Centr (MRC) , வெலிங்டன், குன்னூர், உதகமண்டலம்
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் , நம் நாட்டு ராணுவத்தின் முதல் பீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷா சிலை உட்பட ராணுவ தளபதிகள், ராணுவ வீரர்களின் புகைப்படங்கள், போர்களில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு 2012 செப்., 26ல் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில் ராணுவ மருத்துவமனை முன், திருப்பூரில் உள்ள திருமுருகன்பூண்டி ஸ்ரீ பாரதி கலைக்கூடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரால் ஒற்றைக்கல் சிலை வடிக்கப்பட்டு. 7.5 லட்சம் செலவில் சிலை வைக்கப்பட்டது.
''ராணுவத்திற்கு புண்ணிய பூமியாக உள்ள வெலிங்டன் பகுதியில் சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமை வாய்ந்த ஒன்றாக உள்ளது"
இங்கு வருடம் தோறும் வீரபாண்டிய கட்டபொம்மனின் , பிறந்த நாளையொட்டி அப்பகுதியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
திறப்புவிழா அன்று வெளிவந்த செய்தி குறிப்பு
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய தமிழகத்தின் முன்னாள் ஆட்சியாளர் வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆறரை அடி சிலை வெலிங்டோனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் (எம்ஆர்சி) வளாகத்தில் இன்று (2012 செப்-26) திறக்கப்பட்டது. கட்டபொம்மன் தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து 18 ஆம் நூற்றாண்டின் தலைவராவார், மேலும் இப்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தவர்களில் முதன்மையானவர். இந்திய சுதந்திரப் போருக்கு ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் அவர் ஆங்கிலேயர்களுடன் போரை நடத்தினார். 1799 இல் கட்டபொம்மன் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அவரது கோட்டை அழிக்கப்பட்டது மற்றும் அவரது செல்வம் பிரிட்டிஷ் இராணுவத்தால் சூறையாடப்பட்டது. சிலையை திறந்து வைத்து பேசிய எம்ஆர்சி கமாண்டன்ட் ஜே எஸ் யாதவ், இது ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய ஒட்டுமொத்த இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் செலுத்தும் மரியாதை என்று கூறினார்.
இது அவரின் வீரத்தை பறைசாற்றும் விதத்தில் உள்ளது.
ஆகவே நாம் நம் சமுதாயத்தினர் அனைவரும் அவரது மாண்பை பெருமை படுதும் விதத்தில் நடந்து கொள்வோமாக ,களங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாமல் இருப்போம் .
வரும் சனவரி 3 2025 வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த நாள் விழாவினை மிக சிறப்புடன் கொண்டாட திட்டமிடும் அனைத்து அமைப்புகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
வெற்றிவேல்!!!
வீரவேல்!!!
வாழ்க கட்டபொம்மன் புகழ்!!!
வளர்க கம்பளத்தார் எழுச்சி!!!
குறிப்பு:
இணைக்கப்பட்டுள்ள படம் MRC வளாகத்தில் எடுக்கப்பட்டது (15.12.24 அன்று ) உடன் MRC ன் முத்திரை / கொடி அமைப்பு / இராணுவ முத்திரை இடம்பெற்றிருக்கும்.
-கவின் சின்னுசாமி (Mr.Ck)
வாழ்க்கைப் பயணத்தில் எது நகர்கின்றதோ இல்லையோ கட்டாயம் நேரம் நகர்கின்றது.
இந்த போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்ப்பவர்கள் தாக்குப்பிடித்து நினைத்ததை சாதிக்க முயல்கிறார்கள். பலர் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள். அதற்கு தேவையான சில அடிப்படை விவரங்கள் குறித்து 🤝📗✒️🎙️📡
கனவு கண்டால் மட்டும் போதாது. கண்ட, காணும் கனவை எப்படி செயல்படுத்த வேண்டும் என்றுசிந்திக்க வேண்டியது முதல் படி.
அவ்வாறு சிந்தித்தால் மட்டும் போதாது. நம்மால் முடிய செய்ய வேண்டியவை எவை என்பதை பட்டியல் போடவேண்டும்.
_அடுத்து போட்ட பட்டியலில் செயல்படுத்த வேண்டிய ஆதரவு எங்கிருந்து கிடைக்கும் என்ற விவரங்கள் குறித்து ஆராயந்து முடிவு செய்யவேண்டும்.
அவற்றைப்பெற தேவையான பணம், பொருள், ஆள் பலம், பெற வேண்டிய ஒப்புதல்கள் போன்ற அத்தியாவசிய விவரங்கள் தயார் செய்யவேண்டும்.
அவற்றை அடைய தேவையான நடவடிகைகள் காலம் தாழ்த்தாமல், காலத்தை தள்ளிப் போடாமல் (without any delay / without postponing ) எடுப்பது முக்கியம்.
ஒருவேளை, அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு தேவையான அறிவு, திறமை போதிய அளவு இல்லாவிட்டால் (adequate knowledge, skill) அதை எப்படி சரி கட்டுவது என்று யோசித்து முடிவு எடுத்துச் செயல் படுத்துபவர் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான தகுதியை பெறுகிறார்.
வெகுவேகமாக செல்லும் தற்பொழுதிய சூழ்நிலையில் தோதானவர்களை தேர்ந்து எடுத்து வேலையை பிரித்துக் கொடுத்து பெற்று முன்னேறுபவர்கள் அடுத்த கட்டத்தில்.பயணம் செய்து பலன் தகுதி பெற்றவர்கள் ஆகின்றனர்.
கால மாற்றத்திற்கு இடம் அளித்து அதன் உடன் பயணிப்பது புத்திசாலிதனம் மட்டும் அல்ல, மாறி வரும் இன்றைய சூழ்நிலைக்கு அத்தியாவசியமும் கூட.
அடுத்த கட்டத்திற்கு நகர துடிப்பவர்களுக்கு இது பற்றி நன்கு தெரியும். மேலும் அவர்கள் செயல்பாடுகள் அவற்றைத் துல்லியமாக எடுத்துக்காட்டும்.
யோசனைகள் செய்வது மட்டும் அல்லாமல், பிறர் யோசனைகளை வரவேற்கவும் வேண்டும்.
யோசனை கூற முன் வருபவர்களை ஊக்குவித்து பாராட்டி பலன் பெற முயற்சி செய்யவேண்டும்.
பிறரின் யோசனையை உபயோகித்தாலோ, பின்பற்றினாலோ அத்தகையயை யோசனை அளித்தவருக்கு உரிய மரியாதை, பாராட்டுத்தலுடன், பொறுத்தமான சன்மானம் அளிக்க ஒரு பொழுதும் மறக்க கூடாது.
தனிப்பட்ட முயற்சியில் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்பது இயலாது என்பதை உணர்ந்து செயல்படுவது சால சிறந்தது.
முயற்சியுடன், கூட்டு முயற்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல பெரிதும் உதவும் என்பது யதார்த்த வாழ்க்கை பகுதியின் உண்மை அம்சம் ஆகும்.
_*அடுத்த கட்டத்திற்கு செல்ல முற்படுவர்கள் செயல் பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பது அத்தியாவசியம் என்பதை.உணர்ந்து செயலில் பின்பற்ற வேண்டும்.📗✒️🎙️📡🤝🥰🌈🏠🏠🏠🏠⛱️⛱️⏳⏳🌳🌴🌱🎧
ஜில்லென்ற மணம் (மனம்)
கோவை செல்ல உடுமலை பஸ் ஸ்டேண்டில் நின்ற ஒரு அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். (நடுவுல தான்..தாய் சொல்லை தட்டாதே)
பஸ் ஓரளவு காலியாய் இருந்தது அப்போ ஒரு பெரியவர் வந்து
"தம்பி பக்கத்துல ஆள் வருதா?"
" ஆமா(பொய்) வேற எங்கயாவது உக்காருங்க"
சில நிமிடம் கழித்து டிப் டாப்பாய் ஒரு ஆசாமி "சார் பக்கத்துல ஆள் வருதா?"
" ஆமா(மறுபடியும் பொய்). ஏன் சார் பஸ்ல அவ்வளவு இடம் இருக்குல்ல அங்க போய் உக்காரலாம்ல என்று நினைத்ததை அவர் உணர்ந்து வேறு இடம் சென்று அமர்ந்து கொண்டார்.
ஓரளவு பஸ் நிரம்பி விட்டது.. இப்போ ஒரு பையன் வந்தான். அழுக்கு சட்டை அழுக்கு பேண்ட் " சார் பக்கத்துல ஆள் வருதா?"
நான் இனி பொய் சொல்ல முடியாதென்றெண்ணி "இல்ல யாரும் வரல ஏன் ?'
இல்ல நான் உக்காரணும்"
" சரி உக்காரு" ஒரு வித நெருடலுடன் சொன்னேன். அவன் உடனே தான் கொண்டு வந்திருந்த கூடையை என் அருகில் வைத்து விட்டு கீழிறங்கி எங்கேயோ சென்று விட்டான்.
கூடைக்குள் அழுக்கு துணிகள்.. அதிலிருந்து துர் நாற்றம் வேறு.
என்னடா இது பிரபுவுக்கு வந்த சோதனை ?!
முதல்ல கேட்ட அந்த பெரியவர் அல்லது டிப் டாப் ஆசாமி இருவரில் யாருக்கேனும் இடம் கொடுத்திருக்கலாம். இப்படி ஆகிருச்சேன்னு கவலை பட்டுக்கொண்டே அந்த கூடையை மெல்ல அழுத்தி பார்த்தேன்.
அந்த கூடை முழுதும் அழுக்கு துணிகள்.
தீடிரென சத்தம் எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கி ஓட துவங்கினார்கள் எனக்கு என்னென்னே புரியலை.
பின்பு தான் புரிந்தது இந்த பஸ் கிளம்பும் முன்பாக ஒரு பிரைவேட் பஸ் கிளம்ப தயாரான பொழுது அனைவரும் இறங்கி அதை நோக்கி ஓடினர். நான் வேற நடுவுல உக்காந்துருக்கேன் . நான் போறதுக்குள்ள அந்த பஸ்ல சீட் நிரம்பிடும். இந்த பஸ் கிளம்ப இன்னும் தாமதம் ஆகும்போல தெரிந்தது. இந்த கூடைக்காரன வேற காணோம்.
திடீரென்று பஸ்சுக்கு வெளிய இருந்து என் ஜன்னலோரம் அவன் வந்து
"சார் சார் அந்த கூடையை கொடுங்க கூடையை கொடுங்க" னு கத்தினான்.
நான் எதுக்கு னு கேட்டேன்.
"சார் சார் கூடையை கொடுங்க சார் நான் அந்த பஸ்ல ஏறனும்"
சரி இந்தா னு சொல்லி என் என் இரு விரல்களால் அந்த கூடையை வேண்டா வெறுப்பாய் தூக்கி அவனிடம் நீட்டினேன்.
.அவன் கூடையை வாங்கியவுடன் சொன்னான்
" சார் நீங்க மெதுவா வாங்க நான் உங்களுக்கு அந்த பஸ்ல சீட் போட்டு வைக்கிறேன்" னு
நான் யாரை அழுக்கு பையன்னு நெனச்சேனோ, யார் கூட போனா என் பயணம் இனிக்காதுன்னு நெனச்சேனோ, அவன் சொல்றான் வாங்க சார் உங்களுக்கு சீட் போட்டு வைக்கிறேன்னு.
பள்ளியிலும் கல்லூரியிலும் தான் பாடம் நடத்திட்டு பரீட்சை வைப்பாங்க.
ஆனால் வாழ்க்கையில் பரீட்சை வெச்சுட்டுத்தான் பாடம் நடத்துவாங்கனு புரிஞ்சுகிட்ட ஒரு தருணம் அது.
நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனும் நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்க இறைவனால் அல்லது இயற்கையால் அனுப்பப்படுகிறான் என்பதை நான் நம்புகிறேன்.
அந்த பையன் அருகே அமர்ந்து நான் போன அந்த இரண்டு மணி நேர பயணத்தில் துர்நாற்றம் அடிக்கவில்லை. நல்ல மனத்தின் ஜில்லென்ற மணம்தான் வீசியது......
மறைந்து போன வரலாறுகளை மீட்டெடுப்பது புத்தகங்களே என்கிறார்-புரட்சியாளர் சேகுவேரா
நல்ல நூல்களும் சிறந்த ஆசிரியர்களும்
நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை என்கிறார் -நேரு
முத்து பவளம் சிற்பி வகையான மீன்கள் போன்றவற்றை தன்னகத்தே தாங்கி நிற்கும் சமுத்திரம் போன்றவை புத்தகங்களாகும் என்கிறார் காந்தியடிகள்
கூற்றுக்கிணங்க..
அருமைச் சகோதரர் உடுமலைப்பேட்டை சிவக்குமார் அண்ணன்
அவர்கள்
1.கரைவழி நாடும் நாகரீகமும்(வேளாண்மை)
2.கரைவழி நாடும் நாகரீகமும் (வரலாறு)
3.தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ஆகிய புத்தகங்களை எனக்கு கொடுத்திருந்தார்..
படித்ததில் -முதலில் புரிந்து கொண்டது திறந்த வெளியில் காற்றில் கலந்த வரலாறுகளை புத்தகங்களில் ஏற்றி ஆவணங்களாக வெளியிடுவது என்பது எவ்வளவு உழைப்பு
எவ்வளவு களப்பணி என்பதை ஆழமாய் அறிய நேர்ந்தேன்..
மேலும் புத்தக வெளியீட்டு விழா என்று ஏதாவது செய்தி வந்தால் அதை சாதாரணமாக கடந்து போனதுண்டு ஆனால் இந்த புத்தகங்களையெல்லாம் படிக்கின்ற போது
அந்த வெளியீட்டு விழாவிற்கு வருமுன் அந்த புத்தகத்திற்கான உழைப்பை எண்ணி வியக்கின்றேன்.
மேலும் கரைவழி நாடும் நாகரீகமும் என்ற நூலில் குறிப்பிட்ட அந்த கோவில்களுக்கு சென்றிருக்கின்றேன் அதைப்பற்றிய வரலாறுகளை ஆவணமாய் படிக்கின்ற போது கடவுகளும் கோயில்களும் வரலாறுகளை தன்னகத்தே எவ்வளவு அழகாக தாங்கி இருக்கின்றது என்பதை அறிந்து வியந்து போனேன்..
மேலும் ..
வேளாண்மை
நெல் விவசாயம்,
நெற்கூடு,
போக்கியம் கந்தாயம்,
விவசாய தெய்வங்கள்
விவசாய விழாக்கள்
கல்வெட்டு விவரங்கள்
கோயில் தல வரலாறுகளையெல்லாம் படிக்கின்ற போது அந்த நிகழ்வுகளுக்குள்ளாக நம்மை அழைத்துச்சென்ற உணர்வு ஏற்படுகின்றன.
தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் நூல் அந்த வரலாற்று காலத்திற்கே அழைத்துச்செல்லும் வண்ணம் எழுத்து வடிவமைப்பு அழகிய சொல்லாடல்களும் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு
ஒவ்வொரு புத்தகங்களும்
ஒவ்வொரு பக்கத்தை திரும்பும் போதும்
ஒரு ஆகச் சிறந்த வரலாறுகள் அமைந்திருப்பது உண்மையில்
அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய
நூல்களாகும்..
மேலும் இதற்காக உழைப்பை நல்கிய
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ பொறுப்பாளர்கள் அனைவரும் வணக்கத்திற்கு உரியவர்களே..
அருமைச்
சகோதரர்
சிவக்குமார் அவரின் வாயிலாக அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதுடன்
எதிர்காலத்தில் இன்னும் பல சிறந்த படைப்புகள் வர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..
என....
அனிதா ஜெயராமன்.📗✒️✒️✒️🎙️🎙️📡📡📡🌱🌳🌴🏘️🏡🏠🎧✈️