தளி எத்தலப்ப மன்னர்
262ஆம்
பிறந்த நாள் விழா ..
திருவள்ளுவர் ஆண்டு 2048,
சுறவம் (தை) : 30
12.02.2017..
ஞாயிறு..நேரம் காலை 10.30 மணி அளவில் .
தளி எதுலப்ப மன்னர் 262 ஆவது பிறந்த நாள் விழா திருமூர்த்தி மலை பயணீர் விடுதிக்கு முன்புறம் உள்ள எதுலப்பர் நினைவிடத்தில் நடைபெற்றது .
இந்த நிகழ்விற்கு வரலாற்று ஆய்வு நடுவத்தின் மதிப்பியல் தலைவர் .திரு.சுபாசு கிருட்டிணசாமி முன்னிலை வகித்து தளி எதுலப்பர் மன்னரின் நீர்மேலாண்மை குறித்தும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு எதிர்வினை செய்த மாபெரும் வீரன் எதுலப்ப மன்னர் எனப்புகழாரம் சூட்டிப் பேசினார் .
முனைவர் ஜ .மஞ்சுளாதேவி தலைமை வகித்து இந்திய வரலாற்றில் தென் இந்திய விடுதலைப்போரில் மருதுபாண்டியர் ,வேலுநாச்சியார் ,விருப்பாச்சி கோபால்நாய்க்கர் ,திருமலை நாய்க்கர் ,தீரன் சின்னமலை ஆகியோரும் இந்த தமிழ்மண் எதுலப்ப மன்னரையும் இனிமேல் நினைவுகூர்ந்து இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்படவேண்டும் என்று கூறினார் .
உடுமலை அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் .மா .மதியழகன் தனது ஆய்வுரையில் 1791 முதல் 1805 வரையிலான காலத்தில் உடுமலை பகுதியில் எதுலப்ப மன்னரின் செயல்பாடுகள் ஆங்கிலேயர்க்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்ததையும் உடுமலைப்பேட்டை வரலாறு கி .பி 1300 வரையிலான பதிவுகள் பாரதியார் பல்கலைக்கழகத்தால் முனைவர் பட்ட ஆய்வேடாக பதிவு செய்யப்பட்டு நூலாக வெளியிடுவதற்கு தகுதி உள்ளதையும் தெரிவித்தார் .
திரு. சிவசக்தி இராமசாமி அவர்கள் எதுலப்ப மன்னரின் கதைப்பாடல் குறித்து பேசினார் .
மேலும் பேராசிரியர்கள் ,ர .சிறீ பிரியா ,குப்புலட்சுமி ,வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக நிர்வாகிகள் ,மற்றும் தலைவர்கள் முருகவேள் ,ராமகிருஷ்ணன் ,வழக்கறிஞர் .முருகராஜ் ,சபரி முத்துவேல் ,ராமு ,கோபால்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர் .
சுற்றுலா மாளிகை முன்புறம் தளி எதுலப்ப மன்னருக்கு மணிமண்டபம் மற்றும் நினைவுத் தூண் அமைக்க அரசுக்கு வேண்டுகோள் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
நிகழ்வினை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சிவக்குமார் ,கொழுமம் ஆதி ,அருட்செல்வன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக