கேள்வி : வீட்டுத்தரைக்கு மார்பிள்ஸ், மார்போனைட், க்ரானைட் மற்றும் டைல்ஸ் - இதில் எது சிறந்தது?
என் பதில் :..
வீட்டுத் தரைகளுக்கு டைல்ஸ், மார்பிள்ஸ், மார்போனைட், கிரானைட் ஆகியவை அழகுக்காகவும் தரையை எளிமையாக சுத்தம் செய்வதற்காகவும் ஒட்டப்படுகின்றன.
இதில் மார்பிள்ஸ் மற்றும் கிரானைட் இயற்கையாகக் கிடைப்பவை. பூமிக்கு அடியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மதுரை,கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் அதிகம் கிடைக்கின்றன.
மார்போனைட் என்பது கிரானைட் அல்லது மார்பிள் போன்ற தோற்றமளிக்கும் டைல்ஸ் வகையாகும்.
டைல்ஸ் என்பது செயற்கையான முறையில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவதாகும்.
இயற்கையான முறையில் கிடைப்பதால் கிரானைட் மற்றும் மார்பிள்கள் சாதாரணமான வெளிப்புற வெப்பநிலைகளையே வீட்டின் உட்புறமும் பிரதிபலிக்கும்.
ஆனால் மார்போனைட் மற்றும் டைல்ஸ் ஆகியவை வெளிப்புற வெப்பநிலையை சற்று அதிகமாக வீட்டின் உட்புறம் பிரதிபலிக்கும்.
அதாவது டைல்ஸ் மற்றும் மார்போனைட் குளிர்காலங்களில் அதிக குளிரையும் வெயில் காலங்களில் அதிக வெப்பத்தையும் வீட்டினுள் பிரதிபலிக்கும்.
விலையின் அடிப்படையில் பார்த்தால் டைல்ஸ் வகைகள் ஒரு சதுர அடி₹30 முதல் கிடைக்கின்றன.
மார்போனைட் ஒரு சதுர அடி₹50 முதல் கிடைக்கின்றன.
கிரானைட் ஒரு சதுர அடி₹80 முதல் கிடைக்கின்றன.
மார்பிள் நிறத்தைப் பொறுத்து அதன் விலை மாறுபடும். குறைந்த பட்சம்₹200 முதல் கிடைக்கும்.
குறைவான செலவினை விரும்பினால் டைல்ஸ் வகைகளை தேர்வு செய்யலாம்.
விலை சற்று அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என விரும்பினால் கிரானைட் மற்றும் மார்பிள்களைத் தேர்வு செய்யலாம்.
வீட்டிற்கு டைல்ஸ் ஒட்டும் முன்பு இதை ஒரு முறை மனதில் வைத்துக் கொள்ளவும்.👍👍✒✒✒📚📚🏘🏘🏘
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக