வியாழன், 17 டிசம்பர், 2020

 கேள்வி : வீட்டு கடன் திட்டத்தில் முன் இஎம்ஐ முறை சிறந்ததா?


என் பதில் :.

வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவற்றில் கடன் தொகை மொத்தமாக தரப்படாமல் வெவ்வேறு கட்டங்களில் பகுதிகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இவ்வகைக் கடன்களில் கடனைத் திருப்பி செலுத்துவதில் இரண்டு முறைகள் உள்ளன. 

மொத்த கடன் தொகையும் பெறப்பட்ட பின் திருப்பி செலுத்தும் காலம் தொடங்கும். 

உதாரணமாக கல்விக் கடனில், ஐந்து ஆண்டு படிப்பு எனில் ஒவ்வொரு ஆண்டும் கல்விக் கட்டணம் செலுத்த கடன் வழங்கப்படும். ஐந்து ஆண்டுக் கல்வி முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு ஈஎம்ஐ மூலம் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பெற்ற தொகைக்கு வட்டி மட்டும் செலுத்தினால் போதும். மற்றொரு முறையில் கடனின் முதல் பகுதியைப் பெற்றவுடன் ஈஎம்ஐ மூலம் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்கிவிட வேண்டும். 

உதாரணமாக, வீடு கட்ட வழங்கப்படும் கடனில், அடித்தளம் போட முதல் பகுதி கடன் பெற்றவுடன் முழுக் கடன் தொகைக்குமான வட்டியுடன் சேர்த்து ஈஎம்ஐ-யை செலுத்தத் தொடங்கிவிட வேண்டும். இதுவே முன் ஈஎம்ஐ வட்டி எனப்படுகிறது. 

வீட்டுக் கடன்: வீட்டுக் கடனைப் பொறுத்தவரை மேற்கண்ட இரண்டு முறைகளுமே அனுமதிக்கப்படுகின்றன. முன் ஈஎம்ஐ வட்டி செலுத்தும் வசதி, கடன்தொகை பிரித்து வழங்கப்படும் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். வீடு கட்டக் கடன் தரும் பெரும்பாலான நிதி நிறுவனங்களில் முன் ஈஎம்ஐ வட்டி செலுத்தும் முறை அனுமதிக்கப்படுகிறது. முதலிலிருந்தே ஈஎம்ஐ செலுத்தத் தொடங்கி விடுவது அல்லது முழுக்கடனும் பெற்று முடியும் வரை வட்டி மட்டும் செலுத்தி விட்டு அதன் பிறகு ஈஎம்ஐ கட்டத் தொடங்குவது, இரண்டில் எது சிறந்தது? முழு ஈஎம்ஐ முதலிலிருந்தே செலுத்துவது நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் லாபகரமானது. ஏனெனில் முதல் நாளிலிருந்தே கடனின் அசல் தொகை குறைய ஆரம்பித்துவிடுகிறது. வீடு கட்டி முடிக்கும் தருணத்தில் கடனின் பெரும்பகுதி கழிந்திருக்கும். ஆனாலும் கட்டிடம் கட்டி முடிக்கத் தாமதம் ஆகும் பட்சத்தில், கடன் பெறுபவர், இன்னும் வாங்காத கடன் தொகைக்கும் சேர்த்து வட்டியை செலுத்தும்படி ஆகிவிடும். வீடு கட்டி முடித்தவுடன் விற்கப் போவதாக இருந்தால் இந்த முறை லாபகரமானதாக இருக்கும். 

முன் ஈஎம்ஐ கடன் செலுத்தும் முறையின் மற்ற குறைபாடுகள்: கடைசி கட்டத் தொகையை பெறும்வரை வட்டி மட்டும் செலுத்தும் முறையில் தொகை சிறிதாக இருந்தாலும் கடன் செலுத்தும் கால அளவு மிக நீண்டதாக இருக்கும். மாறாக, முழு ஈஎம்ஐ முதலிலிருந்தே செலுத்தும் முறையில் கடன் செலுத்தும் காலம் குறைவதோடு கடன் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது. வட்டி மட்டும் செலுத்தும் முறையில் கட்டடம் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கும் போது செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு வரிவிலக்கு கிடையாது. இருப்பினும் இதை ஒரு பெரிய விஷயமாகக் கருத வேண்டியதில்லை. ஏனெனில் வரிவிலக்கைக் கணக்கிடுவதில் இரண்டு முறைகளிலும் அதிக வித்தியாசமில்லை. அதாவது, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னால் எவ்வளவு வட்டி செலுத்தப்பட்டுள்ளதோ அது மட்டுமே ஐந்து சமபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

சனி, 12 டிசம்பர், 2020

 காற்றாலை எப்படி மின்சாரம் உற்பத்தி செய்கிறது? ஓர் அறிவியல் விளக்கம்..


உலகில் பல முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. நீர்மின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய சக்தி உள்பட பல முறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் அனைத்து முறைகளிலும் ஆற்றலை உருவாக்கி அதை மின்சக்தியாக மாற்றப்படுகிறது.


அவ்வாறு தான் காற்றாலைகளும் செயல்படுகின்றன. உலகில் சீனாவில் தான் அதிக காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தியா உலக அளவில் காற்றாலை உற்பத்தியில் 4 வது இடம் பெற்றுள்ளது.


காற்றாலை என்பது..


தற்போதைய சூழலில், மின் சக்திக்கு ஏற்றபடி காற்றாலையில் தேவை அதிகரித்துள்ளது. ஆரம்ப காலத்தில், சோளத்திலிருந்து மாவு தயாரிக்கவே இந்த காற்றாலை அமைப்பு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீரை நிலத்தடியில் இருந்து மேலே கொண்டுவரவும் இந்த முறை பயன்படுத்தப்பட்டது.


மின் உற்பத்தியில் காற்றாலையின் அமைப்பு..


மின் உற்பத்திக்கு உருவாக்கப்படும் காற்றாலைகள், 200 லிருந்து 350 அடி உயரத்தில் அமைக்கப்படுகின்றது. காரணம் பிளேடுகள் சுழலும் போது எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. அத்துடன், உயரம் அதிகமாக இருந்தால் காற்றும் இடையூறு இல்லாமல் வந்து சேரும். காற்றாலையில் மூன்று அல்லது இரண்டு பிளேடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பிளேடுகள் 120 அடிக்கும் அதிகமான நீளம் கொண்டிருக்கும். இந்த பிளேடுகள் பைபர் கிளாஸ் மூலம் தயாரிக்கப்படுகின்றது.


காற்றாலையில் தூண்கள், ஸ்டீல் மூலம் தயாரிக்கப்படும். இந்த அமைப்பு முழுவதும், ஒவ்வொரு காலநிலையையும் எதிர் கொள்ளும் வகையில் பவுடர் கோட்டிங் மூலம் சாயம்  பூசப்பட்டிருக்கும். அதை 20 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட கான்கிரீட்டால் நிலையான அமைப்பை உருவாக்கி நிறுவுகின்றனர். நிறுவும் போது மூன்று துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அமைப்பர். அந்த அமைப்பினுள் ஏணி போன்ற அமைப்பு இருக்கும் அந்த ஏணி போன்ற அமைப்பு தொழில் நுட்ப கோளாறை நிவர்த்தி செய்யும் போது அதன் மேல் ஏறிச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றது.


இந்த அமைப்பிற்கு மேல் ஜெனரேட்டர் இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஜெனரேட்டர் அமைப்பில், மூன்று பிளேடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மொத்த அமைப்பும் செய்து முடிக்க மூன்று வாரக்காலம் வரை செலவாகும்.


செயல்முறை..


காற்றின் வேகத்தை பொறுத்து பிளேடுகள் சுழல்கின்றது. இந்த பிளேடுகள் சுழலும் போது அதனுள் அமைக்கப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் சுழலும். நேரடியாக ஜெனரேட்டரால் பிளேடின்

வேகத்தில் மின் உற்பத்தி செய்ய இயலாது. எனவே அத்துடன் கியர் பாக்ஸ் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். அந்த பிளேடும் ஜெனரேட்டரும் 1:90 என்ற விகித்தில் செயல்படும். அதாவது, பிளேடு 1 முறை சுற்றும் போது ஜெனரேட்டர் 90 முறை சுழல்கிறது. அவ்வாறு அந்த ஜெனரேட்டர் மின் சக்தியை உற்பத்தி செய்கின்றது.


அந்த மின் சக்தியை, காற்றாலையின் கீழே கொண்டு வரப்பட்டு கீழே ஒரு ஸ்டெப்பப் இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஸ்டெப்பப் மின்சக்தியாக மாற்றி, நமது பயன்பாட்டிற்கு கொண்டு

செல்லலாம். காற்றாலை இவ்வாறு செயல்பட்டாலும், அதில் ஒரு சிறிய சிக்கலும் உள்ளது. காரணம் காற்று எப்போதும் ஒரே பக்கத்தில் வீசுவதில்லை. அதற்கும் ஒரு அமைப்பு காற்றாலையினுள் அமைந்துள்ளது.


டர்பைனின் பின்புறம் velocity sensor பொருத்தப்பட்டிருக்கும். அது காற்றின் திசை அறிந்து yawing machine மூலம் டர்பேனின் திசையை மாற்றுகின்றது. அதேபோல் காற்றின்

வேகத்தை பொருத்தும் அதன் பிளேடின் வேகத்தையும் கட்டுப்படுத்தி சமநிலையில் சுழல செய்கின்றது. இத்தகைய அமைப்பிலும், சில வேளைகளில் இயற்கை சீற்றத்தால் காற்றாடி ஆபத்தை சந்திக்கலாம். எனவே இயற்கை சீற்றம் போன்ற காலங்களில் காற்றாடி இயங்காமல் இருக்க உள்ளே ஒரு பிரேக் அமைப்பும் உள்ளது.


இந்தியாவின் முக்கியமான 5 காற்றாலை நிலையங்கள்..


இந்தியா காற்றாலை உற்பத்தியில் 4 வது இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு அதில் 29% மின் உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளது.இந்தியாவில் உள்ள முக்கியமான 5 காற்றாலை நிலையங்கள்.


* முப்பந்தல் கன்னியாகுமரி,உடுமலைப்பேட்டை ... தமிழ்நாடு

* ஜெய்சால்மர் விண்ட் பார்க், ராஜஸ்தான்

* பிரம்மன்வெல் காற்றாலை, மகாராஷ்டிரா

* தமன்ஜோடி விண்ட் ஃபார்ம், ஒடிசா

* துப்பதஹள்ளி காற்றாலை, கர்நாடகா


இந்தியா போன்ற பல நாடுகளில் மின்சக்தியை பெற காற்றாலை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. அதில், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகளிலும் காற்றாலை மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

 அமுதே! தமிழே! அழகிய மொழியே எனதுயிரே.....என்ற பாடல் ஆசிரியர் யார் ..


பதில் :..தாமரைக்கோன் (Aravind Raja), RKMVC கல்லூரி, மயிலாப்பூர்.- இக்கேள்வியைக் கேட்ட ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். இதற்கு தமிழரின் வரலாற்றையும், தமிழிசையின் வரலாற்றையும் குறிப்பிடுவது இன்றியமையாதது. இசையை வளர்த்த சங்க இலக்கியங்கள்: தமிழ் மொழி இலக்கியங்களுக்கு அடிப்படையாக விளங்ககூடியவை, நாற்பத்து ஒன்று செவ்வியல் நூல்கள். அவை : தொல்காப்பியம் (1) பத்துப்பாட்டு (10) எட்டுத்தொகை (8) பதினெண்கீழ்க்கணக்கு (18) சிலப்பதிகாரம் (1) மணிமேகலை (1) முத்தொள்ளாயிரம் (1) இறையனார் அகப்பொருள் உரை (1) ஆக, மொத்தம் நாற்பத்து ஒன்று. தமிழரின் இசை மற்றும் நாட்டியக் கலை பற்றி கூறும் நூல் சிலப்பதிகாரம் . சங்க இலக்கியங்களிலேயே, பண்ணோடு பாடக் கூடிய ஒரே இலக்கியம், பரிபாடல் ஆகும். தமிழிசையைப் பாதுகாத்த காரைக்கால் அம்மையார் : சங்க காலத்திற்குப் பிறகு, தமிழர்களின் இருண்டகாலம் என்று சொல்லப்படும் களப்பிரர்களின் ஆட்சிக் காலம் வந்தது. அக்காலத்தின் துவக்கத்தில் காரைக்கால் அம்மையார் தோன்றி தமிழரின் இசையையும், நூல்களையும் மீட்க, பண்ணோடு கூடிய தமிழ்ப் பாடல்களைப் பாடினார். இவ்வாறே, சைவத்திற்கான முதல் தமிழிலக்கியம் கிடைத்தது. ஆதலால், காரைக்கால் அம்மையார், தமிழிசையின் தாய் என்று போற்றப்பட்டார். ஆதலால் தான், அவர் பாடிய முதல் பதிகத்தை, மூத்த திருப்பதிகம் என்று அழைத்தனர். அவர் தமிழிசையை வளர்த்தார் என்பதற்கு அவருடைய இந்த பாடலே சான்று. துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம் உழை, இளி, ஓசைபண் கெழுமப் பாடிச் சச்சரி, கொக்கரை, தக்கை யோடு, தகுணிச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, வன்கை மென்தோல் தமருகம், குடமுழா, மொந்தை வாசித்(து) அத்தனை விரவினோ(டு) ஆடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. இப்பாடலில் : துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம் உழை இளி ஓசை (குரல்) என்ற ஏழு பதங்களை (சப்தச் சுரம்) குறிப்பிட்டுள்ளார். இஃது, பின்வரும் சம்பந்தரின் தேவார பாடலின் மூலமும் நன்கு புலப்படும். பண்ணும்பத மேழும்பல வோசைத்தமி ழவையும் உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும் மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும் விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே. இப்பாடல்களின் மூலம், கர்நாடக இசையானது தமிழிசையை அடிப்படையாகக் கொண்டது என்பது திண்ணம். மேலும், சச்சரி கொக்கரை தக்கை தகுணிச்சரம் தந்துபி தாளம் வீணை மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் குடமுழா தமருகம் மொந்தை போன்ற இசைக்கருவிகளைக் குறிப்பிட்டதன் மூலமும் இவர் பண்ணோடு கூடிய தமிழை வளர்த்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மேலும், சைவத்திற்கான முதல் தமிழிலக்கியம் ஒரு பெண்ணால் கிடைத்தது என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்று ! சங்க இலக்கியங்களைப் பார்த்து வருந்திய அம்மையார் : தமிழர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வரலாற்றையும் மற்றும் பல அரிய செய்திகளைத் தரும் சங்க இலக்கியங்களில், பெரும்பாலான பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் இல்லாமையைப் பார்த்தும், பல பாடல்கள் சிதைவுற்றதைப் பார்த்தும் வருந்தினார் காரைக்கால் அம்மையார். ஆதலால் இனி வரும் இலக்கியங்களாவது பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும், எழுதியவர் யார் ? எங்கு எழுதினார் ? என்பதை அறியும் வகையிலும் ஒரு உத்தியைக் கையாண்டார். அதுவே, திருக்கடைக்காப்பு . ஒரு பதிகத்தைப் யார், எங்கு, எப்போது பாடினார் என்பதை அப்பதிகத்தின் இறுதியில் பாடலின் வடிவிலேயே பாடப்படுவது தான், திருக்கடைக்காப்பு . இதை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை காரைக்கால் அம்மையாரையே சாரும். இவரைப் பின்பற்றியே தேவார மூவரும், பிற நாயன்மார்களும், ஆழ்வார்களும் இவ்வுத்தியைக் கையாண்டனர். பல்லவர்களாலும், களப்பிரர்களாலும் வந்த வினை: களப்பிரர்கள் ஆட்சியிலும், பின்னர் வந்த பல்லவர்கள் ஆட்சியிலும் தமிழ் தாழ்வுற்று, வடமொழி பெரும்பான்மை பெற்றது. இதற்கு பல்லவர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான கல்வெட்டுகள், கிரந்த கல்வெட்டுகளாக இருப்பதே சான்று. ஆகையால், தமிழையும் சைவத்தையும் தமிழிசையையும் மீண்டும் புத்துயிர்ப் பெற திருஞானசம்பந்தர் பிறந்தார். இது சேக்கிழாரின் பின்வரும் பாடலின் மூலம் விளங்கும். திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற, மிசை உலகும் பிறலகும் மேதினியே தனி வெல்ல, அசைவு இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல, இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக. தேவார மூவரால் மீண்டும் உயிர்ப் பெற்ற தமிழிசை: காரைக்கால் அம்மையார் தமிழிசைக்கு வித்திட்டவராயினும், அதனை பல மடங்கு முன்னோக்கி எடுத்துச் சென்றவர் திருஞானசம்பந்தர். ஆயினும், அம்மையார் சென்ற வழியிலேயே சம்பந்தரும் சென்றார். அம்மையார் தன்னுடைய முதல் பதிகத்தை நட்டபாடை (இன்றைய கம்பீரநாட்டை இராகம்) பண்ணில் பாடினார். சம்பந்தரும் தன்னுடைய முதல் பதிகத்தை இப்பண்ணிலேயே பாடினார். அம்மையார் உருவாக்கிய திருக்கடைக்காப்பு உத்தியை முதன்முதலில் பயன்படுத்தியவரும் சம்பந்தரே ! இசைக்கும், தமிழுக்கும் ஏது சாதி என்றுக் கூறி சாதிய கட்டமைப்பைத் தகர்த்தவர் திருஞானசம்பந்தர் : சம்பந்தர் ஒவ்வொரு தலத்துக்கும் செல்லுகையில், அவருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் மற்றும் அவரது மனைவி மதங்கசூளாமணியாரும் உடன் செல்வர். ஏனெனில், யாழ்ப்பாணர் யாழ் வாசிப்பதிலும். சூளாமணியார் தாளம் மற்றும் பண் அமைப்பதிலும் வல்லவர்கள். தான் எங்கு சென்றாலும் தவறாமல் இவ்விருவரையும் உடன் அழைத்து செல்வார் சம்பந்தர். அன்று, பாணர்கள் பிரமாணர்களாலும் மற்றும் பிற உயர் சாதியினராலும் "தாழ்சாதி மக்கள்" என்று புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்ணால் தேவார பண்களை அறிவித்த பெருமான் : தில்லைக் கோவிலில் நம்பியாண்டர் நம்பியின் துணைக் கொண்டு தேவார சுவடிகளை மீட்டார் இராசராச சோழன். தேவாரம் மற்றும் திருமுறைகளைப் பகுக்கும் பொறுப்பை நம்பியாண்டார் நம்பிகளிடம் ஒப்படைத்தான் மன்னன். தேவாரம் கிடைத்த நிலையில், தேவார பாடல்கள் எந்த பண்களால் பாடப்பட்டவை என்று நம்பியாண்டார் நம்பி குழம்பினார், எண்ணி வருந்தினார். நம்பியாண்டார் நம்பி, திருநீலகண்ட யாழ்ப்பாணர் பிறந்த ஊரான எருக்கத்தம்புலியூர் சென்றார். அங்கு இருக்கும் ஈசனிடம் தேவார பண்களைத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். "பாணன் வழி வந்த வல்லி ஒருத்திக்குப் பண்களை அறிவித்துள்ளோம். பெற்றுக் கொள்" , என்று அசரீரி ஒலிக்கவே, நம்பியும் அப்பெண்ணைப் பார்த்து, மூவர் பாடிய முறையிலேயே அப்படியே பாடப்பெற்று, அதற்கான கட்டளைகளையும் வகுத்தார். இவை அனைத்தும் உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருமுறை கண்ட புராணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவாரத்தில் பாடப்பட்டுள்ள தமிழ்ப் பண்களுக்கு இணையான கர்நாடக இராகங்கள் : தமிழ்ப் பண்கள் - கர்நாடக இராகங்கள் நட்டபாடை - கம்பீரநாட்டை கொல்லி - நவரோஸ் இந்தளம் - மாயமாளவகௌளை குறிஞ்சி - அரிகாம்போதி செந்துருத்தி - மத்தியமாவதி யாழ்மூரி - அடாணா (அ) நீலாம்பரி சீகாமரம் - நாதநாமகிரியை நட்டராகம் - பந்துவராளி தக்கராகம் - காம்போதி பழந்தக்கராகம் - சுத்தசாவேரி பழம்பஞ்சுரம் - சங்கராபரணம் தக்கேசி - காம்போதி செவ்வழி - யதுகாம்போதி பியந்தை காந்தாரம் - நவரோஸ் காந்தாரம் - நவரோஸ் காந்தார பஞ்சமம் - கேதார கெளளை கொல்லிக்கௌவாணம் - நவரோஸ் கெளசிகம் - பைரவி பஞ்சமம் - அகிரி சாதாரி - பந்துவாராளி புறநீர்மை - பூபாளம் அந்தாளிக்குறிஞ்சி - சாமா மேகராகக்குறிஞ்சி - நீலாம்பரி (அ) அமிர்தவர்ஷினி வியாழக் குறிஞ்சி - சௌராஷ்டிரம் முடிவு : தமிழ் கற்ற நாத்திகர்களும், தேவாரத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவர். ஏனெனில், பக்திக்கு ஆற்றிய பங்கை விட, இந்நூல் தமிழுக்கும், தமிழிசைக்கும் ஆற்றிய பங்கு அளப்பரியது. காரைக்கால் அம்மையார் தமிழ் இசை மீண்டும் புத்துயிர் பெற வித்தாக இருந்தார் எனில், தேவார மூவரே அதனை கிளைக்கச் செய்தனர். தேவாரம் தமிழிசைக்கு ஆதாரம் என்று சொல்வதை விட, அதனை கிளைக்கச் செய்தது என்று கொள்வதில் எள்ளளவும் ஐயமில்லை. அன்று, தமிழிசையைப் புத்துயிர் பெற செய்த காரைக்கால் அம்மையார், ஒரு பெண் ! தேவார பண்கள் மீண்டும் அமைய காரணமாக இருந்தவர், ஒரு பெண் ! இன்று இக்கேள்வியைத் தொடுத்தவரும் ஒரு பெண் ! இறைவனின் அருளை என்னவென்று சொல்வது ! வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் இசை !

 திருமணம்.....

 அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடுத்த கட்ட நகர்வைத்தருவது ,ஆனால் எங்களது அறக்கட்டளையின் துணைத்தலைவருக்கு தம் சமூகப்பணிக்கும் அரசியல் பணிக்கும் மாற்றத்தைக் கொடுத்தது.


அரசியலுக்காக சமூகப் பணியாற்றும்   இம்மண்ணில் சமூகத்திற்காக அரசியல் களம் கண்டு....  ஆதாயமின்றி இன்றளவும் பாடாற்றும் உடுமலை வரலாற்று செல்வத்தின் அரசர்,

தமிழுக்காகத் தலை கொடுத்த குமணன் மண்ணில் மொழிக்காகப் போராடி சிறை கண்ட  மொழிப்போர் ஈகி வெ.காளியப்பனின் தலைமகனுக்கு அடுத்த மகன்,

மண்ணின் மைந்தன் சாதிக்பாட்சாவை  சரியாக இனம் கண்டு மனிதப்புனிதர் எனும் பட்டத்தைத் தந்திட்ட மனிதப் பனிதரின் அன்பில் விழைந்த பாசமலர்,

உடுமலை வரலாற்றில் உயிர்ப்பான நாயகருக்கு உரிமையுடன் கூறும்

Suguna Selvaraj

 and 

VK Selvaraj..அவர்களுக்கு 

.மண நாள் வாழ்த்து வாழ்க வாழ்வாங்கு வாழ்க...

திங்கள், 7 டிசம்பர், 2020

உடுமலைப்பேட்டை ..கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் ..

 உடுமலைப்பேட்டை ..கோட்டமங்கலம்  வல்லகொண்டம்மன் ..


திருமலை நாயக்கர் காலத்திற்க்கு முற்ப்பட்ட நான்கு ஜமீன்தார்களின் குலதெய்வமாக விளங்கிய கோட்டமங்களம் பாலமண்ணவகையரா வல்லகுண்டம்மாள் கோவில் தற்போது சிதலமடைந்து காணப்படுகிறது...

உள்ளே அரிய பல சிலைகள் காணப்படுகிறது ...


ஒரே கல்லில் ஏழு கண்ணிமார் சிலைகளை பார்த்திருப்பீர்...

ஆனால் இங்கு கருவரையில் ஏழு கண்ணிதெய்வங்களின் சிலைகள் தனித்தனியாக இரண்டடி உயரத்தில் அருமையாக வடித்துள்ளனர் ...


 லிங்கம் நந்தி மற்றும் தொட்டால் (புல்லாங்குலல்) வாசித்தபடி முண்ணோர் சிலைகள் 


இடும்பன் காவடி சிலைகள்..


 முண்ணோர்களின் வேட்டைக்கு செல்லும் சிலைகள் ...

 அதுபோக கூம்பு வடிவில் ஒரு சிலை அமைந்திருந்தன அது என்ன என்பது புல படவில்லை..


இவையனைத்தும் கருவரையில் உள்ளது 


இராஜகம்பளத்தாரின் பாரம்பரியத்தின்படி அந்த கருவறை அமைந்திருந்தன என்பதை பார்தவுடன் எனக்கு தெளிவாய்ன...


நைரிவாரு மட்டும் இங்கு வழிபடுகின்றனர்

மற்ற குடி பாடுகள் பிடிமண் எடுத்து சென்று அவர்களின் ஊரு அருகிலே ஆவகணம் செய்து வழிபடுகின்றனர்...

பாலவார்களின் தாய்கோவிலாக செயல் படுகின்றது

கெங்குசி பாலமண்ண வகையராக்கள் இங்கிருந்து கிழக்கு நோக்கி  பிடிமண் எடுத்து செல்லும் போது மால மேட்டில்  பல்லகுடும்பன்  துணை காக்கா அமர்ந்துள்ளார்

என்பது என் கோடாங்கி மூலை


இக்கோவிலில் நாகம் ஒன்று காவல் காக்கிறது என்பதை சொல்ல கடமைபட்டுள்ளேன்...

(புதையளுக்கா காவல)்?


இதை நானே உணர்ந்தேன் ..


இங்கு ஏதோ ஒரு சக்தி உள்ளது ..

அதை சிலர் அடக்குகின்றணர்

அதை அகம விதிகளில் பூஜை புனஸ்காரங்கள் செய்கின்றபோது

பாசிட்டீவ் சக்திகள் வெளிப்படும் என்பது உண்மை....

பதிவு :..வைகை சாரல்👍


குறிப்பு : இந்த ஆண்டு ..கடந்த தீபா திருவிழா அன்று கிழக்கில் இருந்து அதிகம் புது சொந்தங்கள் வருகை தந்தனர் ...எப்பொடியோ ..உடுமலைப்பேட்டை ..கோட்டமங்கலம்  வல்லகொண்டம்மன் ..ஆதி மண்ணின்  குலதெய்வ கோயிலை கண்டு பிடித்து விட்டார்கள் ...மிக்க மகிழ்ச்சி ..




புதன், 2 டிசம்பர், 2020

கேள்வி : கோவை நகரம் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்தது போன்று மதுரை ஏன் அடையவில்லை?


என் பதில் :..


கொங்கு மண்டலத்தின் காலச்சாரமே அதுதான்.


உழைப்பு, உண்மை, உயர்வு.


நாங்கள் ஆயிரம் வருசமாக ஒடுக்கப்பட்டவர்கள், எங்கள் நிலங்களை மன்னர்கள் பிடுங்கி கொண்டனர் என ஒப்பாரி வைத்து சோம்பேறித்தனமாக தூங்காமல் உழைப்பில் நம்பிக்கை வைத்து தொழிலில் நேர்மையை பின்பற்றி தான் முன்னேறியதோடு அல்லாமல் பல பேருக்கு வேலைவாய்ப்பும் கொடுத்து முன்னேற்றி விட்டு நாட்டுக்கு வருமான வரியையும் சரியான முறையில் செலுத்தி இன்று தமிழகத்தின் உற்பத்தி துறையில் 60% க்கும் மேல் கையில் வைத்திருப்பது கோவையை தலைமையிடமாக கொண்ட கொங்கு மண்டலம்தான்.


ஜிடி நாயுடு ஆரம்பித்து வைத்த தொழிற்புரட்சியை நா. மகாலிங்கம் உள்ளிட்ட தொழிலதிபர்கள் தொடர்ந்ததன் விளைவு இயந்திர உற்பத்தி, நூல் தொழிற்சாலை, ஆடை ஏற்றுமதி, கல்வி மற்றும் மருத்துவமனை என தமிழகத்தின் பின்னோக்கி தள்ளும் வண்ணம் கோவை உயர்ந்து நிற்கிறது.


கல்வி நிறுவனம் என்று பார்த்தால் PSG, ராமகிருஷ்ணா, குமரகுரு, கோவை வேளாண் கல்லூரி, அரசு மருத்துவ கல்லூரி, சட்ட கல்லூரி என கல்வி துறையில் முன்னணியில் உள்ளது.


மருத்துவ துறையில் அரசு மருத்துவமனை தொடங்கி, கோவை மெடிக்கல், psg மருத்துவமனை, குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கேஜி மருத்துவமனை, ராமகிருஷ்ணா மருத்துவமனை, ராயல் கேர் என உலகத்தரம் வாய்ந்த பல மருத்துவமனைகள் உள்ளது.


மருத்துவ சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டுவதில் கோவை தான் இந்தியாவிலேயே முதலிடம்.


தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மென்பொருள் தயாரிப்பு நகரம், சென்னைக்கு அடுத்ததாகவும் இந்த நகரம் அமைந்துள்ளது. நகரத்தில் உள்ள டைடல் பூங்கா மற்றும் பிற திட்டமிடப்பட்ட ஐடி பூங்காக்கள் தொடங்குவதன் மூலம் இந்நகரில் பி.பி.ஓ தொழிற்துறையினர் பெரிதும் வளர்ந்துள்ளனர். உலக அவுட்சோர்சிங் நகரங்களில் இது ஒரு இடத்தைப் பிடித்தது. விப்ரோ, ஃபோர்டு, ராபர்ட் போஷ் ஜிபிஎச், ஐபிஎம், டாடா கன்சல்டன்சி சர்வீஸ், டாட்டா எக்ஸ்சிஸி, டெல், சிஎஸ்ஸ் கார்ப் மற்றும் கேஜிஐஎஸ்எல் போன்ற நகரங்கள் இந்நிறுவனத்தில் உள்ளன.


கோயம்புத்தூர் கார் கூறு தொழிலில் மிகவும் நம்பகமான அவுட்சோர்சிங் இடங்களில் ஒன்றாக வெளிப்பட்டுள்ளது.


ஆசியாவின் மின் மோட்டார் நகரமாக கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் நிறைய சிறிய அளவிலான பொறியியல் நிறுவனங்கள் உள்ளன.


இங்கு சாதி சண்டைகள் இல்லை, தமிழன் தமிழன் என போராடும் கூட்டமும் இல்லை, பல தொழிற்சாலைகள் இருந்தாலும் கேரளாவை போல கொடி பிடித்து ஸ்டிரைக் செய்யும் அட்டைப்பூச்சி சங்கங்களும் இல்லை என்பதை இங்கு வந்து பார்த்தவர்களுக்கு நன்கு புரியும்.


அதே போல இங்கு யாராக இருந்தாலும் வாங்க போங்க என மரியாதையுடன்தான் அழைப்பார்கள்.அதே போல இங்கு ரவுடித்தனம் என்பதே மருந்துக்கு கூட கிடையாது.


மனித குலத்தை நாசமாக்கும் மொழிவெறி இனவெறியை தவிர்த்து அனைத்து தரப்பட்ட மனிதர்களையும் சகோதரர்களை போல அரவணைத்து செல்லும் தர்ம பூமி இது.


அதே போல நில அபகரிப்பு கட்டப் பஞ்சாயத்து எல்லாம் இங்கு அறவே இல்லை.


இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்றால் அது கோவை தான்.


ஆக சட்டம் ஒழுங்கு இங்கு மிகவும் சரியாக உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பதில் முன்னணியில் கோவை தான்


இந்த கட்டுப்பாடுமும் ஒழுக்கமும்தான் கோவை யின் வளர்ச்சிக்கு காரணம்.


இது முழுக்க முழுக்க இங்குள்ள மக்களின் உழைப்பால் விளைந்த பலன் இது.


இந்த வெற்றி இட ஒதுக்கீட்டாலோ, சமூக நீதியாலோ அரசாங்க ஸ்காலர்ஷிப்பாலோ இன்னும் பிற சலுகைகளாலோ வந்தது அல்ல முழுக்க முழுக்க உழைப்பு, திறமை மற்றும் நேர்மையால் மட்டுமே பெற்ற வெற்றி.


இதை சில கட்சிகள் தங்களின் ஆட்சிதான் காரணம் என கோவை மக்களின் உழைப்பையும் வெற்றியையும் திருட பார்க்கின்றன.


இந்த அரசியல்வாதிகளின் நிர்வாக திறமின்மையால் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சினையால் கோவை சந்தித்த பிரச்சனை இழப்பு கொஞ்சம் நஞ்சம் அல்ல. கோவையின் இருண்ட காலம் அது.


உண்மையில் எங்களால்தான் தமிழகம் இன்று முன்னணியில் உள்ளது என மேடைக்கு மேடை சவடால் விடும் கட்சிகளுக்கு ஒரேயொரு கோரிக்கை முடிந்தால் உங்களின் ஆட்சி நிர்வாக திறமையால் ஒரு ராமநாதபுரத்தையோ, திருவாரூரையோ இன்னொரு கோவையாக மாற்றி காட்டுங்களேன் பார்ப்போம்.


பிகு :- நான் கோவை நகரின் பெருமை பற்றி பேசியதற்கு சிலருக்கு ஏன் எரிச்சல் என புரியவில்லை. நான் மற்ற ஊர்களை இழிவுபடுத்த வில்லையே இதில். முடிந்தால் உங்கள் ஊரின் பெருமை பற்றி எழுதுங்கள் அது பிரயோஜனப்படும். அதை விடுத்து உங்கள் மொழி வெறி, இனவெறியை இந்த பதிலில் காட்டும் உங்களை கண்டால் பரிதாபம் தன் வருகிறது.

திங்கள், 30 நவம்பர், 2020

 Kannabiran Udt...


கொரோனா காலத்திலும் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதும் உடுமலையின் அறிவியல் மாணவ ,மாணவிகள் .....


மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் என்சிஇஆர்டி மற்றும் விபா ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தேர்வை இணைய வழியில் நடத்தி வருகின்றன.இந்த பேரிடர் காலகட்டத்தில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிப்பதற்காக இந்த வருடமும் தேர்வானது தேசிய அளவில் இன்றும் ( நவம்பர் 29 மற்றும் 30) நாளையும் நடைபெறுகிறது. 


இத்தேர்வில் இந்தியா முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வினை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தேர்வு எழுதி வருகின்றனர். இத்தேர்வு இணையவழியில் கணினி ,மடிக்கணினி மற்றும் ஆண்ட்ராய்டு செயலி மூலமாக இணைய வழியில் தேர்வினை மாணவர்கள் எழுதி வருகின்றனர். தேர்வானது இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் இத்தேர்வினை எழுதி வருகின்றனர்.


இந்த முதல்நிலை தேர்வானது மாணவர்கள் அவரவர் வீடுகளிலிருந்து தேர்வினை எழுதி வருகின்றனர். அறிவியல் துறையில் பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் ஆராய்ச்சித் துறையில் அவர்களை ஈடுபடுவதற்காக இந்த தேசிய திறனறிதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் கலந்து கொண்ட அனைவரும் இந்த வருடம் இணையவழியில் நடைபெற உள்ள சர்வதேச இந்திய அறிவியல் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பினை பெறுகின்றார்கள். அதுமட்டுமின்றி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசுகளையும் பெறுவார்கள். 


இந்த தேர்வானது திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 300 மாணவர்கள் எழுதினர். வீடுகளிலிருந்து முதல்முறையாக ஒரு தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தேர்வு எழுதியது புதுமையானதாகவும் வீட்டிலிருந்தே ஒரு தேசிய அளவிலான தேர்வினை எழுதியது மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று மாணாக்கர்கள் கருத்து தெரிவித்தனர். 


உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது வீடுகளிலிருந்து இத்தேர்வினை எழுதினர். பேரிடர் காலகட்டத்தில் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் தேசிய அளவிலான ஒரு தேர்வு இணைய வழியில் குழந்தைகள் வீட்டில் இருந்தே எழுதியது நல்லதொரு முயற்சியாக இருந்தது என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர். உடுமலை பகுதியில் உள்ள மாணவர்களின் வீடுகளில் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் சரவணன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.


வெள்ளி, 27 நவம்பர், 2020

கண்ணை கவரும் தென்னை நாரில் மிளிரும் படைப்புகள்...

நன்றி :..தினமலர் ..பொட்டையம்பாளையம் கிராமம் .உடுமலைப்பேட்டை 


தென்னை நாரும், கண்களுக்கு விருந்தளிக்கும், கலை வண்ண படைப்புகளாக, மகளிரின் கைவண்ணத்தில், உருவாக, கயிறு வாரியம் வழிகாட்டுகிறது. இப்படைப்புகளுக்கு, அனைவரும் கைகொடுத்தால், சூழலும், மகளிரின் பொருளாதாரமும் மேம்படும்.கல்லும், மண்ணும், கைவண்ணத்தில், கலை படைப்புகளாக, நம் வாழ்வில், இரண்டற கலந்து விட்டது; அதிலும், மகளிரின் அழகு மிளிரும் படைப்புகளுக்கு, தனியிடம் உண்டு. அவ்வாறு, தென்னை நாரை மூலப்பொருளாக கொண்டு, பெண்கள் உற்பத்தி செய்யும், கலை படைப்புகள் பார்ப்பவர்களை ஈர்ப்பதை தவிர்க்க முடியாது.அவ்வாறு, கயிறுவாரியம், தென்னை நாரில் இருந்து கால் மிதியடி மட்டுமல்லாது, வீட்டை அலங்கரிக்கும், குதிரை, மான், முதலை, ஒட்டகச்சிவிங்கி, ஸ்டாண்ட் ஆகியவை தயாரிக்கவும், ஊக்கத்தொகையுடன் பெண்களுக்கு பயிற்சியளித்து வருகிறது. தற்போது, பொட்டையம்பாளையம் கிராம பெண்களுக்கு, கயிறு வாரியம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில், இரண்டு மாத பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டு வருகிறது.இதில், தென்னை நாரில் இருந்து தயாரிக்கப்பட்ட, கயிறுகளை கொண்டு, கால் மிதியடி தயாரிக்க, முதற்கட்டமாக பயிற்சி கொடுக்கப்படுகிறது. பின்னர், பல வகை கயிறுகளை கொண்டு, வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சி துவங்குகிறது.வீட்டில் இருந்தபடியே, சுயதொழில் மூலம், வருவாய் ஈட்ட ஆர்வம் காட்டும் பெண்களுக்கு, இத்தகைய பயிற்சிகள் வரப்பிரசாதமாக அமைகிறது. பயிற்சிக்குப்பிறகு, சான்றிதழும், தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களுக்கு, வங்கிக்கடனும் பெற்றுத்தர வழிகாட்டுதல் வழங்குகின்றனர்.தங்களையும், வீட்டையும், அலங்கரிப்பதில், தனித்திறமை கொண்ட பெண்களிடம், தென்னை நாரும், உயிரோட்டமுள்ள கலைப்பொருளாக மாறுவதை நேரடியாக நாம் பார்க்கலாம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இத்தகைய கலைப்பொருட்களை வாங்கி, பயன்படுத்தினால், தொழிலில், ஈடுபடும் பெண்களுக்கு, நிரந்தர வருவாயும் கிடைக்கும்...

நன்றி ...தினமலர் ...உடுமலைப்பேட்டை ..


தொழிற்பயிற்சி தொடர்பான விவரங்களுக்கு அணுகவும் 

நாகராஜ் -99651 42973..உடுமலை சுற்று சூழல் சங்கம் 

சிவக்குமார் -9944066681...கம்பளவிருட்சம் அறக்கட்டளை -உடுமலை 

கேள்வி : வீட்டுத்தரைக்கு மார்பிள்ஸ், மார்போனைட், க்ரானைட் மற்றும் டைல்ஸ் - இதில் எது சிறந்தது?

என் பதில் :..

வீட்டுத் தரைகளுக்கு டைல்ஸ், மார்பிள்ஸ், மார்போனைட், கிரானைட் ஆகியவை அழகுக்காகவும் தரையை எளிமையாக சுத்தம் செய்வதற்காகவும் ஒட்டப்படுகின்றன.
இதில் மார்பிள்ஸ் மற்றும் கிரானைட் இயற்கையாகக் கிடைப்பவை. பூமிக்கு அடியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மதுரை,கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் அதிகம் கிடைக்கின்றன.
மார்போனைட் என்பது கிரானைட் அல்லது மார்பிள் போன்ற தோற்றமளிக்கும் டைல்ஸ் வகையாகும்.
டைல்ஸ் என்பது செயற்கையான முறையில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவதாகும்.
இயற்கையான முறையில் கிடைப்பதால் கிரானைட் மற்றும் மார்பிள்கள் சாதாரணமான வெளிப்புற வெப்பநிலைகளையே வீட்டின் உட்புறமும் பிரதிபலிக்கும்.
ஆனால் மார்போனைட் மற்றும் டைல்ஸ் ஆகியவை வெளிப்புற வெப்பநிலையை சற்று அதிகமாக வீட்டின் உட்புறம் பிரதிபலிக்கும்.
அதாவது டைல்ஸ் மற்றும் மார்போனைட் குளிர்காலங்களில் அதிக குளிரையும் வெயில் காலங்களில் அதிக வெப்பத்தையும் வீட்டினுள் பிரதிபலிக்கும்.
விலையின் அடிப்படையில் பார்த்தால் டைல்ஸ் வகைகள் ஒரு சதுர அடி₹30 முதல் கிடைக்கின்றன.
மார்போனைட் ஒரு சதுர அடி₹50 முதல் கிடைக்கின்றன.
கிரானைட் ஒரு சதுர அடி₹80 முதல் கிடைக்கின்றன.
மார்பிள் நிறத்தைப் பொறுத்து அதன் விலை மாறுபடும். குறைந்த பட்சம்₹200 முதல் கிடைக்கும்.
குறைவான செலவினை விரும்பினால் டைல்ஸ் வகைகளை தேர்வு செய்யலாம்.
விலை சற்று அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என விரும்பினால் கிரானைட் மற்றும் மார்பிள்களைத் தேர்வு செய்யலாம்.
வீட்டிற்கு டைல்ஸ் ஒட்டும் முன்பு இதை ஒரு முறை மனதில் வைத்துக் கொள்ளவும்.👍👍✒✒✒📚📚🏘🏘🏘
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

கேள்வி : ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் எப்படி இருக்கும்..?

 கேள்வி : ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் எப்படி இருக்கும்..?


என் பதில் :..

இது வழக்கமான பதிவு அல்ல . எனவே tag ...களில் சில மாற்றம் ..

. விருப்பம் உளளவர்கள் மட்டும் கருத்துக்களை பதிவு செய்யவும் . நன்றி .!

தமிழ் வளர்க்கும் சமூக வலை தளங்களில் பேஸ் புக்,வாட்ஸாப்ப் ,இன்ஸ்ட்ராகிராம் ... முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் அறிவோம் .   இரண்டு  நாட்களுக்கு முன் ஒரு அனுபவ பதிவு இட்டிருந்தேன். ஒரு நல்ல பதிவர் ,வீட்டுக்கடன் விற்பனை  ,சமூக ஆர்வலர் , (நாமே சொல்லிக்க வேண்டியதுதான்) அழகு இரண்டு பக்கங்களையும் முன் வைப்பது தான். அந்த வகையில் நான் கவனித்த எனக்கு ஏற்பில்லாத சில விஷயங்கள் இங்கே. இந்தப் பதிவு யாரையும் குறிப்பிட்டதல்ல.. அப்படி நீங்கள் நினைத்தால் அது உங்கள் சொந்தக் கருத்தே.

 முன்னெச்சரிக்கையா சொல்லிக்க வேண்டி இருக்கு ஏன்னா பேசப் போற விஷயம் அப்படி.

பேஸ் புக்,வாட்ஸாப்ப் ,இன்ஸ்ட்ராகிராம்  இல் சில காலமாகப் புழங்கி வருவதில் எல்லா இடங்களையும் போல இங்கேயும் சத்தத்திற்கும் கூட்டத்திற்கும் தான் முக்கியம் இருப்பதாகக் கருதப் படுகிறது. எல்லா விஷயத்தையும் பாராட்டவும் திட்டவும் ஆட்கள் கிடைக்கிறார்கள். நல்ல நண்பர்களும் தமிழ் ஆர்வலர்களும் கிடைக்கும் அதே இடத்தில் அரை வேக்காட்டுத் தனமாக உளறுபவர்கள் சிலர் . எப்படி செய்தி/சினிமா விற்பவர்கள் வன்முறையையும் கவர்ச்சியையும் முன் வைத்து வியாபாரம் செய்கிறார்களோ அது போல் தன்னை விற்க முனைபவர்களையும் காண முடிகிறது. நாகரீகம் அற்ற  வார்த்தைகளில் திட்டுவது  சாதாரணமாக நடக்கிறது.

ஒரு விஷயத்தை யாராவது சொன்னால் முதல் கேள்வி.. “உனக்கு என்ன தகுதி இருக்கிறது அதை சொல்ல..?” என்பதாக இருக்கிறது. நமது அனுபவம்  பற்றி சொல்ல என்ன தனியா ஜர்னலிசம்  படிச்சுட்டு வரணுமா  ???

தன்னை மேதாவியாக நகைச்சுவையாளராகக் காட்டிக்கொள்ள இன்னொரு சக மனிதனைத் திட்டியும் சபித்தும் ஆக வேண்டுமா? இங்கே வெளிப் படுவது நகைச்சுவை பூசிய வெறுப்பு மட்டுமே. முகம் தெரியாத ஒருவர் மேல் காரணமே இல்லாமல் கொட்டப்படும் வெறுப்பின் அளவு நிஜமாகவே மலைக்க வைக்கிறது.
இதற்கு பொதுவான ஒரு காரணம் தன்னுடைய கருத்தை எல்லாரும் ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. ஆங்கிலத்தில் “Agree to Disagree” என்று சொல்வார்கள். எதிராளியின் மறுப்பை ஏற்கும் பக்குவம் இங்கே கொஞ்சமும் இல்லை. இது இங்கு மட்டும் என்று இல்லை. வீடுகளில், அலுவலகங்களில், அரசியலில் என்று எல்லா இடங்களிலும் பொதுவாக இருக்கிறது. என் கருத்தை ஏற்காதவன் எதிரி என்ற நினைப்பில் நாம் நிறைய நிழல் எதிரிகளை உருவாக்கி அவர்களோடு அட்டைக்கத்தி சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம். எதிர்கட்சிகள் இல்லாமல் சட்ட சபைகள் நடப்பதும் பாராளுமன்றங்கள் முடங்குவதும் போல . !
மொழி, அனுபவம், கருத்துக்கள் எல்லாவற்றிலும் இந்தப் பக்குவம் தேவை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமான சூழலில் வளர்கிறான். சிந்தனைகளும் நம்பிக்கைகளும் ஒருவருக்கொருவர் மாறுபடுவதுதான் இயற்கை. அதை மதிப்பதன் மூலம் நிறைய ஈட்டிகளில் நாம் வெள்ளைக்கொடி கட்ட முடியும்.
“நீ சொல்வதை நான் மறுக்கிறேன், ஆனால் அதைச் சொல்வதற்கான உன்னுடைய உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன் (Evelyn Beatrice Hall)” என்ற வரிகளை ஒவ்வொரு வரி எழுதும்போதும் பேசும்போதும் நினைத்துக் கொண்டால் ஆரோக்கியமான சண்டைகளும் அறிவுபூர்வமான வாதங்களும் பிறக்கும். இன்னுமொரு செக்ஷன் 66 A ...தேவையில்லை . நன்றி . வணக்கம் .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
வாழ்க்கை வளர்வதற்கு ...வாழ்வதற்கு ...
9944066681..







வியாழன், 26 நவம்பர், 2020

 

உடுமலைப்பேட்டை அரசு பள்ளியில் பயின்ற மாணவி ......


மலேசியா நாட்டில் நடைபெறவிருக்கும்  கராத்தே போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் ஏழாம் வகுப்பு மாணவி -க்கு உதவி தொகையாக உடுமலை அரசு மேல்நிலை பள்ளியில் 1985ஆம் ஆண்டு +2 தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர், சாதனையாளர் K.P.கேதாரினாத் அவர்களின் நினைவாக அதே வருடம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் P.R.மோகன் ராஜ், K.P.விஸ்வனாத், R.கிருஷ்ண குமார் ஆகியோரின் சார்பாக ₹15,000 காசோலை ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மேலும் மலேசியாவில் ஏற்படும் செலவுகளை அதே ஆண்டு +2 தேர்ச்சி பெற்ற திரு R. தினேஷ் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.


மாணவி பெயர் - J . பூமிகா..விற்கு .ஏற்பாடு செய்த ஆசிரியை  திருமதி..வித்யா முதுகலை வணிகவியல் ஆசிரியை...ஆசிரியை பொறியாளர் ராமசந்திரன்... அவர்களின் சகோதரி.


கொரோனா காலம் என்பதால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையிலும் ,கலந்துகொள்ள உதவி தொகை இல்லாத சூழ்நிலையிலும் ,இந்த உதவி செய்ய நல்லாசிரியர் விஜயலக்ஷ்மி அவர்கள் இவர்களிடம் சொல்லி இருந்தார்கள் ..தற்பொழுது இந்த இந்த போட்டியில் கலந்துகொள்ள உதவி இருக்கிறார் 

மேலும் விவரங்களுக்கு 

ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம் ...  

 நல்லாசிரியர் விஜயலக்ஷ்மி- 94421 10286

செவ்வாய், 24 நவம்பர், 2020

Mr. A. Muruganantham, Founder Director, Jayshree Industries, Coimbatore குறைந்த விலை நாப்கின் தயாரித்து சாதனை.. பெண்கள் பாராட்டும் நாயகர் அருணாச்சலம் முருகானந்தம்

கோவையின் பொக்கிஷம் ......


 We also had a chance to meet one of the 100 most influential people as per Times Magazine –

 Mr. A. Muruganantham, Founder Director, Jayshree Industries, Coimbatore

குறைந்த விலை நாப்கின் தயாரித்து சாதனை.. பெண்கள் பாராட்டும் நாயகர் அருணாச்சலம் முருகானந்தம்

மாதவிலக்கு நேரங்களில் தமிழக ஏழைப் பெண்கள் குறைந்த செலவில் நாப்கின்களை பயன்படுத்தும் வகையில் மெஷின் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனைப் புரிந்தவர் தமிழர் அருணாச்சலம் முருகானந்தம்.

கோவை மாவட்டம் கிராமப் பகுதிகளில் ஏழைப் பெண்களின் மாதாந்திர பிரச்சனையை, சமூக நோக்கில், மிகக்குறைந்த விலையில் சமாளிக்க கற்றுக் கொடுத்த அருணாச்சலம் முருகானந்தம் உலக மக்களின் பாராட்டுக்களை பெற்ற வண்ணம் இருக்கிறார். எளிதில் கிடைக்காத கௌரவம், நாம் அறிந்திராத மாமனிதர்களுக்குக் கிடைக்கும் சமயங்களில், அவரைப் பற்றிய அறிமுகம் இல்லாததால், அதைக் கொண்டாடத் தவறி விடுகிறோம். அந்த வகையில் அருணாச்சலம் முருகானந்தம் சாதனையும் முக்கியத்துவமும் சமூகத்தின் கண்களில் இன்னமும் முழுமையாகப் படவில்லையோ என்று தோன்றுகிறது.

60% பெண்களுக்கு நாப்கின் வசதி இல்லை இந்தியாவில் 60 சதவீத ஏழைப் பெண்கள் நாப்கின் வாங்கும் வசதியின்றி வாழும் அவலம் நிலவுகிறது. இந்நிலையைப் போக்க முயன்ற முருகானந்தம், தன் பல ஆண்டுக்கால விடாத முயற்சியால், பிரத்யகே இயந்திரம் தயாரித்து, அதன்மூலம் தயாரிக்கப்படும் நாப்கின்களை விற்பனைக்குக் கொண்டு வந்தார்.

இரண்டு ரூபாய்க்கு நாப்கின் பன்னாட்டு நிறுவனங்களால் அதிக விலையில் விற்கப்படும் பெண்களுக்கான நாப்கின்களை, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என கற்பனைக் கெட்டாத விலையில், சுகாதாரமாகத் தயார் செய்து, சேவை உள்ளத்துடன் அவற்றை விற்பனை செய்தார் அருணாச்சலம் முருகானந்தம்.

உலக மகளிருக்கும் அர்ப்பணம் உலகம் முழுக்க மகளிர் அமைப்புகள் மற்றும் பள்ளிகளுக்கு தமது இயந்திரங்களை வழங்கி உற்பத்தி முறைகளையும் கற்றுத்த தந்துள்ளார். இவரது முயற்சியால் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் உற்பத்தியாகும் நாப்கின்களை ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

உலகின் சக்தி வாய்ந்த நபர் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை டைம் பத்திரிக்கை, கடந்த 2014ம் ஆண்டு தேர்வு செய்து உலகிற்கு அடையாளப்படுத்தியது. அதன் பிறகே அருணாச்சலம் முருகானந்தம் அவர்களை, இனங்கண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்துக் கௌரவப்படுத்தியது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.



பெண்கள் வாழ்த்தும் ஆண் ஏழைப் பெண்களின் மனதை, தாயுள்ளத்தோடு அறிந்து அவர்களின் மாதாந்திர பிரச்சனையை போக்கும் வகையில் செயல்பட்டு வரும் அருணாச்சலம் முருகானந்தம், பெண்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவர்.

இவரை கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் உலக கருத்தரங்கில் சந்தித்து பேச எனது மேலாண்மை பேராசிரியர் திருமதி பங்கஜம் அம்பிகைவேலு ,என் கல்லூரி நண்பர் ,குடும்ப நண்பர் அப்சல் நூரின்  மூலம் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது ,மிக்க மகிழ்ச்சி ...

இனிய நண்பர் கோவை -பாப்பநாயக்கன்புதூர். ..அருணாச்சலம் முருகானந்தம் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


Sivakumar Kumar is in Coimbatore,Pollachi,Udumalaipettai... Tamil Nadu.

கேள்வி : சிறுதொழில்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வாறு புதிய வாடிக்கையாளர்களை பெறுகின்றன?

என் பதில் :

22 வருடம் மார்க்கெட்டிங் தொழிலில் இருந்ததினால்

கிடைத்த அனுபவத்தில் சொல்கிறேன்.எந்த பயிற்சி வகுப்புகளிலும் வியாபாரம் செய்பவர்களுக்கு கொடுக்கின்ற முதல் அறிவுரை முதல் சந்திப்பில் எதிரில் இருப்பவர்களுக்கு கை குலுக்கி அவர்களிடம் விசிட்டிங் கார்டை கை மாறுவது தான் .

First impression is the best impression என்று ஆங்கிலத்தில் ஒரு

வார்த்தை நடை முறையில் புழக்கத்தில் உள்ளது .இதை

உங்கள் நடை முறை வாழ்க்கையில் பழக்கமாகவே வைத்து கொள்வது நல்லது .

உங்கள் தொழிலை பற்றிய ஐந்து நிமிட விளக்க உரையை உங்கள் விசிட்டிங் கார்ட் ஒரு நிமிடத்தில்

பிரதி பலிக்கும் .உங்கள் தொழிலை பற்றி உள்ள முழு வர்ணனையை உங்கள் இணையத்தளம் பிரதி பலிக்கும் .

முன் பின் பழக்கம் இல்லாத ஒருவரை நீங்கள் திடிரென்று சந்திக்க நேருகிறது ..இல்லது திருமண விழாக்களிலோ வேறு எங்கு வைத்தோ உங்கள் சொந்த பந்தங்களை பார்க்க நேருகிறது .

கண்டிப்பாக அனைவருக்கும் நீங்கள் என்ன தொழில் செய்கின்றிர்கள் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..ஆனால் இந்த விசிட்டிங் கார்டை அவர்களுக்கு நீங்கள் கை மாறும் பொழுது உங்களின் தொழிலை பற்றிய

ஒரு விவரம் அவர்களுக்கு போய் சேருகிறது .

உங்களின் வாழ்வியலில் இந்த பழக்கத்தை நீங்கள் கடை பிடிக்கும் பொழுது ..பல business sours களில் இதுவும் ஓரிரு துளிகளாக உங்கள் வியாபாரத்தை பெருக்க உதவும்

அது மட்டுமல்ல பல வருடங்களாக வியாபாரம் செய்தும் நூலகத்தில் உள்ள புத்தகங்களை போன்று விசிட்டிங் கார்டுகள் குறையாமல் அப்படியே இருந்தாலோ அல்லது ஒரு வருக்கு ஒரு விசிட்டிங் கார்ட் கூட இல்லாமல்

தொழில் செய்பவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அது தங்களின் தொழிலின் நேர்த்தியையும் தரத்தையும் வெட்ட வெளிச்சமாக படம் பிடித்து காட்டுகிறது🥰

👍📚📚📚சிவக்குமார்....V..K.... 

👍🏡🏘️🏚️வீட்டு கடன் பிரிவு 

👍🏡🏘️🏚️உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 

👍🏡🏘️🏚️அழைப்பு எண் :9944066681...

👍🏡🏘️🏚️.. :9944066681Email:siva19732001@gmail.com

👍🏡🏘️🏚️(Home Loans,Home Loans To NRIs) 

👍🏡🏘️🏚️Coimbatore,Pollachi, Udamalpet

👍🏡🏘️🏚️Mobile --09944066681 Call or sms

👍🏡🏘️🏚️Siva1973200@gmail.com