புதன், 2 டிசம்பர், 2020

கேள்வி : கோவை நகரம் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்தது போன்று மதுரை ஏன் அடையவில்லை?


என் பதில் :..


கொங்கு மண்டலத்தின் காலச்சாரமே அதுதான்.


உழைப்பு, உண்மை, உயர்வு.


நாங்கள் ஆயிரம் வருசமாக ஒடுக்கப்பட்டவர்கள், எங்கள் நிலங்களை மன்னர்கள் பிடுங்கி கொண்டனர் என ஒப்பாரி வைத்து சோம்பேறித்தனமாக தூங்காமல் உழைப்பில் நம்பிக்கை வைத்து தொழிலில் நேர்மையை பின்பற்றி தான் முன்னேறியதோடு அல்லாமல் பல பேருக்கு வேலைவாய்ப்பும் கொடுத்து முன்னேற்றி விட்டு நாட்டுக்கு வருமான வரியையும் சரியான முறையில் செலுத்தி இன்று தமிழகத்தின் உற்பத்தி துறையில் 60% க்கும் மேல் கையில் வைத்திருப்பது கோவையை தலைமையிடமாக கொண்ட கொங்கு மண்டலம்தான்.


ஜிடி நாயுடு ஆரம்பித்து வைத்த தொழிற்புரட்சியை நா. மகாலிங்கம் உள்ளிட்ட தொழிலதிபர்கள் தொடர்ந்ததன் விளைவு இயந்திர உற்பத்தி, நூல் தொழிற்சாலை, ஆடை ஏற்றுமதி, கல்வி மற்றும் மருத்துவமனை என தமிழகத்தின் பின்னோக்கி தள்ளும் வண்ணம் கோவை உயர்ந்து நிற்கிறது.


கல்வி நிறுவனம் என்று பார்த்தால் PSG, ராமகிருஷ்ணா, குமரகுரு, கோவை வேளாண் கல்லூரி, அரசு மருத்துவ கல்லூரி, சட்ட கல்லூரி என கல்வி துறையில் முன்னணியில் உள்ளது.


மருத்துவ துறையில் அரசு மருத்துவமனை தொடங்கி, கோவை மெடிக்கல், psg மருத்துவமனை, குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கேஜி மருத்துவமனை, ராமகிருஷ்ணா மருத்துவமனை, ராயல் கேர் என உலகத்தரம் வாய்ந்த பல மருத்துவமனைகள் உள்ளது.


மருத்துவ சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டுவதில் கோவை தான் இந்தியாவிலேயே முதலிடம்.


தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மென்பொருள் தயாரிப்பு நகரம், சென்னைக்கு அடுத்ததாகவும் இந்த நகரம் அமைந்துள்ளது. நகரத்தில் உள்ள டைடல் பூங்கா மற்றும் பிற திட்டமிடப்பட்ட ஐடி பூங்காக்கள் தொடங்குவதன் மூலம் இந்நகரில் பி.பி.ஓ தொழிற்துறையினர் பெரிதும் வளர்ந்துள்ளனர். உலக அவுட்சோர்சிங் நகரங்களில் இது ஒரு இடத்தைப் பிடித்தது. விப்ரோ, ஃபோர்டு, ராபர்ட் போஷ் ஜிபிஎச், ஐபிஎம், டாடா கன்சல்டன்சி சர்வீஸ், டாட்டா எக்ஸ்சிஸி, டெல், சிஎஸ்ஸ் கார்ப் மற்றும் கேஜிஐஎஸ்எல் போன்ற நகரங்கள் இந்நிறுவனத்தில் உள்ளன.


கோயம்புத்தூர் கார் கூறு தொழிலில் மிகவும் நம்பகமான அவுட்சோர்சிங் இடங்களில் ஒன்றாக வெளிப்பட்டுள்ளது.


ஆசியாவின் மின் மோட்டார் நகரமாக கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் நிறைய சிறிய அளவிலான பொறியியல் நிறுவனங்கள் உள்ளன.


இங்கு சாதி சண்டைகள் இல்லை, தமிழன் தமிழன் என போராடும் கூட்டமும் இல்லை, பல தொழிற்சாலைகள் இருந்தாலும் கேரளாவை போல கொடி பிடித்து ஸ்டிரைக் செய்யும் அட்டைப்பூச்சி சங்கங்களும் இல்லை என்பதை இங்கு வந்து பார்த்தவர்களுக்கு நன்கு புரியும்.


அதே போல இங்கு யாராக இருந்தாலும் வாங்க போங்க என மரியாதையுடன்தான் அழைப்பார்கள்.அதே போல இங்கு ரவுடித்தனம் என்பதே மருந்துக்கு கூட கிடையாது.


மனித குலத்தை நாசமாக்கும் மொழிவெறி இனவெறியை தவிர்த்து அனைத்து தரப்பட்ட மனிதர்களையும் சகோதரர்களை போல அரவணைத்து செல்லும் தர்ம பூமி இது.


அதே போல நில அபகரிப்பு கட்டப் பஞ்சாயத்து எல்லாம் இங்கு அறவே இல்லை.


இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்றால் அது கோவை தான்.


ஆக சட்டம் ஒழுங்கு இங்கு மிகவும் சரியாக உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பதில் முன்னணியில் கோவை தான்


இந்த கட்டுப்பாடுமும் ஒழுக்கமும்தான் கோவை யின் வளர்ச்சிக்கு காரணம்.


இது முழுக்க முழுக்க இங்குள்ள மக்களின் உழைப்பால் விளைந்த பலன் இது.


இந்த வெற்றி இட ஒதுக்கீட்டாலோ, சமூக நீதியாலோ அரசாங்க ஸ்காலர்ஷிப்பாலோ இன்னும் பிற சலுகைகளாலோ வந்தது அல்ல முழுக்க முழுக்க உழைப்பு, திறமை மற்றும் நேர்மையால் மட்டுமே பெற்ற வெற்றி.


இதை சில கட்சிகள் தங்களின் ஆட்சிதான் காரணம் என கோவை மக்களின் உழைப்பையும் வெற்றியையும் திருட பார்க்கின்றன.


இந்த அரசியல்வாதிகளின் நிர்வாக திறமின்மையால் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சினையால் கோவை சந்தித்த பிரச்சனை இழப்பு கொஞ்சம் நஞ்சம் அல்ல. கோவையின் இருண்ட காலம் அது.


உண்மையில் எங்களால்தான் தமிழகம் இன்று முன்னணியில் உள்ளது என மேடைக்கு மேடை சவடால் விடும் கட்சிகளுக்கு ஒரேயொரு கோரிக்கை முடிந்தால் உங்களின் ஆட்சி நிர்வாக திறமையால் ஒரு ராமநாதபுரத்தையோ, திருவாரூரையோ இன்னொரு கோவையாக மாற்றி காட்டுங்களேன் பார்ப்போம்.


பிகு :- நான் கோவை நகரின் பெருமை பற்றி பேசியதற்கு சிலருக்கு ஏன் எரிச்சல் என புரியவில்லை. நான் மற்ற ஊர்களை இழிவுபடுத்த வில்லையே இதில். முடிந்தால் உங்கள் ஊரின் பெருமை பற்றி எழுதுங்கள் அது பிரயோஜனப்படும். அதை விடுத்து உங்கள் மொழி வெறி, இனவெறியை இந்த பதிலில் காட்டும் உங்களை கண்டால் பரிதாபம் தன் வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக