30-08-2019
--------------
#ராஜேஷ்குமார் க்ரைம் நாவலாசிரியர்
கோயம்புத்தூர் -வடவள்ளி
கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு.ராஜேஷ்குமார் அவர்கள் கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் கல்வி கற்றார். பவானிசாகர் பயிற்சிப் பள்ளியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1968 ல் கல்கண்டு இதழில் தனது முதல் சிறுகதையை வெளியிட்டார்.
இவரது முதல் புதினம் "வாடகைக்கு ஓர் உயிர்" 1980 ல் வெளியானது. பின் ஆனந்த விகடன், குமுதம் போன்ற வார இதழ்களிலும் பெஸ்ட் நாவல், திகில் நாவல், எவரெஸ்ட் நாவல், கிரேட் நாவல், க்ரைம் நாவல் போன்ற பாக்கெட் நாவல்களிலும் இவரது படைப்புகள் வெளியாகின. விவேக்-ரூபலா என்ற புகழ்பெற்ற துப்பறியும் ஜோடி இவரால் உருவாக்கப்பட்டது.
இவரது முதல் க்ரைம் நாவல் "நந்தினி 440 வோல்ட்ஸ்".
இவரது சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிளாஃப்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசின் 2009 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
#கின்னஸ்_ராஜேஷ்குமார் மனந்திறந்து சொன்னது:
"நாம் கேட்கும் படிக்கும் எல்லாவற்றிலும் பல கதைகள் உள்ளன. அதை எப்படி எடுத்துக் கையாள வேண்டும்? எப்படி எழுத வேண்டும்? என்பதில் தான் ஒருவரின் சாமர்த்தியம் அடங்கியுள்ளது. உதாரணமாக நான் இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட கதைக் கருவை "அவள் விகடன்" இதழிலிலிருந்தே எடுத்துள்ளேன்". என்று ஆச்சரியம் தரும் திரு.ராஜேஷ்குமார்,
"என்னுடைய கதையில் ஆபாசம் இருக்காது. என் கதையை என் மனைவி முதல் என் பேரப்பிள்ளைகள் வரை, என் தெருவினர் தொடங்கி உலகில் உள்ள பலரும் படிக்கிறார்கள்". இதைப் படிக்கும் ஒருவர் கூட "இவந்தாண்டா அப்படி எழுதினான்" என்று சுட்டிவிடக் கூடாது. "சார், உங்க எழுத்தால்தான் நான் இப்போ நல்லாருக்கேன்" என்று சொல்லும் ஆயிரக்கணக்கான தமிழ் உள்ளங்களை என் சொத்தாக இதுவரை சம்பாதித்திருக்கிறேன். இதைவிட ஒரு எழுத்தாளனுக்கு என்ன வேண்டும்.? என்கிறார்.
"திரைப்படத்துக்கு வசனம் எழுதுவதானால் முழு சுதந்திரம் கிடைக்கப்பட வேண்டும் என்பதனாலேயே அதில் நான் ஆர்வம் காட்டவில்லை. அப்படியிருந்தும், நடிகர் சரத்குமார் இரு வேடங்களில் நடித்த சண்டமாருதம் படத்துக்கு வசனம் எழுத என்னை அணுகினார்கள். இந்தப்படத்தில் வசனம் எழுத உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறோம். இது முழுக்க முழுக்க உங்க படம். நீங்க விரும்புகிற மாதிரிதான் கதை இருக்கும் என்று சரத்குமார் சொன்னார். அதன்பிறகு தான் நான் வசனம் எழுத சம்மதித்தேன்" என்றார்.
"குற்றம் 23" திரைப்படத்தின் கதை இவருடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தனது "பேஸ்புக்" பக்கத்தில் தனக்கு ஒரு எழுத்தாளர் வேடத்தில் நடிப்பதற்காக ஒரு முன்னணி இயக்குனர் அழைப்பு விடுத்திருப்பதாகவும் அதற்கான பதிலை ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் திரைப்படத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதுவரை 1500க்கும் மேற்பட்ட நாவல்களையும் 2000 த்துக்கும் அதிகமான சிறுகதைகளையும் ஏராளமான நாடகங்களையும் எழுதியுள்ளார்.
950 நாவல்களை எழுதிய அமெரிக்க நாவலாசிரியர் ஒருவரின் "கின்னஸ்" சாதனையை எப்போதோ முந்திவிட்ட திரு.ராஜேஷ்குமார் கூடிய விரைவில் "கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற இருக்கிறார் என்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
தனது எழுத்தாற்றலால் பல லட்சக்கணக்கான இதயங்களில் இடம்பிடித்து இருக்கும் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் விரைவில் "கின்னஸ் சாதனை" புத்தகத்தில் இடம்பெற நாமும் வாழ்த்துவோமே. ✍🏼🌹

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக