ஞாயிறு, 20 டிசம்பர், 2020

 கேள்வி : வாழ்க்கையில் ஏமாற்றியவர்களை மறப்பது எப்படி?


என் பதில் :...

இருப்பதிலேயே சுலபமான ஒன்று ஏமாற்றியவர்களை மறப்பது தான் என நான் நினைக்கின்றேன்.


என்னை ஏமாளி ஆக்கியவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


எனக்கு மனவலியையும் மனதளர்ச்சியும் ஏற்படும் அளவிற்கு ஏமாற்றியவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


என் தேவைக்கு அதிகமானதாக இருந்ததை ஏமாற்றாமல் என் இக்கட்டான சூழ்நிலையை அறிந்தும் ஏமாற்றியவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றியவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


அடுத்தவர்களை அடுத்தடுத்து ஏமாற்றிக்கொண்டே இருப்பவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


நான் மேற்குறிப்பிட்டபடி தன்னைத்தானே கேள்விக்கேட்டு அவர்களின் மீதுள்ள வெறுப்பை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி மறப்பது எளிது.


ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றியதைவிட இந்த வகையான வெறுப்புணரச்சி அதிகப்படியான மன உளைச்சலை நமக்கு ஏற்படுத்திவிடும்.


ஏமாற்றுபவர்களின் திறமை அதாவது மனிதர்களை கையாளும் முறைகளும் அதற்கு அவர்கள் பயன்படுத்தும் முன்னெச்செரிக்கை வழிகளும் நமக்கு தெரிந்திருந்தால் நாமும் ஏமாந்திருக்க மாட்டோம். அதனால் இந்த ஏமாற்றம் ஒரு படிப்பினை என எடுத்துக்கொண்டு அவர்களை விட்டு சற்று விளகி இருப்பது நம் உடலுக்கும் மனதுக்கும் நலம் சேர்க்கும்.


தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சின்னு இந்த ஏமாற்றத்திற்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டு நம்முடைய வேலையை பார்ப்பது சிறந்தது.


தன்வினை தன்னை சுடும் என்பார்கள் அதனால் அவர்களின் வினை அவர்களையே சுடும் அதனால் அவர்களை நாம் மறக்கனும்ன்னு அவசியமில்லை அவர்களே நம் பார்வைகளிலிருந்து மறைந்துவிடுவார்கள்.


நம்மை புத்திசாலி என்று தெரிந்ததுமே அல்லது நம்மை ஏமாற்றியதுமே அவர்களாகவே காணாமல் போய்விடுவார்கள்.


நாம் ஏமாறுபவர்களாகவும் இருக்கவேண்டாம்,ஏமாற்றுபவர்களாகவும் இருக்கவேண்டாம்,மறப்பவர்களாக இருப்பதைவிட மன்னிப்பவர்களாகவும் அதனால் கிடைக்கும் அமைதியான மனநிலையில் வாழ்ந்துவிட்டு போகலாம் என நான் நினைக்கின்றேன்.


நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக