வெள்ளி, 17 மார்ச், 2017

கோவை ,திருப்பூர் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ...

தமிழ்நாட்டில் ஏன் சிறந்த மாவட்டமாக விளங்க காரணம்...
மாநில செயல்தலைவர் திரு .முருகவேல் ,
மாநில கௌரவ ஆலோசாகர் திரு .ராமகிருஷ்ணன்
கழக தலைவர்கள் எல்லாரும் இளைஞர்களை நியமித்ததுதான் நன்றாக செயல்பட காரணம்...

திரு .ராமு
திரு .சந்திரசேகர்
திரு .கோபாலசாமி
திரு .கருணாநிதி
திரு .டிஜிட்டல் ராஜேந்திரன்
திரு .ஜெகதீஷ்
திரு.தீபம் தண்டபாணி
திரு .மாசிதுரை
திரு .முருகராஜ்
திரு .ஜெய்கணேஷ்
திரு .முத்துசாமி
திரு .முத்துராஜ்
திரு  .செல்வம்


விரைவான செயல்பாட்டுக்கு முன்னோடியாக திகழ்கிறார்கள்

எனக்கு தெரிந்து 55 கிளை கழகங்கள் கொண்ட மாவட்டமாக திகழ காரணம்
கழகத்தில் இருக்கும் ஒற்றுமை ,குழுவாக செயல்பட காரணமாகும் .

இனி வரும் காலங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு ,வியாபார வளர்ச்சி சம்மந்தமாக கலந்துரையாடி வழிவகை செய்யப்படும் .
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்

 உடுமலைப்பேட்டை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்  மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் எதிர்வரும் ஞாயிறு (19-03-2017)மாலை 4.00 மணி அளவில் மாவட்ட சங்க கட்டிடமான குமரன் டைப் ஆபீஸ் வளாகத்தில் கலந்துஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது .அது சமயம் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை வழங்கிட வேண்டுகிறோம்

 மாநில செயல் தலைவர் திரு .முருகவேல்-தொடர்பு எண் - 9751617920
 மாநில செய்தி தொடர்பாளர் : சிவக்குமார் -9944066681

வியாழன், 16 மார்ச், 2017

இன்று மூன்று  வருடங்களுக்கு பிறகு கோவையில் என் மூத்த வழக்கறிஞர் நண்பர்களை என் வியபார சம்பந்தமாக சந்திக்க சென்றிருந்தேன்

திரு .சுந்தரவடிவேல் (சிபிஐ மூத்த வழக்கறிஞர் )பந்தையசாலை
திருமதி .ஷர்மிளா -கோபாலபுரம்
திரு .ஸ்ரீனிவாசன் -கோபாலபுரம்
திரு .குருசாமி -ஜவான்ஸ் building
திரு .நவீன்குமார் -வடவள்ளி
திரு .சரவணன் -கணபதி
திரு .சிவகுமார் -RSPURAM
திரு .தொல்காப்பியன் -கோபாலபுரம்
திரு .ராமகிருஷ்ணன் -AIRINDIA
இன்னும் என் வழக்கறிஞர் நண்பர்களை சந்திக்கும் பொழுது விரிவாக எழுதுகிறேன் ..

இதில் மதிய நேர உணவை கோர்ட் வளாகத்தில் உள்ள விலை குறைந்த ருசிமிக்க உணவை ஸ்ரீனிவாசன் நண்பருடன் பகிர்ந்துண்டது மகிழ்ச்சியே .
வடவள்ளி செல்லும்பொழுது மட்டும் மனதை கல்லாக்கி கொண்டு தான் சென்றேன் .. என் ஷ்யாமுடன் விளையாடிய ,பள்ளி சென்ற  நினைவுகளால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.வியாபார விஷயமாக செல்லும்பொழுது எந்த ஒரு மன நிலைக்கும் ஆட்படக்கூடாது கூடாது என்று மனதை கல்லாகி கொண்டேன் .

இன்று விலைமதிப்பு மிக்க நேரம் சென்றதே தெரியவில்லை ..கோபாலபுரம் பகுதி முதலில் எல்லாம் சினிமா விநியோகஸ்தர்கள் அதிகம் உள்ளபகுதியாக இருந்தது .இப்போது சுற்றியும் வழக்கறிஞர் அலுவலகமாக காட்சி அளிக்கிறது .கோர்ட் வளாகத்திற்கு எதிர்புறம் உள்ள அன்னபூர்ணாவில் சுவைமிக்க காபி சுவைத்துவிட்டு விலைபட்டியலை பார்க்கும்போது கொஞ்சம் ஜெர்க்குதான் ..




புதன், 15 மார்ச், 2017

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்

உடுமலைப்பேட்டை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்  மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் எதிர்வரும் ஞாயிறு (19-03-2017)மாலை 4.00 மணி அளவில் மாவட்ட சங்க கட்டிடமான குமரன் டைப் ஆபீஸ் வளாகத்தில் கலந்துஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது .அது சமயம் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை வழங்கிட வேண்டுகிறோம்

மாநில செயல் தலைவர் திரு .முருகவேல்-தொடர்பு எண் - 9751617920
மாநில செய்தி தொடர்பாளர் : சிவக்குமார் -9944066681

ஞாயிறு, 5 மார்ச், 2017


Sivakumar Kumar added 9 new photos — feeling happy with Afzal Noor in Udumalaippettai.
Just now ·

என் கல்லூரி நாட்கள்..Vidyasagar College of Arts and Science-Udumalpet
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு-05-03-2017
கல்லூரியின் முதல்நாள் - கடந்து வந்த நம் அனைவராலும் மறக்க முடியாத ஒன்று. அந்த நாள் கல்லூரியே கலர்புல்லாக இருந்தது. வகுப்பறையில் அருகிலிருந்த முகவரி தெரியாத நண்பனிடம் முதலில் சொன்ன 'ஹாய்'. அதுவே நாளடைவில் மாமா, மச்சி என்று வளர்ந்தது. பலருடன் பழகியிருந்தாலும் கடைசியில் பத்து பேரின் நினைவே நெஞ்சில் நிற்கின்றது.
அடுத்து கல்லூரி வாழ்வின் முக்கியப் பகுதி ‍ராகிங். கல்லூரி தொடங்கிய முதல் வாரத்திலேயே ரப்பர் செருப்பு அணிந்து சென்றது நினைவிவுள்ளது. இது செருப்போடு மட்டும் நிற்காமல் உடை, மீசை என்ற அனைத்திலும் சென்றது. தொடக்கதில் துன்பமாகத் தோன்றினாலும், நாளடைவில் அதுவே சீனியர்களின் நட்புக்குப் பாலமாக அமைந்தது.கேண்டீனின் மசாலா தோசையில் மசாலாவை தேடியதும், தேவையற்ற நேரங்களில் தேனீரருந்தியதும் நினைவிலிருப்பவையே. கேண்டீனின் திட்டு - சந்தோஷமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் மற்ற‌ வகுப்புத்தோழர்களை பார்த்துப் பழகி மனவிட்டு பேசுமிடம் அதுவே. கேண்டீனின் பத்து ரூபாய் மேட்டரை இன்று நினைத்தாலும் இனிப்பாகவே உள்ளது.
கல்லூரியின் முதல் வகுப்பு ...பேராசிரியர் .பங்கஜம் அவர்களின் மேலாண்மை வகுப்பு ..முதல் நாள் வகுப்பு முடிந்தவுடன் ..ஏதோ ஒரு கம்பனிக்கு நிர்வாகி ஆனதுபோல் போன்ற உணர்வு.. வணிகவியலக்கு பேராசிரியர் சுடலைமுத்து ,மரகதம்,நாராயணன் அவர்கள் ,கணக்கு பாடப்பிரிவுக்கு பேராசிரியர் சத்தியநாதன் ,தனுசு கோடி அவர்களிடம் கற்றகல்வி ,இன்று உயர்வான தொழில்முனைவோர்களையும்,தொழில் அதிபர்களையும்,அறிஞர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதற்கு நம் கல்லூரியில் படித்த கல்வியறிவு என் வாழ்க்கையும் உயர்த்திருக்கிறது ..
தமிழுக்கு அமுது என்று பெயர் போல் ..பேராசிரியர் இந்திரஜித் அய்யா அவர்களின் தமிழ் வகுப்பு ..அனைத்து தகவலையும் உள்ளடக்கிய வகுப்பாக அமைந்தது வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வுகள் ..
இன்று கல்லூரியில் படித்த நண்பர்களை கண்ணன் ,ஸ்ரீனிவாசன் ,செல்வராஜ் ,பாலகுமார் ,சுதாகர் ,விஜயசேகர் ,பாலகிருஷ்ணன், 20 வருடங்கள் கழித்து பார்க்கும்போது கல்லூரியின் மலரும் நினைவுகள்.வாழ்வின் பொன்நாள்.
நமது நண்பர் வெளிநாட்டில் வசிக்கும் அப்சல் நூரின் கவிதையை வசித்து முடித்தவுடன் மாணவர்களின் கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆனது .வாழ்த்துக்கள்.
எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கிக் கொண்டிருந்த நாவலாசிரியனும், எழுத்தாளனும் உருப்பெருவார்கள் நம்பிக்கை உள்ளது
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வுக்கு அழைப்பு விடுத்த நமது கல்லூரியின் தாளாளர் .திரு .சத்தியநாதன் ,மற்றும் கல்லூரியின் தலைவர் .சு .சுப்பிரமணியன் ,மற்றும் கல்லூரியின் முதல்வர் .மருதுபாண்டியன் அவர்களுக்கும் .என் மனமார்ந்த நன்றிகள் .,...









புதன், 1 மார்ச், 2017

இன்று செந்தில்குமார் -கௌசல்யா -கொடிங்கியம் ஆவல்பட்டி அரண்மனையாரின் திருமணவரவேற்பு நிகழ்வு நம் இளையசமுதாயம் சிரிப்பு சத்தம் ..கலாய்ப்பு களும்  இப்போது இருக்கிற இறுக்கமான சூழ்நிலையை மனதை வெகுஇலகுவாக்கிறது ..பில்லா நாய்க்கன் சாலையூர் சமையல் கலைஞரின் கைவண்ணத்தில் மல்லிகை சாதம் ,இயற்கை கம்மங்கூழ்  திருமணவரவேற்பு சாப்பாடு அருமை ..

வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில செயல்தலைவர் .முருகவேல் ,சாமிகுணம் ,செந்தில் ராம் ,திருப்பூர் கார்த்தி மற்றும் நம் சொந்தங்களுடன் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி புன்னைகையுடன் விடைபெற்றோம்.... 



செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

‘ட்ரஸ்ட் எப்படி ஆரம்பிப்பது?   எப்படி பணம் கிடைக்கிறது?

இப்பொழுதெல்லாம் அடிக்கடி ஒரு கேள்வியை எதிர்கொள்ள நேரிடுகிறது. ‘ட்ரஸ்ட் எப்படி ஆரம்பிப்பது?’ என்னை ஆல் இன் ஆல் அழகுராஜாவாக உணரச் செய்யும் கேள்வி இது. பந்தாவாக பேச ஆரம்பித்துவிடுவேன். மாதம் ஒருவராவது இது குறித்து விசாரிக்கிறார்கள்.

‘ஆடிட்டரை பாருங்க..அவர்கிட்ட அறக்கட்டளையின் நோக்கங்களைக் கொடுத்துடுங்க..ஆவணம் தயாரானவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தால் போதும்’ என்கிற ரீதியில் ஆரம்பித்து PAN எண்ணை வாங்குதல் வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கான முஸ்தீபுகள் பற்றியெல்லாம் அளந்துவிடுவது வாடிக்கை. இதென்ன பெரிய வானியல் ரகசியமா? யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்கு. அறக்கட்டளையின் பதிவு ஆவணம் உட்பட அத்தனையும் என் சீனியர் நண்பர்களையும் ,நிதி மேலாண்மை படித்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுகிறேன். .

கடந்த சில மாதங்களாகவே மதுரைலிருந்து  ஒரு அமைப்பினர் அழைத்துக் கொண்டேயிருந்தார்கள். ‘ஃபோனிலேயே கேளுங்க...சொல்லிவிடுகிறேன்’ என்று சொன்னால் கேட்பதேயில்லை. நேரில் வர வேண்டும் என்றார்கள். உடுமலை ,கோவை,என்றாலும் பரவாயில்லை என்றார்கள். ஒரு மணி நேரம் என்றாலும் ஃபோனிலேயே பேசுவதற்குத் தயாராக இருந்தாலும் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று சொன்னால் உறுத்தத்தானே செய்யும்? சென்னை வரும் போது அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதுவும் அறக்கட்டளையின் தலைவர் பேச மாட்டார். அவருக்கு ஒரு பி.ஏ. அவர்தான் அழைப்பார்.

‘உங்களை சார் பார்க்கணும்ன்னு சொல்லுறாரு’ என்பார். பி.ஏ வைத்துக் கொண்டு பேசுகிற ஆட்களைப் பார்த்தாலே அலர்ஜியாக இருக்கும். தேவையென்றால் நேரடியாகப் பேச வேண்டியதுதானே? அவர்கள் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்கிறார்களாம். ஒரு நாள் நானேதான் ஃபோனை எடுத்தேன்.

‘நான் ஐயாவோட பி.ஏ பேசறேன்’ என்றார். செமக் கடுப்பு. ‘நான் ,சிவா அய்யாவோட பி.ஏ பேசறேன்..அய்யா ஒரு மீட்டிங்ல இருக்காரு’ என்று சொல்லித் துண்டித்துவிட்டேன்.

அதன் பிறகு வெகு நாட்களுக்கு அழைக்கவே இல்லை. பல மாதங்களுக்குப் பிறகு நேற்று பிடித்துவிட்டார்கள். உடுமலை வந்தவர்கள் வீட்டிற்கே வந்துவிட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக சனி,ஞாயிறுகளில் வெளியூர் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டேன். அதற்கு வேறொரு கதை இருக்கிறது. தனியாகச் சொல்கிறேன். வழமையான சில விசாரிப்புகளுக்குப் பிறகு அறக்கட்டளை பற்றி விசாரித்தார்கள்.

எல்லாவற்றையும் சொன்ன பிறகு தாங்கள் ஏற்கனவே அறக்கட்டளையைப் பதிவு செய்துவிட்டதாகச் சொன்னார்கள். வங்கிக் கணக்கும் தொடங்கிவிட்டார்கள். கையில் ஒரு பெரிய கோப்பு ஒன்றை வைத்திருந்தார்கள். கண்ணசைத்ததும் பி.ஏ எடுத்து நீட்டினார். நோட்டுப் புத்தகங்கள் வழங்கியது, இலவச வேஷ்டி சேலை வழங்கியது என பெரிய கோப்பு இது. ‘போன வருஷம் மட்டும் நாற்பதாயிரம் ரூபாய்க்கு செஞ்சிருக்கோம்’ என்றார்கள். அந்த கோப்பு, நிழற்படங்கள் எல்லாம் கணக்குப் போட்டால் ஐந்தாறாயிரம் தேறிவிடும்.

அறக்கட்டளையும் பதிவு செய்துவிட்டார்கள், வேலையையும் ஆரம்பித்துவிட்டார்கள் வேறு என்ன விவரங்களை எதிர்பார்க்கிறார்கள் என்று சற்று குழப்பமாகவே இருந்தது. ஒருவேளை நம்முடன் இணைந்து பணி புரிய விரும்புகிறார்களாக இருக்குமோ என்று யோசிக்கும் போதே தொண்டையைக் கணைத்துக் கொண்டு ‘உங்க ட்ரஸ்ட்டுக்கு நிறையப் பணம் வர்றதா சொன்னாங்க..’ என்றார்.

‘யார் சொன்னாங்க?’ என்றேன். அவர்கள் என் வலைத்தளம்  படிப்பதில்லை என்பது அவர்கள் பேச்சிலேயே தெரிந்தது.

‘ஒரு ஃப்ரெண்ட் சொன்னாருங்க’ என்றார். பெயரைச் சொல்லவில்லை. மற்ற எந்த விவரமும் அவர்களுக்குத் தெரியவில்லை. அவரிடமிருந்தே அலைபேசி எண்ணையும் வாங்கியிருக்கிறார்கள்.

‘அதான் உங்களை நேர்ல பார்த்து பணம் எப்படி வசூல் பண்ணுறதுன்னு கேட்கலாம்ன்னு வந்தோம்’ என்றார்.

‘எனக்கே தெரியாதுங்க’ என்று பதில் சொன்னால் நம்பவா போகிறார்கள்? நமக்கென்றே இப்படியெல்லாம் சத்திய சோதனை வந்து சேர்கிறது என நினைத்துக் கொண்டேன்.

‘தினமும் நெட்ல எழுதறேங்க...அதைப் படிக்கறவங்க கொடுக்கிறாங்க’என்றேன்.

தினமும் எழுதினால் பணம் கொடுப்பார்களா என்ற கேள்வி அவரது கண்களில் தெரிந்தது. தினமும் கோவில் வாசலில் அமர்ந்தால் பணம் கிடைக்கும் என்றுதான் அவர் இதுவரை கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

‘இண்டர்நெட் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாதுங்க..வேற எப்படி வசூல் பண்ணுறீங்க?’என்று இன்னொரு கேள்வி வந்து விழுந்தது. விடமாட்டார் போலத் தெரிந்தது. கத்தியை எடுத்துட்டு போய் கழுத்துல வைத்துவிடுங்கள் என்று சொல்லித்தான் தப்பிக்க வேண்டும் போலத் தெரிந்தது.

உண்மையிலேயே இந்தக் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியவில்லை. திடீரென்று யாரும் பணம் கொடுத்துவிட மாட்டார்கள். தொடர்ச்சியான செயல்பாட்டின் வழியாகவே நம்பிக்கையை உண்டாக்க முடியும். நம்பிக்கையை உண்டாக்குவதற்கு முடிந்தவரை முகமூடி அணியாமல் இருக்க வேண்டும். அரசியல், சமூகம், மதம் என எல்லாவற்றிலும் நாம் நினைப்பதை அப்படியே வெளிப்படையாகக் கொட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். இப்படி ஓட்டைவாயாக இருப்பதனால் முத்திரைகள் விழாமல் தவிர்க்க வாய்ப்பில்லை. திமுக அனுதாபி, பாஜக ஆதரவாளன், ஜெயலலிதா விசுவாசி, காங்கிரஸூக்கு வேலை செய்வதவன் என்று எனக்கு எல்லா கட்சி சார்ந்தும் முத்திரை உண்டு. ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக புரிந்து கொள்வார்கள். அதைப் பற்றி அலட்டிக் கொள்வதேயில்லை. நம்மை திடீரென்று பார்க்கிறவர்கள் அந்தச் சமயத்தில் நாம் சொன்ன கருத்துப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள். ஆனால் தொடர்ந்து நம்மைப் பின் தொடர்கிறவர்களுக்கு நம்மைப் பற்றித் தெரியும். ஆனால் நம்மைத் தொடர்ந்து பின் தொடரச் செய்ய நம்மிடம் ஏதாவதொரு சுவாரஸியம் இருக்க வேண்டும்.

வாசித்து, படம் பார்த்து, மனிதர்களை உற்று நோக்கி என ஹோம்வொர்க் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். தலையில் கொம்பு முளைக்கும் போதெல்லாம் தயவு தாட்சண்யமில்லாமல் முறித்துக் கொள்ள வேண்டும். பொதுவெளியில் முத்திரைகளைத் தாண்டி நம்மைப் பற்றி உருவாகிற நம்பகத் தன்மைதான் முக்கியமானது. அப்படியானதொரு நம்பகம் கொண்டவர்கள்தான் நிதியளிக்கிறார்கள்.

விலாவாரியாகச் சொன்னேன். ‘எப்படி ப்லாக் ஆரம்பிப்பது?’ என்றார். இப்போதைக்கு விடமாட்டார்கள் போலத் தெரிந்தது. அதற்கு ஒரு அரை மணி நேரம். ஏழரை மணி ஆகியிருந்தது. கிளம்புகிறோம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

ஏதோவொரு அரசியல் கட்சியில் இருக்கிறார். உள்ளூர் மக்களுக்கு அதையும் இதையும் செய்து கொண்டிருக்கிறார். பணம் வசூலிக்க விரும்புகிறார். பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டு அனுப்பி வைத்தேன்.

இத்தகைய மனிதர்களிடம் சொல்வதற்கு ஒன்றேயொன்றுதான் இருக்கிறது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் Passion ஒளிந்து கிடக்கும். இதுதான் என்னுடைய Passion என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. எழுதுவது, ஓவியம் வரைவது, நிழற்படங்கள் என்று எதையாவது நாம் வெளியில் சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் அதுதான்  உண்மையானதா என்று நமக்கே தெரியாது. மனதுக்கு பிடித்த காரியத்துக்கு தினசரி அரை மணி நேரம் ஒதுக்கினால் போதும். அது என்ன செயலாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அரை மணி நேரமாவது ஒதுக்கியே தீர வேண்டும். அப்படியான அர்ப்பணிப்புடன் செய்து கொண்டிருந்தால் அது நம்மை இழுத்துச் சென்றுவிடும். அதுதான் நம் பாதை என்று உறுதியாக நம்பலாம்.

வேறொரு இலக்கை லட்சியமாக வைத்துக் கொண்டு அதை அடைவதற்கு இதைச் செய்வோம் என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தினால் இலக்கும் தப்பிவிடும் நிகழ்காலமும் சொதப்பிவிடும். அடுத்தவர்கள் அவரவர் பாதையில் செல்லட்டும். அடுத்தவர்களைப் பின்பற்ற வேண்டியதில்லை. நமக்கு எது சரிப்பட்டு வருமோ அதைச் செய்தால் போதும். நம்முடைய செயலுக்கும் தகுதிக்கும் ஏற்ற இடத்திற்கு நம்முடைய Passion கொண்டு போய் நிறுத்திவிடும். அவ்வளவுதான்.


நம்  கம்பள விருட்சம் உறுப்பினர்களின் ,ஆர்வம் ,குழு மனப்பான்மை ,நம் சமுதாயம் முன்னேறவேண்டும் என் ஒரு உந்துதல் ...நம் எதிர்கால சந்ததிகளுக்கு இப்போதைக்கு சிறு நம்பிக்கை அளிக்கவேண்டும்...நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் ...செயல்படுவோம் ..

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

தளி எத்தலப்ப மன்னர்
262ஆம்
பிறந்த நாள் விழா ..

திருவள்ளுவர் ஆண்டு 2048,
சுறவம் (தை) : 30

12.02.2017..
ஞாயிறு..நேரம் காலை 10.30 மணி அளவில் .


தளி எதுலப்ப மன்னர் 262 ஆவது பிறந்த நாள் விழா திருமூர்த்தி மலை பயணீர் விடுதிக்கு  முன்புறம் உள்ள எதுலப்பர் நினைவிடத்தில் நடைபெற்றது .

இந்த நிகழ்விற்கு வரலாற்று ஆய்வு நடுவத்தின் மதிப்பியல் தலைவர் .திரு.சுபாசு கிருட்டிணசாமி முன்னிலை வகித்து தளி எதுலப்பர் மன்னரின் நீர்மேலாண்மை குறித்தும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு எதிர்வினை செய்த மாபெரும் வீரன் எதுலப்ப மன்னர் எனப்புகழாரம் சூட்டிப் பேசினார் .
முனைவர் ஜ .மஞ்சுளாதேவி தலைமை வகித்து இந்திய வரலாற்றில் தென் இந்திய விடுதலைப்போரில் மருதுபாண்டியர் ,வேலுநாச்சியார் ,விருப்பாச்சி கோபால்நாய்க்கர் ,திருமலை நாய்க்கர் ,தீரன் சின்னமலை ஆகியோரும் இந்த தமிழ்மண் எதுலப்ப மன்னரையும் இனிமேல் நினைவுகூர்ந்து  இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்படவேண்டும் என்று கூறினார் .

