வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

Prakash Ramasamy ...

(கோயம்புத்தூர் -வடவள்ளி -திருவள்ளுவர் நகர் )

அரசியல் இல்லாத ஒரு ஸ்டேடஸ் போட்டு நிறைய நாளாகிவிட்டது.
எத்தனை நாட்களானாலும், அப்பாவின் சுறுசுறுப்பை, அண்மையை மிஸ் பண்ணுகிறேன். அம்மாவின் கலப்படமில்லாத அன்பையும். முடியாத இந்த வயதிலும் என் வீட்டை புதுப்பித்த அப்பாவிடமும் அம்மாவிடமும் நன்றியெல்லாம் சொல்லி, அசிங்கப்படுத்த விருப்பமில்லை.
ஒரு வெறியில், வாடகை வீட்டில் இருந்து எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்று, நாய் பேயாய் அலைந்து.. ஒரு 7-8 சென்ட் இடத்தில், ஒரு பெட்ரூம் கிட்சன் டைனிங் என்று ஒரு வீடு கட்டி முடித்த போது.. மனசு சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருந்தது.
நான் அந்த வீட்டில்.. இரண்டு மாசம் கூட முழுதாய் நான் தங்கவே இல்லை. என் குடும்பத்தில் அங்குதான் எல்லோரும் வளர்ந்தோம். ஆனாலும்.. அந்த வீட்டினுள்.. மிதந்து போகும் பவழமல்லி வாசனையும், வேப்ப மர காற்றும், அவ்வப்போது குடும்பத்துடன் வந்து போகும் மயிலும்.. அம்மாவின் ஊதுபத்தி, கல்பூர வாசனைகளுமே இன்றுமே நினைத்தவுடனேயே இருக்கும் என் இடத்தை அழகாக்கிவிடுகிறது.
ஆனால்.. கிரகப்பிரவேசம் அன்றடித்த மழையும் இருளும், என் 105 டிகிரி காய்ச்சலில் நினைவிழந்ததும், யாருமற்ற இருளின் சப்தங்களும், கரன்ட் போன பகல்களும் இரவுகளும்.. அவஸ்தையாக இருந்தாலும்.. இப்போது.. அந்த வீடு இன்று வரை அன்னியமாகி விடவில்லை எனக்கு.
மலைமேல வீடு கட்டி கிரகப்பிரவேசம்ன்னு படுத்தறானுங்க என்று என் காதுபட சொன்ன உறவினரை, சாப்டியா என்று விசாரித்த போது..லேசாக வழிந்தார்.
எனக்கு..கோவை தவிர வேறு எந்த ஊருமே.. தினமும் அதில் வாழ வேண்டும் என்று ஆசைப்பட வைத்ததே இல்லை. அம்மாவும் அப்பாவும்..சிறுவாணியும், காற்றும்... கோவை ஈர்ப்பாய் எப்போதும்.. என்னை வைத்திருக்கிறது. நண்பர் சிவா வந்தபோது பெருமையாய் சுற்றி காட்டினேன் வீட்டை. செல்ஃபி கூட அவரோடுதான் மொட்டை மாடியில்..
ஒரு வேளை.. ஒரு வேளை.. கோவை வர முடியாமல் ஏதாவது நேர்ந்து போனால்.. என்னை நொய்யலில் கரைத்துவிடு.. என்று மகனிடம் சொல்லி விடுவதிலும் ஒரு சின்ன சிக்கல் இருந்தாலும் என் ஊரின் மீதான கவித்துவமும் காதலும் மட்டும் இதில் நிறைய இருக்கிறது.
30-08-2019
--------------
#ராஜேஷ்குமார் க்ரைம் நாவலாசிரியர்
கோயம்புத்தூர் -வடவள்ளி

கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு.ராஜேஷ்குமார் அவர்கள் கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் கல்வி கற்றார்.  பவானிசாகர் பயிற்சிப் பள்ளியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.  1968 ல் கல்கண்டு இதழில் தனது முதல் சிறுகதையை வெளியிட்டார்.

இவரது முதல் புதினம் "வாடகைக்கு ஓர் உயிர்"  1980 ல் வெளியானது.  பின் ஆனந்த விகடன், குமுதம் போன்ற வார இதழ்களிலும்  பெஸ்ட் நாவல், திகில் நாவல், எவரெஸ்ட் நாவல், கிரேட் நாவல், க்ரைம் நாவல் போன்ற பாக்கெட் நாவல்களிலும் இவரது படைப்புகள் வெளியாகின.  விவேக்-ரூபலா என்ற புகழ்பெற்ற துப்பறியும் ஜோடி இவரால் உருவாக்கப்பட்டது. 

இவரது முதல் க்ரைம் நாவல் "நந்தினி 440  வோல்ட்ஸ்". 

இவரது சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிளாஃப்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசின் 2009 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

#கின்னஸ்_ராஜேஷ்குமார் மனந்திறந்து சொன்னது:

"நாம் கேட்கும் படிக்கும் எல்லாவற்றிலும் பல கதைகள் உள்ளன.  அதை எப்படி எடுத்துக் கையாள வேண்டும்? எப்படி எழுத வேண்டும்? என்பதில் தான் ஒருவரின் சாமர்த்தியம் அடங்கியுள்ளது.  உதாரணமாக நான் இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட கதைக் கருவை "அவள் விகடன்" இதழிலிலிருந்தே எடுத்துள்ளேன்".  என்று ஆச்சரியம் தரும் திரு.ராஜேஷ்குமார்,

"என்னுடைய கதையில் ஆபாசம் இருக்காது.  என் கதையை என் மனைவி முதல் என் பேரப்பிள்ளைகள் வரை,  என் தெருவினர் தொடங்கி உலகில் உள்ள பலரும் படிக்கிறார்கள்". இதைப் படிக்கும் ஒருவர் கூட  "இவந்தாண்டா அப்படி எழுதினான்" என்று சுட்டிவிடக் கூடாது.  "சார், உங்க எழுத்தால்தான் நான் இப்போ  நல்லாருக்கேன்"  என்று சொல்லும் ஆயிரக்கணக்கான தமிழ் உள்ளங்களை என் சொத்தாக இதுவரை சம்பாதித்திருக்கிறேன்.  இதைவிட ஒரு எழுத்தாளனுக்கு என்ன வேண்டும்.? என்கிறார்.

"திரைப்படத்துக்கு வசனம் எழுதுவதானால் முழு சுதந்திரம்  கிடைக்கப்பட வேண்டும் என்பதனாலேயே   அதில் நான் ஆர்வம் காட்டவில்லை.  அப்படியிருந்தும்,  நடிகர் சரத்குமார் இரு வேடங்களில் நடித்த சண்டமாருதம் படத்துக்கு வசனம் எழுத என்னை அணுகினார்கள்.  இந்தப்படத்தில் வசனம் எழுத உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறோம்.  இது முழுக்க முழுக்க உங்க படம்.  நீங்க விரும்புகிற மாதிரிதான் கதை இருக்கும் என்று சரத்குமார் சொன்னார்.  அதன்பிறகு தான் நான் வசனம் எழுத சம்மதித்தேன்" என்றார்.

"குற்றம் 23" திரைப்படத்தின் கதை இவருடையது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் அவர் தனது "பேஸ்புக்" பக்கத்தில் தனக்கு ஒரு எழுத்தாளர் வேடத்தில் நடிப்பதற்காக ஒரு முன்னணி இயக்குனர் அழைப்பு விடுத்திருப்பதாகவும் அதற்கான பதிலை ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் திரைப்படத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதுவரை 1500க்கும் மேற்பட்ட நாவல்களையும் 2000 த்துக்கும் அதிகமான சிறுகதைகளையும் ஏராளமான நாடகங்களையும் எழுதியுள்ளார்.

950 நாவல்களை எழுதிய அமெரிக்க நாவலாசிரியர் ஒருவரின் "கின்னஸ்" சாதனையை எப்போதோ முந்திவிட்ட திரு.ராஜேஷ்குமார் கூடிய விரைவில் "கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற இருக்கிறார் என்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

தனது எழுத்தாற்றலால் பல லட்சக்கணக்கான இதயங்களில் இடம்பிடித்து இருக்கும் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் விரைவில்  "கின்னஸ் சாதனை" புத்தகத்தில் இடம்பெற நாமும் வாழ்த்துவோமே. ✍🏼🌹
 மூன்று நாட்கள் ...முத்தான கம்பளத்து குடும்ப விழாக்கள் ...

திரு .K -சரவணக்குமார் -V .வாசுகி 
(தளிஜல்லிபட்டி -சாலையூர் )
தேதி -01.09.2019
இடம் :பொன்னுசாமி கவுண்டர் பாப்பாத்தியம்மாள் திருமணமண்டபம் -பாப்பனூத்து பிரிவு -உடுமலை -ஆனைமலை ரோடு

திரு .P .குமரேசன் -M .கமலவேணி (எ )புனிதா
(பெரியகோட்டை -வெனசபட்டி  )

தேதி -02-09-2019
இடம் :தேஜஸ் மஹால் -தளிரோடு -உடுமலை

காதணி விழா ...

திரு .G .கோகுல்

(C -நாகூர் -உடுமலைப்பேட்டை)
தேதி -02-09-2019
இடம் :GK மஹால் -சோமவாரப்பட்டி -உடுமலை

கம்பள சொந்தங்களுக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளை -உடுமலைப்பேட்டை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

இங்ஙனம்
கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம்
கீர்த்தி வீரர் எத்தலப்பர் வாட்சப் குழு
உடுமலைப்பேட்டை

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

இந்திய பொருளாதாரம் உண்மையிலேயே வீழ்ச்சி அடைந்து விட்டதா? ஒரு   எளிய சோதனை செய்யுங்களேன்.

பொருளாதாரம் மோசமா இருக்கிறதா இல்லையா? மக்களிடம் வாங்கும் சக்தி இருக்கிறதா இல்லையா என்று சரி பார்க்க ... நாணய விகடன்.. எகனாமிக் டைம்ஸ்..பைனான்சியல் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளை படித்து நேரம் வீணடிக்க வேண்டாம்.

உங்கள் ஊர் பெரிய கடை வீதி என்று ஒன்று இருக்கும். உங்கள் ஊரில் நம்பர் ஒன் மளிகை கடை../ டிபார்ட்மென்டல் ஸ்டார் என்று ஒன்று இருக்கும். அதில் கூட்டமே இல்லாமல் காத்தாடுகிறதா என்று பாருங்கள்!

உங்கள் ஊர் பெரியக்கடை வீதியில் உங்கள் ஊர் மெயின் மார்க்கெட் வீதியில் ஒரு ஆள் கூட நடக்கவில்லை. உங்கள் வண்டி சுதந்திரமாக அதே ரோட்டில் போக வர முடியும் என்றால்.. மக்களிடம் வாங்கும் திறன் இல்லை என்று ஒத்துக் கொள்ளலாம்.

இந்த ஆடி மாத சிறப்பு தள்ளுபடிக்கு மக்கள் துணிக் கடையில் நுழையவே இல்லை.. நகை கடையில் நுழையவே இல்லை என்றால்.. மக்களிடம் வாங்கும் திறன் இல்லை பொருளாதார வீழ்ச்சி என்று ஒத்துக் கொள்ளலாம்.

ஒரு பவுன் விலை முப்பதாயிரத்துக்கு அதிகமாகி போன பிறகும் கூட உங்கள் ஊர் நகை கடையில் கூட்டம் குறைந்து விட்டதா? உங்கள் ஊர் பூர்விகா மொபைல்ஸ்..supreme மொபைல்ஸ் .. போன்ற கடைகளில் ஒரு ஐந்து நிமிடம் சற்று நேரம் ஒதுக்கி பாருங்கள்.

கோவை ...திருச்சி ..மதுரை ...சேலம் ...சென்னையில் இருப்பவர்கள் ..உங்கள் ஊர் தி.நகரில் ரங்கநாதன் வீதியிலோ ..பாண்டி பஜாரிலோ ..உஸ்மான் ரோட்டிலோ மக்கள் ஐந்து ரூபாய் கொடுத்து பிஸ்கட் வாங்க கூட வசதியில்லாத காரணத்தால் ரோடே காத்தாடுகிறது.. நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு உங்கள் வாகனத்தை அங்கே ஒட்டி செல்லலாம். அல்லது உங்கள் வீட்டு சின்ன குழந்தை அங்கே நடை பழகலாம் என்ற நிலை இருக்கிறதா என்று பாருங்கள்.

அப்படி இல்லை அல்லவா அப்படி என்றால் .. ஐந்து ரூபா கொடுத்து பிஸ்கட் வாங்கும் திறன் இந்திய மக்களிடம் குறைந்து விட்டது என்று சொல்வது கிரிமினல் உள் நோக்கம் கொண்டது என்று அர்த்தம்!

எனவே.. பொருளாதார வீழ்ச்சி .. மோடி அரசு தோற்றது .. என்று முழ நீளத்துக்கு மெசேஜ் அனுப்புவதன் பின்னால் இருக்கும் மோசமான கிரிமினல் நோக்கங்களை புரிந்து கொள்ளுங்கள்!

 உங்கள் ஊரி்ல்  போன வருடத்தில் இருந்ததை விட எத்தனை மால்கள் டிபார்ட்மென்டல் ஸ்டோர்.. நகை கடை ஆரம்பித்துள்ளார்கள் என்று பாருங்கள்

சென்னை ..கோவை ..திருச்சி ..மதுரை ..சேலம் ..உங்கள் ஊர் தலைப்பா கட்டி பிரியாணி ..ஆம்பூர் பிரியாணி.. வேலூர் பிரியாணி ..ஆசிப் பிரியாணி ,,மாப்பிள்ளை பிரியாணி ..புகாரி பிரியாணி கடைகளில் ஒரு இரண்டு நிமிடம் நின்று பாருங்கள். அங்கே தினமும் சமைத்ததை வாங்க ஆளில்லாமல் தெருவில் கொண்டு வந்தா கொட்டுகிறார்கள்?

ஒரு ஐந்து ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கி சாப்பிட முடியாத படி இந்திய மக்கள் இருக்கும் பட்சத்தில் ஆசிப் பிரியாணி ஆம்பூர் பிரியாணி மட்டும் வாங்கி சாப்பிட முடியுமா என்று யோசியுங்கள்.

எனவே வாட்சப்பில் கண்டதே கோலம் என்று உங்களுக்கு வந்த மெசேஜை .. "" அப்பாடி மோடியை எதிர்த்து இன்னொரு மெசேஜ் !!"" என்று சந்தோஷமாக பகிர்வதை விட்டு விட்டு உங்கள் ஊர் சந்தையை பார்த்து விட்டு கள நிலவரத்தை புரிந்து கொள்ளுங்கள்.........

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

மச்சு வீடோ ....குச்சு வீடோ......
சொந்த வீடு கட்டிக் குடியேறும் நபர்களுக்குச் சமூகத்தில் ஒரு மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது. அதனால் தான் விவசாயக் கூலிகள் முதல் வேலை பார்ப்பவர்கள் வரை வீட்டுக்கடனைப் பெற வங்கிகளை எதிர்பார்க்கிறார்கள். சிலநேரங்களில் வீட்டுக் கடன்கள் அவர்களைக் கனவிலும் கூடத் தொல்லை செய்கிறது. ஆகையால் நீண்ட கால வீட்டுக் கடன்களைப் பெறும்போது, தவணை முறைகளையும் கவனமாகத் திட்டமிட்டு கையாள வேண்டும்
ஆகப் பெரும்பாலானோர் ஒரு கனவு வீட்டைக் கட்டி முடக்கவோ, வாங்கிப் போடுவதற்காகவோ வங்கிக் கடன்களை வாங்குகிறார்கள். இன்னொரு சாஸ்வதமான அசையாச் சொத்துக்களால் வருமான வரிச்சட்டம் 80 மற்றும் 24 ஆம் பிரிவுகளின் கீழ் வட்டி செலுத்துவதில் இருந்து இன்னபிற சலுகைகளைப் பெறலாம் என்ற எண்ணமும் வீட்டுக் கடன்களை வாங்கத் தூண்டுகிறது. அதேநேரம் இதில் சங்கடங்கள் இருப்பதையும் கவனிக்க வேண்டும். 30 ஆண்டுகள் வரை நீடிக்கும் ஒரு நீண்டகாலக் கடன்கள் உங்கள் நிம்மதிக்கு வேட்டு வைப்பதாக அமையும். இதனைக் கடந்து செல்ல உங்கள் தவணைகளைச் சரியாக நிர்வகி க தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் எங்களால் ஆன சில குறிப்புகளை உங்களுக்குத் தருகிறோம்.
தவணை காலம் தேர்வு
கடனுக்கான தவணைத் தொகை கையைக் கடிக்காமல் இருப்பதற்காக நீண்டகாலக் கடன்களைத் தேர்வு செய்கிறோம். குறைந்த தொகையைத் தவணை தவறாமல் எளிதாகச் செலுத்திவிட முடிகிறது.எனினும் நீண்ட காலத்துக்கு வட்டி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால் கடன்தொகை அதிகரிக்கிறது. இதனால் கடனாளிக்கு கூடுதல் சுமைதான். ஆகையால் வீட்டுக்கடன்களைத் தேர்வு செய்யும்போது, உங்கள் வயது, வருமானம் மற்றும் கடனை அடைக்கும் திறனை மனதில் இருத்த வேண்டும். வீட்டுக் கடன்கள் அதிகக் கடன்தொகையைக் கொண்டிருப்பதால் கடனாளிகள் குறுகிய காலக் கடனுதவியைக கண்டறிதல அவசியம், இது மற்றவர்களின் வாழ்முறை ம்ற்றும் வட்சியங்களில் சமரசம் செய்யாமல் இருக்க வேண்டும். இதர தவணைக்காலங்கள் குறித்து ஆன்லைன் கால்குலேட்டரை பயன்படுத்தலாம். கடன் தொகை. வட்டி, தவணைக் காலம் குறித்துத் தெளிவு பெறலாம்.
தவணைத்தொகையை உயர்த்தல்
ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு பெறும்போது, திரப்பிச் செலுத்தப்படும் கடனுக்கான தவணைத் தொகையை அதிகரிக்க வேண்டும். ஈ.எம்.ஐ தொகையை உயர்த்திச் செலுத்தும்போது தவணைக்காலம் தானாகவே குறைகிறது. மேலும் நிலுவையில் உள்ள கடன் தொகையும் கணிசமாகக் குறையும்.மீண்டும் தவைணத்தொகையைக் குறைவாகச் செலுத்தினால் கடன்தொகை கழியாது. சுமைதான் அதிகரிக்கும். உதாரணத்துக்கு, 50 லட்கம் ரூபாய் வீட்டுக்கடன் பெற்ற ஒருவர் 8.5 சதவீத வட்டியுடன் 20 ஆண்டுகளுக்குத் தவணைக்காலத்தை முடிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தவணைதொகைபில் 10 விமுக்காடு அதிகரித்துச் செலுத்தும்போது தவணைக்காலம் 10 வருடமாகக் குறையும்.
கடன்தொகையை முன்கூட்டி செலுத்தல்
தவணை காலம்வரை காத்திருக்காமல் கடனை முன்கூட்டியே செலுத்துவதால், நிலுவையில் கடனையும், தவணைக் காலத்தையும் ஒரு சேர் குறைக்கலாம். இதற்கு வங்கிகள் தண்டம் விதிக்க முடியாது. பிரதான கடன்தொகையை நேரடியாகக் குறைக்க உதவுவதோடு வட்டிச் செலவினங்களையும் குறைக்க இது உதவுகிறது. எடுத்துக்காட்டாக அடுத்த ஒரு ஆண்டுக்குள் 1,20,000 ருபாய் முன்கூட்டியே செலுத்தினால் மாதம் 10,000 ரூபாய் சேமிக்க முடியம். தவணைக் காலத்துக்கு முன்னரே கடன் தொகை முடிவடையும்.
கடன் சமநிலைப் பரிமாற்ற தேர்வு
வீட்டுக்கடன் பெறுபவர்கள் சாதகமான கடன்சமநிலைப் பரிமாற்றத்தை தேர்வு செய்ய வேண்டும். தற்போது உங்களுக்குக் கடன் அளிக்க இருப்பவர், போட்டியாளர்களைக் காட்டிலும் குறைவான வட்டி விகிதம், இதர சேவைகளைத் தர மறுக்கலாம். இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் கடன் வாங்கியவர்கள் பொதுவாகத் தங்கள் வட்டிக்கு ஒரு முக்கியப் பகுதியைச் செலுத்தி இருப்பார்கள் என்பதால், வீட்டுக் கடன் சமநிலை பரிமாற்றமானது மீண்டும் ஒரு நீண்ட காலக் கடன் சேமிப்புக்கு உதவாது. உங்கள் தற்போதைய வீட்டு கடன் கவணைக் காலத்தைப் போலப் புதிய கடன் கவணைக் காலக் கடனை பெறும்போது கூடுதல் வட்டி சுமையைக் குறைக்கும். கூடுதலாக, புதிய கடனுக்கான நீண்ட தவணைக் காலத்தைத் தேர்வு செய்வது, EMI சுமையை எளிமையாக்கும் ஒரு நல்ல கடன்சமநிவைப் பரிமாற்றத்தேர்வு செயலாக்கக் கட்டணம் இன்ன பிற செலவுகளில் இருந்து காப்பாற்றும்.......என்னங்க யோசனை பண்ணிட்டே இருக்கிறீங்க ..ஆடி போயி ..ஆவணியே ..வந்துருச்சு ...இனி வர மாசம் எல்லாம் ..சொத்துகள் வாங்கும் மாதம் தான் ...தவணையை ஸ்மார்ட்டாகச் செலுத்துவது எப்படி?..என்னைய மறக்காம கூப்பிடுங்க ...நான் சொல்லித்தரங்க ....
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

சுற்றுலா பயணத்துக்காகப்.. பணம் சேர்க்கும் வழிகள்..!


நம்மில் பலர் சொந்தமாக வீடு வாங்க… சொந்தமாக கார் வாங்க எனப் பல காரணங்களுக்காகச் சேமிக்கிறோம். ஆனால், பயணத்துக்காகச் சேமிப்பதற்கு மட்டும் யோசிக்கிறோம். அதனால்தான் எதிர்கால இலக்குகளுக்காக முதலீடு செய்கிறவர்களில் பெரும்பாலோர் பயணச் செலவுகளுக்குப் பணம் சேர்ப்பதை இலக்காகக் கொள்வதில்லை. பயணம் என்பது எப்போதும் ஒருவரை ஆசுவாசப் படுத்தும்; வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு


அலுப்பில்லாமல் அழைத்துச் செல்லும். அதனால், மற்ற தேவைகளுக்காகச் சேமிப்பதைப்போல, பயணிப்பதற்காகவும் சேமிப்பது அவசியம். சரியாகத் திட்டமிட்டாலே போதும், மற்ற தேவைகளுக்கான சேமிப்பைப்போல, பயணத்துக்கான சேமிப்பையும் தொடங்க முடியும்.

பட்ஜெட் போடுங்கள்!

நீங்கள் போக விரும்பும் இடம் உள்நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி… அங்கு போவதற்கான விமான டிக்கெட் கட்டணம், அங்கு தங்கும் இடத்துக்கு ஆகும் செலவு, ஊர் சுற்றிப் பார்ப்பதற்கு ஆகும் செலவு, உணவுக்கான செலவு, ஷாப்பிங் என அனைத்து செலவுகளையும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அதற்காக பட்ஜெட் ஒன்றைத் தயார்செய்யுங்கள். அந்தத் தொகைக்கான சேமிப்பை இப்போதிலிருந்தே ஆரம்பியுங்கள்.

குறைந்தபட்சம் பயணக் காலத்துக்கு ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்துக்கு முன்பாக சேமிப்பை ஆரம்பித்துவிட வேண்டும். அடுத்த மாதத்திலிருந்து தொடங்கலாம் எனத் தள்ளிப் போட  நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால், உங்களின் பயணமும் தள்ளிப் போய்க்கொண்டே தான் இருக்கும்.

பயணத்துக்காகவும் பணத்தை ஒதுக்குங்கள்!

மாதச் சம்பளம் வாங்குபவர்கள், வீட்டுச் செலவுக்கு, மருத்துவச் செலவுக்கு, போக்குவரத்துச் செலவுக்கு என ஒவ்வொரு மாதமும் பணத்தை ஒதுக்குவார்கள். அந்தப் பட்டியலில் இனி பயணத்தையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து கையாளும்போது, பயணக் காலத்துக்குத் தேவையான தொகையை எளிதாகச் சேமித்துவிடலாம். எந்தத் தேவைக்காகப் பணத்தைச் சேமிக்கிறோமோ, அந்தத் தேவைக்காக மட்டும்தான் அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.

வாங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்!

`ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெற முடியும்’ என்பார்கள். பயணிப்பதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம் என்பது பயணக் காதலர்களுக்கான தாரகமந்திரம். இன்று இம்பல்ஸ் பையிங் அதிகரித்துவிட்டது. அதாவது பார்ப்பதையெல்லாம் வாங்கக்கூடிய மனநிலை. ஒரு பொருளை வாங்கும்போது, அதன் தேவை இப்போது நமக்கு இருக்கிறதா, இல்லையா என்பதை ஒன்றுக்கு நான்குமுறை யோசித்தப் பிறகு வாங்குவது நல்லது.

அடிக்கடி ஷாப்பிங் செய்பவராக நீங்கள் இருந்தால், அதைக் குறைத்துக்கொள்வது முக்கியம். அதிலிருந்து மிச்சமாகும் பணத்தை, பயணத்துக்கான சேமிப்புக்கு ஒதுக்கலாம். இப்படி ஒவ்வொரு மாதமும் சேமித்தாலே, மிகப்பெரிய தொகையைச் சேமிக்க முடியும்.

ஆக, மேலே சொல்லப்பட்டிருக்கும் எளிமையான வழிமுறைகளால் பணத்தைச் சேமித்து, வருடத்துக்கு ஒருமுறையாவது சுற்றுலாவுக்குச் சென்று திரும்புவதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை மிக அழகாக மாறும்.

எதில் சேமிப்பது?


“இன்றைய மக்களில் சுற்றுலா சென்றுவரத் தீர்மானிக்கிறார்கள். ஆனால், அதற்காகச் சேமிக்கிறார் களா எனக் கேட்டால், இல்லை என்பதுதான் பதில். ஒருசிலர் நிதி ஆலோசனை கேட்டு வரும்போது, மற்ற தேவைகளைப்போல பயணத்துக்கும் திட்டம் வேண்டும் எனக் கேட்கிறார்கள். அதற்கான சேமிப்பைத் தொடங்குவதற்கும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே பயணத்துக்காகவும் சேமிப்பை ஆரம்பிக்க வேண்டும். பயணத்துக்கான சேமிப்பு என்பது குறுகிய காலத்துக்கானது என்பதால், அந்தச் சேமிப்பிலிருந்து அதிக வருமானத்தையும் எதிர்பார்க்க முடியாது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் என்கிறபோது ஹைபிரீட் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பரிசீலிக்கலாம் அல்லது வங்கியில் இருக்கும் ஆர்.டி சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.”

அமைதியான ...ஆரோக்கியமான ...பயணம் ...மகிழ்ச்சியான வாழக்கை வாழ்வதற்கே ...




வியாழன், 22 ஆகஸ்ட், 2019

ஒரு ஒப்பந்த பத்திரத்தில் எது முக்கியம் ...?
================================
1. ஒப்பந்த தேதி அவசியம்

2. விற்பவரின் பெயர் மற்றும் விலாசம், வாங்குபவரின் பெயர் மற்றும் விலாசம் மிக அவசியம்

3. சொத்தின் மதிப்பு

4. அட்வான்ஸ் தொகை விவரம்

5. எவ்வளவு காலத்துக்குள் சொத்தை வாங்கி கொள்ள வேண்டும் அல்லது எவ்வளவு காலத்துக்குள் விற்று விட வேண்டும் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.

6. அட்வான்ஸ் தொகையை குறிப்பிட்டு அது போக மீதி தொகை விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

7. குறிப்பிட்ட காலத்தில் இந்த விஷயங்கள் நடக்காவிட்டால், வரும் சட்ட சிக்கல்களை எழுத்தால் குறிப்பிட வேண்டும்.

8. யார் தவறு இழைத்தார்களோ, அவர் மேல் நடவடிக்கை பாயலாம் என்பது போல ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும்

9. அப்படி சட்டம் பாய்ந்தால், அதற்கு தவறு இழைத்தவர்களே சட்ட செலவுகள் இன்ன பிற செலவுகளையும் ஏற்க வேண்டும் என எழுத வேண்டும்

10. சொத்து வாங்குபவர் குறிப்பிட்ட தேதிக்குள் சொத்துகளை வாங்க வில்லை என்றால் அட்வான்ஸ் தொகையை திருப்பி தர மாட்டோம் என்று சொத்தை விற்பவர் குறிக்கலாம்

11. சொத்தை விற்பவர் குறிப்பிட்ட தேதிக்குள் சொத்தை ஒப்படைக்கவில்லை என்றால், அட்வான்ஸ் தொகையை திருப்பி தர மாட்டோம் என்று சொத்தை விற்பவர் குறிக்கலாம்

12. சொத்து விவரங்களை குறிப்பிட வேண்டும்

13. சொத்தின் எல்லைக்குள்பட்ட சார்பதிவாளர் அலுவகத்தில் கட்டாயம் பதிய வேண்டும்.

14. இரண்டு சாட்சிகள் அவசியம்...

சிவக்குமார் வீ .கே .(வீட்டுக்கடன் )
நிதிஆலோசகர்
9944066681
(கோவை -பொள்ளாச்சி -உடுமலைப்பேட்டை )

புதன், 21 ஆகஸ்ட், 2019

40 ஆண்டுகளுக்கு முன்பு ‘பேனா நண்பர்கள்’(Pen Friends) என்ற கான்சப்ட் இருந்தது. வீட்டில் நூற்றுக்கணக்கான தபால் கார்டுகள், இன்லண்ட் கவர்கள் வாங்கி வைத்துக் கொண்டு இப்படியான போன நண்பர்கள் மூலம் நட்பு வட்டத்தை பெருக்கிக் கொள்வது வழக்கம்.
அதே போல் கரப்பாடி பூபாளம் பா.முருகேசபாண்டியன், சின்ன வதம்பச்சேரி சுந்தரராஜன், சின்ன வதம்பச்சேரி உமா சுந்தரராஜன், வதம்பை மணியன், ஒண்டிப்புதூர் அழகிரிசுவாமி, ஒண்டிப்புதூர் கே.சரவணன், இடையர்பாளையம் பெருமாள்சாமி, மயிலம்பட்டி பூவை தங்கராசன்.. என வானொலி நேயர்கள் நிறைய பேர் இருந்தார்கள்.
அயன்புரம் சத்தியநாராயணன், வேலாயுதம்பாளையம் சம்பத், கோவை ரம்யா, ராம்நகர் கோ.சு.சுரேஷ், பெங்களூர் கேஜிஎஃப் பழனிசாமி, பாப்பம்பட்டி பைந்தமிழன் இப்படி வார, பருவ இதழ்களை வாசித்து விட்டு அவற்றுக்கு கடிதம் எழுதும் வாசகர்களும் நிறைய இருந்தார்கள்.
இவர்கள் எல்லாம் பின்னாளில் துணுக்கு, சிரிப்புத் துணுக்கு, கவிதை, கதை, கட்டுரை எழுதி அவாதானிக்கவும் தொடங்கினார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் முகம் தெரியாது இருந்தாலும், ஒருவருக்கொருவர் சந்திக்காமலே பேனா நண்பர்களாக நட்பாக்கிக் கொண்டதுண்டு.
ஒருவரின் வாசகர் கடிதமோ, துணுக்கோ, சிரிப்போ, கதையோ, கட்டுரையோ, பத்திரிகை அல்லது வானொலியில் வந்து விட்டால் மற்றவர் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. பதிலுக்கு இவர்கள் அவர்களுடன் ஓடும் ஒலிம்பிக் ஓட்டக்காரர்கள் போல் ஓட்டமாய் ஓடி தங்கள் படைப்புகளையும் அச்சில் ஏற்றுவது உண்டு. அந்தக்காலத்தில் யாரும் எந்த பத்திரிகை ஆசிரியருடன், வானொலி நிலையத்தாருடன் நெருக்கம் பாராட்டிட முடியாது.
அப்படியே நெருக்கம் பாராட்டினாலும் முகத்தை பார்த்து விட்டோம் என்பதற்காக அவர்கள் படைப்பை அவர்கள் அங்கீகரித்து அச்சில் வைத்ததும் கிடையாது. சிறு வாசகர் கடிதம் ஆனாலும் தனிச்சுவையுடன் விளங்க வேண்டும். தாய், ஜனரஞ்சனி, கல்கி, விகடன், குமுதம், குங்குமம், சிறுகதைக்கதிர், தினமணிக்கதிர் என வரும் இதழ்கள் கடைக்கு வந்தவுடனே வாங்கி, அதே வேகத்தில் அதை அட்டை டூ அட்டை முழுவதும் படித்து விட்டு பத்து, பதினைந்து வாசகர் கடிதங்கள் எழுதியவர்களும் உண்டு.
அதில் ஒரு பக்கத்தில் வரும் வாசகர் கடிதங்கள் பத்து என்றால் அதில் மூன்று கடிதங்கள் ஒரே நபரின் பெயரிலும், புனைப்பெயரிலும் வருவது உண்டு. அப்படி நான் எழுதிய காலத்தில் ஒரு முறை தாய் வார இதழில் எனது கடிதங்கள் மட்டும் ஏழு பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் மூன்று மட்டும் என் பெயர் மற்றும் புனைப்பெயரில் இருந்தது. மற்றவை யாவும் வேறு எனக்கு முகம்தெரியாத வாகர்களின் பெயரில் இருந்தது.
அப்போதெல்லாம் இப்படி கடிதம் எழுதும் வாசகர்களுக்கும் தபாலில் புத்தகங்கள் காம்ப்ளிமெண்ட் காப்பீஸ் வரும். அதை வாங்குவதில் கிடைக்கும் உற்சாகமே தனி. இந்த மாதிரியான சூழலில் வாசகனின் வாசிப்பு என்பது எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அப்போதெல்லாம் அச்சில் ஏதாவது ஒரு பத்திரிகையில் நான்கைந்து கதைகள்/கட்டுரைகள் அச்சில் வந்துவிட்டாலே அத்தனை பேருக்கும் அவர் ஒரு பிரபல எழுத்தாளர் ஆகி விடுவார்.
அவர் தொடர்ந்து எழுதுவரானால் ரொம்ப பிரபலமான எழுத்தாளராக மாறி விடுவார். அப்படி அப்போது எழுதும் எழுத்தாளர்களை மேற்சொன்ன வாசகர்கள் அறிந்திராமல் இருக்கவே மாட்டார்கள். அப்படியான எழுத்தாளர்களில் சிலர்தான் விமலாரமணி, ராஜேஷ்குமார், ராஜேந்திராகுமார், பிரதீபா ராஜகோபாலன், புஷ்பா தங்கதுரை, ஆர்னிகா நாசர், சத்தியராஜ்குமார் இப்படி... பலர் அந்த எழுத்தாளர் வீடு தேடி சென்றே ஆட்டோகிராப் வாங்கி வருவதுண்டு.
அந்த எழுத்தாளரைப் பார்த்தேன்; அவர் கதை எப்படி எழுதுகிறார் தெரியுமா? என மற்றவர்களுக்கு அதை சொல்லிச் சொல்லி மாளும் போதே அது ஒரு சிறுகதை போல் நாவல் போல் விரியும். இன்றைக்கு அஞ்சலில் கடிதம் எழுதுவதே வழக்கொழிந்து விட்டது. எது எடுத்தாலும் இ.மெயில், ஃபேஸ் புக், டிவிட்டர், மற்றும் வெவ்வேறு இணையதளங்கள்தான். நிறைய எழுத்தாளர்கள், நிறைய பத்திரிகைகளில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதுகிறார்கள்.
இப்போதைய இந்த நட்பில், எழுத்தில், ஆழ்வாசிப்பில் முந்தைய அளவு அளப்பறிய பாசமும், நேசமும் நட்பும் இருக்கிறதா? அந்த அளவு இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. போதாக்குறைக்கு பத்திரிகை, மீடியாக்களில் முந்தைய காலம் போல் இல்லாமல் சிறு பத்திரிகைளில் அறிமுகமான பலர் வெகுஜன பத்திரிகைகளில் நிரம்பி விட்டார்கள். சிறுபத்திரிகை குரூப்பிஸம் இதில் நிரம்பி விட்டது. அதனால் வலிய பிரபல்யப்படுத்தப்படும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் எனப்படுவோர் மிகுந்து விட்டார்கள்.
அதில் இடதுசாரி, வலதுசாரி, இண்டலக்ஷூவல், அதி இண்டலக்ஷூவல், நவீனத்துவவாதி, பின்நவீனத்துவவாதி, மேஜிக்கல் ரியலிசவாதி என்றெல்லாம் அரசியல் மறைமுகசாயங்களும் கோலோச்சுகின்றன. அன்றைக்கு ஞானபீடம் தரப்பட்ட சித்திரப்பாவையோ, சாகித்ய அகாடமி வாங்கிய வேங்கையின் மைந்தன், அக்கரைச் சீமையிலே, அகல் விளக்கு, சக்கரவர்த்தித் திருமகனோ, அலை ஓசையோ எடுத்து படிச்சா படிச்ச மாதிரி இருக்கும். இன்னும் பல முறை படிக்கத் தூண்டும். அப்படி விருதுகள் பெற்ற நூல்களை மற்றவர் பரிந்துரை ஏதும் இல்லாமல் நம்பி வாங்கலாம். அதில் வாசிப்பு சுகமென்பது இமாலயம் அளவு இருக்கும்.
ஆனால் இப்போது பாருங்கள் ஒருவர் தான் ஒரு வெகுஜன பத்திரிகையில் இத்தனை தொடர் எழுதியிருக்கிறேன், இத்தனை கதைகள் எழுதியிருக்கிறேன் என்று சொன்னால் கூட யாருக்கும் அவர்கள் பெயர் தெரியமாட்டேன் என்கிறது. அவர்கள் எழுத்தை வலியப்படித்தாலும் மனதில் நிற்பதில்லை. இவ்வளவு ஏன்? சாகித்ய அகடாமி உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வாங்கின நூல் என்று முத்திரை பதித்திருந்தாலே அது சாமான்ய வாசகன் படிக்க முடியாத நூல் என்ற அர்த்தத்தை கொடுத்து விடுகிறது.
இது எனக்கு மட்டும்தானா? எல்லோருக்குமேவா? எல்லோருக்கும் என்றால் இந்த சூழல் தமிழ் சூழலில் மட்டுமா? மற்ற மொழிகளிலும் உள்ளதா? அப்படி தமிழுக்கு மட்டும் என்றால் இதை திரும்ப மீட்டெடுப்பது எப்படி?
சரி, இத்தனை விஷங்களை எதற்கு இந்த நேரத்தில் இங்கே நான் குறிப்பிட வேண்டும்?
வேறொன்றுமில்லை. இன்றைக்கு என் முகநூல் நட்பில் இணைந்திருக்கும் பலரை என் பக்கங்களில் அறிமுகம் செய்து வருகிறேன். அந்த நண்பர்கள் நேற்று எனக்கு நட்பாயிருக்கலாம். பல வருடங்களுக்கு முன்பு இணைந்திருக்கலாம். நேரில் அறிமுகமாகியிருக்கலாம். போனில் பேசியிருக்கலாம். போனிலோ, நேரிலோ பேசாமல் பார்க்காமல் கூட இருக்கலாம்.
அவர்கள் எல்லாம் என் கருத்துக்கு/கட்டுரைக்கு மிகுந்த சந்தோஷத்தோடு பின்னூட்டமிட்டவர்களாக இருக்கலாம். கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்டிருக்கலாம். எந்த ஒரு நிபந்தனையும், எதிர்பார்ப்புமின்றி படித்ததும் பிடித்துப் போய் குறிப்பிட்ட விஷயத்தை ஷேர் செய்து கொண்டே இருக்கலாம்.
நாம் இவ்வளவு செய்கிறோமே, இந்த ஆள் நம்மை கவனிக்கிறானா? நாம் பதிவிடுவதை வாசிக்கிறானா? என்னதான் நினைக்கிறான்? என்று யாரும் நினைத்து விடக்கூடாது அல்லவா?
அதற்காகவே, அவர்கள் பதிவுகளில் எல்லாம் நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். இன்னமும் நுட்பமாக அவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதில் எனக்கு இன்ன சந்தோஷமும் இருக்கிறது என்பதை இந்த அறிமுகம் மூலம் அறிவிப்பு செய்ய முடிகிறதென்றால் அதுவும் பெரிய சந்தோஷம்தானே, அந்தக் கால பேனா நட்பு போல... சரிதானே?
🙂 கா.சு.வேலாயுதன், கோவை, 21.08.2019

