ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை
மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்ட்டர் Madras Regiment Centr (MRC) , வெலிங்டன், குன்னூர், உதகமண்டலம்
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் , நம் நாட்டு ராணுவத்தின் முதல் பீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷா சிலை உட்பட ராணுவ தளபதிகள், ராணுவ வீரர்களின் புகைப்படங்கள், போர்களில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு 2012 செப்., 26ல் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில் ராணுவ மருத்துவமனை முன், திருப்பூரில் உள்ள திருமுருகன்பூண்டி ஸ்ரீ பாரதி கலைக்கூடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரால் ஒற்றைக்கல் சிலை வடிக்கப்பட்டு. 7.5 லட்சம் செலவில் சிலை வைக்கப்பட்டது.
''ராணுவத்திற்கு புண்ணிய பூமியாக உள்ள வெலிங்டன் பகுதியில் சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமை வாய்ந்த ஒன்றாக உள்ளது"
இங்கு வருடம் தோறும் வீரபாண்டிய கட்டபொம்மனின் , பிறந்த நாளையொட்டி அப்பகுதியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
திறப்புவிழா அன்று வெளிவந்த செய்தி குறிப்பு
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய தமிழகத்தின் முன்னாள் ஆட்சியாளர் வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆறரை அடி சிலை வெலிங்டோனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் (எம்ஆர்சி) வளாகத்தில் இன்று (2012 செப்-26) திறக்கப்பட்டது. கட்டபொம்மன் தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து 18 ஆம் நூற்றாண்டின் தலைவராவார், மேலும் இப்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தவர்களில் முதன்மையானவர். இந்திய சுதந்திரப் போருக்கு ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் அவர் ஆங்கிலேயர்களுடன் போரை நடத்தினார். 1799 இல் கட்டபொம்மன் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அவரது கோட்டை அழிக்கப்பட்டது மற்றும் அவரது செல்வம் பிரிட்டிஷ் இராணுவத்தால் சூறையாடப்பட்டது. சிலையை திறந்து வைத்து பேசிய எம்ஆர்சி கமாண்டன்ட் ஜே எஸ் யாதவ், இது ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய ஒட்டுமொத்த இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் செலுத்தும் மரியாதை என்று கூறினார்.
இது அவரின் வீரத்தை பறைசாற்றும் விதத்தில் உள்ளது.
ஆகவே நாம் நம் சமுதாயத்தினர் அனைவரும் அவரது மாண்பை பெருமை படுதும் விதத்தில் நடந்து கொள்வோமாக ,களங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாமல் இருப்போம் .
வரும் சனவரி 3 2025 வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த நாள் விழாவினை மிக சிறப்புடன் கொண்டாட திட்டமிடும் அனைத்து அமைப்புகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
வெற்றிவேல்!!!
வீரவேல்!!!
வாழ்க கட்டபொம்மன் புகழ்!!!
வளர்க கம்பளத்தார் எழுச்சி!!!
குறிப்பு:
இணைக்கப்பட்டுள்ள படம் MRC வளாகத்தில் எடுக்கப்பட்டது (15.12.24 அன்று ) உடன் MRC ன் முத்திரை / கொடி அமைப்பு / இராணுவ முத்திரை இடம்பெற்றிருக்கும்.
-கவின் சின்னுசாமி (Mr.Ck)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக