செவ்வாய், 13 ஜூன், 2017

குறிக்கோள் ....

நம் தலைமுறை சொந்தங்கள் மிக தெளிவுடன் இருக்கிறார்கள் ...வாழ்க்கையில் தான் நினைத்த குறிக்கோளை அடைந்தவுடன்தான் அவர்களின் வாழ்க்கையை பற்றி தீர்மானிக்காரர்கள்...மகிழ்ச்சி  

ஞாயிறு, 11 ஜூன், 2017

ஒரு வரலாற்று மலை பயணம் ....

இன்று மதியம் திருமூர்த்தி அணையின் மலையின் மேல்பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாமரை பாழியில் உள்ள தண்ணீர் பகுதியையும் ,பாளையக்காரர்கள் வாழந்த பட்டி என்ற இடம் அதில் ஆடு ,மாடுகளை அடைத்து மேய்ச்சல் தொழிலை நடத்தி இருக்கிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க பகுதியாக இது உள்ளது.முதல் விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு இந்த மலைப்பகுதியில் நம் முன்னோர்கள் வாழந்த ,வசித்த பகுதியாக திகழுந்துள்ளது .எனக்கு வழிகாட்டிய புலவர் பழனிசாமி மாமா அவர்கள் 60 வயதுக்கு மேல் ஆகியும் சிறு குழந்தைபோல் ...இந்த சிறப்புமிக்க பகுதிகளை கண்டு நம் எதுலப்ப மன்னரின் வரலாற்று நூலை எழுதுவதற்கு அவருடைய இந்த அரும் பணி மதிப்புமிக்கது,,அங்கு வாழும் மலைமுதுவார்கள் சொல்லும் அவர்கள் முன்னோர்கள் சொல்லும் தகவல்கள் ஆச்சிரியமாக உள்ளது ...





மாக உள்ளது ...

வியாழன், 8 ஜூன், 2017

எங்க வடவள்ளி முருகன் மளிகை கடை அண்ணாச்சி ...உடுமலைப்பேட்டை ஜானிபேகம் காலனி முத்து அண்ணாச்சியம் வாழ்வில் மறக்கமுடியாது .....எங்க வடவள்ளி முருகன் மளிகை கடை அண்ணாச்சி ...உடுமலைப்பேட்டை ஜானிபேகம் காலனி முத்து அண்ணாச்சியம் வாழ்வில் மறக்கமுடியாது .....

வழக்கமா வாங்கறத விட இன்னைக்கு உறவினர்கள் வர்றதா சொன்னதால கூடுதலா பால் பாக்கெட் வாங்கனும்னு காலையில் எங்கள் பகுதியில் உள்ள அண்ணாச்சி கடைக்கு போயிருந்தேன். அப்போது அந்த கடையின் அண்ணாச்சி ஒரு பெண்ணிடம், என்னம்மா உங்க அக்காவுக்கு சுகப்பிரசவம் ஆயிடுச்சாமே, பொண்ணு பொறந்திருக்காமே, உங்கம்மா பிரசவத்துக்கு முன்னாடி ரொம்ப கவலைப்பட்டுகிட்டு இருந்தாங்க, பிரசவம் ஆனதும் ஃபோன் பண்ணிச் சொன்னாங்க, பரவாயில்லை ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார், அந்தப்பெண்ணும் வெண்டைக்காயை பொறுக்கி எடுத்துக்கொண்டே இவர் கேட்டதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். பின்னர் எடுத்த வெண்டைக்காயை அந்தப்பெண் எடை மெஷினில் வைக்க அது 270 கிராம் காட்டியது. கால்கிலோ விற்கான விலையை பெற்றுக்கொண்டு, கூடவே ஒரு கறிவேப்பிலை கொத்தையும் கொடுத்தவாறே, நீ எப்பம்மா கல்யாண சாப்பாடு போடப்போறே என்றார், அந்தப் பெண் சிரித்துக்கொண்டே மெளனமாக நகர்ந்தார்.
நான் அண்ணாச்சி ஒரு பால் பாக்கெட் என்றதும், என்ன சார் ஆச்சர்யமா இருக்கு நீங்க எல்லாம் எங்க கடை பக்கம் வரவே மாட்டீங்க என்றார். அப்படி எல்லாம் இல்லே. ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு வர்றப்போ ஏதாச்சும் தேவைன்னா மார்க்கெட்லயே வாங்கிடறேன். வரக்கூடாதுன்னெல்லாம் ஒண்ணும் இல்லே என்றேன். எங்க கடையிலும் வாங்கலாம்லே, நீங்க வரனும்கிற அவசியம் இல்லே, ஃபோன் பண்ணா நான் கொண்டு வந்து கொடுத்துடப்போறேன்னார். நீங்க எந்த பிளாட்ல இருக்கீங்கன்னு தெரியும். உங்க கார், டூவீலர் எல்லாம் என்ன கலர்ன்னும் தெரியும். நான் உங்க பிளாட்டுக்கு மளிகைப் பொருள் கொண்டுவர்றப்போ பாத்திருக்கேன் என்றார். சரி ஏதாச்சும் தேவைப்பட்டா சொல்றேன்னு சொல்லிட்டு பணத்தை கொடுத்துவிட்டு பாலை பெற்றுக்கொண்டு, ஃபோன் நெம்பரை வாங்கிக்கொண்டு புறப்பட்டபோது இன்னொரு வாடிக்கையாளர் வரவே, வாங்க சார், பையன் பிளஸ் டூலே நல்ல மார்க்காமே. அம்மா சொன்னாங்க, எந்த காலேஜ்ல சேக்கப்போறீங்க என்று பேசும் போதே நான் புறப்பட்டு விட்டேன்..
இப்படித்தான் தாங்கள் சார்ந்திருக்கும் பகுதியில் பெரும்பாலானவர்களை தெரிந்து வைத்திருப்பார்கள் இந்த சிறு காய்கறிகடைகள், மளிகைக்கடைகள் நடத்தும் அண்ணாச்சிகள். இவர்கள் அந்தப்பகுதியில் தங்களது வாடிக்கையாளர்களின் நல்லது கெட்டதுக்கு ஆஜராவதில் ஒருபோதும் தவறுவதில்லை. கடைக்கு பொருட்கள் வாங்க வந்தால் அக்கறையோடு பேசுவதிலும் தயங்கு வதில்லை. வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கிவிட்டு, மறந்துபோய் பர்சை வீட்ல வச்சுட்டு வந்துட்டேன் நான் போய் பணம் எடுத்துகிட்டு வந்து பொருட்களை வாங்கிக்கறேன்னு சொன்னாலும் இவர்கள், அதனால என்ன, நீங்க எடுத்துட்டுப் போங்க, மறுபடியும் எப்போ வர்றீங்களோ அப்போ கொடுத்தா போதும் என்பார்கள்.. இதெல்லாம் ஒரு வியாபார யுக்திதான் என்றாலும், அதனை தாண்டி வாடிக்கையாளர்களிடம் நட்புகளையும், உறவுகளையும் வளர்த்துக்கொள்வதில் இவர்கள் திறமைசாலிகள்.
இப்போ எங்கே பார்த்தாலும் மிகப்பெரிய அளவில் செயின்லிங்க் டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் வந்துவிட்டன. ரிலையன்ஸ், மோர், ப்ரஷ், ஹெரிடேஜ், நீல்கிரீஸ், ஸ்பென்சர்ஸ், ஃபுட்வோர்ல்டு, பிக்பஜார் இப்படி முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த டிபார்ட்மென்ட்டல் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அனைத்துமே கிடைக்கும். ஆஃபர் என்கின்ற பெயரில் சில சமயங்களில் ஓரிரு மாதங்களில் எக்ஸ்பையரி ஆக உள்ள பொருட்களை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர முயற்சிப்பார்கள். விற்பனை ஆகாத ஓல்டு ஸ்டாக்கினை பை ஒன் கெட் ஒன் என்று தள்ளிவிடுவார்கள். எல்லாமே பெரும்பாலும் எம்.ஆர்.பி ரேட்தான். பார்கோடு ஸ்கேனிங் சிஸ்டம்.
கிலோ வெண்டைக்காய் 40 ரூபாய் என்றால் நாம் 270 கிராம் எடுத்தால் அந்த 20 கிராமிற்கும் சேர்த்து பில் ஆகிவிடும். என்னதான் ரெகுலர் கஸ்டமர்களாக இருந்தாலும், கவுன்ட்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள் இயந்திரத்தனமாகவே இருப்பார்கள். அதுமட்டுமல்ல இந்த மாதம் ஒருவரை பில்லிங் செக்ஷனில பார்த்தால் அடுத்த மாதம் அவர் அங்கே பணியில் இருக்கமாட்டார். வாங்கும் பொருட்களுக்கு பணமாகவோ அல்லது டெபிட் கிரெடிட் கார்டுகள் மூலமாகவோ பணம் செலுத்தவேண்டும். கடன் கண்டிப்பாக கிடையாது. இந்த டிபார்ட்மென்டல் ஸ்டோர்களின் முதலாளிகள் எங்கோ இருப்பார்கள். எல்லாமே சிஸ்டம், பார்கோடு,ஸ்கேனிங் சாப்ட்வேர், வேலையாட்கள் என்றுதான் இங்கே இருக்கும். வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குகின்றனர், அவர்கள் பணம் பெறுகின்றார்கள் இவற்றை தவிர்த்து அங்கே எதையும் எதிர்பார்க்கமுடியாது. கருவேப்பிலை என்றாலும் பணம்தான்.
அண்ணாச்சிகள் என்று சொல்லக்கூடிய இவர்கள் எங்கோ ஒரு மாவட்டத்தில் பிறந்து பிழைப்பு தேடி வேறுமாவட்டத்தில் உள்ள சிற்றூர்களுக்கும், சென்னை போன்ற பெரு நகரங்களில் புதிதாக உருவாகும் குடியிருப்புகளுக்கும் இவர்கள் வந்து காய்கறி மளிகை கடை என்று ஆரம்பிக்கின்றார்கள். பலரது குடும்பங்கள் இந்த தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தினால் மூனு வேளை சாப்பாட்டையும், தங்கள் பிள்ளைகளையும் படிக்கவைக்க முடியுது.
ஆதித்யா பிர்லா, ரிலையன்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள்தான் தற்போது எங்கு பார்த்தாலும் சூப்பர்மார்க்கெட்டுகளை திறந்து ஏராளமான விளம்பரங்களை மீடியாக்களில் தந்து பொதுமக்களை தங்கள் பக்கம் இழுக்கப்பார்க்கின்றனர். அவர்கள் பலவேறு துறைகளில் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்றார்கள்.
ஆனால் இந்த தொழிலையே நம்பி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் பிழைப்பு நடத்தும் சிறு வியாபாரிகளுக்கு போட்டியாக நிற்கின்றார்கள். இவர்களை இவர்களது வாடிக்கையாளர்கள் யாரும் பார்த்தது கூட இல்லை. யாரென்றே தெரியாத, இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள இவர்களை தெரிந்தோ தெரியாமலோ மேலும் மேலும் வளர்த்துவிடுகின்றோம்.
பிரம்மாண்டமான கட்டிடங்களில் கண்ணாடிகள் பொருத்தி ஏசி வசதி செய்யப்பட்ட, நீட்டான முறையில் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள், கண்ணில் பார்க்கும் பொருட்களை தேர்வு செய்து வாங்கும் வசதி, டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் வசதி, இவற்றை பலர் விரும்புவதால் அண்ணாச்சிகளின் கடைகளில் வியாபாரம் கடந்த சில வருடங்களில் சற்று மந்தமாகித்தான் போனது. ஆனால் இதுபோன்ற சூப்பர்மார்க்கெட்டில் நூதனமான முறையில் தங்களுடைய பணம் பறிபோகின்றது என்பதைப்பார்த்து உஷாரான சிலர் தற்போது அவர்கள் பகுதிகளில் இருக்கும் அண்ணாச்சி கடைகளை நாட ஆரம்பித்துள்ளனர்.
சிலவளர்ந்த அண்ணாச்சிகளின் வியாபார மோசடிகளும், தில்லுமுல்லுகளும், பணமோசடிகளும், நில அபகரிப்புகளும் கணக்கில் அடங்காதவை, விற்கின்ற பொருட்களில் கலப்படங்கள் செய்தே வியாபாரம் செய்தவர்கள் இன்று கோடிகளில் புரள்கின்றார்கள் என்றாலும் கூட, அழுக்கேறிய சட்டையோடும், பணியனோடும், சுத்தமில்லாத கைகளோடும் பொருட்களை வாடிக்கை யாளர்களுக்கு கொடுத்தாலும் வாடிக்கையாளர்கள் மீதான அன்பும், அக்கறையும், உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதிலும் அண்ணாச்சிகளுக்கு நிகர் அண்ணாச்சிகளே.
இப்படி சிறிய முதலீட்டில் தொழில்கள் நடத்தி குடும்ப வாழ்க்கையை நகர்த்திக்கொண்டுவரும் அண்ணாச்சிகளுக்கு பொதுமக்களாகிய நாம் ஆதரவு அளிப்பதில் தவறில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது........👍💐💐💐💐
👉அன்பார்ந்த நமது  கம்பள  சொந்தங்களுக்கு. நாங்கள் இந்த குருப்ஸ் ஆரம்பித்ததின் நோக்கம் நமது சமூகத்தினர் என்னதான் விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் இன்னும் விழிப்புணர்வும்,வழிநடத்தட ஆள் இல்லாமலும்  ஒதுங்கியே உள்ளனர் அவர்களையும் அவர்களை சார்ந்த சொந்தங்களையும் நாம் ஒன்றிணைக்க முயற்சிகள் நடந்தது கொண்டு வருகிறது இதற்கு தாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகிறோம்🙏
❌❌அதற்கு உதவி செய்யாமல் நமது குருப்பிற்கு தேவையில்லாத நபர்களை சேர்த்துவிட்டும் அல்லது அவர்களாகவே குருப்பின் இணைப்பை கொண்டும் சேர்ந்து கொண்டு இது என்ன குருப்ஸ் என்னான்ணு தெரியாமலும் தவறான செய்திகளை அனுப்புகின்றனர்.
🤝யாராவது இக் குழுவில் இணையும் போது அவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு சேரவும் அப்படி செய்யாமல் இருந்தால் அட்மின் அவர்களை விசாரிக்கவும் உடனே குருப்பிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ விசாரிக்க வேண்டுகிறேன்
அப்பொழுதுதான் குருப்பும் நன்றாக இருக்கும் நாமும் நமது சொந்தங்களும் அன்போடு இருப்போம் 🙏🙏🙏

செவ்வாய், 6 ஜூன், 2017

பள்ளியின் முதல் நாள்...ஒரு தந்தையின் பரிதவிப்பு ...

ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.....
ஒவ்வொரு தகப்பனுக்கும் .. பள்ளியின் முதல் நாள் மறக்க முடியாது நாட்கள் ....எனக்கு என் ஷியாம் சுதிர்யை ... முதன் முறையாக பள்ளிக்கு(பாரதி வித்யா பவன் -வேடப்பட்டி -கோவை ) LKG வகுப்புக்கு அழைத்து செல்லும் போது நான்கு வருடம் என் கழுத்தை பிடித்து  கங்காரு மாதிரி ஒட்டிக்கொண்டு இருந்தவன்.....யானை சவாரி செய்ய நெனச்சா நாம யானையா மாறணும்!
குதிரை சவாரி செய்ய நினைச்சா நாம குதிரையா மாறணும்!
நாய் கதை சொன்னா நாய் மாதிரி நடிச்சி குறைக்கணும்!
கரடி கதை சொன்னா கரடியா மாறி கத்தணும்! இதையெல்லாம் மறந்து பள்ளிக்கு செல்லும் நாள் வரும்போது ..ஏதோ மனம் கனத்து விடுகிறது .

பள்ளியின் முதல் நாள்  4 மணி நேர பிரிவு ...எனக்குதான் தொண்டைக்குழயில் பேச்சே வரமுடியாமல் தவித்தது .(அழுகையை வெளிக்காட்ட முடியவில்லை ) ....அவன் சாகுவாசமாக சொல்லி சிரித்து கொண்டே சொன்ன வார்த்தைகள் இன்னும் பசுமையாக இருக்கிறது ...நீங்க பயப்படாம   ஆபீஸ் போங்க அப்பா.....போயுட்டு மதியம் சீக்கரம் வாங்க என்று சொல்லி வழிஅனுப்பிவைத்தவன் ..பள்ளியின் முதல் நாள் 4 மணிநேரம் என் அலுவலக வேலையே ஓடவில்லை மனதில் ஆயிரம் ஓட்டங்கள் .... மதியம் 12.30 மணி ...நான் 12.00 மணியளவிலேயே சென்று பள்ளியின் முன்புற கேட்டில் ..அவருடைய வகுப்பு வாயிற்கதவுகள் என் கண்ணிமை மூடாமல் விழிவைத்து காத்துக்கொண்டுருந்தேன் ...ஷியாம் முகம் தெரிந்தவுடன் ஏதோ சொல்லமுடியாத உணர்வுகள் ...அவன் சிரித்துக்கொண்டே ...எனக்கு நாலு ப்ரிண்ட்ஸ் பெயரையும் ...அவங்க கிளாஸ் மிஸ் பெயரையும் சொன்னவுடன்தான் என் மனதில் அப்படியொரு சந்தோசம் .... என்னிடம் பொறுமை ,சகிப்புதன்மையை,புது புது நுணுக்கங்களை   கற்று கொண்டவன் ...தைரியம் மட்டும் அவன் தன் அம்மாவிடம் கற்றுகொண்டவன் ...எனக்கு வாழ்க்கையை தினம் தினம் கற்று கொடுப்பவன் ...