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019






உலகின் மிகச் சிறந்த உணவு....
உலகின் மிகச் சிறந்த உணவு எது என்று கேட்டால் ஒவ்வொருவரும் தமது நாட்டில் இருக்கும் உணவு வகைகளையே தேர்ந்தெடுத்து சொல்வார்கள் காரணம் அந்த உணவை பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் சாப்பிடுவதே காரணமாகும்.
எது சிறந்த உணவு என்று அதை சாப்பிடும் மக்கள் சொல்வதைவிட உணவின் சத்துக்களை தயாரிக்கும் முறைகளை சிறப்புத்தன்மைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஊட்டச்சத்து வல்லுநர்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்.
அந்த வகையில் உளுந்து அரிசி வெந்தயம் போன்றவற்றை சேர்த்து மாவாக அரைத்து நொதிக்கச் செய்து ஆவியில் வேக வைக்கும் நம்ம ஊர் இட்லியே மேற்கண்ட வகையில் சிறந்த உணவு என்று பல்வேறு மேலைநாட்டு வல்லுநர்களும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். சொல்லப்போனால் இட்லி மாவு நொதித்தலில் வரும் பல அமினோ அமிலங்கள் பல்வேறு கட்ட வேதி சேர்க்கைக்குப் பிறகு தான் உருவாக்க இயலும் அதனை இட்லி மாவு மிக எளிதாக செய்து விடுவதாக குறிப்பிடுகிறார்கள்.
அதேபோல உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்றதாக உள்ள பழம் எது என்று ஆராய்ச்சி செய்து நம்ம ஊரில் விளையும் நாட்டு கொய்யா சிறந்த பழம் என்று ஒரு ஆராய்ச்சி முடிவில் சொல்லியிருக்கிறார்கள். 
இதையெல்லாம் நாம் சொன்னால் அதிமேதாவிகள் போல தம்மை காட்டிக் கொள்வதற்காக இங்கே இருப்பவர்களில் சிலர் இது வெறும் தற்பெருமை என்று சொல்லி புறம் தள்ளி விடுகிறார்கள் .

இன்றைய ஞாயிறு ..

இன்று காலையில்   வித்யாசாகர் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் நடைபெற்ற  TNPSC-GROUP IV...இலவச மாதிரி  தேர்வு ..சத்தியம் கோச்சிங் சென்டர் ,வித்யாசாகர் அறிவியல் மற்றும் கலை கல்லூரி,கலிலியோ அறிவியல் கழகம் ,இணைந்து  மாணவ ,மாணவிகளுக்கு தேர்வு நடத்தியது ..தேர்வு எழுத போகும் மாணவ ,மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது .தேர்வு எழுதுவதற்கு தன்னம்பிக்கையுடன் ,படித்த ,பயின்றதை ,நினைவில் நிறுத்திக்கொள்ள ஏதுவாக அமைந்தது ..இதில் தேர்வு எழுதிய மாற்று திறனாளி மாணவ செல்வம் ஒருவரும் இதில் கலந்துகொண்டு எழுதியது மகிழ்ச்சி ..தேர்வு முடிந்தவுடன் ..அதிக மதிப்பெண் பெற்ற மாணவ செல்வங்களுக்கு பரிசுகளும் வழங்கியது மிக சிறப்பு .விழாவில் தன்னம்பிக்கை பேச்சுக்கள் ,தேர்வு எழுதும் முறையும் ,பற்றி இளம் எழுத்தாளர் ஸ்மிர்தி மேனன் ,அவர்களும் ,அஞ்சலக துறையில் பணியாற்றும் மதிப்புக்குரிய அமிர்தநேயன் அவர்களும் ,வணிகவியல் துறை தலைவர் செல்லதுரை அவர்களும் மாணவ ,மாணவி செல்வங்களுக்கு வழங்கியது மிகவும் பயனுள்ள நிகழ்வாக அமைந்தது ..நிகழ்ச்சியின் இறுதியில் வித்யாசாகர் அறிவியல் மற்றும் கலை கல்லூரி பேராசிரியர் செல்லதுரை அவர்களுக்கு ..உடுமலையின் வரலாற்று நூல் தளி எத்தலப்ப மன்னரின் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் என்ற நூல் சிறப்பு பரிசாக வழங்கபட்டது ..இளம் எழுத்தாளர் ஸ்மிர்தி மேனன் அவர்களுக்கு ..திருக்குறள் நூல் பரிசாக வழங்கப்பட்டது .

இன்று நான் பயின்ற கல்லூரியில் இந்த நிகழ்வுகளுக்கு சென்று வந்தது,கல்லூரிக்கு மறுபடியும் கடந்தகால  கல்லூரி பசுமை நினைவுகளை மறுபடியும் நினைப்படுத்தியது மகிழ்ச்சி ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ,,
9944066681...

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

இன்றைய ஞாயிறு ....11.08.2019

இன்று காலை எங்களின் குடும்பவிழா ..முதல் விழா ..மழை மும்மாரி பொழிந்த வரவேற்பு விழா மழை ...
பூப்பு நன்னீராட்டு விழா .. ..
விஜயகுமார் கலைச்செல்வி -அவர்களின் புதல்வி உடுமலைப்பேட்டை அருணா கல்யாண மண்டபத்தில் இனிமையாகவும் ..நண்பர்கள் வட்டத்துடன் மகிழ்ச்சி மிகுந்த விழாவாக நடந்தது ..இப்பொழுது எல்லாம் குடும்ப விழாக்கள் என்றால் அழைப்பு வந்தவுடன் எந்த பிரதி பலன் பாராது கலந்துகொள்வது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக  கலந்துகொள்ள முடிகிறது ..இன்றைய காலங்களில் மிகுந்த பணி பளு ..ஒருவித அழுத்தத்துடன் இருப்பதால் ..புது நண்பர்கள் வட்டம் ..புது சொந்தங்களை பார்த்து உறவு முறைகளை பார்த்தும் தெரிந்தும் பேசுவது மன அழுத்தம் குறைக்க அருமையான நிகழ்வுகளாக அமைந்தது ..முதன் முறை வரும் சொந்தங்களுக்கு உறவு பாலம் பலம்மிக்க பல சொந்தங்களுக்கு பெருதும் உதவுகிறது ...விழாவிற்கு வரும் புது நண்பர்களையும் ..நீண்ட வருடங்கள் களித்து பார்க்கும்பொழுது மனதிற்கு புது உற்சாகம் பிறக்கிறது ..மாப்பிள ..தம்பி ..சம காலத்து நண்பர்கள் பார்க்கும் பொழுது இனம் புரியாத மனதில் துள்ளல் பிறக்கிறது ..வார விடுமுறையாக நிகழ்வு இருந்ததால் ..எல்லாரும் வந்து செல்லும் நாளாக அமைந்தது
அருமையான சொந்தங்களும்  பந்தங்களும் நிறைந்த விழாவாக மாறியது .
இந்த விழாவில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக சமுதாய தலைவர்கள் , கம்பளவிருட்சம் அறக்கட்டளை  உறுப்பினர்கள் ,உடுமலை ஸ்டார் ரோட்டரி உறுப்பினர்கள் ,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எரிவாயு ஏஜென்சிஸ் வினியாகஸ்தர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தது அருமை ..வந்திருந்த அணைத்து சொந்தங்களும் நண்பர்களும்  விஜயகுமார் கலைச்செல்வி -அவர்களின் புதல்வி வாழ்த்திச்சென்றனர் ..அருமையான நிகழ்வில் சொந்தங்களுடன் விழா மேடையில் வரவழைத்து புகைபடங்கள் எடுத்து தங்களின் நினைவுகளாக பரிமாறிக்கொண்டதும் ..மகிழ்ச்சியில் அருமையான மதிய உணவு பரிமாறப்பட்டு சந்தோசத்துடன் விடைபெற்று சென்றது மனநிறைவாக விழா அமைந்தது ..நன்றி

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681






ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019



கோவை தொல்லியல் துறை  ..க்கு நன்றி ..

 தொல்லியல் கழகம்  பூ சா கோ கல்லூரி நடைபெற்ற தொல்லியல் துறை தலைவர்கள் .தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ..படித்த மேன்மக்கள் நிறைந்த சபையில் ..ரவி ஐயா, ராஜவேலு ஐயா,பூங்குன்றன் அய்யா அவர்களின் முன்னிலையில்  தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..நூல் வெளியிடப்பட்டது ...மகிழ்ச்சி ..கோவை தொல்லியல் துறை  ..க்கு நன்றி ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
9944066681...

பூ சா கோ கல்லூரி முதல்வர் அவர்கள் ...அரங்கை விட்டு வெளியில் வரும்போது ..நமது நூலை ..கேட்டு பெற்றுக்கொண்டார் ...பெரும் மகிழ்ச்சி ...

சனி, 3 ஆகஸ்ட், 2019

உடுமலை 8 வது புத்தக திருவிழா முதல் நாள் நிகழ்ச்சி கலந்து கொண்ட மகிழ்ச்சியானநேரம்....


இன்று புத்தக கண்காட்சியில் கலந்துகொண்டபோது .முதன் முதலில் தேடும் நூல் ...நாம் படிக்கவேண்டிய நூல் இருக்கும் ..அந்த புத்தக அறையை நோக்கி மனமும் ..கண்ணும் ...தேடுகிறது ...இதை வாங்கி படிக்கும் சுவராஸ்யம் என்றும் குறைவதில்லை ..நண்பர்கள் ..எழுத்தாளர்கள் ...விமர்சனம் செய்திட்ட பதிவுகள்களை கொண்டு அந்த நூலை தேடுவது மன இயல்பு ..

தற்பொழுது வாசிப்பை ..நேசிப்போம் ..நூலக துறை பல்வேறு நிகழ்வுகள் ,விழிப்புணர்வு கருத்தரங்கம் ..நூலின் வாசிப்பு திறன் மேம்படுத்த உதவுகிறது ...இந்த புத்தக கண்காட்சியை அதிகம் வாழ்வின் பொக்கிசமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் ...
இன்று நடைபெற்ற புத்தக திருவிழா ..துவக்க நிகழ்ச்சிகள் அருமை ..குழந்தைகளின் தற்காப்பு கலைகள் ,சிலம்பம் ,களரி ..நிகழ்ச்சி ஒரு மணிநேரம் நம்மை நகர விடாமல் செய்துவிட்டது ..முதல் நாள் நிகழ்வு அருமை அருமை ..குழந்தை செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் ...

என்று அன்புடன் உடுமலை சிவக்குமார்
வாசிப்பை ..நேசிப்போம் ..








வாட்ஸாப் எண் -9944066681 

வியாழன், 1 ஆகஸ்ட், 2019



ஆடி-18......🌱🌱🌱 (உடுமலை-ஜல்லிப்பட்டி- தளி )ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.....
ஊஞ்சல்......😍😍😍.. குழந்தைகளின் குதூகலம்.😍😍...... !!!!!!! (தளி ஜல்லிபட்டி )
என் சிறுவயதில் ஆடி 18 யை தூரி நோன்பு என்றுதான் அழைப்போம் ..ஒரு நாள் முன்பே ஜல்லிபட்டி கிராமத்திற்கு சென்றுவிடுவோம் .எப்பொழுத்தான் சீக்கிரம் விடியோமோ என்று எங்கள் பாட்டி வீட்டில் பெரிய நீளமான வீட்டின் முன்புறம் உள்ள குழந்தைச்செல்வங்களுடன் கதைகள் பேசி தூங்குவதற்கே இரண்டு மணி ஆகிவிடும் ...காலையில் பொம்மையன் கோவில் முன்பு ..பெரிய நடு மரங்கள் நட்டு ...பெரிய அகல மர பலகையிலான உட்காருவதற்கு வசதியாக அமைப்பார்கள் ...அதற்கு சந்தனம் குங்குமம் ,மாவில்லை கட்டி ,மஞ்சள் துணியில் நவதானயங்கள் உள்ளேவைத்து அந்த ஊஞ்சலுக்கு ..கோவிலில் பூஜை செய்து ...குழந்தைச்செல்வங்களுடன் முதன் முறையாக ஆடும்போது ... ரோல் கோஸ்டர் ,ஜயண்ட்வீல் எல்லாம் கொஞ்சம் தள்ளி நிற்கவேண்டும் ...கிராமத்து பெரியவர்கள் தோட்டத்து வேளைக்கு சென்று வந்த பின்னர் இரவில் ..ஊஞ்சல் ஆடி பாட்டு பாடி தங்களின் களைப்பை போக்கிக்கொள்வார்கள் .. ஊஞ்சல் அல்லது ஊசல் (swing) என்பது ஒரு உல்லாசப் பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இது சங்க காலம் தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. உடுமலை கிராம பகுதிகளில் இதனைத் தூலி என்றும் தூரி என்றும் வழங்குகின்றனர். சிறுவர்கள் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடுவர். மரக் கிளைகளில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து சிறுவரும் சிறுமியரும் ஊஞ்சலாடுவர். தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக்கொண்டும், பிறர் ஆட்டிவிட்டும் ஆடுவர்.குழந்தை ஊஞ்சலில் ஆடும்போது இன்பம் கண்டு தூங்குகிறது. பெரியவர்கள் தாமே ஊஞ்சலாடி மகிழ்கின்றனர்....
முப்பது வருடங்களுக்கு முன்பாகக் கூட ஆடி பதினெட்டு தினத்துக்காக மரத்தில் ஊஞ்சல் கட்டி தூரி ஆடியதுண்டு.
ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆனந்தமாக ஆடினார்கள்.
பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.
இப்பொழுதும் பசுமையாக எண்ணங்களில் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்திகொண்டுஇருக்கிறோம் ...நம் தலைமுறை குழந்தைகளுக்கு இதை மறவாமல் கொண்டுபோகவேண்டியது நம் கடமை ..பண்பாடு ..கலாச்சாரம் இதில் தான் உள்ளது ...இதை நம் குழந்தைச்செல்வங்களுக்கு கற்றுக்கொடுப்போமா ...??????????
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..👍🌷🌷🌷🌱🌱🌱