உடுமலை அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் .மா .மதியழகன் தனது ஆய்வுரையில் 1791 முதல் 1805 வரையிலான காலத்தில் உடுமலை பகுதியில் எதுலப்ப மன்னரின் செயல்பாடுகள் ஆங்கிலேயர்க்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்ததையும்  உடுமலைப்பேட்டை வரலாறு கி .பி 1300 வரையிலான பதிவுகள் பாரதியார் பல்கலைக்கழகத்தால் முனைவர் பட்ட ஆய்வேடாக பதிவு செய்யப்பட்டு நூலாக வெளியிடுவதற்கு தகுதி உள்ளதையும் தெரிவித்தார் .
திரு. சிவசக்தி இராமசாமி அவர்கள் எதுலப்ப மன்னரின் கதைப்பாடல் குறித்து பேசினார் .

மேலும் பேராசிரியர்கள் ,ர .சிறீ பிரியா ,குப்புலட்சுமி ,வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக நிர்வாகிகள் ,மற்றும் தலைவர்கள் முருகவேள் ,ராமகிருஷ்ணன் ,வழக்கறிஞர் .முருகராஜ் ,சபரி முத்துவேல் ,ராமு ,கோபால்சாமி  மற்றும் பலர் கலந்துகொண்டனர் .

சுற்றுலா மாளிகை முன்புறம் தளி எதுலப்ப மன்னருக்கு மணிமண்டபம் மற்றும் நினைவுத் தூண் அமைக்க அரசுக்கு வேண்டுகோள் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

நிகழ்வினை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சிவக்குமார் ,கொழுமம் ஆதி ,அருட்செல்வன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர் .






ஞாயிறு, 27 நவம்பர், 2016

நமது கல்வி மற்றும் பொருளாதாரதை முன்னேற்றும் குழுமத்தின்  சங்கமம்....
உடுமலை கோவை திருப்பூர் திண்டுக்கல் பகுதிகளை மையமாக வைத்து வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் நமது கல்வி மற்றும் பொருளாதாரதை முன்னேற்றும் குழுமத்தின்  சங்கமம் மற்றும் கலந்துரையாடல் கார்த்திகை மாதம் 12ம் நாள் 27.11.2016ம் தேதி ஞாயிற்றுக்கிழைமை காலை 10.00மணியளவில் உடுமலை பெதப்பம்பட்டி அருகில் சோமவாரபட்டி அருள்மிகு கண்டியம்மன் கோவிலில் அருமையான நிகழ்வாக நடைபெற்றது..இதில் இன்று சிறப்பு விருந்தினராக திருப்பூர் வழக்கறிஞர் ச.முருகராஜ் அவர்கள் கலந்துகொண்டு நமது கல்வி குழுமத்தின் செயல்பாடுகள்,வளர்ச்சி திட்டங்கள் ,எதிர்காலத்தில் பொருளாதார சிக்கல்களை எப்படி எதிர்கொண்டு, முன்னற்ற கருத்துக்களையும் ,வழிமுறைகளையும் ,நமது உறுப்பினர்களுக்கு ,பயனுள்ள தகவல்களையும் ,சரியான ஆலோசனைகளையும்  வழங்கி  நமது  குழுமத்திற்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும்  அளித்தது..நாளுக்கு நாள் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ,வருகையும் அதிகரித்தது  குழுமத்திற்கு மகிழ்வான நிகழ்வாக அமைந்தது.இன்று குழுமத்துக்கு புதிதாக வருகை தந்த பெண் வழக்கறிஞர் .செல்வி .ரஞ்சனி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .நிகழ்வுகளை அருமையாக வழிநடத்திய ஒருங்கிணைப்பு குழுவிற்கு நன்றிகள் ...  

சனி, 10 செப்டம்பர், 2016

காடு என் வீடு .......

இன்று என் நண்பரின் மகன் பிறந்த நாள் விழாவை மகிழுச்சியுடன் கொண்டாட பக்கத்தில் இருக்கும் அமராவதி பழங்குடியினர் படிக்கும் மழலைச்செல்வங்களுடன் கொண்டாடியது அருமையான நிகழ்வாகவும் ,மனநிறைவாகவும் இருந்தது ...இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் மிகந்த அர்ப்பணிப்புடன் மிகந்த பொறுமையுடனும் இக்குழந்தைகளுக்கு கல்வி போதிப்பது கடவுளுக்கு செய்யும் நன்றியாக கருதுகிறார்கள் .

 மலைகளில் இயற்கையை காப்பாற்றி நம் உலகத்திற்கு வனவிலங்குகள் ,மரங்களை உயிர்ப்புடன் ,செழுப்புடனும் நம் வாழ இக்குழந்தைகளின்  பெற்றோர்கள் பணியாற்றி கொண்டுஇருக்கிறார்கள் .தன் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற கல்வியின் முக்கியத்தை அறிந்து  இச்சிறு வயதில் பெற்றோரை பிரிந்து கல்வி கற்றுகொண்டுஇருக்கிறார்கள். தன்நம்பிக்கையை நாம் இவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும்...நண்பரின் தன்னால் முடிந்த அவர்களின் மகிழ்ச்சிக்கு சிறு உதவியாக பிடித்த விளையாட்டு பொருட்கள் அன்புடன்  அளித்து வந்தோம் ..அருகில் இருக்கும் அமராவதி ராணுவப்பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் வருடம் ஒருமுறை வரும்போது இப்பள்ளிக்கு  ஒருமுறை விஜயம் செய்து வாருங்கள் உங்களுக்கும் மனநிறைவு கிடைக்கும்.    









   


வியாழன், 21 ஜூலை, 2016

மகிழ்ச்சியில் மட்டும் பங்கு கொள்ளும் நண்பர்களை விட கஷ்டகாலங்களில் ,துக்க காலங்களில் கூடவே இருக்கும் நண்பர்களால் தான் வாழ்க்கை சக்கரம் உருண்டுகொண்டு இருக்கிறது ...அந்த நண்பர்களில் ஒருவரில் இந்த நண்பனும் ஒருவர் ....என் இனிய நண்பன்  ....அப்சல்...க்கு அன்பு கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஞாயிறு, 17 ஜூலை, 2016

மகிழ்ச்சி......
பொள்ளாச்சி சுந்தரம் பைனான்ஸ்ன் சுபிட்ஷம் .மாபெரும் கார் திருவிழா 
2016
ஆடி பட்டம் தேடி விதை என்பார்கள் ...விவசாயத்திற்கு மட்டும் அல்ல அனைத்து வர்த்தக வாகன வியாபாரத்திற்கும் தான் பொருந்தும் ..

 நம்ம பொள்ளாச்சியில்  நடைபெற்ற எங்களின்  சுந்தரம் பைனான்ஸ்ன் சுபிட்ஷம் .... மாபெரும் கார் திருவிழவிற்கு வந்திருந்த அனைத்து விலைமதிக்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்..

இரண்டு நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் அவர்களுக்கு தேவையான வாகனங்களையும் .புது வாகனங்களுக்கு முன் பதிவும் செய்தது மகிழ்ச்சியான தருணங்கள்.

இதில் கலந்துகொண்ட அனைத்து டீலர்களுக்கும் அருமையான வர்த்தக வியாபாரமும் ,முன்பதிவுமும் செய்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது .

இத்திருவிழாவிற்கு வந்துஇருந்த பெரியவர்களைவிட சிறுவர்கள் கலந்துகொண்டு இத்திருவிழாவை மிகவும் சிறப்பித்தார்கள் ...சிறுவர்களின் புது திறனை அறிய அவர்களுக்கு ஓவிய போட்டியும் நடத்தி அவர்களுக்கு சிறு பரிசு பொருட்களும் அளித்தது அவர்களுக்கு ஊக்கப்படுத்தியதாக  இருந்தது...

வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வாகனங்களை அளித்தது எங்களுக்கு மனநிறைவும் இருந்தது ..

எங்களுக்கு உறுதுணையாக இருந்த எங்களின் உயரதிகாரிகள்  .. .திரு .பாலசுப்ரமணியம்,கணேஷ் ,அவர்களும் மற்றும் எங்களின் ,பொள்ளாச்சி ,கோயம்புத்தூர் ,திருப்பூர் ,மேலாளர்களும் கூடவே இருந்தது  எங்களுக்கு மகிழ்ச்சியின் தருணங்கள்....

இதில் கலந்துகொண்ட வாடிக்கையாளர்களுக்கும் ,அனைத்து டீலர்களுக்கும் எங்களின் அன்பு கலந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறோம் .