திங்கள், 5 ஜூன், 2017

ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.....
ஒவ்வொரு தகப்பனுக்கும் .. பள்ளியின் முதல் நாள் மறக்க முடியாது நாட்கள் ....எனக்கு என் ஷியாம் சுதிர்யை ... முதன் முறையாக பள்ளிக்கு(பாரதி வித்யா பவன் -வேடப்பட்டி -கோவை ) LKG வகுப்புக்கு அழைத்து செல்லும் போது நான்கு வருடம் என் கழுத்தை பிடித்து  கங்காரு மாதிரி ஒட்டிக்கொண்டு இருந்தவன்.....பள்ளியின் முதல் நாள்  4 மணி நேர பிரிவு ...எனக்குதான் அழுகை அழுகையாக வந்தது(அழுகையை வெளிக்காட்ட முடியவில்லை ) ....அவன் சாகுவாசமாக சொல்லி சிரித்து கொண்டே சொன்ன வார்த்தைகள் இன்னும் பசுமையாக இருக்கிறது ...நீங்க அழுகாம  ஆபீஸ் போங்க அப்பா.....போயுட்டு மதியம் சீக்கரம் வாங்க என்று சொல்லி வழிஅனுப்பிவைத்தவன் ..பள்ளியின் முதல் நாள் 4 மணிநேரம் என் அலுவலக வேலையே ஓடவில்லை மனதில் ஆயிரம் ஓட்டங்கள் .... மதியம் 12.30 மணி ...நான் 12.00 மணியளவிலேயே சென்று பள்ளியின் முன்புற கேட்டில் ..அவருடைய வகுப்பு வாயிற்கதவுகள் என் கண்ணிமை மூடாமல் விழிவைத்து காத்துக்கொண்டுருந்தேன் ...ஷியாம் முகம் தெரிந்தவுடன் ஏதோ சொல்லமுடியாத உணர்வுகள் ...அவன் சிரித்துக்கொண்டே ...எனக்கு நாலு ப்ரிண்ட்ஸ் பெயரையும் ...அவங்க கிளாஸ் மிஸ் பெயரையும் சொன்னவுடன்தான் என் மனதில் அப்படியொரு சந்தோசம் .... என்னிடம் பொறுமை ,சகிப்புதன்மையை,புது புது நுணுக்கங்களை   கற்று கொண்டவன் ...தைரியம் மட்டும் அவள் அம்மாவிடம் கற்றுகொண்டவன் ...எனக்கு வாழ்க்கையை தினம் தினம் கற்று கொடுப்பவன் ...



ஞாயிறு, 4 ஜூன், 2017

தளிஞ்சி.......எதுலப்ப மன்னர் ..பாளையக்காரர் ...

தளிஞ்சி.......எதுலப்ப மன்னர் ..பாளையக்காரர் ...

இன்று காலை சென்று வந்த தளிஞ்சி ...முதல் இந்திய விடுதலைக்கு எதுலப்ப மன்னர்  ஆங்கிலேயரை எதிர்த்து தன் படைவீரர்களுடன் கோட்டை. கொத்தலங்களுடன்  போர் புரிந்ததற்காக ஆதாரங்கள் ,கோட்டை சிதிலங்கள்,தாங்கள் வணங்கிய தெய்வம் கொண்டம்மா கோவில்  ,நம் பாளையக்காரர்களின் வீரத்துடன் கம்பீரமா காட்சி அளித்து கொண்டிருக்கிறார் ...அதை பார்க்கும்போது நம் சொந்தங்கள் யாராவது வந்து பார்க்கமாட்டார்களா என்று நம் முன்னோர்களின் கற்சிலைகள் நம்மை கம்பீரத்தோடு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் ..  இன்னும் சில தினங்களில் பதிவிடுகிறேன் ...பயணத்தில் மலையில் செல்லும் வழிகள் (வலிகள் )கடுமையான  ஏற்ற இறக்கங்கள் ...வாழ்வில் வரும் பல இடர்பாடுகளை களைந்து வாழ்க்கையை அழகாக அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் ...நம் சொந்தங்களுக்காக செய்யும் இந்த அறப்பணி ,சமுதாய பணி என் ஆத்ம திருப்திக்காக....


திங்கள், 29 மே, 2017

வீட்டு கடனை திருப்பி செலுத்தும்போது இதையெல்லாம் செய்யக்கூடாது..!!

ஒரு வீட்டின் உரிமையாளராக இருப்பது எதனுடனும் ஒப்பிட முடியாத சந்தோஷம். அந்த அபரிமிதமான சந்தோஷத்தில் நம்மில் பெரும்பாலானோர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வீட்டு கடனை பெறுவதற்கான செயல்முறையை முடித்து வீடு கட்டி முடித்துவிட வேண்டும் என்கிற ஆர்வமிகுதியில் வீட்டுக்கடன் விண்ணப்பத்தில் நுண்ணிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ள பல்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பொறுமையாகப் படிக்காமலே கையெழுத்திட்டு விடுகிறோம்.

இருப்பினும் வீட்டின் உரிமையாளராகும் மகிழ்ச்சியுடன் ஒரு கடனாளியாக பொறுப்புகளையும் உடன் கொண்டு வருகிறது. ஒரு பொறுப்பான கடனாளியாக நீங்கள் உங்கள் வீட்டிற்கான கடனை செலுத்திக் கொண்டிருக்கும் செயல்முறையில் உள்ள காலம் வரை, நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

கடன் கட்டுவதிலிருந்து ஒருபோதும் தவறாதீர்கள்:

கடனைத் திருப்பி செலுத்துவதில் ஏதேனும் தவறுதல் நிகழ்ந்தால் நீங்கள் நீண்ட காலத்திற்கு சிக்கல்களில் மாட்டிக் கொள்வீர்கள். ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இஎம்ஐ யை (சமன்படுத்தப்பட்ட மாதாந்திர தவணை) கழித்துக் கொள்ள போதுமான தொகை உங்கள் வங்கிக் கணக்கில் இல்லாத ஒரு நிலைமை ஏற்பட்டால், பிறகு அபராதத்தை செலுத்துவதால் விஷயங்கள் சரியாகி விடாது. இது போல பலமுறை நிகழ்ந்தால் உங்கள் நற்மதிப்பு மதிப்பெண்கள் பாதிக்கப்படும்.

தேவைக்கு அதிகமாக கடன் வாங்காதீர்கள்:

ஒரு கடனாளியாக நீங்கள் பல்வேறு பயன்களை அடைவீர்கள். மாதாந்திர வாடகையைப் பற்றி கவலையில்லை; அத்துடன் வரித் தள்ளுபடியும் கிடைக்கும். உண்மையில், தேவைப்பட்டால் நீங்கள் மற்றொரு கடனைக் கூட பெற முடியும்; நீங்கள் அதற்கு தகுதியானவர். இருந்தாலும், பல்வேறு கடன்களை வாங்கி பொருளாதார ரீதியாக உங்கள் மீது சுமையேற்றிக் கொள்வது விவேகமான யோசனை அல்ல என்ற உண்மையை நீங்கள் கவனிக்கத் தவறக் கூடாது.

நீங்கள் ஒரு வீட்டுக் கடனைக் கட்டிக் கொண்டிருக்கும் போதே மற்றொரு கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம். உதாரணமாக சொல்லப் போனால், வீட்டுக்ககடன் நிலுவையில் இருக்கும் போதே ஆட்டோ மொபைல் கடன் போன்றவற்றை வாங்க வேண்டாம். நீங்கள் பல்வேறு ஆதாரங்களிலிருந்து கடன் வாங்குவீர்களானால், ஒருவேளை ஏதேனும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் ஏதேனும் நேர்ந்தால், நீங்கள் ஒன்றுக்கு இரண்டு கடன்களைக் கட்ட தவறியவராவீர்கள்.

மெத்தனமாக இருந்து விடாதீர்கள்.:

நீங்கள் உங்கள் வேலையில் முன்னேற்றம் அடையும் போது உங்கள் சம்பளம் அதிகரிக்கிறது. சில காலங்களுக்கு முன்பு மிகப் பெரிய சுமையாகத் தோன்றிய மாதாந்திர தவணைத் தொகை இனிமேல் ஆலுப்பூட்டுவதாக இருக்காது.

இதனாலேயே வீட்டுக்கடன் சுமை பற்றி நீங்கள் மிகவும் வசதியாக உணர்வீர்கள். ஆனால் உங்களுக்கு மாதாந்திர சம்பளம் உயர்ந்திருந்தால் நீங்கள் அதிகமாக சேமிக்கலாம் மற்றும் உங்கள் கடனை முன்கூட்டி செலுத்தி விட முடியும்.

உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்:

உலகம் முழுவதிலும் நடக்கும் நிகழ்வுகள் நம் அனைவரின் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதில் வீடு வாங்குபவர்களும் அடங்குவர். உதாரணமாக வங்கிகள் அவர்களின் வட்டி விகிதங்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றன.

நீங்கள் உங்கள் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ளது என்பதற்காக அந்த மற்றொரு வங்கிக்கு மாற்றினால், அது உங்கள் மாதாந்திர தவணைத் தொகையை கணிசமாகக் குறைக்கலாம்.

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs)
Sundaram Finance Ltd.,
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
மறைக்கப்பட்ட வீரம் மண்ணில் தெரிகிறது .....

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு உடுமலை (தளி )மண்ணில் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட எதுலப்ப மன்னரின் வீரம் திருமூர்த்தி அணையில் புதைந்து கிடப்பதும் அதை வெளிக்கொணர வேண்டும் என்பது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் நீண்ட நாள் கோரிக்கை .

அதன்படி திருமூர்த்தி நகர் சுற்றுலா மாளிகை முன்பு பாதுகாக்கப்பட்ட பாளையக்காரரின் சிலைகள் போல் திருமூர்த்தி அணையில் இருப்பது உறுதியாகி தற்போது அது வெளியில் தெரிய வந்துள்ளது .தற்போது அணை தூர்வாரும் நிலையில் வெளியில் தெரிய வரும் அனைத்து கற்சிலைகளையும் உடுமலை கோட்டாட்சியரும்,பொதுப்பணித்துறையினரும் இதை சுற்றுலா மாளிகைக்கு அருகே உள்ள அனைத்து சிலைகளுடனும் இதையும் சேர்க்க உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் கோரிக்கை வைக்கிறது .




ஞாயிறு, 28 மே, 2017

மகிழ்ச்சி .....
இன்று நடைபெற்ற சதீஸ்குமார் -பிரியா  திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெதப்பம்பட்டி G K மகாலில் ...கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக நம் உறுப்பினர்களுடன் மற்றும் நம் சொந்தங்களுடன் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தோம்

சனி, 27 மே, 2017

DS Selvadhanam Rider King 👍👍👍👍👍👍💐💐💐
**கம்பளத்தார் திருமணம்**
மனிதன் தன் இனத்தை அடையாளப்படுத்த சடங்குகள் சாஸ்திரங்கள் சம்பிர்தாயங்கள்
போன்றவைகளை படைத்தான்,,
இவ்வாறு அதிக சம்பிர்தாயங்களைக்கொண்ட கம்பளத்தார் இன திருமணத்தைப்பபற்றி சிலவற்றை காண்போம்
பொதுவாக கம்பளத்தார்கள் எவ்வகை நிகழ்ச்சிகளை நடத்த
தனிப்பட்ட முறையில் செய்யமாட்டார்கள் ஊர் பெரியதனத்துக்காரர்களை கொண்டு முடிவு செய்வார்கள்
அவ்வகையில் இவர்களது திருமணத்தை நிகழ்த்த ஊர் முக்கியஸ்தார்களிடம் ஏழு நாளோ
இல்லை மூன்று நாளோ கெடு வைப்பார்கள்,
பின்னரோ கெடு வைக்க முன்னரோ நிச்சயதார்த்தம் வைப்பார்கள்,, பிறகு பெண் அழைப்பு நடைபெற்று திருமணம்
நடைபெறும் அதில் மாப்பிளை மேல் சட்டை அணியமாட்டர் பதிலாக மஞ்சள் நிறத்தில் ஆனா
உடை அணிவார், மாப்பிளை தோழர் சட்டை அணிய மாட்டர்
மாற்று இனத்தவர்கள் கோவில் திருமண மண்டபங்களில் நடத்துவார்கள் கம்பளத்தார்கள் வசதி இருந்தாலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மந்தைகளில் தான் திருமணத்தை நடத்துவார்கள்
இதில் பெண் வீட்டாரிடம் வரதட்சணைகள் எதிர்பார்க்கமாட்டர்கள்
பொதுவாக திருமணம் செலவை
மாப்பிள்ளை வீட்டர்களே ஏற்ப்பார்கள் முந்தய நாள் இரவு மந்தைக்கு வந்தால் அடுத்த நாள் இரவு தான் வீடு திரும்புவார் மாப்பிள்ளை (பெண்ணுக்கு விதி விலக்கு இல்லை) இரவு முதல் தாலிகட்டிய நாள் இரவு வரை
சாஸ்திரங்கள் ஊர் பெரியவர்களால் அரகேறிக்கொண்டுதான் இருக்கும்
இடையில் தேவராட்டம் வேட்டை செல்லுதல் அத்தை ஆட்டம் (அத்தகோரு ஆட்லு) போன்றவை நடைபெறும் திருமணத்தில் மூன்று விருந்துகள் நடைபெறும் இதில்
அன்று இரவு பாஜ்ஜம் (நெற்றிப்பட்டம்) கட்டுதல் முக்கிய நிகழ்வாக அமையும்...💐💐💐💐👍👍👍👍

வியாழன், 25 மே, 2017

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்

Madurai.......21-05-2017.....மாநில செயல்குழு கூட்டத்தின் நிகழ்வுகள் ....

1. திருச்சி வடக்கு ,தெற்கு மாவட்டங்களின் பிரதிநிதிகள் நிர்வாகிகளை சந்தித்து தங்களையும் பண்பாட்டு கழகத்தில் இணைத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தனர் .

2. நமது "வீரபாண்டிய கட்டபொம்மன்"மாத இதழுக்கு புரவலர்களை தேர்வு செய்வது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது .இதில் 10  புரவலர்களுக்கு குறையாமல் தேர்வு செய்து நிரந்தரமாக இதழின் முதல் பக்கத்தில் வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது .புரவலர்களை தேர்வு செயவது அவர்கள் அளிக்கும் தொகையை பொறுத்து தேர்வு செய்வது எனவும் அதற்கான தொகை எதுவும் நிர்ணியக்கப்படவில்லை .

3. இது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் கருத்து கேட்டகப்பட்டது .அனைவரும் ஒருமுகமாக இந்த கருத்துரு ஏற்றுக்கொண்டு தங்கள் மாவட்டத்தின் விருப்பத்தினை தெரிவித்தனர் .

 4, காலவாதியாகிவிட்ட சந்தா தொகைகளை ,அது 100 அல்லது 250 ஆக இருந்தாலும் அதை காலாவதியாகிவிட்டதாக கருதி,புதிதாக ரூபாய் 500 வசூலக்க முடிவு செய்யப்பட்டது .

5.மாநில ,மாவட்ட நிர்வாகிகளை அவர்களுக்குரிய பணிகளை வரன்முறை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது .

6.விருதுநகர் தொட்டியபட்டி பிரச்னையில் சங்கம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு வழக்கில் உட்படுத்தப்பட்டவர்களை பிணையில் எடுத்து ,தொட்டியபட்டி க்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர் .இது குறித்து மேல் நடவடிக்கை எவ்வாறு எடுப்பது என்பதை விவாதத்தின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது .
இது குறித்து நம் சமுதாயத்துக்கு நிரந்தரமாக சாதி இன மோதல்களை ஒரு தீர்க்கமான தீர்வுகாணவேண்டும் என்பதை வலியுறுத்தி அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் .கூட்டத்திற்கு வந்திருந்த தொட்டியபட்டி மக்களுடன் ஒரு விரிவாக பேசி எதிர்காலத்தில் அவர்கள் அனைவரும் பண்பாட்டு கழகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டது .

7.நமது பண்பாட்டு கழக இதழுக்கு அதிகப்படியான சந்தாக்களை தானாக முன்வந்து செலுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்துகொண்டனர்

8.நமது பண்பாட்டு கழக கூட்டத்துக்கு வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவது வருகை பதிவேட்டிலிருந்து தெரிந்துகொள்ளமுடிந்தது ..

V.K .சிவக்குமார்
டிஜிட்டல் ராஜேந்திரன்
மாநில செய்தி தொடர்பாளர்கள்
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்
உடுமலைப்பேட்டை..

சனி, 20 மே, 2017

திரு .கே.முருகவேல்
தலைவர்
கோவை,திருப்பூர் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கம்
தொலைபேசி :9751617920...

1971 -ம் ஆண்டு செப்டம்பர் 2 ம் தேதி 1979 முதல் ..53,தளி ரோடு ,உடுமலைப்பேட்டை என்ற விலாசத்தில் குமரன் டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட் தொடங்கப்பட்டது .

1980 முதல் 1,. வக்கீல் நாகராஜன் வீதி ,உடுமலைப்பேட்டை  என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று  வரை தொடர்ந்து தட்டச்சு பயிலகம் இயங்கி கொண்டுஇருக்கிறது .1990 ல் பொள்ளாச்சி கல்வி மாவட்ட வணிகவியல்  பள்ளிகளின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 27 ஆண்டு கோவை மாவட்ட வணிகவியல் பள்ளிகளின் துணை தலைவராக இன்று வரை பதிவு வகித்துவருகிறார் .தற்போது 14.05.2017 முதல் கோவை -திருப்பூர் மாவட்ட வணிகவியல் பள்ளிகளின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்க பட்டு இயங்கி வருகிறார் . 

புதிதாக பொறுப்பு வகிக்கும் தலைவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ....

குறிப்பு : நமது தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில செயல் தலைவராகவும் ,பண்பாட்டு கழக இதழ் இணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் ..கோவை -திருப்பூர் மாவட்டத்தில் அதிக இளைஞர்களை பதவியில் அமர்த்தி வழிநடத்தி கழகத்திற்கு வழிகாட்டியாக செயல்பட்டுகொண்டுஇருக்கிறார் ..