ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஷியாம் சுதிர் ...

என்னையும் ஒரு உயர்நத சிம்மாசனத்துக்கு அழைத்து சென்றவர்
என்னையும் ஒரு அன்புக்கு அடிமையாக்கியவர்
என் கவலைகளையெல்லாம் அவர் முகம் பார்த்தவுடன் பஞ்சாக காற்றினில் பறக்க செய்தவர் ..
எப்பொழுதும் என் கழுத்தை பற்றி தொங்கிக்கொண்டிருப்பவர்
அழகான ,அற்புதமான ,புன்சிரிப்பும்
சின்ன ,சின்ன ,குறும்புகள் செய்தாலும் ,அதில் ஒரு ஆனந்தம் இருக்குமாறு பார்த்துக்கொள்பவர் ...

அன்பில் விளைந்த 
செல்ல மகனுக்கு
ஆயிரம் ஆயிரம்...
அன்பு முத்தங்கள்...

எத்தனை நிமிடங்கள்
உன்னுடன் இன்பமாய்
கழித்து இருக்கிறேன்..
என்னுடனே எப்போதும்
இருந்து கொண்டு..
எத்தனை சேட்டைகள் 
அத்தனையும் எனக்கு
உன் அன்பின் அர்த்தங்கள்!

முத்தங்கள் ஆயிரம் கொடுக்க 
உன் செல்ல கடிகளே..
ஆயிர ஆயிர ஆண்டுக்கு 
அன்பை சொல்லும்...!

மலர்கள் பூத்து குலுங்கும்
உன் புன்னகையை பார்த்தது !
உன் குறும்பை பார்க்க 
நேரத்திற்கே நேரம் 
போதவில்லையாம்!!!!

கத்திக் கொண்டே 
ஓடி வந்து என் கழுத்தைக்
கட்டிப்பிடித்து ஊஞ்சாலடும்
என் உற்சாக ஊற்றே...
என் சுவாசத்தின் காற்றே!

முன்னிரண்டு பற்களையும்
காட்டி நீ சிரிக்கையில்
எழுதிய என் எல்லா கவிதைகளும்
காகிதங்களை விட்டு
உன்னிடம் ஓடோடி வரும்
விளையாடிக் களிக்க...!

என் பத்து  வயது குறும்பே
ஆயுள் முழுதும் எனக்கு
இனிக்கப் போகும் கரும்பே...
அப்பா என்று நீ 
சொல்லும் போதெல்லாம்
நான் மீண்டும் மீண்டும் 
பிறக்கிறேனடா.

வண்ணத்துப் பூச்சியின் 
சிறகடிப்பினை யாரேனும் 
வாழ்த்த முடியுமா என்ன?
உன் துறு துறு அன்பில்
திளைத்துக் கிடக்கிறேன்...
வாழ்த்துக்களை எப்போதும்
என்னுள் இறைத்தபடி...!
  
பிடிவாதக் குழந்தைகளை
எங்கேணும் காணநேரிட்டால்
பெருமிதம் கொள்கிறேன், தம்பீ,
உன் பொறுமையை எண்ணி!

அளவுகடந்த அன்பினாலே
அவ்வப்போது என்னருகில் நின்று
கன்னம் உரசிப் பெற்றுச்செல்லும்
அளவிலா முத்தங்களை
அநியாய வட்டியுடன்
அதிவிரைவில் திருப்பித்தருவாய்!
  
துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் நிறைந்திருக்க,
பாசமும் பண்பும் இணைந்திருக்க
பகலவன் போலே நீ ஒளிர்ந்திருக்க
வாழ்த்துகிறேன், என் கண்ணே,
பல்லாண்டு நீ வாழி என்று!
 
 இன்று தன் பத்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் வீட்டுக்  
ஷியாம் -வுக்காக எழுதியது.
 
 
 

சனி, 16 செப்டம்பர், 2017

  உங்களின் கனவு இல்லம் நனவாக ...19-09-2017

 உங்களின் கனவு இல்லம் நனவாக ...19-09-2017

Home Loan:interest calculating....simple mesg...

நம்மை சுழட்டி அடிக்கும் மாதாந்திரத் தவணை என்றால் என்ன?

வீட்டுக் கடன், கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்றை மாதாந்திர தவணையில் திருப்பி செலுத்த வேண்டும். கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் அதனைத் திருப்பிச் செலுத்தும் காலம் போன்றவற்றை கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்படும் தொகை தான் மாதாந்திர கட்டணமாக செலுத்தச் சொல்கிறார்கள். இதைத் தான் இ.எம்.ஐ (EMI) அல்லது சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணை என்பர். சரி, ஒரு வங்கியில் கடன் வாங்குகிறோம். அவர்கள் ஒரு மாதாந்திர தவணைத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்துகின்றனர். அந்த தொகை எப்படி வந்தது, எப்படி கணக்கிடப்படுகிறது என்பது பற்றி...

இஎம்ஐ எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

கடன் தொகை மற்றும் வட்டி தொகை கலந்து இருப்பது தான் மாதாந்திர தவணைத் தொகை. கடன் பெற்ற ஆரம்பத்தில் வட்டித் தொகை அதிகமாகவும், கடன் தொகை குறைவாகவும் கலந்து இருக்கும். மாதாந்திர தவணையை கணக்கிடும் முறையை இங்கே பார்ப்போம். மிகவும் எளிதான ஒரு கணக்கு தான்.
இ.எம்.ஐ = ( (கடன் தொகை X வட்டி) X (1+வட்டி) ^ மாதங்கள் ) ----------------------------------------------------------------------------------------------
( (1+வட்டி)^ மாதங்கள் - 1 )

உதாரணமாக, நாம் பத்து லட்சம் ரூபாய், 11% வட்டி விகிதத்தில், 15 வருட கடன் காலத்துக்கு வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

கடன் தொகை = 10,00,000 வருட வட்டி விகிதம் = 11% அப்போ ஒரு மாத வட்டி விகிதம் = 11/12 % =0.0091 % ஆக மாத வட்டி = 0.91667% விகிதத்தை(%) நீக்க 100 ஆல் வகுக்கவும் ஆக மாத வட்டி = 0.91667 / 100 =0.0092 கடன் காலம் = 15 வருடம் மாதக் கணக்கில் = 15 x 12 = 180 மாதங்கள் சரி..இப்போது நம் ஃபார்முலா படி மாதாந்திர தவணையை கணக்கிடுவோம்.

இ.எம்.ஐ = (10,00,000 X 0.0091667) x (1+0.0091667) ^ 180 ---------------------------------------------------- ( (1+0.0091667) ^ 180- 1 ) = 9166.667 x 5.16829 ------------------------ 4.16823 = 47375.99 ----------- 4.16823 இ.எம்.ஐ = 11,365.97 மாதாந்திர தவணை = ரூ. 11,365.97

நிரந்தர வட்டி விகிதம், ப்ளோட்டிங் வட்டி விகிதம் என வட்டி விகிதங்கள் இரண்டு வகைப்படும்.

நிரந்த வட்டி விகிதம்: கடன் காலம் முழுவதும் ஒரு வட்டி நிர்ணையித்து, அதற்கேற்றார் போல மாதாந்திர தவணை கணக்கு செய்யப்படும். வட்டி விகிதம் மாறாத காரணத்தால் மாதாந்திர தவணையும் மாறாமல் இருப்பது தான் நிரந்தர வட்டி விகிதம். இனிவரும் காலங்களில் வட்டி விகிதம், இப்போது இருப்பதை விட உயரத்தான் செய்யும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நிரந்தர வட்டி விகிதத்திற்கு செல்வார்கள்.

ப்ளோட்டிங் வட்டி விகிதம்: சந்தைக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடுகிறது. அதற்கேற்ப ஆர்.பி.ஐ வட்டி விகிதங்களை அவ்வப்போது மாற்றி அமைக்கிறது. இதனைத் தொடர்ந்து நாம் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதங்களும் மாறும். இதனால், நாம் செலுத்த வேண்டிய மாதாந்திரத் தவணையோ அல்லது கடன் செலுத்தும் காலமோ மாறலாம். இதனைத் தான் ப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பர். தேவையறிந்து கணக்கிட்டு, நமக்கு ஏற்ற மாதாந்திர தவணையை முடிவு செய்த பிறகு, கடன் வாங்குவது அனைவருக்கும் நல்லது!


தொடர்பு எண் -சிவக்குமார் 9944066681...

வாட்ஸஅப்ப் எண் -9944066681...💐💐👍👍👍👍


















தொடர்பு எண் -சிவக்குமார் 9944066681...
வாட்ஸஅப்ப் எண் -9944066681...
Thiruppathi devarajan :

மனிதர்களின் சிந்தைக்கு  ஞானம் வெளிப்படும் ஒரு   உன்னதாமான  சிறந்த இடம் எனில் எது  எனில் அது  ஆலயங்கள் மட்டுமே  இருக்க முடியும் அப்படி ஒரு பெரும் பழமை வாய்ந்த ஒரு  இடம் தான் கம்பளத்தார்க்களின்  பழைமையை  உணர்த்தும் ஒரு அறிய இடம்  யாரும் அறிந்திராத ஒரு வரலாற்று புதைவிடம்  கம்பளத்தார்களின்  வட துரவத்தில் இருந்து தென் துருவம் நோக்கி நடை பயணத்தில் நகர்ந்து வந்த ஒரு  பூர்வீ்க ஆலயம்  

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டை வட்டம்  கோட்ட மங்கலம் என்னும்  இடத்தில் குடி கொண்டு உள்ள
அருள் மிகு ஸ்ரீ பல்லகொண்டம்மாள் ஆலயம் இந்த ஆலயமானது
 கம்பளத்தர்களில் ஒரு பிரிவான வேகிளிவார்களுக்கு   சொந்தமான     ஆலயமாகும் இந்த ஆலாயமமைந்து  கிட்ட தட்ட ஐந்து  நூற்றாண்டுகளுக்கு மேல்  இருக்கும் இங்கு குடி கொண்டுள்ள ஸ்ரீ பல்லகொண்டம்மாள் ஆலயமானாது   வரலாறு அறிய முடியாத புதைவிடத்தில் இருந்து அகன்று வெளி உலகத்திற்கு மீண்டு வந்துள்ளது இப்பொழுது ... இதன் வரலாறு பின் வருமாறு...
  ஆலயத்தின் நடுவே ... அமைய பெற்றள்ளது    சப்த கன்னிகள்  இந்த சப்த கன்னிகலானது ஏழு திரு உருவங்கள் கொண்ட ஏழு கன்னிமார்கள் அமைய பெற்றுள்ளன ..

இந்த ஏழு கன்னிளை ரட்ஷ கன்னிகள் என்றும் அழைப்பதுண்டு   கன்னிகள் பிறப்பிடம்  ஆதி ஜக்கு  இந்த அகிலத்தை ஆளும் அண்ட  சாரா ஒளி விளக்கு ஆதி  சக்தியினால் உருவெடுத்த  கன்னிகளாம் சப்த கன்னிகள் இந்த கன்னி்களானது தேவ லோகத்தை விட்டு பூலோகம் நோக்கி  வரும் போது  தெலுங்கில்
(காடாம கொண்ட )
 தமிழில் மருவி  பல்லேரி
  மலைபிரதேசங்களில்  குடி கொண்டனவாம்
 அதற்கான முன்னோர்கள் மொழிந்த வரலாற்று பாடல் வரிகள் சில ..

"பயிலு சீமா மந்தலான
பல்ல கொண்டு தா குல்லு பூட்ட ..

  குல்லு பூட்டான குல்லு  பெரிக ..
 குல்லுகி முந்தாகி புட்ட   பூட்ட ....

 புட்ட  பூட்டன புட்ட பேரிக புட்டக கண்ணுன எதுரு பூட்ட ....

 எதுரு பூட்டன எதுரு
 பேரிக எதுருகேமிகி அவ்வூரான ...
இப்படியான வரிகளில் 

மலைகளில் வாழ்ந்த தேவகன்னிகளை  பற்றியும் அங்கே ஆலயத்திற்கான ( தெலுங்கில் சிந்தாலு- சிந்தங்கள்) என்பன சொல்லப்பட்டு  உள்ளது இது மட்டும் இல்லாமல்     பூலோகம் நோக்கி வரும் போது  சிவனும் பார்வதியும்  பார்த்து விட்டு செல்வது வழக்கமாக கொண்டு இருந்துள்ளனர்  பின் காலம்  செல்ல செல்ல தங்களுக்கு பூஜைகள் செய்ய வேண்டும் என்று அந்த  சப்த கன்னிகள் சிவன் பார்வதியிடம்  வேண்டியதால்  அவர்களும் வரம் அளித்து  உங்களுக்கு பூஜிக்க  இந்த பூலோகத்தில்   அவதரிப்பான் என்று சொல்லி மறைந்தார்களாம் ..
 அதன் பின்    உருவடுத்த   அம்பூதன்ன எனபவர் பிறப்பிடம் கண்டு அவரை பூஜைக்க அனுப்பி வைக்க அவரும் அந்த ஆலயத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறார் அங்கு இருள் சூழ்ந்த நிலையில் இருந்த கோவிலை கண்டு அவருக்கு எப்படி  பூஜிப்பது என்று தெரியாமல் ...
 பூஜைக்கு பாலும் இல்லை  வெளிச்சத்திற்கு தீபமும்  இல்லை
 தீபாராதனை காட்ட நெய்யும்  இல்லை என்று மனமுறுகி
 திரும்பவும் கிழக்கு முகமாக சென்று சிவனை நோக்கி தவம் கொண்டாராம் .. அவரின் கடுமையான தவத்தினால் சிவனார் முன் தோன்ற நிலையை விளக்கவே  அப்பொழுது சிவனார் அவருக்கு பாலிருக்கு வேண்டி மாடுகளை வரமாய் அளித்து  நடக்க  நடக்க மாடுகள்  அவதரிக்கும் என்று எல்லா மாடுகள் அவதரித்த கொண்டே பின்னால் வரும் நீர்  சுற்றும் முற்றும் திரும்பாமல் நடப்பாயாக என்று சொல்லி மறைந்தாராம் .. அதன் படி அம்புதன்னவும் நடக்கலானர்
 மாடுகளும் பிறக்கலாயிற்று இறுதி மாடு பிறக்கும் போது திரும்பி பார்த்தமையால்  அவை பூலோகத்தை  இருட்டி கொண்டு உள்ளே சென்றாலாயிற்று   அவற்றை பிடிக்க முயற்சித்து  அதன் கொம்புகள் மட்டும் கையில் சிக்கியது.. அதை கொண்டு கோவில் முன் உள்ள காய்ந்த மரத்தடியில் வைக்கவும் அம்மரம் தலை பிடித்து  பால மரமானது  
 அம்பூதன்ன அனுதினமும் அந்த மாடுகளை பராமரிப்பதும்  சப்த கன்னிகளுக்கு  பூஜைகள் செய்தும் வந்து உள்ளார்  அப்பொழுது
  அந்த மலை குன்று இடுக்குகளில்  தெலுங்கில் (குறி) மரங்கள் இருந்தனவாம் அந்த மரங்களில் தினமும் பாலும் சிரிப்பு சத்தங்கள் கேட்டு கொண்டு இருந்தனவாம் இவற்றை பார்க்க அம்புதன்ன  என்பவர் அருகில் செல்லவே அதில் சிறு குழந்தை  உருவெடுத்த வண்ணம் இருந்ததாம்  அவற்றை பார்த்தும் அந்த மரமானது இரண்டாக விரிந்து அதில்  பாலகன்கள்  காடாரா பொம்மு, கோராஜுக்கள் அண்ணன் தம்பிகளும் இரண்டு பேர் பிறப்பிளானார்களாம்

பிறகு அந்த சிறு பாலகன்கள்  கன்னிகளுக்கு பூஜைகள் செய்ய அவதரித்தார்கள் என்று உணர்ந்த அம்பூதன்ன  தான் வரத்தால் பெற்ற மாடுகளையும் கோவிலையும்   அவர்களிடம்  கொடுத்து விட்டு தேவலோகம் சென்று விட்டாராம்  பிறகு  காடாரா பொம்மு, கோராஜுக்கள்
 பூஜைகள் செய்து வந்து உள்ளார்கள் வாலிப பருவத்தை எட்டவும்
திருமண  வயது வந்து விட்டது என்று எண்ணி இருந்தார்கள்   பெண் எங்கு தேடி மனமுடிப்பது என்று தெரியாமல் இருக்கும் சூல் நிலையில் அந்த மலைகுன்றுகளில் வளையல் செட்டி ஒருவர் நடை பயணத்தில் இவர்களை கண்டு  யார் என்று அறிய  வந்தமையால் தாங்கள் நிலை கண்டு வணங்கி 
 உங்கள் கம்பளத்தார்  (கப்பளம்) ஒருவர்  வீட்டில் பெண் பிள்ளைகள் இரண்டு இருப்பதாக தகவலும் சொல்லி அவர்களை அழைத்து கொண்டு போவளானர்  போகும்  வழியில் அவர் 
 சிலவற்றை இவர்களிடம் கூறியது
அந்த கப்பளாமானவர்   தேவ கன்னிகள் 
தேவலோகம்  விட்டு பூலோகம் வந்து  அக்கினி குண்டங்கள் வளர்த்தும்  தேவர்களை வணங்கும் போது  அந்த அக்கினி குண்டங்களில் இருந்து பிறந்து  வெள்ளை குதிரையுடன்  ஆகாயத்தில் பறந்தமையால்  அவருக்கு வல்ல குஜ்ஜ பொம்மு என்று பெயர் மறுவு  (தெலுங்கில் கத்தி ஆகுலு கவல முடுக்கு)  என்ற குஜ்ஜு பொம்மு கோட்டை உருவாகியது என்றும் கூறலானர்  நடவு பயணமாக போய் சேர்ந்தார்கள் அங்கு இருந்த பெண்டியரை பார்த்து காடாரா பொம்முவுக்கு ஒரு சாலியை குஜ்ஜ பொம்மு  வைக்க சொன்னாராம் அவை காவடி( உத்தலு ) பச்சை மண் பாண்டங்களில்  இருபுறமும் வைத்து ஒரு பானையில் பாலும் ஒரு பானையிள் நீரும் சரி சமமாக வைத்து பாலானது தயிராகவும்  நீரானது நிரம்பளவும்  மாறாமல் தலும்பாமல் இருந்தால்  திருமண  நிச்சியக்கலாம் என்ற சாலி அவை .. அது கணமே அவ்வாறே ஆனதென்றும்  முதன் முதலில் காடாரா பொம்மு குஜ்ஜு பொம்மு திருமண உறவானது  என்றும் ஒரு கூற்று உண்டு... பின் அவர்கள் இருவருக்கும் திருமனம் முடிந்தது இருவருக்கும் பனிரெண்டு பிள்ளைகள் பெற்றமையால்  அங்கு வறட்சி ஏற்படவே அங்கு இருந்து தெற்கில் நோக்கி வந்துள்ளர்கள்  கம்பலத்தார்களாகிய வேகிளிவார்கள் அவர்கிளில் ஒன்பது பிரிவு  குலங்கள்  குஜ்ஜபோம்மு,கப்பராஜூ,எரமாசி சின்ன பொம்மு காடாரா பொம்மு...
காடாரா பெம்மானாது நாளடைவில் பாலமண்ணாவாக மறுவி தற்போது பாலமண்ணா ஆனது  அதில் பல பிரிவுகள் உள்ளடிக்கியது
 அவர்களுக்கு குல தெய்வாமனது
 சப்த கன்னிகளும்
 பல்லகொண்டம்மை

 தெற்கு முக நோக்கி வந்து

தெலுங்கில்

( "ஆனமல சோனா சீமை")
 தமிழில் மறுவி
 ஆணை மலை தூறல் பகுதிகளுக்கு   வந்துள்ளார்கள்  அங்கு இருந்து  வறட்சி நீங்கவே கிழக்கு முகமாக ஒரு பகுதியினரும் தெற்கில் ஒரு பகுதியினரும்
சென்று விட்டமையால்
இந்த ஆலயத்தை இங்கு  வாழ்ந்த
கம்பளத்துமார்கள் (கப்பளம்)
பராமரித்து  வணங்கி கொண்டு வந்துள்ளனர்  பிறகு  பாண்டியர்கள்,பாளையக்கார்கள்  ஜமீன் ஆட்சி  முறை நடை முறையில் .. இப்பகுதி ஜமின்கள்
இவ்வாலயத்தினை வழிநடத்தி வந்துள்ளார்கள் ...
இங்கு  ஒன்பது  குலங்களுக்கும்  ஒரே ஆலயத்தில்    சிலைகள் உண்டு இவை பாண்டியர் காலத்தில் கட்ட பட்டவையாக கருத படுகிறது...  வல்லகொண்டாம்மாள்  ஆலயமானது சுமார் 103 ஏக்கர் நஞ்சை புஞ்சை அடங்கிய நிலம் புலன்கள் உள்ளடக்கியது  இது அனைத்தும்  இவ்வாலயத்திற்கு  சொந்தமானவை
இதில் உள்ள நிலம் பொது மக்கள் ஆகிய கொட்ட மங்கலத்தில் உள்ள சுற்று வட்டார பகுதி மக்கள் வைத்து வாழ்ந்து வந்து இருக்கிறார்கள் இப்பொழுது அரசிற்கு சொந்தாமாயிற்று  இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவை மாசிமகம் சிவன்ராத்திரி அன்று இங்கு விசேசமான பூஜைகள் நடைபெறுவது வழக்கம் 
அதில்
சப்த  கன்னிகள் ஆகிய பாலமநாகு குல தெய்வமும் ,குஜ்ஜுபோம்மு விற்கு அக்னி குதிரை வாகனத்தில் அருள் பாலிக்கிறார்
 வல்ல குஜ்ஜ பொம்மு,மாமுலு பொம்மு
வல்ல கொண்டவ நாயக்கர் ,போகராஜூலு,கப்பராஜுலு ,ஆதி ஜக்கதேவி ,  போன்ற  சுவாமிகள் குடி கொண்டு உள்ளன .

 இங்கு சிவன் வித்தியாசமாகா காட்சி அளிக்கிறார் சிவ லிங்கம் எதிர் புறத்தில் அமைந்து உள்ளது பசுவாகிய நந்தி
அருகில் விநாயகர்  அருள் பலிக்கிறார்கள்.
இங்கு திருவிழாக்களும் நடந்தும் தான் உள்ளது
  மாலை தாண்டும் விழாக்கள்   தெலுங்கில் (தேவர மொக்குலு ) சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் வரை நடந்து  கொண்டு தான் இருந்து உள்ளதாக எங்கள் பகுதி மூதட்டிகள்   சுமார் பல்லாயிரம் மக்கள் கூடி நடந்த ஒரு திருவிழா என்று கூறியதுண்டு

அதனுள் ஒரு பழமையான நாகம் ஒன்று குடி கொண்டு உள்ளதாகவும் நீதி நேர்மைக்கு புறம்பாக நடந்து இருந்தாலோ அல்லது கம்பளத்தார்கள்  நீதி நெறியினை மீறி இருந்தால் அந்த நாகம் கண்ணில்
புல படுகிறது.
கோவிலின் புகழ் இன்னும் உயர்ந்து அங்கு நமது கம்பளத்தார்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு மாலை தாண்டும் விழா வை நடத்தினால் இன்னும் கோவில் வெகு சிறப்பு பெற்று அமையும்  கருத்துக்கள்.

 அங்கு நிறைய வரலாறு மிக்கவை உள்ளன கற்கள் மற்றும் மரத்தில் உருவங்கள் செதுக்க பட்டு உள்ளன பார்க்கவே ஒரு வித்தியாசமாக காட்சி அளிக்கிறது அங்கு கம்பம் என்று சொல்ல கூடிய கற்களில் போர்கள் நடந்தமைக்கான ஆதாரமும் கற்களில் தமிழ் எழுத்துக்களும் பொறிக்க பட்டு உள்ளவை அந்த கோவில் வாசலில் மீன் சின்னம் பொறிக்க  பட்டும் உள்ளது வெகுவாக மனதையும் கவர்ந்த ஒரு அற்புத  கோவிலாக கட்சியளிக்கின்றது

  இதன் சிறப்புகள் :
 ஆலயத்தில் உள்ள  சப்த கன்னிகள் மக்களுடன்  கூப்பிட்ட குரலுக்கு  எதிர் பதில் குடுத்தது உண்டு ..   மக்களோடு மக்களாகா வாழ்ந்ததும்  உண்டு இன்னும் பல அதசியங்கள் நடந்தும் இருக்கின்றது...
 இக்கோவிலில் ...
நமது ஏனைய கம்பளத்தார்களில் பலர்
 இந்த கோவில் ஒன்று இருப்பதை அறிந்ததும் இல்லை
 இப்பொழுதும்  அம்மையை நாடி வருப்பவர்குளுக்கு நற்செயல் செய்தும் காத்து கொண்டும் உள்ளது ... இனி வரும் காலங்களிலாவது ... வேகிளிவார்கள்  ஒன்றிணைந்து  கரம் கூப்பி வணங்கி வந்தால் நற்செயல் கிட்டும்..

ஒரு ஆலய தரிசனம்   ஆண்டு பல காக்குமாம்...

 ஒன்றினைந்து உண்டாக்குவோம் பழமையான கோவிலின்
 பாதுபாகப்புடன்  வரலாற்று புதைவிடங்களை  எடுத்து வெளிக்காட்டவோம் இவ்வுலகிற்கு

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

 உங்களின் கனவு இல்லம் நனவாக ...19-09-2017

உங்கள் கனவு இல்லம் ...உருவாக ..உங்களின் கனவு இல்லம் நனவாக ...பூமி பூஜை க்கு நாங்கள் இருக்கிறோம்  உங்களுக்கு   உறுதுணையாக ..உங்களின் வருமானத்திற்கு ..ஒரு சிறிய இடம் வாங்க முடியுமா ?..வாடகைக்கு பதிலாக ஒரு சிறிய அழகான அற்புதமான வீட்டை கட்ட முடியுமா ?...உங்களால் முடியும் ....உங்களின் மூன்று மாத வருமான சான்றிதழ் ...ஆறு மாத சேமிப்பு கணக்கு வங்கி பரிவர்த்தனை கொண்டு வாருங்கள் ...உங்களின் கனவு இல்லத்திற்கு உருவாக்க எங்களால் முடியும் ...உங்களின் வீட்டு கிரஹப்பிரவேசம் முடிய நாங்கள் உறுதுணையாய் இருப்போம் ...
வரும் செவ்வாய் 19.09.2017..

.எங்களின் உடுமலை கிளைக்கு வாருங்கள் ....

சுந்தரம் பைனான்ஸ் ...
சுபீட்சா வணிக வளாகம்
பழனி மெயின் ரோடு ,
காந்திநகர் ..
உடுமலைப்பேட்டை ...
தொடர்பு எண் -சிவக்குமார் 9944066681...
வாட்ஸஅப்ப் எண் -9944066681...

திங்கள், 11 செப்டம்பர், 2017

ஏதோ மனக்கசப்பினால் முறிந்துபோன உறவுகள், நட்புகள் மீண்டும் வந்து தங்களை நம்மோடு இணைத்துக்கொண்டாலும் முந்தைய நாட்கள்போல இருந்த இணக்கம், நெருக்கம், பிணைப்பு, அன்பு என்பது என்னதான் முயற்சித்தாலும் அவர்கள் மீது ஏற்படுவதில்லை..
மறப்போம் மன்னிப்போம்னு மனசு சொன்னாலும் மூளையானது பழைய சம்பவங்களையே நினைவுக்கு கொண்டு வந்து தொலைக்கின்றது..
ஒரு நட்பினை, உறவினை முறித்துக்கொள்வதற்கு முன்னர் பலமுறை யோசிக்கவேண்டும்.. முறித்துக்கொள்வது எளிது. மீண்டும் இணைந்து அதேபோன்று பயணிப்பது சற்றே கடினம்...மனசை வலிக்கச் செய்துவிட்டு பின்னர் நம்மோடு மீண்டும் நட்பு பாராட்ட முயல்கின்றார்கள்.. வேதனை..
பாளையக்காரர்கள் காலத்து பாசன முறை கல்வெட்டு.....

உடுமலை: பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து மழைக்
காலத்தில், வீணாக செல்லும் தண்ணீரை தடுத்து, அணை கட்டி விவசாயத்திற்கு பயன்படுத்தியது, உடுமலை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை திருமூர்த்தி மலையிலிருந்து பாலாறு உருவாகி, சமவெளிப்பகுதிக்கு செல்கிறது. பி.ஏ.பி., திட்டத்தில் திருமூர்த்தி அணை கட்டும் முன், பாலாற்றில் சென்ற தண்ணீரை தேக்கி, விவசாயத்திற்கு பயன்படுத்த தளி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, மேடான பகுதியிலிருந்து வரிசையாக கீழ்நோக்கி ஏழு குளங்கள் அமைக்கப்பட்டு, தற்போதும் அக்குளங்கள் பயன்பாட்டில் உள்ளன. இக்குளங்களின் தொன்மையை உறுதிப்படுத்தும் வகையில், பெரியகுளத்தில், நீர் மட்டத்தை அளக்க முற்காலத்தில், அமைக்கப்பட்ட கல்மானி தற்போதும் உள்ளது.
இதே போல், குளங்களை பாதுகாத்த வீரர்களுக்கு சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இவ்வரிசையில், திருமூர்த்தி மலையில் இருந்து மேற்கு நோக்கி பாயும் பாலாற்றின் குறுக்கேயும், தளி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் அணை கட்டப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், திருமூர்த்திமலை பகுதியில், ஜல்லிபட்டி பழனிச்சாமி, அருட்செல்வன், கொழுமம் ஆதி, சிவக்குமார் உட்பட குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வில், மொடக்குப்பட்டி ரோட்டில், பாலாற்றின் கரையில் இருந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது. அருகில், தளி பாளையக்காரர் சிலையுடன், பாறையில் செதுக்கப்பட்டிருந்த கல்வெட்டு படியெடுக்கப்பட்டது. கல்வெட்டில், அணை கட்டப்பட்ட ஆண்டு, மறைந்துள்ளது. சித்திரை மாதத்தில் தளி பாளையக்காரர் எர்ரமநாயக்கர் என்பவரால், அணை கட்டப்பட்டு, பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பணை போன்ற இந்த அணை சுவர்கள் இடிந்து ஓடையில் கிடக்கின்றன.
ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், 'தளி பாளையக்காரர் காலத்தில், பல்வேறு பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, திருமூர்த்தி அணையின் கழிவு நீர் ஓடையாக மாறியுள்ள பாலாற்றின் கரையிலுள்ள பாறையில் இந்த கல்வெட்டு உள்ளது. சிலை காலப்போக்கில் சேதமடைந்துள்ளது. அப்பகுதி எர்ரம நாயக்கரின் பெயரால், ஏராம் வயல் என அழைக்கப்படுகிறது. அங்குள்ள சிலைக்கு குறிப்பிட்ட நாட்களில், மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். உடுமலை பகுதியில் நீர் பாசன முறைகள் சிறப்புற்றிருந்தது இத்தகைய கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது' என்றனர்.



அன்புள்ள பொருளாளருக்கு ...நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு இன்று நிரந்தர கணக்கு எண் பெறப்பட்டுள்ளது ..உங்களின் பார்வைக்கு ..அறக்கட்டளைக்கு வங்கி கணக்கு தொடங்காவதற்கு நம் கார்த்தி மாப்பிள்ளையுடன் ..எரிசினப்பட்டியில் உள்ள கரூர் வையஸ்ய வங்கியிலே தொடங்காவதற்கு ...அன்புடன் ,மகிழிச்சியுடன் கேட்டுக்கொள்கிறேன் உங்களின் அன்றாட பணிகளுக்கு இடையிலும் சிரமமும் பாராமல் இன்முகத்துடன் உங்களின் பணி மதிப்புமிக்கது ...நன்றி...

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

மல்லிகை ....மல்லசீலன் ...
புங்கமுத்தூர் ..உடுமலைப்பேட்டை ...

எத்தனை நாளைக்கு ..அலுவுலகம் ,வியாபாரம் என நம் சொந்தங்களை அறிமுகப்படுத்துவது ..இன்று இருக்கும் சூழ்நிலையில் விவசாயம் மிக மிக அவசியமான ,வாழ்வாதாரமாக உள்ள காலகட்டம் .கடந்த வாரம் உடுமலையிலிருந்து கரட்டுமடம் பிரிவிலிருந்து வலதுபக்கமாக திரும்பும் செல்லும் வழியில் புங்கமுத்தூர் உள்ளது ...ஊரின் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்னேர மல்லிகையின் வாசம் காற்றில் பரவ ஆரம்பித்துவிட்டது ...

மல்லிகை விவசாயத்தில் சாதிக்கும் உடுமலைப்பேட்டை விவசாயி...

படித்ததோ எட்டாம் வகுப்பு, சம்பாதிப்பதோ மாதம் ரூ.40 ஆயிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற விவசாயி ஒருவர், தமிழகத்தில் புகழ் பெற்ற ராமேஸ்வரம் மல்லிகையை நடவு செய்து மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார்.

ராமேஸ்வரம் மல்லி

குண்டு குண்டாக இதழ் தடிமனாக, எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல் இருப்பது ராமேஸ்வரம் மல்லியின் தனிச்சிறப்பாகும். ராமேஸ்வரம் மல்லிகைச் செடி தங்கச்சி மடத்தில் உள்ள தாய்ச்செடியில் இருந்து பதியன்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த மல்லிகைப் பூக்கள், தமிழகத்தில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கின்றன. உடுமலைப்பேட்டை, திண்டிவனம், சேலம், கோவை, சத்தியமங்கலம், மதுரை, நெல்லை என எந்தப் பகுதிக்குச் சென்றாலும், ராமேஸ்வரம் மல்லிகைக்குத்தான் மணக்கும் குணம் அதிகம்.

நீர் சிக்கனம்

இத்தகைய சிறப்புகளுக்குரிய மல்லிகை கத்திரி வெய்யிலுக்கு கூட நல்ல விளைச்சல் தருகின்ற மானாவாரி இனம். 6 மாதங்களுக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட தாக்குபிடித்து வளரும். கோடை மழை, பூச்சி தாக்குதல், மொட்டு உதிர்தல் போன்ற சிக்கல்களை மட்டும் சமாளித்து விட்டால் மல்லிகையிலும் சாதிக்க முடியும் என்பதை உடுமலைப்பேட்டை விவசாயி நிரூபித்துள்ளார்.

உடுமலைப்பேட்டையில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ தொலையில் உள்ளது புங்க முத்தூர் கிராமம். அங்கு மானாவாரி பயிராக மல்லிகை சாகுபடி செய்துள்ள விவசாயி த. மலசீலன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது:

“நான் 15 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். முன்பு தக்காளி, கத்திரி விவசாயம் செய்தேன். அதில் அதிக லாபம் கிடைக்கவில்லை.

அதனால் பிற விவசாயிகளைப் போல் இல்லாமல் மாற்றி யோசித்தேன். மக்களிடம் ராமேஸ்வரம் மல்லிகைக்கு அதிக வரவேற்பு இருப்பதை அறிந்தேன். ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து மல்லிகை பதியன்கள் வாங்கி வந்து மல்லிகை சாகுபடியைத் தொடங்கினேன்.

குறைந்த பரமாரிப்பு நிறைவான லாபம்

தொடக்கத்தில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடி நன்றாக வளர்ந்த பிறகு 6 மாதம் வரை தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட செடி தாக்குபிடிக்கும். மண் ணுக்கு ஏற்ற விளைச்சலை தரும் மல்லிகை 15 ஆண்டுகள் வரை வாழ்ந்து விவசாயிக்கு பலன் தருகிறது.

காய்கறி சாகுபடி மூலம் கிடைக்கும் வருவாயை காட்டிலும் அதிக வருவாய் மல்லிகை சாகுபடியில் கிடைக்கும். நல்ல விளைச்சலின்போது மாதம் ரூ.40 ஆயிரம் வரை இதில் சம்பாதிக்க முடிகிறது.

ஆண்டுக்கு இருமுறை கவாத்து செய்து முறையாக பராமரித் தால் நிலையான வருமானம் நிச்சயம்.

தமிழ் மாதங்களான மாசி, பங்குனி, சித்திரை, ஆவணி மாதங்களில் நல்ல விளைச்சல் இருக்கும். கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் விளைச்சல் குறைவாக இருக்கும். ஆனால் அந்த காலகட்டத்தில் மல்லிகைக்கு மார்கெட்டில் அதிக தேவை இருக்கும்.

அப்போது ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கும். முறையான பராமரிப்பு இருந்தால் மல்லிகையை நம்பி யார் வேண்டுமானாலும் துணிச்சலுடன் சாகுபடியில் இறங்கலாம்” என்கிறார் தன்னம்பிக்கை விவசாயி மலசீலன்.

அவரது அனுபவங்கள் பற்றி மேலும் அறிய 80120 08400 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்....

குறிப்பு :..இவருக்கு வாட்ஸாப்ப் ,முகநூல் கணக்கு எல்லாம் இல்லை ..நம்மை போன்ற படித்த இளைஞர்கள் தான் வழிகாட்டி கொண்டுஇருக்கிறோம் ..
இவருக்கு அருள் என்ற மனைவி ஒரு பெண்செல்வம் ..ஒரு ஆண் செல்வம் இருகிறார்கள் ...விவசாயத்திற்கு இவரின் மனைவி பக்கபலமாக உள்ளார் ..இவரும் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் .இவருடைய சொந்தஊர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புதுஎட்டாம்நாயக்கன் பட்டி ..












புதன், 6 செப்டம்பர், 2017


 சக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய நமது அறிமுகம் திரு முருகராஜ் அவர்கள்.

1966 ஆம் ஆண்டு திரு சண்முகம் ( பூர்விக ஊர் - எட்டமநாயக்கன்புதூர்) அவர்களுக்கும் திருமதி ராஜபாக்கியம் (பூர்விக ஊர் -வாரப்பூர்- புதுக்கோட்டை மாவட்டம்)  அவர்களுக்கும் மகனாக பிறந்தவர். இவருடைய தந்தை திரு சண்முகம்  அவர்கள் பழனி முருகன் கோவிலில் 30  வருடங்கள் பராமரிப்பு பணியில் இருந்து உள்ளார். திரு முருகராஜ் அவர்களுக்கு உடன் பிறந்தோர் 3 சகோதிரிகள் ( திருமதி பத்மாவதி ,  திருமதி மகேஸ்வரி,திருமதி ஜெயந்தி) மற்றும் 1 இளைய சகோதரர் (திரு முத்துகிருஷ்ணராஜா) உள்ளனர்.

திரு முருகராஜ் அவர்களுடைய மனைவி பெயர் திருமதி கார்த்திகேயனி . இவர் நமது சிவகுமார் அவர்களின் உடன் பிறந்த தமக்கை ஆவர். இந்த தம்பதியருக்கு  இரண்டு பெண் குழந்தைகள் ஒருவர் செல்வி சொர்ணமாலா (பல் மருத்துவம் - 2 ஆம் ஆண்டு மாணவி ) மற்றொருவர்  செல்வி சுபாஷினி ( +2  மாணவி).

பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து விட்டு இவர் பெட்டிக்கடை,லாட்டரி கடை ஆகியவற்றில் வேலைபார்த்து கொண்டு தட்டச்சு பயின்று பின்னர் அதே
தட்டச்சு துறையில் ஆசிரியராக பட்டமும் பெற்று உள்ளார். தொலைதூரக் கல்வியில் இளம்கலை பொருளாதாரம் மற்றும் பெங்களூரில்  சட்டப்  படிப்பை (LLB) படித்து முடித்து உள்ளார். பல வேலைகளை பார்த்து கொண்டே இருந்தாலும் இவருடைய கல்வி ஆர்வம் குறையாமல் இருந்தது இன்றைய நமது இளைய சமுதாயத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவே உள்ளது.
இவருடைய சொந்த திறனால் இன்று திருப்பூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் சட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார்.அதை தவிர்த்து வழக்கறிஞராக இருந்து பல சிவில்&கிரிமினல் இரண்டிலும் வழக்காடி வருகிறார்.

இவருடைய வாழ்க்கையில் பல தொழில் துறைகளில் நுழைந்து (கூல் டிரிங்க்ஸ் பேக்டரி, பைனான்ஸ், சோப்பு பேக்டரி,ரியல் எஸ்டேட், தட்டச்சு இன்ஸ்டியூட் ஜாப் ஒர்க்ஸ் செண்டர்  ) பலவற்றில் வெற்றியும் சிலவற்றில் சிறந்த  அனுபவத்தையும் பெற்று உள்ளார்.

இதை தவிர்த்து இடைப்பட்ட காலங்களில் தனது தட்டச்சு திறன் மூலம் பொது பணித்துறையிலும் (PWD) மற்றும் LIC அலுவலகங்களில் பணி புரிந்து உள்ளார்.
1987ல் இருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தில் உறுப்பினராக இருந்து வந்த இவர், இன்று நமது கொங்கு மாவட்ட வாழ் இளைய சமுதாய மக்கள் ஒருகிணைத்து இருக்கும் கம்பள விருட்சம் அறக்கட்டளை அமைப்பில் தனது 51 வயதிலும் ஆர்வம் குறையாமல்  நல்ல  ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டி வருவது பாராட்டுக்குரியது.

இதை தவிர்த்து National OBC Federationல் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவராகவும், வங்கிகளில் பேனல் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.

கல்வியின் பெருமையை நன்கு அறிந்த இவர் , தனது இருமகள்களையும் நன்றாக படிக்கச் வைத்து ஒருவரை மருத்துவர் ஆக உருவாக்கியதில் சிறந்த தந்தை ஆகவும் நல்ல முன் உதாரணம் உள்ள மனிதராக ஆகவும் திகழ்கிறார்.

இவருடைய குடும்பத்தினர் மென்மேலும் வளர நம்முடைய வாழ்த்துக்கள்.

இவருடைய தாயார் (திருமதி ராஜபாக்கியம்) அவர்கள் குடும்பத்தினரை பற்றி ஒரு வரலாற்று கதை உள்ளது.

வாரப்பூர் நிலக்கிழார் குடும்பத்தை சார்ந்த இவர்கள் , போராட்ட வீரர் கட்டபொம்மனுக்கு உதவிய காரணத்தினால் ஆங்கிலேயர்களால் தேட பட்டு வந்தனர். இவர்கள் ஆங்கிலேயர்களிடம் சிக்கினால் மரண தண்டனை உறுதி என்று இருந்த காலம் அது.   இதனால் 
பூர்விக இடத்தை விட்டு பெயர்ந்த திருமதி ராஜபாக்கியம் அவர்களின் தாத்தா திண்டுக்கல்லில் உள்ள ஒரு சிற்பியிடம் தஞ்சம் புகுந்தனர்.தங்களது சுய அடையாளத்தை மறைத்து, கற்சிலை சிற்பியாக பயிற்சி பெற்றனர். சிற்ப கலையில் சிறந்து விளங்கி பல  கடவுள் சிலைகளை சிற்பமாக வடித்தனர். சென்னையில் உள்ள வடபழனி கோவிலில் உள்ள முருகன் சிலையும் இவர்கள் வடித்த ஒரு சிலை என்பதை செவி வழி செய்தியாக அறிந்து கொள்ளலாம். இதற்கான சில சாத்திய கூறுகளையும் நாம் அந்த தள வரலாற்றில் அறிய வாய்ப்பு உள்ளது.

நம்முடைய சிறு சிறு வரலாறுகள் உண்மையிலே பிரமிக்க வைப்பதாகவும், இறைவனே நமது குல மக்களுக்கு அருகில் இருப்பது போன்ற உணர்வும் இது போன்ற சம்பவங்களால் உணர முடிகின்றது.

திரு முருகராஜ் அவர்கிளின் அலைபேசி எண் - 9894202111 .

நன்றி
இப்படிக்கு
செந்தில் அப்பையன்









முருகராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..அவர் எங்களின் அறக்கட்டளையின் கௌரவ தலைவர் என்ற முறையில் ஒரு அறக்கட்டளையை எப்படி உருவாக்கவேண்டும் ..அதன் சட்டதிட்டங்கள் ஆராய்ந்து சட்டப்படி பதியவைத்து ..நம் சமுதாய மக்களுக்கு அறக்கட்டளை தனி நபர் சாராது ..எப்படி இயங்கவேண்டும் ..அறக்கட்டளைக்கு நிதி ஆதாரங்கள் எப்படி திரட்டுவது ,மாதம் கூட்டங்களில் எங்கள் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் ..வழி நடத்துபவராகவும் ..அறக்கட்டளைக்கு புது திட்டங்களை உருவாக்கி எங்களை செயல்படவைத்துக்கொண்டு உள்ளார் ...இந்த 51 வயது எல்லாம் ஒரு வயதா என தன் வேகமான செயல்பட்டால் .அரசு துறை ,தனியார் துறை ,உள்ள திட்டங்கள் என்ன ,அதை நம் சமுதாய மக்கள் எப்படி அணுகவேண்டும் ,இலவசமாக ,நம் சமுதாய மக்களுக்கு சட்ட நுணுக்கங்களை தெரிவித்து ,நம் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு ,உறுதுணையாக உள்ளார் ..எங்கள் அறக்கட்டளையின் கௌரவ தலைவராக இருப்பது ..எங்களுக்கு கௌரவமே ......செந்தில் அப்பையன் அவர்களுக்கும் எங்களுக்கு தெரியாத தகவல்கள் கேட்டு தெரிவித்திருப்பது எங்களின் கோவை ,திருப்பூர் மாவட்ட நம் சமுதாய மக்களுக்கு மகிழ்ச்சி ..

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

என் அன்பு நண்பரின் மணி அவர்களின் அறக்கட்டளை ..எப்படி செயல்படுகிறது ...அவ்பொழுது கேட்டு தெரிந்து கொள்வேன் ..நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையும் இப்படித்தான் செயல்படவேண்டும் ...என்னுடைய விருப்பம் ....

 

தீராத பயணங்கள்

கீர்த்தி நாராயணனை அழைப்பது என்று முடிவாகியிருந்தது. தொடர்ந்து தொடர்பில் இருப்பவர். கடலூர்காரர். பிஎஸ்ஜி கல்லூரியில் பொறியியல் முடித்துவிட்டு மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வருமான வரித்துறை துணை ஆணையராக இருக்கிறார். 
கிராமப்புற ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சியளிக்கிறோம் அல்லவா? - அது குறித்து தெரியாதவர்களுக்காக- அரசுப் பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான பயிற்சி இது. பெற்றோர்களை இழந்தவர்கள், கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள், நாடோடிகளின் குழந்தைகள் என்று பதினாறு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் ஒரு பயிற்சி வகுப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆளுமை மேம்பாடு, மொழி சார்ந்த பிரச்சினைகள், தன்னம்பிக்கை என கலவையான பேக்கேஜ். 
அத்தகையதொரு பயிற்சி வகுப்புக்காகத்தான் கீர்த்தி நாராயணன் வந்திருந்தார். என்ன தலைப்பில் அவர் பயிற்சியளிக்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்தோம். பல மாணவர்களிடமும் இலக்கு என்பதன் குறித்தான புரிதல் இல்லை. கேட்டால் ‘படிச்சு முடிச்சு வேலைக்கு போகணும்’ என்றுதான் சொல்வார்கள். ஆயிரக்கணக்கான வேலைகள் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான துறைகள் இருக்கின்றன. அதில் எந்தத் துறை, எந்த வேலை என்பது பற்றிய தெளிவான சிந்தனையை மாணவர்களிடம் உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  ‘இந்தத் துறையில் இந்த வேலை’ என்ற தெளிவுடன் இருக்கிற மாணவர்கள் வெகு சொற்பம். கிராமப்புற மாணவர்களிடம் அதைப் பற்றி விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது. அதனால் ‘இலக்கு நிர்ணயித்தல்’ என்பதைப் பற்றி மட்டுமே அவரது பயிற்சி வகுப்பு அமைந்திருந்தது. ஒரு தீக்குச்சியை உரசி வீசுவது போலத்தான். அதிலிருந்து அவர்கள் வெளிச்சம் பிடித்துக் கொள்வார்கள்.
கோழிக்கோட்டிலிருந்து ஈரோடு வரைக்கும் தொடரூர்தியில் வந்திருந்தவர் ஈரோட்டிலிருந்து அரசுப் பேருந்து ஏறிவிட்டு அழைத்திருந்தார். ‘கவர்ண்மெண்ட் பஸ் நின்னுச்சு ஏறிட்டேன்..’ என்றார். ‘இங்க வாங்க சாப்பிட்டுக்கலாம்’ என்றால் ‘பஸ் ஸ்டாண்டிலேயே சாப்பிட்டுட்டேன்’ என்றார். புரிந்து கொள்ளவே முடியவில்லை. துணை ஆணையர் தகுதியில் இருக்கும் ஒருவர் அரசுப் பேருந்தில் ஏறி, பேருந்து நிலையத்தில் உணவை உண்டுவிட்டு பயிற்சி வகுப்புக்கு வருகிறார் என்றால் எப்படிப் புரிந்து கொள்வது? அரசுத்துறையில் எவ்வளவோ மனிதர்களைப் பார்க்க நேர்கிறது. அலுவல் உதவியாளாராக இருக்கிறவர்கள் கூட முகம் கொடுத்து பேசாத சிஸ்டம் நம்முடையது. 
‘பஸ் ஸ்டாண்ட்ல நல்ல சாப்பாட்டுக்கடையே இல்லையேங்க’ என்றேன். 
‘ஒரு நாள்தான? ஒண்ணும் ஆகாது..அங்கேயே இருங்க..நானே வந்துடுறேன்’ என்று வந்துவிட்டார்.

மதியம் இரண்டரை மணிக்குத்தான் பயிற்சி வகுப்பு தொடக்கம். ஓய்வு கூட இல்லை. பேருந்திலிருந்து இறங்கியவர் ஒரு காபியைக் குடித்துவிட்டு எங்களுடனேயே சுற்றத் தொடங்கினார். விடுமுறை தினங்களில் அரசு தாமஸூக்கும், கார்த்திகேயனுக்கும், எனக்கும் சுற்றுகிற வேலை நிறைய இருக்கும். பயனாளிகளைப் பார்ப்பது, பள்ளிகளுக்குச் சென்று வருவது, காலனிகளைப் பார்ப்பது என்று நிற்க நேரமிருக்காது. எங்களுடனேயே வருவதாகச் சொன்ன கீர்த்தியை அழைத்துக் கொண்டுதான் ஒவ்வோரிடத்துக்கும் சென்றோம். சலிக்காமல் சுற்றினார்.
இத்தகைய இளம் அதிகாரிகள் களத்தில் இறங்கிச் சுற்றுவதும் நிலவரங்களைத் துல்லியமாகப் புரிந்து கொள்வதும் உருவாக்கக் கூடிய விளைவுகள் நீண்டகால பலன்களை உருவாக்கும். அதிகாரிகள்தானே எல்லாமும்? உதயச்சந்திரனும் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர்தான். சவிதாவும் அதே பதவியில் இருந்தவர்தான். இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?
பகல் முழுவதும் சுற்றியலைந்த பிறகு மதிய உணவை முடித்துவிட்டு பயிற்சி வகுப்பை ஆரம்பித்தார். மூன்றரை மணி நேரம். மாணவர்கள் அசையாமல் இருந்தார்கள். உண்மையிலேயே இவ்வளவு சிறப்பாக பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பயிற்சியாளர் நகர்ந்த பிறகு மாணவர்களிடம் நான் தனியாகப் பேசுவதுண்டு. பயிற்சி எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்வதைவிடவும் அவர்கள் என்ன எதிர்பார்த்தார்கள்? என்ன கிடைத்தது? அடுத்த பயிற்சி வகுப்பில் என்ன மாதிரியான பயிற்சியை அளிக்கச் சொல்லி பயிற்சியாளரிடம் பேச வேண்டும் என கணக்குப் போடுவதற்கு இந்த உரையாடல் அவசியம். மனப்பூர்வமாகச் சொல்கிறேன் - மாணவர்கள் ஸ்தம்பித்துப் போயிருந்தார்கள். 
மிகச் சீரிய தயாரிப்பு. தயாரிப்பு என்பதைவிடவும் உளப்பூர்வமாக மாணவர்களிடம் பேசினார். இதுதான் தேவையாக இருக்கிறது. ‘அவர் நல்ல பேச்சாளர்..அவரைக் கூப்பிடலாமே’ என்று யாரையாவது யாராவது சுட்டிக்காட்டுவதுண்டு. மேடையில் பேசுகிற வணிக ரீதியிலான பேச்சாளர்களும் பயிற்சியாளர்களும் அவசியமே இல்லை. அதை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியும். இந்தச் சமூகத்திற்கும் அதன் விளிம்பில் இருக்கும் மாணவர்களுக்கும் தம்மால் எதையாவது செய்ய முடியும் என்கிற நம்பிக்கையிலும் ஆர்வத்திலும் பயிற்சியளிக்க முன்வருகிறவர்கள்தான் நமக்கான தேவை. அவர்கள் மேடைப் பேச்சாளர்களாகவோ துல்லியமான பயிற்சியாளர்களாகவோ இல்லாதிருக்கலாம். ஆனால் 100% உழைப்பை இந்தப் பயிற்சிக்காக வழங்குகிறார்கள். 
மாணவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். இறுக்கமாக அமர்ந்திருப்பார்கள். இப்பொழுதெல்லாம் நெகிழ்ந்து பயிற்சியாளர்களிடம் சகஜமாகப் பேசுகிறார்கள். அவர்களிடம் கேள்விகளைக் கேட்கிறார்கள். ‘எப்படி படிச்சீங்க?’ ‘என்ன பிரச்சினைகளைச் சந்தித்தீர்கள்?’ என்றெல்லாம் அவர்கள் ஆர்வமாகக் கேட்பது உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது. இத்தகைய கேள்வி கேட்கும், உரையாடும் மாணவர்களை உருவாக்குவதுதான் எங்களது முதல் இலக்கு. அதை மூன்றாவது பயிற்சியில் முழுமையாக அடைந்திருக்கிறோம். இன்னமும் காலமிருக்கிறது. செதுக்கிவிட முடியும்.
காலாண்டுத் தேர்வுகள் முடிந்தவுடன் பள்ளிகளுக்கான பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அரசுப்பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கான பயிற்சி. கடந்த வருடம் இப்படியானதொரு பயிற்சியை நடத்தினோம். உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை- எழுபத்தைந்து மாணவர்களுக்கான பயிற்சி அது. எப்படி படிக்க வேண்டும், எப்படி நேர மேலாண்மை செய்வது என்றெல்லாம் கலந்து சொல்லிக் கொடுத்தோம். பவித்ராவையும், அய்யாவையும், சாமிநாதனையும், அசாரையும் அங்கேதான் கண்டறிய முடிந்தது. அங்கிருந்துதான் அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆண்டுக்கான பட்டறைகளை காரைக்கால் மாவட்டத்திலிருந்து தொடங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். நவம்பர் மாதத்திற்குப் பிறகு தொடங்கலாம் என்பதுதான் திட்டமாக இருந்தது. ஆனால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கேசவன் சுழி போட்டிருக்கிறார். காரைக்காலில் நடத்திவிட்டு அதற்கடுத்து ஒட்டன்சத்திரம் மாதிரியான சில ஊர்கள்- இப்படியே ஐந்தாறு இடங்களிலாவது நடத்திவிடலாம்.
அன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு,

என் பெயர் கேசவன். காரைக்கால் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பணியாற்றி வருகிறேன். தங்களுடைய நிசப்தம் தளம் வாசித்து வருபவன். நான் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகின்றன. என்னுடைய மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் உரையாட் வருகை தந்தால் உதவியாக இருக்கும். மாணவர்களிடம் உரையாடும் போது நான் அறிந்து கொண்டது: முற்றிலும் நம்பிக்கை இழந்தவர்களாக உள்ளனர். ஆங்கிலம் தெரியவில்லை தாழ்வு மனப்பான்மை பெரும்பாலும் அனைத்து மாணவர்களிடமும் உள்ளது. பேசுவதற்கு மிகவும் தயங்குகிறார்கள்..

தாங்கள் காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை தரவேண்டும். இங்குள்ள தன்னார்வலர்களுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்துவது எப்படி என பயிற்சி அளிக்க வேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள்.

மாவட்ட ஆட்சியருக்கு நன்றி. நிச்சயமாக எங்கள் பங்களிப்பு இருக்கும்.

செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் தடாலடியாகச் செய்ய முடியாது. முதலில் நமக்குப் புரிதல் உண்டாக வேண்டும். பயிற்சி பெறுகிறவர்களுக்கான தேவைகள் என்ன, பயிற்சியாளர்களிடம் என்னவிதமான தயாரிப்புகளைக் கோர வேண்டும் என்றெல்லாம் தெளிவு பெற வேண்டியிருக்கிறது. அதனால்தான் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.
செல்ல வேண்டிய தொலைவு வெகு தூரம் என்று தெரியும். ஒன்றும் பிரச்சினையில்லை- அபிநயாக்களும், கீர்த்தி நாராயணன்களும் துணையாக இருக்கும் போது அசார்களையும், அங்குராஜ்களையும், ஜெயக்குமார்களையும் உச்சத்திற்குக் கொண்டு வந்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சனிக்கிழமையன்று பயிற்சியரங்கு முடிந்தவுடன் மழை தூறிக் கொண்டிருந்தது. தமது பையைத் தோளில் போட்டுக் கொண்டு கோழிக்கோடுவுக்கு தொடரூர்தியில் ஏறினார். சொல்ல மறந்துவிட்டேன் - டிக்கெட் கூட அவருடைய காசுதான்.
தேங்க்யூ கீர்த்தி!
சஸ்திகா-உடுமலைபேட்டை -கடந்த சனிக்கிழமை... இன்று சிவநந்தினி குழந்தைகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

குழநதைகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கொண்டாடுவது ...வெறும் ஆடம்பரம் விழா அல்ல ....அப்படிதான் நம் பெற்றோர்கள் நமக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறார்கள் . கடந்த காலங்களில் இப்படித்தான் நம்

கடந்துவந்துள்ளோம் ..குழந்தைகளுடன் கொண்டாடுவது 3 வயது முதல் கொண்டாவது ...அக்குழந்தைகள்  .கூட்டங்களை பார்த்து பயப்படாமல் இருப்பதற்கும் ..நம் சொந்தபந்தங்களுடன் மகிழ்ச்சிடன் ..நண்பர்களின் உறவுமுறைகளை குழந்தைகளுக்கு சொல்லி அவர்களை அறிமுக படுத்துவதற்கும் சரியான வழிமுறையாகும்  ..படித்த பெற்றோர்கள் அதிகம் இதை கையாளுகின்றனர் .குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்க்கும்போது ...பயம் இல்லாமல் எதிர்கொள்வதற்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும் . ..நம் சொந்தங்கள் ,பந்தங்கள் ,நண்பர்களின் கல்யாணம் ,காதுகுத்து கோவில் விழாக்கள் ..குழந்தைச்செல்வங்களை கண்டிப்பாக அழைத்துச் செல்லவேண்டும் ..அதுவும் நம் வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் கோவில்களையும் ,குழந்தைகளுக்கு காண்பிக்கவேண்டும் ..அப்பொழுதுதான் ..குழந்தைகளின் அறிவாற்றல் ,சுயமாக யோசிக்கும் திறன் நல்லமுறையில்வளர ஏதுவாகும் .

இதற்கு எங்கக்கீங்க நேரம் இருக்கிறது என்று கேற்கிறீர்களா ...கண்டிப்பாக குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ...நேரம் ஒதுக்கவேண்டும்...

சனி, 2 செப்டம்பர், 2017

 மும் மூர்த்திகளில் ஒருவரின் பெயரை  முற் பாதியிலும், ரஞ்சனியை பிற் பாதியாகவும் பெயர் கொண்ட என்  தங்கையை அறிமுகபடுத்த வேண்டிய அவசியம் இருக்காது இன்னும் சில வருடங்களில்.......

நீதிக்கு அரசியாகவோ, அரசு தலைமை வழக்குரைஞராகவோ இருப்பதை நாம் தான் அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டி வரும்.

அன்பழகன் மற்றும் அன்புச்செல்வி தம்பதியினரின் முதல் பெண்ணாக 26 .03 . 1991 இல் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள மரிக்கந்தை கிராமத்தில், சில்லன்னா குலத்தின் பெண் சிங்கமாய் பிறந்தார். ஆரம்ப பள்ளி படிப்பை சோமவார்பட்டியில் தொடங்கி இளங்கலை பட்டத்தை உடுமலையில் உள்ள அரசு கலை கல்லூரியில் முடித்து , இளங்கலை சட்டம் கோவையில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் முடித்தார்.

இந்த மீன் குட்டிக்கு யாரும் நீந்த கற்று கொடுக்கவில்லை, ஏழ்மையிலும் மனம் தளராது படிக்க வைத்த தன் அப்பா சட்ட படிப்பை முடிக்கும் முன்னரே 2014 இல் இறைவனடி சேர்ந்த போது, தாங்க முடியாத வேதனையோடு படிப்பை முடித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்து, கோயம்புத்தூரில் உள்ள மிக பிரபலமான வழக்குரைஞரிடம் ஜூனியர் ஆக சேர்ந்து, இன்று கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை வெற்றிகளாக மாற்றும் திறமையை பெற்று இருக்கிறார்.

உடன் பிறந்த தம்பி சிவகுமாருக்கு மற்றும் இல்லை, தன் கிராமத்தில் உள்ள படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத்தான் தெரிகிறார்

தராசில் உள்ள முல்லை போல, தவறுகளை தவறு என துணிவுடன் சொல்ல கூடிய, துணிச்சலான, ஆடம்பரம் இல்லாத, விளம்பரம் எதிர் பார்க்காத, சகிப்பு தன்மையின் மொத்த உருவமாய் சமூக பனி ஆற்றி வருகிறார்....

எல்லாரையும் எனக்கு பிடிக்கும், என்னை பிடிக்காதவர்களையும் சேர்த்து என்று சொன்ன போது கொஞ்சம் அதிசயமான பெண்ணாகத்தான் தெரிந்தார்.

கோவையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராக வெற்றிகளை குவித்து, ராஜகம்பளத்தாரின் பெருமையை வரலாறாக பதிவு செய்கிறார்.

நமது  சமூக முன்னேற்றத்திற்கு சத்தம் இல்லாமல் தன் பங்களிப்பை சுத்தம் ஆக செய்து கொண்டு இருக்கிறார்.

வாழ்த்துகிறேன் சகோதரியே..... நீ உலகின் மிக சிறந்த வழக்குரைஞராகவோ அல்லது நீதி அரசராகவோ வர வாழ்த்துகிறேன்...

உன்னை அறிமுக படுத்திய பெருமை கிடைத்ததும் ஒரு வரலாறாக இருக்கும்....

நன்றி ...

நீங்களும் தொடர்பு கொள்ளலாம் ......

சிவரஞ்சனி,பி.எஸ்சி, பி எல்
கிரிமினல் மற்றும் சிவில் வழக்குரைஞர்,
மாவட்ட நீதி மன்றம்
கோயம்பத்தூர்

வழக்கறிஞர் ...செல்வி .சிவரஞ்சனி .....நம் கம்பள சமுதாயத்தில் ..பெண் செல்வங்களின் வளர்ச்சி நம் சமுதாயத்தின் வளர்ச்சி ....எங்களின் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் துணை தலைவர் என்பது எங்களுக்கு பெருமையே ... இன்னும் கூடுதல் தகவல் ...கோவை மாவட்ட ம .திமுக ...வழக்கறிஞர் பிரிவுளும் ,பெரியார் சித்தாந்தங்களில் பெரும் பற்றுகொண்டவர் ...எங்களின் சிவரஞ்சனி ...

திரு .பெ .செந்தில் ராமன் ...(இன்றைய அறிமுகம் உடுமலைப்பகுதியிலிருந்து )
அழைப்பு எண் :9789491415....

கோவை மாவட்டம் பத்திரிகை உலகில் செல்லமாக செந்தில் ராம் ... என்று அழைக்கப்படுபவர்.இவர் பிறந்தது உடுமலை அருகே உள்ள கம்பாளப்பட்டி கிராமம் . அப்பா பெயர் :திரு .பெரியசாமி ..தாயின் பெயர் .திருமதி .சரஸ்வதி அம்மாள்(late ) செந்தில் ராம் அவர்களுக்கு இரண்டு சகோதிரிகள் உள்ளனர் .அவரின் பெயர் .திருமதி .லீலாவதி ..ஆவின் செயலாளர் ..ஜெகதீஸ்வரி -lic ஏஜென்ட் ..சென்ட்ரல் வங்கியின் ரெப்ரெசென்டடிவ் வாக ..உடுமலை அருகே உள்ள ராஜாவூரில் வசித்து வருகிறார்கள் ...அப்பா .தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணியாளராக பணியாற்றி ஒய்வு பெற்று உள்ளார் .வேலை நிமித்தம் காரணமாக ,தன்குழந்தைகளுக்கு நல்ல கல்விக்கு ஆகவும் .அடிவள்ளி கிராமத்தில்..வசித்து வருகிறார்கள் .
செந்தில் ராம் .. படித்த பள்ளி கட்டுப்பாட்டிற்கு ,கல்விக்கும் பெயர் பெற்ற ஏ .நாகூர் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்புமுடிய படித்து ..தொழில் கல்வி கற்கவேண்டும் என எண்ணி ..இப்பொழுதும் உலக புகழ்பெற்ற பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்-இல் . டிப்ளமோ ஜவுளி தொழில்நுட்பம்(DTT )படித்து முடித்துள்ளார் ..அவர் இத்துறையை எடுக்க காரணம் ..உடுமலை பஞ்சாலைகளுக்கு உலகபுகழ்பெற்று விளங்கியது.வேலைவாய்ப்பு அதிகம் இருந்ததால் .படித்து பஞ்சாலையில் இரண்டாண்டு காலம் .மேற்பார்வையாளராக பணிபுரிந்துவந்தார்....இருந்தாலும் ஒரு கட்டத்தில் நம் சமுதாயத்திற்கும் ,பொதுமக்கள் பணி சார்ந்த சேவை செய்யவேண்டும் என்ற ஆசை சிறு வயதிலேயே துளிவிற்று இருந்தகாரணத்தால் ..அதற்கு பத்திரிகை துறைதான் சரியான தேர்வு என்று முடிவெடுத்து,அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்

journalism..படித்து ..அவர் தந்தையின் வழிகாட்டுதலின் படி பத்திரிகை துறையில் ..முதன் முதலாக உடுமலைப்பகுதிக்கு நிருபராக சேர்ந்தார் ..2006 வருடம் முதல் ..இந்நாள் முடிய 11 வருடம் வெற்றிகரமாக பணியாற்றி கொண்டுஉள்ளர் ..இவருக்கு ..தமிழ் இந்து ,தினகரன் ,இன்னும் புகழ்பெற்ற பத்திரிகை வாய்ப்பு வந்தும் ..உடுமலையின் மேல் பற்று காரணமாக மறுத்து ..தினமலர் பத்திரிகையில் பணியாற்றி கொண்டுஇருக்கிறார் .கோவை ,பொள்ளாச்சி ,உடுமலை பகுதிக்கு சுட ,சுட, செய்திகளை அளித்து பெயர் பெற்று  உள்ளார் ..அதுவும் உடுமலை உள்ளூர் செய்தியை மண் மனம் மாறாமல் செய்திகளை,நடு நிலையோடு அளித்துக்கொண்டுள்ளார் ....தனக்கென்று தனித்துவம் பெற்று திகழ்கிறார் ...இவர் நம் சுற்றி இருக்கும் கோவில்கள் ,பழமைவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ,கண்டியம்மன் ,சிஞ்சுவாடி ,வல்லகொண்டம்மன் ,மலைக்கோவில் ,திருமூர்த்தி மலை ,மையவாடி மாரியம்மன் கோவில் ,உடுமலை மாரியம்மன் கோவில் ,அழகாகாக அதன் வரலாறுகளை எழுதி...நம் சமுதாயத்திற்கு பணியாற்றி உள்ளார் ...அதைவிட விடுதலைப்போருக்கு வித்திட்ட மாவீரர் தளி எதுலப்ப மன்னரின் சிலைகளை மற்றும் ஜல்லிபட்டி தெற்கு பகுதியின் மலைமேல் உள்ள போடி தாத்தா புலிக்கல் வீரர்களின் சிலைகளை கண்டுபிடித்து செய்தியாக வெளியிட்டு ,தொல்லியல் துறை கவனத்திற்கு கொண்டுசென்று சிலைகளை பாதுகாப்பாகவும் ,நம் சமுதாய மக்கள் வழிபடுவதற்கு வழிசெய்துள்ளார்..கம்பள சமுதாயத்திற்கு தான் பணிபுரியும் துறையை பயன்படுத்தி எல்லா மக்களுக்கும் அறியும்வகையில் பணிசெய்துகொண்டுள்ளார் .மக்கள் பணியில் நம் சமுதாயப்பணியையும் வெற்றிகரமாக செய்துள்ளார் ..பணிகள் இன்னும் தொடரும் ..

செந்தில் ராம் அவர்களுக்கு ...காயத்திரி என்ற மனைவியும் இரண்டு பெண் செல்வங்கள் கீர்த்தனா ,மதுமிதா உள்ளார்கள் 

காயத்திரி அவர்களை பற்றி சிறு தகவல் ..ராஜாவூர் என்ற ஊரில் பெரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்..அவரது கல்வி ..Msc ,B E d படித்து ,தன் குழந்தைச்செல்வங்களையும் ,பணியிலிருந்து ஒய்வு பெற்ற தன் மாமனாரையும்  பொக்கிஷமாக பாதுகாத்து கொண்டுள்ளார் ..

காயத்திரி அவர்கள் Msc ,B E d படித்துவிட்டு ..புகுந்த வீட்டின் விவசாய நிலத்தில் தென்னைகளை நற்று முழுநேர விவசாயத்தியும் செய்துவருகிறார் ..இன்றைய பெண்கள் படித்துவிட்டு ,விவசாயத்தை மறந்து ,அலுவுலகம் தான் செல்வேன் என்று அடம்பி டிக்கும் இக் காலகட்டத்தில் விவசாயத்தை வெற்றிகரமாக செய்துவருவதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..மனமார்ந்த வாழ்த்துக்களும் கூட ...,,பத்திரிகை துறை என்பது 24 மணிநேரமாக கண்ணும் கருத்துமாக ,விழுப்புடன் இருக்கவேண்டிய பணி..செந்தில் ராம் அவர்களுக்கு பணியில் முழுசுதந்திரம் கொடுத்து (இப்ப எங்க இருக்கீங்க ,எப்ப வருவீங்க ,அங்க போகணும்,இங்கேபோகணும் என்று ஒரு தொந்தரவும் இல்லாமல் )இந்த சுதந்திரம் இருந்ததினால் தான் ஒரு வெற்றிகரமான பத்திரிகை உலகில் பெயர்பெற்று உள்ளார் ..அதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...இவர் எனக்கு அறிமுகமானதே முகநூலில் தான் ..நம் சொந்தம் என்று தெரியாது ..எனக்கு ஒரு நண்பராகவும் ,மாப்பிளையை என்று செல்லமாக அழைப்பது எனக்கும் பெருமையும்  கூட

நன்றியுடன் ...

சிவக்குமார் ..

கம்பள விருட்சம் அறக்கட்டளை 

உடுமலைப்பேட்டை ...