புதன், 20 ஜூன், 2018

பெண் சுதந்திரம் ...அருமையான தலைப்பு ...கம்பள விருட்சம் ..கார்த்திக்கு எனது நன்றிகள் ...

முதலில் நமக்கு முன்னே நிற்கும் கேள்விகள் : பெண் சுதந்திரம் என்றால் என்ன? பெண்ணுக்கு எதற்காகச் சுதந்திரம் வேண்டும்? எதற்கெல்லாம் பெண்ணுக்குச் சுதந்திரம் தேவை? எப்பொழுதெல்லாம் தேவை? எந்த அளவிற்குத் தேவை அதாவது அதன் எல்லை என்ன? யாரிடமிருந்து அல்லது எதனிடமிருந்து சுதந்திரம் தேவை?
பெண் சுதந்திரம் என்கின்ற ஒரு சிந்தனை புதியது அல்ல. இது மிகவும் பழையது. பல இடங்களில் பல பேரால் அலசி ஆராயப் பட்டுள்ளது. இக்கேள்விக்கான விடைகளும் விளக்கங்களும் காலத்திற்குக் காலம் மாறுபடும். மனிதர்கள் கண்ணோட்டங்களில் மாறுபடும். புதுப்புது விதமான பாதிப்புகளும் நிகழ்வுகளும் இதற்கு ஓர் வித்தியாசமான பரிமாணத்தைக் கொடுக்கக்கூடும்.
நாட்டிற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது ஏற்பட்டதோ, அப்பொழுதே அடிமைத்தனம் என்ற சங்கிலியில் இருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணம் நம்மில் வந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. இது ஒரு நியாயமான எண்ணம் என்பதில் ஐயமே இல்லை என்பது ஒன்று கூடிய கரங்கள் அந்த நியாயப் போராட்டத்தில் அஹிம்சா வழியில் வெற்றி பெற்றது மூலம் பெறப்படுகின்றது. மனித மனங்கள் எப்பொழுதும் முறை கேடான அடிமைத்தனம் என்ற களையினைக் களைவதையே விரும்புகின்றன என்பதும், நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவைக்காக நாம் நியாயமாகப் போராடுவதில் தவறில்லை என்பதும் நன்கு விளங்குகின்றது. தானாகவே கிடைக்கக்கூடிய ஒன்றிற்கு சுதந்திரம் என்று பெயரிட்டு போரிடுவதுமில்லை. இது மனித இயல்பு.
இதிலிருந்து நமக்குத் தெரியவரும் உண்மையானது – எப்பொழுது பெண் சுதந்திரம் என்ற கருத்து வெளிவரத் துவங்கி யதோ, அப்பொழுதே பெண் ஏதோ ஒரு இடத்தில் சிக்கியிருப்பதும், அதிலிருந்து அவள் விடுபடத் துடிப்பதும் புரிகின்றது. நாட்டிற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் காந்தியடிகள் காலத்திற்கு முன்னரே கூட தோன்றியிருக்க நியாயம் உள்ளது. ஆனால், இந்த உணர்வைத் தட்டி எழுப்ப நமக்கு ஒரு மகாத்மாவும் அவருடன் கரம் சேர்த்த மற்ற தலைவர்களும் தேவையானார்கள். அதுபோல, பெண்ணடிமை பல நூற்றாண்டுகளாத் தொடர்ந்து இருந்திருக்கலாம். அக்காலங்களில் பெண்கள் அதை அடிமைத்தனமாக நினைக்காமல் இருந்திருக்கலாம். ஆணும் தான் பெண்ணை அடிமையாக நடத்துவதாக எண்ணாமலே இருந்திருக்கலாம். பரஸ்பரம் இரு பாலரும் இதுதான் தம் எல்லை என்ற வரையறையோடு வாழ்ந்திருக்கலாம். மேலும், அந்தக் காலங்களில் பெண்களுக்குச் சுதந்திரம் என்ற ஒரு உணர்வு தேவை இருப்பதற்கே வாய்ப்பு இல்லாமல் இருந்ததும் மன்னர்கள் காலத்தில் அந்தப்புரங்கள் தேவையான வசதிகள் அனைத்தும் நிரம்பியிருந்தன. வேண்டும் என்ற தேவைக்கே இடமின்றி இருந்தன. சாதாரண மகளிருக்கும் இல்லறத்தை நல்லறமாக நினைத்து வீட்டோடு வாழ்ந்து வந்ததில் அவர்களுக்கும் எந்த மனச்சுணக்கமும் இருந்திருக்க முடியாது. கடந்த நூற்றாண்டு வரை மகளிர் நிலை ஏறக்குறைய இப்படியே இருந்தது. மொத்தத்தில் பெண்ணினத்திற்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும் பாதுகாப்பும் அபரிமிதமாகவே இருந்ததைக் காணலாம்.
நாகரிகம் வளர வளர, பெண் வீட்டை விட்டு வெளியே காலடி வைக்கத் துவங்கியதும் தான் பெண் சுதந்திரம் என்பது உணரப்பட்டு அதன் தேவை அறியப்பட்டு, இந்த உணர்வு எண்ணமாகி, சிந்தனையாகி, இன்றைய காலக்கட்டத்தில் சொல்லாகி, செயலாக வடிவெடுத்துள்ளது. செயல்கள் வரவேற்கத்தக்க பல மாற்றங்களையும் தருவதைக் காண்கிறோம்.
கண்டிப்பாகப் பெண் சுதந்திரம் என்பது ஆண்பாலிடம் தான் சுதந்திரத்தை வேண்டுவது என்பது தெளிவாகின்றது. ஆண்கள் செய்யும் எல்லாச் செயல்களையும் தாமும் செய்யும் சுதந்திரம் வேண்டும் என்று எண்ணுவதாக இருக்கின்றது. இங்கு எந்த வகை ஆண்களிடம் சுதந்திரம் வேண்டும் என்பது முதலில் தெளிவாதல் வேண்டும். தன்னைப் பெற்றதந்தை, மணந்த கணவன், தான் பெற்றமகன், உடன் பிறந்த சகோதரன் என்று ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல கட்டங்களில் மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக என்று ஒரு பெண் பல விதமாக ஆண்பாலருடன் அவள் இணைந்து செல்லும் சூழ்நிலை அமைய வாய்ப்பு உள்ளது. இதனுடன், சமூகத்திலும் அவள் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் ஆண்களுடன் சேர்ந்து செயல்படும் சூழல்கள் அமைகின்றன. அவளது சுயமான சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும், செயலாக்கத்திற்கும் இந்த ஆண்பாலரிடமிருந்து ஒரு தடை என்று வரும்பொழுதுதான் அவளது இயல்பான நிலைக்கு ஒரு முட்டுக்கட்டு ஏற்படுவதை உணர்கிறாள்.
பெண்ணுக்குச் சுதந்திரம் என்று சொல்லும் பொழுதே, அவள் முதலில் தன்னை ஓர் பணிக்கு – அது குடும்ப நிர்வாகமாக இருந்தாலும் – தகுதியாக்கிக் கொண்டு தான் அதற்காகப் போராடலாம் என்பது உண்மை. அவளது சிந்தனையும், குறிக்கோளும், திட்டங்களும் தெளிவாக இருத்தல் வேண்டும். இதற்கு நிகராக ஆண்களும் அதற்கு உறுதுணையாய் இருந்து அவள் காரியங்களில் கை கொடுக்க வேண்டும். சுதந்திரம் அளித்தல் என்பது அவர்களிடமிருந்து விலகுதல் என்பது அல்ல. இந்தச் சிந்தனையின் வெற்றிக்கு ஆண்களிடம்தான் அதிகமான எதிர்பார்ப்புகள், ஆதரவுகள் தேவைப் படுகின்றன – பெண் எண்ணங்களை மதித்தல், அடிப்படை யான இச்சிந்தனையை அங்கீகரித்தல், உடன் உதவுதல் – போன்றவை ஒரு ஆணிடம் இருந்தால் தான் பெண் சுதந்திரம் என்ற கருத்து வெற்றி பெறக்கூடும்.
ஒரு பேருந்துப் பயணம் நமக்கு வாழ்க்கையில் எத்தனை விஷயங்களைக் கற்றுத் தருகின்றது. ஒரு பெண் பேருந்தில் ஏறியதும், ஓர் ஆடவன் அருகில் மட்டும் ஓர் இருக்கை காலியாக இருந்தால், அப்பெண் எத்தனை முற்போக்கு சிந்தனை கொண்டவளாக இருந்தாலும் ஏன் உடனே அங்கே சென்று அமரத் தயங்குகிறாள்? அவள் சுதந்திரத்தை அந்த ஆடவனா பறித்துக் கொண்டான்? இதே நிகழ்ச்சி சில இடங்களில் வேறு விதமாக நிகழ்கிறது. அங்கே ஆண் பெண் இருபாலருக்கும் இடையே ஓர் பாகுபாடு என்பது சாதாரணமாக நிகழ்வதில்லை. அப்பொழுது அந்தப் பெண் மிகவும் இயல்பாக அந்தக் காலி இடத்தில் சென்று அமர்கிறாள். திருமண விழாக்களில் பந்திகளில் பாருங்கள். ஓர் அந்நிய ஆடவன் அருகில் இடம் இருந்தாலும், ஓர் பெண் ஓர் இருக்கையாவது விட்டுத்தான் அமர்கிறாள். அவ்வாறு அடுத்த இருக்கையில் அமர்வது அவளுக்குச் சங்கடமா அல்லது அந்த ஆணுக்குச் சங்கடம் என்று அவள் நினைக் கிறாளா? இதுதான் நம் உள்ளே ஊறியுள்ள நமது பாரம்பரிய கலாச்சாரம். கேட்காமலே ஆண் சமூகத்திற்குச் செலுத்தும் ஓர் மரியாதை. யார் சொல்லியும் போராடியும் வரவில்லை இந்தப் பாரம்பரியம். அதுபோல் தான் வரவேண்டும் பெண் சுதந்திரம்.
அரசியலில் கூட முழுமையாகப் பெண் சுதந்திரம் பெறப்பட்டு, பெண் தலைமைகள் கூட வந்த பின்னர் இன்னும் பெண் சுதந்திரத்திற்குப் போராட அவசியமே இல்லை. பெற்றசுதந்திரம் ஆரோக்கியமான முறையில் பயன்பட வேண்டும்.
பெண் சுதந்திரத்தின் எல்லை நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, நபருக்கு நபர் மாறுபடலாம். அதை நிர்ணயிக்க முடியாது. சுதந்திரம் கருத்தை வெளியிடுவதில் தேவைப்படலாம். அதற்கு உடன் உள்ள ஆண் அங்கீகாரம் தேவை. குழந்தை வளர்ப்பில் ஆண் என்றும் பெண் என்றும் பெரும்பாலும் பெற்றோர் பாகுபாடு காட்டாத பட்சத்தில், கல்வி அளிப்பதிலும் தற்போதைய காலத்தில் வேறுபாடு செய்யாத பட்சத்தில், இருபாலருக்கும், சிந்தித்துச் செயல்படும் பருவம் வந்ததும், அதை வெளிப் படுத்த, செயலாற்ற, இணையான சுதந்திரம் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. ஆனால் அவர்கள் அச்சுதந்திரத்தை வெளிப்படுத்தலிலும் செயலாக்கத்திலும் வழி பிறழாது இருக்க நெறிப் படுத்தும் ஆலோசனை களும், அறிவுரைகளும் தேவைப்படுகின்றன. அதனைக் கண்டிப்பாக அவர்கள் ஏற்றுக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.
ஊடகங்களிலும், பிரமிக்கத்த வகையில் பெண் சுதந்திரம் பரந்து பேசப்படுகின்றது; காணக் கிடக்கின்றது. ஆனால் அது கலாச்சாரக் கேட்டிற்கு வழி நடத்தாமல், சுணக்கமான வற்றைத் தவிர்த்து ஆரோக்கியமான பாதையில் அழைத்துச் செல்வதாய் இருத்தல் வேண்டும். தமிழ் பேச்சினைத் தங்கள் மூச்சென்று நம்மைப் பிரம்மிக்க வைக்கும் பெண்களும், ராக மாளிகைகளில் அழகாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் மங்கையரும், மக்கள் அரங்கங் களில் உண்மைகளையும் உயர் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளும் சிறுமியர் முதல் அனுபவம் பெற்ற முதிய மார் வரை இன்றைய நாளில் மங்கையர் உலகம் அடைந்துள்ள வளர்ச்சி நிச்சயம் இன்று இருந்தால் பாரதியைக் கூட அவன் கண்ட புதுமைப்பெண்ணாய் அசர வைக்கும். ஒருபுறம் இப்படி இருக்க, மறுபக்கம் ஏன் சீரழிக்கும் ஆட்டங்களும் தலை குனிய வைக்கும், ஒழுக்கக் கேடுகளுக்கு வழி வகுக்கும் நிகழ்ச்சிகளும்? விழித்துக் கொள்வோம். இதுவல்ல நாம் வேண்டும் பெண்சுதந்திரம்.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் பெண் சுதந்திரத்தை எதிர்பார்க்கலாம். தவறில்லை. ஆனால், அதுவும் தன்னை இதுகாறும் காத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர் மூலம் நிகழ்வதில் என்ன தவறு? அவர்கள் ஆலோசனையும், அறிவுரையும் இதுபோன்றமுக்கிய தீர்மானங்களில் அவளுக்கு நிச்சயம் தேவை.
உயர்கல்வி பெறுவதில் பெண் சுதந்திரம் தேவை. ஆனால், பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற சில சிக்கல்கள் காரணமாக அவளது இலட்சியங்களிலும் கனவுகளிலும் தேக்கம் ஏற்படலாம். சுதந்திரம் என்றபெயரில் பெரியோரைக் கீழ்ப்படியாமையும் ஆதிக்கம் செய்யவும் கூடாது.
மாணவப் பருவத்தில் சுதந்திரம் என்ற பெயரில் சில பள்ளி, கல்லூரி மாணவிகள் போகும் பாதைகள் தற்காலங்களில் அச்சுறுத்து வதாய் உள்ளன. இந்தத் தவறுகளுக்கு யார் பொறுப்பு? அவர்களை யார் திருத்துவது? இது போன்ற வினாக்களுக்கு விடை அளிப்பது சமுதாயத்தின் தலையாய கடமை. இன்றைய பெரியோர்களும் சான்றோர்களும் கூட ஊடகங்கள் மூலம் பெண் குலத்திற்கே உண்டாகும் தலை குனிவான நிகழ்ச்சிகளைக் கண்டும் காணாமல் போவதற்குக் காரணம் என்ன?
அயல்நாடுகளில் வாழும் நம் மக்கள் பாரதக் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் சுவாசிக்க அவ்வப்பொழுது தேக்கி வைத்த கனவுகளுடன் தாயகம் வருகின்றனர். அவர்களே நம்மிடையே சீர் கெட்டு வரும் சில நிகழ்வு களைக் கண்டு மனம் வருந்துவது நமக்குப் பெரும் தலைகுனிவே.
பெண் சுதந்திரம் என்றும் ஆக்கப்பூர்வமாக ஆரோக்கியமாக இருக்கட்டும். மென்மையும், நளினமும், பணிவும், அடக்கமும் பெண்மைக்கு உரிய பண்புகள். என்றும் அவற்றைப் பேணிக் காப்போம்.
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களைச் சீராக்குவோம்!
வாழ்வின் வண்ணக் கனவுகளில் சிதறல்கள்
இல்லறம் என்ற வழித்தடம் பிசிறானது
கையில் ஓர் பெண் குழந்தை
எதிர்காலமே ஓர் கேள்விக்குறி!
கேள்விக்குறி ஆச்சரியக் குறியானது
ஆச்சரியக்குறி தொடர்குறியானது
தொடர்குறி முற்றுப்புள்ளியாகும் வரை
வாழ்வெனும் கடலில் எதிர் நீச்சலிட்டு
கரை சேர்வதே குறிக்கோளாய் அமைந்தது!
வாழ்வெனும் பாடம் கற்பிக்கும் செய்திகள் தான்
எத்தனை எத்தனை
புடம் போட்டு மாற்றி வரும் நிகழ்வுள்தான்
எத்தனை எத்தனை
அனுபவங்கள் வெளிப்படுத்தும் நியாயங்களையும்
நெறிப்பாடுகளையும் பகிர்ந்து கொள்ள
அமைந்த வாய்ப்பிற்கு நன்றி!
மாதம் ஒருமுறைசந்திப்போம்
வெளிவரும் கருத்துக்களை வாதிடுவோம்
அது குறித்து வரும் எதிர்வாதங்களை அலசுவோம்
ஆக்கபூர்வ சிந்தனைக்கு பலம் சேர்ப்பதே
நோக்கமாகக் கொள்வோம்!
முதல் மாதச் சிந்தனையாகப் பெண் சுதந்திரம் இருக்கட்டும்
சுதந்திரமாக இருபாலரும் சிந்திப்போம்
அவரவர் அனுபவங்கள் பேசட்டும்
உள்ளத்து உணர்வுகள் வெளிப்படட்டும்! வணக்கம்!
என்னை பொறுத்தவரையில் ...கட்டிய மனைவியே ...என்றாலும் அவர்களின் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது ...அவரை நம்பியிருக்கும் கணவரின் வாழ்க்கையின் முடிவுவரை கைவிடாத நம்பிக்கையுடன் .....அது தான் பெண்மையின் ..பெண் சுதந்திரத்தின் அழகும்...மதிப்பும் கூட ....வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681


இலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்! ( Free Credit Score Report )

சமீபகாலமாக ‘உங்களது கிரெடிட் ஸ்கோரைத் தெரிந்துகொள்ளுங்கள்’ அல்லது ‘உங்களது கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் உங்களது கடன் தகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என SMS மூலமாகவும், இமெயில் மூலமாகவும் பல்வேறு தனியார் கிரெடிட் ஏஜென்சிகள் தகவல் அனுப்பிவருகின்றன. ‘இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? வாங்கித்தான் பார்ப்போமே!’ என்று இந்த நிறுவனங்கள் அனுப்பும் லிங்கை (Link) நாம் க்ளிக் செய்தால், பல பிரச்னைகளை மாட்டிக்கொள்ள வேண்டி யிருக்கும் என்பது பலருக்கும் தெரிவதேயில்லை.

இலவச கிரெடிட் ஸ்கோர் அளிக்கும் நிறுவனங்கள் அளிக்கும் லிங்கைச் சொடுக்கி னால், முதலில் நம் பான் நம்பர் கேட்கும். இங்கேதான் நாம் உஷாராக வேண்டும். இலவச கிரெடிட் ரிப்போர்ட்டுக்காக மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் (Third Party) நமது முக்கிய விவரங்களைத் தெரிவிக்கும்போது அந்த நிறுவனங்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைத் தெ ரிந்து கொள்ள வேண்டிய அவசியமோ அல்லது விருப்பமோ உங்களுக்கு இருந்தா ல், அவசரப்பட்டு இதுபோன்ற மூன்றாம் தரப்பிடம் நம்மைப் பற்றிய விவரங்களை அளிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, கடன் தகவல் நிறுவனங்களிடமிருந்து (Credit Information Companies – CIC) அதனை நீங்கள் நேரடியாகவே பெறலாம். டிரான்ஸ்யூனி யன் சிபில் (Trans Union CIBIL), ஈக்­யூஃபேக்ஸ் கிரெடிட் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் (Equifax), எக்ஸ்­பீ­ரியன் (Experien) மற்றும் ஹை மார்க் (High Mark) ஆகிய கிரெடிட் ஏஜென்ஸி நிறுவனங்கள்மூலம் ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாகவே நீங்கள் கடன் ஸ்கோரைப் பெறலாம்.
ஏற்கெனவே கிரெடிட் கார்டுமூலம் கடன் வாங்கியவர்கள், இதர தனிநபர் கடன், கார் கடன், வீட்டுக் கடன் ( Home Loan )  வாங்கித் திரும்பச் செலுத்தியவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் கிரெடிட் ஸ்கோர் ( Credit Score ) என்ன என்கிற அறிக்கையை கிரெடிட் ஏஜென்ஸி ( Credit Agency ) நிறுவனங்கள் மூலம் இலவசமாகப் பெறுவதற் கான உத்தரவை ரிசர்வ் வங்கி ( Reserve Bank ) கடந்த 2017 ஜனவரியில் நடை முறைப்படுத்தியது.

இந்தியாவில் இயங்கும் ஒவ்வொரு கிரெடிட் ஏஜென்சி நிறுவனமும் தனித்தனியே ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக கிரெடிட் ரிப்போர்ட் தரவேண்டும் என்பதால், ஒருவர் ஓராண்டில் மொத்தம் நான்கு ரிப்போர்ட்டுகளை இலவசமாக பெற முடியும்.அதேசமயம், சில மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு க்கு ஒருமுறைக்குமேல் இலவச கிரெடிட் ரிப்போர்ட்டுடன், மேலும் சில சேவைக ளையும் சேர்த்து வழங்குகின்றன. “வாடிக்கையாளர்கள் அவர்களது கிரெடிட் நிலை மையைப் புரிந்துகொள்ளும் விதத்திலும், அவர்களது கிரெடிட் ஸ்கோரை உயர்த்து வதற்கான வழிகாட்டுதலையும் அளிக்கின்றன. ஆனால், கடன் தகவல் நிறுவனங் கள் (CIC) இந்தச் சேவையை அளிப்பதில்லை. மேலும் தேர்டு பார்ட்டி நிறுவனங்கள், நீங்கள் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைத் தெரிந்துகொள்ள எத்தனை முறை வேண் டுமானாலும் அவர்களது தளங்களுக்குச் செல்ல அனுமதிக்கின்றன. இதற்குக் கட்டு ப்பாடு எதுவும் விதிப்பதில்லை.

எச்சரிக்கையான அணுகுமுறை அவசியம்

இத்தகைய வசதிகள் ஒருபக்கமிருந்தாலும், மூன்றாம் தரப்பு நிறுவனங்கள், வாடிக் கையாளர்கள் கேட்கும் கிரெடிட் ஸ்கோரை தெரிவிப்பதற்காகக் கேட்டு பெறும் அவ ர்களது பான் எண், அடையாள சான்று, முகவரி, மொபைல் எண் மற்றும் இ-மெயில் விவரங்களை மற்றவர்களுக்கு ரகசியமாகத் தெரிவிப்பதாகவும், அவற்றைத் தவ றாகப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இக்குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. ஏனெனில், இன்றைய உலகம் டேட்டா உலகம். வாடிக்கை யாளர்களின் டேட்டாக்களைப் பெறுவதற்காக த்தான் இன்று பல பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. இத்தகைய சூழலில் நமது தகவல்கள் பிற நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் சம்மதம் இருந்தால்தான் அவர்களது கிரெடிட் ரிப்போர்ட்டை, தாங்கள் தொழில் தொடர்புகள் வைத்துள்ள மூன்றாம் தர ப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதாகக் கடன் தகவல் நிறுவனங்கள் (CIC) தெரிவிக்கின்றன. அதேசமயம், நீங்கள் ஒருமுறை அந்த சம்மதம் தெரிவித்துவிட் டால், அதன்பின்னர் உங்கள் தகவல்கள் மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் தவறாக பயன்படுத்தப்பட்டால், அதற்கு நீங்கள் கடன் தகவல் நிறுவனங்களைக் குறைகூற முடியாது.
இலவச கிரெடிட் ஸ்கோர் அளிக்கும் நிறுவனங்களிடம் நமது முக்கிய விவரங்க ளை அளித்தால், நமக்குத் தேவையற்ற இ-மெயில்கள், எஸ்.எம்.எஸ்-கள், போன் கள் வரவாய்ப்புள்ளன. எனவே, இத்தகைய நிறுவனங்களின் சேவையைப் பெறும் முன் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனை களை நன்கு படித்துத் தெரிந்து கொ ண்டு, அதன்பின்னரே அந்த நிறுவனங்களின் தளங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டும்.

உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும்முன், அந்த மூன்றாம் தரப்பு நிறுவனம் ஏதாவது கடன் தகவல் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ளதா என்ப தை உறுதி செய்துகொள்ள வேண்டும். எந்தக் கடன் தகவல் நிறுவனத்துடன் அது தொடர்பு வைத்துள்ளது, வாடிக்கையாளர்கள் விரும்பா விட்டால், எந்த நேரத்திலும் அதன் சந்தா பதிவை ரத்து செய்துவிட்டு விலகவோ அல்லது அவர்களைப் பற்றிய தகவல்களை அந்தத் தளத்திலிருந்து நீக்கவோ செய்வதற்கான வாய்ப்புள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆக, சிபில் தவிர எந்த நிறுவனமாக இருந்தாலும், அந்த நிறுவனம் அளிக்கும் இலவச கிரெடிட் ஸ்கோரைப் பெற நாம் முயற்சி எதுவும் செய்ய வேண்டியதில்லை. அப்படி வாங்கப் போய், சிக்கலிலும் மாட்டிக் கொள்ள வேண்டியதில்லை!

என்றும் அன்புடன்
உடுமலை சிவக்குமார்
வாகன கடன் பிரிவு ..வீட்டுக்கடன் கடன் பிரிவு  ...9944066681

செவ்வாய், 19 ஜூன், 2018

வளரும் வாடகை ஓட்டுனர்களுக்கு ...நற்செய்தி ...

தமிழர்கள் தயாரிக்கும் எலெக்ட்ரிக் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

டாடா நிறுவன ஓப்புதலுடன் கோவையை சேர்ந்த நிறுவனம் சா்ரபில் டாடாட நேனோ எலெக்ட்ரிக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் முதற்கட்டமாக ஓலா நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் குறைந்த விலையில் மக்கள் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவையை மையமாக கொண்டு இயங்கும் ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனம் புதிய ஜெயம் நியோ எலெக்ட்ரிக் டாடா நேனோ என்ற காரை கடந்த பிப்., நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகப்படுத்தினர். இந்த காரை அந்நிறுவனம் டாடா மோட்டார் குழுமத்துடன் இணைந்து தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. அதன் படி ஜெயம் நிறுவனம் டாடா நிறுவனத்திடம் இருந்து டாடா நேனோ காரின் பாடி ஷேல்லை வாங்கி அதனுடன் தங்கள் தயாரித்த மற்ற அண்டர் ஹூட் பாகங்களை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். முற்றும் எலெக்ட்ரிக்கில் இயங்கும் இந்த காரில் 40 வோல்ட் எலெக்ட்ரிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது 23 எச்பி மோட்டாருடன் ஒரு முழு சார்ஜில் 200 கிலோ மீட்டர் வரை இயங்கும் திறன் கொண்டது.

இந்த கார் முதற்கட்டமாக கேப் நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க ஜெயம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமான ஓலா கேப்ஸ் நிறுவனத்திற்காக 400 வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த கார்களை ஐதராபாத்தில் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஓலா கார்களுக்கு என தனி கலர் வண்ணங்களான வெள்ளை மற்றும் பச்சை கலரில் தான் இந்த காரின் பாடியும் அமைக்கப்பட்டுள்ளது. இது பலே நிறுவனங்கள் ஓலாவிற்கு கார்களை வழங்கியுள்ளது. இந்த காரில் டாடா நிறுவனத்தின் நேரம் பேட்ஜ் இல்லை. ஜெயம் நிறுவனத்தின் பேட்ஜ் தான் உள்ளது. ஜெயம் நிறுவனம் தான் இந்த காரை முழுமையாக தயாரித்து விற்பனை செய்கிறது. டாடா நிறுவனம் இந்த காருக்கான பாடி ஷேல்லை மட்டுமே வழங்குகிறது.

இந்த புதிய ஜெயம் நியோ எலெக்ட்ரிக் காரில் எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங், ஏசி, முன்பக்க கதவுகளில் பவர் விண்டோ, சென்ட்ரல் லாக்கிங், ப்ளூடூத் ஆகிய வசதிகள் இருக்கிறது. மேலும் அக்ஸ் இன், மல்டி இன்போர்மேஷன் டிஸ்பிளே மற்றும் 12 வோல்ட் பவர் சாக்கெட் இருக்கிறது. இந்த காருக்கான பவர் டிரைன் எலெக்ட்ரா இவி என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் தான் டிகோர் மற்றும் டியாகோ ஆகிய கார்களுக்கான எலெக்டரிக் டிரைவ் சிஸ்டத்தை வழங்குகின்றனர்.

தமிழகத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் பல பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் கார்களுக்கு இணையான கார்களை வெற்றிகரமான தயாரித்து தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது. ஏற்கனவே ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பெங்களூரு, கோவை, கரூர், திருச்சி, சேலம் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதியை ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் காரிடாராக அறிவித்துள்ள நிலையில் அப்பகுதிகளில் பல ஆட்டோ மொபைல் தயாரிப்பு தொழிற்சாலைகள் உருவாகி வருகிறது. இதன் மூலம் தமிழக இளைஞர்கள் ஆட்டோமொபைல் துறையில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கோவையை சேர்ந்த நிறுவனம் ஒன்று எலெக்ட்ரிக் சூப்பர் பைக் ஒன்றை தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியாகும் செய்திகள் தமிழகத்தில் கொங்கு மண்டல பகுதிகள் அதிக அளவில் ஆட்டோமொபைல் துறையில் வேகமாக வளர்ச்சி பெற்று வருவதை பார்க்க முடிகிறது.

உடுமலை சிவக்குமார் ...
வாகன கடன் ...வீட்டுக்கடன் ..
9944066681

திங்கள், 18 ஜூன், 2018

தமிழ் தம்பியின் கேள்வி ...?????
ஏந்த ஒரு நாட்டிற்கும் சாத்தியமற்றதே தற்சார்பு பொருளாதாரம் ...
அதற்கு பதில் ...கலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு?

கலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு?

 கலப்பு பொருளாதார முறையிலிருந்து தாராளமய பொருளாதார முறைக்கு இந்தியா மாறி 23 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

1992ல் தாராளமயக் கொள்கை இந்தியாவில் நடைமுறைக்கு வந்தபோது பல பொருளாதார நிபுணர்களும், தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் அக்கொள்கையை வானளாவப் புகழ்ந்தார்கள்.  

அனைத்தும் தனியார் மயம் ஆக்கப்படுவதால் போட்டி ஏற்படும்... தரமான பொருட்கள் உற்பத்தி ஆகும்.... நிறுவனங்கள் தங்களது போட்டி நிறுவனங்களைச் சமாளிக்க விலையைக்  குறைக்கும்... இது  நுகர்வோர்களாகிய மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்றெல்லாம் விளக்கம் கொடுத்தார்கள். ஆனால் நடந்தது என்ன? பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரில் மத்திய அரசு இரண்டு வித இந்தியாவை உருவாக்கியதுதான் மிச்சம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஒன்று: ஒரு வீதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அடுத்த வீதிக்குச் செல்வதற்குக்கூட சொந்த தனி விமானத்தைப் பயன்படுத்தும் மகா கோடீசுவரர்களின் இந்தியா.

மற்றொன்று: தங்களது குடிசையில் கழிப்பிட வசதி கூட இல்லாமல் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று காலைக்கடன்களை கழிக்கும் பரம ஏழைகளின் இந்தியா என அவர்கள் வகைப்படுத்துகின்றனர்.

           இது போன்ற கருத்தை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் கூறியிருக்கிறார். ஆனால் இப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்கியது 60 ஆண்டுகள் தொடர்ச்சியாக               நாட்டை ஆண்ட காங்கிரஸ்தான் என்ற செய்தியை அவர் கூறவில்லை.
உள்நாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கும் நமது அரசுகள், ஏழைகள் மீது கரிசனம் காட்ட மறுகின்றன.   இதுதான் உலக அளவில், இந்தியாவில் ஏழைகளின் சதவீதம் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்கின்றனர் இடதுசாரிகள்.
    வெளிநாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு கரிசனம் காட்டுவதில் நமது அரசுகள் எவ்வளவு முனைப்போடு செயல்படுகின்றன என்பதை கீழ்க்காணும் நிகழ்வுகள் விளக்கும்.
      ஸ்ரீபெரும்புதூரில் சமீபத்தில் மூடப்பட்ட நோக்கியா நிறுவனம் 2005ல் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போது இந்நிறுவனத்தின் மொத்த முதலீடு ரூ.675கோடி.         இதற்காக மதிப்புக்கூட்டு வரி, மத்திய விற்பனை வரி, உள்ளூர்வரி, லெவி, விற்பனை வரி, டர்ன் ஒவர் வரி, ஆக்ட்ராய்வரி, எலக்ட்ரிசிட்டி செஸ் போன்றவற்றில் சலுகை பெற்றது.
     2006 ல் தனது உற்பத்தியை தொடங்கிய நோக்கியா நிறுவனம் மதிப்புக் கூட்டுவரி, மத்திய விற்பனை வரி ஆகிய இரண்டின் மூலமாக மட்டும் 2008ல் செலுத்தியிருக்க வேண்டிய       தொகை ரூ.638 கோடி. ஆக தான் செய்த முதலீடு அளவுக்கு இரண்டே வருடங்களில் அரசின் வரிச்சலுகை மூலம் லாபம் அடைந்திருந்தது. மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தான்      சொன்னபடி நோக்கியா நிறுவனம் நடந்து கொள்ளவில்லை. 12000 பேருக்கு வேலை தருவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால் 4500 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியது.  தற்போது       இந்நிறுவனம் அரசுக்கு செலுத்தவேண்டிய வரியான ரூ 2000  கோடியை  பாக்கி வைத்தத்தோடு தொழிலாளர்களுக்கும்  பெப்பே காட்டிவிட்டு  நிறுவனத்தை மூடிவிட்டது.   

ஹீண்டாய் நிறுவனம் ரூ.100 கோடி பெறுமானமுள்ள 543 ஏக்கர் நிலத்தை ரூ.40 கோடிக்குப் பெற்றது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 1லட்சம் கார்களை உற்பத்தி செய்வதாக கூறியிருந்தது. ஆனால் இன்றைய நிலவரப்படி அந்நிறுவனம் ஆண்டுக்கு  6லட்சம் கார்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. தொழிலாளர்களின் எண்ணிக் கையோ முன்பு இருந்ததைவிட இப்போது மிகவும் குறைவு, தண்ணீர், மின்சாரம், திடக்கழிவு வெளியேற்றும் டேங்க், வேதியியல் கழிவுகளை வெளியேற்ற ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவற்றை அரசே ஏற்பாடு செய்து  தந்தது. இவை மட்டுமின்றி பல்வேறு வரிச்சலுகைகளையும் அரசு தந்தது.

இப்படி பல்வேறு சலுகைகளை பல்வேறு துறைகளைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு வாரி வழங்கியுள்ளது. சென்னை மாநகரைச் சுற்றி மட்டும் 300 கொரிய நிறுனங்கள், 170ஜப்பான் நிறுவனங்கள், 18 தைவான் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு அரசின் கரிசனம் எப்போதும் உண்டு.  
வருடத்திற்கு லட்சக்கணக்கான கோடிகளை ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளாக அரசு அளித்து வருகிறது. வரிச்சலுகைகைளப் பெற்ற கார்பரேட் நிறுவனங்கள் அச்சலுகையால் கிடைத்த உபரி லாபத்தை திரும்பவும் இந்தியாவிலேயே முதலீடு செய்தாலாவது வேலைவாய்ப்பு பெருகும் என்று நாம் ஆறுதல் கொள்ளலாம். ஆனால் உபரி வருமானம் பல்வேறு நாடுகளுக்கு முதலீடாகச் சென்று விடுகிறது.

இந்த உண்மையெல்லாம் மத்திய அரசுக்கு நன்கு தெரிந்திருந்தும் கார்பரேட் நிறுவனங்கள் மீது காட்டும் கரிசனத்தை மட்டும் கைவிடவே இல்லை.  அமெரிக்கா பின்பற்றும் கொள்கைகளையே இந்தியாவும் பின்பற்றுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.

முதலாளித்துவ பொருளாதாரத்தையும்,  நுகர்வு கலாச்சாரத்தையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் இன்றைய நிலை என்ன?
14.5 லட்சம் கோடி டாலர் கடன் சுமையால் அமெரிக்கா தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் கணக்கை கேட்டால் தலை சுற்றி விடும். இதன் மதிப்பு 6கோடி கோடி ரூபாய். எதிலும் நெம்பர் 1 ஆக காட்டிக்கொள்ளத் துடிக்கும் அமெரிக்கா கடன் சுமையிலும் உலக அளவில் நெம்பர் 1 ஆக இருக்கிறது. 1970களில் இந்நாட்டின் கடன் வெறும் 300 கோடி டாலர்தான். ஆக 40 ஆண்டுகளில் அந் நாடு கடனை வாங்கிக் குவிப்பதில் பெரும் முனைப்பு காட்டியிருப்பதை நம்மால் உணர முடிகிறது.

கடந்த 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியால் 4.5 கோடி பேர் பரம ஏழைகளாகி விட்டனர். வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நுகர்வு  கலாச்சாரத்திற்கு  அடிமையானதால் கோடிக்கணக்கான மக்கள் பெரும் கடனாளிகள் ஆகிவிட்டனர்.

இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையின் பிடியில் இருந்தாலும் தனது பொருளாதார கொள்கையை அமெரிக்கா மாற்ற வில்லை. திவாலடைந்த நிறுவனங்களுக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கும் லட்சக்கணக்கான கோடிகளை சலுகையாக வாரி வழங்கியது. திவாலடைந்த நிதி நிறுவனங்களை அரசு தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வராமல் இலவசமாக கோடிகளை அந்நிறு வனங்களுக்குக் கொட்டியது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே உள்ள மகா கோடீஸ்வரர்களுக்கே மீண்டும் இலவசமாக கோடிகளைக் கொட்டியது. வால்ட்ஸ்ட்ரீட் போராட்டம் வெடித் ததற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.
அமெரிக்காவை நம்புவது ஏன்?

அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் நசிவைச் சந்தித்த போதிலும் இந்தியா, சீனா, ஜெர்மன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா என்ற என்ஜினையே பின்தொடர்வதற்கு காரணம் உண்டு.

அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் இருந்தாலும் டாலர்தான் உலகம் முழுவதும் செலாவணி பரிமாற்றத் திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒரு பொருளாதார நிபுணர் வேடிக்கையாகச் சொன்னார்:

டாலர்களை அமெரிக்கா உற்பத்தி செய்கிறது. மற்ற பகுதியினர் அந்த டாலர்களால் வாங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்’’
உலகில் டாலர்களின் ஆதிக்கம் இருக்கும் வரை அமெரிக்காவின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்யும். டாலரின் ஆதிக்கத்தை ஒழிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐரோப்பிய  ஒன்றியங்களின் யூரோவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார நெருக்கடியால் தகிடுதத்தம் போட்டுக் கொண்டிருக்கின்றன.

இதுவரை அமெரிக்காவில் அச்சடிக்கப்பட்ட மொத்த டாலர்களில் 70 சதவீதம்  அமெரிக்காவிற்கு வெளியேதான் சுற்றிக்கொண்டிருக்கின்றன. உற்பத்தி மதிப்புக்கேற்பதான் பணத்தை அச்சிட  வேண்டும் என்பது அடிப்படை பொருளாதார விதி. அதாவது பணம் என்பது ஒரு கருவி தான். உற்பத்திதான் உண்மையான மதிப்பு. இந்த அடிப்படை பொருளாதார விதி அமெரிக்காவிற்கும் தெரியும். ஆனால் உலகம் முழுவதும் டாலர்களில் வர்த்தகம் நடை பெறுவதால் இதை தனக்குக் சாதகமாக  மாகப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா.
டாலரை மட்டும் அச்சடித்து கோடிக்கணக்கான மதிப்புள்ள உற்பத்தி பொருட்களை இறக்குமதி  செய்து தனது பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொண்டது. இந்த குறுக்கு வழியை ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் பயன்படுத்த முடியும் என்பதை அமெரிக்கா அறியாததல்ல...

அமெரிக்காவிற்கு வெளியே சுற்றிக்கொண்டிருக்கும் டாலர்களில் 5 சதவீதத்தை திரும்பப் பெற வேண்டிய நிர்பந்தம்  ஏற்பட்டாலே அமெரிக்காவின் கதி அவ்வளவுதான். ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ந்து விடக்கூடாது என்பதில்  பல நாடுகள் ஆர்வத்துடன் முனைப்பு காட்டுகின்றன. ஏனெனில் அந்நாடுகளின் பொருளாதாரம் பெருமளவு அமெரிக்காவையே சார்ந்துள்ளது.

இப்படி அமெரிக்காவை நாம் சார்ந்திருப்பதால்தான் தற்சார்பு பொருளாதாரத்தை இழந்து வெளிநாட்டு மூலதனம் நம்நாட்டுக்கு வருமா  என்று ஏங்கித் தவிக்ககூடிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலை மாற வேண்டுமெனில் நேரு காலத்து கலப்பு பொருளாதார முறைக்கு இந்தியா மாறவேண்டும். ஆனால் இந்தியா அப்படி மாறுவதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும்......

இன்று ..கம்பள விருட்சம் அறக்கட்டளை ...குழுவில் ..🌷🌷🌷மாப்பிள கார்த்தி SR ..💐💐ஒரு அருமையான தலைப்பை பகிர்ந்து ..இது பற்றி கூறவும் என்று கேட்டுஇருந்தார் ..அதற்கான ...கட்டுரையை ...பதிவிடுகிறேன் ...

தற்சார்பு பொருளாதாரம் என்றால் என்ன ?


தற்சார்பு பொருளாதாரத்தைப பற்றி பேசுவதற்கு முன்னால் நிறைய அடிப்படை உண்மைகளை நாம் திரும்ப ஞாபகப் படுத்திக்கொள்ளல் வேண்டும். நான் புதிதாக எதையும் சொல்லப் போவதில்லை. நாம் மறந்த வாழ்வியலை வழிமுறையை கோடிட்டு காட்டப்போகிறேன். அவ்வளவே. முதலில் ஆசைக்கும் அத்தியாவசிய தேவைக்கும் உள்ள வேறுபாட்டை நாம் யோசிக்க வேண்டும். பிறகுதான் தேவையானவை மட்டும் எவை என்ற புரிதல் கிடைக்கும்.

பணப்பரிமாற்றம் முறையை முதலில் மெல்ல மெல்ல தவிற்க வேண்டும். குறைந்தபட்சம் பணத்தை வங்கியில் முதலீடு செய்வதை நிறுத்துங்கள்.

1.வங்கியில் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு குறைந்த வட்டியே தருவார்கள். உங்கள் பணத்தை ஊராருக்கு கடனாக கொடுத்து அதிக வட்டி பெருவார்கள்‌. இந்த வட்டி வித்தியாசம்தான் வங்கிக்கு லாபம். வங்கியில் கடன் வாங்கியவர்கள் அதிக வட்டியுடன் கடனை திருப்பித் தரவேண்டுமானால் அவர்களின் தொழிலில் லாபத்தைக் கூட்ட வேண்டும், அதாவது அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் (காய்கறிகள், இறைச்சி, பழவகைகள், போன்றவை) விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும். வங்கியில் பணத்தைப் போட்டுவிட்டு விலைவாசி உயர்வதற்கு பிள்ளையார் சுழியும் நீங்களே போடுகிறீர்கள்‌. இடையில் நோகாமல் நொங்கு தின்பது வங்கி. நீங்கள் மாதந்தோறும் வங்கியில் வாங்கும் வட்டி, விலைவாசி ஏற்றத்திற்கு சரியாக போய்விடும். நீங்களும் வங்கியில் பணம் டெபாசிட் பண்ணாமல் இருந்திருந்தால் இந்த விலைவாசி ஏற்றத்தை தாக்குபிடித்திருக்க முடியாது என்று நம்பிவிடுவீர்கள். பாவம் அந்த விலைவாசி உயர்வுக்குப் பிரதான காரணமே வங்கிதான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

2.வங்கி முறை முதலில் சரியானதா ? நிச்சயம் இல்லை. உதாரணமாக ரிசர்வ் வங்கி 100 கோடி ரூபாய் அச்சடிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். 10 தேசிய வங்கிகளுக்கு தலா 10 கோடி கடனாக தருகிறது. அந்த பத்து வங்கிகளும் இரண்டு ஆண்டுகள் கழித்து வட்டியுடன் 11 கோடியாக தரவேண்டும். பத்து வங்கிகளும் 11 கோடி தந்தால் மொத்தம் 110 கோடி. அச்சடிக்கப்பட்ட மொத்த தொகையே 100 கோடிதான். எப்படி 110 கோடி வரும்? என்ன நடக்குமென்றால், ஒன்பது வங்கிகள் பதினொரு கோடியை மக்களிடம் பெற்று தரும். மீதி ஒரு வங்கி ஒரு கோடி ரூபாய் வட்டியை மட்டும் கட்டிவிட்டு தனது கடனுக்கான வட்டி விகிதங்களை மாற்றி மக்களின் தலையில் சுமையை வைத்துவிடும். அந்த இல்லாத பத்து கோடிக்குதான் ஊரே அடித்துக் கொள்ளும். இதன் பக்க விளைவுகளே சொத்துக்களை ஏலத்தில் விடுவது, ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கைகள். குழப்பமாக இருக்கிறதா? எளிதில் புரிந்துவிட்டால் வங்கியை நீங்கள் புறக்கணிக்க மாட்டீர்களா? அதற்குத்தான் இந்த தெளிவற்ற தன்மையை வங்கிகள் பின்பறறுகின்றன.

3.பணத்தை என்னதான் செய்வது ? வங்கியில் போடுவதே பாதுகாப்பானது என்று உங்களை நம்ப வைத்திருப்பார்கள். அம்பானியை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது வங்கிக் கணக்கில் கடன்தான் இருக்கும். ஏனெனில் லாபத்தை பண வடிவில் சேத்து வைப்பது முட்டாள்தனம். தொழில் வடிவத்தில் சேத்து வைப்பதே நலம். ஏனென்றால் பணத்தை மூட்டைகட்டி வைப்பதால் அது வளராது. திட்டமிட்டு ஒரு தொழில் தொடங்குங்கள். முதலீடு செய்யுங்கள். லாபமோ நஷ்டமோ ஒரு தொழிலில் வெற்றிபெருவதற்கான யுக்தி உங்களின் கைகளில் இருக்கும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். சுற்றத்தார் சிலரிடம் நல்ல தொழில் சிந்தனைகள் யோசனைகள் இருக்கும் அவரிடம் மூதலீடு செய்யுங்கள், கடன் வழங்குங்கள். ஏனென்றால் 501 என கலாய் வாங்கின ரிலயன்ஸ்சின் பாடமே ஜியோவின் வெற்றிக்கு வித்திட்டது. வங்கியில் கட்டுக்கட்டாக பணம் டெப்பாசிட் செய்வது உங்கள் வாழ்க்கை சக்கரத்தில் நீங்களே காற்றை இறக்கிக்கொள்வதற்கு சமம். தனிநபர் வளர்ச்சியை மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியையும் இது தடுக்கும்.

இப்படி மெல்ல மெல்ல உங்களின் சொத்துக்களை, பொருளாதார சுதந்திரத்தை உங்களிடம் இருந்து பறித்து ஏலத்தில் விட்டும், விலைவாசியை உயர்த்தியும், வளர்ச்சியை தடுத்தும் ஊளை சதைப்போட்டு வளரும் வங்கிகளின் துரித திருட்டு இதுதான்.

உணவு உடை இருப்பிடம் இது மூன்றும் அத்தியாவசியம் தான். ஆனால் நம் வாழ்க்கையை உற்று பார்த்தால் தெரியும், அதில் ஆடம்பர பொருட்களே அதிகம் என்று.

இன்னொரு முக்கியமான குறிப்பு, கீழே சொல்லியிருக்கும் ஒவ்வொரு செயலையும் முயற்சிக்க சில குறிப்பிட்ட நேரம் செலவாகும். (யோசித்துப் புரிந்து கொள்ளவே நிறைய நேரம் ஆகலாம்). எனக்கு time இல்ல. Office வேல பாக்கவும், வீட்ட கவனிக்கவுமே time சரியா இருக்குன்னு நொண்டி சாக்கு சொல்பவர்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புறேன். இதில்தான் தற்சார்பு பொருளாதாரத்திற்கான தேவை என்ன என்பதும் அடங்கியிருக்கு.

வேலைக்கு செல்வதற்கு நாம் பிறக்கவில்லை, வாழ்வதற்கு பிறந்திருக்கோம். வாழ்வது என்றால் உலகில் உள்ள அற்புதங்களை ஐம்புலன்களால் அனுபவிப்பது. (அதைப்பற்றி விரிவாக இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.)

வேலைக்கு செல்வதே வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குதான். அதாவது வாங்குற சம்பளத்தில் என்ன வாங்குவீர்கள் ? வீட்டில் வாழ தேவையான பொருட்களைத்தானே வாங்குவீர்கள். அதில் பல உள்ளரசியல் இருக்கின்றன. அதை கவனியுங்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு உங்கள் மூலமாக கிடைக்கும் லாபம் கண்டிப்பாக உங்களின் சம்பளத்தைவிட சிலபல மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். இல்லாவிடில் உங்களை வேலையில் வைத்திருக்க மாட்டார்கள். உதாரணமாக உங்கள் சம்பளம் பத்தாயிரம் என்று வைத்துக் கொள்வோம். உங்களால் உங்களின் கம்பெனிக்கு குறைந்தது முப்பதாயிரம் லாபம் இருக்கும். இல்லை முப்பதாயிரம் மிச்சப்படும். நீங்கள் எட்டு மணி நேரம் உழைப்பதில் உங்களுக்கு ஊதியமாக ஒரு நறுக்கு மட்டும் தரப்படும். மீதி முதலாளிக்கு லாபம். இப்போது அந்த பத்தாயிரத்தை வைத்துக் கொண்டு நீங்கள் எதை வாங்கினாலும் அதில் பொருளின் மதிப்புடன் கூடுதலாக லாபம் வரி பேக்கிங் என மொத்தமும் உங்கள் தலையிலே விடியும். பத்தாயிரத்தில் நீங்கள் வாங்கிய பொருட்களின் மதிப்பும் பெற்ற சேவையின் மதிப்பும் கூட்டினால் தோராயமாக நாலாயிரத்தில் அடங்கிவிடும். மீதி ஆறாயிரமும் மற்றவர்களின் லாபத்திற்கும் அரசாங்க லாபத்திற்கும் சென்றுவிடும். எனவேதான், வேலைக்கு போய் சம்பாரித்து செட்டில் ஆனவர்கள் யாரும் இலர். மேலும் அன்பளிப்பாக உடல்நலக் குறைவு, மன அழுத்தம், டாக்டர் செலவு, பணப்பற்றாகுறை, கடன் தொல்லை என அத்தனை உயிர் கொல்லிகளும் வாரி வழங்கப்படும்.

இப்போது இப்படி வைத்துக் கொள்வோம், 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் சொந்த மற்றும் இதர வேலைகள் என்க. இந்த 8 மணி நேரம் வேலை பார்ப்பதை தவிர்த்து, உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்ய உழைத்தீர்களானால் ? உங்கள் உழைப்பின் பலன் உங்களுக்கே கிடைக்கும். ஏதோ பௌர்ணமி பிதற்றல் போல் தோன்றும்.

சற்று நிதானமாக நம் தாத்தா பாட்டி காலத்தை ஞாபகப் படுத்திப் பாருங்கள். அவர்கள் வேலை விவசாயமாக இருக்கும். சொந்த நிலத்தில் விளைந்ததை அறுவடை செய்து விற்றும் உண்டும் வாழ்ந்தார்கள். அவர்களின் இதர தேவைகளுக்காக மட்டும் நெல் விற்ற பணத்தைப் பயன்படுத்துவார்கள். உழைப்பதால் உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். லாபமும் கிடைக்கும். மருத்துவ செலவு என்பதே இருந்திருக்காது. “விவசாயிகளே தற்கொலை பண்ணிக்கிட்டு சாவுறாங்க, இதுல நம்மல போய் விவசாயம் பண்ண சொல்லுறானே”னு பயப்படாதீர்கள். எல்லோரையும் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்க சொல்லவில்லை. சிலர் உணவு பொருட்கள் சிலவற்றை உற்பத்தி செய்யுங்கள். சிலர் உடைகளை உற்பத்தி செய்யுங்கள். சிலர் இருப்பிடம் கட்டிக் கொடுங்கள். இப்படி ஒரு ஊர் மக்கள் தங்கள் தேவைகளை தங்கள் ஊர் மக்களைக் கொண்டே பூர்த்தி செய்து கொள்ளலாம்.

மேலும் இதை நடைமுறைப்படுத்துவதில் உளவியல் பிரச்சினைகளும் உண்டு. என்னவென்றால், மக்களுக்கு சுகமான வாழ்க்கை என்றால் பீச்சோர பங்களாவில், swimming poolக்கு பக்கத்தில் நீட்டமான மரப்படுக்கையில் படுத்துக் கொண்டு நான்கைந்து வேலையாட்களை அடிமைகளைப் போல் ஏவியேவி வேலை வாங்குவதும், தேவையோ இல்லையோ மனதை வசீகரிக்கும் எல்லா டி.நகர் குப்பைகளையும் வாரந்தோரும் தன் வீட்டில் குவித்துக் கொள்வதும், பார்ப்பவரை பொறாமைப் பட வைக்கும் அளவிற்கு மிடுக்காய் உடையணிந்து கொள்வதுமாக எல்லாமுமே TV விளம்பரங்களில் வரும் காட்சிகள்தான். அந்த தவறான சித்தரிப்புகளை உங்கள் கற்பனையில் இருந்து நீக்குங்கள். அதில் வரும் முதலாளியாக நீங்கள் உங்களை நினைப்பீர்கள். ஆனால், சமூகத்தைக் கட்டுபடுத்தக் கூடியவர்கள் உங்களை அந்த வேலை ஆட்களாகவே வைத்திருப்பார்கள்.

பிறகு ஏன் அந்த ஆசையை காட்டுகிறார்கள் என்றால், அதன் விளைவாகவே உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ வேலைக்கு வந்தே தீருவீர்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து சொகுசான வாழ்வை அனுபவிக்கலாம் என்று உங்களை நம்பவைத்து ஆசைப்பட வைப்பார்கள். “நீ நிம்மதியாய் இல்லை, மோசமான கஷ்டமான வாழ்வை அனுபவித்து வருகிறாய்” என்று மூளைச் சலவை செய்வார்கள். இப்படி மந்தை போன்ற சமூகத்தை பாத்திக்கட்டி திசைதிருப்பும் யுக்தி சில multi millionaireகளின் அதிகார மேசைக்கு மட்டுமே தெரியும். இந்த அதிபயங்கர அதிபுத்திசாலிகளின் சிலந்தி வலையில் இருந்து தப்பித்து ஆரோக்கியமான, நல்ல அனுபவகரமான வாழ்வை மேற் கொள்ளவே இந்த தற்சார்பு பொருளாதாரம்.

தோற்றம் அல்லது Image. இந்த சமூகத்தில் ஒரு தனிநபரின் தோற்றமே அவரை யாரென நிர்ணயிக்கிறது. இதன் விரிவான விளக்கங்களை புரிந்து கொள்ள Halo Effect மற்றும் Horn Effect பற்றி படியுங்கள். கருத்தவன்லாம் கலீஜு, செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்டி ஜீவா ஓடும் ? போன்ற எண்ணங்களுக்கு உளவியல் ரீதியாக பின்னாலிருக்கும் உண்மையை உணருங்கள்.

சமூகம் எதிர்பார்க்கும் அல்லது அங்கீகரிக்கும் image ஐ தூக்கி எறியுங்கள். உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தாற்போல் நீங்கள் மாற்றலாம். ஆனால் அனைவரும் ஒன்று திரள வேண்டும். குறைந்தது நூறு குடும்பங்கள் பண்ட மாற்று முறையையும் தற்சார்பு பொருளாதாரத்தையும் புரிந்து செயல்பட்டால் போதும், அவர்களின் வளர்ச்சி, வாழ்க்கை தரத்தை பார்க்கும் அனைவரும் தற்சார்பு பொருளாதாரத்தை பின்பற்றுவார்கள்.

வீட்டில் சமைப்பதற்குத் தேவையான மூலப் பொருட்கள் தோராயமா நூறு இருக்கு என்று கொள்வோம். இதில் எவையெல்லாம் localல் கிடைக்கும் என்று பாருங்கள். ஏறத்தாழ எண்பது பொருட்கள் இருக்கும். பல பொருட்கள் plastic packet ல் அடைத்து பெரிய brandன் பெயர் போட்டு ஜிகுஜிகுவென்று இருக்கும். அவற்றை வாங்காதீர்கள். அதே பொருட்கள் localல் அதைவிடவும் குறைந்த விலையில் கிடைக்கும். அதையே வாங்குங்கள். மீதி இருக்கும் இருபது பொருட்களும் நீங்களே உற்பத்தி செய்ய முடியும்.

உதாரணமாக மிளகாய்த்தூள் வேண்டும் என்றால் நீங்களே வரமிளகாய் மல்லி எல்லாம் வாங்கி வீட்டில் காயவைத்து அருகில் இருக்கும் மாவு அரைக்கும் கடைகளில் அரைத்து மிளகாய் தூள் தயாரிக்கலாம். இதைப் போலவே ஒவ்வொரு பொருளையும் trial and error முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். முயற்சியுங்கள் பிறகு உங்களுக்கே அது எளிதாகி விடும். ஒரே நாளில் இருந்து எல்லாவற்றையும் தயாரிக்க முயற்சிக்க வேண்டாம். ஒவ்வொரு பொருளாக தயாரிக்க தொடங்குங்கள். ஒரே வருடத்தில் உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களில் எதுவும் பெரிய brandன் பொருட்களாக இருக்காது. அப்போது மாத budgetல் ஆயிரம் ரூபாய் மிச்சப் பட்டிருக்கும். மருத்துவ செலவு எதிர்காலத்தில் அறவே தவிர்க்கப்படும்.

இவை அனைத்தும் மூலப் பொருட்கள் அல்ல, உப பொருட்களே. நிலம் இருப்பவர்களின் அடுத்த நகர்வு விளைச்சலை நோக்கி இருக்க வேண்டும். சொந்த விவசாய நிலம் அற்றவர்கள் மற்ற அத்தியாவசிய தேவைகளான உடை மற்றும் இருப்பிடத்தின் கூறுகளை கவனியுங்கள். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு jeans ஒரு சட்டை கூட நல்லதாக வாங்கிவிட முடியாது. ஆனால் அதே ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் எத்தனை மணி நேரம் உழைக்க வேணடும் என்பதை கணக்கிடுங்கள். ஏறத்தாழ பதினாறு மணி நேரம் உழைப்பீர்கள். இப்போது ஒரு வேட்டி ஒரு சட்டையின் மெட்டீரியல் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்களே சட்டையை தையுங்கள். அதிக பட்சம் நான்கு மணி நேர உழைப்பில் உங்களுக்கான சட்டையை நீங்களே தயாரித்துவிடலாம். முதலில் கோனல் மானலாகத்தான் வரும், பத்து சட்டை தைத்த பிறகு, கடைகடையாக தேடி வாங்கும் சட்டையை கடகடவென்று நீங்களே தைக்கலாம். சிரிப்பாக வரலாம். ஏனென்றால் பல வருடம் அறியாமையோடே இச்சமூகத்தில் வாழ்ந்துவிட்டு ஒரே நாளில் நன்மை தரும் சிந்தனைகளை உங்களுக்கு உள்ளில் இருந்து வெளிப்படுத்தினாலே சிரிப்பாகத்தான் இருக்கும். இந்த தற்சார்பு பொருளாதார வாழ்க்கை முறையில் உள்ள நன்மைகளை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

இப்படி ஒவ்வொரு பொருளாக தயாரித்து, உங்கள் சமூகத்திற்கான தேவையை நீங்களே கட்டமைப்பீர்களானால், ஐந்து முதல் பத்து வருடங்களில் அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தியில் உங்களுக்கு தயாரிக்க ஏதுவான பொருள் எது என்பதை கண்டறிந்து, அதை சிறந்த முறையில் தயாரித்து சந்தைபடுத்தக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றிருப்பீர்கள். சமூக வளர்ச்சியில் உங்களின் வளர்ச்சியும் இன்றியமையாதிருக்கும்.

தெளிந்த நல்லறிவு பெற தடையாக இருக்கும் போதை என்ன என்பதை அறியுங்கள்.

“வெளிநாடு போய் சம்பாரிசசிட்டு ஊருல வந்து செட்டில் ஆகலாம்.”

“நல்ல ஐ.டி. கம்பெனில சேந்து லட்ச லட்சமா சம்பாரிச்சு தண்ணியிருக்க காடா பாத்து வளைச்சுபோட்டு இயற்கை விவசாயம் பண்ணலாம்” போன்ற அதிமேதாவித்தனமான யோசனை கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு,

சந்தன மரம், செம்மரக் கட்டை, ஐம்பொன் சிலைகள் மட்டும் மதிப்புள்ளவை அல்ல. உங்களது மூலையும் தான். பிற நாட்டின் வளர்ச்சிக்காக உன்னுடைய உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு விட்டு வருடங்கள் கழித்து திரும்பிப்பார்க்கையில் உன் நாடு அங்கேயே நின்றிருக்கும். நீ வாழப் போகும் சமூகத்திற்காக நீ பாடுபடு. உன் குடும்பம் வம்சம் சமூகம் என எல்லாமும் செழிக்கும். அயல் நாட்டுக்கு மனித வளத்தை கடத்துவதும் தார்மீக ரீதியில் குற்றமே. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏன் இதை கண்டுக்கொள்ளவில்லையெனில் வரி வருவாய் அதிகம். அதாவது லஞ்சம் பெற்றுக் கொண்டு உன் திறனை நாடு கடத்துவதாகும். மேலும் பல லட்சங்களோ சில கோடிகளோ சேமித்து சிட்டிக்கு தூரத்தில் அமைதியான சூழலில் காடு வீடு பங்களா என செட்டில் ஆகும்போது நீங்கள் வீனடித்த மறைநீரை, வளத்தை சமன் செய்வதற்கு உங்களின் மீதி காலம் போதாது. உங்களின் அடுத்தடுத்த சந்ததிக்கு எதுவும் மிஞ்சாது.

மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.

பின்னூட்டம் முக்கியம்.....!!!!! உரையாடி அறியாமை களை.....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681...👍💐💐💐💐






அறக்கட்டளையின் நோக்கங்கள்:-
1. தமிழ்நாடு முழுதும் வாழும் இந்து - தொட்டியநாயக்கர் ராஜகம்பள இன மக்களின் நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான கல்விக்கூடங்கள், சமுதாய நலக்கூடங்கள், மருத்துவ மனைகள், விவசாயம் சார்ந்த
தொழில்கள், பண்ணைகள், தொழிற்கூடங்கள், நிதி நிறுவனம் போன்றவை அமைத்து பராமரித்து வர பாடுபடுதல்
2.நமது சமுதாய மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் திருமண தகவல் மையம் அமைத்து நமது இன ஆண் பெண் நபர்களுக்கு நல்லதொரு மணமகள் , மணமகன் அமையவும் அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கும் உதவுதல்
3.நமது இன மக்களுக்கு படித்த மற்றும் படிக்காத நபர்களுக்கு அவரவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை அமைத்துக்கொடுத்தல் அதற்காக தனி பிரிவு அமைத்து வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் தொழிற்பயிற்ச்சி வகுப்புகள் நடத்துதல்
4.நாயக்கர் கால மன்னர்கள் மற்றும் ஜமீன்கள் அமைத்த பழம்பெரும் கோவில்களை புணரமைத்து பாதுகாத்தல் மற்றும் அதற்கான வரலாற்று புத்தகங்கள் வெளியிட்டு இனமக்களிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
5. அறக்கட்டளையின் நிதி ஆதாரங்களை பெருக்க தேவையான நன்கொடைகள் பெறுதல், சந்தா வசூலித்தல் ,மற்றும் இதர வழிகளில் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர்களிடமிருந்து நிதிகளை பெறுதல்.
6. அறக்கட்டளைக்கு தேவையான அசையும் அசையா சொத்துக்களை வாங்கவும், விற்கவும், குத்தகைக்கு மற்றும் வாடைகைக்கு விடுதல் அடமானம் வைத்து கடன் பெறுதல் மற்றும் அறக்கட்டளைக்கு தேவையான இதர காரியங்களை செய்தல்
7. கல்வி ஸ்தாபனங்களை ஏற்படுத்தவும், ஏற்கனவே உள்ள கல்வி ஸ்தாபனங்களை ஏற்று நடத்துவது அவற்றை அபிவிருத்தி செய்வது போன்ற கல்விப்பணியை செய்வது
8.சிறந்த மாணவ மாணவியற்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் அவர்களின் மேற்படிப்பிற்கு வட்டியில்லா கடன் வழங்குதல் போன்ற கல்விப்பணியை செய்வது
9.ஏழை எளிய மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகளையோ அல்லது அதற்கான பண வசதிகளையோ செய்து கொடுப்பது

10.மேற்கண்ட நோக்கங்களுக்காக நிர்வாக குழு கூட்டம் கூட்டி அதற்கான ஆயத்த முடிவுகளை எடுப்பது

ஞாயிறு, 17 ஜூன், 2018


நேற்று ...இன்று ...அருமையான நிகழ்வுகள் ..

வழக்குரைஞர் சரவணன் அவர்கள் சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்.  அவர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ...இவர் உடுமலை மண்ணின் மைந்தர் ..உடுமலை அரசு பள்ளியில் படித்த மாணவர் ..நேற்று பெரியகோட்டை அருகே  உள்ள சுந்தர் நகரில் அவரின் வீட்டில் சந்தித்து கலந்துரையாடினோம்

எழுத்தாளர் ஜெயராணி (இவர் முன்னாள் நிலக்கோட்டைசட்டமன்ற உறுப்பினர் பொன்னம்மாள் அவர்களுடைய பேத்தி ) இவரையும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..

நமது தம்பி ...கார்த்தி ஸ்மார்ட் சங்கீதா திருமண நிகழ்வு ..மற்றும் சொந்தங்களை சந்தித்தது மற்றட்ட மகிழ்ச்சி ...

இன்று ...
பெரியகோட்டை யில் ..நம்ம தம்பி பிரபாகர் -சங்கீதா  திருமண நிகழ்வுக்கு சென்று மணமக்களை வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சி ...

உடுமலை கிளை  நூலகம்...வாசகர் வட்டம் ..துணைத்தலைவர் என்ற முறையில் ... மரக்கன்றுகள் நற்று வைத்தது ...ஊருக்கும் ...மக்களுக்கும் ...எனக்கும் ...உடலுக்கு நல்லது ...

நமது சென்னை சொந்தம் .செந்தில் அப்பையன் சகோதரர் ..எத்தனை கருத்து மோதல்களும் வந்தாலும் .அட நம்ம தம்பிதானே என்னய்யா சொல்லறாரு என்று ..என் தம்பியை விட்டுக்கொடுக்கமாட்டேன் ..அவருக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பில் ,உடுமலை வரலாற்று நடுவம் ஆய்வம் சார்பில் ..நம்ம மாப்பிள்ளைகள் கார்த்தி SR ,,கவிதை அரசர் ..பொறியாளர் திருப்பதி தேவராஜன் ...ஆய்வாளர் அருட்செல்வம் ..தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..என்ற நூலை பரிசளித்து அன்பை வெளிப்படுத்தினோம் ..சந்தித்த இடம் வல்லகுண்டபுரம் அவரது பசுமை நிறைந்த தோட்டத்தில் ...மகிழ்ச்சி ...

வரலாற்று சிறப்புமிக்க தளி பாளையக்காரர் ஆட்சிபுரிந்த மண்ணில் இருக்கும் ..தளி காவல் நிலையம் ..காவல்துறை ஆய்வாளர் .திரு .ப .அய்யாசாமி அவர்களை சந்தித்து ...தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..என்ற நூலை பரிசளித்து அன்பை வெளிப்படுத்தினோம் ...அவரிடம் 30 நிமிடங்கள் ..வரலாறு பற்றி விவாதித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது ..

நேற்று ..இன்றும் ..பயண நிகழ்வுகள் மனதிற்கு நிறைவை  தந்தது ...

என்றும் அன்புடன் ...உடுமலை சிவக்குமார் ...9944066681...



,

சனி, 16 ஜூன், 2018

திருப்பூர் தொழிலதிபர் கார்த்திகேயன் -சங்கீதா ...(ஜமீன் உசிலம்பட்டி -பூவலபருத்தி )

மாலை நேர திருமண நிகழ்ச்சி ...

நம்ம தம்பியின் கார்த்தி ஸ்மார்ட் சங்கீதா மாலை நேர திருமண நிகழ்வுக்கு ...முகம் மலர தென்மேற்கு பருவக்காற்றுடன் ஆனைமலை சாலையில் பயணம் ...கரட்டுமடம் சஞ்சீவராயன் மலையடிவாரத்தில் எத்தலப்பர் மண்ணில் ...புகழ்பெற்ற காந்தி கலாநிலையம் பள்ளியின் எதிரில் அமைந்து இருக்கும் திருமண மண்டபத்தில் முகப்பில் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் திருமண பதாகை நம்ம வரவேற்றது ..பார்த்தவுடன் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ...மணமக்களின் தாய் தந்தை நம்மை வரவேற்றனர் ...மண்டபத்தில் நம் சொந்தங்களுடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது ..சென்னை சொந்தங்கள் என் அன்பு தம்பி இளங்கோ ராஜா ,சுப்புராஜ் வருவது தெரிந்தது ...அவர்களை வரவேற்று சிறிது நேரம் பேசிக்கொண்டு ,,நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் மாப்பிள்ளைகள் ,தம்பிகள் ,வழக்கறிஞர் முருகராஜ் அவர்கள் ,புதுமாப்பிள்ளையோடு பேசிக்கொண்டு இருந்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது ..இரவு நேர உணவு ...தம்பியின் புன்னகை போன்று வெள்ளை பூசணிகாய் அல்வா அருமையாக இருந்தது ...அதுமுடிந்து மணமக்களுக்கு அன்பு பரிசாக ..கொடுங்கியம் தம்பி ஆனந்த் ,மாப்பிள சண்முகம் ,தம்பி யோகராஜ் ..திருமண வரவேற்பு நிகழ்வில் குட்டி குழந்தை செல்வங்களோடு உற்சாகத்தோடு கொண்டாட கேக் வெட்டி ,மணமக்களுக்கும் ,வந்துஇருந்த குழந்தைச்செல்வங்களுக்கு அளித்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி அருமையாக இருந்தது ...நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக ..கௌரவ தலைவர் ,தலைவர் ,துணை செயலர்கள் ,செயற்குழு உறுப்பினர்கள் ,உறுப்பினர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வந்தது மகிழ்ச்சி ....

வெள்ளி, 15 ஜூன், 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்

இதில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் அனைவரும் ஊரில் வசிப்பவர்கள். 23 வயதுக்குக் கீழே இருப்பவர்கள். அனைவரும் பி.ஈ முடித்தவர்கள். முக்கியமான நெருங்கிய உறவுக்கூட்டத்தில் அங்கத்தினராக இருப்பவர்கள்.

1. அப்பாவுக்கும் மகளுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது. என்ன பிரச்சனை என்று கேட்டேன். 24 மணி நேரமும் மொபைல் போனை நோண்டிக் கொண்டே இருக்கிறாள். சொன்னால் கேட்கவே மாட்டுறா? என்றாள். மகளைப் பார்த்தேன். நீங்களே சொல்லுங்கள்? தினமும் 1.5 ஜிபி இலவசமாகக் கொடுக்குறாங்க. வீணாப் போயிடாதா? இந்த அப்பாவுக்குப் புரியவே மாட்டுது என்றார்.
•••••••
2. மகள் ரூபாய் 4000 க்கு அருகே உள்ளே ஆங்கில வழிக்கல்வியில் ஆசிரியையாகப் பணிபுரிகின்றார். அப்பாவுக்கும் மகளும் தினமும் சண்டை. உன்னோடு படிச்சவங்க சென்னை, பெங்களூரென்று கிளம்பிப் போய் எப்படிச் சம்பாறிக்குறாங்க. இவ இதை விட்டுக் கிளம்பவே மாட்டுறா? இவளுக்கு 5 லட்சம் ரூபாய் செலவு செஞ்சுருக்கேன். நான் இனி மாப்பிள்ளை பார்க்கனும்ன்னா நகைக்கு எங்கே போறது?

மகளைப் பார்த்தேன்.

+2 முடித்தவுடன் நான் விரும்பிய ஆசிரியர் பயிற்சிக்கு அனுப்பாமல் பல்லடம்  அருகே உள்ள பொட்டைக் காட்டுக்குள் உங்களை யார் கொண்டு போய்ச் சேர்க்கத் சொன்னது? நான் வெளியே எங்கேயும் வேலைக்குப் போக மாட்டேன். பத்தாயிரம் சம்பளத்துக்கு என் உயிரை எடுப்பானுங்க. எனக்கு இந்த வேலை புடுச்சுருக்கு. நிம்மதியா ஐந்து மணிக்கே வீட்டுக்கு வந்துடலாம். நீங்க மாப்பிள்ளை பாருங்கள். கஷ்டம்ன்னா சொல்லுங்கள் நானே லவ் பண்ணி கல்யாணம் செய்துக்குறேன்.

அப்பா கத்திய கத்தலில் சென்சார் செய்யப்பட்டாலும் வெளியே சென்று கொண்டிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.

••••••••••••••
3. மகன் விருப்பத்தை மீறி இதற்குத்தான் வேலை வாய்ப்பு அதிகமாக இருக்குன்னு எல்லாரும் சொல்கிறார்கள் என்று கணினி சார்ந்த துறையில் மகனைத் தனியார் கல்லூரியில் சேர்த்தார் அப்பா. மகனின் குணாதிசியம் பற்றி நன்றாகவே எனக்குத் தெரியும். அவன் ஒரு எந்திரப் பிரியன். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பைக் கில் ஏதாவது பிரச்சனை என்றால் அவனே கழட்டி மாட்டி விடுவான். அவன் மெக்கானிக்கல் விருப்பத்தையும் மீறி கணினித் துறையில் சேர்த்து விட்டார். பாதிப் படித்துப் பாதி முடியாமல் இப்போது அவனுக்குப் பிடித்த ஒர்க் ஷாப் வேலைக்குச் சுறுசுறுப்பாகச் சென்று கொண்டிருக்கின்றான். அப்பா தினமும் கத்திக் கொண்டிருக்கின்றார்.
••••••••••••••••

4. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே என் மனைவியிடம் வந்து உங்களுக்கு மேக்கப் போட பிடிக்காதா? என்று கேட்டது அந்தக் குழந்தை. எப்படி ஆடைகள் தேர்ந்தெடுக்க வேண்டும்? எப்படி ஐ புரே தடவ வேண்டும் என்று பாடம் நடத்தியது. மிரண்டு போனேன். இத்தனைக்கும் அவர்கள் அப்போது எந்த நாகரிமும் எட்டிப் பார்க்காத கிராமம். எப்படி இந்தக் குழந்தைக்கு இவையெல்லாம் தெரியும்? என்று யோசித்ததுண்டு. எப்போதும் போல அப்பனும் ஆயியும் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் ஈஈஈ படிப்பில் சேர்த்து விட்டார்கள். ஏழெட்டுப் தாள்களை வைத்துக் கொண்டு இப்போது சென்னையில் பணிக்குச் சென்று விட்டார். சம்பளம் பத்தாயிரம். விடுதி உணவுக்கு 4000 போக மீதிப் பணத்தில் அழகுக்கலை நிபுணர் பயிற்சிக்கு சென்று கொண்டிருக்கின்றார். அப்பனும் ஆத்தாளும் சாபம் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
•••••••••••••

5. அவர்கள் குடும்பத்தில் அவன் தான் முதல் தலைமுறை பட்டதாரி. அப்பாவும் அம்மாவும் படிக்காதவர்கள். தன் ஊரை விட்டு வெளியே எங்கும் செல்லாதவர்கள். ஊருக்குள் வேலை பார்ப்பவர்கள். ஒரே மகன். ஆனால் மகனை மகள் போலவே வளர்த்துத் தொலைத்து விட்டார்கள். பத்தாம் வகுப்பு முடித்து வேலை உடனே கிடைக்கும் என்று பாலிடெக்னிக் கொண்ட போய்ச் சேர்த்தார்கள். யாருடனும் பேச மாட்டான். வீட்டுக்கு ஓட்டமாக ஓடி வந்து விடுவான்.

மறுபடியும் ஈஈஈ யில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். உறவுக்கூட்டம் இதற்கு உதவியது. படித்து முடித்து நான் பரிட்சை எழுதி பெரிய இடத்திற்குச் சென்று விடுவேன் என்று சொன்னதை நம்பி கடன் வாங்கிக் காசை இறைத்தார்கள். ஆனால் திருச்சி தாண்டி வேறு ஊர் என்றால் செல்லமாட்டான். ஒரு முறை சென்னை சென்று விட்டு வந்தவன் மூன்று நாட்கள் யாருடனும் பேசாமல் இருந்தானாம். காரணம் கேட்ட போது சென்னையில் பேசுற தமிழே புரியவில்லை என்றானாம்.

இப்போது நான் ஊரே விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்ற சொல்லி எல்ஐசி முகவராக மாதம் பத்தாயிரம் வருமானத்தில் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார். பெண் கிடைப்பது தான் பெரிய குதிரைக்கொம்பாக இருக்கின்றது என்றார் அம்மா.

இதை எழுதுவதற்குக் காரணம் நீட் பரிட்சை எதிர்ப்பில் ஒரு வாதம் முன் வைக்கப்படுகின்றது. இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் பயிற்சி மையங்கள் மூலம் சுரண்டப்பட்டு இருக்கின்றது என்று.

அப்படியே பி.ஈ பக்கம் வண்டியைத் திருப்பினால் ஒரு மாணவர் குறைந்த பட்சம் 4 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் கடந்த பத்தாண்டுகளில் படித்து முடித்து வேலை இல்லாமல் வேறு தொழிலுக்குச் சென்றவர்கள், இன்னமும் சுற்றிக் கொண்டிருப்பவர்கள், முழுமையாக முடிக்காதவர்கள் என்பவர்களின் பட்டியலிட்டுப் பார்த்தால் பல லட்சம் கோடி ரூபாய் யார் வீட்டுக்குச் சென்று இருக்கும் என்பதனை ரயிலில் வரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன்.

தமிழகத்தில் அரசியலில் சம்பாரித்ததை, முதலீடாக மாற்றி, கல்வித்தந்தைகள் அதிகமாகி அவர்கள் மூலம் தமிழ்க்குழந்தைகளுக்கு எளிதில் கிடைத்த பி.ஈ என்ற வார்த்தையை நான் மேலே சொன்னவர்கள் அசிங்கமாகத்தான் உச்சரிக்கின்றார்கள் என்பது தனிச் செய்தி.

ஊருக்கு வெளியே பொட்டைக்காடு. பாதிப் பட்டா நிலம். மீதி தானாகவே இருக்கும் செல்வாக்கு வைத்து சுரண்டிக் கொண்ட நிலம். முதல் வருடம் ஒரு தளம். கல்லூரியின் கட்டமைப்புக் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் அவர்களின் சம்பளம் தகுதி குறித்தும் கவலையில்லை.

ஐந்து வருடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் போன்ற வளர்ச்சி. அடுத்தச் சில வருடங்களில் கிளைக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் என்று தொடங்கிக் குறைந்தபட்சம் 50 முதல் 500 ஏக்கர் வரைக்கும் சுனாமி போலச் சுருட்டியவர்கள் அனைவரும் இன்று இந்நாள் முன்னாள் அமைச்சர்கள். அமைச்சர்களுக்கு உதவியவர்கள், சொந்தக்காரர்கள் என்று பட்டியலிட்டால் தமிழகத்தில் ஃபேர்ப்ஸ் பத்திரிக்கைக்குத் தெரியாத பத்தாயிரம் பேர்களாவது தமிழகத்தில் இருப்பார்கள்.


தமிழகத்தில் கல்வி என்பது முழுமையாகச் சுரண்டல் தொழிலாக மாறி விட்டதால் முன்னே பின்னே இருக்குமே தவிர ஒருத்தனும் மாணவர் நலன் என்று பேச யோக்கியதை இல்லாதவனாகத்தான் இருக்கின்றான்.

இப்போது தான் அண்ணா பல்கலைக்கழகம் பி.ஈ படிப்பைக் கணினி வழியே ரேண்டம் எண் வழியே முறைப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு வெளி வந்ததும் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அலறினார்கள். காரணம் அடிமடியில் சூடு வைத்தால் பொறுக்க முடியுமா?

பாவம் வசதியில்லாதவர்களும், கிராமப்புறம் சார்ந்த மாணவர்களும். உருவாகும் ஒவ்வொரு மாற்றமும் அவர்களைத்தான் நேரிடையாக மறைமுகமாகத் தாக்குகின்றது. அவர்கள் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக் குறியாக மாற்றுகின்றது. அவர்கள் மீண்டு வருவதற்குள் இங்கே மாண்டவர்களின் எண்ணிக்கை பட்டியலிட்டு பார்க்க முடியாத அளவிற்கு நீண்டதாக இருக்கப் போகின்றது.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ....9944066681

நமது சமுதாய மக்கள் அக்கறை கொண்டுள்ள நமது குருப் நண்பர்களுக்கு ஒரு கேள்வி நமது சமுதாயத்தில் உள்ள  பெண்களுக்கு கணவர் தவறு செய்த காரணத்தினால் இருவருக்கும் இடையே பிரச்சினை வந்து பிரிந்து வாழும் சூழலில் பாதிக்கப்பட்ட அந்த பெண் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டா?இல்லையா?

நமது சமுதாய மக்கள் அக்கறை கொண்டுள்ள நமது குருப் நண்பர்களுக்கு ஒரு கேள்வி நமது சமுதாயத்தில் உள்ள ஆண்களுக்கு பெண்ணுக்கு கணவரை பிடிக்காத காரணத்தால் இருவருக்கும் இடையே பிரச்சினை வந்து வாழும் சூழலில் பாதிக்க பட்ட அந்த ஆண் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டா ? இல்லையா ?
திருப்பூர் தொழிலதிபர் கார்த்திகேயன் (கார்த்தி ஸ்மார்ட் )

என் அன்பு தம்பியை கார்த்தி ஸ்மார்ட் பார்த்தது ..திருப்பூர் கீர்த்தி வீரர் எத்தலப்ப மகாஜன சங்கம் மீட்டிங்கில் முதன் முறையாக சந்தித்தேன் ..நம் சொந்தங்களை தேனீ ,போடி ,தூத்துக்குடி ,ஜமீன் உசிலம்பட்டி ,திருப்பூரில் சந்திப்பதற்கு தளி எத்தலப்ப நாயக்கரின் ஆசிர்வாதத்தால் புது சொந்தங்களை ஒருங்கிணைத்தது மிக்க மகிழ்ச்சி ..அதுவும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் திருப்பூர் ராமகிருஷ்ணன் ,வழக்கறிஞர் முருகராஜ் ,கரப்பாடி மாப்பிளை கார்த்திகேயன்,ஜெகவீரபாண்டியன் மாமா , கம்பளத்து காவலன் செல்வம் என்கிற தாதா நாயக்கர் ,முத்துசாமி ,முத்துராஜ் ,முருகன் அவர்களின்  பங்கு வாழ்வில் மறக்கமுடியாதது ..நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர் ,அறக்கட்டளையின் விளம்பரம் இல்லாமல் உதவிகளை செய்து வருவபர் ...அவரின் அழகான புன்னைகையில் முதல் சந்திப்பிலேயே நீண்ட வருடம் பழகியது போன்று நம்முளடன் இணைந்துவிடுவார் ..தூத்துக்குடி பகுதியில் எந்த ஒரு விழா என்றாலும் நமக்கு அழைப்பு வந்துவிடும் அதுபோன்று தான் ராஜ்குமார் அப்பணசாமி மாப்பிள்ளையின் புதுச்சொந்தம்  கிடைத்தது ..அதுவும் முகநூல் 5 வருட நட்புகள் ...இன்று கம்பள விருட்சம் போன்று ...கொடுங்கியம் மேகானந்தன் ,மாப்பிள ஷண்முகம் ,தம்பி யோகராஜ் ,தம்பி சீனு அக்கினி குர்ரம் பாய்ஸ் யாக ,விருட்சத்தின் விதைகளாக உடுமலைப் பகுதியில் புது சொந்தங்களாக திருமண வாழ்க்கையில் அடி எடுத்துவைக்கும் ...B கார்த்திகேயன் ,R .சங்கீதா ..மணமக்களுக்கு ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை ..மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது ....

வரும் 17/6/2018 ஞாயிற்றுக்கிழமை  
திருமணம் நடைபெறும் இடம்:
உடுமலைப்பேட்டை to ஆனைமலை ரோடு கரட்டுமடம்
ஸ்டாப்: கரட்டுமடம் 
மண்டபம்: நாச்சிமுத்துகவுண்டர் சரோஜினியம்மாள் திருமண மண்டபம் கரட்டுமடம்








வியாழன், 14 ஜூன், 2018

இன்றைய தலைப்பு ...நல்லுறவு மேலாண்மை ....எனது பணியிலிருந்து தொடர்கிறேன் ....

முதலில் கட்டுநர்களுக்கும் பிற தொழிலதிபர்களுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் கட்டுநர்களுக்கு ஏன் தனித்தன்மையான மேலாண்மை அம்சங்கள் தேவைப்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
எல்லாத் தொழில்களிலுமே பொருள் உற்பத்தி செய்யப் படுகிறது நுகர்வோருக்கு விற்கப்படுகிறது. ஆனால், நுகர்வோரும் பொருள் உற்பத்தி செய்வோரும் நேருக்கு நேர் பார்த்து அறியாதவர்களாகவே இருப்பர். விவசாயம், ஆடை உற்பத்தி, உணவுப்பொருள் தயாரிப்பு, சூப்பர் அங்காடி, திரைப்படம் உருவாக்கம் என எதை எடுத்தாலும் உருவாக்கு வோருக்கும், நுகர்வோருக்கும் இடையே விற்பனை என்கிற களம் இருக்கும். இங்கு தயாரிப்பாளர்கள் உருவாக்கும் பொருட்களின் தரத்தின் பற்றி விற்பவர்கள் தான் கவலைப்படவேண்டும். ஏனெனில், அவர்கள் தான் நேருக்கு நேர் நுகர்வோரை சந்திப்பவர்கள்.
அதாவது, தயாரித்தலும், மார்கெட்டிங்கும் தனித்தனி பிரிவுகளாக மேற்கண்ட தொழில்களில் இயங்கும். ஆனால், கட்டிடத்தொழிலில் விற்பனை என்கிற தனிக்களம் கிடையாது.
இங்கு பொருள் என்பது வீடு, அல்லது கட்டுமானம். எங்கு தயாரிக்கப்படுகிறதோ அல்லது உருவாக்கப்படுகிறதோ அங்கு தான் விற்பனை செய்யப்பட வேண்டும். அதுதான் விற்பனைக்களம்.வீடுகளை உருவாக்குபவர்களே அதை விற்பதற்கான வழிமுறைகளை ஆராயவேண்டும், மேம்படுத்த வேண்டும்.
மிக முக்கியமாக கட்டுமானத்தொழில் என்பது மற்ற சாதாரண தொழில்களைப் போல சீசன் டைம் தொழில் அல்ல.மற்ற பொருட்களை ஆண்டுக்காண்டு, மாதந்தோறும், நாள்தோறும் நுகர்வோர்கள் வாங்குகிறார்கள் என்றால் ,
நமது பொருள் (வீடு) ஒரு தலைமுறைக்கும் ஒன்று விற்பனையானாலே அதிசயம்.வீடு என்பது வாழ்விடம் என்பதால் அதை கட்டித்தரும் கட்டுநர்களும், புனிதமிக்கவர்களாக, நல்லவர் களாக இருக்க வேண்டும் என இச்சமூகம் விரும்புகிறது.
நல்ல கட்டுநர் என்பதற்கு இச்சமூகம் பல்வேறு காரணிகளை வைத்திருக்கிறது.
குறைவான விலை, தரமான வீடு, சொன்ன நேரத்தில் வீடுகளை ஒப்படைத்தல், ஆவணங்கள் ஒப்படைப்பதில் தாமதமின்மை, மறைமுக கட்டணங்கள் வசூலிக்காமல் இருத்தல், சொன்னபடி குறிப் பிட்ட பிராண்டட் கட்டிடப் பொருட்களையே உபயோகித்து கட்டுதல், வேண்டிய சிறு சிறு மாற்றங்களை உடனுக்குடன் செய்துதருதல், விதிகளை மீறாமல் வீடு கட்டுதல், வீடுகளை கட்டி முடித்த பின்பும் சிறு சிறு மரமாத்து வேலைகளை செய்து தருதல், விற்பனைக்கு பிந்தைய சேவையை 24x7 செய்தல், லொகேஷன் காரணமாக வீட்டின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருத்தல், கட்டுநர்கள் - வாடிக்கையாளர்கள் உறவு தாண்டி குடும்பத்துடன் நல்லுறவு பேணுதல் என சகல விஷயங்களும் ஒரு கட்டுநருக்கு ஒன்றிணைந்து இருந்தால் தான் அவரிடம் வீடு வாங்குவதைப் பற்றி யோசிக்கிறார்கள் நுகர்வோர்கள். அவர்கள் வீடு வாங்குவதற்கு செலவழிக்கிற 30, 40 லட்ச ரூபாய் என்பது அவர்களின் வாழ்நாள் சேமிப்பு என்பதால் தான் இத்தனை எதிர்பார்ப்புகள், இத்தனை விசாரணைகள்.
இதை எல்லாம் கனக்கச்சிதமாக நிறைவேற்றித் தர வேண்டுமென்றால் ஒரு கட்டுநருக்கு அஸ்திவாரமாக விளங்க வேண்டியது அவரது அலுவலகம். தனது தனிப்பட்ட உதவியாளர் முதல் நிர்வாக மேலாளர், துணை மேலா ளர், விற்பனை அதிகாரி, சேவை அதிகாரி, கணக்காளர், காசாளர் முதற்கொண்டு கடைநிலை ஊழியர் வரை உங்களுக்காவும், உங்கள் நிறுவனத்துக்காகவும் உங்களது விலைமதிக்க முடியாத வாடிக்கையாளர்களுக்காகவும் சிரத்தையுடன் பணியாற்றக் கூடிய அதிகாரிகளையும், ஊழியர்களையும் கொண்ட ஒரு அலுவலகம் உங்களுக்கு இருந்தால் தான் சாத்தியம்.
விற்பனை முடிந்த பிறகு ஒரு வாடிக்கையாளரை தக்க வைத்துக் கொள்வதில் ஏன் இத்தனை மெனக்கெட வேண்டும் என்றால், போட்டி.
பொதுவாக வீடு விற்பனை என்பது ஒரு தொடர் சங்கலியைப் போன்றது. 100 சதவீதம் மனதிருப்தியடைந்த உங்கள் வாடிக்கையாளர் கிட்டத்தட்ட உங்களது மார்கெட்டிங் மேலாளருக்கு இணையானவர். உங்களுக்காக அவரது உறவினர், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் போன்றோரிடம் பரிந்து பேசுவார். சொல்லப்போனால், உங்களது மார்கெட்டிங் அதிகாரியை விட இவர் சிறப்பாக பேசுவார். சம்பளத்துக்காக பேசும் பேச்சில் ஒரு வேலை பொய் கலந்து இருக்கலாம். ஆனால், உங்கள் சேவையில் திருப்தியுற்ற ஒரு வாடிக்கையாளர் பேசுகையில் சத்தியமே மேலோங்கி நிற்கும்.
அதனால் தான் எல்லா கட்டுநர்களும் தங்கள் இணையதளங்களிலும், புரவுrர்களிலும் டெஸ்டிமோனியல் என்கிற வாடிக்கையாளர் கருத்துகளை கல்வெட்டுகளாக கருதுகிறார்கள்.
எனக்குத் தெரிந்து 4,000 திருப்தியுற்ற வாடிக்கை யாளர்களை வைத்திருக்கும் கட்டுநர்கள் தங்கள் அடுத்தடுத்த புராஜெக்ட்டுகளின் விற்பனைப் பற்றி கவலைக் கொள்ளத் தேவையில்லை.
அப்படியயனில் இத்தனை சிறப்பு பெற்ற வாடிக்கையாளரை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எத்தனை முக்கியம் என்பது இப்போது புரிந்திருக்கும்.
ஆகவே, ஒரு புராஜெக்ட்டை திட்டமிட்டு, மேற்கொண்டு, நிறைவேற்றுவது என்கிற மூன்று பெரிய பணிகளுக்கு மட்டுமல்ல, புராஜெக்ட்டை வாங்கியவர்களுக்கு தொடர்ந்து சேவைகளை செய்து தக்க வைத்துக் கொள்ளமட்டுமல்ல, சமூகத்திலும், துறையிலும் போட்டியாளருக்கு மத்தியில் நற்பெயர் பெற்று விளங்குவதற்கும் ஒரு அலுவலகம் சிறந்த பங்காற்றுகிறது என்பது இதன் மூலம் உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும். எனவே, இனி வரும் அத்தியாயங்களில் ஒரு அலுவலகத்தின் கட்டமைப்பு, செயல்பாடு போன்ற பல்வேறு நிர்வாக காரணிகள் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது பற்றி அறிந்து காெள்ள வேண்டும்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...Home Loans...9944066681

புதன், 13 ஜூன், 2018

அருமையான சந்திப்பு ....திரு .திருமுருகன்...பழனி

மதியம் அழைப்பு திருமுருகன் மாமாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு .. ....குரலை வைத்து கண்டுபிடிக்கமுடியவில்லை ...பழனி செல்லும் பொழுது பார்த்து பேசிவிட்டு வருவது உண்டு... மகள்  திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்கு வந்துஇருந்தார் ..உடுமலை யில் அவரின் நண்பர்கள் வட்டம் பெரியது ...அவரின் நண்பர்கள் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரிந்து கொண்டுஇருக்கிறார்கள் ...தேனீ பள்ளியில் சிறுவயது நண்பர்கள் .
இன்னும் சில பேர் தொழிலதிபர்களாக இருக்கிறார்கள் ..எனக்கும் அறிமுகம் செய்து வைத்தார் ..பணப்பரிவர்த்தனை பணியும் ,ரியல் எஸ்டேட் வியாபாரமும் ...அவருக்கு பிடித்த நாடக நடிகராகவும் தற்பொழுது தொலைக்காட்சி தொடரில் நடித்து கொண்டு உள்ளார் என்று செய்தி சொன்னார் ..எனக்கு நாடக தொடர் அதிகம் பார்ப்பதில்லை ...அவர் சொன்ன நாடக தொடர் பார்த்தது இல்லை ..சரவணன் மீனாட்சி தொடர் என்று சொன்ன ஞாபகம் ...நமது சொந்தங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அவருடன் இருந்த சிலமணி நேரங்கள் ..பள்ளிகால வாழ்க்கை தன் நண்பர்களுடன் மலரும் நினைவுகளாக பகிரும் பொழுது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது...தொடரும் பந்தங்கள் ....
என்று அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...  

செவ்வாய், 12 ஜூன், 2018




Book on chieftain who fought along with Kattabomman released
By TOI | Monday | 21st May, 2018



“Messengers could had been sent by the British after it came to know that Ethalappar had lead chieftains in the second Panchalankurichi war. The event was attended by minister for animal husbandry ‘Udumalai’ K Radhakrishnan and collector K S Palanisamy. Ethalappar was believed to have died after suffering injuries in a bomb attack in 1801.The book — ‘Then Kongunattin Mudhal Viduthalai Por’ — was written by M Mathiazhagan, professor of Economics department in Udumalpet Government Arts College. “This is the first time the government is recognizing Ethalappar,” he said. Katie was one of the messengers,” said Arulselvan.👍🌷🌷🌷🌷🌷