கேள்வி : மென்திறன்கள் என்றால் என்ன ?..ஒரு சிறு விளக்கம் அளிக்க முடியுமா ..?
என் பதில் :..
மென்திறன்கள் என்பது ஒருவர் மற்றொருவரோடு பேசிப் பழகும் தன்மை, சமூகத்தில் பழகும் திறன், தொடர்புத் திறன், ஆளுமை பண்புகள், அணுகுமுறைகள், தொழில் சார்ந்த பண்புக்கூறுகள், உணர்வுகள் சார்ந்த திரன் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மேற்கண்ட பண்புகளைப் பயன்படுத்தி ஒருவர் தாங்கள் செய்யும் தொழிலில் யுத்திகளை கையாள்வது, குழுக்களில் பணிபுரியும் பொழுது அதற்கேற்ற பண்புகளை வெளிப்படுத்துவது போன்றவற்றின் மூலம் தங்களுடைய இலக்கை அடைவது அவசியமாகிறது.
காலின்ஸ் ஆங்கில அகராதியில், மென்திறன்கள் பற்றி நான் படித்து தெரிந்த கொண்ட விளக்கம் ..
"மென்திறன்கள் என்பது சில பணிகளுக்கு தேவைப்படும் ஏட்டு அறிவைச் சாராத பொது அறிவு அல்லது இயல்பு அறிவு சார்ந்த பண்புகள், மக்களை கையாளும் விதம் மற்றும் நேர்மறையான நெகிழ்வான அணுகுமுறை ஆகும்"
தொழில்நுட்ப அறிவில் சிறந்து விளங்கினாலும் மென்திறன்கள் அற்றவர்களை நிறுவனங்கள் ஏற்கத் தயங்குகின்றன.
2020 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப நிறுவனங்கள் நேர்காணலில் பின்வரும் மென் திறன்களை உடையவர்களையே பணிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.
தொடர்புத் திறன்
சுயமுயற்சி
தலைமைப்பண்பு
குழுப்பணியாற்றுதல்
பொறுப்பேற்று செயலாற்றுவது
பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காணும் திறன்
முடிவெடுக்கும் ஆற்றல்
கடினமான பணியையும் ஏற்று செய்யும் திறன்
நேரத்தை நிர்வகிக்கும் திறன்
பணியில் வளைந்து கொடுக்கும் தன்மை
பலருடன் கலந்துரையாடி ஒப்பந்தம் செய்து முடிவெடுக்கும் திறன்
இவற்றுள் உங்களுக்கு இருக்கும் மென்திறனை கண்டறிந்து அதை உங்கள் தற்குறிப்பில் இணையுங்கள்.
நேர்காணலில் உங்களுடைய மென்திறனைப் பற்றிய கேள்விகள் எழும்பொழுது உங்களுடைய மென்திறனை விளக்கும் படியான உங்கள் வாழ்க்கையில் நடந்த எடுத்துக்காட்டுகளைப் பகிருங்கள்.
உங்கள் திறமை உலகறிய மென்திறன் தேவை!
மென்திறன்கள் பயில்வோம்! சாதனை படைப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக