வியாழன், 22 மார்ச், 2018


எனது உலகம் ...

கோவையில் ..எனது வாடிக்கையாளர்களில் அதிகம் ..வழக்கறிஞர் நண்பர்கள் இருக்கிறார்கள் ..எனது பணிகாரணமாக சந்திப்பது வழக்கம் ..அவர்களுடன் சேர்ந்து  நானும் நீதிமன்றங்களில் சுற்றி பார்க்கும் பழக்கம் உண்டு...அதுவும் திருமதி ஷர்மிளா  அவர்கள் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நண்பர் ..அவரிடம் கலந்துரையாடுவது உண்டு ...சில வழக்குகளை மனிதாபிமானத்தோடு ..செலவு இல்லாமல் செய்து இருக்கிறார் ..அதன் பகிர்வு ..

செல்வி...சாயந்திரம் ஆபீஸ் முடிஞ்சு போறப்ப இங்க வந்துட்டுப் போறியா....??? என் வழக்கறிஞர் தோழி..போன் செய்தாள்.

என்ன விஷயம்...சொல்லு...

ஒரு டிவோர்ஸ் கேஸ்.. இன்னும் பதிவு பண்ணல. நீ ஒரு தரம் பார்ட்டியப் பார்த்துப் பேசிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன். வரியா...??

சரி என்று சொல்லிவிட்டு என் வேலையைக் கவனித்தேன்., சாயந்திரம் அவள் ஆபீஸ்க்கு போனேன்.

ஒரு இளம் தம்பதி காத்துக்கொண்டிருந்தனர். ரெண்டு பேரும் பார்க்க லட்சணமா, பொருத்தமா இருந்தாங்க..தோழி எங்களை விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள். நான் அவர்களை ஏறிட்டு, சொல்லுங்க....என்றதும் ரெண்டுபேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டார்கள்...

மேடம் ....எங்களுக்கு போனவருஷம் கல்யாணமாச்சு.. இவங்க வீட்டுல 20 பவுன் போட்டு கல்யாணம் பண்ணிவைச்சாங்க.. நான் ஒரு தனியார் காலேஜ்ல லெக்சரரா இருக்கேன்.. பிஎச்டி படிச்சிட்டிருக்கேன். என் தீஸிஸ் முடிச்சு டாக்டரேட் வாங்கற வரைக்கும் குழந்தை வேணாம்னு முடிவு பண்ணி, என் மனைவியும் ஒத்துக்கிட்டாங்க... ஆனா இது எங்க ரெண்டு
பக்கத்து பெரியவங்களுக்கும் தெரியாது.. ஆறுமாசம் அமைதியா இருந்தாங்க எங்க அம்மா. அப்புறம் என் மனைவிக்கு ரொம்ப குடைச்சல் குடுக்க ஆரம்பிச்சாங்க.. ஒரு கட்டத்துல, எங்கப்பாவும் அம்மாவோட சேர்ந்துக்கிட்டார்.

ஒருநாள் , எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் இவங்க வீட்டுக்குப் போய், உங்க பொண்ணுக்கு என்னமோ உடம்புல பிரச்னை இருக்கு...அதான் குழந்தை உண்டாகல...அதை மொதல்ல சரி செஞ்சு, அப்பறமா எங்க வீட்டில் கொண்டு வந்து விடுங்கன்னு சொல்லவும் என் மாமனார் மாமியாருக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு... எனக்கும் இது ரொம்ப அதிகமா படவே, என் அப்பா அம்மாகிட்ட உண்மைய சொன்னேன்... ஆனா, அவங்க இதை நம்பவே இல்ல...நான் என் மனைவிய காப்பாத்த பொய் சொல்றேன்னு சொல்லிட்டாங்க.. என் படிப்பு சம்பந்தமா..எல்லா ரெகார்ட்ஸையும் காண்பிச்சேன்.. அப்பவும் நம்பல.. இப்போ எங்கம்மா, வம்படியா...என் மனைவிய டிவோர்ஸ் பண்ணியே தீரணும்னு ஒத்தக்கால்ல நிக்கறாங்க..

என்ன பண்ணறதுன்னு தெரியல.. நான் ஒரே பையன்..வயசான அப்பா அம்மாவை தனியே விட்டுவிட்டு,
தனிக்குடித்தனம் போகவும் மனசில்ல...பெரியவங்களை சமாதானம் பண்ணவும் தெரியல.. இப்போ என் மனைவி அவங்க அம்மா வீட்டுலதான் இருக்காங்க. நான் ரெண்டு பேரும் சேர்ந்து இங்க வந்தது எங்க வீட்டுக்குத் தெரியாது... ப்ளீஸ் உதவி செய்யுங்க....மேடம்னு...ஒரே மூச்சில் சொல்லி முடிச்சார் அந்தக் கணவர்...

இந்தப் பேச்சு முடியும் வரைக்கும், அந்தப் பெண் கண்ணில் வழியும் நீருடன் தன் கணவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்...

நான்கு வாரங்கள் கழித்து, என் தோழி மீண்டும் எனக்கு போன் செய்தாள்.... செல்வீ...அந்த டிவோர்ஸ் பார்ட்டி...இன்னிக்கு என் ஆபீஸ் வந்தாங்க...பை நிறைய பூ, பழம் ஸ்வீட்டு எல்லாம் வாங்கி வந்தாங்க. டிவோர்ஸ் பெட்டிசன் போடலயாம்....
ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு சந்தோஷம்...!!!
முகம் முழுக்க சிரிப்பு .....!!!

அப்படி என்ன மாய மந்திரம் பண்ணே...?????

நீங்க சொல்லுங்க பிரண்ட்ஸ்.... நான் என்ன செஞ்சிருப்பேன்னு...???

புரிதல் உண்டு...பிரிதல் இல்லை....

கணவரின் பிஎச்டி படிப்பு முடிந்து பட்டம் வாங்கும் பொருட்டு குழந்தைப்பேறை ஒத்திப்போட்டனர் இளம் கணவன் மனைவி. இதில், சம்பந்தப்பட்ட பெரியவர்கள்..தன் மருமகளிடம் ஏதோ குறை இருப்பதாகவும் அதை மறைக்கவே தன் மகனும் மருமகளும் படிப்பு , பட்டம் என்று நாடகமாடுவதாகவும் தவறாகப் புரிந்துகொண்டு, மருமகளை விவாகரத்து செய்தே ஆகவேண்டும் என்று விதண்டாவாதம் செய்யகின்றனர்..அம்மா அப்பாவை சமாதானம் செய்யத் தெரியாத, மனைவியை விட்டுப் பிரிய மனமில்லாத, அந்த இளம் கணவருக்கு நான் எப்படி தீர்வு சொன்னேன்....???

உங்க அம்மாவைப் பத்தி சொல்லுங்க....???அந்தப் பையனிடம் கேட்டேன்....

எங்க அம்மா...ரொம்ப நல்லவங்க மேடம்...ஆனா முரட்டுப் பிடிவாதம் . அதனாலேயே அவங்களுக்கு யாரும் பிரண்ட்ஸ் கிடையாது..

அப்டியா...?? சரி...அவங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் ..?? என்ன ஐட்டம் விரும்பி சாப்பிடுவாங்க...?? எந்த சாமி பிடிக்கும்...??

ப்ளூ கலர் ரொம்பப் பிடிக்கும் மேடம்...கடலைப்பருப்பு ஒப்பட்டு அவங்களுக்கு பிடித்தமான இனிப்பு..வாரா வாரம் வெள்ளிக்கிழமை சாயந்திரம் கோவை தண்டுமாரியம்மன்  கோவிலுக்கு போகலன்னா எதோ பறிபோன மாதிரி இருப்பாங்க..அவ்ளோ பக்தி அந்த அம்மன் மேல...

அடடடா....மாட்டிக்கிட்டாங்களே மாமியார்....என் மனக்குயில் கூவியது....

ஓக்கே... நீங்க போய்ட்டு வாங்க... இந்த வாரம் மட்டும் உங்க அம்மா கூட நீங்க கோயிலுக்கு வாங்க...உங்க போன் நம்பர் உங்க அட்வகேட் கிட்ட குடுத்துட்டுப் போங்க....

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை...சரியாக ஆறு மணிக்கெல்லாம் கோவை ...ஸ்ரீதேவி சில்க்ஸ் ......ப்ளூ கலர்ல அழகா ஒரு சில்க் காட்டன் புடவை...எடுத்துக்கிட்டு, கோயிலுக்குப் போனேன்.. அந்தப் பையனும் அம்மாவும் ஆறேகால் மணிக்கு வந்தாங்க.. என்னைப் பார்த்துட்டு அந்தப்பையனுக்கு ஆச்சர்யம்...ஆனா கண்டுக்காதன்னு சாடை காட்டிவிட்டேன்...

பொறுமையா அம்மன் தரிசனம் ஆனது.. பிரகாரம் சுற்றி வந்து, அம்மாவும் பையனும் உட்கார்ந்தார்கள்... நானும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தேன்.. அஞ்சு நிமிஷம் கழிச்சு, அந்த அம்மா கிட்ட போய்,
அம்மா, இன்னிக்கு என் மாமியார் நினைவு நாள்.. வருஷா வருஷம் அவங்க ஸ்தானத்துல யாராவது ஒரு தாய்க்கு புடவை வச்சுத் தருவோம்.. இதை வாங்கிக்கொண்டு என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..என்று புடவை, பூ, இனிப்பு போளி எல்லாம் வச்சு...கொடுத்தேன்...

ஒரு நிமிஷம் தயங்கினாங்க..அப்புறம் ஆச்சர்யம் சந்தோஷம் எல்லாம் கலந்து,..புடவைய வாங்கிக்கிட்டாங்க... பிரிச்சுப் பாருங்கம்மான்னு சொன்னேன்... புடவைய பிரிச்சு கலரைப் பார்த்ததும் அவங்களுக்கு அவ்ளோ சந்தோஷம்... அந்தப் பையன் நான் என்னமோ பண்றேன்னு...புன்னகையோட கவனிச்சுட்டு இருந்தான்....

அடுத்த வாரம், அந்த அம்மா மட்டும் கோயிலுக்கு வந்தாங்க... என்னை பார்த்ததும் ஒரு நொடி யோசிச்சு, அப்புறம்அடையாளம் கண்டுகொண்டு புன்னகைச்சாங்க... அம்மன் தரிசனம், பிரகாரம் சுற்றி வருதல் எல்லாம் முடிச்சு உட்கார்ந்தோம்.. மெதுவா...என் பேரு,,,நான் என்ன பண்றேன்னு ஆரம்பிச்சாங்க.. நானும் சொன்னேன்...( வக்கீல்னு சொல்லலை..) அப்பறம் மடைதிறந்த மாதிரி வெள்ளமா கொட்டித் தீர்த்துட்டாங்க அவங்க குடும்ப விஷயங்களை...

அடுத்தடுத்த வாரங்களில், அவங்க குடும்பத்தில் இருக்கற பிரச்னை...ஒரு விஷயமே இல்லை...என்றுஅவங்க நினைக்கற அளவுக்கு நான் ஊர் உலகத்தில் எப்படி இருக்கு என்று புரிய வைத்தேன்... அப்புறம், அவங்க மருமக இருக்கற ஊர் பேரைச் சொல்லி, எங்க பக்கம் தெரிஞ்சவங்க வீட்டுல கூட இப்டிதாங்க...மாமியா அவங்க மருமக உடம்புலதான் என்னமோ குறை இருக்குன்னு...நினைச்சு அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க... ஆனா அந்தப் பொண்ணு, பாவம் மாமியாரை தெய்வமா நினைச்சுட்டிருக்கு....அவங்க நல்லா இருக்கணும்னு கோயில் கோயிலா சுத்திட்டிருக்கு...

பாருங்கம்மா..இந்தக்காலத்துல கூட இப்படிலாம் பொண்ணுங்க இருக்கு.... உங்களுக்கும் வாய்ச்சிருக்காளே ஒரு ராட்சசி....ன்னு சொல்லவும் அந்தம்மாமுகமே மாறிடுச்சி....

அப்டியா....??, அந்த ஊரா....?? அந்தப் பொண்ணு பேரு என்ன...???

நான் சொன்னேன்.... சட்டுனு அந்தம்மா கண்ணுல தண்ணி வந்துருச்சி....செல்வி....என்னை என்ன பண்ணாலும் தகும்... அந்தப்பொண்ணுதான் என் மருமகள்... இந்த கோவை தண்டுமாரியம்மன்  இன்னிக்கு என் கண்ணைத் திறந்துட்டா.... நாளைக்கே என் பையனை போய் மருமகளை...கூட்டிட்டு வரச் சொல்றேன்..நீ நல்லா இருப்பே ..... ஒரு நாள் உன் வீட்டுக்காரரை கூட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு கட்டாயம் வரணும் செல்வி....

அதுக்கென்னம்மா கட்டாயம் வரோம்...ன்னு சொல்லிட்டு, கோவை தண்டுமாரியம்மன் கோவில்  இன்னொரு கும்பிடு போட்டுட்டு....கிளம்பினேன்....சிலசமயம் சினிமா, சீரியல்களில் நடப்பதை விட....நிஜ வாழ்க்கையில் சுவாரசிய சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன...

என்றும் அன்புடன் சிவக்குமார் ...9944066681...வாட்ஸாப்ப் எண் ....தொடரும் ..


எனது உலகம் ...ஷியாம்

(உலக தண்ணீர் தின சிறப்புக்கதை - மார்ச் 22)

இந்திரன் கோபமாக இருந்தான். இந்த நாட்டை விட்டுமட்டுமல்ல இந்த பூமியைவிட்டே எங்கேனும் போய்விட முடிவெடுத்தான். சென்னை அருகில் இருந்த ராக்கெட் ஸ்டேஷனுக்கு சென்றான். பாக்கெட்டில் இரண்டாயிரம் ரூபாய் இருந்தது. எப்படியும் இரண்டு வருடம் ஓட்டிவிடலாம். ராக்கெட் ஸ்டேஷனில் ஒரே இரைச்சலாக இருந்தது. “மார்ஸ்..” “மெர்க்குரி” “வீனஸ்.” “ஜூப்பிட்டர்..” “விரைவு ராக்கெட்” என கத்திக்கொண்டிருந்தார்கள். “சூரியனுக்கு போற ராக்கெட் இல்லையா? “ என்று கேட்டான் இந்திரன். “வண்டி பழுதடைந்து உள்ளது” என்று பதில் வந்தது. சிகப்பு நிறத்தில் அழகான ஓவியத்துடன் இருந்த ஜூப்பிட்டர் செல்லும் ராக்கெட் அருகே சென்றான் இந்திரன்.

ஐந்து ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்தான். திரும்பி வரவும் டிக்கெட் எடுக்க சொல்லி பைலட் கெஞ்சினார். ஜூப்பிட்டருக்கு யாரும் வரவதில்லை, ராக்கெட் ஓட்ட கூட காசுகிடைப்பதில்லை என வருத்தப்பட்டார். அந்த ராக்கெட்டிற்கு அவர் தான் பைலட் (ஓட்டுனர்), நடத்துனர் எல்லாம்.  கால்மணி நேரம் காத்திருந்தனர். வேறு பயணிகள் யாருமே வரவில்லை. வேறு வழியில்லாமல் வண்டி கிளம்பியது. ராக்கெட் ஓட்டுனர் அருகிலேயே அமர்ந்துகொண்டு பேசி வந்தான் இந்திரன். ஜூப்பிட்டருக்கு போக எவ்வளவு தூரம், அங்கே என்னவெல்லாம் பார்க்கலாம் என கேட்டுக்கொண்டே வந்தான். கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க மட்டும் ஓட்டுனர் கூறினார்.

ஜூப்பிட்டருக்கு பூமியில் இருந்து சுமார் நான்கு மணி நேரத்தில் போய்விடலாம். ராக்கெட் அதிவேகத்தில் செல்லும். அங்கே இந்திரனுக்கு பிடித்த விஷயமே அங்கே இருக்கும் நிலாக்கள் தான். நம்ம பூமிக்கு ஒரே ஒரு நிலா, ஆனால் ஜூப்பிட்டர் கோளுக்கு மொத்தம் 67 நிலாக்கள். இன்னும் கூட அதிகமாக இருக்கலாம் என நினைக்கின்றார்கள். தன் பையில் இருந்து ஒரு ஆப்பிளை எடுத்து ”சாப்பிடுகின்றீர்களா?” எனக்கேட்டான். ”இல்லை நான் சாப்பிட்டு இரெண்டு வாரம் தான் ஆகின்றது அடுத்த வாரம் தான் அடுத்து சாப்பிடுவேன்” என்றார். ”நான் பழங்களை சாப்பிடுவதில்லை, வெறும் சாப்பாட்டு மாத்திரைகள் தான்” என்றும் சொல்லிவிட்டார்.

நான்கு மணி நேரத்தில் ஜூப்பிட்டர் வந்துவிட்டது. “இந்திரன் சார், ஜூப்பிட்டர் வந்துவிட்டது. அங்க பாருங்க எவ்வளவு நிலாக்கள்” என இறக்கிவிட்டார். ராக்கெட்டின் பின்புறம் ஏதோ சத்தம் அதிகமா வருகின்றது. வரும்போது ஒரு நிலாவில் உரசிவிட்டது.  அதனால் இன்று இரவு ராக்கெட் இங்கே தான் நிற்கும் என கவலைப்பட்டார் பைலட். தன் பைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு பைலட்டுக்கு கையசத்துவிட்டு நகரினை நோக்கி நடந்தார். நகரின் பெயர் கிண்டர்கா. இறங்கி நடக்க ஆரம்பித்ததும் அவன் பின்னாடி சிலர் தொடர்வதை கவனித்தான். ஆரம்பத்தில் நான்கு பேர் இருந்தார்கள். பின்னர் அது பத்தாக உயர்ந்தது. பத்து இருபதானது. இருபது ஐம்பதனாது. இப்படியாக சுமார் முன்னோறு நபர்கள் இந்திரனை பின் தொடர்ந்தார்கள். வேகமாக நடந்தான். அவர்களும் வேகமாக நடந்தார்கள். ஓடினான். அவர்களும் ஓடினார்கள். வேகமாக ஓடினான் அவர்களும் வேகமாக ஓடினார்கள்.

குன்று போல இருந்த இடத்தில் நின்றான். “உங்களுக்கு என்ன வேண்டும்? பார்த்தால் நன்றாக உடை உடுத்தி இருக்கின்றீர்களே. இந்தாங்க என்னிடம் இருக்கு அதி நவீன மொபைல் ஃபோன்.” வேண்டம் என சொல்லிவிட்டார்கள். தன் பையில் இருந்த லேப்டாப்பை எடுத்துக் கொடுத்தான். வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். இப்படியாக ஒவ்வொரு பொருளாக கொடுத்தான் அனைத்தையும் மறுத்துவிட்டார்கள். ஐயோ என்னதாங்க வேண்டும் என்றான். எல்லோர் விரலும் ஒரு இடத்தை காட்டியது. அது அவன் பையில் இருந்த தண்ணீர் பாட்டில். “இதுவா??” என தூக்கி வீசினான்.

அவ்வளவு தான் தாமதம். பரபரவென எல்லோரும் நீண்ட வரிசையில் நின்றார்கள். தலைவன் ஒருவன் வரிசைப் படுத்தினான். மொத்தம் எத்தனைபேர் இருக்கின்றார்கள் என்று நவீன கருவி மூலம் கணக்கிட்டார்கள். தண்ணீர் அளவினை கணக்கிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் 2மில்லி.லிட்டர் தண்ணீர் வருமாறு ஏற்பாடு செய்தார்கள். சிலர் நேராக நாக்கில் விடச்சொன்னார்கள். சில குட்டி பாட்டில்களில் அந்த 1 சொட்டு நீரை வாங்கிக்கொண்டு சென்றார்கள்.

இதையெல்லாம் பார்த்த இந்திரனுக்கு பகீர் என்று இருந்தது. ராக்கெட் இருந்த திசைக்கு ஓடினான். நல்லவேளை ராக்கெட் அங்கேயே தான் இருந்தது. பைலட் சிரித்தபடி காத்திருந்தார்.

“ஏன் சார்?”

“இங்கயும் தண்ணி நிறைய இருந்துச்சு, யாரும் ஒழுங்கா பயன்படுத்தல. அது தான் நிலைமை இப்படி இருக்கு”

சீக்கிரம் இந்தியாவுக்கு ராக்கெட் விடுங்க என்றான் இந்திரன்.

புதன், 21 மார்ச், 2018


Sivakumar Kumar photos — feeling happy in Papanasam.

பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..கடமலைக்குன்று ,N செண்டராயபுரம் , தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில் )
புதிய அனுபவங்களை நமக்குபுத்துணர்ச்சி அளிக்கிறது,ஒய்வு எடுக்க எங்கெங்கோ பயணகிறோம்.
நம் மனம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் சரி ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் ,ஒய்வு என்பது ஒரு பணியை முடித்து புதிய பணியை தொடங்குவதிற்காக இருக்கும்.அப்போதுதான் நம் பணியை ஒரு புத்துணர்ச்சியுடன் ,புது பொலிவுடன் தொடங்கமுடியும் .
புதிய காட்சிகள் ,புதிய இடங்கள் ,புதிதாக நண்பர்களை சந்திக்கும் பொழுது நமக்கு புதிய சிந்தனைகள் பிறக்கின்றன.
இன்றய அசுர வேக வாழ்கையில் பணத்தை தேடுவதிலேயே நம் நேரத்தை தொலைதுகொண்டு இருக்குறோம் .
இம் மாதிரியான பயணங்களில் பல புதிய
சுவாரசியங்கள் நமக்கு தெரிவதில்லை .நம்முடைய பயணம் உல்லாச பயணமாக இருந்தாலும் ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் அதன் அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.
பாபநாசம் நீர்விழ்ச்சி நோக்கி செல்லும்போது கடையம் வழியாக வயல் சூழ்ந்த பசுமை அன்னை நம் பயணத்தை அழகாக்கிறாள் ,ஒரு பக்கம் குற்றால மலைத்தொடர் பசுமை போர்த்திய வனகாடுகள் நம் கண்ணுக்கு குளிர்விக்கிறாள்.பாபநாசம் சிவன் கோவில் கோபுரம் முதலில் நம் கண்ணுக்கு தரிசினம் தருகிறார்.காலை வேளையில் மனத்திற்கு பக்தி பரவசததுடன் தரிசித்து விட்டு மெதுவாக முண்டந்துறை வன சரக தேவதை அன்போடு வரவேற்கிறாள்.
முதலில் வனசரக காவலர்கள் வரும் வாகனங்களை செவ்வானே பரிசோதனை செய்து வழியனுப்புகிறார்கள் அவர்கள் செய்யும் பணி தெய்வ வழிபாட்டுக்குரியது.வனத்தில் தடை செய்யப்பட்ட பாட்டில்கள் புகைப்பான் ,பிளாஸ்டிக் பொருட்கள்,பார்வையிட வருபவர்கள் வனத்தில் தூக்கி எரிந்து விடாமல் இருக்கவும், இங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு தீங்கு நேராத வகையில் தங்கள் கடமையை வனசரக காவலர்கள் செவ்வனே செய்கிறார்கள். நாங்கள் செல்லும் வாகனம் வேக அளவு 20 டு 30 கிலோ மீட்டர் மிதமான வேகத்தில் வன விலங்குகளை பார்த்தவாறே தெந்தரவு இல்லாது ஊர்ந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் சிங்கவால் குரங்குகள் தன்குட்டியுடன் விளையாடி கொண்டும் ,குடிநீர் வரும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் குடித்துக்கொண்டு வரும் பயணிகளை மகிழ்வித்து கொண்டிருகின்றன.புள்ளி மான்களும் பயம் அறியாது எங்களை பார்த்தாவரே கண்சிமிட்டி விட்டு வனத்துக்குள் துள்ளி குதித்து ஓடியது.மயில்கள் தன் தோகை விரித்து மழை வருவதிற்கான அறிகுறியை காட்டி நடந்து கொண்டிருந்தின.இவை எல்லாம் இயற்கை அன்னை நமக்கு கொடுத்து சென்ற அரிய பொக்கிஷங்கள்...
பாபநாசம் நீரிவிழ்ச்சி யின் சத்தம் அரை மைல் தூரத்திற்கு நம் செவிகளில் ரிங்ககரமிடுகிறது.நீர்விழ்ச்சியுடன் அந்த குளிர் சாரல் நீர்விழ்ச்சி முகத்தில் பன்னீர் துளிகளாக படர்கிறது.நீர்விழ்ச்சி அருகே வரும் பயணிகள் வழிகாட்டியாக அங்கு வாழும் மலைவாழ் அரசர் ஒருவர் நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது பாறைகளில் வழிக்க விழாமல் நடக்குமாறு நமக்கு வழிகாட்டுகிறார்.நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது நம் நாடி நறும்பு எல்லாம் ஊடுருவி உடலின் வெப்பத்தை தணிக்கிறது.
நீர்விழ்ச்சி ஒட்டி மலை பாதை வழியாக சென்றால் மேல கம்பீராமாக அகஸ்தியர் கோவில் பெரிய பாறைகளின் நடுவே நமக்கு காட்சி அளிக்கிறது.வான் உயரந்த பாறைகளுகிடையே நடுவே அமைந்திருக்கும் இக் கோவில் வாழ்க்கை பயணத்தில் பார்த்து பரவசப்படும் ஒரு புண்ணியஸ்தலமாகும். அகஸ்தியர் சிலை சிற்ப வேலைபாடுகள் அருமையான சிற்ப கலைஞனின் கை வண்ணத்தை காட்டுகிறது.
மெதுவாக காரையார் அணை வழியாக அருள்மிகு சொறி முத்தையனார் கோவிலுக்கு பயணித்தோம் .வழியில் பழமையான மரப்பாலம் 1992 இல் புயல் மழையால் அடித்த செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக ஒருபுதிய அழகான இரும்பு பாலம்வழியாக நதியை கடந்து சென்றோம்.
புதிய சிந்தனை ,ஆசைகள் ,தேடல் ,தோற்றம் ,நம் குணம் என்று மனிதர்களுக்கு மனிதன் மாறுபடுவதுபோல,இடங்களும் மாறுபடுகின்றன....வாழ்க்கை பயணங்கள் என்றும் முடிவதில்லை ...நம்மோடு .....!!!!!!!!!!..அன்புடன் சிவக்குமார் ..9944066681...வாட்ஸாப்ப் எண்


எனது உலகம் .....🌷🌷🌷🌷

இன்று முதல் ...எனது உலகம் ..என்ற தலைப்பில் ..எனது வாழ்க்கையில் ஏற்பட்ட வளர்ச்சி ...வீழ்ச்சி ...இரண்டு பிரிவுகளாக பிரித்து உள்ளேன் ..அதாவது கிறிஸ்து பிறப்பு முன் ..கிறிஸ்து பிறப்புக்கு பின் என்ற வகையில் ...எனது திருமணத்துக்கு முன் ...திருமணத்திற்கு பின் ..என்ற வகையில் பிரித்து உள்ளேன் ...இதை கடந்த 5 வருடங்களாக எழுதி ...அதை எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் .உரிய நண்பர்கள் மூலம் ...திரைப்பட இயக்குனர் ...தொலைக்காட்சி இயக்குனர் ...எனது நூலை வெளியிட இருக்கும் ..நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன் ...திரைப்படம் ..நாடகம் .நூல் ...எப்பொழுது வரும் என்று நேரம் வரும்பொழுது சொல்லுகிறேன் ...நூலை எழுதுவதற்கு ..நான் பட்ட கஷ்டங்கள் ..எனக்கு உதவிய சொந்தங்கள் ..என் நண்பர்கள் ..நன்றி கடன் பட்டிருக்கிறேன் ..எனது உலகம் முழுவதும் ..என்னுடைய ஷ்யாமின் எதிர் கால நலனுக்கு ..அவரின் கல்விக்கு ..அவனுடைய வாழ்வாதாரத்தக்கு ...ஒரு டிரஸ்ட் மூலம் ..என் வாழ்க்கையில் கூட இருந்த வழக்கறிஞர்கள் ..என் நண்பர்கள் ..சில நமது சொந்தங்களிடம் தெரிவித்து உள்ளேன் ..அதை சட்ட பாதுகாப்பு மூலம் நான் உலகில் இல்லாதபொழுது ..ஷ்யாமிடம் விவரம் தெரியும்பொழுது அவர்க்கு தெரிவித்து ..வாழ்க்கையில் கஷ்டப்படாமல் ..வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்த சிரமம் இல்லாமல் முன்னேறவேண்டும் என்ற காரணத்தால் இந்த ஏற்பாடை செய்து உள்ளேன் ..

இதில் கல்வி ..நமது பண்பாடு ..கலாச்சாரம் ..வகையில் பிரித்து உள்ளேன் ..நமது நண்பர்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் ..நம் புது சொந்தம் என்று பழைய சொந்தம் என்றோ ..நம்முடன் பழகும் போது கண்ணை மூடிக்கொண்டு நம்பி வீட்டுக்குள் அழைத்து வரக்கூடாது ...தற்காலத்தில் நம்மில் நெருங்கிய வாழ்வோடு ..நம் குழந்தை செல்வங்கொலோடு ..வாழ்வின் முன்னேற உதவிய சொந்தங்களை தெரிந்து கொள்ளலாம் ...அதைவிட நண்பர்களை தெரிந்து கொள்ளலாம் ...வாழ்வின் கடைசியில் போகும்போது
கூட்டத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம் ..எந்த அளவிற்கு அவர்களுக்கு ஊதவியிருக்கிறோம் என்று..சேர்த்த வைத்த பாட்டன் ..அப்பா சொத்துக்கள்  அழித்து விடலாம் ...நட்புடன் உதவிய சொந்தங்கள் .நண்பர்கள் நீங்கள் காணலாம் ..ஏன் திடீர் என்று ..எனது உலகம் ..தொடரை எழுதவற்கு என்ன காரணம் என்று கேக்கலாம் ...நேற்று சிறு பொறி ஒன்று ஷ்யாமை பற்றி பதிவு வந்தவுடன் ...தூங்கிருந்த இருந்த சிங்கத்தை கர்ஜினையுடன் எழவேண்டி சூழலை ஏற்படுத்தி விட்டது ..அந்த நபருக்கு ஆயிரம் நன்றிகள் ..என் வேலை ..என் பெற்றோர் ..எனது மாப்பிள்ளைகள் ..எனது அண்ணன்கள்,எனது நண்பர்கள் ,சமுதாய சிந்தனைகள் ..அமைதியாக ஆழ்கடலின் அலையில்லாமல் இருந்தது ..சுனாமியாக ..எரிமலையாக ..தொடராக எழுத வேண்டிய சூழ்நிலை ..இந்த தொடரை ..விழிப்புணர்வு செய்தியாக படித்து பயன் பெறவேண்டியது...என்று இதை எழுத ஆரம்பிக்கிறேன் ....என்றும் அன்புடன் சிவக்குமார் ...9944066681..வாட்ஸாப்ப் எண்  👍🌷🌷🌷🌷



திங்கள், 19 மார்ச், 2018



நாளை (மார்ச் 20) சர்வதேச கதை சொல்லல் தினம். கதை சொல்வதன் அவசியத்தை நாம் எல்லோருமே அறிந்ததே. அது ஒரு மாயம் உலகம். அது அடங்காத அனுபவத்தை தரவல்லது. சர்வதேச கதை சொல்லல் தினமான மார்ச் 20 அன்று குழந்தைகளுடன் அமர்ந்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் கதைச் சொல்லி மகிழ்விப்போம். அது பள்ளியோ வீடு வீதியோ பூங்கவோ எங்கே குழந்தைகளைப் பார்த்தாலும் நாளை கதை சொல்வோம். நாளை தொடங்கும் / தொடரும் கதை சொல்லல் தொடர்கதையாட்டும். Happy Story Telling.
என் ஷியாம் செல்ல குட்டி ..தூங்குவதற்கு முன் ...ஷ்யாமுடன் பிறந்த 2 வருடங்களிருந்து கவனிக்கும்கேட்க்கும் திறன் எல்லா குழந்தைகளுக்கு வருவதுபோல் ...கூரிய திறன் மூலம் நான் கதை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன் ...அவனுக்கு பிடித்த ராஜா ராணி ,அம்புலிமாமா கதைகள் ..பாட்டி வடை சுட்ட கதைகள் இரவு தூங்காவதற்கு முன் சொல்லிக்கொண்டு பழக்கப்படுத்தி இருந்தேன் ...பள்ளியில் சேர்ந்த வுடன் ..இன்று வகுப்பில் நடந்த நிகழ்வுகள் ..ஆசிரியர் சொல்லி கொடுத்தா கதைகள் ...சகா நண்பர்கள் சொன்ன செய்திகள் ...அவருடைய பாணியில் பேசி தூங்கவைப்பேன் ..அதுவும் அவருக்கு வளர்ந்த 6 வயது முடிய கதைகள் கேட்டு என் தோளில் கட்டிபிடித்தி தூங்கியவன் என் செல்ல ஷியாம் குட்டி ...
கனவு.........(ஷ்யாம் அப்பா ....)
கண்ணு தூங்கிட்டியாப்பா.....
இன்னும் இல்லப்பா... தூக்கம் கண்ணை அசத்துது..
.
அப்பா .தூங்குனப்புறம் என்ன பா நடக்கும்..''
நீ கண்ணை மூடுவே..வெளியிலே நடக்குற எதுவும் தெரியாது..கொஞ்ச நேரத்திலே நல்லா தூங்கிடுவே.
ஆனா நீ காலையிலே இருந்து பார்த்தது நெனச்சது, பேசினது. விளையாடினது, சண்டை போட்டது எல்லாம் தூக்கத்திலே .உனக்குள்ளே கனவிலே வந்து போகும்..
அப்ப கண்ணுக்குள்ளே பட்டாம் பூச்சி பறக்குமா?
அப்புடித்தான்
அது எப்புடி.. ஒரு நாள் பூரா நடந்தது முழுசும் ஒரு ராத்திரி கனவுல வருமா?
ஆமாம் கண்ணு வரும்... அதான் மூளை பகல்லே சிந்திக்கிற தைவிட ராத்திரிலேஎதான் அதிகமா வேலை செய்யுதாம்..
எதுக்கு அந்த வேலை ராத்திரிலே
அப்பத்தான் நீ நிம்மதியா பழச தேவையில்லாததை மறக்க முடியும்..
எதுக்கு பழச மறக்கணும்
பழச மறந்தா தான் புதுசு புதுசா நெறைய விஷயம் உள்ளே போகும்.
சரி சரி இப்ப தூங்கு..
, அப்பா...அப்பா இன்னும் ஒரேஒரு விஷயம்.
என்ன சொல்லு சாமி..
இப்படி தெனம் கனவு காணுறோம் ..ஆனா மனசிலே ஒண்ணுமே நிக்கலியே..
ஆமாம் சாமி.. எல்லா கனவும் 95% கனவு கண்ணு முழ்ச்சி 30 நிமிடத்திலே மறந்துடும்.
ஏ அப்பா அப்புடி..
அதையே நெனச்சுகிட்டு இருந்தா உடலுக்கு குழப்பம் வந்துடும்லே..அதான்..
சரி கண்ணு தூங்குடா.
கதை கேட்டு தூங்கிய காலமெல்லாம் ...வாழ்வின் வழியை ..கனவை ..எதிர்காலத்தில் கதைகள் சொல்லி தூங்கவைப்போமா .என்று தெரியவில்லை ...ஷியாம் பிறந்த உடுமலை லட்சுமி மருத்துவமனை ..அவன் வளர்ந்த கோவை வடவள்ளி ....என் ஷ்யாமின் நினைவுகள் என்றும் மறைவது இல்லை ...என்றும் அன்புடன் சிவக்குமார் ...9944066681...வாட்ஸாப்ப் எண்

ஞாயிறு, 18 மார்ச், 2018

இள ...ஞாயிறு   அருமையான சந்திப்பு ...

இன்று காலையில்  இருந்தே கொஞ்சம் உற்சாகம் தொற்றி கொண்டது ...ஒரு முக்கிய தலைவரை சந்திக்க போகிறோம் ..என்று மகிழ்ச்சி ..நானும் உடுமலை வரலாற்று நடுவம் ஆய்வாளர்கள் திரு .அருட்செல்வம் ..தமிழ் பேராசிரியர்கண்டிமுத்து (கேரளா -கொடுவாயூர் ) இவரை பொது தள நிகழ்ச்சிககளில் ...மற்றும் புத்தக கண்காட்சிகளில் இவரிடம் சில மணிநேரங்கள் கலந்துரையாடுவது உண்டு ..இன்று சந்தித்தது ..நம் கம்பள சமுதாய நிகழ்வுக்குக்காக மற்றும் நம் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தளி எதுலப்பர் மன்னரின் ..அறிமுக வரலாற்று நூலை அவரிடம் தந்துவிட்டு படித்து அணிந்துரை ..அதைப்பற்றி வரும்போது அவரிடம் நமது பாளையக்காரர்களின் ஆட்சி முறை வரலாறுகளை விவாதம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பதுக்கு சந்தித்து உரையாடியது இன்று அருமையான ஞாயிறாக  அமைந்தது மிக்க மகிழ்ச்சி..


நாளை மதிப்பீட்டு நடுவர் அவர்களின் சந்திப்பு பற்றி பதிவிடுகிறேன்


சனி, 17 மார்ச், 2018

சுந்தர தெலுங்கு உகாதி வாழ்த்துக்கள் ...

உகாதி அல்லது யுகாதி (தெலுங்கு: ఉగాది, கன்னடம்: ಯುಗಾದಿ) தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா(गुढीपाडवा) எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். இவ்வருடம் யுகாதி திருநாள் நாளை மார்ச் 23 ம் தேதி வருகிறது.
உகாதி கொண்டாட்டம்:
சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.
உகாதி பச்சடி:
உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இது புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லா (ಬೇವು-ಬೆಲ್ಲ) என அழைப்பர்.
தமிழ் நாட்டில் உகாதி:
தமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்யாது போயினும், இனிப்பு வகைகள் முதலியவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர்.
அனைவருக்கும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக சுந்தர தெலுங்கு யுகாதி பண்டிகை வாழ்த்துக்கள். 
சந்திப்பு .....உடுமலையின் மண்ணின் மைந்தர்

இந்த வாரம் அருமையான சந்திப்பு ...மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு .கோவிந்தராஜன் அவர்கள் (உடுமலை டு அகமதாபாத் )..செவ்வந்தி பூ கொடிநிழலில் அருமையான சந்திப்பு .உலக புகழ் பெற்ற வில்மர் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு முதன்மை அதிகாரி .கல்வி :நான்கு முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் வழக்கறிஞர் ..எளிமையான மனிதர் ...பேசும் வார்த்தைகள் கொங்கு கலந்த தமிழ் பேச்சு ...அருமை வேலை வாய்ப்பு ..இன்றய பொருளாதார சூழல் ..வியாபார முறை தொழில் நுணுக்கங்கள் ..இன்றைய வளரும் தலைமுறை கல்வி ,தொழில் முனைவோர் எப்படி சிந்திக்கிறார்கள் பற்றி இரண்டு முறை சந்திப்புகள் ..அவருக்கு விடாமல் வரும் நிறுவன  தொலைபேசி அழைப்புகள் ...அதற்கிடையில்  சில மனநேரங்களில் என்னிடம் பகிர்ந்தகொண்ட பணி சம்பந்தமாக ..எதிர்காலத்தில் தொழில் மாற்றங்கள் ,அதைக்கொள்ளும் எதிர்கொள்ளும் சவால்கள் அழகாக நிகழகால் எடுத்துக்காட்டுகளுடன் பேசியது மிக்க மகிழ்ச்சி ..அய்யா அவர்கள் பல வெளிநாடுகள்,வெளி மாநிலங்கள் , பணி நிமிர்த்தமாக சுற்று பயணம் சென்றது..வாழ்க்கை முறை ..கற்ற தொழில் நுணுக்கங்கள் ..சகா பணியாளர்களுக்கும் ,தன் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு சரியான வழிகாட்டல்கள்..ஆகியவை பிரமிக்கவைக்கும் செயல் திட்டங்கள் இன்று நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை தன திறமையின் மூலம் நெறிப்படுத்தியது ..ஆகியவையை நினைவுகளை பகிர்ந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி ..எனக்கு இவரின் வழிகாட்டல்கள் ,வாழக்கையில் மேலும் வளர ..இவரை போன்ற நண்பர்களை பெற்றது மகிழ்ச்சி ..நம் நாட்டை பொறுத்தவைரை ..வளரும் தலைமுறை மாற்றங்கள் அழகாக எடுத்துரைத்தார் ...வடஇந்திய மக்கள் இப்பொழுது எல்லாம் உயர் கல்விக்கு மாறிக்கொண்டு இருகிறார்கள் ...தென் இந்திய மக்கள் புதிய தொழிமுனைவோராக மாறிக்கொண்டு வருவது நல்ல மாற்றம் என்று கூறியது மிக்க மகிழ்ச்சி ..நானும் கடந்த 15 வருடங்களாக கண்கூட பார்த்துவருகிறேன் அவர் கூறிய மாற்றம் நடந்துகொண்டு உள்ளது..ஏட்டு கல்வி பயின்று ..வெறும் ஒரு சுற்று வட்டரத்துக்குள் முடங்காமல் ..இன்று உலகம் முழுக்க நம் வளரும் இளையஞர்கள் தொழில் முறை குறிக்கோளுடன்  சுற்று வரும்  நிகழ்வுகளை பார்க்கம்பொழுது பாரதியார் கண்ட கனவு நிறைவது மிக்க மகிழ்ச்சி ..இந்த வார சந்திப்பு மனதுக்கு மிக்க மகிழ்ச்சி...சந்திப்புகள் தொடரும் ..  அன்புடன் சிவக்குமார் ...9944066681...வாட்ஸாப்ப் ..

வியாழன், 15 மார்ச், 2018

கம்பள சமுதாயத்தில் வளரும் கலைஞர் திரு .பிரதீப் ராம் அப்பணாசாமி  ...(ஜமீன் கோடாங்கிப்பட்டி .நாகலாபுரம் )விருதுகள்

AATO felicitated at Tamil Nadu Tourism Awards- 2018

Great...Congrats...Bro...Mr.Pradeep Ram...

Tamilnadu tourism award 2018. Name: prathipram, native: Jamin Kodangipatti...Historical Legends....

 Andaman Travel Agents Association “AATO “ has been awarded as Best Association for working With Tamil Nadu Tourism for Promoting Destination ANDAMAN in the southern region at the Tamil Nadu Tourism Awards- 2018.In a function held at Kamaraj Arangam,Teynampet,Chennai on 14th March ,2018.
The Award was presented by Noted Playback singer Smt P. Susheela and the function is supported by Incredible India, Ministry of Tourism and powered by Madura Travel Service Pvt Ltd.
On Behalf of AATO the award was received by Mr. M.Vinod, President along with K.Hamza, Gen Secretary, Mr. Vivek Singh, Treasurer and Mr. Selvaraj, Executive Member of AATO.

Mr.Pradeep Ram Appansamy.
Intro
Studied at Govt. college of fine arts,kumbakonam
Went to san hr sec school, Nagalapuram
Lives in Kumbakonam
Joined June 2013

Regards..
Kambala Virtcham Trust...

பிரதீப் ராம் அப்பணசாமி ..மாப்பிள்ளைக்கு ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது ..

செவ்வாய், 13 மார்ச், 2018

இசைஞானி பாடல்கள் ...என்னை இப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது 

நேற்று முன் மதியம் வீட்டுக்குச் சாப்பிட வந்த போது அம்மா ..அப்பா  பழைய பாடல்களின் தொகுப்பை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள் . நான் உள்ளே நுழைந்ததைப் பார்த்த போது செய்திக்கு மாற்றட்டுமா? என்று கேட்டார். வேண்டாம் என்று சொல்லிவிட்டுஅவர் பார்த்துக் கொண்டிருந்த பாடலை நானும் சிறிது நேரம் பார்த்தேன். 

எம்.ஜி.ஆர். சிவாஜி தத்துவபாடல்கள். வார்த்தைகள் பசுமரத்தாணி போல உள்ளே பாய்ந்தது. ஆனால் என்னால் தொடர்ந்து கேட்க முடியவில்லை. சிறிது நேரம் ஓய்வு எடுக்கப் படுக்கையில் சாய்ந்த போது கூடத் தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல்வரிகள் காதுகளை வந்தடைந்து கொண்டேயிருந்தது. 

அப்போது அந்தப் பாடல்களை  கேட்ட காலங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து போனது. 

இதே போலப் பள்ளிப்பருவம் முதல் கல்லூரிப் பருவம் வரைக்கும் என் காதுகளில் ஒலித்த இசைஞானியின் பாடல்களை ஒவ்வொருமுறையும் கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அதைக் காதில் வாங்காமல் கடந்து சென்று விடுவதுண்டு. காரணம் ஒரு பாடல் ஒலிக்கும் போது எனக்குக் கூடவே அப்போதைய நினைவுகள், நல்லது, கெட்டது, சோகம், பிரச்சனைகள் எல்லாமே நினைவுக்கு வந்து நிலைகுலைய வைத்துவிடும். 

தளி ஜல்லிபட்டியில் என் பெரியப்பா மகன் ...தம்பானுடன் நால்ரோட்டில் டூரிங் டாக்ஸியில் தொடக்கத்தில் எந்தப் பாடலை ஒலிக்கவிடுவார்கள். டிக்கெட் கொடுக்கும் போது எந்தப் பாடல் ஒலிக்கும், டிக்கெட் கொடுத்து முடித்தாகிவிட்டது. படம் போட போகின்றோம் என்பதனை அறிவிக்கும் பொருட்டு ஒரு பாடலைப் போடுவார்கள். 

பக்கத்து வீட்டுக்கு அக்காவிடம் ட்டியூன் படிக்க வந்த பெண் மீதி கொண்ட காதல் சமயத்தில் விரும்பிய பாடல்கள், கல்லூரி முடித்து முதல் ஆறு மாதங்கள் ஊரில் சுற்றிக் கொண்டிருந்த போது அப்பாவின் கண்களில் படாமல் சுவர் ஏறி குதித்துப் பின்பக்கமாக உள்ளே நுழையும் போது பக்கத்து டீக்கடையில் ஒலித்த பாடல் என்று ஒவ்வொன்றும் இப்போது கேட்கும் பாடலை நினைவு படுத்திக் கொண்டேயிருக்கும். 

நினைவுகள் சுகமானவை. ஒருவருக்கு நினைவு தான் முழுமையான சொத்து. ஆனால் அளவு கடந்து இருக்கும் போது, அது நிரம்பி வழிந்து பாத்திரத்தில் நிற்காத அளவுக்கு அனுபவங்கள் இருக்கும் போது அது சுமையாகத்தான் இருக்கும். இதன் காரணமாக மறதி வரமாக எனக்குத் தெரிகின்றது. 
இன்று காலையில் இந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்த போது இளையராஜா குறித்துப் பல எண்ணங்கள் வந்து போனது. 

https://www.youtube.com/watch?v=AcBXoszHdNk....Siru Ponmani Song Bharathiraja Ilaiyaraaja, Malaysia Vasudevan, S Janaki Kallukkul Eeram


எனக்கு இசையறிவு கிடையாது. ஆனால் அதனை உள்வாங்கத் தெரியும். இசைக்கோர்வைகளின் சூட்சமம் தெரியாது. ஆனால் அது எங்கே தொடங்கி எங்கே தொடர்ந்து எங்கே முடிகின்றது? முடியும் போது எந்த இசைக்கருவி மீண்டும் தொடங்க வைக்கின்றது என்பதனை அனுமானிக்கத் தெரியும். பாடல் வரிகளுக்கு இடையே சின்னச் சின்ன வாத்தியக்கருவிகள் செய்யும் மாய ஜால வித்தைகளை உணரத் தெரியும். இதை அனைத்தையும் இசைஞானியிடம் தான் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன். 

பலமுறை பிஜிஎம் என்ற கோர்வைகளைத் தனியாக எடுத்துக் கேட்பதுண்டு. நிச்சயம் கோடியில் ஒருவருக்குத் தான் இந்தத் திறமை வாய்க்கும். இளையராஜா தமிழகத்தில் பிறந்தது நமக்கான பெருமை. 

இளையராஜா குறித்துச் சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய தகவலைக்கூடப் பகிர்ந்திருந்தேன். அது முழுமையான உண்மை தான். கற்பனை உலகத்தில் உலாவுபவர்கள் நிஜவாழ்க்கையில் நிஜமனிதர்களைக் கையாளமுடியாமல் போய்விடுகின்றது. அதற்கு முழு உதாரணமாக இளையராஜாவை எடுத்துக் கொள்ள முடியும் என்று எழுதத் தான் எனக்கும் ஆசை. ஆனால் எதார்த்தம் அதுவல்ல.

என் காதுக்கு வந்த சில தகவல்கள். 

எச். ராஜா மூலம் விஜய் ன் படமான மெர்சல் படம் குறித்து அதன் வெற்றி தோல்வி குறித்து, அதன் தாக்கம் குறித்து இணையதளங்கள், இந்து மதத்தை மட்டும் விமர்சித்து விட்டு மற்ற மதங்களை விமர்சிக்கத் தயங்கும் போராளிக்கூட்டங்களைக் கவனித்துக் கொண்டிருந்த நான் மற்றொரு விசயத்தைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். 

இராம நாராயணன் மகன் யார் யாரிடம் இந்தப் படத்திற்கு நிதி பெற்றுள்ளார்? எப்படி ஹைப் உருவாக்குகின்றார்கள்? யார் பின்புலத்தில் இருக்கின்றார்கள்? யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்? என்பதனை கவனித்த போது இரண்டு பேர்கள் அதிகப் பதட்டத்தில் இருந்தார்கள். ஒருவர் உதயநிதி ஸ்டாலின். அவர் அடிப்படையில் வியாபாரி. அவர் மேல் எந்தத் தவறும் இல்லை. நிதி உதவி செய்து உள்ளார். நம்ப முடியாத மீட்டர் வட்டி. அதற்கான பலனைப் பெற்றார். இரண்டாவது நபர் இசைஞானி. அவரும் இந்தப் படத்திற்கு நிதி உதவி செய்துள்ளார். அவருக்குண்டான பலனும் கிடைத்து விட்டது. 

மற்றொரு தகவல். 

இளையராஜாவுக்கு விருது கிடைத்தபிறகு தகுதியானவருக்குக் கிடைத்த மரியாதை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அவர் தகுதியின் மீது எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது என்றே நினைக்கின்றேன். ஆனால் அதற்காகவும் அவர் உழைத்துள்ளார். அவருக்குக் கிடைக்க வேண்டிய உண்மையான மரியாதைக்குக்கூட லாபி வட்டத்திற்குள் நுழைந்து அதற்கான விலையைக் கொடுத்து தான் பெற்றுள்ளார். 

இது சார்ந்த ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. 

எப்போதும் இசைஞானிக்கும் பத்திரிக்கையாளர்களும் ஏழாம் பொருத்தம். அவர்கள் குண்டக்க மண்டக்கக் கேள்வி கேட்பார்கள். இவரோ தத்துவ ஞானத்தைப் பாடமாகப் புகட்டுவார். அவர்கள் டர் ஆகி வேறு பாதையில் வண்டியைத் திருப்புவார்கள். இது எப்போதும் நான் பார்த்துக் கொண்டிருப்பது தான். நான் கூடப் பத்திரிக்கையாளர் மேல் தான் தவறு தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 

விருது கிடைப்பதற்கு முன் சில மாதங்களுக்கு முன் தேசிய தொலைக்காட்சி (தனியார்) சேனல் நிர்வாகம் இளையராஜாவைத் தொடர்பு கொண்டு பேட்டி எடுக்க ஒப்புதல் பெற்றது. அந்தப் பேட்டி பல பிரபலங்களை எல்லாத் துறைகளில் இருந்து தேர்ந்தெடுத்துத் தோட்டத்தில் அல்லது வெளியிடங்களில் நடந்து கொண்டே இயல்பாக உரையாடிக் கொண்டே செல்வது என்கிற ரீதியில் இருக்கும். இது தொடர்ந்து நடந்து வருகின்றது. 
ஒப்புதல் பெற்ற தினத்தில் பேட்டி எடுக்கும் குழுவினர் வந்த பிறகு முக்கியமான நபர் இருவரையும் விருந்தளித்து அவர்களிடம் இந்தப் பேட்டி வேண்டாம் என்று ஞானி காரணக் காரியங்களை விளக்கி உள்ளார். 

காரணம் அவர்கள் எப்படிக் கேள்வி கேட்பார்கள்? என்று இவர் நன்றாகவே உணர்ந்தவர். தப்பிக்க முடியாது. அவர்கள் மத்திய அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள். மிரட்ட முடியாது. அடிபணிந்து தான் போக முடியும். அன்பாகவே பேசி வழியனுப்பி வைத்து விட்டார். யாரை மிரட்ட முடியும் என்பதனையும் யாரிடம் அடிபணிந்து போக வேண்டும் என்ற கலையையும் இசைஞானி தெளிவாகவே கற்று வைத்துள்ளார். 

அவரின் வாழ்நிலை, சூழ்நிலையில் வைத்துப் பார்த்தால் இது எனக்குச் சரியாகவே படுகின்றது? 

அப்புறம் ஏன் ஈரவெங்காயம் தத்துவ விசாரம்? 

இரட்டை வாழ்க்கை வாழ்வது எளிதல்ல. அதுவும் ஆன்மீகம் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு ஜல்லியடிப்பது எல்லாம் தற்போது காலத்தில் நடைமுறைக்கு ஒவ்வொது. எப்படியும் பல்லிளிக்க வைத்து விடும். இயல்பாக வாழ முடியாதவர்கள் மட்டும் தான் அந்தப் போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு வாழ முடியும். 

காரணம் இசைஞானி என்ற பட்டம் கலைஞர் காரைக்குடியில் வைத்துதான் கொடுத்தார். நிகழ்ச்சி நடப்பதற்கு முன் மதியம் முதல் அந்தப் பெரிய செட்டியார் வீட்டில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியப் பிரபல்யங்கள் அனைவரும் கூடியிருந்தனர். அந்தக்கூட்டத்தில் ஒரு பல்கலைகழகத் துணைவேந்தரும் இருந்தார். ஜமாபந்தி ஒன்று கூடும் போது ஆர்வக்கோளாரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுவது இயல்பு தான். 

அன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரியாத்தனமாக இசைஞானியிடம் பழைய பாடல் வரிகளைச் சுட்டிக் காட்டி வேறு சில தகவல்களைச் சொல்லி (அவர் தமிழ் ஆர்வலர்) பேச இசைஞானி அவரைப் பிலுபிலு வென்று பிடித்து உலுக்கி விட்டார். 

நடிகர் சிவகுமார், வைகோ, முரசொலிமாறன் தொடங்கி அத்தனை பேர்களுக்கும் தர்மசங்கடமாகிவிட்டது. தயவு தாட்சண்யம் இல்லாமல், கொஞ்சம் கூட யோசிக்காமல் துணைவேந்தரை இசைஞானி துவைத்து எடுத்து விட்டார். அவர் முகம் வாடிவிட்டது. அப்புறம் துணைவேந்தரை சமாதானப்படுத்தி வேறு பக்கம் நகர்த்தி விட்டனர். 

அந்தக் கூட்டத்தில் அவர்களுடன் இருந்த நண்பர் சில மாதங்களுக்கு இளையராஜாவுக்கு விருது கிடைத்த போது இந்தத் தகவலையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

ஆழ்ந்த திறமையும், புலமையும் கொண்டவர்களின் மனம் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது என்பது எந்த அளவுக்கு உண்மையோ? அந்த மனதிற்குள் இருக்கும் அடிப்படை வக்கிரம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு சிறிதளவாவது கிடைத்த அனுபவங்கள் வாயிலாக மாறும் என்பதே சமூக விதி சொல்லும் பாடம். 

என் வாழக்கை கஷ்டகாலங்களில் என் ஷ்யாமின் புகைப்படங்களும் ...இசைஞானி பாடல்கள் ...என்னை இப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது ...

திங்கள், 12 மார்ச், 2018

இன்று ...ஒரு அருமையான சந்திப்பு ..பாஞ்சை முழக்கம் ..திரு .செந்தில்குமார் அவர்களை சந்தித்தது மகிழ்ச்சி ..இவர் சென்னை கப்பல் போக்குவரத்த துறைமுக பணியில் முகமை சார்ந்த துறையில் பணிசெய்துகொண்டு ...நம் கம்பள இனப்பற்றுடன் நம் சமுதாய வேலைகளை முழு அர்ப்பணிப்புடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டு உள்ளார் ..இன்று அவரை சந்தித்து ,உரையாடியது மிக்க மகிழ்ச்சி இதை ஒருங்கிணைத்த இனப்பற்றாளர் தாததா  நாயக்கர் செல்வம் அவர்களின் பங்கு மிக முக்கியமானது ..அவரை கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் கோவில் ,நடுகல் ஆகியவற்றை பார்வையிட்டு அழைத்து சென்றது மிக்க மகிழ்ச்சி ... ...

பாளையக்காரர் தளி எதுலப்பர் நூல் வெளியிட்டு விழா தொடர்பாக உடுமலை வரலாற்று நடுவம் திரு அருட்செல்வம் ,பேராசிரியர் கண்டிமுத்து அவர்களுடன் ..திருப்பூரில் இருக்கும் அண்ணன் ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்துவிட்டு ...தளி எதுலப்பர் மன்னரின் நூலுக்கு அணிந்துரை அளித்த  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் .திரு .பழனிசாமி அவர்களை  சந்தித்து விட்டு ..வந்தது மிக்க மகிழ்ச்சி ...இன்னும் விழாவிற்கு ஒரு மாதம் 7 நாட்கள் உள்ளது ...வேகம் இன்னும் கூடிக்கொண்டு போகிறது ...எடுத்த காரியம் கைகூடுவதற்கு சிவனை நினைத்தால் கைகூடும் என்கிறார்கள் பாப்போம் ..அதுவும் நம் சமுதாயத்தை  நினைத்தால் கொஞ்சம் இனம் புரியாத பயம் தொற்றிக்கொள்கிறது ...ஏன் என்று இன்னமும் புலப்படவில்லை  ....அன்புடன் சிவக்குமார் ...9944066681...வாட்ஸாப்ப் எண்

ஞாயிறு, 11 மார்ச், 2018

உடுமலை வரலாறு added 6 new photos — with Raja Elango and
சொல்லாமல் சொல்லும் செய்திகள்
பழசு பிடிக்காது, பழைமை பிடிக்கும்
பழசிற்கும் பழைமைக்கும் வேறுபாடு உண்டு.
நண்பர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தோம். அதில் கண்ட காட்சிகளையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நம் மக்கள், நம் மூதாதையர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ண நேரிடும்போது நம் பழைமைகளை நம் எண்ணங்களால் அசைபோட நேரிடுகிறது. அவ்வாறு அசைபோடும் போது இப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள் நம் மூதாதையர்களின் அருமை பெருமைகளை நம் மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் சொல்லிச் செல்வது ஒரு வகை பதிவாகும்.
குறிப்பிட்ட நிலத்தின் தலைவன், தலைவி இருவரும் மனமொன்றி தன் வாழ்க்கைத் துணையை தாமே தேடிக்கொண்டு தம் வாழ்நாள் முழுமைக்கும் தலைவனோடு இயைந்து, பகிர்ந்து, முகிழ்ந்து இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையை நாம் கண்ணுற்றால் எப்படி இருக்கும்.
திருமணத்தின் தலைவன், தலைவி இருவரும் தம் இயல்பான நிலை சாதாரணமாக ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் எப்படி இருப்பார்களோ அந்த உடையில் இல்லாமல் தம் சுற்றத்தினருடனும் நண்பர்களுடனும் இருந்தால் எப்படி இருப்பார்களோ அந்த அளவில் அலங்கார உடைகள் இல்லாமல் அத்தியாவசிய உடையில் இருந்தனர். பார்த்தால் தெரியக்கூடிய அளவில் அலங்காரத்துடன் இருந்தனர். தலைவன் எனும் மணமகன் தலையில் ஒரு கீரிடமும் மணமகள் தலையில் அதே போல் நெத்திச்சுட்டி என்று அழைக்கக்கூடிய ஒரு அணிகலன் மட்டுமே இருந்தது. மணமகனின் மஞ்சள் வேட்டியுடனும், மணமகள் மஞ்சள் சேலை மேலாடையுடனும் இருந்தனர். மணமகன் மேற்சட்டை அணியாமல் மஞ்சள் நிறத்தில் துண்டும், அதையே கழுத்தில் மாட்டி பின்புறத்தில் முடிச்சிட்டு முன்புறம் மடித்துத் தொங்கவிட்டு ஒரு பொதியை அல்லது ஏதேனும் சுமையை சுமந்து செல்லக்கூடிய சென்றால் எப்படி நமக்கு சுமையில்லாமலும், அதை நெடுந்தூரம் சுமந்து செல்லக்கூடிய நிலையில் அந்த துணியை மடித்து பின்முதுகில் முடிச்சிட்டு அதையே முன்புறம் ஆடம்பர உடையாக போட்டிருந்தார்.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அனைவரும் வந்து செல்லக்கூடிய வந்து பார்க்கக்கூடிய ஒரு இரண்டு அல்லது மூன்றடி உயரத்தில் ஒரு மேடை அமைத்து அந்த மேடையில் அந்த மணமகனும் மணமகளும் நின்று கொள்ள திருமணத்திற்கு வந்திருந்த அனைத்து நண்பர்களும் உறவினர்களும் அங்கு சென்று வழக்கமான நிலையில் ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். ஆனால் அந்த அமைவிடம், அந்த மணமகன் , மணமகள் உடையில் இருக்கும் ஒரு பாரம்பரியம் ஏதோ ஒன்றை நினைவுபடுத்துவதாகவே உள்ளது. அவர்களின் உடையில் இருக்கும் ஆடம்பரம் இல்லாத அலங்காரமும் ஏதோ ஒன்றைச் சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
இதையும் அடுத்து மணமேடைக்கு முன்புறம் மேற்குப்புறம் ஒரு பாலைக்குச்சி மற்றும் புங்க இலைகள் சுற்றப்பட்ட ஒரு சிறிய குடில் தோகை போட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடை மணமகன் வீடு என்றும் இது மணமகனுக்காக உருவாக்கப்பட்ட வீடு இந்த வீட்டில் தான் மணமகன் தங்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
இது போலவே, மணமகளுக்கென்று ஒரு பெரிய அளவில் புங்க இலைகள் போர்த்தப்பட்டு சுமார் 5 அடி நீளமு5 அடி அகலமும் கொண்ட ஒரு குடில் போடப்பட்டிருந்தது. இது மணமகள் வீடு என்றும் மணமகள் திருமணத்திற்கு இங்குதான்வந்து தங்கவேண்டும் என்று கூறினார்கள்.
இந்த இரண்டு குடில்களையும் சற்றே பின்னோக்கிப்பார்த்தால் சங்க இலக்கியத்திலும் தமிழ்ச் சமூகத்திலும் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்திருந்தார்கள் என்பதையே இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த இரண்டு குடில்களும் தற்போதைய பெரும்பான்மையான திருமண முறைகளில் இல்லை. ஆனால் ஒரு பழங்குடியினர் , தாழ்த்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட திருமண முறைகளில் அதுவும் கிராமமப் பகுதிகளில் நடைபெறும் திருமண முறைகளில் மிகவும் அரிதாகக் காண முடிகிறதே தவிர முற்படுத்தப்பட்ட நகரத்தில் திருமண மண்டபங்களில் பெருந்தெய்வ கோவில் வழிபாட்டுத் தலங்களில் நடக்கும் திருமணங்கள் அனைத்தும் , பார்ப்பனர்கள் வைத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதி உணவுக்குப் பயன்படும் பொருள்களை யாகம் என்ற பெயரில் தீயில் போட்டு யாகம் வளர்க்கும் திருமண முறைகளையே நாம் பார்க்க முடிகிறது. உணவுக்குப் பயன்படும் நெல்லையும், அரிசி போன்ற மிகச் சாதாரணமான பொருட்களையே குடிலில் பயன்படுத்துவதும், நாம் இன்றைய திருமண முறையில் இல்லாத சடங்குகளாகும். அதுவும் பெண் குடிலில் மூன்று முக்காலிகளும், மூன்று செம்புப் பாத்திரங்களும், செம்புத் தட்டுகளும், மூன்று மண் சட்டிகளும் அந்த மூன்று மண் சட்டிகளிலும் உணவுக்குப் பயன்படுத்தும் நெல்மணிகளும், பதப்படுத்தப்படாத அரிசியுமே வைக்கப்பட்டிருந்தது. இது எதற்கு என்று கேட்ட பொழுதுதான் நமது மக்கள் திருமணம் முடிந்ததும் மணமக்கள் உணவுக்காக மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். உழைப்பில் இருக்கும் உழைப்பாளி மக்கள் தன் உணவுக்காக கூட தனியாக இருப்பு என்று எதுவும் இல்லாமல் நாடோடிக் கூட்டங்களாக இருந்த நிலையில் ஒரு தலைவனுக்கும் ஒரு தலைவிக்கும் திருமணம் நடத்தி வைத்தால் அவர்களின் உணவுத் தேவையை அறிந்து அவர்களுக்காக ஒரு சிறு வீடு இருக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக இந்த கண்ணால் தெரியக்ககூடிய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
இப்பொழுதிருக்கும் கால ஓட்டத்தில் இவையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. என்றாலும் என்றாவது ஒருநாள் நமக்கான வாழ்வை நமது முன்னோர்களின் வாழ்க்கை நிலையை , நமது வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்து அசை போட வேண்டிய நிலை ஏற்பட்டால் இவையெல்லாம் நமக்குக் கிடைக்காமல் போகலாம்.
லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விடலாம், அதற்குத் தகுந்தாற் போல் தங்களது வாழ்க்கைச் சூழலை மாற்றிக்கொள்ளலாம். அதற்குத் தகுந்தாற் போல் மனித உடல்களைப் பற்றிக்கொள்ளலாம். எத்தனை உடைகளை மாற்றிக்கொண்டாலும் தமக்கான இயைந்த பண்பாடு இயற்கையோடு இயைந்த பண்பாட்டை நாம் தொடர்ந்து செல்லா விட்டாலும் நாம் பின்பற்றாவிட்டாலும் தெரிந்து கொள்வதில் தவறில்லையே ?
இப்பொழுதிருக்கும் காலச் சூழலில் அனைத்து நிகழ்வுகளுக்கும் பார்ப்பனர்களையே வைத்து நாம் செய்யும் சடங்குகள் என்ற பெயரில் உணவுப்பொருள்களையும் விலை மதிப்பு மிக்க பொருள்களைத் தீயில் போடுவதையும், மக்கள் நன்றாக வாழ வேண்டும், நல்ல சமூகம் மலர வேண்டும் என்பதற்காக யாகம் வளர்ப்பது என்பது நமது முன்னோர்கள் நமது மூதாதையர்கள் யாருமே செய்யாத செயல் அது இப்போது பார்ப்பணர்களை வைத்து தேவையில்லாத பொருட்செலவையும் மன உளைச்சலையும் செய்வது எப்படி சரியாக வரும்?
மேற்காண் திருமணத்தில் திருமணத்திற்கு வந்த நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது கூட நமது பழைய பதப்படுத்தப்படாத அரிசியே கொடுத்தனர் என்பதும் நாம் சொல்லப்பட வேண்டிய செய்தியாகும்.
சுமார் இருபத்து ஐந்து முப்பது ஆண்டுகளுக்கும் முன்பு வானொலியில் கேட்ட நினைவு வேண்டாம் இது தீட்டிய அரிசி, வேண்டும் அது தீட்டப்படாத அரிசி, ஆமாம் அரிசியில் கூட தீட்டும் வந்துவிட்டது. அது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய அரிசி என்பதால் நமது முன்னோர்கள் பதப்படுத்தப்படாத அரிசியைப் பயன்படுத்தி உள்ளனர். அவர்கள் சுமார் 80 முதல் 100 வயது வரை நோயில்லாமல் உடலுழைப்பில் மூலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வந்தனர். இப்போது பதப்படுத்தப்பட்ட அரிசியால் தான் பல்வேறு நோய்கள் வருவதற்குக் காரணமாக இருக்கலாம். நமது முன்னோர்கள் கண்ணாடி அணியாமல், காலனி அணியாமல் நல்ல உடல் நலத்தோடு மிகச்சாதாரணமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்பொழுதெல்லாம் இவ்வாறான நிகழ்வுகள் காண்பது மிகவும் அரிதாக இருப்பதால் இந்தத் திருமண முறையை உடுமலை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் போலத் தோன்றுகிறது.