சனி, 13 மார்ச், 2021

 கேள்வி : வீடு கட்டும் போது எந்தெந்த இடங்களில் செலவை குறைக்கலாம்?


என் பதில் :


முடிந்த அளவு வீடு கட்டும் பொருட்களை வாங்க ஒரு 5 இடத்தில் விசாரியுங்கள் .பொருளின் விலை குறைவாகவும் ,பொருள் தரமாகவும் இருக்கும் இடத்தில் வாங்குங்கள்.


தேவையற்ற பொருட்களை வாங்காதீர்கள்.


என்னென்ன பொருட்கள் தேவை மற்றும் எவ்வளவு தேவை என்பதை தெரிந்து வாங்குங்கள்.செலவு குறையும்.


நன்றி 


சிவக்குமார் V .K 

வீட்டுக்கடன் மற்றும் ரியல் எஸ்டேட் 

9944066681


வெள்ளி, 12 மார்ச், 2021

 கேள்வி : எந்த ஒரு முதலீடும் இல்லாமல் தன் மூளையை மூலதனமாக மாற்றி இந்த 2021-ல் நாங்கள் முன்னேற சிறந்த தொழில்கள் பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்ல முடியுமா?


என் பதில் :..


முதல்ல உங்க கைய குடுங்க சார். நீங்க தெரிஞ்சு கேட்டீங்களா அல்லது தெரியாம கேட்டீங்களா எனக்கு தெரியாது. ஆனா நீங்க கேட்டிருக்கற இந்த விஷயம் இன்னைக்கு இண்டஸ்ட்ரியில் ரொம்ப ஹாட். பணம் போடாமல் மூளையை மூலதனமாக்கி தொழில் செய்ய நிச்சயம் முடியும்.


பொதுவாக பிசினஸ் என்றாலே ஒரு பொருளை விலை குறைவான ஒரு இடத்திலிருந்து வாங்கி வேறு இடத்தில் விற்பனை செய்து லாபம் ஈட்டுவது என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை. காய்கறி கடை, கடை, துணிக்கடை, பாத்திரக்கடை போன்ற வழக்கமான தொழில்கள் இந்த வகையில் வரும்.


சம்பந்தப்பட்ட தொழிலுக்கு ஏற்ற மாதிரி முதலீடு தேவைப்படும். மேலும் கடை அமைந்திருக்கும் இடம், மக்கள் புழக்கம், எந்த வகையான வாடிக்கையாளரை கவர விரும்புகிறீர்கள் என்பதற்கேற்ப உள் அலங்காரம் போன்ற காரணிகள் இருக்கும்.


இது போல இல்லாமல், எந்த ஒரு பொருளையும் வாங்கி விற்காமல் ஒரு சேவையை இன்னொருவருக்கு வழங்கி அதன் மூலம் பணம் சம்பாதிப்பது மற்றொரு வகை பிசினஸ் மாடல். இன்சூரன்ஸ் முகவர், ரியல் எஸ்டேட் தரகர், திருமண புரோக்கர், டியூசன் சென்டர், கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம், இன்டர்நெட் வழங்கும் நிறுவனம், இ-காமர்ஸ் நிறுவனங்கள் போன்றவை இந்த வகையைச் சார்ந்தவை.


இந்த வகை விற்பனை மாடலுக்கு பொதுவாக பெரிய முதலீடு தேவையில்லை. மக்கள் கூடும் இடங்களில் பெரிய இடங்களில் கடை, கண்ணை கவரும் விளம்பரப் பதாகைகள், சீருடை அணிந்த பணியாளர்கள் தேவை இல்லை. ஆனால் மற்ற தொழில்கள் தருகிற அதே அளவு லாபத்தை முதலீடு இல்லாமல் அடையமுடியும். மற்றவர்களுக்கு முன்பாக எதையும் புரிந்து கொள்ளும் திறமை, கட்டாயம் இது உங்களுக்கு தேவைப்படக்கூடிய ஒன்று என்ற வகையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உத்தி, கொஞ்சம் தொழில்நுட்பத் திறமை, விடாமுயற்சி இவை இதற்கு தேவையானவை.


உங்கள் வீட்டிற்கு தினமும் கொண்டுவந்து பால் பாக்கெட் போட்டு விட்டு அதற்கு ஒரு ரூபாய் கமிஷன் வாங்கும் அடிப்படை சேவை ஆகட்டும், நீங்கள் விரும்பும் உணவை உங்கள் வாசலில் கொண்டுவந்து கொடுத்துவிட்டு செல்லும் ஃபுட் டெலிவரி சேவை ஆகட்டும், இது எல்லாமே இந்த selling the service என்ற இந்த வகையில் தான் வரும்.


இன்றைக்கு ஸ்டார்ட் அப் என்று சொல்லப்படுகிற தொடக்கநிலை தொழில்கள் பெரும்பாலும் இதை சார்ந்தவைதான். மூளையை மட்டுமே மூலதனமாக வைத்து பெரிய அளவில் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.


ஒரு சின்ன உதாரணம் மூலம் பார்க்கலாம். இன்று சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ஒரு பஸ் பிரயாண புக்கிங் செய்யக்கூடிய ஒரு தளம். இவர்கள் செய்தது எல்லாம் ஒரு வெப்சைட். விளம்பரம் செய்து அந்த வெப்சைட்டின் பெயரை மக்கள் மனதில் பதிய வைத்தது. இது மட்டும்தான் அவர்கள் செய்தது. பஸ் கம்பெனி வைத்து நடத்துபவர்கள் இந்த வெப்சைட்டில் உறுப்பினர்களாக ஆகிக் கொள்ள வேண்டும். பின்னர் அவர்களாகவே அந்த வெப்சைட்டுக்குள் போய், அவர்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள பயனாளர் கடவு சொல்லை பயன்படுத்தி இந்த ஊரில் இருந்து இந்த ஊருக்கு இத்தனை மணிக்கு பஸ், டிக்கெட் விலை இவ்வளவு, அந்த பேருந்து வசதிகள் குறித்த தகவல்கள் ஆகியவற்றை பதிவு செய்து விட வேண்டும். டிக்கெட் புக் செய்ய வருபவர்கள் தேடும்பொழுது இந்த தகவல்களை அவர்களுக்கு அந்த வலைதளம் காண்பிக்கும். இந்த தளத்தின் வழியாக ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டால் அந்தப் பணம் நேரடியாக பஸ் கம்பெனிக்கு போகாது. அதற்கு பதிலாக டிக்கெட் புக் செய்யும் தளத்தின் கணக்கிற்கு இந்த கட்டணம் வரவு வைக்கப்பட்டு விடும். அந்தப் பயணம் முடிவு பெற்றபின் அடுத்த வாரத்தில் 12.5 சதவீதம் கமிஷன் எடுத்துக் கொண்டது போக மீதி பணம் பஸ் கம்பெனி அக்கவுண்டிற்கு அனுப்பப்படும்.


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அட்வான்ஸ் புக்கிங் அது போதுமே பல நாட்களுக்கு முன்னதாக ஏன் பல மாதங்களுக்கு முன்னதாக கூட நடக்கும். கட்டணமாக செலுத்தப்பட்ட அத்தனை பணமும் பஸ் கம்பெனி அக்கவுண்டுக்கு போகாது பயணம் முடியும் வரை அந்த தளத்தின் அக்கவுண்ட்ல தான் இருக்கும் இது அவர்களுக்கு ஒரு பெரிய கையிருப்புத் தொகை. நாள் வட்டிக்கெல்லாம் கடன் வாங்கி பிசினஸ் செய்யும் இந்த காலத்தில் இத்தனை லட்சம் ரூபாய் எந்த முதலீடும் இல்லாமல் ஒருவருடைய அக்கவுண்டில் இருப்பது, அந்த தளம் நடத்துபவர்களுக்கு எவ்வளவு லாபகரமானது என்பதை யோசிக்க வேண்டும். திருப்பி கொடுக்கும்வரை அதை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்தி கொள்ள முடியும்..


புக் செய்த டிக்கெட்டை கேன்சல் செய்யும்பொழுது அதற்கு கேன்சல் கட்டணம் என்று ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இதுவும் பஸ் கம்பெனிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. இந்த வகையிலும் நல்ல லாபம்.


ஃபீட்பேக் என்பது பேருந்தில் பயணம் செய்தவர்கள் பயணம் முடித்தவர்கள் கொடுக்கும் தகவல்கள். புக் செய்யும் பொழுது இவைகளும் காட்டப்படும் என்பதால் இந்த தகவல்கள் நல்லவதமாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். எனவே பஸ் முதலாளிகள் இந்தத்தளம் நிர்வாகிகளிடம் எதையும் பேச முடியாது. ரேட்டிங் குறைத்து விட்டால் புக்கிங் அடிவாங்கும். ஒரே தேதியில் ஒரே வழித்தடத்தில் போகும் பஸ்களில் எது முதலில் காட்டப்பட வேண்டும் என்பதற்குக் கூட உள் அரசியல் இருக்கிறது.


ஒரு பஸ் வாங்கி இன்சூரன்ஸ் கட்டி, ரூட் பர்மிஷன் வாங்கி, பராமரிப்பு செலவு பார்த்து, இரண்டு டிரைவர்களை அமர்த்தி அவர்களுக்கு சம்பளம் கொடுத்து, அலுவலகம் அமைத்து அதற்கு பணியாளர்களை வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்து, சாதாரண நாட்களில் ஏற்படும் கட்டணம் குறைவு போன்ற இழப்புகளை சமாளித்து, அடிக்கடி உயரும் எரிபொருள் விலையை சமாளித்து, இதற்கெல்லாம் மேலாக அதே வழித்தடத்தில் இயங்கும் மற்றவர்களின் போட்டியை சமாளித்து ஒரு ஆம்னி பஸ் முதலாளி சம்பாதிப்பதை விட ஒரே ஒரு தளத்தை நிர்வாகித்து அதன்மூலம் அவர்கள் பெரும் லாபம் மிக மிக அதிகம். அதுமட்டுமில்லாமல் 0% ரிஸ்க். ஏதோ காரணத்தினால் அந்த தேதியில் பஸ் இயக்க முடியவில்லை என்றால் இந்த தளம் கவலைப்பட வேண்டியது இல்லை ஏனெனில் கட்டண பணம் அவர்களிடம் தான் இருக்கிறது. உடனே திருப்பிக் கொடுத்து பிரச்சினையை சரி செய்து கொள்ள முடியும்.


இதுதான் சேவையை விற்பது என்பது. யாரோ ஒருவர் ஒரு வழித்தடத்தில் பஸ் இயக்குகிறார். யாரோ ஒருவர் பயணிக்கிறார். இருவரையும் இணைக்கும் சேவையை மட்டுமே இந்த தளம் செய்கிறது. இந்த தளம் ஒரு குண்டூசியை கூட வாங்குவதும் இல்லை விற்பதும் இல்லை. ஆனால் மூளை விற்பனை மூலம் பணம் சம்பாதிக்கிறது. இதே போன்றதுதான் ஈகாமர்ஸ் தளங்களும். வலை தளத்தை நிர்வகிப்பதும், தொடர் விளம்பரம் மூலம் மக்கள் மனதில் தங்கள் தளத்தின் பெயரை நிற்க செய்வது மட்டுமே அவர்களின் வேலை.


இதில் இன்னொரு மிகப்பெரிய சாதகமான விசயம் என்னவென்றால் சரியாக போனியாக வில்லையென்றால் பெரிய நட்டமில்லை. நீங்கள் பெரிய முதலீடு எதுவும் போடாததால் இதை தூக்கி போட்டுவிட்டு வேறு வேலையை பார்க்கலாம்.

நன்றி ..என்றும் அன்புடன் உடுமலை சிவகுமார் ..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com..
பொதிகை ப்ரோமொடேர்ஸ் 
ரியல் எஸ்டேட் அண்ட் வீட்டுக்கடன் 


வியாழன், 11 மார்ச், 2021

 


கொண்டறிங்கி கீரனூர் சிவன்  கோவில் பயணம் ..

இரவு 10 மணியளவில் மலைஅடிவாரத்திற்கு சென்றபொழுது பக்தர்கள் கூட்டம் அளவாக தான் இருந்தது ..முதல் முறை செல்வதால்  மலை ஏறுவதற்கு முன் தண்ணீர் குவளை யுடன்  ஏறத்துவங்கினேன் ..மலைப்பாதை போக போக செங்குத்தாக  செல்லும் பொழுதே கொஞ்சம் மனதில் ஒரு வித பயஉணர்வு இருந்தது ..போக போக பயஉணர்வு நீங்கியது .இரவு .நடப்பதற்கு ஏதுவாக மலைப்பாதையில் கைப்பிடி இருந்தது பாதுகாப்பாகவும் இருந்தது ..


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ளது கொண்டரங்கி மலை. இந்த மலை மீது பாண்டவர்கள் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது . இதில் இருந்து கொண்டரங்கி மலை வரலாறு மிகவும் தொன்மையானது என்பதை நம்மால் உணர முடிகிறது. லிங்க வடிவில் அமைந்துள்ள இந்த மலை அடிவாரத்தில் கெட்டிமல்லீஸ்வரர் என்னும் சிவன் கோவில் உள்ளது. 


இந்த மலையில் எவர் ஒருவர் தவம் செய்தாலும் அவரின் வாழ்க்கை நிலையே மாறும் என்று கூறப்படுகிறது. உங்களுக்கும் நேரம் கிடைக்கும்பொழுது சென்று வாருங்கள் ..அருமையான மலைக்கோவில் ..கொண்டறங்கி கீரனூர் மல்லிகார்ஜுனர் சுவாமி மலை கோவில் .


Lord Malligarjuna Swamy Temple also referred as Kondarangi Hills which is situated in Kondarangi Keeranur, which has a bolt upright setup and resembles in the form of conical shape and it is about 1165.86 meters (3825 Feet) high. An astonishing Rock cut Temple is situated on the top where we can get a pure divine sanction and blessings from Lord Shiva in the name of Malligarjuneswarar.


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681🥰🥰📚📚✍️✍️🙏🙏

புதன், 10 மார்ச், 2021

திரு சிவகுமார் V. K. அவர்களுக்கு...

 திரு சிவகுமார் V. K. 

அவர்களுக்கு... 


🌹🌹🌹 உங்களது எழுத்துக்களை வைத்து

உங்களது எண்ணங்களை

யோசித்து பார்த்தேன்..

இது போல தொடர்நதுஎழுத வேண்டுமென யாசிக்க சொல்லியது என் மனம்... 🌹🌹🌹


♦️ உங்களது நூலக அறிவு புயல் காற்றாய்.._♦️

♦️ சமூக பார்வை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிற

கடல்அலைகளின் ஆவேசம்போல ♦️

 ♦️ சுஜாதாவின்  எந்திரவியல் _எழுத்து வன்மை கலப்பு♦️ 

♦️ மாலனின் அரசியல்  நெடிவாசம் இதமாய்..♦️   

♦️ கி.ராஜநாரயணனின்

கரிசலங்காட்டு நடை தென்றலாய்..♦️

♦️ பாலகுமாரனின் முழுமையான நெடும் வீச்சு ♦️

♦️ மறைமலை அடிகளாரைப்போல

 நீண்ட விளக்கங்கள்♦️

♦️ பெண் எழுத்தாளர்களின் மனதாய்மாறி பெண்ணியத்தை போற்றும் புரிதலுடனான பதிவுகள் பூவாடை காற்றாய்..♦️


♦️ பற்பல விஷயங்களுக்கு..

இனம்புரியா 

ஒரு இளம் வெறித்தனம் இழையோடுகிறது கூதலாய்...♦️


♦️  தீராத காதலாய்

உருவமில்லாததை உணர்வது போல... வெற்றிபெற்ற உணர்வின்பால் வருகிற அமைதி ஆங்காங்கே ...

அது தேவைப்படுகிற இடங்களில் நளின வார்த்தைகள்...♦️


♦️ வாழ்வியலை அப்படியே வார்த்து தந்துவிட வேண்டுமென்கிற வேட்கை...♦️


♦️ முழுமையாக எழுதிவிடுவது என்னால் முடியாது உறவே..♦️


♦️ என்னை போன்றோரின் உள்ளன்பு உம்மை மென்மேலும் எழுததூண்டட்டும்.. .♦️


உடுமலையோடு சேர்த்து

கம்பளத்தையும் கொஞ்சம் இன்னும் விரிவாக விதைக்க வேண்டுமாய்...


என்றென்றும் அன்புடன்


கே .என் .நாகராஜன் .vpk 



🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

💐💐💐🌷🌷🌷🌹🌹🙏🏻🙏🏻

திங்கள், 8 மார்ச், 2021

திருமூர்த்தி மண்ணு

 இன்று மாலை ...முன்னாள் துணைவேந்தர் .பி .கே .பொன்னுசாமி ..அவர் எழுதிய திருமூர்த்தி மண்ணு ..சென்னையில் புத்தக திருவிழாவில் வாங்கிய முதல் நூலை ..உடுமலைபேட்டையில் அவரின் இல்லத்தில் அவரிடம் காண்பித்து அவரின் கரங்களில் பெற்ற பொழுது ..மகிழ்ச்சி  ..நூலில் அவர் எழுதிய வட்டார சொல்லுடன் படித்த பொழுது ..60 வருடங்களுக்கு பின் சென்ற காலங்கள் ..அற்புதமானவை இருந்தது ..இன்னும் படித்துக்கொண்டு உள்ளேன் ...படித்து முடித்துவிட்டு நூலை பற்றி ..பின்னூட்டம் எழுதவேண்டும் ...வாசிப்பில் தற்பொழுது திருமூர்த்தி மண்ணு ..🥰🥰🥰📚📚✍️✍️✍️


வெள்ளி, 5 மார்ச், 2021

 கேள்வி : செயலற்ற வருமானம் (Passive income) என்றால் என்ன? எப்படி நாம் அதனை அடையலாம்?


என் பதில் :


வயது முதிர்ந்து, வருமானம் இன்றி தடுமாறும்போது, பல நாடுகளில் அரசின் சார்பில் 'சமூக பாதுகாப்பு' (social security) ஆதரவு உண்டு. இந்தியாவில் இல்லை.


வருமானத்தில் இரண்டு வகைகள்.


வணிகம் அல்லது வேலை மூலம் வரும் செயல் வருமானம் (Active Income). வேலையை நிறுத்தி விட்டால் செயல் வருமானம் நின்று விடும்.

வேலை செய்கிறாமோ, இல்லையோ, ஓய்வில் இருந்தாலும் தானாக வரும் வருமானம் செயலற்ற வருமானம் (Passive income).

சரியான முதலீட்டை ஒரு தடவை செய்தாலே போதும்; கவுன்சிலர் வரும்படி போல, மாதம்தோறும் வந்து கொண்டே இருக்கும்.


சில உதாரணங்கள்:


நல்ல ஷேர் முதலீட்டில் தவறாமல் கிடைக்கும் டிவிடெண்ட்.

கடனுக்கு கிடைக்கும் வட்டி

வங்கி டெபாசிட் வட்டி

பணி ஓய்வு பென்ஷன்

LIC போன்ற நல்ல நிறுவனங்களில் மேற்கொள்ளும் annuity பென்ஷன் திட்டங்கள்.

வீடு, வணிக வளாகங்கள் கட்டி விட்டு அதில் கிடைக்கும் வாடகை.


செயலற்ற வருமானத்துக்கு சில விதிகள் உண்டு. முதல் விதி..


## மாதந்தோறும் வர வேண்டும்.


நாம் செய்யும் ஒரு முதலீடு பிற்காலத்தில் பன்மடங்காகலாம். (உம்: ரியல் எஸ்டேட்)

ஆனால் அது செயலற்ற வருமானத்துக்கு உதாரணம் அல்ல !

மாதம்தோறும் நமக்கு வருமானம் வேண்டும்!

## விலை வீக்கத்துக்கு (Inflation) ஏற்ப மாற வேண்டும்.


உங்களுக்கு வயது 60. குடும்பத்தில் இரண்டு பேர். 2020ல், உங்கள் குடும்பத்துக்கு 20,000 ரூபாய் போதுமானதாக இருக்கலாம்.

இதுவே இருபது வருடங்கள் கழித்து, உங்களது 80வது வயதில் அதே இரண்டு பேருக்கு 20,000 ரூபாய் போதுமா?.

## ஆண்டுதோறும் அதிகமாக வேண்டும்.


பொதுவாக ஆக்டிவ் வருமானம் ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வரும். (உம் : உங்கள் சம்பளம்.)

செயலற்ற வருமானமும் அதுபோல கூடவேண்டும்.

இருப்பதில் வாடகை வருமானம்தான் செயலற்ற வருமானத்தில் முதல் தரம். விலைவாசி கூடினால் வாடகையும் கூடும்.

மாறாக வங்கி டெபொசிட்டுக்கு வரும் வட்டி அப்படியே இருக்கும். சமயத்தில் குறைந்தும் விடும்.

மிக முக்கியமாக மக்களுக்கு செயல் வருமானம் குறையும் வருடங்களில், செயலற்ற வருமானமான டெபாசிட் வட்டியும் குறையும். இந்த வருடத்தையே ஒப்பிட்டுப் பாருங்களேன்.


பண வீக்கம் குறைந்தால், விலைவாசி குறையும்,

## இப்பொது செயலற்ற வருமானத்தை சேமிக்க வேண்டும் !


சம்பளதாரர்களுக்கு ஆக்டிவ் வருமானம் 60 வயதில் நின்றுவிடலாம். IT வேலைகளில் அதற்கும் முன்னாலேயே.

இப்பொழுது 65 வயதில் இருக்கும் இந்தியர்களில் மிக பெரும்பான்மையோர் 85 வயதை பார்த்துவிடுவார்கள் என்பது ஒரு மருத்துவ கணிப்பு.

பணி ஓய்விற்குப்பிறகு இப்படி இருபது, முப்பது வருடங்கள் வரை வாழ வேண்டி வரும்.

தேவையில்லாமல் கடனில் வாகனம். வீடு என்று வாங்காதீர்கள்.

வரிச்சலுகை, கம்பெனி தரும் பெட்ரோல் சலுகை போன்றவை இல்லையென்றால் வாடகை வாகனங்களை பயன்படுத்துங்கள்.


## செலவை கட்டுப்படுத்துங்கள்


அளவுக்கு அதிகமாக காப்பீடு எடுத்துக்கொள்ளாதீர்கள்.

சம்பாதிக்கும் ஒருவர் மரணம் அடைந்தால், அவர் குடும்பம் திணறக்கூடாது என்பதற்கே காப்பீடு.

சம்பாதிப்பவர் உயிருக்கு மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும்.

## இன்சூரன்ஸ் ஒரு சேமிப்பு அல்ல.


40000 ரூபாய் சம்பாதித்தால் மாதம் 10000 ரூபாய் நிப்டி பண்டில் போடுங்கள். ஓய்வில் இரண்டு கோடிக்கும் மேல் கிடைக்கும்.

25 வயதில் வேலை செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். அந்த வருடம் 100% உங்களுக்கு செயல் வருமானம்தான். அதில் சிறிது சேமிக்க வேண்டும்.

## வருமானத்தில் 30% சேமியுங்கள்


இப்படி சில வருடங்கள் சேர்த்தால் அந்த சேமிப்பிலிருந்து மாதம் தோறும் செயலற்ற வருமானம் வரும். அதையும் சேமிக்க வேண்டும்.

50 வயதில் நின்று பாருங்கள்.

இப்போது உங்கள் செயல் வருமானத்தில் 25 சதவீதமாவது, உங்களது செயலற்ற வருமானம் வர வேண்டும்.

அப்பொழுதுதான், 60 வயதில் அது 50 சதவீதம் என உயரும்.

கவனம் : இறுதி மாத சம்பளம் ஒரு லட்சம் என்றால் அடுத்த மாத பென்ஷன் 40,000 தான்!

சிலர் சரியாக திட்டமிட்டு, இந்த செயலற்ற வருமானம் (பென்ஷன் உட்பட) இறுதி மாத சம்பளத்துக்கு ஈடாக ஒரு லட்சம் உறுதி செய்கிறார்கள்!

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

கேள்வி :  இளம் வயதில் பழகும் எந்தெந்த பழக்கங்கள் என்னை பெரிய பணக்காரர் ஆக்கும்?


என் பதில் :..எனக்கு தெரிந்த அண்ணன் ஜெபசிங், வயது 55...அளித்த பதில் 

எனக்கு தங்க தட்டுல சாப்டனும்னு எல்லாம் துளியும் ஆசை இல்லை.


நம்மள நம்பி கடன் கேட்குறவங்களுக்கு இல்லனு சொல்லாத அளவுக்கு,குடுத்த பணத்தை அவங்க திரும்ப தரணும்னு எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு அளவு பணம் இருந்தால் போதும் அதை சம்பாதிக்க வழி சொல்லுங்கள் என்று கேட்பவர்களுக்கான பதிவு இது.


இந்த பதில்  எலான் மஸ்க் பற்றியது இல்லை. எனக்கு தெரிந்த சீரியல் செட், ஒலியும் ஒளியும் மற்றும் பந்தல், சேர் வாடகை தொழில் செய்யும் ஒரு அண்ணாவைப் பற்றியது.


வயது 55 தான். கல்வி அறிவி 5ம் வகுப்பு. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்த குடும்பம். இப்பொழுது மாத வருமானம் பல லட்சங்கள், பொருட்கள் கையிருப்பு சில பல லட்சங்கள் (குறைந்த பட்சம் 50 லட்சம் தேறும்). 10 நபர்களுக்கு தினம் 1200 ரூபாய் சம்பளம் வழங்கும் முதலாளி.


ண்ணே எப்படிண்ணே இவ்வளவு பெரிய ஆளாகுனீங்க?


இந்த தொழில் உங்கள் குடும்ப தொழிலும் இல்லை. உங்களுக்கு சப்போர்ட்டும் இல்லை உங்க அப்பா பண உதவியும் செய்யல. அப்புறம் எப்படிண்ணே பணக்காரனாகுனீங்க என்று கேட்கையில் அந்த அண்ணா இந்த பதிலை தான் சொன்னார்.


பள்ளிக்கூடத்துக்கு போகவே எனக்கு பிடிக்காதுமா. அம்மா முகத்தை கூட பார்த்தது இல்லை அக்கா தான் வளர்த்தாள். பள்ளிக்கூடத்துக்கு போகலனா அடி அடினு அடிப்பா. நான் குளத்துக்குள்ள போய் உட்கார்ந்துடுவேன். 15 வயசு இருக்கும்மா பொள்ளாச்சிக்கு ஒரு மளிகை கடைக்கு வேலைக்குப் போனேன். கூட்டுட்டு போன அண்ணா உன் சாதிய சொல்லாதல வேலை குடுக்க மாட்டானுவ, வேற சாதினு சொல்லிக்கனு சொல்லியே கூட்டுட்டி போனாரு. ஏழு எட்டு வருசம் வீடு கடைனு வாழ்ந்துட்டேன்.


ஊருக்கு வந்ததும் பந்தல் போடுறவங்க கூட கம்பு நட தான்மா போனேன். ஆனால் எனக்கும் நாலு பேருக்கு சம்பளம் குடுக்கனும்னு ஆசையா இருந்துச்சு. எல்லாரும் எட்டு மணி நேரம் வேலை செய்தால் நான் நாள் பூரா ஓனர் கூடவே சுத்துவேன் தொழில் கத்துக்கிட்டேன் சின்னதா நாலு பெஞ்ச் 30 டியூப் லைட் மட்டும் வாங்கி தொழிலைதொழிலை துடங்கினேன்.


எல்லாரும் ஏழாயிரம் ரூபாய்க்கு ரெண்டு நாள் ராத்திரி மட்டும் லைட் எரிய விட்டானுங்கனா நான் அதே ஏழாயிரம் ரூபாய்க்கு 5 நாள் லைட் எறிய விடுவேன். இப்படி தான் வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள்.


சூப்பர்ண்ணே. ஜாதியை காண்பித்து உங்கள யாரும் துரத்தலையா?


அட நீ வேறம்மா. கோயில்களில் ஆர்டர் தாரேனு கூப்டுவாங்க, அப்புறம் ஜாதியை தெரிஞ்சிகிட்டு போயிட்டு வாங்க தம்பினு அனுப்பி விட்ருவாங்க. தூத்துக்குடியை பொறுத்தவரைக்கும் ஆலயத்தில் சீரீயல் எறியனும்னாலே ஜாதி வேணும்மா.


அப்புறம் எப்படிண்ணே இப்படி வந்தீங்க?


அசன ஆர்டர் எல்லாம் பெரிய பெரிய ஆர்டர் அதை எனக்கு தர மாட்டாங்க. இந்த லெந்து நாட்களில் வீட்டு ஜெபம் நடத்துவாங்க ஒரு 200 சேர் போட சொல்லுவாங்க. அந்த சின்ன சின்ன ஆர்டரை நல்லா செஞ்சி குடுப்பேன்மா. அப்படியே இப்ப கொஞ்சம் கொஞ்சமா அவங்க வீட்டு விசேசங்களுக்கும் ஆர்டர் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.


ம்ம்ம்ம்ம் மனிதர்கள் இப்படித்தான்ல?


எப்படிண்ணே பைசா எல்லாம் கலெக்‌ஷன் ஆகிடுமா?


இழுத்தடிப்பாங்க இந்தா தாரேன் அந்தா தாரேனு.


டென்சன் ஆகாதாண்ணே?


தொழில்னு வந்தால் வளைந்து நெளிந்து தான்ம்மா போகனும். இந்தா போன வாரம் மேலத் தெருவுல அந்த சார் வீட்ல ஜெபக் கூட்டம்னு 300 சேர், 22 லைட் கட்டுனேன் இன்னும் துட்டு தரல இனியும் தர மாட்டாரு. அதுக்காக அவரை பகைத்துக் கொள்ளக் கூடாது. இன்னைக்கு இதை விட்டு பிடிச்சா தான் நாளைக்கு சர்ச்ல கன்வென்ஷன் வந்தால் நமக்கு ஆர்டர் தருவாரு. இந்த 300 சேர் வாடகைக்கும் சேர்த்து கன்வென்ஷன்ல கலெக்சன் பண்ணிக்க வேண்டியது தான் என்றார்.


இன்று பணக்காரராக உலா வரும் இந்த அண்ணனிடம் கற்றுக் கொண்டது இது தான்.


தொழிலாளியாக இருக்கும் வரைக்கும் நம்மால் பணக்காரனாக முடியாது. பணக்காரனாக விரும்பினால் தொழில் தான் சிறந்தது. தொழில் ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்.

ரெண்டாவது உழைப்பு. இராப்பகல் பார்க்காமல், கடிகாரத்தை பார்க்காமல் உழைக்க வேண்டும்.

மூன்றாவது எவரையும் பகைத்துக் கொள்ளாமல் வளைந்து நெளிந்து செல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில் தொடங்கிட்டு முரண்டு பிடித்தால் தொழிலை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.

இளம் வயதில் ஏழ்மையில் இருந்து பணக்காரனாகிய அந்த ஒரு அண்ணனை தான் எனக்குத் தெரியும். அண்ணாவிடம் கேட்டதை எல்லாம் எழுதிவிட்டேன்.


முயற்சி செய்து பாருங்கள். நம்மிடம் கடன் என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு வாழ்ந்துட்டோம்னாலே அந்த வாழ்க்கை சந்தோசமா தானே இருக்கும்?



 

சனி, 27 பிப்ரவரி, 2021

 கம்பளத்து கவிஞர் ....உதயகுமார் ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் 


Udhayakumar Raijakampalam is celebrating your special day.


கடந்த 21.2.2021 அன்று திண்டிவனம் L K Towers ல் நடைபெற்ற

மௌவல் கவிமன்றம் மற்றும்

அறக்கட்டளையின்  துவக்கவிழா

மற்றும் புத்தக வெளியீட்டுவிழா  

மற்றும் விருது வழங்கும்விழா  என

முப்பெரும் விழாவிற்க்கு 

தலைமையேற்று வழிநடத்தி  சென்ற

மதிப்பிற்குரிய கவிஞர் வெற்றிப்பேரொளி அய்யா அவர்களுக்கும்,  சிறப்பு விருந்தினராக 

கலந்துகொண்ட  அண்ணாமலை

பல்கலைக்கழக பேராசிரியர்

தங்கையன் அவர்களுக்கும்,  

மருத்துவ கவிஞர் கவிநிலா மோகன் 

அவர்களுக்கும், சிரம் தாழ்ந்த  

வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன் ...

அது சமயம் அவர்களது திருகரங்களால் 

கவிஞர் கண்ணதாசன் விருது 

மற்றும் தூவலின் சாரல் என்ற 

புத்தகத்தில் என் கவிவரிகள் 

இடம் பெற்றதற்க்கான சான்றிதழை

பெற்றுக் கொண்டதில் 

மட்டற்ற  மகிழ்ச்சி அடைகிறேன்...

விழாவை  சிறப்பிக்க வந்த 

கவிஞர் தனுஷ்கோடி அய்யா,

சுரேஷ், நடு நாட்டு தமிழன்,

தேவசேனா, மோகனகவி,

சிங்கை கார்முகிலன் மற்றும் அனைத்து 

கவி உறவுகளையும்  சந்தித்ததில்

மிக்க மகிழ்ச்சி...

இப்பொழுது உள்ள காலகட்டத்தில்

ஒருவிழாவினை நடத்துவது  என்பது

அவ்வளவு எளிதான விடயம்  இல்லை 

என்று அறிந்த போதிலும் சற்றும் 

தயக்கம்  காட்டாமல் இரவு பகல் பாராது தன் சுயவேலைகளை எல்லாம் 

ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் நலனுக்காக தன்னை அற்பணித்துகொண்டு சீரும் சிறப்புமாக 

இவ்விழாவினை நடத்திய 

மௌவல் அறக்கட்டளையின் நிறுவனர்

திருமதி. சிவசங்கரி ஏந்திழை அவர்களுக்கும், அதற்க்கு  உறுதுணையாக இருந்து வழிநடத்தி  வரும் மௌவல் அறக்கட்டளையின்

தலைவர் அன்புக்கினிய  சோலை ராஜகுமாரன் சகோ அவர்களுக்கும் 

நன்றி என்ற ஒற்றை சொல்லில் சொன்னால் அது 

மிகையாகாது....

அதுமட்டுமல்லாமல் அருசுவை விருந்து 

வைத்து அன்பில் இணைந்த ஒரு 

கவிக்குடும்பமாக திகழ்ந்த  அந்த 

தருணத்தில் அகம் மலர கண்டேன்

பிரிய  மனமின்றி நகர்ந்தேன் 

பிரியாதொரு விழாவில் மீண்டும்

சந்திப்போம் என்று ...

என்றும் அன்புடன் உதயகுமாரன்...


கம்பளத்து கவிஞர் ....உதயகுமார் ...க்கு ,

உடுமலைப்பேட்டை கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் 

புதன், 24 பிப்ரவரி, 2021


🌈ஒட்டன்சத்திரம் ..🌈 புது காளாஞ்சி பட்டி  ..🌈.என் அருமை மகள் .⛱️


🥰ஜெ .ராகவி B .E .MBA -எஸ் .பொன்ராம் -B .Sc .,D .Horti..,DGT .🥰,,

(உதவிதோட்டக்கலை அலுவலர் , சிவகங்கை)

நாள் :25-02-2021  இடம் :புலங்கட்டுநாயக்கனூர்🤝👍  



🌈கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் சார்பாக திருமண வாழ்த்துக்கள் 

உடுமலைப்பேட்டை 👍👍🥰🥰🌱🌳





ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

 டேபிள் மேனர்ஸ்...

இன்று நாம் பார்க்க போகும் சப்ஜெக்ட் டேபிள் மேனர்ஸ். இது மிகவும் முக்கியமான ஒன்றூ. சாதாரண ரெஸ்டாரன்டுக்கு போனாலும் நம் டேபிள் மேனர்ஸை கண்டிப்பாக பின்பற்றினால் மிகவும் நல்லது. முதலில் நம்மை டேபிளுக்கு அழைத்து சென்று அமர வைத்த உடன் நாம் டேபிளில் கானும் விஷயம் நேப்கின், ஃபோர்க், ஸ்பூன், கத்தி. முதலில் நாப்கினை மடியில் போட்டு கொள்ளவும். சிறியவர்களுக்கு கழுத்தில் சொருகிவிட்டு ஹாங்கிங் நாப்கின் போல் கட்டவும். டேபிளில் இருக்கு கத்தி,ஃபோர்க், ஸ்பூன் இடம் மாற்றாதீர்கள். முதலில் புஃபே சாப்பாடு பற்றி பார்ப்போம். முதலில் டேபிளில் ஒரு குவார்ட்டர் பிளேட் இருக்கும் இது பிரட், நான் போன்றவை வைக்கவேண்டும். முனியான்டி விலாஸ் மாதிரி எலும்பு, மீன் முள்ளை அதில் வைக்க வேண்டாம். இது மிக முக்கியம். நிறைய ஹோட்டல்களில் சாப்பிட்ட பிளேட்டை ரீஃபில் மற்றும் அடுத்த சர்விங்குக்கு அனுமதிக்க மாட்டார்கள். அதனால் சாப்பிட்ட பிளேட்டை டேபிளில் வைத்து ஸ்பூன் ஃபோர்க் கத்தி மட்டும் டேபிளில் எடுத்து தனியே வைத்து செல்லவும். புது பிளேட்டை எடுத்து திரும்பவும் லைனில் வரவு. கொஞ்சம் சாம்பார் மட்டும் தானே என்று லைனில் நிற்காமல் ஜம்ப் செய்யாதீர்கள். முதல் சூப் அல்ல்து சாலட் தனியே எடுத்து வந்து சாப்பிடுங்கள். புஃபே வைத்த காரணமே உணவை வேஸ்ட் பண்ணக்கூடது என்று தான். அதனால் சாலட், தந்தூரி, ஸ்டார்ட்டர்ஸ், நான், ரைஸ் எல்லாம் பரங்கிமலை போல் குவித்து எடுத்து வருவதை தவிர்க்கவும். முதலில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்த்து பிறகு பிடித்த உணவை மட்டும் நிறைய எடுத்து சாப்பிடவும். நான் ரொட்டியை சின்ன பிளேட்டில் எடுத்து வரவும். கடைசியில் டெஸர்ட்ஸ் அல்ல்து ஐஸ்கிரிமை அங்குள்ள சின்ன போல் அல்ல்து கப் அல்ல்து சிறிய தட்டுகளில் எடுத்து வந்து சாப்பிடுங்கள். சாப்பாடு தட்டில் எடுக்காதீர்கள், சிலர் குடுமபத்திற்க்கும் மொத்தமாக எடுத்து வந்து பிரித்து சாப்பிடுவார்கள் அது தவறூ. ஒவ்வொரு முறையும் பிளேட் மாற்றூம் விஷயம் நீங்கள் புஃபேக்கு சென்றால் மட்டுமே. ஒரு பார்ட்டி மற்றூம் கல்யான வீடுகள் ஹோட்டலில் நட்ந்தால் ஒரே பிளேட் தான் எடுக்க வேண்டும் இல்லயென்றால் நீங்கள் மூன்று பிளேட் மாற்றீனால் மூன்ற் ஆட்களுக்குகான சார்ஜ் அவர்களுக்கு போட்டு விடுவார்கள்.

ஃபோர்க் ஸ்பூன் கீழே விழுந்தால் எடுத்து வைத்துவிட்டு வேறு ஒன்றை கேட்கவும். தயவு செய்து காலியாக இருக்கு டேபிளில் இருந்து எடுக்கக்கூடாது. அது போக கம்ஃபோர்ட் இல்லயெனில் தயவு செய்து கையில் எடுத்து சாப்பிட தயங்காதீர்கள். அதே சமயம் ஒவ்வொரு சர்விங்குக்கு செல்லும் போது இடது கையில் எடுத்து பொடுங்கள் எச்சில் கையில் கரண்டிகளை எடுக்காதீர்கள். உணவு எடுத்தவுடன் தயவு செய்து மூடியை மூடவும். சுரன்டி, வழித்து எந்த பதார்த்தையும் எடுக்காதீர்கள். கேளுங்கள் ரிபிளனிஷ் செய்வார்கள்.சாப்ஸ்டிக் மூலம் சாப்பிட தெரிந்தவர்கள் மட்டும் வாங்கி சாப்பிடுங்கள் நிறைய பேர் அதை வைத்து சாப்பாடுடன் கொலைவெறியோடு சன்டை போட வேண்டாம்.

நேப்கின்னில் கை துடைத்துகொண்டு ஃபிங்கர் போல் கேளுங்கள். இல்லெயனில் வாஷ் ரூம் சென்று கை கழுவுங்கள். முடிந்த வரை 1 மணீ நேரம் மினிமம் இல்லயெனில் புஃபே வேஸ்ட் தான். பிரேக்ஃபாஸ்ட் புஃபே போது தோசை, ஆம்லெட் சொல்லிவிட்டு வந்து அமர்ந்தால் போதும் அங்கேயே நிற்க வேண்டாம். மினரல் வாட்டர், காஃபி, டீ, குளிர்பானங்கள், ஜூஸ் வைகைகள் எக்ஸ்ட்ரா..............

கடைசி டிப்ஸ் - நான் மதுபானம் அருந்தவதில்லை. ஒவ்வொரு சமயம் நண்பர்களூடன் பாருக்கோ சென்றால் அவர்கள் ஒரு இரண்டு ஸ்மால் அடிப்பதற்க்கு முன் நான் ஒரு அரை கிலோ சைடு டிஷ் சாப்பிட்டுவிடுவேன். ஒரு சமயம் லீமெர்டியன்  ஹோட்டலில் 6 பேர் போனோம். நான் வழக்கம் போல் குடிக்கமாட்டேன் என்பதால் எனக்கு பிடித்த மாக்டெயில் ஆர்டர் செய்ய சொன்னார்கள் நான் இடது மெனுவை பார்க்காமல் வலது சைடில் காஸ்ட்லியான் ஒரு ஜுஸை அர்ட்டர் செய்தேன் சுமார் 1300 ரூபாய். மொத்த பில் 2900. ஐந்து பேர் ஃபாரின் ஸ்காட்ச் மொத்தமும் சேர்த்து 1400 நான் குடித்த மாக்டெயில் 1300 டாக்ஸ் சேர்த்து 2900 வந்தவுடன் ஷாக் ஆன பிரன்ட்ஸ் அதில் இருந்து என்னை அவகள் உற்சாகபானம் அருந்தும் போது கூட்டி போவதில்லை........1300 .. மகா கேவலமாக கழுவி ஊத்தினமாதிரி இருந்தது இன்னொரு வேதனை...


செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் பதற்றம் வேண்டாம்..

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் பதற்றம் வேண்டாம்..
கார்கள் தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட பிரேக்குக ளுடன் வருகின்றன. மேலும், பிரேக் உள்ளிட்டவை சரியாக இயங்கு கிறதா என்பது குறித்து எச்சரி்க்கை செய்யும் வசதிகளும் கார்களில் இருக்கிறது.
ஆனாலும், டாப் வேரியண்ட் கார்களில் மட்டும் இந்த நவீன பிரேக் சிஸ்டம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கார்களில் சில சமயம் தொழில்நுட்ப கோளாறுகளால் பிரேக் பிடிக்காமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எவ்வளவு திறமை வாய்ந்த டிரைவராக இருந்தாலும் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் காரை கன்ட்ரோல் செய்வது மிக கடினமான விஷயமாக இருக்கும். அது போன்ற அவசர சமயத்தில் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.
காரில் செல்லும்போது பிரேக் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவதுதான். உடனடியாக ஹெட்லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.
கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வந்து விடுங்கள். பின்னர் காரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன் முதல் கியருக்கு வந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள். பதட்டத்தில் கார் வேகமாக செல்லும்போது ஹேண்ட் பிரேக்கை பிடித்துவிட வேண்டாம்.

அவ்வாறு செய்தால், ஹேண்ட் பிரேக்கின் கேபிள் அறுந்துவிட வாய்ப்புண்டு. மேலும், காரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் ஹேண்ட் பிரேக்கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வியாழன், 4 பிப்ரவரி, 2021

 கேள்வி : விவாகரத்து என்றதும் பலருக்கும் பெண்கள் ஞாபகம்தான் வரும். விவாகரத்தான பெண்ணின் எதிர்காலம் என்னவாகும் ?


என் பதில் ...


விவாகரத்து என்றதும் பலருக்கும் பெண்கள் ஞாபகம்தான் வரும். விவாகரத்தான பெண்ணின் எதிர்காலம் என்னவாகும்? என்று கவலைப்படுவார்கள். அத்தகைய பெண்கள் மீது அனுதாபமும் கொள்வார்கள். ஆனால் எல்லா விவாகரத்துக்களிலும் ஒரு ஆணும் பாதிக்கப்படுகிறார். அந்த ஆணை நினைத்துப்பார்த்து யாரும் பரிதாபப்படுவதில்லை.


விவாகரத்தில் ஒரு பெண் பாதிக்கப்படுவது போன்று ஒரு ஆணும் பாதிக்கப்படத்தான் செய்கிறார். பெண்ணின் அளவுக்கு ஆணுக்கும் அது சோகத்தை தரவே செய்யும். கவலை, தனிமை, சமூக நிந்தனை, நிம்மதி இழப்பு போன்றவை ஆண்களுக்கும் உண்டு.


குடும்பம் என்றதும் அன்பு, கடமை, பாசம், அரவணைப்பு, அனுசரணை போன்ற அனைத்தும் நினைவுக்கு வரும். இவை அனைத்தும் பெண்களிடம் இருந்துதான் கிடைக்கும். பெண்கள் மட்டுமே அதற்கு பொருத்தமானவர்கள் என்று கருது கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் ஆண்- பெண் இருபாலருக்கும் பொருத்தமானவை. ஆண்களிடம் இருந்தும் அன்பு, பாதுகாப்பு, அனுசரணை போன்றவை கிடைக்கும்.


விவாகரத்து மட்டுமல்லாது வாழ்க்கையில் ஏற்படும் எல்லாவித இழப்புகளாலும் கவலை ஏற்படும். பெண்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது ஆண்கள் கவலையை அதிகம் வெளிகாட்டிக் கொள்வதில்லை. பெண்கள் அழுவார்கள். புலம்புவார்கள். அவர்கள் சுபாவம் அப்படி. அழாத, புலம்பாத ஆண்களுக்கு வருத்தம் இல்லை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.


ஆண்கள் உடலால் பலமானவர்கள். உள்ளத்தால் பலவீனமானவர்கள். பெண்கள் உடலால் பலவீனமானவர்கள். உள்ளத்தால் பலமானவர்கள். ஆண்கள் மனம் சோர்ந்து போகும்போது பெண்கள்தான் அவர்களுக்கு பலம் தருபவர்களாக இருக்கிறார்கள்.


பெரும்பாலான பெண்கள், தங்கள் கணவரிடம் ‘நான் இல்லாமல் நீங்கள் தனியாக அவஸ்தைப்பட வேண்டும். அதை நான் பார்த்து ரசிக்கவேண்டும். நான் விவாகரத்து செய்தால்தான் என் அருமை உங்களுக்கு புரியும்’ என்று சொல்கிறார்கள். மற்றவர்களைவிட தனக்கு அதிக மரியாதை தரவேண்டும் என்றும், அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் தான் இல்லாததால் தோன்றும் வெற்றிடத்தை உணரவைப்பதற்காக பிரிந்துசெல்ல விரும்பு கிறார்கள்.


பெண்கள் அதிகம் படித்து, நிறைய சம்பாதிப்பதால்தான் விவாகரத்து அதிகரித்துவிட்டது என்ற கருத்து நிலவிவருகிறது. ஆனால் அது முழுமையான உண்மை அல்ல. ஏன்றால், சுய சம்பாத்தியம் அதிகம் இல்லாத முந்தைய காலத்திலும் பெண்களின் மனநிலை அப்படித்தான் இருந்தது. கணவரிடம் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டால் கணவர் தன்னைத் தேடி வந்து அழைத்துச் செல்லவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சின்னச் சின்ன மோதல்கள் வந்தால் அதை காரணங்காட்டி முகத்தை உம்மென்றுவைத்துக்கொண்டு கணவரிடம் பேசாமல் ஒதுங்கியிருப்பார்கள். பின்பு கணவர் வந்து சமாதானம் செய்தால்தான் இறங்கிவருவார்கள்.


ஆண் தனக்கு பணிந்து போகவேண்டும் என்று நினைக்கும் பெண்கள் விவாகரத்து என்ற எல்லைவரைக்கும் கூட போய்விடுகிறார்கள். ‘தனக்கு விவாகரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தான் மிகுந்த மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்’ என்று இன்முகம்காட்டவும் அவர்கள் தவறுவதில்லை. தனக்குள் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதை எல்லாம் மறைத்துக்கொண்டு, முகத்தில் சிரிப்பைக் காட்டுவதில் பெண்கள் எப்போதுமே கைதேர்ந்தவர்கள்.


என்ன தான் பெண்களுக்கு கல்வியறிவும், சுய சம்பாத்தியமும் இருந்தாலும் பெண்கள் தனித்து வாழ்வது போராட்டமான விஷயம். மற்றபடி மனநிலையைப் பொறுத்தவரை இருவருக்கும் ஒரே மாதிரியான வேதனை தான். சமூகத்தின் கேலிப் பார்வை, நண்பர்களின் கவலையான விசாரணை, மற்ற பெண்களின் சந்தேகப் பார்வை போன்றவைகளை எல்லாம் விவாகரத்தான ஆண்களும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஆண்கள் வீரமானவர்கள். எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுவதால் ஆண்களால் அடுத்தவர்கள் முன்பு அழ முடிவதில்லை. அழாததால் அவர்களது மனபாரம் குறையாது. மனஅழுத்தத்தோடுதான் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அதனால் அவர்களது ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆனால் பெண்கள் அழுது அரற்றி, தோழிகள் பலரிடம் கூறி மன பாரத்தை இறக்கிவிடுவார்கள்.


விவாகரத்து ஆண்களை பொருளாதாரரீதியாகவும் நிலைகுலையவைத்துவிடுகிறது. விவாகரத்து பெறும் மனைவிக்கு ஜீவனாம்சம் என்ற பெயரில் ஒரு பெரிய தொகையை தரவேண்டி இருக்கும். இதற்காக அசையா சொத்துகளை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். கணவன்-மனைவி இருவர் பெயரில் இருக்கும் அசையா சொத்துகளை அவசரமாக விற்க வேண்டியதிருக்கும். அப்போது மன அழுத்தத்துடன், பண அழுத்தமும் சேர்ந்துகொண்டு அவர்களை வாட்டிவதைக்கும். எல்லாவற்றையும் சரிசெய்து விவாகரத்து என்ற முடிவை எட்டுவதற்குள் ஆண்களுடைய சம்பாத்தியத்தில் பாதி கரைந்துவிடும். அவர்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலிலும் நெருக்கடி உருவாகிவிடும். அதனால் ஆண்களுக்கு விவாகரத்து என்பது பிரிவு மட்டுமல்ல பெரும் செலவும்கூட.


இந்திய ஆண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு மனைவியை சார்ந்திருக்கிறார்கள். திடீரென்று மனைவி பிரிந்து சென்றுவிட்டால் அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள வெகுநாட்களாகும். அதன் தாக்கம் அவர்களுடைய அலுவலக வாழ்க்கையையும் பாதிக்கும். வேலையில் பின்தங்கி கெட்டபெயர் வாங்க வேண்டியிருக்கும். வீட்டிற்குப் போகவும் பிடிக்காது. வேலையில் முன்புபோல ஈடுபாடும் இருக்காது.


விவாகரத்து, ஜீவனாம்சம் ஆகிய வழக்குகளில் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்ல. அப்பாவி ஆண்களும்தான் என்பதை மறுக்க முடியாது.


நன்றி ...

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

 இன்றைய ஞாயிறு ...31-01-2021-உடுமலைப்பேட்டை 

என் அருமை தம்பி சிவராஜ் -எரிசனம்பட்டி குடும்பத்தாரின் இல்ல விழா ..

தம்பியின் மகள் S .R .வர்ஷா .பூப்பு நன்னீர்ட்டு விழா .கரட்டுமடம் .S .S மகால் மண்டப விழாவிற்கு செல்லும் பொழுது ,சிறுவர் காலம் மலரும் நினைவுகளாக தற்பொழுதும் எரிசனம்பட்டி வீட்டை கடக்கும்போது பசுமையாக உள்ளது ..இன்று நம் சொந்தங்களுடன் கலந்துகொண்டு பார்த்து ..கேட்டு..நலம் விசாரித்து  பேசியது மகிழ்ச்சி .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681...