மரபுகளை சமூகச் சீர்திருத்தத்தோடு கட்டுடைக்கும் துங்காவி பாளையக்காரர்
இந்திய விடுதலைப்போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரச்சமர் புரிந்த பாளையக்காரர்; தளி எத்தலப்பர்.
இவர் குறித்தான விரிவான வரலாற்று ஆய்வு நூலை நமது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கடந்த 2018 மே 19 மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களின் மண்ணின் மைந்தர் கால்நடைதுறை அமைச்சரால் வெளியிடப்பெற்றது.
இதைக் காலம் தாழ்ந்திக் கண்ணுற்ற 22 ஆவது தலைமுறையில் வாழும் துங்காவி பாளையக்காரரான ராஜராஜராஜேந்திர சீரஞ்சீவ சீலம நாயக்கர் (எ) நாகேந்திரன் என்பவர் பல்வேறு தேடல்களுக்குப்பிறகு வரலாற்று ஆய்வு நடுவம் வெளியிட்ட தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் நூலை கண்டிப்பாக வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதன் பேரில் நூல் இருப்பு இல்லாமையால் வேறு நபரிடமிருந்து பெற்று
இவருக்குக் கொடுக்கப்பட்டது.
இவரின் வரலாற்றுப் பின்னணியோடு தளி பாளையப்பட்டு வரலாறும் இணைந்திருப்பதும்,
தளி பாளையப்பட்டின் பெண்வாரிசாக துங்காவி பாளையம் இருந்ததையும், தற்போதும் அதற்குண்டான ஆவணங்களை மிகவும் பத்திரப்படுத்தி உயிர்ப்போடு வைத்துள்ளார்.
இவரின் தாத்தா பாளையப்பட்டு இருபதாவது தலைமுறை சிராஸ்தபதி யுவத்குமரன் எஜமான்ஸ்ரீ பெரியசாமி சீலமநாயக்கர் என்பதும்,
21 ஆவது தலைமுறையான இவரது தந்தையார்
சிராஸ்தபதி யுவக்குமரன் எஜமான் ஸ்ரீ மாணிக்கம் சீலம நாயக்கர் என்பதையும் ஆதாரத்துடன் விளக்கி உரைக்கிறார்.
மேலும், துங்காவி தனது வீட்டை (அரண்மனை) என்றே கூறி வருகிறார்.
தனது அரண்மனையில் தனது மூதாதையர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகளான வாள்களையும், வேல்களையும், சிறிய மற்றும் பெரிய அளவிலான போர்க்கருவிகளையும் இன்னமும் பத்திரப்படுத்தி பாதுகாத்து வருகிறார்.
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் எத்தனையோ பாளையப்பட்டுகள் இருந்ததாக வரலாறுகள் இருந்தாலும் இந்த துங்காவி பாளையப்பட்டில் மட்டுமேஆங்கிலேயருக்கு எதிரான போரில் இந்திய விடுதலைப்போரில் போர்க்கருவிகளை நாம் காண முடிந்தது.
இந்திய விடுதலைப்போரில் தமது பாளையப்பட்டு எதிர்த்து நின்று வீரச்சமர் புரிந்ததை பெருமையோடு பூரிப்போடு கூறுகிறார்.
சீலமநாயக்கன் என்பது தமது பாளையப்பட்டின் வம்சாவழிப் பெயர் என்றும் கூறுகிறார்.
மேலும், ஆங்கிலேயர்கள் தமது பாளையத்தில் வரி வசூலுக்கு வந்த போது பெரும் பஞ்சம் நிலவியது என்பதால் அந்த பாளையக்காரரை கைது செய்து ஆங்கிலேயர் கொண்டு செல்ல முயற்சித்த போது, அப்போதிருந்த பொதுமக்கள் தமது வீட்டில் இருந்த நெல்வளங்களையும்,
தாம் அணிகலன்களாக அணிந்திருந்த நகைகளையும் கழட்டிக்கொடுத்து வரிகளைப் பெற்றுக்கொண்டு
தமது துங்காவி பாளையக்காரரை கைது செய்வதிலிருந்து காப்பாற்றினர். அப்போது பாளையப்பட்டில் இருந்த மணியம் என்கிற கணக்குப்பிள்ளையின் ஒளிப்படத்தையும் வைத்துள்ளார்.
இதனால். துங்காவி பாளையக்காரர் அது முதல் பொதுமக்கள் மீது எந்தவிதமான வரிகள் விதிக்காமலும், நோய் நொடிகள் இல்லாமலும். பெண்களுக்கு அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை கொடுத்து ஆட்சி செய்து வந்ததாகக்கூறுகிறார்
21 ஆவது தலைமுறையான திரு. நாகேந்திரன்.
இவரின் இந்த உயிர்ப்பான பாளையப்பட்டின் வரலாற்றை ஆவணப்படுத்தவும், அதற்குண்டான ஆவணங்களை தயார் செய்து கொடுக்கவும் மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த 22 ஆவது தலைமுறை
துங்காவி பெரிய ஜமீன் ராஜராஜராஜேந்திர சீர!!ஞ்சீவ சீலம நாயக்கர் (எ) நாகேந்திரன் அவரின் முயற்சி வெற்றி பெற உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தென்கொங்கு நாட்டில் பாளையக்காரர்கள் எனும் ஆவணத்தில் மைவாடி , வேடபட்டி, சோத்தம்பட்டி, தொண்டாமுத்தூர் என அடுத்து வரும் கல்வியாண்டில் உயிர்ப்புடன் இருக்கும் பாளையக்காரர் எனுந் தலைப்பில் ஆவணப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவர் அய்யா திரு. வி.கே. செல்வராஜ் அவர்களிடம் தமது பாளையப்பட்டுகளின் பாரம்பரியத்தை ஆவணங்களுடன் காட்டினார்.
மரபுகளை சமூகச் சீர்திருத்தத்தோடு கட்டுடைக்கும் பாளையக்காரர் நாகேந்திரன் அவர்களை
வாழ்த்துவோம் பாராட்டுவோம்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக