செவ்வாய், 17 நவம்பர், 2020

 கேள்வி : ஒரு செயலை செய்வதற்கு முன் கூறலாமா ..விவாதிக்கலாமா ..?


என் பதில் :...இதில் எனக்கு வாழ்க்கை கல்வி எனக்கு அதிகம் கற்று கொடுத்து இருக்கிறது ...


Online-ல் கூவாதே. நிஜத்தில் மாற்றத்தைக் கொண்டு வா....

முடிந்தவரை நீங்கள் செய்யப்போகும் செயல்களை பிறரிடம் கூறாதீர்கள். அவ்வாறு கூறும் பட்சத்தில் அதனுடைய வீரியம் குறைய வாய்ப்புள்ளது. இதை ஏன் கூறுகிறேன் என்றால், நாம் செய்யும் எந்த ஒரு செயலும், நம்முடைய வாழ்வில் மட்டுமே மாற்றத்தை கொண்டுவரும். அதற்கும் பிறருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒரு செயலை நாம் செய்து முடிக்கும் முன்னரே, பல கணக்குகளை போட்டுக் கொண்டு, பிறரிடம் வெளிப்படுத்தும்போது, ஒரு பொய்யான மனநிறைவு நம்முள் ஏற்பட்டுவிடும். அந்த மன நிறைவின் காரணமாக, நாம் செய்யப்போகும் செயலில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அது தனிப்பட்ட அழுத்தத்தை நம்முள் அதிகமாக ஏற்படுத்தும்.

வெற்றி பெறுவேன் என்பதற்கும், வெற்றி பெற்றேன் என்பதற்கும் வித்தியாசங்கள் அதிகம். 

எனவே, நீங்கள் வெற்றி பெறும் முன்பே நான் இதைச் செய்கிறேன், அதை செய்கிறேன், இப்படி இருக்கிறேன், அப்படி இருக்கிறேன், அதை சாதிப்பேன், இதைச் சாதிப்பேன் என்று அறைகூவல் விடுக்க வேண்டாம்.

வாழ்க்கை நாம் எதிர்பாராத ஒன்றை எப்பொழுதும் பரிசாக வைத்திருக்கும்.

சிறுக சிறுக செய்தாலும் சிறப்பாக செய்வதே, நம்மை ஒரு பிராண்டாக மற்றும் என்பதை நான் சமீபத்தில் உணர்ந்தேன்.😊.

உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க முற்படுங்கள். பிறருடைய அடையாளங்களோடு உங்களை அடைமொழியாக இணைக்க வேண்டாம்.

முயற்சி தான் நம்மை முன்னேற்றும்💪.

நன்றி ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக