புதன், 18 அக்டோபர், 2017

 Karthic SR கம்பள விருட்சக் குழுமம்::

-கற்காலம் தொட்டு இன்றைய காஸ்மிக் காலம் வரை படையெடுத்தலும் அவற்றை எதிர்த்து சமர்புரிதலும் உலகின் ஏதாவது ஒரிடத்தில் நடைபெற்றுக்கொண்டே வருகிறது
பண்டைய தமிழர் போர்க்கலையும் ஆய கலைகளுல் ஒன்றாக வைத்து அவற்றிற்கான இலக்கணம் வகுத்தனர்

போர்க்கலை

மக்களைக் காத்தல் மன்னர்க்குக் கடன். உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை நாடாள்வார் ஏற்க வேண்டும். மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம். அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும்.

போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்; அழிவும் மிகும். தமிழ்ச்சான்றோர் இவற்றை எல்லாம் எண்ணி வருந்தி, போர் இன்றியமையாதவிடத்தும், அது அறத்தின் அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும் எனச் சில நெறிமுறைகளை வகுத்தனர்.பகை நாட்டின் மீது படையெடுக்கும் முன், அந்நாட்டு அறவோரையும் தன்னாட்டு அறவோரையும் அல்லலின்றி பாதுகாப்பது அரசனின் முதற்கடமை என முறை செய்தனர். அத்தோடு பசு, பசுவின் இயல்புடைய அந்தணர், மகளிர், நோயுற்றோர், சிறார்கள், தம்முன்னோர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்ய வல்ல புதல்வரைப் பெற்றிராதோர் ஆகிய அனைவரையும் பாதுகாப்பு நாடி வேற்றிடத்துக்கு செல்வித்தல் வேண்டும்.

இதனை முரசறைந்து தெரிவித்தல் வேண்டும். போர் தொடங்கும் முன் தன் படைவீரர்களை ஏவி எதிரி நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வர வேண்டும். அப்பொழுது தம் பசுக்களை மீட்க அவற்றுக்கு உரியவர் வருவர். பசுக்களைக் கவர்தல் “கரந்தை” என்றும் அப்பசுக்களை மீட்டல் “வெட்சி” என்றும் சொல்லப்படும். போரைத் தொடங்கிய மன்னன் பகைவன் நாட்டை எதிர்நின்று தாக்குதலை “வஞ்சி” என்பர். பகைவன் நாடு புறமதிலை முற்றுகை இடலும் முற்றுகையிடப்பட்ட தன் மதிலைக் காத்தலும் “உழிஞை” எனப்படும். இரு மன்னரும் களமிறங்கிக் கடும்போர் புரிதலைக் “தும்பை” என்பர். இதில் வெற்றி பெறுதல் “வாகை” எனப்படும். இவை அனைத்டும் பூக்களின் பெயர்களே! மன்னரும் போர் மறவரும் அப்பூக்களை அணிந்தே போரிடுவர். தேர்ப்படை, யானைப்படை, குதிரைபடை, காலாள்படை என நால்வகைப் படைகளையும் போரில் ஈடுபடுத்துவர்.

போரிடும் வீரர்கள் கண்ணிமைத்தல், புறமுதுகிடுதல் கூடாது. அப்படிச் செய்தவர்களுடன் போரிடவோ போர்க் கருவிகளை எய்தலோ கூடாது. தளர்ந்து விழுந்தவனை, பின் வாங்கியவனை, படைக்கலம் இழந்தோனை, ஒத்த கருவி எடாதோனை கொல்லலாகாது. போர் வீரன் வீரனோடும், தலைவன் தலைவனோடும் போரிடுதல் வெண்டும். பொழுது சாய்ந்த பின் போர் தொடரலாகாது; தத்தம் பாசறைக்குச் சென்றுவிடல் வேண்டும்.

போரில் வென்ற மன்னன், வெற்றிக்கொடி எடுத்து விழாக் கொண்டாடுதல் மரபு. அவ்விழாவில் விழுப்புண்பட்டு மடிந்த வீரர்களுக்கும் விழுப்புண்ணுடன் வெற்றிகொண்டு தன்னுடன் மீண்ட வீர்ர்களுக்கும் முறைப்படி சிறப்புச் செய்து பொருள் குவியல்களைக் கொடுத்தலும் பட்டமளித்துப் பாராட்டலும் மரபு. போர்க்களத்தில் விழுப்புண்பட்டு மடிந்த மறவர்களுக்கு, சிறந்த கல் எடுத்து, அதை நன்னீராட்டி, அவ்வீரனின் படிமம் சமைத்து, அதனடியில் அம்மறவனின் புகழையும் பெயரையும் வெற்றியையும் பொறித்து விழாக் கொண்டாடுதலைக் கல்நாட்டல் என்பர். அக்கல்லைத் தெய்வமாக்கிப் படையலிடுதலும் வழக்கமாயின.

தமிழனின் போர்க்கலை அறத்தை அடிப்படையாக்க் கொண்ட ஓர் அருங்கலை

 [19:07, 10/18/2017] Karthi sr: Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:

இசைக்கலை

பண்டையத் தமிழர் தம் மொழியை இயல், இசை,நாடகம் என மூவகைப்படுத்தி வளர்த்தனர். எனவே, தமிழ், முத்தமிழ் ஆயிற்று. முத்தமிழுள் இசைத்தமிழ் ஒன்று. இசைத்தமிழ் ஒரு கலையாய்-நுண்கலையாய் இசைக்கலையாய் வளர்ந்தது.

இசைக் கலை ஒலியின் அடிப்படையில் அமையும் கலை; செவி வழி துய்க்கும் கலை. குழல் இசை, பாடல் இசை போன்றவை இனியவை என்றும், பூனை கத்தல், காக்கை கரைதல் போன்றவை சாதாரணமானவை என்றும், புலியின் உறுமல், இடியின் ஓசை போன்றவை கடுமையானவை எனவும் ஒலியை மூவகைப்படுத்துவர். இனிய ஒலிகள் தனித்து இனிப்பவை;இணைந்து இனிப்பவை என இருவகைப்படும். தனித்து ஒருவர் பாடுதல், குழல் மட்டும் இசைத்தல் போன்றவை தனித்து இனிப்பவை. குரல், குழல், யாழ், முழவு, தாளம் ஆகியவை கூட்டாய்ச் சேர்ந்து இசைத்தல் இணைந்து இனிப்பானவை.

இனிய ஒலி செவி வழி புகுந்து, இதய நாடிகளைத் தழுவி உயிரினங்களை இசையவும் பொருந்தவும் வைக்கின்ற பொழுது, அது இசை எனும் பெயரைப் பெறுகின்றது. இசை எனும் சொல் இயைவிப்பது-பொருந்தச் செய்வது, தன்வயப்படுத்துவது எனப் பொருள்படும். இசை கல் மனத்தையும் கரைந்துருகச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. கற்றோரும் மற்றோரும் இசை வயப்பட்டு நிற்பர். அன்பைப் பெருக்கி ஆருயிரை வளர்ப்பது இசை. இசை நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. பயிர் வளர்ந்து நிறைந்த பயன் விளையவும், பசு மிகுந்த பால் சுரக்கவும் தூண்டும் அது. இசை உயிரினங்கள் அனைத்தையும் தன்பால் ஈர்த்து உய்விக்கும் தன்மையைப் பெற்றது.

பண்டைய தமிழர் வளர்த்த நுண்கலைகளுள் இசைக்கலை முதன்மையானது; தலை சிறந்தது. முற்காலத்தில் இசைத்தமிழ் நூல்கள் பல இருந்தன. பரிபாடல், முதுநாரை, முதுகுருகு போன்றவை குறிப்பிடத்தக்கவனவையாகும். முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் பல்வகைப் பண்கள், இசைக்கருவிகள், இசைக்கலைஞர்கள் தொடர்பான செய்திகளைச் சொல்கின்றது.

தொல்காப்பியர் நிலத்தை நான்கு வகையாகப் பிரித்து அவற்றுக்குரிய கருபொருளைக் கூறும் பொழுது, யாழும் யாழின் பகுதியும் பற்றிக் குறித்துள்ளார். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், பதிக உரையில் ஐந்து நிலங்களுக்கும் அவற்றுக்குரிய ஐந்து பெரும்பண்களையும் சுட்டி விரித்துள்ளார். இவை தமிழிசையின் தொன்மையைத் தெள்ளத் தெளிவாய் விளக்குகின்றன.இளங்கோவடிகள் முல்லை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், எனும் பெரும்பண்களுக்குரிய ஏழ் நரம்புகளைப் பல்வேறு காதைகளில் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். தமிழர் வளர்த்த மற்றெந்த கலைகளைக் காட்டிலும் இசைக்கலையே மரபு மாறாது தொடர்ந்தும் வழிவழியாக வளர்ந்து வரும் நுண்னிய அருங்கலையாகும்
[19:10, 10/18/2017] Karthi sr: Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:

சிற்பக்கலை..

மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்த்து சிற்பக்கலை என்பர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது.

கண்ணால் கண்ட உருவங்களையோ கற்பனை உருவங்களையோ வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். அதனை வடிபவன் சிற்பி எனப்படுவான். கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு கூறும். கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் என்பனவும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஏற்றனவாகக் கருதப்பட்டன.

வடிவம் முழுவதையும்-முன்புறம் பின்புறம் இரண்டையும்-காட்டும் சிற்பங்களை “முழுவடிவச் சிற்பங்கள்” என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களைச் “புடைப்புச் சிற்பங்கள்” என்றும் வகைப்படுத்துவர். கோயில்களில் காணப்படும் முதன்மைத் தெய்வத் திருமேனிகளும் உற்சவச் திருமேனிகளும் முழுவடிவச் சிற்பங்கள் ஆகும்.

தமிழ்நாட்டுச் சிற்பங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலை இலக்கணங்கள் அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும். இவ்விரு கலைகளுமே கோயில்களால் வளர்க்கப்பட்டமையால், இவை எளிதாக கைவரப்பெற்றன. சிற்ப வடிவங்கள் நின்றாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும் வேறெந்த அமைதியில் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தையொட்டி அமைந்திருப்பதைக் காணலாம். சிற்பிகள் ஆடற்கலை இலக்கணத்தை நன்கறிந்து தம் கலைஉணர்வு, கற்பனைத் திறன் கலந்து அமைப்பதால், தெய்வத் திருமேனிகள் நிறுவப்படும் இடத்துக்குத் தக்கவாறு கலையழகை மட்டுமன்றி அவ்வடிவ அமைப்புகளின் உட்கருத்தையும் உணர்த்தும் வகையில் உள்ளன.

தமிழகத்தில் பல்லவர்களின் மாமல்லக் குகைக் கோயில் சிற்பங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. பாண்டியர் கால சிற்பங்களும் தமிழகச் சிற்பங்களின் கலைத்திறனுக்குச் சான்றாய் விளங்குகின்றன. தமிழகத்தில் சோழர்காலக் குடந்தை நாகேசுவரர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீச்சுரம், தராசுரத்து ஐராவதேசுவரர் திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை சிற்பக் கலை வளர்ச்சியையும், அக்கலையில் தமிழகச் சிற்பிகள் பெற்றிருந்த பெருந்திறனையும் உலகுக்கு உணர்த்துவன.

இரண்டாம் இராசராசனின் கலைப்படைப்பாய் எழுந்த ஐராவதேசுவரர் திருக்கோயில், சிற்பக்கலைச் சாதனைகளின் உச்சம் என்பர். அழகிலும் நுணுக்கத்திலும் ஆற்றலிலும் மிக உன்னத நிலையிலிருந்தே இச்சிற்பக் கலையின் எச்சமாக கம்போடியாவின் ‘அங்கோர் வாட்’ கோயில்களிலும் நம் நாட்டு ‘லெம்பா பந்தாய்’ பள்ளத்தாக்கிலும் சிதைவுற்றிருக்கும் சிற்பங்களே சீரிய எடுத்துக்காட்டுகள்.
[19:13, 10/18/2017] Karthi sr: Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:

ஆடல் கலை

அறிவு வளர்ச்சியும் நாகரீகமும் முதிர்ச்சிப் பெறுவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆடலிலும் பாடலிலும் ஈடுபட்டு வந்தான். நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய இசை, ஆடல் முதலியவை முன்னேற்றம் கண்டு கலை வடிவங்களாக முகிழ்ந்தன. இந்தியாவில் மிகத் தொன்மையான கூத்து நூல் எனக் கருதப்பெறும் நாட்டிய சாத்திரத்தை இயற்றிய பரத முனிவர் (கி.பி 2-ஆம் நூற்றாண்டு) நாட்டியம் எனும் சொல்லுக்குப் பாடல், ஆடல், அபிநயம், உரையாடல், ஒப்பனை, காட்சித் திரைகள் ஆகியவை ஒருங்கமைந்த நாடகம் என்றே பொருள் கூறினார். அவருடைய காலத்திலிருந்து ஆடல், தாண்டவம் (ஆண்களுக்குரியகூத்து) இலாசியம்(பெண்களுக்குரியகூத்து) நிருத்தம்(சுத்த நடனம்) என வகுக்கப்பட்டது. பின்னர் நிருத்தமும் அபிநயமும் கலந்த நிருத்தியம் எனும் வகையும் தோன்றியது.

சிவபெருமான் ஆடிய ஆடல் தாண்டவம் என்றும், பார்வதி ஆடிய ஆடல் இலாசியம் என்றும் சொல்லப்பெறுகிறது. பிற்கால ஆடல் இலக்கண நூல்களில் எண்ணற்ற ஆடல் வகைகள் குறிக்கப்பெறுகின்றன. பாரத முனிவர் தம் நூலில், தென்னாட்டில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் இசையிலும் நடனத்திலும் சிறபுற்று விளங்கினர் எனப் புகழ்ந்துரைக்கின்றார்.

தமிழ் நாட்டில் வழங்கி வந்த ஆடல் வகைகளை விவரிக்கும் ஐந்து நூல்கள், சிகண்டியின் “இசை நுணுக்கம்” சியாமளேந்திர்ரின் “இந்திரகாளியம்” அறிவனாரின் “பஞ்ச மரபு” ஆதிவாயிலாரின் “பரத சேனாபதீயம்” மதிவாணரின் “நாடகத் தமிழ் நூல்” என சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். தென்னாட்டில் வழங்கி வந்த இசையும் ஆடலையும் விவரிக்கும் கருவூலம் போன்ற நூல் சிலப்பதிகாரம் ஆகும். இதன் உரைகளையும் கலித்தொகை முதலாய சங்க இலக்கியங்களையும் ஆராய்ந்தால், அக்காலத்தில் ஆடல் கலை, கூத்து, குனிப்பு, என்றும் வழங்கி வந்தமையையும், அகக்கூத்து புறக்கூத்து என்ற பிரிவுகளைக் கொண்டிருந்தமையையும் அறியலாம். இவற்றைத் தவிர்த்து, கடவுலர் ஆடிய அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பேடி, கடையம், பாண்டரங்கம், மல், துடி, மரக்கால், பாவை எனப் பதினொரு வகைக் கூத்துகளையும், மக்கள் வழக்கிலிருந்த குரவை, கலிநடம், நோக்கு ஆகிய கூத்துகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

தென்னிந்திய நடனவகைகளுள் மிகத் தொன்மை வாய்ந்ததும் உலகப் புகழ் பெற்றதுமான ஆடல் வகை பரத நாட்டியம் ஆகும். இதனை நம் முன்னோர் தாசியாட்டம், சின்ன மேலம், சதிர் என்ற பெயர்களில் அழைத்தனர். தமிழ் நாட்டில் உருவான மற்றொரு வகை நாட்டியம் குறவஞ்சி ஆகும். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் வடிவம் குறவஞ்சியில் அழகுடன் அமைந்துள்ளது. தமிழ் நாட்டுக்கே உரிய குறி சொல்லும் குறவன் , குறத்தி ( சிங்கன், சிங்கி) முதலிய பாத்திரங்கள் தோன்றும் இந்நாடகம் நகைச்சுவைக் கலையுடன் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆடல் கலை நம் முன்னோரின் ஊனோடும் உணர்வோடும் கலந்த கலையாகும்.
[19:17, 10/18/2017] Karthi sr: Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:

கூத்துக்கலை

தமிழ் முத்தமிழ் என வழங்கப்பெறும். இயல்,இசை, கூத்து என்பன முத்தமிழின் கூறுகள்.வரி வடிவத்தில் இதயத்துக்கு இன்பம் பயப்பது “இயல்” என்றும், ஒலி நயத்துடன் பாடப்பெறும் பொழுது இசையுடன் இயைந்தது “இசை” என்றும் மெய்ப்பாடுகளினால் வெளிப்படுத்தப் பெறுவது “கூத்து” என்றும் வழங்கப்பெறும்.ஆடற்கலையும் நடிப்புக் கலையும் ஒருங்கே வளர்ந்தவை.‘பாவ, ராக, தாள வகை கொண்டு பதத்தால் பாட்டுக்கு இயைய நடிப்பது கூத்து என்று அபிதான சிந்தாமணி விளக்கும். கூத்து என்பதை இளங்கோ அடிகளார்தாம் நாடகம் என முதன் முதலில் குறிப்பிட்டவர் என்பர்.
சங்க கால மக்கள் வாழ்வில் வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. அவர்கள் ஆடியும் பாடியும் இறைவனை வழிபட்டனர்.இறைவனைக் கூத்தாடும் நிலையில் கண்டு மகிழ்ந்தனர். சங்க காலத்தில், வழிபாட்டு நிலையில் மட்டுமன்றிப் பொழுதுபோக்கு நிலையிலும், தொழில் அடிப்படையிலும் கூத்துகள் நிகழ்த்தப் பெற்றன.குரவைக்கூத்து, துணங்கைக்கூத்து,வெறியாட்டு, ஆரியக்கூத்து, பாவைக்கூத்து, வள்ளிக் கூத்து போன்ற பல்வகைக் கூத்துகள் நடத்தப்பெற்றன என்பதை சங்க நூல்களில் பரவலாகக் காணலாம். கூத்தர், பொருநர் போன்ற சொற்கள் தொழில் அடிப்படையில் கூத்துகள் நடைப்பெற்றன என்பதைக் குறிக்கும்.இடைக்காலத்தில் இறைவன் முன்பும் அரசர் முன்பும் சிலவிடங்களில் பொழுது போக்குக்காகவும் கூத்து நிகழ்த்தப்பெற்றது. இன்று, நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றாகக் கூத்து கருதப்பெறுகின்றது.

இந்தக் கவினுறு கலை அருகி வரினும் அதன் சிறப்பு இன்னும் குறையவில்லை எனலாம்.இக்காலத்தில் காணப்பெறும் கூத்து வகைகளுள் பாவைக்கூத்து, தெருக்கூத்து, கணியான் கூத்து ஆகியன கதை சார்ந்தவை என்றும் புரவியாட்டம், சாமியாட்டம், கழியாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், குறவன் – குறத்தி ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை கதை சாராதவை என்றும் பாகுபடுத்துவர்.போருக்குப் புறப்படும்பொழுது வெறிக்குரவையும், போரில் வெற்றிக்காகக் துணங்கைக் கூத்தும் ஆடுவர் எனச் சங்க இலக்கியம் கூறும்.

கூத்து எனும் சொல் முதலில் நடனத்தையும், பின்னர் கதை தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது. அக்காலத்தில் இயற்றமிழைப் புலவர்களும், இசைத் தமிழ்ப்பாணர்களும் வளர்த்தமை போன்றே நாடகத்தமிழாகிய கூத்தையும் நாடகத்தையும் கூத்தர் என்போர் வளர்த்தனர். இயல், இசை, ஆகிய இரண்டும் கேட்போருக்கு இன்பம் தருவன. கூத்து, கேள்வி இன்பத்தோடு காட்சி இன்பத்தையும் தரவல்லது.கூத்து பெரிதும் விரும்பப்பட்டதால் கூத்தர் பெருகினர்; கூத்து வகைகளும் பெருகின. போட்டிகள் உருவாகின. அதன் விளைவுதான் இன்றைய நாடகங்களும் திரைப்படங்களும் ஆகும். சுருங்கக் கூறின், தமிழர் வாழ்வில் கூத்துக் கலை இரண்டறக் கலந்துவிட்டதென்றே கொள்ளலாம்.
[19:20, 10/18/2017] Karthi sr: Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:

கோலக்கலை


பழங்கால மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்திய போது இயற்கையிடம் மனிதன் தானாகக் கற்றது அல்லது தெரிந்து கொண்டது ஏராளம். அவ்வகையில் வந்ததுதான் கோலக்கலை.கோலம் என்றால் அழகு,ஒப்பனை எனப் பொருள்படுகிறது. எழுத்துகள் வருவதற்கு முன்னரே கோடுகள், குறியீடுகள் இருந்தன என வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். தொடக்கத்தில் மனிதன் வெறும் கோடுகளைப் போட்டிருக்கின்றான்.பிறகுதான் அவற்றை வளைத்துக் கோலமாக இட்டிருக்கின்றான்.தொடக்கத்தில் மாட்டு தொழுவத்தில் சாணத்தால் மெழுகிய பகுதிகளில் பூச்சிப்பொட்டுகள் வராமலிருப்பதையும் கவனித்தவர்கள் வீட்டினுள்ளே இம்முறையைப் பயன்படுத்தினர். பின்னர் அதுவே கோலமாக மாறியிருக்கிறது. இயற்கையிடம் இருந்து பலவற்றை அறியும் அறிவைக்கொண்ட மனிதனின் கலை உணர்வின் வெளிப்பாடுதான் கோலம். அது தொடக்கத்தில் வாசல் கோலமாக தொடங்கியிருக்கிறது. மேலும் மண்ணில் ஊறும் உயிரினங்களுக்கு உணவாக ஆகும் என்பதால் அரிசிப் பொடியில் கோலம் போடப்பட்டிருக்கிறது.

புள்ளிகளையும்,கோடுகளையும் கொண்டு உருவாக்கப்படும் கோலங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாக பண்பாட்டின் அடையாளமாக தமிழர் வாழ்க்கையில் திகழ்ந்தன. அவை அரங்கக் கோலம், மணல் கோலம், புனல் கோலம், அனல் கோலம் எனப் பல்வகைப்படும். அக்காலங்களில் நடன அரங்கில் அரங்கக்கோலம் போடப்பட்டது. அரங்கம்+கோலம்= அரங்கக்கோலம். அது ரங்கோலம் என மருவி ரங்கோலி எனப் பெயர் மாறி வடநாடுகளில் பரவின என்பது வரலாற்று உண்மையாகும். ஆண்டுதோறும் அமங்கல நாட்கள் தவிர ஏனைய நாட்களில் வாசலில் கோலம் போட்டாலும் மார்கழி மாதத்தில் போடுகிற கோலம் சிறப்பானவை. மாதங்களில் மார்கழி என ஆன்மீக ரீதியில் சொன்னாலும் அறிவியல் ரீதியாகவும் தை மாதத்தை எதிர்நோக்குகிற மிகச்சிறந்த மாதமாகும். மார்கழி மாதம் என்பதனால் விவசாயப் பொருட்களைச் சேகரிக்கிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. எனவே, அம்மாதத்தில் திருமணம் செய்யாமல் தைமாதத்தை எதிர்நோக்கிய சிந்தனையோடு நிலத்தை உழுதுண்டு வாழ்ந்தவர்கள் இருந்தார்கள். எனவே, நிலம் சார்ந்த மரபுவழிச் சிந்தனை அவர்களுக்கு இருந்தது. மார்கழி மாதம் பனிமழை பெய்யும் மாதமானதால் அக்காலத்தில் பசியில் தவிக்கக்கூடாதென்று, சிற்றுயிர்கள் குறிப்பாக எறும்புகளுக்கு உணவிடுவது போல் அரிசிப்பொடியில் வாசல்கோலம் இட்டனர். அவ்வாறு இடுகிற உணவை எறும்புகள் உண்ணுவது உண்மையாகும்.

கோலம் வரைகிற பண்பாட்டு நடைமுறையில் கூட நுண்ணுயிர்களின் பசிப்போக்குகின்ற உயர்ந்த பண்பாட்டை அக்காலத்தமிழர் கொண்டிருந்தனர் என்பது வியப்பானதுதான்? ஆனால், இன்று நாகரிகம் என்ற உணர்வில் உண்பதற்கு உதவாத வேறுவகை(கற்களின்) பொடிகளில் கோலம் இடுதல், பழந்தமிழர் கோலப் பண்பாட்டை உள்வாங்கவில்லை என்று பொருள்படுகிறது.

இன்றைய தமிழர்கள் சிந்தித்துத் தெளிவு பெறுவார்களாக!
















கார்த்தி மாப்பிளை ..போர்க்கலைகள் பற்றி  ...குதிரை படை ,யானை படை ..நம் பாளையக்காரர்களின் போர்குணம் ..இதில் அடங்கும் ...அருமையாக உங்களின் பதிவுகள் அருமை ..

இசைக்கலை வெகு அருமை ....நம் கம்பள சமுதாயமே ..இசையை வளர்த்த பெருமை நமக்கு உண்டு ..உறுமி மேளம் ,புல்லாங்குழல் இசை ..இப்பொழுதும் நம் கோவில் விழாக்களில் பயன்படுத்தி கொண்டுதானே ...இருக்கிறோம் ...நம் சமுதாய வருங்கால துளிர்கள் ..கொஞ்சம் ஆர்வத்துடன் பயின்று வருவது கொஞ்சம் பெருமையாக இருக்கிறது ...சேர்த்து வைக்கும் சொத்து கூட அழிந்துபோகும் ...நம் கலைகள் அழியாது என்ற நம்பிக்கை கொஞ்சம் மனதில் இருக்கிறது ...பார்ப்போம்

நமது சிற்பக்கலைகள் பற்றி ..உலகமெங்கும் பரவிதான் இருக்கிறது ...தமிழ் மண்ணில் இருந்துதான் பரவியிருக்கின்றது ...தஞ்சை ,மதுரை ..போல் ...நம் சமுதாயகோவில்கள் ,இருக்கிறது ..நம் சமுதாய மக்களின் விழுப்புணர்வு இல்லாததால் ,ஆவணப்படுத்ததனால் ,வெளிக்கொண்டு வரமுடியவில்லை ...இப்பொழுதும் ...நம் முன்னோர்களின் சிலைகள் சிதிலடைந்து ...அனாதைகளாக கிடக்கிறது ...நம் காலத்திலாவது ஏதோ சிறுமுயற்சி எடுப்போம் ...

மாப்பிள ஆடல்கலையை ...சொன்ன மாதிரி ...நாம் ஆடாத பயிலாத கலைகள் இல்லயென்று சொல்லலாம் ...அனைத்திலும் கால்பதித்துள்ளோம்..ஆனால் இன்று கொஞ்சம் கொஞ்சமாக ...ஆர்வம் குறைகிறது ...வளர்ச்சி என்றபெயரில் .இந்த குழந்தைகளின் ஆர்வம் ,சில பெற்றோர்களின் ஆர்வத்தால் ...அழியாமல் உள்ளது ...பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது ...நேரம் ஒதுக்கவேண்டும் ...


கூத்து கலைகள் ...நம் சமுதாய கோவில்களில் விழாக்களில் ,தை மாதங்களில் ,நம் மக்கள் ஆடியும் உள்ளனர் ...இப்பொழுதும் கூட ...என் சிறு வயதில் கம்பாலப்பட்டி யில் கூட நடைபெரும் விழாக்களில்,காளாஞ்சி பட்டி ,வத்தலகுண்டு சென்றாயப்பெருமாள் கோவில்களில் வேஷம் கட்டி ஆடிய நிகழ்வு மலரும் நினைவுகளாக உள்ளது ..இனி வரும் காலங்களில் இனி பார்ப்போமா என்று தெரியவில்லை ...

கோலகலைகள்....இன்று படித்து பட்டம் பெற்று ...பெருநகரங்களில் வசிக்கும் நம் மக்கள் ...கதவை திறந்தால் ...போக்குவரத்து மிகுந்த சாலையில் தான் கோலம்போடவேண்டும் ...நம் தங்க பெண்மணிகள் நன்றாக கோலகலையை கற்றுஇருந்தாலும்...தங்களின் திறமையை வெளிகொண்டவரமுடியவில்லை வருத்தம் தான் ..ஏதோ நம் மாதிரி சிறு நகரங்கள் ,சிறு கிராமங்களில் வசிக்கும் தங்கபெண்மணி சொந்தங்கள, கொஞ்சமேனும் திறமையை காட்டுகிறார்கள்.
என்னதான் படித்து ..கம்ப்யூட்டர் ,பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பெண் செல்வங்கள் ..பணிபுரிபவதற்கு இந்த கோல கலை அவர்களுக்கு மனதிற்கு புத்தாக்கத்தை தருவது சிறப்பானது ...எனக்கு தெரிந்து தைமாதம் மட்டும் தான் கோலம் போடுகிறார்கள் .....இனி வரப்போகும் தலைமுறையினர் கோலம் என்றால் என்ன கேட்கக்கூடிய நிலைமை வரலாம் ...


என் அன்பு மாப்பிள ...அன்பு மருமகனுக்கு ..கார்த்தி மாப்பிளை க்கு .வாழ்த்துக்கள் ...64 கலைகளையும் ..நீங்களே பதிவிட்டு விடுவீர்கள் என்று நினைக்கிறன் ..எதோ என்னால் பின்னுட்டம் இடுவதற்கு ...இடம் கிடைத்ததற்கு நன்றி ...வாழ்த்துக்கள்  செந்தில் ..சார் ...மறுபடியும் பதிவிடுங்கள் ..இரண்டு நாளுக்கு ஒருமுறை தலைப்புகளை ..சரவணகுமார் மாப்பிள ..ஸ்லைடில் .பதிவிடுங்கள் ...



















 

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

Thiru Murthy added 2 new photos.
கத்தரிக்காய் கால்ப்பணம் .!
சுமைகூலி முக்கால் பணம் ..!!
என்பதைபோல என்கதை ஆகிவிடகூடாது என்பதால் இந்த முடிவு..
பவர் டில்லருக்கு : 28,000 ரூபாய்,
மினி டிரேக்டருக்கு : 66,500 ரூபாய்,
பெரிய டிரேக்டருக்கு : 36,000 ரூபாய்
******************;*
ஆக மொத்தம் 1,30,500 ரூபாய்
கடந்த பதிமூன்று மாதங்களில் டிரேக்டர்காரர்களுக்கு எனது பனிரெண்டு ஏக்கர் பூமியை உழ நான் கொடுத்த வாடகைதான் இது ங்க..

கணக்கு போட்டு பார்த்தேன் சம்பாதிக்கும் பணத்தில் பாதி வாடகைக்கே போயிவிடும் போல தெரிந்தது..
முகநூல் சொந்தமான Therkutheru Er Sathieshskj அண்ணாவிடம் ஏதாவது பழைய மினி டிரேக்டர் இருந்தா சொல்லுங்க வாடகை கொடுத்து ஓட்ட சிரமமாக இருக்கிறது என்று விபரத்தை சொன்னேன்..(சதீஷ் அண்ணா நன்றி ங்க)
அடுத்த தினமே "மதுரையில் அக்ரி மார்ட் வெங்கடேஷ்வரா மிட்சுபிஷி ஷோரூமில் 2014 மாடல் 18.5 HP குறைந்த பயன்பாட்டில் ஓடிய வண்டி இருக்கிறது வாங்க பார்க்கலாம் "என்றார்..
சென்றேன்...
பத்து மாதத்தில் அறுபது மணிநேரமே ஓடியிருந்தது ..
ரோட்டரி, வண்டியும் சேர்த்து 2,30,000 ரூபாய் சொல்லி எட்டாயிரம் ரூபாய் குறைத்து கொடுத்தார்..
புதிய வண்டியை விட அறுபது ஆயிரம் ரூபாய் விலை குறைவாக கிடைத்ததால் எடுத்து விட்டேன்..
இந்த வண்டியில் ரோட்டாவேட்டர் பொருத்தி பலதானியத்தை மடக்கி உழலாம்..
மூன்று கலப்பை பொருத்தி நிலத்தை உழலாம்..
கேஜ் வீல் பொருத்தி சேற்று உழவு ஓட்டலாம்..
பார் கலப்பை பொருத்தி பார் ஓட்டலாம்..
வாழைக்கு மண் அனைக்கலாம்..
டிரெயலர் மாட்டி குப்பை ஓட்டலாம்..
((இதற்கெல்லாம் தனித்தனி உபகரணங்கள் தேவை))
மூன்று வருடங்களுக்கு முன்னே அரசு மானியத்தில் இந்த வண்டியை வாங்க விண்ணப்பித்தும் இதுவரை வந்தபாடில்லை..
இனி எழுபது ஆயிரம் மானியத்தை பாத்தால் கதைக்கு ஆகாது என்றுதான் இந்த வண்டியை வாங்கிவிட்டேன்..
மானியம் எங்கள் பகுதியில் இல்லை என்று சொல்கிறார்கள்..
ஆனால் மதுரையில் இருக்கிறது..
மானியத்தில் புது வண்டி தேவைப்படுவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்..
அக்ரி மார்ட் மதுரை M.ராதாகிருஷ்ணன்...
கைபேசி எண் 98430 53744..
மானியத்தில் எடுக்க விரும்புவோர் மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கள் ஆகியவைகளை இவரிடம் கொடுத்தால் போதும்..
டிராக்டர் சாணி போடாதுனு எனக்கும் நல்லா தெரியு ங்க..!
விவசாய ஆட்கள் பற்றாக்குறையை தவிர்க்கவும், மண்ணை மலடாக்கும் களைக்கொல்லியை ஒழிக்கவும்
இது போல தேவையான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை என்றால் நான் விவசாயத்தில் தாக்கு பிடிக்க முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை..



உடுமலையில் எனது பள்ளி கால வாழ்க்கையில் ...எனக்கு நினைவு தெரிந்து நூலகத்துக்கு சென்று படித்த  முதல்  நூல் எழுத்தாளர் சிவசங்கரி அம்மாவின் நூல் தான் ...அதுவும் பயணக்கட்டுரை தான் நான் படித்தது நினைவுக்கு வருகிறது...சிவசங்கரி எழுதிய நூல்கள் அனைத்தும் அருமையான நாவல்கள்..

சிவசங்கரி அம்மாவின் பதிவுகளிலிருந்து .......

பச்சை பட்டுடுத்தி நிற்கும் மலை, மலையின் நடுவே பயணிக்கும் தார்ச்சாலை, சாரல் மழையில் குளித்தபடி மரங்கள், மிதமான வேகத்தில் பேருந்து, கணவன் தோளில் சாய்ந்தபடி காதல் மனைவி. அவளின் கைகளில் ஒரு புத்தகம். இயற்கை காட்சிகளில் விழிகளை தொலைக்காமல், புத்தகத்தின் அர்த்தமுள்ள எழுத்துக்களில் மனதையும் தொலைத்து, பேருந்தில் இருந்து இறஙகிய தம்பதிகளிடம் ஒரு கேள்வி.... "பயணம் சுகமாக இருந்ததா?' பதில்.. "அர்த்தமுள்ளதாக இருந்தது!' சொன்னவர்கள் கைகளில் எழுத்தாளர் சிவசங்களியின் "சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது?' புத்தகம்.

இப்படி மனித உணர்வுகளை மயிலிறகால் வருடும் சிவசங்கரியின் எழுத்துக்கள் தற்போது நின்று வருடும் சிவசங்கரியின் எழுத்துக்கள் தற்போது நின்று போயிருக்கிறது. காரணம்...

எழுதணுங்கற கனவோ, எழுத்துல சாதனை புரியணுங்கற வெறியோ இல்லாம, எதேச்சையா எழுத தொடங்குனேன். இப்போ... போதும்!னு தோணுச்சு நிறுத்திட்டேன்.

மறுபடியும் எழுதணும்னு தோணுச்சுன்னா நிச்சயம் எழுதுவேன்!' மனதில் தெளிவு சிவசங்கரியின் வார்த்தைகளிலும் பிரதிபலிக்கிறது.

அம்மாவுக்கு என்னென்ன பிடிக்கும்?
பௌர்ணமி நிலவு, அன்னையின் தாலாட்டு, குழந்தைகளின் சிணுங்கல், உள்ளத்தை சாந்தப்படுத்தும் சங்கீதம், மனதையும் நிறைக்கிற சாப்பாடு, கண்ணீர் விடாத ஆண்கள், அழகு நிரந்தரமில்லை!ன்னு ஆணித்தரமா நம்புற பெண்கள், எந்த சூழ்நிலையிலும் தோள் கொடுக்க தயாராக இருக்கிற நண்பர்கள், தன் வாழ்க்கைக்கு எது தேவை?ன்னு தெளிவா தெரிஞ்சு வைச்சிருக்கிற மனிதர்கள்... இப்படி நிறைய பிடிக்கும்.

எந்த ஒரு விஷயத்தையுமே, கண்களால் பார்க்காம மனசால பார்க்க பழகிட்டா, நமக்கு பிடித்தமான விஷயங்கள் இந்த உலகத்துல நிறைய தெரியும். இந்த பழக்கத்துக்கு நான் அடிமையாகி பல வருஷங்கள் ஆச்சு!

மனம் வருடும் நினைவுகள்....
14 வயசுல, தேசிய மாணவர்படை நிகழ்ச்சிக்காக தேர்வாகி டெல்லிக்கு போன நாட்கள், 15 வயசுல வாணி மஹால்ல நடந்த என்னோட முதல் அரங்கேற்றம், என் திருமண நாள், காதல் கணவரோட வாழ்ந்த அழகிய நாட்கள், பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியோட இரண்டு முறை வெளிநாடு சென்ற அனுபவங்கள், அன்னை தெரசா நோபல் பரிசு வாங்குன மறுநாள் காலையில், முதல் பத்திரிக்கையாளரா வாழ்த்து சொன்ன தருணம், ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வரை உழைத்த ஆரம்ப கால நாட்கள், நம்ம பாரம்பரிய உடைகளோட கடந்து போற அழகான பெண்கள்... இப்படி நிறைய இருக்கு. ஆனா, நான் கடைசியா சொன்ன விஷயம் மட்டும் நினைவுகளாகவே இருக்கறதுல வருத்தம் இருக்கு. யாரையும் சார்ந்து இல்லாம, பெண்கள் தன்னம்பிக்கையோட வாழ பழகியிருக்கறது சந்தோஷமா இருந்தாலும், நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும் இவ்வளவு வேகமா மறந்துட்டு வர்றது வேதனையா இருக்கு. பெத்த தாயை தெரியாது?ன்னு சொல் மாதிரிதான், இந்த இரண்டு விஷயங்களை மறக்கறதும்!

இளமை இழப்பு, உறவு இழப்பு, நம்பிக்கை இழப்பு, பண இழப்பு, பொருள் இழப்பு, மானம் இழப்புன்னு இழப்புகள்ல பலவகை இரக்கு. ஆனா, எந்த இழப்புமே சாபம் இல்லை. ஒரு சின்ன உதாரணம்... 1972ல் சஞ்சய் காந்தியை இந்திரா காந்தி பறிகொடுத்த நேரம். அவங்களை நான் சந்திச்சப்போ கேட்டேன். "உங்க மனசுல வலி இல்லையா?' அவங்க சொன்ன பதில்... "வலி இருக்கும்மா? ஆனா வலியோட வாழ பழகிட்டேன்!' அவங்க சொன்னதோட அர்த்தம் எனக்கு அப்போ புரியலை

1984ல் என் கணவர் சந்திரசேகரனோட மறைவுக்கு பின்னாடிதான், வலியோட வாழ பழகறதுன்னா என்ன?ன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

இழப்புகள் நிச்சயம் வலி கொடுக்கும். ஆனா, அந்த வலிகளை தாங்க பழகிட்டா, நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.

வாழ்க்கையில விழுந்த கருப்பு புள்ளிகளை மட்டுமே நினைச்சுட்டு இருக்காம வெண்மை பிரதேசங்களையும் பார்க்க பழகணும், இது எல்லாத்தையும்விட, "நமக்கும் கீழே நிறைய பேர் இருக்கறாங்க!'ங்கற உண்மையை எப்பவும் மனசுல வைச்சுக்கணும்!

அடிக்கடி மலரும் கனவு....
வயது 70 ஆயிடுச்சு. நிறைய எழுதிட்டேன். நிறைய உறவுகளை சம்பாதிச்சு வைச்சிருக்கேன். ஆசைப்பட்ட எல்லாமும் எனக்கு கிடைச்சிருக்கு. இப்போ, என் கவனம் முழுக்க சமூக சேவையில்தான்... ஏதோ, என்னால் முடிஞ்ச அளவுக்கு செஞ்சுட்டு வர்றேன். குடும்பம் நடத்த தேவையான அடிப்படை பொருட்களோட, இதுவரைக்கும் 80 ஜோடிகளுக்கு திருமணம் செஞ்சு வெச்சிருக்கேன். 100 ஜோடிகளுக்கு திருமணம் செஞ்சு வைச்சுடணும்னு மனசுல ஆசை இருக்கு. என் கணவருக்கும் இந்த ஆசை இருந்துச்சு! நமக்குதான் குழந்தைகள் இல்லையே!... நாம ஏன் இந்த சமுதாயத்தை தத்து எடுத்துக்க கூடாது?ன்னு அவர் அடிக்கடி கேட்டுட்டே இருப்பார். அவரோட கனவுதான் இப்போ என் கனவும்!

எதிர்பார்ப்புகள்...
நதி மாதிரி ஓடணும்னு ஆசை! அப்படித்தான் ஓடிட்டு இருக்கறேன். நிறைய கத்துக்கறேன். என் வீட்டுல வளர்ந்த ஷியாமா(நன்றியுள்ள பிராணி)வோட மறைவுக்கு வருந்துற அளவுக்கு, மனசுல ஈரத்தோட இருக்கறேன். போதும் தம்பி! மனசு திருப்தியா இருக்கு. இனிமே என்ன?

"வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து பிரியற மாதிரி, உயிர் இந்த உடம்புல இருந்து வெளியேறிடணும்...' யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுத்துட கூடாது. அவ்வளவுதான்!

முட்கள் மீது நடந்து சென்று...
பூப்பறிக்கும் வைபவம்தான் வாழ்க்கை!
மனதா... முள்ளை மற! பூவை நினை...
எழுதியபடியே வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மா, உங்கள் காலத்தில் வாழ்வதை நினைத்த பெருமைப்படுகிறோம்!

இழப்புகள் நிச்சயம் வலி கொடுக்கும். ஆனா, அந்த வலிகளை தாங்க பழகிட்டா, நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.
வாழ்க்கையில விழுந்த கருப்பு புள்ளிகளை மட்டுமே நினைச்சுட்டு இருக்காம வெண்மை பிரதேசங்களையும் பார்க்க பழகணும், இது எல்லாத்தையும்விட, "நமக்கும் கீழே நிறைய பேர் இருக்கறாங்க!'ங்கற உண்மையை எப்பவும் மனசுல வைச்சுக்கணும்! = ,மிகவும் நெகிழ்ந்து விட்டேன்

 பட்டியலில் முக்கியமாகச் சேர்க்க வேண்டிய நூல், “அவன்” என்ற நாவல். எனக்குத் தெரிந்து பணத்திற்காக அயராது ஓடும் பெற்றோர்களால், குழந்தைகள் போதைக்கு அடிமையாகும் ஆபத்தைச் சொன்ன முதல் தமிழ் புத்தகம் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இவரின் படைப்புகளில் (நான் படித்த வரை) ஆகச் சிறந்த படைப்பாக “அவன்” நாவலைத் தான் சொல்வேன்.
அதீத போதையின் பிடியில் ஏற்படும் உடல்/மன அனுபவங்களை அணுவணுவாக விவரித்திருப்பார். இளம்பிராயத்திலேயே இந்தக் கதையைப் படிக்கச் செய்து விட்டால், எந்த இளைஞனும் போதையின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டான்.

நாம ஏன் சமூகத்தை தத்தெடுக்க கூடாது//இந்த எண்ணம் கொண்டவர்கள் யாராகினும் அவர்களின் வார்த்தைகளும், எழுத்துக்களும் அழுகு மிளிரும் என்பதற்கு ஒரு உதாரணம்தான் சிவசங்கரி அவர்களின் வாழ்க்கை...

- திருமதி சிவசங்கரி அம்மாவுக்கு அவர்களுக்கு  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

சிவசங்கரி நாவல்கள்

01.47 நாட்கள்

02.அடிமாடுகள்

03.அம்மா பிள்ளை

04.அம்மா ப்ளீஸ் எனக்காக

05.அது சரி அப்புறம்

06.சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது

07.எதற்காக

08.இனி

09.இன்னொரு காரணம்

10. இவர்களும் அவர்களும்

11.காளான்

12.கண் கெட்ட பின்

13.கப்பல் பறவை

14.கருணைக்கொலை

15.காத்திருக்கிறேன்

16.காற்றுள்ள போதே

17.கிணற்று தவளைகள்

18.கோழைகள்

19.குட்டி

20.மலையின் அடுத்த பக்கம்

21.மெல்ல.. மெல்ல..

22.நான் நானாக

23.நண்டு

24.நப்பாசை

25.நதியின் வேகத்தோடு

26.நெருஞ்சி முள்

27.நூல் ஏணி

28.ஒரு மனிதனின் கதை

29.ஓவர் டோஸ்

30.பாலங்கள்

31.பட்டாம்பூச்சியும் தூக்கமும்

32.போக போக

33. புல் தடுக்கி பயில்வான்கள்

35.ராட்சசர்கள்

36.சுறா மீன்கள்

37.சுட்ட மண்

38.தான் தன் சுகம்

39.தப்பு கணக்கு

40.தவம்

41.திரிவேணி சங்கமம்

42.டிரன்கால்

43.உரத்த சிந்தனை

44.வேரில்லாத மரங்கள்

45.வெட்கம் கெட்டவர்கள்

46.ஏன்

47.சிறுகதை தொகுப்பு-1

48.சிறுகதை தொகுப்பு-2




.

 ...
நேரம் ....
சுமதி அக்கா.....இரவு பன்னண்டு மணிக்கு தூங்கபோயிட்டு ...காலையில் கண்ணைக்கசக்கிக்கிகிட்டே எந்துரிச்சு ...ஸ்ட்டேவ் பத்தவைச்சு ..குக்கரில் நாலு சொம்பு தண்ணி ஊத்திவைச்சு ...ரெண்டு டம்பளர் அரிசி எடுத்து கழுவி ரவுண்டு குண்டாவில் வைத்து ..அதுக்கு மேல் தட்டைவைத்து சின்ன குண்டாவில் தக்காளி ,ரெண்டு கை பருப்பு டன் ,மஞ்சத்தூள் ,கொஞ்சம் நல்ல எண்ணெய் ஊத்திவைத்து குக்கரை மூடி வைத்துவிடுவேன் ...

குக்கரில் 5 விசில் வரதுக்குள்ள ...பெரியவெங்காயம் ,ரசத்துக்கு கொஞ்சம் புளியும் ,தண்ணீரில் ஊற வைத்துவிடுவேன் ..அப்படியே பக்கத்துக்கு ஸ்டேவுல கொஞ்சம் சுட.. சுட ..காப்பி போட்டு ,..எங்க வீட்டு பிரதம மந்திரிக்கும் ,எங்க வீட்டு இளவரசர் கும் .கொடுக்கவேண்டும் ...பட்டும் படாமல் ...தட்டி தூக்கத்திலிரிந்து எழுப்பி ..தப்பி தவிர கூட குண்டுஊசி விழும் சத்தம் இல்லாமல் எழுப்பவேண்டும் ..அதிரடியா எழப்பினால் அந்த நாள் ..திண்டாட்டம் தான் ..கவனம் தேவை ...

5 விசில் வந்தவுடன் குக்கரை கீழே இறக்கி வைத்து விட்டு ..எங்க வீட்டு பிரதம மந்திரியிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிடுவேன் ..அதற்கு பிறகு அவர்கள்  வடை சட்டி எடுவைத்து ..அதில் நல்ல எண்ணெய் ஊற்றி கருகப்பில் ,கொத்துமல்லி தழை ,போட்டு ..சீரகம் ,கடுகு போட்டு தாளித்துவிட்டு குக்கரில் ரெடியாக இருக்கும் பருப்பு எடுத்த கலக்கி கொஞ்சம் சூடான பின்பு இறக்கி வைத்து விடுவார்கள் ..குக்கரில் பருப்பில் வைத்த தண்ணீர் கொண்டு ..மறுபடியும் வடைச்சட்டியில் ,கடுகு ,கொத்துமல்லி தழை ,சீரகம் ,மஞ்சத்தூள் ,கொஞ்சம் ரசப்பொடி போட்டு பதமாக சுடவைத்தால் சூடான ,அருமையான ரசம் ரெடி ...இது எல்லாம் முடிக்கும்வரை ..நாம பக்கத்தில் இருந்து கை காண சுட்டுக்கமாக கண்ணும் கருத்துமாக ..பார்த்துக்கொள்ளவேண்டியது நம் பொறுப்பு ..இதில் சிறு தவறு நடந்தால் கூட ...அடுத்த நேரத்தில் பொறுப்பு நம் கட்டுப்பாட்டுக்குள் ஒப்படைத்துவிடுவார்கள் ..கவனம் தேவை ...


அட அத சொல்லிட்டு நம்ம அடுத்தவேளை விட்டுட்டேன்ப்பாருங்க காபி குடித்து ... அப்பறம் எங்க இளவரசரை ..காலை முக்கிய பொறுப்புகளைமுடித்து ..அடுப்பில் சூடான தண்ணீரை பக்கீட்டில் ஊற்றி கொஞ்சம் மெது மெது பான குளித்த வைத்து ...அவருக்கு பள்ளியின் யூனிபார்மை போட்டுவிட்டு ரெடி பண்ணவேண்டியது அண்டராட கடமை...இதில் சிறு பிசிறுகூட தவறு நேர்ந்துவிடக்கூடாது ..

வீட்டு பிரதம மந்திரி ...எனக்கும் ,இளவரசருக்கும் ,மதியம் சாப்பிடுவதற்கு டிபன் பாக்ஸில் வைத்து எங்கள் முதுகில் கட்டி விடுவார்கள் ....

முதுகில் ஆனந்த சுமையுடன் கிளம்பி ...இளவரசரின் பள்ளிக்கு சென்று அவரது வகுப்பில் உட்காரவைத்துவிட்டு ...நம்ம அப்படிக்கா ..நம் அலுவுலகத்தற்கு சென்று கடமை ஆற்றவேண்டும் ...எந்த வேலையாக இருந்தாலும் ..மாலை சரியாக இளவரசரின் பள்ளிக்கு சென்று ..இளவரசரை வீட்டில் சேர்க்கவேண்டியது நம் தலையாய கடமையாகும்....மாலை வீட்ற்கு செல்லும் போது வீட்டில் இருந்து தகவலின்படி ..கோதுமை மாவோ ,இட்டிலி மாவோ வாங்கி கொண்டு சொல்லவேண்டியது பெரும் கடமை...இதிலும் எதாவது சொதப்பினால் ...தண்டனையாக ..நம் பர்ஸ் காலியாகிவிடும் ..நம்மளே நம்ம பர்ஸுக்கு சூனியம் வைத்துக்கொள்ளக்கூடாது .....இரவு டிபனுக்கு ...கூட ..மாடா ...சமையல் வேலை தெரிந்துகொள்ளவேண்டியது மிக மிக முக்கியம் ..நல்ல வேலை எங்கள் அம்மா எனக்கு சிறுவயதிலிருந்து சமையல் கற்று கொடுத்தினால் தப்பித்தேன் ..அவர்களுக்கு கோடி புண்ணியம் ..எங்க வீடு இளவரசர்கூட என்கூட சேர்ந்து சமையல் செய்வதை பார்த்தும்,கேட்டுக்கொண்டும் கொண்டு இருக்கிறார் ...இது நல்ல முன்னேற்றம் கூட ..வெளியூர் ,வெளி நாடு படிப்பு ,வேலை விசியமாக சென்றால் சாப்பாடுக்கு கவலைகொள்ளத்தேவையில்லை ...

இத்தனை வேலையும் முடித்துவிட்டு ..இந்த முகநூல் ,வாட்ஸாப்ப் ,புத்தகம் படிப்பது ,உங்களிடம் தகவல்களை பரிமாறிக்கொண்டு உள்ளேன்....மறுபடியும் நேரம் ..நாம் தான் ஒதுக்கி கொள்ளவேண்டும் ...தகவல்களை பரிமாற்தற்கு ,
 நம் சொந்தங்களை தெரிந்து கொள்ள ,நண்பர்களை தெரிந்துகொள்ள ,நாம் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவேண்டும்.....





















 
உடுமலைப்பேட்டை ...Siva Cva...... கரப்பாடி முதல் காஷ்மீர் சிம்லா வரை .

சிவா cva மாப்பிள்ளையை இரண்டு முறைதான் சந்தித்து உள்ளேன் முதன்முறையாக மடத்துக்குளம் ...விழாவில் ,மஞ்சநாயக்கனூர் அவர்கள் பாட்டியின் வீட்டில் சந்தித்துள்ளேன் ..நேரில் அதிகம் பேசியது இல்லை ..

நம்ம மாப்பிள்ளையின் செயல்பாடுகள் நம் சொந்தங்களின் மூலம் அறிந்துள்ளேன்..கரப்பாடி என்றவுடன் நம்ம மாப்பிள்ளையின் சிவா மாப்பிளையின் முகம்தான் நினைவுக்கு .வருகிறது ..நம்ம திருப்பூர் கார்த்தி மாப்பிளை ,நந்தா ,சசிவர்மா  ,எங்க பாப்பா நிவேதா நினைவுக்கு வருகிறார்கள்..

சிவா மாப்பிளை சிறப்பாக கல்வியில்..தன்னம்பிக்கையுடன் தேர்ச்சிபெற்று ..வேலைவாய்ப்பும் யாருடைய உதவியின்றி கடினமான நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்று ..உலகத்தரம் வாய்ந்த MNC யில் பணிபுரிந்து வருகிறார் ..நம் சமுதாயத்தில் கொஞ்சம் ,கொஞ்சமாக வளரும் இளையதலைமுறைகளில் இவரும் ஒருவர் ..சிவா மாப்பிள ..தான் மட்டும் முன்னேறாமல் தன்னை சுற்றி இருக்கும் நம் சொந்தங்களையும் கல்வி ,வேலைவாய்ப்பு பற்றி அறிந்து வளரும் இளைய சொந்தங்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் ...

மாப்பிள எந்த மெட்ரோ சிட்டிக்கு வேளைக்கு சென்றாலும் ..தான் பிறந்த கிராமத்து மண்ணையும் .நம் பண்பாடு ,கலாச்சாரத்தையும் ..ஒரு துளியும் விட்டுக்கொடுப்பதில்லை ...இப்போது இருக்கும் மெட்ரோசிட்டி டிரஸ் அணிந்தாலும் ..தலையில் கட்டும் நம் மஞ்சள் துண்டை விடுவதில்லை ..நான்  இவரிடம் கற்றுக்கொண்ட பாடம் ..பொங்கல் அன்று சும்மா கரப்பாடியே  அதிரும் அளவுக்கு,சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ..தன் நண்பர்கள் கூட்டத்துடன் ஒன்றியிருப்பர்...அந்தளவுக்கு மாப்பிளயின் எளிமை இருக்கும் ...

சிவா மாப்பிள்ளை ..கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினராக இருப்பது எங்களுக்கு பெருமையும் கூட ...வெகு தொலைவியில் பணிபுரிந்தாலும் ..நம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு முன்னேற்ற கருத்துக்களையும் ,வழங்கி வருவது அறக்கட்டளைக்கு ஊக்கமாக இருக்கிறது ..

சிவா மாப்பிள்ளையும் முதலில் அறிமுகமானது முகநூலில் தான் என்பது வெகு சிறப்பு ...என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பு சிவா C va மாப்பிளைக்கு ...






 

சனி, 14 அக்டோபர், 2017



இந்திய விடுதலைக்கு பாடுபட்ட விடுதலை வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அக்டேபர் 16ல் 218வது புகழ்அஞ்சலி விழா தொடர்பாக

இன்று மாலை உடுமலைப்பேட்டை எண் 1.வக்கீல் நாகராஜன் வீதியில் உள்ள நமது பண்பாட்டு கழக அலுவுலகத்தில் கோவை ,திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது ...தவறாமல் கலந்துகொள்ளவும்..

இங்ஙனம் ...
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்
உடுமலைப்பேட்டை ..


வெள்ளி, 13 அக்டோபர், 2017

வானகத்தில்... அன்று..
ஒரே.. நம்மாழ்வார்தான்...
ஆனால்... இன்று..
தினம் ..தினம்....
நுாறு ..நம்மாழ்வார்கள்..
வானகத்தில்..
கம்பள விருட்சம் கார்த்தி  என்று அடைமொழி யானா கார்த்திSR ..

என் வருங்கால மருமகனே என்று செல்லமாக அழைப்பேன் ...

கார்த்தி |SR   ...இவரின் செயல்பாடுகள் அனைத்தும் நெற்றிதெறிக்கும் விதகமாக இருக்கும் ...மாப்பிள்ளையின் நட்பு 30 வருடநட்பு போன்று இருக்கிறது ...கம்பள விருட்சம் அறக்கட்டளையின் எந்த ஒரு சிறு பணியாலும் அழகா அற்புத்தகமாக முடித்து தருபவர் ...திருப்பூர் ,கோவை மாவட்ட தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக வேலையானலும் சரி இவரின் பங்களிப்பு இருக்கும் ...அறக்கட்டளையின் மாதாந்திர கூட்டம் ஆனாலும் சரி செயற்குழு கூட்டம் ஆனாலும் சரி ,பொதுக்குழு கூட்டம் ஆனாலும் இவரின் பங்களிப்பும் ,ஆர்வம் ,முன்னேற்ற கருத்துக்கள் ,வளர்ச்சி காண செயல்பாடுகள் ...அனைத்தும் ஒருமித்த கருத்தோடு ,பெரியவர் முதல் சிறியவர் முதல் அரவனைத்து அற்புதமாக பேசி தன செயல்பாட்டால் கவரும் தன்மை கொண்டவர் நம்ம மாப்பிளை கார்த்தி ..

மேடை பேச்சும் ..இந்த சிறுவயதில் அனைவர்க்கும் வராது ..நம்ம மாப்பிள்ளைக்கு எப்படி பேசவேண்டும் ,ஒரு சிறு தவறு இல்லாமல் தன் மேடை பேச்சால் கவரும் தன்மைகொண்டவர் ..வருங்காலத்தில் நல்ல எதிர்காலம் ,நம் சமுதாயத்திலும் ,பொது தளத்திலும் முன்னேற்றம் அடைவார்.

நம் கம்பள சமுதாய வரலாறுகளையும் ,மன்னர்களின் ஆட்சி முறையும் ..நம் இளைய சொந்தங்களுக்கு பொது தளத்திலும் வெளியிட்டு கொண்டு உள்ளார் ..இவருக்கு முகநூல் ,வாட்ஸாப்ப் சொந்தங்களும் அதிகம் ...நம் கம்பள இளையசொந்தங்களுக்கு கார்த்தி SR தெரியாத சொந்தங்கள் மிக சிலரே ..

இவரின் எலெட்ரிக்கல் வயரிங் சுயதொழில் வேகமாக முன்னேறி வருபவர் .மின்துறை .இன்ஜினியரிங் தொழில் இருப்பவர்கள் ..நம்ம மாப்பிள்ளை வெகு பிரபலம் ...சில மாதங்களுக்கு முன் சிறு பள்ளி ,கல்லூரி ,சம்மந்தமான ப்ராஜெக்ட் ஒர்க் எனது நண்பர் மூலம் அறிமுகம் செய்தேன் ...தனியார் துறையும் ,பொதுத்துறையும் சம்மந்தமானது ..அதன் மூலம் தொடர்புகொண்டு வெகு சிறப்பாக செய்துகொண்டு உள்ளார் ...எந்த ஒரு பணியும் தக்க நேரத்தில் சென்று முடித்து வருபவர் ..இவரின் ஒரு பயண மைல்கள் குறைந்தது 120 சுற்றளவு மைல்களில் இருக்கும் ..வண்டியின் பாதுகாப்பான வேகமும் இவரை போன்று நேர்தியானது ..என்ன மாப்பிளை கூட வண்டியில் போகும் போது கண்ணை மூடிக்கொள்ளவேண்டும் இளம் காற்றின் வேகம் கொஞ்சம் அதிகம் ...வண்டியில் போகும்போதும் சரியான பாதுகாப்பான தலைக்கவசத்துடன் சென்று வருபவர் ...இப்போது இருக்கும் இளம் வட்டங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் ... இவரின் பணியின் வேகம் ..பணியின் செயல்பாடு ...,வெகு அருமை ..வாழ்த்துக்கள் மாப்பிள்ளை ..

இவரின் பொது தளம் ..உடுமலையின் வரலாற்று மையத்திற்கு இவரின் பங்களுப்பு அருமை ..உடுமலை வட்டார ஊர்ப்பெயர் வரலாறுகளை சேகரித்து தந்துஉள்ளார்..இவரின் கோவில்களின் வரலாறுகளை நம் திருப்பதி தேவராஜன் மாப்பிளையுடன் இணைந்து வரலாற்று நூல்களை வெளியிட உள்ளார்கள் ...இவரின் எழுத்து நடை ,கவிதை நடை பொதுத்தளத்தில் வெகு பிரபலம்..சரியான தகவல்களை சேகரித்து ..அதை வெளியிடுபவர் வாழ்த்துக்கள் ..நன்றி...என்ஜினீயர்  திருப்பதி தேவராஜன் மாப்பிளைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ...கம்பள விருட்சம் அறக்கட்டளை ..இது ஒரு கள பட்டறை ..வெறும் கற்களாக இணைந்து ..அழகான சிற்பங்களாக மின்னுபவர்கள் ..

குறிப்பு :...கார்த்தி SR மாப்பிளைக்கு ...எதிர்கால வாழ்க்கையின் தேடல்களுக்கு  பல ஊர்களிருந்து திருமண பந்தத்துக்கு எனக்குஅழுத்தம் வருகிறது ...எனக்கு என்று ஒரு மகன் தான் ..எனக்கு திருமண வயதில் மகள் இருந்திருந்தால் ..நான் பெண் கொடுத்திருப்பேன் ..நம்ம கார்த்தி மாப்பிள்ளைக்கு ..கார்த்தி மாப்பிள்ளை பெற்றோரின் முடிவு ..கார்த்தியின் முடிவு ...இறுதியானது ..

வாழ்த்துக்கள் மாப்பிள ..கம்பள விருட்சம் அறக்கட்டளையின் விருச்சத்தின் விதைகளாகி ...ஆலமர விழுதுகளாக வளர வாழ்த்துக்கள் என் வருங்கால செல்ல மருமகனுக்கு ......
























வியாழன், 12 அக்டோபர், 2017

நீலக் குறிஞ்சியை வரவேற்கத் தயாராகிறது மூணாறு…!
இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு நகரம் தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்றிருந்து மூணாறு என வந்ததாக பெயர்காரணம் உள்ளதாக வரலாறு உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பூத்துக்குலுங்கும்.
நீலக்குறிஞ்சி பூக்கும் சுற்றுலாத்தலமான மூணாறில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் இருக்கும். எனவே நீலக்குறிஞ்சி விருந்தளிக்கும் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான 4 மாதங்களுக்கு மூணாறுக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளின் அதிக அளவிலான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்வது குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.
நீலக்குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். அடுத்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை நீலக்குறிஞ்சி பூத்துக்குலுங்கும் காலமாகும். இந்த சீசனில் ஏறக்குறைய 8 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மூணாறுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மூணாறின் பல்வேறு இடங்களில் நீலக்குறிஞ்சி பூக்கும் என்றபோதிலும் மூணாறு நகரிலிருந்து 8 கிலோ மீட்டர் தெலைவில் அமைந்துள்ள இரவிக்குளம் தேசிய பூங்கா சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் மிக முக்கியமான இடமாகும். பயணிகளின் எப்போதும் இல்லாத அளவிலான வருகையைக் கணக்கில் கொண்டு அதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்வது என ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நீலக்குறிஞ்சியைக் கண்டுகளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த முறையில் வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் அத்துடன் தேசிய பூங்காவைப் பாதுகாப்பதற்குமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதென கூட்டம் முடிவு செய்தது.
மூணாறில் ஒரே நேரத்தில் எத்தனை பேர் வந்து செல்ல இயலும் என்பதைக் குறித்து ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதித்திட வேண்டுமென முதல்வர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து முன்னதாகவே விளம்பரப்படுத்திட வேண்டும்.வாகனங்களைக் கட்டுப்படுத்துவதுடன் தேவையான வாகன நிறுத்துமிட வசதிகளைச் செய்து கொடுத்திட வேண்டும்.
பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றிற்குத் தடை விதிக்க வேண்டும். குப்பைகளை அழித்தொழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யாத ரிசார்ட்டுகள் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும். குறிஞ்சி பூத்துக்குலுங்கும் காலத்தில் மூணாறு பிரதேசம் முழுவதையும் மிகச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும். தேவையான துப்புரவுத் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும்.
தேவையான அளவிற்கு கழிப்பிட வசதிகள் செய்துதர வேண்டும். மூணாறில் அனைத்துச் சாலைகளையும் பொதுப்பணித்துறை செப்பனிட்டு சீரமைக்க வேண்டும். முதலுதவிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். விபத்துக்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருத்தல் அவசியம்.
இந்த சீசனில் எந்த அளவிற்கு வாகனங்கள் வரும் என்பதைக் குறித்து ஆய்வு நடத்திட’நாட்பாக்’கிடம் பொறுப்பை ஒப்படைப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சாலையோர வியாபாரம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உண்டு. எனவே அதற்கும் கட்டுப்பாடுகள் தேவையா என்பதைக் குறித்து ஆலோசனை நடத்திட வேண்டும். வாகனங்களைச் சோதனையிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாகனங்களில் மது பாட்டில்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது.
இரவிக்குளம் தேசிய பூங்காவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல அதிக அளவில் பேருந்துகளை இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. 50 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும். பூங்காவிற்குள் நுழைவதற்கான நேரம் அதிகரிக்கப்படும். ஆனால் ஒரு நபர் எவ்வளவு நேரம் பூங்காவிற்குள் இருக்கலாம் என்பதில் கட்டுப்பாடு இருக்கும்.
பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் அடங்கிய மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும்.
நீலக்குறிஞ்சி பூக்கும் சீசனை கேரள சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு பயன்படுத்திட வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார் .

  நல்ல திட்டமிடல்...இது அரசாங்கம்...நம் அருகே இருக்கும் எழில் கொஞ்சும் மூணார் ...உடுமலைப்பேட்டையிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுலா இடம் ..இந்த வருடம் விடுமுறைக்கு திட்டமிடுங்கள் உங்கள் குடும்பத்தினருடன் ......நண்பர்களுடன் ...சொந்தங்களுடன் ...

எப்படி எடுத்தாலும் எல்லா புகைப்படத்திலும் அழகாய் இருக்கின்றனர் புன்சிரிப்பு  குழந்தைகள்...!!!!!!!

இந்த உதட்டை கடித்துக்கொண்டு புன்னைக்கும்போது ...ஷ்யாமின் தாய்மாமனை நினைவு படுத்துகிறார் ...இது தான் ரத்தபந்தமோ .....

செவ்வாய், 10 அக்டோபர், 2017

பண்டிகைகளும் ஊடகவியலாளர்கள் ....

பத்திரிகைக்காரரா நீங்க, கலைஞர் கருணாநிதிய நேர்ல பாப்பீங்கல்ல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி , கவர்னரை நேர்ல ,பாப்பீங்களாமே..அன்னைக்கு டிவில உங்களைப்பார்த்தேன், தளபதி பக்கத்துலையே நின்னீங்க.
ரகுமான், இளையராஜா நிகழ்ச்சிக்கெல்லாம் டிக்கெட் ஈசியா கிடைக்குமாமே. எந்த அதிகாரிககிட்டக்கூட நீங்க சுலபமா பேசலாம். பஸ்சு, டிரெயின்ல வேற சலுகையெல்லாம் கிடைக்குமாமே.
காதில் இன்பத்தேன் வந்த பாயும் பத்திரிகையாளனின் ஒருபக்கம் இதுதான்.
ஆனால், மறுபக்கம் இத்தனைக்கும் 200 மடங்கு எதிரான தனிப்பட்ட வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நடமாடும் ஒரு எந்திரமயமான வாழ்க்கை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை அந்தப் பத்திரிகையாளரின் குடும்பத்தினரே முதலில் நம்ப மாட்டார்கள்.
ஊரே தீபாவளி கொண்டாடும், குடும்பத்தினர் காத்திருக்க தெருத்தெருவாக அலைந்து பட்டாசு விற்பனை, துணி விற்பனையை செய்தி சேகரித்துக்கொண்டிருப்பார். தன் குடும்பத்திற்கு எடுககக்கூட நேரம் இருக்காது. சொந்தங்களைப் பார்க்க லட்சக்கணக்கானோர் பேருந்து, ரயில்களில் செல்வதைச் செய்தியாக்கிவிட்டு, ஆளே இல்லாத கோவையில் ,சென்னையில்,மதுரையில் ,திருச்சியில் , உடுமலையில் ,காய்ந்துபோன பரோட்டாக்கடைகளைத் தேடிக்கொண்டிருப்பார். ஊரே விடுப்பில் இருக்க இவர் மட்டும் அலுவலகத்தில் காதில் பட்டாசு சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டு ,மனதை கல்லாக்கிக்கொண்டு பணியாற்றிக்கொண்டிருப்பார்.
உலகம் விழிக்கும்போது உறங்கப்போவார். உலகம் உறங்கப்போகும்போது விழித்தெழுவார்.
உண்மையில் ஊடகவியலாளர்கள் பணி ஒரு மிகுந்த அர்ப்பணிப்பு ,தியாகம் ,சுகதுக்கங்களை மறந்து பணியாற்றும் பணி ....ஒரு துறை பத்திரிகை மற்றும் ஊடகத் துறைதான்...இந்த பதிவு ...பத்திரிகைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் விடுமுறை தீபாவளி தின வாழ்த்துக்கள் :)
-

திங்கள், 9 அக்டோபர், 2017

கவலைப்படாதீங்க மாப்பிள உங்களுக்கும்திருமண காலம் ஒரு வெகு அருகில்..வாழ்த்துக்கள்  .மல்லிகை பூ விக்கிற விலை ..கையில் காசு இருக்காது ...மனது வாங்கத்தோணும் ...பட்ஜெட் பத்மநாபன் மாதிரி கணக்குபோடுபோது தெரியும் அந்த வலி ...மனைவி என்னடா இந்த மனுஷன் ஒரு மொழம் பூ கூட வாங்கி கொடுக்கமாட்டேங்கறேன்னு மனதில் திட்டிக்கொண்டு இருப்பார்கள் ...கிரமமாக இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம் ..இந்த கோவை நகர வாழ்க்கை ..நரக வாழ்க்கை ...நான் சொல்லுவது விலைவாசி ...

மல்லிகை பூ ...வாசம் என் செல்ல ஷ்யாமுக்கு பிடிக்கவே பிடிக்காது அவருக்கு விவரம் தெரிந்ததிலிருந்து ..வருடம் 2011...மூன்று வயதிலிருந்து ..ஷியாம் அம்மா தலையில் வாங்கி பூவைத்தால்..அதை கொத்தாய் பிடித்து பிடிங்கி வீசிவிடுவார் ...என் கஷ்டம் தெரிந்தோ என்னவோ ..என் மனதை அறிந்தவன் .2011 பிறகு ஷியாம் அம்மா தலையில் பூ  சூடி இருப்பார்கள் என்று எனக்கு தெரியாது .எனக்கு தெரிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை ...இப்பொழுது ஷ்யாமின் வயது 10...இப்பொழுது ஷ்யாமின் மன நிலை எப்படி இருக்கிறது என்று தெரியாது ....பூ சூட அனுமதி கொடுத்திவிட்டார்களா என்று தெரியவில்லை ..

Sivakumar Kumar is feeling wonderful with in Monday .மார்க்கெட் ..Udumalaippettai.

நீண்ட வருடங்களுக்கு பிறகு அம்மாவுடன் காய்கறி சந்தைக்கு சென்று வந்தேன் ...எப்பவும் அழைக்க மாட்டார்கள் ..சிறு வயது இருக்கும்போது(30வருடங்களுக்கு முன் ) அழைத்து செல்வார்கள் ...என்னமோ தெரியவில்லை சந்தைக்கு வரியா கண்னு என்று அழைத்தார்கள்.. சரிங்கஅம்மா..  நானும் வருகிறேன் என்று அவர்களுடன் சென்று வந்தது மனதுக்கு ஆத்மார்த்தமான நிம்மதி .காய்கறி விலை எல்லாம் கொஞ்சம் அதிகமாக பட்டது...எப்பொழுதும் காய்கறி கடையில் பேரம் பேசி வாங்குவார்கள் ...எதுவும் கேக்காமல் வாங்கியது ஏன் என்று தெரியாமல் ...ஏன் நான் சிறு வயது இருக்கும்போது பேரம் பேசி வங்கவீர்களே ஏன் இப்பொழுது வாங்கவில்லை என்று கேட்டேன் ...இல்ல கண்னு ..புரட்டாசி மாதம் எல்லாம் மழைபெயுது காய்கறி விலை குறைந்து இருக்கும் ..இப்ப எங்க கண்ணு மழை பெய்து இருக்கிறது ?...இந்த விலைக்காவது காய்கறி கிடைக்காதே என்று சந்தோசப்பட்டுக்கினும்...காய்கறிகடைக்காரர்களுக்கும் சிரமம் கொடுக்கக்கூடாது .....என்று கூறியது ..நம்மை சுற்றி இருக்கும் கால சூழ்நிலைகளையும் புரிந்துகொள்ளவேண்டும் என்று உணர்த்தியது ...இந்த படிக்காத மேதையிடம்....