வெள்ளி, 27 நவம்பர், 2020

கேள்வி : ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் எப்படி இருக்கும்..?

 கேள்வி : ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் எப்படி இருக்கும்..?


என் பதில் :..

இது வழக்கமான பதிவு அல்ல . எனவே tag ...களில் சில மாற்றம் ..

. விருப்பம் உளளவர்கள் மட்டும் கருத்துக்களை பதிவு செய்யவும் . நன்றி .!

தமிழ் வளர்க்கும் சமூக வலை தளங்களில் பேஸ் புக்,வாட்ஸாப்ப் ,இன்ஸ்ட்ராகிராம் ... முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் அறிவோம் .   இரண்டு  நாட்களுக்கு முன் ஒரு அனுபவ பதிவு இட்டிருந்தேன். ஒரு நல்ல பதிவர் ,வீட்டுக்கடன் விற்பனை  ,சமூக ஆர்வலர் , (நாமே சொல்லிக்க வேண்டியதுதான்) அழகு இரண்டு பக்கங்களையும் முன் வைப்பது தான். அந்த வகையில் நான் கவனித்த எனக்கு ஏற்பில்லாத சில விஷயங்கள் இங்கே. இந்தப் பதிவு யாரையும் குறிப்பிட்டதல்ல.. அப்படி நீங்கள் நினைத்தால் அது உங்கள் சொந்தக் கருத்தே.

 முன்னெச்சரிக்கையா சொல்லிக்க வேண்டி இருக்கு ஏன்னா பேசப் போற விஷயம் அப்படி.

பேஸ் புக்,வாட்ஸாப்ப் ,இன்ஸ்ட்ராகிராம்  இல் சில காலமாகப் புழங்கி வருவதில் எல்லா இடங்களையும் போல இங்கேயும் சத்தத்திற்கும் கூட்டத்திற்கும் தான் முக்கியம் இருப்பதாகக் கருதப் படுகிறது. எல்லா விஷயத்தையும் பாராட்டவும் திட்டவும் ஆட்கள் கிடைக்கிறார்கள். நல்ல நண்பர்களும் தமிழ் ஆர்வலர்களும் கிடைக்கும் அதே இடத்தில் அரை வேக்காட்டுத் தனமாக உளறுபவர்கள் சிலர் . எப்படி செய்தி/சினிமா விற்பவர்கள் வன்முறையையும் கவர்ச்சியையும் முன் வைத்து வியாபாரம் செய்கிறார்களோ அது போல் தன்னை விற்க முனைபவர்களையும் காண முடிகிறது. நாகரீகம் அற்ற  வார்த்தைகளில் திட்டுவது  சாதாரணமாக நடக்கிறது.

ஒரு விஷயத்தை யாராவது சொன்னால் முதல் கேள்வி.. “உனக்கு என்ன தகுதி இருக்கிறது அதை சொல்ல..?” என்பதாக இருக்கிறது. நமது அனுபவம்  பற்றி சொல்ல என்ன தனியா ஜர்னலிசம்  படிச்சுட்டு வரணுமா  ???

தன்னை மேதாவியாக நகைச்சுவையாளராகக் காட்டிக்கொள்ள இன்னொரு சக மனிதனைத் திட்டியும் சபித்தும் ஆக வேண்டுமா? இங்கே வெளிப் படுவது நகைச்சுவை பூசிய வெறுப்பு மட்டுமே. முகம் தெரியாத ஒருவர் மேல் காரணமே இல்லாமல் கொட்டப்படும் வெறுப்பின் அளவு நிஜமாகவே மலைக்க வைக்கிறது.
இதற்கு பொதுவான ஒரு காரணம் தன்னுடைய கருத்தை எல்லாரும் ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. ஆங்கிலத்தில் “Agree to Disagree” என்று சொல்வார்கள். எதிராளியின் மறுப்பை ஏற்கும் பக்குவம் இங்கே கொஞ்சமும் இல்லை. இது இங்கு மட்டும் என்று இல்லை. வீடுகளில், அலுவலகங்களில், அரசியலில் என்று எல்லா இடங்களிலும் பொதுவாக இருக்கிறது. என் கருத்தை ஏற்காதவன் எதிரி என்ற நினைப்பில் நாம் நிறைய நிழல் எதிரிகளை உருவாக்கி அவர்களோடு அட்டைக்கத்தி சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம். எதிர்கட்சிகள் இல்லாமல் சட்ட சபைகள் நடப்பதும் பாராளுமன்றங்கள் முடங்குவதும் போல . !
மொழி, அனுபவம், கருத்துக்கள் எல்லாவற்றிலும் இந்தப் பக்குவம் தேவை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமான சூழலில் வளர்கிறான். சிந்தனைகளும் நம்பிக்கைகளும் ஒருவருக்கொருவர் மாறுபடுவதுதான் இயற்கை. அதை மதிப்பதன் மூலம் நிறைய ஈட்டிகளில் நாம் வெள்ளைக்கொடி கட்ட முடியும்.
“நீ சொல்வதை நான் மறுக்கிறேன், ஆனால் அதைச் சொல்வதற்கான உன்னுடைய உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன் (Evelyn Beatrice Hall)” என்ற வரிகளை ஒவ்வொரு வரி எழுதும்போதும் பேசும்போதும் நினைத்துக் கொண்டால் ஆரோக்கியமான சண்டைகளும் அறிவுபூர்வமான வாதங்களும் பிறக்கும். இன்னுமொரு செக்ஷன் 66 A ...தேவையில்லை . நன்றி . வணக்கம் .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
வாழ்க்கை வளர்வதற்கு ...வாழ்வதற்கு ...
9944066681..







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக