எங்க வடவள்ளி முருகன் மளிகை கடை அண்ணாச்சி ...உடுமலைப்பேட்டை ஜானிபேகம் காலனி முத்து அண்ணாச்சியம் வாழ்வில் மறக்கமுடியாது .....எங்க வடவள்ளி முருகன் மளிகை கடை அண்ணாச்சி ...உடுமலைப்பேட்டை ஜானிபேகம் காலனி முத்து அண்ணாச்சியம் வாழ்வில் மறக்கமுடியாது .....
வழக்கமா வாங்கறத விட இன்னைக்கு உறவினர்கள் வர்றதா சொன்னதால கூடுதலா பால் பாக்கெட் வாங்கனும்னு காலையில் எங்கள் பகுதியில் உள்ள அண்ணாச்சி கடைக்கு போயிருந்தேன். அப்போது அந்த கடையின் அண்ணாச்சி ஒரு பெண்ணிடம், என்னம்மா உங்க அக்காவுக்கு சுகப்பிரசவம் ஆயிடுச்சாமே, பொண்ணு பொறந்திருக்காமே, உங்கம்மா பிரசவத்துக்கு முன்னாடி ரொம்ப கவலைப்பட்டுகிட்டு இருந்தாங்க, பிரசவம் ஆனதும் ஃபோன் பண்ணிச் சொன்னாங்க, பரவாயில்லை ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார், அந்தப்பெண்ணும் வெண்டைக்காயை பொறுக்கி எடுத்துக்கொண்டே இவர் கேட்டதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். பின்னர் எடுத்த வெண்டைக்காயை அந்தப்பெண் எடை மெஷினில் வைக்க அது 270 கிராம் காட்டியது. கால்கிலோ விற்கான விலையை பெற்றுக்கொண்டு, கூடவே ஒரு கறிவேப்பிலை கொத்தையும் கொடுத்தவாறே, நீ எப்பம்மா கல்யாண சாப்பாடு போடப்போறே என்றார், அந்தப் பெண் சிரித்துக்கொண்டே மெளனமாக நகர்ந்தார்.
நான் அண்ணாச்சி ஒரு பால் பாக்கெட் என்றதும், என்ன சார் ஆச்சர்யமா இருக்கு நீங்க எல்லாம் எங்க கடை பக்கம் வரவே மாட்டீங்க என்றார். அப்படி எல்லாம் இல்லே. ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு வர்றப்போ ஏதாச்சும் தேவைன்னா மார்க்கெட்லயே வாங்கிடறேன். வரக்கூடாதுன்னெல்லாம் ஒண்ணும் இல்லே என்றேன். எங்க கடையிலும் வாங்கலாம்லே, நீங்க வரனும்கிற அவசியம் இல்லே, ஃபோன் பண்ணா நான் கொண்டு வந்து கொடுத்துடப்போறேன்னார். நீங்க எந்த பிளாட்ல இருக்கீங்கன்னு தெரியும். உங்க கார், டூவீலர் எல்லாம் என்ன கலர்ன்னும் தெரியும். நான் உங்க பிளாட்டுக்கு மளிகைப் பொருள் கொண்டுவர்றப்போ பாத்திருக்கேன் என்றார். சரி ஏதாச்சும் தேவைப்பட்டா சொல்றேன்னு சொல்லிட்டு பணத்தை கொடுத்துவிட்டு பாலை பெற்றுக்கொண்டு, ஃபோன் நெம்பரை வாங்கிக்கொண்டு புறப்பட்டபோது இன்னொரு வாடிக்கையாளர் வரவே, வாங்க சார், பையன் பிளஸ் டூலே நல்ல மார்க்காமே. அம்மா சொன்னாங்க, எந்த காலேஜ்ல சேக்கப்போறீங்க என்று பேசும் போதே நான் புறப்பட்டு விட்டேன்..
இப்படித்தான் தாங்கள் சார்ந்திருக்கும் பகுதியில் பெரும்பாலானவர்களை தெரிந்து வைத்திருப்பார்கள் இந்த சிறு காய்கறிகடைகள், மளிகைக்கடைகள் நடத்தும் அண்ணாச்சிகள். இவர்கள் அந்தப்பகுதியில் தங்களது வாடிக்கையாளர்களின் நல்லது கெட்டதுக்கு ஆஜராவதில் ஒருபோதும் தவறுவதில்லை. கடைக்கு பொருட்கள் வாங்க வந்தால் அக்கறையோடு பேசுவதிலும் தயங்கு வதில்லை. வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கிவிட்டு, மறந்துபோய் பர்சை வீட்ல வச்சுட்டு வந்துட்டேன் நான் போய் பணம் எடுத்துகிட்டு வந்து பொருட்களை வாங்கிக்கறேன்னு சொன்னாலும் இவர்கள், அதனால என்ன, நீங்க எடுத்துட்டுப் போங்க, மறுபடியும் எப்போ வர்றீங்களோ அப்போ கொடுத்தா போதும் என்பார்கள்.. இதெல்லாம் ஒரு வியாபார யுக்திதான் என்றாலும், அதனை தாண்டி வாடிக்கையாளர்களிடம் நட்புகளையும், உறவுகளையும் வளர்த்துக்கொள்வதில் இவர்கள் திறமைசாலிகள்.
இப்போ எங்கே பார்த்தாலும் மிகப்பெரிய அளவில் செயின்லிங்க் டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் வந்துவிட்டன. ரிலையன்ஸ், மோர், ப்ரஷ், ஹெரிடேஜ், நீல்கிரீஸ், ஸ்பென்சர்ஸ், ஃபுட்வோர்ல்டு, பிக்பஜார் இப்படி முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த டிபார்ட்மென்ட்டல் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அனைத்துமே கிடைக்கும். ஆஃபர் என்கின்ற பெயரில் சில சமயங்களில் ஓரிரு மாதங்களில் எக்ஸ்பையரி ஆக உள்ள பொருட்களை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர முயற்சிப்பார்கள். விற்பனை ஆகாத ஓல்டு ஸ்டாக்கினை பை ஒன் கெட் ஒன் என்று தள்ளிவிடுவார்கள். எல்லாமே பெரும்பாலும் எம்.ஆர்.பி ரேட்தான். பார்கோடு ஸ்கேனிங் சிஸ்டம்.
கிலோ வெண்டைக்காய் 40 ரூபாய் என்றால் நாம் 270 கிராம் எடுத்தால் அந்த 20 கிராமிற்கும் சேர்த்து பில் ஆகிவிடும். என்னதான் ரெகுலர் கஸ்டமர்களாக இருந்தாலும், கவுன்ட்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள் இயந்திரத்தனமாகவே இருப்பார்கள். அதுமட்டுமல்ல இந்த மாதம் ஒருவரை பில்லிங் செக்ஷனில பார்த்தால் அடுத்த மாதம் அவர் அங்கே பணியில் இருக்கமாட்டார். வாங்கும் பொருட்களுக்கு பணமாகவோ அல்லது டெபிட் கிரெடிட் கார்டுகள் மூலமாகவோ பணம் செலுத்தவேண்டும். கடன் கண்டிப்பாக கிடையாது. இந்த டிபார்ட்மென்டல் ஸ்டோர்களின் முதலாளிகள் எங்கோ இருப்பார்கள். எல்லாமே சிஸ்டம், பார்கோடு,ஸ்கேனிங் சாப்ட்வேர், வேலையாட்கள் என்றுதான் இங்கே இருக்கும். வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குகின்றனர், அவர்கள் பணம் பெறுகின்றார்கள் இவற்றை தவிர்த்து அங்கே எதையும் எதிர்பார்க்கமுடியாது. கருவேப்பிலை என்றாலும் பணம்தான்.
அண்ணாச்சிகள் என்று சொல்லக்கூடிய இவர்கள் எங்கோ ஒரு மாவட்டத்தில் பிறந்து பிழைப்பு தேடி வேறுமாவட்டத்தில் உள்ள சிற்றூர்களுக்கும், சென்னை போன்ற பெரு நகரங்களில் புதிதாக உருவாகும் குடியிருப்புகளுக்கும் இவர்கள் வந்து காய்கறி மளிகை கடை என்று ஆரம்பிக்கின்றார்கள். பலரது குடும்பங்கள் இந்த தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தினால் மூனு வேளை சாப்பாட்டையும், தங்கள் பிள்ளைகளையும் படிக்கவைக்க முடியுது.
ஆதித்யா பிர்லா, ரிலையன்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள்தான் தற்போது எங்கு பார்த்தாலும் சூப்பர்மார்க்கெட்டுகளை திறந்து ஏராளமான விளம்பரங்களை மீடியாக்களில் தந்து பொதுமக்களை தங்கள் பக்கம் இழுக்கப்பார்க்கின்றனர். அவர்கள் பலவேறு துறைகளில் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்றார்கள்.
ஆனால் இந்த தொழிலையே நம்பி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் பிழைப்பு நடத்தும் சிறு வியாபாரிகளுக்கு போட்டியாக நிற்கின்றார்கள். இவர்களை இவர்களது வாடிக்கையாளர்கள் யாரும் பார்த்தது கூட இல்லை. யாரென்றே தெரியாத, இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள இவர்களை தெரிந்தோ தெரியாமலோ மேலும் மேலும் வளர்த்துவிடுகின்றோம்.
பிரம்மாண்டமான கட்டிடங்களில் கண்ணாடிகள் பொருத்தி ஏசி வசதி செய்யப்பட்ட, நீட்டான முறையில் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள், கண்ணில் பார்க்கும் பொருட்களை தேர்வு செய்து வாங்கும் வசதி, டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் வசதி, இவற்றை பலர் விரும்புவதால் அண்ணாச்சிகளின் கடைகளில் வியாபாரம் கடந்த சில வருடங்களில் சற்று மந்தமாகித்தான் போனது. ஆனால் இதுபோன்ற சூப்பர்மார்க்கெட்டில் நூதனமான முறையில் தங்களுடைய பணம் பறிபோகின்றது என்பதைப்பார்த்து உஷாரான சிலர் தற்போது அவர்கள் பகுதிகளில் இருக்கும் அண்ணாச்சி கடைகளை நாட ஆரம்பித்துள்ளனர்.
சிலவளர்ந்த அண்ணாச்சிகளின் வியாபார மோசடிகளும், தில்லுமுல்லுகளும், பணமோசடிகளும், நில அபகரிப்புகளும் கணக்கில் அடங்காதவை, விற்கின்ற பொருட்களில் கலப்படங்கள் செய்தே வியாபாரம் செய்தவர்கள் இன்று கோடிகளில் புரள்கின்றார்கள் என்றாலும் கூட, அழுக்கேறிய சட்டையோடும், பணியனோடும், சுத்தமில்லாத கைகளோடும் பொருட்களை வாடிக்கை யாளர்களுக்கு கொடுத்தாலும் வாடிக்கையாளர்கள் மீதான அன்பும், அக்கறையும், உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதிலும் அண்ணாச்சிகளுக்கு நிகர் அண்ணாச்சிகளே.
இப்படி சிறிய முதலீட்டில் தொழில்கள் நடத்தி குடும்ப வாழ்க்கையை நகர்த்திக்கொண்டுவரும் அண்ணாச்சிகளுக்கு பொதுமக்களாகிய நாம் ஆதரவு அளிப்பதில் தவறில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது........👍💐💐💐💐

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக