Kannabiran Udt...
கொரோனா காலத்திலும் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதும் உடுமலையின் அறிவியல் மாணவ ,மாணவிகள் .....
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் என்சிஇஆர்டி மற்றும் விபா ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தேர்வை இணைய வழியில் நடத்தி வருகின்றன.இந்த பேரிடர் காலகட்டத்தில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிப்பதற்காக இந்த வருடமும் தேர்வானது தேசிய அளவில் இன்றும் ( நவம்பர் 29 மற்றும் 30) நாளையும் நடைபெறுகிறது.
இத்தேர்வில் இந்தியா முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வினை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தேர்வு எழுதி வருகின்றனர். இத்தேர்வு இணையவழியில் கணினி ,மடிக்கணினி மற்றும் ஆண்ட்ராய்டு செயலி மூலமாக இணைய வழியில் தேர்வினை மாணவர்கள் எழுதி வருகின்றனர். தேர்வானது இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் இத்தேர்வினை எழுதி வருகின்றனர்.
இந்த முதல்நிலை தேர்வானது மாணவர்கள் அவரவர் வீடுகளிலிருந்து தேர்வினை எழுதி வருகின்றனர். அறிவியல் துறையில் பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் ஆராய்ச்சித் துறையில் அவர்களை ஈடுபடுவதற்காக இந்த தேசிய திறனறிதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் கலந்து கொண்ட அனைவரும் இந்த வருடம் இணையவழியில் நடைபெற உள்ள சர்வதேச இந்திய அறிவியல் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பினை பெறுகின்றார்கள். அதுமட்டுமின்றி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசுகளையும் பெறுவார்கள்.
இந்த தேர்வானது திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 300 மாணவர்கள் எழுதினர். வீடுகளிலிருந்து முதல்முறையாக ஒரு தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தேர்வு எழுதியது புதுமையானதாகவும் வீட்டிலிருந்தே ஒரு தேசிய அளவிலான தேர்வினை எழுதியது மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று மாணாக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது வீடுகளிலிருந்து இத்தேர்வினை எழுதினர். பேரிடர் காலகட்டத்தில் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் தேசிய அளவிலான ஒரு தேர்வு இணைய வழியில் குழந்தைகள் வீட்டில் இருந்தே எழுதியது நல்லதொரு முயற்சியாக இருந்தது என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர். உடுமலை பகுதியில் உள்ள மாணவர்களின் வீடுகளில் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் சரவணன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.




