ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019






உலகின் மிகச் சிறந்த உணவு....
உலகின் மிகச் சிறந்த உணவு எது என்று கேட்டால் ஒவ்வொருவரும் தமது நாட்டில் இருக்கும் உணவு வகைகளையே தேர்ந்தெடுத்து சொல்வார்கள் காரணம் அந்த உணவை பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் சாப்பிடுவதே காரணமாகும்.
எது சிறந்த உணவு என்று அதை சாப்பிடும் மக்கள் சொல்வதைவிட உணவின் சத்துக்களை தயாரிக்கும் முறைகளை சிறப்புத்தன்மைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஊட்டச்சத்து வல்லுநர்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்.
அந்த வகையில் உளுந்து அரிசி வெந்தயம் போன்றவற்றை சேர்த்து மாவாக அரைத்து நொதிக்கச் செய்து ஆவியில் வேக வைக்கும் நம்ம ஊர் இட்லியே மேற்கண்ட வகையில் சிறந்த உணவு என்று பல்வேறு மேலைநாட்டு வல்லுநர்களும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். சொல்லப்போனால் இட்லி மாவு நொதித்தலில் வரும் பல அமினோ அமிலங்கள் பல்வேறு கட்ட வேதி சேர்க்கைக்குப் பிறகு தான் உருவாக்க இயலும் அதனை இட்லி மாவு மிக எளிதாக செய்து விடுவதாக குறிப்பிடுகிறார்கள்.
அதேபோல உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்றதாக உள்ள பழம் எது என்று ஆராய்ச்சி செய்து நம்ம ஊரில் விளையும் நாட்டு கொய்யா சிறந்த பழம் என்று ஒரு ஆராய்ச்சி முடிவில் சொல்லியிருக்கிறார்கள். 
இதையெல்லாம் நாம் சொன்னால் அதிமேதாவிகள் போல தம்மை காட்டிக் கொள்வதற்காக இங்கே இருப்பவர்களில் சிலர் இது வெறும் தற்பெருமை என்று சொல்லி புறம் தள்ளி விடுகிறார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக